Donnerstag, November 19, 2009

சோபா சக்தி தன்னை...

மீனா-சோபா சக்தி இடையிலான
உரையாடல் குறித்த எனது புரிதல்: 
 
ன்றைய நமது அரசியல்-சமூக வாழ்வில்,குறிப்பிட்டுச் சொல்லக் கூடியளவுக்குப் பலமான அரசிற் குரல்கள் கிடையாது.
 
 
இந்த குரல்களை அழிப்பதற்கான அனைத்து வடிவத்தையும், நமது எதிரிகள் புலிகள்மூலமும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடாகவும் செய்து முடித்தார்கள்.தமிழ்பேசும் இலங்கை மக்களது எதிர்காலம் எப்பவும்போலவே ஆதிக்க சக்திகளிடம் மண்டியிட்டுக்கிடக்கிறது.
 
 
இந்தச் சூழலில் நாம் பலமாகக் காரியமாற்றவேண்டிய நிலையில், எமக்குள் தெளிவற்ற பல அரசியற் போக்குகளை மீளவுற்பத்தி செய்வதற்குப் பிற்போக்குவாதத் தமிழ்-புலி விசுவாசிகள் முயலுகின்றனர்.இவர்களின் பின்னே உலக-இந்திய ஆளும் வர்க்ககங்கள் ஒளிந்திருக்கின்றன.இஃது, இன்றைய துர்ப்பாக்கிய நிலை.
 
 
இதிலிருந்து ஒடுக்குமுறைக்குள்ளாகிக்கொண்டிருக்கும் இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மீள்வதற்கு, உகந்த அரசியல் தலைமையை இந்தச் சிறுபான்மை இனங்கள் இன்னும் பெற்றுவிடவில்லை.இந்த வெற்றிடம், அவர்களது விடுதலைக்கு மாறாக அவர்களை ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைகளாக்கிவிட்டுள்ளது-இது,இன்றைய யதார்த்தம்!
 
 
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வளவு மோசமான-இருண்ட நிலையை இலங்கைச் சிறுபான்மை இனங்கள் என்றும் பெற்றிருக்கவில்லை.
 
 
இன்றைய உலகமயப் பொருளாதாரச் சூழலில், இது, இப்படித்தாம் இருக்குமென எவரும் அதற்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முடியாது.இதை, உறுதிப்படுத்தக்கூடிய உலக அரசியலின் உள்ளார்ந்த போக்குகளும்,அதுள் இலங்கை ஆளும் வர்க்கத்தின் இடம்,அவர்களால் வழி நடாத்தப்படும் அரசியல்,இலங்கைப் பொருளாதாரத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களை எங்ஙனம் கையாளும் என்பதற்கு,புலிகளின் தோல்வி மிக நல்ல பாடமாகவே நம்மிடம் உரைக்கப்படுகிறது.
 
 
இது,விட்டுவைத்திருக்கும் இந்தப் பாடம் மேலும் குழப்பகரமான திசைவெளியினூடாக "நாடு கடந்த தமிழீழ அரசு,பாராளுமன்றமென" எமது மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது,அதைத் தடுத்து நிறுத்தியாகவேண்டிய பணி குறித்துப் பேசப்பட வேண்டும்.
 
 
இது, குறித்துத் தமிழ்ச் சூழலில் மிகக் காத்திரமான படைப்பாளியும்,முன்னாள் போராளியுமான சோபா சக்தி தன்னை நேர்கண்டவரிடம் மிக தெளிவாகவே வலியுறுத்துகிறார்.
 
 
அவசியமான பணிகள் குறித்து அங்கே திறன்வாய்ந்த விவாதத்தைச் செய்கிறார் சோபா சக்தி.
 
 
இதிலிருந்து நாம் அவசியமான பணிகளை இனங்காணமுடியும்.
 
 
இந்தப் பணிகள் நமது மக்களது அரசியல்-சமூக வாழ்வை எதிர்காலத்தில் தீர்மானிப்பது.
 
 



 
 
இதை, நாம் உணர்ந்துள்ளபோதும்,நமது மக்களுக்குள் மீளத் தலைத் தூக்கும் புலிகளதும்,இலங்கை-இந்திய அரசுகளதும் அரசியலை முன்னெடுக்கும் சக்திகள், இத்தகைய பணிகளை முடக்குவதற்கேற்ற பொய்யான "தமிழ்த்தேசிய"மாயைகளை மீளக் கட்டியமைக்கின்றார்கள்.இது, குறித்து நாம் இனம்காணும் கெடுதிகள் புலிகளது ஆயுத ஒடுக்கு முறைக்கு ஒப்பானவொரு நிலையைக் கொண்டியங்குகிறதென்பதைச் சொல்லுகிறோம்.
 
 
கடந்த காலமானது மிகச் சக்தி வாய்ந்த மக்களது ஆதரவுத்தளத்தோடும், புலிகளெனும் பாசிச இயக்கத்தோடும்"தமிழீழ"க் கனவை நமக்குள் வளர்த்திருந்தது.இத்தகைய கனவு தந்த அறுவடையாக நாம் நமது சமூகசீவியத்தை இழந்து, அகதிகளாகி முட்கம்பிகளுக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம்.நம்மை அடிமைகொண்டவர்கள்,நமது மக்களுக்குள் இருக்கும் ஒரளவு கற்றவர்களைப் பயன்படுத்தி, மீளவும், நமது அரசியலையும்-விடுதலையையும் அந்நியச் சக்திகளுக்கேற்றவாறே முன்னெடுக்கமுனைவதின் தொடரில், எமக்குள் பலவகையான குழறுபடிகளைத் தொடர்கின்றனர்.இத்தகைய குழறுபடிகளில் பல மக்கள் சேமிப்பின்மீதான புலம்பெயர் புலி அரசியலாக விரிகிறது.இது,தாம்கொண்ட மக்கள் செல்வத்தை-நிதிகளை மெல்லத் தமதாக்கும் முயற்சியில் அந்நியச் சக்திகளுக்கேற்ற அரசியலை நமக்கான விடுதலை என்கின்றன.
 
 
இது மோசமானது.
 
 
இத்தகைய புலிப் பினாமி அரசியலாளர்களை தமிழ் நாட்டின் கோடியிலிருந்து, ஐரோப்பியத் தெருக்கள்வரை இனம்காணமுடியும்.என்றபோதும் எமது மக்கள் அனைவரையும் பின்தொடரும் சூழலே இப்போது நிலவுகிறது.இதன் தெரிவில் மக்களது மனங்களை வென்று, அவர்களை ஆதிக்க சக்திகளது நோக்குக்கமைய "ஏசு சீவிக்கிறார்"எனும் மதத்துக்குள் இழுத்துச் சிதைப்பதற்கும், பற்பல முயற்சிகளை மதவாதப் போதகர்களும் அவர்கள் பின் நிற்கும் எஜமானர்களும் ஒரு யுத்த முனைப்போடு செய்து வருகின்றார்கள்.வன்னியுள் வதைபட்ட மக்களது மனங்களை "உதவி"எனும் பெயரில் இவர்கள் அடிமை கொள்வது நடந்தேறுகிறது.
 
 
தமிழின-புலியழிப்புப் போராட்டத்தின் பின்பான இன்றைய சூழலில், பொதுத் தளத்தில் பரவலாகப் பிரச்சனைகளைப் பேசவேண்டியவொரு சூழலில் சோபாசக்தியினது நேர்காணல் முக்கியமானவொரு உண்மையைச் சுட்டுகிறது.அஃது, அனைத்துவகையான ஒடுக்குமுறைகளை முதலில் இனங்காணவேண்டியதையும்,புலிகளது இன்றைய "அரசியலின் தெரிவு" எது,என்பதையும் கேள்வி கேட்கிறது.
 
 
இலங்கை அரசினதும்,இந்திய-உலக அரசுகளினதும் பின்னால் நிற்கும் தமிழ்த் தலைமைகளது பாத்திரம்,அவர்களது இன்றைய அரசியல் குரல்களையும் பரவலாக விமர்சிக்கிறது, சோபா சக்திக்கும்-மீனாவுக்கும் இடையிலான இந்த நீண்ட உரையாடல்.கூடவே, புலிகளது இயக்கவுட்கட்டமைவில் பரவலான தமிழ் மக்களுக்கு எதிரான போக்குகள் எங்ஙனம் நிலவியதென்றும் விளக்குகிறது.
 
 
இது,ஒரு வகையில் பரவலாகப் பேசப்பட்ட விடையமெனினும்,புலிகளது அமைப்புக்குள் நிலவிய சமூக ஒடுக்குமுறைக் கூறுகளைப் புலிகளது அமைப்புக்குள் இருந்த முதன்மையான படைப்பாளி பேசுவதென்பதால் அதற்கான உண்மைத் தன்மை அதிகமாகிறது.
 
 
இங்கே,உண்மைகளை இனங்காண்பதென்பது ஒரு வரலாற்றுத் தேவையாக நமக்கு முன் இருக்கிறது.
 
 
இதிலிருந்து பெறப்படும் படிப்பினைகள் மீளத் தவறுகளைச் செய்வதிலிருந்துவிடபட அவசியமானது.நாம்,எமது மக்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து இத்தகைய உண்மைகளைக் கண்டடையவும்,நேரிய அரசியல் பாதையை இனம்காணவும் அவசியமான தர்க்கத்தைச் செய்கிறார் சோபா சக்தி.இதன் வெளியில் கண்டடைய முனையும் அரசியல் மீளவும், புலிவகைப்பட்ட குறுந்தேசியவாத அரசியல் கோரிக்கைகுளுக்குள் முடங்க முடியாது.எனவே,சோபா சக்தியின் குரலை இங்கே மீள் பதிவிடுகிறேன்.இது, அவசியமான வரலாற்றுத் தேவையின்பால் நான்கொண்ட தெரிவே என்பது, என்வரையான விளக்கம்.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
வூப்பெற்றால்,
ஜேர்மனி
 
19.11.2009




என்னுடைய தேசிய இனம்: இலங்கை அகதி


நேர்காணல்: மீனா
 

ஈழத்தின் மரணப் போராட்டங்களை; சாதிய, இன, அதிகார வெறிகளால்
மக்களுக்கு நேர்ந்த அவலங்களை, பிறந்த மண்ணைப் பிரிந்த அகதியின் மனநிலையை;
அழுகுரலெடுக்கும் பெருஓலங்களாலோ, ரத்தக் கண்ணீர்களாலோ அல்லாமல் அசாதாரண
எழுத்துகளால் உறைய வைத்து நமது நனவிலியைப் பிடித்தாட்டிய தமிழின் ஆகச்சிறந்த
கதைசொல்லி, ஷோபாசக்தி. நவீன இலக்கியத்தில் தனி முத்திரையைப் பதித்ததோடு இடதுசாரி
அரசியல் வழிநின்று அரச பயங்கரவாதத்துடன் புலிகளின் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து
கண்டித்து வருகிற வகையில், புலிகளைப் புனிதத் திருஉருக்களாக கட்டமைப்பவர்களால்
உட்செரிக்க இயலாதவர். பதினைந்து வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
போராளியாக தமது அரசியலைத் துவக்கி இன்று புலம்பெயர் சூழலில் மாற்று அரசியலை
முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழர்களைக் காப்பதற்கே
யுத்தம் என்று பச்சையாய் புளுகி மீண்டுமொரு இனப்படுகொலையை அரங்கேற்றிய ராஜபக்சே
அரசு, யுத்ததிற்கு பிறகும் பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு தமிழர்களைத் தின்று
தீர்க்கிறது. இந்நிலையில், ஈழத்தமிழரின் சனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து
குரலுயர்த்தி வருகிற ஷோபாசக்தியோடு ஈழத்தமிழரின் நிலைகுறித்தும், தமிழ்ச்சூழலில்
நடைபெற்று வருகிற ஈழ அரசியல் குறித்தும் ‘அம்ருதா’ இதழிற்காக உரையாடினோம்.
அவற்றிலிருந்து..

 
 
மீனா: போர்க்குற்றங்களைத் தொடர்ந்தும் தமிழ் இளைஞர்களின் நிர்வாண படுகொலைகள், திசநாயகம் கைது என அடுக்கடுக்காய் இனவெறி வெட்ட வெளிச்சமாகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இதனை கண்டித்திருக்கின்றன. போர்க்குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அழுத்தங்கள் தொடர்வதன் மூலம் தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?
 
ஷோபாசக்தி: ‘சானல் நான்கு’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோ ஆதாரங்களைப் பொய் என்கிறது இலங்கை அரசு. எந்த கண்டனத்திற்கும் அஞ்சாமல் திசநாயகத்தின் கைதையும் நியாயப்படுத்தி வருகிறது. சர்வதேச சமூகத்தின் மனிதாபிமானக் குரலை ராஜபக்சே மயிரளவும் மதிப்பதில்லை. சமீபத்தில் நாட்டிலிருந்து யுனிசெப் அதிகாரியும் வெளியேற்றப்பட்டார். இலங்கை அரசின் பயங்கரவாதம் எந்த அழுத்ததிற்கும் வளைந்து கொடுக்காது.
 
 
மீனா: ஈழத்தில் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்கள் வசதிகளுடன் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் இந்து என்.ராம் போன்றவர்கள் சொல்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: கிடையாது. அதெல்லாம் சுத்த அயோக்கித்தனமான பேச்சு. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால் கூட மக்களை முகாமில் வைத்திருக்க மகிந்த ராஜபக்சேவிற்கு உரிமை கிடையாது. மக்களை அவர்களது சொந்த நிலங்களிலிருந்து பிரித்து முகாம்களில் கட்டாயமாக வைத்திருப்பதை அனுமதிக்கவே முடியாது. கண்ணிவெடி அச்சுறுத்தல் என்றெல்லாம் அரசு சொல்வது அப்பட்டமான பொய். கண்மூடித்தனமாக விமானங்களிலிருந்து குண்டு வீசியும் எறிகணைகளை ஏவியும் மக்களைக் கொன்றவர்கள், கண்ணி வெடியிலிருந்து மக்களைப் பாதுகாப்பது பற்றியெல்லாம் பேசுவது நம்பக்கூடியதல்ல. மகிந்த அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலை. அந்த இனப்படுகொலை இப்போது வெவ்வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது. அதிலொன்றுதான் இந்தக் கட்டாயத் தடுப்பு முகாம்கள். இந்த முகாம்களிலிருந்து மக்களை விடுவிக்குமாறு அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. அத்தகைய பிரசார இயக்கங்களை வலுப்படுத்துவதும் அந்த மக்களின் விடுதலைக்கான உடனடி வழிகளைக் கண்டடைவதும் நம் முன்னாலிருக்கும் இன்றைய முதலாவது சவாலும் பணியும்.
 
 



 
மீனா: தடுப்பு முகாம்களில் இருக்கும் அகதிகளுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்களா, அவர்களின் நிலை எப்படியிருக்கிறது?
 
 
ஷோபாசக்தி: எனது உறவினர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களில் இளவயதினர் பணம் செலுத்தித் தங்களை அங்கிருந்து மீட்க உதவி செய்யுமாறு மன்றாடுகிறார்கள். இராணுவத்திற்கோ அல்லது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத இயக்கங்களைச் சேர்ந்தவர்களிடமோ லஞ்சம் கொடுத்தால் அவர்கள் முகாம்களிலிருந்து அழைத்துச் சென்று வெளியே விடுகிறார்கள். ஆளையும் கொண்டுபோய்ச் சேர்க்கும் இடத்தையும் பொறுத்து மூன்று இலட்சத்திலிருந்து பத்து இலட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அங்கே கைதுகள் நிகழ்கின்றன. ஒரு முகாமில் நாளொன்றுக்கு முப்பது வரையான இளம் வயதினர் கைது செய்யப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்; குறிப்பாகக் கைதுசெய்யப்படும் யுவதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படியிருக்கின்றன என்ற எந்த அறிக்கையும் தகவலும் அரசால் வெளியிடப்படுவதில்லை. அவை நலன்புரி முகாம்களல்ல, சிறைச்சாலைகள்.
 
 
மீனா: சொந்த மண்ணிலேயே கைதிகளாய் அடைக்கப்பட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் புலிகளின் நிர்வாகத்தில் இருந்த போது எப்படியிருந்தார்கள்?
 
 
ஷோபாசக்தி: புலிகளிடம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஒன்றும் இந்தத் துன்பங்களிற்குக் குறைந்ததல்ல. 1990களிலிருந்தே புலிகளும் ‘பாஸ்’ என்றொரு நடைமுறையைத் திணித்துப் பணம் பெற்றுக்கொண்டுதான், தங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்த இளவயதினரை வெளியேற அனுமதித்தார்கள். குழந்தைகளையும் இளைஞர்களையும் கட்டாயமாக அரைகுறைப் பயிற்சி கொடுத்து யுத்த முன்னரங்கத்திற்கு அனுப்பிவைத்துச் சாகக் கொடுத்தார்கள். இயக்க விரோதிகள், துரோகிகள், சமூகவிரோதிகள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்ற குற்றச்சாட்டுகளில் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டவர்களின் கணக்குத் தனியானது. ஆயிரக் கணக்கானோர் புலிகளின் பங்கர் சிறைகளில் நாயினும் கீழாக வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 2002க்குப் பிந்திய சமாதான காலத்தில் மட்டும் தங்களுக்கு ஒவ்வாத 400க்கும் மேற்ட்ட தமிழ் அரசியலாளர்களையும் எழுத்தாளர்களையும் அறிவுஜீவிகளையும் புலிகள் கொன்றிருக்கிறார்கள் எனத் துல்லியமாக அய்.நா. அவையின் சமூகப் பொருளாதரக் கவுன்சிலின் ஆய்வாளர் பிலிப் அல்ஸ்டன் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.
 
 
மீனா: ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் மெனிக் பண்ணையின் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கும் தமிழர்களுக்காகவும் ஆதரவாய் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள், நீங்கள் குறிப்பிடுபவை பற்றியும் தொண்ணூறுகளில் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் பற்றியும் பேசுவதில்லையே, ஏன்?
 
 
ஷோபாசக்தி: பாரிசில் இருந்து வெளிவரும் ‘ஈழமுரசு’ பத்திரிக்கை 12 செப்டம்பர் 2009 இதழில், ‘பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் உதவினார்கள்’ என்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. காலம்காலமாக தமிழ் தேசியவாதிகளும் -குறிப்பாக - புலிகளும், முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட முறையில் இனப்பகைமையை பிரசாரம் செய்து வருகிறார்கள். யாழ்ப்பாண சாதிய உணர்வு தலித்துகளை ஒடுக்கியதைப் போல தமிழ்த்தேசிய உணர்வு முஸ்லீம்களை ஒடுக்கியது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க மறுப்பவர்களை ஆதிக்கத்தின் எடுபிடிகள் என்றல்லாமல் வேறெப்படி புரிந்துகொள்வது.
 
 
மீனா: இப்போது, இலங்கை அரசோடு இயைந்துபோய் தமிழர்களிற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்றவாறாக ஈழத் தமிழ் அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினர் பேசுகிறார்களே?
 
ஷோபாசக்தி: ஆயுதப் போராட்டத்தினால் கடந்த முப்பது வருடங்களில் நாம் சந்தித்த இழப்பு மிகப் பெரிது. ஒரு சின்னஞ் சிறிய இனமான எங்களால் தாங்க முடியாத அளவிற்கு இழப்புகள் ஏற்பட்டுவிட்டன. ஆயுதப் போராட்டம் என்பது இப்போது இலங்கையில் சாத்தியப்படாத ஒன்று. சர்வதேசப் புறச் சூழல்களும் ஆயுதப் போராட்டத்திற்குச் சாதகமாயில்லை. எனவே, வேறுவகையான அரசியல் முன்னெடுப்புகளாலும் போராட்ட முறைமைகளிற்குள்ளாகவும் அழுத்தங்கள், பேச்சுவார்த்தைகள் ஊடாகவுமே இனி ஈழத் தமிழர்களின் உரிமைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இலங்கை அரசு தனது பேரினவாத அரசியல் என்ற நிலையிலிருந்து கீழிறங்காதவரை அரசோடு இயைந்துபோவது என்பதெல்லாம் அயோக்கித்தனம். இந்தப் பாசிச அரசை எந்த விதத்திலும் நியாயப்படுத்தும் போக்குகள் ஈழத் தமிழர்களிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இலங்கை மக்களிற்குமே இழைக்கப்படும் துரோகம்.
 
 
மீனா: போராட்டத்தை முன்னெடுக்க சமீபமாய் நாடு கடந்த அரசாங்கம் அமைப்பது பற்றி பேசப்பட்டு வருகிறது. இந்த முறை எவ்வளவு சாத்தியம்?
 
 
ஷோபாசக்தி: எங்கள் மீது தன்னிச்சையாக அரசையும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தும் அதிகாரத்தை இவர்களிடம் யார் கொடுத்தார்கள்? இவர்களின் நாடுகடந்த அரசின் அரசியல் பண்பு என்ன? வலதா, இடதா, இல்லைப் பாசிசமா? முதலில் அதைச் சொல்லட்டும். எங்கள் ராஜினி திரணகமவையும் விஜயானந்தனையும் கொன்றவர்களுடன் சேர்ந்து பீற்றர் சால்க்கும் கரண் பார்க்கரும் எங்களுக்கு அரசமைத்துக் கொடுக்கப் போகிறார்களா? புலிகளின் போராட்டம் ஆயுதப் போராட்டமாயிருந்தாலென்ன, அரசியற் போராட்டமாயிருந்தாலென்ன அவர்களின் அரசியலில் அறம் வந்து சேரும்வரை அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசமெங்கும் சிதறிக்கிடக்கும் புலிகளின் சொத்துகளையும், புலிகளும் அவர்களின் முகவர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சுகித்த அதிகாரங்களையும் காப்பாற்றிக்கொள்ளவே இந்த நாடுகடந்த அரசாங்கம் என்ற கண்துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.
 
 
மீனா: இப்பொழுதும் மக்களிடம் பணம் வசூலிப்பது தொடர்கிறதா?
 
 
ஷோபாசக்தி: இன்றுள்ள சூழலில் புகலிடத்தில் கட்டாயக் காசு கேட்டால் சனங்களே காவற்துறையிடம் புலிகளைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனாலும், கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் புலிகள் திரட்டிய ஏராளமான பணம் வர்த்தக நிறுவனங்களாகவும் இந்துக் கோயில்களாகவும் தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களாகவும் திரண்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் இப்போதும் இலாபம் சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பணத்தைக் பகிர்ந்துகொள்ளத்தான் வெளிநாட்டுப் புலிகள் இப்போது தமக்குள் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் புலிகள் மீது கொண்டிருந்த அச்சம் பெருமளவு நீங்கிவிட்டது. புகலிடப் புலிகள் தங்களுக்குள் தாங்களே அடித்துக்கொண்டிருப்பதால் புலிகள் மீது சனங்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்ச அனுதாபமும் பயமும் காணமலேயே போய்விட்டது. இணையங்களைத் தொடர்ச்சியாகக் கவனிப்பவர்களால் புலிகளை முன்பு தீவிரமாக ஆதரித்த நபர்களே இப்போது இந்த வெளிநாட்டுப் புலிகளைக் கண்டித்துப் பேசுவதைத் தெரிந்துகொள்ள முடியும்.
 
 
மீனா: ‘புலிகளின் வீழ்த்தப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், அவர்களின் தவறுகளை விமர்சிப்பதால் இனிமேல் ஆகப்போவது ஒன்றும் இல்லை‘ என உங்களைப் போன்றவர்கள் பற்றி பரவலாக ஒரு கருத்து நிலவுகிறதே?
 
 
ஷோபாசக்தி: புலிகள் தாங்கள் மட்டும் அழியவில்லை. தங்களோடு சேர்த்து ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வையும் அழித்துவிட்டுத்தான் போயிருக்கிறார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாகவே நமது மக்கள் அரசியலிலிருந்து புலிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மக்களுக்கு விமர்சனங்களேயில்லாமல் புலிகளை ஆதரிக்கும் ஒரு கடமையைத் தவிர வேறெந்த அரசியல் உரிமைகளையும் புலிகள் வழங்கவேயில்லை. ஈழத்து அரசியலில், ஒரு ஈழக் குடிமகனது அரசியல் உரிமை, பிரபாகரனின் சிந்தனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிவது என்பது மட்டுமாகவே வரையறுக்கப்பட்டிருந்தது. புலிகள் ஆதரவைத் தவிர்த்து வேறெதையும் பேசும், எழுதும் உரிமைகள் துப்பாக்கி முனையில் மக்களிற்கு மறுக்கப்பட்டிருந்தன. புலிகளைத் தவிர வேறெந்த அரசியல் போக்குகளையும் புலிகள் தமது பரப்பில் அனுமதிக்கவில்லை. இதைப் புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்றார்கள். நாங்கள் பாசிசம் என்றோம்.
 
 
சாதியொழிப்பு இயக்கங்கள், சீர்திருத்த இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எவையுமே அங்கே இயங்க அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் தடையை மீறிய போதெல்லாம் கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் மாற்று அரசியலாளர்களும் தலித் மக்களின் வழிகாட்டிகளும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் புலிகளால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். சிறைப்பிடிக்கப்பட்டு மனித நாகரிகமே இல்லாமல் நிர்வாணமாக வருடக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்கள். ஒரு வருடமல்ல, இருவருடமல்ல, இருபத்தைந்து வருடங்களாகப் புலிகள் இந்த அட்டூழியங்களைச் செய்தார்கள். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகுதான் புலிகள் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவத்தொடங்கினார்கள் என்பதில்லை. அவர்கள் தங்கள் பிறப்பிலிருந்தே அப்படித்தானிருந்தார்கள்.

புலிகளிடம் அரசியலே இருக்கவில்லை. அவர்கள் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டத்துடன் இயங்கினார்கள் என்று இப்போது புதிது புதிதாய் சிலர் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால், அது தவறான கண்டுபிடிப்பு. புலிகளிடம் தெளிவான வலதுசாரி அரசியல் நிலைப்பாடும் மேற்கு ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடும் கலாசார அடிப்படைவாதமும் இருந்தது. அவர்கள் நடத்திய இஸ்லாமியச் சுத்திகரிப்புக்குப் பின்னால் ஒரு உறுதியான குறுந்தமிழ்த் தேசிய அரசியலிருந்தது. அவர்களின் இத்தகைய படுபிற்போக்கான அரசியல் வேலைத்திட்டம் அரசியல் எதிரிகளையும் தங்களை மறுப்பவர்களையும் விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்ற கேவலமான அரசியலில் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்தியது. எல்லாவித முற்போக்கு அரசியலையும் ஈழப் புலத்திலிருந்து துடைத்தெறிந்த புலிகள், அவர்களின் கொலை அரசியலை மட்டுமே அங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்தக் குறுந்தமிழ்த் தேசியவாதக் கொலைகார அரசியலை செல்வாக்கு இழக்கச் செய்து, மாற்று அரசியலை நோக்கி நகருவதற்கு நம் மக்களிடம் நாம் புலிகளின் தவறுகளையும் அரசியலையும் நுணுக்கமாகத் தோலுரித்துக்காட்ட வேண்டியிருக்கிறது.
தவறுகளைப் பேசுவது, குற்றங்களைப் பட்டியலிடுவதற்காக மட்டுமல்ல; பாடங்களைக் கற்றுக்கொள்வதற்காகவும் தான்.
 
 
மீனா: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இனி உரையாடலுக்கு தயார் என புலிகள் அறிவித்திருக்கிறார்களே?
 
 
ஷோபாசக்தி: புலிகளுடைய இன்றைய அரசியல் பிரபாகரன் காலத்து அரசியலின் நீட்சிதான். ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு வேறுவழிகளில் போராடப்போகிறோம், எல்லோருடனும் உரையாடத் தயாராயிருக்கிறோம் என்ற அவர்களது அறிவிப்புகள் வெளியானாலும் அவர்கள் புலிகளின் கடந்தகால பிற்போக்கு அரசியலிலிருந்து தங்களது அரசியல் வேலைத்திட்டத்தை எவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அவ்வகையான எந்தவொரு அரசியல் மாற்றத்தையும் அவர்களிடம் காண முடியவில்லை. அவர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய அரசியலுக்கு வந்தாற் கூட அவர்களது அரசியல் வேலைத்திட்டம் தமிழ்க் குறுந்தேசியவாத, வெறும் வலதுசாரி அரசியற் திட்டமாய் இருக்கும் வரையில் அவர்களின் அரசியல் மக்கள் விரோத அரசியலாகவேயிருக்கும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 
இன்று புலிகள் தங்களிடம் அரசியல் இருக்கவில்லை என்று சொல்வதை அவர்கள் ஏதோ தங்களது பிற்போக்கு அரசியலின் மீது அதிருப்திகொண்டு புதிய மாற்றத்தைக்கோரி பேசுவதாக நீங்கள் கருதவேண்டியதில்லை. தொடர்ச்சியாக அவர்களின் அறிக்கைகளையும் உரையாடல்களையும் நீங்கள் கவனித்துப் பார்த்தால், கடந்த காலங்களில் இந்திய அரசையும் மேற்கு நாடுகளையும் தாங்கள் சரியாக ‘டீல்’ செய்யவில்லை என்ற வருத்தத்திலேயே அவர்கள் பேசுவது தெரியும். அவர்கள் அரசியல் தோல்வியென்று தங்கள் ‘டீல்கள்’ தோல்வியடைந்ததையே குறிக்கிறார்கள். மற்றப்படிக்கு புலிகளின் கடந்த கால பிற்போக்கு அரசியலிலிருந்து அவர்கள் மீள்வதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.
 
 
மீனா: புலிகள் இயக்கம் தனது தலைமைப் பொறுப்புகளில் தலித்துகளை அமர்த்தியிருந்தது. அதேவேளையில் செல்லன் கந்தையன், கணபதி ராசதுரை போன்றோர்களிடம் தனது ஆதிக்க முகத்தைக் காட்டியது. புலிகள் சாதியத்தை எப்படி எதிர்கொண்டதாக நினைக்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றிலேயே வெள்ளாளர்கள் அல்லாத ஒரு தலைமையாக உருவாகி ஒரு உடைப்பை ஏற்படுத்திய இயக்கம் புலிகள் இயக்கம்தான். எனது ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்ற கட்டுரையில் இதை விரிவாகப் பேசியுள்ளேன். புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட காலம் செயற்பட்டவன் என்ற முறையில் இயக்கத்திற்குள் சாதி ஏற்றத்தாழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டதில்லை என்பதையும் என்னால் கூற முடியும். இயக்கத்தில் தனிநபர்கள் சாதிய உணர்வோடு எங்காவது வெளிப்பட்டிருந்தாலும் கூட அதை இயக்கத்தின் பொதுப் பண்பாக வரையறுக்க முடியாது.

இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளில் தலித்துகள் இருந்தார்கள் என்பதும் உண்மையே. புலிகள் குறிப்பிட்ட பகுதிகளில் குடிமைத் தொழில் முறையையும் ஒழித்திருந்தார்கள். இந்த உண்மைகளோடுதான் சாதியும் புலிகளும் என்பது குறித்துப் பேசமுடியும். ஆனால், புலிகள் சாதியொழிப்புப் போராட்டத்தை காத்திரமாகச் சமூகத்தளத்தில் முன்னெடுக்கவில்லை. அந்த முன்னெடுப்புகள் பெரும்பான்மையாயிருக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திவிடும் என அவர்கள் கருதினார்கள். இதை அடேல் பாலசிங்கம் தனது சுதந்திர வேட்கை நூலில் ஒப்புக்கொண்டிருப்பதையும் நான் எனது கட்டுரையில் விரிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

சமூகத்தில் சாதிய முரண்கள் எழுந்தபோதெல்லாம் அங்கே எப்படிப் பிரச்சினைகளை ஊத்திமூடி அமைதியைக் கொண்டுவருவது என்றே புலிகள் முயற்சித்தார்களே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பக்கத்தில் நின்று அவர்களின் உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தார்களில்லை. புலிகளின் ஆட்சிக்காலத்திலேயே வடபுலத்தில் ஏராளமான கோயில்களும் பொது இடங்களும் தலித்துகளிற்கு மூடியே கிடந்தன. இவற்றைத் திறந்துவிடுவதற்கான அதிகாரம் புலிகளிடமிருந்தும் கூட அவர்கள் அதைச் செய்யவில்லை. குறிப்பாக இந்து மதத்திற்கும் சாதிக்குமான உறவுகள் குறித்தெல்லாம் அவர்கள் அக்கறையே காட்டவில்லை. அவர்களே இந்து மரபுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்கள். புலம்பெயர் நாடுகளில் புலிகள் இந்துக் கோயில்களை நடத்தினார்கள். இந்த அடிப்படையில்தான் புலிகள் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். நிலவும் சமூக ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாமலிருப்பது என்பது அந்த ஒடுக்குமுறையைக் காப்பாற்றுவது என்றுதான் பொருள்படும். தமிழீழம் கிடைத்த பின்பு உள்முரண்கள் தீர்க்கப்படும் என்று புலிகள் ஆதரவு அறிவுஜீவிகள் சொன்னதற்கெல்லாம் ஏதாவது பொருளிருக்கிறதா?
 
 
மீனா: சாதியத்தின் நச்சு வேர் ஆழப்புதைந்து கிளை பரப்பி இருந்த காலத்திலேயே ‘அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை’, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்’ ஆகியவை கலகக் கிளர்ச்சிகள் செய்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டின. இன்றைக்கு தலித்தியம் பெருவலிமை பெற்றிருக்கிறது. இந்த பின்புலத்தில் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் [அய்ரோப்பா] செயற்பாடுகள் எவ்விதமிருக்கின்றன?
 
 
ஷோபாசக்தி: சாதியொழிப்புக் குறித்து மேலும் சில உரையாடல்களைத் தொடக்கி வைத்தது என்பதற்கு அப்பால் மேலே நகர முடியாமல் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி ஒரு தேக்கத்தைச் சந்தித்திருக்கிறது. ஒரு சாதியொழிப்பு முன்னணி, சமூகத்தில் இருக்கக் கூடிய சாதிய ஒடுக்குமுறை வடிவங்களை மட்டுமே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டு உயிர்வாழ முடியாது. அது சாதியொழிப்பிற்கான செயற்திட்டங்களை நோக்கி நகர வேண்டும். தலித் மக்களை அமைப்புமயப்படுத்த வேண்டும்.
 
 
சாதிய விடுதலை குறித்து நாம் பேசும்போது மற்றைய அடிமைத்தளைகள் குறித்த, குறிப்பாக இனஒடுக்குமுறை குறித்த, கேள்விகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். இந்தக் கேள்விகளை நேர்மையுடன் அணுகாதபோது ஒரு அரசியல் இயக்கத்தின் தேக்கம் தவிர்க்க முடியாததே. எனது அவதானிப்பில் இலங்கை தலித் முன்னணி அரசை அனுசரித்து நின்று ஏதாவது செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது. 40 வருடங்களிற்கு முன்பு தலித் தலைவர்களான எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் அரசோடு இணைந்து செயற்பட்டு தலித் மக்களுக்கான சில நலத்திட்டங்களை பெற்றுக்கொண்டதுபோல இப்போதும் செயற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். எம்.சி.சுப்பிரமணியம் தன்னுடைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பின்பலத்தோடு அரசோடு பேரம் பேசியவர். அப்போதைய அரசின் அமைச்சரவையில் கம்யூனிஸ்டுகளும் பங்கெடுத்திருந்தார்கள். கொல்வின்.ஆர்.டி.சில்வா, என்.எம்.பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரி நட்சத்திரங்கள் அரசின் போக்கைத் தீர்மானிக்கக் கூடியதாயிருந்த காலமது. ஆனால், இன்று அரசுப் பொறுப்பிலிருப்பவர்கள் அப்பட்டமான தரகு முதலாளிய கொள்ளைக்காரர்களும் இனப் படுகொலைக்காரர்களுமே என்பதை தலித் முன்னணி புரிந்துகொண்டு, தனது செயற்திட்டங்களை வகுக்காதவரை இந்தத் தேக்கத்திலிருந்து அதனால் வெளியே வரமுடியாது என்றே கருதுகிறேன்.
 
 
மீனா: நீங்கள் இலங்கை அரசின் உளவாளியென்றும், அரசிடமிருந்து பணம் பெறுகிறீர்கள் என்றும், தமிழகத்துப் பத்திரிகையாளர்களிடையே இலங்கை அரசிற்காக ஆள்பிடிக்கிறீர்கள் என்றும் தொடர்ந்து ‘கீற்று‘ இணையத்தளத்தில் குற்றம் சாட்டப்படுகிறீர்களே?
 
 
ஷோபாசக்தி: இத்தகைய ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளாலும் அவதூறுகளாலும் எதையும் சாதித்துவிட முடியாது. இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் என்னிலிருந்து ஒரு மயிரைக் கூட உதிர்த்துவிட முடியாது.
 
 
 
மீனா: உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் பதில் சொல்லாமல் இருப்பது அந்த விமர்சனங்களை உண்மை என்று ஆக்கிவிடாதா?
 
 
ஷோபாசக்தி: நான் பொதுவிவாதங்களில் பங்கெடுக்க மறுப்பவனல்ல. என்னுடைய எழுத்தின் பெரும்பகுதி எதிர்வினைகளிலும் விவாதங்களிலும் பதில்களிலுமே செலவிடப்பட்டிருக்கிறது. எத்தகைய மாறுபட்ட கருத்துள்ளவருடனும், எனக்கு முற்று முழுதான எதிர் அரசியல் நிலைபாடுகளை உடையவருடனும் கூட நான் உரையாடவோ, விவாதிக்கவோ பின்நின்றதில்லை. அண்மையில் கூட ‘வடலி’ பதிப்பகம் தோழர்களின் ஏற்பாட்டில் தோழர்.தியாகுவுடன் மூன்று மணிநேரங்கள் ஈழத்து அரசியல் குறித்து விரிவாக விவாதித்திருந்தேன். அந்த உரையாடல் ஒரு நூலாக வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் உளவாளி, பணம் வாங்குகிறான் என்று புறணி பேசுபவர்களுடன் எல்லாம் என்னால் விவாதிக்க முடியாது. இத்தகையை இழிவான குற்றச்சாட்டுகளைப் பேசும்போது ஆதாரங்களுடன் பேசவேண்டும் என்ற யோக்கியமோ, ஆதாரமற்ற அவதூறுகளை இணையத்தில் அனுமதிக்கக் கூடாது என்ற கடப்பாடு இல்லாதவர்களிடமோ நான் எதை விவாதிக்க முடியும்.
என்னுடைய இத்தனை வருட காலத்து எழுத்தில், பேச்சில் இலங்கை அரசுக்கோ, இந்திய அரசுக்கோ ஆதரவான ஒரு வார்த்தையைக் கூட இந்தப் புறணி பேசும் கூட்டத்தால் காட்ட முடியாது. கடந்த பத்து வருடங்களில் இலங்கை அரச பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் எதிர்த்து நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச் சித்திரங்களாகவும் என்னளவிற்கு இலக்கியத்தில் பதிவு செய்தவர்களும் யாருமில்லை. அதே தருணத்தில் நான் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் கடுமையாக விமர்சித்து எழுதும்போது அதை எதிர்கொள்ளத் திராணியோ, கருத்துப்பலமோ, தார்மீகமோ அற்றவர்கள் என்னை அரச அதரவாளன் என்று நியாயமற்ற முறையில் தீர்ப்பிடுவதன் மூலமே என்னுடைய புலிகளின் மீதான விமர்சனத்தை எதிர்கொள்ள முயலுகிறார்கள்.
 
 
மிகவும் நெருக்கிப் பிடித்து விவாதிக்கும்போது அவர்கள் தாங்கள் புலிகளை விமர்சனத்துடன் ஆதரிப்பதாகச் சொல்லி மழுப்புவதுமுண்டு. ஆனால், புலிகளைப் போன்ற வலதுசாரி அரசியல் சக்தியையும் பாசிஸ்டுகளையும் என்னால் விமர்சனத்தோடு என்றாலும் கூட ஆதரிக்க முடியாது. அண்மையில் ஒரு கட்டுரையாளர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தான் இறப்பதற்குத் தயாராயிருந்த ஒரே காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்னுடன் தடுத்து வைத்திருந்து கொல்லக் கொடுத்ததையெல்லாம், தப்பியோடி வந்த மக்களைச் சுட்டுக் கொன்றதையெல்லாம் விமர்சனத்துடன் ஆதரிக்குமளவிற்கு நான் கொடூரமானவனோ, அயோக்கியனோ கிடையாது.
 
இந்த நேர்காணல் வெளியானதும் கூட என்னை இலங்கை அரசின் ஆதரவாளன் என்றுதான் அவர்கள் எழுதப் போகிறார்கள். இந்த நேர்காணலில் நான் புலிகள் குறித்துச் சொல்வது மட்டும்தான் அவர்களது பிரச்சினையாயிருக்கும். என்னிடம் பணமோ, சாராயமோ பெற்றுக்கொண்டு என்னை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறீர்கள் என்ற அவமானத்தை நீங்களும் சந்திக்க நேரிடும்.
 
மீனா: நீங்கள், உங்களை இலங்கைக் குடிமகன் என்று ஒரு கட்டுரையில் சொன்னதுகூட இங்கே சர்ச்சையாக்கப்பட்டது…
 
 
ஷோபாசக்தி: பா.செயப்பிரகாசம் தான் வழக்கம் போலவே ‘நொள்ள’ கண்டுபிடிந்திருந்தார். நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று அழைத்துக்கொள்ளாமல் பிரஞ்சுக் குடிமகனென்றா அழைத்துக்கொள்ள முடியும்?
 
செயப்பிரகாசம் தன்னை இந்தியக் குடிமகன் இல்லை என்று சொல்வது அவரின் உரிமை. ஆனால், நான் என்னை இலங்கைக் குடிமகன் என்று சொல்வதைக் கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை கிடையாது. இலங்கை என்னுடைய நாடு. எனக்கு அந்த நாட்டில் ஒரு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், அந்த உரிமைகள் எனக்கு இலங்கை அரசால் மறுக்கப்பட்டிருப்பதற்காக நான் என்னுடைய உரிமைகளை விட்டுக்கொடுத்திட முடியாது. என்னை இலங்கைக் குடிமகன் இல்லையென்று சொல்ல ராஜபக்சேவிற்கே உரிமை கிடையாது என்றபோது பா. செயப்பிரகாசத்திற்கு கேள்வி கேட்க எங்கிருந்து உரிமை வந்தது?
 
பா.செயப்பிரகாசம், தன்னை ஒரு சர்வதேச மனிதனாக உணருகிறேன் என்கிறார். அவரிடம் இந்தியக் கடவுச் சீட்டோ, அவருக்கு இந்திய அரசு இயந்திரத்துடன் வேறெந்தக் கொடுக்கல் வாங்கலோ இல்லாதிருக்கலாம். என்னுடைய நிலையும் அவரைப் போன்றதுதான். எனக்கும் இலங்கை அரசுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது; என்னிடம் இலங்கைக் கடவுச் சீட்டும் கிடையாது; பிரஞ்சுக் கடவுச் சீட்டும் கிடையாது. அகதிகளிற்கான பயணப் பத்திரம்தான் வைத்திருக்கிறேன். என்னுடைய தேசிய இனம் இலங்கை அகதி என்றுதான் எல்லா விமான நிலையங்களிலும் அலுவலகங்களிலும் தூதரகங்களிலும் பதிவுசெய்யப்படுகிறது. நான், செயப்பிரகாசம் போல குடியுரிமையை விரும்பித் துறந்தவனல்ல. அது என்னிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுத்தாலும் என்னுடைய குடியுரிமையை விட்டுக்கொடுக்க நான் தயாரில்லை.
 
 
மீனா: ‘இந்திய அமைதிப்படை எங்களுக்கு ஆதரவாகத்தான் வந்தது. மாகாண சுயாட்சி அமைக்க வேண்டும் என்று வந்தது. நல்ல அதிகாரம் உள்ள சுயாட்சியாக இருந்தும் பிரபாகரன் அதை விரும்பவில்லை’ என்று கருணா ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதன் பின்புலம் என்ன?
 
 
ஷோபாசக்தி: கருணா அரசாங்கத்தின் அங்கம். இலங்கை அரசின் குரலில் தான் இப்படி பேசி இருக்கிறார். மக்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தும், பாலியல் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டும் மூன்று வருடங்களுக்குள் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் இலங்கை அரசு இத்தனை வருடங்கள் செய்ததற்குக் குறைந்ததில்லை. அமைதிப்படை, புலிகளையும் அழிக்கக் கருதியே தொழிற்பட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் ஆளும் வர்க்க நலன் தான் கருத்தில் கொள்ளப்பட்டதே தவிர, மக்களின் நலன் அல்ல. கருணாவின் குரல் தமிழர்களின் குரல் கிடையாது. அது இலங்கை அரசாங்கத்தின் குரல
 
 
மீனா: ஆனால், இப்பொழுதும் இந்தியா மீதான நம்பிக்கை சில அறிவுஜீவிகளால் வளர்த்தெடுக்கப்படுகிறதே?
 
 
ஷோபாசக்தி: இந்திராகாந்தியின் காலந்தொட்டே இந்திய அரசு ஈழப்போராளிகளை இலங்கை அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் அமைப்புகளாக வைத்திருந்து, இலங்கை அரசைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்பியதே அல்லாமல், அது தனிநாட்டுக் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாயிருக்கவில்லை. இந்திய அரசின் அழுத்தங்களிற்குப் புலிகள் பணிய மறுத்தபோது அது போராகவும் வெடித்து, இந்திய அமைதிப்படை ஈழத்து மக்களைக் கொன்றும் குவித்தது. இலங்கை அரசு முற்றுமுழுதாக இந்தியாவிற்கு அடிபணிந்தபோது அது இலங்கை அரசிற்காக ஒரு போரையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்திருக்கிறது. அந்த வெற்றிக்கான விலையை இந்தியா இனித்தான் இலங்கை அரசிடம் கேட்கயிருக்கிறது. முழு இலங்கையும் இந்தியப் பெருமுதலாளிகளின் காலனியாவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
 
 
ஈழத்தமிழர்கள், இந்திய அரசின் நண்பர்கள்; ஈழம் அமைவதுதான் இந்தியாவிற்குப் பாதுகாப்பு; இந்தியா சிதறாமல் இருப்பதற்கு இந்திய அரசுக்கு ஈழத்தமிழர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை என்றெல்லாம் கவிஞர் கி.பி.அரவிந்தன் அண்மையில் ஒரு இதழில் சொல்லியிருப்பதைப் படித்திருப்பீர்கள். இது அவருடைய கருத்து மட்டுமல்ல. புலிகள் ஆதரவாளர்களில் பலர் இப்படித்தான் சொல்லி வருகிறார்கள். இவர்கள் பிராந்திய வல்லரசு என்னும் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ளாமல் இதைப் பேசவில்லை. காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும் இந்தியவிலிருந்து சிதறினால் இவர்கள் எதற்குக் கவலைப்பட வேண்டும். இந்திய வல்லரசைப் பாதுகாப்பதா ஈழத் தமிழர்களின் வேலை? இதென்ன கோணல் கதை!
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.விற்குப் பரிந்து பேசியது, சங்கராச்சாரியைச் சந்தித்து ஆசி பெற்றது, கோவையில் இந்து முன்னணியினரின் விநாயகர் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ஈழத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் என சிவாஜிலிங்கம் எம்.பி. பேசியது, எல்லாவற்றையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய மத்திய அரசை அதன் முதலாளிய இந்துத்துவ ஆதிக்க சாதிப் பண்புகளுடன் நாம் புரிந்துகொள்ளும்போது இந்திய அரசிற்கு ஈழத்தமிழர்கள் நண்பர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்திய அரசும் எக்காலத்திலும் ஈழத்தவர்களிற்கு நண்பனாய் இருக்கப் போவதும் கிடையாத
 
மீனா: தமிழீழம் சாத்தியமில்லை என்று நீங்கள் சொன்னதையும் கி.பி. அரவிந்தன் விமர்சித்திருக்கிறாரே?
 
 
ஷோபாசக்தி: என்னத்த விமர்சித்தார்! "நரிகள் ஊளையிடுவதால் சூரியன் மறைந்துவிடாது" என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் ஒரு அரசியல் விமர்சனமா? தமிழீழம் சாத்தியமெனில் அதைத் தடுக்க நான் யார்? அதற்கு எனக்கு என்ன சக்தியிருக்கிறது. இன்றைய இலங்கை, இந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு நான் சாத்தியமில்லை என்றேன். தமிழீழம் சாத்தியம் என நம்பும் அரவிந்தன் அதற்கான தருக்கங்களை முன்வைத்துத் தனது கருத்தை நிறுவவேண்டும். அதைவிடுத்து இந்த நரி, நாய் உவமையெல்லாம் பேசி இன்னும் இன்னும் மக்களை ஏமாற்றலாமென்றும், கொல்லக் கொடுக்கலாம் என்றும் அவர் கருதக்கூடாது.
 
 
மீனா: ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழும் குரல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: நன்றியுடன் பார்க்கிறேன். ஆனால், மனிதாபினம், இனவுணர்வு இவற்றின் அடிப்படையில் எழுந்த குரல்கள் அரசியல்ரீதியாகச் சரியாக ஒன்றிணைக்கப்படவில்லை. அவ்வாறு ஒன்றிணைந்த சில தருணங்களில் அவர்கள் தவறான தலைமைகளால் வழிநடத்தப்பட்டார்கள். ஈழம் கிடைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என்றளவிற்குத்தான் அந்தத் தலைமைகளின் அரசியல் யோக்கியதையும் இருந்தது. வெட்கமாயில்லையா?
 
 
ஈழத்து மக்களிற்கு ஆதரவாய் எழுந்த குரல்களை ஒரே மாதிரி மதிப்பிடுவதை நான் என்றைக்குமே செய்யப் போவதில்லை. வெறும் புலி ஆதரவாளர்களிடமிருந்தும் புலி ரசிகர்களிடமிருந்தும் விலகி நின்று ஈழத் தமிழ் மக்களிற்காகப் போராடிய சக்திகளும் தனிநபர்களும் இருக்கிறார்கள். அந்தக் குரல்கள் எங்களின் பாடுகளின் பொருட்டு இன்னும் வலுக்க வேண்டும். இந்தியாவில் இவர்கள்தான் ஈழத்துத் தமிழர்களின் நட்புச் சக்திகளே தவிர, கி.பி.அரவிந்தன் சொன்னது மாதிரி இந்திய அரசு இயந்திரமல்ல.
 
 
மீனா: புலிகளே தங்கள் தலைமையின் இழப்பை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், "பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார். மீளெழுச்சி கொண்டு அவர் தலைமையில் போராடுவோம்" என்கிறார் பழ.நெடுமாறன்; "ஐந்தாம்கட்ட ஈழப்போர் வெடிக்கும், அது பிரபாகரன் தலைமையில் நடக்கும்" என்கிறார் சீமான். இவையெல்லாம்…?
 
 
ஷோபாசக்தி: இது அடுத்தவனைச் சாகக் கொடுத்துவிட்டு அந்தப் பிணம் எரியும் நெருப்பில் வெளிச்சம் பெறவிரும்பும் பேச்சு. உருத்திரகுமாரன் போன்றவர்களே ஆயுதப் போராட்டம் குறித்துப் பேசாமல் வேறு சாத்தியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் அய்ந்தாம் கட்ட ஈழப்போர் என்று பேசுவதையெல்லாம் யார் நம்பப் போகிறார்கள்? யார் நம்பினாலும், ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பிரபாகரன் வந்து படை நடத்துவார் என்று இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பொய்யர்களின் பேச்சுக்கெல்லாம் பெறுமதி ஏதுமில்லை. ‘உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்’ என்றொரு பழமொழி ஈழத்தில் உண்ட
 
 
மீனா: தமிழர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், மலையக மக்கள் என சகலருக்கும் ஏற்புடைய அரசியல் தீர்வு அமைய வேண்டுமானால் அது எப்படியிருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
 
 
ஷோபாசக்தி: பிரச்சினை என்று இருந்தால் அதற்கு கண்டிப்பாக எங்கேயோ ஒரு தீர்வும் ஏற்கெனவே இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இப்போது முன்மொழியப்படும் தீர்வுகள் குறித்தும், சம்மந்தப்பட்ட தரப்புகள் கூடிப் பேசித்தான், சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் மூலம்தான் அமைதிக்கான பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். அதன் மூலம்தான் ஒரு சாத்தியமான தீர்வை வடிவமைக்க முடியும். ஆனால், இன்றைய ராஜபக்சே அரசு தீர்வு குறித்துப் பேசவே மறுக்கிறது. தீர்வுக்குப் புலிகள் சம்மதிக்கவில்லை என்று இவ்வளவு காலமாக இருந்த அரசுகள் சொல்லிவந்தன. அதில் உண்மையும் இல்லாமலில்லை. ஆனால், இப்போது ஒரு தீர்வை முன்வைப்பதில் அரசுக்கு என்ன தடையிருக்கிறது? ஆனால், ராஜபக்சே அடுத்த ஜனாதிபதி தேர்தலிற்குப் பின்புதான் தீர்வு குறித்தெல்லாம் பேச முடியும் என்கிறார். இந்த பொம்மை மகாணசபை ஏற்பாட்டுடனேயே திருப்தியடைய தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவது மட்டும்தான் இனி நடக்கயிருக்கிறது.
 
 
 
இலங்கையில் இன அடையாளங்களுடன் அரசியல் கட்சிகள் இயங்குவதைத் தடை செய்யும் சட்டமொன்றைக் கொண்டுவர இலங்கை அரசு அண்மையில் முயன்றது. நீதிமன்றம் அந்த முயற்சிக்கு இப்போது தடைபோட்டிருக்கிறது. எனினும், அரசு சிறுபான்மை இனங்களின் அரசியலுக்கு முடிவுகட்டி அவற்றின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யவே முயற்சிக்கிறது. நாடு முழுவதையும் பேரினவாதக் கட்சிகளே பிரதிநிதித்துவப்படுத்தும் திட்டத்தை நோக்கியே இலங்கை அரசு நகர்கிறது. ராஜபக்சேவுடன் கூட்டுச் சேர்ந்த கட்சிகள்தான் கிழக்கில் மகாண சபையையும் யாழ் நகரசபையையும் கைப்பற்றியிருக்கின்றன.


இப்போதைக்குத் தீர்வென்றெல்லாம் ஏதுமில்லை. அதை ஏதாவது ஒரு தரப்பு மட்டும் முடிவுசெய்துவிட முடியாது. ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வருமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகள் இப்போது தமிழர்களிடம் கிடையாது.
 
 
மீனா: புலிகள் அவ்வாறான சக்திகளாக முன்பு இருந்தார்களல்லவா?
 
 
 
ஷோபாசக்தி: நிச்சயமாக இருந்தார்கள். ஆனால், பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து அதன்மேல் கட்டப்பட்ட அந்தச் சக்தியைப் புலிகள் தவறாக விரயம் செய்தார்கள். அவர்களின் இராணுவவாத அரசியலும் சர்வதேசச் அரசியல் சூழல்களைப் புரிந்துகொள்ள அவர்கள் மறுத்ததும்தான், இறுதி நேரத்தில் புலிகள் யுத்த நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தபோது கோத்தபாய ராஜபக்சே இது நல்ல நகைச்சுவை என்று கேலி பேசி அந்தக் கோரிக்கையை நிராகரிக்குமளவிற்குப் புலிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது; இறுதியில் அவர்களை அழித்தும் போட்டது.


புலிகள் வழியிலான அரசியல் வெறும் தோல்வி அரசியல் மட்டுமல்ல; தார்மீகம் அற்ற அரசியலும் என்பதைக் காலம் நிரூபித்துள்ளது. வெறுமனே தமிழ்த் தேசிய உணர்வில் நின்று பேசாமல், இன்றைய சர்வதேச அரசியல் சூழல்களையும் இலங்கைக்கும் அந்நிய வல்லாதிக்கவாதிகளுக்குமான தொடர்பையும், அதில் இருக்கும் பொருளியல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள முடிந்தவர்களால் மட்டுமே இனித் தமிழர்களிற்குச் சரியான அரசியல் தலைமையை வழங்க முடியும். அரச பயங்கரவாதத்திற்கு எதிரான, விட்டுக்கொடுக்காத எதிர்ப்புணர்வும் சனநாயக அரசியல் நெறிகளின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒரு அரசியல் போக்கு வெற்றிடத்திலிருந்து உருவாக வேண்டியிருக்கிறத
 
 
மீனா: வடக்கின் வசந்தம்’ தமிழரின் வாழ்வில் வீசுமா?
 
 
 
ஷோபாசக்தி: அரசியல் தீர்வினை வழங்கி ராணுவத்தை மீளப்பெற்றுக்கொள்வதன் மூலம் தான் வசந்தம் வருமே தவிர, இலங்கை அரச படைகளை தமிழர்களின் குடியிருப்புகளில் செருகிக்கொண்டு போவதன் மூலம் வராது. மாகாண சபை போன்ற அற்ப சொற்ப சலுகைகளுடன் தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை முடக்குவதற்கான கவர்ச்சி கண்துடைப்பே இந்த ‘வடக்கின் வசந்தம்’.
 
 
 
மீனா: ‘வசந்தம்’ இல்லையென்றாலும், போர்ப் பீதிகளற்ற வாழ்வாவது சாத்தியமென்றால் உங்கள் கிராமத்திற்குத் திரும்புவீர்களா?
 
 
 
ஷோபாசக்தி: இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எனது கிராமத்திலிருந்து கிளம்பினேன். இருபது வருடங்களாகிவிட்டன. அய்ரோப்பாவில் அகதி வாழ்க்கை மிகவும் கசப்பான வாழ்க்கை என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனது கிராமத்தின் மீது எனக்குப் பெரிய பற்றிருக்கிறது என்பதுமில்லை. ஆனால், ஈழப் போராட்டத்தில் பங்கெடுத்தவன் என்ற முறையிலும் ஒரு இடதுசாரி என்ற வகையிலும் எனது எழுத்தும் அரசியலும் வாழ்வும் முற்று முழுதாக ஈழத்துடன்தான் பிணைந்திருக்கிறது. ஊருக்குப் போக வேண்டும்; அதற்கான சூழலும் தருணமும் விரைவில் எனக்குக் கிட்டவேண்டுமென்று என்னை வாழ்த்துங்கள் மீனா!
 
 
மீனா: நிச்சயமாக ஷோபா! உங்களுக்கும் உங்களைப் போலவே காத்துக்கொண்டிருக்கும் அத்தனை ஈழத் தமிழர்களுக்கும் அத்தருணம் விரைவில் கிடைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
 
 
 
‘அம்ருதா‘ (நவம்பர் 2009) இதழில் வெளியாகிய நேர்காணல்
 
 
http://www.shobasakthi.com/shobasakthi/?p=549



Dienstag, Oktober 27, 2009

இலங்கையில் இன்றைய இந்த குறிப்பான நிலைமையை...

புகலிடச் சிந்தனை மையம்


பாரிஸ் கூட்ட முடிவுகள் : மாற்றத்தை நோக்கிய ஒரு பகிரங்க அறைகூவல்
 
செப் 26-27ம் திகதியில் பாரிஸ் புறநகர் பகுதி ஒன்றில் தமிழரங்கத்தின் முயற்சியில் கூட்டு விவாதம் ஒன்று நடை பெற்றது. கடந்தகால அரசியல் சூழலை மாற்றியமைக்க, முதலில் தன்னைத் தான் அது கோரியது. எதிர்காலத்தில் நடைமுறையில் நாம் செய்யவேண்டிய அரசியல் பணிகளை, ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் வரையறுத்;து. அத்துடன் திட்டத்தை செயலூக்கத்துடன் நடைமுறைப்படுத்த, கூட்டு உழைப்பைக் கோரியது. தனித்துவமான செயல்களை, கூட்டான அரசியல் திட்ட செயல்முறைக்கூடாக முன்னெடுக்கவும் கோரியது.
 
கூட்டு விவாதம் இன்றைய அரசியல் சூழலை மதிப்பீடு செய்தது. இனவொடுக்குமுறையால் கடந்த 30 வருடமாக இலங்கையில் நடைபெற்ற பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளால், மக்கள் சொல்லொணாத் துயரத்தையும் துன்பத்தையும் அனுபவித்து வருகின்றனர்.
 
மக்களோ தங்கள் வாழ்வை இழந்து அநாதைகளாகி விட்டனர். அரசியல் உரிமைகளை இழந்து நடைப்பிணமாகி உள்ளனர். அடிப்படை உரிமைகளை இழந்து அடிமைகளாகி நிற்கின்றனர். இலங்கையின் சிவில் சட்ட ஆட்சிக்கு வெளியில், இராணுவ ஆட்சியின் கீழ் மீண்டும் மீண்டும் தமிழ்மக்கள் சொல்லொணாத் துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்து வருக்கின்றனர். மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது, ஒரு தவறான குறுந்தேசிய அரசியல் தான். இனவொடுக்குமுறைக்கு எதிரான புரட்சிகரமான அரசியல் போராட்டத்துக்குப் பதில், எதிர்ப்புரட்சிகர போராட்டம் தான் இந்த நிலையை உருவாக்கியது. இப்படி எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகளால் இனவொடுக்குமுறைக்கு எதிரான தேசிய போராட்டம், இனவாதமாகியது. இது குறுந்தேசிய போராட்டமாகி, இனவழிவாகியது.
 
இது இனப் பிளவுகளையும், பிரதேச பிளவுகளையும், சமூகப் பிளவுகளையும் ஆழப்படுத்தி விரிவாக்கியது. இன ஐக்கியத்துக்கு பதில் இனப் பிளவுகளை விதைத்தது. சொந்த இனத்தின் அழிவை, சமூக விளைவாக்கியது. இப்படி இனங்களை மட்டுமல்ல, இனத்துக்குள்ளும் பாரிய சமூக முரண்பாடுகளையும் சமூகச் சிதைவுகளையும் உருவாக்கியது. இது இனங்களுக்கிடையே ஐக்கியத்தை வளர்த்தெடுப்பதற்கு மாறாக இனங்களுக்கிடையேயான முரண்பாட்டை ஊக்குவித்தது. இதன் விளைவாக சிங்களச் சமூகத்தை, அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உதவியது.


சமூகத்தில் நிலவிய சாதிய, ஆணாதிக்கம், வர்க்கம் என்ற, அனைத்து சமூக முரண்பாடுகளையும், குறுகிய நோக்கில் கையாண்டதால் அது வீங்கி வெம்பியது. இப்படி எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகள் ஆதிக்கம் செய்த சமூக அமைப்பில், பெண்கள், குழந்தைகள் என்றுமில்லாதளவில் வாழ்வில் கடுமையான அவலத்தைச் சந்தித்தனர், சந்தித்தும் வருகின்றனர். சமூகமே பெருமளவிலான அங்கவீனர்கள், விதவைகள், மனநோயாளிகளைக் கொண்டதாக மாறி, அது சமூகத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. தங்கள் வாழ்வை நடத்த முடியாத அளவுக்கு, சொந்த வாழ்வாதாரங்களை மக்கள் இழந்து விட்டனர். வாழ்ந்த மண்ணை இழந்து, அகதிவாழ்வு ஒரு பகுதி மக்களின் இழிவான வாழ்வாகிவிட்டது.
 
 




 
 
இன்று திறந்தவெளி தடுப்பு முகாங்களுக்குள்ளும், இராணுவத்தின் சிவில் கட்டமைப்பிலும், தமிழ் இனத்தை கண்காணிக்கின்றது சிங்களப் பேரினவாதம். இதன் மூலம் தமிழினத்தை என்றுமில்லாத வண்ணம் ஒடுக்குகின்றது. தமிழினத்தின் மேலான இந்த ஒடுக்குமுறையைக் கூட, அது மிக நுட்பமாக பிரித்துக் கையாளுகின்றது. யாழ் மக்களுக்கு சீரழிவுடன் கூடிய சலுகை மூலமும், கிழக்கு மக்களுக்கு கையேந்தி பிச்சை எடுக்க வைத்தும், வன்னி மக்களை திறந்தவெளி தடுப்பு முகாங்களில் அடைத்தும் வைத்து ஓடுக்கின்றது. இதையே ஜனநாயகம், தீர்வு என்கின்றது. இதையே வடக்கின் "வசந்தமும்’, கிழக்கின் "உதயமும்" என்கின்றது.
 
 
பேரினவாத யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் சொந்த நிலத்தை கைப்பற்றி, அதை அன்னிய மூலதனத்துக்கு தாரை வார்க்கின்றது. சம்பூர் முதல் வன்னி நிலம் வரை, "பயங்கரவாத ஓழிப்பு" இப்படித் தான் வேஷம் போடுகின்றது. பேரினவாதம் தமிழர் மீதான தன் ஆக்கிரமிப்பு மூலம், நிலத்தையும் பொருளாதார வளங்களையும் கைப்பற்றி அதை உலகமயமாக்குகின்றது. இப்படி உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலையே, பேரினவாத யுத்தம் மூலம் இன்று அமுல் செய்கின்றது. இப்படி தமிழ் மக்களின் நிலத்தையும், மூலவளங்களையும், உற்பத்தி மையங்களையும் கைப்பற்றி, அன்னிய மூலதனத்துக்கு கொடுத்து வருகின்றது.
 
 
யுத்தத்தையும் அதன் வெற்றியையும் சிங்கள மக்களுக்கு காட்டி விட்டு, தமிழர் அல்லாத பிரதேசங்களைக் கூட உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாரைவார்க்கின்றது. இதனால் இலங்கை மக்களுக்கு துரோகம் விளைவிப்பதுடன் உள்நாட்டு உற்பத்திகளை திட்டமிட்டபடி அழித்து, வெளிநாட்டு உற்பத்தியை உள்வாங்கி நாட்டை அடிமைப்படுத்தி வருகின்றது. இலங்கைத் தேசியத்துக்கு எதிராக, உலகமயமாதலுக்கு ஏற்ப நாட்டை விற்று வருகின்றது. இப்படி அன்னிய மூலதனமோ விரிவாக இலங்கையில் புகுந்து வருகின்றது. யுத்தத்தின் மூலமான பொருளாதார நெருக்கடி ஒருபுறம், மறுபக்கத்தில் அன்னிய மூலதனத்தின் மூலமான நெருக்கடி, மொத்த இலங்கை வாழ் மக்கள் அனைவர் மேலும் பாரிய வாழ்வியல் சமூக சிதைவுகளை உருவாக்கி வருகின்றது.
 
இதனால் எழும் மக்களின் எதிர்ப்புகளை அடக்கியொடுக்க, இலங்கை அரசு மேலும் மேலும் தன்னைப் பாசிசமயமாக்கி வருகின்றது. இதன் மூலம் மக்கள் அற்ப சொற்ப உரிமைகளைக் கூட இழந்து வருகின்றனர். இதைச் சுற்றி ஒரு குடும்ப சர்வாதிகாரமும், ஒரு கும்பல் ஆட்சியும் மிக வேகமாக மையப்பட்டு வருகின்றது.
 
 
இலங்கையில் இன்றைய இந்த குறிப்பான நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டியது, உடனடி இன்றைய அரசியல் பணியாக உள்ளது.
ஆனால் எம்மைச் சுற்றி கடந்தகாலம், எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறுகளின் பாசிச மயமாக்கமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடமாக இலங்கையில் நிலவிய தேசிய முரண்பாடும், அதனால் எழுந்த போராட்டமும் குறுந்தேசியமாகியது. இது பாசிசமாக தன்னை வெளிப்படுத்தியது. இப்படி குறுந்தேசிய அரசியல் உருவாக்கிய பாசிசத்தின் விளைவால், அரசுடன் இணைந்து வளர்ச்சியுற்ற எதிர்ப்புரட்சிகரக் கூறும் உருவானது. இப்படி தேசியத்தின் பெயரில் ஜனநாயகத்தை மறுத்து எதிர்ப்புரட்சிகர பாசிசமும், ஜனநாயகத்தின் பெயரில் தேசியத்தை மறுத்த எதிர்ப்புரட்சி கூறும் வளர்ச்சியுற்றது.
இதன் விளைவால் போராட்டமும் ஓரு குறுகிய பார்வையுடையதாகியது.
 
தமது கருத்துக்கு மாறான மாற்றுக் கருத்தை அழித்தொழிப்பதே, முக்கிய அரசியல் செயற்பாடாக மாறியிருந்தது. இவ்நடவடிக்கையே அரசுடனான ஒட்டுக்குழுக்களை முழுவேகத்துடன் உருவாவதற்கும், செயற்படுவதற்கும் தூண்டியது. இப்படி இருசாராரும் மக்கள் நலனைக் கருதாது, தமக்கிடையிலான குரூரத்தை கொலைவெறியுடன் மக்கள் மேல் திணித்தனர்.
 
தமிழ் சமூகத்தின் முழுக் கட்டமைப்பையும், இவ்விரண்டு எதிர்ப்புரட்சிக் கூறும் ஆக்கிரமித்து நின்றது. புலித் தலைமையின் அழிவின் பின்பாக, தேசியத்தின் பெயரில் நிலவிய புலிப்பாசிசம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் புலத்தில் அது கொண்டிருந்த சொத்துரிமை சார்ந்தும், அதிகாரக் கட்டமைப்பு சார்ந்தும், இன்னமும் தன்னையும் தனது பாசிசத்தையும் நிலைநிறுத்த முனைகின்றது. மறுபக்கத்தில் ஜனநாயகத்தின் பேரில் நிலவிய புலியெதிர்ப்பு எதிர்ப்புரட்சிக் கூறுகள், அரச பாசிசமாக மாறி நிற்கின்றது. அது பல வேஷங்களைப் போடுகின்றது. மக்களை சிறை வைத்திருக்கின்ற அரசைச் சார்ந்து நின்று, மக்களுக்கு உதவி, தீர்வு என்று தனக்குத்தானே வேஷம் போடுகின்றது.
 
 
இப்படி மாறிவிட்ட இந்தச் சூழல், எம்மை விரைவாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்க கோருகின்றது. தனிமனித செயலுக்கு பதில் கூட்டு வேலைமுறையின் அவசியத்தை அது கோருகின்றது. 1980 களில் புரட்சிகர பிரிவுகள் நடத்திய அரசியல் போராட்டத்தினதும், 1990 களில் புலத்தில் உருவான சிறு சஞ்சிகைகளை சுற்றி நிலவிய புரட்;சிகர கூறையும், இதன் பின் நிலவிய தனிமனித புரட்;சிகர சிந்தனையினை உள்வாங்கிய இந்தச் சந்திப்பு, தன்னை அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்திருக்கின்றது. இது தன்னை "புகலிடச் சிந்தனை மையம்" என்று பெயரிட்டுக் கொண்டுள்ளது. புரட்சிகர அரசியல் நடைமுறையை உருவாக்குவதன் மூலம், எதிர்கால செயலுக்குரிய ஒரு அரசியல் அடிப்படையை உருவாக்க முனைகின்றது.
இங்கு இக் கூட்டம் எமக்கு வெளியிலும் எமது இந்த முன்னணிக்கான திட்டத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் இருப்பதை அங்கீகரித்தது. அவர்களை இணைத்து முன்னேறுவது என்று முடிவையும், தன் சொந்த நடைமுறை ஊடாக இதைச் செய்யக் கோரியது.
 
 
கடந்தகாலங்களில் நிலவிய முரண்பாடுகளையும், தனி மனிதத் தவறுகளையும், அரசியல் திசை விலகல்களையும், மக்களை நோக்கி புரட்சிகர அரசியல் மாற்றத்துக்காக உண்மையாக நேர்மையாக செயல்படுவதன் மூலம் தன்னைத்தான் சுயவிமர்சனம் செய்யக்கோரியது. அனைத்தையும் அரசியல் திட்டத்துக்கு உட்படுத்தி அணுகக் கோரியது. அரசியல் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் அனைவரையும், விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக தம்மைத் தாம் சுயமாக புடம்போடக் கோரியது. புற அரசியல் சூழலில் நடந்த மாற்றம், மொத்த அரசியல் சூழலையும் இன்று மாற்றி அமைக்கின்றது. இதை அடிப்படையாக கொண்டு எம்மை மாற்ற "புகலிடச் சிந்தனை மையம்" முன்மாதிரியாக செயல்பட உறுதிபூண்டுள்ளது.
 
 
"புகலிடச் சிந்தனை மையம்" தன் திட்டத்துக்காக, அனைத்து ஜனநாயக வடிவங்களையும் பயன்படுத்தி கிளர்ச்சி, பிரச்சாரத்தை செய்ய அறைகூவல் விடுத்துள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் இயங்கும் அரசு, புலி ஊடகங்கள் முதல் அனைத்துவிதமான செயல்தளத்திலும் "புகலிடச் சிந்தனை மையம்" தன் கிளர்ச்சியையும், பிரச்சாரத்தையும் செய்ய கோருகின்றது. "புகலிடச் சிந்தனை மையம்" ஒருமித்த குரலில், மக்கள் அரசியலை முன்னிறுத்திச் செல்ல அறைகூவல் விடுத்தது.
 
 
தமிழை வாசிக்கத் தெரியாத, தமிழை புரிந்து கொள்ள முடியாத புகலிட இளம் தலைமுறையினருக்கு, எம் மக்களின் வரலாற்றை சரியாக எடுத்துக் கூற அனைத்து மொழியிலும் அதற்கான ஒருங்கிணைந்த முயற்சியில் பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் செய்ய "புகலிடச் சிந்தனை மையம்" உறுதி பூண்டுள்ளது.
 
பெரும்பான்மை சிங்கள மக்களுடன் உரையாட சிங்கள மொழி மூலமான ஒரு பிரச்சாரத்தை கிளர்ச்சியை முன்னிறுத்தி போராடவும் அது உறுதி பூண்டுள்ளது.
 
பரந்த விவாதத்தில் பங்காற்றும் வண்ணம், ஒரு விவாத அரங்கை உருவாக்குவதன் மூலம், சமகால நிகழ்வுகள் மேல் விவாதங்களை ஒருங்கிணைத்து, முனைப்பாக செயல்பட எண்ணுகின்றது.
 
தனக்கான வெளியிட்டு பிரிவை உருவாக்கியுள்ளது. எம் மண்ணில் புரட்சிகர பிரிவை இனம் காணவும், தொடர்புகளை பேணவும், முனைப்பாக செயல்பட முனைகின்றது.
 
கடந்கால முழு ஆவணங்களையும் ஆவணப்படுத்த முனைகின்றது.
 
 
தனக்கான இணையம் ஒன்றை பல்மொழியில் இயக்கவும், அதில் சிறப்பாக விவாதக்களம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது.
 
திருத்தபட்ட திட்டம் மிக விரையில் வெளியிடப்படும். அதுவரை திருத்தப்படாத திட்டத்தை நீங்கள் பார்க்க முடியும். இப்படி பல முடிவுகளை அரசியல் ரீதியாக எடுத்துள்ள "புகலிடச் சிந்தனை மையம்" எம் திட்டத்துடன் இணைந்து வேலைசெய்யுமாறு பகிரங்க வேண்டுகோளை உங்களை நோக்கி விடுக்கின்றது. கூட்டாக செயலாற்ற முன்வருமாறு அனைவரையும் "புகலிடச் சிந்தனை மையம்" அழைக்கின்றது.
 
புகலிடச் சிந்தனை மையம
26.10.2009
 
Thanks:
http://www.psminaiyam.com/

Samstag, August 29, 2009

சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்


சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்:

முளைத்து மூன்றிலை எறிக!
 
 
"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் இனவாதங் கடந்த, இலங்கைவாழ் மக்களுக்கான ஒரு அரசாகச் சிங்கள இனவாத அரசை முன்னிறுத்தும் இன்றைய தருணத்தில், நாம் மீளவும் ஏமாற்றப்படுகிறோம் என்பதற்குச் சமீபத்தில் சிங்கள இராணுவத்தின் மிகக் கொடுமையான இனவழிப்பின் சாட்சி, வீடியோவாகக் காணக்கிடைத்தது.
 
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டிலாவென்று, ஐயுறும் அளவுக்குக் காட்டுமிராண்டிகளாகச் சிங்கள இனவாத இராணுவமும் அதன் அரசியற்றலமையும் அப்பாவித் தமிழ் மக்களை நாயிலும் கேவலமாக அவமானப்படுத்திச் சுட்டழிக்கிறது.
 
 
தமிழ் பேசும் ஒரேகாரணத்துக்காக, இலங்கையின் பூர்வீக மக்களில் ஒருபிரிவைப் பூண்டோடு அழிக்க முனைவது மிகவும் கொடுமையானது.இஃது, பாசிசக் கிட்லரது இனவழிப்புக்கு ஒப்பானது."இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாது" என்று இந்த இனவழிப்புச் சதி அரசியலை நியாயப்படுத்தும் பாசிச மகிந்த அரசு, அனைத்து மனிதவுரிமை விதிகளையும் காலிற்போட்டு மிதித்தபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதைச் சில"மார்க்சிய மேதைகள்"முதலாளித்துவ வளர்ச்சியில் இவையாவும் சாத்தியம் என்றும் உரையாடுகிறார்கள்.
 
 
இதற்காக மேற்குலகில் முதலாளிய உருவாக்கத்தில் நிகழ்ந்த இனக்கலப்பு,உள்வாங்கல்-அழித்தல்,ஓரினப்படுத்தல் குறித்து விளக்கமுஞ் சொல்கிறார்கள்.சமீபத்தில் யுக்கோஸ்சிலாவியத் தேசத்தில் நிகழ்ந்த இனவழிப்புகள் வெறுமனவே கொசாவா சார்ந்து பரப்புரைக்கு வந்தது.அங்கே ஜப்பிசிகளைக் கொன்றுகுவித்த சேர்பிய-அல்பேனிய இனவாதம் தத்தமக்கான நியாயத்தைத் தேசங்களது பெயரில் சொன்னபோது, இந்த ஜிப்சிகளுக்கானவொரு தேசம்-வேர்-வரலாறு இல்லாதிருந்தது.அவர்கள் எந்தத் தடையமின்றிச் சமீபத்திலும் அழிக்கப்பட்டார்கள்.வரலாறு பூராகவும் இனவழிப்புகள் இந்த மக்கட்டொகைக்கு அவர்கள் வாழும் பற்பல நில எல்லைகட்குள் நிகழ்ந்து வரும்போது, அவர்கள் இவற்றை எதிர்க்க வலுவற்றும், தம்மை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.இதுதாம் அவர்களது சமூக இருப்பு.இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றைய சிறுபான்மை இனங்களுக்கும் இத்தகையவொரு அபாயம் மிக நெருக்கமாக இருக்கிறது?
 
 
இன்று, இலங்கையை முழுமொத்தச் சிங்கள மயப்படுத்தும் மகிந்தாவினது இராணுவவாத ஆட்சிக்குப்பின் உலகத்தைப் பங்குபோடும் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு புறமாக(ஆசியா-ஐரோப்பா)நிற்கின்றன.தமிழ்பேசும் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்துக்குத் தீனி போடுவதற்கு உலக நாணய நிதியம் முதல் ஆசிய அபிவிருத்திவங்கி,சீன அரசு,இந்திய அரசுவெனப் பற்பல உதவிகள் இலங்கைக்குள் வந்துவிடுகிறது.இவையெல்லாமே மகிந்தா அரசு தமிழர்களுக்கெதிரான போரில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் செய்த படுகொலைகளை மறுத்தபடியேதாம் வந்திருக்கின்றது.இதன் தொடராக இலங்கையில் நகழும் தமிழினவழிப்பை சகல தரப்புமே நிராகரித்தபடிதாம் இலங்கைச் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்துத் தமிழரது இருப்பையே இலங்கையில் இல்லாதாக்கும் அரசியல் நகர்வை"பொருளாதார அபிவிருத்தி,முதலாளிய வளர்ச்சி,ஒரு தேச உருவாக்கம்-புதிய இன உருவாக்கம்"என்று தத்துவ விளக்கம் அளிக்கின்றனர்.
 



இதைச் சாதகமாகக் கையெலடுத்த பாசிச மகிந்தாவோ, இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்று கூற,அதையும் முதலாளித்துவ வளர்ச்சி,சுய பொருளாதாரத் தேசிய எழிச்சியாகவும் கருத்துரை செய்யும் தமிழ்"மார்க்சியப் புரவலர்கள்"புலிகளது அடாவடித்தனமான வன்முறையே"இலங்கை அரச வன்முறையாக உருவாகியதாகவும்,அது இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே(அதாவது சிங்கள மயப்படுத்துவதென்பதை தேசியத்தின் பெயரில் ஏற்றுச் சரண் அடைவது)அரச வன்முறை நிர்பந்திக்கப்படுகிறது என்று,நாவலுனக்குத் "தேசிய வகுப்பு"எடுக்க,இந்தச் சோபாசக்தியோ மகிந்தாவினது பாசிசச் செயற்ப்பாட்டைக் குறித்து மிக நெஞ்சுருகும் கட்டுரையை எழுதுகிறான்.
 
 
அவன் மனிதன்.தரையில் வாழ்கிறான்,தன்னுடன் வாழ்ந்து சாகடிக்கப்படுபவர்கள் குறிந்து நொந்து கொள்கிறான்-கலைஞன் அவன்!
 
 
நேர்த்தியாகச் சிந்திகத் தெரியாதவர்கள் நாம்.
 
 
"புலிகள் தம்மிடமிருந்த மாற்றியக்கக் கைதிகளை வன்னியைவிட்டு ஓடியபோது துணுக்காயில் சுட்டுக் கொன்றார்கள்" என்றும்,மாற்றியக்கக் கைதிகளை இங்ஙனம் கொன்றதையே பரப்புரை செய்யப் புலிகள் பயன்படுத்துவதாக"எல்லாந் தெரிந்த"சுகன் இலங்கைத் தேசியக் கீதம்பாடிச் சொல்லும்வரை எனது மரமண்டைக்கு இது புரியவில்லை!
 
 
இன்றைய எமது இழி நிலை என்பது சாதியப் பாகுபாடோ அன்றிச் சமாதிகட்டும் பாசிசச் சூழலோ மட்டுமில்லை!மாறாக,உண்மையைப் புலிப்பாசிசத்தின் தெரிவில் தான்தோன்றித்தனமாக மறுத்து,இலங்கைப் பாசிச அரசின் பின்னே ஒளிந்து அரசியல் செய்வதும் மிகப் பெரிய இழி நிலைதாம்!எம் மக்களின் அளப்பெரிய உயிர்வாழ்வே இங்கு கேவலமான பரப்புரைகளால் நிர்க்கதியாக்கப்படுகிறது.இதனால் பாசிச மகிந்தாவினது குடும்பமே தமிழினவழிப்பை முற்று முழுதாகத் தமிழினத்தைக்கொண்டே கச்சிதமாகச் செய்து வருகிறது.அன்று புலிகளும்,இன்று அதன் எச்சங்களும்(கருணா-பிள்ளையான்),மாற்று இயக்கங்கள் என்ற ஆயுததாரிகளும் டக்ளஸ் தலைமையில் கடும் காட்டாட்சி செய்யும் மகிந்தாவுக்குத் தேசியத்தின் பெயரில் காவடி தூக்கும்போது, சுகன் மட்டுமல்ல,தோழர்கள் பலரும் இங்ஙனம் முண்டுகொடுக்க, உண்மையாகப் புரட்சிகரமாகச் செயற்படும் புரட்சிகரச் சக்திகள் தவிர்க்க முடியாது இவர்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் இவற்றைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.
 
 
"Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.-Albert EINSTEIN(இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.)-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்"இது,இன்றைய சிங்கள இனவாத அரசுக்குக் குடைபிடிக்கும் அனைவருக்கும் பொருத்தமே.
 
 
 
சோபா சக்தி இத்தகையவர்களை நோக்கி சுயதேடலாகப் பிறழ் சாட்சியம் என்று எழுதுகிறார்.
 
 
இது,மிக அவசியமான தேடல்.
 
 
நம்மீது நிகழ்த்தப்படும் வரலாற்றுக் கொடுமைகளை தேசத்தின் பெயரில்,தேசியத்தின் பெயரில் புலியுஞ்சரி,இலங்கைச் சிங்கள அரசுஞ்சரி செய்து முடிக்கும் இன்றைய பொழுதுகள்வரை நாம் ஏதேதோ சொல்கிறோம் எமது மனத் தெரிவுகளுக்கமைய-உண்மையோ இலங்கையில் மனிதர்களைக் கொல்வதில் முனைப்புடைய கயவர்களை இனம்காணமறுத்துக் கிடக்கிறது.
 
அது,பற்பல வேடமிட்டுக் கருத்துக்களாக விரிகிறது.
 
 
இது,தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளதால் பாசிசச் சிங்கள அரசோ கொலைகளைச் செய்துவிட்டு,தமிழ்பேசும் மக்களது காவலனாக வேடமிடுகிறது.இது,எமது இழிநிலை.
 
 
பிறழ் சாட்சியம் சொல்லும் சோபா சக்தியை மீளப் பதியம் போடுகிறேன், முளைத்து மூன்றிலையாவது எறி என்றெண்ணி.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.09

...............................................................


பிறழ் சாட்சியம்
 
 
 
மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

 
"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.


இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.


சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.


கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாதியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.


புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.
 
ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.


இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.


இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திச்சாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.


Shoba Sakthi: பிறழ் சாட்சியம்
 
 
http://www.facebook.com/note.php?note_id=120318977910&mid=103262fG60993b60G7e38c9Ga

Samstag, Juli 25, 2009

அதிரடி மற்றும் இலங்கை நெற்...

கருணா-பிள்ளையான்கள் கட்டமைக்கும் அதிகாரம்...
 
 
இதுள் முடக்கப்படும் புலம்பெயர் ஊடகச் சுதந்திரம்
 
 
 
நாம் இன்று பொய்யுரையையும், புகழ்பாடுதலையும்,சமூகக் கட்டமைப்பினூடு வெறித்தனமாக வளரும் பாசிசத்தன்மையையும் எதிர் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.எம்மினத்துள் ஊடுருவியுள்ள பாசிசக் கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாக மக்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இதற்கு நல்ல உதாரணம் கோத்தபாய இராஜபக்ஷ.இந்த மனிதன் கடந்த காலங்களில் படு கேவலமாகக் கருத்துச் சுதந்திரத்தின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகித்தவர்.இப்போதும் அதையே தொடர்பவர்.சுடர் ஒளி பத்திரிகை ஆசிரியரைக் கைது செய்து, படு கேவலாகச் சொல்லாடி இழிமைப் படுத்தியவர்.இவரது காலடியில் கிடக்கும் கருணாவினது ஏவல் நாய்கள் இப்போது அதிரடி-இலங்கை நெற் போன்ற ஊடகவியலாளர்களை மிகக் கேவலமாகக் கருத்தாடி ஒடுக்குவதற்கான முனைப்பில் சதிராட்டஞ் செய்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.இதைத் தோழர் இரயாகரன் இங்கே கண்டித்து அம்பலப்படுத்துகிறார்.
 
 
 
இப்போது, மக்கள் நலன் மறுத்த முன்னாள் ஆயுதக்குழுக்கள் தமக்குள் பாதாளவுலக மாபியாக்களைத் தோற்றுவித்து முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்தும்,தமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பொதுமனிதரை-ஊடகங்களை ஒடுக்கவும் மீளவும் அதே வன்முறையில் தமிழ்ச் சமுதாயத்தையே உளவில் ஒடுக்குமுறைக்குள் தள்ளி,அவர்களது சிவில் நகர்வுகளை முடக்குவதற்கு முனைகிறார்கள்.புலிகள் அழிந்தாலும் அதன் எச்சம் கருணா-பிள்ளையான் எனத் தொடரத்தாம் செய்கிறது...
 
 
இத்தகைய அராஜகத்தனமான அரசியல் நடாத்தை, மகிந்தாவின் கழுத்துத் துண்டில் தொங்கியபடி அரசியல் நடாத்தும் கருணா-பிள்ளையான் குழுக்களால் நடந்தேறுகிறது.இவ்வகை அரசியலுக்கு முன்னோடிகளான புலிகள் இப்போது, இவர்களது வடிவில் பாசிச அரசியலை நடாத்துகிறது!மறுபுறமோ,தமிழர்களை "ஜனநாயக மயப்படுத்தும்"திரு.டக்ளஸ் மாத்தையாவோ யாழ்ப்பாணத்தில் சுவர்களுக்கு "ஜனநாயகத்தை"ப் பாடமெடுப்பதில் அங்கும் அராஜக அரசியலுக்கு முண்டுகொடுக்கிறார்.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது!இந்த இலட்சணத்தில்"நாமும் வாழ்ந்து,நமது மக்களையும் வாழ வைப்போம்"என்பதும்,"உரிமைக்குக் குரல் கொடுப்போம்,உறவுக்குக் கரங் கொடுப்போம்"என்பதும் புதிய இரக அராஜகக் கட்டுமானத்தின் அறைகூவலாக முடிகிறது.
 
 
இதையேதாம் "புதிய இலங்கையைக் கட்டுவதாக"க் கருணா பல்லிளித்துக் கூறி, எமக்கு முன் தூஷணமாகக் காறி உமிழ்கிறான்!இவனது குழுவோ மக்களது செல்வத்தை மகிந்தாவோடிணைந்து கொள்ளையடிப்பதில் இலங்கையிலிருந்து ஐரோப்பாவரை தொடர்புகளை வைத்துத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கிறது.தமிழ்பேசும் மக்களது அரசியல் உரிமைகளை இதற்காக மகிந்தாவுக்குப் பட்டயமெழுதிக் கொடுத்தும் உள்ளது.இது,பிரதேசரீதியான பிரிவினையைத் தூண்டவும் முனைந்து அமெரிக்க மேலாதிக்கத்தின் கனவையும் நிதர்சனமாக்கியது.இந்தக் கருணாவென்ற துரோகிக்குப் "புதிய இலங்கை-கிழக்குச் சுதந்திரம்" ஒரு கேடா?தூ...
 
 


 
 
இன்றைய இலங்கையில், இத்தகைய ஆயுதக் குழுக்களது அராஜ அரசியலானது தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது.இவற்றுக்குத் தலைமை தாங்கும் டக்ளஸ்போன்ற அரசியல் மாபியாக்களோ இதை மறுத்தபடி தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகம் சொல்லக் கருணாவென்ற முன்னாள் புலிப் பயங்கரவாதி-பாசிசவாதி"புதிய இலங்கையை கட்டியெழுப்புவது"என்ற தனது கொச்சை அரசியலுக்குப் புதிய விளக்கமாக இன்று தூஷணம் நமது காதுகளை எட்டுகிறது.தமக்கு எதிரானவர்களை-தமது அராஜகத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்களைக் கொச்சைத் தனமாக ஏசியும்-மிரட்டியும்,கொலைகள் புரிந்தும் அடக்கிய புலிகள், இன்று முழுமொத்தச் சமுதாயத்தையுமே அநாதைகளாக்கி அடிமைப்படுத்திச் சென்றதன்பின்,அவர்களது எச்சங்கள் மேலும் அதே கதையைத் தொடர்வது நமது காலத்தில் நமக்கு விடிவில்லை என்பதை மீளவும் உறுதிப்படுத்துகிறது.
 
 
எந்தக் காரணத்தையும் பத்திரிகையாளர்களை ஒடுக்குவதற்குச் சொல்லமுடியாது.எந்தக் காரணத்தையும் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொல்வதற்குச் சொல்லமுடியாது!முன்னாள் ஆயுதக் குழுக்களது ஊடகங்களாகவிருந்த அதிரடி.கொம் மற்றும் இலங்கை நெற் போன்ற ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் தமக்கு ஏற்பட்ட அராஜக ஒடுக்குமுறைக்காக "இப்போது" குரல் கொடுக்கின்றன.
 
 
இத்தகைய ஊடகங்கள்,தாம்சார்ந்த ஆயுதக்குழுக்களாலும் மற்றும் புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்றுக் கருத்தாளர்கள்-படைப்பாளிகள் குறித்து எப்பவும் வாய் திறந்தவர்களில்லை.எனினும்,இன்று இவர்களது குரல்களுக்கெதிராகவும்,இவர்கள் முன்வைக்கும் முரண்பாடுகளுக்கெதிராகவும் புலம்பெயர்ந்து வாழும் மண்ணில் அராஜகத்தைக் கட்டவிழ்வுக்கும் கருணாவினது கொலைவெறி அரசியலைக் குறித்து நாம் வன்மையான கண்டனங்களைப் பதிகின்றோம்!
 
 
அராஜகம்,ஒருபோதுமே ஏற்புடைய அரசியலாக முடியாது.புரையோடிப்போன இலங்கைப் பாசிச அரசினது பக்க விளைவுகளாக இவை மேலும் நிறுவனமயப்படுமானால், முழுமொத்த மக்களுக்மே இத்தகைய அரசுக்கும் அதன் எடுபிடிகளுக்கும் அடிமையாவதில் முடியும்.
 
இலங்கையர்களதும்-மிகிந்தா குடும்பத்தினதும் உலகப் பார்வையானது மாற்றாந்தோட்டத்தில் மல்லிகைக்கு மணமிருப்பதாகக் கருதுவதில்லை.ஒற்றைத் தலைமையும்-அதைச் சுற்றித் துதித்திருப்பதும் ஆங்கிலேயனிடம் கைகட்டிக் காரியமாற்றிய மனங்களின் கால நீட்சிதான்.அந்தக்காலத்தில் தவமிருந்து பெற்ற அதிகாரத்துவத்தை மீளச் சுவைப்பதில் இத்தகைய அதிகாரவர்க்கமானது தம்மைத் தமிழரின் மீட்பர்களாகவும்-ஒன்றுபட்ட இலங்கையின் புத்திரர்களாகவும் காட்டிக் கொள்வதில் எந்தவியப்புமில்லை.
 
 
கருணா-பிள்ளையான்,டக்ளஸ்போன்ற இழி மானிதர்கள் உலகெங்கும் எவர் பெயராலும் -எதன் பெயராலும் அராஜகத்தையும்,அவலத்தையும் ஏற்படுத்தித் தமது வாழ்வாதாரங்களையும்,செல்வத்தையும் காத்துக் கொண்டு,மேலும் மக்களின் வரிப்பணத்தைச் சொந்தச் செல்வமாகக் குவித்து வருகிறது.இத்தகைய ஒரு தேவையானது மீளவும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வைச் சிதைப்பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது.இவர்களே மகிந்தாவால் தத்தெடுக்கப்பட்டு,அவர் குடும்பத்துத் தாதாக்களாகத் தமிழ் மக்களுக்குள் புலிப்பாணிப் பாசிசத்தைத் தகவமைக்க இப்போது, அராஜகத்தைக் கட்டவிழ்து விடுகிறார்கள்.இஃது, வருந்தத் தக்கது மட்டுமல்ல தடுத்து நிறுத்துவதும் அவசியமானது!
 
 
எனவே,அராஜகக் கொலைகளுக்கு-உளவியற்றாக்குதலுக்கு-அச்சமூட்டலுக்கு எந்தக் காரணமும் கற்பிக்க முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும-அராஜகத் தாக்குதல்களை-அச்ச மூட்டல்களை; ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்"திருத்திய"நேர்த்தியான-அவசியமான அரசியல் என்பாரானால்,அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்"என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
 
பாசிசத்துக்குரிய இறுமாப்பும்-அதிகார ஆதிக்கவாதமும்-ஆயுதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான இந்தக் கருணாவகை ஆதிக்க உளவியலை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இதற்கான பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்தடன் உருவாகியுள்ளது.சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப்பூர்சுவா எண்ணங்களாலும்-ஆயுத ஆதிக்கத்தாலும் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு எந்தக் கொம்பனாலும் போட்டியிட முடியாது.இஃது, தமது எஜமானர்களுக்காக ஆயுதத்தையும்.அராஜகத்தையும் முன்நிறுத்தி, வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு தனிநபர் வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்.இன்று புலம் பெயர் தளத்தில் இதற்கெதிராகக் குரல் கொடுக்கும் இணையத் தளங்களுக்கு,அவைகளுக்கு எழுதும் பத்திரிகையாளர்களுக்கு நேரும் வன்கொடுமை இத்தகைய தெரிவின் தொடர்ச்சியே!
 
 
அதிரடி.கொம்,இலங்கை நெற் செய்தியாளருக்கு ஏற்படும் அச்சமூட்டல்-அதிகாரத்தனமிக்க பாசிச மொழியூடாகக் கூறப்படும் உளவியற் தாக்குதலானது நமக்குத் தெரிந்த அரசியல்தாம் இது,எனவே ஏமாற்றமில்லை.ஆனால், நமது மக்கள்? பாவப்பட்ட மக்கள், பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?
 
 
கடந்தகாலத்தில் அவர்கள் தமது உயிர்-உடமை அனைத்தையும் சிங்கள-புலிப்பாசிசக்கூத்துக்குத் தாரை வார்த்தவர்கள்.
 
 
அன்று,தமிழ் மொழிமீதான பற்றுறுதி தம் உயிரைக்கொடுப்பதற்குக்கூடத் தயங்காத தியாக உள்ளத்தை நம் மக்களுக்கு ஏற்படுத்தியது.இவர்கள் தமது திண்ணைக்குள் முடங்கியிருந்து,தமது குடும்பம்-உறுவுகளென வாழ்ந்த சராசரி வாழ்வை- புழுதிதோய்த கல்லொழுங்கைய+டாய் -கடலேரி நீரூடாய் கால் புதைத்து ஊர்விட்டு ஊர்போய் மனிதத்தைப்புரிய வைத்தது இந்தத் தமிழ் உணர்வு!தன் தேசத்தைப்- பெற்ற குழந்தையைவிட நேசிக்கத்தூண்டியதும் இந்தத் தமிழ் உணர்வே.ஆனால், அந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்புத்தாம் இங்கு ஓடியொளித்துவிட்டது.இத்தகைய அளப்பரிய தியாகஞ் செய்த மக்களது அழிவிலிருந்து அரசியல் செய்யும் கருணா-பிள்ளையான்களின் காடைத்தனம் முறியடிக்கப்பட்டாகவேண்டும்.இதை, இனிமேல் மௌனமாகவிருந்து அனுமதிக்க முடியாது.புலிகளுக்கு மண்டியிட்டு அழிவைக்கண்டவொரு இனம் நாம்.எனவே,கருணாவினது காலை ஒடிக்கும் எதிர்ப்பை வெகுஜனப்படுத்தி மக்களை விழிப்படைய வைப்பது அவசியம்.
 
 
யார்மீதும் சவாரிசெய்த புலிவகை அரசியலானது இன்று கருணா-பிள்ளையான் ஈறாக எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொல்லுகிறது-மிரட்டுகிறது,அடிமைப்படுத்த முனைகிறது!இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள்(கருணாவுக்கு-பிள்ளையானுக்கு,டக்ளஸ்சுக்கு வால் பிடிக்கும் புலம் பெயர் குழுக்கள-தனிமனிதர்கள்) தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோட தமது எமானர்களுக்காக வாலாட்டுகிறார்கள்.இத்தகைய மனித்துவமற்ற அராஜகக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தம்மை"ஜனநாயகத்தின் பெயரால்"அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தமது அரசியலை-பரப்புரைகளை முன்னிலைப் படுத்திவிடுகிறது.இதற்காக "அம்மான்"ஆட்டுக்குட்டியென ஆயிரத்தெட்டு இணைய ஊடகங்கள் புற்றீசல்போல் முளைக்கின்றன.
 
 
இதுதான் இன்றைய அவலமான சமூக உளவியல்!
 
 
ஒவ்வொருவரும் தமது அராஜகத்தை நியாயப்படுத்த தமிழ் மக்கள்-பிரதேசம் எனப் பல்வேறு நாமத்துக்கூடாகப் பரப்புரைகளைச் செய்து தமிழ்பேசும் சமுதாயத்தின் இருப்பையே அசைக்கின்றார்கள்.இவர்கள்அனைவரும்,தத்தமது எஜமானர்கள் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும் அன்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.இவர்கள் கூறும் "ஜனநாயம்,சுதந்திரம்,சுயநிர்ணயவுரிமை"யென்பதெல்லாம் வெறும் ப+ச்சுற்றலாகும்.இதுள், அதிரடியோ அல்லது இலங்கை நெற்றோ விதிவிலக்கல்ல!ஆனால்,ஊடகங்கள் மீது தொடக்கப்படும் அராஜகம் உண்மைகளைப் புதைப்பதற்கு எடுக்கப்படும் அரசியல் அராஜகம் என்பதால் அதை எதிர்கொள்ளும் அதிரடி-இலங்கைநெற்றுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம்.இஃது, அவர்களது அரசியல் நிலைப்பாட்டை ஆதரித்து அல்ல.மாறாக,கருத்துச் சுதந்திரத்தை நிலைப்படுத்துவதற்கானது.
 
 
புலிகளாலும்-மகிந்தா குடும்பத்தாலும் பாசிசம் தன்னை வலுவாகத் தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது.இதுவே,இலங்கையிலிருந்து தொலைபேசியூடாகச் சவிச்சர்லாந்தில் இருக்கும் ஊடகவியலாளரை மிரட்டுகிறது-தூஷணத்தால் கொலை மிரட்டல் செய்கிறது!தமது சொந்த இலாபங்களுக்காகத் தமது மக்களையே கொல்லும் ஒரு மனிதக்கூட்டம் இந்த நூற்றாண்டிலும் இருக்கிறதென்றால்,அது,இலங்கையில்தாம்.
 
 
இந்த இலங்கையைத்தான் மகிந்தாவும்,அவர் பின்னால் நாயாக வால் ஆட்டும் கருணா-பிள்ளையான்,டக்ளஸ் வகையறாக்கள் புதிய இலங்கை என்கிறார்கள்.இத்தகைய இலங்கை ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களது இலங்கை இல்லை என்பதைத் தமது அராஜகத்துக்கூடாக மகிந்தா குடும்பமும் அக்குடும்பத்தின் ஏவல் நாய்களும் சதா உறுதிப்படுத்தி வருகிறார்கள்.இவர்களை முறியடிக்க இலங்கைவாழ் மக்கள் வீதிக்கு இறங்கியே ஆகவேண்டும்.இதைத் தூண்டாத புரட்சிகர அரசியல் கட்சிகள் பாசிசத்துக்குத் துணைபோனவைகளே.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
25.07.09

Dienstag, Juli 14, 2009

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்

கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:

பயங்கரவாதம் விரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்!

' மூலதனத்தின் கருப்பையில் சமாதனம் கருக்கொள்வதென்பது
மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும்.'


நாங்கள் உவத்திரமிக்க-திமிர்த்தனமான கொடிய சுரண்டற் காலத்தில் வாழ்கிறோம்,கடந்த இருபது நூற்றாண்டுகளையும் மனிதர்கள் அதன் கொடிய யுத்தங்களாலும்,கொலைகளாலுமே எண்ணிக்கொள்ள முனைகையில் இருபத்தியோராம் நூற்றாண்டோ 'இல்லை,இல்லை-நானும் அதே இரகம்தாம்' என்றபடி.செப்டம்பர்11' க்கு பின்பு பற்பல காரியப் போர்களையும்,சமாதான சீட்டாட்டங்களையும்-பயங்கரவாதத்தின் பெயர்கொண்டு உலக மூலதனவாதிகளும், அவர்களின் பிராந்தியகண்ட முகவர்களுமாக ஆற்றிவருகிறார்கள்.இந்நிலையில் நாம் இக்கட்டுரையை நிச்சியமாக கலீப் கார் Caleb Carr :"The Lessons of Terror". பாணியல், A History of Warfare against Civilians: Why it Has Always Failed and Why it Will Fail Again என்று எழுதப்போவதில்லை.கலீப் கார் அமெரிக்க இராணுவத்தின் செலவில் இராணுவ வரலாறு புனையும் இராட்சத அறிவு விற்பனன்,எதையும் மக்களுக்காகவே -அவர்கள் நன்மைக்காகவே அமெரிக்கா அரசியல்யுத்தஞ் செய்வதாகக் கயிறு திரிப்பதில் நம் நாடுகளின் அரசியல் வாதிகளுக்கே முன்னோடி.இந்த விபரீதப் புத்திஜீவியை ஜெர்மனிய மொழிக்குள் அறிமுகஞ் செய்யும் போது:Wer mehr ueber die Urspruenge des internationalen Terrorismus und die Strategien zu seiner Bekaempfung wissen will, sollte Caleb Carr lesen."என்று Dr. Udo Ulfkotte எழுதுகிறார்.சர்வதேசப் பயங்கர வாதத்தின் ஆதித்தொடக்கம் பற்றி மிகுதியாகவும்கூடவே அதன் போராட்ட வியூகம் பற்றி எவரொருவர் அறியமுற்பட்டால் ,அவர் கலீப் காரை வாசிக்கவேண்டுமென்கிறார், அந்த ஜேர்மனிய எழுத்தாளர். நாம் கூறுகிறோம்: 'எவரொருவர் அமெரிக்கப் போர்களையும்பயங்கரவாதத்தின் மூலவூற்றை -அவரது பாணியில்"Ursprueng(Origin) " தெரிந்து கொள்வதற்கு கீழ்வரும் நூலைப் படிக்கவும்:Lies and the Lying Liars who tell them. A Fair and Balanced Look at the Right by Al FRANKEN.
 
பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம்!
'..............'
இப்பொழுது நாம் யோசிப்பதென்னவென்றால் நாளாந்தம் மானுடம் குண்டடிபட்டுச் சாகிறது,சமாதனத்திற்கானஜனநாயத்திற்கான யுத்தஞ் செய்தவர்கள்-செய்கிறவர்கள் மீளவுமொரு வியூகத்துக்குள் இவ்வாண்டுமுதல் வருகிறார்கள் என்பதுதாம்.கொண்டிலீசா அம்மையாரும்,எங்கள் அருந்தவப் புதல்வன் ஐயா ஜோய்ச்சு புஷ்சும் ஐரோப்பாவைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்து போய்யாச்சு! ஈரான் அணுப்பிளந்து ஆயுதஞ் செய்யுமுன் அடக்கியாக வேண்டும்,வடகொரியா மாதிரி வாலாட்ட விட்டால் காரியம் கெட்டமாதிரித்தாம்.பிரான்சும்,ஜேர்மனியும்'ஆமாம் எல்லாத்துக்கும் நாம இருக்கிறோம் நண்பரே,இப்ப நீர் எம்முடைய தேங்கிப்போன சந்தைக்கு ஒரு வழி சொல்லும்! கொஞ்சம் ஈராக்கில் இடம் தாரும் பிறகு இந்தத் தப்பான கைகள் அணுக்குண்டோடு கோலாச்சுவதை நாம் ஒரு வழிபண்ணிடலாம்'என்று மடக்க ஐயா புஷ்சும் தலை சாய்க்க புதிய வியூகம் இன்னும் பாரிய அழிவை நோக்கி நடக்க நேர காலம் குறிப்பதுதாம் பாக்கி.
 
நேற்று ஆவ்கானிஷ்தானில் நடாத்தப்பட்ட அமெரிக்காட்டுமிராண்டிப்போரானது 11செப்டம்பரில் உலக வர்த்தக மையத்தில் இறந்த 'வெளிநாடுகளின்அமெரிக்காவின்' மக்களைவிட அதிகமான மக்களைக் கொன்றது! இங்கு பாவிக்கப்பட்ட யுத்தத் தளபாடங்கள் 1997 இல் சர்வதேசத்தால் கவனித்தொதுக்கப்பட்ட மிகக் கொடுமையான "Typ CBU-89 of Typ Gator"என்ற குண்டுகளாகும்.இவை முறையே 94 உயர்வெடிப்புப் பன்சர் மற்றும் ஆளழிப்புக் கண்ணிகளைக் கொண்டு தாக்கும் வல்லமையுடையவை.கூடவே உலகத்தால் ஒதுக்கப்பட்ட 'ஸ்ப்பிலிற்றர்'Splitterboms பாவிக்கப்பட்டது.இதை அம்பலப்படுத்திய Prof.Marc Herold,(New Hampshire பல்கலைக்கழகம்)அவர்களது கணிப்பீட்டின்படி அமெரிக்கக் குண்டுகளாற் கொல்லப்பட்ட ஆவ்கான் அப்பாவிகள் கிட்டத்தட்ட 5000.தனியே ஒரு கிராமத்தில்(கோரூம்)மட்டும் 200 அப்பாவிகள் மீது போடப்பட்ட குண்டால் துடிக்கத் துடிக்க அனைவரும் மாண்டு போயினர்.சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விடுதி கூட விதி விலக்கற்று குண்டுகளால் தாக்கப் பட்டது.
 
ஈராக்கில் இதுவரை நடைபெறும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகளின் கொடிய அழிவுயுத்தத்தால் பல உயிர்கள் பலியாகின்றன,என்றுமில்லாதவாறு சூழல் மாசாக்கப் படுகிறது.தாள்வீச்சு அணுக்குண்டுகளால் அப்பிராந்தியமே உயிர்வாழமுடியாத கதிரியக்க வலயமாக மாறுகிறது.எனினும் ஈராக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியாத அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்யங்கள் ஈராக்கின் எல்லை நாடுகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகின்றன.இதன் ஆரம்பம் ஈரானில் கைவைப்பதாக இருக்கும்.எல்லை தாண்டி வரும் குண்டுகளையும்,தற்கொடைஅரபுத்தேச பக்தர்களையும் தடுப்பதற்கான வியூகமாக இந்தப் போர் மையங்கொள்கிறது.ஈராக்கின் பல்லினங்களுக்கிடையில் கட்டவிழ்த்து விடப்படும் இனவாதம் பல் நூறு உயிர்களை நாளொன்றுக்கு கொன்றபடி,இதே கதைதாம் இன்றைய ஆசியஆபிரக்க-இலத்தீன் அமெரிக்கப் பகுதிகளிலும் கூடமே கிழக்கைரோப்பிய நாடுகளிலும்.இந்த யுத்தம் எதன் பொருட்டால் நிகழ்கிறது?ஏனிந்தப் படுபயங்கர நிலை பூமிப்பந்துக்கும்,உயிர்களுக்கும்? இதன்வாயிலாகப் பேசப்படும் 'சமாதானம்' எனும் ஏட்டுச்சுரக்காய் எப்போதாவது கறிக்குதவியதாக உலக வராலாற்றில் நாம் அறிந்தோமா? இது குறித்து சற்று நோக்குவோம்:
 
சண்டைகளும்,சமாதானக்கூச்சல்களும்:

மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இங்கு மக்கள் அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும் மாற இந்த வலிமை உதவியுள்ளது.இந்த வலிமையை உணராத மனிதக்குழுக்கள் பின்னாளில் இருந்த இடம்தெரியாது அழிக்கப்பட்டார்கள்.உதாரணமாக:சமீப கால வரலாறு சிந்துநதிப் பள்ளத்தாக்கு மக்களினதாகும்(அண்மைக்கால அமெரக்கஅவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கும் இது பொருந்தும்).சிந்து நதி நாகரீகம் பற்றி ஜெர்மனிய ஆவணம் கூறுவதைப்பார்ப்போம்:
 
Durch die Ausgrabungen im Indischen Fuenfstromland und am unteren Indus wurden in neuerer Zeit schriftbehabte Hochkulturen ermittelt,so besonders in Mohenjo Daro und Harappa, vermutlich die Mittelpunkte zweier Herschaftsbereich.ueber die Traeger dieser Kulturen herrscht noch keine einheitliche Meinung,so dass man auch ueber ihre Herkunft nicht Bestimmtes ermitteln kann, waehred die starken Verbindungen mit der sumerisch-akkadischen Kultur erlauben,den Beginn dieser indischen Kulturen(கவனிக்க:இந்தியக் கலாச்சாரங்கள் என்ற பன்மைத்துவத்தை). auf etwa 2500 vC. zu datieren.Ihr politisches Ende fand sie um die Mitte des 2.jahrtausends. Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet.Die zahlreichen Baeder -es wurde auch ein Grossbad mit einem 12m langen, 7m breiten und 2,5m tiefen Becken ermittelt-weisen auf eine Kultische Bedeutung hin.Es wurden mehrere Goetter verehrt,unter denen eine Muetergoetin hervorragt.Die Schrift Konnte bis heute noch nicht entziffert werden.
 
DIE wahrscheinlichen Zerstoerer dieser Reiche sind INDOARIER.Um 1500 vC.war die Einwanderung in das Indusgebiet abgeschlossen.Der in dem Epos MAHA BHARATA geschilderte Kampf deutet darauf hin, dass die Kraefte der vorarischen Bevoelkerung allmaehlich wieder starker wurden ...(G.Dunbar,Gesch.INDIENS -Eng.1936/Dt.1937;Herders KonversationsLexikon Seite:66/67).
 
ஐந்து நதிகளுடைய நாடான இந்தியா மற்றும் சிந்துவெளி அகழ்வராட்சியினூடாகச் சிந்துவெளிப் பண்பாடு புதிய காலத்துள் எழுத்துடைய உயர் பண்பாடுடையதென அறிவிக்கிறது.பிரத்தியேகமாக மொகஞ்சதார-கரப்பா சாத்தியமான வரை இருவேறு ஆளுமைகளின் ஸ்த்தானமாகவிருக்கும்.இரு பண்பாட்டைத் தாங்கியவர்களிடமும் ஒருமித்த கருத்தற்ற நிலை அவர்களது மூலத்தோற்றம் குறித்த வெளிப்படுத்தலுக்கான முயற்சிக்கு.சுமேரியர்-அக்காடிய(மூன்று நதிகளுடைய நாடு- மரித்த மொழியான அக்காடி)பண்பாடுகளின் பலமான இணைவுகளின் அனுமதித்தலோடு ஆரம்பிக்கிறது இந்தியப் பண்பாடுகள்.அது கிட்டத்தட்ட கி.மு.2500 ஆகும்.இவர்களது அரசியல் வாழ்வின் முடிவு இரண்டாவது ஆயிரமாமாண்டின் மத்தியிலாகும்(கி.மு.1500).நகரங்கள் அனைத்தும் இறுக்கமாகவும் கூடவே 4-10 மீட்டர் அளவிலான வீதிகளையும் கொண்டு ஊடறுத்தவை.இலகுவான கட்டட வடிவங்கூட ஒரு ஒழுங்கமைந்த நுட்பத்தைக் கொண்டமைந்திருந்தது.மிகுதியான குளியலறைகள்-அத்தோடு ஒரு பெரும் நீச்சல் தடாகம்-12மீ.நீளத்துடனும்7மீ.அகலத்துடனும்2,5மீ.ஆழத்துடனும் இருந்திருக்கிறது.இவை பண்பாட்டு அர்த்தத்தை பறை சாற்றுபவை.பற்பல தெய்வ வழிபாடுகள்இருந்திருக்கிறது,இதற்குள் தாய்மைக்(கொற்றவை?)கடவுள் வழிபாடும் வெளிவருகிறது.இவர்களது எழுத்து வடிவம் இன்று வரையும் வாசிக்கமுடிவதில்லை(இப்போது தமிழகப் பேராசியர்கள் இவற்றைப் படித்து அறிந்துள்ளதாகக் கேள்வி,கூடவே அது தமிழ்தானாம்! நாம் தமிழைத் தாய் மொழியாகக்கொண்டதனால் இதைக் கேட்க மகிழ்ச்சிதாம்.ஆனால் உண்மையில் இந்த வாசிப்பு சரியானதா?சந்தேகம்!)
 
இந்தப்பண்பாட்டைச் சிதைத்தவர்கள் நிச்சியமாக இந்தோ ஆரியர்கள்தாம்;,இவர்கள் கி.மு.1500 'ம் ஆண்டளவில் சிந்துவெளிநாகரீக வலயத்துள் குடியேறியதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதிகாசப் புராணமான மகாபாரதம் காட்சிப்படுத்தும் யுத்தத்தினது அர்த்தம் தோற்கடிக்கப் பட்ட இந்திய மக்களின் மீள் எழிச்சியோடு சம்பந்தப்படுகிற...-ஜீ.டுன்பார்,இந்திய வரலாறு:ஆங்கிலமூலம் பதிப்பு1936டொச்சுப்பதிப்பு1937:கேர்டர்லெக்சிக்கோன் பக்கம்:6667 -19572004.).
 
இங்கெழும் கேள்வி வலிமை பற்றியது!ஒரு பெரும் பண்பாடு-உயர் பண்பாடுமிக்க மக்களினம் எங்ஙனம் சிதறடிக்கப் பட்டது?வரலாறு தொட்டு யுத்தங்கள் மானுடர்தம் வாழ்வை-உயிரைப் பறித்துள்ளது.இது ஏன்? அடிப்படையில் பொருள்தாம் காரணியாகிறது!சுகமான வாழ்வு வேண்டிப் போரிட்ட வரலாறு முழுமையும் இருப்பவனுக்கும் இல்லாதானுக்குமான போரே.இருப்பவன் அதைப் பெருக்கவும்,இல்லாதான் அதைப் பெறவும் போரிடவேண்டிய நிலையில் உலகம் சுழன்றபடி.சுமேரியர்கள் கி.மு.3000'ம் ஆண்டளவில் பாரிய வெள்ளப் பெருக்கினால் தமது அதியுயர் பண்பாட்டு நிலத்தையிழந்தே சிந்துவெளி நோக்கி இடம்பெயர்ந்து சிந்துவெளி நாகிகத்துடன் கலந்திருக்கிறார்கள்,இவர்களது தோற்றம்-நாடு இதுவரையும் சரியாக அறிய முடியவில்லை.கி.மு.3000'ம் ஆண்டளவில் சிந்து சமவெளியூடாய் மெசோபடாமின் நாடுவரை இடம்பெயர்ந்துள்ளனர். Mesopotamien ஒரு மோசமான தரைத்தோற்றதோடுதாம் இருந்தது,1000கி.மி.நீளமான Euphrat/Tigris நதிகளால் இப்பிரதேசம் தொடர்ந்து மூழ்கிய நிலையில் மிகப் பிற்காலத்தில்தாம் கிழக்குப் புறத்தில் சுமேரியர்களும் குடியேறியுள்ளனர்.இவர்கள் குடியேறிபோது மிக முன்னேறிய அறிவுடை மக்களாக இருந்திருக்கிறார்கள்.மொசோபடேமியன் பண்பாட்டோடு இணையும்போது இரட்டிப்பு வீரியது;தோடு அறிவுவலிமை வளர்கிறது.சுமேரிய-யூப்ராட்திகேரிய பண்பாடுகள் தாம் பாபிலோனியப் பண்பாட்டின் விருத்தியை ஏற்படுத்தியிருக்கிறது.சுமேரியர்கள் இறைவழிபாட்டைக் கடைப்பிடித்த மக்ககட்டொகுதியாகவே இருந்திருக்கிறார்கள்.இவர்களின் ஆரம்பகால அறயியல்-அறிவியல் சமூகம்,அரசியல் பொருளியலென விரிகிறது.இதுதாம் மேற்குலகின் இன்றைய வலிமைக்கான விதையும்.சுமேரியர்கள் இந்தியா(அன்றைய அகண்ட நிலப்பரப்பு) ஊடாகவே இடம்பெயர்ந்துள்ளார்கள்,அப்போது பற்பல சிறு தெய்வ வழிபாடுகளையும்,அறிவியலில் வியத்தகு நிர்மாணிப்புடைய சிந்துவெளி பண்பாட்டின் கூறுகளையும் கற்றுச்சென்றுள்ளனர்Hammurapi(1728-1686vC.) கமூராபி ஆட்சியின் வலிமை சுமேரியர் பிச்சை.பாபிலோனிய யுத்தவீரியம் இன்று வரை பற்பல வடிவங்களில்,அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உளவியல் கமூராபியன் பிரதிநகலென்பது தெட்டத்தெளிவானது,ஏnனினல் கவ்போய் வடிவ ஏற்புகளும்,வாழ்வுமுறைமைகளும் கமூராபி மன்னனோடு ஒற்றுமையுடையது.
 
"Der Schatten Gottes ist der Fuerst,und der Schatten des Fuersten sind die Menschen."-Babylonische Herrschaftauffassung.seite:62.
 
 
'இறைவனது நிழலே அரசனாகும்(இரண்டும் ஒருமை.),அதேபோன்று அரசர்களின் நிழலே மனிதர்கள்(பலவும்:பன்மை,நூலிழையுடைப்புத் தேவை.).-பாபிலோனிய அரசியலொழுங்கு.
 
இப்போது கி.மு.1500 அளவிற்றிடபெயர்ந்த இந்தோ ஆரியர் கூற்றுக்களைக் கண்முன் கொணர்ந்தால் அவர்கள் கமுராபிகாலத்தில் தொடர்புடைய ஒழுங்குகளைப் பேசுவது புலனாகும்.இங்கும் வலிமைக்கும் வலிமைக்கும்தாம் போராட்டம்.எதுவும் நாடோடி நிலையிலில்லை.
 
இரண்டாவது உலக மகாயுத்தத்தை நடாத்தி கிட்டத்தட்ட ஆறுகோடி மக்களைக் கொன்ற அடேல் கிட்லர் என்ன கூறுகிறா(ன்)ர் பார்ப்போமா?
"war es nicht ,Kriege zu fuehren,sondern einen neuen Sozialstaat von Hoester Kultur auf zubauen.Jedes Jahr dieses Krieges beraubt mich dieser Arbeit"-19Juli1940 A.Hitler.vom Klassenkampf seite29.
 
'யுத்தஞ் செய்வது,அதுவல்ல நோக்கம்,மாறாகவொரு உயர்ந்த பண்பாடுடைய சமூக அக்கறையுள்ள புதிய நாடுருவாக்குவதே.யுத்தம் என்னிடமிருந்து இந்த வேலையைத் திருடிக்கொள்கிறது.'-அடோல்ப் கிட்லர்,19.07.1940இல் மிக முக்கிமான பொதுக்கூட்டமோன்றின் உரையில்.
 
Die Geschichte aller bisherigen Gesellschaft ist die Geschichte von KlassenkaempfenK.Marx
 
'இன்றுவரையுள்ள அனைத்துச் சமுதாயங்கள்தம் வரலாறும் வர்க்கப்போரினது வரலாறே!'-மார்க்ஸ்.இதேயேதாம் நாம் கொம்யூனிச அறிக்கையில்.'வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிலானது.' என்று படிப்பது.
 
கிட்லர்தம் புதியநாடுபண்பாடு என்பதெல்லாம் என்ன?
 
இனத்தூய்மை,தாமே உலகம்பூராகவும் ஆள்வதும்-பிரித்தானியாவுக்கு மாற்றீடாக மாறுவதுமே கிட்லரின் கனவு.இது அவருக்கு வழங்கப்பட்ட விதம் கனவல்ல,அது ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் தேவையாக விரிந்து கிட்லரூடாய் அரசிலரங்குக்கு வருகிறது.
 
ஒருமொழியைப் பேசும் மக்கட்டொகுதியே சகல வகைகளிலும் ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும்போது குவிக்கப் படும் செல்வங்கள் குலையாத பாதுகாப்பை மொழிக்கூடாக் கோடிட முடியுமென்பது உடமை வர்க்கத்தினது கண்டு பிடிப்பே.இங்கேயும் பொருட்குவிப்பும்வலிமையும்தாம் முன்னிலை வகிக்கிறது.காலம் பூராகவும் இந்த வலிமை தாம் பண்பாடுகளை உருவாக்கியதும்-அழித்ததும்.வலிமையே வாழும்! வலிமையென்றவுடன் உடற்பலத்தைக் கற்பனை பண்ணிவிட்டால் அது சரியாகா.வலிமையானது மக்களது ஆத்மீகஅறிவியல் வளர்ச்சியோடு அவர்தம் ஒருமித்த பொருளியற் பலத்தைக் குறித்து நிற்பதே!
 
இதில் அவரது (கிட்லர்) கனவைக் குலைக்கும் யுத்தமானது இங்கிலாந்தின் வழியே உருவாகியதாக எழுதுகிற போக்கில் இன்றைய வரலாற்றாளர்கள் உள்ளார்கள்,இந்த வகையில் கிட்லரின் சாதகமான பக்கங்களைச் சொல்வதாகக் கூறும் திருவாளர்.மக்ஸ் குலூவர் vom Klassenkampf zur Volksgemeinschaft-ISBN:380611059x தனது 'மக்கள் கூட்டமைப்புக்கான வர்க்கப்போர்'எனும் நூலில் இப்படியெழுதுகிறார்:
'"Er habe grosse und schoene Plaene fuer sein Volk.Er habe den Ehrgeiz,das deutsche Volk reich und das deutsche Land schoen zu machen. Der Lebensstandard des einzelnen solle gehoben werden, und Deutschland solle die schoenste und beste Kulturbekommen.Die Theater sollten fuer alle da sein und nicht nur fuer "die oberen Zehntausend wie in England". Fuer die Ausfuehrung dieser ungeheuren Plaene wuerde er die ganze Arbeitskraft gebraucht haben,aber die von ihn nicht gewollte Ruestung, fuer deren Begrenzung er Vorschlaege gemacht habe, nehme ihm die Arbeit weg.und fuer seine Vorschlaege sei er nur ausgelacht worden von denselben Leuten "die bereits vor den Kriege die Hetze betrieben haben,naemlich Churchill und Chamberlain."
 
.' பெரியதும்,அழகானதுமான திட்டங்கள் அவரது மக்களுக்காக அவர்வசம் இருந்தது. டொச் மக்களை செல்வர்களாக்கவும் ,டொச்சு நாட்டைச் சிறப்பாக்கவும் பெரும் இலட்சியத்தை அவர் கொண்டிருந்தார்.ஒவ்வொருவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்,டொச்சுநாட்டிற்கு மிகமிக அழகானதும் சிறப்பானதுமான பண்பாடும் பெறப்படவும்,இந்த நாடகம் 'இலண்டனைப்போன்று உயர்வர்க்க -அந்த பத்தாயிரம் பேருக்காக மட்டுமல்லாது 'அனைவருக்குமானதாகும்.இந்த அசாதாரணத்திட்டத்திற்காக ,அதைச் செயற்படுத்துவதற்காக தனது முழுச்சக்தியையும் பயன் படுத்தினார்.அவரே விரும்பாத ஆயுததளபாடமும் அதனது மட்டுப்படுத்தல்களும்,அவரது செயற்பாட்டை நாசமாக்கியது.அவரது முன்பிரேரணைகள்ஆலோசனைகள் அந்த மனிதர்களால் நகைப்புக்குள்ளானது,அவர்கள் அவமானப்படுததும்;தொழிலை யுத்தத்திற்கு முன்பே கொண்டிருந்தார்கள்,சரியாகச் சொல்னால் அவர்கள்: சேர்ச்சிலும்ஊhரசஉhடைட சாம்பெர்லயனும் தாம் vom Klassenkampf seite:29.
யுத்தமென்பது தவிர்க்க முடியாத வொரு சூழலை முலதனத்திற்கு ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலும்,இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஆங்கில ஏகாதிபத்யத்தின் சந்தை வாய்பு தவிர்க்கமுடியாது மூல வள மட்டுப்படுத்தலை இங்கிலாந்துக்கு வெளியேயுள்ள பெருமுதலாளிகளுக்கு ஏற்படுத்திய போது அது பெரும் நெருக்குவாராத்தை ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு கொணர்கிறது .இதன் தாக்கம் இன்றுள்ள மாதிரியேதாம் உற்பத்தித் தேக்கம்,வேலையில்லாத்திண்டாட்டம்(1933 இல் 6.013612 பேர்களுக்கு ஜேர்மனியில் வேலையிருக்கவில்லை) பணவீக்கம் -அறா வட்டி,மூலவளப்பற்றாக்குறை-மிகவிலை க் காரணிகளால் கிட்லர் தேசத்து பொருளாதாரம் பிரித்தானிய ஏகாதிபத்யத்தோடு முரண்பாட்டை வளர்த்தது,இந்த முரண்பாட்டை வென்றெடுக்க ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கையிலெடுத்த முதல் ஆயுதம் யூத எதிர்ப்பு,இதனூடாக மக்களை அணிதிரட்டுவதும்-காயடித்து உலகத்தைக் கொள்ளையிட படைதிரட்டிடவும் இதனூடாய் அடிமைத் தொழிலையேற்படுத்தி கூலியின்றி உற்பத்தி செய்யவும்(உழைப்பைத்திருடுதல்)பலமான உளவியற்றளம் உருவாக்கப்படுகிறது.
சாம்பர்லையன் பிரத்தானியப் பிரதமராக இருந்த போது போரை ஐரோப்பாவுக்குள் திவிர்க்கும் படியேதாம் சமாதனத்தூது விட்டார்,1939 இல் பதவிதுறந்தபோது அவரது பிழைகளே பதவிக்கு வேட்டுவைத்தாதக ஒரு கணிப்புண்டு.பின்பு அவர் படத்துக்குப் பக்கத்தில்1869-1940 என்று போடும் நிலை வந்ததது. ஆனால் 'சண்டைகளும் சமாதானக்கூச்சல்களும்'மூலதனக் காப்புக்கும்நகர்வுக்குமான சீட்டாட்டமாக பண்டுதொட்டு நடக்கின்ற சமாச்சாரமாக இருக்கிறது.இது யுத்தத்தை தெரிவுசெய்த படியே சமாதானஞ் செய்ய முற்படுதல் உலகவளசந்தைப் பங்கீட்டிற்கானவொரு முயற்சிதாம்!இதில் காலைவாரப்படும் மக்களினம் ஏதோவொருவடிவில் வரலாறு .தொட்டு அழிந்து போகிறார்கள்.சிந்துநதிப் பள்ளத்தாக்கு நாகரங்கள்கலாச்சாரம் வெறும் நாடோடி மக்களிடம் தோற்றுப் போக முடியாது.ஏnனில் "Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet."
என்றிருந்த மக்கள் கூட்டம் எப்படி நாடோடி நிலை மக்களால் அழிக்கப் படும்?வடிவாகக் கவனியுங்கள், 'நகரங்களெல்லாம் பலமான தடுப்புக் காவலரண் கள் கொண்டமைக்கப்பட்ட' சிந்து நதிக் கலாச்சாரமக்கள் ஆரிய நாடோடி மக்களுடன் போரிட முடியாத பலவீனமான மக்களாக இருந்திருப்பார்களா? இன்றைய நிலையில் இதை நம்பமுடியாது. இந்தியாவை நோக்கிப் படையெடுத்த மக்கள் கூட்டம் ஒழுங்கமைந்த பொருளியற் கலாச்சார வாழ்வோடு- தமது ஆதிக்கத்தை விஸ்த்தரிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வே நம் முன் விரிகிறது,
 
மீளவும் நாம் கிட்லரிடம் வருவோம் "Das deutsche Volk wird nach diesem Krieg einem wesentlich groesseren Raum beherrschen als vordem.Das ist nicht nur ein politisches und machtpolitische Problem,sondern weitgehend ein wirtschaftliches und soziales.Wirtschaftlich liegt die Problematik darin,dass es jedem einzelnen Deutschen gelingen muss,die Produktivitaet seiner Arbeit in dem Grad zu steigen,... Hand in Hand mit Arbeitseinsatz und Leistungssteigerung geht die Pflege der Leistungskraft."-Dokument Nr.15:Denkschrift der Deutschen Arbeitsfront ueber die Sozialen Aufgaben nach dem Kriege.>Versuch eines systematischen Ueberblicks ueber ein sozialpolitisches Program.<   இந்த யுத்தத்திற்குப் பின் டொச்சுமக்கள் முன்பை விட பாரிய நிலப்பகுதியை ஆள்வார்கள்.இதுவொரு அரசியல் அன்றிஅரசியல் வல்லமை பற்றிய பிரச்சனையல்ல,மாறாக விஸ்தீராமானவொரு பொருளாதார,சமூகப்பிரச்சனை.பொருளாதார ரீதியாகவுள்ள பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு டொச்சு மக்களும் கட்டாயமாக செய்யவேண்டியது தனது வேலையில் மிகுதியான உற்பத்தியைப் பெருக்குவதே.கைக்கு கை வேலையில் ஈடுபடுவதும் கூடவே மிகை உற்பத்திப் பெருக்கம் உற்பத்திப் பலத்தைப் பராமரிக்கும்.' -ஆவணம்:இல.15. கிட்லர், தனது மக்களுக்காகத்தாம் நாடு பிடிக்க வெளிக்கிட்டதாகவும் ,அது கைகூடாதுபோனதாகக் கற்பனையிலுள்ள இன்றைய ஜேர்மனியர்களுக்கு இந்த அவரது திட்டம் மக்கள் நலனின் பொருட்டாகவே கற்பிக்கப் படுகிறது.அதீத பொருட்குவிப்பினது ஆசைதேவையாக -அவசியமாக ஆளும் வர்க்கத்தால் உணரப்படுகிறது.எந்த விதத்திலும் மிகையுற்பத்தியை அதிகரிப்பதென்பது பெரு வங்கிகளுக்குக் கட்டப்படும் அறா வட்டியை ஈடுசெய்வதற்கான பொறிமுறையைக் கொண்டுள்ளது!   இந்த நிதி மூலதன முறைமையானது தனது சுற்றோட்டத்தில் மீளவும் தேக்கமுற்று பண வீக்கமாக மாறுகிறது.ஆனால் கிட்லர் தம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுக்கு மாற்றாகச் செயற்பட்ட மாற்றுப்பொருளாதாரவாதிகள்(இவர்கள் சோஷலிசப் பொருளியலாளரன்று ,மாறாகச் சுதந்திமான மனித முகத்தோடு கூடிய பொருளாதாரம் குறிதுச் சிந்திப்பவர்கள்.இதுவும் ஒரு புருடாதாம்!) சொல்வதைப் பாருங்கள்: '" After the Nazi Party's seizure of power by the in 1933 many Free Economy supporters suppressed their misgivings about the true character of the Nazi ideology and succumbed to the illusory hope, that Hitler might in fact act on the earlier rhetoric of Gottfried Feder concerning "the smashing of interest-slavery". They tried to exert influence A Free Economy party on leading functionaries of the Nazi Party hierarchy in the hope of bringing about a change of course on economic matters. Despite rather dubious tactical efforts to conform to the requirements of the new order, in the spring of 1934 the various Free Economy organisations and publications which had not already voluntarily disbanded were finally outlawed." -Werner Onken Published in: American Journal of Economics and Sociology Vol. 59,   தவிவிர்க்க முடியாத இந்த முதலாளித்துவ விதி தன்னைத்தான் காத்துக்கொள்ள இறுதியில் போரிட்டு தனது தேவையைப் பூர்த்திசெய்யும்,கூடவே அடிமைச் சமூகத்தை உருவாக்கியே தீரும்!இதை விட வேறு மார்க்கம் ஏகாதிபத்யத்திற்குக் கிடைக்கப் போவதில்லை. அமெரிக்காவும், பயங்கரவாதமும்:

இன்றைய நாளில் அமெரிக்கா குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்கமுடியாமலுள்ளதே ,இது ஏன்?அமெரிக்கா உலக அளவில் ஜனநாயக நாடுடெனில் ஏனிந்த நிலை?அமெரிக்கா திறந்த சுதந்திரச் சமூக மெனில் ஏனிவ்வளவு அணுக்குண்டுகள், போர்த்தளபாடங்கள்?உலகெலாம் இராணுவக் காவலரண்களையும்இராட்சதத்தளங்களையும் எதன் பொருட்டு நிறுவியுள்ளார்கள்?வரலாறு முதற்கொண்டு மானுடர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? கேள்விகள் இன்னும் விரியும் இத்துடன் நிறுத்துவோம் .கேள்விகள் மட்டும் கேட்பதல்ல இந்தக் கட்டுரையினது நோக்கம். பயங்கரவாதத்தின் மூலப் பிறப்பிடமே அதை வேறெங்கோ தேடுவதுபோல் பாசாங்கு பண்ணி தனது பயங்கர வாதத்தைக் கவர்ச்சிகரமாக'பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்'என்று காதில பூச்சுத்துகிறது.அழிவுகளேயின்றி ஒரு அமைதியான வாழ்வை உலக மக்கள் சுசிக்க முடியுமா? ஆம்மென்கிறது முதலாளியம்!ஆனால் வரலாறு பூராகவும் இதே முதலாளியம் மானுடசூழலழிப்பைக் கொண்டுதாம் தன் வருவாயைக் குவிக்கின்றது.'கடந்த வரலாறும், கண்முன் விரியும் வரலாறும்' இப்படித்தாம் நகருகிறது! அமெரிக்காதாம் முதலாளிகளுக்குத் தலைமை தாங்குகிறகாரியத்திலிருப்பதால் அமெரிக்கா பற்றி ப் புரியாமல் நாம் வாழ்ந்தால் நம் தலைமீது விழும் குண்டை யார் போடுவதென்தெரியாமற் மரித்திடுவோம்.அமெரிக்கஐரோப்பிய பெருமுதலாளிகளை எதிர்த்து போராட நம்மால் முடியாதுபோகினும் நாம் யாரால் கொல்லப் படுகிறோமென்றாவது தெரிந்து கொள்வோமே!
 
ஈராக்கின் வைத்தியர் திரு.ஹசான் கூறுகிறார்:'முன்பெல்லாம்(1991 முன்) கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பற்றிக் கேட்கும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்றே விசாரிப்பார்கள்.இப்போ கேட்கப் படும் கேள்வியோ அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதே!'காரணம்: இந்த அமெரிக்காவின் யுத்தம் இதுவரை மூன்று இலட்சம் தொன் நிறையுள்ள U-838 A-838 இரகக்குண்டுகளை நம்மீது கொட்டியுள்ளது,கொட்டுகிறது.இது யுரேனிய-ரேடியக் கதிரியக்கம் வாய்ந்த குண்டுகள், கிட்டத்தட்ட 45 வீதமான ,ராக்கியகர்களை இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.அவர்கள் மரணத்தை ஏங்கி வரவேற்காவிட்டாலும் மரணம் மிக விரைவாக அவர்களை வந்தடைந்து விடும்!'இதை ஆமோதிக்கிறார் திரு.யாவாட் அலி எனும் இன்னொரு மருத்துவ நிபுணர்.கூடவே கூறுகிறார் இப்படி:' நானும் பாஷ்ரா மாவட்த்தில் இருந்து வருகிறேன் என்னையும் இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.எனினும் இந்த அநியாயத்தை அறியாமல் அப்பாவி மக்கள் சாகவில்லை.அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்,எம்மிடம் நூறு வீத ஆதாரங்களுண்டு இந்த அணுக் குண்டுகள் பற்றி.ஆனால் உலக்தின் கண்களுக்கு எப்படியெட்டும்?'- றுநளவ னுநரவளஉhந சுரனெகரமெ 5 எனும் வனொலியின் இன்றைய (06.03.2005) சர்வதேச விவரணம். அமெரிக்கா இது வரை 124கோடி மக்களை உலகெல்லாம் கொன்று தள்ளியுள்ளது.கடந்த ஐந்து- நூறாண்டுகளில் மட்டும் இத்தொகை யென்றால் இனிவரும் காலங்களில் பூமியில் மானுடம் வாழ்வதென்பதைத் தீர்மானிப்பது அமெரிக்க அணுக்குண்டாகத்தாமிருக்கும்.புதியரக அணுஉயிரியல் ஆயுதங்கள் தற்போது பரிசீலிக்கப் படுகிறது,மிக விரைவில் இவை யுத்தங்களுக்கு அமெரிக்காவால் பயன்படுத்தப்படும்'
 
Die USA wollen sich weitere Forschungen erlauben.In den naechsten zwei Jahren will Praesident Bush 11 Milliarden Dollar in die Biowaffenforschung stecken lassen.Fuer das anstehende Haushaltsjahr soll die Summe der Gelder um das Vierfache steigen."-16 Luegen zum Krieg gegen den Terror seite:2
 
 
'தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையை அனுமதித்தல் அமெரிக்காவுக்கு விருப்பமாகவுள்ளது.அடுத்த இரண்டாண்டுகளில் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக்காக 1100 கோடி அமெரிக்க டொலர்களை அதற்குள் திணிப்பதற்கு அமெரிக்க அதிபர் புஸ் ஆர்வமாகயிருக்கிறார்.வரிசையாக வரும் அடுத்த அரையாண்டு வரவு செலவுத் திட்டம் இந்தமூலதனத் தொகை யால் நான்கு மடங்கு அதிகரிக்கும்'16 பொய்கள்,பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு பக்கம்:2
இந்தப் பரிசோதனைக்கதிராக் குரல் கொடுகின்றவர்கள் என்ன செய்கிறார்களெனப் பார்ப்போம்: "Amerikanische Mediziner fürchten um die Gesundheit der US-Bürger, wenn Forschungsgelder weiterhin so verteilt werden wie in den vergangenen Jahren. die Erreger von Volksseuchen wie Tuberkulose und Syphilis aus den Augen zu verlieren. "-Spiegel 4 maerz 2005.g
 
2005.பரிசோதனைக் கென்று பணத்தை இப்படிப்க் கடந்த ஆண்டுகளைப்போல் பங்கீடுசெய்தால் அமெரிக்க மக்கள் கொள்ளை நோய்களினால் பாதிக்கப்படுவார்களென அமெரிக்க மருத்துவர்கள் அச்சப்படுகிறார்கள்,உதாரணமாக:காச நோய் மற்றும் கொடிய மேக நோய் போன்றவை கவனிக்கப்படாது போகும் . '-ஸ்பீகல் பத்திரிகை 4.03.005ஆக சொந்த நாட்டுமக்களே தம் உயிருக்காகத் தங்கள் நாட்டோடு போராடவேண்டிய நிiயில் உலக மக்களின் நிலை எப்படியிருக்கும்?
 
இப்போ யாரிங்கே பயங்கரவாதிகள்?
ஈரான்,ஈராக், வடகொரியா-சூடான்,பாலஸ்தீனம் அல்லது பின்லாடன்??
அமெரிக்கா சொல்வது இவர்களை, நாம் சொல்வது அமெரிக்காவை!
 
அமெரிக்காவை ஏன் பயங்கரவாத நாடென்கிறோமென்றால் அது வரலாறுபூராகவும் யுத்தங்கள்மூலமாகவே தன் வருமானத்தையேற்படுத்தியதாலவா? மூலதனத் திரட்சியின் அதிகூடியவேட்கையின் வாயிலாக தனது தொழிலகங்களுக்குத் தேவையான மூலவளங்களைத் தேடி உலகைக் கொள்ளையிடுவதாலவா? அது முதலாளிய நலன்களைக் காத்துக்கொள்ளும் தலைமையைக் கொண்டியங்குகிறதன் வாயிலாக -அந்த நலனோடு பின்னப்பட்ட ஒரு சிறுபான்மைச் செல்வந்தர்களுக்காக உலகின் அனைத்து இயற்கை வளங்களையும்(உயிரினம் முதற்கொண்டு)கொள்ளையிடுகிறதற்கான அடியாட் படையை உலகம் பூராகவும் நிறுத்தி ,உலக்திலுள்ள மக்கள் தத்தம் விருப்பப்படி வாழ முடியாத நிலையைத் தோற்றியுள்ள அமெரிக்கா ஒருபடி மேலே போய் அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் உரிமம் கூறி-உற்பத்திச் செய்கைமுறைமைக்குக்;கூட உரிமம் வைத்துள்ளதே,அதற்காகவா? இவையெல்லாமேதாம் உலகின் முதற்தரப் பயங்கரவாதம்.இந்த விஷயங்கள் வெறும் பொருளியல் சம்பந்தப்பட்டவொரு சட்ட நடவடிக்கையில்லை. உயிராதாரப் பிரச்சனை,வாழ்வாதார முக்கிய பொதுச்சொத்தை -உயிர் காக்கும் உற்பத்திப் பொருட்களை சில முதலாளிகளின் ஆதாயத்திற்காக உரிமமும் கூறி உலகை ஏப்பமிடும் அமெரிக்க அரசைப் பயங்கரவாதத்தின் மூலவூற்றாய் இனம் காணுவதும்,அதை எதிர்ப்பதற்கான தேவையை வலியுறுத்துவதும் அவசியமான கரியமாக இருக்கிறது.
 
இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யு புஷ் தனது தந்தை வழி அரசியலேயேதாம் முன்னெடுக்கிறார்.இருவருமே இராட்சத எண்ணை கொம்பனிகளோடு இறுகப்பிணைந்த பங்காளிகள்.இவர்களது நோக்கம் எண்ணையாலைகளின் தமது பங்குகளையும்,தமது உறுவுகளின் பங்குகளையும் பல மடங்காகப் பெருக்குவதும்,உலகின் அனைத்து வளங்களையும்-மூளையுளைப்பையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமே.இதில் அமெரிக்கா மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.
 
உயிராதாரப் பிரச்சனை:
 
இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை உயிர் வாழும் சுதந்திரத்தை தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய அமெரிக்காவானது வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதியூக்கச் சமுதாயமில்லை.அது பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறது.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பௌதிக இயக்கத்தையும் தனது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறது.இதன் முதற்படி விவசாயப் பயிர்களிலிருந்து ஆரம்பித்து விட்டது.எனினும் உயிர்கள் மீதான அதனது அத்து மீறிய அதிகாரத்துவம் உயிர்களைத் தனது விருப்புக்கேற்ற வாறு தயாரிக்கும் பொறிமுறைக்குள் திணிக்கிறது.இது மிருகங்களிலீருந்து ஆரம்பித்து கொலோன் முறையிலான மானுடவுற்பத்தி என்று விரியக்காத்திருக்கிறது.இனிவரும் காலங்களில் குறிப்பிட்டவொரு இனத்தினது இரத்தலே பூமியிற் சாத்தியப்படப்போகிறத.அது இயற்கையோடு இசைவாக்கங் காக்கக்கூடிய ஆற்றலைநோக்கிச் சிந்திகத் தொடங்கிவிட்டது. இயற்கையில் நிலவக்கூடிய அனைத்து வளம்களையும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனகேற்றவாறு உபயோகிக்க-மறுசீரமைக்கக் கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளது.அதன் இராட்சத யுத்தஜந்திரம் அனைத்து வளங்களையும் கையகப்படுத்தி இராணுப் பொருளாதாரம் நோக்கி நகர்கிறது.இந்தப் படிமுறை வளர்ச்சியானது சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத தேக்க நிலையீன் இன்னோரு வடிவமாக நாம் காணுகிறோம்!இதன் மிகைப் பணவீக்கமானது செயற்கைத்தனமான பற்றாக்குறைகளால்(உணவுவகைகளைக் கடலில் கொட்டியழித்தல்) ஈடு செய்யமுடியாமற் போவதனால் பெரு முலதன வங்கிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய வட்டிக்கு வட்டி முதலாளியமைப்பையே சிதறடிக்கும் நிலையைத் தோற்றுகிறது.இதனால் யுத்தங்களே இறுதிச் சிகிச்சையாகவுள்ளது.அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொத்தடிமை முறைக்காகவேனும் இந்த அமைப்புத் திரும்பியாகவேண்டும். இதை அமெரிக்கா இரண்டாவது மகாயுத்த்தில் கண்டுகொண்டது.இந்த முறைமையை ஓரளவு ஜனநாயகப் பண்புடைய வளர்ச்சியடைந்த தமது நாடுகளில் அவ்வளவு இலகுவாக ஏற்படுத்த முடியாத ஏகாதிபத்திய பெரு முதலாளியம் தமது நாடுகளுக்கு வெளியே இவற்றைச் சாதிப்பதில் வெற்றியீட்டிவருகிறது.இந்த வியூகத்திற்கு மூன்றாமுலக நாடுகளே பலியாகிவருகின்றன.யுத்தம் என்பது தவிர்க்க முடியாதவொரு அங்கமாக இருப்பதால் இந்த முதலாளியமைப்பில் நிலவுகின்ற பணச்சுற்றோட்ட முறை வட்டி முறைமையால் தாக்குப் பிடிக்க முடியாது உடைந்து போகிறது.இந்த இயங்கியல் விதி பொருளியல் பொறிமுறையையே அதாவது முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையையே இறுதியில் காவுகொள்ளும் நிலையிலும் போர் வெடிக்கும் அபாயம் வந்து விடுகிறது.இந்த அபாய நிலைதாம் இப்போதுள்ள நிலையாகும்.இதுதாம் உலகத்தின் முதற்தரமான பயங்கரவாதமாகும். இந்தப் பயங்கர வாதம் பலவர்ணங்கொண்ட சமாதானப் பாய்களையிப்போ உலகெங்கும் விரிக்கிறது.இந்த பாயிற் படுக்க முனையும் அபிவிருத்தியடையமுனையும் நாடுகளின் அரசும்,அவற்றுக்குள் நிலவும் சிறுபான்மையரசுகளும் இறுதியில் இவர்களது தந்திரங்களால் அழிக்கப்பட்டு புதிய கூட்டு-புதிய தலைமைகள் உருவாவதும் பின் சிதறடிக்கப் படுவதுமாகக் காலம் நகர்த்தப் பட்டாலும் பாரிய யுத்தங்கள் தவிர்க்க முடியாது நடைபெறவே செய்யும்.
 
இந்தப் பரிதாபகரமான பொருளாதாரப் பொறிமுறையை இதுவரை முன்றாமுலக நாடுகள் சரிவரப் புரிந்ததுமில்லை,அதற்கெதிரான மாற்று அமைப்பைத் தோற்றுவித்து உயிர் கொடுக்கவுமில்லை.இந்த நிலையிற் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் தேசிய எழிச்சிகள் குறிப்பிட்ட சூழலினாற் பரிதாபகரமாக உதிர்ந்து காணாமற்போய் வெறும் அற்ப சலுகைக்களுக்குள் போய் முடங்கிவிடுவதொன்றும் எமக்குப் புதுமையாத் தெரியாது!
 
எண்ணை நிறுவனங்களும்,புஷ் தேர்தல்2:

எம்.ஜீ.ஆர்.பாணி இலவசப் பொருள்களும் புஷ்சும் , தேர்தலில் வெற்றிபெற ஆடிய நாடகத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்த பணம் பல கோடிகளைத்தாண்டும்.இத்தொகை இலவசப்பொருட்களுக்கானது மட்டுமே.தேர்தல் நடவடிக்கைகளுக்கு வேறோரு வகைத் தொகை கைமாற்றப்பட்டது.திவாலாகிப்போன எண்ணைக் கொம்பனியான என்றோன்:2.387 848 டொலர்களும்,எக்ஸ்சோன்:1.374 200 மற்றும் சேவ்றோன்:1.082 827.டொலர்களும் இலவசப் பொருளகள் வழங்கும் திட்டத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்தன.இவற்றை வைத்து புஷ் பெட்டிபெட்டியாய் உணவுகளை மக்களின் கார்களில் தன் கைப்படவே ஏற்றி விட்ட நன்றிக்குரிய அதிபராக மாறினார். அவரது தேர்தல் பிரச்சாரக: குழுவில் நேரடியாக இருபது எண்ணை நிறுவனங்களீன் மனேஜ்சர்கள் பங்குகொண்டு புயலாகப் பிரச்சாரமிட்டு அவரை இரண்டாவது முறையாகவும் வெற்றி வாகை சூட வைத்தனர்.
 
இன்று நாம் காணும் அமெரிக்கா வெறும் வர்த்தக முன்னணி நாடாகயில்லை,மாறாக வர்த்தகத்தால் மனித விரோதங்களைச் செய்யுங்காட்டாட்சியுடைய நாடு.அமெரிக்க மூலதனமானது எதிர்காலத்தில் அதீத மூலவளச் சுரண்டலினாலும்,வட்டியினது வட்டிக்கான அறவிடல்களாலுமே உயிர்த்திருக்க முடியும்.இந்தக் கோணத்தில் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் தொடங்கி விட்டதற்கான அறிகுறியை ஜெனரல் மோட்டர் அதிபர் செய்தியாகப்போட்டுடைத்தார். 'இன்றைய காலத்தில் நாம் வாகனங்களைத் திறம்படவுற்பத்தி செய்வதில் நோக்கமாக இருக்கவில்லை.மாறாக இந்தச் சந்தையை நோக்கியான நமது விருப்பானது அந்த இடத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தலே முக்கியம் பெற்றது.இன்றைய நிலை இதுவல்லாது சமூகக் கடமையென பிதற்றிக் கொண்டால் இருக்கின்ற முதலீடுகளை இழந்து காணாமற்போவது உறுதியாகிவிடுவதுண்மையான யதார்த்தம்.' என்று ஜெர்மனிய பொருளியற் சஞ்சிகைக்குச் செவ்வி வழங்குகிறார்.
 
இந்த உற்பத்திப் பொறிமுறையானது உலகத்தின் மூலவளங்களைக் காசாக்கும்(நிதிமூலதனமாக்கும்)சார்பு நிலைப் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரு வங்கிகளினது பாரிய முகாமைத்துவ ஒற்றைத்துருவ ஆதிக்கத்தை முன்மொழிகிறது. இந்த வங்கிகள் யாவும் அரபுத்தேச மூலவளத்தின் உபரிச் செல்வத்தால்(எண்ணை டொலர்கள்) இயக்கப் படுகிறது.இந்தச் செல்மானது இஸ்திரமான பாதுகாப்பு நோக்கியே அரேபிய எண்ணை மாபியாக்களால் இந்த அமெரிக்க-ஐரோப்பிய வங்கிகளில் இடப்பட்டுள்ளது.இதுவே இன்றைய நிதிமுதலீடுகளினதும்-உலக நாணய நிதியத்தினதும் மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.
ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இவ்வகை நிதித் திரட்சியானது இந்த நாடுகளின் வருடாந்த உற்பத்திச் சூழலைவிட பன்மடங்கு பாரிய செல்வத்தால் முன்நிலை வகிக்கின்றது.இதுNவு இன்றைய பல்தேசியமான நிதிமுதலீட்டினது பலமான பங்குச் சந்தையாய் விருத்தியுறவும் செய்கிறது.இதன் தகர்வு சிலசமயம் பின்போவதும்-அதை மிக மிக பெறுமானமிக்க பொருளாதார விதியாகவும் பொருளியலாளர்கள் மதிக்கவும் செய்வது இந்த வங்கிகளினது வியூகத்தாற்றாம்! இத்தகைய சூழலில் முதலீடு என்றும்-தொழிற்றுறை முன்னெடுப்பென்றும் மூன்றாமுலக நாடுகளை-குறிப்பாக நமது இந்தியத் துணைக்கண்டத்தை சுரண்டி ஏப்பமிடுவதைச் சற்றுப் பாருங்கள் கீழ் வரும் வட்டி முறைமையின் சுட்டலில்:

முதலீடும் வட்டியும்:
 
அரசியற்பொருளாதாரக் கல்வியல் நாம் கற்பது என்னவெனில் எந்த முறைமைகள் முன்நிறுத்தப் பட்டாலும் அது சந்தைப்பொருளாதாரத்தின் அதிகூடிய பாதுகாப்பை வட்டிக்கு வட்டியின் உறுதிப்பாட்டை நிர்ணஞ் செய்யும்போது காத்துக்கொள்ளலாமென்பதே! இந்த நிதிமூலதனத்தின் அரிச்சுவடி எந்தத் தளத்தில் வெற்றிபெறுவதென்றால் அது பெரும்பாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் புதிய முதலீடென்றபோர்வையில் நகரும் நிதிமூலதனத்தின் முன்நிபந்தனையான முதலீட்டோடு சாத்தியமாவதாகும்.இதை முதலீட்டுக்குப் பின்பான-பின் முதலீட்டுச்சூழலென வகுத்துக்கொள்வதும்,அதன் வியாபித்த சுழற்சியை 'தண்டக் காலம்'என்று வகுப்போம்.அதுவே அறுவடைக்கான காலம்.இந்தப் புரிந்துணர்வோடு மூன்றாமுலகில் தொழில்முதலீடுகளைச் செய்யும் ஏகாதிபத்திய தொழில் கழகங்கள் இவற்றை 'குருவிக் குஞ்சு'புரிதற்பாடென அழைப்பதுண்டு.யாரொருவர் சத்தமிட்டு கூக்குரலிடுகிறாரோ அவருக்கு குறிப்பிட்டளவு பங்கு(உணவு) கிடைப்பதற்கு வழியுண்டு. இதைத்தாம் இன்றைய தரகு முதலாளிய இந்தியாவும்-இலங்கையும் செய்வது.இந்தக் கூக்குரல்தாம்' இதோ இந்தியா ஒளிர்கிறது' என்பதாகும்.
 
ஒரு முதலீடு எதற்கென்றாலும்-குறிப்பாக பணம் கடனிடுவது அல்லது தொழிற்சாலைக்கு பங்கிடுவது-எதுவானாலும் பொருளாதார விற்பனனின் பார்வையில் அது வெறும் இலாபத்தை அடுத்தாண்டின் புள்ளிவிபரத்தில் கணித்துச் செய்வதல்ல.மாறாக முற்றுமுழுதான அனைத்துக் காலத்திற்குமான உபயோகத்தின் இறுதியாண்டுவரையும் கணிக்கப் படும்.அதாவது தொழிற்சாலை உயிர்வாழுங்காலம் வரையாகும்.முதலீடென்பது எமக்கு முற்றுமுழுதாக வருவாயைக்கூட்டிவருவதற்கே தவிர கொடுப்பதற்கல்ல.நாமதைச்(முதலிடுவது-முதலீடு) செய்யாதவரை நமது பணம் வெறும் காகிதம்தாம்.இதன் பொருட்டு ஒவ்வொராண்டும் உபரியை நோக்கிய மதிப்பீடும் அவசிமாயினும் முன்கூட்டிய வட்டியெடுப்புத்தாம் முக்கியமானதாகும்.இதை இப்படி தொகுக்கலாம்:
 
இன்றைய தினத்தில் முதலீடுக்கான தொகையை 12வீத வட்டிஅறவிடல் மூலமே இலாபநோக்கிடப்படுகிறது.இது எப்படியென்றால்: 10 ஆண்டுகளில் 1மில்லியன் யூரோவானது இன்றைய நிகரமுதலீடாக வெறும் 321.973,-தாம் பெறுமதியாகும்.இதுவேதாம் இன்றைய ஒரு மில்லியன் முதலீடென்பது.இந்த மூன்று இலட்சத்தை பத்தாண்டுகளில் 1மில்லியனாக இலாபம் அடைவதை நோக்காகக்கொண்டே முதலிடப்படுகிறது.இதன் படி தொழில் துவங்குபவர்கள் கிட்டத்தட்ட பொருளின் உற்பத்திச் செலவோடு மீளவும்40 வீதச் செலவை வட்டிக்காகச் சேர்த்தும் கூடவே மதிப்புக்கூட்டுவரியான அரச புடுங்கலுக்கும் சேர்த்து சுமார் 60சத வீதம் கூடிய விலையில்தாம் இவற்றைச் சாத்தியப் படுத்தலாம்.இத்தொகை யாவும் உழைப்பவர்களே தாங்கியவேண்டும்.எனவேதாம் நிதிமூலதனத்தை அணுக்குண்டைவிட ஆபத்தென்கிறோம்.இத்தகைய கணக்கை 25 ஆண்டகளுக்காகப் பார்த்தால் இன்றைய ஒரு மில்லியன் யூரோவானது :58.823,-மட்டுமே.இதுவே 50 ஆண்டானால்:3.460,- வதும் 100 ஆண்டுகளானால்:12,-யூரோவாகவுமே நிதியிடப்படும்.ஆனால் எந்த நிதியீடும் 10 ஆண்டுகளின் வட்டியறப்படுதல் மூலமே நிதியிடப்படுகிறது.இந்த மானுடவிரோத மூலதனம் எங்கு பாய்ந்தாலும் அந்த நாடு உருப்பட வாய்பேயில்லை.இன்றைக்கு இந்தியா-இலங்கைபோன்ற நாடுகள் இவற்றை வேலைவாய்புக்கருதி வரவேற்பதுபோன்று பாசாங்கு செய்கிறது.ஆனால் உண்மை வேறுவடிவமானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த முதலீட்டுப் பெருவட்டி அறவீடானது இப்போது சாத்தியமின்றி தொழிலகங்கள் பொறிந்து போகின்றன.இந்த நாடுகளின் வாழ்கைச்செலவோடு அண்டியே கூலித்தொழிலாளியின் ஊதியம் மதிப்பிட்டு வழங்கவேண்டும்.ஆனால் மூன்றாமுலகத் தொழிலாளியோ நாளொன்றுக்கு 12மணி உழைப்புக்கு வெறும்2யூரோவே ஊதியமாகப் பெறுகிறா(ள்)ன்.இந்தப் பொன்முட்டையிடும் வாத்தை நம்பியும்,கனிவளத்தை வேட்டையாடவுமே மூலதனம் இந்த மூன்றாமுலகை நாடுகிறது.
 
உற்பத்திவீச்சும் அதீத சுரண்டலும்:
 
உலகத்தில் 40 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12-14 மணிநேரம் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர்,ஆனால் அவர்கள் பெறும் ஊதியமோ வெறும்1,30டொலர்தாம்!
 
இந்த குறைகூலிச் சூழலானது அனைத்துத்தொழில் கழகங்களையும் பாரிய நிதிநெருக்கடியிலிருந்து காப்பாற்றி மென்மேலும் தனது இருப்பை நிலைநிறுத்தவும்-உற்பத்தியுறவுக்கும் மூலதனத்துக்குமுள்ள முரண்பாட்டை நீற்றுப்போக வைப்பதற்கும் வலுவாய்ப்பாகப்போய்விட்டது.இந்தச்சூழலின் மிக நெருக்கடியான காலம் பஞ்சாய்ப் பறந்தோடிவிட்டது.கூம்புவடிவிலான முதலாளிய உற்பத்திப்பொறிமுறையும்-உபரியீட்டலும் இன்னும் பலநூறாண்டுகள் உயிர்வாழும் சாத்தியம் நிலவுகிறது.இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை அனைத்து தேசங்கடந்த தொழிற்கழகங்களும் புதிய உற்பத்தியூக்க போர்மூலா மூலம் சரிசெய்கின்றனர்:
 
'0,5/2/3= 300;'அதாவது அரைப்பங்கு தொழிலாளர்களைக் கொண்டு இருமடங்கு உயர்ந்த உற்பத்தியூக்கத்தைப் பெறுவது.இது பழைய உற்பத்தியோடு வகுக்கும்போது அதைவிட மூன்றுமடங்கு உயர்ந்த உற்பத்திவீச்சு. இந்தப் போர்மூலாதாம் இன்றைய உற்பத்தித்திறன்!இதை ஏழைநாடுகளில்:'0,25/2/4=400;'ஆகவுமாக உற்பத்தித் திறன் கட்டியெழுப்பப்பட்டள்ளது.இங்கு 300-400 மடங்கு உற்பத்தித்திறன்கூட பெருவங்கிகளின் 'வட்டிக்குவட்டியை' ஈடுசெய்யத் தணறியபடிதாம் முதலாளியம் சேடமிழுத்தபடி நகர்கிறது.இந்தப்போக்கால் மூன்றிலைத்திட்டமாக உற்பத்திப்பொறிமுறையை நாம் வகுக்கலாம்:
 

1):முக்கிய உற்பத்தியகம்


2):வெளியார் உற்பத்தி


3):வளைந்துகொடுக்கும் வேலை

 
இதை இப்படிப் புரியலாம்: ஒரு வாகன உற்பத்திநிறுவனம்,உதாரணம்:ஜெனரல்மோட்டார். மோட்டரை தனது முக்கிய தளத்திலும்,சிறியரக உதிரப்பாகங்களை வெளியாரிடமும்,வளைந்து கொடுக்கும் வேலையை தொழிலாளர்களை வழங்கும் முகவர்களிடமாகவும் பெறுவதுதாம் இந்த முச்சிலைத்திட்டம்.இன்றைய நிலவரப்படி ஜெனரல் மோட்டரிடம் தொழில் புரிபவர்களில் 65 வீதமான தொழிலாளிகள் வெளிமுகவர்களால் வழங்கப்பட்ட தினக்கூலிகளே.இது உச்சஊதிய வரம்பை அதன் கடைக்கோடி நிலைக்குத் தள்ளிய முதலாளியப் பொறிமுறையாகும்.வருங்காலத்தில் ஒரு தொழிலகம் தனது 80 வீதமான தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 20 வீதமான வேலையாட்களோடு சகலதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும். இதுவே பயங்கரவாதத்தின் மூலவூற்று.இதை மீறிய எந்த உற்பத்திவடிவமும் முதலாளியத்திடம் கிடையாது.இது சகல நாடுகளையும் தன் உயிர்வாழ்வுக்காய்ச் செரித்து ஏப்பமிட்டுவிடும்.இந்தப் புதிய நவநாகரீக முதலாளியம் ஒரு தொழிலாளியைத் தேர்வு செய்யும்போது அவரிடம் பல்முனையாற்றலைவேண்டிக் கொள்கிறது.அதாவது ஜந்திரத்தை இயக்குபவர் கணினியல் கணக்குப் பதியத் தக்கவராகவும் கூடவே ஜந்திரத்தைப் பழுது பார்க்கத் தக்கவராகவும் முடிந்தால் புதிய வாடிக்கையாளரைக் கூட்டிவரும் ஆற்றலுடையவராகவும் இருத்தலே அவசியமாக இருக்கிறது.மைக்றோ சொவ்ற் அதிபர் பில் கேட்டின் வார்த்தையிற் சொன்னால்:' இனிமேற் காலத்தின் உற்பத்திப் புதுமைகள் ஒரு ரோல் றோய்ஸ் காரை 10 யூரோவுக்கு வழங்கக்கூடிய நிலை வந்தாலும் வரும்' என்பதாகும்.இது திட்டமிட்ட உற்பத்திப் போட்டியை மிகமிக நயவஞ்சகமான முறையிற் குறிப்பதாகும்.
 
கடந்த மாதம் மாதம் இந்திய நிதியமைச் பா.சிதம்பரம்(மனிதனின் காவாய் யுனிவர்சிட்டி ஆங்கிலத்தை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவ்வளவு ஆழமாகவும் அழகும் பொலிவுறும் உரையாடல்) ஜேர்மன் தொழில் மந்திரியோடு உரையாடியபோது 'எதிர்கால இந்தியா ஜேர்மனிய உற்பத்திவீச்சுக் முண்டு கொடுக்கும்.இந்திய அரசினது நிர்வாகச் சிக்கல் யாவும் சரிசெய்யப் பட்டு ஜேர்மனிய பொருளாதார ஆர்வத்தை இந்தியாவுக்குள் சிறப்பாக்குமெனக் கூறியுள்ளார்.'
 
 
இதுகுறித்துக் கருத்துக்கூறிய ஜேர்மனிய அமைச்சர்:' இந்தியா கடந்த 2004 இல் 7பில்லியன் யூரோக்களுக்கு நம்மிடம் பொருள்களைக் கொள்முதல் செய்து நமது நாட்டில் கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் 35 இடத்தில் இருக்கிறது.இது வரும் 5 ஆண்டுகளின் பத்துக்கு உட்பட்ட நாடுகளுக்குள் வரும்' என்கிறார்.



ப.வி.ஸ்ரீரங்கன்

18.04.2004

 
 

Donnerstag, Juli 09, 2009

முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும்

முதற்புள்ளி:

 
ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி-கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில்-மையப்படுத்தப்பட்ட எமது போராட்டச் சூழலின்பாலான எங்கள் எண்ணங்களின்மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

(1)

கருத்துகளை எந்த முடிந்த முடிவுகளோடான தீர்ப்புகளோடு கொன்றுவிடுதல் மிகவும் அபத்தமானது.எனவே,இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் ஒவ்வொருவரது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.


இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.இதுகுறித்து அறியப்பட்ட பிராங்பேர்ட்பள்ளி யூர்கன் ஹபர்மார்ஷ் இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்கள் குறித்து, தனது உரையில்(பதிப்பகப் பரிசு 2001 க்கான உரை,பிராங்பேர்ட் சென் பவுல் தேவாலயம்) தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகச் சொல்கிறார்.


இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நாம் பார்க்கின்றோம்.


உதாரணமாக இன்றையபொழுதில் "இஸ்லாமியப் பயங்கர வாதம்"என்ற சமூக உளவியலுக்குப்பின் படையெடுக்கும் மேற்குலக con-federal துருக்கியை இதுவரை "ஐரோப்பிய ஜனநாயகத்துக்கு"முரணற்ற மக்கள் சுமுதாயமாக அங்கீகரிக்வில்லை.ஐரோப்பிய மையவாத்தின் மொத்த இயல்புகளுக்குள் இன்னொரு தேசத்தையும் அதன் மக்களையும் அங்கீகரித்தலென்பதன் இன்னொரு தொடர் அண்மிக்கும் இடம் இனம்சார்ந்த பெருமைகளாக விரிகிறது.இது, எந்தத் தன்னியல்புகளையும் தனது அண்மையப் பெருமைகளுக்கமைய அங்கீகரத்துவருவதை நாம் பார்க்கிறோம்.இன்றைய இலங்கைப்பிரச்சனையில் சாதிய-பிரதேசவாரியான வாதங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல்;(In Moral Consciousness and Communicatative Action-Habermas) முழுமொத்த தமிழ்பேசும் மக்களினதும் உரிமைகளையும் வேட்டையாடுவதில் "தன்னிலை அங்கீகரிப்புகளை"கோருகிறது!


"சுய ஊசலாட்டம்"(mit instabilen Ich)எங்கள் மக்கள் கூட்டத்தில் பிரதேசரீதியான வேறுபாட்டு முனைப்பைக் கோரிக்கொண்டது.மிகவும் தற்காலிகமான இந்த வாதம் அங்கீகரிப்புக்காக எடுத்த வைத்த அரசியல் சமாந்திரமாக விரிவடைந்து இன்றைய அரசியல் போக்கில் பாரியவொரு தாக்கத்தைச் செய்கிறது.இதை முன்கூட்டி அறிவதிலுள்ள மார்க்சியப் பொருளாதார முறைமை அத்தகையவொரு வெளியினது தெரிவைப் புறக்கணித்திருக்கும் அரசியல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெறும் உணர்வுத் தளத்தில் பார்க்காத போக்கின் விருத்தியே.இது,இலங்கையின் இன்றைய அரசியலில் சரியானதாகவே படுகிறது.

(2)

இன்று, மனிதர்கள் எல்லோருமே அதீத தனிநபர் வாதத்தில் மூழ்கிச் சுதந்திரத்தைத் தமக்குள் கோருகிறார்கள்.இது,தனித்துவம் எனும் தேர்வில் மிக விருத்தியாகும் மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம் இந்த முதலாளித்துவ வர்த்தகச் சமுதாயத்தின் சந்தைப் பொருளாதாரத்தின் மிக வேகமான தயாரிப்பு.இது,ஒரு வகையான மனிதர்களை உருவாக்கப் பற்பல சமூக நடாத்தைகளைச் சுமூகப் பொருளாதாரத்தின் கட்டங்களாகப் பிரித்து, அவைக்கேற்ற தத்துவார்த்தப் போக்குகளை கருத்தியற்றளத்தில் தோற்றுவித்துத் தமது அடிமட்ட அமைப்பைக் காத்து வருகிறது.எனவே,முதலாளித்துவம் "தன்னை மாற்றி,மாற்றி"ப் புதுப்பிக்கும்-புனர் நிர்மாணிக்கும் நிலைமை மிகவும் இயல்பானவொரு கட்டமாக உருவாகிறது.இவர்கள் இத்தகைய மாறுகாலக்கட்டங்களை வெறுமனவே கருத்தியல்-வன்முறைசார் கருத்துநிலைகளுக்குள் நிகழ்த்தவில்லை.மாறாகத் தமது பொருளாதார உற்பத்திப் பொறிமுறைக்குள்ளும் இவற்றைச் செய்து பார்க்கும்போது மேற்காணும் புதிய மனிதத் தெரிவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குள்ளும் முளையரும்புகிறதாக நான் கருதுகிறேன்.
இதன் தொடர்பான ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு தனிநபர்களையும் இந்தச் சமுதாயத்தை; தூற்றவும்,முதலாளித்துவத்தைச் சலித்துக்கொள்ளவும் அதை விமர்சித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும் சதா அனுமதிக்கிறது.இந்த அனுமதிப்பில் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்து,ஒற்றை மனிதர்களாகப்பட்ட"அதீத சுதந்திர"மனிதர்கள் இந்த முதலாளிய உற்பத்திப் பொறிமுறையிலிருந்து அந்நியப்படுகிறார்கள்.இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் ஒரு கட்சியையோ அல்லது சிறு அமைப்பையோ உருவாக்க முடியாது.
 
இந்த இடத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தும் தொழிலாளர் சங்கங்கள் ஒரு வடிகாலாக மாற்றங் காண்கிறது.இது, முதலாளியத்துக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் கருத்தியல் மனதை நமக்குள் உருவாக்கும்போது,நாம் தனிநபர் புரட்சிப் பாத்திரத்தோடு தடுத்தாட்கொள்ளப் படுகிறோம்.இங்கே,தனிநபர்களாக இருக்கும் எமது புரட்சிகர மனதுக்கு இந்த முதலாளித்தவத்தின் ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொதிப்பதைத் தவிர வேறுவழியில்லை.
 
இதுதாம்"வேகம்"குறைவென்ற ஆதங்கம்-திடீர் புரட்சிக்கு உந்தும் மனநிலை!
 
உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு புரட்சிகர கட்சியின் புரட்சிகர நகர்வு இந்த முதலாளிய ஜனநாயகத்தால் அனுமதித்துச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?-இல்லை.வெறுமனவே,போலிச் சோஷலிசக் கட்சிகள் பாராளுமன்றச் சகதிக்குள்ளும் அதன் வாதத்துக்குள்ளும் வீழ்ந்து மக்களை ஏமாற்ற அதுவே,ஷோசலிசத்தின் தோல்வியாக வர்ணிக்கப் படுகிறது.இது, இன்றைய முதலாளித்துவத்துக்கு மிகவும் ஒத்திசைவாகிறது.
 
இதை உடைத:துப் புரட்சிகரக் கட்சியின் தோற்றம் எங்கும் உருவாகாதிருக்க இந்த அமைப்பு பலகோடிக்களை கொடுத்துக் கருத்தியல் யுத்தத்தை ஏற்படுத்துகிறது.மறுபுறுத்தில், அணு ஆயுத்தம் தரித்த படைகளைக்கொண்டு பலமாகப் புரட்சியாளர்களைக்கொன்று குவிக்கிறது.
 
அதாவது,தனிநபர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்க வைத்தவர்கள்,அவர்களை ஒரு அணிக்குள் திரண்டுவிடாது பார்த்துக்கொள்கிறர்ர்கள்.
 
எங்கே,புரட்சிகரச் சூழலும் அதுசார்ந்து புரட்சிகரமான கட்சி உருவாகிறதோ அங்கோ பற்பல உடைவுகளைச் செய்து,தமது வன்முறை ஜந்திரத்தின்மூலம் புரட்சி ஒடுக்கப்படுகிறது,ஜனநாயகத்தினது பெயரால்.இதன் பின்,"புரட்டுசி" புரட்சிகரத் தன்மையிலான ஒரு சமூகப் பாத்திரத்தை எடுக்கு வைக்கப்படும்போது,அந்தத் தளத்தில் மக்கள் விரோதிகள் கம்யூனிசப் போராளிகளாகவும்,போதகர்களாகவும் நமக்குள் அறிமுகமாகி முதலாளித்துவத்துக்கு ஓலம் போடுகிறார்கள்.அதனால் முதலாளியம் என்றும் நிலைக்க முடிகிறது.எனினும், அதன் பிறப்பில் அது தனது சவக்குழியைத் தொடர்ந்து தோண்டியபடியே இருக்கும்போது பாரிய சரிவுகள் இந்தச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்படுகிறது.அதைச் சரிக்கட்டவொரு தேசத்தைப் பயங்கரவாதிகளின் தாயகமாகக் கருத்துக்கட்டி யுத்தஞ் செய்து கொள்ளையிட்டுக் குறுகிய காலத்துக்கு உயிர்வாழ்வை நீடிக்கிறது.இது தொடர்கதை.
 
இத்தகைய சூழலில் தனிநபர்களான நாம் "வேகம்"பற்றி வெதும்புவது இயல்பாகிறது.இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இனியென்ன நடக்கணும்?

ஓலம்,
அதி தீவிரம்,
வேகமான மாற்றம்,
திடீர் புரட்சி
திடீர் கட்சி,
திடீர் போராட்டம்
திடீர் வெற்றி

அதன் உலகுக்கு அவசியமாகிறது.இது தவிர்ந்த அனைத்தும் மிக வேகங் குறைந்த நிலையாக இருக்கிறது.
 
முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் ஒரு கணமும் ஓயாது நமக்குள் காரியமாற்றி நம்மைத் தயார்ப்படுத்திச் சமுதாயத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க முனைகிறது.நாளும் பொழுதும் இதுதாம் அதன் வேலைத் திட்டம்!
 
இந்த நிலையில் நாம் வேறுவிதமாக இந்த நடாத்தைகளை வெற்றிகொள்ள செயற்படுகிறோம்.அங்கே,மேற்காணும் நோக்குக் கிடையாது.எனவே,தனிநபர் வாதமோ அல்லது திடீர் வேகமோ இருப்பதற்கில்லை.அல்லது,இன்றைய சூழலுக்கு அவசியமானதற்ற கருத்து நிலையாகவும் இருக்கலாம்.ஆனால்,இது ஒரு கட்டத்தில் பொது வேலைத்திட்டத்தைப் புரட்சிகரமாக்கிக்கொள்ள முனைதலே புரட்சிகரக் கட்சியின் தோற்றமாக இருக்கும்.
இதையும் மிக வேகமாகப் புரிந்த முதலாளியம்,தொழிலாள வர்க்கத்தை "இழப்பதற்கு அரிய வேலை உண்டு" என்று கருத்தியல் மனதை உருவாக்கி அவர்களை மிக இலகுவாக அடிமைப்படுத்துகிறது.உயிராதாரம் அனைத்தம் உழைப்பினால் தங்கி நிறைவுப்படுத்தும் உலகில்,வேலையே இழப்பதற்கரியதாக மாறுகிறது.இது புரட்சிக்கு எதிராகவே நிற்கும்.

"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை எவரொருவர் குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.
 
நாம்,நிதானிப்போம்.இத்தகைய நோக்கிலிருந்து சிந்திக்கும்போதுமட்டும்தான் புதிய கோணத்திலான புரிதற்பாடுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.இந்த ஆரம்பமே நமது விலங்கை நாமே போராடி உடைக்கும் புதிய புரட்சிகரமான பாதையை இனம் காட்டும்.இந்த, இனம் காணும் தருணங்களே எமது உரிமையின் உண்மை நிலையையும்,எது எமது உரிமை,எது சுய நிர்ணயம் என்பதையும் ஓங்கியடித்து எமது முகத்தினதும்,விழிகளினதும் முன் காட்சிப்படுத்தும்.இது மிக அவசியமானது- எமது சமுதாயத்துக்கு.நாம் புலிகளின் பொய்யுரைப்பால் எமது இளைய தலைமுறையையே கையாலாகச் சந்ததியாக மாற்றியபடி, தனிநபர் துதிபாடும் கூட்டமாக மாற்றி வருகிறோம்.இதிலிருந்து மீளவும்,நமது இலக்கை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிப் போராட்டத்தை வர்க்கம் சார்ந்து முன்னெடுக்கவும் நாம் இன்னும் மிக நீண்டதூரம் சென்றாக வேண்டும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்