Samstag, Februar 06, 2010

தாயாய்த் தவமாய்...

தாயாய்த் தவமாய்...


"மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்"


முயன்று,முயன்று தோற்றேன்!அம்மா இல்லாத விரக்திக்குள் மீண்டும்,மீண்டும்...

"தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?"

"தாய் ஒரு வார்த்தை,ஒரு வாழ்வு.பெற்றவள்,
பிறந்து வளர்ந்த மண்:தாய்!"-என் அன்னை இறந்துவிட்டாள்!


கடந்த 25 ஆண்டுகளுக்குமுன் இவளை விட்டு...நெடுந்தூரம் வந்தாச்சு.ஓடோடி வந்து,வந்த பாதைகளின் பின்னே மூச்சிறைக்கத் தடங்களை உற்று நோக்கிறேன்,அவைகள் அழிந்து,மறைந்து விட்டன.இவ்வளவு விரைவில் இது சாத்தியமாகுமா?,கேள்வியோடு தலை குனிவு-தவிப்பு!அன்னை உடல் அழித்து மறைந்து போய்விட்டாள்.

இந்தப் புகலிட வாழ்வில் வந்தமர்ந்த இடத்தின் தற்காலிக நிறைவுகள்,என்னைப் பெருமளவு மாற்றித்தான் விட்டன.இப்போதும் தாய் ஒரு வாழ்வு!

அம்மா:பெற்றவள்.

மனதில் உணர்வுகள் வெள்ளமாய்ப் பிரவாகமெடுக்கக் காட்சித் திரைகளாய் சம்பவங்கள் நேரெதிரே தோன்றுகிறது!

அம்மா கல்லைக் கொடுத்தாலும்,புல்லைக் கொடுத்தாலும் அவைகண்டு மகிழ்பவள்.

என் அம்மா,உங்கள் அம்மாக்கள்,அம்மாவின் அம்மா,இப்படிப் பல அம்மாக்கள்.அம்மா ஒரு பொதுவுணர்வு,எல்லா அம்மாக்களும் ஒரு அம்மாவேதாம்!அம்மாவுக்குச் சாவில்லை!ஏனெனில்,பெண்மை என்பது அம்மாவைக்கொண்ட வாழ்நிலை.எனவே,அம்மாவைக் காலம் கொல்லுமா?என் அம்மா என் மனையாள் வடிவில்... சோதரிவடிவில்...மகள்வடிவில்...மருமகள் வடிவில்...இப்படிப் பெண்மை அம்மாவாய் உலகைக்கொண்டு இயங்க,அம்மா அநாதியாகிறாள்!

அம்மாவின் சந்தோசம்,எங்கள் சந்தோசம்.குடும்பத்தின்-தேசத்தின் சந்தோசம் என்றாகிறது!

உணர்ச்சி பொங்குகிறது,ஏற்றமாகிறது.

அம்மா செத்தாள் என்பது நிஜமாக உணர்வுக்குள் முட்டிமோத ஏமாற்றம் அம்மாவைப் பொதுமைக்குள் இருத்தி அழிவற்ற அநாதியாக்குவதில் மனிதவாழ்வு அர்த்தம் காண்கிறது.இது எனக்குத் தற்காலிக ஆறுதலைக் கூட்டிவருகிறது!எனினும்,ஒரு கொதி நிலையில் மனம் கொதிக்கிறது,ஒரு தவிப்பு.மீண்டும் மீண்டும் எதையோ இழந்த தவிப்பு.உள்ளத்தை இழந்து,கடந்த கால வாழ்வின் மிச்சசொச்ச உணர்வுகளைச் சுமந்து,நினைவு முச்சிறைக்க ஓடோடி வந்து தொலைக்கிறது.

பனங்கூடல்.சின்னமடுமாதா கோவில்-கணக்கர் வளவு.

கங்கு மட்டைகள்,பனையடியில் கிடக்கும் மூரிகள்,சூப்பிய பனங்கொட்டைகள்,ஆடுகள்,மாடுகள்... அம்மா அடுப்படிக்குள் உட்கார்ந்து அடுப்பூதுவதுபோன்றும்,தம்பிமார்களின் கைகளைப் பிடித்தபடி நான் ஒற்றையடிப் பாதையில்...

எங்களிடம் ஒரு தென்னை வளவு இருந்தது.

பெய்தோய்ந்த மழையால் ஈரலிப்பான நிலம்.தென்னங்கீற்றுகளிலிருந்து உருளும் மழைத் துளிகள் குண்டு,குண்டாய் உடலில் பட்டுத்தெறிக்க-நாங்கள் தென்னையுதிர்த்த பாளைகளை,ஓலைகளை,செத்தல் தேங்காய்களை பொறுக்கியெடுக்கிறோம்.அம்மாவிடம் ஒப்படைக்கிறோம்.அப்போதும் அம்மா அடுப்படியில்...



இந்த அம்மா என் அம்மா,உங்கள் அம்மா,இந்தவுலகத்தின் அம்மா.அம்மா-மாதா-தாய்!உயிரின் ஊற்று-மூலம்.எனக்குச் சின்னமடுமாதா தாய்-அம்மா.அவளது குருசு மரத்தடியில் எனது உடல் சரிந்துவிடவேண்டுமென்பது எனது நீண்ட கனவாக...

அம்மாவின் மகிழ்ச்சி முக்கியம்!இதை உணராதவன் நான்?இல்லை-இல்லவே இல்லை!அம்மாவுக்காக என்னை ஒடுக்கியவன் நான்.சின்னஞ்சிறு கனவுகளுக்கு எல்லையிட்டவனும் நான்.அம்மாவை அந்தக் கனவினது நிராகரிப்பில் காத்தவன் என்பது எனக்கான ஒரு வரலாறாக இருக்கிறது.அம்மாவைவிட எது பெரிதாக இருக்கும்?

அம்மா:தாய்-தேசம்?

ஈரலிப்பான உணர்வு நெஞ்சிலே மேவ நான் மீண்டும் அம்மா இல்லாத விரக்திக்குள் வாழ்கிறேன்.இப்போது,சரவணையிலிருந்து புலம் பெயர்ந்த நான் தேசம்-அம்மாவைத் தொலைத்தவனாகிறேன்.

ஆம்!

அம்மாவைத் தொலைத்தவர்கள் நாம்!

அன்பு என்பது அம்மா!அதுவே,உலகத்தின் மூலம்.

இந்த ஈரமே இதுவரை இந்த உலகத்தை இயக்கி,மாபெரும் மாற்றங்களைச் செய்தவண்ணமுள்ளது!இது, தன்னையும் தன் சுகத்தையும் மறுத்துத் தன் விழிகளுக்குமுன் தான் பெற்றதும்-பெறாததுமான குழந்தைகள் படும் வேதனைக்காகக் குரல் எறியும்.அது, எத்தனை இழப்புகள் நேரிடினும் மனித அவலத்தைப் போக்கப் போராடும்.அந்த உணர்வே அன்பென்ற மகத்தான மனித அழகிலிருந்து தோன்றுகிறது.இஃது, நாடு,மொழி,இனம் என்று மானுட அவலத்துக்குக் கற்பிதங்களைச் சொல்லிக்கொண்டு, கண்டும் காணாததாக இருக்காது.எங்கு அநீதி கண்டாலும் தட்டிக் கேட்கும்.இதுவே அன்பின் அர்த்தம்-தாயின் அர்த்தம்!

தாயை நேசித்தால் தேசத்தை நேசிப்பது கடினமில்லை.தேசத்தை நேசித்தால் உலகை நேசிப்பதில் போய் முடியும்.இங்கே தாய் என்பவளே மக்களாகவும் மனிதர்களாகவும் நமக்கு உறவுறுகிறார்கள்.தாய் ஒரு குறியீடு, உலகின் அனைத்து உறவுகளுக்கும்.இந்தத் தாயேதாம் தேசத்தை எனக்கு அறிமுகமாக்கிறாள். அவளைவிடவா எனக்கு என் சுய விருப்புகள்,தேவைகள் பெரிதாகும்?தாயைப் பழிப்பவன் தனயனாக இருந்தாலும் அவன் மனித விரோதி-சமூகவிரோதி!

நான் முதலில் தாய்க்குப் பிள்ளை.
உலகத்து உறவுகளுக்கு உறவு சொல்லும் அற்புத அழகு
எனக்காக அன்னை தந்தது.

இது, உயிரையும் உடலையும்கூட அன்பளிக்கும்!தமிழர்களாகிய எமக்கு இஃது, தெளிவான வரலாறு. வாழ்வின் யதார்த்தத்தில் காணும் வரலாற்று நிகழ்வுப் போக்கில் நாமதையுணர்வது கடினமன்று.இன்றோ,கூட்டுக் குடும்பங்களைச் சிதைத்த பொருளாதாரவுறுகள், மானுடப் பண்பையே மாற்றிமைத்து,மனிதர்களை ஒற்றை மானுடர்களாக்கி சமூகத்திலிருந்து பிரித்தெடுத்து, உற்பத்தி ஜந்திரத்தினொரு உறுப்பாக்கிய இன்றைய காலத்தில், மனித வாழ்வை மீண்டும் மனிதத் தன்மையோடு மாற்றியமைக்க நமக்கு அம்மா பற்றி பிரக்ஜை அவசியமாகிறது.அம்மாவைப் பழிப்பவன்-உதைப்பவன் அழிந்துபோன வரலாறைக் காலம் எப்போதும் உணர்த்தி நிற்கிறது.

அம்மாவானவள் எப்போதுமே தன் தொப்புள் கொடியுடன் தொடர்புடையவள்.தொப்புள் கொடியை அறுத்துக் குழந்தையைப் பிரித்தெடுத்தாலும்,இவள் உள்மனம் தொப்புள் கொடியாய் விரிந்துகொண்டே இருக்கும்.

இவளுக்குக் குழந்தையை மட்டுமல்ல குழந்தையின் பொருட்களையும்,அதன் சிறப்புகளையும் காக்கத் தெரியும்.அதையொட்டி மகிழ்வுறத் தெரியும்.இதுதாம் தாய்மை?

பிள்ளையின் ஒவ்வொரு வெற்றியிலும்(கல்வி-வாழ்வு-உழைப்பு,உயர்வு என...) ஓங்கிக் குரலெடுத்து உரக்கக் கத்திப் பூரிப்பாள்.ஏனெனில்,துன்பத்தில் துவளும் தாய், தன்னுடன் துன்பம் முடிவுற்று தன் குஞ்சரங்கள் இன்புற்று வாழ வேண்டுமென்ற பெரு விருப்போடு கனவு கண்டு, உழைப்பவள்.அவள் இதை உணர்வு பூர்வமாக விரும்புகிறவள்.இவளே ஒரு கட்டத்தில் எதிர்காலச் சந்ததிக்காக தன் கருவையே அதர்மத்துக்கெதிராய் ஆயுதமாக்குபவள்.இவள் ஓடும் வரலாற்று வெள்ளத்தில் உயிரூற்றாய்ப் பெருகுபவள்.இப்போது, இவள் தாய்:தேசம்!

சரவணை...எனது பிறந்த மண்.

இதைவிட்டு வெகு தூரம் வந்தபின்பே இதன்மீதான எனது-எமது வாழ்வனுபவமும் அது தந்த வாழ்வுறுதியும்-வனப்பும் அன்னையின் மடிபோன்று இதமாக இருக்கிறது.அந்த் தீவு மண் இன்று தின்னக் கொடுத்து வைக்காத மக்களால் பாவப்பட்ட பூமியாகச் சபிக்கப்படுகிறது!வஞ்சிக்கப்பட்ட மண்ணாய்போன நமது மண்ணில் மழைகூட இறங்குவதில்லை.என் தாயின் உடலெங்கும் உயிர் கொல்லிக் கிருமிகள் "டெங்குவாகவும்,மலேரியாவாகவும்" சுதந்திரமாக ஊருகிறது.தொற்றகற்றிகொண்டு அடித்துவிரட்ட முடியாத தற்குறியாக்கப்பட்ட எமது நிலையை நான் யாரிடம் நோக?இப்போதே அகதிய வாழ்வின் ஐரோப்பியச் சுகமும் என்னை விழுங்கியிருப்பினும்,இந்தத் தேசத்தின் ஜந்திரமென்னைத் தினம் தேசம் நோக்கி உந்தித் தள்ளியபடியே என்-எமது வாழ்வைத் தின்று ஏப்பமிடுகிறது!

நாளை ஒருவேளை அவள் ஜீவகாருண்யம் மெருக்கேறி புதிய காற்றைச் சுவாசிக்கலாம்.அப்படி ஆகணும்.ஏனெனில்,அவள் தாய்!

"சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைப்பட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் சரவணைத் தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
அகதிவாழ்வில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!

உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் என் வாரீசுகள்."

ஒன்றின்பின்னொன்றாக எல்லாம் நிகழ்ந்தபடி...இஃது, எல்லோருக்குந்தாம்.என்றபோதும், என்னைப் பெற்றெடுத்துப் பேருவகைகொண்டு பேரிட்டு,மன்னனாகக் கண்டு மகிழ்ந்தவள் படுக்கையில் வீழ்ந்து மரித்துப்போனாள்.

"தானுடண்டது பேய் உண்டது,பிறருண்டது சிவனுண்டது"என்று சொல்லிச்சொல்லி எமக்கூட்டியவள்-"தானுண்டவள் பிள்ளை வளவாள், தவிடுண்டவள் கோழி வளவாள்"என்று முதுமொழியுரைத்து, எமக்கு ஊட்டியவள் உயிர் துறுந்து தீயில் சங்கமமாக...

அன்னை!

அற்புதங்களைச் செய்பவள்.அடுப்புக்குள் எரிந்து மீள்பவள்!அணைத்தெடுத்து அமுதூட்டியவள்.அவளை எண்ணியபோதெல்லாம், அவளாள் உறவுகளாய்ப் பிணைந்த குருதிக்கூட்டம் அகம் நிறைக்க.அக்கா-தம்பி,தங்கை-அண்ணாவென அது நீண்டுபோகும்.

அம்மா.

அற்புதங்கள் செய்பவள்.அடித்தாலும்,அரவணைத்தாலும் அவளாலேதாம் அனைத்தும் ஆகுவது.அவளின்றி, எனக்கு எதுவுமே ஆவதில்லை.

எனது பால்யப் பருவத்திலேயே அவளுக்காய் என்னைத் தொலைத்தவன்.அன்பு,அம்மா என்பதாக...

காதலும், கனவும் தவித்திருந்த பொழுதில் அம்மாவுக்கு மறைத்து,அகமகிழ்ந்திருந்த அர்த்தமிக்க பொழுதில் அம்மாவை ஏமாற்றிச் சிறகடித்த பொழுதின் அம்மா ஞாபகத்தில்...

அந்த அம்மா படுக்கையில் வீழ்ந்து உயிர்விட்டாள் இப்போ...எனினும்,அம்மா வாழ்கிறாள்-உலகாய்த் தேசமாய்,பெண்மையாய்,பொதுவாய்...இப்படி எல்லாமாக.


ப.வி.ஸ்ரீரங்கன்

06.02.2010

Donnerstag, Januar 28, 2010

சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி: பொன்சேகா

இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்:

-சில குறிப்புகள்.

"சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதி பொன்சேகா மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறது!"

நேற்று 26.01.2010 நடந்தேறிய இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா இராஜபக்ஷ 58 வீத இலங்கைச் சிங்கள மக்களதும் சில சிறுபான்மை மக்களினங்களின் ஆதரவோடு மீளவும் ஜனாதிபதியாகின்றார்.பெரும்பாலும், மகிந்தா இன்றைய இலங்கைச் சூழலுள் அநேகமாகப் பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவ்வண்ணம், மகிந்தா இராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்ட "மகிந்தா சிந்தனைக்கூட்டு" யுத்தக்கிரிமினல் சரத் பொன்சேகா 40 வீத இலங்கை மக்களினங்களின் ஆதரவு பெற்று, இத் தேர்தலில் தோற்றிருக்கிறார்.எனினும்,அவர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜனாதிபதியாகிறார்(இது,மேற்குலகத்துக்கு மிகச் சாத்தியமான அரசியலை இனி முன்னெடுக்கும்.அஃது,மகிந்தா தலைமையிற்கூட நிகழும்).




தோல்வி சரத் பொன்சேகாவுக்கு என்றபோதும்,அஃது,குறிப்பாக மேற்குலக மூலதனத்துக்கான தோல்வியாகவும்-வெற்றியாகவும் நீடித்திருக்கும்-இருக்கின்றது.

இந்த ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில், மகிந்தா பெரும்பான்மை மக்களது ஜனாதிபதியாகவும்,சரத் பொன்சேகா தோற்றாலும் இலங்கைச் சிறுபான்மை இனங்களின் ஜனாதிபதியாகவே "இப்போது"பிளவுபட்ட சமூக உளவியலாக உருவாகியுள்ள அரசியல் போக்கில் புரிகிறது.இது,சிறுபான்மை மக்களது"ஜனாதிபதி"சரத் பொன்சேகாவென்றும்,பெரும்பான்மை இனத்தின் ஜனாதிபதியாக மகிந்தாவும் உள்ளதாக ஒரு வகைச் சமூக உளவியல் தோன்ற வாய்ப்பளித்திருக்கிறது.

இந்த உளவியலின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் அரசியல் நெருக்கடியாக எழும் என்பதே எனது அச்சம்!

இவ்வச்சம் வெறும் கருத்துக் குவியலோ அன்றிக் கற்பனையோ கிடையாது.

இது,சமூக அரசியல் பொருளாதாரத்தின் சில விதிகட்கமைய ஆயப்பட்ட-பரிசோதித்தறியத்தக்கதானவுண்மை என்பதை ஏற்றாலுஞ்சரி இல்லை நீங்கள் விட்டாலுஞ்சரி என்னை இது அச்சப்படுத்துகிறதென்பது உண்மை.

இலங்கையில் ஏலவே கட்டியெழுப்பப்பட்ட இனவாத அரசியல் நடாத்தையில், மேலும், வளர்வுந் தேய்வும் அத் தேசத்தின் பொருளாதார மற்றும் அந்நிய ஆர்வங்களால் நிகழ்ந்து வருபவை.இது,தற்போது இலங்கைச் சமுதாயத்தின் அரசியல்-சமூக உளவியலாகத் தோற்றம் பெறும் இன்னொரு வகையான இனத்துவ அடையாள அரசியலை இனிவரும் காலத்தில் வளர்த்தெடுக்கும்.இதற்கான தோற்று வாயில் இலங்கைச் சிறுபான்மை இனத்தின் இன்றைய அவல அரசியல் பாரிய பங்கை வகிக்கின்றது.இந்நிலையில் ஆசிய மூலதனத்தின் நோக்கம் வெற்றிபெற்றிருப்பினும் சிங்கள அடையாள அரசியலது வரலாற்றைத் தமதாக்க முனையும் ஆளும் வர்க்கத்தின் ஒருபகுதிக்கு இது அசாத்தியமானவொரு வியூகத்தை மெல்ல இராஜபக்ஷவினது வடிவில் தெரிவுகளாக்கும்.இலங்கைச் சிறுபான்மை இனங்களது எந்த ஆதரவையும் உதாசீனப்படுத்துவதற்கான பல தெரிவுகளை இனிவரும் இலங்கைச் சிங்கள மேலாதிக்கக்கனவுகளுக்கு இது, சட்ட ரீதியான யதார்த்த(அரசியல் யாப்பு) நிலைகளைத் தோற்றுவிக்கும்.இதன்வழி,இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் பாரிய அரசியல்-பொருளியல் நெருக்கடியையும் அதுசார்ந்த அடக்கு முறைகளையும் எதிர்கொள்வது உறுதி.

இதைச் சற்றுக் கீழே(...)விரிவாகப்பார்க்கலாம்.

மகிந்தாவுக்கு எதிரான இலங்கைச் சிறுபான்மை இனங்களது பாரிய எதிர்ப்பு அரசியலது தெரிவில், பொன்சேகா சிறுபான்மை இனங்களது ஜனாதிபதியாக மாறியது சிங்களச் சமுதாயத்தின் அடையாள அரசியலை மேலும் வலப்படுத்தும் என்பதில்:

1: இலங்கைச் சிறுபான்மை இனங்கள் மேலும் பிளவுபட்ட-இணைக்கவே முடியாத, இலங்கைப் பெருந்தேசிய உருவாக்கத்துக்கு எதிரான முட்டுக்கட்டைகள்.

2: தமிழ்பேசும் இலங்கையர்கள்,சிங்களம் பேசும் இலங்கையர்களது தேச இறையாண்மைக்கு எதிரான இயங்குநிலைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் எனும் சமூக அச்சத்தைப் பெரும்பாண்மை மக்களிடம் விதைக்கமுனையும் இனவாதிகளுக்கு ஒத்த அரசியல்-சமூக உளவியற்றளத்தை மேலும் விரிவாக்கிக்கொள்ளும்.

3: இலங்கையில் இன்றுவரை சிறுபான்மைச் சமூகங்களைக் கண்காணித்துவரும் சிங்களப் பௌத்தமத மேலாதிக்கம்.மேலும், உறுதுணையாகவிருக்கும் சிங்கள அடையாளத்துடன் பிணையும் மூலதனத்துக்காக, சிறுபான்மை இனங்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ,அவர்களது உரிமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும் இது உந்து சக்தியாகும்.

4: தமிழ்பேசும் மக்கள் தொடர்ந்தும் தமது அடையாள அரசியலில்"தமீழம்"சார் சமூக உளவிலோடு நெருங்கியே இருப்பதாகவும்,இதன் விளைவாகத் தமிழ்பேசும் மக்களை மேலும் கண்காணிப்பதும் அவர்களது சுயாதீனமான தெரிவுகளை மறுத்து நிற்பதற்கும், இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் பிரிவினைவாத அபாயமும் உள்ளதாகச் சுட்டி மேலும் ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் நிலைக்க முடியும்.

5: இத் தேர்தலானது தமிழ் பேசும் மக்களது உளவியலைப் புரிவதற்கும்,அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து அரசியல் புரிவதற்குமான பல தெரிவுகளை ஆளும் மகிந்தா குடும்பத்துக்குப் "புதிய உத்வேகமாக" வழங்கியுள்ளது.



இத் தெரிவுகளது வலையில் வீழ்தப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள், தமது எதிர்ப்பு அரசியலது தெரிவில் நியமான சக்திகளைத் தெரிந்துகொள்ளாதவரை மேலும் தொடரப்போகும் சில சதிகளைப் பார்த்தால்,அஃது, இலங்கையினது இறைமைக்கு அவசியமேயென ஆளும் வர்க்கம் கட்டமைக்கும் அரசியலுக்கு வலுச் சேர்ப்பதில் முடியும்.

இவைகளின்வழி,தமிழ்பேசும் மக்களைப் புலிகளது அழிவுக்குப்பின்பு சோதித்தறியும் ஆசிய மூலதனம் மேலும், தமது மூலதன நகர்வுக்கேற்றவொரு சூழலில் தவிர்க்கமுடியாத சில ஜனநாயக விழுமியத்தினாலான அரசியல் முன்னெடுப்பை இனிமேலும் நகர்த்த வாய்ப்பில்லாது போகிறது.

நடந்துமுடிந்த தேர்தலில் சிறுபான்மை இனங்களது தெரிவுகொண்டு,இலங்கையினது "ஒரே" தேசவுருவாக்கத்துக்கு ஆபத்தான உளவியலைக் கொண்டிருக்கிறதென்ற முடிவில் சிங்கள ஆளும்வர்க்கம் தொடர்ந்த-தொடரும் முதன்மையான அடக்கு முறைகளை மேலும் வலுப்படுத்தும்.

இன்றும், தமிழ்பேசும் மக்கள் இணக்கமற்ற பிரிவினைவாத உளப்பாங்கோடு சமூகவாழ்வைக்கொள்வதென்ற உண்மை தெரியப்படுத்தப்பட்டு, இராஜபக்ஷ தமிழ்பேசும் மக்களது மாவட்டங்களில் தோல்வியாவது சட்டரீதியான இராணுவ ஒடுக்குமுறையை மேலும் இருப்புக்குள்ளாக்கி விடுகிறது.

ஆக,இராணுவம் மெல்ல முகாம்களுக்குச் செல்வதும்,பரந்தபட்ட தமிழ் மக்களது வரலாற்றுமண்ணில் சிவில்சமூக நிறுவனங்கள் மீளவும் தோன்றியொரு ஜனநாயகச் சூழல் அரும்பி, இயல்பு வாழ்வு வருவது இதன்வழி தடைப்பட முடியும்.

அ: தமிழ் பிரதேசங்களில் வலுவான பிரிவினைவாதப் போக்குச்சார்ந்த சமூகவுளவியற்றளம் இன்னமும் அழியவில்லை. எனவே,இராணுவம் இச் சமுதாயத்தை கண்காணித்துப் பிரிவினைவாதப் பயங்கரவாதத்தை இல்லாதாக்க அது மேலும் தமிழ்பேசும் மக்களது மண்ணில் நிலைகொண்டு, அச் சமுகத்தைச் சட்டரீதியாகக் கண்காணிக்கும்.

ஆ: தமிழ்பேசும் மக்களுக்குள் இல்லாதான சிவில் சமூக நிறுவனங்கள் மேலும் உருவாகாதிருப்பதற்கான ஜனநாயகவிரோதச் சட்டங்களின்வழி, அவசரகாலசட்டம் தொடரும் இக்கட்டு இதன் போக்கில் மேலெழும்.

இ: தொடர்ந்தும் இராணுவ விஸ்தரிப்பும், இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பும் சட்டரீதியான அங்கீகாரத்தோடு தமிழ்பேசும் மக்களது மண்ணில் இராணுவச் சர்வதிகாரதைத் தொடர்ந்து நிலைப்படுத்தும்.

இதுவே, இறுதியானதெரிவாகும் நிலையில், தமிழ்பேசும் மக்களது எதிர்காலம் இருள்மயமானது.

எத்தனை கருணா-டக்ளஸ் போன்றவர்கள்"என்ன அபிவிருத்தி-பொருளாதாரவுதவி"செய்து ஏமாற்றிடினும், இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அதிகமான தருணத்தில் பாதகமான தெரிவுகளோடு அரசியல் செய்கின்றனர் என்றும்,இதுள் முக்கியமாகத் தமிழர்களே செயற்படுவதாகவும் அடக்குமுறையாளர்களது நேரடியான அத்துமீறிய வொடுக்குமுறையால், இராணுவவாதம் மயப்பட்ட தமிழ்மக்களது வாழ்வு கருகிப் போகும்.

இஃது(இனஞ்சார்) அனுமதிக்கும் "மகா"பாதகங்கள்:

*தமிழ்ப் பிரேதேசம் தொடர்ந்து இராணுவக் கண்காணிப்புக்குள் இருத்தி வைக்கப்படும்.

*சிவில் சமூக உருவாக்கம் வருவதற்கான ஜனநாயகச் சூழல் மறுக்கப்படும்.

*தமிழ்பேசும் மக்கள் தென்னிலங்கையில் தொடர்ந்தும் அச்சத்துக்குரியவர்களாகவே பார்க்கப்படும்-பார்க்க வைக்கும் கருத்தியல் மேலாண்மை பெறும்.

*தமிழ் மக்கள் தொடர்ந்து இராணுவக் கெடுபிடிகளுக்குள் தமது பொருளாதார-அபிவிருத்திகளை இழந்து வருவதைத் தடுக்கும் அரசியல் பலம் இல்லாதாக்கப்படும்.

*பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஒத்துழைப்பை இவைகளுக்காகப் பெறுவதில், தமிழ் ஆளும் வர்க்கம் சிங்க ஆளும் வர்க்கத்தோடு மேலும் நெருங்கிக்கொள்ளும்.

*பரந்துபட்ட தமிழ் மக்கள் ஆட்சியிலுள்ள தமிழ் தலைமைகளாலேயே திட்டமிடப்பட்டு பழி வாங்கப்படுவர்.
இதன் வழியான அரசியல் நடாத்தையில், மகிந்தா தொடர்ந்தும் தேச பக்தனாகவும்,அதியுத்தமமான சிங்களத் தேசியத்தின் குறியீடாகவும் மாற்றப்பட்டு, தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகங்கள் ஒடுக்கப்படும்.இதைச் செய்யவே மேற்குலகம் தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்கிப் பொன்சேகாவுக்கு வெற்றியயைத் தமிழ் பிரதேசங்களில் குவிக்க வைத்தது.இதன்வழி இனவாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்பட்டு, இலங்கையின் சுயவளர்ச்சி முடக்கப்படும்.


மகிந்தா குடும்பம் இதையெல்லாம் தவிர்த்து நேர்மையான அரசியலைக் கைக்கொண்டு, இலங்கையில் இராணுவவாதம் ஒடுங்கிய ஜனநாயகச் சூழலை இனி ஏற்படுத்துமென எவரும் நம்பும் அரசியல் நடக்கமுடியாது.

இது, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலுள்ள இராணுவ ஒடுக்குமுறையை மேலும் விரிவாக்கும்.எனவே, சட்ரீதியான அரசியலாகவும் இதை மாற்றும்.இது,"தமிழ் தேசியம்"உயிர்த்திருப்பதற்கும் அதைக் கையிலெடுத்து அரசியல் பிழைப்பை முன்னெடுக்கும் தமிழ் மேட்டுக்குடிக்குமான அறுவடைகளையுஞ் செய்யும்.இதன்வழி ஏமாற்றப்பட்டவர்கள்-படப்போகின்றவர்கள் தமிழ்பேசும் இலங்கையர்களே.

இறுதியாக: மகிந்தாவின் வெற்றியானது, தொடர்ந்தும் இலங்கையில் இனவாத அரசியலும்,ஒடுக்குமுறையும் சிறுபான்மை இனங்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும்போது தமிழ் பேசும் மக்களது அரசியல் இருப்புப் பலமற்றது என்று நிரூபித்திருக்கிறது.தமிழ்பேசும் மக்களது ஆதரவின்றியே ஆட்சியில் அமர விரும்பும் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலும்-சிறுபான்மையின ஒதுக்குதலும் இருந்தாற்போதுமானதென மீளவும் நிரூபித்திருக்கிறது.

இனிவரும் காலத்தில் எந்தக் கருணாவும்-டக்ளசும் மகிந்தாவுக்கு அவசியமில்லை.சிங்கள மக்களைத் திருப்பதிப்படுத்தும் இனம்வாதம் ஒன்றே போதும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்கது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த அபாயமான அரசியலைப் புரிந்தபோது அச்சம் மட்டுமே எஞ்சியுள்ள உணர்வாக...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.01.2010

Samstag, Januar 16, 2010

நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்


தேர்தற் களம்:


இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் "தமிழீழத்தில்" புடம்போட்டு ஈழத்தைக் கனவுகாண வைத்தது அன்றும்-இன்றும்!



"KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE"-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக...



இறுதியான "ஈழயுத்தம்" இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் "ஈழம்"மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான"தீர்வு"த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு...

கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும்,கடந்தகாலத்தில் புலிகளின் போராட்டச் செல் நெறி நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு உத்தியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.

இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி, அதை வெறும் புலிப்பயங்கரவாதமாக்கி இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் கடல் வளத்தையும்,இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் இந்திய-சீனா மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே வளர்த்தெடுக்கப்படுகிறது.ஆனால், இந்த இலக்கைத் திட்டமிட்டு மறைத்து வரும் ஊடகங்கள்,நம் மக்களை நம்ப வைத்து நலம் அடிக்கும் அரசியலை "மகிந்தாவின் மனிதாபிமானித்தை" பேசியும்-எழுதியும் தமது எஜமான விசுவாசத்தைச் செய்கின்றன.

வரும் ஜனவரி 26.2010, ஜனாதிபதித் தேர்தலில், சரத்துக்கும்,மகிந்தாவுக்கும் நன்றி விசுவாசமாக இலங்கை மக்கள் அனைவருமே இருக்க வேண்டுமெனக் கட்டளையிடும் இனம்சார் கட்சிகள், தமது எஜமானர்களது தயவில் தமது கட்சி இருப்பைக் குறிவைத்து இயங்குகின்றார்கள்.அண்மையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளது போராட்டம் அந்நிய அடியாட் சேவையாக இருந்தது.அஃது, பிழையான வகையில் தமிழ் மக்களது எதிர்ப்பு அரசியலைக் கொண்டியங்கியது. சிங்களப் பேரினவாதத்தின்முன் ஒடுங்கி-அழிந்துபோகாதிருப்பதற்காகப் போரிட்ட தமிழ்பேசும் மக்களது நியாயமானபோர்- இனவொடுக்குமுறைக்கெதிரான போர் பரிதாபகரமாத் தோல்வியாகியது. இப்போது,அவ்வெதிர்ப்பு அரசியல் பாசிசப் புலிகளது அழிவுக்குப்பின் பயங்கரவாதமாகப் போயுள்ளது.இதைச் செவ்வனவே முள்ளிவாய்க்கால்வரைச் செய்து ஒப்பேற்றிவிட்டுப் புலிப்பினாமிகள் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானமென வம்பளக்கும்போது,துன்பமும் துயரமும் மேலும் தொடர்கதையாகப் போகிறது, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களுக்கு.

நமது மக்களோ இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சரத்தோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய முள்ளிவாய்க்கால் இனவழிப்புடனான புலி அழிப்பு நடந்தேறியது.

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்:

இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.அஃது, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும்.

இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தைச் சார்ந்தே இருக்கிறது.இங்கு,மகிந்தா தலைமைதாங்கப்போகும் ஐக்கிய இலங்கைக்கு ஒரு இராணுவ யுத்தப்பேய் சரத் பொன்சேகாவடிவில் அமெரிக்காவுக்கான தெரிவாக, பாசிச மகிந்தா குடும்பத்தின்முன் சவால் விடுகிறது.இது,தமிழ்பேசும் மக்களது குரல்வளைகளில் பதித்த தனது கொடியபற்களை தேர்தலுக்குப்பின் மெல்லக்காட்டி மக்களைப் பயமுறுத்தும் காலமொன்றும் உருவாகலாம்!

இன்றைய வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்"மார்க்" வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவுக்கு இக்கிழமை வருகை தந்த பங்காளதேஷ் அதிபரின்(Premierministerin Sheikh Hasina Wajed)முன் வாக்களிக்கப்பட்ட இந்தியக் கடன் நூறுகோடி டொலர்களாகும்.இந்தியா பங்காளதேஷ் இலங்கைபோன்ற நாடுகளைத் தனது அரைக் காலனியாகவே பயன்படுத்தி வரும்.இதற்காக அது,தனது பிராந்திய நலனுக்கிசைவான இராஜபக்ஷா குடும்பத்தை எப்பாடுபட்டும் காக்கும்.




புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.என்றபோதும், இந்தியா-சீனா மற்றும் அமெரிக்கா,ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதுள், இத்தகைய நாடுகள் முரண்படும்போது கட்சிசார் அரசியல் நடாத்தையில் வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர்கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும்,இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும் பின்பு புலிகளது முதுகை உடைத்த ஆசிய மூலதனத்திடம் ஏமாந்ததும் இன்றைய வரலாறு!புலிகள் என்றவொரு அதி தீவிர வலதுசாரியப் பாசிச இயக்கமொன்று அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது.அஃது, இப்போது ஆசிய மூலதனத்தால் அழிக்கப்பட்ட இடத்துக்குச் சரத் பொன்சேகாவாக வரமுடியும்.எனவே, புலிகள் இல்லாத தமிழ் அரசியலை ஈடுகட்ட யுத்தக்கிரிமனல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதுதாம் புலிகளது வெற்றிடத்தை நிரப்பும் அரசியல் முன்னெடுப்பாகிறது.ஒருபோதும் அமெரிக்க நலன்-ஐரோப்பிய நலன் இலங்கையை முற்றுமுழுதாக ஆசியப் பிராந்திய வல்லரசுகளிடம் மண்டியிட அனுமதியாது.இதைப் பண்டார நாயக்காவின் கொலையில் உரைத்துப் பார்க்க முடியும்.பாகிஸ்தானில், இந்துநேசியாவில் தாய்லாந்தில் எப்படி இராணுவ ஆட்சிகள் நடக்கிறதோ அவ்வகைப் பாணியிலான அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது சரத் பொன்சேகாவினது அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.

ஆசிய-மேற்கு உலகங்களது மூலதனம்:

இங்கே,ஆசிய மூலதனமானது இந்தச் சூதாட்டத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களது முரண்பாடுகளை அரசியல்-பொருளாதார முறைமைகளோடு தீர்க்க முனையாதபோது இவ் முரண்பாடுகளைச் சாதகமாக்கிக்கொள்ள மேற்குலகத்துக்கு முடியும்.புலம் பெயர் தேசங்களிலுள்ள அனைத்துப் புலிக்கட்டமைப்பும் இத்திசைவழியில் மேற்குலகுக்குப் பயன்பாடானவர்கள்.புலம் பெயர்ந்த ஈரானியர்கள் இன்றைய ஈரானுக்கு எதிராக இருப்பதுபோல்.இந்நிலையில்,சங்காய் ஓர்க்கனேசேசன் கோப்பிரேசன் தனது தெரிவாகப் புலியை அழித்தபின் அவர்களோடு சேர்த்துத் தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளை அழித்ததாகக் கனவு காணுமா அல்லது அரசியல் தீர்வை முன்வைக்குமா என்பதற்கு மகிந்தாவினது வெற்றியின்பின் சில தீர்மானகரமான முடிவுகளை எட்டியே ஆகவேண்டும்.

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம் பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்.இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரிக.



இவையிரண்டும் நேராதிருப்பதற்கான தெரிவுகளாக எதிர் தரப்பை மேற்குலகம் பயன்படுத்தும்போது,அதைப் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்தே முன்னெடுப்பர்.இதைத் தடுப்பதற்கு முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்"நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது"என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதைப் புரிய ஐரோப்பியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையும்,ஐரோப்பிய மூலதனத்தின் போட்டிகளையும்,தனித்தனியாக ஐரோப்பிய நாடுகள் இருந்தபோது நேர்ந்த அரசியல்-போராட்டங்களையும் உற்று நோக்குவது அவசியம்.இதற்குப் "பழைய ஐரோப்பா"என்ற பதம் ஒரு குறியீடாக உலகத்துள் இன்றும் இருக்கிறது.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மேற்குலக நிதி மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இதற்காக இலங்கையை முற்று முழுதாக இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கத்திலிருந்து விடுபட வைத்தாகவேண்டும்.அதற்கானவொரு அருமையான தேர்வாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகவாயும்,தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் மேற்குலகம் பயன்படுத்துகிறது.அவ்கானிஸ்த்தானது மேற்குலக யுத்தத்தில் இலங்கையானது மேற்குலகச் சார்பு கட்சியால் அரசபரிபாலனஞ் செய்யப்பட்டால் தென்னாசியக் கடற் போக்குவரத்து மேலாண்மைக்கு மேலும் வலுக்கூடி இரட்டிப்பு வெற்றியை அவ்கான் யுத்தத்தில் எட்ட முடியும்.இது,பரவலான மேற்குலகப் புவிகோள வியூகமாகவே விளங்கத்தக்கது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குலகச்சார்பு ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்றுத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது அமெரிக்காவினது தெரிவு.இஃது,இலங்கை அரசின்மீதான இந்திய-சீனா ஆதிக்கத்துக்கு விழுந்த பாரிய அடியென்பதை இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாகவே புரிந்து கொண்டது.தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே சரத்,ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு.இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது சங்காய் ஓக்கனேசன் கோப்பிரேஷன்!இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது"இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,வாழ்வாதாரம்"என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் புலி மாபியாக்கள் இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கூடாகத்"தமிழீழ"வரைபடம் காட்ட முனைதலும் இதன் ஒரு அங்கமே.

இயற்கை:

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில குடும்பங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது மனிதத் தவறுகளை.கெயிட்டியில் இலட்சம் மக்களது உயிர் கடந்து மூன்று நாட்களுக்குமுன் பறிக்கப்பட்டது.புவி அதிர்வு!

சுனாமி வந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூலதனத்து முரண்பாடாக...

உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?

"இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!."இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும், இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.

என்ன செய்வோம்?

எங்கும் இயற்கை அனர்த்தம்- யுத்தம்!

அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்...விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால், சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்...உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் "இந்த இயற்கை" இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?

இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் பூண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?

உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?

எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் "கரியமில வாயு"வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.

உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் "சக்தி" என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு "நேரக் குண்டாக"நேரம் குறித்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.


1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.


இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.


இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.



இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?


எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?


நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?


இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?


எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?


சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?


"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?


இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!


இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?


அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!


எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.


இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!


யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே


.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).


என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.


அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.


200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் குறித்து:


இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு செற்பட வேண்டும்.

தேர்தல்கள்,வாக்குச் சீட்டுகளால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனினும்,அத்தகைய தேர்தல்களே ஜனநாயகத்தின் இருப்பை உரைத்துப் பார்க்கும் வழியாகவும் இருக்கிறது.நாம் மக்களது திறந்த விவாதத்தைக் கோருகின்றாம்.அவர்களது பிரச்சனையை அவர்களே பேசுவதற்கூடாக மக்களது ஆளுமையை வலுப்படுத்திடலாமென்பது எனது புரிதல்.இலங்கையில் மக்கள் யுத்தத்தாலும்,தேர்தல் நாடகங்களாலும் ஆளும் வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுப் பலியிடப்பட்டார்கள்.மக்களது உரிமைகளை அவசரகாலச்சட்டம்-பயங்கரவாதம் என்ற கொடும் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளால் இல்லாதாக்கினர்கள்.


இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு ஓட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே "ஈழம்-தமிழீழம்"எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.


இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் கோரிக்கை முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செம்மையுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.


மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில், இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை"அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்"போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.என்றபோதும், ஒவ்வொரு ஐந்தாண்டும ஜனநாயகம் போதித்துத் தேர்தல்கள் வந்துபோகின்றன.ஆனால்,இத்தகைய தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட மக்களது எந்தத் தேவையும் எந்தக் கட்சித் தலைவனாலும் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பித் தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.எனீனும் வாக்களிப்பது மக்களது உரிமை.ஆனால்,எவருக்கு வாக்களிப்பது?

இதைத் தீர்மானிப்பது மக்களது தெரிவு.அவர்களது பிரச்சனையை இந்த முதலாளிய அமைப்புக்குள் எவரும் தீர்க்கப் போவதில்லை.ஆனாலும் இவ்வமைப்பை உடனடியாக மாற்றவும் முடியாது.எனவே,அதிகாரத்திலுள்ளவர்கள் தாம் சார்ந்த முதலாளியக் கூட்டுக்கேற்றபடியேதாம் இயங்குவார்கள்.அவர்களில் இப்போது இலங்கையின் அபிவிருத்திக்கேற்றவர்கள் எவர்?


மேற்குலக மூலதனமா இல்லை ஆசிய மூலதனமா?

இரண்டினது இயல்பும் ஒன்றாகவேதாம் இருக்கும்.ஆனால்,ஆசிய மூலதனம் தன்னை நிலைப்படுத்தும் முன் தெரிவில் இலங்கையில் குடிசார் உரிமைகளைக்கொணர்ந்தே ஆகவேண்டும்.இது,மக்களது அழிவுகள் குறித்துக் கவனமெடுத்தே ஆகவேண்டும்.ஆனால்,மக்களைக் கொன்றுகுவித்த யுத்தக்கிரிமினல்களது பக்கம் இத்தகைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் ஒளிந்து இயங்குவதால் இலங்கை மக்கள் எவரை ஆதரித்தாலும் அது விடிவைத் தரப்போவதில்லை.


தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுகளைக் குறித்துச் செயற்படுவதாகவிருந்தால் இத் தேர்தலில் தமது ஓட்டுக்களை எதிர்ப்பு அரசியலாக்க முடியும்.அது ஜனநாயக உரிமையினது அடிப்படையில்.அப்போது,உண்மையான மக்கள் பிரதிநிதியாக-மக்களுக்காக உழைப்பது,குரல்கொடுப்பதென்று சிவாஜிலிங்கம் முனைந்தால் அவருக்கு ஓட்டுப்போடலாம்.அவரைப்போல் விக்கிரபாகு கருணரெத்தினாவுக்கும் போடலாம்.ஆனால்,அவர்கள் எவரும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகவிருந்தால் இந்தப் பாராளுமன்றப் பண்டித் தொழுவத்தைக் கேலி செய்து மக்களை வர்க்க உணர்வோடு அணிதிரடி இனவழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியாகத் தேர்தலைப் பகிஸ்கரித்து மக்களோடு மக்களாக முன் நின்றிருப்பர்.எனவே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் இத் தேர்தலில் நாட்டங்கொள்ளத் தேவை இல்லை.இதைப் பகிஸ்கரித்துத் தமது அழிவுக்கு நீதி கேட்கும் நாளாக தேர்தல் தினத்தில் ஆர்பாட்ட ஊர்வலுஞ் செய்யலாம்.அப்படிச் செய்யும்போது இலங்கையின் அரச பாசிசத்தை உரைத்தும் பார்க்கலாம்.இதைவிட இலங்கை ஜனநாயகத்தில் நம்புவதற்கு வேறென்ன உண்டு?

மகிந்தா மானுடன் நேயன் என்றால்,நான் இவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களது பிணத்தில் அரசியல் செய்து, அண்டிப் பிழைப்பவனே.இல்லை, "பொன்சேகா தமிழருக்குத் தீர்வு தருபவன்" என்றால், இலங்கைப் பாசிச இராணுவத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறையையும்-பாசிச் சேட்டையையும் நியாயப்படுத்திப் பிழைக்கும் மனிதவிரோதி என்பதே சரியானதாகும்!




"இந்தக் கணம்வரை எதுவும் என்னிடமில்லை,
எனது சிந்தனையைத்தவிர தங்குதடையற்ற
என் ஆன்மாவை உலகத்துள் ஊற்ற முனைகிறேன்!
ஒவ்வொரு நாளியும்,கண்ணிமைக்கும் கணமும்
மகிழ்ந்திருப்பதென்பது இடையுறாத போராக..."

Fuer alle:

"KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE"-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக...


"....."


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.01.2010

P/S:
இக்கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட நூல்கள்,தளங்கள்:

http://www.uni-kassel.de/fb5/frieden/regionen/Bangladesch/indien2.html


http://www.imi-online.de/


Neues Deutschland, 14. Januar 2010


http://www.imi-online.de/download/EU-Studien-30-2007.pdf



# Vgl. Hantke, Martin (2008): »Alles wieder offen «. Georgienkrieg und imperiale Geopolitik. IMI-Studie 2008-10. Tübingen.

# Vgl. Wagner, Jürgen (2009): Gas-OPEC und afrikanische Nabucco.

http:// www.imi-online. de/download/JW-Gas-OPEC-Nabucco.pdf


# Kreimeier, Nils & Wetzel, Hubert (2007): EU und USA zittern vor neuer »Opec«, Financial Times Deutschland, 06.03.2007.

# U.S. Senate Committee on Foreign Relations, Senator Richard G. Lugar Opening Statement for Hearing on Oil, Oligarchs and Opportunity: Energy from Central Asia to Europe, 12.06.2008.

http://www.bmu.de/atomenergie_sicherheit/dossiers/doc/2708.php


Ausstieg aus dem Atomausstieg?:

http://www.greenpeace.at/406.html


http://www.bundestag.de/dokumente/textarchiv/2009/23866757_kw12_atomausstieg/index.html


http://mitglied.multimania.de/jenswahnfried/atomausstieg.pdf

Freitag, Januar 01, 2010

எல்லோர் கோசமும் விடுதலை புரட்சி

பொல்லா வினை என


புதுப் புது ஆண்டுகள் தோன்றியே என்னே
புகழுடலெனப் போனோர் என்னே
என்னோர் என்றும் இயம்பும் குரலெனப்
பின்னே செல்லும் வாழிளம் உயிரோ

மெல்லப் போவதும் மேடுகள் விரிவதும்
எல்லாந் தொலையாத ஏதோ ஒன்றாய்
இரந்தது மண்ணும் அதுகொண்ட உயிரும்
ஞாயிறு ஏறிய நடுப் பகற் கனவு

நமக்கென் றொரு நாடுகாண் நோக்கு
வானமும் பொழியா வயலும் விளையா
வன்னியாய்க் கொண்ட மக்களும் முட்பதர்
மேவிய திசை மெல்லச் சாயும்



சொல்லுவார் சொல் கேட்பது குடி எனக்
கொண்டோர் கூவிய இந்தக் கடுப்பாண்டு
கோர முகந் தொலைக்க இனி வரும் பொழுது
யுத்தம் என முனியாது புயல் என மடியாது

குடிகளே கோல் கொண்டொரு முறை செய்யக்
கடன் பழி காணாத காட்சி என் மாட்சி
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கும்
இனியவள் முலை சுரக்கும் வெண் மனம்

இறையுக்கும் பொருந்த உழைப்பவர் எவர்?
எல்லோர் கோசமும் விடுதலை புரட்சி
பொல்லா வினை எனப் பொங்கும் சிறந்தோர்
வதைகாண் குடிகள் வன்னிகொள் சிறை

வந்து தோன்றி அவர் விலங்கு களைந்து
உயிர்கொண்டு ஊர ஒப்புவார் எனவும்
ஊன் வருத்த என்று இனி ஒரு தவமும்
உப்பு இல்லா இவர்க்கு வேண்டவே வேண்டாம்!





காணார் கேளார் கால் கை முறிபட்டோர்
கணவன் துணைவி குழவியெனப் பட்டோர்
இழந்தவை அனைத்தும் வலிகொள்
வன்னி மக்கள் அவர் வழி உயிர்கொண்டு துய்க்க

எல்லாம் நிறைக என்று இசைத்து
உடன் ஊட்டி உண்டு ஒழி மிச்சில் உண்டு
உறங்க எனக்கு எனக் காலம் வரும்
எவருரைப்பை இனி கேட்க ஏது காலம்?

வன்னி மாள்வோர் யாவரும் இன்மையின்
"மன் உயிர் ஓம்பும் இம் மா பெரும் செயலும்
எனக்கு எட்டாக் கரு வினையாக வரண்ட தவத்துள்
வழி வழி உழந்தேன் சுமந்த என் கோலால்!" என்றென வருந்தி

இனிவந்த ஆண்டில் ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகா
ஒரு வினை செய்ய உய்த மானுடர் தவமொடு சாலப்
பயன் கொள் அகமும் பார்கொள் ஞானமும்
நாடிய யானும் யாவும் ஆக வருக புது-ஆண்டு,வருக!


ப.வி.ஸ்ரீரங்கன்

01.01.2010

Mittwoch, Dezember 23, 2009

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்...

முன்கூட்டிய ஜனாதிபதித் தேர்தல்:அரசு இனவழிப்புக்
குற்றத்திலிருந்து தப்பும் முயற்சி!

"சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசினது யுத்தக்
குற்றத்தை மறைப்பதற்கெடுக்கும் முயற்சியில் தமிழ்த் தலைமைகளையே தமது
நோக்கிற்கிணங்கச் செயற்பட வைப்பதற்கும்,அவர்கள் வாய்மூலமே ஆளும் மகிந்தாவினது அரசை
மெச்சவும் ஒரு தேர்தல் நாடகம்.அதுள்,இரையாக்கப்படும் தமிழ்பேசும் மக்களது நீதியான
உரிமைகள் அந்த மக்களுக்கு எட்டாக் கனியாகிறது!"

 
ல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாக விரிகிறது.
 
அந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன இன்று!
 
இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடாத்த முற்படுகிறது. இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டுத் தப்ப முனைகிறது சிங்கள ஆளும் வர்க்கம்.
 
இவை குறித்தெல்லாம் எப்போதாவது நாம் புரிந்துகொண்டோமா?ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் கட்டும் தமிழ் தலைமைகள் இதைப் புரிந்துகொண்டார்களா?அல்லது, மூன்றாம் நபருக்கு ஓட்டுப்போட அறைகூவலிடும் புதிய ஜனநாயகக்கட்சி இவற்றைப் புரிந்துகொண்டதா?
 

   
சரி இவற்றுக்கும் கீழாக,நாம் கட்சி கட்டுவதும்-இயக்கம் தொடங்குவதும் குறித்து யுத்தத்துள் பாதிக்கப்பட்ட மக்களது தெரிவு எப்படியென்பது பரவலாக விளங்கிக்கொள்ளப்படுகிறதா?இதைப் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் புரிந்துதாம் ஊடகங்களில் கருத்துக்கட்டுகிறார்களா?இன்றைய நெருக்கடிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்கள் என்ன தெரிவோடிருக்கின்றனர்?
 
 
புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள்மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இதைத் தேசம் நெற்றும்,ஜெயபாலனும் மிகக் கபடத்தனமாகச் செய்து முடிப்பதில் பலவகைக் கூட்டுக்களைப் பின் தொடருவதும் நாம் காணத்தக்க அரசியல்.
 
இதனது மிக உயர்ந்த போக்கு, இலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலையிட்டு நாம் அனுபவிப்பதுதாம்.
 
இலங்கை அரசினது கடந்த வன்னியுத்தம், தமிழின அழிப்பைச் செய்த கையோடு மீளக் கட்டியமைக்கும் படுமோசமான கட்சி, அரசியலில் மிகக் கேவலமாகத் திசைவழிகளை அமைக்கும் தமிழ்க் கட்சிகள்-முன்னாள் ஆயுதக் குழுக்கள், இந்த வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களையும் மறந்து, அரசியல் செய்யும் இந்தத் தருணத்தில்தாம் நாம் இப்போக்குகள் குறித்துக் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
 
எதிர்ப்பு அரசியல் நிலையோ இன்று, ஆளும் வர்க்ககங்களுக்கிசைவாகப் பிற்போக்குச் சக்திகளால் முன்னெடுக்கப்படுகிறது.மக்களை மிக இலகுவாகத் தமது வலுக்கரங்கள்மூலம் வரும் தேர்தலில் மகிந்தாவுக்கு ஓட்டுப்போட முயற்சிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளது சுயதேவை மக்களது அழிவின்மூலம் நிறைவேற்றப்படுகிறது.

 
இவற்றைப் பல தளங்கிளில் புரிந்தாகவேண்டும்:
 
அ: அழிவு யுத்தத்தினூடாகத் தமிழ்பேசும் மக்களது சமூக சீவியம் நிர்மூலமாகியுள்ளது,
 
ஆ: அவர்களது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டது,
 
இ: தமிழ்ச் சமுதாயத்துள் குடிசார் அமைப்புகள் இல்லாதாக்கப்பட்டது,
 
ஈ: மக்களது ஆளுமையை அரை இராணுவ ஆட்சியின்வழி செல்லாக் காசாக்கியது,
 
உ: நேரடி ஜனநாயகத் தன்மையோ அன்றி மறைமுகமான ஜனநாயகத்தன்மையையோ இலங்கையின் இராணுவ-கட்சியாதிக்க-குடும்ப அரசியல் விட்டுவைக்காதது,
 
ஊ: தமிழ்பேசும் மக்களைத் திறந்தவெளிச் சிறைச் சாலையிலும்,மூடிய சட்டரீதியான சிறைச் சாலைகளிலும் அடைத்துவைத்துக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவது,
 
எ: தமிழ்பேசும் ஒரே காணத்தால் பெண்கள் பாலியில் ரீதாயாகச் சுரண்டப்பட்டு, நிர்பந்தமாக இராணுவத்தின்முன் தமது சுயதேர்வை,மரியாதையை இழந்து நிற்பது,
 
ஏ: தமிழ்பேசும் சிறார்கள் உளரீதியாக ஒடுக்கப்பட்டு,அவர்களது சுய ஆளுமையை உடைத்து,சமூகப் பொறுப்பற்று வாழ்வதற்கேற்ற வகைகளில் பண்பாட்டுச் சிதைவை ஏற்படுத்துவது,
 
ஐ: யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது குடும்ப வாழ்வுமுறைகளில் ஏற்படுத்தப்பட்ட வெடிப்புத் தொடர்ந்து நிலவுவதற்கேற்ற முறைமைகளில் அவர்களது பூர்வீக வாழ்விடங்களை மறுத்து, முட்கம்பி முகாங்களென்ற"கொன்சன்ரேஷன் காம்புகளில்"வாழ அனுமதிப்பது.அதைச் சட்டரீதியாக நியாயப்படுத்துவது.
 
இத்தகைய நிலைமைகளைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் இலங்கை அரசானது, தேர்தல்மூலம் இவற்றைத் தீர்த்துவிடுவதாகப் பரப்புரை செய்கிறது.இது,தேர்தல் கோசமாக மாறியுள்ளபோது இதைவிடக்கொடுமை உலகில் நடக்க முடியாது.
 
தமிழ்பேசும் மக்களை ஒடுக்கி வந்த சிங்களப் பேரினவாதமானது இவ்வளவு கொடுமைக்கும் பொறுப்பாக இருக்கும்போது,இத்தகைய செயல்களுக்காககத் தண்டிக்கப்படவேண்டி நிலையைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற வகையில் மகிந்தாவை மக்கள் நலக் காவலாகக்காட்டத் தமிழ்க் கட்சிகளைப் பயன்படுத்துகிறது சிங்கள-உலக ஆளும் வர்க்கங்கள்!
 
அதன் தெரிவிலேதாம் இத்தகைய தேர்தல் வியூகத்தின்மூலம் உலகை ஏமாற்றுகிறது.இத்தகைய ஏமாற்று வேலைகளுக்காகத் தமிழ்க்கட்சிகளைப் பயன்படுத்துவதனால் இலங்கை அரசு யுத்தக்கிரிமினற் குற்றத்தை நீர்த்துப்போக வைக்கிறது.இதற்கு உடந்தையாக அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் தமது வர்க்க நலனின் அடிப்படையில் ஒத்தூதுகின்றன.
 
இந்நிலையில், இவர்களின் முன்னே கண்ணீர்விட்டுத் தமது நிலையை விளக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது பரிதாப நிலை!
 
தொழில் வளர்ச்சியடைந்த தேசங்களினது இன்றைய தேசிய இனங்களின் எதிர்காலக் கனவு, தத்தம் தேசியத்தின் முன்பாய்ச்சலையும்,முன்னணி வகிக்கும் உலகப் பொருளாதார வலுவையும் கோரிக் கொள்ளும்போது,அங்கே நிலைத்திருக்கும் அரசியல் மற்றைய பலவீனமான சிறுபான்மை இனங்களை குதறுவதிலேலே குறியாக இருக்கிறது.தமக்குப் போட்டியற்ற இனக்குழுக்களாக்கிவிடத் துடிக்கும்"உலகச் சமூக ஒழுங்கில்"உயிர் வாழும் மானுட உரிமையைக்கூட தமது பொருளாதாரக் கனவுகளின் சாத்தியப்பாட்டோடுதாம் அனுமதிக்கும் வர்க்க நிலைமைகளில் இவர்கள்"ஜனநாயகம்"பேசுகிறார்கள்.அல்லது, அதற்கிசைவான விளக்கத்தை முன் வைக்கிறார்கள்.இன்றைய சிங்களப் பேரினவாதமும் இதற்கு விதிவிலக்காகச் செயற்படவில்லை.
 
தமிழர்களைத் தனித்தேசப் போராட்டத்துக்குத் தள்ளிய சிங்கள மையவாதத்தைக் கேள்விக்குட்படுத்தாத இந்தத் தமிழர் "ஜனநாயகவாதிகள்" இதுவரை தொடர்ந்த போராட்ட வழிமுறைகளை விவாதிக்கத் திரணியற்றவர்கள்.இது சிங்கள இனவெறி அரசினது எந்த வரலாற்றுப் பயங்கரங்களையும் சிறுபிள்ளைத் தனமாக விவாதிக்க முனையும் இன்றைய காலத்தில், நாம் தொடர்ந்தும் அடிமைப்படும் கருத்தியல் மற்றும் அரச வன்முறை ஜந்திரங்களுக்கும் ஒத்திசைவாக இருக்கும் அரசியல் சித்து விளையாட்டாகிறது இது.இதனால் இலாபம் அடையும் இயக்க-கட்சி அரசியல், மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழலில்,மக்களின் உண்மையான வாழ்வியல் தேவைகளைக் தமது எதிர்கால இருப்புக்குக் கோசமாக்கிறது.இதுவே இன்றைய தமிழர்களின் தலைவிதி.
 

 
டக்ளஸ் போன்ற தமிழ்க் கட்சி அரசியல் தலைவர்கள், தம்மை மக்களது நலனுக்காக அர்ப்பணித்ததாகவும்,அவர்களது வாழ்வாதாரத்தைச் செப்பனிடுவதாகவும் தேர்தலை முன்வைத்துப் பரப்புரை செய்கிறார்கள்.தமது பங்களிப்புகளைப் பட்டியல்போட்டு மகிந்தாவினது பரோபகாரமாகவும் சொல்லுகிறார்கள்.இஃது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனமில்லையா?
 
சிங்களப் பேரினவாத யுத்தக் கிரிமினல் அரசு,தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இனவழிப்பு யுத்தத்தால் பலிகொள்ளப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின்முன் குற்றவாளியாக நிற்பதும்,அது தமிழர்களுக்கு ஏற்படுத்திய கொடூரத்துக்குத் தண்டிகப்படவேண்டியதும் இப்போது செயலிழக்க வைக்கப்படுகிறது.மக்களது வாழ்வைச் செப்பனிடுவதும்,அவர்களுக்குக் காலகாலத்துக்குமான நஷ்ட ஈடுவழங்குவதும் இலங்கையை ஆளும் அரசுகளுக்கான தார்மீகக் கடமையாகிறது.இது, தமிழ்ச் சமுதாயத்துக்குத் தகுந்த அரசியல் தீர்வை முன்வைத்த பின்புங்கூட அவர்களுக்கான சிறப்புச் சலுகைகளை(வரிவிலக்குத் தொடங்கி யுத்தத்தால் கொல்லப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நஷ்ட ஈடு வழங்குதல்)வழங்கியாகவேண்டும்.இஃது, ஜேர்மனியில்(ஜோமனியத் தேசியவாதம் சிந்தி-ரோமா மக்களை முதலாம்-இராண்டாம் உலக யுத்தத்தில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்தது.) சிந்தி ரோமா மக்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது.இலங்கை அரசு சட்ட ரீதியாகப் பதிலுரைக்க வேண்டிய கடமைகளிலிருந்து தப்பவைக்கப்படுகிறது.இதைச் செய்பவர்கள் இன்றைய தமிழ்த் தலைமைகள் என்பது எவ்வளவு கொடுமையானது!
 
தமிழ்பேசும் மக்களுக்கு அரசு செய்வேண்டிய நிர்மானப் பணிகளை, தானே செய்து முடிப்பதாகச் சொல்லி விளம்பரம் தேடும் டக்ளஸ் போன்றவர்களே இன்று இலங்கையின் யுத்தக் குற்றத்தை மறைத்து, மகிந்தாவுக்காக ஓட்டுக் கேட்கிறார்கள்.இது, சாபக்கேடா இல்லை வர்க்கம் வர்க்கத்தோடுதாம் சேருமென்ற சமூகப் புரிதலா?
 
எமது மக்களின் அமைதி வாழ்வுக்கும்,அடிப்படை வாழ்வுரிமைகளுக்கும் எம் மக்களால் பரிந்துரைக்கப்படும் நியாயமான வாழ்வியல் தேவையிலிருந்து- கோரிக்கைகளிலிருந்து, இலங்கைத் தேசம் அரசியல் தீர்வுக்கான முன் பரிந்துரைகளை எமது மக்களுக்கு முன்வைத்தாக வேண்டும்.இதுவே, எமது மக்கள் இலங்கைத் தேசத்துக்குள் வாழும் மற்றைய இனங்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான பாரிய முன் நிபந்தனைகளை இலங்கையிடம் கையளிப்பதாகவும் கொள்ளத்தக்கது. இதைச் செய்ய வக்கற்ற இந்தத் திடீர் அரசியல் கூட்டுக்கள்-தலைமைகள் நமது மக்களின் எந்த நியாயமான உரிமைகளையும் நிஷத்தில் முன்னெடுக்க முடியாது.
 
இவர்கள் மறுதலையாக, இலங்கைப் பேரினவாத அரசை யுத்தக் குற்றத்திலிருந்து தப்புவிக்க முனைகிறார்கள்.இதைத் திட்டமிட்டுச் செய்யும் இந்தியச் சாணாக்கியமே நேரத்துக்கு முந்திய ஜனாதிபதித் தேர்தலூடாக அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் மகிந்தாவுக்கும்,பொன்சேகாவுக்கும் பின்னால் செல்லவிட்டு,அவர்கள்மூலமே யுத்தக் கிரிமனல்களை மக்கள் தலைவர்களாகக்காட்டி, இலங்கையின் இனவழிப்பை நியாயப்படுத்தி யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட தமிழினத்தை ஏமாற்றி வருகிறார்கள்.இதை எந்த மனிதர்களும்-அரசும்,மனிதவுரிமை அமைப்புகளும் பாராமுகமாக இருக்கின்றனர்-இருக்கின்றன!
 
மே.18 இயக்கங்கட்ட அவசரப்படுபவர்கள், இலங்கையின் யுத்தக் கிரிமினல்போடும் சதி அரசியலை எங்ஙனமும் தொடரவே உலக உளவு நிறுவனங்களுடனிணைந்து காரியமாற்றுகின்றனர்.இத்தகைய தொடர் இயக்கக் கட்டுமானத்தினூடாக மக்களது உண்மையான நீதி மறைக்கப்பட்டு,அவர்கள் தொடர்ந்தும் ஆதிக்கச் சக்திகளிடம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்.இதற்காகவேனும் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சென்றாக வேண்டும்.அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைப்பதற்கான வழி முறைகளை நாம் தொடர்ந்தாற்றவேண்டியிருக்கிறது.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
23.12.2009

Montag, Dezember 21, 2009

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...

தேவதாசன்,டன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி...
 
-"காண்பதிலுள்ள காணாததைக் காண்போம்"
 
லங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் தலைவர் தேவதாசன் இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டன் தொலைக்காட்சிக்கு ஒரு நேர்முகப் பேட்டியளித்திருக்கிறார்.நாம் அதைப் பார்க்கக் கூடியதாக இன்று 20.12.09 ஒளிபரப்பினார்கள்.இப் பேட்டியில், தேவதாசனின் கருத்துக்களோடு-பல விதத்திலும்-தாழ்தப்பட்ட மக்கள்சார் நலத்துடன்-நாம் ஒத்துப்போகும் கோரிக்கைகளையும்,கடந்தகாலப் புறக்கணிப்புகளையும் குறித்துத் தேவதாசன் உரையாடினார்.அதன் தர்க்கத்தில் முரண்பட வேண்டுமென்றில்லை.இலங்கையில் ,அதுவும் யாழ்ப்பாணச் சாதிய அமைப்பு முறையில் ஏற்படும் வடு அவரது கருத்தின் நியாயத்தைக் குறைக்கவில்லை.அது, எம்மால் பல தளத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது.
 
பொதுவாகச் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராகவும்,இன்று தாழ்த்தப்பட்ட அந்த மக்களது சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் தம்மைத் தகவமைத்துப் போராடுவது அவசியமே.அதற்காக அவர்கள் ஒரு அடையாளத்தை"தலித்து"என்று ஏற்றுக்கொண்டு,அதன்வழி இலங்கையில்-யாழ்ப்பாண மாவட்டத்தில் சாதியம் துப்பாக்கி நிழலில் மறைக்கப்பட்டதென்றும் ,இப்போது சாதியம் அதன் குணத்தை மேலும் வலுவாக்கி வருவாதகாவும் ஏற்றுப் போராடுகிறதற்கான தெரிவுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள்சார்பாக சபைகள்,கழகங்கள்,முன்னணிகள் அமைக்கிறார்கள்.அது நியாயமும்கூட.
 
யாழ்ப்பாணியச் சமுதாயத்தின் சாதியவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கு"தலித்து"எனும் சாதி ரீதியாக ஓடுக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கொண்டு போராட வேண்டுமென்று தீர்மானித்துள்ள தேவதாசன், இன்றைய பேட்டியில் தலித்துவ மக்களுக்கான குரலைத் தாண்டியும் பொதுவான அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கிய தமிழ் இனத்தின் பிரச்சனைக்கும் தீர்வொன்றைச் சொன்னார்.அவரது அக் கருத்தின் மூலமாக எனக்குள் கேள்விகள் எழுகிறது.அவை எனது நியாயத்தில் தேவதாசன் கொண்டிருக்கும் அரசியலின் போக்குகளை மதிப்பீடு செய்வதற்கு முனைகிறது.
 
தமிழ்நாட்டின் தலித்துவ முன்னணிகள்-கட்சிகள் எங்ஙனம் ஒடுக்கு முறையாளர்களோடு தோழமைகொண்டு,அவர்களும் அதன் உறுப்புகளானார்கள் என்பதற்கு, நமக்கு விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் நல்ல உதாரணம்.அவ் வகையுள், தேவதாசன் தலைமையில் கட்டப்பட்ட தலித் சமூக மேம்பாட்டு முன்னணிக்கும் ஒடுக்குமுறையாளர்களோடு சமரசம் நிலவுகிறதென்று இப்பேட்டியின் வழி அவர் சொல்லிச் செல்கிறார்.
 
சாதிய ஒடுக்குமுறையென்பதை உடைத்து, அம் மக்களுக்குச் சம அந்தஸ்த்தைப் பெறுவதற்குத் தலித்து எனும் அடையாளமும்,சாதிகள் குறித்த அடையாளமும், இப்போதும் அவருக்கு அவசியப்படும்போது தேவதாசன் அதைத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனையில் பொருத்தத் தவறிவிடுகிறார்(தமிழ்த் தேசிய இனம் என்ற ஒன்றில்லையோ?).
 
இலங்கையில், தமிழ்பேசும் மக்களது பிரச்சனைகளுக்குத் தமிழ்பேசும் மக்கள் "இலங்கையர்" என்ற பதத்தின்மூலம் நாட்டை முன்னேற்றும்படி அறைகூவலிடுகிறார்.நாட்டைத்தான் சொல்கிறார்(அந்த நாட்டுக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் குறித்து "இலங்கையர்கள்" என்றவுடன் அவர்களது பிரச்சனை தீர்கிறது).
 
நல்லது!
 
இதன்வழி,சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறை இல்லை என்று சொல்கிறீர்களென நாம் எடுப்பதற்காக உங்களது வாதத்தில் "காணப்படுவதற்குள் காணாததை"த் தேடிப் பார்ப்போம்.
 
இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையை ஏற்று,அவருக்கு நன்றி சொலவும் உங்களால் முடிகிறது.இந்த நன்றி, புலிப் பாசிசத்தை அழித்ததென்பதுற்குவெனவும் சொன்னீர்கள்.அதுவும் பறுவாயில்லை.நீங்கள் ஜனநாயத்தின்மீதுகொண்டிருக்கும் பற்ருறுதியின்பொருட்டு இது சாத்தியமே.
 
ஆனால்,இலங்கையினது ஆளும் வர்க்கத்தால் காலாகாலமாக ஒடுக்கப்படும் இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தம்மைத் தமிழர்களாகவும்,முஸ்லீம்களாகவும்,மலையகத்தவர்களாகவும் அடையாளப்படுத்துவதை மறுத்து, இலங்கையர்களெனச் சொல்வது எங்ஙனம் சாத்தியமாகிறது?
 
இலங்கை அரசினது சிங்கள இனவாமும் அதன் இனவொடுக்குமுறையும் சட்டரீதியாக நியாயப்படுத்தப்பட்டு, இலங்கையில் தமிழ்பேசும் மக்களை அது வேட்டையாடி வரும்போது,இந்த இனவொடுக்குமுறைக்கும் சாதியவொடுக்குமுறைக்கும் நீங்கள் கருத்துக்கட்டும் தளமே உங்களைச் சந்தர்ப்பவாதியாகவும்,மகிந்தாவுக்கு வக்கலாத்துவேண்டிப் பிழைக்கும், பிழைப்பு வாதியாகவும் நமக்குள் உங்களை அறிமுகஞ் செய்கிறது.
 
இலங்கைப் பேரினவாத அரசு, தமிழ்பேசும் மக்களை இனரீதியாக ஒடுக்கியபோது,அது ஒருபோதும் சாதி பார்த்துக் குண்டுவீசவில்லை,எறிகணைவீசவில்லை.பொதுவாகத்"தமிழினம்"எனும் அடையாளத்தின் வழி அது தனக்கான நியாய யுத்தத்தைச் செய்தது.இப்போதும், செய்து வருகிறது.இதை நீட்டி முடக்கத்தேவையில்லை.வன்னி நிலைமையும்,தமிழ்சமுதாயத்தின் குடிசார்நிலைமையும் இதைச் சொல்லும்.என்றபோதும், நீங்கள் "தமிழர்கள்-இலங்கைத் தமிழர்கள்"என்பதைவிட"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்றும், ஒற்றுமையுடன் நாட்டைக்கட்டியெழுப்ப வேண்டுமென்கிறீர்கள்.இங்கு, நாடு என்பதற்குள் அனைத்துப் பிரச்சனையும் முடிந்துவிட்டாதாக அர்த்தமாகிறது(வர்க்கப் போராட்டுத்துக்குள் சாதியப் போராட்டமும் உள்வாங்கப்பட்டு, நடாத்தப்படுவது நியாயமென மரபு மார்க்சியர்கள் சொல்லும்போது உங்களால் ஏற்க முடியாது "தலித்துவ"அடையாளத்துக்கு உங்களை இழுத்துச் செல்கிறது.இது, கவனத்துக்குரியது).
 
இதையே தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொருத்தி"ஒன்றுபட்டு" தமிழ்ச் சமுதாயத்தின் சுயநிர்ணயவுரிமையை, சிங்களப் பேரினவாதம் ஏற்கச் செய்வதற்கான அரசியல் போராட்டத்தைச் செய்ய மறுக்கிறீர்கள்.அங்கே,சாதியம் என்பது ஒருபோதும் ஒன்றுபட்டு அகற்றமுடியாது,அது மறைமுகமாக இன்னும் ஒடுக்குகிறது,புலியினது அழிவில் நேரடியாகவும் ஒடுக்குகிறதென்கிறீர்கள்.இது சரி.
 
ஆனால்"நாம் எல்லோரும் இலங்கையர்கள்"என்று "தமிழ் அடையாளம்" மறுத்துச் செயற்படச் சொல்லும்போது,இலங்கை அரசு மறைமுகமாகவோ அன்றி நேரடியாகவோ இனவொடுக்குமுறையைச் செய்யவில்லையென இதன்மூலம் சொல்கிறீர்கள்.அதனால்தாம் மகிந்தாவே ஆட்சிக்கு மீள வரவேண்டுமென அவருக்காகப் பிரச்சாரஞ் செய்கிறீர்கள்.
 
 
தலித்துவப் "போராளி" சுகன் பாணியில் உங்களைக் கட்டுடைத்தால்:
 
1: தலித்துவ அடையாளம் அவசியம்:தமிழ்ச் சமுதாயத்துள் சாதியவொடுக்குமுறை நிலவுகிறது. எனவே, சாதியத்தை முறியடிக்க,
 
2: தமிழர்கள் என்ற அடையாளம் தேவையில்லை: எனவே, தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை என்கிறீர்கள்,
 
3: மகிந்தா இன்னுமொரு முறை வருவது நல்லது:அங்ஙனமென்றால்,இதுவரை மகிந்தா செய்த அரசியல் நியாயமானது,வன்னியுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த தமிழ்பேசும் மக்கள் மகிந்தாவால் கொல்லப்படவில்லை என்றாகிறது,
 
4: மகிந்தாவை அதாரிப்பதன் உங்கள் தெரிவில்: மகிந்தா தலைமையிலான இலங்கை அரசு,இதுவரையான தமிழ்ப் பிரதேசங்களை முற்றுகையிட்டு,அனைத்துக் குடிசார்வுரிமைகளையும் சிதைத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் சமூக சீவியத்தையே இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைத்தபடி, ஒரு இனத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதை உளவதைக்குள் தள்ளுவதும் தலித்துவ விடுதலைக்கு அவசியம் என்றாகிறது.
 
5: இத்தகைய அரசு,புலிகளை மட்டுமேதாம் அழித்தது.மக்களையோ அன்றி அவர்களது வாழ்வாதாரங்களையே அழிக்கவில்லை என்பதும் மகிந்தாவுக்குச் சொல்லும் நன்றியுள் அடங்குகிறது.
 
 
இப்படி "அற்புதமான" கருத்துக்களை நீங்கள் சொல்வதுவரை "உங்கள் தலித்துவ"ச் சமூக மேம்பாட்டு முன்னணியும் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்களுக்குக் குழி தோண்ட வந்து நிற்கிறது.
 
...ம்... நடாத்துங்கோ! நாலு வார்த்தை நாம் பேசுவதற்குகந்த சூழல் இப்போதிருக்கிறதென்ற தொனியுள் மகிந்தா மாமாவுக்குக் குடை பிடித்து...
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
21.12.2009

Mittwoch, Dezember 16, 2009

தீப்பொறிக் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான...

 
இரவி,"தீப்பொறி"க் குழு-தமிழீழக் கட்சிக்காரர்கள் குறித்தான எனது மதிப்பீடுகள்மீது, உங்கள் எதிர்வினையை இவ்மடலூடாக வைத்திருப்பதைக் கவனதில் கொண்டேன்.
 
தங்கள் எதிர்வினையின்-நியாயத்தன்மைமீதான பெருமதிப்பில் சில கருத்துக்களை முன்வைப்பது அவசியம்-அதை, நீங்களும் எதிர்பார்க்கிறீர்கள்-நன்று!
 
"இளங்கோவின் பாத்திரத்தைத் தவிர்த்து "தீப்பொறியின்"சிதைவை அல்லது தடம் மாறலை(...) ஆய்வாக்க முடியும் என நான் கருதவில்லை"என்றுரைக்கிறீர்கள்.
 
இது, எந்த வகையிலும் இளங்கோவெனும் தனிநபர் சார்ந்த பிரச்சனையாகக் குறுக்கும்போது மட்டுமே சாத்தியம்.மற்றும்படி, பொதுவான-பரந்துபட்ட மக்களது அரசியல் பாத்திரத்தின்மீது அதிர்வுகளைச் செய்யப் புறப்பட்ட பொதுவியக்கச் சூழலில்-அரசியல் என்பது பொதுப்படையான தாக்கத்தைச் செய்வது.அது,ஒரு சில நபர்களுக்கிடையிலானதாகக் குறுக்குவது சாத்தியமில்லை.ஏனெனில்,இதன் இயக்கப்பாடு இன்றுவரை வியூகமாக விரிவதால் அஃது, ஆய்வுக்குரியது-மூலம் அறியப்பட வேண்டியது.இது, நிற்க.
 
அடுத்து,காந்தன்மீதான எனது மதிப்பீடுசார்ந்து நீங்கள் வைத்தகருத்தானது ஆதாரத்தைக் கோரிக் கொள்வதற்கான தேவையைச் சொல்கிறது.அதாவது,நீங்கள் சுட்டிய "காந்தனை ஒரு உளவாளி எனவும் திட்டமிட்டு முற்போக்குச் சக்திகளை சிதைக்க வந்தவர் எனவும் நீஙகள்குறிப்பிடுவது எவ்வாறென முன்வையுங்கள்" என்பது.
 
இரவி,இங்கே உங்களது கேள்வியின்படி இது ஏதோ சேறடிப்பாக அல்லது பழிசுமத்துவதாக எடுப்பதைவிட,காந்தன் எனும் ரகுமான் ஜான் சார்ந்த கடந்தகால அரசியல்மீதான-அவர் கொண்டியக்கிய கட்சி-பத்திரிகை மீதான பார்வையாகவும்,கூடவே,காந்தனை தனிப்பட்ட ரீதியாகவன்றி பொது அரசியல் சக்தியாக இனங்கண்டு முன்வைக்கப்படும் விமர்சனமாக முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.
 
ரகுமான்ஜான்-இளங்கோ முரண்பாடென்பது, நிஷமான அரசியல் பொதுச் சூழலுக்குத் தெரியாத அல்லது மறைக்கப்பட்ட நிலையில்(மகா உத்தமன் குடியினால் செத்தது என்பதுபோல(...)) அது எனக்கு அவசியமற்றது.இளங்கோ பின்னாளிலும் அதற்கு முன்னாலிலும்(அதாவது தமிழீழக்கட்சிக்கு முன்னும்)புலிக்கு உளவு பார்த்தென்பதையும், இணைத்துக் கொள்ளவும்.
 
இங்கே,ரகுமான் ஜான்-இளங்கோ உறவு எதுவரை நீடித்ததென்பது எனக்கு முன்னால் உள்ள அரசியலுக்கு அவசியம் இல்லை.அது,பரந்துபட்ட மக்களது நலனை நோக்கிச் செல்லும்போது திறந்த விவாதம்-சுயவிமர்சனம் மற்றும் உடைவுகள்-சந்தர்ப்பவாதம் குறித்தான அனைத்துப் பரிமாணங்களையும் வெளிப்படையாகப் பேசப்படச் சந்தர்பங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.இது, எப்போது-எப்படிச் செய்யப்பட்டதென்ற உங்கள் சாட்சியத்தின் பின்னே,காந்தன் குறித்தான எனது மதிப்பீட்டிற்கான அனைத்து ஆதாரங்களையும் நான் பகிரங்கமாக முன் வைக்கின்றேன்.கூடவே,நான் வேண்டிக்கொள்வது,இரகுமான் ஜான் மீதான விமர்சனத்தை-மதிப்பீட்டை-"பழி சுமத்தலை-சேறடிப்பை"நான் பகிரங்கமாகச் சொல்லியுள்ளதால், அதை மறுத்துப் பேச வேண்டியவர் ரகுமான் ஜான் என்பது என்வரை நியாயமாகப்படுகிறது.
 
இங்கே,இளங்கோவின் பாத்திரத்தையும்,ஜானினது பாத்திரத்தையும் ஒன்றாக்குவதாகச் சொல்வதன்மூலம் ஜானின்மீது எந்தத் தவறுமில்லை என்பது உங்கள் தரப்பு வாதம்.இது பொதுத்தளத்தில் உண்மையானதென நிரூபிப்பது அவரது கடமையாகிறது.ஏனெனில்,இப்போது மக்களுக்காக "மே 18 இயக்கத்தோடு"போராட அறைகூவல் இடுபவர் அவர்.இஃது,அவரது கடமை.
 
கடந்த காலத்தின் அவரது அரசியல் நடாத்தையின்மீதான நமது சந்தேகம்-மதிப்பீடு தவறென்பதைக் குறித்துப் பேசுவதற்கு அவருக்குத்தான் அவசியமானது.எனக்கு, அவருக்காகத் தீக் குளிக்க அவசியம் இல்லை.இதன் ஆழ்ந்த வேண்டுதல்,கடந்த காலத்தில் அவர் ஆரம்பித்த அரசியலில் சூழ்ச்சிகள்-சூதுகள் இருப்பதென்பது உண்மையானதென பொது அபிப்பிராயம் மட்டுமல்ல பலரிடம் அதற்கான காரணகாரிய பொருத்தப்பாடுகள் இருக்கிறது.அது,ஜானுக்கும் நன்றாகத் தெரியும்.இதன் பொருத்தப்பாட்டின் நிமித்தம் ஆதாரம் என்பதும்-அவரை "எங்ஙனம் புலியினது உளவாளியெனக் கூறமுடியும்?" என்பதும் அவசியமற்றது.
 
இத்தகைய கேள்விகளது அடிப்படை, இனம் காணுதல் எனும் ஊக்கத்தின் விளைபொருளென நான் அறிவேன்.அது,அனைவருக்குமான பொதுத் தளத்தில் பகிரங்கமாகப் பேசப்படும் ஒரு சூழலில் மேலும் சாத்தியப்படலாம்-இப்போதைக்குச் சாத்தியமில்லை!
 
மேலும்,"புலிகளின் போராட்டத்தில் தமிழ்பேசும் பரந்துபட்ட மக்களது நலன்(இனவொடுக்குமுறைக்கு எதிரான யுத்தம்)பின்னிப் பிணைந்திருந்தது" என்பதும்,"புலிகள் தேசியச் சக்திகள்,புலிகளது போராளிகள் தமிழ்த் தேசத்தின் தேசிய இராணுவம்" என்பதும் வௌ;வேறானது.தமிழீழக்கட்சி இந்த இரண்டாவது வகைப்படுத்தலுக்குள்தாம் புலிக்கான இருத்தலுக்கும்,தமிழ் மக்கள்மீதான புலியின் பாசிச ஆதிக்கத்துமான உந்துதல்-சித்தாந்த முண்டுகொடுத்தல் வருகிறது.தமிழீழக் குடியரசுக்கான போராட்டம் என்பதே அதன் அடிப்படைச் சித்தாந்தமாகத் தமிழீழக் கட்சி புலியினது இருப்பை வகைப்படுத்தியது.இது, புரட்சிக்கு எதிரான முதலாவது அடிப்படைச் சுத்துமாத்து!
 
"தமிழீழம்"என்பது மிகப் பெரி பொய்.அது,எப்பவும் தமிழ் மேட்டுக் குடியினது அரசியல் பேரமாக இருந்தது.அதற்கும்,சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்குள்ளான பரந்துபட்ட தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்தத்"தமிழீழக் குடியரசு"க்கான தெரிவினில் பரந்துபட்ட மக்கள் பட்ட இராணுவக் கொடுமையானது இரட்டிப்பானது. இது இப்போதைக்கு இப்படியிருக்கட்டும்.
 
"மொட்டையடிப்பது-கட்டுடைப்பது"எனும் வாதம் எப்போதும் ஆய்வுமுறையாகப் பரிணாமிக்க முடியாது.ஆனால்,பாருங்கள் இரவி,இதுவரையான தேசியவாதக் கோசத்தினூடாகவும்,தமிழீழத்துக்கான போராட்டத்துக்கூடாகவும் மொட்டையடிக்கப்பட்ட இனத்தின் சமூக சீவியத்தின் உடைவையே இங்ஙனம் கூற முற்படுகிறேன்.மீளவும்,இந்தத்"தமிழீழக் குடியரசுக்கான"திசை வழிகள்-தெரிவுகள் அவர்களை-நம்மை மொட்டையடிக்காதிருப்பதற்காகத் தமிழீழச் சிஞ்சிகையின் கடந்தகால அரசியல்-சித்தாந்த மேலாண்மையைக் கட்டுடைப்பது குறித்தே நான் பேசினேன்.இதற்கும்,ஆய்வுக்கும் எங்ஙனம் பாலம் அமைத்தல் உங்களுக்குச் சாத்தியமாகிறது?
 
 
இவைகள் தவிர்ந்து சிலவற்றைக் குறிப்புணர்த்துக்கிறேன்.
 
 
1): உங்கள் கடிதத்தினூடாகக் கேட்டபடி"நீங்கள் பெற்ற தகவல்கள் யாரிடமிருந்து பெற்றுக்கொண்டவை என்பதையும் நீங்கள் வெளிப்படுத்த முடிந்தால்,அவர்களுடன் கலந்துரையாடுவது" எனக் கேட்டிருந்தீர்கள்.
 
2): ஒரே தடவையில் தேசங்களில் பத்திரிகை வெளியீடு-நிதி வலு எனப் பிரமாண்டமாகக் காட்டுவதன்றும் குறித்திருந்தீர்கள்.
 
 
இவைகளுக்கான எனது பதில்:
 
தகவல் யாரிடமிருந்து பெறுதல் என்பதைவிட, இத்தகைய சூழலுக்குள் "தீப்பொறி"க் குழுவை கொணர்ந்த கடந்தகால நடாத்தை என்னவென்பதைக் குறித்துத் தேடும்போது நிச்சியம் இதற்கான விடை கிடைக்குமென்பது இப்போதைக்கான எனது பதில்.இதுள் உங்களுக்குப் போதாமை நிலவினால்,மே 18 இயக்கத்தினர் தமது கடந்தகாலத்து நடாத்தைகள் குறித்துப் பகிரங்கமாகப் பேசுவது நிச்சியம் முழுமையைச் சென்றடையுமென நினைக்கின்றேன்.
 
அடுத்து,நிதி சம்பந்தமாக...
 
இது,பெரும்பாலும் திடீர் கட்சி-திடீர் வெளியீட்டுடனும்,அவர்களது கடந்தகால அரசியலின் வரவுகளில் நிலவிய அன்றைய சூழல்கள்சார்ந்த தரவுகளிலிருந்தும் கூறக் கூடியதாக இருந்தது.
 
இப்போதைக்கு,நீங்கள் அவர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்ட கேள்விகளுக்கு-எதிர்வினைக்குப் பெரும்பாலும் எனது விளக்கங்கள் தந்துள்ளேனெனக் கருதுகிறேன்.இதுள் மேலும் உரையாடுவதற்கு அவசியம் இருக்கும் நிலையையொட்டிப் பேசுவதென்றால், ஜானினது வெளிப்படையான சுயவிமர்சனத்துக்கூடாக அவரது கடந்தகால அரசியல் நடாத்தை நியாயமுறுமானால் அதையொட்டி என்தரப்பு விளக்கங்கள் விரியும்.
 
என்றும்,
நட்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
16.12.2009
3.29 மணி.
 
 

Montag, Dezember 14, 2009

வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!

"மே 18 இயக்கம்":உண்மைகள் பேசப்பட வேண்டும்!
 
 
"தீப்பொறி"இயக்கப் போக்கின் இதுவரையான நகர்வில்:"உயிர்ப்பு-தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகை"என, புலியினது உறுப்பாக இருந்த ஒரு சதிகாரக்கூட்டத்தின் அரசியல்-சித்தாந்தக் குரு இப்போது,"விவாதக் களத்திற்கான"ஒரு தளத்தை உருவாக்குவதாக நம்மை மொட்டையடிக்கும் அந்நிய-அதிகாரச் சேவைக்கு முனையும் இத்தருணத்தில், நாம் பெரும்பாலும் அவர்களை,அவர்தம் பழைய நடாத்தைகள் மூலம் இனம் காணுவதற்கானவொரு முன் தெரிவில், சில குறிப்புகளை உணர்த்துகிறோம்.
 
இஃது,அன்பு வாசகர்களே ஆய்வுக்கான-உண்மைகளைத் தேடிக் கொள்வதற்கானவொரு பாதையே!
 
 
மற்றும்படி, கட்சி கட்டிப் போராடிக் கொள்வதென்று, எவருக்கும் மொட்டையடிக்கும் நிலையில் நாம் இல்லை.
 
இது,இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் போரினால் தமது உயிர்களை இழந்தும்,சமூக சீவியத்தைத் தொலைத்தும் வாழும் எஞ்சியுள்ள மக்களிடம் உண்மைகளைக் காணத் தூண்டுவதே.அவர்கள் தம்மீது மிகக் கொடுமையாகவும்,பலவந்தமாகவும் கட்டவிழ்த்துவிடபட்ட அழிவு யுத்தம் குறித்துப் புரிந்துகொள்ளவும்,இதனூடாகத் தமது சமுதாயத்தின்மீது கிரிமினல் யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அனைத்து ஆதிக்கச் சக்திகளை இனம்கண்டு அவர்களிடம் நஷ்ட ஈடு பெறவும்,தமக்கு நிகழ்ந்த வரலாற்று அநீதிக்கான நியாயமான தீர்வையும் அதன்வழித் தமது வாழ்வைச் செப்பனிடவும் மிக அவசியமான பணி.
 
இதுவரை பல இலட்சம் மக்களை அழித்த இந்த அழிவு யுத்தம் மேலும் மக்களைக் கொல்லப்போடும் அனைத்து நாடகத்தையும்(இது முற்போக்குத் தமிழீழப்புரட்சி-தேசிய விடுதலைச் சக்திகள் என்றும் இப்போது வேடம் கட்டுகிறது),அவர்களது கடந்தகாலக் கள்ளக் கூட்டினது தெரிவில் நிகழ்ந்த அழிவுயுத்தத்தின்மீதான கள்ள மௌனத்தையும் நாம் கலைத்தாகவேண்டும்.
 
இவர்களது கரங்கள் மேலும் நமது மக்களது குருதியில் நனைய நாம் அனுமதிக்க முடியாது!
 
 
இஃதை, முன்தெரிவாகக்கொண்டு ,இக்குழுவைக் குறித்துச் சில உண்மைகளைப் பேசுகிறோம்.இது,மிகக் கறாரான சமூக ஆய்வின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் கட்டுடைப்பு.இதற்காக நாம் இதுவரை தேடிக்கற்ற அனைத்துச் சிந்தனைகளையும் பொதுமைப்படுத்தி, இதை இனம் காட்டுகிறோம்.
 
வாருங்கள் இளைஞர்களே,உண்மைகளைக் கூட்டாகத் தேடுவோம்!கடந்தகாலத்தை ஆய்வுக்குட்படுத்துவோம்.அங்கே,நமது மக்களது நண்பர்களையும், உள்ளிருந்து கருவறுத்த எதிரிகளையும் இனம் காண்போம்.நான் சில வற்றை உங்களுக்கு இப்போது கவனப்படுத்துகிறேன்:
 

இரகுமான் ஜான் காலத்துக்குக் காலம் நம்மை முட்டாளாக்குவதற்கு முனைகிறார்.இவரது கடந்த காலம் என்பது பல சதிகளோடு உறவாடுவது.இப்போதும்,புலிகளது அழிவின் பின் மக்கள்-பரந்துபட்ட மக்கள் தமது சொந்தக் காலில் நின்று, எதிர்ப்பு அரசியலைப் புரிய முடியாதபடி-அதை முன்னெடுக்க முடியாதபடி இந்த மனிதன் இயங்குவது மிக மோசமான இழிய குணம்.இத்தகைய மனிதனது வழிகாட்டலில் பற்பல அந்நியச் சக்திகளதும்-அதிகாரத்தினதும் நலன்கள் இருக்கிறது.இதற்கொரு புரட்சிகர வேடம்-தேசிய வேடம் அவருக்கு அவசியமானது.
 
கடந்தகாலத்தில் தீப்பொறியாகி,அக்கோசதிகள் மூலம் கோவிந்தன்(கேசவன்)கொல்லப்பட,பின்னே புலிகளுக்குச் சிந்தாந்த உந்துதல் கொடுக்க,உயிர்ப்பு,தமிழீழம் கட்சி-தமிழீழம் சஞ்சிகை என முற்போக்கு சக்திகளை வேவு பார்த்துப் புலிக்குப் போட்டுக்கொடுத்ததும்.இதன் வழி, புலிகளது பாசிச இயக்கத்தை சித்தாந்த ரீதியாகத் தூக்கி நிறுத்திப் புலிபாசிசத்தை அப்பாவி மக்கள்மீது ஏவியதும்,இதன் தெரிவில் இலங்கைப் பாசிச அரசைப் புலிகள் எதிர்ப்பதால் புலிகள் விடுதலை-தேசியச் சக்தி என்றும் கருத்துக்கட்டியது வரலாற்றுண்மை!புலிகளது இராணுவவெற்றியில் தமிழீழத்தின் தலைவாசலில் நிற்பதாகப் புலிகளை பிரமிப்பில் ஆழ்த்தியும் மக்களை முட்டாளாக்கியும் அந்நியச் சதிக்கு உடந்தையானதும் கூடவே இவர்களால் நடாத்தப்பட்ட புத்திசாலித்தனமான சதி!
 
புலிகளது தோல்விக்கும்-மக்களது அழிவுக்குமான சதி அரசியலில்,புலிகளுக்கும் அந்நியச் சக்திகளுக்கும் வாலையும் தலையையும் காட்டுகின்ற விலாங்கு மீனாக இருந்த, கபடம் நிறைந்தவர்கள்தாம் இந்தத்"தீப்பொறி"க் குழு.இதை, இன்றைக்கு மேலும் அனுமதிப்பது நமது மக்களை தொடர்ந்து மொட்டையடிக்கும்.இரகுமான் ஜான் தமிழ்பேசும் மக்களது விடுதலை குறித்துப் பேச அருகதையற்ற மக்கள் விரோதி.இதைப் பகிரங்கமாக நான் பேசுகிறேன்.
 
இரகுமான் ஜானைக்(காந்தன்) குறித்தும்,கேசவன் அழிவுக்குப் பின்பான "தீப்பொறி"குறித்தும் நான் ஆய்வு செய்து வருகிறேன்.உயிர்ப்பு-தமிழீழஞ் சஞ்சிகைகள் செய்த-பின்னிய சதி வலைகள் இதுவரை வன்னி யுத்தத்தில் செத்த மக்களது பிணங்களில் இருந்து புரியத் தக்கது.எனவே,இஃது தமிழ்ப் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்து வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டும்.இதை இளைஞர்கள் செய்வீர்களென எண்ணுகிறேன்.
 
இக்குழுவுக்குச் சில தெரிவுகள் அன்று இருந்ததென்பதை அவர்களது தமிழீழஞ் சஞ்சிகையிலிருந்து நாம் கட்டுடைத்துப் புரிந்துகொள்ள முடியும்.
 
 
இவற்றை, இங்ஙனம் நாம் புரிந்துகொள்கிறோம்:
 
1):தீப்பொறிக் குழுவானது ஜான் தலைமையில் கோவிந்தனுக்குப் பின் புலிகளுக்கு உளவு பார்த்துவருவது,
 
 
2):புலிப் பாசிசத்துக்குச் சிந்தாந்த வலு-முண்டு கொடுப்பது,
 
 
3):இலங்கை அரச பாசிசத்தை எதிர்க்கும் புலிப்பாணி(வி)தேசிய விடுதலைப் போராட்டத்தில், முற்போக்குக் குணாம்சம் இருப்பதென்றும்,அதை தேசிய விடுதலைக்கான போராகக்காட்டிப் புலியினது பாசிசத்தினூடாகத் தமிழ்ச் சமுதாயத்தில் அரும்பிய அனைத்து மாற்றுக் குரல்களையும் "துரோகமாக"ப் புலிகள் எடுத்தாளுவதற்குப் பாடுபட்டது-உந்துசக்தியாக இருந்தது.
 
 
4):புலிகளது இராணுவவாதத்தில்,இராணுவப் பேரங்கள்கள்மூலம் அவர்கள் இலங்கை இராணுவ முகாங்களைத் தாக்கியபோது, அதைத் தேசத்தின் வெற்றியாக வர்ணித்துப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தை-அடியாளாக அவர்கள் அந்நியச் சேவைகளைச் செய்ததை, மறைத்து அவர்களைச் தேசிய விடுதலைச் சக்தியாகக் கற்பித்துப் புரட்சிகரச் சக்திகளை உடைத்தது அல்லது உருக்குலைத்தது,
 
 
5):புலிகளுக்கு வேவு பாப்பதன் மூலம்,தமது உயிர் இருப்பைக் காத்ததும்,பொருளாதார வசதியை ஏற்படுத்தியதும் இவர்களது தந்திரமாக இருந்தபோது,இவர்கள் மூலம் தமது பாசிசமுகத்தை தேசியச் சக்தியாகக்காட்டவும்,அந்நிய அடியாட் சேவையை மறைக்கவும் கூடவே தமக்கு எதிரான அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இவர்கள் மூலமாக அழிப்பதை நோக்காக வைத்துப் புலிகள் இவர்களைப் பயன்படுத்தியது(இறுதியில் வென்றது ஜான் குழுவின் அந்நிய உளவு நிறுவனங்களின் நலன்- சேவைகளே).
 
 
6): தமிழ்ச் சூழலில்-குறிப்பாகப் புலம்பெயர் சூழலில் உருவாகும் அனைத்து முற்போக்கு அரசியல் முயற்சிகளையும் முளையில் கிள்ளியெறியும் பணியில் இக்குழு எப்போதும் இயங்கி வருவது.அன்று, உயிர்ப்பு பின்னாளில் தமிழீழ மக்கள் கட்சி-தமிழீழம் சஞ்சிகையென ஆரம்பித்து, அக்காலக்கட்ட மிகப்பெரும் மாற்றுக் குரல்களை திசை திருப்பியது.அவ்வண்ணமே, இப்போதும் ஆரம்பித்து, வியூகத்தின்வழி ஆரோக்கியமான-உண்மைகளைத் தேடும் ஆயு;வு முயற்சியை முறியடித்துப் புரட்சிகரச் சூழலை இல்லாதாக்குவது அல்லது தமது எஜமானர்களுக்கேற்ற திசையில் மீளப் படுகுழியைத் தோண்டித் தமிழ்ச் சமுதாயத்தின் விடுதலையை மட்டுமல்ல இலங்கைப் புரட்சியையும் காயடிப்பது,
 
 
7): புலிகளுக்கும்,இலங்கை அரசுக்குமான இடை நிலைப் பேச்சு வார்த்தைகள் மற்றும் அனுசாரணையாளர்கள் எனும் பாத்திரத்தில் நோர்வே ஊடாக ஏகாதிபத்தியங்கள் தமிழ் பேசும் மக்களை மொட்டையடித்து,அவர்களது விடுதலையைப் புலிகள் ஊடாக நாசமாக்கியதற்கு இவர்கள் உடந்தையாக இருந்தது.குறிப்பாக நோர்வே-எரிக் சொல்கைம் போன்ற சதி நாடாகத்தை, சர்வதேச ரீதியாக நமது போராட்டம் அங்கீகாரம் பெறுவதாகத் திட்டமிட்டுப் பொய்யுரைத்து ஏகாதிபத்திய நலன்களை-சதியை மூடி மறைத்தது(தமிழீழம் சஞ்சிகையை மீளப் புரட்டவும்).
 
 
8):புலிகளை விமர்சிப்பதுபோல் விமர்சித்து, அவர்களது தனிமனிதப் படுகொலையை நியாயப்படுத்தித் தமிழ்ச் சிந்தனையாளர்களை அழிப்பதற்கு உடைந்தையானது.ஜான் குழுவின் இம்முயற்சியை உரைத்துப் பார்க்க வன்னிப் புளட் ஆயுததாரீ மாணிக்கவாசகம் மற்றும் நீலன் திருச்செல்வத்தின் மரணத்தரில் இவர்கள் மகிழ்ந்து நியாயப்படுத்திய தமிழீழஞ் சஞ்சிகைகளது கட்டுரைகளை நாடிப் போவதன் மூலம் இதை மிகக் கறாராக விளங்க முடியும்."பீடை தொலைந்தது"என்றும் நீலனின் மரணத்தைவிடப் போராளிகளது மரணம் முக்கியமானதென நியாயவாதம் பேசிப் புலிகளது படுகொலைக் கரத்தைப் பலப்படுத்தியது.இதன் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பை அழித்து, அந்நியச் சக்திகளுக்கிசைவான தொங்குசதைக் கூட்டமாகத் தமிழ்பேசும் மக்களை உருவாக்கியது.
 
 
9):புலிகளது போராட்டப்பாதையில் அவர்களை அடியாளக்கிய அந்நியச் சக்திகள், ஒருகட்டத்தில் புலிகள் தமது கட்டுப்பாட்டை மீறமுடியுமெனக் கருதியபோது அல்லது நீண்ட காலத்திட்டத்தின் மூலம் இது நடைபெறலாமெனக் கருதியபோது, புலிகளைச் சிந்திக்கவிடாது பிரமிப்பில் ஆழ்த்தும் தத்துவப் போக்கை-சிந்தனையை இவர்கள்மூலம் செய்து புலிகளை வெறும் இராணுவ வாதத்துக்குள் முடக்கியதற்கும் ஜான் குழு உடந்தையானது,
 
 
10):திட்டமிடப்பட்ட முறையில் தமிழீழஞ் சஞ்சிகையூடாகப் புலிகளது மக்கள் விரோத குறுந்தேசியவாதத்தை மேலும் மக்கள் மத்தியில் திணிக்க முனைந்தது.இதற்காக,சிங்கள அரசு மண்ணைப் பறிகிறது,தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்கிறது,தமிழர் வளங்களைக் கொள்ளையடிக்கிறது,தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொள்கிறதென்று ஒரு கொதி நிலையில் இனவாதத்தைத் தமிழ்ப் பரப்புள் நிலைப்படுத்தியது.இது புலியினது இருப்பை மேலும் வலுவாக்கி மக்கள் விடுதலையை மொட்டையடித்தது,
 
 
இந்த நிலையில்,மீளவும் இக் குழு வியூகம் அமைத்துக்கொண்டு, நம் முன் மே 18 இயக்கம் கட்டுகிறது.
 
 
அன்று, தமிழீழ மக்கள் கட்சி.புலி வலுவாகப் பாசிசச் சக்தியாக இருந்தபோது.
 
 
இன்று,இவர்களது எஜமானர்களால் அது அழிக்கப்பட்ட வேளை,அந்த வெற்றிடத்தில் மே 18 இயக்கமாக இவர்களது சதி அரசியல் அரங்கேறுகிறது?
 
 
இது, அந்நியச் சக்திகளால் நிதியூட்டப்பட்ட குழு.அன்று, புலிகளால் வழங்கப்பட்ட பெருநிதியும்,இன்று,தொடர்ந்து தமது அந்நிய எஜமானர்களது நிதியுதவியும் தொடரும்போது இவர்கள் உலகு தழுவிய நூல் வெளியீடு-கட்சி கட்டல் அனைத்தும் நடாத்தி முடிப்பார்கள்.இஃது, நமது மக்கள் புலிகளது அந்நியச் சேவையைப் புரிந்துகொள்ளாதிருப்பதற்கும், இதன்வழியில் தொடர்ந்து அந்நியர்களது தயவை நாடுவதற்குமான திசையில் முற்போக்கு வேடமிட்டுபடி அனைத்துவிதமான முற்போக்குச் சக்திகளையும் தமக்குள் உள்வாங்கி, அந்நியச் சக்திகளுக்குக் காட்டிக் கொடுக்கும் தந்திரமாகவே இனி மேல் நகரும்!
 
 
இதைத் தொடர்ந்து செய்வதற்கான அனைத்து வளமும் இக் குழுவிடம் உண்டு.
 
 
பொருள்-நிதி,அறிவு-மூளை வளமென அனைத்தையும் இது ஒருங்கே பெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கிறது.இது,பரந்துபட்ட மக்களது எதிரிகளிடமிருந்து இத்தகைய வளங்களைப்பெற்று, மீளவும் கட்சி கட்டுகிறது.
 
 
கடந்த காலத்திலும் இதையே செய்து, முள்ளி வாய்க்கல்வரைச் சவக்குழி வெட்டி பல்லாயிரம் மக்களைக் கொல்வதற்கான சித்தாந்த வலுவைச் செய்த இக் குழுவானது, ஆயுதம் தரித்த பத்தாயிரம் புலிப் பாசிச வன்முறையாளர்களைவிட ஆபத்தானது.இதன் இருப்பு எப்போதும் அந்நிய ஆர்வங்களால் காக்கப்படுவது.இதை, இனம்கண்டு அம்பலப்படுத்தாமல்,எதிர்காலத்தில் இரகுமான் ஜான் குழுவுக்கு மொட்டாக்குப் போடுவது நம்மை நாம் அழிப்பதாகவே முடியும்.
 
 
இதன் நோக்கில், புலிகளையும்,இவர்களையும்,இவர்களது அந்நியச் சேவைகளையும் குறித்து ஆய்வைச் செய்கிறேன்.அதற்கான தெரிவில் முதல் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சு புதியதோர் நாவல் ஆசிரியர் கோவிந்தனின் மரணம் குறித்தான முடிச்சு.இது, எங்ஙனம்"தீப்பொறிக்குள்"நிகழ்ந்து? இவர்கள் எங்ஙனம் புலிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? என்பதும் மேற்காணும் தரவுகளின்-ஆய்வின் முடிவில் இனங்கண்டாலும்,உள்ளிருந்து கருவறுக்கும் இக் குழுவின் பாத்திரம் மிகக் கறாராக ஆய்வுக்குள்ளாக வேண்டும்.
 
 
இதற்கு கோவிந்தன் மரணத்தின் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும்.
 
 
அது, அவிழ்க்கப்படாதவரை மக்கள் விரோதிகள் இரகுமான் ஜான் வடிவில்மட்டுமல்ல பிரபாகரன் வடிவிலும் நம்மை வந்தடைவர்கள்.அவர்களுள் நான்-நீங்கள் அனைவரும் இருக்கக் கூடும்.
 
இதைக் கடக்க முனையும் இளைஞர்களே!
 
வாருங்கள்,நாம் உண்மைகளை நோக்கிச் சிந்திப்போம்!!
 
 
இவர்களதும்-நமதும் கடந்தகாலத்தைத் தோண்டிப் பார்த்து, நமது மக்கள் மூலம் தீர்ப்புக் கூறுவோம்.
 
 
அதுவரை, எவரையும் நம்பாதீர்கள்!அனைவரையும்(என்னையும்)சந்தேகியுங்கள்.இது,உண்மைகளுக்காவும்,உருப்படியாகப் போராடவும் என்று இருக்கட்டும்.
 
 
வெல்க, பரந்துபட்ட மக்களது விடுதலை!
 
 
வேரறுக, மக்கள் விரோத அரசியல்-சதிகாரக் கூட்டின் திட்டம்!!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
வூப்பெற்றால்
ஜேர்மனி
14.12.2009

Freitag, Dezember 04, 2009

அயோக்கியர்களுக்கு அருகினில் இருந்துபடி...

நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து.


ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.



பாசிசத்தின்முன் அடிபாணியாது, தொடர்ந்து அதை அம்பலப்படுத்துகிறார்.தனது இடைவிடாத பணிகளுக்குள் இவ்வளது செயற்பாட்டையும் மக்களுக்காவும்-ஒடுக்கு முறைக்குள்ளாகும் தேசங்களுக்காவும் முடுக்கிவிடுகிறார்.



எங்களது தேசத்தில்,புலிகளதும்-பாசிச அரசினதும் கொடுமைகளுக்கு எதிராகத் தம்மைத் தாமே "பேராசிரியர்"என அழைக்கும் தமிழ்க்"கல்வியாளர்கள்"எத்தகைய செயலில் இருந்தார்களென இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.தலைகுனிந்து நொந்துகொள்கிறேன்.



வாய் மூடி மௌனிகளாகவும்,கொடுமைக்காரர்களுக்கும்,அயோக்கியர்களுக்கும் அருகினில் இருந்துபடி,அவர்களை தேசியத்தினது பெயரால் அனுமதித்ததைத் தவிர இவர்கள் என்னதான் மக்கள்சார் அரசியலை-போராட்டத்தை முன்னெடுத்தார்கள்?



கிட்லரிடம் அடிபணியாத ஐயன் ஸ்ரைன், இன்றுவரையும் மக்கள் நல அரசியலால் போற்றப்படுகிறான்.







எங்கள்போராட்ட வாழ்வில், நெடிய கொலைக்கெதிராகக் குரல் கொடுத்த புதியதோர் உலக நாவலாசிரியர் கோவிந்தன்,கவிஞை சிவரமணி,செல்வி,மக்களது நலத்தைத் தனது உயிராகவெண்ணிப் போரிட்ட ராஜனி திரணகம,விஜிதரன் என ஒரு பட்டியல் நமது மக்களது உரிமைக்காகத் தமது உயிரைக் கொடுத்திருக்கின்றனர் அன்று.



எனினும்,இன்று இவர்களைச் சொல்லிப் பிழைக்கும் குள்ள நரிக்கூட்டம், தமது இருப்புக்காகப் பிழைப்புவாத அரசியலை இனியொரு திசையில் கட்டியமைக்கப் பாசிசத்துக்கு முண்டுகொடுத்து மௌனித்திருந்தவர்களுடன் கைகோர்த்துத் தமக்கும், மக்கள்நல அரசியல் பாரம்பரியம் இருக்கிறதென்று பம்மாத்து அரசியலைச் செய்கிறது!



இத்தகைய கயவர்கள்,இப்போது,புலிகள் அழிக்கப்பட்டத்தும்,தம்மையும் செயலாளர்களாகவும்,மக்களுக்காகப் போராடியதாகவும் ரீல் விடுகிறார்கள்.இவர்களுக்குக் குடை பிடித்துத் தமது நரித்தன அரசியலை முன்னெடுக்கிறது பழைய இயக்கவாத மாயைகொண்ட இனியொரு இணையமும் அதன் பின்னூட்டப் புலிகளும்.நாம் போடும் பின்னூட்டங்களை விடுவதற்கு வக்கற்ற இந்தக்கூட்டம் மக்கள் நலத்துக்காககப் போராடுகிறதாம்.எத்தனை பின்னூட்டங்களை நமது தோழர்கள்விட்டும் அதைத்தடுத்து புதைவிட்ட இவர்களைது அரசியல் தார்மீக நியாயம் எத்தகையது?

வரலாற்றை மறைப்பதற்கு இவர்கள் எவ்வளவுதாம் இட்டுக்கட்டினாலும் உண்மை எந்த வடிவத்திலும் வெளிவந்தே விடுகிறது.



நோம் சோம்ஸ்கி,இன்றைய மக்கள்சார் உரிமைப் போராட்டத்துக்கு மிக நல்ல உதாரணமாவார்.இத்தகைய கல்வியாளர்களே நாளைய தலைமுறைக்கு வழி காட்டியாவார்கள்.இவர்களே கல்வியாளர்கள்.இதைவிட்ட எங்கள்"பேராசிரியர்கள்" மக்களது குருதியில் தமது இருப்பை நோக்கி அரசியல் செய்பவர்களே.



நாம்,நோம் சோம்ஸ்கி,சாரா வாகன்கினேக்ற்,ஹாபர் மாஸ் காலத்தில் வாழ்கிறோம்.



எங்களுக்கு, எமது தலைமுறையில் நமது"கல்வியாளர்கள்"குறித்தும் தெரிந்தே இருக்கிறது.



"தோழர்கள்"என்பதற்கு அர்த்தம் புரியாதவொரு இடதுசாரிகள் எல்லாம் புலிகளின் அழிவுக்குப்பின், தம்மையும் மக்கள் நலச் சிந்தனையாளர்களாகக் காட்டுவதில் எத்தனை முயற்சியைச் செய்யினும்,காலம் இவர்களைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.




காலத்தில் வாழாதவர்கள் கட்டிவைக்கும் கருத்துக்கள் அணுவாயுதத்தைவிட கொடியது.




இதற்கு நம்மிலும் எத்தனை "பேராசிரியர்கள்-தோழர்கள்"தூ...



ப.வி.ஸ்ரீரங்கன்

04.12.09