Donnerstag, März 18, 2010

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

மாறிவரும் போராட்டக் களம்:

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

பாராளுமன்றத்தை போராட்டக்களமாக்கும் தோழர் டாக்டர் கீசி,மிகச் சிறந்த சோசலிஸ்ற்.அவர் ஜேர்மனில் பாராளுமன்ற சோசலிசத்துவக் கட்சிக்குத் தலைவரும்,உலக சோசலிசக் கட்சிகளுக்கு உதாரண புருஷராகவும்-முன்னுதாரணமிக்க போராளியுமாக இருக்கின்றார்.பாராளுமன்றச் சாக்கடையில் நீந்தும் முதலாளித்துக் கட்சிகள் போலன்றி, அவர் எதிர்ப்பு அரசியல் போராட்டத்தை மிகவும் பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து முன்னெடுப்பவர்.

திரு.கீசி அவர்கள் மிகச் சிறந்த இடதுசாரி அறிஞரும்,சட்ட நிபுணருமாவார்.அவரது கட்சியின் உறுப்பினர்கள்ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் கையளவுவே நிறைந்தவர்கள்.அறுநூறுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் அறுபது இடதுசாரி உறுப்பினர்கள் மிகத் காத்திரமான எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் நலனுக்காவும்,ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போராடுகிறார்கள்.

ஜேர்மனியில்பரந்தபட்ட மக்களுக்கெதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முதலாளித்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராக-ஆட்சிக்கு எதிராக வீரம் நிறைத்து உரையாற்றி, எமது உள்ளத்தில் நிலைக்கிறார் திரு.கீசி அவர்கள்.சமகால உலக யுத்தங்கள்,அவ்கானிஸ்தான் யுத்தம்,ஆயுதத்தளபாடவிற்பனைகள்,தொழில் நிறுவனங்களின் ஊழல்மலிந்த மக்கள்விரோதச் சட்டங்கள் குறித்து மிகக் கறாரான விமர்சனத்தை இதுவரை திரு.கீசியைப்போல் எவரும் அம்பலப்படுத்தவில்லை.இன்று,ஜேர்மனியானது உலகத்தில் ஆயுத விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்ஜேர்மனியானது உலக ஆயுதவிற்பனையிலும் ஆயுதத்தளபாட இருப்பிலும் ஆறுவீதமே பங்கெடுத்தது.இன்றோ அது உலக ஆயுதவிற்பனையில் அமெரிக்கா,இருஷ்சியாவுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் முன் நிற்கிறது.இது,யுத்தத்தை எங்ஙனம் ஊக்குவிப்பதென்பதற்கு அப்பால்,இன்றைய பொருளாதாரத்தில் ஐக்கியமுறும் ஐரோப்பியக் கூட்டணி நாடுகள் குறித்த Confederation புரிதலில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம்,லீசபெர்ன் ஒப்பந்தம்(Lissabonner Vertrag) மறுபுறம்,ஆயுதவிற்பனையென இரு துருவ அரசியல் வியூகத்தின் வழியினூடாக ஜேர்மனிய முதலாளிகள் மக்களது ஜனநாயவுரிமைகளை மட்டுப்படுத்தும்போது,ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவுகளோடான அரசியல் என்பது வெறுமனவேயான பொருளாதாரக்கூட்டே அன்றி அது மக்களது நலன்சார்ந்த தோழமைக் கூட்டல்ல.மக்களின் வளர்ச்சியில் பங்குபெறும் பண்பாடு மற்றும் அபிவிருத்திசார்ந்த முன்னெடுப்புமல்ல.எனவே,இத்தகைய நாடுகள் தமது பொருளாதாரத் தேவைகளது தெரிவில் "கண்ட அரசியலை" மக்களது நலன்சார்ந்து முன்னெடுப்பதாகச் சொல்வது பொய்யானது.


வங்குரோத்தாகும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்:


இன்று,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ(ஸ்)லாந்துக்கு அடுத்ததாக கிரேக்கம் வங்குரோத்தாகிறது.கிரேக்கத்தில் மக்கள் வீதிக்கிறங்கிப் போராடுகிறார்கள்.கிரேக்க அரசானது ஓயவூதியத்திலிருந்து அனைத்தச் சமூகநல மானியத்தையும் வெட்டித்தள்ளுகிறது.இங்ஙனம் இத்தகைய சமூக நலவெட்டுக்களைச் செய்வதற்கான ஆலோசனைகளை உலக வங்கியும்,ஜேர்மனிய அரசும் அழுத்தங்கொடுத்து வழங்குகிறது.

உண்மையிலேயே இந்த அழுத்தம் எதற்கானதெனச் சிந்திப்போருக்கு இந்தக் கீசிஎனும் இடதுசாரித்தலைவரின் பேச்சு மிகச் சரியான புரிதலைத்தரும்.எனினும்,எனது புரிதலின்வழியில் கீசி சொல்வதையுந்தாண்டிமேலும் ஒருவுண்மை கிரேக்கத்தின் வங்குரோத்துக்குக்காரணமாகிறது.

கிரேக்கமானது இன்று, ஆயுதவிற்பனையில் மூன்றாவது இடத்தில் இருந்து செல்வச் செழிப்பில் தமது முதலீட்டார்களுக்குச் சட்டப் பாதுகாப்புக்கொடுக்கும் இந்த ஜேர்மனியின் ஆயுதக்கொள்வனவில் இரண்டாவது பெரிய வாடிக்கையாளனாகக் கிரேக்கம் இருக்கிறது.முதலாவது இடத்தில் துருக்கி இருக்கிறது.மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா இருக்கிறது.இதில் வேடிக்கையான அரசியல் இருக்கிறது.இதுதாம் எனக்கு முக்கியமானது.

இன்றைய அரசியல் விற்பனர்கள் குறித்துரைக்கும் எதிர்கால அரசியலானது ஐரோப்பியக்கூட்டமைப்பின் கொன்பெடரேஷன்(System of confederation) முறைமையிலான அரசியல்-தேசக்கூட்டுக்கள் என்பவை எதிர்கால அரசியல்-யுத்த முரண்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதென்பது அவர்களது குறிப்பு.அதுமட்டுமின்றி உலக மக்களுக்கும்,ஐரோப்பாவுக்குமான உறவில் இக்கூட்டமைப்பு(EU-confederation) மிகப் பெரிய பாச்சலாக இருக்கும் என்றும்,அது,மக்கள் நல அரசியலையும் அதை முன் தள்ளும் பொருளாதார சுபீட்சத்தையும் நோக்கிச் செல்லுமென்றும் உரைத்தார்கள்.ஆனால்,துருக்கியும் அதன் பரம விரோதி கிரேக்கமும் போட்டியிட்டு ஆயுதக் குவிப்பில் வங்குரோத்தாக்கின்றன.கிரேக்கம் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது.இரண்டு தேசங்களும் நேட்டோ(NATO) பங்காளித் தேசங்கள்.இவர்களுக்கெதிற்கு ஆயுதம்?யாரோடு பொருத?

அப்பாவி மக்களை வேட்டையாடும் உலகப் பகாசூரக் கம்பனிகள் இத் தேசங்களை முற்றுகையிட்டுவிட்டு,அவர்களது தேசவுற்பத்தியில் கணிசமான வருமானத்தைத் தமது ஆயுதக்கம்பனிகளுக்குத் தாரவார்க்கும்போது இத்தேசங்களுக்கு அதே ஆயுதத்துக்குக்கொடுத்த பணம் மீளவும்,வட்டியோடு கடனாக உள் நுழைகிறது.இரும்புகளை வேண்டித் தேசம் பூராகவும் நிறைத்தவர்கள் வேளைக்குத் தமது அனைத்து வளத்தையும் அந்த ஆயுதங்களைத் தந்த எஜமானர்களுக்கு தாரவார்க்கும்போது மக்களை பொருளாதாரரீதியாகவொடுக்கும் சூழலை இவர்கள் மூலமாகப் பெற்று விடுகின்றனர்.இது,ஒரு சுழற்சியில் மேற்குலக மூலதனம் விரும்பும் அரசியல் .பொருளாதார வலுவற்ற தேசங்களது இறைமையை இங்ஙனம் கைப்பற்றி அத்தேசங்களைத் தமது அடிமையாக்கும் முயற்சிதாம்.

இங்கே,ஐரோப்பியக் கொன் பெடரோசன் என்பதெல்லாம் மக்கள் நலன்சார்ந்த இணைவினது தெரிவில்லை.மாறாகப் பொருளாதார வலுவுள்ள தேசங்கள் தமக்கான சந்தையை விரிவாக்கிக் கைப்பற்றிக்கொள்வதென்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது.

இதை ஜேர்மனிய இடதுசாரிகள் மிகத் தெளிவாகப் பரந்தபட்ட மக்களிடமும்,பாராளுமன்றத்திலும் மிக நேர்மையாக அம்பலப்படுத்துகிறார்கள்.

பொதுத்தளத்தில் அவர்கள் தமது எதிர்ப்பு அரசியலைமிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கும்போது ஜேர்மனியில் இடதுசாரிகள் வலுப் பெற்றுவருகிறார்கள்.இது நவ மார்க்சிதத் தந்தையென வர்ணிக்கப்படும் அன்ரேனியே நெக்கிறியின் சிந்தாந்தக் கோப்பாட்டு நகர்வுக்கு அண்மித்த அரசியலாக விரிவடைகிறது.இத்தகைய அரசியல் பரந்தபட்ட மக்களிடம் மிக ஆழமாக எண்ணவூலமாக வளர்ச்சியடைகிறது.ஓட்டுக்கட்சி அரசியலுக்கு மாற்றானவொரு அரசியல் பாதையை இது காலப்போக்கில் மக்கள் நாடிச் செல்வது என்ற தளத்தில் சமூக ஆவேசமாக உந்தித் தள்ளும்போது, நிறைந்த பயனை மக்கள் அடையமுடியுமென்பது ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் இன்றைய நம்பிக்கை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.03.2010

Freitag, März 12, 2010

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

(1)

ல்லோருக்கும் வாய்க்காத அருமையான உறவுகள் சிலருக்கு வாய்த்துவிடுவது.அத்தகையவுறவுகள் நண்பர்களாகவும்,காதலர்களாகவும்-ஏன் பிள்ளைகளாகவும் வாய்த்துவிடுவது.

எனக்கு அப்படி எதுவும் வாய்த்திருக்கவில்லை.

காதலித்தபோது தோல்வி.

கவிதை புனைந்து நேசித்தபோது அபரிதமான பாலியற் தூண்டல்,நடாத்தைப் பிறழ்வென...

எல்லாந்தொலைந்தபோது குடும்பம்.

கவிதையாகப் பாசம் மலர்ந்திருப்பதாக நான் நினைக்க வைக்கும் தருணங்களில் பொய்துப்போய் இருக்கும் எனது புவியுலகத்துள் பலதும்,பத்தும் எங்கோவிருந்து இரைச்சலாக எனது செவிகளுக்கிடையில் துள்ளி விளையாட நான் மௌனித்துத் தியானிக்கிறேன்.

வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.

இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் வசதிகேற்ப பயன் படுத்துகிறோம்.

உயிரின் வலியாக நீண்டுவிடுகிறதா காதல்?அப்போ நானோ இல்லை நீங்களா என்னை-உங்களை உணர்வு பூர்வமாக மதிக்கிறேன்-மதிக்கிறீர்களெனக்கொள்வதில் தப்பு நிகழாது.அப்படித்தாம் அனைவரும்.

அருமையான காலங்களது குரல் வளைகளை முறிப்பதற்காக நான் புனிதக் காவடியைக் காவித் திரிகிறேன்.அதை எவர்மீதும் இறக்கி வைத்துக் ஆட்டம் பார்ப்பதில் இந்தக் காலம் எனக்கு வஞ்சம் புனைந்து "சூனியம்" வைத்திருக்கிறது.

(2)

பதின்ம வயது-அது பருவ வயதே ஆவதற்கான திரிவு நிலைப் பருவம். அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.


இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.

நோயுற்ற சமூகமாக மனித சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.

இது அசலான உணர்வை அகற்றிய கையோடு எனக்குள் போலியான மனிதனையூன்றிவிடுகிறது.நான் வானுக்கும் தரைக்கும் எனது தலையை அறுத்து உருட்டி விளையாடுகிறேன்.அந்த விளையாட்டில் எனது புனிதம் வெற்றிக் கோப்பையாக எனது விழிமுன் தோன்றி என்னைப் பொய்மைக்குள் வாழ வைப்பதை நான் எப்போதுமே புரிந்ததாக இல்லை.

என்ன செய்யலாம்?

காதல்.


வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!


இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காரணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.

அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் ஜென்னி.

(3)

அவள் ஒரு மகுடம்.

அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே அவளது விரல்களில் மோதிரமிட்டு மௌனமாகக் காதலுறுதிசெய்தேன்.அப்போது எனக்கு வயது 17.அவளுக்கு 21 வயது.எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று ஜென்னியை முறையாகவே கரம்பிடித்து மகிழ்ந்தேன்.

இடையினில் எதிர்ப்பட்டாள் நங்கை ஒருத்தி.அவள் மெல்லெனப்பாயும் நீராகவும்,நான் கல்லாகவும் இருக்கக் காலம் நீரினின் அமைதியில் என்னைக் கரைத்தது.அந் நீர் ஹெலேனா டெமுத் என்று நான் சொல்வதற்குள் உலகம் அவளது புத்திரனில் எனது முகத்தை ஒட்டிக்கொண்டது.

நாம் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த ஜென்னி-ஹெலேனாக் காவியங்கள் வழி செய்தவை.ஓராயிரம் காதல் மடல்களின்வழி நாம் அழகான ஜேர்மனிய மொழிக்கு அழியாத இலக்கியஞ் செய்தோம்.

அந்த இலக்கியத்தின்வழி ஜேர்மனிய மொழி வாழ்வதென்று இன்றைய இளைஞர்கள் சொல்வதையும் அன்றே கண்டோம்.


ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தருணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தருணங்களைச் சொல்பவை.

அப்படிச் சொன்னதாற்றாம் நான்வறுமையில் வீழ்ந்து வீழ்ந்து விடுதலைக்காய் எனது மழலைகளை விதைத்தேன்.எத்தனையோ முறைமைகளில் புறைசிஸ்சிச(In 31 Maerz 1843 Die Preussischen Behoerden versuchen Marx zu Kaufen,Sie bieten ihm den Posten des Chefredakteurs bei der konservativen "Preussischen Staatszeitung an.Marx lehnt ab. அரசு என்னை வேண்ட முனைந்தபோதும் நான் வறுமையோடு வாழ்ந்து காதலில் எழுந்து கவித்துமாய் மூலதனமிட்டேன் உங்கட்கு.

(4)

காதல் உயிர்ப்பினது சுவாசம்.உள்ளத்தில் உதிரும் ஒவ்வொரு திசைநோக்கிய கனவும் அதன் துடிப்பில் எதிர் வினையாற்றத் தவறுமானால் எனது மொழிக்கு எல்லை இருந்திருக்கும்.

ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்கைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!

எனவேதான் எனது காதற்கன்னிக்குக் கடிகரமாக இருந்த என் முதிசமும் காணிக்கையாகிறது.வில்கெம் வோல்f(Wilhelm Wollf) எனக்களித்த உயரிய பரிசு எனது காதலின் உச்பச்சச் சீவியத்துக்கு-உயிர்த்திருந்து என்னைச் சீராட்டிப் பராமரித்த தாய்க்குத் தாயான ஹெலேனாவுக்குச் சொத்தாகிறது...

ஆயுள்பூராகம் போரிட்டு,புரட்சிக்குப் பாடம் சொன்ன எனது முதிசமாக இதைத்தவிர வேறெதை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

வீடும் வாசலும் மருண்டு போகும் திசையில் பல்லாக்கு வாகனம் தரித்திருக்க நான் வேதாந்தம் பேசிய பூசாரியல்ல.நான் புதிய யுகத்தின் விடிவெள்ளி.

இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.

அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.இங்கே,ஜென்னியும்,ஹெலேனாவும் எனக்குள் தவித்த இரண்டு திசையாய் வடக்கும்-தெற்குமென...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.03.2010

Mittwoch, März 10, 2010

ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

Helena Demuth und Marx,ஹெலேனா டெமுத்-மார்க்ஸ்,ஷோபாசக்தி,தேசம் வாசகர்கள்:

சிறுகுறிப்பு.

ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது.அதுபோலவேதாம்கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை.இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது.மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ,ஸ்ராலின்மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை!அரசியல்ரீதியாகவும்,வியூக ரீதியாகவும் தவறுகளென்பது எவரும் செய்யக் கூடியதே.

எது தவறு,எது சரியென்பதை வர்க்க ரீதியான சமூகமைப்பில்வைத்துப் புரிவதென்பது பரந்தபட்ட மக்களது கொலைகளை நியாயப்படுத்தித்தாம் சாத்தியமாகுமா?அதுபோன்றேதாம் இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது,"கம்யூனிச ஆசான்கள் என்பவர்கள்மீதான விமர்சனங்கள் யாவும் முதலாளித்துவ எதிர்ப் பிரச்சாரமாகுமா?"என்பது.

பைபிள்மீது விமர்சனம் வேண்டாம் என்பதும்,குரான்மீது அவ நம்பிக்கை கொள்ளக் கூடாதென்பதும் பலதரப்பட்ட தர்க்வாதத்தைப் புதைப்பதன் அடிப்படையைக்கொண்டது.கம்யூனிசத் தலைவர்கள் மாசற்ற பிதாமக(ள்)ன்கள் என்று எவர் பேச முனைகிறாரோ அவர் ஆபத்தான பேர்வழியென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.தவறுகள் எங்கும் நிகழும்.அது,தவறா அல்லது சரியாவென்பது நாம் கொண்டிருக்கும் உலகப் புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இங்கே,மார்க்சோ அல்லது லெனினோ தமது குடும்ப வாழ்வில் பலதரப்பட்ட சூழலில் காதல் வயப்பட்டிருப்பது அவர்களைப் பொறுத்தமட்டிலும்,உலக-இயற்கைக்குட்பட்ட முறமைகளுக்கமையவும் தவறில்லை.அது,இயற்கையான மனித-உயிரின நடவடிக்கை.இங்கே,இந்தக் கருத்தியல் உலக- அமைப்புகளுக்குச் சாந்திட்டு காக்க அல்லது அடியொற்றிப் பேச முற்படுபவர்களுக்கு இது பெரும் சர்ச்சை. புனித நடாத்தையின் "தூய்மை" வாதப் பிரச்சனை.

இன்று,மனித சமூகத்தில் பல பிரச்சனைகள் குறித்து ஆராயப்படுகிறது.இதுள் பொருளாதார மற்றும் அரசியல்-பௌதிகமென ஆய்வுகள் தொழில்ரீதியான முன்னேற்றத்துக்காகவும் மனித விடுதலைக்காகவும் செய்யப்படுகின்றன.நமது சூழலில் ஒன்றையொன்று மறுத்துத் தனிப்பட்ட நடாத்தைகள் சேறடிப்புகளென எழுத்துக்கள் மலிந்து விடுகிறது.

நண்பர் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத்துக்காகத் தனது கொரில்லா நாவலை அர்பணித்திருக்கிறார்.சந்தோஷமான விடயம்.மார்க்ஸ் அவர்களது வாழ்வில் கெலேனா அம்மையாருக்கான இடம் என்னவென்பது ஒரு முக்கியமான விஷயமே.இது குறித்து ஜேர்மனிய மார்க்சியர்கள்-இடதுசாரிக்கட்சிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளார்களென்பது பலமாக ஜேர்மன் மொழிக்குள் இயங்குபவர்களால் அறிந்திருக்கக்கூடியதே.


அவ்வண்ணமே ஜேர்மனியைப் பூர்வீகமாகக்கொண்ட ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்வு-சாவு,தியாகம்-விருப்பு வெறுப்புகளென எல்லா ஆசாபாசங்களும் ஜேர்மனிய மொழிக்குள் இருக்கிறது.ஹெலேனா அம்மையாரது கையெழுத்துப் பிரதிகள்கூட ஆவணக்காப்பகங்களில் இருக்கிறது.அவர் குறித்து வேலைக்காரியெனப் புரிதல் அரை குறை மார்க்சியப் புரிதலாளர்களிடம் இருக்கலாம்.ஆனால்,அந்த"வேலைக்காரி"இன்றி மார்க்சினது மூலதனம் சாத்தியம் இல்லை என்பது எனது புரிதல்.ஹெலேனா அரசியல்-வர்க்கப் போராட்டம்,அது குறித்த வியூகங்களென மார்க்சுடன் விவாதித்து இருக்கிறார்.அவரது தியாகம் நிறைந்த உழைப்பின்றி மார்க்ஸ் குடும்பம் ஒருபோதும் இயங்கி இருக்க முடியாது.மார்க்சும் உழைப்பாளர்களது தந்தையாகி இருக்க முடியாது.எனவே,ஷோபாசக்தி தனது நாவலை ஹெலேனா அம்மையாருக்குக் காணிக்கையாக்கியது சரியானதே!எவர் மார்க்சின் மூலதனத்தை மெச்சுகிறாரோ அவர் நிச்சியம் ஹெலேனாவையும் மெச்சுகிறார் என்பதே எனது முடிபு-துணிபு!

மார்க்ஸ் அவர்களுக்கும் ஹெலேனா அம்மையாருக்கும் இடையிலான தொடர்புகள்,உறவுகள்,திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமையவும் நிகழ்ந்தவை என்பதும்,மார்க்ஸ் தனது சட்டபூர்வமான துணைவிக்கு எழுதிய கடிதத்திலிருந்து நம்மால் வாசித்தறியக்கூடியதாகவே இருக்கிறது. ஹெலேனாவின்மீதான காதலில் சிக்குண்டிருந்தபோது மார்க்ஸ் அதிகமாகக் காதல் வயப்பட்ட கடிதங்களை ஜென்னியோடு பகிர்ந்துள்ளார்.நாவோடு நா வைத்து முத்தமிடும் காதல் நடாத்தைகள் குறித்து மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருக்கிறார்.குடும்பம் பிரியாதிருப்பதற்காக அவர் பல முறைகள் காதலுணர்வின் உச்சத்தை ஜென்னி வெஸ்பாலினோடு செய்திருக்கிறார்.

ஹெலேனா டெமுத் அவர்கள் மார்க்சினது மனைவி ஜென்னி ஃபொன் வெஸ்ற்பாலென் அவர்களது பெற்றோரிடம் வீடு பராமரிக்கும் தொழிலை ஆரம்பித்து இறுதிவரை அத்தொழிலை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்வரை செய்து,மடிந்திருக்கிறார்.தான் விரும்புவது,விரும்பாததென அவரது கடிதம்கையெழுத்து எடுகளென(Poesiealbum)எழுதப்பட்டு ஆதாரமாக இருக்கிறது.


ஹெலேனா அவர்களது கையெழுத்து ஏட்டை வாசிப்பவர்களுக்கு அவரது உள்ளத்தைப் புரியக்கூடியதாகவிருக்கும்.அவர் வீட்டு வேலைகளால் அதிகம் சுமையடைந்திருப்பதும், வெளியில் சென்று ஒரு நேரவுணவை ஒரு ரெஸ்ரேன்டில் உண்ணவும் விரும்பி இருக்கிறார்.தான் தனது கையால் சமைக்காத உணவை உண்பதே அவரது அதி விருப்பாகவும்-உலகத்தில் வாழ்வுப் பயனாகவும் கண்டிருக்கிறார்.மார்க்ஸ் குடும்பம் மிக ஏழ்மையோடு உழைப்பாள வர்க்கத்துக்காக ஆய்வுகளில்-போராட்டத்திலிருந்தபோது ஹெலேனாவுக்கும் மார்க்ஸ் அவர்களுக்கிடையிலான காதலின் பொருட்டுப் பிறந்த குழந்தை 1851 இல்இன்னொரு குடும்பத்தில் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ஹெலேனாவின் விருப்பின்பொருட்டானதாகவே இருக்கிறது.

மார்க்சினது குடும்பத்தில் ஏலவே ஆறு குழந்தைகள் வறுமையினால் வாடும்போது தனது குழந்தையும் அவருக்குச் சுமை கொடுக்குமென்பதால் ஹெலேனா அம்மையார் தனது சொந்தக் குழந்தையை மார்க்சினது ஒப்புதலோடு வேறொரு குடும்பத்தில் வளர்க்கக் கொடுத்துவிடுகிறார்.இது வரலாறு.

இங்கே,மார்க்ஸ் குறித்தோ அன்றி ஹெலேனா அவர்கள் குறித்தோ எவரும் சேறடிக்க முடியாது.
அதைச் செய்தவர்கள் இடதுசாரிகளது வட்டத்திலிருந்த அதி துதிபாடிகளே.
முதலாளியக் கருத்தியலாளர்கள்கூட ஜேர்மனியச் சூழலில் அதை மார்ஸ்-ஹெலேனா இருவரது சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் மார்க்சின் வரலாற்றை மீளப் பார்த்த சையிற் பத்திரிகைகூட மிக நாணயத்தோடு ஆவணங்களை முன்வைத்து இத்தகைய விவாதத்தை மிக அழகாகவும்,நீதியாவுஞ் சொல்லி இருக்கிறது.

இங்கே,ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

ஒருபெரும் குடும்பம்(மார்க்ஸ் குடும்பம்)தொழிலாளர்களுக்காகத் தியாகஞ் செய்தபோது,அவர்களுக்காக அம்மையார் ஹெலேனா டெமுத் தனது வாழ்வையே அக் குடும்பத்துக்குத் தியாகித்து எமக்கு மூலதனம் எனும் அரிய விஞ்ஞானப் பாடத்தைத் தந்திருக்கிறார்.இதன் ஆணிவேர் மார்க்ஸ் மட்டுமல்ல.அங்கே, ஏங்கெல்சுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு ஹெலேனாவுக்கு,ஜென்னி வெஸ்ற்பாலினுக்கு,ஜென்னி மார்க்சுக்கு உண்டு.அவ்வண்ணம் ஹெகலுக்கும் உண்டு.இதை எவரும்-எதன் பெயராலும் மறுக்க முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.03.2010

Samstag, März 06, 2010

நினைவிலித் தவிப்பில்

>Podium<


சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.


பயன்தகு முட்டாள்கள் "nuetzlichen Idioten"(Lenin).

Motto:"lifelong learning" ...வாருங்கள்,brave new world...and "Totaler Krieg"-BLA BLA and Action ...The court takes a serious view of this(...) matter(0-1).புதிதாய்ப் பிறப்பெதன்ற நிலையெடுப்பு...இப்படியுமொரு ஊகம்.ஒவ்வாததன் அருவ இயக்கத்தின் எங்கோ தஞ்சம் கிடைக்கும்?இருக்கலாம்!வார்த்தைகளின் இயல்வில் வழிந்துருகும் உணர்வுதனைச் சொல்லித் திரிவதற்கானவொரு வெளியாகப் பதிவைத் தெரிவதில் பயம் ஒன்றில்லை!அது கடந்த பாதையின் ஏதோவொரு அதிர்வில் சுமையிழக்கும் நெஞ்சு.நினைத்துப் பார்க்கிறேன்... எதற்காக இது?


ஒரு வடிவத்தில் நின்று,நிலைமறுக்க.


முடிந்தால் ஓலத்தில் கிழிப்பதற்கானவொரு வெளியைத் தெரிவது நோக்கு.


"கடவுள் செத்துவிட்டான்" என்றான் கஞ்சன் நீட்சே.Nietzsche

"நீட்சே செத்து விட்டான்"என்றது காலம்.(Volksmund >Pop-Starகாலத்தில் வாழ்கிறேனா?

...ம்

சரியானவொரு"தெரிவு"என்னவாக இருக்கும்?மனிதர்களாய்,மிருகமாய்-சடப் பொருளாய்,வெளியாய்?


அன்னியர்கள், உளப்பரப்பில் "அகதி"விண்ணப்பத்தைச் செய்தபடி.


"அதுவா-அல்லது இதுவா?"கீர்கேகோர்ட் (Kirrkegaard)அல்லல்பட்டதன் தொடர்ச்சி சமீபத்துச்"சொல்லி"கள்>Demokratischer Repraesentation< வரை . இறைவனின் நிர்மாணம்-கட்டுமானம் இன்றைய பல்தேசிய வர்த்தகத் தொடர்ச்சி" ஓட்டோ கால்சொய்யர்(Otto Kallscheuer)


"கடவுளே படைப்பாளி"அவனுக்காய்க் காத்திருக்கும் கைய்த் வார்ட்(Keith Ward)


"நான் இறைவனாகவே முனைவேன்,ஏனெனில்,அவனே என்னை விகாரமாகப்படைத்தான்.சங்கங்கள் மிருக வதையை எதிர்த்துத்தான் வழக்குப் பதிந்து கொள்ள முடியும்" கையினே(Heine)


"கடவுளே உலகத்தைப்படைத்திருந்தால்,நிச்சியம் நான் கடவுளாக இருக்கமாட்டேன்:பர்க்கும்போது அவனது கொடுமை இதயங்களைச் சிதைத்திருக்கிறது"சொப்பன்கவ்வர்(Schopenhauer);


"இதயங்களைச் சிதைப்பதற்கு வெளியில் எதுவுமில்லை-உள்ளே இருக்கும் உன்னைப் பார்!" வேதாந்தம்.அன்னியத்தில் அன்னியமானவர்களே!,அருவத்தில் அலைந்து-உடைந்து அலைந்தோயும் ஒரு பொழுதில் நிலையிழந்த"நினைவு"கள் மீண்டுமொரு "உருவ"வாழ்வுக்கு வழி இயலுமாக்கின் புதிய "வரவு"நிலைமறுத்துத் தொடர் இழப்பில் நிலையெடுக்க...(Minima Moralia-Adorno).(Alister McGrath )எலிஸ்ரர் மெக்கிறத்தின் திருச்சபையில் விளக்கமெடுத்த அந்தக்காலத்தின் கிழிவில் எச்சில் வீணீயாய் இழுபடும் நினைவோடு நிமிர்ந்தெழு-அப்போது...


நினைவிலித் தவிப்பில் உதிரும் உனது காலத்தில் கையளவு பொய்யும்,கடுகளவு "நீயும்"கலந்ததே உலகு.மூக்கு வழி வளி வெளியும் உள்ளும் இயல்வது"நான்"ஒலிக்கும் எனக்குள் விரியும்"விந்து"முகிழ்க்கும் இன்னும்.பீலா விடுதலும்,ரீல் காட்டுவதும் எமது மரபின் தொடர்ச்சியாய் என்னையும்...கோமாளிக்குக் கோமாளியாக்கிக் கடைந்தேற்றும்"பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்"...