Mittwoch, März 05, 2008

சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும்,
கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும்.


(கொரில்லா: நாவல்-எழுதியவர்: ஷோபா சக்தி)


'தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள் கொடுக்கப் போனதாக
சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு
மயங்கிவிடும் தாய் மனது
மடி கடித்த நினைவுகளும்
மங்கலாக வந்து போகும்
வார்த்தையின்றிச் சோர்ந்து விடும்
வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்று வரை?'



இன்று வரை கேட்கப்படும் கேள்வியிது.


ராயிரம் ஆண்டுகளாய் தாழ்தப்பட்டு 'தாழ்ந்தவர்கள்'என்று நகைப்போடு நோக்கப்பட்டவர்கள் நாம்! நமது வாழ்வுமீது மிகவும் கேவலமான நெருக்குவாரங்களை-சேறடிப்புகளை,கள்ளப்பட்டங்களை-தீண்டாமையை சுமத்திய 'மேல் சாதிய சைவ வேளாள அரசியலை' இன்று வரையும் ஒரு வடிவத்துக்குள் வைத்து அவிழ்த்துப் பார்க்க நமக்கான அரசியல் விழிப்புணர்ச்சி விஞ்ஞானபூர்வமாகக் கைகூடிவரவில்லை.அத்தகையவொரு நிலமையையேற்படுத்திய இலங்கைக் கல்வியமைப்பும்,அதன் உள்ளீடாகவிருக்கும் சாதிய நலனும் அதையெமக்குத் திட்டமிட்டே சுமத்தியது!


இந்த நிலமைக்குக் காவோலை கட்டிக் கொளுத்தப் புறப்பட்ட இயக்கமே தலித்திலக்கியம்!!(இந்தியாவில் தலித்துவச் செயற்பாட்டாளர்கள் உலக ஆதிக்கச் சக்திகளின் பினாமி அமைப்புகளுடன்(வேர்ல்ட் விசன்,இன்னபிற...)சேர்ந்தியங்குவது பற்றி எம்மிடம் பாரிய விமர்சனமுண்டு).


கொரில்லா'வின் மொழியூடான சித்தரிப்பும்,அதன் பகுப்பாய்வு மீதான நாளாந்த சமூக சீவியம் -இதன் நம்பகத்தன்மை யாவும் அதன் அநுபவ வழிபட்ட வாழ்வை வாழ்ந்து,சுமந்தவர்களாலேயே புரியக்கூடிய நிர்ப்பந்தம் இயல்பானதே. இந்த நிர்ப்பந்தத்துக்குள் நிலவுகின்ற நமது வாழ்வும்-சாவும் எங்கோவொரு மூலையில் நிகழ்ந்து,ஆரவாரமற்ற மனிதர்களால் உணரப்படாமலேயே அமிழ்ந்துவிடும் நிலையைத் தடுத்து-இதுதாம் எமது வாழ்வினது சமூக இருப்பு,இதுவே எமது கால அரசியல் சமூக-பொருளியல் வாழ்வைத் தீர்மானிக்கும் காரணிகள்,கண்ணிகள் என்பதைப் பறையடித்துச் சொல்லும் ஒரு ஊடகமாக- இயக்கமாக சோபா சக்தி என்ற எழுத்தியக்கம் கொரில்லாவை முன் வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வே,தேவையே!


இந்த 'வாழ்வு விவரணம்'தொழில்படும் தளம் இலங்கையின் தீவுப்பகுதியிலுள்ள குஞ்சன் வயலெனினும்,இஃது முழுமொத்தப் பூமிப்பந்தில் வாழ்வு மறுக்கப்பட்டு-உரிமை பறிக்கப்பட்ட உழைக்கும் மக்களனைவருக்கும் பொருந்தும்.நாம் வாழும் வாழ்வானது 'ஏதோ எமது 'அறிவற்ற வாழ்வோட்டத்தால் நிகழுமொரு போக்காகக் காட்ட முனையும் கபட ஆதிக்க சாதியவூடகங்களால் இத்தகைய எழுத்துக்கள் எப்பவும் கண்டு கொள்ளப்படா(கொரில்லா பற்றிய இத்தகைய விமர்சனங்களுட்பட).என்றபோதும் வரலாற்று இயங்கியலைப் புரிந்தவர்களுக்கு இஃதொரு தடையாகா!



மானுடநேயம், மகத்துவம்,ஜனநாயம் என்பதெல்லாம் சாதிய இந்துக்களுக்கான சமூக விழுமியமாகப் புரிந்து வைத்திருக்கும் புலம் பெயர் 'வானொலி-ஒளி,பத்திரிகைகள் இந்த எழுத்துப் படையலை தெருவோர வேப்பமரத்து முனியப்பருக்கோ அன்றி அந்தோனியாருக்கோ வைத்ததாகப் பொருட் படுத்துகிறது!!!


எமக்குள் முகிழ்த்திருக்கும் சமூகக்கோபம் இன்று நேற்றைய கதையல்ல,பல்நூறு வருடங்களாக நமது மூதாதையர்கள் கொண்டிருந்த -அநுபவித்த பகை முரணே இப்போது சமுதாய ஆவேசமாக-விஞ்ஞானத்தன்மை பெற்று யுத்த தந்திரோபாயத்திற்காக கிரமமாக வாசிப்புக்குள்ளாகிறது.நாம் நுகர்ந்த-நுகரும் ,நமது முன்னோர்கள் புழுவிலும் கேவலமாக வாழ்ந்த -சமூக வாழ்வை இப்போது நாம் கட்டுடைத்துப் பார்க்கிறோம்! அதுவே தலித்திலக்கிய முயற்சிகள் கோரியும் நிற்கின்றன,இதுவே கொரில்லாவினது இலக்கிய கோட்பாட்டு வடிவமும்.வருவது எதுவானாலும் நாம் நமது கடந்தகால வாழ்வுமீதான தார்மீகக் கோபம் குறித்து மிகக்கவனமாக இருக்கவேண்டும்!எக்காரணங்கொண்டும் இதன் வீச்சுக் குன்றக்கூடாது-தணியக்கூடாது.இதுவே நம்மை வழிநடாத்திச் செல்லும் ஊட்டச்சத்து,நமது வாழ்வை நாயிலும் கேவலமாக்கி,இழி நிலைக்கிட்ட வர்க்க-சாதிய நலன்களை,கண்ணிகளைத் தனியே மார்க்சிய வர்க்கக்கோட்பாட்டுப் புரிதலுக்குள் அடக்கிப்பார்க்க முடியாது.இன்றைய நிலையில் உழைக்கும் மக்கள் பல் வகை சாதிகளாகப் பிளவுபட்டு மிகக் கீழான நிலைமைகளுக்குள் வாழ்வு நகர்கிறது.இப்பிளவு மென்மேலும் மேற்சாதிய ஒடுக்குமுறைக்கு ஒத்திசைவாகிவிடும் நிலைவேறு.


மனிதர்களை மனிதர்கள் ஒடுக்குதல் என்பது இந்த நூற்றாண்டோடு ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும்,இதற்கொரு முற்று வைப்பதற்கான முன்னெடுப்பாக நாம் தலித்திய கருத்தமைவுகளை நோக்கியாக வேண்டும். கூடவே தலித்தியத்தை நாம் எவ்வாறு புரிகின்றோம்? ஒருசில மேட்டுக்குடி 'படிப்பாளிகள்'-மார்க்சியர்கள் அஃது பூதம்,மார்க்சியத்திற்கு விரோதமான பிற்போக்கு பிளவு வாத-முதலாளிய நலனுடன் பின்னப்பட்ட சந்தர்ப்பவாதமாகக் கருதவது தத்துவார்த்த அநுபவின்மையின் போக்கு மட்டுமல்ல கூடவே மேல் சாதிய'மேல் குல' கருதுகோளுமேயிதை இயக்கி வருகிறது.


தலித்துவ அடையாளமென்பது 'பாட்டாளி வர்க்க முன்னணிப் படை,பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரம்'என்பவற்றின் பிரதியீடாகவும்,இந்திய-இலங்கை போன்ற சாதிய ஒடுக்குமுறை நிகழும் நாடுகளுக்கு உழைக்கும் மக்களை இனம் காணும் பொதுமைப் பண்புடைய சுட்டலாகவுமிருக்கும்.உழைக்கும் மக்கள் பல் வகைச் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படும் நாடுகளுக்கு'தலித்திய வர்க்கம்,தலித்திய மொத்த அதிகாரம்,தலித்திய முன்னணிப் படை'என்பதே சாலப் பொருந்தும்! இவற்றின் புரிதலோடுதாம் நாம் சமூகமாற்றை நோக்கிப் பயணிக்கமுடியும்.தலித்துவ பண்பாடுதாம் சாதியவேர்களை அறுக்க முடியும், இஃது நடைமுறையிலுள்ள எல்லா விண்ணாணங்களையும் கேள்விக்குட்படுத்தி உடைத்தெறிவதில் நோக்கமாகவிருக்கும்.


இந்த வகைப் புரிதலோடு கொரில்லாவை முன் நிறுத்தி தலித்துவ இலக்கியக் கோட்பாடு நோக்கிய சிறு பயணம்:


இன்றைய உழைக்கும் விளிம்பு மனிதர்கள்(புலம் பெயர்ந்து மேற்குலகில் உடலுழைப்பை நல்கும் தமிழர்கள் தம்மைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் இந்த விளிம்பு மனிதர்கள் யாரெனப் புரிந்து விடும்)தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான எந்த வடிவமுமில்லை.உலகியல் வாழ்வு இதுவரையிலிருந்த நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப புதியமொந்தையில் தந்தபடி.இவைகளால் சரிந்துவிடுகின்ற பொருளியல் வாழ்வைச் செப்பனிட்டு தனது முரண்நிலைகளில் மழுப்பல்களைக் காட்ட முனைகிறது.என்றபோதும் 'உழைக்கும் வலு'வளைந்து கொடுக்கும் அடிமைப்படுத்தலுக்குள் திணிக்கப் பட்டபடி,இந்தச் சமூக சீவியம் எந்தவொரு உழைக்கம் பிரிவையும் சுதந்திரமான தனித்தன்மையுடைய உற்பத்தியுறுவுகளாகப் பார்க்க விடுவதில்லை. இந்த பொது இறுக்கமே இப்போது பல மட்டங்களிலும் (மூளை உழைப்பாளிகளிடமும்,நிர்வாகயந்திரத்திடமும்) 'முட்டாள்த் தனத்தின்வியூகம்' Strategien der dumkeit என்று விவாதிக்கப் படுகிறது, இவ்வுளவியல் ஒடுக்குமுறையென்பது ஒரு காலக்கட்டத்தின் தேவையைப் பூர்த்திப் படுத்தும் மூலதனத்தின் திட்டமிட்ட வியூகமே.இதையே முன் வைத்து புத்திஜீவ மட்டம் கருப்பொருளாக விரிந்துரைக்கிறது.


செப்டம்பர் 11'க்கு பின்பு வியூகங்கள் பல வடிவங்களில் உலா வருகிறது.இவை கணக்கிலெடுக்கப்பட்ட எல்லா அறிவார்ந்த தளங்களையும் கைப்பற்றி விட்டது. இந்த நிலைமையில் நம் அக நிலை, படைப்பாற்றல் இழந்துவிட்ட நிலையில் தோல்விப் பயத்துடன் புற நிலையை அணுகிறது.தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு எந்தச் செயல் வடிவமும் அதனிடமில்லை,இஃதுதாம் இன்றைக்கு நம்மில் பலரிடம் மலிந்து காணக்கிடக்கிறது. வர்க்க உணர்வென்பது வெறும் பொருள் சார்ந்த விசயமாக சமூக உளவியல் நிறுவப்பட்டுள்ளது,இதன் உச்சபட்ச பிரச்சாரவூடகங்களாக தொலைக்காட்சியும்,கொலிவூட் சினிமாவும்,கல்வியமைப்பும் செயற்பட சமூக நிலை சற்று சரிப்பட்டுவிட பலர் தாங்கள் இதுவரை உணர்ந்து வந்த வர்க்கவுணர்வை சமரச நிலைக்குள் அம்போவாக்கியபடி,இது குறித்து ஜேர்மனிய-அவிஸ்த்திரியன் பேராசியர் பீட்டர் வி.சிமா தனது பிரபல்யமிக்க கட்டுரையான'பின் நவீனத்துள் மானிடர்களினது பயிற்றுவிப்பு'என்ற கட்டுரையில் இப்படியெழுதுகிறார்:'பல்வகைப்பட்ட கருத்து நிலைகளை,பிரச்சனைகளை அன்றி சாதாரண தவறான புரிதல்களை விவாதிப்பதற்கு யாரால் முடியவில்லையோ அதுவே சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடு'.".Peter V.zima: wer meinungsverschiedenheiten,Konflikte,oder einfache mißverstaendnisse nicht ausdiskutieren kann,der schlaegt zu wie ein unmuendiges Kind.-strategien der dumheit,seite:25.இஃதுதாம் நாம் செய்து வரும் இன்றைய செயல். இதை உடைத்தெறிவதில்தாம் தலித்தியமும்,அதன் உணர்வுத்தளமும் வெற்றிகொள்கிறது.மனிதனை மனிதன் ஒடுக்குதல் பொருளாதார ரீதியாக மட்டும் நிலவும் ஐரோப்பிய நாடுகளில் இந்த 'வர்க்க இழப்பு' நிகழ்ந்துவிட்டது.ஆனால் இந்தியாஇலங்கை மாதிரியான சாதிய-சமூகவொடுக்குமுறை நிகழும் நாடுகளில் இந்த வர்க்கவுணர்வென்பது தலித்தியமாக-தலித்தாக முன்னிறுத்திப் போராடுவதில் வெற்றிகொண்டது வரலாற்று விந்தையல்ல.


எனவே தாம் ஒரு சோபா சக்தி விஷ்வரூபமாக தன் உயிரை நிழலாகக் கொடுத்து ஈழப்போராட்ட வரலாற்றை மக்கள் சார்ந்து வெளிப்படுத்தியது!


தலித்துவ இலக்கியத்தின் கோட்பாடு என்பதுதாம் என்ன?


படைப்பிலக்கியத்தின் ஊடாக வரலாற்றுநிகழ்வைகொடுமையை வெளிப்படுத்துவதும் அதனூடாகக் கற்றுக் கொள்வதும்,கற்பித்தலுமே.
இந் நோக்குத்தாம் படைப்பிலக்கியத்தின் கோட்பாட்டு அழகியற் கட்டுமானத்தை நிர்மாணிக்கும்.இதுதாம் நாம் எழுதுவதை கேள்விக்குட்படுத்தும்.நாம் எழுதுவது முதல்தர இலக்கியமா?,நாம் உண்மையிலேயே இலக்கிய சிருஷ்டிகளா? என்றெம்மைக் கேட்க வைக்கும்.இவ் வகைப் புரிதலற்றவர் -தான் படைப்தெல்லாம் வானத்தின் உச்சியிலுள்ளதென்றறெண்ணி விமர்சனங்களை வெறுக்க முனைவார்!தலித்துவ எழுத்துக்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும் ஆற்றலோடு அமைகிறது.


இதற்கு கொரில்லா'வே சாட்சி! சோபா சக்திக்குள் நிகழ்ந்தது என்ன? இலக்கியத்திற்காகத் தன்னை வழங்கியதா? தனது ஆன்மாவை,உயிர்ப்பை வழங்கி வரலாற்றைப் படைப்பாக்கி முன் வைத்துள்ளார்.சிந்தனையில்,படைப்பாற்றலில்,வேதனையில்,அநுபவங்களில் தன்னைத் தொலைத்து தேடுகிறார்.இந்தத் தேடுதலே தன்னைத் தான் இனங்காண வைத்ததும்,புரிதுணர்வை வளர்த்ததும்,சமுதாயத்துள் தாழ்தி வைத்திருக்கும் மானுடர்களினது -மனித விடுதலைக்காக வாழ்வைத் தேடுகிறார்,படைக்கிறார்,தலித்தவத்திற்காக-தலித்துவ விடுதலைக்காக தலித்தைத் தேடுகிறார்.தன்னைத் தானே திட்டுகிறார்,கேலி செய்கிறார், தன்னைத் தானே சாகடிக்கிறார். தனக்குத்தானே புத்துயிர் கொடுத்து தலித்துவ விடுதலையை கொண்டுவர முனைகிறார், உலகத்தோடு தோள் சேர்கிறார்!


இந்த உலகத்தோடு எப்படித் தோள் சேர்கிறார்? இவ்வுலகை நாம் எப்படி நெருங்குகிறோமோ அப்படித்தாம்.
துன்பத்தின்மூலம்,நெருக்கடிகளின் மூலம்,சாதிய-இந்துவத்தின் மூலம்,ஆதிகத்தின் மூலம்,மனிதர்களை மனிதர்கள் கொல்லும் அச்சத்தின் மூலம்,எமது அறிவின் மூலம்,உழைப்பின் மூலம்,யுத்தத்தின்மூலம், படைப்பின் மூலம் இந்த உலகு எமக்கே சொந்தம்.நமக்குத்தெரிந்த இவ்வுலகை நமக்குள் கொண்டுவர இதுவரை நமக்குள் அறிவாற்றல் கைகூடிவரவில்லை,தலித்துவ மக்ளாகிய எமக்கு ,எம் வாழ்வை -அற்பணிப்பை கண் முன் கொண்டு வந்து காட்சிப் படுத்தும் படைப்பு நிலை இப்போது எம்மிடமுள்ளது.நாம் நம்மைத் தெரிவு செய்கிறோம்,தெரிவு செய்வதினூடே நமது இருப்பு,நமது விடுதலையோடு சம்பந்தப்படுவதை உணர்கிறோம்.நமக்கான உலகை நாம் சிருஷ்டித்து அதனோடு கலத்தல் நிகழ்ந்து விடுகிறது! இதைக் 'கொரில்லா' மிகவும் துல்லியமாகச் செய்து விடுகிறது.


இவ் வகைக் கலத்தலின் மூலம் கொரில்லா நம்மோடு உண்மை பேசுகிறது,பேருண்மையைக் இக் கலத்தலின்மூலம் அது தந்து விடுகிறது.கொரில்லா நம்மைப் பற்றிய குறைகளைத் தயவு-தாட்சன்யமின்றி நமக்குப் பகிரங்கப் படுத்துகிறது,இதில் நமக்கு வெட்கமேதுமில்லை.இதற்காக நாம் தீக்குளிக்க வேண்டியதில்லை.நமது குறை இன்னொருவரின் குறையின் தொடர்ச்சியாகவோ அல்லது நீட்சியாவோ தொடர்கிறது,இவ் வண்ணமே மூதாதையர்களின் தொடர்ச்சி நமது தொடராகவும் இணைகிறது.எம் குறைகளைப் பிரகடனப் படுத்துவதன் மூலம் நாம் எத்தனையோ நபர்களைப் பிரகடனப்படுத்துகிறோம்,எம்மை நாமே திருத்த சிலுவை சுமக்கிறார் இந்த சோபா சக்தி!எமது விடுதலையை நாம் சாதிக்க வேண்டுமானால் நாம் செத்தாக வேண்டும்.சாதியின் பெயரால்,இயகத்தின் பெயரால்,கள்வனெனும் பெயரால்,துரோகியின் பெயரால் இந்தச் சாவு நம்மை நெருங்கிய படியே!! இந்தச் 'சாவு'தாம் கொரில்லாவைப் படைப்பிலக்கிய நிலைக்குள் உயர்த்தி,உந்தித் தள்ளுகிறது.


எமது வாழ்வை விபரிக்க 'நாம் எப்படியெல்லாம் செத்தோம்,நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு-அவமானப்படுத்தப்பட்டார்கள்,எங்கள் வாழ்வை எப்படியெல்லாம் இழந்தோம்'விளக்க-பொருள்தேட கொரில்லா முனைகிறது.இதுவேதாம் இன்றைய தலித்துவக்கோட்பாடு-தலித்திலக்கியக்கோட்பாடு-இதுவே படைப்பிலக்கிய அழகியலும் கூட! இலங்கையின் வரலாற்றில் தமிழ் பேசும் மக்களில் கணிசமான பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக தான் சிலுவை சுமந்து,செத்து-உயிர்த்து,மீளவும் தன் உயிரையே நிழலாக விரித்து,ஈழத்து ச் சாதிய ஒடுக்குமுறை வரலாற்றின் முகத்தில் காறீ உமிழ்கிறார்,உதைக்கிறார்.இதுவே மனித நேயமும்கூட.


கொரில்லா மகத்தான நாவலாகவிருப்பதற்கான காரணம் :அஃது வரலாற்றின் ஒருபகுதி,ஈழப்போரின் வரலாறை அது தனக்குள் பகுதியாகவும்-முழுமையாகவும் பிரதிபலிக்கிறது.மனிதர்களாகிய நாம் வரலாற்றின் ஓட்டத்தில் மிதக்கின்றோம்,வரலாற்றோட்டத்தை இயக்கிய படி.எமது செயல்களை,சிந்தனைகள் வரலாற்றோடு பிணைத்துப் பார்ப்பது சாத்தியமே!இதைச் செய் நேர்த்தியோடு கொரில்லா செய்து முடிக்கிறது.


கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்ந்தும்-தொடராமலும் ,பின்னிப்பிணைந்தும்,ஆழ்ந்தும் -ஒடுங்கியும் வரலாற்றில் முன்னும் பின்னும் செயற்படுகிறது.இங்கு சோபா சக்தி மிகப்பெரிய சோதனையை மிக லாவகமாகச் செய்கிறார்.அதாவது பாத்திரங்களை கால இடச்சூழலில் வைத்துப்பார்ப்பதும்,நிகழ்வை விபரிப்பதுமே அஃது! காலங்கடந்த (காலத்தை விட்டு-வெளியில்,காலத்துக்குள் நிலவாத) கருத்துரீதியான மனிதர்களைக் காட்டும் கபட இலக்கியச்சூழலுக்குள் கடப்பாரை கொண்டு வரலாற்றுச்சூழலுக்கேற்ற மனிதர்களை அவர்தம் நிஜ முகங்களோடு படைக்கின்ற இலக்கிய நாணயம் இந்தச் சோபா சக்தியிடமே நாம் காணக்கூடியதாக இருக்கிறது.மனிதர்களை-அவர்தம் வாழ்வை விரிந்த பின்னணியில் வைத்துப்பார்ப்பதும்,பொதுவயப் படுத்துவதும்,பின்பு அதையே பிரித்துப்பார்த்து சாதிய ஒடுக்குமுறைக்குள் நிலவும் சங்கதிகளை விபரிப்பதும்தாம் தலித்தவ இலக்கியக் கொள்கைஅழகியற் கோட்பாடாகும்,இதைச் சேபா சக்தி கைநேர்த்தியுடன் கச்சிதமாக் கையாளுகிறார்.


தற்காலத்துக்குள் வாழும் நாம், வரலாற்றின் இறந்த காலத்தை தற்காலத்திற்கூடாகப் பிரதிபலிக்கும் ஆபத்தையறிவோம்.இந்த ஆபத்தை எப்படியிந்தக் கொரில்லா நாவல் வென்றது? இஃது ஆச்சரியமானது! ஆனால் படைப்பாளியின் பின்னணி கடந்த காலத்தை தானே அநுபவப்பட்டு-தானே பிரதிமை செய்ததால் இஃது வெற்றியாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.எனவேதாம் கொரில்லாவின் எந்தப்பாத்திரமானாலும் வரலாற்றில் விரிகிறார்கள்,சம்பவங்கள்-பிரச்சனைகள் யாவுமே அந்தந்த வரலாற்றுச் சு10ழலை நமக்கு விபரிக்கிறது.எந்தப் பகுதியை வாசித்தாலும் அஃது வரலாற்றில் ஒரு பகுதியாக-துண்டம்மாக ,பிரதியாகப் பிரதிபலிக்கிறது.


பாத்திர வளர்ச்சியென்பது மிகவும் அசாதாரண விஷயமாகவுள்ள தமிழ் இலக்கியச் சூழலில், கொரில்லா மிகவும் சாதாரணமாகவே அவ் வளர்ச்சியை எட்டிவிடுகிறது.


கீர்கேகோர்ட் Kirrkegaard கூறுகிறார்:'Man muss die irdische Hoffnung abtoeten,dann erst rettet man sich in die wahre Hoffnung"-Die Reinheit des Herzens.தமிழில்: மனிதர்கள் உலகத்தின் மீதான நம்பிக்கைகளை கட்டாயம் கொன்று விட வேண்டும்.பின்பு உண்மையான நம்பிக்கைகளை காப்பாற்றி விட முடியும்.


சோபா சக்தி கற்பனையான நம்பிக்கைகளைக் கொன்று விட்டார்.மணலில் கயிறு திரித்து வானத்தில் ஊஞ்சல் கட்டும் நோக்கம் அவருக்கில்லை.எனவே கொரில்லா வரலாற்று விவரண நாவலாகவும்,படைப்பிலக்கியத்துள் தலித்துவ அழகியலாகவும்-கோட்பாடாகவும் முகிழ்க்;கிறது!
ஈழ மக்களின் வாழ்வும் சாவும் போலிப் பிரச்சார ஊடகங்களால் உருமாற்றப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு விட்ட நிலையில் கொரில்லாவின் பாத்திரங்கள் நம்மோடு அந்த உண்மைகளைப் பேசுகின்றன.


வில்லியம் சேக்ஸ்பியரின் William Shakespeare கோம்லேட் நாடகத்தில்:'.Gott hat euch ein Gesicht gegeben, und ihr macht euch ein andres."-Romeo und Julia;Othelo;Hamlet seite:244.'இறைவன் உங்களுக்கு ஒரு முகத்தை வழங்கினார்,நீங்களோ உங்களுக்கு வேறொன்றைச் செய்தீர்கள்'.என்று கோம் லேட் பாத்திரம் வழியாக சேக்ஸ்பியர் கூறுகிறார்.


நமக்கு நாம் எத்தனை முகங்களைப் படைத்துள்ளோம்? இந்த முகங்களை சோபா சக்தி கொரில்லாவினூடே நமக்கு விபரிக்கிறார்.இறுதியாகக் கொரில்லா பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால் 'முழுமையானது என்பது பொய்யானது.'


ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்,
ஜேர்மனி.

Montag, März 03, 2008

ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.

சோபா சக்தி: 'ம்'

>>>>>ஷோபா சக்தி,படங்காட்டல்,பல்லுக் குற்றல்,மூக்கிடை நுழைத்தல்<<<<<


//இந்த நாவல் முன்வைத்திருக்கும் 'மனித அவலம்' அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம்.இதுவே முழுமையாகிவிடாது.இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது.'ம்' எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும்,படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது.இதை விளங்கிக்கொள்வதும் அதனூடாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும்.இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை.மாறாகத் தன் ஆயுதமானது 'அவலத்தின்'; உட்சுற்றில் நிகழும்,உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது.இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான்.நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ-அதிகாரமோ இங்கு கோலாச்சாது,மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது! இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா?இதை வரலாறே தீர்மானிக்கும்!அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:


>>>(நிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத்
தேடுதல்...பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் அதன் பின் தன்னையே
காரணமாக்கம் நேசகுமாரன்.இங்கு இந்த நாவல் , செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில்
நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை-அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல
முடியாதென்கிறது.)
ஆம்!(...)ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல
முடியும்?ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,துரோகத்தையும் தமிழீழ
மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும்?அவளின் மடியில் தவழ்ந்து அவளையே
'கற்பழித்துக்'கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக்
காரணமாகிறோம்.நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான்,அவனைக்
கொண்டுபோய்ச் சாத்துகிற 'சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங்' எப்போது இந்தக்
கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது?<<<
//



அதிகாரம் கோலாச்சும்போது 'ம்' மக்கள் மொழியாகும்!


//'............', ம்.... ஆமா,ஓம்-ஓம்! ம்.....//



இது?



(1)



கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது என் வாழ்தலாகும்.இதற்கு மேலானவொரு சாத்தியத்தை இந்த நூற்றாண்டில் மானுட வாழ்வு கோரி நிற்பது அதன் சாத்தியப்பாடற்ற அரைகுறை உணர்வெழிச்சியைத் தவிர வேறில்லை.இந்த நிமிஷத்தில் இந்தச் சோபா சக்தியினது 'ம்' மீதான மீள் வாழ்ந்து பார்த்தலானது விட்டுச்சென்ற பரம்பரையின் வாழ்தல் தொடாச்;சிதாம். ஒரு பாறாங்கல்லைச் சற்று இலாவகமாகக் தலையில் காவிக்கொள்கிறேன்!இந்தக் கல்லை அசட்டையாக இறக்கமுடியாது.அங்ஙனம் முயன்றால் நிச்சியம் என் கால்கள் சிதறிவிடுதுல் தடுக்க முடியாது.எனது நிலைமையில் இந்தப் பாறாங்கல்'ம்'சொல்லும் சோபா சக்தியேதாம்.இந்தப் புனைவானதின் வாழ்தல் நமது அரசியல் பொருளியல் வாழ்வோடு மிக நெருங்கி,அந்த உளவிலைச் சொல்வதாகக் கற்பனையில் தவிக்க முனையும் வாசகர்கள்- என்னிடத்தில் அந்தக் கற்பனை கிடையாது.ஏதோவொரு வகையில் அந்தக் கதைகளின் நடுவே நான் உலாவருகிறேன்.எனது வாழ்வும்,சாவும் நிர்ணயிக்கப்பட்ட நாட்களைக் காண முனையும் ஒரு நகலெடுப்பாக இந்துக் குறிப்பை வளர்த்துச் செல்வதில்தாம் எனது உணர்வானது குவிந்திருக்கிறது.



இந்நாவல் குறித்தான மிதிப்பீடு,விமர்சனம் என்பதற்கப்பால்-எமது வாழ்வின் அநுபவத்தை மீளவும் மீட்டுப்பார்த்தலானது இதன் வாயிலான சொல் மொழியைப் புரிந்துகொள்வதற்கான நகர்வாகவும்,இந்த நாவலை- 'ம்' என்ற,இந்த நாவலை,மிக உன்னத்தோடு உருவகப்படுத்திக்கொள்வதற்கு ஒருவர் முனைவரென்றால்,இந்த உருவகப்படுத்தலோடு'ம்' நாவலூடாக விரிந்து வருகின்ற பாத்திரங்களோடு அவர் வாழ முற்படுகிறார்.அப்போ இந்தப் பாத்திரங்கள் எமக்கு முன்னாலே தமது அநுபவங்களைச் சுட்டிகளாகக் குறியீடாக விரித்துக் கொள்கின்றனர்.மனித வாழ்வு,அநுபவப்பட்ட வாழ்விலிருந்து தன்னைச் சதா மறுவுருவாக்ஞ் செய்து கொண்டே ஒரு திசைவழி நோக்கியவொரு பயணத்தைச் செய்கிறது.இந்தப்பயணிப்பு இருவகைப்பட்ட அலகுகளையுடையது.இது மனிதப் படைப்பாளுமையை வேண்டி அதனூடாக நடந்து செல்கின்றபோது,மிக ஆரோக்கியமான மனித,சமுதாயத்தின் வளர்ச்சியையும்-பண்பாட்டு வளர்ச்சியையும் அது ஆரோக்கியமான முறையில் உந்தித் தள்ளுகிறது.இன்னொரு புறத்தில் அதன் இரண்டாவது அலகலானது சமூகத்தின் படைப்பாளுமை அனைத்தையும் ஒருங்கே ஒரு திசைவழியில் குவித்து,அது ஏதோவொரு கோசத்துக்காக அல்லது ஒரு இனத்தின் தேவைக்காக-குறிப்பிட்ட இனத்துக்குள் இருக்கும் ஆளுமைமிக்கவர்களுக்காக,ஆளும் வர்க்கமாக அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்காக அது குவிக்கப்படுமென்றால் அவர்களது நலனுக்காக-அவர்களது இருப்புக்காக,எண்ணங்களின் விருப்புறுதியோடு மக்களைப் பொய்யைச் சொல்லிக் கொல்வதற்குத் தயாராகுமென்பதற்கு நமது ஈழம் என்ற கோசம் மிகவுண்மையாக,யதார்த்தமான நிதர்சனத்தோடு எம் மக்கள் முன் விரிகிறது.



இது எமது வாழ்வு. இதுவரை நாம் அநுபவித்த துயரக்கொடுமையை,துன்பக் கொடுமையை-வாழ்வியல் அழிவுகளை,சமூகச்சிதறலை-சமூகசீவியத்தின் உடைவைச் சொல்கின்றவொரு படைப்பாக,நாம் வாழ்ந்த-வாழும் வாழ்வை,அதன் நிசத் தன்மையோடு ,குரூரம் நிறைந்த போராட்ட வாழ்வை,தோழமையைத் துண்டமாகத் தறித்த கோழைத் தனத்தை,அதன் மொழியூடே மனித அழிவைச் சொல்லுதல்'ம்'இனது மனிதக் கோசமாகவும் ,கலைப் பண்பாகவும் எம் முன் விரிந்து காட்சிப்படுத்துகிறதென்று கூறிக்கொள்வதுதாம் என்னைப் பொருத்தவரை சாத்தியம்.



இந்தப் பார்வை கலைத்துவம் நிறைந்தது!'............'கலைத்துவம் என்பதன் பொருள்?... ஏதோவொரு நிகழ்வின் மீதான இரசனையின் பக்கவிளைவாக அதையெடுத்தக்கொண்டால்,நாம் பொறுப்பற்ற இரசனையின் ஜீவிகளாக பிரதிபலித்தல் நிகழும்.இது முடிவற்றவொரு இருள்சூழ்ந்த பொய்மைக்குள் நம்மைத் தள்ளிவிடும்.ஆதலால் கலைத்துவமென்பது மனிதவொழுங்கமைப்பின் மீதான 'விவாதமாக-கருத்தாடலாக-பெருகதையாடலாக எடுத்துக்கொள்தல்,அதன் பக்கச் சார்பான இயல்புக்கு சாத்தியமான வீரியத்தைக் கொடுத்தபடியே வேறொரு தளத்துக்கு(சமூகமாற்றுக்கு)விவாதத்தை நகர்த்தும்.என்றபோதும் இதன் இயல்பான குணவியல்பானது கருத்துமுதல் வாதச் சகதிக்குள் கட்டுண்டபடியே வெளிவருதல்,அதை எவ்வளவுக்கெவ்வளவு முடமாக்க முனைகிறோமோ-அவ்வளவுக்கவ்வளவு இயல்புக்கு மாறான'பண்பு' மாற்றத்தைக் கோரி நிற்கும்!நாமெதை, நமக்கு முக்கியமற்றதாகக் கருதுகிறோமோ-அது மற்றவர்களுக்கு மிக,மிக முக்கியமாக விரிவது,வெறும் அறிவு ,உணர்ச்சி எனும் இரு கோடுகளுக்குள் காணும் விடையமாகக் கொள்ள முடியாது.இது ஷோபா சக்தியின் கலைத்துவ மொழிக்கும் பொருந்தும்.இங்குதாம் நாம் தோழர் இரயாகரனிடமிருந்து விலகிச் சற்று வேறொரு கோணத்தில் இந்த நாவலை அணுகப் போகிறோம்.


இந்த நாவல் குறித்த பல மதிப்பீடுகள் கட்சி அரசியலாள ஆய்வாளர்களால்,இயக்க-தேசிவாத மாயைக்குட்பட்ட வாசகர்களால் சமூகத்தின் கடைக்கோடி நிலைக்கு உந்தித் தள்ள முனைதல் கலைத்துவ,இலக்கிய விஞ்ஞானத் தன்மையைப் புரியாத கையாலாகாத் தன்மையைக் காட்டி நிற்பதே.இங்ஙனம் நமது அரசியல் கையாலாகத்தனத்தை மூடி மறைக்க முனையும் நாம் இவ் வலுப்பெற்ற உணர்வு வெளியைத்தாண்ட முனைதல்தாம் இங்கெம்மைக் காக்குமென்பதைப் புரிதல் அவசியம்.


(2)

இதுவொரு வதையைத் தரும் காலம்.மனிதர்களின் வாழ்வானது புனைவுகளுக்குள் சிக்குண்டு,புனைவுகளையே வாழ்வாய் வாழ்ந்து துய்க்கும் நிலையாக இன்றைய 21ஆம் நூற்றாண்டை உலகம் தயாரித்தாகிவிட்டது.இந்தப் பொய்யுலகானது மனித உறவுகளைத் தனது பெரு வாத்தகப் பயன்பாட்டுக்கான சங்கதிகளாக்கியபின் எந்தவொரு படைப்புச் சூழலும் மனதர்களை நோக்கிய-மையப்படுத்திய முறைமைகளில் மையங் கொள்ளாது, பொருட் குவிப்பின் வியூகத்துக்கானதாகவே உருவாகிறது.இந்தப் புள்ளியல்தாம் மனிதம் அழிகிறது!இங்கே மானிடர்களின் தேவைகளானது அதிகார மையங்களுக்குக் கட்டுப்படும்-அவற்றைச் செயல் முறைமைகளின் உளப்பூர்வமாக உள்வாங்கப்படும் நெறியாக உருவகப்படுத்தப் படுகிறது.இது சர்வ வல்லமையுள்ள கருத்தியலாக நிறுவப்பட்டுள்ளது.இந்தவொரு மனித்துவ முடக்கமானது இதுவரை ஆரோக்கியமானதாக நம்ப வைக்கப்படுகிறது.இன்றைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனைகளும் சரி அல்லது மனித்துவத்துக்கான
amnesty International கூவிக்கொள்ளும்-எழுதிக்கொள்ளும் குறிப்புக்களும் சரி மனிதவிகாரங்களையின்னும் ஆழமாக்குகின்றன.இவற்றுக்கப்பால் எந்தக் கருத்தியலையும் இன்றைய ஆளும் வர்க்கங்கள் விட்டுவைக்கவில்லை.புனைவுக்கும் நிகழ்வுக்குமான தர்க்கவாத அறிவானது சமூகத்தைக் கருத்தியல் தளத்திலிருந்து தாக்குகிறது.அதன் உள்வயப்பட்ட அறிவுவாத ஐரோப்பிய எதிர்ப்பியக்கக் கூறுகள்கூட தமதுவரையில் சில ஆத்மீகத் தேவைகளைக் கோரிக்கையோடும்,கொடிபிடித்தலுடன் பெறத் துடிக்கின்ற இந்தச் சூழலின் ஒரு முனையில் 'ம்' நாவலோடு சோபா சக்தி இந்த உலகத்தை எதிர்கொள்ள முனைகிறார்.





ஈழத்தின் அரசியலையும்,மக்கள் சமூகத்தின் உள்ளார்ந்த உளவியற்றளத்தையும் இருவேறு கூறுகளாக்கருத முடியாது.இரண்டுமே படுபிற்போக்குவாத சமுதாயத்தின் வெளிப்பாடுகள்.இதன் முதுகினிலிருந்துகொண்டு மனிதவதைகள் குறித்து ஒரு சராசரி மனிதன் தன் அகம் திறந்து பேசுகிறான்.இவனிடம் ஆழ்ந்த கோட்பாட்டு அறிவையொருவர் தேடுவாரானால் தேடுபவரின் கோட்பாட்டறிவே சந்தேகமானது.இங்கு படைப்பென்பது அராஜகத்துக்கெதிரானவொரு போர்ப்பரணியைக் கட்டி நிற்க்கவில்லை.மாறாக அராஜகத்தை எதிர்கொள்ள முடியாத இயலாமையைச் சொல்கிறது.தான் உயிர்வாழ்வதற்காகத் தன் நண்பனை,தன் எதிரியை,உறவுகளை அராஜகத்துக்குக் காட்டிக் கொடுக்கும் உயிர்த்திருக்க முனையும் ஒருவனும்,எந்தத் தலையுருண்டாலென்ன தனது நலத்துக்காக அனைத்தையும் வளைத்துப்போட முனையும் தந்தையும் ,தமிழ் மக்களின் வாழ்வில் தனிநாடொன்று உருவாகுமானால் அதில் சுதந்திரமானவொரு வாழ்வு கிட்டுமென்ற பெருவிருப்பால் மக்கள் தமது உடமைகளைமட்டுமல்ல சரீரப் பங்களிப்புக் கூடச்செய்யும் பேராற்றலை ஞானசீலியாக் காணுவதும்-அதற்காகச் சிறை வாழ்வு, பாலியல் வதை,சித்திரவதையென மனித வதைக்குள்ளாகும் சமூக சீவியத்தை மக்கள் எதிர்கொண்டேயாகவேண்டிய அரசியற் பொருளியற் சூழலையுருவாக்கிய கட்சி அரசியலையும் அதன் பின்னாலுள்ள வர்க்க அரசியலையும்,நலனையும் இதனூடாகத் தோன்றிய ஆயுதக் குழுக்களின் வளர்ச்சியானது பல்வேறுபட்ட அரச-ஆதிக்க ஜந்திரகளாகி மக்களைக் கொல்லும் இழி நிலையைச் சொல்லும் ஒரு பிரதியாகிறது 'ம்'.இது மக்களின் கையலாக மொழி,மக்களின் பெரு விருப்பான உயிர்த்திருத்தலே இல்லாது ஒழிக்கப்பட்டவொரு சூழலில் மக்கள் அதற்காக இரந்து நிற்கும் இன்றைய அவலத்தைச் சொல்வதற்கானவொரு முனைப்பில் நிகழ்வுகளைப் புனைவதானது தன்னளவில் சமூகத்தின் வழிப்புணர்வோடு மேலெழும் சமுதாய ஆவேசத்தின் சிறுபொறிதாம் சோபா சக்தி.



மனிதம் முட்டுச் சந்திக்கு வந்துவிட்டது.இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் காலனித்துவ நாடுகளில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.இது இஸ்லாமியர்களாவிருந்தால் தமிழருக்குத் தொப்பி பிரட்டிகளாகவும்-தமிழர்களாகவிருந்தால் சிங்களருக்கு பறத்தமிழன் என்பதுமாய் இனத்துவேசிப்பு கொலுவாச்சி இனங்களை முட்டிமோத வைக்கும் நிலவுடமைக் கருத்துருவாக்கமாக விரிந்துகிடக்கிறது.



மனிதாபிமானமெனும் வர்ணம் பூசிய பூர்ஷ்சுவாக கருத்தானது தன்னளவில் மனிதர்களை ,அவர்களது உரிமைகளைத் தமது வர்க்க இருப்புக்காக புதிய பல பாணியிலான போக்குகளுக்குள் சிதைத்துக்கொள்வதில் முந்திக்கொள்கிறது.இதைச் சோபா சக்தி மிகத் தெளிவாகத் தனது நாவலில் பாத்திரங்களின் வெளிகளில் நிறுவ முனைகிறார்.பக்கிரிக்கும்,நேசகுமாருக்குமான ஒவ்வொரு உரையாடலும் இதைச் சுட்டிக்கொள்கிறது.இலங்கைச் சிங்களச் சமுதாயமானது இன்னும் நிலவுடமைச் சமுதாயமாகவே சாரம்ஸ்சத்தில் நிலவுகிறது. காலனித்துவத்தால் இறக்குமதி செய்யப்பட்ட அரசமுதலாளியமானது மக்களின் வாழ்வை அதன் கடைக்கோடி நிலைக்குள் தள்ளியதில் போய்முடிந்துள்ளது.தரகு முதலாளிய வர்க்கத்தோடு ஏற்பட்ட சமரசங்கள் அதைக்காக்கவும்,வெல்லவவும் மதவாதக் கட்டுமானங்களைப் புதிய பாணியிலுருவாக்கிப் புத்த சியோனிஸத் தன்மையிலானவொரு கருத்தியல் மேலாண்மையை இலங்கையில் உருவாக்கிக்கொள்ள முயன்ற நிலவுடமை வர்க்கமானது இனங்களாகப் பிளந்துகிடக்கும் தமிழ்-சிங்கள மக்களை தத்தமது இருப்புக்காகக் காவு கொள்ளும் நெறியாண்மையைக் கலாச்சாரமட்டத்தில் நிறுவுகிறது.இதுவே பாரிய மனித வதைகளைக் கற்பனைக்கெட்டாத வன் கொடுமைகளுடாய்ச் செய்து முடிக்கிறது.இது இரண்டாவது மகாயுத்தத்தில் கிட்லரால் செய்யப்பட்டபோக்கோடு சம்பந்தப்பட்டது.இங்கு எல்லோருமே சிறையதிகாரி உடுகம் பொல போலவே வதைகளைச் செய்கிறார்கள் .இவர்களது பார்வையில் கட்சியமைப்பு-தாம் விரும்பும்,மதிக்கும் தலைவர்-தலைமைக்காக-விசுவாசத்துக்காக எந்தக் கொலைகளையும்,எதன்பொருட்டும் செய்யத் தாயர்படுத்தப் பட்டுள்ளார்கள்.இங்கு மனிதம் தரையில் குற்றுயுராய்க் கிடக்கிறது.'ம்' அதைப் பாரிய சோகத்தோடு சொல்ல முனைகிறது.இதுதாம் இன்றைய இடர்மிகு நமது மொழியாக சமூகத்தின் அடிக்கட்டுமானத்துக்கீழ் நிலவுகிறது.இதையெந்த விடுதலை,உரிமைக் கோசத்தாலும் மறைத்துவிடத் துடிக்கும் தமிழ்த் தரகு முதலாளியம் தன்னைக் கொலைக்காரப் படையாக விருத்திக்கிட்டுச் செல்கிறது.இது தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயகவுரிமைகளையும் தனது கையிலெடுத்து வைத்திருக்கிறது.மக்களின் அன்றாட சமூக இயக்கத்தையே அது கட்டுப்படுத்துகின்ற வல்லமையை ஆயுதத்துக்கூடாக நிறுவியுள்ளது.இங்கு பெயரளவிலான பூர்ச்சுவா ஜனநாயத் தன்மைகூட இல்லாதொழிக்கப் பட்டு அராஜகத்தை அவசியமான போராட்ட வியூகமாக் கருத்தியற்றளத்தில் பரப்புரையாக்கப்படுகிறது.இதைத் தகர்க்கும் ஒரு பெரிய காரியத்தை முன்னெடுப்பதே சோபா சக்தியின் படைப்பாளுமையாகவும் இருக்கலாம்!



வெலிக்கடைச்சிறையில் வருத்தப்பட்டுக் கொல்லப்பட்டவுயிர்களும் அதன்பின்பு தாய்மண்ணிலேயே குதறப்படும் உயிர்களும் தமிழ்பேசுவதால் மட்டுமே கொல்லப்படுவதாக் கருதினால் அது தப்பானது.இங்கு ஒவ்வொரு குழுவினது நலன்களும் முட்டிமோதிக்கொள்கிறது.இந்த முரண்பாடுதாம் தரகு முதலாளியத்துக்கும்,நிலவுடமைச்சமுதாயத்துக்குமான முரண்பாடாக வெளிப்படுகிறது.சிங்களச் சமுதாயமானது நிலவுடமைச் சமுதாயக்கட்டுப்கோப்பைப் பேணமுனைவதும்,தமிழ்ச் சமுதாயமானது தரகு முதலாளியமாகத் தன்னைத் தகவமைத்துக் கப்பல் கட்டுவதும்,கடல்கடந்து வியாபாரஞ் செய்வதும் இலங்கை மக்களினங்களில் மிகப் பெரும் முரண்பாடாகத் தோற்றமுறுகிறது.இதுவே இனப்படுகொலைகளைச் செய்வதும் அதனுடாகத் தமிழ், மக்களை வருத்தும் ஆயுதக்குழுக்களாகத் தமிழ்ச் சமூகத்தில் வேறொரு வகையில் தோற்றமுறுகிறது!


Dr. phil. Dr. med. Josef Mengele,

>>geboren 1911 in Günzburg (Bayern), stammte aus einer ortsansässigen
Industriellenfamilie und trat als Zwanzigjähriger dem Stahlhelm bei, einer
militanten nationalistischen Organisation, in der sich Soldaten aus dem Ersten
Weltkrieg gesammelt hatten. 1934 wechselte er zur SA und bewarb sich 1937 um die
Mitgliedschaft in der NSDAP sowie später in der SS. <<


மனிதர்களைத் தினமும் வருத்துவதையும்,அவர்களின் மனச் சிதைப்புகளையும்,தீராத சோகத்தையும்,வேதனைகளையும்,வடுக்களையும் சொல்வதற்காகச் சோபா சக்தி எடுத்துக்கொண்ட சொல்நெறி மொழியானது மிகவும் பின் தங்கப்பட்டவொரு இனத்தின் மொழி.அது நிகழ்வுக்கும் ,புனைவுக்குமான நிஷத்தன்மைகளைத் தர்கத்துக்குள் இழந்து போகும் ஒரு மொழியாக மாறாலாம்.எனினும் இந்த நெட்டூரங்கள் அடித்துச் செல்ல முடியாதுவுண்மைகள்.இவை குறித்தான சமூகப் பார்வையான இன்னொரு மொழியில் பேசப்படுவதற்கான எந்த நிபந்தனையும் இந்தச் சமூகத்துள் இதுவரை வெளிவராதிருக்கும் ஒரு சூழலில் இந்த நாவலது மொழி அவசித்தோடான அவதாரமாகவே உருப்பெறுகிறது.இதைமீறியவொரு எந்தக் கொம்பு முளைத்த மொழியும்,படைப்பும் தமிழ்ச் சூழலில் முகிழ்க முடியாது.இது அந்தச் சமூதாயத்தில் விருத்தியிலிருந்தே எழுகிறது.இங்கு பாத்திரங்கள் சுதந்திரமாக உலாவருவதற்காகப் பொய்யுருவாகவில்லை.நிலவுகின்ற மகாக் கொடுமையான வாழ்சூழலிருந்தே பாத்திரங்கள் நம்முன் விரிகிறர்hகள்.அவர்கள் நம்மோடு தமது வாழ்வின் கையாலாக சமூக இருப்பைத் தமது சொந்த முகங்களோடு சொல்கிறார்கள்.இங்கு ஜேர்மனியப் படைப்பாளி குன்ரர் கிராஸ் அவர்களின் சமீபத்து நாவலான Im Krebsgang நல்லதொரு உதாரணமாகக் கொள்ளலாம்.உலகமாகயுத்தத்தால் அள்ளுண்டுபோன பாசிச்சூழலுக்கு முகங் கொடுக்க முடியாத மக்கள் உயிர்வாழப் போராடும் கப்பல் பயணமானது கிழக்குக் கடலில் மூழ்கடிக்கப்பட்ட வரலாறை அதன் மொழியில் சொல்லும் அந்தப் படைப்பானது 'ம்' நாவல் பேசும் மொழியுடன் நெருங்கிவருகிறது.
»Warum erst jetzt?« sagte jemand, der nicht ich bin. Weil Mutter mir immer wieder ... Weil ich wie damals, als der Schrei überm Wasser lag, schreien wollte, aber nicht konnte ... Weil die Wahrheit kaum mehr als drei Zeilen ... Weil jetzt erst ...Noch haben die Wörter Schwierigkeiten mit mir. -Gueter Grass.


(3)


கொடுமைகளைச் சுமக்கும் மனிதர்கள் தமது வலியை,வேதேனையைச் சொல்லத்தக்க நேரம் சில வேளைகளில் பின்தள்ளிப் போவதும் அந்த வலியைச் சிலவேளை அடுத்த தலைமுறைதாம் பேசும் நிலையும் வருவதைக் காணுவதற்கு திரு.குன்ரர் கிராசினது கூற்றுச் சரியாகவிருக்கிறது.ஒரு தலைமுறை மிக்கொடூரமாக யுத்தஞ்செய்து தனது இனத்தையே அழிக்கிறது.அதனால் அந்த இனத்து மக்கள் கடல் கடந்து உயிர் தப்ப முனைகையிலும் அழிவு அவர்கள் தலையில் குண்டுகளாக இறங்குகிறது!ஓ ஆண்டவனே!நம் தலைவதியைப் பார்த்தியா?இப்படிக் கத்திய அந்த வலி, மரணத்தையும் கொடூரமான மொழியில் சொல்ல வக்கற்றுக் கடலோடு அமிழ்ந்துபோகிறு.'இந்த வலி கிராசிடம் தோற்றுவித்த மர்மமானவுணர்வானது தாய்மையின் உணர்வுபோன்று மீளவும்,மீளவும்'நீரின் மீது எழுந்த கூக்குரலை-அன்றெழுந்த மரணவோலம்,அன்று ஓலமிடமுடியாத... உண்மையென்பதை மூன்று வரிகளுக்குள் அடக்க முடியாத சிரமத்ததை...வார்த்தைகளின் இயலாமையை உணரும் அவர் ,மனித அவலத்தை இன்று சொல்லும்போது-கிராசினால் வலியோடு அவ்வோலம் படைப்புக்குள் வந்து சேரும்போது- நமது நாளாந்த இந்த ஓலத்தை,மரணவோலத்தை 'ம்'க்குள் சோபா சக்தி பேசுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.இது அக்கறைக்காகவோ அல்லது சமூகத்தைக் காத்துவரும் மேய்ப்பனர்களாகவோ சொல்லப்படவில்லை.மக்களின் அதிகாரமற்ற,எந்த வலுவுமற்ற பலவீனத்தை அதன் மொழியிலேயே பேசுவதுதாம்'ம்'!



'ஆனையிறகிலும் பனாக்கொடையிலும் பெரியவன்தாம் அடிப்பான்,இங்கே வருகிறவன் போகிறவன் எல்லாம் என்னில் நொட்டிவிட்டுப் போகிறான்.இதைதாம் சுவாமி 'அதிகாரத்தைப் பரவலாக்குவது!'என்று சொல்வது.இப்படிப் பக்கிரி என்னிடம் அந்த நரகத்தில் நின்றும் பகிடிவிட்டார்.'-பக்கம் 154-'ம்'



'மாதா(ராதா)தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப் போனான்.பக்கிரி'பக்கிங் வெப்பொன்ஸ்' என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலைத் தன் கையால் பற்றி மெல்லப் புறத்தே தள்ளிவிட்டார்.எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்து அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்.'பக்கம்:158-'ம்'



என்னயிது? வெலிக்கடையில் நம்மைக் கொன்றொழித்தார்கள்.கண்களைத் தோண்டி ஊரவிட்டார்கள்,கைகளைத் தறித்து எறிந்தார்கள்.வயிற்றைக் கிழித்துக் குடலால் மாலை அணிவித்தார்கள்.இவர்கள் சிங்கள இனவெறியர்.ஆண்டாண்டு நம்மைக் கொல்வதால்தாம் நாம் உயிர்திருப்பதற்காகப் போராடப் போனோம்.ஆனால் சிங்கள இனவாதிகளைப் போலத்தானே தமிழனும் காரியமாற்றுகிறான்.பக்கிரியையும் மற்றவர்களையும் நாம் வெலிக்கடையில் பறி கொடுக்கவில்லை.மாறாகத் தாயகத்தின் மடியில்-தமிழிச்சியின் மடியில் பறிகொடுத்தோம்.




இது என்ன?,இதன் நோக்கமென்ன??



சிங்கள அரசின் காட்டுமிராண்டிப் படுகொலைகளால் சிதைவுற்ற அதே தமிழ் உடல்கள்-தமிழ் அராஜகத்தால் அதற்குக் கொஞ்சமும் குiறாயாது அதே பாணியில் அழிந்தன,சிதைந்தன!அப்போ விடுதலையென்பது அழிக்கப்பட்டவனுக்கானதாக நம்மால் ஏற்கப்படவில்லை.அது மாறாகத் தமிழ் மாமனிதப் பேர்வழிகளுக்கானதாக நம்மால் உணரப்படுகிறது.அதற்காக நாம் யாரையும் வேட்டையாடுவோம்!,எதன் பெயராலும்.



இங்கு,மனித இருப்புக்கும் இன்றைய நவீன பல்தேசியக் கம்பனிகளின் அரசியலுக்குமுள்ள பல்வேறு வகையான கண்ணிகளையிந்த 'ம்' நாவல் ஆராய்கிறது. 71 இல் ஜே.வி.பி. சிறையிலிருந்து மாவோவினைப் படித்துக் கொண்டிருக்க-மாவோவின் ஆயுதங்கள் வெளியில் சிறைக்காவலாளிகளின் கைகளில் இருக்கிறது.அதிகாரம் எந்தத் திசையிலிருந்தாலும் அது தனது வியாபகமான ஆற்றலை இந்தப் பூமிப்பந்தின் அனைத்துப் பாகத்திலும் படரவிட்டுள்ளது.அது உடுகம் பொலயாக,மாதா(ராதா) ,ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார்(ஞானப்பிரகாசம்)போன்று உலகெல்லாம் விரிந்து கிடக்கிறது.இங்கே மக்களின் மொழி'ம்' ஆகிவிடுகிறது.இது ஒருவகையில் சர்வதேச மொழியும்கூட.



உடுகம் பொல:சிங்கள இனவாத சிறையதிகாரி!



மாதா:தமிழீழ விடுதலைப் போராளி!



ஜெயக்குமார்:சிங்கள அரசின் தமிழ்ப் பொலிஸ் அதிகாரி!




இவர்களுக்கிடையில் வித்தியாசம் மனிதவுணர்வுகளுள்கூட இல்லை!,இவர்கள் அதிகாரத்தைச் சுவைக்கும் ஆளும் வர்க்கத்திக் அடிவருடியள்.




தனி மனிதனை விடுவிக்கும் நோக்கமானது இன்று மெலினப்பட்டுக்கிடக்கிறது.அனைத்து மூலையிலும் இருளின் தூதர்கள் பதுங்கிக் கிடக்கிறார்கள்.இவர்களிடமிருந்து இந்த மனிதனை எங்ஙனம் காத்து விடுவிப்பது?இதுதாம் 'ம்' நாவலூடாக வியாபித்திருக்கும் பிரச்சனை.இதை நோக்கமாகவும்-கருவாகவும் எடுத்துக்கொண்டு இவ் நாவல் முன்வைக்கும்,நம் விழிகள் முன் விரியவிடும் கதை மாந்தர்கள் அனைவருமே நம்மிலொருவராக எழுகிறார்.இந்த எழுச்சி நம் உணர்வில் தெறித்து உதிர்ந்து விடாது நம் மன வெளியெங்கும் அலையலையாய் எண்ணங்களை உருவாக்கி நம்மில் கலக்கிறது.நாம் நமது இயலாமையைக் கண்டு அஞ்சுகிறோம்.அஞ்சுவதூடாக நமது கையறு நிலையை உணர்வு பூர்வமாக உள்வாங்கி ஆவேசமடைவதில் இந்த நிலை மிகப் பெரும் மனித எழிச்சியைத் தோற்றுவிக்கிறது. கோவிந்தனின் புதியதோர் உலகம் எவ்வளவு நாணயத்தோடு நம்மோடு உறவாடுகிறதோ அதே உண்மையோடு 'ம்' நாவல் தன் மொழியை எங்களோடு பகிர்கிறது.இதை நமது -ஈழமக்களின் அநுப வெளிதாண்டிய அநுபவத்தால் ஒருபோதும் புரியமுடியாத சிக்கலை நாம் அறிகிறோம்.



நாவலின் இறுதிப் பக்கத்தில் ஒரு கிளவன் ஒரு பிரேதத்தைக்(தமிழீழக்கோசம்?;) கண்டெடுத்து,அதைக் குழந்தைகளுக்கு(இளைஞர்களுக்கு?) விளையாட்டுக் காட்டுகிறான்.பின்பு தான் வளர்க்கும் மிருகங்களுக்குப்(தம்பிமார்களுக்கு?) பசிக்க பிய்த்துப் பிய்துப் போடுகிறான்.பிரேதம்(ஈழம்) இப்போது சிறுக்கிறது,தானும் அதைப் புசிக்க வெளிக்கிடுகிறான்(யாருதாம் இந்தக் கிழவன்? செல்வநாயகம்?).பின்பு கிழவன் மது கடையில் இருக்கிறான்... குதிரை வண்டி,நோஞ்சான் குதிரை, மிகப்பெரும் பொதி...(பொதியைப் புரிகிறோமோ?) குதிரைக்காகக்(இது எதன் குறியீடு?கூட்டணி??) கிழவன் அழுகிறான்.குதிரையின் எஜமானிடம்(இந்தியா, இலங்கை அரசுகள்) குதிரைக்காக அடிவாங்கி மனம் பிறழ்கிறது கிழவனுக்கு.




இந்த நாவல் முன்வைத்திருக்கும் 'மனித அவலம்' அனைத்துத் தளத்திலும் வியாபித்திருக்கும் அதிகாரத்துவத்தின் மொழியைப் பேசுவதின் ஒரு நகர்வுதாம்.இதுவே முழுமையாகிவிடாது.இதைவிடப் பல்மடங்கு கொடூரங்களோடுதாம் இந்த வதை தொடருகிறது.'ம்' எனும் படைப்புக்கும் அது சொல்கிற மனித சமூகத்தின் படி நிலைகளுக்கும்,படைபாளிக்குமான மாபெரும் சிக்கலான உறவைக் உட்சென்று பார்த்தலுக்கான பெரும் தடையாக இந்நாவலின் கதைக் கருவானது செயற்படுகிறது.இதை விளங்கிக்கொள்வதும் அதனூடாகப் பயணிப்பதும் பின்பு அது ஏமாற்றிவிட்டுப் பயணிப்பதை ஒரு தீவிர வாசகரால் நிச்சியமுணரமுடியும்.இந்த வெறுமையான கைகளோடு நம்மை உட்கார வைத்துவிட்ட இந்த நாவல் தொடர்ந்து தன் பயணத்தை மனித அவலத்தின் பக்கமாகவே தொடர்கிறது.கைகளில்படும் ஒரு சிறு பொறியைக்கூட அது ஆயுதமாகக் கொள்ளவில்லை.மாறாகத் தன் ஆயுதமானது 'அவலத்தின்'; உட்சுற்றில் நிகழும்,உணரும் வலியே என்று விதந்துரைக்கிறது.இங்கே ஆசிரியன் எப்போது அழிந்துவிட்டான்.நிகழ்வானது படைப்பு நிலை எய்தபின் ஆசிரியனின் ஆணவவமோ-அதிகாரமோ இங்கு கோலாச்சாது,மனித வாழ்வின் பல் முனைப் பரிணாமத்தின் தொடர்ச்சியின் இன்றைய பரிதாப நிலைக்குள் அமிழ்ந்து போய்விடாது- மனித இருப்புக்கான ஒரு துளி உணர்வைப் பக்குவமாகப் பேணிக்கொள்ள முனைவதில் அது தன் சுயத்தை வெளிப்படுத்துகிறது! இங்கு எந்தத் தர்க்கத்துக்கும் ஈடாகத் தன் கருவைத் தாங்கிக் கொண்டிருக்கும் நிறமி ஒரு நிசப்தாமன குறியீடாக விரைந்து மூளையைத்தாக்கி விடுகிறது.இதன் பின்னான வாசிப்பானது படைப்பவனின் அதிகாரத்தைக் கடைக்கோடி நிலைக்குள் தள்ளிவிட்டு அல்லது அவனைக் கொன்றுவிட்டு நிறமிக்குப் பின்னால் செல்லும் அதே வேளை நேசகுமாரின்மீது எந்தக் களங்கத்தையும் சுமத்தாது-தமக்குத் தாமே பொறுப்பேற்க வைக்கிறது.இது இந்த நாவலின் வெற்றியா அல்லது வாசகனின் இயலாமையாஅல்ல இவற்றைக்கடந்து தர்க்கத்தின் தோல்வியா?இதை வரலாறே தீர்மானிக்கும்!அதுவரை இதை இப்படிச் சொல்லலாம்:




(நிறமியின் கர்ப்பத்துக்குக் காரணமானவனைத் தேடுதல்...பிரேமினியின் அண்ணன் பையன் பிரசன்னாவைக் குறிவைத்தல் அதன் பின் தன்னையே காரணமாக்கம் நேசகுமாரன்.இங்கு இந்த நாவல் , செல்லுமிடமெல்லாம் சென்று இறுதியில் நிறமியின் கதையைச் சொல்லமுடியவில்லை-அவள் கதையை அவளைத் தவிர எவராலும் சொல்ல முடியாதென்கிறது.)



ஆம்!ஈழத்தவள் கதையை அவளைத் தவிர வேறுயார் சொல்ல முடியும்?ஈனத்தனத்தையும்,மரணவோலத்தையும்,தியாகத்தையும்,துரோகத்தையும் தமிழீழ மகளைத்தவிர எவரால்தாம் சொல்ல முடியும்?அவளின் மடியில் தவழ்ந்து அவளையே 'கற்பழித்துக்'கொண்டிருக்கும் நாம் எல்லோரும்தாம் நிறமியின் கர்பத்துக்குக் காரணமாகிறோம்.நேசகுமாரன் சுய விமர்சனத்தோடு தன்னைக் காரணமாக்கியுள்ளான்,அவனைக் கொண்டுபோய்ச் சாத்துகிற 'சமூக நலக்காவலர்கள் கூட்டு-கேங்' எப்போது இந்தக் கடைதெடுத்த கேடுகெட்ட அரசியல் செய்யும் நம்மைச் சாத்தப்போகிறது?



ப.வி.ஸ்ரீரங்கன்


வூப்பெற்றால்,ஜேர்மனி.

Sonntag, März 02, 2008

வல்லதேசம் வைத்ததே சட்டம்!



வல்லதேசம் வைத்ததே சட்டம்:'வாழ்வா, சாவா?' தமிழர்கள் நிலை கண்ணீரோடு...

காலம் போகிறது நமது கனவுகளைச் சிதைத்தபடி!





>>>பதினெட்டு வயதாகிய கையோடு கட்டாய இராணுவச்
சேவைக்குக் குழந்தைகளைத் தூக்கும் சட்டங்களை வைத்திருக்கும் ஐரோப்பா-ஜேர்மனியானது
உலகத்தில் குழந்தைப் போராளிகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறது!குழந்தை மனதின் அளவு கோல்
பதினெட்டக்குள் அழிந்து போகிறது!இந்தப் பால் குடிகள் இராணுவ மனதுள் வீழ்ந்து
மகத்துவமிழந்து,நிலவும் அமைப்புக்கு விசுவாசமாக
இருப்பதற்கும்,கூடவே,அராஜகவாதிகளாகவும் மாறுவதற்கான மனத்தை உற்பத்தியாக்குபவர்கள்
உலகத்தில் குழந்தைகளின் இராணுவத் தோற்றத்துக்கு எதிரானவர்களாம்.சொல்பவன்
அதிகாரத்தோடும்,சொந்த நாட்டோடும் இருக்கிறான்.<<<



உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.பதினெட்டு வயதாகிய கையோடு கட்டாய இராணுவச் சேவைக்குக் குழந்தைகளைத் தூக்கும் சட்டங்களை வைத்திருக்கும் ஐரோப்பா-ஜேர்மனியானது உலகத்தில் குழந்தைப் போராளிகளுக்காகக் கண்ணீர் வடிக்கிறது!குழந்தை மனதின் அளவு கோல் பதினெட்டக்குள் அழிந்து போகிறது!இந்தப் பால் குடிகள் இராணுவ மனதுள் வீழ்ந்து மகத்துவமிழந்து,நிலவும் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதற்கும்,கூடவே,அராஜகவாதிகளாகவும் மாறுவதற்கான மனத்தை உற்பத்தியாக்குபவர்கள் உலகத்தில் குழந்தைகளின் இராணுவத் தோற்றத்துக்கு எதிரானவர்களாம்.சொல்பவன் அதிகாரத்தோடும்,சொந்த நாட்டோடும் இருக்கிறான்.


நாம்?...


"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften...verpflichtet werden.<<என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தரணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் இனத்துவ முரண்பாடுகள் தேசியவிடுதலையைக் கோரிக் கொண்டபோது, அதை அங்கீகரிக்க முடியாத அந்நிய தேச நலன்கள் நம்மை வெறும் இனக் குழுக்களாகி,நாகரீகம் அற்றவர்களாக்கிக் குறுக்கி அரசியல் செய்யும் கரவு நிறைந்த அரசியலில்"ஜனநாயகம்"எமக்குக் கற்பிக்கின்றன.இதையும் புலியெதிர்ப்புக் கும்பல்(ஜெகநாதன் போன்ற கற்றுக் குட்டிகள்"அரசியல் ஆய்வாளர்"என்ற போர்வையில்"ஆய்வு"செய்து... )ரீ.பீ.சீ. வானொலியில் வம்பளக்கின்றனர்.



இந்தக் குரங்குகள் உதாரணங்காட்டும் நாடுகள்தாம் மேலே நான் காட்டும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.இவர்கள் கூறித்திரியும் "ஜனநாயகம்"அதன் உள்ளடக்கமென்பது இந்தக் கோலமாக இருக்கும்போது, "சங்கரி ஐயா"ஊடாக இலங்கையில் "ஜனநாயகம்" மலரப் போவதாகக் "சமாதானம்"பாடும் காகங்களை என்னவென்பது!


மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால்,இத்தகைய ரீ.பீ.சீக் கும்பல் நனைந்த இடத்தில் குழி தோண்டுகிறது.சிங்களவன்கொடுமை அரசின் பாசிச இராணுவமோ நமது குழந்தைகளை விமானத் தாக்குதலால் கொன்று குவிக்கும்போது அதையும் புலிகளைக் காரணங்காட்டி மறுத்தொதுக்கும் புலியெதிர்புக் கும்பலை எப்படி மன்னிப்பது?

உலக அரசுகளின் அடிபடைச் சட்டங்கள் வன்முறைப்படைகளால் "ஜனநாயகம்" காக்கப்படுமென்று ஒப்புதல் வழங்கும்போது இது குடிசார் உரிமைகளுக்கு எதிராகத் தனது நிலையை எடுக்கிறது.சிவில் சமூகம் என்ற இந்த அரசியல் வார்த்தையே ஜனநாயகத்தின் பொய்மைத் தன்மையில் கானல் நீரகவே இருக்கிறது.இந்த ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் அற்பத் தனமான கனிவளச் சுரண்டலுக்கும்,தமது நிதி மூலதனத்தைக் காப்பதற்கும் தொடர்ந்து தமது ஜந்திரங்கள் இயங்குவதற்கான முறைமைகளில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போடுவதற்குமாக அர்த்தம் பெறுகிறது.இதனால்தாம் நாம் "ஜனநாயகம்"என்று இவர்கள் பிதற்றும் இந்தச் சாமான் போலியானது, மக்கள் தமது இறைமைகளைக் காப்பதற்காக புதிய ஜனநாயகத்தை நிறுவும் புரட்சியை முன்னெடுக்காத வரை இது சாத்தியமில்லை என்கிறோம்.இத்தகைய தரணங்களை மறுத்தொதுக்குவதற்கு இந்தவுலகத்துக்கு எந்த நியாயப்பாடுமில்லை.

இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் "புலிகளின் பாசிசத்தை" மையப் புள்ளியாக்கும் இந்தப் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு உலகமே புலிகளுக்குள் அடங்குவதாகப் பிரமை தட்டுகிறாதா அல்லது திட்டமிட்டு மக்களை இத்தகைய மக்கள் விரோத அரசியலால் காவுகொள்வது நோக்கமா?

உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.

கூடவே இப்போது "ஆயுதங்கள் மக்களைக் கொல்வதில்லை.மனிதர்களே மக்களைக் கொல்கிறார்கள்.ஆயுதங்கள் மக்களைக் காப்பதற்கானது".எனும் மக்கள் விரோத ஏகாதிபத்தியக் கருத்தானது, இத்தகைய நோக்கு நிலையின் இன்னொரு வடிவமாகும்.இது தமது இருண்ட பக்கங்களான குவிப்புறுதிப் பொருளாதார முன்னெடுப்பின் வாயிலான அனைத்து வகைக் காரணிகளையும்,அது யுத்தமானதாக இருந்தாலென்ன அல்லது உயிர்கொல்லி ஆயுதத் தயாரிப்பானதாக இருந்தாலென்ன அனைத்தும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் நலனின் வெளிப்பாடாக்க முனைகின்றன.நாமோ தினமும் சிங்கள இராணுவத்தால் வேட்டையாடப்படுகிறோம்.மக்களின் மழலைகள் தமது மண்ணைக் காப்பதற்குப் பிழையானமுறையில் போராடியபடி அழியக் காலம் போகிறது,நமது கனவுகளைச் சிதைத்தபடி!

ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, Februar 24, 2008

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...


>>>"கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.<<<


இலங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை கண்டும் காணாததாக இருக்கின்றன.ஒரு கண்டனத்தைக்கூட எவரும் செய்யவில்லை!தமிழ்பேசும் மக்கள்மீது பாரிய இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிடும் அரசபயங்கரவாதம் நீடிக்கும்வரை குழந்தைகளைப் போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடிவதில்லை!தமது கண்ணெதிரே குண்டுகள்வீழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உள்வாங்கும் சிறார்கள், நிச்சியமாக அதை எதிர்ப்பதற்காக ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருப்பதற்கில்லை!இதை உலகம் நன்றாகவே அறியும்!



அதைவிட ஜேர்மனிய அரசின் கடந்தகாலச் சரித்திரம் இதை மிக அழகாகவே அறியும்.


"கிட்லர் யுங்க" என்ற வார்த்தையினூடே இன்று அர்த்தமறிய முனையும் நவ ஜேர்மனிக்கு இதன் தாத்பரியம் நன்றாகவே புரியும்.எனினும், இன்றைய இனவாத அரசுகளைத் தட்டிக்கொடுத்தபடி குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுப்பது மக்களையும்,குழந்தைகளையும் ஏமாற்றுவதாகவே இருக்கிறது.உலகத்தில் சிறார்பருவமானது மிக அழகாகக் காத்து அனுசரிக்கவேண்டிய பருவமாகும்.இந்த வயதில் குழந்தைகள் யுத்ததுக்கு இரையாகும் நிலை வெகுவாக வெறுக்கத் தக்கதாகும்.இத்தகையவொரு சூழலில் எமது சிறார்கள் வாழ நேரிட்டது எங்ஙனம் உருவாகியது?,அதைத் தடுப்பதற்கான மூலத் தீர்வு என்னவென்பதைக் குறித்து இதுவரை எந்தவொரு உலக அமைப்பும் சிந்திக்காது,தத்தம் போக்குக்கு இணங்கச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது மிக மிகக் கபடத்தனமானதாகும்.

"அச்சுறுத்தலுக்குள் இருக்கும் மக்களுக்கான அமைப்பு" எனும் ஜேர்மனிய அமைப்பானது இலங்கையில் சிறார்களைப் படையில் சேர்க்கும் புலிகளுக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்துகிறது.அது, ஜேர்மனிய வெளிநாட்டமைச்சருக்குப் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் படிவங்களை இதுவரை சேகரித்து அனுப்பியுள்ளது.கூடவே, இணையத்தின் வாயிலாகவும் அது இத்தகைய கையெழுத்து வேட்டையைச் செய்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்திக் குழந்தைகளைத் துஷ்பிரயோகஞ் செய்யும் நிலையைத் தடுக்கும்படியும் ஐரோப்பியக்கூட்டமைப்பையும், ஜேர்மனியையும் கோருகிறது.இன்றைய சூழலில் 4.000.வரையிலான சிறார்கள் புலிகளின் படையணியில் இருப்பதாகவும்,அவர்கள் இன்றும் 12 வயதே கடந்துவிடவில்லையெனவும் அது குற்றஞ் சுமத்துகிறது.

குழந்தைப் போராளிகள் உருவாகும் நாடுகளாக இன்னும் பல ஆபிரிக்க நாடுகளையும் அது பட்டியலிட்டபடி இலங்கையில் சிறார்கள் அகதி முகாங்களிலிருந்தே வலுகட்டாயமாகக் கடத்தப்படுவதாகும் ஆதார பூர்வமாகச் சொல்கிறது.புலிகளின் பிளவுக்குப் பின்பான நிகழ்வில் கருணா குழுவுருவாக்கத்தின் பின்பாக 200 தடவைகளுக்கு மேலாகக் குழந்தைகளைக் கருணா குழுவும் கடத்தியதாகவும் இந்த அமைப்புக் கூறுகிறது.

குழந்தைகள் ஒரே பொழுதில் அகதியுமாகியும்,போராளிகளுமாகும் நிலை இலங்கையில் இருப்பதாக அந்த அமைப்புக் கூறுகிறது!

இந்த அமைப்பின் குரல் மிகச் சரியானதாகவே இருக்கிறது.

குழந்தைப் போராளிகளை உருவாக்கும் அரசுகளே மிகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இலங்கையில் போராடும் நிலை உருவாக்கப்பட்டத்தற்கு மேற்குலகுக்கும் பங்குண்டு.அத்தகைய தேசங்களே இன்று குழந்தைப் போராளிகளின் உருவாக்கத்துக்குத் துணைபோனபடி தத்தமது வர்க்க-தேச நலன்களை இலங்கையில் காத்துவரும்போது, அங்கே தவிர்க்க முடியாது இனவொடுக்குமுறை கூர்மையடைகிறது!இத்தகைய நடத்தைக்குத் தோதாக இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் தேசங்கள் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய தேசங்களாகும்.இவர்களின் குண்டுகள் தமிழ் பேசும் மழலைகளைக் கொன்று குவிக்கும்போது அதுகுறித்து எந்தவொரு செய்தியையும் போடாதிருக்கும் மேற்குலகப் பத்திரிகைகள் இந்தக் குழந்தைப் போராளிகளின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது மிகவும் வேதனையானதாகும்.

சிறார்களைப் போராளிகளாக்கும் நிலைக்கு உந்தித் தள்ளப்படும் இனவாத அழிப்பானது ஒரு இனத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட சிறார் போராளிகளைத் தயார்படுத்திவிடுகிறது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் வாழும் சின்னஞ்சிறார்களின் முன்னுள்ள தேர்வு போராடிச்சாவதென்பதே!இதைவிட அவர்கள் தம்மைக் காத்து வருவதற்கான எந்தச் சூழலை இலங்கைச் சிங்களப் பாசிச அரசு விட்டு வைத்திருக்கிறது?ஆறுமாதக் குழந்தையின் கைகள் ஒடித்து,குடல் சிதறி மரிக்கும்படி குண்டுத் தாக்குதல் செய்யும் சிங்கள அரசை எவ்வழியில் தடுத்து நிறுத்தமுடியும்?

இலங்கையின் கொடூரமான அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியாத அரசுகள்"குழந்தைப் போராளிகள்"குறித்துக் கதைவிடுவது சாத்தான் வேதம் ஓதும் நிலைதாம்.

புலிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்த முறிவுக்குபின்பான இன்றைய சூழலில் சர்வதேசக் கண்காணிப்புக்குழுவுக்கு இலங்கையில் அனுமதியில்லாத சூழல் குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்குச் சாதகமான சூழலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.என்றபோதும், இலங்கைமீதான குற்றப்பத்திரிகைகளை அடக்கி வாசிப்பவர்கள் புலிகளின்மீதே குற்றத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!

புலிகளால் சிறார்கள் போராட்டத் தூண்டும் நிலைமைகளின் உருவாக்கம் இலங்கையின் அரச முன்னெடுப்புகாளாலேயேதாம் தோற்றுவிக்கப்படுகிறது!இதைத் தடுத்து நிறுத்தாமல் சிறார்களைக் காத்தலென்பது இலங்கை இராணுவம் மக்கள் குடியிருப்புகள்மீது குண்டைப் போட்டுக் குழந்தைகளைப் பலியெடுத்துவிட்டு,அது புலிகளைத்தாம் அழித்தோம் என்பது போன்றதே.

இத்தகைய நிலையில் இவர்கள் "கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008


KAMPAGNE


Aktion für Kindersoldaten in Sri Lanka zum Red Hand Day
Kinder sind keine Soldaten!



08. Februar 2008Mit der symbolischen "Roten Hand" protestieren Menschenrechtsorganisationen in aller Welt am 12. Februar gegen den Einsatz von Kindern als Soldaten. Mehr als 300.000 Kinder wurden nach Schätzungen der Vereinten Nationen im Jahr 2007 als Soldaten in Konflikten im Kongo, dem Sudan, Tschad, den Philippinen, in Sri Lanka, Afghanistan und Kolumbien sowie in vielen anderen Ländern eingesetzt.

Manche Kindersoldaten waren sogar noch nicht einmal zwölf Jahre alt. In Sri Lanka werden regelmäßig Kinder aus Flüchtlingslagern entführt und zum Dienst an der Waffe gezwungen. Seit 1983 starben in einem blutigen Bürgerkrieg in dem asiatischen Inselstaat mehr als 70.000 Menschen.

In den kommenden Monaten wird die Gewalt noch weiter eskalieren, da die Regierung Sri Lankas im Januar 2008 ein Waffenstillstandsabkommen mit der tamilischen Befreiungsbewegung "Liberation Tigers of Tamil Eelam" (LTTE) aufkündigte. Denn die Regierung wollte nicht länger neutrale internationale Waffenstillstandsbeobachter in der Region haben, die Menschenrechtsverletzungen der Konfliktparteien dokumentierten. Die LTTE kämpft für einen unabhängigen Staat der diskriminierten tamilischen Minderheit.

Sie schreckt dabei weder vor Terroranschlägen, noch vor dem Einsatz von Kindersoldaten zurück. Rund 4.000 Kindersoldaten sollen heute in den Rängen der LTTE kämpfen. Die Regierung Sri Lankas setzt nicht mehr auf Gespräche mit der LTTE, sondern auf ihre militärische Zerschlagung. Dabei setzt sie auch Milizen wie die Karuna Gruppe ein, die Kinder als Soldaten kämpfen lassen. So wurden zwischen November 2006 und August 2007 mehr als 200 Entführungen von Kindern durch die Karuna Gruppe registriert.

Weder Polizei, noch Militär verhindern diese Zwangsrekrutierungen, obwohl nach dem Recht Sri Lankas der Einsatz von Kindersoldaten mit bis zu 20 Jahren Haft bestraft werden kann.

Kinder sind nicht nur als Soldaten, sondern auch als Flüchtlinge die ersten Opfer des Bürgerkrieges in Sri Lanka. Bitte appellieren Sie an Bundesaußenminister Frank-Walter Steinmeier, sich gemeinsam mit der Europäischen Union für ein Ende des Bürgerkrieges und des Missbrauchs von Kindersoldaten in Sri Lanka einzusetzen Denn Sri Lankas Kinder brauchen ein Zeichen der Hoffnung.




http://www.gfbv.de/inhaltsDok.php?id=1220&PHPSESSID=27b7f0def8e4ed54144d51d96a2aa53b

Samstag, Februar 23, 2008

போதுமடா சாமி இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்

வான் குண்டுகளும்
வாளாதிருக்கும் உலகமும்.


உலகத்துள் ஒடுக்குமுறையாளர்களெல்லாம் ஒரு பக்கத்தில் தத்தமது தேவைகளோடு அரசியல் நடாத்த, நாம் தினமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம்,அவர்களது ஒடுக்குமுறை வியூகம் நம்மைத் துண்டம் துண்டமாக்கி அழிக்கின்றது!சிங்கள வன்கொடுமை அரசின் வான் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணில் குண்டுமழை பொழிய எனது மழலைகள் கைகள்,கால்கள் துண்டமாகியும்,குடல் சிதறக் கொலையுண்டு போகிறார்கள்!

நான் மெளனித்துக் கிடக்கிறேன்.

எனது தவறுகள் என்னை அழிப்பதில் முடிகிறது.

என்னைச் சுற்றி எதிரிகள் படை சூழ்ந்துபடி "தேசமொன்று உனக்குக் கிடையாது"என்று பூண்டோடு எனது காலடித் தடங்களை அழித்தபடி முன்னேறுகிறார்கள்.

இது எனது தேசத்தின் ஊழ்வினை!

முடியவில்லை-மெளனித்திருக்க முடியவில்லை!

மனதுக்குள் ஏதோவொரு வலி-வேதனை.

யாரேறெடுத்தெமைப் பார்ப்பார்?

எந்தவொரு தேசமும் எமது அழிவை குறைந்தபட்ச செய்தியாகக்கூடக் காண்பிப்பது கிடையாது!பாலஸ்தீனத்தில்,ஈராக்கில் நடப்பவை செய்தியாகும் வேகம் எனது மண்ணின் அழிவில் இருப்பதில்லை.

இந்த நிலையில், தமிழர்களின் அழிவை உலகத்து இடதுசாரிய நாளிதழ்கள்தாம் ஒரளவாவது வெளிப்படுத்துகின்றன.ஆனால்,ஈழத்துத் தமிழனுக்குக் கம்யூனிசத்தின்மீதான காச்சல் இன்னும் விட்டபாடில்லை!எங்கள் வலியை,எங்கள் பார்வையில் இதோ ஜேர்மனிய இடதுசாரிய யுங்க வெல்ற் எனும் சஞ்சிகை கூறுவதைப் பாருங்கள்.

இந்த நாளிதளின் பல கட்டுரைகளை ஜேர்மனிய நகரமான காசல் எனும் நகரத்திலிருக்கும் காசல் பல்கலைக்கழக சமாதான ஆய்வகப் பிரிவு அதிகமாகச் சேகரித்து வைத்திருக்கிறது.இது இடது சாரிகளால் மட்டுமே நிகழ்ந்து.ஜேர்மனிய அதிபர்களாலோ அல்லது முதலாளிய ஊடகங்களாலோ நிகழ்ந்தது அல்ல!எமது கண்ணீரை தொடைப்பதற்காக அவர்களது எல்லைவரைப் போராடுகிறார்கள்.அப்படிப் போராடிய பேராசிரியர்கள் பலர் ஜேர்மனிய அரசால் பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்கள்.ஏனெனில்,இவர்கள் இடதுசாரியப் பாரிம்பரியம்கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதே காரணமாக அமைகின்றது.


ஈழத்தின் அழிவுக்கான வித்தை இட்டுவிட்டுச் சென்றவர்கள் வட ஈராக்கில் அத்துமீறித் தாக்குதலுக்குப் போகும் துருக்கிய இராணுவத்தை மீளத் துருக்கிக்குள் வருமாறு எச்சரிக்கை செய்கிறார்கள்!துருக்கி கொசொவோவை அங்கீகரக்கிறது!அதே தருணம் குர்தீஸ் மக்களை வேட்டையாடத் தனது வன் கொடுமை இராணுவத்தை அமெரிக்க ஒப்புதலோடு வட ஈராக்கை நோக்கி ஏவிடுகிறது!


அமெரிக்க அதிபாரோ ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கைகளால் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சி மகிழ்கிறார்!அற்புதமான மனிதர் புஷ் அவர்கள்!என்னவொரு கரிசனை இந்த ஏழை மக்கள் தம் வாழ்வில்?

பெனின்,தான்சானியா,றுவன்டா,கானா,லிபேரியாவென்று போகுமிடமெல்லாம் அவருக்குப் பொய்க்காத வரவேற்பு,வாழ்த்து!ஆடலும் பாடலும் நிறைந்த விருந்துபாசாரத்தில் புஷ் தன்னையும் இணைத்து ஆபிரிக்க மக்களுக்கு பெருங் கெளரவத்தைக் கொடுத்து,அவர்களைக் கடைந்தேற்றக் காலம் கணிக்கிறார்!மலேரியாவையும்,நுளம்பையும் எதிர்கொள்ள ஆபிரிக்க மக்களுக்கு நுளம்பு வலை வழங்கும் கொடை வள்ளல் அல்லவா அவர்!

ஆபிரிக்காவில் ஜனநாயகம் மலர ஐயா புஷ் தூதுவராகச் செல்கிறார்,அவர் பின்னே அவரது இரணுவம் போகத் தேவையில்லை.அது, ஏலவே அங்கே இருப்புக் கொண்டுவிட்டது.ஐயாவின் வருகையில் அகமலரும் அற்ப ஆபிரிக்கத் தேசக் குடிகள்!


என் தேசத்துக்கு ஐயா புஷ் அவர்களின் ஜனநாயகம் அவசியமில்லைப் போலும்!


இல்லையேல், அவர்கள் என் தேசக் குழந்தையின் தறித்த கைகளை எடுத்து உலகுக்கு முன் நீதி கேட்பார்கள்.மழலைகளைக் கொல்லும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தை-வான்படையை ஏவிவிட்ட இராஜபக்ஷவை பின்லாடனுக்கு நிகரான பயங்கரவாதியாக்குவார்.

என்ன செய்ய? 2007 ஆம் ஆண்டு எண்ணையூற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட கானா தேசமா எனது தேசம்?


அல்லது,பிளாட்டினம்,தங்கம்,வைரம்,யுரேனியம்,செம்பு,நிலக்கரி,ஈயம்,எண்ணை என்று உலகத்தின் கனிவளத் தேவைகள் அனைத்தையும் ஒருங்கே வைத்த ஆபிரிக்கக் கண்டத்திலையா எனது தேசம் இருக்கிறது?


இலங்கைச் சிங்கள அரசின் அதீத இராணுவவாத ஆட்சியை இன்னும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு என்று என் தேசத்தவன் சொல்கிறான்.பிறகென்ன அது அதை நிலைநாட்டப் பயங்கரவாதப் புலியைக் குண்டுபோட்டழித்தாக வேண்டும்.இதோ, ஆறுமாதப் புலி செத்துக் கிடக்கிறது.மூன்று வயதுப் புலியின் கையை உடைத்துக் கொன்றிருக்கிறது இலங்கை அரசு!-இப்போது சந்தோஷமா?


இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இதற்குள் மயங்காதவர்கள் எவர்கள்?மக்களின் நல் வாழ்வுக்காக,அவர்கள் வாழும் தேசங்களை அபிவிருத்தி செய்ய உலக ஜனாதிபதி ஊர்கோலம் பூணுகிறார்-ஊர்வலமாகப் பவனி வந்தபடி!


இதன் உள் நோக்கம் ஈழத்தில் இருக்குமென்றால் நிச்சியமொரு கொசோவோவாக ஈழம் மலர்ந்திருக்கும்.குழந்தைகள் குண்டடிபட்டிறக்காமல் உழைத்து மாடாகச் சாவதற்காக இன்னும் சில காலம் உயிரோடிருந்து வளர வாய்ப்பு இருந்திருக்கும்.


2003 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆபிரிக்கச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இதே புஷ் அவர்கள் செனகல்,உகண்டா முதலாகப் பிராந்திய வல்லரசான தென்னாபிரிக்கா முதல் நைஜீரியா,போட்சுவான முதலாகப் பிரயாணித்துத் தனது தேசத்துத் தொழிற்சாலைகளின் பசியைப் போக்கப் பாடுபட்டுழைத்தார்.இவரோ இப்போது மீளவும் ஜனநாயகம்,அபிவிருத்தியென்று பஜனைபாடியபடி மேற் சொன்ன தேசங்களுக்குப் பிரயாணிக்கிறார்.


எதற்காக எனது தேசம் அநாதையாக விடப்பட்டு,யுத்தம் நடைபெறுவதற்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது?


ஆயுதக் கம்பனிகளின் பணப் பெட்டிகளை நிறைக்க எனது தேச மக்கள் அழிந்தாக வேண்டும்.அதே போல ஐரோப்பிய-அமெரிக்க மற்றும் சீனாவினது,ஜப்பானினது பக்டரிகள் பணம் பண்ண ஆபிரிக்க-அரபு தேச மக்கள் செத்தாக வேண்டும்!அவர்களின் பிராந்திய மற்றும் வலயங்கள்-கண்டங்கள் குறித்த கணிதச் சமன்பாடுகள் சரியாகவே இருக்கிறது!

சீனாவினது போட்டா போட்டியான பொருளாதார வளர்ச்சியானது சீனாவை எண்ணை-எரிபொருளுக்காக ஆபிரிக்கா நோக்கிப் பேயாக அலையவிட,அமெரிக்க ஐயாவுக்குப் பசி எண்ணை ரூபத்தில் வந்து தொலைகிறது!பிறகென்ன போட்டிக்குப் போட்டி!ஆபிரிக்காவுக்குப் படையெடுத்துப் பசி போக்க வேண்டியதுதாம்!கிளம்பிட்டார் புஷ் அவர்கள்.


கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையின் பெறுமதி 4.500.கோடி டொலர்களாக இருக்கிறது.இது மேலும் எண்ணையிருப்புகள் கண்டுபிடிக்கும்போது விரிந்து போகும்.இதை அமெரிக்கா விட்டுவிடுமா?ஒரு கணக்குப்படி பார்த்தால் இந்த அமெரிக்காவுக்கு-உலகுக்கு வரும் ஒவ்வொரு ஐந்தாவது பரல் எண்ணையும் ஆபிரிக்காவிலிருந்தே வரும் நிலையுண்டு.இன்றைய நிலைவரப்படி அமெரிக்கா நாளொன்றுக்கு 4 மில்லியன்கள் பரல் மசகு எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து எடுக்கிறது,அல்லது திருடுகிறது!சீனாவோ 2 மில்லியன்கள் பரல் எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது!கவனியுங்கள் இறக்கு "மதி" செய்கிறது சீனா.

2002 ஆம் ஆண்டுக்கான வொஷிங்டன் திட்டமிடல் மற்றும் கணிப்பீடானது ஆபிரிக்காவிலிருந்து எண்ணை எடுக்கும் பங்கு 10 வீதத்திலிருந்து 25 வீதமாக 2015 இல் உயருமெனக் கணிப்பிடப்பட்டது.இன்றைய பொழுதில் 18 வீதமாக இது இருக்கிறது.அன்றைக்கு நடு நிலையான இறக்குமதியென்ற முக மூடியோடு திருடப்பட்ட ஆபிரிக்க எண்ணை இருப்புகள் இப்போது மிக நேரடியாகப் பறிமுதல் செய்யப்படுவதற்காகவே புஷ் ஆபிரிக்காவை வலம் வருகிறார் என்பதை எவர் இல்லையென மறுக்க முடியும்?

ஆபிரிக்காவின் எண்ணைச் சுய தேவையும் ஒரு புறம் உயர்ந்தே செல்கின்றபோதும், சீனா,அ¦மிரிக்கா மற்றும் ஐரோப்பியத் தேவைகளோ அந்தக் கண்டத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது படைகளை அனுப்புவதென்ற போர்வையில் ஆபிரிக்க மக்களின் பல்வகை மூலவளச் சொத்தைத் திருடுவதற்குப் பெயர்: "ஜனநாயகம்-அபிவிருத்தி"எனக் கொள்க!

அமெரிக்காவின் ஆபிரிக்கக் கொமாண்டோஸ் என்ற அவ்றிக்கோம் நான்கு நட்சத்திர ஜெனரல் வில்லியம் வார்ட்டின் கீழ் 1.10.2007 பொறுப்பெடுத்த பொழுதிலிருந்து இன்றுவரையும் அமெரிக்காவின் கண்ணில் பற்பல கனவுகள் ஆபிரிக்க மூலவள ரூபத்தில் வந்தபடி.ஆபிரிக்காவின் 90 கோடி மக்கள் தொகையில் 30 கோடி மக்களின் நாளொன்றுக்கான வருமானம் ஒரு டொலருக்கும் கீழ்பட்டதாகும்.ஆனால், அந்த மக்களின் பல இலட்சம் கோடி டொலர்கள் பெறுமதியான மூல வளச் சொத்தோ இத்தகைய ஓடுக்குமுறையாளர்களால் திருடப்பட்டு,அமெரிக்க-ஐரோப்பியத் தேசங்களின் சொத்தாக மாற்றப்பட்டபின் தொடர்ந்து திருட்டை நிலைப்படுத்த அதே பணத்தில் அற்பச் சில்லறைகளை அந்த ஆபிரிக்கக் குடிகளுக்கு மனிதாபிமான உதவியாகப் பிச்சை போடுகிறது அமெரிக்க அதிகாரம்.


ஆனால்,நமது தேசத்துக்கான கர்மவினை இந்த அமெரிக்க-ஐரோப்பிய வியூகத்தில் ஆயுத விற்பனை-இந்திய மேலாதிக்கத்தைக் கண்காணித்தல்-இராணுவக் கேந்திர ஊக்கம் என்றிருக்கும்போது, அதுவே ஒரு கட்டத்தில் இலங்கைச் சிங்கள இனவாதமாகக் குண்டு காவி வரும் வான்படை நமக்குள் குண்டுகளைக் கவிழ்க்கும்போது நமது மழலைகள் குடல் தெறிக்கக் கொலையாகிப் போகின்றார்!

இதைத் தடுப்பார் எவர்?

தேசத்தை விடுவிப்போர் எவர்?


அனைத்தும் நமது மக்களின் கைகளிலேதாம் தங்கியிருக்கிறது!

எங்கள் மக்கள் சுயமாகத் தமது கால்களில் நிற்கும் போராட்டத்தை முன்னெடுக்காதவரையும் புலிகள் செய்யும் எந்தப் போரும் நம்மை விடுவிக்காது என்பதற்கு இந்தக் கால் நூற்றாண்டான புலிகளின் போராட்ட வரலாறே போதும் படிப்பனை சொல்ல.

போதுமடா சாமி,இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்!-நிறுத்துங்கோடா இந்தச் சிங்கள வான் படையை.


ப.வி.ஸ்ரீரங்கன்.
23.02.2008

Freitag, Februar 15, 2008

தலித்தியமா? வர்க்கமா?

தலித்தியமா? வர்க்கமா?




இன்று, எதுகுறித்த கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டாகவேண்டும்!


எமது இனத்தின் விடுதலை குறித்தான போராட்டப் பாதையில் அன்றுதொட்டு இன்றுவரையும் -சரியான தெரிவற்ற தளத்தில்- நமது மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டு வருகிறது!



சிங்கள இனவாத அரசோ தமிழ்பேசும் மக்களைப் படுகேவலமான முறையில் ஒடுக்கியும், அற்ப சலுகைகளைப் பதவிவிரும்பித் தமிழ்த் தலைவர்களிடம் கையளித்துத் தொடர்ந்தது தமிழ்பேசும் மக்களை ஒடுக்க முனைகிறது.அதற்காகப் பற்பல முயற்சிகளை நமக்குள் தோற்றுவித்தபடி,நமது போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.



இங்கே,ஒரு வாசகர் தனது கட்டுரையொன்றை எனது பதிவில் பின்னூட்டாக அனுப்பி வைத்தார்!



அவரது கட்டுரையின் கருத்துக்களை வாசகர்கள் உள்வாங்கி, விவாதமொன்றைத் தொடர்வதற்கான களமொன்றை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது.



விவாதமென்பது வாசகர்களிடையேயான கருத்துப் பரிமாற்றமாக இருக்கும்.



அது, கருத்துக்களை நேரிய முறைகளில் உருவாக்குவதற்கான முதற்படி.இதிலிருந்து நாம் இன்னும் முன்னேறிவிடவில்லை என்பதற்கு நமது இன்றைய போராட்ட நடத்தைகளே சாட்சி. எனவே,இக்கட்டுரையை ஒரு பதிவாக இடுகிறேன்.



கட்டுரை அனுப்பிய தோழருக்கு நன்றி!



தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
15.02.2008





நாடை நோக்கி ஒரு கேள்வி


தலித்தியமா? வர்க்கமா?


மனித இனத்தை வசதி படைத்தவர்கள் (மூலதனம்), வசதி மறுக்கப்பட்டவர்கள் (உழைப்பை விற்க தயாராக இருப்பவர்கள்) என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் ,வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே "அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம்" என இந்த பொருளாதார அமைப்பில் இருந்து கொண்டே இருக்கின்றது.




இந்த மக்கள் கூட்டத்தை விஞ்ஞான ரீதியாக பகுத்தறிவதில் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது.




இதில் ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரே ஒடுக்குமுறையை, பின்னடைவை இனம்கண்டு அதற்கான தீர்வை முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவை குட்டி முதலாளிய வர்க்கம் என்று பொருளாதார முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அலசிப் பார்ப்பவர்கள் வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்களில் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் சார்ந்து நிற்பவர்களாக ஒரு பிரிவினரும், மறுபிரிவினர் வசதியை பெருக்கிக் கொள்ளும் நோக்கோடு அதனைச் சார்ந்து நிற்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்தப் பிரிவினை குட்டி முதலாளிய வலது பிரிவினராக கொள்ள முடிகின்றது.



இந்த இரண்டு நலன்களைக் கொண்ட பிரிவினர்களும் சமூகத்தில் இருக்கின்ற வழிகாட்டும் சிந்தனை பற்றிய தெரிவுகள் என்பது துல்லியமாக தெரியக் கூடியது. ஆனால் ஒருவர் தத்தம் நலன் கொண்டு திரித்துக் கூற முடிகின்றது.



இதில் வசதி மறுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவர போராடுகின்ற போது அவற்றை ஒவ்வொருவரும் சுயமாக எதனையும் செய்து முடிவதில்லை. மாறாக, சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார அமைப்பே இவற்றை நிர்ணயிக்கின்றது.


இந்த நிலையில் பொதுவான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொள்ளும் விடயங்களை அறிந்த பகுதியினர் தத்தமது நலன்களின் மையத்தில் (வர்க்கத் தளத்தில்-வர்க்கநலனிலிருந்து)இருந்து தீர்வு நோக்கி நகர்கின்றனர்.



இதுவேதான்(வர்க்க சமுதாயத்தில் வர்க்க அரசியல் )இயல்பாக இருக்கின்ற நிலமை.




இவற்றிற்கு இடையே பற்பல கருத்துக்கள் சிந்தனைகள் என மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற நிலைதான் தற்பொழுது இருக்கின்றது.




தலித்தியம் என்பது இந்திய நாட்டின் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்தாக்கத்தினால் போராடும் முன்னணிப் பிரிவுகளிடையே பிரிவினையை உண்டாக்கியிருக்கின்றது.



இது கூட பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தமக்கு தீர்வாக முன்வைக்கப்படும் நிலையானது இதுவரையில் அழிவுப் பாதைக்கு கொண்டு வந்ததை நாம் தமிழ் தேசியம் என்ற நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய மையவாதமானது பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்களின் வலது பிரிவினரால் முன்வைக்கப்பட்டது தான் தமிழீழ கோசம்.



இவ்வாறுதான் இன்று தலித்துக்கள் இன்று பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் பார்ப்பன சதிக் கூட்டத்தால் விதைக்கப்பட்ட சாதி தர்மத்தை மீட்டெடுப்பதாகக் கூறிக் கொண்டு வளர்ந்த பிரிவினர் தம்மை தலித்துக்கள் என்று கூறிக் கொண்டு தமது நலனின் மையநிலையில் இருந்து கருத்தை முன்வைக்கின்றனர்.இங்கு வசதி மறுக்கப்பட்டவர்கள் என்கின்ற போது ஒரு இனத்திலோ அல்லது ஒரு மதப்பிரிவிலோ அல்லது ஒரு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இவர்கள் இனம், மதம், சாதி, நிறம் கடந்து வசதி மறுக்கப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.




தேசியம் பேசுகின்றவர்கள் அல்லது தலித்தியம் பேசுகின்றவர்கள் உண்மையில் யார் என்றால் வசதி படைத்தவர்கள், வசதி மறுக்கப்பட்டவர்கள் என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தான். இவர்களால் முன்வைக்கப்படும் உரிமை என்பது ஒவ்வொரு வசதி படைத்தவர்களுக்கும் இடையே பேசப்படும் பேரம் தான் இந்த நிலை. இதனை முதலாளித்துவ ஜனநாயகம் என்பர்.




முதலாளித்துவ ஜனநாயகம் என்ற உரிமையைத்தான் பெற இணையும் படி தலித்தியம் (தேசியம் இனத்துவ கோசத்தின் கீழ்) கோருகின்றது. ஒரு பிரச்சனைக்கான தீர்வினை யார் வைக்கின்றனர்- இது எவ்வாறு அமைகின்றது? சமூகத்தின் பொருளாதார அமைப்பு என்ன என்ற புரிதல் இல்லாத நிலையில் அல்லது அறிவுரீதியாக பக்குவம் அடையாத நிலையில் இருந்து தோற்றம் பெறுகின்ற கருத்தாக்கத்தின் பின்னால் மக்கள் செல்கின்ற போது பல கோட்பாடுகளின் நிலையில் இருந்து, தத்தமது நலனை முன்வைக்கின்றனர். இவ்வாறே தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பத்திலும் சரி சாதிய எதிர்ப்புப் போராட்டதிலும் சரி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலைப்பாடில் இருந்து இடதுசாரிகள் போராடி இருக்கின்றார்கள் இது தவறு என்றே வசைபாடப்பட்டே வருகின்றது.




இதிலும் தலித்தியத்தின் கருத்தாக்கத்தை (குட்டி முதலாளிய சிந்தனையை) வெறும் பொருளாதார மாற்றத்தின் மூலம் மாற்றம் கொண்டுவந்துவிட முடியாது. இதனை எப்பவும் இலங்கையின் தீவிர இடதுசாரிகள் கூறிக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்கான முதலாளித்துவ சமூக உற்பத்தியில் கிடைக்காத உரிமைகளை பெறவே போராட்டதை நடத்திக் கொண்டனர். இவ்வாறிருக்கையில் இவற்றை மறுதலித்து தீவிர இடதுசாரிகள் போராடியதாக கருத்து உருவாக்கம் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் இன்றைய போக்கைப் பார்ப்போம் ‘கம்யூனிஸ்டுக்கள் சாதிப்பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் அழிப்பதில்லை என்கிற குற்றச்சாடடிற்கு மாறாகச் சமீபகாலமாக இதுகுறித்து அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது…. எனவும் கூறி உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்’ என்ற கருத்தை தலித்தியத்தை போதிப்பவர்கள் (hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 ) எதிர்க்கின்றனர்.



அதாவது ஒன்று உழைப்பவர் பக்கம் கொண்ட சிந்தனை மற்றையது ஒப்பிட்ட ரீதியில் வளர்ந்த சமூகத்தட்டில் உள்ளவர்களின் நலன் பொருந்திய சிந்தனை இவற்றை இங்கு வித்தியாசம் காண்பது முக்கியமாகும்.



இவ்வாறே இடதுசாரிகளை அரசியல் அரங்கில் மலினப்படுத்தும் புத்திஜீவிகளின் போக்கு இருக்கின்றது. மேலும் ‘வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும்… என எதனைக் கூறுகின்றார்??? hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 இங்குதான் புரிதல் பற்றி பார்வை மாறுபடுகின்றது. தேசிய,சாதியப் பிரச்சனையாகட்டும் அவர்களுக்கான முதலாளித்து ஜனநாயகத்தை வழங்குவதன் மூலமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல தேசிய முதலாளிகளும் உள்ளடங்கியே இருப்பர். இங்கு சாதியப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியதான குற்றச் சாட்டு என்பது நிரூபிக்க முடியாது. ஆனால் இனம், மொழி, சாதி, நிறம், பால் என்ற நிலையில் இருந்து தனியமைப்புக்களை உருவாக்கி ஐக்கியத்தை குலைத்தது இவர்கள் மாதிரியாக புத்தியீவிகள் என்பதை இவர்களின் கருத்தின் மூலமாகவே அறிக் கூடியதாக இருக்கின்றது.



சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.



எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை. இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்குத் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.



விழிம்பு நிலை?????




இதில் குறிப்பாக விழிம்பு நிலை பற்றி பார்க்க வேண்டும். விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விழிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும். இதுதான் இங்கு எழும் கேள்வி.




தலித்தென்று வரையறுக்க இவர்கள் யார் என்பது மாதிரியான இவ்வாறான கேள்வியை hவவி://வாநளயஅநெவ.உழ.ரம இணையத்தில் எழுதிய அன்பர் எழுப்பியிருந்தார்.



ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை,உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள்,அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?



விளிம்பு நிலை (டiஅயைெட ளவயபந) என்று வரையறுத்துக் கொண்டால் அவர்களின் சமூகப்பாத்திரம் தான் என்ன? hவவி://எரனலழ.உழஅ/எநைற_எனைநழ.pரி?எநைறமநலஃ1உன7ந96172575க48னஉய3 (இந்தப் பாடலை கேளுங்கள் இந்தப் பாடலும் இவ்வாறு கீழாக வரையறுத்துக் கொள்பவர்களை கேள்வி கேட்கின்றது.



இன்று சாதிய எதிர்ப்புநிலை என்று கூறிக் கொண்டு தனியே வகுப்புவாத அரசியலை முன்வைப்பவர்கள் கடந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே தமிழ் தேசியத்திற்கான ஒரு அடித்தளத்தை இட்டது என்பதை மறந்து விட்டனர்.




இவர்கள் இன்று முதலாளித்துவப் ஜனநாயகம் என்ற நிலைக்கு எதிராக சாதி என்ற குறுகிய வட்டத்தினுள் காரியமாற்ற முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சாதியத்தை ஒழிப்பதில்லை. மாறாக சாதிரீதியாக செயற்படுவதன் மூலம் முதலாளித்துவ ஜனநாயத்தை அடைந்து விட முடியும் என நம்பிக் கொள்கின்றனர் போலும்.


சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.




எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை.




இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்கும் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.




இதற்குத்தான் புதியஜனநாயகப் புரட்சியையும் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் ஊடாக புதிய கலாச்சாரப் புரட்சிக்கான வேலை திட்டத்தை புரட்சிகர சக்திகள் முன்வைக்கின்றனர். இதற்கு மாறாக எதிர் நிலைக்கான போக்கை சமூக மாற்றத்தை விரும்பாதவர்கள் முன்வைத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

Samstag, Februar 09, 2008

ஏமாற்றப்படுகிறோம்.

குறிப்பு:1

தமிழ்த் தலைவர்களும்,அவர்களது அந்நிய எடுபிடி அரசியலும்:



நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.


ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?


இது புரட்சிகரமானதா?


எங்கள் எதிரிகள் யார்?


அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?


இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!


அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!

இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை!இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!


இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!


இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.


அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.



இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!

1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.

வட ஈராக்க குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.

இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.

இங்கே,நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே,சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே!இதைக் கடந்த குண்டுவைப்புகள்,இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன.நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!

இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!




குறிப்பு:2



ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்.



"Der Berliner Soziologe Dr. Andrej Holm.
wird aufgrundseiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;
er wurde verhaftet."-Konkret vom 10.2007.




அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.


அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.


இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.

அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது, நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.


இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.


பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.


இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.



இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, Februar 02, 2008

டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்.

டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்.


டம்புல்ல அரச பண்ணையை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.அது, ஒரு அழகான விவசாயப்பண்ணை!இலங்கையின் அழகானவொரு சிறு நகரம்.இங்கே,இன்று மனிதர்கள் குண்டுவெடிப்பால் இறக்கின்றார்கள்!வன்னியில் மனிதர்கள்...யாழ்ப்பாணத்தில் மனிதர்கள்...மன்னாரில் மனிதர்கள்...மொனராக்கலவில் மனிதர்கள்...டம்புல்லவில் மனிதர்கள்... இலங்கை பூராகவும் கொலைக் களமாகிவிட்டது!

சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிவருடி இராஜபக்ஷவே இலங்கையின் மிகப்பெரும் பண்ணைக்காரன்-கொடுங்கோலனுக்கு நிகரான ஆட்சியை நிலைப்படுத்த அன்னியத் தயவை நாடி நாட்டையே நாசமாக்கி... அப்பாவிகளைக் கொல்லும் யுத்த முன்னெடுப்பைச் சிங்கள-தமிழ்த் தரப்புகளிடம் தோற்றிவைத்துத் தனது ஆட்சியை இனவாதத்தூடாகக் கட்டி வளர்த்துவிட்டுள்ளான்.பாவி!இதற்குடந்தையாக எதிர்கட்சிகள்,இயக்கங்கள் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் அரசியல் தீர்வின் பெயராலும் இந்தியாவின்-இலங்கையின் நலத்தின் பெயராலும் செய்து மக்களைப் பலியெடுத்து வருகிறார்கள்!

எனது பால்யக் காலத்தில் டம்புல்லையைத் தரிசித்திருக்கிறேன்.
டம்புல்ல மக்கள் மிக அழகான மனதுடையவர்கள்,
தமது கிராமத்தைப் போலவே-நகரத்தைப் போலவே!

எனது குஞ்சியய்யா இராமச்சந்திரன் டம்புல்ல பார்மில் தலைமை அதிகாரியாக இருந்தார்.அமெரிக்கக் கல்வி,அவரை அப்பண்ணைக்கு அதிகாரமிக்கத் தலைமைக்குத் தகமையாக்கியது.அரச ஜீப் வண்டியில் தம்புல்லக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்த எண்பதின் முற்பகுதி மிக அழகானது-அமைதியானது!அப்போதைய மனிதர்களும் அமைதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.இன்று, இனவாதம் என்றுமில்லாதவாறு வளர்த்தெடுக்கப்பட்டு மனிதர்கள் கொலைகளை ஆதரிக்கும் மனநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

என்னவொரு இலங்கை?

அழிவு அரசியலால் அற்புதமாக வாழ்ந்த இனங்கள் பிளவுபட்டுப் போகிறார்கள்!

தென்னாசியவிலேயே அதிக ஜனநாயகப்பண்பைக்கொண்டிருந்த இலங்கை-இன்று, இராணுவச் சர்வதிகாரத்துக்குள் உள்வாங்கப்பட்டு அராஜகத் தேசமாக விரிந்து கிடக்கிறது.இது, தமிழரை,இஸ்லாமியரை,சிங்களவரை மட்டுமல்ல இலங்கையின் அற்புதமான சூழலையே அழித்து வருகிறது!அதீத யுத்த முனைப்புகள் கொட்டும் குண்டுகள் இயற்கை வளங்களை அற்புதமான காடுகளைக்கூட நாசமாக்கிச் சுடுகாடாக மாற்றுகிறது.தமிழருக்குப் பசி தீர்த்த பனைகளையே இந்த யுத்தம் அதிகமாக அழித்துத் தமிழரின் வயிற்றைத் தொடர்ந்து காயப்போடுகிறது!இப்போது, மக்களின் தலைகளை உருட்டிவிடும் குண்டுகளை இடம்வலம் தெரியாதபடி எங்கும் புதைத்தபடி நரவேட்டையாடுகிறது!

மனிதர்கள்,தாம் சாவதற்கான ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணெதிரே காணவேண்டிய சூழலை இலங்கையெங்கும் தரிசித்தபடி...

இலங்கையின் எந்தப் பகுதியும் இனி அமைதியானவொரு வாழ்சூழலை இலங்கை மக்களுக்குத் தரமுடியாது!

இலங்கைத் தேசம் மக்களை வருத்தும் ஆட்சிக்குள் நிலைப்பட்ட சந்தர்ப்பம் தற்செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்டு வழி நடாத்தப்படுகிறது.இலங்கையின் கட்சிகள் இலங்கையை ஆளத் தகுதியற்றதாக்கப்பட்டு அன்னிய ஐ.நா.படைகள் இலங்கைக்குள் கால் வைக்கும் சூழலுக்கு வித்திடப்படுகிறது!அதற்காகவே அப்பாவி மக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள்.தமிழ்,சிங்கள இனங்களுக்குள் படுகொலையைச் செய்யும் ஒவ்வொரு குண்டுகளும் அன்னியத் துருப்புகள் இலங்கையைத் தளமாக்க முனையும் அரசியலோடு சம்பந்தப்பட்டது.

எந்த அமைப்பு-குழு,மாபியாக்கள்-அரசுகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள்?

இலங்கையின் மக்கள் பசிக்கும்,பட்டுணிக்கும் நோய்க்கும் முகங்கொடுத்த காலம்போய், இப்போது யுத்தக் கிரிமனல்களின் கொலைகளுக்கும்,குண்டுகளுக்கும் தமது அன்றாட வாழ்வைச் சிதைக்கும் பயங்கர வன்முறைக்குள் உயிரைவிட வேண்டிய அரசியலை எந்த வர்க்கம் உற்பத்தியாக்கியது?

பாகிஸ்தான் அதிபர் முஸ்ராப் இலங்கையின் பயங்காரவாதத்தை அழிக்க உதவுவதாகச் சொல்கிறார்.தனது தேசத்தின் அதீத பயங்கரவாதத்தைத் தானே செய்தபடி!

நாம் அரேபியக் குறைவிருத்தி இனமோ அல்லது பாகிஸ்தானின் கல்வியறிவற்ற மதஅடிப்படைவாத மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தவர்களில்லை!அன்றிச் சினிமாவே-இந்தியத் தேசியமே உலகமெனவெண்ணும் இந்தியப் பெருங்குடிகளோ அல்ல!

எமக்கென்றொரு வரலாறுண்டு.

மிகவுயர்ந்த மனித நடத்தையின்-ஜனநாயக-வாழ்வு விழுமியத்துக்கு இலங்கை மக்கள் சொந்தக்காரர்கள்.

எங்கள் தேசம் அடிப்படைவாதக் கிரிமினல்களை அதிகமாகக்கொண்டிருக்கவில்லை!ஆனால்,இன்றைக்கு பாகிஸ்தானுக்கு நிகராக இத்தேசம் பயங்கரவாதிகளால் நிறைந்து சுடுகாடாக மாறுகிறது.சிங்கள இராணுவம் முழுமையான பயங்கரவாதிகளால் வழி நடாத்தப்படுகிறது.தமிழ் விடுதலை இயக்கங்கள் அன்னிய அரசுகளுக்காகக் கண்மண் தெரியாத கொலைக்காரர்களாக மாற்றப்பட்டபின் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின் இருப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!சிங்களப் பயங்கரவாத இராணுவத்தின் நிலைப்பு, இலங்கைத் தேசம் முழுவதையும் அதன் பரவலான அடக்குமுறைக்குள் உட்படுத்தி இலங்கையிலிருந்த அனைத்து மனித விழுமியங்களும் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஊடகங்கள் சிங்களப் பாசிச இராணுவத்தைத் தேசத்தைக் காக்கும் படையணியாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து, அதன் இருப்புக்கும்,நிலைப்புக்கும்,அன்னியச் சேவைக்கும் மக்களிடம் ஆதரவைத் தேடித் தருகின்றன.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வலுவான அடக்குமுறைகள் நிகழும்போது இயக்கவாதம் மேலோங்கியும்,குறிப்பிட்ட அமைப்பைத் தொடர்ந்து ஏகபோகமாக நிலைப்படுத்தவும் இத்தகைய குண்டுதாக்குதல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்படுகிறது.இது மக்களைத் தொடர்ந்து இனவாதத் தீயில் சிக்க வைத்துத் தொடர்ந்து இனவாதிகளாகவும்,மக்களினங்களுக்குள் பரபஸ்பர இணக்கவுறவைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் இருக்கிறது.இத்தகையவொரு சூழலே பற்பல இயக்க-கட்சி அரசியலுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது.மக்கள் நலனற்ற அடியாட்படை அரசியலுக்கு இவையே கதியாகவும் இருக்கிறது.

இதை முடிவுக்குக்கொணர்ந்து,மக்களின் பரஸ்பர நட்போடும்,உறவோடும் இலங்கையில் நியாயமான தீர்வை எட்டி இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளத் தகவமைக்கும் அரசியல் நடைமுறைகளை எங்ஙனம் கட்டியொழுப்புவது அவசியமோ,அதேயளவு இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயவுரிமைசார்ந்த சுயாதிக்கம் அவசியமாக இருக்கிறது.இதை மறுத்தபடி இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் குறித்துப் பேசுபவர்கள் மொத்தத்தில் இலங்கையின் அழிவு அரசியலையே நிலைப்படுத்த முனைகிறார்கள்.

இலங்கையின் இன்றைய சூழல் அன்னிய நலன்களின் அதீத ஆர்வங்களுக்கான செயற்கையான சூழலாகும்.

மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பப்படும் சூழல் மிகத் தற்காலிகமானவை.மக்களை அதிலிருந்து மீண்டுவர இன்றைய கட்சிசார்-அரச,இயக்கசார் ஊடகங்கள் விடுவதாகவில்லை!ஊடகங்களின் தனியுடமையானது இன்றைய இந்த அவலக் கொலைகளுக்குத் தீனிபோடுவதாகவே இருக்கிறது.பணக்கார-அதிகாரக் குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் இன்றைக்குத் தொடர்பூடகங்கள் தொலைக்காட்சியாகவும்,வானொலியாகவும்,பத்திரிகையாகவும் இருக்கும்போது மக்களைக் குரோதவாதிகளாகவும்,இனவாதிகளாகம் தமது நலன்களைச் சார்ந்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இணையங்களுடாகவே மக்களை ஒருமைப்படுத்தும் பரப்புரைகளைச் செய்யக்கூடியதாக இருக்கிறது.எனினும், இணையச் சஞ்சிகைகள் பரந்தபட்ட மக்களை இன்னும் அண்மிக்கவில்லை!இது, மக்களைக் கூறுபோட்டுக் கொலை செய்யும் அரசியலை முன்னெடுக்கும் அன்னிய-உள்நாட்டு மாபியாக்களை நம்பி மக்கள் கொலைப்பட்டுப் போகும் விட்டில் பூச்சிகளாக இலங்கை மக்களின் வாழ் சூழல் மாற்றப்பட்டதையே இன்றைய தம்புல,மன்னார்,மொனராக்கல,யாழ்ப்பாணக் குண்டுவெடிப்புகள் சொல்கின்றன-மெய்பிக்கின்றன!

இதிலிருந்து இலங்கையை மீட்பதென்பது ஒரு தசாப்பதகாலப் போராட்டமாகவே இருக்கப் போகிறது.

இதற்குத் தகமையுடைய முற்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் மிக மெலிதானதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.இது, மக்களுக்கு விடிவைத் தரும் செயற்பாடுகளைச் செய்வதற்குகந்த முனைப்பைக் கொண்டிருக்கவில்லை!

எனவே,அன்னியப்படைகளின் வருகைக்கு ஜ.நா. ஒப்புதல் வழங்க,இலங்கை இன்னொரு அவ்கானிஸ்தானாக மாறும்.அங்கே,காலாகாலத்துக்குமான ஒடுக்குமுறை உழைப்பவர்களின் அரச-இயக்க முன்னெடுப்புகளைத் தடுத்தபடி மாறிவரும் இந்தியத் துணைக்கண்ட ஆளும் வர்க்க நலன்களை மேற்குலகத்தோடு இணைத்தபடி இன்னும் வளத்தெடுக்கும் ஒரு அராஜகச் சர்வதிகார அரச-கட்சி இராணுவத் தன்மையிலான ஆட்சியை நமது தேசங்களுக்குத் தீர்வாக உலகம் செய்து முடிக்கும்.

இதற்குத்தான் ஈழப்போராட்டம் வழிவகுத்து நடாத்தப்பட்டது?தூ...


ப.வி.ஸ்ரீரங்கன்.
02.02.2008