Posts mit dem Label அரசியல் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label அரசியல் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, März 26, 2016

சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலை

ஜப்பான்:அணுமின்னாலை அனர்த்தமும், சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலையும் -சில குறிப்புகள்.

சம்பூர் அணுமின் நிலையமானது இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது? ;அவ்வணுமின்நிலையத்துள் நகர்த்தப்படும் "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்" அரசியல் என்ன?அது குறித்தொரு நீண்ட அரசியல் -பொருளியற் பர்வை அவசியமானது.தமிழ்பேசும் மக்களது தலைவிதியை இஃது தொடர்ந்து மாற்றும்.இதன் வாயிலானவொரு வியூகம் பூகோளா ரீதியாக இந்திய -இலங்கை ஆளும் வர்க்கத்து நலனுக்கு மிக அண்மையில் இருக்கிறது.நமக்கிஃது ,மிக நீண்ட தூரத்துள் நமது விடுதலையைத் தள்ளிப் போடுகிறதென்பதை உணர்ந்துகொள்வோம்! ;இஃது , எப்படியென்பதை இறுதியிற் பார்ப்போம்.முதலில் ,பூக்கோஷீமா (Fukushima )விலிருந்து தொடங்குவதே மிகப் பொருத்தமானது.

பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை அணுவனர்த்தம்(11. März 2011 )புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு ,எந்தக் கூச்சமும் இல்லை!




அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து அன்றைய[11. März 2011 ] ஜப்பானது அழிவுகளை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தந்த விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.

ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் அன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசின.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை எமக்குப் படம் பிடித்துக் காட்டியது.

ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளை இப்போது தொடர்ந்து செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கி இன்று வருடம் 5 ஆகிறது.

"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே(விற்பனர்களே),அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிட்டது!;மக்களது உயிரோ புற்று நோய்க்கு முன் கதிரியக்க அச்சமாக...

அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் உலகம் பூராகவும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒரு புறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனித விரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.

அதி முன்னேறிய தொழில் நுட்ப வல்லரசான ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன. இதிலிருந்தும், இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்தும் தம் அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.

மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.

ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய் இன்றுஞ் செத்துக் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.இதுவோதாம் செனோர்நோபியில் 26.04.1986 இல் நடந்த ( Die Nuklearkatastrophe von Tschernobyl : 26.April 1986 in Block 4 des Kernkraftwerks Tschernobyl nahe der ukrainischen Stadt Prypjat. ) அணுவனர்த்தத்தின் கதையும்.




ஒரு அணுவனர்த்தத்தின் -பேரிடியின் பின்னான கதிரியக்க மாற்றத்தின் சூழலே அதி பயங்கரமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பல வருடங்களுக்குப் பாடாய்ப்படுத்தும் விபத்து நடந்தேறிய ,வலைய மக்களை.இந்த அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்!

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது[இதுவேதாம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் தேசத்துக்கும் ;முதலாளியத்தை எட்டமுனையும் சிறுதேசங்களுக்கும் பொருந்தும்.சம்பூர் அணு மின்நிலையம் இந்தப் போக்கின் விருத்தயே!].

இந்தியத் துணைக் கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக் காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் [ The 123 Agreement signed between the United States of America and the Republic of India is known as the U.S.–India Civil Nuclear Agreement or Indo-US nuclear deal. The framework for this agreement was a July 18, 2005 ]இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால், அணுக் கழிவுகளே (Plutonium, Pu, 94 )மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு -இலங்கைக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய -இலங்கை ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்திய -இலங்கைக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.


இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.
ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுட வர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா -இலங்கை மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகின்றன.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஐந்துக்கு மேற்பட்ட ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் [ Plutonium, Pu, 94 ( 239Pu ) ] இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:


 

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.இங்கு நமது சம்பந்தனது நிலையும் இதுவே! ;அவர் 50 ஆண்டுகள் பின் தங்கிய அணுவிஞ்ஞானப் புரிதலைக்கூட அறியாதவொரு சட்டவாத எம்.பி. -எதிர்க்கட்சித் தலைவர்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்( 239Pu ). இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.


 

அந்தவகையில் அதன் அரைதரக் ( Half-life (t1⁄2) )காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற் பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும் 24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இது ஒரு இலட்சம் வருடங்களுக்குத் தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான்[ 239Pu ] மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவல் -இலங்கையால் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:






1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.




இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!

மேற்குலக வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தப் பாதுகாப்பு வியூகத்துக்காகத் திண்டாடும்போது இந்தியா -இலங்கைபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதை[ Zeitbombe ]யெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான மக்கள் வரிச் செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

Zusammenhang zwischen Halbwertszeit und spezifischer 
Aktivität Isotop Halbwertszeit spezifische Aktivität 
 
131I  8 Tage  4.600.000.000.000 Bq/mg
137Cs 30 Jahre 3.300.000.000 Bq/mg
239Pu 24.110 Jahre 2.307.900 Bq/mg
235U 703.800.000 Jahre 80 Bq/mg
238U 4.468.000.000 Jahre 12 Bq/mg
232Th 14.050.000.000 Jahre 4 Bq/mg
 
 
இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின்
மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.
இந்தப் புளோட்டோனியம் [Plutonium, Pu, 94 ]
நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.
இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம்
மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் Plutonium, Pu, 94 ஆல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிதவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய சிகா வைரஸ் (Das Zika-Virus ) மற்றும் "எச்5 என்1"வைரஸ்[ Influenza A/H5N1 ] அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாளாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.





இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அன்றி இலங்கை அரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்
இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!


இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.

ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.

நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.

இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை. கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லை யென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக :
 ஏலவே சொன்ன சம்பூர் அணுமின் நிலையமானது   இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது?   ;அவ்வணுமின் நிலையத்துள் நகர்த்தப்படும்   "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்"  அரசியல் என்ன? 
என்பதன் அரசியலைப் பார்ப்போம் !
 
 
 
 


இலங்கையானது ஒரு வளர்முன நாடாகும்.அஃது இலங்கை மக்களது நல்வாழ்வுக்காக -தொழில் வளர்ச்சிக்காக -ஒழுங்கமைந்த சந்தை வளர்ச்சிக்காகப் போராடும் தேசம்.அதன் பொருளாதாரச் சந்தை வளர்ச்சி ,இன்னும் முடிந்தபாடிலில்லை!




அத்தேசமானது பல்லாண்டுகளுக்கு “இப்போருள் “ சிக்கியுள்ளது ;முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியானது இலங்கைக்கு அடுத்த 200 ஆண்டுகள்வரை தொடரும்.

இதன் பொருளானது, அத்தேசமானது தவிர்க்கமுடியாது தனது சக்திவளத் தேவையை இத்தகைய அணு மின்னாலைகளது உருவாக்கத்தினால் மட்டுமேதாம் சாத்தியப்படுத்த முடியும்.அதற்கு வேறொரு மாற்று வழி தற்கொலைக்கொப்பானது.

இதைச் சாத்தியமாக்கப் பல சம்பூர்கள் இலங்கைக்கு அவசியமே!இங்கே இஃதொரு கல்! மற்றது, இந்த அணுமின்னாலை உருவாகும் பிராந்தியமானது தமிழ் நிலப்பரப்பின் இதயத்திலென்பதை நாம் மறுக்கவோ அன்றி மறைக்கவோ கூடாது!இதை எந்த அரசியல்வாதியும் வெளிப்படையாகவுணரவில்லை!

தமிழர்களது இனப் பிரச்சனையும் ;இனவாத இலங்கை அரசின் போக்குகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை!2009 வரை இலங்கையில் "பயங்கரவாத" த் தாக்குல்களும் ;யுத்தமும் தேசவுடமைகள் -பொதுச் சொத்துக்கள் அழிப்புகளும் நிகழ்ந்து கொண்டது.அதன் தாக்கம் ;அரசியல் இன்னுந் தொடர்கதையாகவே இருக்கிறது!

இலங்கை போன்ற கலவரப் பூமியில் அணுமின்னாலை ஒருபோதும் உகந்ததல்ல!; இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இலங்கை அரசானாது அணுமின்னாலையை மேற்சொன்ன விதிமுறைகளுக்கமையப் பாதுகாப்பதைத் தனது இராணுயந்திரத்தின் நிரந்த ஆக்கிரமிப்பிலும் ;இந்திய உளவு நிறுவனத்தின் பாதுகாப்பிலுந்தாம் சம்பூர் அணுமின்னாலையைப் பாதுகாக்க முடியுமென்பது நிதர்சனமானவுண்மை ! ; இதன் தெரிவில் திரிகோணமலைப் பிரதேசம் முற்றுமுழுதான ஆக்கிரமிப்புக்குள் ;இராணுவப் பாதுகாப்பு வலையத்துள் இருத்தப்படும்.

இது சுமார் 100 ஆண்டுகளுக்குத் தொடர்கதையாகும்.இங்கே , இந்தியாவுக்குத் திரிகோணமலையைப் பட்டயம் எழுதிக் கொடுத்தாகவேண்டும். இதுதாம் இரண்டாவது கல்!எனவே, தமிழர்களது பாரம்பரிய பூமி என்பது ,இனிச் செல்லாக் காசாகும்!; இதொஃரு வகையில் புதிய பாணியிலான நில ஆக்கரமிப்புத் தேசத்தின் வளர்ச்சியை முன் நிறுத்தி - இதற்கு , இலங்கையில் உருவாகும் அணுமின்னாலைகள் நல்லவொரு அரசியல் வியூகமாகும்.இதுவே, அணுமின்னாலையின் அரசியலும் அதன் உருவாக்கத்தின் அசுர வேகத்தின் உள் நோக்கமுமாகும்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

Freitag, März 25, 2016

இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்

46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!
 
நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ புஸ்பராஜா - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.
 
 
இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்!
உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்!
இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
 
 
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
 
 
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
 
 
அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
 
 
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.
 
 
 
இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.
 
 
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
 
 
இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
 
 
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
 
 
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?
 
 
தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
 
 
ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
 
 
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

Sonntag, Februar 28, 2016

"பற நாயே", விரிந்துரைக்கும் அரசியல்.


 
 இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
 
சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பிளந்தொடுக்குவதிற் சிங்களப் பேரினவாதத்துக்குத் துணையாக நின்றது இந்திய அரசு.இந்தியாவானது தனக்குள் இலங்கையைக் கட்டிப்போடுவதில் மட்டுமேதாம் தமிழ்த் தேசியவிடுதலையைப் பயன்படுத்திக்கொண்டது.
 

இந்தத் தெரிவில் தமிழ் பேசும் ஈழ மக்களைப் பல்வேறு பரிணாமத்துள் பிளந்தொடுக்குவதில் இந்தியா வெற்றியீட்டியது.பிரதேசரீதியாகவும் ; சாதி -மத ரீதியாகவும் ;யாழ்ப்பாண மேலாதிக்கம் என்ற கருத்தியல் ரீதியாகவும் தமிழ்பேசும் மக்களைத் திட்டமிட்டுப் பிளந்தது.இதுள் ,தலித்துவ வாதமும் அதன் அரசியல் நீட்சியும் திட்டமிடப்பட்ட இந்தியாவினது அரசியலாகும்.இந்த அரசியலானது தமிழ் பேசும் மக்களுக்குள் மீளவும் ,சாதிய வேரையும் அதன் தொடர்ச்சியையும் கூராக்கியது.முள்ளிவாய்க்கால்வரை இந்த அரசியலானது தமிழ்தேசிய விடுதலைக்கெதிரான அனைத்து நடவடிக்கையிலும் இயங்கியபடி, தற்போது "யாழ்பாண மேலாதிக்கம் "என்று உயிர் வாழ்கிறது - தலித்துவக் குழுக்கள்.
 
இத்தகைய பிளவுவாத இந்திய வியூகத்துக்குப் பின்னான ஈழ மக்களது மனங்களில் பிரதேசவாதம் ;சாதியவெறி குரூரமாகக் கனன்றபடி(நெருப்பு :கனல்தல் போன்று) ஒருவரையொருவர் வஞ்சந் தீர்க்கும் நிலைக்குத் தள்ளியுள்ளதன் பலனை நாம் இன்றுணருகிறோம்.
 

தமிழ் மக்களது விடுதலையைத் தோற்க்கடிப்பதற்குத் தலித்துவக் குழுக்கள் ,இலங்கை அரசுக்குச் சனநாயக வேடங்கட்டிக் கூத்தாடின.இதுள் ,புலம் பெயர்ந்த தலித்துவ மேம்பாட்டு முன்னணி மிக நேர்த்தியாக இந்திய -இலங்கை அரசுகளாற் திட்டமிட்டு - வழிகாட்டலுடன் இயக்கப்பட்டது.
 

இவர்கள் (தலித்துவக் குழுக்கள்)தொடர்ந்து தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நின்றார்கள் -நிற்கின்றார்கள்!
 

இங்கு, தோல்விகண்டது தமிழ்த் தேசிய விடுதலை மட்டுமல்ல ; மக்களது ஐக்கியமும் கூடவே, நொருக்கப்பட்டது ; சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான எதிர்ப்பு அரசியலும் ,அதன்வழியான அரசியற்போராட்டமும் தோற்டிக்கப்பட்டது.
 

இதுவொரு வடூ ; அரசியல் வடு:மூன்று இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமான வடூ ! ; பல்லாயிரம் போராளிகளது அழிவுக்குக் காரணமான இந்தியாவின் இந்தச் சதி தற்போது , தமிழ்பேசும் மக்களது உலகு தழுவிய அவர்களது உறவுத் தொடர்ச்சியை -நட்பை ;தோழமையை அழித்து வருகிறது.
 
இதன் கூறுதாம் , இன்று இராமசாமி துரைரெத்தினம் அவர்களது வாயால் " ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார்போன்ற நாய்களே பொத்தடா வாயை " என்றும் , "என்னைப்பற்றிக் கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு ; பற நாயே! " என்றும் இந்தியா எதிர்பார்த்த அரசியல் நமக்குள் பிளவுகளை வலுப்படுத்திக்கொண்டு நம்மை நடுத்தெருவில் அரசியலற்ற அநாதைகளாக உலாவவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
 

நாம் பிளவுண்டுபோனோம்.பிளவுக்குக் காரணமானவர்கள் மீளவொரு ஆட்டத்துக்குத் தயாராகும்போது நமது ஆவேசமெல்லாம் மீளவும் ,"பற நாயே "என்று கனன்று வருவது "ஏவியவர்களை விட்டு அம்புகளை நோவது" மாதிரித்தாம்.
 

இரவிக்குமார் தலித்துவக் குழுக்களது அரசியலுக்கு வலுச் சேர்த்தவெரென்பது உண்மை.அவரை, இந்திய வியூக அரசியலுக்கு வெளியில் வைக்கும் அரசியல்கூட இந்தப் " பற நாயே"க்குப் பிறகு வலுக்கும் .அதுகூடவொரு அரசியல்தாம்.நாம் இந்தியப் பிளவுவாத அரசியல் வியூகத்தாற் தொடர்ந்து பழிவாங்கப்படுவது திட்டமிடப்பட்ட அரசியல் நெருக்கடியாகும்.
 

ப.வி.ஶ்ரீரங்கன்
28.02.2016

Samstag, Februar 20, 2016

குஷ்பூ'வுக்குப் பின்னான கவர்ச்சியுள் நாயன்தாரா!...


புவிப்பரப்பெங்குந் தினமும்,பொழுதும் அகதிகள் பெருக்கமும், பட்டுணியும், மரணவோலமும்,நோயும் நொடியும் மனித வரலாற்றில் ஒரு செயலூக்கமிக்க நிகழ்வாக மாறி வருகிறது.இன்றைய  சிரியா மக்களது இடர்ப் பெயர்வு-இது ஒருபுறத்தே இங்ஙனம் நிகழும்போது,மறுபுறமோ இந்த நிகழ்வால் அரசியல் இலாபமடையும் ஐரோப்பிய ஓட்டுக்கட்சிகள், வலதுசாரிய-இனவாதக் கட்சிகள் யாவும் இந்த அகதிகளை மனித சமநிலையிலிருந்து துண்டித்து விடுவதிலும்,துரத்தியடிப்பதிலும் மும்மரமாகச் செயற்படும்போது, அதைவைத்து மக்களின் மனங்களைத் தம் பக்கம் இழுத்துக் கட்சிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலையில் இந்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் செற்படுகின்றன.இதனால் சாதரண மக்களிடமிருந்து நாளாந்தம் அந்நியப்படும் நாம் சமூகக் கூட்டு மனப்பான்மையை இழந்தும்,இந்தத் தேசத்தின் பூர்வீகக் குடிகளோடு கலந்தும், இணைந்தும் வாழமுடிவதில்லை.ஆனால் இத் தேசங்கள் அதை முன் வைத்தே [sozialen Integration -Emile Durkheim ]இன்றைய அரேபியப் புலம் பெயர் மக்களை வேட்டையாடுகின்றனரென்பதை[ mechanische Solidarität  ] நம்மில் பலா அறிவர்!


இது மனிதப் பண்பாட்டிற்கு மிகவும் முரணானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் மக்கள் தமது வலுவுக்குள் உட்பட்ட செயலூக்கத்தை கண்டிப்பாக இந்த ஐரோப்பிய உற்பத்திச் சக்திகளுக்கு வழங்கியாகவேண்டும்.இத்தகைய செயலூக்கத்தை மிகுதியாக வழங்கிவரும் அகதிகளின் அதீத உழைப்பானது மூன்றாந்தரமாக மறைக்கப்பட்டு,அவர்கள் பூர்வீகக் குடிகளின் வரிப்பணத்தை தின்று ஏப்பம் விடுபவர்களாக இந்த உடகங்கள், அரசியல் வாதிகள் கருத்துக்களைத் தமது மக்களிடம் பரப்புகிறார்கள்.இங்கே சமூகக் கூட்டுணர்வின்றிக்கிடக்கும் [ Kultureller Identität ]ஒரு பகுதி மக்களை தம்மால் தாங்கிக் கொள்ளப்படுவதாகச் சொல்லுப்படும் பொய்,புரட்டை இந்தப் பூர்வீகக் குடிகள் நம்பி விடுவதாலும் சமுதாயத்தில் ஒரு கொதி நிலையைத் தூண்டிவிடும் அரசியல் அமுக்கத்தை ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தோற்றுவித்துத் தமது பொருளாதார முரண்பாட்டைத் திசை திருப்பித் தம் ஆட்சியை நீடிக்கிறார்கள்.வட  ஆபிரிக்க -அரேபிய  மக்களது இடம் பெயர்வு இத்தகைய வியூகத்தை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளது!




இத்தகைய நீடிப்பில் ஆட்சியாளர்கள் தவிர்க்கமுடியாது அகதிகளுக்கான அனைத்து எதிர் நடவடிக்கைகளையும் ஒரு அட்டவணைக்குள் திணிப்பதுபோன்று(...Durch Kategorisierugen...z.B."Kriminalität von Nordafrikaner ,die Auslaender","die Schein Asylanten"...usw.)"வட ஆபிரிக்கக் கிரிமினல்கள் " ; " வெளிநாட்டார்கள் " ; " போலி  அகதிகள்"என்று அட்டவணையிடுதல் கருத்தியலாக வளர்தெடுக்கப்பட்டு,மக்கள் சமூகத்தில் அதுவே அந்நிய எதிர்ப்புச் சமூக உளவியலாக ஊன்றப்படுகிறது.இது மனிதாபிமானத்தையும்,ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தையும் மிகவும் பலவீனப்படுத்தி,மக்களிடம் ஒருவித சாத்வீக இனவாதமாகவும்;("passiver"Rassismus)வளர்த்து விடுகிறார்கள்.இத்தகைய சாத்வீக இனவாதமானது அடிப்படையில் செயலூக்க இனவாதிகளுக்கு("aktiver"Rassismus) பெரும் உந்துதலையும்,பொருட்பலத்தையும் மற்றும் தார்மீக வலுவை,ஆட்படையையும் கூட்டிவருகிறது.ஏலவே காலனித்துவப் பார்வையுடைய ஐரோப்பிய மனோபாவமானது மிக விரைவாக இனவாதத் தீயில் விழுந்தவிடுகிறது.இங்கு யேர்மனியில் இஃது Alternative für Deutschland: AfD என்றும் ;பிரான்சில் இது Front National என்றும் தீவிரமாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் பாசிச  அபாயமாக நீண்டு கிடக்கிறது!

இதன்பலாபலனே ஆயிரம் தடவைகள் அகதிகளுக்கான சட்ட மாற்றங்களையும்,புதிய சட்ட வகுப்புக்களையும் அரசியல் ரீதியாகச் செய்யும் நிலைக்கு இந்த மக்களின் ஒப்புதல் மிக இலகுவாகக் கிடைக்கிறது.இன்றிருக்கும் ஐரோப்பியச் சந்தைப் பொருளாதாரத்தின் நிலையானது மிகவும் கொடிய மனித விரோதச் சட்டங்களை இயற்றுவதிலும்,தமது மூலதனத்தைப் பெருக்குவதற்கும்-அதைக்காப்பதற்குமாக வெறிகொண்டலைகிறது.இதற்கு முரண்பாடாக ஐரோப்பியத் தொழிலாளர்களினதும்,அகதிகளினதும் ஒன்றிணைவு இவர்களுக்குக் குறுக்கே கோடுகிழிக்க முனைவதால் இந்தச் சாத்வீக இனவாதம் மேன் மேலும் வளர்தெடுக்கப்படுகிறது.இது தொழிலாளர்களின் முரண்பாட்டையொடுக்கும் ஐரோப்பாவின் புதிய குடிசார் சட்டவுருவாக்கத்துக்கு முதற்கல்லை எடுத்துப்போட்டபோது மக்களால் எந்த எதிர்ப்பும் வராது காத்திருக்கிறது.இந்தப் "பொது ஐரோப்பியச் சட்டம்;"(Europaeischen Verfassung und Grundgesetz)ஐரோப்பிய மக்களின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் மட்டுப்படுத்தி அவர்களை வெறும் நுகர்வோர் ஆக்கும் சட்டம் என்பதையுணர்ந்த ஓட்டுக்கட்சிகள்,அதை மறைப்பதற்காக இந்தச் சாத்வீக இனவாதத்தை பரப்பி வந்தார்கள்-வருகிறார்கள்.இது சியாவினது குடிகளது இடப்பெயர்வோடு மேலும் உச்சம் பெறுகிறது. Mediterranean Sea யில் ஐரோப்பியக் கடற்படை அகதிகனைச் சாட்டிப் புவிகோள நலனை அறுவடை செய்கிறது இன்று!இதன் தொடர்ச்சியுள் ,சிரியாவின் அழிவுக்கு வழிவகுக்கும் அமெரிக்க -ஐரோப்பியப் படை நகர்வு  அணுயுத்தாற் மக்களைக் கொன்றுதாம் ஒதுங்கும் -ஓயும்!;அது இருசியாவின் மண்ணில் மீளவும் பலரைக் கொல்லும் அரசியல்.

 கீரோசீமா -நாகசாகி[Hiroshima and Nagasaki  ]:

அணு குண்டைத் தயாரிப்பதற்கான யுரேனியம் -Uran-235 (யுரேனியம் -235, வெடிப்புச்சக்தி பிளப்பு மூலமானது!(Explosionsenergie aus der spaltug von Uran -235 oder Plutonium-239)இதனாலான குண்டு கீரோசீமாவின் மீது கொட்டப்பட்டுப் பரிசோதித்த அமெரிக்கா( On August 6 the U.S. dropped a uranium gun-type atomic bomb (Little Boy) on Hiroshima. American President Harry S. Truman called for Japan's surrender 16 hours later.  ) மற்றும் விஞ்ஞானிகளான கிரிமனல்கள் ஓப்பன்கைமர்,சினைடர்(goldene Liste) பயங்கரவாதிகளால் உலக அணுவல்லரசானது.) புளுட்:டோனியம் -Plutonium- 239(இந்த மூலகத்தால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டு நாகசாகிமீது விழுந்து[ The atomic explosion over Nagasaki at 11:02 a.m., August 9, 1945  ] வெடித்தது.இதையும் அமெரிக்கா பரீசீலித்துக் கொண்டது.கீராசீமாவில் யுரேனியம் -235 உம் ,நாகசாகியில் புளுட்டோனியம்-239 உம் குண்டுகளாக வெடிக்க வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.)போன்றதைப் பெற்று அணுக்குண்டைத் தயாரித்துவிட ஈரான் முயல்கிறதாம் -கதைவிடுகிறது மேற்குலகம்!


இதைத் தடுத்துவிட "சனநாயக் விழுமியம் " நிறைந்த அமெரிக்காவும் -ஐரோப்பியக் கூட்டமைப்பும் முயல்கின்றதாம். (1939 இல் கோதாரி பிடித்த நீல் போரும்(Niels Henrik David Bohr  ),ஜோன் ஆர்ச்சிபெல் வீலரும் (John Archibald Wheeler )அணுப்பிளப்புத் தியரியை [ The Rutherford–Bohr model of the hydrogen atom (Z = 1) or a hydrogen-like ion (Z > 1), where the negatively charged electron confined to an atomic shell encircles a small, positively charged atomic nucleus and where an electron jump between orbits is accompanied by an emitted or absorbed amount of electromagnetic energy (hν). ] விளங்க முற்படும்போது, ஓப்பன்கைமரும் அவனது கூட்டாளிகளும் அணுக்குண்டைத் தயாரித்துக் கொடுக்கும் வேலையில் அமெரிக்க அரசோடு முனைந்தான்.




கீரோசீமாவிலும்,நாகசாகியிலும் பல்லாயிரம் மக்களைக் கொன்று பரிசீலிக்கப்பட்ட அணுக் குண்டுகளால் வேதனையடைந்த திரு.வீலர் சொல்கிறார்:"நான் அதை மீளத் திரும்பிப் பார்ப்பேனானால்-அதாவது நானும் போரும் இணைந்து உருவாக்கிய அணுப்பிளப்புத் தரவுகளை-எனக்குள் நான் கவலை கொள்கிறேன்."ஓப்பன் கைமர் கூறுகிறான்:"யுத்தம் செய்யும் உலகுக்கு அணுக்குண்டு புதிய ஆயுதமாக ஆயுதக்கிடங்குக்குள் இருக்கும்,அல்லது ஆயுதக்கிடங்கிலிருந்து நாடுகள் யுத்தத்துக்குத் தயாராவார்கள்,அப்போது லோஸ் அலாமோஸ் எனும் பெயரும் கீரோசீமாவின் சபிப்பும் மனித கணங்களுக்குள் வரும்."-லோஸ் அலோமாஸ் விஞ்ஞானிகள் சந்திப்பின்(16.10.1945) உரை.)

பொருளாதாரத்தடை? :


கடந்த காலத்தில் சதாமின் ஈராக்குக்கு வழங்கப்பட்ட பொருளாதாரத் தண்டனை ஐந்து இலட்சம் பாலகர்களைப் பாடையில் அனுப்பியது.வைத்தியர்களின் விழிகள்முன்னே நோய்க்கிருமி தாக்கிய பாலகர்கள் சிறிது சிறிதாகச் செத்து மடிந்தார்கள்.இக் குழந்தைகளுக்கு "அன்ரிபாற்றிக்"(எதிர்ப்பு நுண்கிருமி : Antibiotics or antibacterials )கொடுப்பதற்கு ஒரு துளியும் ஈராக்கில் இருக்கவில்லை.

இப்போதும் , இதை நினைக்கத் தலை சுற்றுகிறது.

தற்போது ;இருசியாவுக்குப் பொருளாதாரத்தடை (The sanctions )!

இன்றைய ஆளும் வர்க்கங்கள் தத்தமது முரண்பாடுகளையும் யுத்தச் சம நிலைகளையும் அணுவால் சம நிலைப்படுத்த முனைகின்றன.உலகிலுள்ள மனிதர்கள்தம் நலன்களை மையப்படுத்திய எந்த நோக்கு நிலையும் நிதி மூலதனத்துக்கும் அதன் இலாபத்துக்கும் கிடையாது.அங்கே யுத்தங்களே மனிதர்களைக் கொல்வதற்கான கருவியாகப் பயன்படுகின்றன.இவை முற்றுமுழுதாகப் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையின் அடிப்படையான தேவையாக இருக்கிறது.

எதற்காக இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக மாறியது எதற்காக?

எல்லாம் கனிவளத்தின் "பாதுகாப்பு-எடுத்தல்-சொந்தமாக்கிக்கொள்ளல்-தடங்கலற்ற கடற்பாதை."என்று மூலப்பொருள்களுக்கான தொடர் வினைகளே இவ்யுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது.இங்கே சிரியாவுக்குள் வந்திறங்கவிருக்கும் தத்தமது இராணுவத்துக்கான செலவுகளுக்கே அகதிகளை வருத்தி உழைக்க வைக்கும் அரசியலை எவரும் புரியவே இல்லை!ஆனால் பெயரென்னவோ மீள்கட்டுமானத்துக்கான அகதிகள் பயிற்றுவிப்பு.

ஆதிக்கவாதிகள் தமது நலன்களை மெல்ல இத்தகைய வார்த்தைகளுக்கூடாகவே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
மக்கள் தொடர்ந்து யுத்தங்களால் தமது வாழ்வைப் பறிகொடுப்பதும்,அதை மீளப் பெறுவதற்கும்,உயிர்வாழும் உத்தரவாதத்துக்கும் சதா அகதி முகாங்களில் தவமிருப்பதும் இன்றைக்கு அன்றாட,இயல்பு நிலையாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரரும் சிரிய யுத்தம் மற்றும் இருசியாவுக்கெதிரான பொருளாதாரத் தாக்குதல்-யுத்தம் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொள்ளப் போகிறது.கூடவே பல இலட்சம் மக்கள் அகதியாகி உள்நாட்டிலும் வெளி நாடுகளிலுமாக அவதிப்படப் போகிறார்கள்; ஐரோப்பாவில் 60 வீதமான மக்கள் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.இதன் சூத்திரதாரி அமெரிக்கா!

அண்மைய எண்ணைக்கான யுத்தமும்,போர்த்துக்கீசிய கொலனித்துவச் சுரண்டல் போரும் அங்கோலா((Angola)என்ற எண்ணை மற்றும் வைரம் நிறைந்த நாட்டைச் சுடுகாடாக்கியுள்ளது.1992-1994 இருவருடமாக நடந்த யுத்தில்மட்டும் மூன்று இலட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.சிறார் இராணுவம், மிதிவெடிப்பலி, அகதிகள்,அவநம்பிக்கை,மற்றும் எல்லா வகைச் சமூக விரோதங்களும் மலிந்த இந்த அங்கோலாவில் ஒருவர்கூட யுத்தத்தைத் தவிர வேறெதையும் வித்தியாசமாக அநுபவிக்கவில்லை.இது போர்த்துக்கீசிய கொலித்துவத்தின் முடிவுவரைத் தொடர்ந்தது.இப்போதும் அந்த நாட்டுக்கு இதே கதைதாம்.

இங்கு நடந்த யுத்தங்களெல்லாம்(1961 இல் காலனித்துவ வாதிகளுக்கு எதிரான யுத்தமும் சேர்க்கப்பட வேண்டும்.ஏனெனில் பல் வகை காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றி அவை தமக்குள் அடிபட்டுக் கொண்டதும் வெளி நாடுகளுக்காகவே- அங்கோலா மக்களுக்கான விடுதலைக்கல்ல.) எண்ணைக் கச்சாப் பொருளான மசகு எண்ணைக்கும்,வைரத்துக்குமானதாகும்.

எவரொருவர் யுத்தத்தின் கொடுமையை உணரவேண்டுமானால் அங்கோலாவைப் பார்க்கவேண்டும்!

வீதியல் செல்லும்போது ஒவ்வொரு நான்காவது மனிதரும் ஒற்றைக்காலுடன் அல்லது கையுடன் நடப்பதைப் பார்க்கலாம்.குண்டு துளைக்காத சுவர்களோ கிடையாது.இப்படி முழுமொத்தத் தேசமும் மதிவெடிகளால் விதைக்கப்பட்டு,மனித நடமாட்டத்துக்கு உதவாத மண்ணாக அங்கோலா மாற்றப்பட்டுவிட்டுது.அதையேதாம் 21 ஆம் நூற்றாண்டில் ;ஈராக் -இலிபியா மற்றும் அவ்கானித்தான் -சிரியா என நாம் காண்கிறோம்.

இது யாரால்?

இதே ஐரோப்பிய தொழிற்சாலைகளால் ;பெரு வங்கிகளால் ;நிதி நிறுவனங்களால் ;எண்ணைக் கொம்பனிகளால் நடாத்தப்பட்ட சிறுயுத்தங்கள் தற்போது உலக மகா யுத்தத்துன்குள் நுழைகிறது - பல முறை!





90களில் அமெரிக்க உளவுப்படையானது அங்கோலாவின் எதிர் புரட்சிப்படைகளுக்குப் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிப் போலிச் சோஷலிச இராணுவத்துக்கெதிராகப் போராட வைத்தது.MPLA-அரசு எதிர்த்துப்போராடி அனைத்தையும் அடக்க முடியவில்லை.இறுதியாக ஐ.நா.வின் கூற்றுப்படி மூன்றாவது யுத்தத்துக்குக் காரணமானது யுனிற்ரா.எல்லாமாக அங்கோலா தனது மக்களை அகதியாகக் கண்டது.

இதுவரை இருபது இலட்சம் அகதிகள் உலகம் பூராகவும் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.நாடு மதி வெடிகளால் நிரம்பி வழிகிறது.சிறார்களின் கைகளில் பழைய குண்டுகள் விளையாட்டுப் பொருளாகக்கிடக்கிறது.தனிமையில் சற்று நடந்தால் மிதிவெடி வெடித்து மக்களைப் பலிகொள்கிறது.உள்நாட்டில் பல இலட்சம் மக்கள் அகதியாகிப் பட்டுணியுடன் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதே கதை மீள 21 ஆம் நூற்றாண்டில் ஈராக்கில் ;இலிபியாவில்  மற்றும் அவ்கானில் -சிரியாவில் தொடர்கதையாகிறது.

இவை ,அனைத்துக்கும் அந்நிய ஆர்வங்களின் யுத்தமே காரணமாகிறது.

கொங்கோ:

அமெரிக்க,ஐரோப்பிய மற்றும் சீனாவின் வேட்டைக்காடாகிய கொங்கோ என்ற கனிவளமிக்க இந்த ஆபிரிக்கத் தேசத்தில் இதுவரை 35 இலட்சம்(இலங்கைத் தமிழர்களின் மொத்தச் சனத்தொகை.)மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்!சிறு இனக்குழுக்களுக்குள் பற்பல போராட்டங்கள்.ஒவ்வொரு பகுதிகளையும் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸ்,ஜேர்மனி,அமெரிக்கா,என்று கூறுபோட்டு ஆளுகின்றன.பெயருக்கு ஒரு கபிலா கொங்கோ ஜனாதிபதி.கண்துடைப்புத் தேர்தல்,ஐ.நா.துருப்புகள்...என்னவொரு வேட்டைக்காடு இந்தக் கொங்கோ! கேக்கைப் பங்கிட்டதுபோன்று ஒவ்வொரு ஐரோப்பியத் தொழிற்கழகங்களும் அந்தத் தேசத்தைப் பங்கிட்டுவிட்டென.இதற்கு ஐ.நா.ஒரு சடங்கு நிகழ்த்தி ஐ.நா.துருப்புகள் என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் தத்தமது தேவைக்கேற்ற கனிவளங்களைத் தோண்டியெடுத்துத் தமது நாடுகளுக்குப் பத்திரமாக அனுப்பியபடி.தொடர்ந்து கனிவளம் மிக்க பகுதிகளைத் தத்தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நாய் அடிபாடு.


இந்தத் தேசத்துக்கு எல்லையும் இல்லை.மக்கள் தொகை பற்றிய சரியான தகவலும் இல்லை.கிட்டத்தட்ட ஐந்து கோடிப் பேர்கள் வாழ்வதாகக் கொள்ளலாம்.உகண்டா,ருவண்டா என்று வேறு இத்தேசத்தில் கனிவளங்களைத் திருடித் தமது அமெரிக்க எஜமான்களுக்குத் தள்ளியபடி. கேமா((Hema)லெண்டு(Lendu) இனக் குழுக்கள் கிழக்குக் கொங்கோவில் ஒருவரையொருவர் விழுங்கியபடி...பேய்கமேன்( Mambuti-Pygmaen) என்ற இனக்குழு மனிதர்களைப் பிடித்து உண்பதும் இந்தத்தேசத்து மனிதர்களிடம் இடம்பெறுவதுண்டு.இந்த மம்புட்டி-பேய்மேன்களின் இருதயம் இற்றுறிப்(Ituri-Region) பகுதியிலுள்ள காடுகளைப்பற்றிச் சிந்தித்து துடிப்பதுமட்மல்ல.மாறாக பெரும் சக்தியையும் மற்ற மனிதர்களுக்கு வழங்குவதாக நம்பப்பட்டு,இந்த இனக்குழுவை வேட்டையாடி,அவர்களின் இதயத்தை உண்டு உருசிப்பதும் நிகழ்கிறது.இத்தகைய மூட நம்பிக்கையோடு கொங்கோ.


அவ்வளவு பின் தங்கிய மனிதக் குழுக்கள் இங்கேதாம் வாழ்கிறார்கள்!


"...Der Osten Kongo ist wahrscheinlich der schlimmste Platz auf Erden fuer Fraun."-bedrohte Voelker.seite:15.


"கொங்கோவின் கிழக்குப் பகுதியானது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான பகுதியாகும் இப்புவிப்பரப்பில்."அச்சுறுத்தப்படும் மக்கள்.பக்கம்:15.

அதாவது கொங்கோவின் கிழக்கு மாகணத்தில் எண்பது வீதமான பெண்கள் பாலியற் பலாத்தகாரத்துக்குட்படுத்தப்பட்டு,பால்வினை நோய்களினால் சாகும் நிலையிலுள்ளார்கள்.உதாரணத்துக்கு: பெம்பாசின்;"Mouvement de la Libe´ration du Congo" போராளிகள் கடந்த 29.10.2002 ஆம் ஆண்டு 65 பெண்களையும்,சிறுமிகளையும் வல்லுறுக்குட்படுத்தினார்கள்.117 மனிதர்களைக் கொன்றார்கள்.(அதே நூல்.)இது தொடர்கதை.

இந்த நிலையில் மக்கள் பெரும் அவலத்துள் வாழ,ஐரோப்பிய-அமெரிக்க வல்லூறுகள் வளத்தைத் திருடியபடி.

கொங்கோவின் கனிவளம்தாம் இந்தத் தேசத்தின் அழிவுக்கும் காரணமாகிறது.

யுரேனியம்,

தங்கம்,

வைரம்,

கொல்ரன் எனும் கைத் தொலைபேசி உருவாகத்துக்குரிய மூலப்பொருள்.


பெற்றோலுக்கான மசகு எண்ணை.


கடந்த  காலத்துள் ஜேர்மனி 560 துருப்புகளை ஐ.நா.துருப்பெனும் போர்வையில் கொங்கோவுக்கு அனுப்பித் தனது கம்பனி(Bayer-Tochter H.C) நிலைகொண்டிருக்கும் கனிவளப்பகுதியைக் காத்து வருகிறது.பெயரென்வோ தேர்தலைக் கண்காணிக்க-பாதுகாப்பு வழங்க,என்றபடி...தற்போதும் அதே கதையுடன் சிரியாவுக்குள்  வான் வழியாக நுழைகிறது யேர்மனியத் துருப்புகள்.சிறு தேசங்களது சுயாதீனம் என்பதைப் பெரும் நிதி மூலதனப் பிசாசுகள் ஒரு பொருட்டாகவெ எடுக்கவில்லையென்பதற்கு நேற்று நடந்த சிரியாவின் சுயாதீனத்துக்கான இருசியப் பிரேரணை  யு.என்.ஓ ' வில்  அமெரிக்க -பிரான்சுக் கூட்டணியால் (  http://sputniknews.com/middleeast/20160220/1035070804/west-slams-russian-peace-resolution.html   ) தோற்கடிக்கப்பட்டது நல்லவொரு உதாரணம்.



ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, August 16, 2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015


இலங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும்"ஜனநாயகத்துக்கு " உட்பட்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலானதும் அதன் சட்டவாதக் காலமும்திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.தேர்தலையொட்டி ஓட்டுக்கட்சிகள்போடும் கோசங்களும் அவை முன்வைக்கும்  நகைப்புக்கிடமான வாதங்களும் இலங்கை மக்களது அறிதிறனைக் கேலிக்குள்ளாக்குவதாகும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவாகவெழுந்த அரசியலது விருத்தியில் புதிதாகாவெழுந்த கட்சியாதிக்கமும் அதன் நிதிப்பலமும் மரபார்ந்த ஆளும் வர்க்கத்தை மீறியவொரு புதிய ஆதிக்கப் போக்கை இக்கட்சிகளுக்குள் உருவாக்கியபின் இத்தகைய பெருங்கட்சிகள் இலங்கையின் புதிய ஆளும் வாக்கமாகவே உருவாகியுள்ள இந்தச் சூழலில் ,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு மட்டமல்லப் பெரும்பான்மையான சிங்களச் சமுகத்துக்கும் விட்டுவைத்திருக்கும்கும்இன்றைய சூழலில்இலங்கையின் முழுப் பொருளாதாரமும் மாபியா வைக்கப்பட்டவொரு கும்பலிடம் சிக்கியுள்ளது.இந்தக் கும்பலானது ஒவ்வவொரு இனத்துக்குள்ளும் ஓட்டுக்கட்சியை உருவாக்கி வைத்து ஆதிக்கத்தை நிலை நிறுத்துப்பலவகை ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.இதனால், சிங்கள - தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.நாளை நடைபெறும் தேர்தலையொட்டியெழுந்த அரசியற் கோரிக்கைகள் ,பரப்புரைகளைப் பார்த்தோமானால் அவை திட்டமிட்டு இனங்ளைக் கூறுபோட்டு கட்சியாதிக்கத்துக்கும் அதன் மாபியாப் பொருளாதாரக் கும்பலுக்கும் துணைபோகும் அந்நிய நலன்களுக்கான அரசியலையே நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருப்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.






இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.

இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.

இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற புதிய கட்சியாதிக்கமும் அதன் மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும்சிங்கள மரபார்ந்த ஆளும்வர்க்கத்தின் தெரிவானதைத் தொடர்ந்து தமது இருப்புக்காகவே பல மட்டங்களில் உந்து வினையாக்குகின்றன.



இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இது பேசும் ஜனநாயகமென்பது வெறும் வெற்றுக் கோசமாகும்.இலங்கையின் இன்றைய மாபியாப் பொருளாதார நகர்வானது ஒருபோதும்ஜனநாயகப் பண்பைக்கோரிக் கொள்ளாது.இதை உலக நிலவரத்துள் பொருத்திப் பார்த்தோமானால் மிகத் தெளிவாக இந்த மாபியப் பொருளாதார நகர்வின் வெளியைப் புரிந்கொள்ள முடியும்.

இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்தக் கட்சியாதிக்கமும்,மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும் இன்றைய இலங்னையின் அதிக ஆபத்து நிறைந்த புதிய ஆளும் வர்க்கமாகும்.இது, இலங்கையின் இறைமையைத் திட்டமிட்டு அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட முனைப்புடன் அரசியல் செய்கிறது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.இந்தத் தேர்தலையொட்டிய தமிழ்க் கட்சிகளது கோரிக்கைகள் இதைத் தாண்டிச் செல்வது குதிரைக் கொம்பே!

எனவே,இனஞ்சார் கட்சிகள் தத்தமது எல்லைகள் எவையென்பதைத் தெட்டத் தெளிவாகவே புரிந்து வைத்து அதற்கேற்பவே தேர்தற் கோரிக்கைகளை முன்வைத்து பெருங் கட்சியகளது முகவர்களாக இயங்குகிறது. இவைகளின்வழி, இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு மீளவும் தலையில் மிளகாய்தாம் அரைக்கப்படுகிறது -அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலுஞ் சரி இல்லை எந்தக் கூட்டானாலஞ்சரி இதுவே தலைவிதி.


தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் மரபார்ந்த சிங்கள ஆளும் வர்கத்தைக் கடந்த இந்தப் புதிய மாபியாப் பொருளாதாரத் தாதாக்களை  உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையை முள்ளிவாய்க்கால் வரை நடாத்தியது.





இந்த நிலையில்,சர்வதேச நீதிபரிபாலனமும், சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.தேர்தற் பரப்புரையான "போர்க் குற்ற விசாரணை " யென்பது ஒருவனையொருவன்: தலைவெட்டும் வியூகமாகும்.


இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள -தமிழ் மாபியப் பொருளாதாரத் தாதாக்களின் மற்றும்  ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.


இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுக் கட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.இதைவிட்டு ஒட்டுக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து அவர்களை வெல்ல வைப்பதால் ஒந்த மாற்றத்தையும் அவை நமக்கு வழங்கப் போவதில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,
16.08.2015

Dienstag, Februar 11, 2014

"எதுவரையில்?" தொடரும் எனது விவாதம் : 3

திரு.சிவலிங்கம் அவர்கள் எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.

இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் "இந்த"  அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது  Regime change  என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் "மக்கள்"போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் "எழுச்சி"யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் "மக்கள் திரள்"போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.

நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து  மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய "எழுச்சிகளை"நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University
of Peredeniya  ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) "Participating Faculty Members " கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer,  Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர்  ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான  Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு  என்ன சிக்கல் ?

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் "The Center for Applied Nonviolent Action and Strategies " என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.

மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்]  சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?

 இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.

 இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006)  ] அதைத்  துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.

அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம்  நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள்  அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள்  சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic)  ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்...

ப.வி.ஶ்ரீரங்கன்
10.02.2014

Samstag, Mai 19, 2012

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த"தமிழீழப் போர்",நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

"இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்",அன்றி,"அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை."அஃது,"தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை" என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்."என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.



இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

"இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்"என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது "இந்தகைய நமக்குள் இருக்கும் " லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான "ஈழப்போராட்டம்" ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய "நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற" என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த "இந்திய லொபி" நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.05.2012