Samstag, August 29, 2009

சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்


சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்:

முளைத்து மூன்றிலை எறிக!
 
 
"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் இனவாதங் கடந்த, இலங்கைவாழ் மக்களுக்கான ஒரு அரசாகச் சிங்கள இனவாத அரசை முன்னிறுத்தும் இன்றைய தருணத்தில், நாம் மீளவும் ஏமாற்றப்படுகிறோம் என்பதற்குச் சமீபத்தில் சிங்கள இராணுவத்தின் மிகக் கொடுமையான இனவழிப்பின் சாட்சி, வீடியோவாகக் காணக்கிடைத்தது.
 
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டிலாவென்று, ஐயுறும் அளவுக்குக் காட்டுமிராண்டிகளாகச் சிங்கள இனவாத இராணுவமும் அதன் அரசியற்றலமையும் அப்பாவித் தமிழ் மக்களை நாயிலும் கேவலமாக அவமானப்படுத்திச் சுட்டழிக்கிறது.
 
 
தமிழ் பேசும் ஒரேகாரணத்துக்காக, இலங்கையின் பூர்வீக மக்களில் ஒருபிரிவைப் பூண்டோடு அழிக்க முனைவது மிகவும் கொடுமையானது.இஃது, பாசிசக் கிட்லரது இனவழிப்புக்கு ஒப்பானது."இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாது" என்று இந்த இனவழிப்புச் சதி அரசியலை நியாயப்படுத்தும் பாசிச மகிந்த அரசு, அனைத்து மனிதவுரிமை விதிகளையும் காலிற்போட்டு மிதித்தபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதைச் சில"மார்க்சிய மேதைகள்"முதலாளித்துவ வளர்ச்சியில் இவையாவும் சாத்தியம் என்றும் உரையாடுகிறார்கள்.
 
 
இதற்காக மேற்குலகில் முதலாளிய உருவாக்கத்தில் நிகழ்ந்த இனக்கலப்பு,உள்வாங்கல்-அழித்தல்,ஓரினப்படுத்தல் குறித்து விளக்கமுஞ் சொல்கிறார்கள்.சமீபத்தில் யுக்கோஸ்சிலாவியத் தேசத்தில் நிகழ்ந்த இனவழிப்புகள் வெறுமனவே கொசாவா சார்ந்து பரப்புரைக்கு வந்தது.அங்கே ஜப்பிசிகளைக் கொன்றுகுவித்த சேர்பிய-அல்பேனிய இனவாதம் தத்தமக்கான நியாயத்தைத் தேசங்களது பெயரில் சொன்னபோது, இந்த ஜிப்சிகளுக்கானவொரு தேசம்-வேர்-வரலாறு இல்லாதிருந்தது.அவர்கள் எந்தத் தடையமின்றிச் சமீபத்திலும் அழிக்கப்பட்டார்கள்.வரலாறு பூராகவும் இனவழிப்புகள் இந்த மக்கட்டொகைக்கு அவர்கள் வாழும் பற்பல நில எல்லைகட்குள் நிகழ்ந்து வரும்போது, அவர்கள் இவற்றை எதிர்க்க வலுவற்றும், தம்மை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.இதுதாம் அவர்களது சமூக இருப்பு.இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றைய சிறுபான்மை இனங்களுக்கும் இத்தகையவொரு அபாயம் மிக நெருக்கமாக இருக்கிறது?
 
 
இன்று, இலங்கையை முழுமொத்தச் சிங்கள மயப்படுத்தும் மகிந்தாவினது இராணுவவாத ஆட்சிக்குப்பின் உலகத்தைப் பங்குபோடும் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு புறமாக(ஆசியா-ஐரோப்பா)நிற்கின்றன.தமிழ்பேசும் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்துக்குத் தீனி போடுவதற்கு உலக நாணய நிதியம் முதல் ஆசிய அபிவிருத்திவங்கி,சீன அரசு,இந்திய அரசுவெனப் பற்பல உதவிகள் இலங்கைக்குள் வந்துவிடுகிறது.இவையெல்லாமே மகிந்தா அரசு தமிழர்களுக்கெதிரான போரில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் செய்த படுகொலைகளை மறுத்தபடியேதாம் வந்திருக்கின்றது.இதன் தொடராக இலங்கையில் நகழும் தமிழினவழிப்பை சகல தரப்புமே நிராகரித்தபடிதாம் இலங்கைச் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்துத் தமிழரது இருப்பையே இலங்கையில் இல்லாதாக்கும் அரசியல் நகர்வை"பொருளாதார அபிவிருத்தி,முதலாளிய வளர்ச்சி,ஒரு தேச உருவாக்கம்-புதிய இன உருவாக்கம்"என்று தத்துவ விளக்கம் அளிக்கின்றனர்.
 



இதைச் சாதகமாகக் கையெலடுத்த பாசிச மகிந்தாவோ, இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்று கூற,அதையும் முதலாளித்துவ வளர்ச்சி,சுய பொருளாதாரத் தேசிய எழிச்சியாகவும் கருத்துரை செய்யும் தமிழ்"மார்க்சியப் புரவலர்கள்"புலிகளது அடாவடித்தனமான வன்முறையே"இலங்கை அரச வன்முறையாக உருவாகியதாகவும்,அது இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே(அதாவது சிங்கள மயப்படுத்துவதென்பதை தேசியத்தின் பெயரில் ஏற்றுச் சரண் அடைவது)அரச வன்முறை நிர்பந்திக்கப்படுகிறது என்று,நாவலுனக்குத் "தேசிய வகுப்பு"எடுக்க,இந்தச் சோபாசக்தியோ மகிந்தாவினது பாசிசச் செயற்ப்பாட்டைக் குறித்து மிக நெஞ்சுருகும் கட்டுரையை எழுதுகிறான்.
 
 
அவன் மனிதன்.தரையில் வாழ்கிறான்,தன்னுடன் வாழ்ந்து சாகடிக்கப்படுபவர்கள் குறிந்து நொந்து கொள்கிறான்-கலைஞன் அவன்!
 
 
நேர்த்தியாகச் சிந்திகத் தெரியாதவர்கள் நாம்.
 
 
"புலிகள் தம்மிடமிருந்த மாற்றியக்கக் கைதிகளை வன்னியைவிட்டு ஓடியபோது துணுக்காயில் சுட்டுக் கொன்றார்கள்" என்றும்,மாற்றியக்கக் கைதிகளை இங்ஙனம் கொன்றதையே பரப்புரை செய்யப் புலிகள் பயன்படுத்துவதாக"எல்லாந் தெரிந்த"சுகன் இலங்கைத் தேசியக் கீதம்பாடிச் சொல்லும்வரை எனது மரமண்டைக்கு இது புரியவில்லை!
 
 
இன்றைய எமது இழி நிலை என்பது சாதியப் பாகுபாடோ அன்றிச் சமாதிகட்டும் பாசிசச் சூழலோ மட்டுமில்லை!மாறாக,உண்மையைப் புலிப்பாசிசத்தின் தெரிவில் தான்தோன்றித்தனமாக மறுத்து,இலங்கைப் பாசிச அரசின் பின்னே ஒளிந்து அரசியல் செய்வதும் மிகப் பெரிய இழி நிலைதாம்!எம் மக்களின் அளப்பெரிய உயிர்வாழ்வே இங்கு கேவலமான பரப்புரைகளால் நிர்க்கதியாக்கப்படுகிறது.இதனால் பாசிச மகிந்தாவினது குடும்பமே தமிழினவழிப்பை முற்று முழுதாகத் தமிழினத்தைக்கொண்டே கச்சிதமாகச் செய்து வருகிறது.அன்று புலிகளும்,இன்று அதன் எச்சங்களும்(கருணா-பிள்ளையான்),மாற்று இயக்கங்கள் என்ற ஆயுததாரிகளும் டக்ளஸ் தலைமையில் கடும் காட்டாட்சி செய்யும் மகிந்தாவுக்குத் தேசியத்தின் பெயரில் காவடி தூக்கும்போது, சுகன் மட்டுமல்ல,தோழர்கள் பலரும் இங்ஙனம் முண்டுகொடுக்க, உண்மையாகப் புரட்சிகரமாகச் செயற்படும் புரட்சிகரச் சக்திகள் தவிர்க்க முடியாது இவர்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் இவற்றைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.
 
 
"Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.-Albert EINSTEIN(இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.)-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்"இது,இன்றைய சிங்கள இனவாத அரசுக்குக் குடைபிடிக்கும் அனைவருக்கும் பொருத்தமே.
 
 
 
சோபா சக்தி இத்தகையவர்களை நோக்கி சுயதேடலாகப் பிறழ் சாட்சியம் என்று எழுதுகிறார்.
 
 
இது,மிக அவசியமான தேடல்.
 
 
நம்மீது நிகழ்த்தப்படும் வரலாற்றுக் கொடுமைகளை தேசத்தின் பெயரில்,தேசியத்தின் பெயரில் புலியுஞ்சரி,இலங்கைச் சிங்கள அரசுஞ்சரி செய்து முடிக்கும் இன்றைய பொழுதுகள்வரை நாம் ஏதேதோ சொல்கிறோம் எமது மனத் தெரிவுகளுக்கமைய-உண்மையோ இலங்கையில் மனிதர்களைக் கொல்வதில் முனைப்புடைய கயவர்களை இனம்காணமறுத்துக் கிடக்கிறது.
 
அது,பற்பல வேடமிட்டுக் கருத்துக்களாக விரிகிறது.
 
 
இது,தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளதால் பாசிசச் சிங்கள அரசோ கொலைகளைச் செய்துவிட்டு,தமிழ்பேசும் மக்களது காவலனாக வேடமிடுகிறது.இது,எமது இழிநிலை.
 
 
பிறழ் சாட்சியம் சொல்லும் சோபா சக்தியை மீளப் பதியம் போடுகிறேன், முளைத்து மூன்றிலையாவது எறி என்றெண்ணி.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.09

...............................................................


பிறழ் சாட்சியம்
 
 
 
மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

 
"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.


இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.


சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.


கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாதியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.


புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.
 
ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.


இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.


இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திச்சாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.


Shoba Sakthi: பிறழ் சாட்சியம்
 
 
http://www.facebook.com/note.php?note_id=120318977910&mid=103262fG60993b60G7e38c9Ga

14 Kommentare:

sugan hat gesagt…

இந்த நிமிடம்வரை பிரபாகரன் உயிருடன்தான் இருப்பதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். நேற்றும் சிவாஜிலிங்கம் அவர் உயிருடன் தான் இருப்பதாக இந்துமக்கள் கட்சி கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
நிலைமைகளை அவதானிக்கும் ஒருவருக்கு ஒரு சிறுதுளி சந்தேகம் பிரபாகரன் உயிருடன் தப்பி எங்காவது இருந்தாலும் இருக்கக்கூடும் என்று தோன்றுவது இயல்புதானே! தோன்றாதென்று எப்படிச்சொல்லமுடியும்.
ஆனால் செந்தில்வேல் அவர்களின் இனிஒரு பேட்டியில் 'பிரபாகரன் ஆயுதம் ஏந்திய அமிர்தலிங்கம் என்றும் அமிர்தலிங்கம் ஆயுதம் ஏந்தாத பிரபாகரன்' என்றும் கூறியவிடத்து செந்தில்வேலே துணிந்து இப்படி இப்போது கூறுகிறார்,ஆகவே பிரபாகரன் இறந்துதான் இருக்கவேண்டும் என்று நான் ஒரு முடிவிற்கு வரலாமா?
உடனடியாக முடிவிற்குவரக்கூடியவாறு உண்மைகளும் சூழ்நிலைகளும் இப்போது இல்லை,அதற்கு கால அவகாசம் தேவையாக இருக்கிறது.

இப்படி ஒரு பதிவைப்பார்த்தபோது நானும் அனைத்து தளங்களையும் உளாவினேன்.
அதில் நிதர்சனம்.நெற் இல் ரகுமான் ஜான் மேற்கண்டவாறு பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார்.
நமது ரகுமான் ஜான் தான் அவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கு எனக்கு தொடர்புகளின் வலையமைப்பு பெரிதில்லை.
ஆகவே அதற்கும் வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பதான ஒரு சந்தேகம் இருப்பது தவறா!
இந்தநிமிடம்வரை ரகுமான் ஜானை தொடர்புகொள்ள முயற்சித்துவருகிறேன்.
நமது 100வீதம் 200 வீதம் அரசியல் சரிகளை இப்படியான படுகொலை ஆவணங்களுக்கு வலுச்சேர்க்க பிரயோகிப்பதில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.
இரண்டுபகுதியினருமே இதுவும் செய்வார்கள், இதற்கு மேலேயும் செய்திருக்கிறர்கள்.
நாம் அரசியல்வாதிகள் இல்லை.
இப்போது ஜனவரியில் கொல்லப்பட்ட மற்றவர்கள் யார்?

பாரூக் இப்போது எங்கே?
இப்படியான கேள்விகளுக்குமேலாய் இப்படியான படுகொலை நடக்கும்நேரத்தில் அக்கொலைகளுக்கு உடந்தையாய் இருந்துவிட்டு அதைப்படம் எடுத்து வினியோகிக்கும் நுட்பம் நமக்கு எதைச்சொல்லவருகிறது?

சிலமாதங்களுக்கு முன்னர் நமது நண்பர் ஒருவருடன் விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் கூறினார்.
தான் புலிகளை ஏற்றுக்கொண்ட சிங்கள இளைஞர்களை புலிகளிடம் அனுப்பியதாகவும் அத்தனை சிங்கள இளைஞர்களும் கொழும்பில் குண்டுவைத்தாகவும் அதில் பலரை அரசு கைதுசெய்துள்ளதாகவும் கூறினார்.
இப்படியான குழப்பமான சூழலில் எல்லாவற்றிற்கும் உரிய வாய்ப்புகளை சந்தேகிக்காமல் நம்மை அரசியல் சரியானவர்களாக நிறுவுவது சுலபம்தானே.
நீயும் பிழை நீயும் பிழை என்று நீதிபதி தானத்தில் அமர்ந்து சுலபமாக தீர்ப்புச்சொல்லமுடியும்.
அப்படி ஒரு சந்தேகத்தை தெரிவிக்கப்போனால் நாம் கொலைகாரர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டோம் கொலை மறுப்பு 'அரசியலை'க் கைகழுவிவிட்டோம்.
அநியாயத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று எப்படிச்சொல்லமுடியும் அன்ரனி!

கொழுவி hat gesagt…

இவர்தான் பாரூக்.. இனி இரண்டையும் பார்த்துத் தெளிக..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18208

வளர்மதி hat gesagt…

சுகன் குறிப்பிடும் ரகுமான் ஜானின் பின்னூட்டம் நிதர்சனம். நெற் - ல் இங்குள்ளது: http://nitharsanam.net/?p=30502&cpage=1#comment-9535

அதே பக்கத்தில் கனடியன் என்பவர் அதற்கு மறுப்பும் தெரிவித்து ஃபாருக் குறித்த விவரங்களுக்கு தமிழ்நெட் - டிற்கு தொடுப்பும் கொடுத்துள்ளார். வீடியோவில் சுட்டுக் கொல்லப்படும் நபர் இளைஞராக இருப்பதையும் ஃபாருக் வயதில் மூத்தவர் என்பதையும் குறிப்பிடுகிறார் (கொல்லப்படுபவரின் நிறத்தைச் சுட்டி மில்லரின் ப்ளாக்கில் அவர் காகேசிய இனத்தவராக இருக்கக்கூடும் என்று ஒரு சிங்கள வெறியன் பின்னூட்டமிட்டதை வாசித்தது நினைவுக்கு வருகிறாது).

சுகனுக்கு இதெல்லாம் ஏன் கண்ணில் படவில்லை?

அவர் தனக்கு விரும்பியதையே தேடுவதாலா?

P.V.Sri Rangan hat gesagt…

சுகன்,கொழுவி,வளர்மதி உங்கள் எல்லோருக்கும் நன்றி,தங்கள்-தங்கள் கருத்துக்களுக்கு!

சுகன்,

//நீயும் பிழை நீயும் பிழை என்று நீதிபதி தானத்தில் அமர்ந்து சுலபமாக தீர்ப்புச்சொல்லமுடியும்.
அப்படி ஒரு சந்தேகத்தை தெரிவிக்கப்போனால் நாம் கொலைகாரர்களுக்கு ஆதரவாக மாறிவிட்டோம் கொலை மறுப்பு 'அரசியலை'க் கைகழுவிவிட்டோம்.
அநியாயத்துக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று எப்படிச்சொல்லமுடியும் அன்ரனி!//

இக் கேள்வியை அன்ரனி குறித்துக் கேட்டுள்ளீர்கள்.இது அன்ரனிக்கு மட்டுமானதான தனிப்பட்ட கருத்தாக எடுப்பதற்கில்லை.எனவே, இதற்கான பதிலை பொதுவான மக்கட்டொகுதிக்குள் வைத்துத் தரலாம்.

சமீபகாலத்து உங்கள் இரண்டுவரிக் கருத்துக்கள்-தெரிவுகள்,குறியீட்டுத் தர்க்கங்கள்-குதர்க்கங்கள்,இலங்கைத் தேசிய கீதத்தைப்பாடுவது,இலங்கை அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்குப் புலிப்பாசிசத்தின் தெரிவில் அவர்களது மக்கள்விரோத்தின் நடவடிக்கைகளை வைத்துச் சமன்படுத்துவது.பிள்ளையானின் அட்டகாசத்தை "ஜனநாயக" விழுமியத்தின் பகுதியாக்குவது... என்று பற்பல வடிவத்தில் ஒற்றைவரிக் கருத்துக்களில் உங்களைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்.

இது உங்கள் உரிமை.


ஆனால்,இலங்கை அரசினது தமிழ்பேசும் மக்கள் மீதான அனைத்துவகையான அடக்குமுறைகளையும் குறித்து நீங்கள் நியாயப்படுத்தும் தருணத்தில், நீங்கள் கொண்டிருக்கும் நியாயத்தைத்தாம் நாம் கேள்வி கேட்கிறோம்.அதற்கு எமக்கும் உரிமையுண்டுதானே?இந்தவுரிமையை எப்போதும் நீங்கள் மட்டுமே எடுக்கு முயற்சிப்பதில்,நீங்கள் பார்த்திபனின் ஒரு கதையில்வரும் அதிகாரம் தொனித்த உரையாடலையே கட்டுடைக்க வெளிக்கிட்டவர் அன்று.



பாத்திபன்ர கதையொண்டை(பலமா,யாருக்கு?) ஒப்பிரேசன் செய்து" செற்றியிலிருந்து(சோபா) ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியன் சரிவை ஆராய்ந்தார்கள்"எண்ட பார்த்திபனின் எள்ளலை நக்கி,



"1: சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?



"2:ஜொனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா?"



"3:ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா?"



"4:செற்றியில் இருக்கக் கூடாதென்கிறானா?"-எனக்கு உறுத்துகிறது,நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன்." என்று,உங்களைப்பற்றிப் பிரகடனப்படுத்தி ஜொனிவோக்கர் கம்பனியை விளிம்பு மனிதர்களின் கம்பெனியெண்ட உங்களுக்கு இலங்கைத் தேசியத்துள் கரைவதுதானே அடையாளம் அழிப்பதில் முதற்படி!



"தன்னைச் சாதிவெறியன் இல்லை என்று
தொடர்ந்து(கவனியுங்கள் தொடர்ந்து...)நிருபிக்காதவரை ஒவ்வொரு
வெள்ளாடனும் சாதி வெறியனேதான்
என்று தலித் கருதுவதில் தவறில்லை."என்றும், நீங்கள் பிரகடனப்படுத்தியது ஞாபகம் உண்டுதானே?


இப்போது,இலங்கை அரசு தன்னை இனவாத அரசில்லை என்பதற்காகத் தொடர்ந்து உங்கள் மூலமாகப் பிரகடனப் படுத்துகிறதோ நண்பரே?


ஒரு இனத்தின்மீதான அரச பயங்கரவாதத்தையும் அதன் அத்துமீறிய இனவழிப்பையும் குறித்து நீங்கள் கேனைத்தனமாகக் கருத்துச் சொல்லும்போது,ஒவ்வொரு வெள்ளானும் "தான்"சாதி வெறியனில்லை என உங்கள் காதுக்குள் கத்தவேண்டும்?


சுத்துவதற்கும் ஒரு நிலை வேண்டும்.அந்த நிலை எனக்குப் புரியவில்லை.


கொழுவி,வாருங்கள்.சுகனுக்கு ஒப்பீடு செய்யும்"தகுதி"அதிகம்.பார்த்திபனின் கதையில் பாருங்கள் அவரது ஒப்பீட்டை.எனவே,பாருக்கின் போட்டோ அவசியமில்லை அவருக்கு.


வளர்மதி,உங்களுக்கு நன்றி,சிரமம் பாராது தரவுகள் தருவதற்கு.சுகனுக்குக் கண்ணில் படுவது புத்தரின் தர்மம் மட்டுமே.ஆனால்,அந்தத் தர்மம் இப்போது உலகெங்கும் அதர்மத்துக்கு மொட்டாக்குப் போடுவதை அவர் கொண்டிருக்கும் பார்வையில் கண்டறிவது கடினமாக்கும்-யாரறிவார்?

நன்றி,

-ஸ்ரீரங்கன்

Anonym hat gesagt…

சுகன் முக்குவர் சமூகத்தைச் சேர்ந்தவரென்பதையும் வெள்ளாளத்திமிருக்கு சற்றும் குறைந்ததல்ல முக்குவரின் தலித் விரோதத்திமிர் என்பதுவும் சுகனின் கிராமத்திலேயே முக்குவர்கள் தலித்களின் குடிசைகளை எரித்தார்கள் என்பதையும் சுகன் எங்காவது பதிந்திருக்கிறாரா..?

தன்னைச் சாதி வெறியன் என தொடர்ந்து நிரூபித்துக்கொள்ள கொள்ளவேண்டிய தேவையில் வெள்ளாளர்களோடு முக்குவர்கள் கரையார்கள் பலரும் இருக்கிறார்கள். சுகன் தொடர்ந்து நிரூபிக்கிறாரா..

Anonym hat gesagt…

தன்னைச் சாதி வெறியன் என தொடர்ந்து நிரூபித்துக்கொள்ள கொள்ளவேண்டிய தேவையில் வெள்ளாளர்களோடு முக்குவர்கள் கரையார்கள் பலரும் இருக்கிறார்கள். சுகன் தொடர்ந்து நிரூபிக்கிறாரா..//

சாதி வெறியன் இல்லை எனத் தொடர்ந்து..

என்று வந்திருக்க வேண்டும்

வளர்மதி hat gesagt…

தேசம் நெற் - றில் ரகுமான் ஜானின் உரையை வாசிக்க நேர்ந்து அங்கு பதிவிட்டுள்ள பின்னூட்டம். வெளியிடப்படுமா பதில் கிட்டுமா என்ற சந்தேகத்தில் ஒரு எச்சரிக்கைக்காக இங்கு ஏற்றி வைக்கிறேன்.
_________________________

இப்பதிவிற்கு தொடர்பில்லாதது என்ற போதிலும் விஷயத்தின் முக்கியத்துவம் கருதி திரு. ரகுமான் ஜானிடம் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டி பகிர்ந்து கொள்கிறேன்.

எனது வலைப்பக்கத்தில் சமீபத்தில் வெளியான படுகொலைகள் குறித்த வீடியோவை பதிவில் ஏற்றியிருந்தேன் (http://vinaiaanathogai.blogspot.com/2009/08/blog-post_26.html). அதில் அந்த வீடியோ குறித்து தெரிவித்திருப்பதாக கீழ்க்கண்ட பின்னூட்டம் natkunan என்பவர் பெயரில் வெளியிடப்பட்டிருந்தது. அது பின்வருமாறு:

--------------------------------------
natkunan said...
ரகுமான் ஜான் says:
28 August 2009 at 2:30
புலிகள் தாடி வைப்பதில்லை எனவே வீடியோவில் கொல்லப்படுவது புலிகள் அல்ல.
சம்பவம் நடந்த இடம் துணுக்காய். துணுக்காய் மல்லாவி வாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம். கொலை செய்பவரின் தலைமயிர் அவர் இராணுவத்தை சேர்ந்தவரல்ல என்பதை தெளிவாகிறது..
இரண்டாவதாக கொலை செய்யப்படுபவர் புளட்டை சேர்ந்த புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த பாரூக் என்பதை பாரூக்கை தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

துணுக்காய் வதை முகாமில் புலிகளின் பிடியில் இருந்த அத்தனை மாற்று இயக்க மாற்று கருத்து கொண்ட அனைவரும் கடந்த ஜனவரியில் துனுக்காயை விட்டு புலிகள் பின் வாங்கும் பொது சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்

August 28, 2009 3:00 AM

-------------------------------------------

அதை வெளியிட விருப்பம் இல்லாதிருந்தும் இப்படி மோசமாக கருத்துரைப்பவர்களை எதிர்கொள்ளவாவது வேண்டும் என்பதன் பொருட்டு வெளியிட்டேன். மற்றொரு நண்பர் அதற்கு எதிர்வினை புரிந்ததும் எனது கருத்தையும் பதிந்தேன். எனது கருத்து பதிந்து 10 நிமிடங்களுக்குள்ளாக மீண்டும் அதே பின்னூட்டத்தை இம்முறை சுகன் அனுப்பினார்.
அது பின்வருமாறு:

___________________________________

sugan said...
ரகுமான் ஜான் says:
28 August 2009 at 2:30
புலிகள் தாடி வைப்பதில்லை எனவே வீடியோவில் கொல்லப்படுவது புலிகள் அல்ல.
சம்பவம் நடந்த இடம் துணுக்காய். துணுக்காய் மல்லாவி வாசிகளுக்கு நன்கு தெரிந்த இடம். கொலை செய்பவரின் தலைமயிர் அவர் இராணுவத்தை சேர்ந்தவரல்ல என்பதை தெளிவாகிறது..
இரண்டாவதாக கொலை செய்யப்படுபவர் புளட்டை சேர்ந்த புலிகளால் பிடிக்கப்பட்டிருந்த பாரூக் என்பதை பாரூக்கை தெரிந்தவர்களுக்கு நன்கு புரியும்.

துணுக்காய் வதை முகாமில் புலிகளின் பிடியில் இருந்த அத்தனை மாற்று இயக்க மாற்று கருத்து கொண்ட அனைவரும் கடந்த ஜனவரியில் துனுக்காயை விட்டு புலிகள் பின் வாங்கும் பொது சுட்டு கொல்லப்பட்டது அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம்

August 28, 2009 6:55 AM
_______________________________

ரகுமான் ஜானின் பெயரில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டிருந்ததால், அதை அவர் தெரிவித்திருக்கும் பட்சத்தில் எங்கு இருக்கக்கூடும் என்று இயன்ற அளவில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

உயிர்ப்பு குழுவினருடன் ஒரு கட்டத்தில் எனக்கு நேரடியான தொடர்பு இருந்தது. அதை ரகுமான் ஜானும் அறிந்திருக்கலாம். நீண்ட விவாதங்களும் பகிர்தல்களும் அத்தோழர்கள் என்னுடன் நிகழ்த்தியதும் அறிந்திருக்கலாம். பின்னர், தமிழகத்தில் இருந்து அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அவர்கள் செய்துவிட்டச் சென்ற காரியம் பெருத்த அதிர்ச்சி அளித்தது. அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லை. இயலவும் இயலாது. குறைந்தது சம்பந்தப்பட்ட உயிர்ப்பு தோழர்கள் காரணத்தை அறிந்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.

தற்சமயம் இங்கு கேட்டுக்கொள்ள விழைவது ஒன்று மட்டுமே. மேலே தந்திருக்கும் எனது வலைப்பக்கத்தில் இருந்தான பின்னூட்டங்களில், குறிப்பிட்டிருப்பதைப் போன்று ரகுமான் ஜான்தான் அக்கருத்தை தெரிவித்திருந்தாரா என்பதை அவரோ தேசம்நெற் ஆசிரியர் குழுவோ தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அக்கருத்தை அவர் கூறியிருப்பாரேயானால், எங்கு என்பது பற்றிய விவரத்தை அறிந்த வேறு எவரேனும்கூட தெரியப்படுத்தி உதவலாம்.

பொறுப்புமிக்க கருத்துக்களை இங்கு பகிர்ந்துள்ள ரகுமான் ஜானே இதைத் தெளிவுபடுத்தினால் நல்லது.

நன்றிகள்.

வளர்மதி ...

பின் குறிப்பாக: Commonsense குறித்து கட்டுரையில் தரப்பட்டிருக்கும் விளக்கமே common sense அடிப்படையிலானது என்பதைக் குறித்துச் செல்ல விரும்புகிறேன். Gramsci யின் கருத்தாக்கத்தை அறிந்திருப்பீர்களாயின் நான் குறிப்பிட விரும்புவதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். Gramsci - யைத் தொடர்ந்து, Subaltern Studies குழுவினர், பின் Gayatri Chakravarthy Spivak ஆகியோர் அக்கருத்தமைவை செறிவாக்கியுள்ளனர்.

August 29, 2009 2:24 PM

வளர்மதி hat gesagt…

முந்தைய பின்னூட்டம் தமிழ்நெற்றில் ரகுமான் ஜானின் உரை பதிவு செய்யப்பட்ட பக்கத்தில் இட்டது. (http://thesamnet.co.uk/?p=15345#comment-138800)

தேசம்நெற் வெளியிடாமல் போனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பதிவிற்கு சம்பந்தமில்லை என்பதால். ரகுமான் ஜானின் உரையை வாசித்தால் சுகன் குறிப்பிடும் பின்னூட்டத்தை எழுதியது அவராக இருக்கும் என்று தோன்றவில்லை (யார் கண்டது!).

ஆனால், சுகனுக்கு எதையும் உரசிப் பார்க்கும் நிதானமில்லை. தான் ஏற்கனவே வைத்திருக்கும் கருத்திற்கு ஒரு சிறு தகவல் கிடைத்தாலும் அதைப் பற்றிக்கொள்வதில் மும்முரமாக இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

natkunan என்ற பெயரில் முதலில் பின்னூட்டமிட்டதும் அவரோ என்ற சிறு சந்தேகமும் எனக்குண்டு. 28, 29 இரு நாட்களும் ”நிச்சாமம்” பக்கத்திலிருந்து இடைவிடாது எனது பக்கத்திற்கு வந்து போயிருப்பதை எனது histats account காட்டுகிறது :) (invisible counter வைத்திருக்கிறேன்; 'மீட்டர்' மீதான எரிச்சல் காரணமாக).

இப்பின்னூட்டம் தேசம்நெற்றில் வெளியிடப்பட வாய்ப்புகள் குறைவு என்று கருதி எனது பக்கத்தில் ஏற்றி வைத்திருந்தேன்.

பகிர்ந்துகொள்ள இங்கும்.

நன்றிகள்.

P.V.Sri Rangan hat gesagt…

அன்பு வளர்மதி,வணக்கம்.

தங்கள் கருத்துக்களைப் பார்த்தேன்.

இவற்றில் நீங்கள் ரகுமான்ஜான் மற்றும் உயிர்ப்பு மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது போன்றவொரு நிலையை எனக்கு ஏற்படுத்துகிறது.

எனக்கு மிகுந்து கோபம் இருக்கிறது பல விடையங்களில்.

முன்னொரு காலத்தில் மாமிசத்தையே புசிக்காத நான், சுகன் கூறிய சரியான தர்க்கத்தால் மாமிசம் உண்ணக் கொண்டேன் சந்தர்ப்பத்தில்.

அன்று, சுகன் மிகப் பெரும் போராளி-யதார்த்தவாதி.

இன்று, எல்லாஞ் சரிந்து வெறும் ஊதாரியாக மாறிவிட்டான்.

களத்தில் போராளியாகவும்,பின்புலத்தில்(இந்தியாவில்)மிகவும் மனிதநேயனாகவும் அவன் இருந்தான்.

அவனது அநுபவங்கள் அவனை அங்ஙனம் ஆற்றியது.

ஒரு காலத்தில் சுகன் எனது முன்னுதாரணமாகவும் இருந்திருக்கிறான்.

இன்று, பின் தங்கிய அவனது புரிதல் அவனை எங்கோ சேர்த்துவிட்டது.

அவன் என்றும் எனக்குப் புரியாத புதிரே.

ஆனால்,ரகுமான் ஜான் கதை அப்படியில்லை வளர்மதி!

ஜான் மாஸ்ட்டர் மீது மிகுந்த கோபத்தோடு இருப்பவன் நான்.

ஜானை ஒரு போதுமே மக்கள் போராளியாக நான் ஏற்க மாட்டேன்.

அவர் ஒரு உளவாளி.

அவரால் அழிக்கப்பட்ட அனைத்துத் தளங்களையும் நான் அறிவேன்.

ரகுமான் ஜான் தமிழ் புத்திஜீவிகளில் ஒருவர்.ஆனால்,அவர் திட்டமிட்டுப் புலிகளது இயக்க நலுனுக்காகச் செயற்பட்டவர்.

புளட்டிலிருந்து பிரிந்து, தீப்பொறியாக மலர்ந்த கோவிந்தன் குழு இறுதியில் இவரால் காட்டிக்கொடுக்கப்பட்டுப் புலிகளால் அழித்த வரலாறு இன்னும் பகிரங்கமாகப் பேசப்படவில்லை!

ரகுமான் ஜான் தீப்பொறிக் குழுவாக வேடமிட்டு இறுதியில் ஐரோப்பாவெங்கும் புலிகளால் அனுப்பப்பட்டு,புகலிட மாற்றுச் சஞ்சிகளை முற்றுகையிட்டதும்,அவைகளைச் சிதைத்ததும் உண்மை.

இதற்கு ஜான் மாஸ்டரே மூலகர்த்தா.

இறுதியில் இவர்கள் புகலிடத்தில் உயிர்ப்புமட்டுமல்ல தமிழீழம் என்னும் பத்திரிகையும் வெளியிட்டார்கள்.இவைதாம் புலிகளது அழிவுக்கு மூலமான காரணம்.


சமீபத்தில்,அதாவது 2007 இல் ரகுமான் ஜான் புலிகள் அழிவதற்கு முன்,வேவு பார்த்தார் எனது நண்பர்களை.


கனடா சென்ற ஜான் முன்னாள் உறவுகள் காரணமாக எனது தோழர்களை நட்பு ரீதீயாக வேவு பார்த்தார் புலிகளுக்காக.

இது தர்க்கரீதியாக அவரது பாத்திரத்தைக் கேள்விக்குட்படுத்துவது.

எனவே,ஜான் ஒரு முற்போக்கு ஜனநாயகவாதி அல்ல.

அவரிடம் எதையும் எதிர்பார்க்கத் தேவையில்லை.

அவரை ஒருபோதும் மக்கள் நலச் சிந்தனையாளராகவும்,ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக்காரராகவும் ஏற்பதற்கில்லை.

அவர் அதிகார வர்க்கத்தின் எடுபிடி.

அவரைக் குறித்து எவரும் ஏமாறத் தேவையில்லை.

தீப்பொறிக் குழுவாக அவர்கள் ஐரோப்பாவில் புலிகளுக்காக வேவு பார்த்த கதை ஏராளம்.அவரது தேசம் நெற் உரை என்பது மிகச் சதி நிரம்பிய ஏமாற்று வித்தை.அதை நாம் நம்புவதற்கு நாம் 80 களில் இருந்த புரிதலோடு இப்போதும் வாழவில்லை.

எமக்கும் பீட்டர் சிம்hபவையும்,றோத்கைமரையும்,யுர்க்ன் காபமாசையும் தெரியும்.

அவர்களது வைத்தியமும் தெரியும்.

எனவே,ஜான் காலங்கடந்த உளவு வேலைக்கு இப்போது புதிய இருப்பு நோக்கி வருகிறார்.ஆனால்,நாம் அவரிடம் பாடங் கற்கும் நிலையைக் கடந்து செல்கிறோம்.

அவ்வளவுதாம் இப்போதைக்குச் சொல்லமுடியும்.

-/பெயரிலி. hat gesagt…

ஸ்ரீரங்கன்
இன்று அரசியலிலோ இலக்கியத்திலோ எனக்கு எதுவிதமான நம்பிக்கையுமில்லை. அரசியல்+இலக்கியம்+தத்துவம் என்று தம்மை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொருவரும் என்னை அச்சத்துக்குள்ளாக்குகின்றனர் - குறிப்பாக, நான் வெறுக்கும் வலதுசாரிகளையும் பழமைவாதிகளையும்விட, வாழும்சூழலிலே நிறையப்பேசும் இடதுசாரிகளையும் தத்தலித்துவாடிகளையும் கண்டால் இப்போது பயமாகவிருக்கின்றது.

இவர்கள் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியிருப்பது உசிதமாகப்படுகிறது. முரசு தட்டாமற் செய்வதற்கு நிறைய உண்டு.

ஆனால், இங்கே ரகுமான் ஜானைப் பற்றி வரும் கருத்துகளை ஏற்றுக்கொண்டு போகமுடியவில்லை. இன்றைக்குச் சமூகம் சார்ந்து என் எண்ணங்களிலே, செய்கைகளிலே ஏதேனும் சிந்தைப்பட வேண்டுமென்ற உணர்வு இருக்குமென்றால், அதற்கு ரகுமான் ஜான் என்ற மனிதரே காரணம். சே குவேராவையும் எந்த அடையாளத்திருவுருவையும் விரிந்து அறிந்திராதபோதிலே, எனக்கு முன்னே தெரிந்த ஒரே முன்மாதிரி மனிதர் எனது ஆசிரியர் ரகுமான் ஜான். அவரிடம் இரசாயனம் கற்றுக்கொண்டதிலும்விட அவர் + அவரது தோழர்களின் (பதிவுலகிலே உலாவும் 'தோழர்' என்ற அர்த்தத்தின் தொனியோடு வாசித்துக் கேவலப்படுத்தமாட்டீர்களென தயைகூர்ந்து வாசிக்கமாட்டீர்களென நம்புகிறேன்) செய்கைகளைக் கவனித்ததிலே சமூகத்தினைப் பார்க்கும் கோணங்களைக் கொஞ்சமேனும் பொறுக்கிக்கொண்டேன்.

அவர் இழந்தது எவ்வளவோ; தேசம்நட்டிலே அவர் பின்னூட்டமிட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், இட்டிருக்கும் பின்னூட்டத்தின் தர்க்கத்தினையும் தரத்தினையும் பார்த்தால், ஜான் மாஸ்ரரின் அறிதலின் நுனியளவு கீறல்கூடத் தெரியவில்லை.

உயிர்ப்பும் தீப்பொறியும் பற்றி அவை சார்ந்த சிலருக்கு அரசியலுக்கு அப்பாலான ஒரு தனிப்பட்ட வாழ்தலுக்கான பந்தயக்குதிரையாக வாழ்ந்த எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரியுமென்பதாலே எதையும் சொல்லவிரும்பவில்லை.

ஆனால், சமூகவளவிலே ஜான் மாஸ்ரர் இழந்தது எத்துணையென்று என்னைப் போன்ற சொந்தச்சவாரிக்கு ஓடிய பந்தயக்குதிரைக்குத் தெரியும். நோபேட் கொல்லப்பட்டதற்குப் புலிகளைக் குற்றம் சாட்டும் எல்லோருக்கும் அவரின் நண்பரான ஜானை கோவிந்தன் என்ற நோபேர்ட் எழுதிய புதியதோர் உலகத்தின் பிரேமாக நன்றாகவே தெரியும். இருவருமே புளொட்டுக்கு முன்னாகவே, பயஸ் மாஸ்ரராலே அறிமுகமானவர்களென எண்ணுகிறேன். அதற்குப் பின்னும், புலிகளுக்கு வேவுபார்த்தார் என்றா கருதுகின்றீர்கள்? எதற்காக எல்லோருக்கும் (புளொட் தொடக்கம் புலி, அரசு உட்பட) அவர் தள்ளி வாழ்ந்திருக்கவேண்டும்?

எனக்கு சே குவேராவை வாசித்தே அறிதல். ஜான் மாஸ்ரரிடம் இரசாயனம் கற்ற மாணவனாக இருந்தாலுங்கூட, எட்டியிருந்து அரசியலையும் ஆளுமைமுன்மாதிரியையும் பொறுக்கக்கண்ட ஒருவனாக அறிந்திருக்கிறேன். அவரின் அரசியல் காலப்போக்கிலே மாறியதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அப்படியாக மாறியிருந்தாலுங்கூட, ஒரு நாளிலே கண்ணை மூடிக்கொண்டு தன் அரசியலை மாற்றும், தனிப்பட்ட பழிவாக்குணர்வோடு அரசியலை மாற்றும் ஒருவராக என்னால் எண்ணமுடியவில்லை.

சொல்வதற்கு ஏதுமில்லை. தனிப்பட்ட அளவிலே அந்த மனிதருக்கு என் சொந்த எண்ணங்களும் சிந்தையும் அரசியல், சமூகம், வாசிப்பு குறித்தவளவிலே விரியவும் வளரவும் நான் நிறைய - அவர் அறியாமலே- கடன்பட்டிருக்கின்றேன். என் நாற்பத்துநான்கு ஆண்டு வாழ்க்கையிலே என்னில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்திய மனிதர் அவர்.

இது தனிப்பட்ட விருப்புவெறுப்பினைச் சொல்லும் விசிறிப்பின்னூட்டமாகவேயிருந்தாலுங்கூட, ஸ்ரீரங்கன் நீங்கள் அவர் பற்றிச் சொல்லும் உங்கள் குற்றச்சாட்டுகளை நிறுவிச் சொல்லாதவரைக்கும் உங்கள் கட்டுரைகளைப்போல, வரிகளை நிறை கனக்க வனைத்தும் வளைத்தும்போடுவதாலே நிறுவுவதுபோலத் தோன்றச்செய்யமுயலாதீர்கள்.

இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை. நன்றி

வளர்மதி hat gesagt…

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஸ்ரீரங்கன்.

ஈழப் போராட்டம் சார்ந்து தமிழகத்தைச் சேர்ந்த எம் போன்ற கருத்தியல் தளத்தில் செயல்பட்டு வருபவர்களுடைய நிலைமையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சில குறிப்பிட்ட கருத்தியல் தேடல்களில் சில நிலைப்பாடுகளை வந்து சேர்ந்தவர்களுக்கு அவற்றுடன் ஒத்த ஈழத்து இயக்கத்தவரோடு (அவ்வாறு சொல்லி தொடர்பு கொண்டவர்களோடு)உறவுகள் பல்வேறு காலகட்டங்களில் இங்கு உருவானது.

அங்ஙனம் தனிப்பட்ட அளவில் எனக்குண்டான உறவு களச்செயல்பாடுகளில் இருந்த 1988 - 91 ஆண்டுகளில் நான் இருந்த மா - லெ குழுவோடு இணைந்து செயல்பட்ட “தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை” தோழர்களில் இருந்து ஆரம்பமானது.

97 - ல் தலித் விடுதலை சிறுபான்மையினர் விடுதலை என்ற அரசியல் நிலைகளில் இருக்கையில் ஷோபா சக்தி தேடி வந்தார்.

கிட்டதட்ட அதே சமயமே உயிர்ப்பு குழுவினர் அ. மா வழி என்னை அணுகினர். “நிறப்பிரிகை” யின் அரசியலால் கவரப்பட்டு ஈழ அரசியலில் அதன் பொருத்தப்பாடுகள் காண எம்மோடு பகிர விரும்புவதாகக் கூறினர்.

அவர்கள் கூறியதை நாங்கள் நம்பினோம். பரஸ்பரப் பகிர்தல்கள் நிகழ்ந்தது (அறிமுகம் செய்வதோடு அ. மா ஒதுங்கிக் கொண்டார். அவருக்கு அப்போது ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்கு அலைவதே ‘பெரும் புரட்சிப் பணியாக' இருந்தது).

ஆகா, என்னோடு அவர்கள் பகிர்ந்த விஷயங்கள் எத்தனை!!!

மரபான இயங்கியலில் இருந்து தெரிதாவின் வித்தியாசம் எப்படி முன்னோக்கி நகர்ந்திருக்கிறது என்று நான் கொடுத்த ‘லெக்சர்கள்' தான் எத்தனை எத்தனை.

ஆனால், திடீரென்று மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பினார்கள். வழிஅனுப்பி வைத்தோம். அதுவே எமது பங்கு. கருத்தளவில் மட்டுமே.

ஈழத்து இயக்கங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் மிகுந்த ரகசியமாக செயல்பட வேண்டியிருப்பதன் நிர்ப்பந்தங்கள் புரிந்து அவர்களை எம்போன்றவர்கள் சந்தேகிப்பதுகூட இல்லை.

அதற்கு விலையாக 'ஆர்வக் கோளாரில்' தமிழக இளைஞர்கள் எத்துனை பேர் எவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆனார்கள் என்பது ஒரு தனி சகாப்தம். நானும் அப்படி ஒரு நெருக்கடியை 'திடீரென்று கிளம்பி மறைந்த' உயிர்ப்பு தோழர்களால் சந்திக்க நேர்ந்தது. ஆனால், 'அதிர்ஷ்டவசமாக', பிறர் சந்தித்த இழப்புகளில் இருந்து தப்பிக்கவும் முடிந்தது.

அதன் பின்னும், புதிய பலரோடு பழக பகிர எப்போதும் தயாராகவே இருக்கிறேன். பலர் இருக்கிறார்கள்.

இதனால், ரகுமான் ஜான் குறித்து நீங்கள் தெரிவித்த தகவல்கள் எம் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். (ஒன்று அவர்களுக்கு எதிரானவர்கள் சொல்ல வேண்டும் அல்லது அவர்களே சொல்ல வேண்டும்). தற்காலத்தில் இணையத்தின் புண்ணியத்தில் இதுபோன்ற பல தகவல்கள் சற்றேனும் விரைவாகத் தெரிய ஆரம்பித்து விடுகிறது ஒரு நல்ல விடயமாகவும் படுகிறது.

தேசம் நெற் - றில் ரகுமான் கானின் பேச்சு குறித்த எனது கருத்து கருத்தளவில் அவர் தெரிவித்தவை நிதானமானவையாகப் பட்டதால் மட்டுமே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

மற்றபடி, எம்போன்ற பலருடைய பணி ஈழ விடுதலைக்கு ஆதரவாக கருத்தியல் அளவிலும் ஊடகங்களுக்கு எதிரான எழுத்துப் பணியுமாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கான முயற்சிகளில் இருப்பவர்கள் எவராக இருந்தாலும் எமது நட்பும் அன்பும் எப்போதும் உண்டு.

அன்புடன்
வளர் ...

P.V.Sri Rangan hat gesagt…

அன்புப் பெயரிலி,உங்களுக்கு எனது வணக்கம்.

உங்கள் அச்சம்-உங்கள் நிலைமை எனக்கானதும்தாம்.

உங்களது மௌனத்தை உடைக்கும் அளவுக்கு ஜான் மாஸ்டரினது குரு பக்தி தங்களைச் செயற்படவைத்ததில் அவரது வெற்றி நிச்சியமானது.

அவர், ஒரு தேர்ந்த புத்தி ஜீவி என்பதும்,அவரால் ஆக வேண்டியதைக் கடைந்தெடுத்துப் பெற்றுக் கொண்டதுமான புலிகளது எதிர்பார்ப்பில், தீப்பொறி எங்ஙனம் செயற்பட்டதென்பது நாம் அநுபவித்தவை.

இன்றைய நிலையில், தோழர் இராயகரன் ஜான் மாஸ்டரிடம் வேண்டிக் கொண்டபடி அவர் தன்னைச் சுய விமர்சனஞ் செய்தாகவேண்டும்.

இஃது, தவிர்த்துப் பல முடிச்சுக்களை நான் அவிழ்ப்பதாகவிருந்தால் ஜான் மாஸ்டர் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் செல்வதாகவே இருக்கும்.

இது, பழி சுமத்துவதல்ல.

அவரது கடந்தகால நடாத்தை.

எனவே,ஜான் மாஸ்டர்தாம் இதைக் குறித்தூன தனது சுயவிமர்சனத்துக்கூடாகத் தனது அரசியற் பாத்திரத்தில் நம்மைக் கொன்றதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இன்றைய அவரது புள்ளி எதுவென்பதை உணர்வது மிக அவசியமானது.

அவர் தன்னைக் குறித்தான பொதுமைப்படுத்தலில் தனது கடந்தகாலத்து நடாத்தையை மறைக்க முடியாது.அது ஆதாரம் தழுவிய யதார்த்தம்.

அன்புப் பெயரிலி,
உங்கள் குரலை இப்போது கேட்கும் போது,அது அவசியமானவொரு தேவையினது நிமித்தமும்,முக்கியமான ஆசிரியனின்மீது சுமத்தப்படும் குற்றத்தை மறுக்கும் அந்த ஆசிரியனின் மாணாக்கன், குறைந்தபட்ச எதிர்ப்பைச் சொல்லுவதும்,தனது குருவைக் குறித்தான குற்றச்சாட்டை மனிதப் பெருவிருப்பால் மறுப்பதாகவும் உணருகிறேன்.

எனினும்,அதை உணருவதற்கு திரு.ஜான் மாஸ்டரது கடந்தகால அரசியல் வாழ்வு இடந்தராது.

உண்மையின் முன் எந்தச் சமரசமும் இல்லை.


இது ஜானுக்கும் பொருந்தும்.


உங்கள் கருத்துக்கும் நன்றி.மற்றும்படி வீட்டில் அனைவரும் நலந்தானே?சின்னத் தோழரது நலம் அறிய ஆவல்.


அன்போடு,
ஸ்ரீரங்கன்

sugan hat gesagt…

அன்புள்ளம்கொண்ட அனானி!
எனது சாதிப்பின்னணி பற்றிய உங்க தகவல் பிழை.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அய்கப் அரங்கில் சாதியம் சார்ந்த தமிழ் அரசியலின் சில அபத்தப்பரிமாணங்களைமேடையில் பேசி முடித்துவிட்டு வெளியேறும்போது
அதை எதிர்கொள்ளமுடியாத வா.ஐ.ச . ஜெயபாலன் நீ முக்குவர் சாதி!
தலித்துகளின் வீடுகளை எல்லாம் கொழுத்தினனிங்கள்!
என்று ஒரு போடு போட்டார்!
"நான் நீங்கள் குறிப்பிடும் சாதி இல்லைஅண்ணை!
உங்கண்டை வெள்ளாளார்தான் வீடுகளைக் கொழுத்திறவங்கள்.
இண்டுவரைக்கும் வெள்ளாளர் எந்தெந்த இடத்திலை வீடுகளைக் கொழுத்தினவங்கள் எண்டு நான் இப்பசொல்லுறன் ,நீங்கள் சொல்லவேணும் மற்றவர்கள் எங்கே எப்போது கொழுத்தினவங்கள்" எண்டு கேட் க இல்லை மச்சான் கோவிக்காதை நான் பகிடிக்குச்சொன்னனான் எண்டு இரண்டு புலிகளின் பைக்கில் ஏறிப்பறந்துவிட்டார்...
நீங்கள் சொல்லவேணும் நான் எந்த சாதிப்பின்னணி எண்டு!
கொஞ்சம் முயன்றால் கண்டுபிடிக்கிறது இலகு.
நீங்கள் சொல்லவேணும் வெள்ளாளாரைத்தவிர மற்றவர்கள் எங்கே தலித்துகளின் வீடுகளைக் கொழுத்தினார்கள் எண்டும் எனது கிராமம் எது எண்டும் !

Anonym hat gesagt…

புலி தளபதி கிட்டு மீது ரகுமான் ஜான் கிறநைட் வீசியதால் புலி அருணா நாவலர் வீதியில் புலியின் தடுப்பு முகாமில் இருந்த நூற்றுகணக்கான மாற்று கருத்து போராளிகள் சுட்டு கொல்லப்பட்டு மாநகரசபை நீர் வண்டியால் தெருவில் ஓடிய இரத்த வெள்ளம் கழுவியதை இன்னமும் மறக்கவில்லை.
முதன் முதலாக சித்திரவதை முகாம் ஆரம்பித்த பெருமை ரகுமான் ஜான் இருக்கும்போது புளட்டால் ஒரத்தநாடு தஞ்சாவூரில் ஆரம்பிக்கப்பட்டது.
புலி தளபதி பொட்டன்
கூட புளட்டால் கடத்தப்பட்டு அந்த முகாமில் வதைக்கப்பட்ட போது பிரபாகரன் புளட்
கண்ணனை சென்னையில் கடத்தி பொட்டனை விட்டால் தான் கண்ணனை விடுவோம் என்று சொல்லி பொட்டன் விடுவிக்கப்பட்டான்.