Freitag, Dezember 07, 2007

நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்

உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும்
வர்க்கப்போரும்,
மூன்றாவது உலகப்போராய் நடைபெறும்
மூலதனக்காப்பு யுத்தம்.



,Ein Tropfen Öl ist uns einen Tropfen Blut wert" "எமக்கு ஒரு துளி எண்ணையோ ஒரு துளி குருதிக்குச் சமனமாகும்"-அமெரிக்காவில் இருந்து ,1918 இல்பிரஞ்சுப் பிரதமர் Clemenceau ஒரு உரையாற்றலில்கூறிய மிகப் பிரபல்யமான சொற்றொடர், இஃது.



' ஒரு தேசிய இன அங்கீகாரம் எண்ணை வளத்தை வைத்தே உலகத்தில் செல்லுபடியாகும்' -இஃது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி வில்சன்.




எண்ணை கிடைக்காத பட்சத்தில் இராணுவ போர் ஜந்திரம் நின்றநிலையில் நிற்கவேண்டியதுதாம், வியாட்நாமில் அமரிக்கத்தோல்விக்கும் இந்த எரிபொருள் சக்தியும் ஒரு காரணமென்பதை நவீன போரியல் வல்லுனர்கள் இன்றும் கூறுகிறார்கள்.முதலாம்,இரண்டாம் உலகப்போர்கள் எண்ணை வளத்தை பெருமளவில் கணக்கிலெடுத்தே ஆரம்பிக்கப்பட்டது.எண்ணை விலை,எண்ணை வள கட்டுப்பாடு யாவும் உலகை வெற்றிகொள்ளல் மூலம்தம்மால் கையகப்படுத்தமுடியுமென ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கருதியது,முதலாம் உலகயுத்தத்திற்குப்பின்பு அமெரிக்கா எண்ணை வளத்திற்காக பேய்போல் அலைந்து துரகிழக்குஅண்மைக்கிழக்கு நாடுகளை தினமும் வேட்டையாடி வந்தது.


இஃது சமகால வரலாறு.


11 செப்ரெம்பருக்குப்பின்னோ பற்பல அரசியற் கருத்தியற் வியூகங்கள் உலகரங்குக்கு வந்துள்ளது.அமெரிக்க ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் இதன் படைப்பாளிகள்.


' இது பயங்கரவாதத்திற்கு எதிரானபோர்!,இஸ்லாமுக்கெதிரானதோ அன்றி ஒரு இனத்திற்கெதிரானதோ அல்ல.' ஒரு கையில் உயிர் கொல்லி ஆயுதம் மறு கையில் உணவுப்பொட்டலமும் கூடவே பைபிள் சார்ந்த அரசியற்தத்துவ விளக்கமும்,மேல்நிலை வல்லரசு அமெரிக்காவிடம்.


உலக ஆளும் வர்க்கம் தனது வர்க்க தோழமையுடன் கூட்டாகப்போரிடும் இன்றைய சூழலில்,எப்படியெல்லாம் கருத்துக்களை முன்தயார்படுத்தி அவர்தம் ஊதுகுழல்கள் மூலம் நமக்குள் கொட்டுகின்றார்கள்!



என்ன செய்ய?, எப்படி எதிர்கொள்ள?,



கருத்துக்களால்,நடைமுறையால்,செய்கையால் எதிர்கொள்ள? கேள்விகள்,கேள்விகளாகவே நீண்டபடி. நாம் ஆதரவற்றவர்களாக நடாற்றில் தள்ளிவிடப்பட்டுள்ளோம்.மனித நேயமா?அது அமெரிக்கர்கள்ஐரோப்பியர்கள் அழிந்தால்-அழிவுக்குள் நேர்ந்தால் உலக அரங்குக்குள் வரும்.அவ்கானிஸ்தானில் மானுடம் அழிந்தாலென்ன ,ஈராக்கில்அழிந்தாலென்ன? இவையெல்லாம் யுத்த அளவுகோலாம்! இந்நாடுகளில் மரணிக்கும் மானுடர்களுக்கு மௌனஅஞ்சலியை இந்த ஐரோப்பிய நாடுகள்,அவர் -தம்தொழிற்சாலைகள்-கல்விக்கூடங்கள்-மதாலயங்கள்-பாராளுமன்றங்கள் செய்யவே செய்யா.



ஆனால்' 11 செப்ரெம்பர் ' என்பது கலாச்சாரமட்டத்தில் கருத்துக்களாக்கப்பட்டுள்ளது,அகராதியில் சொற்களஞ்சியமாக்கப்பட்டுள்ளது.இந்த' பதினொன்று' மனித குலத்துக்கு விரோதமான பயங்கரவாதிகளின் தாக்குதல்,சமாதானமாக வாழும் சுதந்திரத் திறந்த சமூகத்திற்கு எதிரான காட்டுமிராண்டித்தாக்குதல் எனும் விளக்கமும் வேறு.அமெரிக்காவில் நெறிகட்டினால் ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவில்கூட நோவு வந்துவிடுகிறது!




உயிரிழப்புகள் எங்கு நேரிடினும் நாம் நொந்துகொள்வோம்.அதுவே மானுடப் பண்பு. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எம் மூதோர் கூறியதும் இஃதே. ஆனால் மானுடநேயம் மட்டுமல்ல இந்தப்பூமிப்பந்தின்மீதுள்ளனைத்து விடயங்களுமே வர்க்கம் சார்ந்தது.இதனால் ஆளும்வர்க்கம் தனது வலியை எமதாக்க முனைகிறது,இதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது.தனதுசுமையை எமக்குள் அமுக்கி மூலதன நெருக்கடியை உலக மொத்தமக்களுக்குமான நெருக்கடியாக்கி வெற்றியும் கண்டுவிட்டன இந்த உலக ஆளும் வர்க்கப்பேய்கள்.



இது எப்படிச்சாத்தியமாச்சு? ,உலக வர்த்தகக்கழகக் கட்டடத் தகர்ப்புக்கும் இந்த 'உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்' எனும் அரசியற்கருத்தாக்க உளவியலுக்கும் என்ன தொடர்பு?, இது சார்ந்து மேற்கொள்ளப்படும்செயற்தந்திர வியூகத்திற்கும் போருக்கும் என்ன தொடர்பு?




'யுத்தத்தினது நோக்கை அரசியற் கோரிக்கைக்குள்ளும் அரசியற்கோரிக்கையை பொருளியல்நலன்களுக்குள்ளும் தேடணும்' இதை இடர்படும் நாம் கருத்திற்கொண்டு மேலே செல்வோம்.



ஐரோப்பிய--அமெரிக்க நலன்களும்,மோதல்களும்:



;இன்று நடைபெற்று வரும் உலகுதழுவிய அதிநவீன யுத்தமானது வெறும் பொருளீட்டு நோக்குடையதன்று,மாறாக பற்பல நோக்கத்தை மையமாகக்கொண்டு வியூகங்கொண்டுள்ளது. இதை மனதிலிருத்தி க்கொண்டால் மட்டுமே இந்த ஜனநாய முகமூடியின் பின் எந்த முகமுள்ளதென அறியமுடியும்.


'அரபு நாடுகளின் எரிவாயு மற்றும்எண்ணை வள வயல்களை சுதந்திரமாக
பராமரிக்கவும்,கையகப்படுத்தவும் அவ்கானிஸ்தான் நமக்கான தோழமை நாடாகவேண்டும்.'


'ஈராக்கை மீளக்கட்டியெழுப்பும் பணிக்கு ஜேர்மனிக்கு ஒப்பந்தங்கள் தராத அமெரிக்காவுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத்தொடுக்கப்படும்.'


'அமெரிக்காவினது தர்மயுத்திற்கு உதவாத எந்த நாட்டிற்கும் நாம் ஒப்பந்தம் தருவதாகவில்லை!முடிந்தால் வழக்கைத்தொடருங்கள்'



'ஐரோப்பியக்கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்கு ,உலகதரத்திற்கு ஏற்றவாறு(அமெரிக்காவுக்கு நிகரான?) கூட்டு இராணுவ அமைப்பை உருவாக்கும்.அதனுள் ஜேர்மனி,பிரான்ஸ்,பெல்ஜியம் ஆகிய நாடுகளின் இராணுவங்கள்இணைந்துகொள்ளும்'



மேற்காட்டிய கோரிக்கைகள் ஐராப்பிய கூட்டமைப்புக்கும் அமெரிக்காவுக்குமுடையது.
இவ்வரசியற்கோரிக்கையின் பொருளியல் நலன் அப்பட்டமானதாகத் தெரிவதில் வியப்பில்லை.



அவ்கானில்-ஈராக்கில் பல்லாயிரம் உயிர்கள் பலியாக்கப்பட்டது எதற்காக? இப்போது எது பயங்கரவாதம்? இதை அமுக்கிவிடுவதற்கு அல்லது திசைதிருப்பிவிடுவதற்கு ஒருசதாம்--பின்லாடன் வகையறாக்கள் தேவைப்படுகின்றது.




கருத்தியில் கட்டுமானமும் யுத்தமும்:



சமூக வாழ்நிலையே சமூகவுணர்வை நிர்ணயிக்கின்றது.



எத்தகைய வாழ்நிலை நம்முடையது?



மனிதர்களாகிய நாமே வரலாற்றை உருவாக்கிறோம்,ஆனால் நாம் விரும்பியவாறல்ல,நாமாகவே தேர்ந்துகொண்ட சூழ்நிலமைகளின் கீழுமல்ல.மாறாக,எமக்கு நேரெதிராகக்காணப்படுகின்ற கடந்த காலத்திலிருந்து கைமாற்றித்தரப்பட்ட சூழ்நிலையின் கீழ் வரலாறு உருவாகின்றது.


இப்போது மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு வருவோம். எத்தகைய வாழ்சூழல் நம்முடையது?



வேலைவேண்டப்படுகிறோம்,வீடு மீள்கிறோம்.வேலைக்குப் போகவில்லை,வேலையில்லை.
கூட்டில் வாழ்கிறோம்,மறுஉற்பத்தியல் ஈடுபடுகிறோம்,புதியவுயிர் பூமிக்கு வருகிறது.எமக்கான எதிர்காலமாக வளர்க்கிறோம்,க்டப்படுகிறோம்.கடமையாய் பாதுகாத்து இச் சமூகத்திற்கு ஒப்படைக்கின்றோம்.



முதலாளிய வர்த்தகச்சமூகமோ எமக்காய் பற்பல வர்ணங்களை -கருத்துக்களை நுகர்வுச்சந்தைக்குள் கொட்டுகிறார்கள்.நாம் நுகர்கிறோம்,பிளவுபட்டுக்கிடக்கிறோம்,மதங்களின்பேரால் நிறங்களின்பேரால்கூடவே,சாதியின்பேரால்.புல்லுக்கட்டை காட்டியதும் மாடுகள் ஓடோடி வருவதுபோன்று நாமும் நுகர்வுக்காக ஓடோடிக்கொண்டிருக்கிறோம்.



இத்தகைய வாழ் சூழலில்: ஒரு கொஞ்சம் பாசம்,மறு கொஞ்சம் மோசம். இவ்வளவுதாம் வாழ்வு? மறுப்பதற்குண்டு. ஆனால், உண்மையில் இஃதுதாம் நமது வாழ்நிலை.



உலகமும்(புறவுலகம்) உயிரும் அதன் பௌதிக இருத்தலும் இவ்வகைச்சூழலுக்குள் இவ்வளவுதாம். அதாவது நமது வாழ்சூழலில் நாமுணரும் உலகம் இவ்வளவுதாம். எமக்கான உணவை,உடையை,உறையுளை,ஆத்மீகத்தேவையை--ஓய்வை,பொழுதுபோக்கை,கல்வியை-அறிவை,பிறவுணர்வுத்தேவையை இன்னபிற சகல தேவைகளையெல்லாம் ஆளும் வர்க்கம் நமக்காக நுகர்வுச்சந்தையில் கடைவிரித்துள்ளது.நாம் இதற்காக சகல மட்டங்
களிலும்(கல்விக்கூடங்கள்-கலாச்சாரமட்டம்.) தயார்படுத்தப்படுகிறோம்,அவ்வளவுதாம்.



இதனாற்றான் புலம்பெயர்நாடுகளிலுள்ள தமிழ் ஊடகங்களில்சதாம் கொல்லப்பட வேண்டியவர்,அமெரிக்கா ஜனநாயக நாடு,எனும் நேயர்கள்ஒருபடிமேலே சென்று 'சும்மா கிடந்த அமெரிக்கச் சங்கை ஊதிக்கெடுத்தான் பின்லாடன்' என்று கூறுகிறார்கள்.



கவனியுங்கள்: அமெரிக்கா சும்மா கிடந்ததாம்!



இதைத்தாமே அவர்கள் வேண்டி நிற்கிறார்கள்.



"துன்மார்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது,செம்மையானவர்களின்ஜெபமோ அவருக்குப்
பிரியம்."
-(பைபிள்:நீதிமொழிகள்15,அதிகாரம்15:8)



இன்றைய மேற்குலக மூலதன எஜமானர்கள்(செம்மையானவர்கள்)ஜெபம் சொல்லிக்கொண்டே நம்மை அழித்துப் பலி செய்வது நமக்குப்புதிதல்ல.கொலம்பஸ்அமெரிக்காவைக்கண்டுபீடித்தார்.ஐந்தாம் வகுப்பில் படித்தோம்,ஆனால்பெரியவர்களாகியும் நம்மால் நமது வரலாற்றை அறியமுடியவில்லை.



அவர்களது ஜெபமோ அவ்வளவு வலிமையானது! அது கர்தருக்குப் பிரியமானது(கர்த்தர் சமன்உடமை வர்க்கம் தர மூலதனம்).கோடிக்கணக்கான செவ்விந்தியர்களை,அவுஸ்ரேலிய பழங்குடிமக்களைக் கொன்று குவித்தவர்களின் வாரிசுகள் இப்போது மிக வேகமாக மகாப்பெரிய அழிவு ஆயுதங்களை தம்மைத் தவிர மற்றய நாடுகள் வைத்திருக்கப்படாதாமென சமாதான சங்கீதம் பாடுகிறார்கள்.இதுதாம் இன்றைய ஊடக யுத்தம்.




ஆளும்வர்க்க ஜனநாயகம்:




'வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கடையிலானது'



வரலாறுதோறும் வினை விதைத்தவர்கள் கீரோசிமாவையும்--நாகசாகியையும் சமீபகால வியாட்நாம் மற்றும்ஈராக்,யுக்கோஸ்லாவியா,அவ்கானிஸ்தான் என்று பல் இன-நாடுகளை கொடும் அணுயுத்தம் செய்து இன-கலாச்சாரஅழிவுக்குள் தள்ளிய ஐரோப்பியஅமெரிக்கர்கள் இப்போது இவ் கொடூரமான,மானுடவிரோதயுத்தத்தை,பயங்கரவாதத்தை-ஆளும்வர்க்க பாசிசத்தை'யுத்த அளவுகோல்' என்று விவாதிக்கிறார்கள். இதுபயங்கரவாதமில்லையாம்! மாறாக யுத்தநெறியாம்,(ஜேர்மனிய-அமெரிக்கப்பத்திரகையாளர், மற்றும்ஜேர்மனுக்கான அமெரிக்கத்துதுவர் கலந்துரையாடல்.டிசம்பர்2003,ARD-TV.) அதாவது ஐரோப்பாவும்,அமெரிக்காவும் செய்வது யுத்தஅளவுகோல்சமன்:யுத்தநெறி. அதையே மற்றய இனத்தவர்கள் செய்தால் பயங்கரவாதம்.


இஃதுதாம்' கவ்போய் முதலாளிய 'ஜனநாயகம்.



ஆளும்வர்க்கங்கள் தமது முரண்பாட்டை-ஆட்சிக்கு வரும் முரண்பாட்டை,நெருக்கடியை தீர்க்க எப்பவும் யுத்தத்தை நடாத்துவார்கள். உலக மேலாதிக்கத்திற்கேற்பட்ட நெருக்கடியைத்தீர்க்க றுழசடன வுசயனந ஊநவெசந தாக்குதல் பயன்பட அனைத்து தேசிய விடுதலை மற்றும் பொருளாதாரவாத எதிர்ப்புப் போராட்டங்களும் பயங்கரவாதப்பட்டியலில் போய் சேர இனவொடுக்குமுறை நிலவும் நாடுகளெல்லாம் ஜனநாயக நாடுகளாயின.



மூலதனம்-குவிப்பு -காத்தல் சமன்: ஜனநாயகம்!




மூலதனம் தன் கரங்களை நேற்றுவரை குருதியில் நனைத்தபடியே...இன்று ஈராக்கில் புதிதாய் குருதியாற்றைத் தோண்டவில்லை. என்றபோதும்,ஆளும்வர்க்கச் செயற்பாடுகள் கடந்த காலங்கள்போன்று இன்றில்லை.இது மிகவும் கவனத்தக்குரியது.



கடந்த காலத்தில்(இரண்டாம் மகாயுத்தத்திற்கு முன்) நிச்சியமாக,நிதர்சனமாக இனம் காணக்கூடிய 'வர்க்கத்தோற்றம்' இன்று மிக மிக மங்கலாகக்கூட தோற்றமளிக்கவில்லை.
இதனால், யார் இந்த ஆளும் வர்க்கமென வினாவத்தோன்றுகிறது! இந்தத்தோற்றப்பாடே ஏகாதிபத்தியத்தின் இன்றைய தர்க்காலிக வெற்றியுமாகும்(இதற்காக ஏகாதிபத்யம் கோடி கோடியாய் செலவு செய்து கருத்தியல் யுத்தம் நடத்தியபடி...) இந்தத்தோற்றப்பாடு முழு மக்கள் சமூகத்தையும் தனக்குள் அமுக்கிவிட்டதாகப் பாசாங்கு செய்கிறது.சுரண்டுபவர்களாகவும்,சுரண்டப்படுபவர்களாகமுள்ள இந்த மக்கட் சமூகத்ள் இது வரைகாலமும் நிலவி வந்த வர்க்கவுணர்வு மழுங்கடிக்கப்பட்டு பாரிய மாற்றம் கண்டுள்ளது! இது கைத்தொலைபேசிக்குள்ளும்,கணீணி,இணைய வலை மற்றும் 'வர்த்தகக் கழியாட்டகலைக்குள்ளும்' நாளைய சந்ததியைத் தள்ளி எதிலுமே பொறுப்பற்ற அதி தனிநபர் சுதந்திர- சுயநலமிகளாக்கி விட்டுள்ளது.



இதனால் வர்க்கவுணர்வுமழுங்கடிக்கப்பட்ட மக்களால் நாட்டு நிலைமை, வறுமை,வேலையில்லாத்திண்டாட்டம்,யுத்தமென நகர்வதை முழுமையாகப் புரிந்து கொள்ளப்போதிய திறன் இல்லை. இந்தப்போக்கால் சந்தைப்பொருளாதாரம் தற்காலிக வெற்றிபெற்றுள்ளதை நாம் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்!இந்த வெற்றியை மேற்குலக பல்கலைக்கழக மட்டம் மார்க்சிசத்தின் தோல்வியாகச்சித்தரிக்க முனைகிறது, இதை ஜே ர்மனிய பல்கலைக்கழகப் பேராசிரியன் பீட்டர் சிமா இப்படிக்கூறுகிறான்:'மார்க்சியமென்பது இன்னும் சிலகாலம் புத்தக அலுமாரியிலிருக்கும் பின்பு பொருட்காட்சிக்கூடத்தில் ;ருக்கும்.' இந்த நிகழ்வுப்போக்கானது திட்மிட்ட-மிக நுணுக்கமான ,விஞ்ஞானபூர்வ முதலாளியச் சுழற்சியால் நிகழ்கிறது. இன்றைய நாளில் நேரடியாய் மனித விரோதப்போக்கைக் காட்டிக்கொள்ள ஆளும் வர்க்கம் முயற்சிக்காது மிகத் தந்திரமாகச் செயற்படுவதை கடைப்பிடிக்கிறது.இதன் உள்ளார்ந்த தந்திரமானது முழு மக்களுக்குமான ஜனநாயகம் ,சமத்துவம், சுதந்திரம் என்ற அரசியற்கருத்தாங்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.



மூலதனத்தைப் பெருக்கிட,சந்தைவாய்பை காத்திட, உலகப்பொதுச்சொத்தான மூலவளங்களைத் தாமே தொடர்ந்து கொள்ளையிட யுத்தம் செய்யும் இன்றைய சூழலுக்கு வேறு வகையான தந்திரங்களைக் கட்டவிழ்துவிடுகிறார்கள்.அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு நடாத்தும் இன்றைய அதிநவீன தாழ்அணுயுத்தங்களுக்கு 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்ற அரசியற்-சமூக உளவியற் கருத்தாக்கம் வலுவாக்கப்பட்டுள்ளது. இது சாரம்ஸமான 'ஜனநாயகம்' என்ற கோட்பாட்டு உத்தியை மறைமுகமாகப் பிரதிநித்துவம் செய்கிறது ,முதலாளித்துவ உற்பத்திப்பொறிமுறை இதனாற்கட்டிக்காக்கப்படுகிற முகாந்திரம் வலுவாக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரையான 'ஜனநாயகத்திற்கு எதிராகச் செயற்படும் நாடுகள்'எனும் கருத்தாக்கம் இப்போது 'பயங்கர வாதத்திற்கு ஆதரவான நாடுகள்' என்பதில் போய்முடிந்துள்ளது.




நடப்பது மூன்றாவது உலகமகா யுத்தம்:



இன்று நடைபெற்று வரும் அவ்கான்-ஈராக்கிய ஆக்கிரமிப்பும் யுத்தமும் மற்றும் நடைபெறப்போகும் சூடான்,சோமாலியா, லிபியா, ஈரான்-வடகொரியா யுத்தங்களும்,இரண்டாம் உலகமகா யுத்தத்திற்குப் பின் நடைபெற்ற 184 பாரிய-சிறிய அளவிலான யுத்தங்களும் பழைய முதலாம்,இரண்டாம் யுத்த வடிவத்தை தகர்த்து விட்டு புதிய மகாயுத்த வடிவத்தை எடுத்துள்ளது! ஆனால் உள்ளடக்கம் ஒன்றுதாம்.தோற்றத்தில் இஃது உலக மகாயுத்தமாக இருக்காது,ஆனால் 1945 க்குப் பிறகு நடைபெறும் அனைத்து யுத்தங்களும் இந்த மூன்றாவது உலக மகாயுத்தத்தின் புதிய வடிவத்தைக்கொண்டே நடைபெறுகிறது. இதன் சாரம்மூலதனப்பாச்சலுக்கெதிரான அனைத்து நாடுகளையும்-இயக்கங்களையும்கொய்தெறிவதே.இந்த யுத்தங்களின் விருத்தி 'பயங்கர வாதத்திற்கெதிரான யுத்தக் கூட்டு' என்ற முக மூடியைத் தாங்கி உலக மகாயுத்தமாக நடைபெறுகிறது, இதுதாம் உண்மை!




ஏகாதிபத்திய ,நவகாலனித்துவ பல் தேசியக்கம்பனிகளுக்கெதிரான செயற்பாடுகள்,போர்கள்,தேசியயெழிச்சிகள்,இடைவிடாத தன்னெழிச்சியான எதிர்ப்புகள், உலக தழுவிய தன்னார்வக்குழுக்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள், இவற்றுக்கும்பல் தேசியக்கம்பனிகளுக்கும் நேர்எதிராகவும் பகை முரண்கள் நிறைந்திருப்பினும் இவ் எதிர்ப்பியக்கங்களுக்குள் ஊடுருவிய பல்தேசியக்கம்பனிகளின் புத்திஜீவிகள்-மாபியாக் குண்டர்படைகள் குறிப்பிட்ட எதிர்ப்பியக்கங்களை 'பயங்கரவாதிகளின் கூட்டு'வடிவமாச் சித்தரிப்பதில் வெற்றியீட்டியு;ள்ளன. இது 11 செப்டம்பருக்கு பின் வெள்ளையின கவ்போய் மூலதனவாதிகளுக்காக உருவாக்கப்பட்ட விசவடிவிலான அராஜகக்கூட்டுணர்வுக்கப் பின் இன்னும் ஆளமாக அனைத்து தேசிய விடுதலைச் சக்திகளையும் முடக்கி அமெரிக்காவுக்கு கூஜா துக்க வைத்துள்ளது!.




இறுதியாகச் சிலவற்றை தொகுப்பாகக் கூறுகிறோம்:




இன்றைய ஆளும்வர்க்கங்கள் தத்தமது கூடாரங்களுக்குள் (முதலாளிய கருத்தியில்) இருந்துகொண்டு பற்பல புதிய கூடாரங்களை (பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்) உருவாக்கி விடுகிறார்கள்.



சுதந்திரம்,ஜனநாயகம் எனும் பெயரில் மூன்றாமுலக ஆரியரற்ற மாற்று இனங்களை கலாச்சார, தேசிய அலகுகளை உருத்தெரியாது அழிக்கிறார்கள்.



ஒரு இனம் உற்பத்தியை கட்டுப்படுத்தி, தாமே தொழில் பேட்டையாளர்களாகவும் மற்ற இனங்கள் இவாகளது தயவில் தங்கி நுகர்வோராக இருக்கவைத்தல்.



ஒரே மொழி(ஆங்கிலம்) ,ஒரே மதம்(கிறித்துவம்) ஒரே பண்பாடு(மேக் டொனால்ட் கலாச்சாரம்) உருவாக்கிக்கொள்ளல்.



உலகத்தில் நிலவும் அனைத்து அரசுகளையும் மாநில அரசுகளின் நிலைக்குத்தள்ளி மத்திய அரசாக அமெரிக்கக்கூட்டணி பொறுப்பேற்றல்.


சர்வதேசச் சட்டவாக்தை உலக வங்கியிடம் கையளித்தல்.


உலகப் பொலிசாக அமெரிக்காவை அனைவரும் ஏற்க வைத்தல்.


இதுவே புதிய உலக ஒழுங்கு.


இதிலிருந்து தப்பிக்க என்ன வழி? இதுவே முக்கியம் பெறும் கேள்வியாக இனிமேல் பேசப்படவேண்டும்! °


ப.வி.ஸ்ரீரங்கன்

Mittwoch, Dezember 05, 2007

ஜனநாயத்துக்கான கட்டமைப்பு புதிதாக...

ஜனநாயகம்:புதிய சிந்தனை!



"அனைத்து உலகத்தாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட ஜனநாயகத்தில் "மனிதர்கள் தம்மைத்
தாமே சுயநிர்ணயஞ் செய்வதற்கும்,
சமூகத்தில் தனது கருத்தை வெளிப்படையாகக்
கூறுவதற்குமான உரிமைகளை" குறிப்பிட்டவொரு "அரச"வடிவம் மட்டுப்படுத்த
முடியாதென்பதாகும்.ஜனநாயகமானது இன்று "புதிய ஜனநாயகமாக" அபிவிருத்திக்குட்பட்டாக
வேண்டும்!அவசர அவசியமாக இது நடைமுறைக்கான வழிவகைகளைக் கண்டடைய வேண்டும்.மிக அண்மைய
250 வருடங்களுக்குப் பின்பான மனித நடத்தைகளின் சமூகப் பொருளியல் நகர்வுக்கு
ஒத்தாசையாகவும் பின்பு அதையே மனிதப் பலாத்தாகரத்துக்குமான ஆயுதமாகவும்
பயன்படுத்தப்படும் கால வர்த்தமானத்தில் நாம் வாழ்வதாலும், இதன் தாத்பரியம் உணர்வு
பூர்வமாகப் புரியப்படவில்லை.சுதந்திரம்-தனித் தேர்வு,சுய வெளிப்பாடு-சுயதேர்வு ஆகிய
மனித நடத்தையின் சுய நிர்ணயத்துக்கு இந்த ஜனநாயக விழுமியம் மிக அவசியமானது".



""மனிதரின் வாழ்க்கையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல,
சமூக வாழ்க்கையே மனிதரின் உணர்வை நிர்ணயிக்கிறது""-
கார்ல் மார்க்ஸ்.


எந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்?நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும்,மனித வருத்தல்களும் நடைபெறும்போது, ஜனநாயகச் சூழலுக்குள் வாழ்ந்த இலங்கையர்கள் எங்ஙனம் இந்த இருள் சூழ்ந்த நிலைமைக்குள் மெளனித்தார்கள்?நாம் பாகிஸ்தானிலோ அல்லது அவ்கானிஸ்தானிலோ வாழவில்லை!எனினும் எமது நாடுகள் இத்தைகய இராணுவச் சர்வதிகாரத்துக்கு(பாக்-அவ்கான்) நிகராகப் பாரிய வன் கொடுமை அரசுகளாக விரிவடைந்துள்ளன.



இலங்கையின் இன்றைய அரச நிர்வாகச் சூழல் ஒற்றையரச வடிவத்துள் நிலைபெற்றுப் பரிபாலனம் செய்யப்படவில்லை.இலங்கையில் நாம் ஏற்க மறுத்தாலுஞ்சரி அல்லது ஏற்றாலுஞ்சரி இருவேறு அரச ஜந்திரங்கள் நிலை பெற்றுவிட்டன!இந்த இருவேறு அரச ஜந்திரங்களினதும் குறிக் கோள் ஒன்றுதாம்.எனினும் தத்தமது மக்களின் நல் வாழ்வு குறித்த கரிசனையில் சிங்கள வன் கொடுமையரசானது ஒருபடி மேலே சாதகமாகச் செயற்படுகிறது.எமது தரப்பிடம் பாரிய உற்பத்திவலுவற்றதால் இந்த ஜனநாயகத் தன்மை மிக அபிவிருத்தி பெறவில்லை.-இதுவுண்மையான ஒரு மனித அவலம்.ஜனநாயகத்தின் அபிவிருத்தியானது அடிப்படை அரசியற் கட்டுமானத்தின் மூலமும், வளர்வுறத்தக்க இயல்பு நிலையைப் பொருள் உற்பத்தியுடன் எட்ட முடியுமென்பது என் தாழ்மையான கருத்து. எமது நாடுகளின் இருவேறு அரச ஜந்திரங்களையும்,வெவ்வேறான தனித்துவ இயக்கமாக நிறுவுவதில் முனைப்புறும் எமது கருத்துருவத்துக்கு வலுச்சேர்ப்பதல்ல எமது தலையாய நோக்கு!



இன்றெமது அடிப்படைப் பிரச்சனைகளுக்கு மூல காரணம், அரச வடிவமானது ஜனநாயகத்தின்பாலான மனித மதிப்புகளுக்குத் தலை சாய்க்காது படுபிற்போக்கான முறைமையில் மக்கள்-இனங்களின் சொத்தைக் கொள்ளைகொள்ளும் ஓட்டுக் கட்சி ஆதிக்கமாகும்.முதலாளித்துவத்தில் இது விட்டொழிக்க முடியாதவொரு பெரும் ஊழ்வினை.இத்தகைய அனுகூலமற்றவொரு அரச நிர்வாகக்கட்டமைப்பில் இனங்களுக்கிடையிலான பொருள்வய விருப்புறுதி மிக அண்மையக் காலத்தின் இன முரண்பாடாக வெடித்தபோது நமக்கு இருவேறு நிர்வாக அலகுகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாது வந்து சேர்ந்தன.
இந்த முறைமைக்குள் ஜனநாயகப் பண்பில் பாரிய பண்பு மாற்றம் நிகழ்வதற்கான ஊக்கம் இயல்பாக நடைபெற்றபோது,அந்த வகையானவொரு சமூக வாழ்வு தற்செயலாக நம்மைத் தடுத்தாட் கொண்டது.இங்கே ஜனநாயத்தின் உயிர் ஊசாலாடிக் கொண்டது!


புதியதாகப் படைத்தல்.புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தோடுதாம் நமது நாடுகளின் சமூக வளர்ச்சி ஸ்த்தம்பித்திருக்கிறது.பொருளாதாரத் திட்டமிடல்-தகவமைத்தல்,பொறிமுறையைப் புரட்டிப்போட்டுப் புதிய பாணியில் புதுமைப்படுத்துதல் போன்றுதாமிந்த ஜனநாயகப்படுத்தலும் மிக அவசியமாகும்.மேற் சொன்ன வகையில் பொருளாதாரப் பொறிமுறையைப் புரட்டிப் போடும்வேளைகளில் அதன் கட்டமைப்பில் பாரிய மாற்றம் தவிர்க்கமுடியாது ஏற்படும்.அங்ஙனம் செய்வது-ஏற்படுத்துவதுபோன்று இன்றைய ஜனநாயகத்துக்கான மாற்றீடாகப் புதிய ஜனநாயகப் புரட்சி "ஜனநாயகக் கட்டமைப்பை"21ஆம் நூற்றாண்டுக்கான தகமையுடன் அதை நிறுவிக்கொள்ளவேண்டும்.இது வெறும் மன விருப்பல்ல.இதற்கான தெளிந்த திட்டவரைவுகள்-போராட்டப்பாதைகள்,நண்பர் யார்-எதிரியார்?என்று வரையறை செய்யப்பட்டும்,எவர் இப் போராட்டத்தில் முன்னணியாளர்கள் என்றும் பாரிய"பொதுக் கொள்கை"(Concept)திட்டமிடப்பட்டது.இலங்கையின் வரலாற்றில் இத்தகைய பொதுக்கொள்கைகள் பற்பல காலத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னது இருந்த இடந்தெரியாது புதைக்கப்பட்டதும் புரட்சிகரக் கட்சிகளுக்குப் புதியதல்ல.மக்கள் ஆதிக்கம் பெறுவதுதாம் இதன் தெளிந்த நோக்கு.



கட்சி அரசியலும்,அதன் ஆதிக்கமும்:


கட்சி அரசியலின் ஆர்வங்கள் மக்கள்சார்ந்த அபிவிருத்திகளை மட்டுப்படுத்தித் தமது நிர்வாகத் திறமைகளை அந்நிய தேசங்களின் ஆர்வங்களுக்குத் தரகு வேலைபார்ப்பதில் செலவாக்கியபோது தேசம் மனிதச் சிறைக் கூடமாக மாற்றமுறும் புறச் சூழல் மிக வலுவாக முகிழ்த்துக் கொண்டது.இந்தச் சூழலை இனங்கண்ட இலங்கைத் தேசிய வாதமானது தனித்துவத்தைச் சிங்கள மக்கள் சமுதாயத்தின் பெரும் சொத்தாகவும்,சிங்கள மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகளாகவும் சமூக உளவியலைத் தயாரித்தது.இத் தயாரிப்பானது மக்கள் வெளிக்குள் ஒரு பெரும் இனத்துவ அடையாளத்தை வற்புறித்திக் கொண்டது!இங்கேதாம் சிங்கள இன அதிகார வர்கத்தின் அத்துமீறிய இனவொதுக்கல், அரச சட்டவாக்கங்கள்-வரைவுகள் தமிழினத்துக்கு விரோதமான-ஜனநாயக மறுப்பாக முகிழ்த்து முழு இலங்கையையும் சுடுகாடாக்கும் அரச வன்முறையாக ஆதிக்கம் பெற்றது.


கட்சியரசியலானது தனது ஆர்வங்களைத் தனித்துவமாக்கிக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் தயவிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தானே நேரடியான ஜனநாயகத் தன்மையினது தடுத்தாட்கொண்ட செல்லப் பிள்ளையாக மலர விரும்பிய போது, இக் கட்சிகளின் ஆதிக்கமானது அதிகார வர்க்கத்தின் கடைக்கோடிய அரசியல் முகிழ்ப்புக்கும,; இராணுவச் சர்வதிகாரத்துக்கும் அடி பணியும் பாராளுமன்ற ஒட்டுக்கட்சிகளின் அற்பத்தனங்களின் கனவில் மண்ணையள்ளிப் போட்டபோது,அதுவே தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையாகத் தோற்றம் பெற்றது- இலங்கைக் குறுந் தேசிய வெறி தமிழ் மக்களின் பரம விரோதியாகியது.


இத்தகைய நிலையில் ஜனநாயத்துக்கான கட்டமைப்பு புதிதாகக் கட்டியமைப்பதுமட்டுமல்ல புதிய முறையிலாக ஜனநாயகத்தைப் படைப்பதும் வளர்த்தெடுப்பதற்கான வழி முறைகளைக் கண்டடைய வேண்டிய தேவையை இந்த ஓட்டுக்கட்சிப் பாராளுமன்றமும், சிங்கள இராணுவச் சர்வதிகாரமும் நமக்கு இன்று முன்வைத்திருக்கிறது.பாராளுமன்றச் சட்டத் திருத்தங்களும்,நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையும் இலங்கையில் கட்சிகளின் மேலாதிக்கதை மிக இலகுவாக அறிவதற்கானவொரு அளவு கோலாகும்.நிலவுகின்ற அதிகார வர்க்கத்தின் கொடுமைகளையும்,அத்தோடு கட்சிகளின் அதிகாரத்துவத்தையும் இலங்கை அரச அமைப்பு வடிவத்துக்குள் உள்வாங்கியபின்,நேரடியாக அவை மக்கள்மீது செல்வாக்குச் செலுத்தும் காட்டாட்சி நிலையை ஏற்படுத்தியது வரலாறு.எமது கல்வியாளரிடம் கட்சிகளினது வல்லாதிக்கம் பற்றிய பாரிய புரிதல் சமூக விஞ்ஞானத் தளத்தில் அன்றிருக்கவில்லை.எனினும் காலஞ் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்கள் 23.12.1989 இல் வீரகேசரியில் ஒரு கட்டுரையில்(கொர்பச் சேவ் வீழ்ச்சி கண்டுவிடக்கூடும் என்று மேற்குலகம் அச்சம் கொள்வதன் காரண மென்ன?) இந்தக் கட்சிகுறித்த பார்வையை சோசலிசக் கட்சிக்குள் இனம் கண்டு,அதன் மத்தியத்துவ கொள்கைக்குள் முரண்பட்ட நிலைமைகளை ஜனநாயகத்தோடு பொருத்த முற்பட்டும் அதைப் பெரிதாக வளர்த்தெடுக்க முடியாது குறிக்கியிருந்தார்.நாம் அக்கட்டுரையை விரிவாக விளங்குவதும் அவசியமானது இன்று.



மக்கள் நலக் கல்வியாளர்களின் பற்றாக் குறையானது இன்றுங்கூட நமது மக்களுக்காகப் போராட வெளிக்கிட்ட தமிழர்களை சிங்கள ஆளும் வர்க்கத்தின் எலும்புத் துண்டுக்காக வாலாட்டும் சூழலுக்குள் குப்பறத் தள்ளிவிட்டது.


கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இவற்றின் இயக்குனர்கள்.



இத்தகைய கட்சிகளின் ஆசியில் நலம்பெற்று,இன்னும் பதவி-பணம்பெற விரும்பும் இன்னுமொரு சமூகவிரோதக் கும்பல் மக்களின் உரிமைகளைத் தமது வரும்படிக்காகத் திட்டமிட்டுச் சிதைக்கிறர்¡கள்.இவர்கள் மக்களுக்குள் ஒழிந்திருந்தபடி அந்த மக்களையே கொலைசெய்து அவர்களின் குருதியில் தமது குடும்ப நலத்தைத் தக்க வைக்கிறார்கள்.இத்தகைய மனித விரோதக் கும்பலில் ஒன்றுதாம் ரீ.பீ.சீ.வானொலி மற்றும்"தேனீ-ஆனந்தசங்கரி" இணையத்தளம்.இது குறித்துக் கட்டுரையில் பின் பகுதியில் பார்ப்போம்.


இத்தகைய கட்சியாதிக்கத்தின் காட்டாட்சியை நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள தமிழ்நாட்டைக் கொஞ்சம் உற்று நோக்கினால் மிகவும் பொருத்தமாகவிருக்கும்.இது குறித்து விளக்கம் தேவையில்லை.



இந்தப்பண்புகளின் வெளிப்பாடே புரட்சிகர இயகங்களின்மீதும் பாரிய செல்வாக்குச் செலுத்தியது.இலங்கையில் தோன்றிய சகல இயக்கங்களும் ஏதோவொரு வகையில் சிங்களவரசின் ஆதிக்கத்துக்கெதிராகவே தோற்றும் பெற்றன.எனினும் அவற்றைத் திசை திருப்பிய அந்நிய ஆதிக்கம் பற்றிய புரிதலைவிட்டு,இயக்கவாத மாயை எங்ஙனம் நமது கட்சி ஆதிக்கத்தோடு தொடர்புடையதென நாம் பார்த்தோமானால் இன்றையு இந்த உண்மை முகத்தில் ஓங்கியடிக்கும்.


தனிநபர் வழிபாடு,
இயக்கவாதம்,
தனித்த இயக்கம்,
மாற்றுக்கருத்து
முடக்கம்
எதிர்கட்சிக்குத் தடை
மக்கள் சுய வெழிச்சியின்மை போன்ற
அனைத்தும் இந்தப் பண்பின் குட்டிகளாகும்!



ஓட்டுக்கட்சிகளின் ஆதிகத்தின் வாயிலாக மக்களால் தேர்ந்தெடுத்த(பெயரளவில்)உறுப்பினர் தேர்ந்தெடுத்த மக்களைக்கு நன்றியுள்ளவளா(னா)க இருப்பதில்லை.மாறாகக் கட்சியினால் வழங்கப்பட்ட சீட்டுக்கும்,கட்சியே தனது வெற்றிக்குமான தெய்வமாக இருப்பதால் கட்சித்தலைவரின்காலில் விழுந்து நக்கும் இழிபிறவியாகமாறிவிடும் இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்ஏ-எம்.பீ.



புலி எதிர்பாளர்களும்,இலங்கைச் சிங்களப் பேரினவாதக் கைக்கூலிகளும்:


இன்றைய இலங்கைத் தரகு முதலாளிய அரச அமைப்பில் ஓட்டுக்கட்சிகளின் அதீத அதிகாரத்தைச் சற்றுப்பார்த்திருக்கிறோம்.
இந்தமைப்பில் ஆளும் வர்க்கம் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும்,தமிழ்த் தரப்பில் சுமார் 80.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது.இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது.உலகம் 21 ஆம் நூற்றாண்டில் புதிய உத்வேகத்தோடு தத்தமது இனங்களின்-தேசங்களின் நலன்களைத் தூக்கிப் பிடிக்கின்றபோது தமிழர்களாகிய நாமோ வெறும் புலி எதிர்ப்புக் கவசத்தோடு உலாவுவதற்குப் புலிகளின் விடாப்பிடியான ஜனநாயக மறுப்பே முதற்காரணமாகும்.


நண்பர்கள் யார்,எதிரிகள் யார்? என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது.ஆனால் இந்தப் பார்வையில் இடிவிழும்போதுதாம் மக்களைப்பற்றிக்கொள்ளும் ஞானம் புலிகளுக்கு வந்து தொலைகிறது!இந்த இழிநிலையில் நமது மக்களின் ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளான"சுயநிர்ணயம்,சுதந்திர தன்னாட்சி"போன்ற அபிலாசைகள் யாவும் நீற்றுப்போகும் நிலையையெய்திவிடுகிறது. கடந்தகால நமது(புரட்சிக்கட்சியின்) வரலாற்றுத் தவறிலிருந்து புலிகளின் வருகை தொடர்கிறது.புலிகளின் வருகை தமிழ் மக்களின் புதிய ஆளும் வர்க்கத்தின் வருகையைக் கட்டியங் கூறுகிறது.இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும்,பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை.இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.ஆனால் புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல.இத்தகைய தரணத்தில்தாம் நமது எதிரியான சிங்களச் சியோனிஸ்டுக்கள் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள்.இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள்.இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள்.இவர்களது மகத்தான தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைத் தீயை அணைத்துவிட முனையும் கைங்காரியங்கள் இன்று உலக அரங்கில் மிகக் காட்டமாக நடந்தேறி வருகிறது.


இந்த நிலையில் நமது நிலைப்பாடென்ன?


புலிகளுக்கான சர்வதேசத் தடைகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தையும்,விடுதலையையும் கொணர்ந்து,சிங்கள இனவாதத்திடமிருந்து சகல மிருகத்தனங்களையும் இல்லாதாக்கி விடுமா?,காலாகாலமாக மெல்ல இடம்பெறும் சிங்களக்காடையர்களின் குடியேற்றம் இல்லாதுபோய் தமிழர்களின் பிரதேசம் தமிழ்மக்களின் வாழ்விடங்களாக மீண்டுவிடுமா?தமிழ்பேசும் மக்களின் ஜீவாதாரவுரிமைகளை இத்துணை காலமாகக் காத்துவராத இலங்கைப் பாசிச அரசு இன்றுமட்டும் தமிழர்களின் மீட்பர்களாக உருவாவதாக வெளியுலகஞ் சொன்னால் சரியாகிவிடுமா?


இன்றைய புலி எதிப்புக் கும்பல்களிடம் என்ன இலக்கு இருக்கிறது?

அந்த இலக்கு மக்களின் நல்வாழ்வுக்கான அத்திவாரமாகுமா?

தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தையும் அவர்களின் வாழ்வுரிமையையும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து விடுவித்துக் கொடுத்திடுமா?


ரீ.பீ.சீ.வானொலியின் செய்தி மொழியானது மிகவும் உள்நோக்கமுடையதும்,இலங்கைப் பாசிசச் சிங்களச் சியோனிசத்தின் மிகத் தந்திரமான திட்டமிட்ட கருத்தாக்கமாகும்.இத்தகைய மொழிவழி நமது மக்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது சிங்கள அதிகார வர்க்கத்தின் மிகத் திட்டமிட்ட பரப்புரையாகும்.ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய பரப்புரைகள் போராடும் மக்களினங்களை-தொழிலாள வர்க்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கான கருத்தியலாக இவற்றைச் செயற்படுத்துவது வழமையாக இருக்கும்போது இந்த வானொலி எந்த மக்கள் நலத்திலிருந்து இத்தகைய இழி மொழிகளைக் காவி வருகிறது?


இன்றுவரையும் தமிழர்கள்மீது அத்துமீறிய அடக்குமுறைகளைச் செய்து வரும் சிங்கள இராணுவம்,எமது பெண்களின் பிறப்புறுப்புக்குள் குண்டுவைத்து வெடித்துச் சிதறடித்த காட்டுமிராண்டிச் சிங்கள இராணுவத்தான் "படைவீரர்"எனும் வார்த்தையால் மொழியப்படும் அதேவேளை நமது சின்னஞ்சிறு தேசபக்த போராளிகள் வன்முறையாளர்கள்-பயங்கரவாதிகளென மொழியப்பட்டுத் தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை இல்லாதாக்கும் சிங்கள-இந்திய நோக்கத்துக்கு உடந்தையாக இருப்பது ஜனநாயகத்துக்கான கோரிக்கையோ அல்லது போராட்டமோ அல்ல!இது திட்டமிட்ட இலங்கை-இந்திய நலன்களோடு பின்னப்பட்ட கருத்தியல் யுத்தம்.இந்த யுத்தத்தைச் செவ்வனவே செய்துவரும் ரீ.பீ.சி-தேனீ இணையத்தளம் மிக நெருங்கிய முறைகளில் தமிழ் மக்களின் எதிரிகளுடன் கூட்டுவைத்துத் தமது நலன்களை அடைவதற்காக திடங்கொண்டு போராட முனைகிறார்கள்.இவர்களனைவரும் ஏதோவொரு வகையில் அதிகார வர்க்கத்தின் துணையோடு தமிழ் மக்களின் உரிமைகளுக்கெதிரான மனோவியல் யுத்தத்தில் தயாரிக்கப்பட்டவர்கள்!இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகபூர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.


ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழியூடாக எதைக் கூற முனைகிறார்?இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம்.கிட்லரையும்,முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள்.அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும்,மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?


இத்தகைய மொழிகளினு}டாக ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிராகக் கருத்தாடும் சிவலிங்கம் எந்தவகை மார்க்சியத்தையும்,எந்தவகைப் போராட்டத்தையும் முதலாளியத்துக்கெதிராகக் கொண்டுள்ளார்?


மக்களின் நல்வாழ்வைத் துவசம் செய்யும் கொடிய வல்லரசுகள் இவர்களிடம் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசுகளாகவும்,ஒடுக்கப்படும் தேசியயினங்கள் செய்யும் போராட்டங்கள்,கட்டும் இயக்கங்கள் வன்முறைக் கும்பலாகவும் விளக்கமுறும்போது நாம் இவர்களையின்னும் நம்ப முடியுமா?இத்தகைய ஓடுகாலிகளினால் மக்களின் நியாயமான உரிமைகள் இல்லாதாக்கப்படும்போது இவர்களும் புலிகளது தலைமைபோன்று இன்னொரு வடிவமென்பதைத்தவிர வேறெதை நாம் காணமுடியும்?


இன்றைய சூழலில் சர்வதேசங்கள் புலிகளைத் தடை செய்வதென்பது தமிழர்களுக்கு எதிரானது.தமிழ் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்துக்கு எதிரானது.இது புலிகளின் காட்டுமிராண்டித்தனமான ஜனநாயக மறுப்புக்குக்கிடைத்த பரிசு என்றுகூறுபவர் உண்மையில் உள் நோக்கமுடையவர்கள்.புலிகளைவிட ஆயிரம் மடங்கு கொடிய பாசிசச் சக்திகளை அமெரிக்கா-ஐரோப்பா உலகம் பூராகவும் வளர்த்துவருகிறது.கொடிய அரசுகள் இன்னும் ஜனநாயக முகமூடியோடு மக்களைக் கொல்லும்போது அத்தகைய அரசுகளையின்னும் தோழமை அரசுகளாக இந்த ஐரோப்பிய-அமெரிக்கு வல்லூறுகள் கட்டிப்பிடித்தபடி புலிகளைத் தடைபண்ணுவது தமது நலன்களை இலங்கைப்பாசிச அரசினு}டாகவும் புலியினு}டாகவும் பெறுவதற்கன்றி வேறெதற்கு?


ஏலவே பற்பல தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட இந்திய வல்லாதிக்கமானது இன்று இலங்கைமண்ணில் தனது உளவுப்படையோடு பாரிய சதிப்போரில் ஈடுபடும்போது நமது மக்களின் நியாயமான கோரிக்கைகள் எவரெவருக்கு ஏற்புடையதல்ல என்பதைச் சாதரண மக்களே புரிந்துள்ளார்கள்.


மக்களின் நலனை முன்னெடுக்காத புலி எதிப்புக் கும்பலான ரீ.பீ.சீ.வானொலி-தேனீக் கும்பல் உண்மையில் புலிகளின் இன்னொரு வடிவமென்பதை நாம் மிக வலுவாக அறிவது அவசியமாகும்.இவர்களிடம் அதிகாரத்தைச் சுவைக்கும் அவசரமும்,பதவி வெறியும் தடம்புரண்டோடுவதை நாம் இவர்களின் பரப்புரைகளிலிருந்து தினமும் அறியக்கூடியதாக இருக்கிறது.மற்றும்படி மக்கள் நலன்,ஜனநாயகம் என்பதெல்லாம் புஷ் பாணியிலான முகமூடிகளே!இவர்களின் மிருகத்தனமான வெறி பதவிகளைப் பங்குபோடுவதும்,பணங்களைச் சுருட்டுவதுமே.புலிகள் இவர்களை அணைத்துப் பதவிகளில் பங்குபோடும் தறுவாயில் புலிகளே இவர்களது வாயால் மிகப்பெரும் ஜனநாயக்காவலாராகவும் மாறிவிடுவார்கள்.


சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் பாசிசப் புலிகளே ஏற்படுத்தியவர்கள்.எனினும் புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை!அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும்,விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள்.அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும்,இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது.இதிலொரு குழுவே இந்த ரீ.பீ.சீ.வானொலியும்-தேனீயும்,ஆனந்த சங்கரியும்-டக்கிளசும்!


இத்தகைய பிராணிகளை வைத்தும்,சிங்களத் தரப்பில் இனவாதிகளை வைத்தும் எமது கோரிக்கைகளுக்கு அற்ப சலுகைகளைத் தந்து எமது வலுவைக் குன்றவைத்து ஒடுங்கச் செய்வதே இவர்களது முக்கிய நோக்கமாகும்.இதை இலங்கையரசோடு இந்தியா 29.07.1987 இல் இருந்தே ஒப்பந்தங்கள் மூலமும்,உளவுபடைப் போராட்டங்கள் மூலமும் செய்து வருகிறது.

"The official language of Sri Lanka shall be Sinhalla.Tamil and English will also be official languages."-2.18.Indo.Sri Lanka Agreement of 29.July 1987.


சாதரணமாக ஒரு மொழியினது அந்தஸ்த்தையே ஏற்கமுடியாதவொரு கூட்டம்தாம் நமது மக்களின் தன்னாட்சியை ஏற்பார்கள்!இருக்கலாம்-எடுக்கலாம்,படுக்கலாமென்பதெல்லாம் என்னதாம் கோதாரியோ!"சிங்களம் இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கும்.தமிழும் ஆங்கிலமும் அரச மொழிகளாக இருக்கும்"என்றால் எங்கே இலங்கையிலா அல்லது இந்தியாவிலா?இதுதாம் இந்தியாவினதும்,இலங்கையினதும் பரந்த மனது."The official language of Sri Lanka shall be Sinhalla and Tamil languages.English will also be official language."ஏன் இப்படி எழுத முடிவதில்லை?இங்கேதாம் இலங்கையும் சிங்களமும் தனித்துவமானது.இது தமிழருக்கு உரியதில்லை.சிங்களமானது அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளினது.தமிழ் வந்தேறி மொழி என்று சொல்வதுதானே இந்தப் பதங்கள்?


இன்று நமது மக்களுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் புலி-தமிழ் மக்கள் எதிர்ப்புக் கும்பலான" ரீ.பீ.சீ.-தேனீக் கும்பலுக்கு எலும்புத் துண்டுகள்தாம் முக்கியம்.நமக்கோ மக்களின் ஜீவாதார உரிமைகளைப் பெறுவதும்,மக்கள் சகல உரிமைகளுடனும் தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ்வதுமே மிக முக்கியமாகும்.


புலிகள் இனியென்ன செய்தாக வேண்டும்?:


முதலில் நமது மக்களின் எதிரிகள் யார் என்பதைத் தெளிவாக வரையறுத்தாகணும்.


1:சிங்கள-தமிழ் நிலப்பிரபுகள்,(தமிழ்த் தரப்பில் புதிய ஆளும் வர்க்கம் உருவாகியுள்ளது.அவைகள்யாது?:புலி உயர் அதிகாரிகள்,அவர்களைச் சுற்றிய படிப்பாளிகள்,புலியினது பெரும் வர்த்தகர்கள்,பல்வகை முதலீடுகளைச் செய்திருப்பவர்கள்,புலிப் பெரும் நிலவுடமையாளர்கள்,ஏகாதிபத்தியத்தோட நேரடியாகத் தொடர்பு வைத்து வர்த்தகம்,போர் எனப் பேரங்கள் நடாத்தும் உற்பத்தியாளர்கள்,உடமையாளர்கள்)

2:சிங்கள-தமிழ்(புலி) தரகு முதலாளிகள்,

3:ஏகாதிபத்தியம்.-இவர்கள அனைவரும் தமிழ்-சிங்கள-இஸ்லாமிய மக்களின்; எதிரிகள்


நண்பர்கள் யார்?


1: தொழிலாளிகள்-தேசிய முதலாளிய வர்க்கம்.
2:விவசாயிகள்
3:சிறு உற்பத்தியாளர்கள்


தலைவர்கள்?

தொழிலாள வர்க்கமே!


பிரதானசக்தி-செயற்பாட்டு வர்க்கம் நிச்சியமாக


விவசாயிகள்தாம்.


புரட்சி?


புதிய ஜனநாயகப் புரட்சி!


இதுவே 21 ஆம் நூற்றாண்டுக்கான தகமையுடைய போராட்ட இலக்கு.



ஜனநாயத்தைப் புதிய முறையில் தகவமைத்துக் கொள்வதற்கான புதிய சிந்தனை இங்கேதாம் தோற்றமுறும்.



இதன் கீழ் போராடுவதற்கேற்றவாறு புலிகளின் கீழ் அணிதிரண்டிருக்கும் போராளிகளும் மக்களும் சுய எழிச்சி பெற்றாக வேண்டும்.



மக்களின் சுய எழிச்சிகளை மக்கள் மன்றங்களின் மூலம் வழிகாட்டி புரட்சிகரச் சக்திகளாக்கவேண்டும்.


இந்திய மேலாதிகத்தையும்,அமெரிக்க-ஐரோப்பிய ஏகதிபத்தியத்தையும் தெட்டத் தெளிவாக இனங்காட்டி எதிர்ப்பது.இவர்களே நமது தேசத்தின் எதிரிகள் என்பதை விடாப்பிடியாக நிறுவுவது.


இத்தகைய அரசுகளிடம் தண்டமிட்டுப் பேச்சுவார்த்தை-சமாதானத் தூது என்ற பித்தலாட்டத்தை நிராகரித்து மக்களின் நிழலில் நிற்பது.


நமது தேசத்தின் தேசிய முதலாளியத்தைக் காப்பதற்காக அனைத்து அந்நிய மூலதனத்தையும் தேசச் சொத்தாக்குவது.தேசிய முதலாளியத்தை ஊக்குவித்து மக்களின் அனைத்து தேவைகளையும் அவர்கள் மூலமாக உற்பத்தி செய்து நிறைவேற்றும் தகுதியை பெறும் தேசிய அலகாக அதை வளர்தெடுப்பதும் பின் அத்தகைய முதலாளிய வளர்ச்சியில் தேசியத் தன்மைகளின் அனைத்துப் பிரிணாமங்களையும் பாதுகாப்பதற்கான வகையில் மக்கள் மன்றங்களே அவற்றைப் பராமரிக்கும் அந்தஸ்த்தை உயர்த்துவதும் மிக அவசியமான பணி.


வரலாறு வெற்றிடங்களை விடுவதில்லை.


காலம் தகவமைக்கும் இன்றைய சூழலானது தமிழ் மக்களின்மூலம் இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிப்படர்வதற்கான நிலைமை உருவாகிறது.அந்நிய தேசங்களின் தடையானது தமிழ் மக்களின் சுயவெழிச்சியோடு தமது தேசத்தைக்காக்கும் புதிய ஜனநாயகப் போராக வெடித்தாகவேண்டும்.


இதற்கு முழுக்க முழுக்க இன்றைய புலி அரசியலும்,அதன் தலைமையுமே முட்டுக்கட்டையாகும்!



"உன் துப்பாக்கிக் குண்டுகள்
எங்களது உடல்களைக் துளைக்கலாம்
உயிரைக் குடிக்கலாம்
எனினும் உயிரிலும் மேலான சுதந்திரவுணர்வை
அவை என்ன செய்ய முடியும்?"-
பிடேல் காஸ்ரோ.



இதை ஒவ்வொரு தேச பக்தப் போராளியும் இனம் கண்டு அத்தகைய தடைகளைக் களைந்து தமிழ் மக்களின் விலங்கை ஒடிக்க முடியும்.இதற்காகச் சிங்கள-இஸ்லாமிய மக்களின் மிகப் பெரும் பங்களிப்பை அவர்களோடு தோள் சேரும்போது மட்டுமே பெறமுடியும்.முழு இலங்கையும் புதிய ஜனநாயகப் புரட்சியின் வாயிலாக எழுந்து நிற்பதற்கான காலம் நெருங்கி வருகிறது.


இந்தத் தரணத்தில் செய்ய வேண்டியது இத்தகைய வேலைத்திட்டமே தவிரக் குண்டு வெடிப்பதல்ல.அப்படி வெடிக்குந் தறுவாயில் புலிகள் தாமும் அழிந்து மக்களையும் அடிமையாக்கிச் செல்வர்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, Dezember 01, 2007

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு...

இங்கேதாம்
புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு
அவர்களை வரையறுத்தோம்!




"இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க
அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே
வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி
விடப்பட்டிருக்கிறார்கள்.இவர்களையெல்லாம் கடந்து நமது மக்கள் இலங்கையின்
பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து தமக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கெதிராக அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச்
சிறுபான்மை இனங்களுக்கில்லை.இதைவிட்ட குறுகிய "தீர்வுகள்"எப்பவுமே இலங்கை
மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச்
சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும்.இதைத்தாம் இன்றுவரையான எமது
போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது.இங்கே, புலிகளோ அல்லச் சிங்கங்களோ நமக்கு
எந்த விடிவையும் தரும் தகமையுடையவர்கள் இல்லை!இலங்கையை ஆளும் கட்சிகள்
சுயாதிபத்தியமுடைய தேசியக் கட்சிகளோ அல்லது முற்றிலும் பொதுவான மக்கள் கட்சிகளோ
அல்ல."



இன்றைய உலகப் பொது நிலவரப்படி இலங்கையில் நடந்தேறும் அரசியல் இலங்கையின்-இலங்கை மக்களின் நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்படவில்லை என்பது எல்லோராலும் ஏற்கத்தக்வொரு உண்மைதாம்.இந்தவொரு மையமான உண்மையிலிருந்து வெளிப்படும் செயற்பாடுகள் தற்போதைய அரசியலில் இலங்கைச் சமுதாயத்தை முழுமையாக ஏமாற்றும் பொதுக் காரியத்தைச் செய்து முடிக்கும் பரிதாபகரமாவொனரு முன்னெடுப்பாகக் கட்சி அரசியலுக்குள் வேரூன்றியுள்ளது.ஓட்டுக் கட்சிகளின் திரைமறைவுச் சதிகளிலொன்று தத்தமது மக்களை ஏமாற்றியபடி அந்நிய அரசுகளுக்கு விசுவாசமாகக் காரிமாற்றும் முகவர்களாக இருந்துகொணN;ட அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவது.இதில் மிக வேகமாகச் செயற்படும் கட்சிகள் இலங்கையை ஆளும் கட்சிகளாகவும்,எதிர்கட்சிகளாகவும் இருக்கின்றன.இந்த இலங்கைக்குள் நிலவும் இனமுரண்பாடானது சாரம்சத்தில் இனங்களுக்கிடையிலான பொருளாதார முரண்பாடுகளாகவே இருக்கின்றன.அவைகொண்டிருக்கும் இலக்குகளுக்காக அத்தகைய முரண்பாட்டின் பக்க விளைவாக மொழிசார்ந்தும் இன அடையாளம் சார்ந்தும் முரண்பாடுகள் தோற்றமுறும்போது,அவற்றைத் தாரளமாக அந்நிய அரசியல் எதிர்பார்ப்புகள் தூண்டிக்கொண்டிருக்கின்றன.

இங்கே, மிக இலாவகமாகக் காரியமாற்றும் இந்த இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிகத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக்கொண்டிருப்பதிலிருந்து அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தரணங்களை அவை மீள் உருவாக்கத்துள் மலினப்படுத்தும் செயலூக்கத்தோடு சம்பந்தப்படுத்தி, இலங்கை அரசியலில் எந்தவிதமான முடிவெடுக்கும் நிலையை இழந்து வந்துள்ளன.இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலை இந்தக் கட்சிகளிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரக்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே.இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின் அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே கொண்டிருக்கவில்லை.இதுவொரு நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வருவதில் நமது போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருக்கிறது.

தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம் சேர்ந்த கலவையாகச் சர்வப்பொதுத் தீர்வுப் பொதியாக மயக்கமுறும் ஒரு அரசியல் செப்படி வித்தையை இந்தியாவின் ஆலோசனைப்படி "சர்வகட்சிக் கூட்டுக்கள்" முன்வைக்கும் நிலைக்கு அரசியல் விய+கம் சென்றுகொண்டிருக்கிறது.மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்தக் கட்சிகள் செய்து முடித்தன.இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்கு நிகரான இன்னொரு அரசஜந்திரத்தை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிசத் தன்மையிலானவொரு புலிகள் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்கித் தள்ளியது.

பெரும் மீட்புப் படையணியாக உருமாற்றப்பட்ட புலிகள் திட்டமிட்ட அவர்களது அந்நிய உறுவுகளால் மிகவும் கவனமாக நிர்வாகிக்கப்பட்டுத் தமிழ்பேசும் மக்களின் நலன்களை முன்னெடுக்காத சர்வதிகாரத்தன்மையிலான அந்நிய ஏவற்படையாகத் தமிழ் மக்களின் எழிச்சியை மறுவாக்கஞ் செய்துகொண்டது இந்த அந்நிய நலன்கள்.இதனாலின்று முன்னெடுக்கப்படும் இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.எனினும,; புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட முனைவதற்கில்லை.இங்கேதாம் கேள்வி எழுகிறது-இலங்கைச் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்குப் பங்கமற்ற நிர்வாக அலகுகள் என்ன?-அவற்றை எட்ட முனையும் செயற்பாடுகள் இலங்கை அரச யாப்புக்குள் எத்தகைய பண்பை நிலைப்படுத்தும் என்பதே.இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்கிப் பாகிஸ்தான் பாணியிலானவொரு ஆட்சியலகை நிலைப்படுத்துவதே.இங்கே, மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு.இதற்கு மிகத் தோதாகப் புலிகளின் இன்றைய இழிநிலை-குறுகிவரும் படைப்பலம் மக்களின் உரிமைகளை வெல்லுமொரு புரட்சிகரச் சக்தியாக அவர்களைத் தோன்றாதிருக்கும்படி புலிகளின் கட்டமைப்புக்குள் தனிநபர் வாதத்தையும்,குடும்ப அரசியல் எண்ணவோட்டத்தையும் உருவாக்கியபடி அந்த அமைப்பின் இருப்பை அசைக்கும் புறநிலையை மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஏகாதிபத்தியங்கள், தமிழ் மக்களின் எந்தவுரிமையையும் துடைத்தெறியும் என்பது சர்வப்பொதுவுண்மையாகும்.

இந்தவொரு அரசியலை மையப்படுத்தாமல் இலங்கையை ஆளும் கட்சிகளையும்-அரச வடிவத்தையும்,போராடும் இயக்கங்களையும் வெறும் கபடத்தனத்தோடு"ஐ.ஆர்.சி"மட்டத்துக்கு ஒதுக்கிக் குறுக்கி, அந்நிய ஏவல்படைகளை அவர்களின் இருப்பை வெறும் கிரிமனல் மட்டத்துக்குள் திணிப்பது தமழ்-சிங்களத் தொழிலாளவர்க்கத்தை ஏமாற்றும் முயற்சி.இலங்கைக்குள் பிரச்சனைகளை முடக்கிவிடுவது திட்டமிட்ட அந்நிய நலனின் தூண்டுதல்கள்தாமென்பதை இன்றைய இளையர்களே புரிந்தொதுக்க முடியும்.இத்தகைய கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோகும் சாணக்கியமாகும்.இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது.அவை முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள்.இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து எந்த ஏஜமானர்களுக்காக மனோரஞ்சன் வாலாட்டுகிறார்?

"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.திருவாளர் ஆனந்தசங்கரிப் ப+சாரியால் பாடப்படும் மேற்காணும் தேவாரத்துக்குத் தமிழ் மக்கள் பலியாகுவதற்கு ஏற்றவாறு புலிகளால் அவர்கள் முடமாக்கப்பட்டு உரிய முறையில் ஊனமாகப்பட்டபின்பே இந்தப் ப+சாரி ஜனநாயக்காவலராக நியமிக்கப்பட்டு,யுனேஸ்கோ விருது வழங்கப்பட்டது.இவையெல்லாம் காட்டும் உண்மை என்னவென்றால் மக்களின் உரிமையை மக்களே போராடிப் பெறவேண்டும் என்பதையே.இந்த மக்கள் சுயமாக எழிச்சியடையும் வலுவும் அந்த வலுவினூடாகப் புரட்சிகரமான படையணியை சுய பலத்துடன் அமைப்பதற்கும்,கட்சி கட்டுவதற்குமானவொரு சூழலைப் பாதுகாப்பதே இன்றைய அவசியமானதாகும்.இங்கேதாம் இந்தப் ப+சாரிகளும் அவர்களது எஜமானர்களும்,புலிகளும் குறுக்கே நிற்கிறார்கள்.


2


இந் நிலையில் நாம் தொடர்ந்தெழுதும் கருத்துக்களும் அதன் எதிர்பார்ப்புகளும் வெறுமனவே புலியெதிர்ப்புத் தர இலங்கை அரச ஆதரவெனப் புரியப்படுவது என்ற தளத்தைவிட்டு,மக்களின் நலன்களைத் தூக்கிப் பிடித்தலெனும் கோணத்தில் சிந்திப்பதே இன்றைய சூழலிற் பொருத்தப்பாடாக இருக்கும்.
புலிகளின் சந்தர்ப்பவாதத்தை மட்டுமல்ல இன்றைய காலத்து அரசியற் போக்கில் நாம் அனைத்து ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்களினதும் அரசியலையும் அத்தகைய அமைப்புக்களின் தலைவர்களையும் விமர்சனத்துக்குள்ளும், ஒரு புற நிலையான மதிப்பீட்டுக்கும் உட்படுத்தியும்-வந்துகொள்ளத்தக்கதாகவும் அவசியமான குறிப்புகள் எழுதியாக வேண்டும்.அன்றே, நாம் வரையறுத்தவற்றை மீளக் குறித்துக்கொள்வதற்கானவொரு சூழல் இப்போதும் உருவாகியுள்ளது.அத்தகைய சூழலையுருவாக்கும் இந்தியாமீதான விசுவாசம் எமது மக்களுக்குத் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதற்குச் சமம் என்ற எமது நோக்கால் இதை எழுதுவது மிகவும் பயனுடையதாகவிருக்குமென்று கருதுகிறோம்.

இன்றைக்குப் புலிகளெனும் இயகத்தின் இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இந்தியாவின் மிக நெருங்கிய இலங்கைமீதான அபிலாசைகளில் பிரதிபலிக்கத் தக்கதாகும்.இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய ஈழத்து நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்தகட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் அமிழ்ந்துள்ளது.இதற்கான முன் தயாரிப்பாக அது இலங்கையில் தொடந்தும் இனவாதத்தையும்,ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்துவதும்அதன் வாயிலாக உறுதியான இனவாத்தைத் தூண்டி மக்களைப் படு குழியில் தள்ளிச் செல்லும் அரசியலைத் திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது.இது இனவொருமைப்பாட்டையும், வர்க்க எழிச்சியையும் ஏற்படவிடாமல் தடுத்தாளத்தக்க ஒரு தலைமையாகப் புலிகளை வரையறை செய்வதில் அதன் நோக்கம் புலி இருப்பாக விரிகிறது."புலி இல்லையேல் வர்க்க எழிச்சி-புரட்சி உண்டு"என்பதாகப் புரிந்தபோது மக்களின் தீராத இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான உண்மையான நோக்கத்தை விட்டுப் புலிகளைத் தொடர்ந்து பாசிசச் சக்தியாக வளர்ப்பதில் இந்தியப் புலனாய்வுத்துறைக்கு இந்திய ஆளும் வர்க்கம் வற்புறுத்தியே வருகிறது.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் புலிகள் போன்ற அமைப்பை எங்ஙனம் மதிப்பிடுவதென்று எவரும் சிந்திக்க முனையுந் தறுவாயில்:

1)புலிகள் தரகு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாப்பவர்கள்

2)குட்டி முதலாளித்துவக் குறுந்தேசிய வாதிகள்

3)தேசிய முதலாளித்துவத்தின் எதிரிகள்

4)குழு நலனுக்காகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தைப் பேசுபவர்கள்

5)தமது இருப்புக்காகவும்,அதிகாரத்துக்காவும் எந்த அந்நியச் சக்தியின் தயவையும் நாடுபவர்கள்

6)அந்நிய நலனுக்காகத் தமிழ் பேசும் மக்களின் நலன்களைத் தமது இயக்க நலனின் திசைவழியில் பேசித் தொடர்ந்து தமக்கு எதிரான சக்திகளைத் துரோகியாக்கிச் சுட்டுத் தள்பவர்கள்

7)மாற்றுச் சக்திகளை அந்நியச் சக்திகளின் கால்களில் விழுவதற்கான முறைமையில் பாசிசச் சர்வதிகாரத்தையும்,ஏகப் பிரதிநித்துவத்தையும் தூக்கி நிறுத்தி மக்களின் அடிப்படை ஜனநாயகவுரிமையைப் பறித்துக்கொ(ல்)ள்பவர்கள்

8)இலங்கைத் தேசத்தின் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிக்கு-இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு எதிரானவர்கள்.

இத்தகைய மதிப்பீட்டுக்கு நாம் வந்து, தற்போது இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த மதிப்பீடு அவசியமானதுங்கூட.என்றபோதும்,சமூகநலன்மீது அக்கறையுடைய சக்திகள் எவருமே புலிகளின் மிகத்தெளிவான பக்கத்தை அடையாளம் காண்பதில் எவ்விதத் தடுமாற்றத்தையும் கொண்டிருக்க முடியாதென்றே கருதுகிறோம்.இந்தத் தெளிவான பக்கம் எதுவென்ற வினாவுக்கு அவர்களின் பாசிசத் தன்மையிலான சக இயக்கப் படுகொலைகளே சாட்சி பகிர்பவை.இத்தகைய படுகொலைகள் திட்டமிட்ட இந்திய உளவுப்படையின் ஆலோசனைப்படியே புலிகள் செய்து முடித்தார்கள் என்பதை அநுராதபுரப் படுகொலைகளில் உரைத்துப்பார்க்கவும்.தங்களைத் தவிர மக்களின் போராட்டப்பாதையில் பிரவேசிக்கின்ற எந்த மாற்றுச் சக்திகளையும் புலிகள் மூர்க்கமாக அழித்தொழித்தவரலாறுதாம் "இந்தியப் பிராந்திய நலனுக்கு நாம் எதிகள் அல்ல" என்ற புலிகளின் தாரக மந்திரமாகும்.தென்கிழக்காசியாவின் புரட்சிகரத் தீபம் ஈழத் தேசிய இனத்தின் விடுதலையோடு மிக வேகமாகத் சுடர் பரப்பி எழும் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாய் உணரத்தக்க வரலாறு இலங்கைக்குச் சொந்தமாகவே இருந்தது.அதற்கு அன்றைய இலங்கைப் படிப்பனைகள் இவர்களுக்த் துணைபுரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

இங்கே எவர் வேண்டுமானாலும் புலிகளை எப்படியும் மதிப்பிடலாம்.தேசியச் சக்தியாகவோ,ஐயக்கிய முன்னணி அமைக்கத்தகு அமைப்பாகவோ அன்றிப் புரட்சிகரச் சக்தியாகவோ மதிப்பிடலாம்.ஆனால்,விடுதலைப் புலிகள் அமைப்பின் வரையறை ஒன்றேயொன்றென்பதை அவர்கள் மிக இலகுவாக உணர்த்தி வருபவர்கள்.தங்களைத் தவிரப் போராட்டப்பாதையில் எவர் பிரவேசிக்கிறாரோ அவரைப் பூண்டோடு துரோகி சொல்லி ஒழித்துக்கட்டுவதே அது.அந்த மிகத் தெளிவான வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இத்தகைய போக்கைத் திட்டமிட்டு நடாத்தும் புலிகளின் தலைமை இன்றுவரை தனது இயகத் தலைமைக்குள்ளேயே பற்பல முரண்பாடுகளைத் தோற்றுவித்து பல்லாயிரக்கணக்கான போராளிகளைக் கொன்று தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போரை இந்தியாவுக்கு ஏற்ற திசையில் வளர்த்துச் சென்று வருகிறது.இதுவே "இந்தியப் பிராந்திய நலுனுக்கு நாம் எதிகள் அல்ல" என்று இவர்களைத் தொடர்ந்து பாடவைப்பது.புலிகளால் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மெல்ல அழிக்கப்பட்டுவருவதற்கு ஏற்ற வகைகளில் அந்த அமைப்பின் தலைமை மிகத் தாழ்ந்த புத்தியுடையவொரு மனிதரின் ஒளிவட்டத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டு, நமது இனத்தின் புரட்சியாளர்கள்-அறிஜீவிகள் ஓரங்கட்டப்பட்டும்,கொல்லப்பட்டும் விடுதலையின் உயிர் ஊசலாட வைக்கப்பட்டு வருகிறது.இதுவே இலங்கை அரசினதும் புலியினதும் வெற்றி-இருப்புக்கான மூல ஊற்றாகும்.இத்தகைய புலிகளால் நமது தேசத்தின் விடுதலையை நாம் ஒருபோதும் கனவுகாண முடியாது.எமது எல்லைகளை இவர்கள் அந்நிய நலன்களுள் கரைக்கும்போது அங்கே தேசத்தினதோ அன்றித் தேசிய அலகுகளின் இறைமையோ இருப்பதற்கில்லை.

நாம் இதுவரை ஏமாற்றப்பட்டு வரும் தரணத்தில் புலிகளை ஆயுதக் குழுவாகவும்,மாற்றுச் சக்திகளை ஜனநாயகச் சக்திகளாகவும் இந்தியாவும்-மேற்குலகமும் மிக நெருக்கமாக வளர்த்தெடுத்துள்ளது.இங்கே நடாத்தப்படும் அரசியற் சாணாக்கியத்துக்கு இந்த இருவகையான இயக்கக் கட்சி வடிவமும் தேவைப்படுகிறதே அதுதாம் இந்தியா.இந்தவொரு நுணுக்கமான இந்தியச் சதி எம்மைப் போண்டியாக்கி வரும்பொழுது,இங்கே சில சிறுபிள்ளைகள்"புலிகள் இந்தியப் பிராந்திய நலுனுக்கு என்றுமே எதிரிகள் அல்ல"என்று பெருமை-உரிமை கோருவதில் தமிழ் பேசும் மக்களின் சாவுகளே நமக்கு விரிகின்றன.அது இருக்கட்டும்.

அதென்ன இந்தியப் பிராந்திய நலன்?

இந்தியத் தரகு முதலாளியத்தின் இருப்பை உறுதிப்படுத்துவதும்,அவர்களின் சந்தையைத் தீர்மானிக்கும் அவர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கும்,தென்கிழக்காசியாவில் தொடர்ந்து மூல வளங்களைத் தமது உற்பத்திக் குட்படுத்துவதற்கும், அந்த உற்பத்திப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படும் பலகோடி ஏழைத் தொழிலாளர்களைத் திட்டமிட்டு நசித்துப் பிழிவதற்குமானதுதானே இந்தப் பிராந்தியத்தின் நலன்.அங்கே, இந்தியாவின் பாதுகாப்பு என்ற கரடி இந்த நுணுக்கத்துள் அடங்கும் முகமூடிதாம்.இதைத்தாம் பாசிசப் புலிகளின் இருப்போடும் அதன் படுகொலைகளுடாகவும் மேற்குலகமும் இந்தியாவும் செய்து முடிக்கிறது.இதைத்தாம் புலிகள் அடிக்கடி சுட்டிக்காட்டி "நாம் இந்தியாவின் பிராந்திய நலனுக்கு எதிரானவர்களில்லை"என்ற பேரத்தின்படி தமக்குச் சேரவேண்டிய அரசியல் தளத்தைத் தரும்படி இந்தியாவின் காலில் வீழ்வதும்,திணறுவதாகவும்-நாய்குரிய விசுவாசத்தோடு போராடி வருகிறார்கள்.இதையும் சிலர் பெருமையாக எடுத்துக்கொள்வது அவர்களது இயக்க மாயைதாம் காரணமாகும்.

இந்த நிலைமைகளில்தாம் நாம் புலிகளின் அழித்தொழிப்புகளை எங்ஙனம் முறியடிப்பதென்று சிந்திக்கிறோம்.


புலிகளின் பின்னே ஒழிந்திருக்கும் இந்திய மற்றும் மேற்குலகச் சதிகள் நமது புரட்சியாளர்களையும்,மக்களையும் அழித்து வருகிறது.புத்தியுடையவர்களை மெல்ல அழித்த வரலாறு வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

இங்கேதாம் புலிகள் யார் என்பதை மதிப்பிட்டு அவர்களை வரையறுத்தோம்.இந்த வரையறையிலிருந்து-மதிப்பீட்டிலிருந்து நாம் அவர்களின் ஜனநாயக விரோதப்போக்கை-பாசிசச் சேட்டைகளை அளவிடுவதென்பதே இவ்வளவு காலமும் நிகழ்ந்து வருகிறது.இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு அவர்களை குறித்தும்,பாசிசச் செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச் சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.இங்கே, புலிகள் செய்வது தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவ+ன்றுவதற்கே. இந்தக் கோலத்தில் புலிகள் பின்வாங்குவதென்பது இதுவும் அவர்களது எஜமானர்கள் இட்டவொரு எல்லையைச் சென்றடைந்து, தமிழ் பேசும் மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைத் திசை திருப்புவதற்கான அரசியல் சாணாக்கியமே.

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது(மாற்றுப் போராட்டச் சக்திகளை அழித்தொழித்தது)எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தரணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சுந்தரத்தின் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த சுந்திரத்தின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த இந்தியா இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நின்றது.இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.

இது இப்படியிருந்தபோதும், நாம் தனிநபர் பயங்கரவாதம் குறித்தே எமது கவனத்தை அன்று குவித்திருந்தபோது இந்தியா நமது மீட்பனாகவே உணரப்பட்டது.அதன் தொடர்ச்சிதாம் "இந்தியாவின் பிராந்திய நலனுக்கு நாம் எதிரிகள் அல்ல"என்ற புலிகளின் வார்த்தையை நம்பி ஏமாறும் தமிழர்கள் இந்தியாவே புலிகள் சொல்வதுமாதிரி நேச நாடு எனக் கனவு காண்கிறார்கள்.கோடிக் கணக்கான மனிதர்களைச் சாதி சொல்லிப் பிரித்து வீதியோரத்தில் படுத்தொழும்பவிட்ட இந்திய ஆளும் வர்க்கமா ஈழத்து மக்களுக்கு விடிவுதரத்தக்க முறைமைகளில் நடந்து கொள்ளும்?நேற்று முன் தினம் 09.08.2007 அன்று சற்.டி.எப். தொலைக் காட்சிச் சேவையால் ஒளி பரப்பப்பட்ட மும்பாய்க் காட்சிகளைக் கண்ட ஜேர்மனியர்கள் நம் முகத்தில் காறித் துப்பாதுதாம் பாக்கி."இந்தியா 25 வீதப் பொருளாதார வளர்ச்சியென்று பீற்றும் உங்கள் மக்கள் தெருவில் படுத்துத் துப்பிச் சாப்பிட்டு வாழும் நிலை வாந்தியை வரவழைக்கிறது.அங்கிருந்து தின்ன விழியின்றி வந்த நீங்கள் இங்கே பென்ஸ் கார் கேட்கிறீங்க." என்று எம்மைக் கேவலமாகச் சொல்லும் ஜேர்மனியர்கள் இந்த இந்தியாவின் வன் கொடுமையை எங்களுக்கு முகத்தில் அடித்துச் சொல்கிறார்கள்.இந்த இந்தியாவின் பிற்போக்கு ஒடுக்கு முறைக்குக் குடை பிடிக்கும் புலிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசிய மக்களின் விடுதலைக்கு உழைக்க முடியாது.அங்ஙனம் அவர்கள் சொல்லும் சந்தர்பங்கள் யாவும் செயற்கையாகச் சொல்லிக் கொள்ளும் தந்திரமாகும்.தமது இயக்கத்தை தொடர்ந்து நிலைப்படுத்தவும்,அதன் வாயிலாகத் தலைமையின் அர்ப்பத் தனங்களைக் காப்பதற்கும் எடுக்கும் முயற்சியே இந்தச் செயற்பாடுகள்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Mittwoch, November 28, 2007

பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்...

இது மக்களை ஏமாற்றும் காலம்.

இது மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் சமூகத்தின் அதீத அவநம்பிக்கையை உண்டுபண்ணியபடி காலத்துக்குக் காலம் மிதமான பொய்யுரைப்புகளை மக்கள்-சமூக வெளிக்குள் கொட்டி நடைமுறைப் பிரச்சனைகளைப் பின் தள்ளுகிறது.இங்கே நாம் கட்சி-தலைவர் என்றபடி கருத்தாடுவதும், அல்லது அத்தகைய அமைப்புத் தலைமை வாதத்துக்குள் நமது கருத்து நிலையைக் காவு கொடுத்து, மக்கள் நலன்களைப் பலியாக்கும் பொறுப்பைக் கட்சிகளிடம் ஒப்படைக்கின்றோம்.

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

தமிழ்பேசும் மக்கள் தமது சமூக முரண்பாட்டை பல் வகைப் போராட்ட நெறியாண்மைக்குள் பரிசோதித்துப் பார்த்த பின்பு,மீளவும் பழைய பரிசோதனைப் பாணி அரசியல் சழற்சிக்குள் தள்ளிவிடப்படும் ஒரு இருண்ட அரசியல் வியூகத்தைப் பழைய அரசியல் பெரிச்சாளிகள் அந்நிய அரசியல்-பொருளியல் ஆர்வங்களின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது,அதை வெறுமனவே பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்ள முடியாது.நமது வாழ்வையும் நமது அரசியல் அபிலாசைகளையும் இந்தியாவும்,அமெரிக்காவும் தீர்மானிக்க முடியாது.
தமிழ்பேசும் மக்களிடமிருந்து அத்தகைய அரசியல் எதிர்பார்ப்பு எழும் இருண்ட அரசியல் வறுமை என்றைக்கும் நிலைத்திருப்பதற்கானவொரு வியூகத்தை கட்சி அரசியலானது நமக்குக் காலாகாலமாகத் தந்துவிடத் துடிக்கிறது.இதைச் செம்மையாகச் செய்வதற்கான கருத்தியல் மேலாதிகத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திய-அந்நிய ஆர்வங்கள் எமது மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டு அழித்தும்,தமது விருப்புறுதிகளை-பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை எமக்கான உரிமையாகவும்,எதிர்கால அரசியல் தெரிவாகவும் முன்வைக்கின்றன.இவை முன்னெப்போதையும்விட பன்மடங்கு அரசியல் குழிபறிப்புடைய ஈனத்தனமான செயற்பாடாகும்.

எங்கள் மக்களுக்குள் நிலவும் பாரிய அரசியல் இயலாமையை தமது வெற்றிக்கான அரும்பாகப் பயன் படுத்தும் இந்திய விருப்பு,இலங்கைக்குள் இந்திய நிலைமைகளைத் தோற்றுவிக்கப் படாத பாடு படுகிறது.அதற்காக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவாநந்தா,கருணா-பிள்ளையான் குழு மற்றும் குறுங்குழுக்கள்போன்ற அரசியல் அநாதைகளைப் பயன்படுத்தும் இன்றைய அரசியலானது மிகவும் சூழ்ச்சிமிக்க பரப்புரைகளை நமக்குள் விதைக்கின்றன.இவை இலண்டனையும்,பாரிசையும் மையப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பற்பல வெடிப்புக்களைச் செய்து வருகிறார்கள். இதுள் ரீ.பீ.சீ.வானொலியின் பங்கு முதன்மையானது.இந்த வானொலி புலம் பெயர்ந்த மக்களின் தோள்களில் இருந்தபடி இந்திய நிதியில் எம்மை வேட்டையாட இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு ஆட்காட்டி வருகிறது.இதைப் புலிகளின் அராஜகத்தைச் சொல்லியே ஒப்பேற்றி வருகிறது.மக்களுக்கும் புலிகளுக்குமான முரண்பாடு ஜனநாயக மறுப்போடும்,அராஜகச் செயற்பாட்டிலும் மையங் கொள்கிறது.இதைக் கடக்காத புலிகள் மக்களின் உரிமையை வென்றுவிட முடியாது.இத்தகைச் செயற்பாடு தொடரும்போது அந்நியர்கள் எம் மக்களின் நலனைத் தமது முகமூடியாக்கி நம் மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதற்குப் புலிகளே பாத்திரமாகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும் மக்கள் உரிமையைப் பெறமுடியாது.புலிகள் தமது அந்நிய நட்பைப் பிரிசீலித்துப் புரட்சிகரமான முறையில் போராட்டச் செல் நெறியை வகுத்தாகவேண்டும்.வெளி நாடுகளிலுள்ள தமிழ்ப் பெரும் முதலாளிகளின் நட்புக்காக நமது மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்தொதுக்கிப் பாசிச அமைப்பாக இறுகிச் செல்ல முடியாது.இதைப் புலிகளின் தலைவர் சுய விமர்சனஞ் செய்தேயாகவேண்டும்.தமிழ் பேசும் மக்களின் சராசரித்தனமான அறிவு பிரபாகரனின் உரைக்காக மட்டுமல்ல உண்மையான செயற்பாட்டுக்காவும் கிடந்து மாய்கிறது."பிரபாகரன் இல்லையென்றால் நமக்கு விடிவில்லை" எனும் உணர்வே மக்களிடம் இப்போது ஓங்கியிருக்கும்போது,அதை நாசம் செய்து அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதில் புலிகளின் தியாகமும் மக்களின் உயிருமே பாழடிக்கப்படுகிறது.

நமது மக்களின் துயரம் மிக்க போராட்ட வரலாறானது தியாகத்தாலும்,கொலைகளாலும்,பொருளிழப்பாலும் நிறைந்த மிகக் கடினமான போராட்ட வாழ்வாகும்.எம்மை வேரோடு சாய்ப்பதற்கான பல்வகை அரசியல்-போராட்ட வியூகங்களை இலங்கையரசும்,இந்திய மற்றும் அமெரிக்க நலன்களும் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றன.இத்தகைய தரணங்களுக்கிசைவாகப் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போதுமே தமிழ்பேசும் மக்களை ஒட்டச் சுரண்டித் தமது அற்ப ஆசைகளைத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள்.இவர்கள்தாம் நம்மைத் தமிழக ஓட்டுக்கட்சிகளையும்,இந்திய மத்திய அரசையும் நம்பும்படி வற்புறுத்துபவர்கள்.இது நம்மை இந்தியத் துரோகத்தால் ஏமாற்ற முனையும் செயல்.நாம் மூடர்களாகக் கடமையாற்ற முடியாது.ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் பாரிய உயிர் அழிவுகூடிச் செல்கிறது.எங்கள் குழந்தைகள் தேசத்துக்காய்ச் செத்து மடிகிறார்கள்.இதை எவரெவர் பயன்படுத்தித் தமது வளங்களைப் பெருக்கிறார்களோ அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து தம்மைச் சுய விமர்சனஞ் செய்து மக்களைப் புரட்சிகரமான முறையில் திரட்டி எமது விடுதலையை வென்றெடுத்தாக வேண்டும்.

இந்த இழி அரசியல்வாதிகளால் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்த இலங்கைத் தேசத்துத் தமிழ்பேசும் மக்கள், வரலாற்றில் அரசியல் தோல்வியை மடமையான முறையில் சந்திக்க முடியாது.இங்கே தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வில் கட்டுண்டு கிடப்பினும் நமது எதிரிகளை இனம் கண்டு போராட்டத்தைச் சீரிய முறையில் செய்தாக வேண்டும்.இதற்கான அனைத்து வளங்களையும் கேட்டு நிற்கும் புலிகள் முதலில் தம்மைச் சுயவிமர்சனஞ் செய்து மக்கள் படையணியாகத் தம்மைக் கட்டியாகவேண்டும்.வெறும் இராணுவவாதத்தைத் தவிர்த்து ஓடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளின் பிராதான முரண்பாட்டில் கவனஞ் செலுத்தியாக வேண்டும்.இதைச் செய்யாதவரை திரு.பிராபாகரனின் கோரிக்கையில் எந்த அர்த்தமுமில்லை.தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நிறறுத்தப்பட்டு அவர்களைப் பார்வையாளரென்று தொடர்ந்திருத்தி வைக்காமல் போராட்டத்தோடு இணைப்பதும், அவசியம்!

எமது மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் தேடிப் புதுப்புது வியூகங்களை நம் எதிரிகள் எமக்குள் கொட்டி எம்மைத் தமது நலன்களைக்காக்கும் ஜந்திரங்களாக்கி, அரசியல் அநாதையாக்கும் பணிக்கு ஆனந்த சங்கரிபோன்ற அரசியல் வாதிகள் பக்கப்பலமாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.இது மக்களைப் பழையபடி விலங்கிட்டு அவர்களது உரிமைகளை அந்நிய சக்திகளுக்கு ஏலமிடும் பாரிய சமூகவிரோதச் செயற்பாடாகும்.

இன்று நமக்குள் நிலவும் ஜனநாயகப் பற்றாக் குறையை மிகைப்படுத்தி நமது மக்களுக்கு இந்தத் தேவையே அவசியமென்றும,; அதை இலங்கை அரசுடன் உடன்பாட்டுக்குப்போய் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறப்படும் ஆசை வார்த்தைகள் பொய்யானவை.தென்னிலங்கையின் ஜனநாயகச் சூழலானது தமிழ் மக்களின் நிலையிலிருந்து எந்த வகையிலும் முன்னேறியது கிடையாது.இந்த இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் உலக அரசுகள் எமது நாட்டில் நிரந்தரமானவொரு அரசியல்-பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், சுய உறுதிப்பாடுகளையும் எட்டுவதற்கு என்றும் விருப்புடையனவாக இருக்கவில்லை.இவர்கள் எமது வாழ்வை தமது அரசியல் நலனிலிருந்து தீர்மானிக்க முனைகிறார்கள்.

இதனால்-
"இந்தியா தராது","இந்தியாவிடாது",
"அமெரிக்கா விரும்பாது",
"ஐரோப்பா ஏற்காது"

என்று பயனை பாடிக் கொள்ளும் கருத்தியலை எமக்குள் வலுவாகத் திணித்து நம்மை அவர்கள் வழிக்குத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.இதற்காகவே பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்து பாரிய பரப்புரைகளை நமக்குள் கொட்டுகிறார்கள். இங்கே ரீ.பீ.சீ.வானொலியும் கருணாவும்,கே.ரீ.இராஜசிங்கமும் எமது மக்களின் முதுகில் குத்தியே தமது எஜமான விசுவாசத்தைச் செய்கிறார்கள்.இதற்குப் புலம் பெயர்ந்த மக்களின்மீது அவ்வளவு கரிசனையாம்.கேட்கப் புல்லாரிக்குது.மக்களை நரவேட்டையாடியது புலிகள் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களும்தாம்!இதை மக்களுக்குப் புதிதாகச் சொல்வதற்கில்லை.ஆனால்,புலிகளின் அடிமட்டத் தியாகிகளின் அற்புதாமான உயிர்களை உலை வைத்தபடி நமது அரசியல் அந்நியர்களுக்கு வால் பிடிக்க முடியாது.

எனவே, புலிகள் தமது போராட்டப்பாதையில் மக்களை இணைப்பதற்கான முதற்படி அவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட அநுமதித்தாகவேண்டும். நாம் இன்னும் விடு பேயர்களாய் இருந்து, இவர்களிடம் மடிப் பிச்சை எடுக்கும் அரசியல்-சமூக உளவியலைத் தீர்மானிக்க எமக்குள் பற்பல வியூகங்கள் மலிந்துருவாக்கப்படுகிறது.இதைத் தடுப்பதற்கான ஒரே வழி மக்களைச் சுயமாகச் செயற்பட அநுமதிப்பதும்,அவர்களது எழிச்சியைக் கூர்மைப்படுத்துவதும் கூடவே மக்களைச் சார்ந்து புரட்சிகரமாக இயங்குவதுமே.புலிகள் இனியும் அந்நியர்களுக்குச் சேவர்களா அல்லது மக்களின் புரட்சிப்படையா என்பதை அடுத்த மாவீரர் தினத்தில் நாம் அறிய முடியும்.

இன்றைய அந்நிய ஆர்வங்கள்,
"ஜனநாயகம்,
யுத்த நிறுத்தம்,
சிறுவர்களைப் படையில் இணைப்பது,
கட்டாய வரி வசூலிப்பு,
கொலைகள்,
மானுடவுரிமை!"


என்ற கோசங்களுக்கூடாய் நம்மை வந்து முற்றுகையிடுகிறது.

உண்மையில் நமக்குள் இந்தமுரண்பாடுகள் நிலவுகிறது.புலிகளின் அதீதமான மக்கள் விரோதப் போக்கானது,மாவீரர்களின் தியாகத்தாலும்,அவர்களின் இழப்புகளாலும் மனத்தில் சகஜமானவொரு செயலாக நியாயம் பெறுகிறது.இது தப்பு.நாம் மக்களின் குழந்தைகளே.எங்கள் பெற்றோர்களை வதைத்து எவரது உரிமைக்காகப் போராடுகிறோம்?

நமது சமுதாயத்துக்குள் இத்தகைய முரண்பாடுகள் மலிந்துவிட்டென.

எனினும், இதைத் தூக்கி நிறுத்தும் அரசியலானது மக்கள் நலனிலிருந்து மக்களே தீர்மானிப்பதாய் இருக்கவேண்டும்.ஆனால், இப்போது நிலவும் இந்தக் கோசங்களுக்குள் மறைந்திருக்கும் அந்நிய ஆர்வங்கள் நம்மை நன்றாக ஏமாற்றிவிடத் தடியாய்த் துடிக்கின்றன.இந்தத் துடிப்பை புளட் ஜெகநாதன் மற்றும் ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன் போன்றவரிடம் மிகுதியாகக் காண முடியும்.

யுத்தத்தின் மூலம் நமது ஆன்ம வலுவை உடைத்தெறிந்துவிட்டு,நம்மை நாதியில்லாத அகதிகளாக்கிவிட்டு,நமக்கு அன்றாடம் இயல்பான வாழ்வே அவசியமெனும் மனநிலையைத் தோற்றி, நமது உரிமைகளைக் காயடிக்கும் இலங்கை-இந்திய அரசிலானது மிகவும் கொடிய உள்நோக்கமுடைய அரசியல் குழிப்பறிப்பாகும்.இது பேசும் இத்தகைய "மர்ம மக்கள் நலனானது" நம்மைக் காலாகாலத்துக்கு அடிமைகளாகக் கட்டிப்போடும் தந்திரத்தோடு உறவுடையது.

எனவே இதை உடைத்தெறிவதற்கான ஒரே வழி:

புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள மேற்காணும் முரண்பாட்டை தீர்ப்பதே.இதைப் புலிகள் செய்யும் போது,மக்கள் சுய எழிச்சி கொள்வதும்,தமது நலன்களைத் தாமே "தமது நோக்கு நிலையிலிருந்து" முன்வைப்பதும்,போராடுவதும் நிகழும்.எந்த அந்நிய சக்தியாவது புலிகளை அழிக்க முனையும்போது மக்கள் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தவிர்க்க முடியாது நிகழும்.அதுதாம் நமது நிலைப்பாடும்.மக்களைத் தவிர்த்த எந்த அரணும் போராளிகளைக் காக்க முடியாது.மக்கள் தம்மைத் தாமே முன்னிறுத்தும் பாரிய வரலாற்றுப்பணி இப்போது நம் முன் இருக்கிறது.இதைத் தடுக்கும் அரசியல் சூழ்ச்சியானது புலிகளுக்கும் மக்களுக்குமான ஜனநாயக முரண்பாடாகக் கட்டி வளர்க்கப்படுகிறது.இதைப் புலிகளே பிரித்தறிந்து நிவர்த்திசெய்யாதவரைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்களையும்,அவர்களது உரிமையையும் வென்றெடுக்க முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, November 25, 2007

மக்கள் விடுதலையைக் கட்டிப்போடும் தளைகள் என்ன?

மக்கள் விடுதலையைக்
கட்டிப்போடும்
தளைகள் என்ன?


உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா?

போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது இப்போது இரயில்வேத் தொழிலாளிகள் மற்றும் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தையும் "செய்வதா அல்லது கைவிடுவதா" என்பதை நீதிமன்றதே தீர்மானிக்கிறது.இது தொழிற் சங்கங்கள் மற்றும் மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் ப+ராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது.வருமாண்டு இரண்டாயிரத்து எட்டில் ஜேர்மனியக் குடிவரவுத்திணைக்கழகம் இன்னும் பாரிய வேவு வேலையிலீடுபட இருக்கிறது.அதன் முதற்கட்டமாகக் ஜேர்மன் குடிகளின் கைவிரலடையாளம் உடைய கடவுச்சீட்டு மற்றும் ஆளடையாள அட்டைகளைத் தயாரிப்பது,இவை சட்டமூலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ப+ர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.

உலகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புலிகள் எப்படித் தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்து அந்நியச் சக்திகளோடு கூட்டுவைத்துத் தமது நலன்களை அடைய முடிகிறார்களோ அதே பாணியில் மற்றைய இயக்கங்களும் தமது அரசியலை முன்னெடுத்து மக்களை வேட்டையாடி வருகிறார்கள்.

மக்களின் துயரம் பல்மடங்கு நீண்டு போகிறது.இன்றைக்குத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை-ஓட்டுக் கட்சிகளை நம்பி நமது மக்களின் விடுதலைப் போராட்டம் காத்திருக்கிறதென்றால் இத்தகைய போராட்டத்தைச் செய்யும் இயகத்தினது அரசியல் என்னவென்று புரியதக்கது.ஓட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டு மக்களையே சாதி ரீதியாகவும்,பொருளாதாரரீதியாவும் ஒடுக்கித் தமது கட்சியின் இருப்புக்கும் தத்தமது குடும்பங்களின் தொழில் முன்னேற்றத்துக்காகவும், அந்நியத் தொழிற் கழகங்களுக்குத் தமிழ்நாட்டைப் பட்டயமெழுதி வரும்போது-அந்நியத் தேசங்களின் தரகர்களாகச் செயற்படும்போது ஈழமக்களுக்கு இவர்கள் என்னத்தைப் பெரிதாகச் சொல்வார்கள்?எங்கள் போராட்டத்தை-விடுதலையைத் தடுப்பதற்காகத் திட்டங்கள் தீட்டும் மத்திய இந்திய அரசோடு கூடிக் குலாவியபடி அவர்களின் விய+கத்துக்குத் தமிழ்நாட்டின் மக்கள் குரலைத் திசை திருப்பவே இந்த முயற்சிகள் நடை பெறுகிறது.

இந்த நிலையில், நமது நாட்டில் உயிர்வாழும் அடிப்படை வளங்கள் இன்றி மக்கள் படும் துன்பங்கள் அவர்களின் உயிர்த்திருத்தலையே கேள்விக்குட்படுத்துகிறது.இது துப்பாக்கியைவிட மிக மோசமான உயிர்ப் பலியை இன்னும் சில வருடங்களில் மெல்லச் செய்துவிடப்போகிறது.இருந்தும் பாரிய வலுக்கரங்கள் எங்கள் தேசத்தைச் சுற்றித் தங்களது வலையோடு அலைகிறது.அது எமது தேசத்தின் அனைத்து வளங்களையும் வேட்டையாடவும்,தேசத்தை அடிமைத்தனத்துள் இருத்தவும் தத்தமது வளங்களைப் பயன்படுத்தி நமது மக்களுக்குள்ளேயே தனது கைக்கூலிகளை வளர்த்து அவர்களை ஆயுததாரிகளாக்கி-அமைப்பாகி வந்துள்ளது, இந்திய ஆளும் வர்க்கம்-உலக ஏகாதிபத்தியங்கள்.அத்தகைய அமைப்புகளே இன்று தேசிய விடுதலைக்கு ஆதரவாகவும்-எதிராகவும் குரலிட்டு நமது புரட்சிகர முன்னெடுப்பைத் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள்.இதற்காகத்"துரோகி"ப் பட்டம் தயார் நிலையில் இருக்கிறது.

இங்கே, உலகத்தின் மேய்ப்பர்கள் தத்தமது நலன்களை அடைவதற்காக அன்றிலிருந்து இன்றுவரையும் 7300 என்.ஜீ.ஓ.களைக் கட்டியமைத்து உலக நாடுகளை வேட்டையாட மக்கள் மேம்பாட்டாளர்கள் எனும் போர்வையில் செயற்பட அநுமதித்துள்ளது இன்றைய ஏகாதிபத்தியங்கள்.இந்த என்.ஜீ.ஓ.களிடம் உள்ள பணமே அந்தந்தப் பகுதி மக்களிடம் ஏகாதிபத்தியங்கள் திருடியதுதாம்;(ersten NGO's die in 1775 in Pennsylvenia gegruendete"Society for Promoting the Abolition of Slavery.என்பது அரசுசார அமைப்புகள் குறித்த ஜேர்மனியக் குறிப்புகளில் இருக்கிறது.)அமெரிக்காவில் கருப்பின அடிமைச் சமுதாயத்தைக் காத்து அவர்களின் நலனுக்காகத் தோற்றியதாக இனம் காட்டப்படும் இந்த என்.ஜீ.ஓ.களின் இன்றைய நிலையோ அடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த முனையும் செயலாகவே இருக்கிறது.

இதுவே இத்தகைய நிலைமையை அடைந்ததென்றால் நம்மக்குள் இருக்கும் அரசியல்-இயக்கங்களின் நிலைமை எத்தகையதென்பது புரிந்துகொள்ளக்கடினமானதல்ல.இங்கே,கவனிக்கப்படவேண்டிய பாரியபணி என்னவென்றால் இத்தகைய மக்கள் விரோத இயக்கங்கள்-கட்சிகளின் பின்னே ஏமாந்து மக்கள் அள்ளுப்பட்டுச் செல்லாமலிருப்பதற்காக எல்லோரையும் சந்தேகித்து உண்மைகளை அறியும் சுயமுற்சியே முக்கியமானது.

யார்,எவர் எந்தத் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறாரென்று புரிவதே கடினமானவொரு இருண்ட நிலையில் நமது எதிரிகளை ஓரளவு புரியக் கீழ்காணும் குறிப்பை மீளப் பிரசுரிக்கிறோம்.

நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழம்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் நலக் காப்பாளர்கள் மக்களோடு இணைந்து போராடும் நிலையில,; இத்தகைய உரிமைகளை நீதி மன்றங்கள் பறித்துவிடுவதைப் பார்க்கும்போது பாசிசத்தின் உச்சக்கட்டம் நம் முன் விரிவது தெரிகிறது. கனடாவில் நடந்த சூழல் பாதுகாப்பு மாநாட்டை அமேரிக்கா நிராகரிக்கிறது.உலகச் சூழல் பாதுகாப்பை நிராகரிக்கும் அமேரிக்கா வளர்முக நாடுகளைத் தனது பங்குக்குத் திட்டித் தீர்க்கிறது.

உலக வங்கியோ நர்மதாவை மட்டுமல்ல தென் சூடான் எண்ணைக் குழாய்கள் வட சூடான் போர்டோ துறைமுக நகரத்தை 1600 கிலோ மீட்டர் தாண்டித் தொடுவதற்காக(1999 இல்) பல பத்து இலட்சம் மக்களை வருத்தித் திட்டம் போட்டுக் கொன்றொழிக்கிறது.அவ்கானிஸ்தானிலிருந்து துருக்கிய+டாக ஜேர்மனியை வந்தடைய இருக்கும் எண்ணை-எரிவாயுக் குழாயோ சுமார் 6000 கிலோ மீட்டரைக் கடக்கப் போகிறது.இந்தப் பிரதேச மக்கள் தலைகள் பையப்பைய உருண்டு விடப்போகிறது.இதற்கெல்லாம் சூத்திரதாரி உலக வங்கி.

சூடானில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக "எண்ணை ஆதிக்கத்துக்கான" போர் சூடானில் நடைபெறுகிறது.சூடானின் எண்ணை வளத்தைக் கொள்ளையிட முனையும் வல்லரசுகளும் அவைகளின் இராட்சத எண்ணைக் கம்பனிகளும் இதுவரை இரண்டு மில்லியன்கள் சூடானிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.32.6 மில்லியன்கள் சனத் தொகையில் 2 மில்லியன்கள் மக்களை அந்த நாடு பறி கொடுத்துள்ளது!மொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது உலகம் ப+ராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன? மக்கள் உரிமையின்-மனிதஉரிமையின் கதை கந்திரயாகிப் போனதை இங்கே நடை பெறும் உரையாடல் நம்மை அதிர வைக்கும்.


அதையும் அவசியம் அறிந்து கொள்வோம்:


"வணக்கத்துக்குரியவர்களே!

இன்று நடைபெறும் இந்தவுரையாடல் நமது நோக்கத்தைப் பற்றியும்,அதையடையும் வழிமுறைகளையும் பேசுவதாகும்.-மிகத் தெளிவாக ஆதர்சத்தோடு பேசிக் கொண்டான், முதலாளிகளுக்கான ஆலோசனை மையத்தின் பிரதிநிதி.(அவனது நீண்டவுரையைக் கேட்பதற்காக கூடியவர்கள் அனைவரும் "வர்த்தகக் கூட்டு"மையத்தின் முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான "சந்திப்பை" கோங் கோங்குக்முன் பல நாடுகளிலும் செய்தவர்கள்.இத்தாலியில் இந்தக் கூட்டின் சந்திப்பை எதிர்த்த பொதுமக்கள் சிலர் பொலிசின் துப்பாக்கிக்குப் பலியானார்கள் 2004 இல்,இது குறிப்பிடத்தக்கது.)

அந்தப் பிரதிநிதி இப்படி மேலும் தொடர்கிறான்:

வேலை!உற்பத்தத்திறன் மிகுதியாகக் கூட்டப்படவேண்டும்.ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலைத்திறனைக் மிகுதியாக் கூட்டியாகவேண்டும்.அவர்களை நீண்ட உழைப்புக்குத் தயாராக்கி உழைப்பைக் கறாராகப் பெறவேண்டும்.அத்தோடு இப்படி உடலுழைப்பைப் பெறும் நாங்கள் இதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர் செய்யும் போராட்டங்களை ஒடுக்கியாகவேண்டும்.

இதன் அடிப்படைக் கருத்து இதுதாம்:

அதாவது "நுகத்தில் மாட்டிய மனிதன், தான் நுகத்தில் மாட்டியிருப்பதை உணரக் கூடாது".இதன் அர்த்தம் அவனால் இழுக்கப்படும் வண்டி அவனாலேயே ஓடுவதை அவன் ஒருபோதும் உணரப்படாது! எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும்!மக்களில் பலரை நாங்கள் வேலை செய்யும் மிருகங்களாகவே உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.இப்போது அப்படித்தாம் அவர்களை நாம்,நமது துறைசார் மொழியில் புரிகிறோம்.

இத்தகைய மிருகங்களுக்கு நாம் மிகக் குறைந்த கூலியை அவர்களது நாளாந்த உணவுக்கும்,உறையுளுக்கும் கொடுப்போம்.இவர்கள் எமது தொழிற்சாலைகளில்,பண்ணைகளில் ,விற்பனை அங்காடிகளில்,உயர்தர நட்சத்திரக் கோட்டல்களில்,நகரப் பராமரிப்பு-சுத்திகரிப்பில் தமது உடலுழைப்பைக் கொடுத்து இந்தவ+தியத்தைப் பெறுவதாக "எப்பவும்"இருக்கவேண்டும்.இந்தத் தொழிலாள மிருகங்கள் ஒரு போதும் தமது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கும்படியாகக் கூலி இருக்கப்படாது.இது மிக மிக அவசியம்.உண்பதற்கோ,உடுப்பதற்கோ பற்றாத கூலியைக் கொடுப்பதுதாம் இந்த முறைமையைக் காக்கும்.சேமிப்பானது சுதந்திரத்தைக் கோரவைக்கும்,அவசியம் இதை நீங்கள் இன்று புரிய வேண்டும்.இன்றைய ஐரோப்பாவுக்கு இதுதாம் சீரழிவைத் தந்தது.தொழிற் சங்கம்,வேலை நிறுத்தம்...என்னயிது?முதலாளிகளாகிய - பங்குப் பணமிட்டவர்களைக் காப்பது ஒவ்வொரு சுப்பர் மனேச்சர்களினும் கடமை.கூடியிருக்கும் அத்தனை மனேச்சர்களும் இதைக் காதில் வேண்டவும்.

சேமிப்பு இல்லையேல்... தொழிலாள மிருகம் சிந்திக்காது!தொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.நுகத்தை விட்டகலா இந்த மிருகம் நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:"மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்"என்று!இதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.இது மகிழ்ச்சிக்குரிய விடையமே!எனினும் தேவாலயங்களுக்குச் செல்லும் வேலைக்கார மிருகங்கள் குறைந்து வருகிறது, இது ஆபத்தானது.திட்டமிட்டு பலவர்ணக் கலவையில் தேவலாயங்கள் தம் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம்.

இவர்களது வருவாய்,இவர்கள்தம் சீவியத்துக்குப் பற்றாக் குறையாக இருக்கும்போது இவர்களைக் கடன் பெறத் தூண்ட வேண்டும்.வங்கிகளில் தமது கடன்களைப் பெறும் வசதியை நாம் இலகுப் படுத்திவிடுவது உசிதம்.சிட்டி பாங் இதில் நமக்கு நல்ல உதாரணமிக்க பங்காளியாகும்.இப்படிப் பணம் கடனாகப் பெற்றுவிடும் இந்தத் தொழிலாள மிருகங்கள்,தமது கடனுக்காகவும் கடுமையாக உழைப்பதை நோக்கமாகக்கொண்டு நமது நுகத்தில் தொடர்ந்து ப+ட்டப்பட்டிருக்கும்.

இத்தோடு நாம் தொடர்ந்து உலகம் ப+ராகவும் வேலையற்றவர்களை-வேலையில்லாத் திண்டாட்டத்தைச் செயற்கையாக உருவாக்கி அதைக் குறைத்துவிடாத முறைமைகளில் வருடாவருடம் வேலையற்றவர்களின் தொகையைக் கண்காணித்து வரவேண்டும்.இப்படிக் கண்காணித்து வரும்போது ஒரு வேலையில்லாப்பட்டாளம் தொடர்ந்திருக்கும்.இதன் இருப்பில் தொழில் புரியும் மிருகங்களுக்கு நாளாந்தம் அச்சம் பெருகும், தாமும் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவோமோவென.இத்தகைய உளவியல் சிக்கல் அவசியம்.என்னென்றால் இதை உலகம் ப+ராகவுமுள்ள தொழிலாள மிருகங்களுக்கு அவரவர் வித்தியாசங்களுக்கேற்றபடி இதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள் விவேகமாக நாம் விளையாட வேண்டும். இவர்கள் இனிமேல் தொழிற் சங்கங்கள் உருவாக்குவதை நாம் உடைத்தெறிவதற்குத் தயங்காது உழைக்வேண்டும்.அதற்காக இந்த"வேலையற்ற-வேலையிலுள்ள"பிரிவும்,பிளவும் மிக அவசியம்.

வேலையற்றவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் நிரந்தரமான பொறாமையையும்,எரிச்சலையும்ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வளர்தெடுப்பதை யாரும் நீங்கள் மறக்கப்படாது.இவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது அதற்கான காரணத்தில் நாம் பின்னிருந்து வெற்றி பெறுவதை அவர்கள் அறியமாட்டார்கள்.

இத்தகைய நிலைமையில் நாம் இன்னொரு சிறிய குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலைகளை இப்படி ஒப்படைக்கணும்: அதாவது இந்த மாபெரும் கூலிப்பட்டாளத்தை எந்த ஓட்டைகளுமற்ற முறைமையில் தொடர்ந்து வேவு பார்க்கணும்!, எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும் கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது!)இதைவிட மிகப் பெரும் வேலைக்கார மிருகப்பட்டாளத்தை-அதன் மாபெரும் பலத்தைத் தொடர்ந்து பிளவுப்படுத்திப் பிரிக்கவேண்டும்.இங்ஙனம் நாம் செய்விக்கும்போது வேலைக்கார மிருகங்களின் ஒற்றுமைப்படுதலும்,அதனூடாகப் புரட்சிசெய்யத் தோழமைப்படுதலும் வெகுவாகத் தடுக்கப்படுகிறது(இப்போது சபையில் பலத்த கரகோசம் வானை அதிர வைக்கிறது).

அமைதி,அமைதி! மினறால் வோட்டரைப் பருகியவண்ணம் கைகளைத் தூக்கிச் சபையை வேண்டிக் கொண்டான்.சபை நிசப்தமாகியது!

அவன் மேலும் தொடர்ந்தான்:

அன்பான செல்வந்தர்களே!,இந்தவுலகத்தின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்றவர்களே!!,உலகத்தின் பெரும் பகுதி மனதிர்களுக்கு உணவளிக்கும் கொடை நிறைந்தவர்களே!!! நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள்!அங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காது!வேலை இழப்பதுக்கரிய மாபெரும்
விஷயமாக எண்ணிக்கொண்டு அதை விட்டகலாது தொடர்ந்து பணிவோடு உற்பத்தி செய்யும்.நாங்கள் தொடர்ந்து வித்தியாசங்களையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருவோம்!அதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே"உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்"என்று!அதை நாம் உடைத்துவிட்டோம்.(சபையில் மீண்டும் பரத்த கரகோசை,விசில் அடி,எல்லோரும் எழுந்து நின்று கரகோசை செய்துவிட்டு அமர்ந்தனர்.) இத்தகையவர்களில் ஒரு நிறுவன அதிகாரி ஆர்வ மேலீட்டால் இப்படியுரைத்தான்:


"ஓ, இது சிறப்பபாக இதுவரை நடக்கிறது!,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது?"கேள்வியோடு அசடுவழிய அமர்ந்துகொண்டான்.


நாங்கள் பலமானவொரு அரச அமைப்பை முன்னமே வைத்திருக்கிறோமல்லவா?இதை உலகச் சிறுசிறு அரசுகளோடு கூட்டாகி,அவர்களின் சகல அரச வடிவங்களையும் நாமே கட்டுப்படுத்த, அத்தகைய நாடுகளின் வறுமையைப் பயன்படுத்துவோம்.அதுக்காக நமது கட்டுப்பாட்டிலுள்ள உங்களது பணத்தால் இயங்கும் உலக நாணய நிதியத்தை,உலக வங்கியைப் பயன் படுத்தி விடுவோம்.அப்போது சகல அரசுகளும் நமது கட்டுபாட்டுக்குள் வருகிறது.இது தொடர்ந்து வர்த்தகக் கூட்டால், வோட்டோ,காட் ஒப்பந்தம் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து கடுமையாக வரி அறவிடப்படுதலும்,மானியக் குறைப்பையும் நாம் செய்து வருவோம்.இதனால் நமது அழுத்தமே தெரியாது மூச்சுவிடும் இந்த அமைப்பு.இதுதாம் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை.

எமது அடுத்த குழு... இதுவும் வேலைக்கார மிருகம்தாம்!என்றபோதும் இதைக் கொஞ்சம் விரிவாக உங்களுக்கு விளக்கவேண்டும்.இன்றைய அதிகாரிகள்,மனேச்சர்கள்,முதலாளிகளுக்கு பணம் சம்பாதிக்குமளவுக்கு நமது அரச அமைப்புப்பற்றி விளங்குகிறதில்லை.அதனால் அரசோடு மோதுவது நடக்கிறது.வரிகொடுப்பதில்லை...அப்பிடிச் செல்கிறது உங்கட நடவடிக்கை.எனவே இதையும் கொஞ்சம் பார்ப்போம்.

எதுவுமற்ற பட்டாளத்துக்குள்ளிருந்து நமது அடுத்த சிறு குழுவானதை இப்படிப் பெற்றோம்:அது அரச பணியாளர்களாகவும்,நீதீவான்களாகவும்,பொலிஸ்,சிறையதிகாரிகள்,சிறைக் காவலாளிகள்,புலானாய்வுத் துறையாளார்கள்,இராணுவத்தினர்கள் என்று!இவர்கள் எமது அரசு ஜந்திரத்தை மிக நேர்த்தியாக நிர்வகித்து எமது"பொடிக் காட்டாக"-அடியாளாக எந்த நேரமும் இருக்கிறார்கள்.நிச்சியமாக இந்த வேலைக்கார மிருகங்களுக்கு நாம் கொஞ்சம் சிறப்பாகக் கூலியைக் கொடுக்கவேண்டும்.சாதரண வேலைக்கார மிருகத்தைவிட இந்த மிருகத்துக்கு நாம் பாதுகாப்பான வேலை உறிதிப்பாட்டை வழங்கவேண்டும்.எப்போதும் துரத்தப்படாது அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படுவதை செயலில் காட்டவேண்டும்.இவர்களுக்குச் சலுகைகள் கொடுத்து,இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிடவேண்டும்.இதனால் இந்த வாழ்க்கைத் தராதரம் வேலை மிருகங்களுக்குள் இந்த இரண்டு பிரிவையும் மிக மிக அந்நியப்படுத்தி அவர்களுக்குள் பதட்டத்தை,பிளவை வலுப்படுத்தித் தம்மைத்தாமே ஒடுக்குவது சுலபமாகும்.இந்தப் பாதுகாப்புப்பிரிவை உளவாளிகளைக்கொண்டு வலுவாகக் கண்காணித்து ஆபத்து வராதவரையும் நம்பவேண்டும்.இவ்வளவு இருந்தால் போதுமா நமக்குப் பாதுகாப்பு?

இல்லை!,அப்போது? இதையுங் கேளுங்கள்.நம் முன்னோரின் அறிவை இன்னும் மேம்படுத்திவைப்போம்.நாங்கள் இன்னுமின்னும் ஒழுங்குகளையும் அதைச் செயற்படுத்தும் பல்லாயிரக்கணக்கான சட்டங்களையும் ஏற்படுத்துவோம்.இதை எவரும் படித்துப் புரியாதபடியும்,அதையொட்டியொழுக முடியாதபடியும் இவைற்றை எழுதிவைப்போம்.இதன்படி எவரையும் எந்த நேரத்திலும் கிரிமனல்,பயங்கரவாதியென கைது செய்யமுடியும்.அல்லது கொல்ல முடியும்.இது வேலைக்கார மிருகங்களிடம் பயத்தையும்,பணிவையும் ஏற்படுத்தி நவீன அடிமைகளாக நாம்கூறும் ஜனநாயகத்தில் வாழ்ந்து- இல்லையில்லை எமது நுகத்தில் மாட்டுப்பட்டு எமக்காகச் சாகும் இந்த வேலைக்கார மிருகங்கள்!இத்தோடு பிரத்தியேகமாக மிக நேர்த்தியான நமது விஞ்ஞானிகளின் துணையோடு நுட்பம் நிறைந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் வேவு பார்க்கும் திட்டத்தை ஒழுங்காகச் செய்வோம்.இங்கே செய்மதிகளையும் அதனால் இயக்கப்படும் கமராக்களையும்,கட்டளைகளையுமே நான் முன் மொழிகிறேன்.


"இந்த வேலைக்கார மிருகங்களுக்கு முன்புபோல் கொத்தடிமை மாதிரி வாழ்க்கையில்லையே?அதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்?..." கேட்டுக் கொண்டான் ஒரு பயாந்தாங்கொள்ளி முதலாளி.


உரையாற்றியவன் மௌ;ளப் புன்னகைத்தான்.தலையை அங்குமிங்குமாக ஆட்டிவிட்டுத் தோள்பட்டையை மேலே அசைத்து,இதழைக் கடித்துவிட்டுத் தனது செக்கிரிட்டிப் பெண்ணை வரவழைத்தான்.அவளைப் பக்கத்தில் வரவழைத்துத் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்: இதுதாம் எமது மையப் புள்ளி.(அந்தப் பெண்ணைச் சுட்டிக்கொண்டான்.அவள் தனது மெல்லிய இடையை அவனோடு உரசிக் கொண்டாள்.அந்த நளினமான சூழல் எல்லோரதும் வயிற்றுக்குள் ரொக்கட்டைச் செலுத்தியது காதலுணர்வு).அவன் தொடர்ந்தான்.நாங்கள் ஆண்,பெண் உறவை ஒரு பம்பரத்தை ஆட்டுவிக்கும் விசை நூலின் முறமைக்குள் வைத்திருக்கிறோம்.இதனால் ஒருவரையொருவர் வருத்துவதை நுட்பமாக்கி வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? இது என்னவென்றால் ஆண்கள் பெண்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வருவதாகக் கருத்தியல் தளத்தில் ஒருவகையான ப+ர்வீக மனதை உருவாக்கி வைத்துள்ளோம்.இதை எமது குடும்பமெனும் அமைப்பால் செயற்படுத்தி வருகிறோம்.ஆண்களால் மட்டுமே அவர்களது கடுமையான உடற்பலத்தால் முன்னேற முடியுமென நாம் கருத்துக்களை விதைப்போம்.அப்போது நிரந்தரமான ஆண்,பெண் பொறாமை நிலைக்கும்.இது புதிய நுகத்தை இந்த கூட்டத்துக்கு கட்டுவதாகும்.இந்தப் பொறி ப+ர்வீகமான பெண்ணின் பாதுகாப்புப் பிராணியான ஆணை அவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கு முறையாளர்களாகவும்,போட்டியாளர்களாகவும் உருவாக்கிவிடும்.அப்போது பெண்கள் தம்மை விடுதலையடைய வைப்பதற்காக ஆண்களையே எதிரிகளாக்கி நம்மைக் காத்துவிடுவார்கள்.சண்டை வேறுதிசையில் செல்லும்போது நம்மீதான நேரடி எதிர்ப்பு இல்லாது கவனம் வேறு திசையில் செல்லும்.அப்போதும் நாம் செய்யவேண்டியது இதை வளர்தெடுப்பதற்காக பெண் சிந்தனையாளர்களைப்"பெண்ணியலாளர்களாக"உருவாக்கிப் புதுப்புது ஒடுக்கு முறைகளையும்,அதனால் பெண்விடுதலையடைவதே முதற் பிரச்சினையாகவும் அவர்களுடாகப் பறைசாற்றுவோம்.கூடவே பாலியல் திருப்த்தி பற்றியும் ஓப்பிணாகக் கதைக்க வைப்போம்.

பெண்களே பெண்களைப் பற்றிப் பேச வேண்டுமெனச் சொல்லும் கருத்தியலை அவர்களது குரலினூடாகவே பேச வைப்போம்.அப்போது ஆண் வேலைக்கார மிருகம் தாளாத சிக்கலில் பல பக்கத்துக்கு முகங் கொடுக்கணும்.அதனால் நம்மை எதிர்க்கத் திரணியேற்படாது.தொடர்ந்து வேலையில் இருப்பதே மேலெனச் சிந்தித்து வீட்டை மறந்து நுகத்தில் கண்டுண்டு கிடக்கும்.பெண்ணும் தனது சுமைகளை ஆண்தாம் வழங்குவதாக நம்மை மறந்து தமது கணவனின் பக்கம் சதா போர்தொடுப்பாள்.இது எப்படியிருக்கு?இதோடு நமது திட்டம் முடிவதில்லை.புதிய விவாகரத்துச் சட்டங்களை அவளுக்குச் சொல்லி ஆணிடமிருந்து நிரந்திரமாகப் பெண்ணை பிரித்திடவேண்டும்.ஒரு பெண்ணை மனம் நோகாது பாதுகாத்து வர பணம் அதிகம் வேண்டுமென ஆண் உணரும்படி வைப்போம்.அப்போது பெண்ணுக்காக மீளவும் கடுமையாக உழைப்பான்.அதோடு சமூகத்தில் பெண் பற்றாக் குறையாக இருத்திவைப்போம்.பெண்மீது அளவுகடந்த தாகம் ஆணுக்கு ஏற்படும்போது அவன் தலையில் பெண்ணே சஞ்சரிப்பாள்.இதனால் அவன் சிந்தனையாற்றல்,எதிர்ப்பாற்றல் குன்றிவிடும்.பெண்ணை அடைவதற்காகவே முயற்சிகள் நடக்கும்.அதனால் நாமே நலமடைவோம்.இன்றைய பின் நவீனத்துவ மூலவர்களான தெரிதாவையும்,ப+ப்காவையும் மட்டுமல்ல அருந்தி ரோயையும்,அற்றாக்கையும்-உம்பேர்ட்டே எக்காவையும் உளுத்துப் போன இனப் பிரச்சினைகளையும், அதைவலுவாக்கிப் போராடும் மூன்றாமுலக அரசியலையும்,அங்குள்ள சேவை நிறுவனமான நமது "வேர்ல்ட் விசன்"நிறுவனத்தைப் போல ஆயிரம் தன்னார்வ அமைப்புகளையும் நாமே வழி நடத்துகிறோம்.

"ஓ சபாஷ்!நல்ல திட்டம்.நாங்கள் புரிந்து கொண்டோம்!"கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்க,ஒரு கஞ்சன் தன்னை வெளிப்படுத்தினான்:

"ஓம் நல்லது!இத்தகைய அரச வடிவம் நல்லதுதாம்.இதுவரை அதுக்குப் போடும் தீனீ அதிகமாகுதே?இதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்?"-அவன் கேள்வியை நிறுத்து முன்பே உரையாற்றிவனுக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.அவன் இப்படிக் கூறினான்:

"நீங்கள் எங்கே அரசுக்கப் பணம் கொடுக்கிறீர்கள்?சும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்கு!"

"அப்போ யாருதாம் இதுக்குப் பணம் போடுகிறார்கள்?"அதிசயமாக இன்னொரு முதலாளி கேட்டான்.அவனது பார்வையில் வெகுளித்தனம் தெரிந்தது.

சகலாகலா வல்லோனான அந்த உரையாளன் மெல்லக் குரலெடுத்து அமைதியாகச் சொன்னான்:"நாங்கள் செய்திருக்கும் சட்டதிட்டங்கள் வேலைக்கார மிருகங்களே தம்மை வேவு பார்க்கும்,ஓடுக்கும் தமது ஒரு பிரிவுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பணம் செலுத்திவிடுவதற்கு வழி செய்கிறது.அந்த மிருகங்கள்தாம் இதுவரையும் பணம் கொடுக்கிறார்கள்-இனியும் அந்தமிருகங்களே வழங்குங்கள்.அந்த வகையில்தாம் நமது வரிமதிப்புத்திட்டங்களும்,நுகர்வுச் சந்தையும் கட்டப்பட்டுள்ளது.இதைத்தாம் சந்தைப் பொருளாதாரமென்று நுட்ப வார்த்தையில்-கலைச் சொல்லில் என்னைப்போன்ற வல்லுனர்கள் சொல்கிறோம்! இப்படிப் பல சுமைகளை இந்த மிருகங்களுக்கு நாம் ஏற்றிவிடுவதால் இந்த மிருகங்கள் ஒருபோது சிந்திக்காது.கூடவே நமது பொழுது போக்குத்துறை அவர்களுக்குச் சொல்வதும்,வழிநடத்துவதும் நமது பாதுகாப்புக்கேற்ற முறைமைகளே.இதையெல்லவற்றையும்விட நமது மதங்களும் அவைகளின் அற்புதமான மூளைச் சலவையும்,அதுபோல நாம் உருவாக்கிய கல்வியும் நாம்மால் கட்டுப்படுத்தப்படுகிறது.எனவே எமது பாதுகாப்பு அரண்பாரியது இதை மீறி இந்த மிருகங்கள் நம்மை நெருங்க முடியாது.

"அற்புதம்" எல்லோரும் வழிமொழிந்தார்கள்.

நன்றி அன்புக்குரிய நிர்வாகிகளே,செல்வந்தர்களே!நான் கூறியபடி தொடர்ந்து இந்த முறைமைகளை வலப்படுத்தி உலகம் ப+ராகவும் நமது வலுவைப் பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்க ஒப்புதல் தந்ததாககவே உங்கள் குரலைப் பதிவு செய்கிறேன்.இதுவே எமது அடுத்த வர்த்தகக்கூட்டின் இலக்கு.முடித்துக் கொண்டான் உரையை அந்த நிபுணன்.

கோங் கோங்கின் நகர மைதானத்தில் அற்றாக்கின் துணையோடு "உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள்"அணி திரளும் இன்றைய பொழுதில் அவர்களை அந்த அமைப்புத் தனது எஜமானர்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தனது உளவாளிகளின் மூளையை உசார் படுத்தியது அன்று.

இன்றோ நமது விடுதலையை விலைபேசி விற்ற இலங்கை அரசியல்வாதிகளும் இயக்கங்களும்,தமது இருப்புக்காகத் தொடர்ந்து நமது தேசத்துள் யுத்த்தைத் திணித்துத் தமது ஆட்சியை-அதிகாரத்தை நிலைப்படுத்தி வருகிறார்கள்.இதுள் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முன்தள்ளப்பட்டு அவையே இவர்களின் இருப்புக்கானவொரு முகமூடியாகவும் மக்களை மிக இலகுவாக அண்மிக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இது, தமிழ்நாட்டில் நமது விடுதலையின் திறவுகோல் இருப்பதாகச் சொல்லும்.தமிழ்நாட்டு ஓட்டுக்கட்சியிடம் தனது இருப்பை வலியுறுத்தும்,இந்திய மத்திய அரசோடு பேரமிடும்.இதற்கெல்லாம் பெயர் விடுதலை-சுயநிர்ணயம்!

ஆனால்,மக்களின் உண்மையான விடுதலை ஓட்டுக்கட்சிகளின் தயவிலல்லத் தங்கியுள்ளது.மாறாகப் இந்தியாவின்-உலகின் பரந்துபட்ட ஒடுக்கப்படும்,உழைப்பாள மக்களின் தயவிலும்,புரட்சிகரக் குழுக்களின் தோழமையிலுமே தங்கியிருக்கிறது.தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் புரட்சியாளர்களோடு ஈழவிடுதலை அமைப்புகளின் எந்தப் பிரிவுக்கு நட்புண்டு-தோழமையுணர்வுண்டு?புலிகளின் ஊடகங்களே நேபாளப் போராளிகளை மாவோயிசப் பயங்கர வாதிகள் என்கிறார்கள்.இங்கே, புலிகள் விடுதலை அமைப்பாம்.எல்லாம் மக்களின் எழிச்சியோடு முடிவுக்கு வரும்.அத்தகைய காலத்தை விரைவாக்குவது நமது கடமை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

Samstag, November 24, 2007

ஓட்டுக்கட்சி அரசியலில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே.

ஓட்டுக்கட்சி அரசியலில்
கருணாநிதிக்கு நிகர்
கருணாநிதியே!


பொதுவாகத் திரு.இளங்கோவன் சொல்லும் அரசியல் வெறும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையுடையது.கருணாநிதியினதோ அன்றி வேறெந்த ஓட்டுக்கட்சிகளினதோ தயவை-ஆதரவை,ஒப்பாரியை நம்பித் தமிழ்பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுக்கப்பட முடியாது.புலிகள் செய்யும் போராட்டத்தில் அங்ஙனம் அவர்கள் எதிர்பார்ப்பதும்,அறிக்கை விடுவதும்,எதிர்ப்பதும்,புலிகளின் ஈழமுரசுப் பத்திரிகையில் துரோகி என்று வர்ணிப்பதும் நடக்கும் நாடகங்களே.ஆனால்,ஈழத்து மக்களின்மீதான இலங்கைப் பாசிச இனவாத அரசின் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடவும்,தமது சுயநிர்ணயத்தை மீட்டெடுக்கவும் நடைபெறப்போகும் போராட்டமானது சாரம்சத்தில் ஓட்டுக்கட்சிகள்-நாடாளுமன்றங்களுக்கெதிரானது மட்டுமல்ல.ஏன் உலக-இந்திய ஏகாதிபத்திய-பிராந்திய ஆதிக்கச் சக்திகளுக்கெதிரானதாகும்.

இங்கே தமிழின் பெயரால் ஆட்சி நடாத்தும் கருணாநிதி மக்களின் நலத்துக்காகவா-தமிழ்நாட்டின் விமோசனத்துக்காகவா ஆட்சி நடாத்துகிறார்?கருணாநிதியிடம் இருக்கும் இலட்சம் கோடி பணமானது எப்படி வந்து சேர்ந்தது?அவருடைய சொந்த உழைப்பினால் உருவாகிய செல்வமா?இத்தகைய துரோகத்தனமான-நம்பிக்கைத் துரோகியின் ஊழல் அரசியலில் கொஞ்சம் குறைவில்லாமற் செயற்படுத்தியவர் ஏம்.ஜீ.ஆர்-ஜெயலலிதாக்கூட்டு.இவர்களையும்,இவர்களது நம்பிக்கைத் துரோகத்தையும் மக்களின் நலனிலிருந்து பார்க்காது கட்சி நலன்-அரசியல் நலனில் இருந்து பார்க்கும் பார்வையானது என்ன நேர்மையானதா?


"கருணாநிதியைப் போல் எல்லோரும்தாம் பணம் சேர்த்திருக்கிறார்கள்.இது இந்தியாவில் சகஜம்" எனும் கருத்து எப்படி உருவாகிறது?மக்களின் வரிப்பணத்தையும்,அவர்களின் வாழ்வாதாரங்களை அந்நிய சக்திகளின் திருட்டுக்குத் திறந்துவிட்டு,அந்நியச் சக்திகள் போடும் எலும்பைப் பெறும் இத்தகைய அரசியல்வாதிகள்தாம் அப்பாவி மக்களையும்,அவர்கள் செய்யும் நியாயமான போராட்டங்களையும் பொலிசை வைத்து வேட்டையாடுகின்றார்கள்.


இவர்களையெல்லாம் சாதரணமாக விட்டுவிட முடியாது.மக்களின் தியாகத்தை அரசியலாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பதவிக்கு வந்த கையோடு அந்த மக்களையே நரவேட்டையாடும் ஓட்டுக் கட்சி அரசியலில் மக்களுக்கான நியாயம்,நீதி உண்டா திரு.இளங்கோவரே?
தி.மு.க.வின் கபடத் தனத்தையும்,கருணாநிதி அவர்களின் போலித் தனங்களையும் கண்ணதாசன் அப்பாவித்தனமாகத் தானும் அநுபவித்து,தம்பட்டம் அடித்துச் சொன்ன கதைகள் ஏராளம்.அதிலொன்று வனவாசம்.இங்கே, மனித நடத்தையின் போலித் தனங்களை அவர் மிக இலகுவாகச் சொல்கிறார்.அதில் கையாண்ட அரசியல் பார்வை அப்பாவித்தனமானதேயொழியச் சம்பவங்கள் உண்மையாக இருக்கிறது.
கண்ணதாசன் ஒரு அரசியல் ஆய்வாளானாக இருந்திருந்தால் நிச்சியம் நல்லவொரு ஆய்வு கிடைத்திருக்கும்.எனினும்,நாம் மேல் நோக்கிப் போவாம்.
மனித சமுதாயத்தில் அரசியலின் பங்கு என்ன?

போபர்ஸ் பீரங்கி ஊழல்,
வீராணம் குழாய் ஊழல்,
டெஹல்கா இராணுவப் பேர ஊழல் என்று,

உலகறிந்த ஊழல்களை ஓட்டுக்கட்சித் தலைவர்களும்,அதிகார வர்க்கமுமே செய்து மக்கள் சொத்தைத் திருடுகிறது.இத்தகைய ஆட்சியில் அமர்ந்துள்ள ஒரு கட்சியின் தலைவர் கருணாநிதி.இவர் ஆயுட்காலத் தலைவராக இருந்தபடி தனது வாரீசைத் தலைவராக்கிக் கோடிக்கணக்கான கட்சியின் சொத்தையும் தனது குடும்பச் சொத்தாக மாற்ற முனையும் சந்தர்ப்பத்தில்,இவர்களால் ஈழத் தமிழருக்காக என்ன செய்ய முடியும்?இன்றைய நிலவரப்படி கருணாநிதி-ஜெயலலிதா குடும்பங்களின் சொத்து மதிப்பு இலட்சம் கோடிகளைத் தாண்டும்.இவர்களே இன்று மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமிழ் நாட்டை ஒட்ட மொட்டையடிக்கும்போது இத்தகைய ஓட்டுக்கட்சியின்-தலைவரின் கூக்குரல்கள் ஒருபோதும் இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு நியாயமாகக் குரல் கொடுக்காது.இவர்களே மாறிமாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளோடு சமரசஞ் செய்து, தமது சொத்தைக் காத்து,நிலைப்படுத்தி வருவதற்காகவே பதிவிகளுக்கு வர முனைகிறார்கள்.இந்த நிலையில் இவர்களை எவர் நம்புவார்?

இத்தகைய நாடாளுமன்ற ஆட்சியில் அரசு,அதன் பாராளுமன்ற ஜனநாயகமென்பது என்ன? இந்த அமைப்பில் தேர்தலின் சாரம் என்ன?


இந்த இளங்கோவன்கள் எப்பவும் ஒன்றை மறைப்பதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள்.அதாவது அரசியலென்பது மக்களைக் காக்கும் வடிவமல்ல.அது மக்களையொடுக்கும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியென்பதை மறைப்பதில் முன் நிற்பவர்கள்தான் இவர்கள்.


எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை.அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள்.மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள்.அரசு என்பது மிகவும் ஒடுக்குமுறை வடிவமானது.அது ஆளும் வர்கத்தின் தேவைகளை ஒழுங்குறச் செய்யும் ஒரு எடுபிடி!

அரசின் சாரம்சம் என்ன?

அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.முதலாளித்துவத்தின் கல்வியாளர்களுக்கு இது இயலாத காரியமாகும்.அவர்கள் இந்த அமைப்பைச் செம்மையுறக் கற்றது கிடையாது.இயற்கை மற்றும் பௌதிக விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் முக்கியத்தில் சமூக விஞ்ஞானத்துக்குக் கொடுப்பது கிடையாது.இது முதலாளியத்தின் திட்டமிட்ட சதி.இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்.


இங்கே அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.


இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் வைகோ...கருணாநிதி,நெடுமாறன் என்று நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.


சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது கிடையாது.இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் ப+ர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே ஒரு அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.சாதரண மக்கள்கூட இப்படி நம்ப மறுக்கும் காலத்திலிருக்க, இந்த இளங்கோவருக்கு என்ன வந்தது?


எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.


ப+ர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப்பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகளின் வேலை.அதிலொருவர்தான் இந்தக் கருணாநிதி.அவர் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளின் ஒரு துரும்பு.அவருக்கும் தமிழ்பேசும் உழைக்கும் வர்கத்துக்கும் எந்தத் தொடர்பும்கிடையாது.அவர் தனது பிழைப்புக்கு எந்தப் ப+ர்ச்சுவாக் கட்சியோடும் கூட்டுச்சேருவார்.தடா,பொடா போன்ற சட்டங்களை-மக்களை ஒடுக்கும் ஜனநாயக விரோதச் சட்டங்களை நிறைவேற்றும் வாக்கெடுப்புக்குச் சாதகமாக வாக்களிப்பார்!ஏனெனில், இந்தப் பாராளுமன்ற ஓட்டுக்கட்சிகள் யாவும் ப+ர்ச்சுவா அரசை நம்பியே காலத்தை ஓட்டுபவை.அதை நியாயப்படுத்திப் பெரும்பான்மை மக்களை ஒடுக்கி முதலாளிகளிடம் சலுகை பெறும் இந்த அரசியல் பிழைப்புவாதிகளை மக்கள் தலைவனாக எந்தக் கல்வியாளனும் சொல்வதில்லை.


அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள,; கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.


அரசு மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் ப+ர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.


அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்...)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை... நீண்டுகொண்டே போகும்.


இந்த விண்ணாண அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது.கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் அரசின் வேலை!இந்த அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் அரசியல்வாதியன் வேலை? அதுவும் கருணாநிதி,வைக் கோபாலசாமி,நெடுமாறன்போன்றவர்களின் நிலை பெரிதும் பிற்போக்கான நிலையாகும்.இவர்கள் செய்த-செய்யும் அரசியல் மக்களை ஒடுக்கும் அரசியலாகும்.