Sonntag, Dezember 11, 2011

பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

பசந்தா பேட்டியும்,தமிழரங்கம்-இரயாகரனது கபட அரசியலும்!

-பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

"மிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்" கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

தமது காட்டிக்கொடுக்கும் அரசியல்வரலாற்றில் செய்த அனைத்துக் குலைப்பு அரசியலிலும்,அதன் உச்சமான இந்தப் பேட்டி அரசியலானது தம்மைத் தொடர்ந்து மக்கள்விரோதிகளாகவே நிலைப்படுத்தவும்,தமது எஜமானர்களுக்குத் தொடர்ந்து "இன்போமர்"களாகவே செயற்பட்டுத் தமது இருப்பை நிலைப்படுத்திப் புரட்சி வேசமிட்டுத் தொடர முனையும் சதி அரசியலில், இத்தகைய உலகப் பாட்டாளிய வர்க்கத்தின் ஒரு பகுதியான கட்சியின்-தலைவரின் பேட்டி அவசியமாக இருக்கிறது.இதற்காக இவர்கள் பசந்தாவின் எழுத்துக்களிலிருந்து வெட்டியொட்டிய அவரது கருத்துக்களைத் தமக்காகப் பசந்தாவே பேட்டியளித்துத் தந்ததாகச் சொல்லிப் பிரசுரிப்பதென்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சந்தர்ப்பவாத -நரித்தனமான செயற்பாடாகும்(பசந்தா இலண்டன் வருகை தந்ததும்,அவரைத் தமிழர்கள் தரப்பில் இனியொரு நாவலன்மட்டுமே சந்தித்திருந்ததென்பதும் நாம் அறிந்துகொண்டவைதாம்).

இவர்களது இந்தப் பேட்டிக் கட்டுரை குறித்து,இனியொரு நாவலன் பசந்தாவுடன் நேரடியாகவுரையாடியபின்,அவரது கருத்தின்படி இது அவரால் அளிக்கப்பட்ட பேட்டியல்லவென உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் பரவலாகக் கிடைக்கிறது.இந்த இரயாகரனது"புதிய ஜனநாய மக்கள் முன்னணி-தமிழரங்கம்"புரட்சிகர வேடமிட்டுக் கொள்ளத் தொட்ட இந்த இழிய செயற்பாடானது,இவர்கள் கூறும் மக்கள் நலத்திலிருந்து நோக்கப்படும்போது கிரிமினல் நடாத்தையாகும்.

இத்தகைய நடாத்தையின் மூலம் இவர்கள் கட்டியமைக்கும் அரசியலது தொடரெது?

கடந்தகாலத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துள் இரயாவினது பாத்திரமென்ன?



புலிப்பினாமி!.

புரட்சிகரச் சக்திகளை அணித்திரட்சியடையவிடாது பிளந்து,ஆட்காட்டி, அழித்தல்,மாற்றுக் குழுக்களை இலங்கை அரசினது கைக் கூலிகளெனப் புலிகளது அரசியலைப் புரட்சிகர வேசமிட்டுச் செய்வதுவரைத் தொடரும் இந்தப் பீடையை எங்ஙனம் விளங்கிக் கொள்வது?

சாளரத்தில் ஏறித் துப்பாக்கி காட்டி அச்சப்படுத்தித் தொடர்ந்த இரயாகரனது புலிமுகமானது புரையோடிப்போன புலிகளது அராஜகத்தின் இன்னொரு வடிவமென்பதை வரலாற்றில் பதிவு செய்வதுவரை எனது முயற்சி தொடரும்.


அராஜவாதிகள் எந்த வேசமிட்டுக்கொண்டாலும் பொய்மையும்,போலித்தனமும் உண்மையினது முன் செல்லாக் காசாகப் பல்லிளிப்பதைத்தவிர, அதற்கு எந்த வலுவும் கிடையாது.என்றபோதும், இந்த உதிரிப்பாட்டாளிய வர்க்கக் குணாம்சமானது,எப்படி வரலாற்றில் செயற்படுமென்பதை நாம் லெனினிடம் கற்றாலும்,இத்தகைய செயற்பாடுகள் மூலமாக இரயாகரன் தொடர்ந்து, நமக்கு அதன் சாத்தியமான எல்லைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இதை முன்வைத்து:

அரசியல் அறங்குறித்து நிறையப் பேசிக்கொள்ளலாம்,அதிலுங்கூட அப்பட்டமாக மக்களைச் சொல்லியே புரட்சிகரமான அரசியலைப் பேசுவதாகவும்,மக்களுக்காகவே தமது அனைத்து நடவடிக்கைகளும் செயலூக்முறுவதாகவும்,மக்களுக்கு வெளியில் நட்பு-மனிதாபிமானங் கிடையாதென்பதும்,தமிழரங்க-இரயாகரன் குழுவினது வாதமாகும்.புகலிடச் சிந்தனைமையத்தை உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பம்வரை இவர்களது அரசியலுக்குள் புலிவழியான அரசியல் அறங்களே அடிப்படையான நோக்கங்களைக் காண்பதற்கு அடிப்படையானதாகவிருந்தது.கடந்த காலத்திலிருந்து(தூண்டில் சஞ்சிகையில் நூறு பூக்கள் மலரட்டும் விவாதத் தொடர்) நான் இரயாகரனது அரசியலை ஒரு இணக்கமான அரசியல் போக்கிலிருந்து விலத்தியே வகைப்படுத்தியவன்!

இரயாகரன் என்பது ஒரு குறியீட்டுப் பெயராக வலுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி, ஒரு தனிமனிதனுக்குட்பட்ட கருத்து நிலையாகக் கட்டபட்ட கருத்துகளுக்குப் பின் பல தலைகள் மறைந்திருப்பதை நான் மூன்றாவது அணிக்குள் வகைப்பட்ட சில தேடல்களிலிருந்து புரிந்துகொண்டபோது,இது புலிகளது பினாமிகளைக்கொண்டவொரு அணியெனவும்,புரட்சிகரச் சக்திகளைத் துப்பாக்கி முனையில் அழிப்பது முடியாதவொரு நிலையில் புலிகள் தமது சக்திக் குட்பட்ட அழிப்பு அரசியலைச் செய்தபடி அதற்கு வெளியில் இந்தத் தமிழரங்கம்-இரயாகரன் கும்பலைத் தமது அழிப்பு அரசியலின் இன்னொருவகை(புரட்சிகரச் சக்திகளாக நடித்து மாற்றுக் கருத்தாளர்களை-புரட்சிகரச் சக்திகளை-வர்க்கவுணர்வுபெற்ற தோழர்களைக் அணைத்துக் குலைத்தல்) உறுப்பாகவே அரசியலைச் செய்யத் தூண்டிக்கொண்டிருந்தது.அதற்கானவொரு மறைமுகமான அநுமதியையும்-கண்காணிப்பையும் புலிகள் கவனித்துச் செய்தபடி இந்த இரயாகரன உருவாக்கிய புலம்பெயர் புரட்சிகர நாடகம் மிகவும் கீழ்மையான அனைத்துப் புலிவழிக் குணங்களுடனும் கட்டியமைக்கப்பட்ட காலத்தில், மக்களுக்காகப் போராடிய சபாலிங்கம்போன்றவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அதைக் காயடிக்கும் கருத்துக்களால் நீர்த்துப்போக வைக்கும் முனைப்பில் இரயாகரனது புரட்சிக் கட்டுரைகள் பேசவும் முற்பட்டிருந்தன.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து, இலங்கைப் பாசிச அரசால் கொல்லப்பட்ட பல புலித் தலைவர்களையும்,பிரபாகரனையும்"சரணடையாது இறுதிவரை போராடி மரணிக்கும் சக்தியாக"வருணித்து அவர்களுக்குப் புரட்சிகர வணக்கம்-தலைசாய்த்தலென இரயாகரன் குழுவாடிய நாடகமானது அவர்களது புலிவிசுவாச அரசியலை மக்களுக்கு அப்பட்டமாகச் சொல்லியது.

இதையும் மீறித் தம்மைப் புரட்சிகரச் சக்தியாக நடாகமாட இரயாகரன் பலதரப்பட்ட வேளைகளில் புலித்தலைவரைச் சாடிய கட்டுரைகளை எழுதிக்கொண்டு,தம்மைப் புரட்சிகர அரசியலின் தொடர்ச்சியாக முன்வைப்பதில் மிகத் தேர்ந்த நாடகத்தைச் செய்துகொண்டது.இது புலிகளது மிகத் தந்திரமான அழிப்பு அரசியலிலிருந்து தொடர்ந்த அரசியலே என்பதை நான் மட்டுமே புலம்பெயர் சூழலில் அதிகம் சொல்லிக்கொண்டேன்.எனது கட்டுரைகளை ஒரு வகைப்படுத்தலுக்குள் உட்படுத்த முனைந்தால் அதுள் பேசப்படும் "புலிப்பினாமிகள்" என்பது இந்தத் தமிழரங்க-இரயாகரன்-புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் குழுவுக்குள் நிலைப்படுத்தப்படும்"புரட்சி"வேட அரசியல் என்பதுதாம் உண்மையான அர்த்தமாவது!

சமீபத்தில் அம்பலப்பட்ட(பசந்தா பேட்டிவகை இழி அரசியல்-புதியகலாச்சாரத்தின் இரயாகரனது அரசியல்மீதான விவாதம்-விமர்சனம்-தோழமைத் துறத்தல்,புலித் தலைமையைச் சரணடையாது போரிட்டு மறைந்ததாகப் புனைந்து தலை சாய்த்தல்,புரட்சிகர வேசம்...) இரயாகரன் கோஸ்ட்டியின்புரட்சி- புலிப்பினாமி வேடமானது அவர்களை ஒரு முன்னணியை உருவாக்க வேண்டியவொரு சூழலுக்குள் தள்ளியதன் விளைவே,இந்தப் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோற்றம்.இவர்கள் புலிகளிடமிருந்தும்,இலங்கையில் மக்களது சொத்தைக் கற்ற நஷனல் வங்கிக்குள்ளிருந்து கொள்ளையிட்ட அன்றைய கோடிக்கணக்கான தொகையின் மூலமாகப் பலம்பொருந்திய நிதிவலுவுடன் தமது அரசியலைத் தொடரும் "தொழில் முறையான முறையில் எழுதித் தள்ளும்" கருத்தாடலை உருவாக்கிக்கொண்டனர்.

இரயாகரன் ஒரு தமிழ் அச்சகத்துள் வேலை பார்ப்பதெனும் போர்வையில், மாற்றுக் கருத்தாளர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களது கருத்துக்களை நீர்த்துப்போக வைக்கும் எழுத்துக்களை அவரது தோழமைகளோடிணைந்து தினமும் எழுதும் தொழிலை இந்தப் பொருட்பலத்துடன் செய்யும் இன்றுவரை,அரசியல் அறமென்பது ஒடுக்குமுறையாளர்களுக்குப் பினாமிகளாவிருந்து புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுப்பது தாமென்பதைச் சரிவரச் செய்து வருகின்றனர்.ஆங்காங்கே, ஒத்தர்களை வைத்து இவர்கள் உருவாக்கிய"புரட்சிகர"வேடமானது ஒருவகையில் இவர்களிடஞ் சிக்கிய மூலதனவலுவால் இன்றுவரை ஒருவித போலித்தனமான அழிப்பு அரசியலைப் புரட்சிகரமாகச் செய்வதில் பல கட்டச் செயற்பாடுகளை(தமிழ்த் தேசிய ஆவணக் சுவடிகள்வரை...) உருவாக்கியுள்ளது.

அம்பலப்பட்டு,அரசியல் அரங்கு நிர்மூலமான வேளைகளில் இவர்கள் நாடகமிடும்"மக்கள் நலன்"என்பது ஒருவித ஆயுதமாக மற்றவர்கள்மீது பாய்ந்து வலுவாகத் தாக்கும்.அறங்கெட்ட இயக்ககங்களது "வரலாறுகளை"பதிவதென்றும்,போராட்ட அநுபவங்கௌன்றும் இவர்கள் செய்யும் அரசியலது தொடர்ச்சி புலிப் பினாமி அரசியலது தொடரென்பதிலிருந்து கடந்த மாதத்தத்தில் தேனியில் மணியம் எழுதும் அநுபவத் தொடரில்(பலர் இதை வாசித்துவருவதால் விபரிக்கத் தேவையில்லை) இவர்கள் புலிப்பினாமிகளாகப் புலம்பெயர் தேசம்வரை தொடர்ந்த ஈனத்தனத்தை, என்.எல்.எப்.ரீ பிளவுக்குழுக்களென விளித்து மக்களுக்குச் சொன்ன செய்தியும் உண்மைமீதான சந்தேகத்தைத் தர முடியாதது.

இப்போது,இன்னும் விரிவாக இவர்களது நாடகங்களை-வேசத்தைச் சொல்வதென்றால், இந்த இரயாகரனால் பலமுறை சொல்லப்பட்ட செய்தியும்,நம்மால் நேரடியாக அநுபவமாகிய இலங்கையர் சங்கத் ஸ்தபகர் இரஞ்சித் கெனாயக்க ஒரு இலங்கை அரச லொபி உறுப்பாகும்.இத்தகைய லொபி அரசியலைப் பலமுறை விமர்சித்த இரயாகரன் சமீபத்தில் மனிதம் இரவியின் முக நூல் நிலைத் தகவலில் அறிமுகஞ் செய்ப்பட்ட இரஞ்சித்தின்நூல் அறிமுக(இது சுவிஸ் நாட்டில் மனிதம் குழுவால் நடாத்தப்பட்டிருக்க முடியும்) நோட்டீசைத் தனது தமிழரங்கத் தட்டியிலும் ஒட்டிப் புரட்சிகர-மாற்று அரசியலைத் தொடர்ந்தார்.இது,தனது கையுக்குள்ளிருந்துதாம் அனைத்தும் தொடர்வதாகவும்,தான் அனைத்தையுங் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்திக் கண்காணித்துவருவதாகவும்,தனது எஜமானர்களுக்குச் சொல்வதாக இதைக் காண்பிக்மொரு செயலூக்கத்தின் வியூகமாகக் கண்டுகொள்ளலாம்.உண்மையான புரட்சிகரச் சத்தியும்,அதன் செயற்பாடும் எப்படி இருக்கமுடியா தென்பதற்கு இரயாகரனது அனைத்துச் செயற்பாடுகளுமே உதாரணமானதும்,சாட்சியுமாக நம் முன் இருக்கிறது.

இதைப் பசந்தாவின் பேட்டியைக் கட்டியமைத்த போலி பேட்டியிலிருந்தும், தமக்கும் நேபாளப் புரட்சியாளர்களுக்குமான "தோழமை" உறவு இருப்பதாக நடாகமாடும் இந்தப் போலித்தனத்திலிருந்து, இந்த "இரயாகரன் புரட்சி" வினைக்குள்ளே தொடர்ந்து கட்டியமைக்கப்படும் மக்கள்விரோத-காட்டிக் கொடுக்கும் அரசியலையும்,புலிப்பினாமிச் செயற்பாட்டையும் மீளவும் இனம் காட்டுகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
11.12.2011

Samstag, November 19, 2011

"சமூக ஒழுங்கை" நிலைப்படுதத் தவறிவிட்டனர்

" மதவிரோதிகள்!,வேற்று மதமான "கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லது பௌத்தர்கள்தாம் " செய்திருக்க வேண்டும்.மத விரோதிகளை கண்டுபிடித்துத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தை மீளவும் ,விடுதலைக்காக ஸ்த்தாபனமயப்படுத்தும் அவர்களது அரசியல் தலைமையான புலிகள்[LTTE] முயற்சி செய்து ,சமூக ஒழுங்கை நிலைப்படுதத் தவறிவிட்டனர் போலற்றாம் தெரிகிறது!"


புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,"மாவீரர்"தினமெனவும்,தமிழ்ர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி கோயிற்றேரை எரிப்பதுவரை அவர்களது சமூகவிரோத்தச் செயற்பாடு ஆபாசமான வக்கிரத்தோடு கொலை அரசியலைக் காசுக்காச் செய்து கொள்கின்றனர்.இதை,தமிழ்த் தேசியத்தின்மீதான பாசமுடைய குழந்தைகள் மெல்ல,மிக இலகுவான மொழிகளால் கடிந்துகொள்கின்றனர்.

பிளவுபட்ட இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது.தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.





புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காக, அப்பாவி மக்களது வழிபடும் தலங்களையும் சொந்தங்கொண்டாடி அவற்றைத் தீவைத்துக் கொளுத்தித் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?

ஸ்ரீரங்கன்
19.11.2011

Sonntag, Oktober 16, 2011

புலி இயக்க "மாவீரர்கள்" போற்றத்தக்கவர்களா?

"மாவீரர்" தினக்கொண்டாட்ட வர்த்தகச் சூதாட்டம்,
இறுதித் துயரமா அல்லது புதிய ஆரம்பமா?; எதைக்குறித்தான குவிப்புறுதி?; எங்கேயாவது -எப்போதாவது "தியாகத்தின்" இருப்புக்குத் தமிழ்ச் சமுதாயத்தில் நியாயமுண்டா?; பிறகு ஏன்?மீண்டும்,மீண்டும், அலைந்தழிந்து காலம் எம்மைவிட்டகல்கிறது. காலத்தில் வாழவே முட்டாள்த் தமிழர்களால் முடியவில்லை!


"உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.


இஃது, நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்!

யுத்தங்கள் ஏதோவொரு வகையில் தமக்கான நியாயங்களைச் சொல்லி, மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.ஏதோவொரு நாட்டில் இரண்டு வகைப்பட்ட-அல்லது பலவகைப்பட்ட மனித அடையாளங்கள் தமக்கான பங்குக்கு,உரிமையெனப் பெயரிட்டுச் சண்டை போடுகின்றன.அவற்றில் தமக்கு ஏதாவது இலாபமுள்ளதாவென உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தேசங்கள் தேடுதலைக்கொண்டு பக்கஞ்சார்கின்றன.இதற்கான தெரிவில் தத்தமக்கு படை,கூட்டுப்படையெனக் கட்டியும் எழுப்புகின்றன.இதன் குறுகிய வடிவமாகத் தமிழ்த் தேசியம் பேசிய கயவர்கள் கூட்டம் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்து விட்ட கையோடு வர்த்தகச் சூதாடிகளாக மாற்றமுறும் போக்கானது மேற்காணும் நலன்களை ஒத்தது.




அங்கே,"மனிதாபிமானம்"மசிரைப்பிடுங்கும்-இங்கே"தமிழீழ விடுதலை"நோட்டு வேட்டை செய்யும்.


இதற்கான தோதுகளாக நரவேட்டையாடப்பட்ட இளைஞர்களை "மாவீர்ர்" சொல்லிப் புகலிடத்தில் வர்த்தகஞ் செய்யும் புலிப்பாசிஸ்டுக்களை ஓடோட வெருட்ட முடியாத அவலங்களாகத் "தமிழீழ விடுதலை", "மாவீரர்"தினம்,தமிழர் உரிமை எனப் பாடப்படும்!


இந்த இழி உரையாடல்களால் ஏமாற்றப்படும் மக்களது நம்பிக்கை, புலம் பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் பண நோட்டுக் களாக இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்களிடம்குவியும்போது,அவர்கள் அதைத் தனிச் சொத்தாக்கிக்கொள்ளும் பாரிய வர்த்தகச் சூதாட்டமாக மக்களது உழைப்பை அபகரிக்கின்றனர்.


இதைத் தடுத்து நிறுத்தாதவரை மக்களது விடுதலைக்கான அர்த்தம்பொதிந்த உரையாடல்கள் மேலெழ முடியாது.இத்தகைய தமிழ்ச் சமுதாயத்தின் கிரிமினல் முகிழ்ப்பானது அந்த இனத்தையே வரலாற்றிலிருந்து தொடைத்தெறியும் பாரிய வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது.



கூடவே,இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில் புலிவால்கள்-பினாமிப் புலிப் பாசிஸ்டுக்கள் தமது மோசாடியான எண்ணத்துக்கொப்ப இன்று, பல பிளவுகளாகப் பிரிந்து பண மோசடியில் சந்தி சிரிக்க வைக்கின்றனர். இப்படித்தாம், பண்டுதொட்டுத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் "தமிழ் அரசியல் வியூகம்" தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.


பணமென்ற ஒரே குறிக்கோளுக்காக இந்தத் தமிழ் வர்த்தக மனதுக்குச் சரணடைந்து மாண்டுபோன புலித் தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களையும் நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடிகிறது. அத்தோடு,யுத்தத்தால் நெருக்கடிக்குள்ளானவொரு சமுதாயத்தின் அன்றாட நெருக்கடியைத் தட்டிக்கழித்துவிட்டுப் பணம் சேர்ப்பதில் அனைத்தையுமே கொச்சைப்படுத்தியும் விடுகிறது!



வர்த்தகத்துக்கான ஒரு ஸ்த்திரச் சந்தையாகவும்,அந்தச் சந்தையில் தொடர்ந்து தங்களது எண்ணக் கருக்களை (விடுதலை சொல்லிப் புகலிடத் தமிழரைச் சுரண்டிக்கொள்ளும் "தமிழீழம்-விடுதலை,தமிழர் தாயகம்" இன்னபிற இழி குணம்.) நிதிமூலதனமாக மாற்றும் >தடார் புடாலென< "மாவீரர்" தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.


சமீப கால இலங்கையில், புலிப்பினாமிகளது அரசியல் நகர்வுகள் யாவும் "ஆயுதப்புலிகளை" அழித்துவிட்டுக் கருப்புப்பொருளாதார மாற்றங்களுக் கூடாகக் காய் நகர்த்துவது அம்பலமாகி வருகிறது. இங்கே, புகலிடத்தில் புலிப்பாசிசமானது பலவடிவத்தில் இந்த வர்த்தகச் சூதாட்டத்தில் பாரிய நிதி மோசடி மாபியாக்களாகவே இருந்துகொள்கின்றனர். இவர்கள் துதிக்கும் "மாவீரர்கள்" அனுசாரணையானவொரு லேபிளாகவும்,அந்த லேபிளைத் தாங்கிவரும் பண்டாமாகத் "தமிழீழம்" தயாரிக்கப்பட்டுத் தொடர்ந்து புகலிடத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டே போகின்றனர்.இந்த மோசடியான வர்த்தகத்துக்கு அனைத்துப் புகலிட ஊடகங்களும் ஒத்தூதித் தமக்கான பங்கையும் உறுதிப்படுத்தி விட்டனர்!


இந்த நிலையில்,ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூக சீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம்"மாவீரர்"துதி பாடி இருட்டடிப்புச் செய்யமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.10.2011

Sonntag, September 04, 2011

இலிபியா,அடுத்து ஈரான்?

இலிபியா,அடுத்து ஈரான்?

காதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளது.அமெரிக்கா தனது பெரு இராணுவத்துக்குத் தீனிபோடுவதற்குத் திண்டாடுகிறது.அதைத் தக்கவைப்பதால் நெருக்கடிக்குள்ளாகும் சந்தையைக் காக்க முனைகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் பெறுபேறாக இணைந்த ஐரோப்பியக் கூட்டமைப்புத் தன்னைத் தக்கவைப்பதில் ஐரோப்பிய மக்களது வாழ்வைப் பலியாக்குவதில் இணைந்த" ஐரோப்பா-யூரோ" எதிர்காலத்து வேலைவாய்ப்பின் அவசியமாக அனைத்து ஜனநாயக அலகுகளையும் நசுக்கிவிடுகிறது.லீசபொன் ஒப்பந்தத்தின் [ Treaty of Lisbon]பின்னான ஐரோப்பா, உலகம் முழுவதற்குமான நெருக்கடியை உருவாக்குவதில் முன்னணியிலுள்ளது.

இந்தப் புள்ளிகள் ஈரான்வரை மிகப்பெரிய யுத்தத்தைச் செய்துகொள்ளும்வரை முடிச்சுகளாக விரிகிறது.

சீன அரச எரிபொருட்கூட்டுத்தாபனம் ஈரானிய முதலீடுகளை மெல்லக் குறைத்துக்கொள்ள[ China drosselt Öl-Investitionen in Iran]முனைகிறது.இது ஈராக்கைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு வழிவிடுவதாக இருக்கிறது[Die chinesischen Geschäftemacher drosseln ihr Tempo in Iran offenbar nicht zuletzt auf Druck der USA. Peking versuche, die US-Regierung zu beschwichtigen, sagten Insider gegenüber Reuters].

கூட்டாகக் கொள்ளையிடப்படும் [Beuteverteilung in Paris]
லிபியா யுத்தம், தனது கொள்ளையைப் பங்கு போடுவதில் பாரிஸ்சில்கூடிக்கொண்டது.ஈராக் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட மக்களது புரிதல்,லிபிய யுத்தத்தில் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இந்தக் கருத்தியில் வெற்றியானது ஈரான் போருக்குத் தயாராக்கப்படும் கருத்தியல் ஆளுமையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்கிவிடுகிறது.




கடாபிக்கு எதிரானதென்பதில் லிபியாவின் சுயாதிபத்தியம் பலியாக்கப்பட்டதுபோல ஈரானுக்கு எதிரானதென்பதை அஹ்மாடிநெட்சாத்துக்கு[Mahmud Ahmadinedschad]
எதிரானதெனச் சொல்லிக்கொள்ளப்போகும் மையக் கருத்தியலுக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை யென்றாகிறது. ஏகாதிபத்தியத்தின் ஊடாக வலு அவ்வளவு பெரியது.அதன் ஆயுதப்பலத்தைவிட அதன் கருத்தியல் ஆயுதமே மிக வலியது.இதை எதிர்த்து இயக்கமுறும் மாற்றுக் கருத்துவலு மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிறது.



கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,ஈராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.என்றபோதும்,லிபிய யுத்தத்தின் பின்இதில் மீனவும் மாற்றங்கள் நிகழ்கிறது.சீனா தொடர்ந்து தன்னை இராணுவரீதியாகப் பலப்படுத்துவதும் இதன் தொடர்ச்சியே.சீனாவனது மிக நுணுக்கமாகத் தனது கையையே நம்ப முனைகிறது.இந்தக் கூட்டுக்களையும்-ஒப்பந்தங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கணிப்பதில்"சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம்"கூட நிலைமைக்கொப்ப ஒரு பொருட்டல்ல.


இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான[ Shanghai Cooperation Organization (SCO)] சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.எனினும்,இந்தக் கூட்டின் பிரதான இரு தேசங்களும்(இருஷ்சியா-சீனா)அமெரிக்க,ஐரோப்பியத் தேசங்களது சந்தையிலும்,அந்த வலையத்தின் தொழிற்சாலைகளது வெளி உற்பத்திதத் தேவைகளிலுமே தங்கியுள்ளன.இதன்பொருட்டு இந்தச் சங்காய்க்கூட்டுக்கூட வெறும் காகிதப் புலியாகவே காலப்போக்கில் மாறிவிடும்.


என்றபோதும்,ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.


சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து இதுவரை காரியமாற்றியது.ஈரானில் முதலீடுகளைத் தவிர்ப்பதிலிருந்து இன்றைய அமெரிக்க மூலதனத்தின்அதிர்வுகளிலிருந்து சீனா தன்னைத் தக்கவைக்க அமெரிக்காவினது விருப்புக்குத் தலையசைப்பதாகவே உண்மை நம்முன் எழுகிறது.




புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே சீனா ஈரானில் முதலீடுகளை மெல்லக் குறைப்பதாக அமைகிறது.இந்தத் ததிரோபாயமானது "தி கிரான்ட் செஸ்போர்ட்டை" [The Grand Chessboard: American Primacy and Its Geostrategic Imperatives ]எனக்குள் ஞாபகப்படுத்துகிறது.இதன் சூத்திரதாரி சீப்பினிக் பிரசென்ஸ்கியின் அடுத்த நகர்வுகள் இங்ஙனம் அமைக்கப்படுகிறது:


1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,


2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,


3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.அல்லது அதனோடு இணைந்து [Russen und Amerikaner starten Mega-Ölprojekt in der Arktis]எதிர்ப்பைத் தணித்தல்,பின் தனிமைப்படுத்தல்.



4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,


5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.


6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,


7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,


8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,நீண்டகால நோக்காக இருந்துவந்தபோதும்,லிபியாவின் எண்ணையைக் குறுகியகாலத்தில் கொள்ளையிடுவதற்காக ஜேர்மனிய அரசு,இருஷ்சியாவுக்கு விட்டுக்கொடுத்து South Stream எண்ணைக் குழாய் ஒப்பந்தம் கைச்சாத்தாயபோதும்,லிபியாவை அம்போவெனவிட்ட இருஷ்சியவோ இழக்கப்போது பலமடங்கு என்பதை ஈரானிய யுத்தத்தில் இரஷ்சியாவின் சார்பிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.


9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,இதன் விளைவாக நடந்தேறிய லிபிய யுத்தம் அதைத் தக்கபடி நகர்த்துவதின் உண்மையை ஆதாரமாகக்கொள்ளலாம்.


10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).

இந்நிலையில்,ஈரான்மீதான அமெரிக்க-ஐரோப்பிய அத்துமீறிய போரொன்றை எங்ஙனம்,இருஷ்சியா-சீனா அணுகப் போகின்றன வென்பதற்கு அவர்களது மூலதனத்தின் தொங்கு நிலைகளே தீர்மானிக்க முடியும்.எனவே,ஈரானிய அதிபர் தனது இன்றைய நட்பு நாடுகளாலேயே காலை வாரப்படுவார் என்பது கண்கூடாக மலாந்துவிடப்போகும் இன்னுஞ் சில காலத்தில்.


இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி [Zbigniew Brzezinski ]என்பது உலகறிந்த உண்மை.


ப.வி.ஸ்ரீரங்கன்
04.09.2011

Sonntag, August 21, 2011

புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

ஜோஸ்[ Jose Antoin] http://www.facebook.com/joseantoin ,புலிகள் இயக்கம் திடீரென வந்தவொரு இயக்கம்.அதன் தோற்றம் வளர்ச்சியை நாம் நேரில் அநுபவப்பட்டு எழுதுகிறோம்.பிளக் செப்ரம்பர் இயக்கங் குறித்து[Black September http://en.wikipedia.org/wiki/Black_September_%28group%29 ] "அறிவு-அநுபவம் " எப்படி உங்களுக்கு?

நாம் ஜெனரல் கியாப்பை , டாக்டர் சன்- யாட்சென் போன்றோரை சல்லடை போட்டுக் கற்ற அன்றைய நாளிலிருந்து புலிகளை மதிப்பீடு செய்து,அந்த இயக்கமானது மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாதவொரு அடியாட்படை இயக்கமென 84 இல் வகுத்துக்கொண்டோம்.இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ஆயுதமே அடிப்படை.வெறும் கற்பனைகளால் எவரும் புலிகளின் அழிவை முன் கூட்டிச் சொல்லவில்லை!புலிகள் அழிந்து சுக்கு நூறாவார்கள் என்பது அதன் வர்க்க நலனில் இருந்துதாம் மதிப்பீடாகியது.சமுதாயத்தின் பெரும் பகுதி மக்களது நலனைப் பிரநிதித்துவத்துக்குள் கொணராமலும்,மக்களைப் பார்வையாளர்களாக்கி,ஆளும் வர்க்க (வி)தேசியத்தை அது பிரதானப்படுத்தி மக்களை உணர்ச்சிக்குள் தள்ளியதும் அதன் வாயிலாகத் தமது எஜமானர்களுக் கேற்ப மக்களை கூட்டோடு கோவிந்த போட வைத்ததும் தற் செயல் நிகழ்வல்ல.

சிங்கள இனவொடுக்குமுறைக்கெதிரான மக்களது எதிர்ப்புணர்வைத் தமது இயக்க நலனுக்காகப் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தைச் செய்ய முடியாது.விடுதலைப் புலிகளது வரலாற்றை அநுபவத்துக்குள் உள் வாங்காமால் அதன் புறநிலையை வைத்து எவரும் விவாதிக்க முடியாது.அந்த அமைப்பு எவ்வளவுதாம் நிலப்பரைப்பைத் தனக்குள் வைத்துத் தனது அரச ஜந்திராத்தால் காத்தாலும் அதைத் தக்க வைப்பதென்பது முடியாது காரியம்.ஏனெனில் மக்கள் புரட்சிகரமானவுணர்வுக்குள் வாழாதவரையும் இது சாத்தியமில்லை.இது குறித்துப் பார்ப்போம்.

புரட்சிகரக் கட்சியோ ஒரு போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமெ ன்று கற்றுக் கொடுக்கும்,அவ் வேளையில் அதன் இராணுவமோ ஒரு புரட்சிகரக் கட்சியைப்போன்று போராட்டத்தை நடாத்துகின்றதோ அப்போதுதாம் அது இராணுவம் எனத் தகுதியைப் பெறும்.புலிகள் அமைப்பானது அரச கூலிப்படைகளை நொட்டி-நொட்டி மக்களைச் சலிப்புக் குள்ளாக்கியதும்,அரச ஆதிக்கத்தை உடைத் தெறியாமலே அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கைவைக்க ஆரம்பித்தது.இதுவே,அதன் தோல்வியை முன்கூட்டிக் கட்டியம் கூற வைத்தது.சர்வதேசச் சூழல்,தேசத்தின் வளங்கள்,பிரத்தியேகமான புவியில் அமைப்புகளெல்லாம் அந்த இயக்கம் கணிக்கவே இல்லை.அது,திடீரென அந்நிய ஆயுதங்களால் பெருக்க வைக்கப்பட்டு,அதன் சுயவளர்ச்சி முடக்கப்பட்ட ஒரு அடியாட் படையாகவே இருந்தது.

பிரபாகரன் வெறும் ஒளிவட்டங்கட்டியவொரு பொம்மை.

புரட்சிகரத் தன்மை(புரட்சிகர அடித்தளம்) துளியளவும் அற்றவொரு இயக்கத்தால் விடுதலையைச் சாதிக்க முடியாது.இதுதாம் புரட்சிகரக் கட்சியின் பாலர் பாடம்.

புரட்சிகரத் தன்மை என்பதைத் தமிழ்ச் சமுதாயம் இன்றுவரை புரியவே இல்லை!

புலிகள் இயக்கத்திடம் புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை அந்த மக்கள் கடிதப் பொருளாதாரத்தில் தங்கியிருந்தவர்கள்.யார் கழுத்தையும் நெரித்துத் தன் பிள்ளைகளை வாழ வைக்கும் சுய பொருளாதாரமற்ற ஒட்டுணிச் சமுதாயமாக இருந்தது-இருக்கிறது.வாழ்வைக்கொண்டியக்க வேறெந்த வழியுமற்றவர்களோ,கடுமையான ஏழ்மையின் காரணமாகவும்,வேறெந்த வழியுமில்லாமலும்-வாழ்சூழல் பாதிப்படைந்து,குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது திண்டாடிக்கொண்டிருந்தபோது சிங்கள அரசின் இனவொதுக்கல் பிரச்சனையை மையப்படுத்தி-கூர்மைப்படுத்தி (இராணுவம் கிராமங்களுக்குள் வாகனத்தின் ஊடாக வலம் வரும் வேளை குண்டெறிந்து தாக்க,பதிலுக்கு இராணுவம் அந்தக் குடியிருப்பு மக்களைத் தாக்கி அராஜகம் புரிய வைத்து, மக்களை அரசுக்கு எதிராகச் செயற்பட வைத்தல்)வாழ் சூழலை இனியில்லையென்றபடி பாதிப்புக்குள்ளியபோது,மக்களும் ஈழப் போராட்டத்துக்கு "ஆமாம்"போடுவது.இத்தகைய சூழலில் புலிகள் ஒவ்வொரு பகுதியாக இராணுவத்திடம் இழக்கும்போது போராட "ஆமாம்"போட்டு இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் இராணுவ வலயத்தில் சிக்குப்பட்டு அவர்களது வாழ்வு ஒரளவு-ஏதோவொரு சூழலில் ஒழுங்குக்வர இவர்கள் இதுகாறும் தாம்கொண்ட"ஈழவிடுதலை"இலட்சியத்திலிருந்து நழுவிக்கொண்டார்கள்.அத்தகைய சூழலில் புலிகள் என்ற அமைப்பு வெறும் இயக்கவாத மாயையில் சில ஆயிரம் இளைஞர்களைப் பலவந்தமாக உள்வாங்கிக் குறுகியது.

இதுதாம் புரட்சிகர அடிப்படை அற்ற போராட்ட முறைமை.இதன் விளைவு மக்கள் தொடர்ந்து புலிகள் அமைப்பிலிந்து அந்நியமானார்கள்.மக்களை அணிதிரட்டும் புரட்சிகரத் தன்மையின்றிய புலிகள்.அந்நியச் சக்திகளின் தயவில் ஆயுதங்களைக் குவித்துவிட்டுப் புரட்சியைச் சாதிக்கும் கோதாவில் தொடர்ந்தது.அந்நியச் சக்திகள் தமது கனவுகளைத் (ஈழத்தில் புரட்சிகரக் கட்சியை இல்லாதாக்கல்,மக்களுக்கும் இயக்கத்துக்குமிடையிலான ஜனநாயத் தன்மைகளை ஒழித்தல்,மக்களைத் தொடர்ந்து ஆயுதத்தால் அச்சப்படுத்தி விடுதலையுணர்வைத் தடுத்தல்,இதன் வாயிலாகப் புரட்சிகரமாகச் சிந்திப்பவர்களை அழித்தல் அல்லது தேசத்தை விட்டு ஓட வைத்தல்-மக்கள் தமது வர்க்க ஒடுக்குமுறையைப் புரியாதிருக்கும் தமிழ்க் குறுந் தேசிய வெறியை பரப்புதல்,அதன் வாயிலாக மக்கள் பலமற்ற ஒரு ஊதிய அமைப்பை உருவாக்கி அதை அடியாட்படையாக்கல்,மக்களுக்கு எதிராகவும் மாற்று இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதங்களைத் திருப்பி எதிரி செய்யும் காரியத்தைப் புலி அமைப்பின்வழி செய்வித்தில்)தொடர்ந்து புலிகள் மூலம் அறுவடை செய்து புலிகளைக் குட்டவேண்டிய இடத்தில் குட்டி அழித்தார்கள். இதிலிருந்து என்ன தெளிவாகுதென்றால்,போராடும் விடுதலைப் போராளிகளுக்கு-இராணுவத்துக்கு போதிய புரட்சிகர இலட்சியங்கள் இல்லையென்றால் அத்தகைய போராளிகள் தமது சுயநலன்களைக் கைவிடாதவர்களாகக் குறுக்கிப் போய்விடுவர்.விடுதலைப் போராட்டம்-புரட்சி அவர்களது சுயநலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கும்போது அவர்கள் மிகவும் நம்பத்தகாதவர்களாக மாறியே தீர்வார்கள்.புலிகளது பிளவுகள் இந்தக் கோணத்தில் நிகழ்ந்தவை-உட்கட்சி ஜனநாயகமற்று தமது சொந்தப் படையையே அழித்துத் துரோகிகள் என்பதெல்லாம் இதன் நோயே!இதுவே,விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிவுறும் இயக்கவியல் புரிதல்.
இதெல்லாம் புலிக்குக் கொடி தூக்கிய புலம்பெயர் புண்ணாக்குகளுக்குப் புரியவே இல்லை!

மீளவுஞ் சொல்கிறேன்,அரச ஜந்திரம் என்பது வேறு,அரச ஆதிக்கம் என்பது வேறு.புலிகள் செய்த முதல் மூடத்தனம் அரச ஜந்திரத்தின்மீது கை வைத்தது.அரச ஆதிக்கத்துக்கள் இருந்து விடுதலை பெறமலே அதன் வன் முறை ஜந்திரத்தின் மீது கைவைத்தது.புலிகளுக்குப் புரட்சி பற்றி அக்கறையே கிடையாது.ஏனெனில் அவர்கள் தமிழ் மேட்டக் குடியின் கைப் பொம்மைகளாக இருந்தபடி அந்நியச் சக்திகளுக்கு அடியாளாகவிருந்த ஒரு மாபியா இயக்கம் என்பதை மீளவுஞ் சொல்லியாக வேண்டும்.

பல புரட்சியாளர்களது தோல்வியை ஆராய்ந்த லெனின் பின்வருமாறு கூறுகிறார்:"புரட்சி என்பது அரச ஜந்திரத்தின்மீது கை வைப்பதல்ல,மாறாக அரசு ஜந்திரத்தை உடைத் தெறிவதாகும்."

இறுதியாக:ஆதி ஆதவன் மேதைகளுக்கு, வணக்கம் சார்!ஒரு சின்ன வேண்டுகோள்: உங்களைப்போன்றோர் சிரிப்பதற்கு முதல் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,கூடவே, மக்கள் யுத்தமென்றால் என்ன,புரட்சிகரக் கட்சி-இராணுவம் அதன் அடிப்படைகள் என்னவென்றும்,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கப் போரே தொடருமென்பதையும் புரிந்துகொண்டால் மிகப் பெரிய புண்ணியம்.நீங்கள் சிரிக்கும்போது நாம் தலைக்கு மொட்டாக்கிட்டுச் செல்லமாட்டோம்.அந்தச் சிரிப்பின் பின்னே இருக்கும் அறியாச் சிறுபிள்ளைப்போக்கைச் சுட்டிக் காட்டுவோம்.அப்பவும் புரியாது போனால் காலத்தின் கையில் விட்டுவிட்டு,உங்கள் வர்க்க மூலத்தைக் கண்டடைய முனைவோம்.

இப்போதைக்கு இது போதும்.மேற்கொண்டு விவாதம் வளரும்போது,நாம் வேறு சில பக்கத்தைத் திறந்து அன்ரோனியோ நெக்றியின் ஒபேறியோ [Potere operaio ] 1973 களில் தோல்வியுற்றதுவரை விவாதத்தை வளர்த்துச் செல்லலாம்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
21.08.11

Sonntag, August 14, 2011

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

ன்பார்ந்தவர்களே,வணக்கம்!

அமெரிக்கப் பயங்கரவாதம் குறித்து உலகமே அறிந்திருக்கிறது.பட்டியலிட்டு,இன்னதெனக் கூறவேண்டியதுமில்லை!என்றபோதும்,இந்த வீடியோவில் உள்ள உரையைக் கேட்டுப்பாருங்கள்.அமெரிக்கா தனது சொந்தக் குடிகளுக்கே மோசஞ் செய்யும் பணக்காரர்களுக்கான தேசம். பணக்காரர்களுக்காவே உலகத்தைச் சுடுகாடாக்கும் தேசம் அமெரிக்கா, என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

இலூயீஸ் ஃப்றாக்கான்[Louis Farrakhan-Leader of the Chicago-based Nation of Islam (NOI).] மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல,மல்கோம் எக்ஸின் பரம்பரையிலிருந்து எழுந்தவர்.மால்கோம் எக்ஸ் பின்னாளின் புதிய இஸ்லாமிய நேசனைத் தழுவியிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.அப்பாதையில் நடக்கும் இந்தப் பேச்சாளர்,ஒடுக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுபவர்.எனது விழிகள்முன் மால்கோம் எக்ஸீன் மறு அவதாரமாகவே இந்த இலூயிஸ் ஃப்றாக்கான் தென்படுகிறார்.

எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே தனது எதிர்ப்பைச் செய்பவர்களே உண்மையான மானுட நேசிப்பாளர்கள்.அதைக் குறித்துச் சந்தேகமென்ன?

அமெரிக்கா,சொந்த மக்களையே திட்டமிட்டு அழிக்கும்போது,பிற நாட்டு மக்கள்மீது கருணைகாட்டுமெனக் கருது முடியுமா?

அமெரிக்கத் தூவராலயப் பெண் தமிழ்நாட்டில் வைத்துத் தமிழரை"அழகற்ற அழுக்கானவர்கள்"என்று அகங்காரத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் இந்த ஒடுக்கு முறை மனோபாவத்தின் தொடர்ச்சிதாம்.அதையும்விட, பல் நூறாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆரியக் குடியேற்றம்,காலனிய ஆதிக்கம்,பார்ப்பனிய ஒடுக்குமுறைகள்-ஆதிக்கமானது இன்று திராவிடக் கட்சிகளுடாகத் தமிழ்பேசும் மக்கள் மிகத் தாழ்ந்த சமூகச் சூழலில் கற்கால வாழ்க்கை நடாத்தும்போது, உலகத்தோடு ஒப்பிட முடியாத சமூகச் சீரின்மைக்குள்ளும்-சமத்துவமற்ற கல்வி ஏற்ற தாழ்வுக்குள்ளும் இருக்கிறார்கள்.



இந்த வீடியோ உரையாடல், மிக முக்கியமான சூழ்ச்சிகளைப் புட்டுவைக்கிறது.செவிமடுத்துத்தாம் பாருங்களேன்.

இறுதியாக: தமிழர்களாகிய நாம் "அழகற்ற அழுக்கானவர்களே"தாம்,எமது அரசியல்வாதிகள்-கட்சிகளால் நாம் இந்த நிலைக்கே வந்துவிட்டோம்!இதிலிருந்து நாம் மேலெழுவது நமது கைகளிற்றாம் உள்ளது.அதைத் தீர்மானிக்க வேண்டிய தருணங்களைத் தவறவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கே இலாயக்கு அற்றவர்கள்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
14.08.2011

Freitag, August 12, 2011

"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?

இராஜீவ் காந்தி கொலைக்கான தண்டனை:
"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?



"இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்."



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) "தூக்குத்தண்டனை"உறுதியாகி வருகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் வரலாற்றுப் பிரதி நிதிகளது பரம்பரையின் வீழ்ச்சி-அழிவில்(காந்தி கொலை-சஞ்சாய் காந்தி கொலை-இந்திரா காந்தி கொலை-இராஜீவ் காந்தி கொலை) இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பிளவை உறுதிப்படுத்தி விடலாம்.திட்டமிடப்பட்டு காந்தி-காந்தி குடும்பத்தவர்கள் அழிக்கப்பட்டதன் பின்னே மாறிவரும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள் முன்னிலைக்கு வந்தன.



இதன் தொடர்ச்சியான படுகொலை அரசியலானது,குற்றஞ் சுமத்தப்பட்ட மூவர்மீது(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) வழமைபோலவே"தூக்குத் தண்டனையை"சுமத்தி இருக்கிறது.இது,புலிவழிப்பட்ட கடைந்தெடுத்த துரோக அரசியலின் இன்னொரு பக்கத்தையொட்டி விவாதிக்க வேண்டியது.

அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு அடியாளாகவிருந்த புலிப் பாசிஸ்ட்டுக்கள்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகக் கூலிக்குக் கொலை செய்ய ஆயத்தமானபோது தனது பேரத்தில் இராஜீவ் கொலையை துன்பியில் நிகழ்வெனக் கூறிக்கொண்டது.இக் கொலையின் பின்னணியை புலி அடியாட்படையின் இந்தியவுறகளைத் திறம்படவும்-வெளிப்படையாயும் ஆரயக்கூடிய ஊடகங்களால் மட்டுமேதாம் கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் நியாயவாதிகளா-குற்றவாளிகளாவெனத் தீர்மானிக்க முடியும்.இங்கே,நீதி மன்றத்துக்கான வேலை இந்திய ஆளும் வர்க்கத்தைக் காப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எனவே,இத் "தூக்குத் தண்டனை" த் தீர்ப்புகளையிட்டு ஆச்சரிப்பட எதுவுமில்லை.ஆனால், நிசமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முயற்சியில் சிலரைச் சட்டரீதியாகக் கொல்வதையிட்டு நாம் விவாதிக்க முடியும்.

ஒரு கருத்துக்குப் பன்முகப் பட்ட புரிதல் சாத்தியமான இன்றையவுலகில் நாம் இராஜீவ் கொலை சம்பந்தமான கருத்துகளுக்கு ஒற்றை பரிணாமப் பாங்கில் புரிந்து கொள்வது-விவாதிப்பது எவ்வளவு அபாயகரமானதென்பதைப் புரிந்து கொள்ள இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களே சாட்சி!


இராஜீவ் கொலையைக் கூலிக்காகச் செய்த புலிகள் அதைத் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காகச் செய்ததாகத் தமது வால்கள் மூலம் கருத்துக்கட்டியபோது,இந்திய"அமைதிப்படை"அட்டூழியங்களைச் சொல்லி நியாயப்படுத்திய காலக்கட்டத்தில் இந்திய-தமிழ்நாட்டு மக்களில்பலர் அதை ஏற்க முடியாது இப்படியும் விவாதித்தார்கள்:

"ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை"-இந்திய பிரதான ஊடகங்களது வாசகர்கள்.

இன்று கொலைக் "குற்றவாளிகள்"மூவருக்கும் "தூக்குத் தண்டனை"உறுதியாகிவிட்ட நிலையில்,இதைச் சாத்தியப்படுத்தும் அருகதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்டா?இந்தியக் கட்சி அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தும் பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன யோக்கியதை உண்டு?

இந்தியச் சட்டத்துறையானது இந்திய ஆளும் வர்க்கத்தின் காப்பரண் என்பதைக் குறித்து முரண்பட உதுவுமில்லை.நிலவும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில் மேல்மட்ட வன்முறைசார் கருத்தியிலே நீதிமன்றம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.எனவே,இந்த அருகதையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அழிவு அரசியலைக் குறித்துப் பார்க்கலாம்.இந்த அரசியல் நகர்வானது தென்னாசியக் கண்ட நாடுகள்பூராக வாழும் மக்களுக்கு ஆபத்தானது.இத்தகைய அரசியல் தொடர்ந்து"தூக்குத் தண்டனை"உடாக வெற்றி பெறுமானாலும் இந்தியாவில் புரட்சிகரப் போராட்டம்,குடிசார் உரிமை அமைப்பாக்கம் யாவும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்ற உண்மையையும் புரிந்தாக வேண்டும்.

இந்த ஆபத்தான அரசியலை(ஆளும் வர்க்க-அதிகாரக் கூட்டத்தின் பயங்கரவாதத்தை) நியாயப்படுத்தும் ஆளும் வர்க்க கருத்தியற்றளமானது கீழ்வரும்படி மக்களைக் காயடித்தது:

1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2): பாகிஸ்தான், காஷ்மீரி மக்களை இந்தியாவுக்கெதிராக தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் பரந்துபட்ட மக்களுக்குள் சாத்தியமாகிறது. அதை நம்பும் தளமும் முற்றுமுழுதாக துக்ளக் சோ போன்றோரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இன்றை சீரழிவு ஊடகத்துறை என்பதும் 24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் என்ற வகையறாவுக்குள்ளும் காட்சிப்படுத்துவதாக எண்ணவோண்டாம்.


இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரும் இந்த வகை மையக் கருத்தியில் வன்முறையைச் செய்தே முடிக்கின்றனர்.இவர்களேதாம் "தூக்குத் தண்டனையை"நியாயப் படுத்தும் பேர்வழிகள்.இவர்களது முன்னோடி"மகாத்மா" காந்தி என்பதை, தோழர் பகத் சிங்கின்மீதான "தூக்குத் தண்டனையில்"காந்தியின் அரசியலை உரைத்துப்பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.

ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன.

இதுதாம் முள்ளிவாய்க்காலில் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.

நிலவும் அதிகாரத்துக்கு எதிரான திசையில் காரியமாற்றுபவர்கள் அதிகமாகப் பரந்துபட்ட மக்களது நலனின் நிமித்தமே தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.இதுள் நிலவும் ஆதிக்கம் ஆளும் வர்க்கமாக இருந்தாலென்ன அல்லது விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கமாகவிருந்தாலென்ன அவர்கள் எந்த வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தின் நலனையே பிரதிபலிப்பார்கள்.இதற்குப் புலிகள் இயக்கம் நல்ல உதாரணம்.பாருங்கள், புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்,உடந்தையாகவும் இருந்தவர்களில்லை.

கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கலாம்:
இராஜீவ் கொலைக்காகப் பலியெடுக்கப்படக் காத்திருக்கும் அந்த மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர்) முதலில், நரேந்திர மோடிக்குத்"தூக்குக் கயிறை"இந்திய நீதித் துறை வழங்குமாக இருந்தால் நிச்சியம் இந்த ராஜீவ் கொலைக் குற்ற வாளிகளுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கக் கூடும்!.




ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

12.08.2011

Montag, Juni 20, 2011

தீபத்தில்: கேள்வி - நேரம்!

தீபம் தொலைக்காட்சியில்இடம் பெற்ற "கேள்வி-நேரம்" பீ.ஏ.காதர்- கீரன்,சேனன்,புதிய திசைகள் மாசில் பாலன் போன்றோரது உரையாடல்கள் குறித்துக் கவனத்தைக் குவிக்கிறேன்.அவர்களது உரையாடலில் பல தளத்தில் உடன்பாடான கருத்துக்கள் விரிந்து கிடக்கும்போதும்,வர்க்க அரசியலில் வர்க்க நலன் குறித்த பார்வைகள் மிகவும் பலவீனமான புரிதலூடாக உள்வாங்கப்படுகிறது.இது குறித்துச் சிலவற்றைப் பார்க்கலாம்.


ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்-குறிப்பாக நிமலன்-யோகலிங்கம்போன்றோர்.


இதுள், தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.



இங்கே, தீபம் தொலைக்காட்சியில் உரையாடப்பட்ட விடையங்கள்கூட புலியரசியலது நீட்சியை வற்புறுத்தும் தந்திரத்தோடு கட்டியமைக்கப்படுவதில் மேலுஞ் சில ஞாபகங்களைச் சொல்லிச் செல்கிறது! உதாரணமாக: இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்தும், தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"புலம் பெயர் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும்குறியீட்டு அரசியல் நல்ல உதாரணமாக இருக்கின்றன.இது குறித்து நாவலனது சிறு குறிப்பு சிறப்பான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.அது,கிட்லரது காயடிப்பு அரசியலது வினைவரை பேசுகிறது.

=>

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய அழிவு-அரசியல் நிலையில், இத்தகைய "கேள்வி நேரம்"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச்(கீரன்போன்றோர்) சென்றுவிடுகிறதென்ற உண்மையில், அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்

==>>

புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.


அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள்(சாதியப் பிரச்சனை குறித்த கீரனது புரிதல்) எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை " இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது. மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்" என்றுதாம் சொல்வேன்!



தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர் நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல்-சேட்டைகள் இத்தகைய "கேள்வி நேரம் " புலம் பெயர் ஊடகச் சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமையையே தகர்க்கும் சாதியப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!


இதன் வழி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!


இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"பன்மைத்துவக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!


நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.இதை "கேள்வி-நேரம்"வழியாகக் கூடக் கடக்க முடியும்!என்றபோதும்,அதை ஏதோவொரு பெரு எண்ணவோட்டத்துக்கேற்பத் தகவமைப்பதுபோன்ற சூழலையும் கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது!இந்தப் பெரும் எண்ணவோட்டம் எந்த வர்க்கத்தைச் சார்ந்தியங்குகிறதென்பதே எனது கேள்வி!


இப்போது,மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத(புலி-ரெலோ...) வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இதை கீரன்-நிமலன் போன்றோரிடமிருந்து இனங்காண முடியும்.


இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய சிங்கள-தமிழ்அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது. இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு"தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை ஆளும்வர்க்கங்கள்.


எனவே,இன்றைய இலங்கையை கீழ்வரும்படி புரிந்து விடலாம்:


1: மகிந்தா தலையிலான இலங்கை அரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை "ஜனநாயகத்துள்"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!அதற்கேற்பப் புலம்பெயர் தளத்தில் கருத்துக்களைக் கட்டுவதில் கீரன்-இடது-வலது எனக் கோடிப் பயல்கள் பற்பல வடிவங்களில்...


2: ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.


இங்குதாம்,சேனன்,புதிய திசை பாலன் போன்றோரது கருத்துக்களைக் கூhந்து நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய சூழலது மதிப்பீட்டுக்கு வரமுடியாத எந்த உரையாடலும் வெறும் வினையகற்றிய போலிப் போராட்ட வடிவங்களுக்குள் மீளவும் நம்மைத் தள்ளிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

21.06.2011

Samstag, Oktober 02, 2010

தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் ...

"மாற்றுக் கருத்தாளர்களென"ச் சொன்ன நம்மில்பலர் புரட்சி செய்வதென்று கட்சிகள் கட்டினர்.அவை காலத்துக்கு முந்தியது.குழுவாதத்தில் நிலைக்க முடியாததெனச் சொன்னோம்.

தத்தமது இருப்புக்கான தெரிவுகளில் குழுக்கட்டல் தோன்றியது.

இக் குழுக்களால் முன் தள்ளப்பட்டொவ்வொரு இணையத் தளங்களும் தமக்கான தெரிவுகளில் அரசியலை முன்னெடுக்கின்றன.

அவையாவும் அப்பாவித் தமிழ் மக்கள் நலனை முதன்மைப்படுத்திக்கொண்டன.அந்த நலன்களை அடையும் வழிகளைக் காணாது அற்பத் தனமாகத் தமது விருப்புக்காக அவற்றைப் பாவனைசெய்வதில் இத்தைகய இணையத் தளங்கள் முந்திக்கொண்டன.

சமீபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு "இவரைத்தாம்" துணைவேந்தராக்கவேண்டுமென அறுதியிட்டு மனிப்புளேஷன் (Psychological manipulation)செய்யத் தேசம் நெற் கட்டுரை-ஆய்வு,பாலியற் புலானாய்வெனச் செய்து, Prof.Dr.இரத்தின ஜீவன் கூலுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறது நட்ஷத்திரன் செவ்விந்தியன் மூலம்.

தமிழரங்கம் படுபிசியாகத் தீபச் செல்வனெனும் "பாரிய" தமிழ்ப் படையாளியை-கவிஞரை புலிகளது விதேசியத்தில் உரைப்பதென்று தமது புலிச் சேவையின் தொடரை மறைத்துக் கட்டும் தொடரில் நாவலன்-குகநாதன் சமாச்சாரத்தில் ஆருக்கு ஆப்பு வைக்க முனைந்ததோ அந்த ஆப்பில் தமது பிடரிக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

ம.க.இ.க தமிழரங்கத்தின் மீதான தமது விமர்சனத்தை வினவுவில் போடுவதற்குள் அது இனியொரு தளத்தில் மீள் பதிவேற்றப்படுகிறது!

தமிழ்பேசும் மக்களுக்குத் தனிநாடு-விடுதலைப் பாடம் நடாத்துபவர்களில் கணிசமானவர்கள் இந்தவூடகங்களில் ஏதாவதொரு கட்டுரையையேனும் படித்திருக்க முடியும்.

அப்பட்டமான சுய நலங்களை முதன்மைப்படுத்தும் தேசம்-தமிழரங்கம் போன்ற குழுக்களிடம் இந்த மக்கள் நலன் வேறு சிக்கெடுக்கும்படியாக...

அவர்களே தமக்குத்தோதான சிக்கல்களைத் தொடர்ந்து கையிலெடுத்து நமக்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தச் சூழலில் ம.க.இ.க.தமிழ்நாட்டில் நிகழ்ந்த குகநாதன் மேட்டரில் இரயாகரனது "தீர்ப்பு"க்கு மறுப்புரை எழுதுகிறது.நியாயமாக நாவலன்மீதான சேறடிப்பை எதிர்த்து எழுதப்பட்டாலும் பகிரங்கமான விவாதத்தைத் தொடரும்படி கேட்பதில் அதன் வலுவான நம்பிக்கை தெரிகிறது.இந்த நம்பிக்கையானது இனியொருவின்மீதானதும்,சபா நாவலன்மீதானதென்றுமில்லாது உண்மைகளை எவரும் புதைக்க முடியாதென இரயாகரனுக்கு உணர்த்துவதாகவே எடுக்க முடியும்.

ஒருவரையொருவர் சேறடித்து இல்லாமற் செய்யும் நடாத்தையில் இத்தகைய குழுவாதம் மலிந்திருந்தபோது, ம.க.இ.க.வின் வருகையும் அதன் பகிரங்க வேண்டுகோளும் விவாதிக்கத்தக்க பொதுவரங்கில் நாவலன்போன்ற மார்க்சியர்கள்மீதான அவதூறாகச் சுட்டிக்காட்டப்ட்டு,இரயாகரனது "அம்பலப்படுத்தல்"பொய்த்துப் போகுமிடத்தில் தமிழரங்கத்தின் அரசியல் புரியத் தக்கதான எனது மதிப்பீட்டை மேலும் வலுப்படுத்தும்.

அவ்வண்ணம் நாவலன் குற்றமுடையவரென்று நிருபிக்கப்பட்டால், இரயாகரன் நாவலன்மீது முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டும் நியாயமானதென்றும் இரயாகரனது குழுவாத்துக்கு அது அவசியமான இருப்பையும் கொடுக்கும்.எனவே,தொடர்ந்து தமிழரங்கம் மீதான எனது விமர்சனமானது அவர்களது அரசியல்மூலத்தின்ஆதிக்கத் தெரிவுகளைக் கேள்விக்குட்படுத்துவது.

அவர்களோடு நாம் இணைந்து உருவாக்க முனைந்த "புகலிடச் சிந்தனை மையம்" திடீரெனக் கட்சியாக மாறவேண்டுமென்ற இரயாவினது சுயவிருப்பில் அஃதிப்போது,"புதிய ஜனநாயக மக்கள் முன்னணி"யாக மாறிய தெரிவில் நடந்தேறும் அதீதகக் குழிதோண்டலில் எவர் வீழ்ந்து மாள்வாரோ அவர்களது அரசியல் மட்டுமல்ல இதுவரையான தமிழ்ச் சூழலதும் "புரட்சி"க் காவடியும் சிதைந்து சின்னாபின்னமாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.10.2010

Sonntag, September 05, 2010

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.

நல்லூர்த் திருவிழாவும்,துப்பாக்கி விற்பனையும்.


"லைவர்"உரை நிகழ்த்துகிறார்.அவரது தலைவரான மிகந்தா மாத்தையாவோ நல்லூர்த் திருவிழாவில் பெரிய-பெரிய துப்பாக்கி(எஸ்.எல்.ஆர் போன்ற அமைப்புடன்) பிளாஸ்றிக்கில் விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்தத் துப்பாக்கிகளை யாழ்ப்பாண மக்கள் பரவலாக வேண்டிக்கொண்டிருக்கினமாம்.

தென்னிலங்கைச் "சகோதரர்கள்"இந்தத் துப்பாக்கி வியாபாரதை மிகப் பரவலாகத் திருவிழாவில் செய்கின்றனர்.யாழ்ப்பாணப் பெரிசுகளிலிருந்து,சிறுசுகள்வரை துப்பாக்கி வேண்டுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்-வேண்டித் தள்ளுகிறார்கள்!


இது குறித்து இந்தத் தலைவர் ஏதாவது தனது மக்களுக்குக் குறிப் புணர்த்தினரா?எல்லாம் தெரிந்த டக்ளஸ் மாத்தையாவுக்கு இந்தப் புலம் தெரியாதா என்ன?அவரும் தொடர்ந்து தனது மக்களைக் காட்டிக் கொடுக்கலாம்.

ஒரு போராட்டத்துக்குள்ளிருந்த மக்கள் சமுதாயம்,இனவொடுக்குமுறைக்கெதிரான ஆழ்மன அழுத்ததிலிருந்து இன்னும்விடுபடாத சமுதாயம் இத்தகைய துப்பாக்கித் தாகத்தை இயக்கவாத மாயையிலிருந்து விளையாட்டுத் துப்பாக்கியாக நுகரும்போது அஃதே ஆழ்மனவிருப்பாகக் கணிக்கப்படும்.

மகிந்தாவின் அரசுக்கு மிகச் சாதகமான கருத்தொன்று வைக்கப்படப்போகிற அபாயம் இந்தத் துப்பாக்கி விற்பனைக்கூடாக முன்வைக்கப்படப் போகிறது.

யுத்தத்துக்குப் பின்பான யாழ்ப்பாண மக்களது மனங்களை-சமூக உளவியலை அளக்கும் இந்த விளையாட்டுத் துப்பாக்கி விற்கும் நாடகத்தில் சாகடிக்கப்படும் சிவில் உரிமைகள் குறித்து எதிர்காலம் பேசும்.

யாழ்ப்பாண மக்கள் இன்னும் துப்பாக்கியை மறப்பதற்கில்லை.அவர்களது மனங்களில் எண்ணக் கருவாக இருக்கும் துப்பாக்கிமீதான காதல் அழிவதற்கு இன்னும் பல வருடம் எடுக்கும் என ஆய்வாளர்கள் சொல்வர்.

பிறகென்ன?

இராணுவ ரீதியான கண்காணிப்பும்,இராணுவக் கெடுபிடியும் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும்.

இந்த விளையாட்டுத்துப்பாக்கி விற்பவர்கள் வெறும் வியாபாரிகள் அல்ல.அவர்கள் எமது மக்களது மனங்களை அளவிடுகிறார்கள்.அரசினது சமூக ஆய்வாளர்களும்,அவர்களது பணியாளருமெனப் பலர் இதுள் இயங்குகிறார்கள்.

பாவம்பிடித்த நமது மக்களோ அப்பாவித்தனமாகப் பற்பல துப்பாக்கிகளை வேண்டித் தமது தாகத்தைத் தணிக்க அடுத்த இராணுவ நெருக்குவாரம் தொடரலாம்.

தமிழ் பேசும் மக்களைத் தொடர்ந்து கண்காணிப்பது,அவர்களது எண்ணங்களை அறிவது-ஆய்வதெனச் ஸ்ரீலங்கா அரசு மிக வேகமாகக் காய் நகர்த்துகிறது.துப்பாக்கி வேண்டும் குடும்பங்கள் கண்காணிக்கப்படுவர்.

எல்லாம் அவன் செயல்-இன்ஷா அல்லா!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.09.2010

Mittwoch, August 04, 2010

மெய்நிகரது மேன்மை

விடுதலையெனுங் கருத்தால்
விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்


சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.

தமிழ்பேசும் சமூகத்தின் இருப்பே இல்லாதாக்கிய இந்தப் போராட்டத்துள் இதுவரையான அழிவு,சமூகசீவியச் சீர்குலைவு குறித்து எந்த மதிப்பீடும்-பொறுப்புணர்வுமற்ற வாசகப் பாரம்பரியம் நமது சமூதாயத்தினது பாரம்பரியமாகத் தொடர்கிறது.குண்டி மண்ணைத் தட்டிச் செல்வதுபோல் மக்களது அழிவு-இழி நிலை குறித்து இயங்குகின்றனர்.எங்கே-எப்படி நமது மக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்,அவர்களைக் காட்டிக்கொடுத்து அழித்தவர்களே மீளத் தம்மைத் தகவமைத்து மக்களது "விடிவுக்கு"அரசியல் செய்வதாக இந்திய-இலங்கைப் பாசிசத்தோடு கைகோர்க்கும்போது,அதை அப்படியே கிடப்பில் போட்டபடி நமக்கு அரசியலுரைக்கும் அதே புலி மனதுக்கு, இந்தப் பாசிசத்தின் எச்சங்கள் குறித்து எந்தக் கவனமும் இருக்க முடியாதுதாம்.நாமும் அதற்காக அவர்களது நிலையிலிருந்து ஒரு சமூகத்தை நோக்க முடியுமா?
புலியை எவர்கள் அழித்தார்கள்-தோற்கடித்தார்களென ஓராயிரம் முறைகள்தமிழரங்கத்தில் சொல்லப்பட்டதை மீளப் படித்துத் தொலையுங்கோ. புலியைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி,அவர்களது அழிவு யுத்தத்தை"ஆக்க யுத்தமாக"க் கருத்திட்டவர்களும்,அதற்குச் சிந்தாந்த வலுக்கொடுத்தவர்களும் மிகவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்கள் எமது மக்களது அனைத்து வாழ்வாதாரத்தையுஞ் சிதைத்தபோது,அதை மௌனித்து மக்களை மொட்டையடிக்க விட்டவர்கள் இதே வகைத் தண்டனைக்குட்பட்டவர்களில்லை!ஆனால்,இத்தகைய சந்தர்ப்பவாதிகள்(சிவசேகரம் போன்ற புரட்டுக் கவிஞர்கள்-மார்க்சியர்கள்) அரசியல் நீக்கஞ் செய்யப்பட வேண்டியவர்கள்.

புரட்சிகரக் கட்சியெனப் பெயர் சூடுவதால்மட்டும் அக்கட்சியும் அதன் உபயக்காரர்கள்-உறுபினர்கள் புரட்சிகரமாகச் சமூகத்தை அணுகுவதாகவும்,செய்யவேண்டிய சூழலில் செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் அர்த்தமாக முடியாது.
இது,சிவசேகரத்துக்கு,சிவத்தம்பிக்கு,சண்முகரெத்தினத்துக்கு- இன்னுமேன், அனைத்துப் பல்கலைக்கழகப்"பேராசிரியர்கள்-விரிவுரையாளர்கள்"அனைவருக்கும் பொருத்திப் பார்க்கத் தக்க அரசியலைப் புலிகளிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில்,தம்மைக் "கல்வியாளர்கள்-பேராசிரியர்கள்"எனத் தம்பட்டம் அடித்தவர்களும்-அடிக்காதவர்களும் இணையும் பாதை தமிழ் பேசும் மக்களது உரிமையெனும் ஒரு முட்டுச் சந்தியில். இதைக் குறித்தான தேடலோடு அணுகியுள்ள ஒவ்வொரு அரசியல் நகர்விலும், புலியினது ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் நடாத்தையே தமிழ்பேசும் மக்களது உரிமை போராட்டத்தில் மையமுற்று முழுத் தேசியவின ஒடுக்குமுறைகளுக்கெதிரான வினாக்களைப் புலியிடம் தேடவேண்டிய நிலையில், புலிகளது அந்நியச் சேவை-அடியாட் பாத்திரத்தை புரிந்தவர்கள்- புரியாது நடித்துப் புலிக்கு அங்கீகாரத்தை-சித்தாந்த வலுவைக் கொடுத்திருக்கின்றனர்.

இங்கே,புரட்சிகரச் செயற்பாட்டோடு தன்னை இனங்காட்டும் சிவசேகரம் எந்தத் தர்மத்தின் அடிப்படையில் புலிகளது அழிவுப் போருக்கு எதிர்ப்பிடாது அல்லது மக்களிடம் உண்மையினை எடுத்துச் சொல்ல முடியாது மௌனித்தார் என்பதை வெறும் தனிநபர் செயற்பாட்டால் அளவிடமுடியாது.

சிவசேகரம் தன்னை இனங்காட்டும் கட்சியுடன் சேர்த்து, அவரை அணுகுவதில் எமது கருத்துக்கள் இருக்கிறது.தனிப்பட்ட சிவசேகரம் எப்போதோ காணாது போய்த் "தமிழ்த்தேசிய" அரசியலுக்கு முன்னால் தவிடுபொடியாகிக் கிடந்தார். அவருக்கு, அவரது தொழிலினது அழுத்தம்-அச்சம் சமூக ஆவேசத்தை அப்போது கொடுக்காதிருந்திருக்கலாம். இது,தனிநபர் பாதுகாப்புணர்வின் ஒரு அங்கமாகவும்-கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலின் தொடர்ச்சியாவும் இருக்கலாம். என்றபோதும்,சிவசேகரம் தற்போதைய சூழலில் "புலி செய்த போராட்டத்தை விமர்சித்துப் புலியினது போராட்டம் அழிவுப் போராட்டமென்றும்,அது அந்நியச் சேவையில் மக்களைப் பலிக்கடாவாக்கிறதென்றும் உண்மையை மக்களிடம் எடுத்தியம்பிப் புலியினது ஆட்பிடிப்பு"குழந்தைக் கடத்தல்"அரசியலை அம்பலப்படுத்தியவர்களைச் சாடுவதில்" கவனமுற்ற சிவசேகரம்- ஏன், அன்று புலிக்குமுன் மௌனித்தார்?(இங்கே,மறுபக்கமென்ற அவரது பத்தி எழுத்துக்களுக்குட்கூட புலியினது விதேசியப் போராட்டங்குறித்தும்-புலியினது பாசிசச் சேட்டை-கொலை அரசியல் குறித்தும் எதையுமே இனங்காணமுடியாது!மக்கள் புலிகளிடம் அனைத்து ஆதாரத்தையுங் பறிகொடுத்தபடி, ஒரு புறம் புலிப் பாசிசத்திடமும்,மறுபுறும், பெருங்கொடிய இனவாத அரசிடம் தமது அனைத்துவுரிமைகiயும் இழந்து கொத்தடிமைகளாக இருந்தபோது இவர்கள் மெளனித்துக் கிடந்தனர்.)

இந்தச் சந்தர்ப்பத்தை ஒழுங்காக இனங்கண்ட புலியினது பினாமிச் சிந்தனையாளர்கள்,குறிப்பாக, எஸ்.கே.விக்கினேஸ்வரன்,சேரன் போன்ற கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் புலிகளது போராட்டத்தை தேசிய விடுதலைப் போரெனச் சொல்லி,அதற்கான பாரிய சித்தாந்த வலுவைக் கொடுத்தனர்.

இவர்களது இந்தச் சிந்தாந்த வலுவானது புலிகளது பாசிசத்தை மேலும் தமிழ்ச் சமுதாயமெங்கும் வலுவாகப் பத்திப்படர வைத்தது அன்றும்-இன்றும்!அனைத்துமே-புலிசெய்த அனைத்துமே தமிழ்த் தேசிய விடுதலையின் அங்கமாக இனங்காட்டினர். இதில் விக்கியினது பங்கு மிக அதிகமாக இருந்தது. விக்கினேஸ்வரன்-சேரன் குழுவானது புரட்சிகரமான சிந்தனைப் போக்கைச் சிதைத்து நிர்மூலமாக்கியதற்கான எல்லா நியாயமும் சிவசேகரத்துத் தெரிந்தே இருந்தது. எனினும்,இந்த மனிதர் மௌனித்து அங்கீகரித்தார்.

இப்போது,தங்களுக்கும் புலிகளது பாசிசச் சிந்தாந்தப் போக்குக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனச் சேரனும் அவரது மைத்துனருமான விக்கியும் எல்லாக் கோவில்களிலும் கற்பூரம் அணைத்துச் சத்தியஞ் செய்கின்றனர்.அதே, நோய்தாம் சிவசேகரத்துக்கும்.இதில்,என்ன மாற்றமென்றால்-சிவசேகரம் புரட்சியெனப் பிதற்றியபடி, "அன்று புலிக்கும்-அரச பாசிசத்துக்கும் எதிராகப் போராடிய முகாமை வலிந்து சாடியபடி"தனக்கு இருப்புத் தேடுவது. இதுவொரு வகையில் பண்பாட்டுச் சேட்டைதாம்.

இதை அம்பலமாக்குவதென்பதும் மக்களைச் சார்ந்தியங்கும் சக்திகளது கடமையே!

மௌனித்தவர்கள், முன் வைத்து இயங்கும் அரசியலை விமர்சிப்பதென்பது அந்தச் சிவசேகரத்தின் தனிநபர் நடாத்தையை அல்ல. சிவசேகரம் உருவாக்க முனையும் அரசியல்-கட்சிசார் அரசியலின் நியாயவாதமானது காலவதியானது. அதற்கு எவ்விதத்திலும் தமிழ்பேசும் மக்களது விடுதலை-அரசியலுரிமை பற்றிப் பேசும் அருகதை -திறன் கிடையவே கிடையாது. ஏனெனில்,இலட்சக்கணக்கான மக்களைப் பலியெடுத்தபடி தமிழ்ச் சமூதாயத்தையே ஒட்ட மொட்டையடித்த புலிப்பாசிசத்தின் தொடர்ச்சியைக் குறித்து இன்னும் எந்த மன்னிப்போ-பொறுப்போ எடுக்காத கயவர்களான மேற் சொன்ன புலிப் பினாமிகள் குறித்து இன்னும் மௌனிக்கும் இக் கயமைமிகு சிவசேகரம் கோஷ்டி,புலிகளை அன்றிலிருந்த அம்பலப்படுத்திய தளத்தை நஞ்சுத்தனமாகவும்-விஷமத்தனமாகவும் விமர்சிப்பதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். இன்றைய அந்நியச் சேவையில் போட்டிபோடும் புலிகளது பினாமிகள்-முகாங்களை இயங்க அனுமதித்துவிட்டு,மயிரைப் பிடுங்கும் கிண்டலும் -நஞ்சு வைக்கும் குள்ள அரசியலையுந் தொடரும் சிவசேகரம் மக்களுக்கான அரசியலைத் தட்டிக்கழிப்பதன் தொடர்ச்சியாகவே இது தொடர்கிறது.

அன்று,"மரபு மார்க்சியர்கள்"புலிக்குத் தாரைவார்த்துக் கையளித்த அனைத்துவகைச் சந்தர்ப்பவாதமும் இன்று, அந்த மக்களைப் பலியெடுத்து ஓயந்துபோனதும் மீளத் தகவமைக்கும் சந்தர்ப்வாதப்"புரட்சி"க் கோசத்தையும் அதன்வழி தம்மை முன்வைத்து அரசியல் பேச முனையும் கெடுதியான நோக்கையும் எவரும் மௌனித்து ஏற்க வேண்டியதில்லை!

இன்றைய சூழலில் எவர் மக்களைப் பற்றி நின்றும், புலியினது பாசிசச் சேட்டையை அன்று அம்பலப்படுத்திப் புலியிடமிருந்த கொடும் வதைகள் பெற்றார்களோ, அவர்களேதாம் மக்களோடு இனியும் அரசியல் செய்வதற்கும்-போராடுவதற்கும் அருகதையுடையவர்கள்! சந்தர்ப்ப வாதிகளும்-சதிகாரர்களும் இனியும் எமது மக்களை மொட்டையடிக்க விடுவதற்கு இது, புலிப் பாசிசத்தின் காலமல்ல. மாறாக, இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரக்காலம். இங்கே,இலங்கையில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்களுடன் கைகோர்த்து, அவர்களது விடுதலைக்கான புரட்சிகரப் பாதையையும்-கட்சியையும் உருவாக்கும் பொறுப்பு அந்த மக்களிடம் இருக்கிறதென்பதும்,அதையொட்டி அவர்களைத் தகவமைப்பது புலிப்பாசிசத்துக்கும்-சிங்கள இனக்வொடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தமது ஆயுள்வரை போராடியவர்களுக்கே உண்டு.

சந்தர்ப்பவாத அரசியலைப் புரட்சியின் பெயர்கொண்டழைக்கும் சிவசேகரம்போன்ற கடைந்தெடுத்த மக்கள் எதிரிகளுக்கு எந்த அருகதையுமில்லை - மக்கள்,புரட்சி குறித்துப் பேசுவதற்கு!
இவர்கள் தகவமைப்பது மீளவுமொரு சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மக்களைத் தள்ளிப் இலங்கைக்கான ஐக்கிய மக்கள் புரட்சியைக் காயடிப்பதற்க்கே!
இந்தவுண்மையை நாம் இனங்கண்டதன் பயனாகவே,மேற்சொன்ன முகாங்களை,அவர்களது சந்தர்ப்பவாத-சதி அரசியலை அம்பலமாக்குகிறோம்.இது,மீளவும் ஒரு விக்கி-சேரன் கூட்டு நமது மக்களுக்குத் தேசிய விடுதலை-புரட்சி பேசிப் புலிகளது எச்சங்களை மக்களுக்குள் திணிக்காதிருப்பதற்கே!இதை உணரும் எல்லாச் சந்தர்ப்பத்திலும் சிவசேகரம்போன்றவர்கள் சந்தர்ப்பவாத அரசியலோடு மக்கள் கவனத்தைத் திசை திருப்பிச் சதிகாரர்களை நமக்குள் ஊன்றுகிறார்கள்.இது,தமிழ்த் தேசிய அரசியலது அறுவடையிலிருந்து நமது மக்களை மீண்டெழ முடியாதவாறு அந்தச் சேற்றுக்குள் மக்களை மூழ்கடித்துத் தம்மைத் தகவமைக்கும் சதி அரசியலோடு சம்பந்தப்பட்டது.

சிவசேகரமும்,அவரது அனுதாபத்துக்குட்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியும் இதுவரை மக்களுக்கும் புலிக்குமிடையிலான அரசியலையும்,அதன் வழியாக விளைந்த சமுதாயச் சீர்குலைவையுங் குறித்து எந்த மதிப்பீடும் செய்யவுமில்லை,அதற்கெதிரான சித்தாந்தப் போராட்டத்தையும், அதன் வழியில் மக்களைப் புரட்சிகரமாக அணிதிரட்டும் தந்திரோபாயமுமின்றிச் சப்பைக் கட்டும் பாராளுமன்றச் சகதிக்குள் கிடந்து பிற்போக்கு அரசியலைத் தொடருகிறது. இது,ஒரு வகையில் எஞ்சிய புலிகளுக்குப் புரவலர்களாக இருக்கும் மேற்சொன்ன புலிப் பினாமிகளை மீளப் புனரமைக்கும் அரசியலின் வியூகமென்பது எனது பணிவான கருத்து.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.08.2010

Montag, August 02, 2010

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"



னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

சிவசேகரம் கவிதை எழுதுவார்.அது,எல்லோருக்கும் தொப்பியை அளவாகத் தைத்து மெல்ல நயவஞ்சகத்தோடு விஷம் பருக்கும்.இது, நடக்கும் தருணம் "புரட்சி"யின் பெயரால்.இப்போது,"புரட்சி" பேசுபவர்கள் அனைவரும், மற்றவர்கள் மந்தைத் தெருவில் நாலு மந்தைகளை மேய்ப்பதென்ற தோரணத்தில்"மார்க்சியம்"படிப் பிக்கின்றனர்.

காலந்தாம்!

இந்தவுலகத்தின் திசைவெளிகளெல்லாம் ஏதோவொரு புனைவுக்கும்-நிஷத்துக்கும் இடையில் காட்சிப்படுத்தும் நிஷம், எங்கோ ஒரு "அறிவாளியின்"வீட்டுக் கோடியில் அடை காப்பதாக இவர்கள் கருதுவதாகவிருந்தால் அஃது, நிஷமாகவே காலக் கொடுமைதாம்.

விஷமக் கருத்துக்களை கட்டிக் கவிதையெனக் கோர்க்கும் சிவசேகரத்திடம் நிஷமாகவே புரட்சி குறித்த எந்த மதிப்பீடும் இருப்பதற்கில்லை!அப்படி இருந்திருப்பின் புலியினது பாசிசச் சேட்டைக்கெதிராகப் பாரிய மக்கள்திரள் போராட்டத்தை இலங்கையில் நடாத்திக் காட்டியிருக்க முடியாதுபோயினுங் குறைந்தபட்சம் புலிகளது அழிவு யுத்தத்தை நேர்மையாக அம்பலப்படுத்தியிருக்க முடியும்.தன்னந்தனியர்களாக நாம் அம்பலப் படுத்தியபோது தலையைப் புதைத்துத் தமிழ்த்தேசியப்பால் குடித்தவர்கள், இப்போது, புரட்சிபேசி மற்றவர்களைச் சீண்டுகிறார்கள்.இவர்களெல்லாம் நீதியாகச் செயற்பட்டிருந்தால் தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு அழிவைப் புலிப் பாசித்தின் வழி சந்தித்திருக்க முடியாது!



மக்களைப் புலிகளும்,சிங்கள ஆளும் வர்க்கமும் மொட்டையடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இன்று, புரட்சிக் கோசமெனப் புலம்பும்"கவிதை" தனிநபர்வாதமாக மற்றவர்களுக்கு "ஒழுங்கு"கற்பிக்கிறது!புலிகளது அராஜகத்தின்வழி, கேடுகெட்ட பாசிசம் கோலாச்சியத்திற்கு இந்த மனிதர்கள் எங்ஙனம் காரியம்-ஒத்திசைவாகவிருந்தார்களென நாம் பல் நூறு கட்டுரை எழுதியுள்ளோம்.என்றபோதும்,இன்றைய "புரட்சிகர-மார்க்சிய"ப் புதிய புரவலர்கள் கட்டியமைக்க முனையும் கருத்துக்களோ அவர்களது பின் தங்கிய புரிதலை நன்றாகவே நமக்குப் புரியவைக்கிறது. எல்லாக் காலத்துக்கும் அடிப்படையான புரிதல் பொருந்திவிடுவதாக இவர்கள் புசத்துகிறார்கள்.

புலிப்பாசிசத்தின்"(வி)தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு" மார்க்சியத்தின்வழி மரபுரீதியாகக் கருத்துச் சொல்லிக்கொண்டு மௌனித்திருந்த இந்த மகான்களெல்லாம் இப்போது கிணற்றுக்குள்ளிருந்து வெள்ளமேற வெளியல் வந்த தவளைகளாகக் கத்திக் கொள்கின்றனர்.அத்தக் கத்தலைப் புரட்சியின் தெரிவில்"புரட்சி" இலக்கியமெனப் புரட்டும் சிவசேகரம் தனது கடந்த கால மௌனத்தைக் குறித்துக் கிஞ்சித்தும் எந்த வருத்தத்தையுஞ் சொன்னதாக வரலாறில்லை!

பாசிசம் கோலாச்சியது எதன் பெயரால்?எவரது துணையோடு தமிழ்த் தரகு முதலாளிகள் இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தார்கள்? எவரது மௌனம் புலிகளுக்கு விதேசியச் சிந்தாந்தப் பலம் கொடுத்தது?

இன்று, இத்தனை இலட்சம் மக்களது வாழ்வை வேட்டையாட ஒத்துழைத்த இந்த நரிகளெல்லாம்"புரட்சி-புரட்சி"என ஊளையிடுகின்றன. இது, குறித்து விமர்சனம்-எதிர்வினையாற்றும்போது நேசமிகு அஷோக்கோ அதை வெளியிட முடியாது தவிர்த்துத் தனது கரசேவையை ஒழுங்குற நடாத்துகிறார்.

இதெல்லாம் "புரட்சிக்காரர்களுக்கு" உரிய கோலந்தாம்!நாமும் கடந்த கால் நூற்றாண்டாக இந்தப் "புரட்சிக் காரர்களை"ப் பார்த்தே வருகிறோம்-இணைவதும்,பிரிவதுமாக...

இயக்க வாத மாயை,அந்நியச் சேவை-அடியாட் பாத்திரமென எல்லா வகைத் துரோகத்தையும் ஒழுங்குற நமது மக்களது தலையிற் சுமத்தி,அவர்களது வாழ்வை நாசமாக்க"அவர்களுக்கு விடுதலை"வகுப்பெடுத்த இந்தக் கடைந்தெடுத்த கபோதிகள்தாம் தம்மையும் "பேராசிரியர்கள்-புரட்சிக்காரர்கள்"எனப்பசப்பு மொழி பேசுகிறார்கள்! என்றோ நமது மக்களது உரிமைகளை அந்நியர்களுக்கு ஏலம்விட்ட இத்தகைய மனிதர்கள் இன்றும்"புரட்சி" பேசுவதும்,கட்சி கட்டுவதும்,மக்களை ஏய்த்து அரசியல் செய்வதென்ற திசையில்தம்மைத் தகவமைத்துக்கொண்டதன் பயனென இவர்களே தமது நடத்தையின் மூலம் நமக்குரைக்கின்றனர்!

புலிப்பாசிசத்தின் தோல்வியில்,படிப்பினைகளைச் செய்து, மக்களது அரசியலைப் பேச வக்கற்ற இத்தக் கோமாளிகளுக்கு "மார்க்சியம்" குறித்தென்ன மதிப்பீடு இருக்கிறது? புதிய உலகவொழுங்கமைப்பின் இன்றைய புரட்சிகர நிலவரங்கள் என்ன? பாட்டாளிய வர்க்கத்தின் இன்றைய வர்க்கவுணர்வினது தீர்மானகரமான இருப்பு என்ன? புதிய தலைமுறையை நோக்கிய புரிதலில் எத்தகைய மனித மாதிரிகளை இனங்காண்கின்றனர்?தொழிற்சாலைக்கும் மூலதன இயகத்துக்கிடையில், உற்பத்திச் சக்திகளுக்கும்,உறவுக்கும் இடையிலான இன்றைய பண்பு என்ன?இது குறித்து எந்தப் புரிதலை தமிழ்ச் சூழலில் முன்வைத்திருக்கிறீர்கள்? இன்றையவுற்பத்தியில் பங்குறும் பல்கலைக்கழகங்களுக்கும் பாட்டாளிய வர்க்கப் பண்புக்குமிடையிலான முரண்பாடென்ன? இது குறித்தெல்லாம் புரிதலற்றவர்கள் எதிர்காலப் "புரட்சி" குறித்து வகுப்பெடுக்கின்றனர்.அதையும், அதே பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து நிலைகளோடு...

இவர்களிடம்,எதிர்வினையாற்றும்போது,அதை மறைத்து மதிலமைக்க முடியுமெனக் கருதும் கருந்துளைகளுக்கு"ஈர்ப்புச் சக்தியினது சுழற்சிக் கணம்"எத்தகைவொரு நிலையில் எத்தகைய எதிர்த் தாக்குதலைத் தருமெனப் புரிவதுகூடப் பொருந்தாத தருணந்தாம். இல்லையென்றால், எதிர்வினைகளை-பின்னூட்டங்களை வெளியிட்டு,ஆரோக்கியமானவொரு உரையாடலைக் கட்டியமைத்திருப்பார்கள்.

இவர்களது தெரிவில், கடந்தகால இயக்கவாதக் கொள்கை வழியான பரிதலே மேன்மையான கோட்பாடாகவிருக்கலாம்.இல்லையென்றால் அங்காலவொருவன் கட்சி கட்டுகிறான்.இங்காலவொருவன் தெரிந்தெடுத்த கருத்துக்களை வைத்து அரசியலமைக்கின்றான். இவர்கள் மார்க்சியமெனக் கத்தும் மந்தைக் கருத்துகளோ மார்க்சியத்தின் அரிச்சுவடியையே கற்காத இவர்களது மேதமையை வெளிப்படுத்துகிறது!

என்ன மேதைமை!

போங்க சிவசேகரரே-போங்க அஷோக்கு யோகன் கண்ண முத்துப் புரட்சித்தோழரே! புதுமையாய் ஏதாவது வழியில் கருத்துக்கு மதிலிட முனையுங்கோ...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.08.2010


இட்ட பின்னூட்டமும்,சிவசேகரத்தின் கவிதையும்:


"இருந்த இடத்து வேலையென்றால் எங்க வீட்டு அவரையுங் கூப்பிடுங்கோ..."

சிவசேகரம் அவர்களது இக் கவிதையை

மீள-மீளப் படித்துப் பார்த்தேன்.அவர், போடுகின்ற இக்கோலத்தை அவரது கடந்தகாலச் செயற்பாட்டை வைத்து அளவிடும்போது,புலிகள் பலமாக இருந்து, தமிழ்ச் சமூகத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்து, மனிதவுயிர்களுக்கு எல்லையில்லாத் தொல்லைகள் கொடுத்தபோது இவர் என்ன செய்தார்(?),எப்படிப் போராடினாரென எனக்குள் கேள்விகள் எழும்போது,பேராசிரியர்கள் புலியினது அழிப்புப் போருக்குத் தேசியக் குஞ்சம் தயாரித்துக் கட்டி அழகு பார்த்த உண்மையை மறக்கமுடியாதிருக்கு! ஒரு கொடிய பாசிசத்தின் முன் மௌனித்துக்கிடப்பதென்பது அந்தப் பாசிசத்துக்கு உடந்தையாகவே இருக்கிறது.


இப்போது,சிவசேகரம் அவர்கள் பரவலாக வாய் திறக்கின்றார்.இஃது,அழகானது!புரட்சி குறித்து நிறைய வகுப்பெடுக்கிறார்,அதுவும் தப்பு இல்லை!என்றபோதும்,இவர் போட்டுத் தாக்கும் தளமிருக்கே அது இறுதிவரைப் புலிப் பாசிசத்துக்கும்-இலங்கையினது இனச் சுத்திகரிப்புக்கும் எதிராகப் போராடியிருக்கிறது.இதை, மறுத்துவிட்டு எந்த மடையனும் இப்போது புரட்சியுரைக்க முடியாது!


புலிகளது கொடிய அழுத்தங்களையும்-கொலைவெறித் தாக்குதலையும் மீறிப் புலி பாசிசத்தை அம்பலப்படுத்தி,அவர்களது அழிவு யுத்தத்துக்கு எதிராகப் போராடிய வரலாறு மிக இலகுவாக நிராகரிக்கக் கூடியதல்ல!இதை, மௌனித்து இருந்தவர்கள்-புலிகளது போராட்டத்தில் தேசியவொடுக்குமுறைக்கெதிரான கூறுகள் இருப்பதால்-அதைத் தூக்கித் தாலாட்டியபடி, புலிகள் செய்த அனைத்து மனிதவிரோதப் போக்கையுங் கண்டுங்காணாதிருந்த நம்ம "பேராசிரிய!ப்பெருந்தகைகள் இப்போது புரட்சிக் கொடியுயர்த்துவதற்கு முன்னிலையில் நிற்கும்போது,இவர்தம் செயற்பாட்டின்மீது பெருத்த சந்தேகங்கொள்கிறேன்!


ஒரு கட்டத்தில்- 2000 க்கு பின்பான காலத்துள், முற்று முழுதாகப் புலிக்கு எந்த எதிர்ப்பையுமே செய்யாதவர்கள், மௌனித்துப் புலிகளது கொடியவொடுக்கு முறைகளுக்கு அங்கீகாரஞ் செய்தவர்கள்.இப்போது,இத்தகைய பெருந்தகைகள் மக்களரங்கு வருகிறார்கள்.அவர்கள், தமது கடந்தகாலக் "காய் அடிப்பு "அரசியலுக்குப் புது விளக்கமுரைத்துப் புரட்சிப் பாடல் கட்டும்போது "இவர்களது" கொடிய மௌனத்தின் விளைவு, இன்றைய நிலைக்கு எங்ஙனம் களமமைத்ததெனப் புரட்டியெடுத்துப் பதிலுரைப்பது எமக்கொன்றும் கடினமான பணியல்ல!ஆனபோதும்,இவர்களை எண்ணும்போது-எனக்கு ஐயன் ஸ்ரையினது புகழ்வாய்ந்த வாசகமே ஞாபகத்துக்கு வருகிறது.


>>Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.<<

-Albert EINSTEIN


"இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது, அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ, போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே."

-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி 02.08.10


புரட்சிக்கான மெய்நிகர் கொமிசார்

-சி.சிவசேகரம்

எங்கள் மெய்நிகர் கொமிசார் இவ்வுலகு
எவ்வாறு உருவாகி இவ்வாறாய் எவ்வாறு
ஆனதெனவும்― அதை
எவ்வாறாய் மாற்றல் ஏற்குமெனவும் அறிவர்
அதை
அவ்வாறாய் மாற்றல் எவ்வாறெனவும்
எதையும் எங்கே எப்போது எவ்விதம்
மாற்றலாம் எனவும்
எல்லாரும் அறியுமாறு எவருக்கும் ஏவவும்
மாற்றற்குரிய
பொருள் இடங் காலம் விதம் என அனைத்தையும்
வேண்டிய போது வேண்டியவாறு மாற்றவும்
பொறுப்பும் அதிகாரமும் உரிமையும் கடமையும்
பிறவும் உடையர்
ஆதலின்
பிறர் எவ்வாறு இவ்வுலகை மாற்றலாம் என
அவர் தனது
சாய்மனைக் கதிரையிற் சாய்ந்து சுவரை நோக்கியும்
படுக்கையிற் கிடந்து முகட்டை நோக்கியும்
உருளு நாற்காலியில் அமர்ந்து திரையை நோக்கியும்
ஆணைகள் பிறப்பிப்பர்
அவர் எதுவுமே செய்யாரென்பதுடன்
எவர் இவ்வுலகை மாற்றுவர் எனவும் அறியார்
ஆயினும் இவ்வுலகை
மாற்றத் தகாதோர் எவரென
அவர் அறுதியாயும் உறுதியாயும் இறுதியாயும்
அறிவர் ஆதலின்
அனைவரும் அறிமின்―
அவரை மீறி உலகை மாற்ற முனையும் எவரையும்
அவர் என்றென்றுங் கண்காணித்துச்
சாய்மனைக் கதிரையிலும்
படுக்கையிலும்
உருளு நாற்காலியிலுமிருந்து
கண்டன அறிக்கைகளைப் பிறப்பித்தவாறே
இறுதி வரையிலும் இருப்பர்

http://inioru.com/?p=15700

Dienstag, Juni 22, 2010

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...

இலங்கை மக்களது அரசியல் தெரிவுகுறித்து...


"தமிழ்ச்சமுதாயமும் தனது மதிப்பீடுகளை இன்றைய நோக்கு நிலையிலிருந்து மீளுருவாகஞ்செய்யாதுபோனால் அதன் இருப்பானது மிக மிகப் பலவீனமான நிலையையெய்துவிடும்.இன்றைய நமது சூழலானது மிகவும் கெடுதியான பொருளியல் நலனே முக்கியம் பெற்ற அதிர்வான சமூக சீவியத்தைக் கொண்டிருக்கும் காலமாகும்."



ன்றைய காலம் பரந்துபட்ட தமிழ்பேசும் இலங்கை மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.கடந்த கால அழிவுகுறித்து எந்த மதீப் பீடும் இல்லை! இதற்குள்புலம்பெயர் தமிழருள் புதுப்புதுக் கட்சிகள்,புரட்சிகரப்பாட்டும்,மக்களை அணிதிரட்டுவதுமெனக் கொட்டியபடி...


நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்,அதே இயக்க-கட்சிவாத மாயையில் நீந்தியபடி!இது எதற்கானது-எவருக்கானது?

அரச-புலி, வன்னியுத்த்துக்குப் பின்னான இன்றைய அரசியல் போக்குகளில்,புலம்பெயர் மக்கள் மத்தியில் உந்தித் தள்ளப்படும் பற்பல அரசியலை ஏதோவொரு காரணத்துக்காக,ஒவ்வொருவரும் திட்டமிட்டு முன்னெடுப்பதில் தம்மை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதுள், இலங்கையில் தமது வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துத் தினமும் செத்துமடியும் மக்களது நலன் எதுவென்பதில் நமக்குக் குழப்பமாக இருக்கிறதா? அப்படி இருப்பதில் தவறில்லை. காரணம்:"நமக்குள்தாம் எதிரிகள் இருக்கிறார்கள்-வெளியில் இல்லை"என்பதால் இது முற்றிலும் ஒரு குழப்பகரமான சூழல்தாம்.


இங்கே,தொடர்-தொடராகச் செய்திகளை-பேட்டிகளை அள்ளிவரும் ஊடகங்கள் தத்தமது வரும்படியோடு மிகவும் கவனமாகவொரு அரசியலை "நமது மக்களுக்காக"க் காவி வருகிறார்கள்.அழியும் மக்களது வாழ்விலிருந்து விரிவுறும் பண வரும்படிக்கான-பதவிகளுக்கான அரசியல் தெரிவு,மீளவும், நமது மக்களது விடுதலைக்கு வேட்டு வைப்பதில் புலிகளது பாணி அரசியலே தெரிவாக்குகிறது.இது,சுயநிர்ணயவுரிமையெனக் கத்திக்கொண்டே கடைவிரிக்கும் "புரட்சிகரக் குரல்",போலித்தனமாக, மக்களது விடுதலை-நலன் குறித்துக் குத்தகைக்கு எடுத்து கட்டுரை வாசிக்கிறது-இணையத்தில் போட்டியிட்டுப் புரட்சி பேசுகிறது!

இலங்கையில், மக்கள் தனிநபர் பயங்கரவாதத்துக்குள்தாம் சீவிப்பதாகச் சொல்லும் அரசியலானது அந்தத் தனிநபர் பயங்கரவாதக்கூறினுளொன்றான தமது பக்கத்தைப் புரட்சியென வரையறை செய்வதில் கவனமாக இருக்கின்றது.

இலங்கையின் அனைத்து அரசியல் நகர்வும், இலங்கை மக்களது சமூகசீவியத்துள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில், தனிநபர் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படும் உடனடி அரசியலானது வெறும் கிறுக்குத்தனமான அரசியலைப் பின்னணியாகக் கொண்டியங்குகிறது.அத்தகையவொரு அரசியலை வகுத்து இயக்கிவரும் அந்நிய நலன்சார் அரசியலொடுக்குமுறையின் ஒருவடிவமாகவெழும் இப்போக்கை, அதன் பின்புலத்தை மறைத்து, முதன்மைப்படுத்தலானது எதன் தயவின் தொடர்ச்சியென நாம் பார்ப்பது அவசியமாகும்.மிகத் தெளிவான அவர்களது வரையறை இன்றுவரையும் தொடர்கதையாக நீள்வதும்,மக்களின் எந்த உரிமையையும் "ஈழவிடுதலை-சுயநிர்ணயம்-புரட்சி"சொல்லி ஆயுத முனையில் பறிப்பதும் நாம் காணும் வரலாறாகவே இருக்கிறது.இவர்களே, வன்னியில் மக்களைத் தமது தேவைக்கேற்றபடி இலங்கை அரசிடம் பலியிட்டுவருபவர்கள் என்பதை நாம் மறந்துவிடமுடியாது.

ஒன்றுக்கொன்று மிக வியாபாரத்தனமாகக் கருத்துக்கூறும் இன்றைய அமைப்பாகும் அரசியற்றொடர்ச்சி மிக மோசமானவொரு பின்னணியைக்கொண்டியங்க முடியும். புதுப்புது விளக்கங்கள்-சித்தாந்தங்கள் சொல்லப் பலர் முழுநேரத் தொழிலாகப் பரப்புரை செய்துகொள்ளலாம்.எனினும்,மக்களுக்கும்,அவர்களது உயிர்த்திருப்புக்கும் குழிப்பறிப்பதில் "புரட்சி-கட்சி"யெனக் கத்தி" தனிநபர் பயங்கரவாதமாகக் குறுக்கப்படும் தமிழ் மக்கள்மீதான அந்நிய-அரசியல்ஒடுக்குமுறை வடிவங்களை முடிச்சுப் போடுவதில் கணிசமான மக்கள் அழிந்துபோனதையும் குறிக்கத்தவறுவது நியாயமாகிறதா?

ஆகணும்!

அப்படிப் பார்ப்பதே புலியழிவுக்குப் பின்னான போராட்டத்தின் தவறுகள்-குழிபறிப்புகள்-பலியிடப்பட்ட மக்களது பெறுமானம் குறித்துத் தொடராகப் புரிந்துகொள்வதற்கு ஏதுவாகும்.

"தமிழீழத்தின்" நீட்சி இப்போது சுயநிர்ணயவேடமாகிறது-"புரட்சிகர" அமைப்பாகிறது!.இலங்கை அரசுக்குத் தமிழ்பேசும் மக்களது உரிமைக்குரல் எப்படிப் பயங்கரவாதமாகிறதோ அதே வண்ணத்தில்தாம் இதுவும் தமிழ்பேசும் மக்களது காதுகளில் பூச் சுற்றுகிறது?

எமது விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டபோது அதைக் குறித்து அழுது வடிந்தவர்களோ அந்த வலியின் தொடர்ச்சியில் அதே புலிப்பாணி அமைப்பாவதைத் தொடரும் அபத்தம் "புரட்சியின்" முகமூடியோடு புதிய விளக்கம்பகர்வதில் அத்துமீறிய கருத்தியில் வன்முறையைத் தொடர்கிறது.இது,சாபக்கேடான அதே இயக்கவாத மாயையின் இன்னொரு வடிவமாகும்.சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் இந்த இயக்கவாதத் தொடர்ச்சியின் வருகையில் மக்களது இதுவரையான வாழ்வியிற்றேவைகளைக் கணக்கெடுப்பது புரட்சியின் பயனுறு நிலைப் பண்புக்கானதாகவிருப்பின் அதன் ஆணிவேர் மக்கள் சமூகத்தைத்தாண்டி இன்னொரு தளத்தில் வேர் அரும்புகிறதென்பதைக் குறித்துரைக்க வேண்டியதில்லை.இன்றோவிது,கடந்தகால அதே இயக்கவாத மாயயைத் தொடர்வதில் அதே பாணி அரசியலைப் புலம்பெயர் தளத்தில் புலிகளதுதெரிவில் பலர் பற்பல வடிவத்தில் உருவாக்கி வருகிறார்கள்.இந்த அரசியல் எவரையும் விட்டுவைக்க மறுக்கிறது.

பற்பல ரூபங்களில் இஃது, அரசியல் முனைப்பைக் கொண்டிருப்பினும் இதன் தளம் பாசிசமே.இஃது,எஞ்சிய புலத்துப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் இன்னொரு சக்தி உருவாவதை மிகக் கவனமாகத்தடுக்கப் "புரட்சிகர" அரசியலைக் கைலெடுத்து வைத்திருக்கிறது.கூடவே,மிகவும் கறாராக ஜனநாயக வேடந்தரித்து மாற்றுக் கருத்துச் சூழலைப் பூண்டோடு அழிப்பதில் புலிகளாகத் தமது இருப்பை நிறுவுகிறது.அனைத்தையும்"புரட்சி"என்ற சொல்லாடலாகத் தொடர்வதில் அதன் சாயம் வெளுத்துப்போவதைத் தள்ளிவைக்க முனைகிறது. இன்றைக்குப் புலிகளெனும்அடியாட் பாத்திரத்தின்இருப்பைக் குறிவைத்து நகர்த்தப்படும் அரசியலானது இலங்கைமீதான மேற்குலகத்தின் அபிலாசைகளில் பிரதிபலிக்கத்தக்கதாகும்.

மறுபுறுமோ, சீன-இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கமானது இன்றைய இலங்கை நிலைமைகளைக் உன்னிப்பாக உணரத் தலைப்பட்டதன் அடுத்த கட்டமாகக் காய்களை நகர்த்துகிறது,புலிகளாலும் மற்றும் இயக்கங்களாலும்-ஸ்ரீலங்கா அரசாலும் வஞ்சிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை திசை திருப்புவதற்காகவும்,தொடர்ந்தும் இந்தியத் தேசத்தில் சார்ந்தியங்கும் எண்ணவோட்டத்தை முனைப்புற வைக்கவும் பற்பல செயல்களில் இன்றைய புலம்பெயர் மாற்றுக் கருத்துச் சூழல் அமிழ்ந்துள்ளது. இதற்கான முன் தயாரிப்பாக அது புலம்பெயர் மக்களைப்பலவாறாகப் பயன்படுத்துகிறது. அதிலொன்று,இன்றைய "புரட்சி-கட்சி"அமைப்பாவதென்ற தொடரில் மையங்கொள்கிறது! இதுள்,மேற்குலகத்தின் அரசியல் அபிலாசைகள் மேலும் பல முகங்களை நமக்குள் இனம் காட்டும்போது,அங்கே,வினைப் பயன் தொடராக இயக்கவாதம் மீளத் தலையெடுப்பதில் இந்திய-மேற்குலக அரசியல் உந்ததலுக்கு இருவேறு முகமில்லை.அதன் பாத்திரம் ஒன்றுடனொன்று உறவுடையது.மொழிவாரியாகவும்,இனவாரியாகவும் பிளவடைந்த இந்தத் தேசமக்கள்,காலனித்துவக் கொடுங் கோன்மைக்கு நிகராக அநுபவிக்கும் துன்பமானது நமது இனத்தின் இருப்புக்கே அச்சத்தைத் தந்துகொண்டிருக்கு.நாம் நம்மைக் கருவறுத்துக்கொண்டே, அந்நியர்களும் நம்மை-நமது மக்களை அழித்தொதுக்கும் அரசியலுக்குப் பட்டுடுத்திப் பாய்விரிப்பதென்பது மிகவும் கவலைக்கிடமானது.இதற்கு பெயர் "புரட்சியை நோக்கி அமைப்பாவது-மக்களை அணித்திரட்ட(...)"என்ற வாய்ப்பாடு இதுவரை இயக்கவாத மாயையின் தொடராகவே மேலெழுகிறது.மக்களை நடைபிணமாகப் பார்த்த அன்றைய இயக்கங்களின் அதே பாணிக் கருத்துக்களை மேலும்"புரட்சி-அமைப்பாவது-மக்களை அணிதிரட்ட"என்ற வர்ணமுலாம் பூசுவதால் கடந்தகாலத் தவறுகள் மறைந்துவிட முடியாது.

நமது சமுதாயத்தின்"தேசியவிடுதலை"ப்போராட்ட வரலாற்றில் கட்சி-அமைப்பு அரசியலே மறுபரிசீலனைக்குட்பட வேண்டியது.அது,குறித்துரைக்கும் போராட்டச் செல் நெறியே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, வருடக்கணக்காக அதன் அறுவடைகள் குறித்து அலச வேண்டிய சூழலில் திடீர் கட்சி ஆரம்பித்தலென்பது மக்களைச் சுத்த முட்டாள்களாக்குவது.எமது மக்களை நம்பாத அரசியற் கொள்கைகள்-தலைமைகள் அந்நிய நாடுகளில் இருந்தபடி, புரட்சிக்குப் புதுப்புது விளக்கங்களை அள்ளி வீசுகின்றனர்.

புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழ்பேசும் இலங்கை மக்களது அரசியல் வாழ்வில்-சமூகப்பிரக்ஜையில் சமுதாய ஆவேசமாகிக் கொண்டேயிருக்கும் "இனவொதுக்கலுக்கு"எதிரான தமிழ்த் தேசிய அபிலாசையானது எந்தத் தடயமுமின்றித் தனது பங்களிப்பைத் தேசியப் போராட்டச் சவாலாக விதந்துரைப்பது இன்றைய நெருக்கடிமிக்க வன்னியுத்தத்துக்குப் பின்பான சூழலில் சாத்தியமாகமுடியும்.இதைக் கணித்து உள்வாங்கும் ஆதிக்கச் சக்திகள் பழைய இயக்கத் தொடர்ச்சிகளை மெல்ல உசுப்பேற்றித் தமது சேவகர்களாக்குவதில் "புரட்சி-கட்சி"எனக் மண் குதிரில் நின்று புலம்ப வைக்கிறது, நமது "தோழர்களை" இன்று!! இந்த மண்குதிர் நம்புவதற்கேற்ற படிமங்களைப் புரட்சிகர மொழிவுகளுடாகச் சொல்லும்போது ஒரு சிலர் மயங்கவும் முடியும். எனினும்,இது ஆபத்தான விளைவுகளின் நடுவே பரிதாபகரமாக மக்களை மேலும் முட்டாளாக்குவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல!

இலங்கை மக்கள் தமக்குள் இருக்கும் அரசியல் கயர்வகளை இனங்கண்டு,அவர்களது அரசியலை மறுக்காதவரையும் எவரும் புரட்சிகரச் சக்தியாகத் தம்மை இனங்காட்டி நம்மை ஏமாற்றித் தமது தரகு வேலையைச் செவ்வனவே செய்வார்கள்.இதுவே,நமது மக்களது விடுதலைக்கு முட்டுக்கட்டையான அரசியலாகவும் மீளவும் கொலைகளைச் செய்யும் இயக்கவாதமாகவும் நகர்கிறதுக்குக் கட்டியம் கூறுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

22.06.10

Donnerstag, Juni 03, 2010

வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான...

போராட்டமென்பது ஒரு தற்செயல் நிகழ்வல்ல.


(வினவு,மற்றும் தளங்களில் லீனாவின்எழுத்துக்கான ஆதரவு-எதிர்க்கருத்தாடல்கள் தொடக்கிவரும் கதையாடல்கள் குறித்து விளங்க முற்படுதல்)


ர்க்கப் போராட்டமென்பதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழு நாளையுஞ் செலவு செய்தே வருகிறது.


லீனா மணிமேகலையது படைப்புச்சார்ந்து வினவுத் தளத்தில் எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில்புரட்சிகர-எதிர் நடவடிக்கையென சுற்றமுனையுந் தருணங்களில் அனைத்தையும் குத்தகையெடுப்பதன் தொடர் நிகழ்வாக மாறும் மனித சுதந்தர மறுப்பில்,அவற்றை நோக்கிச் செல்வது சாத்தியமே.ஏனெனில்,போராட்டமென்பது தற்செயல் நிகழ்வல்ல.அது,பல் முனைகளில் தினமும் இயங்குவது.


இன்று பேசத்தக்க பிரச்சனைகள் இரண்டு.அவை, நவ காலனித்துவத்துக்குப்பின்பான தமிழ்ச் சமூச நகர்வுக்குள் நிகழ்பவை.


ஒன்று,தமிழ்ச்சமூகத்தில் காலகாலமாக நிறுவனப்பட்ட பெண்சார்ந்த மதிப்பீடு-முரண்பாடு,மற்றது, பல்தேசியக் கம்பனிகளது தெரிவில் புதிய மூலதன இயக்கத்தில்சிதைந்த தமிழ்பேசும் மக்களது சமூகவாழ்வு.இதுள், இப்போது நான் முனைவது பெண்சார் மதிப்பீடு அல்லது, முன் தீர்ப்புக் குறித்த விவாதப்போக்கு என்பதன் நகர்வில் என்வரையான புரிதல் அல்லது உரையாடலென...

உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில், தமது இருத்தலைக் குறிவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை(சமீபத்தில் ஜேர்மனிய ஜனாதிபதி கோஸ்ற் கோலர் மக்களிடம் உண்மையொன்றைப் போட்டுடைத்தார்.அவ்கானில் ஜேர்மனியத் துருப்புக்கள் வர்த்தகக் காரணங்களுக்காவும் களத்தில் நிற்பதாகவும்,பொருளாதார ஆர்வங்களது நலனும் சம்பந்தப்பட்டதெனச் சொன்ன மறுநிமிடம் அவர் பதவி விலக வேண்டி வந்ததை ஞாபகப்படுத்தும்போது இந்த அதிகாரங்களது வர்க்கச் சார்பு எதுவரையென்பது புரியும்) வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.என்பதன் நியாயக் கூற்றின்வழி எவன்(ள்) சிந்திக்கிறான்(ள்) என்பதைவிட,ஒவ்வொருவரும் பூச்சுற்றும், "விடுதலை,சுயநிர்ணயவுரிமை,புரட்சி"என்பது குறித்துச் சாமானிய மக்கள் இனிப் புரிந்தாகவேண்டும்!நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது. இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இந் நிலையில்,பெண்ணடிமைப் போராட்டம் எப்போதும் பொருளாதாரத்தோடு பின்னப்பட்டுள்ளது.பெண்களின் அன்றாட வாழ்வுக்கான அடிப்படை உழைப்பை நிலைப்படுத்தும்போது "இத்தகைய பெண்மதிப்பீடு உடைவதற்கான வாய்யுண்டு என்பவர்கள்" கயவர்கள். பண்பாட்டுமாற்றத்தைக்கொண்டியங்கும் பொருளாதாரவுறவுகள் மெத்தனமாக மொழித்தார்ப்பார் குறித்து மௌனிக்கிறது.இது பற்பல தளங்களில் நிறுவனப்பட்ட தொடர்ச்சியை வற்புறுத்துகிறது.அதை உடைப்பதற்கு லீனா மணிமேகலையது கவிதையுலகு தமிழ்ச் சமூகத்தில் சில வினைகளையாற்றுவதை மறுப்பதென்பது சரியானவொரு பார்வையாகாது.


சமுதாயத்தை மாற்றத்துடிக்கும் முயற்சியிலுள்ளவர்கள் வானத்திலிருந்து நேரடியாகப் புவியுள் குதிக்கவில்லையென்பது உண்மைதானே?இதை லீனாவினது திசையில் பொருத்துவதில் என்ன தவறுள்ளது?


கயவர்கள் இந்தவுலகத்துள் மதவாதிகளாகவும்,போலிப் புரட்டற் "புரட்சி" பேசுபவர்களாகவும்,தேசியவெறியர்களாகவும்,இனவாதிகளாகவும்,அப்பட்டமான கொடிய சுரண்டற்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஆக,இந்தச் சமுதாயத்தில் நிலவும் அனைத்துப் பரிணாமமும் எல்லோரிடத்திலும் உள.

இஃது,வெவ்வேவாறான சூழ்நிலைகளுக்கிணங்க உணர்வினது உந்ததுதலால் உருவங்கொண்டு வெளிப்படும்.அஃதே,ஒருவரை அளக்கும் அளவுகோலாக இருக்கமுடியாது.ஏனெனில், நாம் இயக்கத்திலிருக்கிறோம்(இஃது அமைப்பைச் சொல்லவில்லை. மாறாக, காரண காரிய-இயக்க விதிக்கமைய என்பதாக விரிவுறும்).எனவே,நம்மிடம் இருக்கும் அனைத்தும் யதார்த்தமாகச் சமூகத்துள் இருப்பவை-நிலவுவை.இதிலிருந்து மீண்டு,நாம் காணும் ("கற்பனையுள் வடிக்கப்பட்ட மனிதர்")அந்தத் மனித நிலை உருவாகுவதற்கு நீண்ட காலம் நமக்குள் போராட்டம் நிகழுகிறது.

இதற்குள் நமது ஆயுள் முடியலாம்.

We learn to accept ourselves,when we are accepted by others the way we are.

இதற்கு மேல் நீங்களோ நானே எவ்வளவு முனைந்தும் எமது நிலையைத் தாண்டிவிடத் தருணங்களில்லை.

நாம் வாழும் நிலை அத்தகையது.


எம்மினத்துள் ஊடுருவியுள்ள கருத்தியல் ஆதிக்கமானது அதிகாரத்துவங்களின் வழி தோன்றியது.இது காலாகாலமாகப் பெண்களை அடிமைத்தனத்துள் இருத்திவைக்கும் பண்பைத் தன்னகத்தே கொண்டியங்குகிறது.இது,புரட்சியைச் சொல்லிப் பெண்ணினது சுதந்திரத்தைக் குறிவைக்கிறது.தாம் காணும் "மாதிரிப் பெண்ணை"உருவாக்குவதற்கு முனைகிறது.பெண்சார் சிந்தனையைத் தமது நோக்கிற்கிணங்கப் புரிய முனைகிறது. தேர்வே இல்லாது, ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள "மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,புரட்சியாக இருந்தாலென்ன அல்லது,எதிர்ப் "புரட்சியாக"இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு பெண்விடுதலை நிமித்தம் பேசிக் கொள்ளலாந்தாம்.இதன் அபத்தமான புரிதல் வினவுத் தளத்தில் அதிகமான வாசகர்களது கருத்திலிருந்து புரிந்துணரத்தக்கதாகவேயிருக்கிறது. பற்பல ஆணாதிக்க உடலானது தத்தமது குடும்ப"ப் பெண்ணினது தோளில் அமாந்தபடி கொண்டையில் பூவைப்பதில் புரட்சிகர நியாயங்களை அடுக்குவது சரியாகாது.

இன்று, லீனாக் குறித்தான புரிதலானது நடுத்தர வர்கத்துக்கேயுரிய இறுமாப்பும்-ஆதிக்க வாதமும் நிறைந்த கூட்டுக் கலைவையான உளவியலாகும்.இதை எந்தத் தத்துவத்துடனும் ஒப்பு நோக்க முடியாது.இஃது,பேசுவது புரட்சியும் இல்லை-பெண்விடுதலையுமில்லை.இத்தகை விவாதங்களின் பாரிய அரசியலூக்கம் ஒழுங்கமைந்த பொருளாதாரப் பலத்துடனும்,புரட்சிகரமான நகர்வுக்கும் எதிரான இயங்குதிசையில் தகவமைக்கப்பட்டு உருவாகிறது.ஒடுக்குமுறைகள் நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் பெண்நிலைசார் கருத்துக்களது தெரிவில் லீனாவினது கவிதைகளுக்கான சில குறியீடுகள் உண்டாகிறது.அதை மறுப்பதில் எந்தப் புரட்சி பெண் நிலையில் மாற்றத்தைப் பண்ணிவிடும்?

இத்தகைய களவாணிப்பேர்வழிகளைப் புரிவதான தருணத்தைச் சொல்வதாகவிருந்தால்" சமுதாயவாரியான பொதுப் புரிதலென்பது கெட்டிதட்டிய குட்டிப் பூர்சுவா எண்ணங்களால் நிரம்பி வழியும் இந்த உளவியலோடு வாழ்பவர்கள் தமக்கேயுரிய இறுமாப்போடு உலகைத் தமக்குள் தகவமைக்கின்றனர்"எனப்பகர முடியும்."இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய "அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்நிலைசார் புரிதலென்பது சம்பந்தப்பட்டவர்தம் புரிதலேயொழிய அஃது, சமூகத்தில் இயங்கும் பெண்நிலை குறித்தான பெண்களது எதிர் செயற்பாட்டினது(லீனாவினது கவிதைகள்வகைப்பட்ட சொல்லாடல்கள்) குற்றமில்லை.

இதற்கேற்ற சுதந்திரத்தை இவ்வமைப்பு வழங்கும்போது இதன் சமூக யதார்த்தம் தனிநபர்வாதமாக மாற்றப்படுகிறது.அதன் உச்சம்தாம் தற்போதைய லீனாமணிமேகலைப் பிரச்சனையிலும் மையங்கொள்கிறது!

இஃது, தனது ஆயுதமாக வசை பாடுதலையும்,பழிபோடுதலையும் ஒரு உளவியல் யுத்தமாகக்கொண்டு புரட்சி-பெண்விடுதலை வழிபாட்டை முன்நிறுத்தி கூப்பாடுபோடும்.அதையே அதீதத் தேவையாகவும் வலியுறுத்தும்.இதை ஏற்காத தளத்தை எப்படியும்.உடைப்பதில் அது கண்ணும் கருத்துமாகக் காரியமாற்றும்-போலிப் புரட்சிபேசும்!

எனவே, நாம் மிகவுமொரு கொடிய ஆதிக்கக் கருத்துக்குள் முடங்கியுள்ளோம்.நமது சிந்தனா முறை மிக மிகத் தனிநபர் வாதக் கண்ணோட்டமாக விருத்தியுறுகிறது.இதிலிருந்து எந்தச் செம்மையான செல்நெறியும் வெற்றி கொள்ள முடியாதுள்ளது!

இதுவொரு இருண்ட காலத்தை நமக்கு வழங்கிவிடுகிறது.

இந்த கருத்தியற் போரானது பல தளங்களிலும் முன்னெடுக்கப் படுகிறது.பத்திரிகை-செய்தித் துறை,வானொலி-வானொளி,கல்வித்துறை மற்றும் இணையத்தளமென இது விரிந்து கிடக்கிறது.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"லீனா மணிமேகலைக்கான தார்மீக-எதிர் நியாயங் குறித்துப் பேசுவதன் தொடரில் பல தளங்கள் முனைவுறுவது எதன் தெரிவின் நிபந்தனையென்பதே இங்கு முக்கியமானது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
03.06.10