Donnerstag, November 13, 2008

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும்

-சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.
மிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் தமிழக மக்களை எங்ஙனம் பிரித்தாளுகின்றன என்று.மிகவும் வருந்தத்தக்க இந்தச் சாதியக் கலவரத்துக்குப் பின்னே நடந்தேறும் அரசியல் சதியானது முழுமொத்தத் தமிழக மக்களுக்குமே எதிரானது.சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்தேறியதான சாதியக்கலவரம் வெறும் சாதிய முரண்பாட்டின் "உணர்ச்சிவசமான"தாக்குதலைக் கொண்டியங்கவில்லை.அது,தமிழ்ச் சமூகத்தின் முழுமொத்த அணித்திரட்சியையும் ஆணிவேறு அக்குவேறாக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட உந்தித்தள்ளப்பட்ட தூண்டுதல்களால் அப்பாவித் தலித்து இளைஞர்கள்-மாணவர்கள் மீண்டும் குருதி சிந்த வழிகோலியுள்ளது தமிழ ஆளும் வர்க்கம்.


இந்தப் பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான பார்ப்பனியப் பண்பாடு நாள்தோறும் தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் ஆத்மீக(மதம்) ஊடக மற்றும் கேளிக்கை(சினிமா-சின்னத்திரை) நிகழ்வினூடாகச் செய்துவரும் மானுட அவமானமானது மிகவும் தந்திரமாக உழைப்பவர்களை வேட்டையாடி ஒடுக்கி வருவதில் மிகச் சாதுரியமாகத் தமிழ் தேசியவுணர்வைச் சிதைத்து வருகிறது.இது,ஒவ்வொரு அரசியற் சூழலிலும் ஏதோவொரு வடிவத்தினூடாகச் சாதியக் கலவரமாக மேலே உந்தித் தள்ளப்படுகிறது.இந்தச் சதி சாதியக் கலவரத்துக்கு இந்திய மத்திய அரசியல் கட்சிகள்வரை லிங்குகள் இருக்கின்றன.இது குறித்துக் கிஞ்சித்தும் கவலையின்றிச்"சாதியக் கலவரம்"எனும் போர்வையில் கருத்தாட முடியாது.இது சாரம்சத்தில் தவறானது.


சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது தந்திரம் மிக்கது, இனிவரும் நாட்களில் தமிழக மக்களின் இயல்பான அரசியல் வாழ்வில் வேறொரு பிரக்ஜையைக் கிளறி விடுவதற்கானவொரு சூழலை மிகவும் தந்திரத்தோடு தடுக்கும் நரித்தனமான அரசியலோடு இஃது சம்பந்தமுடையது.


அடுத்துவரும் தேர்தல், அதன் வழியாகத் தமிழகத்தில் மேலெழும் தமிழ்மொழிசார்ந்த பிரக்ஜையை, அன்றாடம் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படும் ஈழத்து மக்களின்மீதான இலங்கைச் சிங்கள அரசுக்கெதிரான தமிழகத்து மக்களின் உணர்வுரீதியான அனைத்து எழிச்சிகளும், தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கி வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்துக்குச் சகிக்க முடியாத அச்சத்தையிட்டு வந்தது.இந்த அச்சத்தை ஜெயலலிதாவின் ஈழ மக்களுக்கான ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் அரசியல் சூதாட்டத்தில் மிக இலகுவாக இனங்காண முடியும்.கூடவே,தமிழுணர்வுமிக்க கலைஞர்கள் சீமான் மற்றும் அமிர் கைதுகளின் பின்னே தன்னைப் பார்ப்பனியத்துக்கு ஒப்புக்கொடுத்த தி.முக. ஆட்சியையும் கவனிக்க.


தமிழகம்(தமிழ் மக்கள்) ஒரு குடையில் திரண்டு நின்று ஈழ மக்களின் துயருக்கான தார்மீக எழிச்சியுறும்போது அதுவே தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினது இருப்புக்கு எதிராக மாறும் என்பது மிக இலகுவாகப் புரியத்தக்க அரசியல்தாம்.இதைக் குறித்தான அரசியல் சூழ்ச்சிகளை மிக இலகுவாகச் செய்து வந்தது பார்ப்பனியத் தந்திரமானது, தமிழகத்தின் தமிழணுர்வுக் கட்சிகளினது ஈழத்துக்கான போராட்டங்களால் தமிழ்த் தேசியவுணர்வு மேலும் விரிந்த தளத்துக்கு வளர்ந்து செல்லுமென்பதைக் குறித்து மிகவேகமாக எடைபோட்ட பார்ப்பனிய ஆளும் வர்க்கமானது, ஓட்டுக்கட்சிரக அரசியலிலிருந்து விலத்திய ஆதிக்கப் பிற சாதிகள்சார்ந்த ஆளும் வர்க்கத்தோடான அரசியல் வியூகத்தோடு, தனக்கான இருப்பைக் குறித்து மிகக் கவலையோடு காத்திருந்து இந்தச் சதிச் சாதியக் கலவரத்துக்குக் காரணிகளை உருவாக்கியுள்ளது.


மக்களின் எதிரிகள் எப்பவும் பற்பல இரூபங்களில் இருந்து கொள்வார்கள்.தமிழக மக்களின் தார்மீக ஆதரவுப் பெருந் தீயில் தன்னையும் பிணைத்தக்கொண்ட பார்பனியக் கட்சிகள்,குழுக்கள்,மடாலயங்கள்,கலைத்துறைப் பிரமுகர்கள்,சினிமாத் தயாரிப்புப் பெருச்சாளி நிறுவனங்கள் யாவும் தமிழக மக்களின் எந்த அணிதிரட்சியையும் சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.எனவே,உள் நுழைந்து கருவறுத்தல் அவர்களுக்குக் கைவந்த கலை.இப்போது அதைக் கட்டவிழ்த்துக் காட்டியுள்ளார்கள்!இத்தகைய ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளை அரசியல்ரீதியாக முறியடிக்க முடியாதளவுக்குத் தமிழகத்தை ஆளும் கட்சி பாப்பனியத்தோடு கைகோர்த்துக் கட்சியாதிக்கத்தையும் மூலதனத்தையையும் காக்க வேண்டிய நிலையில், கருணாநிதியின் குடும்ப அரசியல் பெரும் மூலதனத்தோடு சீரழிந்து ஒடுக்குமுறை வர்க்கமாகத் தமிழகத்தில் நிலவுகிறது.இதையே தமது மூலதனமாகக் கருதும் தமிழகத்துக்கு எதிரான பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கங்கள் முழுமொத்தத் தமிழக மக்களையும் எந்த அரசியல் பிரக்ஜையுமற்ற வெறும் மந்தைகளாக்கும் சினிமாவைக் கருத்தியல் யுத்தமாகவும் பயன்படுத்தியபடி, மறுபுறத்தில் பார்ப்பனிய வர்ண அதர்மத்துக்குச் சார்பான சாதிய வேறுபாட்டைத் தூண்டிச் சாதியக் கலவரத்தூடாக வன்முறைவடிவிலும் தமிழக மக்களை ஒடுக்கி, அவர்களின் குருதியை உறுஞ்சிக் குடிக்கின்றன.

இன்றைய தமிழகமானது வெறுமனவே ஓட்டுக் கட்சிகளின் வாய்ச் சவடால்களின்வழி புரியத் தக்க அரசியல் சமூக வாழ்வைக் கொண்டிருக்கவில்லை.அது மிகவும் கொடிய பார்ப்பனியச் சூழ்ச்சியின் அதர்மத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறை ஜந்திரத்தால் தகவமைக்கப்பட்ட சூழ்ச்சிமிகு வாழ்நிலைகளைக் கொண்டியங்குகிறது.இங்கே,தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்குவதை மிகத் துல்லியமாகக் கவனப்படுத்தி அதற்கெதிரான பார்ப்பனியச் சதி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.அதன் முக்கியகூறாக இருக்கும் இந்தச் சாதியக் கலவரங்கங்கள் யாவும் ஆட்சியதிகாரத்தையும்,பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைப்படுத்த முனையும் பார்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் சம்பந்தப்பட்டது.எனவே,சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியுள் நடந்தேறிய சாதிக்கலவரம் என்பது மிகவும் சதி நிரம்பிய அரசியலோடு சம்பந்தப்பட்டது.


தமிழகத்தைத் தொடர்ந்து சாதிய வேறுபாட்டால் பிரித்துத் தமிழர்களை ஒடுக்கி, அவர்களின் தேசத்தைத் தொடர்ந்து திருடும் பார்ப்பனியச் சதியின் இன்றைய தொடர் நிகழ்வுகள் யாவும் தமிழகத்து மக்களுக்குள் அரசியல் செய்ய முனையும் தமிழ்த் தேசியவுணர்வுடைய கட்சிகளால் மிகவும் கவனமாக ஆராயப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டி, இந்தக் கேடான சதிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.இதைக் கடந்தவொரு எந்தத் தேர்வும் தமிழ்மக்கள் மத்தியில் இருப்பதற்கான சாத்தியக்கூறை இந்தப் பார்ப்பனியச் சதிவிட்டுவைக்கவில்லை.

சமீபகாலமாக நடந்தேறும் தமிழகத்தின் சாதியக் கலவரங்களுக்கு எங்ஙனம் அரசியல் கட்சியாதிக்கத்தின் தொடர்புகள்-சூழ்ச்சிகள் இருக்கின்றதோ அதைவிட இந்தக் கலவரத்துக்கு(அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக்கலவரம்) இந்திய மத்திய அரசியல் கட்சிகளின்வரையான சதி அரசியல் சூழ்ச்சிகள் பிற்காரணமாக-உந்துதலாக இருக்கிறது.இது,தமிழக மக்களின் சகோதரங்கள் ஈழத்தில் பலியெடுக்கப்படும் இந்திய மத்திய அரசின் சூழ்சிக்கு மிக அண்மையாக இருக்கிறது.இதைக் கவனப்படுத்துவதுதாம் இக் கட்டுரையின் மிக முக்கியமானசாரம்.

நாம்,ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிறவேற்றுமை மற்றும் அந்நிய எதிர்ப்பையிட்டு மிகவும் வேதனையோடு இந்த மக்கள் சமுதாயத்தைக் குறித்துக் காறி உமிழ்கிறோம்.அன்றாடம் இந்தக் கேடுகெட்ட இனவாத அரசியலை எதிர்த்துக் கருத்தாடுகிறோம்.ஆனால்,நமது தேசத்தில் ஒரே மொழியைப்பேசுபவர்கள் பார்ப்பனியச் சாதிய அதர்மத்துக்குப் பலியாவதையும்,தமது தேசத்தைத் தமது குருதியால் சிவக்க வைப்பதையும் தடுத்து நிறுத்தும் அரசியலை முன்வைக்க முடியாது திண்டாடுகிறோம்.

எம்மை வேட்டையாடும் இந்தப் பாசிசப் பார்ப்பனியத்தை எங்ஙனம் வீழ்த்துவதென்ற வியூகம் குறித்த அரசியலைப் புரட்சிகரச் சக்திகள்மட்டுமே தீர்மானிக்க முடியும்.இதைக் கருணாநிதி தலைமையிலான-பாணியிலான எந்த ஓட்டுக்கட்சியும் செய்துமுடிக்கும் தகமையற்றுக் கிடக்கின்றன.இத்தகையவொரு சூழலை விரும்பும் பார்பனியச் சதி அரசியல், புரட்சிகரச் சக்திகளைக் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளெனும் போர்வையில் பொலிஸ் நாய்கள் மூலம் என்கவுன்டர் செய்து கொன்றழித்ததையும் தமிழக மக்களும்,புரட்சிகரச் சக்திகளும் மறக்க முடியாது.இதன் தொடர்ச்சியாக இன்று களமிறங்கியுள்ள பார்ப்பனிய அரசியல் தனது வர்க்க-சாதிய நலனுக்காகத் தமிழகத்தை மீளவும் சாதியக் குழறுபடிகளுக்குள் தள்ளி, அந்த மக்களின் தேசிய-மற்றும் தமிழ்த் தன்னடையாளங்களுக்கெதிரானவொரு பாதையில் அவர்களை வீழ்த்தித் தமிழ் தேசியவுணர்வுக்கெதிரான ஆட்சியை மெல்லத் தகவமைக்கும் தந்திரத்தோடு அடுத்த நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தயாராகிறது.இதற்குத் தக்க பதிலடியைப் புரட்சிகர அமைப்புகள் செய்தாகவேண்டும்.

சாதிய வெறிக்குள் தலையைப் புகுத்தித் தனது சொந்தச் சகோதரர்களைப் பலியெடுப்பதைத் தமிழ்பேசும் எவரும் அனுமதிக்க முடியாது!இது,முழுமொத்த மனிகுலத்துக்கே எதிரானது.இதைச் சாத்திர சம்பிரதாயத்தோடு கண்ணியமான கலவரமாகக் கோவில்களில்,சமூகமட்டத்தில் சாதியத்தைக் கௌரவமாகப் பார்ப்பனர்கள் செய்வதும்,அதையே கலவரமாக்கித் தமிழர்களை அழிப்பதும் இனியும் பொறுக்கத் தக்க செயலல்ல.இத்தகைய கலவரத்துக்குப் பின்னே மொத்த இந்தியப் பாப்பன-பனியா ஆளும் வர்க்கமுமே உடந்தையாக இருக்கிறது.இவர்கள்,தமிழக மக்களின் இன்றைய தமிழுணுர்வு எழிச்சிகளை விரும்பவில்லை.அதன் பயனாக இன்னுஞ் செய்யப்போவது பல.இதன் வெள்ளோட்டமே சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2008.
வூப்பெற்றால்
ஜேர்மனி.

Kommentare:

Anonym hat gesagt…

சிறீரங்கன் அண்ணாத்த அவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள். இரண்டாம்படத்தைப் பாருங்கள் சட்டங்களைக் கைதூக்கி வைத்திருக்கின்றார்கள். :)

உங்களைப் போன்ற ஒரு சிலரை விட்டுவிடுவோம். தனியாள் வன்முறை அரசியலைத் தாங்கிய திரைப்படங்களை விதந்தோத்தும் பதிவுப்புதல்வர்கள் பலர் இம்மாணவர்களை விமர்சிப்பது நகைப்புக்குரியது. பதிவுக்குத் தலைப்பும் கருத்தும் கிடைக்காமல் அலையும் பலருக்கு உன்னதமனிதர்களாக இதுவொரு தருணம். அவ்வளவுதான். பதிவுகளிலே இச்சட்டக்கல்லூரி பற்றி வெட்டிக்கிழித்துக்கொண்டு தமிழ்நாட்டிலே வாழும் எவராயினும், பதிதலுக்கு அப்பால், இறங்கி ஏதாச்சும் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். "சட்டத்தைக் காணோம்; சட்டையைக் காணோம்; நமீதா படம் ரிலீஸ்; தல(வன்) பாத்துக்குவான்/ர்" என்று ஒரு பட்டியலே போடும். மிஞ்சினால், 'பெயர்ப்பிராது' உள்ளவர்கள் இந்துவிலே துக்ளக்கிலே ஆசிரியர் கடிதம் போடும் "ரோமோ" ரேஞ்சுக்குப் போவார்கள். பேச்சுச்சுதந்திரம் இல்லாத நாட்டுக்காரனுகளுக்கெல்லாம் பதிவிலே ஜிங்சக் போட்டு, (அ)ஹிம்சையாகத் திட்டமட்டும் ஆண்குறி துடிக்கும். அவ்ளோதான்.

-/பெயரிலி. hat gesagt…

/சாதிய வெறிக்குள் தலையைப் புகுத்தித் தனது சொந்தச் சகோதரர்களைப் பலியெடுப்பதைத் தமிழ்பேசும் எவரும் அனுமதிக்க முடியாது!இது,முழுமொத்த மனிகுலத்துக்கே எதிரானது.இதைச் சாத்திர சம்பிரதாயத்தோடு கண்ணியமான கலவரமாகக் கோவில்களில்,சமூகமட்டத்தில் சாதியத்தைக் கௌரவமாகப் பார்ப்பனர்கள் செய்வதும்,அதையே கலவரமாக்கித் தமிழர்களை அழிப்பதும் இனியும் பொறுக்கத் தக்க செயலல்ல.இத்தகைய கலவரத்துக்குப் பின்னே மொத்த இந்தியப் பாப்பன-பனியா ஆளும் வர்க்கமுமே உடந்தையாக இருக்கிறது./

srirangan,
நிகழும் எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பன-பனியா கும்பலின் செய்கை என்று அறிவிப்பதுடனோ அல்லது அறிவிப்பதாலோ இப்படியான நிகழ்வு எதுவுமே முடிவுக்கு வந்துவிடுவதில்லை. சம்பந்தப்பட்ட சமூகங்களும் இதற்கான பொறுப்புகளை எடுத்தாகவேண்டும். வெறுமனே ஒப்பாரி வைப்பதினாலே எதுவுமே நிகழ்ந்துவிடப்போவதில்லை.

ஆனால், நீங்கள் சொல்லும் ஒரு விடயத்தினை ஒத்துக்கொள்ளவேண்டும். இந்நிகழ்வின் விளைவாக, ஈழத்தமிழர் குறித்த குரல் தமிழக அரசியலிலே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் சில குரல்களுக்கப்பால் சொல்லாமலும் செவிகளுக்கப்பால் கேட்காமலே மங்கிப்போகும். இவ்வகையிலே தமிழகத்தின் பெருநிலைப்பரபரப்பு அரசியல்வாதிகளை எதிர்பார்த்திருக்கும் ஈழத்தவிடர்களுக்கு ஏமாற்றமே. ஈழத்தமிழர்களின் அவலம் குறித்த தமிழகத்தின் அரசியல், ஈழத்தமிழர்களுக்குப் பயனில்லாதுபோனாலுங்கூட, தமிழகத்தின் பிளவுண்டிருக்கும் பார்ப்பனியத்துக்கு (பார்ப்பனர் என்று சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்) எதிரான சக்திகளை ஒன்றிணைக்கவேனும் உதவும் என்ற ஒரு சிறு நம்பிக்கை என் உள்ளேயிருக்கின்றது. குஷ்புவுக்கு எதிரான திருமாவளவன்+ராமதாஸ் நடவடிக்கையை எதிர்த்து எழுதியபோதோ வேறேதோ சார்ந்த இடுகையிலோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் இதைக் குறிப்பிட்டிருந்தேன் என்று ஞாபகம். இந்நிலையிலே, இப்படியான நிகழ்வுகள் என் சுயநலத்தின் அடிப்படையிலே மிகவும் வேதனையளிக்கின்றன. குறிப்பாக, உங்களின் இவ்விடுகை குறிப்பிடுவதின் சாரத்திற்கு ஆதாரமாவதுபோல, ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரல் எழுப்பிய தமிழகத்துப்பதிவர்களையும் பின்னூட்டிகளையும் இப்போது இந்நிகழ்வின் பின்னால், "துடித்தெழுத்து பதிவிலே வீரஞ் செறிந்துழலும்" தமிழகப்பதிவர்களையும் பின்னூட்டிகளையும் தடவிப் பார்க்கக்கிட்டும் அடையாளமிருக்கிறது.

தமிழகம் & இந்தியா தொடர்பான அரசியலிலே எதுவிதமான எனது தனிப்பட்டகருத்தினையும் ஈழம் சம்பந்தப்படாவிடத்து வெளியிடுவதில்லை என்பது என் தனிப்பட்ட நிலைப்பாடு (பெரிய ஆட்சிமாற்றும் ஆதரவுக்குரல் எனது பாருங்கள் ;-)). நேர்மைத்திறனும் தொலைநோக்குப்பார்வையுமற்ற தமிழக பெரும்பான்மை அரசியல்வாதிகளின் ஈழம் தொடர்பான தெருக்கூத்தோ நடிகர்கள் மேடைக்கூத்தோ ஈழத்தமிழர்களின் நிலையிலே நன்மையேதும் செய்யப்போவதில்லை என்ற நம்பிக்கையுமுள்ளவன்.(கெடுதல் செய்யக்கூடுமென்ற பயத்தினை முத்துவேல் கருணாநிதி நிரூபித்துக்காட்டினார்)

ஆனால், இச்சந்தர்ப்பத்திலே வெற்றி-தோல்வி எதுவென்ற விளைவினை எதிர்பாராது, அரசியல் செய்யாது, உணர்வின் அடிப்படிடையிலேமட்டும் ஈழத்தமிழர்களுக்காக ஒத்துக்குரல் எழுப்பிய ஈழத்தமிழாதரவுத்தமிழர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த கடப்பாடும் அதற்கான வழியும் திறந்திருக்கின்றது. தமிழகத்தின் சாதியமைப்பின் விளைவான பிளவுகளைத் தூர்க்க முயற்சிக்கவேண்டுமென்ற வேண்டுகோளை ஈழத்தமிழர்கள் ஆதரவு தந்த தமிழர்களை நோக்கி முன்வைக்கவேண்டும். ஈழத்தமிழர்சார்பாக பதிவு வைத்திருப்பவர்களேனும் இதைச் செய்யலாம். இவ்வேண்டுகோளாலே மட்டும் சமரசம் உலாவும் இடங்கள் விளைந்துவிடப்போவதில்லை. சொல்லப்போனால், ஒருத்தரும் இதை, "கண்டுக்கவே போவதில்லை." ஆனாலும், தார்மீக அடிப்படையிலே, வருங்காலத்தின் வரலாற்றுநீதிக்காக, இவ்வேண்டுகோளை விடுத்தேயாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன் hat gesagt…

//சிறீரங்கன் அண்ணாத்த அவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள். இரண்டாம்படத்தைப் பாருங்கள் சட்டங்களைக் கைதூக்கி வைத்திருக்கின்றார்கள். :)

உங்களைப் போன்ற ஒரு சிலரை விட்டுவிடுவோம். தனியாள் வன்முறை அரசியலைத் தாங்கிய திரைப்படங்களை விதந்தோத்தும் பதிவுப்புதல்வர்கள் பலர் இம்மாணவர்களை விமர்சிப்பது நகைப்புக்குரியது. பதிவுக்குத் தலைப்பும் கருத்தும் கிடைக்காமல் அலையும் பலருக்கு உன்னதமனிதர்களாக இதுவொரு தருணம். அவ்வளவுதான். பதிவுகளிலே இச்சட்டக்கல்லூரி பற்றி வெட்டிக்கிழித்துக்கொண்டு தமிழ்நாட்டிலே வாழும் எவராயினும், பதிதலுக்கு அப்பால், இறங்கி ஏதாச்சும் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். "சட்டத்தைக் காணோம்; சட்டையைக் காணோம்; நமீதா படம் ரிலீஸ்; தல(வன்) பாத்துக்குவான்/ர்" என்று ஒரு பட்டியலே போடும். மிஞ்சினால், 'பெயர்ப்பிராது' உள்ளவர்கள் இந்துவிலே துக்ளக்கிலே ஆசிரியர் கடிதம் போடும் "ரோமோ" ரேஞ்சுக்குப் போவார்கள். பேச்சுச்சுதந்திரம் இல்லாத நாட்டுக்காரனுகளுக்கெல்லாம் பதிவிலே ஜிங்சக் போட்டு, (அ)ஹிம்சையாகத் திட்டமட்டும் ஆண்குறி துடிக்கும். அவ்ளோதான்.//


தாங்கள் மேலே குறித்துச் சொன்னவையை ஏற்கிறேன்.ஆனால்இதமிழ்ச்சமுதாயத்தை அப்படியானவொரு நிலைக்கு நிலவும் அரசியல்-கட்சியாதிக்கம் மற்றும் அதுசார்ந்த நலன்கள் ஆக்கி வைத்திருக்கின்றன!இதையுடைத்து வெளிவருவதற்குக் குறைந்தபட்சமாவது திருவாளர் குணாவைப் படிக்கவேண்டும் தமிழுணர்வுடைய நண்பர்கள்! தங்கள் கருத்துக் நன்றி.


//நிகழும் எல்லாவற்றையும் முழுமையாக பார்ப்பன-பனியா கும்பலின் செய்கை என்று அறிவிப்பதுடனோ அல்லது அறிவிப்பதாலோ இப்படியான நிகழ்வு எதுவுமே முடிவுக்கு வந்துவிடுவதில்லை. சம்பந்தப்பட்ட சமூகங்களும் இதற்கான பொறுப்புகளை எடுத்தாகவேண்டும். வெறுமனே ஒப்பாரி வைப்பதினாலே எதுவுமே நிகழ்ந்துவிடப்போவதில்லை.//

இரமணி வணக்கம்!

மேலே நீங்கள் சொன்னதைப்பற்றி ஏலவே நானும் உணர்ந்தேன்.அதனாற்றான் இத்தகைய வார்த்தையை இப்பந்தியில் இங்ஙனஞ் சொன்னேன்:


//தமிழகத்தின் தமிழணுர்வுக் கட்சிகளினது ஈழத்துக்கான போராட்டங்களால் தமிழ்த் தேசியவுணர்வு மேலும் விரிந்த தளத்துக்கு வளர்ந்து செல்லுமென்பதைக் குறித்து மிகவேகமாக எடைபோட்ட பார்ப்பனிய ஆளும் வர்க்கமானது, ஓட்டுக்கட்சிரக அரசியலிலிருந்து விலத்திய ஆதிக்கப் பிற சாதிகள்சார்ந்த ஆளும் வர்க்கத்தோடான அரசியல் வியூகத்தோடு, தனக்கான இருப்பைக் குறித்து மிகக் கவலையோடு காத்திருந்து இந்தச் சதிச் சாதியக் கலவரத்துக்குக் காரணிகளை உருவாக்கியுள்ளது.//


நீங்கள் குறித்துச் சொன்னபடி:

//...ஆனால், இச்சந்தர்ப்பத்திலே வெற்றி-தோல்வி எதுவென்ற விளைவினை எதிர்பாராது, அரசியல் செய்யாது, உணர்வின் அடிப்படிடையிலேமட்டும் ஈழத்தமிழர்களுக்காக ஒத்துக்குரல் எழுப்பிய ஈழத்தமிழாதரவுத்தமிழர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த கடப்பாடும் அதற்கான வழியும் திறந்திருக்கின்றது. தமிழகத்தின் சாதியமைப்பின் விளைவான பிளவுகளைத் தூர்க்க முயற்சிக்கவேண்டுமென்ற வேண்டுகோளை ஈழத்தமிழர்கள் ஆதரவு தந்த தமிழர்களை நோக்கி முன்வைக்கவேண்டும். ஈழத்தமிழர்சார்பாக பதிவு வைத்திருப்பவர்களேனும் இதைச் செய்யலாம். இவ்வேண்டுகோளாலே மட்டும் சமரசம் உலாவும் இடங்கள் விளைந்துவிடப்போவதில்லை. சொல்லப்போனால், ஒருத்தரும் இதை, "கண்டுக்கவே போவதில்லை." ஆனாலும், தார்மீக அடிப்படையிலே, வருங்காலத்தின் வரலாற்றுநீதிக்காக, இவ்வேண்டுகோளை விடுத்தேயாகவேண்டும்.//

இத்தகைய நோக்கு மிக அவசியமானதே!

இதுகுறித்து நாம் சிந்தித்தேயாகவேண்டும்.அதாவது ஈழத்துப்பதிவர்கள்.இவர்களில்பலர் தற்போது தமிழகத்துச் சினிமா காதைகளின்வழி "ஏதோ பதிய முனைவது" எனவும் பயணிக்கின்றார்கள்.

நீங்கள் குறித்த பார்ப்பனியம் எனும் கருத்தாக்கத்தை மையப்படுத்திய அந்த நிறுவனத்தளத்தை நோக்கியேதாம் நானும் பார்ப்பனியமென்றேன்.இஃது,இந்தியா கடந்து ஈழத்துக்கும் சிந்தாந்த வியாக்கியானஞ் செய்வதன் தொடரே இன்றுவரை சாதியத்துக்கு எதிரான முனைப்புகள் ஒரு விடுதலைப்போராட்டத்தில்கூட நமது எதிரியோடு சமரசஞ் செய்கின்றன.

நீங்கள் மேலுஞ் சொல்லும்:


// தமிழகத்தின் பிளவுண்டிருக்கும் பார்ப்பனியத்துக்கு (பார்ப்பனர் என்று சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவும்) எதிரான சக்திகளை ஒன்றிணைக்கவேனும் உதவும் என்ற ஒரு சிறு நம்பிக்கை என் உள்ளேயிருக்கின்றது. குஷ்புவுக்கு எதிரான திருமாவளவன்+ராமதாஸ் நடவடிக்கையை எதிர்த்து எழுதியபோதோ வேறேதோ சார்ந்த இடுகையிலோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் இதைக் குறிப்பிட்டிருந்தேன் என்று ஞாபகம். //

இது எனக்கும் அப்படித்தாம் ஞாபகம்.

பிளவுண்டிருக்கும் பார்ப்பனியத்துக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பார்ப்பனியம் புதிய முரண்பாடுகளைத் தோற்றுவிக்கிறது.சாரம்சத்தில் ஈழ ஆதரவு எழிச்சிகள் ஒரு கட்டத்தில் அத்தகைய திரட்சியை எட்டும்.இதைத் தடுப்பதற்கான முனைப்புகளில் பார்ப்பனியம் மிகக் கவனமாகவே இருக்கிறது.என்றபோதும் பார்பனியத்தின் உடைவை வற்புறுத்தும் இன்றைய அரசியல்,பொருளியற் சூழல் மெல்லப் பாப்பனியத்தோடு சமரசஞ் செய்கிறபோக்கும் கவனிக்கப்படவேண்டும்.

கருத்துக்களுக்கு நன்றி பெயரிலி!

Anonym hat gesagt…

nalla velai pappan namakku mela okkathurukkaan..
nammaalu mela irundha ayyo
sethomada...sami...
adiche konuruvaanga pola irukke..
adhu sari viduthalai newspaper idha paththi vaaye tharakalaye enna achchu room pottu yosikiraangalo

Anonym hat gesagt…

சாதி அரசியலை இப்படிக் கூட புரிந்து கொள்வீர்களா.கொடுமைடா சாமி.
ஐயா பார்பனியம்-பனியா என்று சொல்லி எல்லாவற்றையும் விளக்குவீர்களா.இந்த மாணவர்களின்
உள்ளதில் இருந்த வெறி எங்கிருந்து பிறந்தது, அதை வளர்த்தது யார்,
அதில் குளிர்காய்வது யார்.அதையெல்லாம் யோசிக்க மாட்டீர்கள். பார்பனர்கள்,இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வேறு வேலையே இல்லை.சென்னையில்
உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களை
இப்படி தூண்டி விட்டு அவர்களுக்கு
என்ன லாபம்.

Anonym hat gesagt…

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.அண்ணன்
ஸ்ரீரங்கன் கண்ணுக்கு எங்கெங்கும்
பார்பனிய-பனியா சதி அல்லது முதலாளித்துவ சதி அல்லது
இரண்டும்.அண்ணாச்சி இப்படியே
யோசித்தால் வீட்டு பாத்ரூமிலும்
உங்களுக்கு எதாவது சதிதான் தெரியும், ராத்திரில புலம்பாதீங்க :)

Anonym hat gesagt…

/பார்பனர்கள்,இந்திய ஆளும் வர்க்கத்திற்கு வேறு வேலையே இல்லை.சென்னையில்
உள்ள சட்டக் கல்லூரி மாணவர்களை
இப்படி தூண்டி விட்டு அவர்களுக்கு
என்ன லாபம்./

அண்ணா என்ன சொல்ல வரேள்? விடுதலைபுலி மட்டும் வன்னிக்காட்டுல வேல இல்லாம போயஸ் கார்டனிலே ஜெயாமாமிய கொல்ல அட்டைக்கத்தியோட திரியரதா ஒங்க கொள்ளிக்கண்னுக்கு தெரியுதேன்னா அந்த பாகவத்தையா?

நோக்கு ஒரு நியாயம் மத்தவாக்கு ஒரு நியாயமோன்னா, அம்பி?

Anonym hat gesagt…

/idha/

யோவ் வல்லிக்கேணி முண்டம். இடை மார்புக்கும் மர்மத்த்துக்கும் எடையில கெடக்கிறது. ககரம், சகரம், தகரம் வாக்கு வெகு சுத்தம். பேஷ் பேஷ் டிவிஎஸ் பட்டணம் பொடின்னா பொடியேதான்.

Anonym hat gesagt…

டேய்! நாய்ங்களா! எதுடா வீரம்? அப்பாவியா மாட்டுற ஒருத்தனப் புடுச்சு 10 பேரு சேர்ந்து கட்டையால அடிக்கிறீங்களே அதா? அது சுத்த பொட்டத்தனம். தன் நண்பன் ஒருத்தன் உங்ககிட்ட மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சு நீங்க 10,20 பேர் கும்பல் கட்டையோட இருக்கீங்கன்னு தெரிஞ்சும் தனி ஆளா அவன காப்பாத்த வந்து உங்ககிட்ட மாட்டுனான் பாரு ஒருத்தன்...
உங்க கண்ணோட்டத்தின்படியே சொல்றதுன்னா அவன் வீரன். நீங்கெல்லாம் சுத்த பொட்ட பசங்க. அது என்னடா தனி ஆளா உங்களுக்கு ஒருக்காலும் வீரம் வரமாட்டேங்குது. ஒரே ஒரு ஆளா என்னைக்காவது, யாருக்கிட்டயாவது பிரச்சனை பண்ணப் போயிருக்கீங்களாடா நீங்க??? அப்படி ஒரு வரலாறு இதுவரைக்கும் இருக்காடா உங்களுக்கு? பன்னி மாதிரி 100 பேரா நீங்க கூடுனீங்கன்னாதான்டா உங்களுக்கு வீரமே வருது.
/ana vunaa papaan mela payurinka../ ithukku kaaranamee thalith arasiyal viyaathinga thaan sir...

சுந்தரவடிவேல் hat gesagt…

//ஒரே மொழியைப்பேசுபவர்கள் பார்ப்பனியச் சாதிய அதர்மத்துக்குப் பலியாவதையும்,தமது தேசத்தைத் தமது குருதியால் சிவக்க வைப்பதையும் தடுத்து நிறுத்தும் அரசியலை முன்வைக்க முடியாது திண்டாடுகிறோம்.//
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் சிறீரங்கன்.

ப.வி.ஸ்ரீரங்கன் hat gesagt…

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!

சுந்தரவடிவேல்,வணக்கம்!நீண்ட நாளைக்குப்பின்பு தங்கள் குரலைக் கேட்கிறேன்.நலமா?

ravi srinivas hat gesagt…

I totally disagree with this analysis.This is a local issue blown out of proportion by the media.It could have happened in
any other city in tamil nadu with
different groups in 'action'.
It shows that something is terribly wrong with that institution (Dr.Ambedkar Law
College) and the need for corrective action should go beyond measures to control 'law and order'.

ravi srinivas hat gesagt…

இன்றைய தமிழகமானது வெறுமனவே ஓட்டுக் கட்சிகளின் வாய்ச் சவடால்களின்வழி புரியத் தக்க அரசியல் சமூக வாழ்வைக் கொண்டிருக்கவில்லை.அது மிகவும் கொடிய பார்ப்பனியச் சூழ்ச்சியின் அதர்மத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறை ஜந்திரத்தால் தகவமைக்கப்பட்ட சூழ்ச்சிமிகு வாழ்நிலைகளைக் கொண்டியங்குகிறது.இங்கே,தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்குவதை மிகத் துல்லியமாகக் கவனப்படுத்தி அதற்கெதிரான பார்ப்பனியச் சதி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.அதன் முக்கியகூறாக இருக்கும் இந்தச் சாதியக் கலவரங்கங்கள் யாவும் ஆட்சியதிகாரத்தையும்,பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைப்படுத்த முனையும் பார்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் சம்பந்தப்பட்டது.எனவே,சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியுள் நடந்தேறிய சாதிக்கலவரம் என்பது மிகவும் சதி நிரம்பிய அரசியலோடு சம்பந்தப்பட்டது.

You left out Bush and Brown,
the global capitalism in your grand theory.You are capable
of seeing strange creatures where
none exists.I think you suffer from delusions and your analysis
is based on delusions.Do you think
marwaris and banias have no business other than engineering
trobule like this.Your so called
தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு is not an anti-caste sentiment always.

Anonym hat gesagt…

Mr. Srinivas
/Your so called
தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு is not an anti-caste sentiment always/

true, but Mr. David_Brock-Reversed, by this statement of yours, I happily concur that you would agree with the following statement too.

Our
தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு is not an anti-indian sentiment always. Look at Nedumaran.

u no hu i am hat gesagt…

/Do you think
marwaris and banias have no business other than engineering
trobule like this./

Quite so... you see, but you do not observe..... Or, is it that you do not want to?

I may generally agree with you on Sri rangan's imaginative extrapolations of the events. Even here I sincerely believe this isolated incidient had nothing to do with B-B & Co backing. However, I certainly believe there is a deliberate and decisive attempt by B-B & Co to blow this event out of propotion -especially in the media - for their own purposes.

Let me ask you, the neo-darling of Dondu, anpudan Bala, Mayavarathan & Co:

Where was all the media attention that we have now when things worse than this happen as a part of administrative rituals in IITs, AIIMs and IISC?

ப.வி.ஸ்ரீரங்கன் hat gesagt…

//...It shows that something is terribly wrong with that institution (Dr.Ambedkar Law
College) and the need for corrective action should go beyond measures to control 'law and order'.//


//...Do you think
marwaris and banias have no business other than engineering
trobule like this.Your so called
தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு is not an anti-caste sentiment always.//

I am really sorry for the members of the
“Ritual and World Order”.

When thinking of India, it is hard not to think of caste.

"That the social order prevalent in India is a matter which a Socialist must deal with; that unless he does so he cannot achieve his revolution; and that if he does achieve it as a result of good fortune, he will have to grapple with the social order if he wishes to realize his ideal—is a proposition which in my opinion is incontrovertible. He will be compelled to take account of Caste after the revolution, if he does not take account of it before the revolution. This is only another way of saying that, turn in any direction you like, Caste is the monster that crosses your path. You cannot have political reform, you cannot have economic reform, unless you kill this monster.This anti-social spirit, this spirit of protecting its own interests, is as much a marked feature of the different castes in their isolation from one another as it is of nations in their isolation. The Brahmin's primary concern is to protect "his interest" against those of the non-Brahmins and the non-Brahmins' primary concern is to protect their interests against those of the Brahmins. The Hindus, therefore, are not merely an assortment of castes, but are so many warring groups, each living for itself and for its selfish ideal"-Dr.Ambedkar


/தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு is not an anti-caste sentiment always./ Oh Ravi,it's you.what do you want?


The works of Brahmins, Ks.atriyas, Vaishyas, and Shudras are different, in harmony with the three powers of their born nature.
The works of a Brahmin are peace; self-harmony, austerity, and purity; loving-forgiveness and righteousness; vision and wisdom and faith.
These are the works of a Ks.atriya: a heroic mind, inner fire, constancy, resourcefulness, courage in battle, generosity and noble leadership.
Trade, agriculture and the rearing of cattle is the work of a Vaishya. And the work of the Shudra is service. -The Bhagavad Gita
(The constitutional questions are in the first instance not questions of right but questions of might. The actual constitution of a country has its existence only in the actual condition of force which exists in the country: hence political constitutions have value and permanence only when they accurately express those conditions of forces which exist in practice within a society.Marx)


The untouchablity feature in the caste system is one of the cruelest features of the caste system. It is seen by many as one of the strongest racist phenomenon in the world. Every sixth human being in the world today is an Indian, and every sixth Indian is an untouchable. For thousands of years the untouchables, or Dalits, the people at the bottom of the Hindu caste system,have been treated as subhuman.

regards

Sri Rangan