Dienstag, Februar 11, 2014

"எதுவரையில்?" தொடரும் எனது விவாதம் : 3

திரு.சிவலிங்கம் அவர்கள் எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.

இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் "இந்த"  அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது  Regime change  என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் "மக்கள்"போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் "எழுச்சி"யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் "மக்கள் திரள்"போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.

நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து  மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய "எழுச்சிகளை"நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University
of Peredeniya  ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) "Participating Faculty Members " கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer,  Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர்  ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான  Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு  என்ன சிக்கல் ?

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் "The Center for Applied Nonviolent Action and Strategies " என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.

மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்]  சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?

 இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.

 இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006)  ] அதைத்  துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.

அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம்  நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள்  அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள்  சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic)  ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்...

ப.வி.ஶ்ரீரங்கன்
10.02.2014

Keine Kommentare: