Sonntag, September 04, 2011

இலிபியா,அடுத்து ஈரான்?

இலிபியா,அடுத்து ஈரான்?

காதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளது.அமெரிக்கா தனது பெரு இராணுவத்துக்குத் தீனிபோடுவதற்குத் திண்டாடுகிறது.அதைத் தக்கவைப்பதால் நெருக்கடிக்குள்ளாகும் சந்தையைக் காக்க முனைகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் பெறுபேறாக இணைந்த ஐரோப்பியக் கூட்டமைப்புத் தன்னைத் தக்கவைப்பதில் ஐரோப்பிய மக்களது வாழ்வைப் பலியாக்குவதில் இணைந்த" ஐரோப்பா-யூரோ" எதிர்காலத்து வேலைவாய்ப்பின் அவசியமாக அனைத்து ஜனநாயக அலகுகளையும் நசுக்கிவிடுகிறது.லீசபொன் ஒப்பந்தத்தின் [ Treaty of Lisbon]பின்னான ஐரோப்பா, உலகம் முழுவதற்குமான நெருக்கடியை உருவாக்குவதில் முன்னணியிலுள்ளது.

இந்தப் புள்ளிகள் ஈரான்வரை மிகப்பெரிய யுத்தத்தைச் செய்துகொள்ளும்வரை முடிச்சுகளாக விரிகிறது.

சீன அரச எரிபொருட்கூட்டுத்தாபனம் ஈரானிய முதலீடுகளை மெல்லக் குறைத்துக்கொள்ள[ China drosselt Öl-Investitionen in Iran]முனைகிறது.இது ஈராக்கைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு வழிவிடுவதாக இருக்கிறது[Die chinesischen Geschäftemacher drosseln ihr Tempo in Iran offenbar nicht zuletzt auf Druck der USA. Peking versuche, die US-Regierung zu beschwichtigen, sagten Insider gegenüber Reuters].

கூட்டாகக் கொள்ளையிடப்படும் [Beuteverteilung in Paris]
லிபியா யுத்தம், தனது கொள்ளையைப் பங்கு போடுவதில் பாரிஸ்சில்கூடிக்கொண்டது.ஈராக் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட மக்களது புரிதல்,லிபிய யுத்தத்தில் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இந்தக் கருத்தியில் வெற்றியானது ஈரான் போருக்குத் தயாராக்கப்படும் கருத்தியல் ஆளுமையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்கிவிடுகிறது.




கடாபிக்கு எதிரானதென்பதில் லிபியாவின் சுயாதிபத்தியம் பலியாக்கப்பட்டதுபோல ஈரானுக்கு எதிரானதென்பதை அஹ்மாடிநெட்சாத்துக்கு[Mahmud Ahmadinedschad]
எதிரானதெனச் சொல்லிக்கொள்ளப்போகும் மையக் கருத்தியலுக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை யென்றாகிறது. ஏகாதிபத்தியத்தின் ஊடாக வலு அவ்வளவு பெரியது.அதன் ஆயுதப்பலத்தைவிட அதன் கருத்தியல் ஆயுதமே மிக வலியது.இதை எதிர்த்து இயக்கமுறும் மாற்றுக் கருத்துவலு மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிறது.



கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,ஈராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.என்றபோதும்,லிபிய யுத்தத்தின் பின்இதில் மீனவும் மாற்றங்கள் நிகழ்கிறது.சீனா தொடர்ந்து தன்னை இராணுவரீதியாகப் பலப்படுத்துவதும் இதன் தொடர்ச்சியே.சீனாவனது மிக நுணுக்கமாகத் தனது கையையே நம்ப முனைகிறது.இந்தக் கூட்டுக்களையும்-ஒப்பந்தங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கணிப்பதில்"சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம்"கூட நிலைமைக்கொப்ப ஒரு பொருட்டல்ல.


இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான[ Shanghai Cooperation Organization (SCO)] சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.எனினும்,இந்தக் கூட்டின் பிரதான இரு தேசங்களும்(இருஷ்சியா-சீனா)அமெரிக்க,ஐரோப்பியத் தேசங்களது சந்தையிலும்,அந்த வலையத்தின் தொழிற்சாலைகளது வெளி உற்பத்திதத் தேவைகளிலுமே தங்கியுள்ளன.இதன்பொருட்டு இந்தச் சங்காய்க்கூட்டுக்கூட வெறும் காகிதப் புலியாகவே காலப்போக்கில் மாறிவிடும்.


என்றபோதும்,ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.


சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து இதுவரை காரியமாற்றியது.ஈரானில் முதலீடுகளைத் தவிர்ப்பதிலிருந்து இன்றைய அமெரிக்க மூலதனத்தின்அதிர்வுகளிலிருந்து சீனா தன்னைத் தக்கவைக்க அமெரிக்காவினது விருப்புக்குத் தலையசைப்பதாகவே உண்மை நம்முன் எழுகிறது.




புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே சீனா ஈரானில் முதலீடுகளை மெல்லக் குறைப்பதாக அமைகிறது.இந்தத் ததிரோபாயமானது "தி கிரான்ட் செஸ்போர்ட்டை" [The Grand Chessboard: American Primacy and Its Geostrategic Imperatives ]எனக்குள் ஞாபகப்படுத்துகிறது.இதன் சூத்திரதாரி சீப்பினிக் பிரசென்ஸ்கியின் அடுத்த நகர்வுகள் இங்ஙனம் அமைக்கப்படுகிறது:


1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,


2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,


3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.அல்லது அதனோடு இணைந்து [Russen und Amerikaner starten Mega-Ölprojekt in der Arktis]எதிர்ப்பைத் தணித்தல்,பின் தனிமைப்படுத்தல்.



4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,


5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.


6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,


7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,


8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,நீண்டகால நோக்காக இருந்துவந்தபோதும்,லிபியாவின் எண்ணையைக் குறுகியகாலத்தில் கொள்ளையிடுவதற்காக ஜேர்மனிய அரசு,இருஷ்சியாவுக்கு விட்டுக்கொடுத்து South Stream எண்ணைக் குழாய் ஒப்பந்தம் கைச்சாத்தாயபோதும்,லிபியாவை அம்போவெனவிட்ட இருஷ்சியவோ இழக்கப்போது பலமடங்கு என்பதை ஈரானிய யுத்தத்தில் இரஷ்சியாவின் சார்பிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.


9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,இதன் விளைவாக நடந்தேறிய லிபிய யுத்தம் அதைத் தக்கபடி நகர்த்துவதின் உண்மையை ஆதாரமாகக்கொள்ளலாம்.


10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).

இந்நிலையில்,ஈரான்மீதான அமெரிக்க-ஐரோப்பிய அத்துமீறிய போரொன்றை எங்ஙனம்,இருஷ்சியா-சீனா அணுகப் போகின்றன வென்பதற்கு அவர்களது மூலதனத்தின் தொங்கு நிலைகளே தீர்மானிக்க முடியும்.எனவே,ஈரானிய அதிபர் தனது இன்றைய நட்பு நாடுகளாலேயே காலை வாரப்படுவார் என்பது கண்கூடாக மலாந்துவிடப்போகும் இன்னுஞ் சில காலத்தில்.


இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி [Zbigniew Brzezinski ]என்பது உலகறிந்த உண்மை.


ப.வி.ஸ்ரீரங்கன்
04.09.2011

Sonntag, August 21, 2011

புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

ஜோஸ்[ Jose Antoin] http://www.facebook.com/joseantoin ,புலிகள் இயக்கம் திடீரென வந்தவொரு இயக்கம்.அதன் தோற்றம் வளர்ச்சியை நாம் நேரில் அநுபவப்பட்டு எழுதுகிறோம்.பிளக் செப்ரம்பர் இயக்கங் குறித்து[Black September http://en.wikipedia.org/wiki/Black_September_%28group%29 ] "அறிவு-அநுபவம் " எப்படி உங்களுக்கு?

நாம் ஜெனரல் கியாப்பை , டாக்டர் சன்- யாட்சென் போன்றோரை சல்லடை போட்டுக் கற்ற அன்றைய நாளிலிருந்து புலிகளை மதிப்பீடு செய்து,அந்த இயக்கமானது மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாதவொரு அடியாட்படை இயக்கமென 84 இல் வகுத்துக்கொண்டோம்.இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ஆயுதமே அடிப்படை.வெறும் கற்பனைகளால் எவரும் புலிகளின் அழிவை முன் கூட்டிச் சொல்லவில்லை!புலிகள் அழிந்து சுக்கு நூறாவார்கள் என்பது அதன் வர்க்க நலனில் இருந்துதாம் மதிப்பீடாகியது.சமுதாயத்தின் பெரும் பகுதி மக்களது நலனைப் பிரநிதித்துவத்துக்குள் கொணராமலும்,மக்களைப் பார்வையாளர்களாக்கி,ஆளும் வர்க்க (வி)தேசியத்தை அது பிரதானப்படுத்தி மக்களை உணர்ச்சிக்குள் தள்ளியதும் அதன் வாயிலாகத் தமது எஜமானர்களுக் கேற்ப மக்களை கூட்டோடு கோவிந்த போட வைத்ததும் தற் செயல் நிகழ்வல்ல.

சிங்கள இனவொடுக்குமுறைக்கெதிரான மக்களது எதிர்ப்புணர்வைத் தமது இயக்க நலனுக்காகப் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தைச் செய்ய முடியாது.விடுதலைப் புலிகளது வரலாற்றை அநுபவத்துக்குள் உள் வாங்காமால் அதன் புறநிலையை வைத்து எவரும் விவாதிக்க முடியாது.அந்த அமைப்பு எவ்வளவுதாம் நிலப்பரைப்பைத் தனக்குள் வைத்துத் தனது அரச ஜந்திராத்தால் காத்தாலும் அதைத் தக்க வைப்பதென்பது முடியாது காரியம்.ஏனெனில் மக்கள் புரட்சிகரமானவுணர்வுக்குள் வாழாதவரையும் இது சாத்தியமில்லை.இது குறித்துப் பார்ப்போம்.

புரட்சிகரக் கட்சியோ ஒரு போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமெ ன்று கற்றுக் கொடுக்கும்,அவ் வேளையில் அதன் இராணுவமோ ஒரு புரட்சிகரக் கட்சியைப்போன்று போராட்டத்தை நடாத்துகின்றதோ அப்போதுதாம் அது இராணுவம் எனத் தகுதியைப் பெறும்.புலிகள் அமைப்பானது அரச கூலிப்படைகளை நொட்டி-நொட்டி மக்களைச் சலிப்புக் குள்ளாக்கியதும்,அரச ஆதிக்கத்தை உடைத் தெறியாமலே அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கைவைக்க ஆரம்பித்தது.இதுவே,அதன் தோல்வியை முன்கூட்டிக் கட்டியம் கூற வைத்தது.சர்வதேசச் சூழல்,தேசத்தின் வளங்கள்,பிரத்தியேகமான புவியில் அமைப்புகளெல்லாம் அந்த இயக்கம் கணிக்கவே இல்லை.அது,திடீரென அந்நிய ஆயுதங்களால் பெருக்க வைக்கப்பட்டு,அதன் சுயவளர்ச்சி முடக்கப்பட்ட ஒரு அடியாட் படையாகவே இருந்தது.

பிரபாகரன் வெறும் ஒளிவட்டங்கட்டியவொரு பொம்மை.

புரட்சிகரத் தன்மை(புரட்சிகர அடித்தளம்) துளியளவும் அற்றவொரு இயக்கத்தால் விடுதலையைச் சாதிக்க முடியாது.இதுதாம் புரட்சிகரக் கட்சியின் பாலர் பாடம்.

புரட்சிகரத் தன்மை என்பதைத் தமிழ்ச் சமுதாயம் இன்றுவரை புரியவே இல்லை!

புலிகள் இயக்கத்திடம் புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை அந்த மக்கள் கடிதப் பொருளாதாரத்தில் தங்கியிருந்தவர்கள்.யார் கழுத்தையும் நெரித்துத் தன் பிள்ளைகளை வாழ வைக்கும் சுய பொருளாதாரமற்ற ஒட்டுணிச் சமுதாயமாக இருந்தது-இருக்கிறது.வாழ்வைக்கொண்டியக்க வேறெந்த வழியுமற்றவர்களோ,கடுமையான ஏழ்மையின் காரணமாகவும்,வேறெந்த வழியுமில்லாமலும்-வாழ்சூழல் பாதிப்படைந்து,குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது திண்டாடிக்கொண்டிருந்தபோது சிங்கள அரசின் இனவொதுக்கல் பிரச்சனையை மையப்படுத்தி-கூர்மைப்படுத்தி (இராணுவம் கிராமங்களுக்குள் வாகனத்தின் ஊடாக வலம் வரும் வேளை குண்டெறிந்து தாக்க,பதிலுக்கு இராணுவம் அந்தக் குடியிருப்பு மக்களைத் தாக்கி அராஜகம் புரிய வைத்து, மக்களை அரசுக்கு எதிராகச் செயற்பட வைத்தல்)வாழ் சூழலை இனியில்லையென்றபடி பாதிப்புக்குள்ளியபோது,மக்களும் ஈழப் போராட்டத்துக்கு "ஆமாம்"போடுவது.இத்தகைய சூழலில் புலிகள் ஒவ்வொரு பகுதியாக இராணுவத்திடம் இழக்கும்போது போராட "ஆமாம்"போட்டு இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் இராணுவ வலயத்தில் சிக்குப்பட்டு அவர்களது வாழ்வு ஒரளவு-ஏதோவொரு சூழலில் ஒழுங்குக்வர இவர்கள் இதுகாறும் தாம்கொண்ட"ஈழவிடுதலை"இலட்சியத்திலிருந்து நழுவிக்கொண்டார்கள்.அத்தகைய சூழலில் புலிகள் என்ற அமைப்பு வெறும் இயக்கவாத மாயையில் சில ஆயிரம் இளைஞர்களைப் பலவந்தமாக உள்வாங்கிக் குறுகியது.

இதுதாம் புரட்சிகர அடிப்படை அற்ற போராட்ட முறைமை.இதன் விளைவு மக்கள் தொடர்ந்து புலிகள் அமைப்பிலிந்து அந்நியமானார்கள்.மக்களை அணிதிரட்டும் புரட்சிகரத் தன்மையின்றிய புலிகள்.அந்நியச் சக்திகளின் தயவில் ஆயுதங்களைக் குவித்துவிட்டுப் புரட்சியைச் சாதிக்கும் கோதாவில் தொடர்ந்தது.அந்நியச் சக்திகள் தமது கனவுகளைத் (ஈழத்தில் புரட்சிகரக் கட்சியை இல்லாதாக்கல்,மக்களுக்கும் இயக்கத்துக்குமிடையிலான ஜனநாயத் தன்மைகளை ஒழித்தல்,மக்களைத் தொடர்ந்து ஆயுதத்தால் அச்சப்படுத்தி விடுதலையுணர்வைத் தடுத்தல்,இதன் வாயிலாகப் புரட்சிகரமாகச் சிந்திப்பவர்களை அழித்தல் அல்லது தேசத்தை விட்டு ஓட வைத்தல்-மக்கள் தமது வர்க்க ஒடுக்குமுறையைப் புரியாதிருக்கும் தமிழ்க் குறுந் தேசிய வெறியை பரப்புதல்,அதன் வாயிலாக மக்கள் பலமற்ற ஒரு ஊதிய அமைப்பை உருவாக்கி அதை அடியாட்படையாக்கல்,மக்களுக்கு எதிராகவும் மாற்று இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதங்களைத் திருப்பி எதிரி செய்யும் காரியத்தைப் புலி அமைப்பின்வழி செய்வித்தில்)தொடர்ந்து புலிகள் மூலம் அறுவடை செய்து புலிகளைக் குட்டவேண்டிய இடத்தில் குட்டி அழித்தார்கள். இதிலிருந்து என்ன தெளிவாகுதென்றால்,போராடும் விடுதலைப் போராளிகளுக்கு-இராணுவத்துக்கு போதிய புரட்சிகர இலட்சியங்கள் இல்லையென்றால் அத்தகைய போராளிகள் தமது சுயநலன்களைக் கைவிடாதவர்களாகக் குறுக்கிப் போய்விடுவர்.விடுதலைப் போராட்டம்-புரட்சி அவர்களது சுயநலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கும்போது அவர்கள் மிகவும் நம்பத்தகாதவர்களாக மாறியே தீர்வார்கள்.புலிகளது பிளவுகள் இந்தக் கோணத்தில் நிகழ்ந்தவை-உட்கட்சி ஜனநாயகமற்று தமது சொந்தப் படையையே அழித்துத் துரோகிகள் என்பதெல்லாம் இதன் நோயே!இதுவே,விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிவுறும் இயக்கவியல் புரிதல்.
இதெல்லாம் புலிக்குக் கொடி தூக்கிய புலம்பெயர் புண்ணாக்குகளுக்குப் புரியவே இல்லை!

மீளவுஞ் சொல்கிறேன்,அரச ஜந்திரம் என்பது வேறு,அரச ஆதிக்கம் என்பது வேறு.புலிகள் செய்த முதல் மூடத்தனம் அரச ஜந்திரத்தின்மீது கை வைத்தது.அரச ஆதிக்கத்துக்கள் இருந்து விடுதலை பெறமலே அதன் வன் முறை ஜந்திரத்தின் மீது கைவைத்தது.புலிகளுக்குப் புரட்சி பற்றி அக்கறையே கிடையாது.ஏனெனில் அவர்கள் தமிழ் மேட்டக் குடியின் கைப் பொம்மைகளாக இருந்தபடி அந்நியச் சக்திகளுக்கு அடியாளாகவிருந்த ஒரு மாபியா இயக்கம் என்பதை மீளவுஞ் சொல்லியாக வேண்டும்.

பல புரட்சியாளர்களது தோல்வியை ஆராய்ந்த லெனின் பின்வருமாறு கூறுகிறார்:"புரட்சி என்பது அரச ஜந்திரத்தின்மீது கை வைப்பதல்ல,மாறாக அரசு ஜந்திரத்தை உடைத் தெறிவதாகும்."

இறுதியாக:ஆதி ஆதவன் மேதைகளுக்கு, வணக்கம் சார்!ஒரு சின்ன வேண்டுகோள்: உங்களைப்போன்றோர் சிரிப்பதற்கு முதல் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,கூடவே, மக்கள் யுத்தமென்றால் என்ன,புரட்சிகரக் கட்சி-இராணுவம் அதன் அடிப்படைகள் என்னவென்றும்,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கப் போரே தொடருமென்பதையும் புரிந்துகொண்டால் மிகப் பெரிய புண்ணியம்.நீங்கள் சிரிக்கும்போது நாம் தலைக்கு மொட்டாக்கிட்டுச் செல்லமாட்டோம்.அந்தச் சிரிப்பின் பின்னே இருக்கும் அறியாச் சிறுபிள்ளைப்போக்கைச் சுட்டிக் காட்டுவோம்.அப்பவும் புரியாது போனால் காலத்தின் கையில் விட்டுவிட்டு,உங்கள் வர்க்க மூலத்தைக் கண்டடைய முனைவோம்.

இப்போதைக்கு இது போதும்.மேற்கொண்டு விவாதம் வளரும்போது,நாம் வேறு சில பக்கத்தைத் திறந்து அன்ரோனியோ நெக்றியின் ஒபேறியோ [Potere operaio ] 1973 களில் தோல்வியுற்றதுவரை விவாதத்தை வளர்த்துச் செல்லலாம்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
21.08.11

Sonntag, August 14, 2011

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

ன்பார்ந்தவர்களே,வணக்கம்!

அமெரிக்கப் பயங்கரவாதம் குறித்து உலகமே அறிந்திருக்கிறது.பட்டியலிட்டு,இன்னதெனக் கூறவேண்டியதுமில்லை!என்றபோதும்,இந்த வீடியோவில் உள்ள உரையைக் கேட்டுப்பாருங்கள்.அமெரிக்கா தனது சொந்தக் குடிகளுக்கே மோசஞ் செய்யும் பணக்காரர்களுக்கான தேசம். பணக்காரர்களுக்காவே உலகத்தைச் சுடுகாடாக்கும் தேசம் அமெரிக்கா, என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

இலூயீஸ் ஃப்றாக்கான்[Louis Farrakhan-Leader of the Chicago-based Nation of Islam (NOI).] மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல,மல்கோம் எக்ஸின் பரம்பரையிலிருந்து எழுந்தவர்.மால்கோம் எக்ஸ் பின்னாளின் புதிய இஸ்லாமிய நேசனைத் தழுவியிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.அப்பாதையில் நடக்கும் இந்தப் பேச்சாளர்,ஒடுக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுபவர்.எனது விழிகள்முன் மால்கோம் எக்ஸீன் மறு அவதாரமாகவே இந்த இலூயிஸ் ஃப்றாக்கான் தென்படுகிறார்.

எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே தனது எதிர்ப்பைச் செய்பவர்களே உண்மையான மானுட நேசிப்பாளர்கள்.அதைக் குறித்துச் சந்தேகமென்ன?

அமெரிக்கா,சொந்த மக்களையே திட்டமிட்டு அழிக்கும்போது,பிற நாட்டு மக்கள்மீது கருணைகாட்டுமெனக் கருது முடியுமா?

அமெரிக்கத் தூவராலயப் பெண் தமிழ்நாட்டில் வைத்துத் தமிழரை"அழகற்ற அழுக்கானவர்கள்"என்று அகங்காரத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் இந்த ஒடுக்கு முறை மனோபாவத்தின் தொடர்ச்சிதாம்.அதையும்விட, பல் நூறாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆரியக் குடியேற்றம்,காலனிய ஆதிக்கம்,பார்ப்பனிய ஒடுக்குமுறைகள்-ஆதிக்கமானது இன்று திராவிடக் கட்சிகளுடாகத் தமிழ்பேசும் மக்கள் மிகத் தாழ்ந்த சமூகச் சூழலில் கற்கால வாழ்க்கை நடாத்தும்போது, உலகத்தோடு ஒப்பிட முடியாத சமூகச் சீரின்மைக்குள்ளும்-சமத்துவமற்ற கல்வி ஏற்ற தாழ்வுக்குள்ளும் இருக்கிறார்கள்.



இந்த வீடியோ உரையாடல், மிக முக்கியமான சூழ்ச்சிகளைப் புட்டுவைக்கிறது.செவிமடுத்துத்தாம் பாருங்களேன்.

இறுதியாக: தமிழர்களாகிய நாம் "அழகற்ற அழுக்கானவர்களே"தாம்,எமது அரசியல்வாதிகள்-கட்சிகளால் நாம் இந்த நிலைக்கே வந்துவிட்டோம்!இதிலிருந்து நாம் மேலெழுவது நமது கைகளிற்றாம் உள்ளது.அதைத் தீர்மானிக்க வேண்டிய தருணங்களைத் தவறவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கே இலாயக்கு அற்றவர்கள்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
14.08.2011

Freitag, August 12, 2011

"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?

இராஜீவ் காந்தி கொலைக்கான தண்டனை:
"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?



"இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்."



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) "தூக்குத்தண்டனை"உறுதியாகி வருகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் வரலாற்றுப் பிரதி நிதிகளது பரம்பரையின் வீழ்ச்சி-அழிவில்(காந்தி கொலை-சஞ்சாய் காந்தி கொலை-இந்திரா காந்தி கொலை-இராஜீவ் காந்தி கொலை) இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பிளவை உறுதிப்படுத்தி விடலாம்.திட்டமிடப்பட்டு காந்தி-காந்தி குடும்பத்தவர்கள் அழிக்கப்பட்டதன் பின்னே மாறிவரும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள் முன்னிலைக்கு வந்தன.



இதன் தொடர்ச்சியான படுகொலை அரசியலானது,குற்றஞ் சுமத்தப்பட்ட மூவர்மீது(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) வழமைபோலவே"தூக்குத் தண்டனையை"சுமத்தி இருக்கிறது.இது,புலிவழிப்பட்ட கடைந்தெடுத்த துரோக அரசியலின் இன்னொரு பக்கத்தையொட்டி விவாதிக்க வேண்டியது.

அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு அடியாளாகவிருந்த புலிப் பாசிஸ்ட்டுக்கள்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகக் கூலிக்குக் கொலை செய்ய ஆயத்தமானபோது தனது பேரத்தில் இராஜீவ் கொலையை துன்பியில் நிகழ்வெனக் கூறிக்கொண்டது.இக் கொலையின் பின்னணியை புலி அடியாட்படையின் இந்தியவுறகளைத் திறம்படவும்-வெளிப்படையாயும் ஆரயக்கூடிய ஊடகங்களால் மட்டுமேதாம் கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் நியாயவாதிகளா-குற்றவாளிகளாவெனத் தீர்மானிக்க முடியும்.இங்கே,நீதி மன்றத்துக்கான வேலை இந்திய ஆளும் வர்க்கத்தைக் காப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எனவே,இத் "தூக்குத் தண்டனை" த் தீர்ப்புகளையிட்டு ஆச்சரிப்பட எதுவுமில்லை.ஆனால், நிசமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முயற்சியில் சிலரைச் சட்டரீதியாகக் கொல்வதையிட்டு நாம் விவாதிக்க முடியும்.

ஒரு கருத்துக்குப் பன்முகப் பட்ட புரிதல் சாத்தியமான இன்றையவுலகில் நாம் இராஜீவ் கொலை சம்பந்தமான கருத்துகளுக்கு ஒற்றை பரிணாமப் பாங்கில் புரிந்து கொள்வது-விவாதிப்பது எவ்வளவு அபாயகரமானதென்பதைப் புரிந்து கொள்ள இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களே சாட்சி!


இராஜீவ் கொலையைக் கூலிக்காகச் செய்த புலிகள் அதைத் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காகச் செய்ததாகத் தமது வால்கள் மூலம் கருத்துக்கட்டியபோது,இந்திய"அமைதிப்படை"அட்டூழியங்களைச் சொல்லி நியாயப்படுத்திய காலக்கட்டத்தில் இந்திய-தமிழ்நாட்டு மக்களில்பலர் அதை ஏற்க முடியாது இப்படியும் விவாதித்தார்கள்:

"ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை"-இந்திய பிரதான ஊடகங்களது வாசகர்கள்.

இன்று கொலைக் "குற்றவாளிகள்"மூவருக்கும் "தூக்குத் தண்டனை"உறுதியாகிவிட்ட நிலையில்,இதைச் சாத்தியப்படுத்தும் அருகதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்டா?இந்தியக் கட்சி அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தும் பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன யோக்கியதை உண்டு?

இந்தியச் சட்டத்துறையானது இந்திய ஆளும் வர்க்கத்தின் காப்பரண் என்பதைக் குறித்து முரண்பட உதுவுமில்லை.நிலவும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில் மேல்மட்ட வன்முறைசார் கருத்தியிலே நீதிமன்றம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.எனவே,இந்த அருகதையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அழிவு அரசியலைக் குறித்துப் பார்க்கலாம்.இந்த அரசியல் நகர்வானது தென்னாசியக் கண்ட நாடுகள்பூராக வாழும் மக்களுக்கு ஆபத்தானது.இத்தகைய அரசியல் தொடர்ந்து"தூக்குத் தண்டனை"உடாக வெற்றி பெறுமானாலும் இந்தியாவில் புரட்சிகரப் போராட்டம்,குடிசார் உரிமை அமைப்பாக்கம் யாவும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்ற உண்மையையும் புரிந்தாக வேண்டும்.

இந்த ஆபத்தான அரசியலை(ஆளும் வர்க்க-அதிகாரக் கூட்டத்தின் பயங்கரவாதத்தை) நியாயப்படுத்தும் ஆளும் வர்க்க கருத்தியற்றளமானது கீழ்வரும்படி மக்களைக் காயடித்தது:

1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2): பாகிஸ்தான், காஷ்மீரி மக்களை இந்தியாவுக்கெதிராக தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் பரந்துபட்ட மக்களுக்குள் சாத்தியமாகிறது. அதை நம்பும் தளமும் முற்றுமுழுதாக துக்ளக் சோ போன்றோரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இன்றை சீரழிவு ஊடகத்துறை என்பதும் 24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் என்ற வகையறாவுக்குள்ளும் காட்சிப்படுத்துவதாக எண்ணவோண்டாம்.


இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரும் இந்த வகை மையக் கருத்தியில் வன்முறையைச் செய்தே முடிக்கின்றனர்.இவர்களேதாம் "தூக்குத் தண்டனையை"நியாயப் படுத்தும் பேர்வழிகள்.இவர்களது முன்னோடி"மகாத்மா" காந்தி என்பதை, தோழர் பகத் சிங்கின்மீதான "தூக்குத் தண்டனையில்"காந்தியின் அரசியலை உரைத்துப்பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.

ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன.

இதுதாம் முள்ளிவாய்க்காலில் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.

நிலவும் அதிகாரத்துக்கு எதிரான திசையில் காரியமாற்றுபவர்கள் அதிகமாகப் பரந்துபட்ட மக்களது நலனின் நிமித்தமே தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.இதுள் நிலவும் ஆதிக்கம் ஆளும் வர்க்கமாக இருந்தாலென்ன அல்லது விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கமாகவிருந்தாலென்ன அவர்கள் எந்த வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தின் நலனையே பிரதிபலிப்பார்கள்.இதற்குப் புலிகள் இயக்கம் நல்ல உதாரணம்.பாருங்கள், புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்,உடந்தையாகவும் இருந்தவர்களில்லை.

கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கலாம்:
இராஜீவ் கொலைக்காகப் பலியெடுக்கப்படக் காத்திருக்கும் அந்த மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர்) முதலில், நரேந்திர மோடிக்குத்"தூக்குக் கயிறை"இந்திய நீதித் துறை வழங்குமாக இருந்தால் நிச்சியம் இந்த ராஜீவ் கொலைக் குற்ற வாளிகளுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கக் கூடும்!.




ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

12.08.2011

Montag, Juni 20, 2011

தீபத்தில்: கேள்வி - நேரம்!

தீபம் தொலைக்காட்சியில்இடம் பெற்ற "கேள்வி-நேரம்" பீ.ஏ.காதர்- கீரன்,சேனன்,புதிய திசைகள் மாசில் பாலன் போன்றோரது உரையாடல்கள் குறித்துக் கவனத்தைக் குவிக்கிறேன்.அவர்களது உரையாடலில் பல தளத்தில் உடன்பாடான கருத்துக்கள் விரிந்து கிடக்கும்போதும்,வர்க்க அரசியலில் வர்க்க நலன் குறித்த பார்வைகள் மிகவும் பலவீனமான புரிதலூடாக உள்வாங்கப்படுகிறது.இது குறித்துச் சிலவற்றைப் பார்க்கலாம்.


ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்-குறிப்பாக நிமலன்-யோகலிங்கம்போன்றோர்.


இதுள், தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.



இங்கே, தீபம் தொலைக்காட்சியில் உரையாடப்பட்ட விடையங்கள்கூட புலியரசியலது நீட்சியை வற்புறுத்தும் தந்திரத்தோடு கட்டியமைக்கப்படுவதில் மேலுஞ் சில ஞாபகங்களைச் சொல்லிச் செல்கிறது! உதாரணமாக: இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்தும், தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"புலம் பெயர் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும்குறியீட்டு அரசியல் நல்ல உதாரணமாக இருக்கின்றன.இது குறித்து நாவலனது சிறு குறிப்பு சிறப்பான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.அது,கிட்லரது காயடிப்பு அரசியலது வினைவரை பேசுகிறது.

=>

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய அழிவு-அரசியல் நிலையில், இத்தகைய "கேள்வி நேரம்"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச்(கீரன்போன்றோர்) சென்றுவிடுகிறதென்ற உண்மையில், அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்

==>>

புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.


அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள்(சாதியப் பிரச்சனை குறித்த கீரனது புரிதல்) எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை " இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது. மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்" என்றுதாம் சொல்வேன்!



தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர் நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல்-சேட்டைகள் இத்தகைய "கேள்வி நேரம் " புலம் பெயர் ஊடகச் சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமையையே தகர்க்கும் சாதியப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!


இதன் வழி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!


இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"பன்மைத்துவக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!


நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.இதை "கேள்வி-நேரம்"வழியாகக் கூடக் கடக்க முடியும்!என்றபோதும்,அதை ஏதோவொரு பெரு எண்ணவோட்டத்துக்கேற்பத் தகவமைப்பதுபோன்ற சூழலையும் கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது!இந்தப் பெரும் எண்ணவோட்டம் எந்த வர்க்கத்தைச் சார்ந்தியங்குகிறதென்பதே எனது கேள்வி!


இப்போது,மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத(புலி-ரெலோ...) வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இதை கீரன்-நிமலன் போன்றோரிடமிருந்து இனங்காண முடியும்.


இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய சிங்கள-தமிழ்அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது. இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு"தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை ஆளும்வர்க்கங்கள்.


எனவே,இன்றைய இலங்கையை கீழ்வரும்படி புரிந்து விடலாம்:


1: மகிந்தா தலையிலான இலங்கை அரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை "ஜனநாயகத்துள்"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!அதற்கேற்பப் புலம்பெயர் தளத்தில் கருத்துக்களைக் கட்டுவதில் கீரன்-இடது-வலது எனக் கோடிப் பயல்கள் பற்பல வடிவங்களில்...


2: ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.


இங்குதாம்,சேனன்,புதிய திசை பாலன் போன்றோரது கருத்துக்களைக் கூhந்து நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய சூழலது மதிப்பீட்டுக்கு வரமுடியாத எந்த உரையாடலும் வெறும் வினையகற்றிய போலிப் போராட்ட வடிவங்களுக்குள் மீளவும் நம்மைத் தள்ளிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

21.06.2011

Samstag, Oktober 02, 2010

தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் ...

"மாற்றுக் கருத்தாளர்களென"ச் சொன்ன நம்மில்பலர் புரட்சி செய்வதென்று கட்சிகள் கட்டினர்.அவை காலத்துக்கு முந்தியது.குழுவாதத்தில் நிலைக்க முடியாததெனச் சொன்னோம்.

தத்தமது இருப்புக்கான தெரிவுகளில் குழுக்கட்டல் தோன்றியது.

இக் குழுக்களால் முன் தள்ளப்பட்டொவ்வொரு இணையத் தளங்களும் தமக்கான தெரிவுகளில் அரசியலை முன்னெடுக்கின்றன.

அவையாவும் அப்பாவித் தமிழ் மக்கள் நலனை முதன்மைப்படுத்திக்கொண்டன.அந்த நலன்களை அடையும் வழிகளைக் காணாது அற்பத் தனமாகத் தமது விருப்புக்காக அவற்றைப் பாவனைசெய்வதில் இத்தைகய இணையத் தளங்கள் முந்திக்கொண்டன.

சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு "இவரைத்தாம்" துணைவேந்தராக்கவேண்டுமென அறுதியிட்டு மனிப்புளேஷன் (Psychological manipulation)செய்யத் தேசம் நெற் கட்டுரை-ஆய்வு,பாலியற் புலானாய்வெனச் செய்து, Prof.Dr.இரத்தின ஜீவன் கூலுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது நட்ஷத்திரன் செவ்விந்தியன் மூலம்.

தமிழரங்கம் படுபிசியாகத் தீபச் செல்வனெனும் "பாரிய" தமிழ்ப் படையாளியை-கவிஞரை புலிகளது விதேசியத்தில் உரைப்பதென்று தமது புலிச் சேவையின் தொடரை மறைத்துக் கட்டும் தொடரில் நாவலன்-குகநாதன் சமாச்சாரத்தில் ஆருக்கு ஆப்பு வைக்க முனைந்ததோ அந்த ஆப்பில் தமது பிடரிக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

ம.க.இ.க தமிழரங்கத்தின் மீதான தமது விமர்சனத்தை வினவுவில் போடுவதற்குள் அது இனியொரு தளத்தில் மீள் பதிவேற்றப்படுகிறது!

தமிழ்பேசும் மக்களுக்குத் தனிநாடு-விடுதலைப் பாடம் நடாத்துபவர்களில் கணிசமானவர்கள் இந்தவூடகங்களில் ஏதாவதொரு கட்டுரையையேனும் படித்திருக்க முடியும்.

அப்பட்டமான சுய நலங்களை முதன்மைப்படுத்தும் தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் இந்த மக்கள் நலன் வேறு சிக்கெடுக்கும்படியாக...

அவர்களே தமக்குத்தோதான சிக்கல்களைத் தொடர்ந்து கையிலெடுத்து நமக்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தச் சூழலில் ம.க.இ.க.தமிழ்நாட்டில் நிகழ்ந்த குகநாதன் மேட்டரில் இரயாகரனது "தீர்ப்பு"க்கு மறுப்புரை எழுதுகிறது.நியாயமாக நாவலன்மீதான சேறடிப்பை எதிர்த்து எழுதப்பட்டாலும் பகிரங்கமான விவாதத்தைத் தொடரும்படி கேட்பதில் அதன் வலுவான நம்பிக்கை தெரிகிறது.இந்த நம்பிக்கையானது இனியொருவின்மீதானதும்,சபா நாவலன்மீதானதென்றுமில்லாது உண்மைகளை எவரும் புதைக்க முடியாதென இரயாகரனுக்கு உணர்த்துவதாகவே எடுக்க முடியும்.

ஒருவரையொருவர் சேறடித்து இல்லாமற் செய்யும் நடாத்தையில் இத்தகைய குழுவாதம் மலிந்திருந்தபோது, ம.க.இ.க.வின் வருகையும் அதன் பகிரங்க வேண்டுகோளும் விவாதிக்கத்தக்க பொதுவரங்கில் நாவலன்போன்ற மார்க்சியர்கள்மீதான அவதூறாகச் சுட்டிக்காட்டப்ட்டு,இரயாகரனது "அம்பலப்படுத்தல்"பொய்த்துப் போகுமிடத்தில் தமிழரங்கத்தின் அரசியல் புரியத் தக்கதான எனது மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தும்.

அவ்வண்ணம் நாவலன் குற்றமுடையவரென்று நிருபிக்கப்பட்டால், இரயாகரன் நாவலன்மீது முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டும் நியாயமானதென்றும் இரயாகரனது குழுவாத்துக்கு அது அவசியமான இருப்பையும் கொடுக்கும்.எனவே,தொடர்ந்து தமிழரங்கம் மீதான எனது விமர்சனமானது அவர்களது அரசியல்மூலத்தின்ஆதிக்கத் தெரிவுகளைக் கேள்விக்குட்படுத்துவது.

அவர்களோடு நாம் இணைந்து உருவாக்க முனைந்த "புகலிடச் சிந்தனை மையம்" திடீரெனக் கட்சியாக மாறவேண்டுமென்ற இரயாவினது சுயவிருப்பில் அஃதிப்போது,"புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"யாக மாறிய தெரிவில் நடந்தேறும் அதீதகக் குழிதோண்டலில் எவர் வீழ்ந்து மாள்வாரோ அவர்களது அரசியல் மட்டுமல்ல இதுவரையான தமிழ்ச் சூழலதும் "புரட்சி"க் காவடியும் சிதைந்து சின்னாபின்னமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.10.2010

Sonntag, September 05, 2010

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.


"லைவர்"உரை நிகழ்த்துகிறார்.அவரது தலைவரான மிகந்தா மாத்தையாவோ நல்லூர்த் திருவிழாவில் பெரிய-பெரிய துப்பாக்கி(எஸ்.எல்.ஆர் போன்ற அமைப்புடன்) பிளாஸ்றிக்கில் விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்தத் துப்பாக்கிகளை யாழ்ப்பாண மக்கள் பரவலாக வேண்டிக்கொண்டிருக்கினமாம்.

தென்னிலங்கைச் "சகோதரர்கள்"இந்தத் துப்பாக்கி வியாபாரதை மிகப் பரவலாகத் திருவிழாவில் செய்கின்றனர்.யாழ்ப்பாணப் பெரிசுகளிலிருந்து,சிறுசுகள்வரை துப்பாக்கி வேண்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்-வேண்டித் தள்ளுகிறார்கள்!


இது குறித்து இந்தத் தலைவர் ஏதாவது தனது மக்களுக்குக் குறிப் புணர்த்தினரா?எல்லாம் தெரிந்த டக்ளஸ் மாத்தையாவுக்கு இந்தப் புலம் தெரியாதா என்ன?அவரும் தொடர்ந்து தனது மக்களைக் காட்டிக் கொடுக்கலாம்.

ஒரு போராட்டத்துக்குள்ளிருந்த மக்கள் சமுதாயம்,இனவொடுக்குமுறைக்கெதிரான ஆழ்மன அழுத்ததிலிருந்து இன்னும்விடுபடாத சமுதாயம் இத்தகைய துப்பாக்கித் தாகத்தை இயக்கவாத மாயையிலிருந்து விளையாட்டுத் துப்பாக்கியாக நுகரும்போது அஃதே ஆழ்மனவிருப்பாகக் கணிக்கப்படும்.

மகிந்தாவின் அரசுக்கு மிகச் சாதகமான கருத்தொன்று வைக்கப்படப்போகிற அபாயம் இந்தத் துப்பாக்கி விற்பனைக்கூடாக முன்வைக்கப்படப் போகிறது.

யுத்தத்துக்குப் பின்பான யாழ்ப்பாண மக்களது மனங்களை-சமூக உளவியலை அளக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்கும் நாடகத்தில் சாகடிக்கப்படும் சிவில் உரிமைகள் குறித்து எதிர்காலம் பேசும்.

யாழ்ப்பாண மக்கள் இன்னும் துப்பாக்கியை மறப்பதற்கில்லை.அவர்களது மனங்களில் எண்ணக் கருவாக இருக்கும் துப்பாக்கிமீதான காதல் அழிவதற்கு இன்னும் பல வருடம் எடுக்கும் என ஆய்வாளர்கள் சொல்வர்.

பிறகென்ன?

இராணுவ ரீதியான கண்காணிப்பும்,இராணுவக் கெடுபிடியும் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும்.

இந்த விளையாட்டுத்துப்பாக்கி விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல.அவர்கள் எமது மக்களது மனங்களை அளவிடுகிறார்கள்.அரசினது சமூக ஆய்வாளர்களும்,அவர்களது பணியாளருமெனப் பலர் இதுள் இயங்குகிறார்கள்.

பாவம்பிடித்த நமது மக்களோ அப்பாவித்தனமாகப் பற்பல துப்பாக்கிகளை வேண்டித் தமது தாகத்தைத் தணிக்க அடுத்த இராணுவ நெருக்குவாரம் தொடரலாம்.

தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பது,அவர்களது எண்ணங்களை அறிவது-ஆய்வதெனச் ஸ்ரீலங்கா அரசு மிக வேகமாகக் காய் நகர்த்துகிறது.துப்பாக்கி வேண்டும் குடும்பங்கள் கண்காணிக்கப்படுவர்.

எல்லாம் அவன் செயல்-இன்ஷா அல்லா!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.09.2010

Mittwoch, August 04, 2010

மெய்நிகரது மேன்மை

விடுதலையெனுங் கருத்தால்
விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்


சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.

தமிழ்பேசும் சமூகத்தின் இருப்பே இல்லாதாக்கிய இந்தப் போராட்டத்துள் இதுவரையான அழிவு,சமூகசீவியச் சீர்குலைவு குறித்து எந்த மதிப்பீடும்-பொறுப்புணர்வுமற்ற வாசகப் பாரம்பரியம் நமது சமூதாயத்தினது பாரம்பரியமாகத் தொடர்கிறது.குண்டி மண்ணைத் தட்டிச் செல்வதுபோல் மக்களது அழிவு-இழி நிலை குறித்து இயங்குகின்றனர்.எங்கே-எப்படி நமது மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்,அவர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்களே மீளத் தம்மைத் தகவமைத்து மக்களது "விடிவுக்கு"அரசியல் செய்வதாக இந்திய-இலங்கைப் பாசிசத்தோடு கைகோர்க்கும்போது,அதை அப்படியே கிடப்பில் போட்டபடி நமக்கு அரசியலுரைக்கும் அதே புலி மனதுக்கு, இந்தப் பாசிசத்தின் எச்சங்கள் குறித்து எந்தக் கவனமும் இருக்க முடியாதுதாம்.நாமும் அதற்காக அவர்களது நிலையிலிருந்து ஒரு சமூகத்தை நோக்க முடியுமா?
புலியை எவர்கள் அழித்தார்கள்-தோற்கடித்தார்களென ஓராயிரம் முறைகள்தமிழரங்கத்தில் சொல்லப்பட்டதை மீளப் படித்துத் தொலையுங்கோ. புலியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி,அவர்களது அழிவு யுத்தத்தை"ஆக்க யுத்தமாக"க் கருத்திட்டவர்களும்,அதற்குச் சிந்தாந்த வலுக்கொடுத்தவர்களும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.

புரட்சிகரக் கட்சியெனப் பெயர் சூடுவதால்மட்டும் அக்கட்சியும் அதன் உபயக்காரர்கள்-உறுபினர்கள் புரட்சிகரமாகச் சமூகத்தை அணுகுவதாகவும்,செய்யவேண்டிய சூழலில் செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் அர்த்தமாக முடியாது.
இது,சிவசேகரத்துக்கு,சிவத்தம்பிக்கு,சண்முகரெத்தினத்துக்கு- இன்னுமேன், அனைத்துப் பல்கலைக்கழகப்"பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள்"அனைவருக்கும் பொருத்திப் பார்க்கத் தக்க அரசியலைப் புலிகளிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில்,தம்மைக் "கல்வியாளர்கள்-பேராசிரியர்கள்"எனத் தம்பட்டம் அடித்தவர்களும்-அடிக்காதவர்களும் இணையும் பாதை தமிழ் பேசும் மக்களது உரிமையெனும் ஒரு முட்டுச் சந்தியில். இதைக் குறித்தான தேடலோடு அணுகியுள்ள ஒவ்வொரு அரசியல் நகர்விலும், புலியினது ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் நடாத்தையே தமிழ்பேசும் மக்களது உரிமை போராட்டத்தில் மையமுற்று முழுத் தேசியவின ஒடுக்குமுறைகளுக்கெதிரான வினாக்களைப் புலியிடம் தேடவேண்டிய நிலையில், புலிகளது அந்நியச் சேவை-அடியாட் பாத்திரத்தை புரிந்தவர்கள்- புரியாது நடித்துப் புலிக்கு அங்கீகாரத்தை-சித்தாந்த வலுவைக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே,புரட்சிகரச் செயற்பாட்டோடு தன்னை இனங்காட்டும் சிவசேகரம் எந்தத் தர்மத்தின் அடிப்படையில் புலிகளது அழிவுப் போருக்கு எதிர்ப்பிடாது அல்லது மக்களிடம் உண்மையினை எடுத்துச் சொல்ல முடியாது மௌனித்தார் என்பதை வெறும் தனிநபர் செயற்பாட்டால் அளவிடமுடியாது.

சிவசேகரம் தன்னை இனங்காட்டும் கட்சியுடன் சேர்த்து, அவரை அணுகுவதில் எமது கருத்துக்கள் இருக்கிறது.தனிப்பட்ட சிவசேகரம் எப்போதோ காணாது போய்த் "தமிழ்த்தேசிய" அரசியலுக்கு முன்னால் தவிடுபொடியாகிக் கிடந்தார். அவருக்கு, அவரது தொழிலினது அழுத்தம்-அச்சம் சமூக ஆவேசத்தை அப்போது கொடுக்காதிருந்திருக்கலாம். இது,தனிநபர் பாதுகாப்புணர்வின் ஒரு அங்கமாகவும்-கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாவும் இருக்கலாம். என்றபோதும்,சிவசேகரம் தற்போதைய சூழலில் "புலி செய்த போராட்டத்தை விமர்சித்துப் புலியினது போராட்டம் அழிவுப் போராட்டமென்றும்,அது அந்நியச் சேவையில் மக்களைப் பலிக்கடாவாக்கிறதென்றும் உண்மையை மக்களிடம் எடுத்தியம்பிப் புலியினது ஆட்பிடிப்பு"குழந்தைக் கடத்தல்"அரசியலை அம்பலப்படுத்தியவர்களைச் சாடுவதில்" கவனமுற்ற சிவசேகரம்- ஏன், அன்று புலிக்குமுன் மௌனித்தார்?(இங்கே,மறுபக்கமென்ற அவரது பத்தி எழுத்துக்களுக்குட்கூட புலியினது விதேசியப் போராட்டங்குறித்தும்-புலியினது பாசிசச் சேட்டை-கொலை அரசியல் குறித்தும் எதையுமே இனங்காணமுடியாது!மக்கள் புலிகளிடம் அனைத்து ஆதாரத்தையுங் பறிகொடுத்தபடி, ஒரு புறம் புலிப் பாசிசத்திடமும்,மறுபுறும், பெருங்கொடிய இனவாத அரசிடம் தமது அனைத்துவுரிமைகiயும் இழந்து கொத்தடிமைகளாக இருந்தபோது இவர்கள் மெளனித்துக் கிடந்தனர்.)

இந்தச் சந்தர்ப்பத்தை ஒழுங்காக இனங்கண்ட புலியினது பினாமிச் சிந்தனையாளர்கள்,குறிப்பாக, எஸ்.கே.விக்கினேஸ்வரன்,சேரன் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் புலிகளது போராட்டத்தை தேசிய விடுதலைப் போரெனச் சொல்லி,அதற்கான பாரிய சித்தாந்த வலுவைக் கொடுத்தனர்.

இவர்களது இந்தச் சிந்தாந்த வலுவானது புலிகளது பாசிசத்தை மேலும் தமிழ்ச் சமுதாயமெங்கும் வலுவாகப் பத்திப்படர வைத்தது அன்றும்-இன்றும்!அனைத்துமே-புலிசெய்த அனைத்துமே தமிழ்த் தேசிய விடுதலையின் அங்கமாக இனங்காட்டினர். இதில் விக்கியினது பங்கு மிக அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரன்-சேரன் குழுவானது புரட்சிகரமான சிந்தனைப் போக்கைச் சிதைத்து நிர்மூலமாக்கியதற்கான எல்லா நியாயமும் சிவசேகரத்துத் தெரிந்தே இருந்தது. எனினும்,இந்த மனிதர் மௌனித்து அங்கீகரித்தார்.

இப்போது,தங்களுக்கும் புலிகளது பாசிசச் சிந்தாந்தப் போக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சேரனும் அவரது மைத்துனருமான விக்கியும் எல்லாக் கோவில்களிலும் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்கின்றனர்.அதே, நோய்தாம் சிவசேகரத்துக்கும்.இதில்,என்ன மாற்றமென்றால்-சிவசேகரம் புரட்சியெனப் பிதற்றியபடி, "அன்று புலிக்கும்-அரச பாசிசத்துக்கும் எதிராகப் போராடிய முகாமை வலிந்து சாடியபடி"தனக்கு இருப்புத் தேடுவது. இதுவொரு வகையில் பண்பாட்டுச் சேட்டைதாம்.

இதை அம்பலமாக்குவதென்பதும் மக்களைச் சார்ந்தியங்கும் சக்திகளது கடமையே!

மௌனித்தவர்கள், முன் வைத்து இயங்கும் அரசியலை விமர்சிப்பதென்பது அந்தச் சிவசேகரத்தின் தனிநபர் நடாத்தையை அல்ல. சிவசேகரம் உருவாக்க முனையும் அரசியல்-கட்சிசார் அரசியலின் நியாயவாதமானது காலவதியானது. அதற்கு எவ்விதத்திலும் தமிழ்பேசும் மக்களது விடுதலை-அரசியலுரிமை பற்றிப் பேசும் அருகதை -திறன் கிடையவே கிடையாது. ஏனெனில்,இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்தபடி தமிழ்ச் சமூதாயத்தையே ஒட்ட மொட்டையடித்த புலிப்பாசிசத்தின் தொடர்ச்சியைக் குறித்து இன்னும் எந்த மன்னிப்போ-பொறுப்போ எடுக்காத கயவர்களான மேற் சொன்ன புலிப் பினாமிகள் குறித்து இன்னும் மௌனிக்கும் இக் கயமைமிகு சிவசேகரம் கோஷ்டி,புலிகளை அன்றிலிருந்த அம்பலப்படுத்திய தளத்தை நஞ்சுத்தனமாகவும்-விஷமத்தனமாகவும் விமர்சிப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இன்றைய அந்நியச் சேவையில் போட்டிபோடும் புலிகளது பினாமிகள்-முகாங்களை இயங்க அனுமதித்துவிட்டு,மயிரைப் பிடுங்கும் கிண்டலும் -நஞ்சு வைக்கும் குள்ள அரசியலையுந் தொடரும் சிவசேகரம் மக்களுக்கான அரசியலைத் தட்டிக்கழிப்பதன் தொடர்ச்சியாகவே இது தொடர்கிறது.

அன்று,"மரபு மார்க்சியர்கள்"புலிக்குத் தாரைவார்த்துக் கையளித்த அனைத்துவகைச் சந்தர்ப்பவாதமும் இன்று, அந்த மக்களைப் பலியெடுத்து ஓயந்துபோனதும் மீளத் தகவமைக்கும் சந்தர்ப்வாதப்"புரட்சி"க் கோசத்தையும் அதன்வழி தம்மை முன்வைத்து அரசியல் பேச முனையும் கெடுதியான நோக்கையும் எவரும் மௌனித்து ஏற்க வேண்டியதில்லை!

இன்றைய சூழலில் எவர் மக்களைப் பற்றி நின்றும், புலியினது பாசிசச் சேட்டையை அன்று அம்பலப்படுத்திப் புலியிடமிருந்த கொடும் வதைகள் பெற்றார்களோ, அவர்களேதாம் மக்களோடு இனியும் அரசியல் செய்வதற்கும்-போராடுவதற்கும் அருகதையுடையவர்கள்! சந்தர்ப்ப வாதிகளும்-சதிகாரர்களும் இனியும் எமது மக்களை மொட்டையடிக்க விடுவதற்கு இது, புலிப் பாசிசத்தின் காலமல்ல. மாறாக, இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரக்காலம். இங்கே,இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களுடன் கைகோர்த்து, அவர்களது விடுதலைக்கான புரட்சிகரப் பாதையையும்-கட்சியையும் உருவாக்கும் பொறுப்பு அந்த மக்களிடம் இருக்கிறதென்பதும்,அதையொட்டி அவர்களைத் தகவமைப்பது புலிப்பாசிசத்துக்கும்-சிங்கள இனக்வொடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமது ஆயுள்வரை போராடியவர்களுக்கே உண்டு.

சந்தர்ப்பவாத அரசியலைப் புரட்சியின் பெயர்கொண்டழைக்கும் சிவசேகரம்போன்ற கடைந்தெடுத்த மக்கள் எதிரிகளுக்கு எந்த அருகதையுமில்லை - மக்கள்,புரட்சி குறித்துப் பேசுவதற்கு!
இவர்கள் தகவமைப்பது மீளவுமொரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மக்களைத் தள்ளிப் இலங்கைக்கான ஐக்கிய மக்கள் புரட்சியைக் காயடிப்பதற்க்கே!
இந்தவுண்மையை நாம் இனங்கண்டதன் பயனாகவே,மேற்சொன்ன முகாங்களை,அவர்களது சந்தர்ப்பவாத-சதி அரசியலை அம்பலமாக்குகிறோம்.இது,மீளவும் ஒரு விக்கி-சேரன் கூட்டு நமது மக்களுக்குத் தேசிய விடுதலை-புரட்சி பேசிப் புலிகளது எச்சங்களை மக்களுக்குள் திணிக்காதிருப்பதற்கே!இதை உணரும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிவசேகரம்போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியலோடு மக்கள் கவனத்தைத் திசை திருப்பிச் சதிகாரர்களை நமக்குள் ஊன்றுகிறார்கள்.இது,தமிழ்த் தேசிய அரசியலது அறுவடையிலிருந்து நமது மக்களை மீண்டெழ முடியாதவாறு அந்தச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்துத் தம்மைத் தகவமைக்கும் சதி அரசியலோடு சம்பந்தப்பட்டது.

சிவசேகரமும்,அவரது அனுதாபத்துக்குட்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியும் இதுவரை மக்களுக்கும் புலிக்குமிடையிலான அரசியலையும்,அதன் வழியாக விளைந்த சமுதாயச் சீர்குலைவையுங் குறித்து எந்த மதிப்பீடும் செய்யவுமில்லை,அதற்கெதிரான சித்தாந்தப் போராட்டத்தையும், அதன் வழியில் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தந்திரோபாயமுமின்றிச் சப்பைக் கட்டும் பாராளுமன்றச் சகதிக்குள் கிடந்து பிற்போக்கு அரசியலைத் தொடருகிறது. இது,ஒரு வகையில் எஞ்சிய புலிகளுக்குப் புரவலர்களாக இருக்கும் மேற்சொன்ன புலிப் பினாமிகளை மீளப் புனரமைக்கும் அரசியலின் வியூகமென்பது எனது பணிவான கருத்து.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.08.2010

Montag, August 02, 2010

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"



னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

சிவசேகரம் கவிதை எழுதுவார்.அது,எல்லோருக்கும் தொப்பியை அளவாகத் தைத்து மெல்ல நயவஞ்சகத்தோடு விஷம் பருக்கும்.இது, நடக்கும் தருணம் "புரட்சி"யின் பெயரால்.இப்போது,"புரட்சி" பேசுபவர்கள் அனைவரும், மற்றவர்கள் மந்தைத் தெருவில் நாலு மந்தைகளை மேய்ப்பதென்ற தோரணத்தில்"மார்க்சியம்"படிப் பிக்கின்றனர்.

காலந்தாம்!

இந்தவுலகத்தின் திசைவெளிகளெல்லாம் ஏதோவொரு புனைவுக்கும்-நிஷத்துக்கும் இடையில் காட்சிப்படுத்தும் நிஷம், எங்கோ ஒரு "அறிவாளியின்"வீட்டுக் கோடியில் அடை காப்பதாக இவர்கள் கருதுவதாகவிருந்தால் அஃது, நிஷமாகவே காலக் கொடுமைதாம்.

விஷமக் கருத்துக்களை கட்டிக் கவிதையெனக் கோர்க்கும் சிவசேகரத்திடம் நிஷமாகவே புரட்சி குறித்த எந்த மதிப்பீடும் இருப்பதற்கில்லை!அப்படி இருந்திருப்பின் புலியினது பாசிசச் சேட்டைக்கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டத்தை இலங்கையில் நடாத்திக் காட்டியிருக்க முடியாதுபோயினுங் குறைந்தபட்சம் புலிகளது அழிவு யுத்தத்தை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.தன்னந்தனியர்களாக நாம் அம்பலப் படுத்தியபோது தலையைப் புதைத்துத் தமிழ்த்தேசியப்பால் குடித்தவர்கள், இப்போது, புரட்சிபேசி மற்றவர்களைச் சீண்டுகிறார்கள்.இவர்களெல்லாம் நீதியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு அழிவைப் புலிப் பாசித்தின் வழி சந்தித்திருக்க முடியாது!



மக்களைப் புலிகளும்,சிங்கள ஆளும் வர்க்கமும் மொட்டையடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இன்று, புரட்சிக் கோசமெனப் புலம்பும்"கவிதை" தனிநபர்வாதமாக மற்றவர்களுக்கு "ஒழுங்கு"கற்பிக்கிறது!புலிகளது அராஜகத்தின்வழி, கேடுகெட்ட பாசிசம் கோலாச்சியத்திற்கு இந்த மனிதர்கள் எங்ஙனம் காரியம்-ஒத்திசைவாகவிருந்தார்களென நாம் பல் நூறு கட்டுரை எழுதியுள்ளோம்.என்றபோதும்,இன்றைய "புரட்சிகர-மார்க்சிய"ப் புதிய புரவலர்கள் கட்டியமைக்க முனையும் கருத்துக்களோ அவர்களது பின் தங்கிய புரிதலை நன்றாகவே நமக்குப் புரியவைக்கிறது. எல்லாக் காலத்துக்கும் அடிப்படையான புரிதல் பொருந்திவிடுவதாக இவர்கள் புசத்துகிறார்கள்.

புலிப்பாசிசத்தின்"(வி)தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு" மார்க்சியத்தின்வழி மரபுரீதியாகக் கருத்துச் சொல்லிக்கொண்டு மௌனித்திருந்த இந்த மகான்களெல்லாம் இப்போது கிணற்றுக்குள்ளிருந்து வெள்ளமேற வெளியல் வந்த தவளைகளாகக் கத்திக் கொள்கின்றனர்.அத்தக் கத்தலைப் புரட்சியின் தெரிவில்"புரட்சி" இலக்கியமெனப் புரட்டும் சிவசேகரம் தனது கடந்த கால மௌனத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் எந்த வருத்தத்தையுஞ் சொன்னதாக வரலாறில்லை!

பாசிசம் கோலாச்சியது எதன் பெயரால்?எவரது துணையோடு தமிழ்த் தரகு முதலாளிகள் இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்? எவரது மௌனம் புலிகளுக்கு விதேசியச் சிந்தாந்தப் பலம் கொடுத்தது?

இன்று, இத்தனை இலட்சம் மக்களது வாழ்வை வேட்டையாட ஒத்துழைத்த இந்த நரிகளெல்லாம்"புரட்சி-புரட்சி"என ஊளையிடுகின்றன. இது, குறித்து விமர்சனம்-எதிர்வினையாற்றும்போது நேசமிகு அஷோக்கோ அதை வெளியிட முடியாது தவிர்த்துத் தனது கரசேவையை ஒழுங்குற நடாத்துகிறார்.

இதெல்லாம் "புரட்சிக்காரர்களுக்கு" உரிய கோலந்தாம்!நாமும் கடந்த கால் நூற்றாண்டாக இந்தப் "புரட்சிக் காரர்களை"ப் பார்த்தே வருகிறோம்-இணைவதும்,பிரிவதுமாக...

இயக்க வாத மாயை,அந்நியச் சேவை-அடியாட் பாத்திரமென எல்லா வகைத் துரோகத்தையும் ஒழுங்குற நமது மக்களது தலையிற் சுமத்தி,அவர்களது வாழ்வை நாசமாக்க"அவர்களுக்கு விடுதலை"வகுப்பெடுத்த இந்தக் கடைந்தெடுத்த கபோதிகள்தாம் தம்மையும் "பேராசிரியர்கள்-புரட்சிக்காரர்கள்"எனப்பசப்பு மொழி பேசுகிறார்கள்! என்றோ நமது மக்களது உரிமைகளை அந்நியர்களுக்கு ஏலம்விட்ட இத்தகைய மனிதர்கள் இன்றும்"புரட்சி" பேசுவதும்,கட்சி கட்டுவதும்,மக்களை ஏய்த்து அரசியல் செய்வதென்ற திசையில்தம்மைத் தகவமைத்துக்கொண்டதன் பயனென இவர்களே தமது நடத்தையின் மூலம் நமக்குரைக்கின்றனர்!

புலிப்பாசிசத்தின் தோல்வியில்,படிப்பினைகளைச் செய்து, மக்களது அரசியலைப் பேச வக்கற்ற இத்தக் கோமாளிகளுக்கு "மார்க்சியம்" குறித்தென்ன மதிப்பீடு இருக்கிறது? புதிய உலகவொழுங்கமைப்பின் இன்றைய புரட்சிகர நிலவரங்கள் என்ன? பாட்டாளிய வர்க்கத்தின் இன்றைய வர்க்கவுணர்வினது தீர்மானகரமான இருப்பு என்ன? புதிய தலைமுறையை நோக்கிய புரிதலில் எத்தகைய மனித மாதிரிகளை இனங்காண்கின்றனர்?தொழிற்சாலைக்கும் மூலதன இயகத்துக்கிடையில், உற்பத்திச் சக்திகளுக்கும்,உறவுக்கும் இடையிலான இன்றைய பண்பு என்ன?இது குறித்து எந்தப் புரிதலை தமிழ்ச் சூழலில் முன்வைத்திருக்கிறீர்கள்? இன்றையவுற்பத்தியில் பங்குறும் பல்கலைக்கழகங்களுக்கும் பாட்டாளிய வர்க்கப் பண்புக்குமிடையிலான முரண்பாடென்ன? இது குறித்தெல்லாம் புரிதலற்றவர்கள் எதிர்காலப் "புரட்சி" குறித்து வகுப்பெடுக்கின்றனர்.அதையும், அதே பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து நிலைகளோடு...

இவர்களிடம்,எதிர்வினையாற்றும்போது,அதை மறைத்து மதிலமைக்க முடியுமெனக் கருதும் கருந்துளைகளுக்கு"ஈர்ப்புச் சக்தியினது சுழற்சிக் கணம்"எத்தகைவொரு நிலையில் எத்தகைய எதிர்த் தாக்குதலைத் தருமெனப் புரிவதுகூடப் பொருந்தாத தருணந்தாம். இல்லையென்றால், எதிர்வினைகளை-பின்னூட்டங்களை வெளியிட்டு,ஆரோக்கியமானவொரு உரையாடலைக் கட்டியமைத்திருப்பார்கள்.

இவர்களது தெரிவில், கடந்தகால இயக்கவாதக் கொள்கை வழியான பரிதலே மேன்மையான கோட்பாடாகவிருக்கலாம்.இல்லையென்றால் அங்காலவொருவன் கட்சி கட்டுகிறான்.இங்காலவொருவன் தெரிந்தெடுத்த கருத்துக்களை வைத்து அரசியலமைக்கின்றான். இவர்கள் மார்க்சியமெனக் கத்தும் மந்தைக் கருத்துகளோ மார்க்சியத்தின் அரிச்சுவடியையே கற்காத இவர்களது மேதமையை வெளிப்படுத்துகிறது!

என்ன மேதைமை!

போங்க சிவசேகரரே-போங்க அஷோக்கு யோகன் கண்ண முத்துப் புரட்சித்தோழரே! புதுமையாய் ஏதாவது வழியில் கருத்துக்கு மதிலிட முனையுங்கோ...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.08.2010


இட்ட பின்னூட்டமும்,சிவசேகரத்தின் கவிதையும்:


"இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ..."

சிவசேகரம் அவர்களது இக் கவிதையை

மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.


இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!


புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம "பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!


ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் "காய் அடிப்பு "அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது "இவர்களது" கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.


>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<<

-Albert EINSTEIN


"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது, அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ, போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி 02.08.10


புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்

-சி.சிவசேகரம்

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

http://inioru.com/?p=15700

Dienstag, Juni 22, 2010

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...


"தமிழ்ச்சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய நமது சூழலானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்."



ன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.கடந்த கால அழிவுகுறித்து எந்த மதீப் பீடும் இல்லை! இதற்குள்புலம்பெயர் தமிழருள் புதுப்புதுக் கட்சிகள்,புரட்சிகரப்பாட்டும்,மக்களை அணிதிரட்டுவதுமெனக் கொட்டியபடி...


நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்,அதே இயக்க-கட்சிவாத மாயையில் நீந்தியபடி!இது எதற்கானது-எவருக்கானது?

அரச-புலி, வன்னியுத்த்துக்குப் பின்னான இன்றைய அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை. காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை "நமது மக்களுக்காக"க் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும், நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் "புரட்சிகரக் குரல்",போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!

இலங்கையில், மக்கள் தனிநபர் பயங்கரவாதத்துக்குள்தாம் சீவிப்பதாகச் சொல்லும் அரசியலானது அந்தத் தனிநபர் பயங்கரவாதக்கூறினுளொன்றான தமது பக்கத்தைப் புரட்சியென வரையறை செய்வதில் கவனமாக இருக்கின்றது.

இலங்கையின் அனைத்து அரசியல் நகர்வும், இலங்கை மக்களது சமூகசீவியத்துள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனிநபர் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் உடனடி அரசியலானது வெறும் கிறுக்குத்தனமான அரசியலைப் பின்னணியாகக் கொண்டியங்குகிறது.அத்தகையவொரு அரசியலை வகுத்து இயக்கிவரும் அந்நிய நலன்சார் அரசியலொடுக்குமுறையின் ஒருவடிவமாகவெழும் இப்போக்கை, அதன் பின்புலத்தை மறைத்து, முதன்மைப்படுத்தலானது எதன் தயவின் தொடர்ச்சியென நாம் பார்ப்பது அவசியமாகும்.மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை-சுயநிர்ணயம்-புரட்சி"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் இன்றைய அமைப்பாகும் அரசியற்றொடர்ச்சி மிக மோசமானவொரு பின்னணியைக்கொண்டியங்க முடியும். புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் "புரட்சி-கட்சி"யெனக் கத்தி" தனிநபர் பயங்கரவாதமாகக் குறுக்கப்படும் தமிழ் மக்கள்மீதான அந்நிய-அரசியல்ஒடுக்குமுறை வடிவங்களை முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோனதையும் குறிக்கத்தவறுவது நியாயமாகிறதா?

ஆகணும்!

அப்படிப் பார்ப்பதே புலியழிவுக்குப் பின்னான போராட்டத்தின் தவறுகள்-குழிபறிப்புகள்-பலியிடப்பட்ட மக்களது பெறுமானம் குறித்துத் தொடராகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகும்.

"தமிழீழத்தின்" நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது-"புரட்சிகர" அமைப்பாகிறது!.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது அதைக் குறித்து அழுது வடிந்தவர்களோ அந்த வலியின் தொடர்ச்சியில் அதே புலிப்பாணி அமைப்பாவதைத் தொடரும் அபத்தம் "புரட்சியின்" முகமூடியோடு புதிய விளக்கம்பகர்வதில் அத்துமீறிய கருத்தியில் வன்முறையைத் தொடர்கிறது.இது,சாபக்கேடான அதே இயக்கவாத மாயையின் இன்னொரு வடிவமாகும்.சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த இயக்கவாதத் தொடர்ச்சியின் வருகையில் மக்களது இதுவரையான வாழ்வியிற்றேவைகளைக் கணக்கெடுப்பது புரட்சியின் பயனுறு நிலைப் பண்புக்கானதாகவிருப்பின் அதன் ஆணிவேர் மக்கள் சமூகத்தைத்தாண்டி இன்னொரு தளத்தில் வேர் அரும்புகிறதென்பதைக் குறித்துரைக்க வேண்டியதில்லை.இன்றோவிது,கடந்தகால அதே இயக்கவாத மாயயைத் தொடர்வதில் அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகளதுதெரிவில் பலர் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.

பற்பல ரூபங்களில் இஃது, அரசியல் முனைப்பைக் கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இஃது,எஞ்சிய புலத்துப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் "புரட்சிகர" அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.அனைத்தையும்"புரட்சி"என்ற சொல்லாடலாகத் தொடர்வதில் அதன் சாயம் வெளுத்துப்போவதைத் தள்ளிவைக்க முனைகிறது. இன்றைக்குப் புலிகளெனும்அடியாட் பாத்திரத்தின்இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.

மறுபுறுமோ, சீன-இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய இலங்கை நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்த கட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது புலம்பெயர் மக்களைப்பலவாறாகப் பயன்படுத்துகிறது. அதிலொன்று,இன்றைய "புரட்சி-கட்சி"அமைப்பாவதென்ற தொடரில் மையங்கொள்கிறது! இதுள்,மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகள் மேலும் பல முகங்களை நமக்குள் இனம் காட்டும்போது,அங்கே,வினைப் பயன் தொடராக இயக்கவாதம் மீளத் தலையெடுப்பதில் இந்திய-மேற்குலக அரசியல் உந்ததலுக்கு இருவேறு முகமில்லை.அதன் பாத்திரம் ஒன்றுடனொன்று உறவுடையது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.இதற்கு பெயர் "புரட்சியை நோக்கி அமைப்பாவது-மக்களை அணித்திரட்ட(...)"என்ற வாய்ப்பாடு இதுவரை இயக்கவாத மாயையின் தொடராகவே மேலெழுகிறது.மக்களை நடைபிணமாகப் பார்த்த அன்றைய இயக்கங்களின் அதே பாணிக் கருத்துக்களை மேலும்"புரட்சி-அமைப்பாவது-மக்களை அணிதிரட்ட"என்ற வர்ணமுலாம் பூசுவதால் கடந்தகாலத் தவறுகள் மறைந்துவிட முடியாது.

நமது சமுதாயத்தின்"தேசியவிடுதலை"ப்போராட்ட வரலாற்றில் கட்சி-அமைப்பு அரசியலே மறுபரிசீலனைக்குட்பட வேண்டியது.அது,குறித்துரைக்கும் போராட்டச் செல் நெறியே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடக்கணக்காக அதன் அறுவடைகள் குறித்து அலச வேண்டிய சூழலில் திடீர் கட்சி ஆரம்பித்தலென்பது மக்களைச் சுத்த முட்டாள்களாக்குவது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளில் இருந்தபடி, புரட்சிக்குப் புதுப்புது விளக்கங்களை அள்ளி வீசுகின்றனர்.

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் வாழ்வில்-சமூகப்பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தத்துக்குப் பின்பான சூழலில் சாத்தியமாகமுடியும்.இதைக் கணித்து உள்வாங்கும் ஆதிக்கச் சக்திகள் பழைய இயக்கத் தொடர்ச்சிகளை மெல்ல உசுப்பேற்றித் தமது சேவகர்களாக்குவதில் "புரட்சி-கட்சி"எனக் மண் குதிரில் நின்று புலம்ப வைக்கிறது, நமது "தோழர்களை" இன்று!! இந்த மண்குதிர் நம்புவதற்கேற்ற படிமங்களைப் புரட்சிகர மொழிவுகளுடாகச் சொல்லும்போது ஒரு சிலர் மயங்கவும் முடியும். எனினும்,இது ஆபத்தான விளைவுகளின் நடுவே பரிதாபகரமாக மக்களை மேலும் முட்டாளாக்குவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல!

இலங்கை மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

22.06.10

Donnerstag, Juni 03, 2010

வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான...

போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


(வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான ஆதரவு-எதிர்க்கருத்தாடல்கள் தொடக்கிவரும் கதையாடல்கள் குறித்து விளங்க முற்படுதல்)


ர்க்கப் போராட்டமென்பதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழு நாளையுஞ் செலவு செய்தே வருகிறது.


லீனா மணிமேகலையது படைப்புச்சார்ந்து வினவுத் தளத்தில் எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில்புரட்சிகர-எதிர் நடவடிக்கையென சுற்றமுனையுந் தருணங்களில் அனைத்தையும் குத்தகையெடுப்பதன் தொடர் நிகழ்வாக மாறும் மனித சுதந்தர மறுப்பில்,அவற்றை நோக்கிச் செல்வது சாத்தியமே.ஏனெனில்,போராட்டமென்பது தற்செயல் நிகழ்வல்ல.அது,பல் முனைகளில் தினமும் இயங்குவது.


இன்று பேசத்தக்க பிரச்சனைகள் இரண்டு.அவை, நவ காலனித்துவத்துக்குப்பின்பான தமிழ்ச் சமூச நகர்வுக்குள் நிகழ்பவை.


ஒன்று,தமிழ்ச்சமூகத்தில் காலகாலமாக நிறுவனப்பட்ட பெண்சார்ந்த மதிப்பீடு-முரண்பாடு,மற்றது, பல்தேசியக் கம்பனிகளது தெரிவில் புதிய மூலதன இயக்கத்தில்சிதைந்த தமிழ்பேசும் மக்களது சமூகவாழ்வு.இதுள், இப்போது நான் முனைவது பெண்சார் மதிப்பீடு அல்லது, முன் தீர்ப்புக் குறித்த விவாதப்போக்கு என்பதன் நகர்வில் என்வரையான புரிதல் அல்லது உரையாடலென...

உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில், தமது இருத்தலைக் குறிவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை(சமீபத்தில் ஜேர்மனிய ஜனாதிபதி கோஸ்ற் கோலர் மக்களிடம் உண்மையொன்றைப் போட்டுடைத்தார்.அவ்கானில் ஜேர்மனியத் துருப்புக்கள் வர்த்தகக் காரணங்களுக்காவும் களத்தில் நிற்பதாகவும்,பொருளாதார ஆர்வங்களது நலனும் சம்பந்தப்பட்டதெனச் சொன்ன மறுநிமிடம் அவர் பதவி விலக வேண்டி வந்ததை ஞாபகப்படுத்தும்போது இந்த அதிகாரங்களது வர்க்கச் சார்பு எதுவரையென்பது புரியும்) வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.என்பதன் நியாயக் கூற்றின்வழி எவன்(ள்) சிந்திக்கிறான்(ள்) என்பதைவிட,ஒவ்வொருவரும் பூச்சுற்றும், "விடுதலை,சுயநிர்ணயவுரிமை,புரட்சி"என்பது குறித்துச் சாமானிய மக்கள் இனிப் புரிந்தாகவேண்டும்!நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது. இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இந் நிலையில்,பெண்ணடிமைப் போராட்டம் எப்போதும் பொருளாதாரத்தோடு பின்னப்பட்டுள்ளது.பெண்களின் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை உழைப்பை நிலைப்படுத்தும்போது "இத்தகைய பெண்மதிப்பீடு உடைவதற்கான வாய்யுண்டு என்பவர்கள்" கயவர்கள். பண்பாட்டுமாற்றத்தைக்கொண்டியங்கும் பொருளாதாரவுறவுகள் மெத்தனமாக மொழித்தார்ப்பார் குறித்து மௌனிக்கிறது.இது பற்பல தளங்களில் நிறுவனப்பட்ட தொடர்ச்சியை வற்புறுத்துகிறது.அதை உடைப்பதற்கு லீனா மணிமேகலையது கவிதையுலகு தமிழ்ச் சமூகத்தில் சில வினைகளையாற்றுவதை மறுப்பதென்பது சரியானவொரு பார்வையாகாது.


சமுதாயத்தை மாற்றத்துடிக்கும் முயற்சியிலுள்ளவர்கள் வானத்திலிருந்து நேரடியாகப் புவியுள் குதிக்கவில்லையென்பது உண்மைதானே?இதை லீனாவினது திசையில் பொருத்துவதில் என்ன தவறுள்ளது?


கயவர்கள் இந்தவுலகத்துள் மதவாதிகளாகவும்,போலிப் புரட்டற் "புரட்சி" பேசுபவர்களாகவும்,தேசியவெறியர்களாகவும்,இனவாதிகளாகவும்,அப்பட்டமான கொடிய சுரண்டற்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக,இந்தச் சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பரிணாமமும் எல்லோரிடத்திலும் உள.

இஃது,வெவ்வேவாறான சூழ்நிலைகளுக்கிணங்க உணர்வினது உந்ததுதலால் உருவங்கொண்டு வெளிப்படும்.அஃதே,ஒருவரை அளக்கும் அளவுகோலாக இருக்கமுடியாது.ஏனெனில், நாம் இயக்கத்திலிருக்கிறோம்(இஃது அமைப்பைச் சொல்லவில்லை. மாறாக, காரண காரிய-இயக்க விதிக்கமைய என்பதாக விரிவுறும்).எனவே,நம்மிடம் இருக்கும் அனைத்தும் யதார்த்தமாகச் சமூகத்துள் இருப்பவை-நிலவுவை.இதிலிருந்து மீண்டு,நாம் காணும் ("கற்பனையுள் வடிக்கப்பட்ட மனிதர்")அந்தத் மனித நிலை உருவாகுவதற்கு நீண்ட காலம் நமக்குள் போராட்டம் நிகழுகிறது.

இதற்குள் நமது ஆயுள் முடியலாம்.

We learn to accept ourselves,when we are accepted by others the way we are.

இதற்கு மேல் நீங்களோ நானே எவ்வளவு முனைந்தும் எமது நிலையைத் தாண்டிவிடத் தருணங்களில்லை.

நாம் வாழும் நிலை அத்தகையது.


எம்மினத்துள் ஊடுருவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாகப் பெண்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இது,புரட்சியைச் சொல்லிப் பெண்ணினது சுதந்திரத்தைக் குறிவைக்கிறது.தாம் காணும் "மாதிரிப் பெண்ணை"உருவாக்குவதற்கு முனைகிறது.பெண்சார் சிந்தனையைத் தமது நோக்கிற்கிணங்கப் புரிய முனைகிறது. தேர்வே இல்லாது, ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள "மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,புரட்சியாக இருந்தாலென்ன அல்லது,எதிர்ப் "புரட்சியாக"இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு பெண்விடுதலை நிமித்தம் பேசிக் கொள்ளலாந்தாம்.இதன் அபத்தமான புரிதல் வினவுத் தளத்தில் அதிகமான வாசகர்களது கருத்திலிருந்து புரிந்துணரத்தக்கதாகவேயிருக்கிறது. பற்பல ஆணாதிக்க உடலானது தத்தமது குடும்ப"ப் பெண்ணினது தோளில் அமாந்தபடி கொண்டையில் பூவைப்பதில் புரட்சிகர நியாயங்களை அடுக்குவது சரியாகாது.

இன்று, லீனாக் குறித்தான புரிதலானது நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்க வாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான உளவியலாகும்.இதை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இஃது,பேசுவது புரட்சியும் இல்லை-பெண்விடுதலையுமில்லை.இத்தகை விவாதங்களின் பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்துடனும்,புரட்சிகரமான நகர்வுக்கும் எதிரான இயங்குதிசையில் தகவமைக்கப்பட்டு உருவாகிறது.ஒடுக்குமுறைகள் நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் பெண்நிலைசார் கருத்துக்களது தெரிவில் லீனாவினது கவிதைகளுக்கான சில குறியீடுகள் உண்டாகிறது.அதை மறுப்பதில் எந்தப் புரட்சி பெண் நிலையில் மாற்றத்தைப் பண்ணிவிடும்?

இத்தகைய களவாணிப்பேர்வழிகளைப் புரிவதான தருணத்தைச் சொல்வதாகவிருந்தால்" சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு வாழ்பவர்கள் தமக்கேயுரிய இறுமாப்போடு உலகைத் தமக்குள் தகவமைக்கின்றனர்"எனப்பகர முடியும்."இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய "அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்நிலைசார் புரிதலென்பது சம்பந்தப்பட்டவர்தம் புரிதலேயொழிய அஃது, சமூகத்தில் இயங்கும் பெண்நிலை குறித்தான பெண்களது எதிர் செயற்பாட்டினது(லீனாவினது கவிதைகள்வகைப்பட்ட சொல்லாடல்கள்) குற்றமில்லை.

இதற்கேற்ற சுதந்திரத்தை இவ்வமைப்பு வழங்கும்போது இதன் சமூக யதார்த்தம் தனிநபர்வாதமாக மாற்றப்படுகிறது.அதன் உச்சம்தாம் தற்போதைய லீனாமணிமேகலைப் பிரச்சனையிலும் மையங்கொள்கிறது!

இஃது, தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு புரட்சி-பெண்விடுதலை வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்-போலிப் புரட்சிபேசும்!

எனவே, நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாதுள்ளது!

இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.

இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையத்தளமென இது விரிந்து கிடக்கிறது.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"லீனா மணிமேகலைக்கான தார்மீக-எதிர் நியாயங் குறித்துப் பேசுவதன் தொடரில் பல தளங்கள் முனைவுறுவது எதன் தெரிவின் நிபந்தனையென்பதே இங்கு முக்கியமானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.06.10

Donnerstag, Mai 27, 2010

ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும்,
ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:

கருத்தின்பால் காரணந் தேடுதல்!



வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்"ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் " எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.


"வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு" எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.


ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய"படைப்பாளிகள்" புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்... கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, "படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக" வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!


சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!


அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?


கேடுகெட்ட"படைப்பு"வாதிகளே கேளுங்கள்!


மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!


எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு "நியாயமான" வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.


இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி...இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?



புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?


தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!


இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?


இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் "மக்கள் சக்தி"லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?


இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.


நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.


இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; "புதிய படைப்பாளிகளா" அல்லது, "புரட்சிக்காரர்களா" என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?



இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.


பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.


புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!


இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.


இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.


இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

Freitag, Mai 14, 2010

தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு

வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்...



"உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சு
உயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளி
ஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடி
அருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம்


ஓலத்தில் கிழிபடக் காலத்தின் முனைப்பு
மாமிசத்தின் பிராண்டடிலில் கற்பிதம்
தேசமாய் மொழியாய்க் கலையாய்
காயிழந்தேன் தமிழுக்காக..."




ன்று 13.10.2010 , ஜீரி வீ(G TV) செய்தித் தொகுப்பாளர் நரேன் முன்னாள் புலி எம்.பி. சிவாஜீலிங்கத்திடம் பிரபாகரன்தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பேட்டி எடுக்கிறார்.


பிரபாகரனது தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பெரிய மனிதாபிமானிகளாக நடிக்கும் இந்த கேடுகெட்ட நரிகள், பார்வதி அம்மாளின் புதல்வன் "பாசிஸ்ட்" பிரபாகரனால் பழிவாங்கப்பட்ட எத்தனை பார்வதி அம்மாக்களையும்,அவர்களது வலிகளையும் கடந்த காலத்தில் பேசினார்கள்?


என்ன பெரிய மனிதாபிமானம் இந்த ப் பார்வதி அம்மாள் குறித்து...


எனக்குப் புரியவில்லை!


தேசமில்லாத தேசியம்:


தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் ,புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.





வன்னிப் புலிப் பாசிஸ்ட்டுக்கள் செய்த கொடுமைகளை, அங்கு வாழ்த மக்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.நான் சுவிட்ஸ்லாந்தில் நின்றபோது சந்தித்த "பார்வதி அம்மாள்" சொன்ன திடுக்கிடும் தகவல்: "பிரபாகரன் ஒரு சொறியன்-சர்வதிகாரி மட்டுமல்ல ஒரு மனநோயாளியுங்கூடவென்பது" அந்தத் தாய்கூறிய பொன்வரிகள்.


கேடுகெட்ட புலிகளது பாசிச நடாத்தை, சொந்த மக்களையே வதைத்தெடுத்தது.இந்த இலட்சணத்தில் அவனது தாய் பார்வதிக்கு மனிதாபிமானம் கேட்கும் புலிக்கயவர்களைக் கண்டிக்க எந்த நாய்க்கும் வலுவில்லை!இந்த நாய்கள் வன்னி அவலம் குறித்து எழுதும் எழுத்தாளர்களது கட்டுரையைப்படித்துவிட்டு மொழியிழந்து வாழும்போதும் நடிகைகளது வனப்பில் மயங்கத்தாம் செய்கின்றனர்.தமிழ்நாடு சென்று ரம்பாவைக் கல்யாணஞ்செய்யும் புலிப் பினாமிகள் இப்போது புலிகளுக்குப் பொன்னாடை போர்த்த"மே-18"வருவதற்குக் காத்திருக்கிறார்கள்!


இத்தகைய துரோகிகள்தாம் இப்போது பிரபாகரனென்ற கொடுங்கோன்மை மிக்க சர்வதிகாரிக்கும்,அவனது அடியாட்களுக்கும் நினைந்துருக விழாவெடுப்பதில்,தமிழீழ மக்களுக்கான உரிமை என்று புலம்புகின்றார்கள்.அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?


இக்காலத்தில் அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.


எனினும்,புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் பினாமிப் புலிகளாக உலாவும் தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள், இப்போது, பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை-நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.


தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு:


புலிகளைக் காட்டிக் கொடுத்த நரிகள் "நாடுகடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தலை நடாத்திய கையோடு, மே 18, 2010க்கு இன்னொரு ரவுண்டு வருவதற்கான முன்னெடுப்புகளில் மும்மரமாகச் செயற்படுகின்றனர்.அழுகுரல்களினூடாகப் பணம் பண்ணப் பிணம் செய்தவர்கள், இப்போது பிணமானவர்களது வரலாறு பகிர்ந்து பணம் பண்ணப் பல முயற்சியில்...




புலன் பெயர்ந்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வறுமைப்பட்ட ஜடங்கள் இன்னும் தாம் கற்றுக் குட்டிகள்தாமெனப் பகரும் செயற்பாட்டில் தமது வாரிசுகளைக் களம் இறக்கித் தம்மையும் சீரழித்துத் தமது வருங்காலச் சந்ததியையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி...


மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.


தடார் புடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.கேடுகெட்ட தமிழ் வியாபாரப் புத்தியுடைய சமூகக் கிரிமனல்கள் இப்போது எங்கும்" தமிழீழ அரசு,நாடுகடந்த தமிழீழ அரசு"வெனப் புலம்பியபடி புலம் பெயர் சமூகத்தின் முதுகில் குத்தியபடி...இதற்கு ஏற்றபடி"பேராசிரியர்கள்"எனும் போர்வையில் உலாவும் சேரன்,உருத்திருகுமார் போன்ற பொறுக்கிகளும் சித்தாந்த வலுக்கொடுத்து தமது குடும்பங்களுக்குச் சொத்துச் சேர்த்தபடி?...




இன்றைய GTV யின் கருத்துப் பகர்வுக்கமைய,நிலவுகின்ற அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாராளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது,இந்த ஜீ.ரிவீ (GTV)ஜெர்னலிசத்தால்!


இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.இதை ஜீ.ரிவி போன்ற புலிகளது பினாமி ஊடகம் தொடர்ந்து வாந்தியெடுக்கிறது.


மறுபுறமோ,புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள், இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!



இதை எங்ஙனம் முறியடிப்பது?:



1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,



2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,



3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,


4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,



5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும்,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும், வெளியக அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும் உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,


அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில் கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும் அவசியமாகிறது.


இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதியாக விளங்க முற்படுவதும் , அதை எங்ஙனம் புலிகள் தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் "கொலைக்கள அரசியலை" நமக்குள் திணித்தார்கள் என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இது குறித்து இப்போது மெல்லக்கசியும் எழுத்துக்களை மிக நுணுக்கமாக அணுகுவது,அதன் சமூக உளவியலைத் தறுவாகக் கற்பது(இதன் அர்த்தம் இதுவரை புலிக்காக வக்காலத்து வாங்கிய பொதுபுத்தி மக்களது அழிவில் எடுக்கும் அரசியல் நகர்வு என்பதாகும்(இந்தப் பொது புத்தி சகல மட்டத்திலும் வெகுஜன அரசியல் மற்றும் வர்க்க நலன் என்றாக விரியும்.) ).


இதை மறுத்து இயங்க முனையும் புலிகளது அரசியல்நீட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென இந்தியா வாந்தியெடுப்பதாக நமக்குச் செய்தி சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரச நிதியோடு தமது கடமையைச் செய்யும்போது,இன்னொரு புறம் உலக ஆதிக்க சக்திகளது தயவில் இயங்கும் குள்ள நரிகள் நமக்குப் புரட்சிப் பாடம் நடாத்துகின்றன.


இந்தக் கோலத்தில் தமிழ் மக்களது அரசியல் வாழ்வோ படு பாதளாத்தில்.என்ன செய்ய முடியும்?


புலத்துப் புலிப் பினாமிகளது வலை:


புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புலத்துப்புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள்(நாடுகடந்த தமிழீழ அரசு) மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது என்றவுண்மை புரியப்பட வேண்டும்!


தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சுற்றிய புலம்பெயர் புலித் தேசியவாதமதனது ஈவிரக்கமற்ற படுகொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலத்துப் புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன இன்று.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய காலத்தில் "புரட்சி-ஜனநாயகம்"என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் நரிகளது மந்திரமாக இருக்கிறது.இதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய சூழல் நெருங்குகிறது.எனினும்,காலம் அதற்கான தகவமைப்பைச் செய்யுமென நம்புகிறேன்.நமது மக்களது குருதியில் ஆதாயமடையும் புலத்துப் புலி அரசியல் தரகர்களைக்கடந்து-அந்நியச் சக்திகளைக் கடந்து, நாம் புரட்சிகரப்பணியைச் செய்தேயாகவேண்டும்.மக்களது விடிவுக்காக அவர்களே புரட்சிகரமாக அணிதிரளவேண்டிய இன்றைய சூழலில்,நாம் மேலும் எமது காரியத்தைத் தொடர்கிறோமா?


எமக்குள் முட்டிமோதிச் சுருங்கிய நாமோ நமது கைகளில் விலங்குகளை நாமே தயாரித்துப் பூட்டியுள்ளோம்.


இன்னும் விபரமாகச் சொல்வதானால், இயக்கவாத மாயை கடந்தும்,தத்தம் தலைவர் துதியைக் கடந்தும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்.


இல்லையேல்,மே 18க்கு ஓலமிட்டுப் பணம் பண்ணும் புலத்துப் புலிப் பினாமிகள் தமது அரசியலைத் தொடரப் புரட்சிகரப் பாட்டும் தமது எடுபிடிகளது வழியில் சொல்ல, நாம் அவர்களையும் நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்து,எமக்குள்ளே குட்டுப்பட்டு குடி கலைந்து...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.05.2010