Dienstag, Januar 17, 2012

கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கையுள்: கையெழுத்திட்ட நபர்கள் எவரென்பதா பிரச்சனை?

வளர்மதியின் முகநூல் நிலைத்தகவற்பகுதியில் நிர்மலா தலைமையின் கீழ், 71 நபர்கள் கையெழுத்திட்ட அறிக்கை குறித்த விவாதம் நடக்கிறது.அதுள், பெரும் பாலும் நமக்குத் தெரிந்தவொரு அன்பர் கையெழுத்திட்ட சமாச்சாரம் குறித்துப் பெரும்பாலும் கேள் விகள் எழுகிறது.அறிக்கையின் பின்னாலிருக்கும் அரசியலையும்மீறி , தனிநபர்சார்ந்தியங்கும் சூழலும்,தனிநபர் நடாத்தையும்சார்ந்து இந்தக் கேள்வி முக்கியமடைவதால் அது குறித்த சிறு குறிப்பாக இதை எழுதுவது அவசியமாகிறது.

இதுள் யாரு கையெழுத்திட்டார்கள் என்பதல்லப் பிரச்சனை.பிரச்சனை, அந்த அறிக்கைபேசும் அரசியல்.அதன் பின்னாலுள்ள வியூகம்.இதை நகர்த்துவது நிர்மலாவோ அல்லது அந்த 70 நபர்களுமோ அல்ல.அந்த நபர்கள்சார்ந்தியங்கும் தளம்,அது முன்தள்ளும் அரசியல்,அதனுடாகவிருத்தியாகும் அமுக்கக் குழுக்கள்,இவற்றை முன்தள்ளும் அதிகார வர்க்கம்.

இவையூடாகத் தமிழ்பேசும் மக்களது இன்றைய அரசியற்றலைவிதியையும்,அவர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்பையும் மெல்ல நீர்த்துப்போக வைக்கும் இந்தத் திசை திருப்பும் வியூகத்தைக் குறித்தே சிந்தித்தாகவேண்டும்.

இதற்குப்பின் பாரிய அழிவுச் சக்தியும்-பிராந்திய ஆதிக்கமும்,அதுசார்ந்தியும் உள்ள நாட்டுப் பெரும்பான்மை இன நலன்நோக்கிய அரசியலும் இருக்கிறது.அது,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒன்றுடனொன்று மோதவைத்தலூடாகவொரு அரசியலை முன் தள்ளுவதால்,இதுவரை அழிப்பு அரசியலை செய்த பிரதான எதிரியான இலங்கை அரசையும்,அந்த அரசுக்குப் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தையும் திட்டமிட்டுக் காக்க முனைகிறது இந்த அறிக்கை.

யாழ்ப்பாண மக்களிடம் விடப்படும்கோரிக்கையைக் குறித்து மேலோட்டமாக விளங்க முனையும் எந்த நபரும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குத் திட்டமிட்டுச் சூது நிரம்பிய அரசியலைக் கொண்டியக்குகின்றனர் என்பது இங்கிருக்கும் உண்மையாகும்.

வன்னியுள், கொத்துக்கொத்தாக மக்களை இரண்டு அரச ஜந்திரங்களும் வேட்டையாடியபோது,யாழ்ப்பாண மக்கள் அப்படியொரு உலகத்தைக் கேள்விப்பட்டதாகவோ அன்றி வன்னியென்பது தமக்குப்பக்த்தில்தாம் இருக்கிறதாகவோ உணரத்தலைப்பட்டார்களா?

தமது மக்களில் கணிசமானவர்களை இனவாதச் சிங்கள அரசும்,புலியும் மாறி மாறி வேட்டையாடியபோது,அதைக் குறித்துக் கவனத்தைக் குவிக்கவோ அதற்கெதிராக அணிதிரளவோ முடியாதவொரு இராணுவக் காட்டாச்சிக்குள் இருத்தி வைக்கப்பட்ட யாழ் மாவட்ட மக்களிடம்போய், "இஸ்லாமியர்களது மீள் குடியிருப்பு,இசைந்து வாழ்தல்-நல்லிணக்கம்" என வகுப்பெடுப்பது மிகத் தந்திரமானதென்பதை எந்தச் சிறிய பாலகர்களும் அறிய முடியும்.

இங்கு எந்த நபர் கையெழுத்திட்டாலும்,அது குறித்த விவாதமாக இதை நகர்த்துவது விவேகமில்லை!

அதன் பின்னாலுள்ள அரசியலைக் குறித்தே விவாதித்து அம்பலப்படுத்தியாகவேண்டும்.

ஒவ்வொரு நபரும் தனத்து வர்க்கவுணர்வுக்கொப்பவே உலகக் கண்ணோட்டத்தை வளர்த்திருப்பார்.அதைத் தாண்டியவொரு பரந்துபட்ட மக்களது நலனை முன்தள்ளுவதென்பது வர்க்கச் சமுதாயத்தில் இயலாதகாரியம்.எனவே,இனவொடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில்-திட்டமிட்டு இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்டவொரு நாட்டில், இத்தகைய பின்புலத்தை அடியோடு மறைத்துக்கவனத்தைத் திசை திருப்பும் இந்த அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.

வன்னியிலும்,தமிழர் தேசமெங்கும் இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை அரசானது, அனைத்து அழிவுவாத அரசியலுக்கும்(வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் துரத்தப்பட்டதற்கும்) காரணமானது.இந்த இலங்கையினது அதிகாரத் திமிரைத் தனக்கேற்ற வகையில் பயன்படுத்த விரும்பிய இந்தியப் பிராந்திய நலனும்-மேற்குலக-அமெரிக்க நலன்களும் இலங்கை வாழ் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தி வருகின்றன.இதன் உச்சக்கட்டமே,இப்போது நிர்மலா தலைமையில் திசை திருப்பும் அரசியலாக மேலெழுகிறது.

தமிழ்பேசும் மக்களுக்கெதிராக நிகழ்ந்த வன்னிப்படுகொலைக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டிய இலங்கை அரசு,தமிழ்பேசும் மக்களிடம் மன்னிப்பும்,அவர்களது உரிமைக்கு உத்தரவாதமும்-பலகோடி நஷ்ட ஈடும் செலுத்தித் தமிழ்பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வை க் கொடுக்குவேண்டிய நிலையில்-அப்படித் தள்ளப்பட்டவொரு நிலையில்-அதை மறைத்துக் கவனத்தையும்,அரசியல் நகர்வையும் திசை திருப்பிச் சிறுபான்மை இனங்களைத் தமக்குள் அடிபட வைக்கும் இந்தப் பெரும்பான்மை இன நலன்சார்ந்த வியூகத்தை அறியாத புள்ளியைத்தாம், தனிநபர்களது கையெழுத்துப்பற்றிய உரையாடலில் நகர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இதைவிட்டு மேலே செல்லுங்கள் கற்றறிந்தோரே!

அவர் கையெழுத்திட்டாலென்ன அல்லது இவர் கையெழுத்திட்டாலென்ன அதனூடாக நகர்த்தப்படும் அரசியல் நலன்கள் என்ன,அவை எந்த வர்க்கத்துக்குச் சார்பானது என்பதிலிருந்து,இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைக் கவனப்படுத்திக்கொள்வதுதாம் அவசியமாகிறது.இந்தியாவாலும்,உலக தேசங்களாலும்,பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் சிங்கள இனவாத அரசால் இனப்படுகொலைக்குட்பட்டார்கள்.அந்தப் படுகொலைக்கு எதிரானவொரு அரசியலையும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயத்தையும் வழங்க முடியாதவொரு சூழலில்,பாதிக்கபர்பட்ட மக்களிடமே சென்று அவர்களால் இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டார்கள்-அழிக்கப்பட்டார்கள் என்று வகுப்பெடுத்து,அவர்களாலேதாம் முஸ்லீம்கள் அரசியல் விழிப்புணர்வடைய வைக்கவேண்டுமென்பதும்,பின் தமிழர்களும்,இஸ்லாமியர்களும் சேர்ந்து இலங்கை அரசிடம் தமதுரிமைக்காகப் போராடுவதென்பதும் திட்டமிட்ட சதி.

அரசு என்ற மிகப்பெரிய அடக்குமுறைக் கருவியானது இங்கு தப்ப வைக்கப்பட்டுச் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இலங்கை அரச ஆதிக்கமானது தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைப்படுத்தப்படும்போது,தமிழ்பேசும் மக்களுக்குள் நிகழ்வது அதிகாரமென்பதா?

பூப்காவை அண்மித்துச் சிந்திப்பவர்களுக்கு இஃது:

பூப்காவை மீளக்கொணர்ந்தால், அதிகாரம் என்ற ஒன்றை விசாலமாக்க முடியாது.அல்லது, கறாராக விளங்கப்படுத்த முடியாதது.அது,நிலவாதது.அதிகாரம் என்ற ஒன்றில்லை!மாறாக, வித்தியாசமான வியூகத்துள்-மூலோபாயத்துள் தொடந்தியங்கும் அதிகாரத்துவ நிலைதாம் உண்டு.ஆக,பூப்காவின் கருத்துப்படி: "பொதுமையான அதிகாரமென்பது கிடையாது.அதிகாரத்துவ முறைமையும் இல்லை! அரச ஆதிக்கம்-அதிகாரமோ அன்றி அதன்வழியாகவியங்கும் நிறுவனப்பட்ட அதிகாரத்துவ மையமோ இல்லை. இதற்கெதிராக, பன்மைத்துவத்துக்குட்பட்ட பலப்பரீட்சையின் எல்லைக்குள் இயங்கும் மக்கள் கூட்டம்,இயக்கங்களே நிலவ முடியும்.

மீளவும்,இதை இலகுவாகச் சொடுக்குவோமானால்:"நிறுவனப்பட்ட அதிகாரம் என்பது இல்லை.அதிகாரம் என்பது ஒரு கட்டமைவும் இல்லை.அல்லது ஒரு சர்வ வல்லமைக்குட்பட்ட சர்வ வல்லமையாளனும் இல்லை. அதிகாரம் என்பதன் பெயர்,ஒரு சமுதாயத்துள்குழப்பமுடைய வியூகங்களாகவும்-சூழல்கள் ஆகவுமே அது இயங்குகிறது. இதற்குள்,எந்த அதிகாரத்தை எவர் கொண்டிருக்கிறார்? இது பூப்காவை அண்மித்தியங்குபவர்கள் பதில் சொல்லவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.01.2012

Keine Kommentare: