Sonntag, Dezember 11, 2011

பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

பசந்தா பேட்டியும்,தமிழரங்கம்-இரயாகரனது கபட அரசியலும்!

-பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

"மிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்" கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

தமது காட்டிக்கொடுக்கும் அரசியல்வரலாற்றில் செய்த அனைத்துக் குலைப்பு அரசியலிலும்,அதன் உச்சமான இந்தப் பேட்டி அரசியலானது தம்மைத் தொடர்ந்து மக்கள்விரோதிகளாகவே நிலைப்படுத்தவும்,தமது எஜமானர்களுக்குத் தொடர்ந்து "இன்போமர்"களாகவே செயற்பட்டுத் தமது இருப்பை நிலைப்படுத்திப் புரட்சி வேசமிட்டுத் தொடர முனையும் சதி அரசியலில், இத்தகைய உலகப் பாட்டாளிய வர்க்கத்தின் ஒரு பகுதியான கட்சியின்-தலைவரின் பேட்டி அவசியமாக இருக்கிறது.இதற்காக இவர்கள் பசந்தாவின் எழுத்துக்களிலிருந்து வெட்டியொட்டிய அவரது கருத்துக்களைத் தமக்காகப் பசந்தாவே பேட்டியளித்துத் தந்ததாகச் சொல்லிப் பிரசுரிப்பதென்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சந்தர்ப்பவாத -நரித்தனமான செயற்பாடாகும்(பசந்தா இலண்டன் வருகை தந்ததும்,அவரைத் தமிழர்கள் தரப்பில் இனியொரு நாவலன்மட்டுமே சந்தித்திருந்ததென்பதும் நாம் அறிந்துகொண்டவைதாம்).

இவர்களது இந்தப் பேட்டிக் கட்டுரை குறித்து,இனியொரு நாவலன் பசந்தாவுடன் நேரடியாகவுரையாடியபின்,அவரது கருத்தின்படி இது அவரால் அளிக்கப்பட்ட பேட்டியல்லவென உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் பரவலாகக் கிடைக்கிறது.இந்த இரயாகரனது"புதிய ஜனநாய மக்கள் முன்னணி-தமிழரங்கம்"புரட்சிகர வேடமிட்டுக் கொள்ளத் தொட்ட இந்த இழிய செயற்பாடானது,இவர்கள் கூறும் மக்கள் நலத்திலிருந்து நோக்கப்படும்போது கிரிமினல் நடாத்தையாகும்.

இத்தகைய நடாத்தையின் மூலம் இவர்கள் கட்டியமைக்கும் அரசியலது தொடரெது?

கடந்தகாலத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துள் இரயாவினது பாத்திரமென்ன?புலிப்பினாமி!.

புரட்சிகரச் சக்திகளை அணித்திரட்சியடையவிடாது பிளந்து,ஆட்காட்டி, அழித்தல்,மாற்றுக் குழுக்களை இலங்கை அரசினது கைக் கூலிகளெனப் புலிகளது அரசியலைப் புரட்சிகர வேசமிட்டுச் செய்வதுவரைத் தொடரும் இந்தப் பீடையை எங்ஙனம் விளங்கிக் கொள்வது?

சாளரத்தில் ஏறித் துப்பாக்கி காட்டி அச்சப்படுத்தித் தொடர்ந்த இரயாகரனது புலிமுகமானது புரையோடிப்போன புலிகளது அராஜகத்தின் இன்னொரு வடிவமென்பதை வரலாற்றில் பதிவு செய்வதுவரை எனது முயற்சி தொடரும்.


அராஜவாதிகள் எந்த வேசமிட்டுக்கொண்டாலும் பொய்மையும்,போலித்தனமும் உண்மையினது முன் செல்லாக் காசாகப் பல்லிளிப்பதைத்தவிர, அதற்கு எந்த வலுவும் கிடையாது.என்றபோதும், இந்த உதிரிப்பாட்டாளிய வர்க்கக் குணாம்சமானது,எப்படி வரலாற்றில் செயற்படுமென்பதை நாம் லெனினிடம் கற்றாலும்,இத்தகைய செயற்பாடுகள் மூலமாக இரயாகரன் தொடர்ந்து, நமக்கு அதன் சாத்தியமான எல்லைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இதை முன்வைத்து:

அரசியல் அறங்குறித்து நிறையப் பேசிக்கொள்ளலாம்,அதிலுங்கூட அப்பட்டமாக மக்களைச் சொல்லியே புரட்சிகரமான அரசியலைப் பேசுவதாகவும்,மக்களுக்காகவே தமது அனைத்து நடவடிக்கைகளும் செயலூக்முறுவதாகவும்,மக்களுக்கு வெளியில் நட்பு-மனிதாபிமானங் கிடையாதென்பதும்,தமிழரங்க-இரயாகரன் குழுவினது வாதமாகும்.புகலிடச் சிந்தனைமையத்தை உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பம்வரை இவர்களது அரசியலுக்குள் புலிவழியான அரசியல் அறங்களே அடிப்படையான நோக்கங்களைக் காண்பதற்கு அடிப்படையானதாகவிருந்தது.கடந்த காலத்திலிருந்து(தூண்டில் சஞ்சிகையில் நூறு பூக்கள் மலரட்டும் விவாதத் தொடர்) நான் இரயாகரனது அரசியலை ஒரு இணக்கமான அரசியல் போக்கிலிருந்து விலத்தியே வகைப்படுத்தியவன்!

இரயாகரன் என்பது ஒரு குறியீட்டுப் பெயராக வலுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி, ஒரு தனிமனிதனுக்குட்பட்ட கருத்து நிலையாகக் கட்டபட்ட கருத்துகளுக்குப் பின் பல தலைகள் மறைந்திருப்பதை நான் மூன்றாவது அணிக்குள் வகைப்பட்ட சில தேடல்களிலிருந்து புரிந்துகொண்டபோது,இது புலிகளது பினாமிகளைக்கொண்டவொரு அணியெனவும்,புரட்சிகரச் சக்திகளைத் துப்பாக்கி முனையில் அழிப்பது முடியாதவொரு நிலையில் புலிகள் தமது சக்திக் குட்பட்ட அழிப்பு அரசியலைச் செய்தபடி அதற்கு வெளியில் இந்தத் தமிழரங்கம்-இரயாகரன் கும்பலைத் தமது அழிப்பு அரசியலின் இன்னொருவகை(புரட்சிகரச் சக்திகளாக நடித்து மாற்றுக் கருத்தாளர்களை-புரட்சிகரச் சக்திகளை-வர்க்கவுணர்வுபெற்ற தோழர்களைக் அணைத்துக் குலைத்தல்) உறுப்பாகவே அரசியலைச் செய்யத் தூண்டிக்கொண்டிருந்தது.அதற்கானவொரு மறைமுகமான அநுமதியையும்-கண்காணிப்பையும் புலிகள் கவனித்துச் செய்தபடி இந்த இரயாகரன உருவாக்கிய புலம்பெயர் புரட்சிகர நாடகம் மிகவும் கீழ்மையான அனைத்துப் புலிவழிக் குணங்களுடனும் கட்டியமைக்கப்பட்ட காலத்தில், மக்களுக்காகப் போராடிய சபாலிங்கம்போன்றவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அதைக் காயடிக்கும் கருத்துக்களால் நீர்த்துப்போக வைக்கும் முனைப்பில் இரயாகரனது புரட்சிக் கட்டுரைகள் பேசவும் முற்பட்டிருந்தன.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து, இலங்கைப் பாசிச அரசால் கொல்லப்பட்ட பல புலித் தலைவர்களையும்,பிரபாகரனையும்"சரணடையாது இறுதிவரை போராடி மரணிக்கும் சக்தியாக"வருணித்து அவர்களுக்குப் புரட்சிகர வணக்கம்-தலைசாய்த்தலென இரயாகரன் குழுவாடிய நாடகமானது அவர்களது புலிவிசுவாச அரசியலை மக்களுக்கு அப்பட்டமாகச் சொல்லியது.

இதையும் மீறித் தம்மைப் புரட்சிகரச் சக்தியாக நடாகமாட இரயாகரன் பலதரப்பட்ட வேளைகளில் புலித்தலைவரைச் சாடிய கட்டுரைகளை எழுதிக்கொண்டு,தம்மைப் புரட்சிகர அரசியலின் தொடர்ச்சியாக முன்வைப்பதில் மிகத் தேர்ந்த நாடகத்தைச் செய்துகொண்டது.இது புலிகளது மிகத் தந்திரமான அழிப்பு அரசியலிலிருந்து தொடர்ந்த அரசியலே என்பதை நான் மட்டுமே புலம்பெயர் சூழலில் அதிகம் சொல்லிக்கொண்டேன்.எனது கட்டுரைகளை ஒரு வகைப்படுத்தலுக்குள் உட்படுத்த முனைந்தால் அதுள் பேசப்படும் "புலிப்பினாமிகள்" என்பது இந்தத் தமிழரங்க-இரயாகரன்-புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் குழுவுக்குள் நிலைப்படுத்தப்படும்"புரட்சி"வேட அரசியல் என்பதுதாம் உண்மையான அர்த்தமாவது!

சமீபத்தில் அம்பலப்பட்ட(பசந்தா பேட்டிவகை இழி அரசியல்-புதியகலாச்சாரத்தின் இரயாகரனது அரசியல்மீதான விவாதம்-விமர்சனம்-தோழமைத் துறத்தல்,புலித் தலைமையைச் சரணடையாது போரிட்டு மறைந்ததாகப் புனைந்து தலை சாய்த்தல்,புரட்சிகர வேசம்...) இரயாகரன் கோஸ்ட்டியின்புரட்சி- புலிப்பினாமி வேடமானது அவர்களை ஒரு முன்னணியை உருவாக்க வேண்டியவொரு சூழலுக்குள் தள்ளியதன் விளைவே,இந்தப் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோற்றம்.இவர்கள் புலிகளிடமிருந்தும்,இலங்கையில் மக்களது சொத்தைக் கற்ற நஷனல் வங்கிக்குள்ளிருந்து கொள்ளையிட்ட அன்றைய கோடிக்கணக்கான தொகையின் மூலமாகப் பலம்பொருந்திய நிதிவலுவுடன் தமது அரசியலைத் தொடரும் "தொழில் முறையான முறையில் எழுதித் தள்ளும்" கருத்தாடலை உருவாக்கிக்கொண்டனர்.

இரயாகரன் ஒரு தமிழ் அச்சகத்துள் வேலை பார்ப்பதெனும் போர்வையில், மாற்றுக் கருத்தாளர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களது கருத்துக்களை நீர்த்துப்போக வைக்கும் எழுத்துக்களை அவரது தோழமைகளோடிணைந்து தினமும் எழுதும் தொழிலை இந்தப் பொருட்பலத்துடன் செய்யும் இன்றுவரை,அரசியல் அறமென்பது ஒடுக்குமுறையாளர்களுக்குப் பினாமிகளாவிருந்து புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுப்பது தாமென்பதைச் சரிவரச் செய்து வருகின்றனர்.ஆங்காங்கே, ஒத்தர்களை வைத்து இவர்கள் உருவாக்கிய"புரட்சிகர"வேடமானது ஒருவகையில் இவர்களிடஞ் சிக்கிய மூலதனவலுவால் இன்றுவரை ஒருவித போலித்தனமான அழிப்பு அரசியலைப் புரட்சிகரமாகச் செய்வதில் பல கட்டச் செயற்பாடுகளை(தமிழ்த் தேசிய ஆவணக் சுவடிகள்வரை...) உருவாக்கியுள்ளது.

அம்பலப்பட்டு,அரசியல் அரங்கு நிர்மூலமான வேளைகளில் இவர்கள் நாடகமிடும்"மக்கள் நலன்"என்பது ஒருவித ஆயுதமாக மற்றவர்கள்மீது பாய்ந்து வலுவாகத் தாக்கும்.அறங்கெட்ட இயக்ககங்களது "வரலாறுகளை"பதிவதென்றும்,போராட்ட அநுபவங்கௌன்றும் இவர்கள் செய்யும் அரசியலது தொடர்ச்சி புலிப் பினாமி அரசியலது தொடரென்பதிலிருந்து கடந்த மாதத்தத்தில் தேனியில் மணியம் எழுதும் அநுபவத் தொடரில்(பலர் இதை வாசித்துவருவதால் விபரிக்கத் தேவையில்லை) இவர்கள் புலிப்பினாமிகளாகப் புலம்பெயர் தேசம்வரை தொடர்ந்த ஈனத்தனத்தை, என்.எல்.எப்.ரீ பிளவுக்குழுக்களென விளித்து மக்களுக்குச் சொன்ன செய்தியும் உண்மைமீதான சந்தேகத்தைத் தர முடியாதது.

இப்போது,இன்னும் விரிவாக இவர்களது நாடகங்களை-வேசத்தைச் சொல்வதென்றால், இந்த இரயாகரனால் பலமுறை சொல்லப்பட்ட செய்தியும்,நம்மால் நேரடியாக அநுபவமாகிய இலங்கையர் சங்கத் ஸ்தபகர் இரஞ்சித் கெனாயக்க ஒரு இலங்கை அரச லொபி உறுப்பாகும்.இத்தகைய லொபி அரசியலைப் பலமுறை விமர்சித்த இரயாகரன் சமீபத்தில் மனிதம் இரவியின் முக நூல் நிலைத் தகவலில் அறிமுகஞ் செய்ப்பட்ட இரஞ்சித்தின்நூல் அறிமுக(இது சுவிஸ் நாட்டில் மனிதம் குழுவால் நடாத்தப்பட்டிருக்க முடியும்) நோட்டீசைத் தனது தமிழரங்கத் தட்டியிலும் ஒட்டிப் புரட்சிகர-மாற்று அரசியலைத் தொடர்ந்தார்.இது,தனது கையுக்குள்ளிருந்துதாம் அனைத்தும் தொடர்வதாகவும்,தான் அனைத்தையுங் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்திக் கண்காணித்துவருவதாகவும்,தனது எஜமானர்களுக்குச் சொல்வதாக இதைக் காண்பிக்மொரு செயலூக்கத்தின் வியூகமாகக் கண்டுகொள்ளலாம்.உண்மையான புரட்சிகரச் சத்தியும்,அதன் செயற்பாடும் எப்படி இருக்கமுடியா தென்பதற்கு இரயாகரனது அனைத்துச் செயற்பாடுகளுமே உதாரணமானதும்,சாட்சியுமாக நம் முன் இருக்கிறது.

இதைப் பசந்தாவின் பேட்டியைக் கட்டியமைத்த போலி பேட்டியிலிருந்தும், தமக்கும் நேபாளப் புரட்சியாளர்களுக்குமான "தோழமை" உறவு இருப்பதாக நடாகமாடும் இந்தப் போலித்தனத்திலிருந்து, இந்த "இரயாகரன் புரட்சி" வினைக்குள்ளே தொடர்ந்து கட்டியமைக்கப்படும் மக்கள்விரோத-காட்டிக் கொடுக்கும் அரசியலையும்,புலிப்பினாமிச் செயற்பாட்டையும் மீளவும் இனம் காட்டுகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
11.12.2011

Samstag, November 19, 2011

"சமூக ஒழுங்கை" நிலைப்படுதத் தவறிவிட்டனர்

" மதவிரோதிகள்!,வேற்று மதமான "கிறிஸ்தவர்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லது பௌத்தர்கள்தாம் " செய்திருக்க வேண்டும்.மத விரோதிகளை கண்டுபிடித்துத் தண்டனையைப் பெற்றுக்கொடுக்கப் புலம்பெயர் தமிழ்ச் சமுதாயத்தை மீளவும் ,விடுதலைக்காக ஸ்த்தாபனமயப்படுத்தும் அவர்களது அரசியல் தலைமையான புலிகள்[LTTE] முயற்சி செய்து ,சமூக ஒழுங்கை நிலைப்படுதத் தவறிவிட்டனர் போலற்றாம் தெரிகிறது!"


புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.அதை மேலும் நிலைப்படுத்தும் அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,"மாவீரர்"தினமெனவும்,தமிழ்ர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதி கோயிற்றேரை எரிப்பதுவரை அவர்களது சமூகவிரோத்தச் செயற்பாடு ஆபாசமான வக்கிரத்தோடு கொலை அரசியலைக் காசுக்காச் செய்து கொள்கின்றனர்.இதை,தமிழ்த் தேசியத்தின்மீதான பாசமுடைய குழந்தைகள் மெல்ல,மிக இலகுவான மொழிகளால் கடிந்துகொள்கின்றனர்.

பிளவுபட்ட இயக்கவாதக் குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது.தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.

புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது!

இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடியபோது, வெளிநாடுகளில் அலையும்பினாமிப் புலிகள் தம்மிடம் சேர்ந்துள்ள மக்கள் பணத்தைக் காப்பதற்காக, அப்பாவி மக்களது வழிபடும் தலங்களையும் சொந்தங்கொண்டாடி அவற்றைத் தீவைத்துக் கொளுத்தித் தமது நிறுவனப்பட்ட அராஜகத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, மக்களை உளவியல் ரீதியாகவும் அச்சத்துக்குள்ளாக் கின்றனர். இப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து, அச்சமூட்டபட்டும், அராஜகத்தின் மூலமும் தமிழ் விதேசிய வாதம் தொடர்ந்து இருத்திவைக்கப்படுகிறது.இது பாசிசமின்றி வேறென்ன?

ஸ்ரீரங்கன்
19.11.2011

Sonntag, Oktober 16, 2011

புலி இயக்க "மாவீரர்கள்" போற்றத்தக்கவர்களா?

"மாவீரர்" தினக்கொண்டாட்ட வர்த்தகச் சூதாட்டம்,
இறுதித் துயரமா அல்லது புதிய ஆரம்பமா?; எதைக்குறித்தான குவிப்புறுதி?; எங்கேயாவது -எப்போதாவது "தியாகத்தின்" இருப்புக்குத் தமிழ்ச் சமுதாயத்தில் நியாயமுண்டா?; பிறகு ஏன்?மீண்டும்,மீண்டும், அலைந்தழிந்து காலம் எம்மைவிட்டகல்கிறது. காலத்தில் வாழவே முட்டாள்த் தமிழர்களால் முடியவில்லை!


"உண்மையாய் வாழ்தல்"என்ற முடிச்சு மேலெழுகிறது.


இஃது, நிலவும் தத்தமது வாழ்நிலையை உறுதிப்படுத்தும் மனித விருப்புத்தான்!

யுத்தங்கள் ஏதோவொரு வகையில் தமக்கான நியாயங்களைச் சொல்லி, மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.ஏதோவொரு நாட்டில் இரண்டு வகைப்பட்ட-அல்லது பலவகைப்பட்ட மனித அடையாளங்கள் தமக்கான பங்குக்கு,உரிமையெனப் பெயரிட்டுச் சண்டை போடுகின்றன.அவற்றில் தமக்கு ஏதாவது இலாபமுள்ளதாவென உயர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தேசங்கள் தேடுதலைக்கொண்டு பக்கஞ்சார்கின்றன.இதற்கான தெரிவில் தத்தமக்கு படை,கூட்டுப்படையெனக் கட்டியும் எழுப்புகின்றன.இதன் குறுகிய வடிவமாகத் தமிழ்த் தேசியம் பேசிய கயவர்கள் கூட்டம் தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்து விட்ட கையோடு வர்த்தகச் சூதாடிகளாக மாற்றமுறும் போக்கானது மேற்காணும் நலன்களை ஒத்தது.
அங்கே,"மனிதாபிமானம்"மசிரைப்பிடுங்கும்-இங்கே"தமிழீழ விடுதலை"நோட்டு வேட்டை செய்யும்.


இதற்கான தோதுகளாக நரவேட்டையாடப்பட்ட இளைஞர்களை "மாவீர்ர்" சொல்லிப் புகலிடத்தில் வர்த்தகஞ் செய்யும் புலிப்பாசிஸ்டுக்களை ஓடோட வெருட்ட முடியாத அவலங்களாகத் "தமிழீழ விடுதலை", "மாவீரர்"தினம்,தமிழர் உரிமை எனப் பாடப்படும்!


இந்த இழி உரையாடல்களால் ஏமாற்றப்படும் மக்களது நம்பிக்கை, புலம் பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களில் பண நோட்டுக் களாக இந்தக் கேடுகெட்ட புலிப் பாசிஸ்டுக்களிடம்குவியும்போது,அவர்கள் அதைத் தனிச் சொத்தாக்கிக்கொள்ளும் பாரிய வர்த்தகச் சூதாட்டமாக மக்களது உழைப்பை அபகரிக்கின்றனர்.


இதைத் தடுத்து நிறுத்தாதவரை மக்களது விடுதலைக்கான அர்த்தம்பொதிந்த உரையாடல்கள் மேலெழ முடியாது.இத்தகைய தமிழ்ச் சமுதாயத்தின் கிரிமினல் முகிழ்ப்பானது அந்த இனத்தையே வரலாற்றிலிருந்து தொடைத்தெறியும் பாரிய வரலாற்றுப் பழியைச் சுமக்கிறது.கூடவே,இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில் புலிவால்கள்-பினாமிப் புலிப் பாசிஸ்டுக்கள் தமது மோசாடியான எண்ணத்துக்கொப்ப இன்று, பல பிளவுகளாகப் பிரிந்து பண மோசடியில் சந்தி சிரிக்க வைக்கின்றனர். இப்படித்தாம், பண்டுதொட்டுத் தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் "தமிழ் அரசியல் வியூகம்" தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.


பணமென்ற ஒரே குறிக்கோளுக்காக இந்தத் தமிழ் வர்த்தக மனதுக்குச் சரணடைந்து மாண்டுபோன புலித் தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களையும் நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்களை நடாத்த முடிகிறது. அத்தோடு,யுத்தத்தால் நெருக்கடிக்குள்ளானவொரு சமுதாயத்தின் அன்றாட நெருக்கடியைத் தட்டிக்கழித்துவிட்டுப் பணம் சேர்ப்பதில் அனைத்தையுமே கொச்சைப்படுத்தியும் விடுகிறது!வர்த்தகத்துக்கான ஒரு ஸ்த்திரச் சந்தையாகவும்,அந்தச் சந்தையில் தொடர்ந்து தங்களது எண்ணக் கருக்களை (விடுதலை சொல்லிப் புகலிடத் தமிழரைச் சுரண்டிக்கொள்ளும் "தமிழீழம்-விடுதலை,தமிழர் தாயகம்" இன்னபிற இழி குணம்.) நிதிமூலதனமாக மாற்றும் >தடார் புடாலென< "மாவீரர்" தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.


சமீப கால இலங்கையில், புலிப்பினாமிகளது அரசியல் நகர்வுகள் யாவும் "ஆயுதப்புலிகளை" அழித்துவிட்டுக் கருப்புப்பொருளாதார மாற்றங்களுக் கூடாகக் காய் நகர்த்துவது அம்பலமாகி வருகிறது. இங்கே, புகலிடத்தில் புலிப்பாசிசமானது பலவடிவத்தில் இந்த வர்த்தகச் சூதாட்டத்தில் பாரிய நிதி மோசடி மாபியாக்களாகவே இருந்துகொள்கின்றனர். இவர்கள் துதிக்கும் "மாவீரர்கள்" அனுசாரணையானவொரு லேபிளாகவும்,அந்த லேபிளைத் தாங்கிவரும் பண்டாமாகத் "தமிழீழம்" தயாரிக்கப்பட்டுத் தொடர்ந்து புகலிடத் தமிழர்களும் ஏமாற்றப்பட்டே போகின்றனர்.இந்த மோசடியான வர்த்தகத்துக்கு அனைத்துப் புகலிட ஊடகங்களும் ஒத்தூதித் தமக்கான பங்கையும் உறுதிப்படுத்தி விட்டனர்!


இந்த நிலையில்,ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூக சீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம்"மாவீரர்"துதி பாடி இருட்டடிப்புச் செய்யமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.10.2011

Sonntag, September 04, 2011

இலிபியா,அடுத்து ஈரான்?

இலிபியா,அடுத்து ஈரான்?

காதிபத்தியம் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் உட்பட்டுள்ளது.அமெரிக்கா தனது பெரு இராணுவத்துக்குத் தீனிபோடுவதற்குத் திண்டாடுகிறது.அதைத் தக்கவைப்பதால் நெருக்கடிக்குள்ளாகும் சந்தையைக் காக்க முனைகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் பெறுபேறாக இணைந்த ஐரோப்பியக் கூட்டமைப்புத் தன்னைத் தக்கவைப்பதில் ஐரோப்பிய மக்களது வாழ்வைப் பலியாக்குவதில் இணைந்த" ஐரோப்பா-யூரோ" எதிர்காலத்து வேலைவாய்ப்பின் அவசியமாக அனைத்து ஜனநாயக அலகுகளையும் நசுக்கிவிடுகிறது.லீசபொன் ஒப்பந்தத்தின் [ Treaty of Lisbon]பின்னான ஐரோப்பா, உலகம் முழுவதற்குமான நெருக்கடியை உருவாக்குவதில் முன்னணியிலுள்ளது.

இந்தப் புள்ளிகள் ஈரான்வரை மிகப்பெரிய யுத்தத்தைச் செய்துகொள்ளும்வரை முடிச்சுகளாக விரிகிறது.

சீன அரச எரிபொருட்கூட்டுத்தாபனம் ஈரானிய முதலீடுகளை மெல்லக் குறைத்துக்கொள்ள[ China drosselt Öl-Investitionen in Iran]முனைகிறது.இது ஈராக்கைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க முயற்சிக்கு வழிவிடுவதாக இருக்கிறது[Die chinesischen Geschäftemacher drosseln ihr Tempo in Iran offenbar nicht zuletzt auf Druck der USA. Peking versuche, die US-Regierung zu beschwichtigen, sagten Insider gegenüber Reuters].

கூட்டாகக் கொள்ளையிடப்படும் [Beuteverteilung in Paris]
லிபியா யுத்தம், தனது கொள்ளையைப் பங்கு போடுவதில் பாரிஸ்சில்கூடிக்கொண்டது.ஈராக் யுத்தத்துக்கு எதிராகத் திரண்ட மக்களது புரிதல்,லிபிய யுத்தத்தில் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இந்தக் கருத்தியில் வெற்றியானது ஈரான் போருக்குத் தயாராக்கப்படும் கருத்தியல் ஆளுமையை ஏகாதிபத்தியத்துக்கு வழங்கிவிடுகிறது.
கடாபிக்கு எதிரானதென்பதில் லிபியாவின் சுயாதிபத்தியம் பலியாக்கப்பட்டதுபோல ஈரானுக்கு எதிரானதென்பதை அஹ்மாடிநெட்சாத்துக்கு[Mahmud Ahmadinedschad]
எதிரானதெனச் சொல்லிக்கொள்ளப்போகும் மையக் கருத்தியலுக்கும் எந்தவித எதிர்ப்பும் இல்லை யென்றாகிறது. ஏகாதிபத்தியத்தின் ஊடாக வலு அவ்வளவு பெரியது.அதன் ஆயுதப்பலத்தைவிட அதன் கருத்தியல் ஆயுதமே மிக வலியது.இதை எதிர்த்து இயக்கமுறும் மாற்றுக் கருத்துவலு மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகிறது.கடந்த காலத்தில்-இருஷ்சிய உடைவுக்கு முன் அமெரிக்கா செய்த அரசியல்-போர் நடவடிக்கைகள் ஒற்றைத்துருவத்திலிருந்து செய்யப்பட்டதல்ல.அங்கே, இரண்டு துருவங்களாக மூலதனச் சழற்சியும் அது சார்ந்த அரசியல்-ஆதிக்கமும் இயங்கியது.எனினும்,சோசலிச நாடுகளது இறையாண்மையைப் பல வழிகளிலும் தோற்கடித்த அமெரிக்க மற்றும் மேற்குலகங்கள் 90 களின் மத்தியிலும்,2000 த்தின் ஆரம்பம்வரை இந்த ஒற்றைத் துருவ அரசியல்-பொருளாதார ஆதிக்கத்தைச் சுவைத்துத் தமது இராணுவ மேலாண்மையை உலகெங்கும் நிலைநாட்டின.குறிப்பாக,ஈராக்கில்,அவ்கானிஸ்த்தானில்.ஆனால்,இது நிலைத்திருக்கும் வாய்ப்பை அவை தமது அரசியல்-பொருளாதாரப் பலத்தின்வழியாகத் தக்கவைக்கும் சூழலொன்று 2002 ஆம் ஆண்டுக்குப்பின் மெல்ல இல்லாதாகிறது.என்றபோதும்,லிபிய யுத்தத்தின் பின்இதில் மீனவும் மாற்றங்கள் நிகழ்கிறது.சீனா தொடர்ந்து தன்னை இராணுவரீதியாகப் பலப்படுத்துவதும் இதன் தொடர்ச்சியே.சீனாவனது மிக நுணுக்கமாகத் தனது கையையே நம்ப முனைகிறது.இந்தக் கூட்டுக்களையும்-ஒப்பந்தங்களையும் அது இரண்டாம் பட்சமாகவே கணிப்பதில்"சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம்"கூட நிலைமைக்கொப்ப ஒரு பொருட்டல்ல.


இருஷ்சியா-சீனாவுக்கிடையிலான நேட்டோவுக்கு மாற்றான[ Shanghai Cooperation Organization (SCO)] சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கம் 2002 ஆம் ஆண்டு சென் பீட்டர்பேர்க்கில் ஆரம்பித்துக் கைச்சாத்தாகியபின், இன்னொரு வார்சோ அணியாக இந்தச் சங்காய்க் கூட்டு உருவாகிறது.இத்தகைய தருணத்தில் அமெரிக்கச்சார்பு நாடுகளது தலைமைத் தேசமான அமெரிக்காவினது ஒற்றைத் துருவ அரசியல் மெல்லச் சிதறுகிறது.அதுமட்டுமின்றிக் கடந்தகாலத்து சோசலிச-முதலாளிய முகாங்களெனும் இருபெரும் எதிரெதிர் நிலையைக்கடந்து, முதலாளித்துவ முகாம் இரு துருவங்களாக உலகை வேட்டையாடப் பிரிந்தன.இவற்றுள் மிகவும் மூலப்பொருள்கள் நிரம்பியதும்,சந்தையில் மலிவாக உற்பத்தியைச் செய்யக்கூடியதும்,இராணுவ-மனிதவலுவில் பலம்கூடியதுமாக இந்தச் சங்காய்க் கூட்டே இன்று உருவாகியுள்ளது.எனினும்,இந்தக் கூட்டின் பிரதான இரு தேசங்களும்(இருஷ்சியா-சீனா)அமெரிக்க,ஐரோப்பியத் தேசங்களது சந்தையிலும்,அந்த வலையத்தின் தொழிற்சாலைகளது வெளி உற்பத்திதத் தேவைகளிலுமே தங்கியுள்ளன.இதன்பொருட்டு இந்தச் சங்காய்க்கூட்டுக்கூட வெறும் காகிதப் புலியாகவே காலப்போக்கில் மாறிவிடும்.


என்றபோதும்,ஐரோஆசியன் வலயத்தில் இருஷ்சியாவினது இறையாண்மை மற்றும் செல்வாக்குட்பட்ட பிரதேசமாக கஸ்பிஸ் எண்ணையூற்றத் தேசங்கள் இருக்கின்றன.என்னதாம் ஜோர்சியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் நேட்டோ உள்வாங்கினாலும், அஃது இருஷ்சிய இராணுவ ஆதிக்கத்திலிருந்து தப்பிடவிட முடியாதளவுக்கு அதன் தரைத்தோற்றம் இருக்கிறது.இதையுறுதிப்படுத்த 2008 இல் நடந்த யுத்தம்தாம் ஒசித்தியாவைக் காக்கும் இருஷ்சிய-ஜோர்ச்சிய யுத்தம்.அவ்வண்ணமே,சீனாவினது மிகப்பெரும் மனித ஆற்றல் அத்தேசத்தை உலகு தழுவிய உற்பத்தித்திறனுடைய தேசமாக மாற்றியுள்ளது.இது,சீன உற்பத்தி மற்றும் அதன் நிதியாதார வலுவோடு அமெரிக்க ஆதிக்கம் நிலவிய அனைத்து மண்ணிலும் சீனாவையும் அதன் ஆதிக்கத்தையும் திணிக்கும் சூழலை உருவாக்கியது.அது,கொங்கோ முதல் அங்கோலா,நைஜீரியாவெனத் தொடரும்.


சீனா, ஆபிரிக்காவின் கட்டுமானப்பணிகளில் பெரும் பங்கெடுத்தபடி அரேபியத் தேசங்களில் இருஷ்சியவோடிணைந்து இதுவரை காரியமாற்றியது.ஈரானில் முதலீடுகளைத் தவிர்ப்பதிலிருந்து இன்றைய அமெரிக்க மூலதனத்தின்அதிர்வுகளிலிருந்து சீனா தன்னைத் தக்கவைக்க அமெரிக்காவினது விருப்புக்குத் தலையசைப்பதாகவே உண்மை நம்முன் எழுகிறது.
புதிய ஆதிக்கத் தெரிவுகளின்வழி,அமெரிக்கா-ஐரோப்பியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நகர்வுக்கான அங்கீகாரமே சீனா ஈரானில் முதலீடுகளை மெல்லக் குறைப்பதாக அமைகிறது.இந்தத் ததிரோபாயமானது "தி கிரான்ட் செஸ்போர்ட்டை" [The Grand Chessboard: American Primacy and Its Geostrategic Imperatives ]எனக்குள் ஞாபகப்படுத்துகிறது.இதன் சூத்திரதாரி சீப்பினிக் பிரசென்ஸ்கியின் அடுத்த நகர்வுகள் இங்ஙனம் அமைக்கப்படுகிறது:


1:உலக மூலவளத் தேவைக்கான போட்டியில் யுத்தத்தைச் சமாதான எல்லையில் வைப்பது,


2:வளர்ந்துவரும் பொருளாதார நகர்வில் ஐரோஆசியன் வலயத்தில் தனது நிலையைத் தக்வைத்து அதன் எண்ணை வளத்தைக் குறைந்தளவாவது மேற்குலகக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வது,


3:அர்டிக்ஸ்-வடதுருவப் பனிவலயத்தில் கரையும் பல சதுரக் கிலோமீட்டர் கடல் நிலப்பரப்பில் பதுங்கிக்கிடக்கும் போட்டி வள அவகரிப்பில், அமெரிக்கா முதன்மையாக இருக்க முனைதலில் நடந்தேறும் அரசியலில் இருஷ்சியாவை தனிமைப்படுத்தல்.அல்லது அதனோடு இணைந்து [Russen und Amerikaner starten Mega-Ölprojekt in der Arktis]எதிர்ப்பைத் தணித்தல்,பின் தனிமைப்படுத்தல்.4:தென்கிழக்காசிய வலயத்தில் மாறிவரும் சீனா-இருஷ்சியப் பொருளாதார ஆதிக்கம் மற்றும் கடற்போக்குவரத்து முரண்பாடுகளில் குறைந்தளவாவது அமெரிக்க நலனைப் பாதிக்காத நட்பு-பகை அரசியல்-ஆதிக்க வியூகத்தைக் கொண்டியங்குதல்.இதன் முரண்பாட்டில் சங்காய் கூட்டு ஒத்துழைப்பு இயக்கத்தையும் அதன் உறுப்பு நாடுகள் தவிர்ந்த செல்வாக்குக் உட்பட்ட பார்வையாளர்கள் தகுதிபெற்ற ஈரானைத் தாக்குவதற்கான தகுதியை அவ்கானிஸ்த்தானைத் தளமாக்கி எடுத்துபடி, இருஷ்சிய-சீன ஒப்பந்தத்துக்கு யுத்த நிர்ப்பந்தம் வழங்குவது,


5:இத்தகைய யுத்தத்தை, சமாதானத்தின் மூலமாக இருக்கும் அமெரிக்காவினது தலைமைப்பாத்திரத்தில் தவிர்க்கமுடியாது மனிதகாப்புக்கான நிபந்தனைகளில் ஒன்றாக்குவது.


6:இவற்றைச் செய்வதற்காக பனிப்போர் முகாந்திரத்தில் மையமாக இருந்த போலன்-செக்காய் ஏவுகணைப் பாதுகாப்பைத் தற்காலிகமாகக் கிடப்பில் போடுவது,


7: ஆர்மேனியாவுக்கும்,துருக்கிக்குமிடையிலான நட்புணர்வு-அரசியல் உறவு ஒப்பந்தத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை முதன்மைபடுத்துவது,


8:இதனூடாக துருக்கியை ஊடறத்துவரும் நபுக்கா எண்ணைக் குழாயை இருஷ்சியாவிடமிருந்து தனிமைப்படுத்தியும், இருஷ்சியாவினது எரிபொருளில் தங்கியிராத (South Stream எண்ணைக் குழாய்க்கு எதிராக) மேற்குலகச் சார்பான சுதந்திரத்தை எரிவாயுப் பொருளாதாரத்தில் நபுக்காவை நிலைப்படுத்துவது.இதன்தொடரில் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துள் உள்வாங்கும் நெகிழ்வை மரபுசார்ந்த ஐரோப்பிய மேன்மைக்குள் மெல்ல உருவாக்குதல்,அதற்காகத் துருக்கிய அரசியலையும், இஸ்லாமிய மதவாத அடிப்படையையும் தனிமைப்படுத்திவிடத் தேவையான பண்பாட்டுக் கருத்தியலைத் தகவமைப்பது,நீண்டகால நோக்காக இருந்துவந்தபோதும்,லிபியாவின் எண்ணையைக் குறுகியகாலத்தில் கொள்ளையிடுவதற்காக ஜேர்மனிய அரசு,இருஷ்சியாவுக்கு விட்டுக்கொடுத்து South Stream எண்ணைக் குழாய் ஒப்பந்தம் கைச்சாத்தாயபோதும்,லிபியாவை அம்போவெனவிட்ட இருஷ்சியவோ இழக்கப்போது பலமடங்கு என்பதை ஈரானிய யுத்தத்தில் இரஷ்சியாவின் சார்பிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.


9:இதற்காக இருஷ்சியாவை நேட்டோவுக்குள் உள்வாங்க முனைவதும்,சீன-இருஷ்சியப் பலக்கூட்டை உடைப்பதும்,ஆப்பிரக்காவிலிருந்து சீனாவைத் தனிமைப்படுத்துவதும்,இதன் விளைவாக நடந்தேறிய லிபிய யுத்தம் அதைத் தக்கபடி நகர்த்துவதின் உண்மையை ஆதாரமாகக்கொள்ளலாம்.


10:உலகத்தின் எப்பாகத்தில் இனவிடுதலைப் போராட்டம் நிகழினும் அவற்றைத் துடைத்தெறியும் முயற்சியில் சங்காய் கூட்டுழைப்பு இயக்கத்துக்கும்,நேட்டோவுக்கும் இடையில் பாரிய முரண்பாடில்லை.எனினும்,சீனாவைத் தனிமைப்படுத்துவதற்கு இருஷ்சியாவை மேற்குலகச் சார்பாக்குவது,மேற்குலக நபுக்கா எரிவாயுக்கு குழாயை இதற்காகப் பயன்படுத்துவது(இது,ஒரு கட்டத்தில் யுத்தமாக வெடிக்கும்போது இருஷ்சியா சீனாவிடமிருந்து அந்நியப்பட்டிருப்பதும் அவசியமான அமெரிக்கத் தெரிவாக இருக்கிறது.இனவிடுதலைப் போராட்டங்கள் தத்தமது பொருளாதார நிலைகளுக்கமைய ஆதிரித்தும்-அழித்தும் வருவது சமீபகால நிகழ்வாக இருப்பினும்,இப்போதைய நிலைமையில் புதிய தேசங்களை உருவாக்குவதை ஏகாதிபத்தியங்கள் தமது வேலைத்திட்டத்திலிருந்து பின்தள்ளுகின்றன).

இந்நிலையில்,ஈரான்மீதான அமெரிக்க-ஐரோப்பிய அத்துமீறிய போரொன்றை எங்ஙனம்,இருஷ்சியா-சீனா அணுகப் போகின்றன வென்பதற்கு அவர்களது மூலதனத்தின் தொங்கு நிலைகளே தீர்மானிக்க முடியும்.எனவே,ஈரானிய அதிபர் தனது இன்றைய நட்பு நாடுகளாலேயே காலை வாரப்படுவார் என்பது கண்கூடாக மலாந்துவிடப்போகும் இன்னுஞ் சில காலத்தில்.


இன்றைய அதீத தேவையாக மேல்காணும் நிகழ்சிநிரல் அமெரிக்க மூலதனத்துக்கு இருக்கிறது.இதை உறுதிப்படுத்தும் அமெரிக்க மூளை சீப்பினிக் பிறசென்ஸ்கி [Zbigniew Brzezinski ]என்பது உலகறிந்த உண்மை.


ப.வி.ஸ்ரீரங்கன்
04.09.2011

Sonntag, August 21, 2011

புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

ஜோஸ்[ Jose Antoin] http://www.facebook.com/joseantoin ,புலிகள் இயக்கம் திடீரென வந்தவொரு இயக்கம்.அதன் தோற்றம் வளர்ச்சியை நாம் நேரில் அநுபவப்பட்டு எழுதுகிறோம்.பிளக் செப்ரம்பர் இயக்கங் குறித்து[Black September http://en.wikipedia.org/wiki/Black_September_%28group%29 ] "அறிவு-அநுபவம் " எப்படி உங்களுக்கு?

நாம் ஜெனரல் கியாப்பை , டாக்டர் சன்- யாட்சென் போன்றோரை சல்லடை போட்டுக் கற்ற அன்றைய நாளிலிருந்து புலிகளை மதிப்பீடு செய்து,அந்த இயக்கமானது மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாதவொரு அடியாட்படை இயக்கமென 84 இல் வகுத்துக்கொண்டோம்.இதற்கு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ஆயுதமே அடிப்படை.வெறும் கற்பனைகளால் எவரும் புலிகளின் அழிவை முன் கூட்டிச் சொல்லவில்லை!புலிகள் அழிந்து சுக்கு நூறாவார்கள் என்பது அதன் வர்க்க நலனில் இருந்துதாம் மதிப்பீடாகியது.சமுதாயத்தின் பெரும் பகுதி மக்களது நலனைப் பிரநிதித்துவத்துக்குள் கொணராமலும்,மக்களைப் பார்வையாளர்களாக்கி,ஆளும் வர்க்க (வி)தேசியத்தை அது பிரதானப்படுத்தி மக்களை உணர்ச்சிக்குள் தள்ளியதும் அதன் வாயிலாகத் தமது எஜமானர்களுக் கேற்ப மக்களை கூட்டோடு கோவிந்த போட வைத்ததும் தற் செயல் நிகழ்வல்ல.

சிங்கள இனவொடுக்குமுறைக்கெதிரான மக்களது எதிர்ப்புணர்வைத் தமது இயக்க நலனுக்காகப் தேர்ந்தெடுத்து விடுதலைப் போராட்டத்தைச் செய்ய முடியாது.விடுதலைப் புலிகளது வரலாற்றை அநுபவத்துக்குள் உள் வாங்காமால் அதன் புறநிலையை வைத்து எவரும் விவாதிக்க முடியாது.அந்த அமைப்பு எவ்வளவுதாம் நிலப்பரைப்பைத் தனக்குள் வைத்துத் தனது அரச ஜந்திராத்தால் காத்தாலும் அதைத் தக்க வைப்பதென்பது முடியாது காரியம்.ஏனெனில் மக்கள் புரட்சிகரமானவுணர்வுக்குள் வாழாதவரையும் இது சாத்தியமில்லை.இது குறித்துப் பார்ப்போம்.

புரட்சிகரக் கட்சியோ ஒரு போராட்டத்தை எப்படி நடாத்த வேண்டுமெ ன்று கற்றுக் கொடுக்கும்,அவ் வேளையில் அதன் இராணுவமோ ஒரு புரட்சிகரக் கட்சியைப்போன்று போராட்டத்தை நடாத்துகின்றதோ அப்போதுதாம் அது இராணுவம் எனத் தகுதியைப் பெறும்.புலிகள் அமைப்பானது அரச கூலிப்படைகளை நொட்டி-நொட்டி மக்களைச் சலிப்புக் குள்ளாக்கியதும்,அரச ஆதிக்கத்தை உடைத் தெறியாமலே அரச வன்முறை ஜந்திரத்தின்மீது கைவைக்க ஆரம்பித்தது.இதுவே,அதன் தோல்வியை முன்கூட்டிக் கட்டியம் கூற வைத்தது.சர்வதேசச் சூழல்,தேசத்தின் வளங்கள்,பிரத்தியேகமான புவியில் அமைப்புகளெல்லாம் அந்த இயக்கம் கணிக்கவே இல்லை.அது,திடீரென அந்நிய ஆயுதங்களால் பெருக்க வைக்கப்பட்டு,அதன் சுயவளர்ச்சி முடக்கப்பட்ட ஒரு அடியாட் படையாகவே இருந்தது.

பிரபாகரன் வெறும் ஒளிவட்டங்கட்டியவொரு பொம்மை.

புரட்சிகரத் தன்மை(புரட்சிகர அடித்தளம்) துளியளவும் அற்றவொரு இயக்கத்தால் விடுதலையைச் சாதிக்க முடியாது.இதுதாம் புரட்சிகரக் கட்சியின் பாலர் பாடம்.

புரட்சிகரத் தன்மை என்பதைத் தமிழ்ச் சமுதாயம் இன்றுவரை புரியவே இல்லை!

புலிகள் இயக்கத்திடம் புரட்சிகர அடித்தளம் இல்லாததென்பது என்றால் என்ன?

தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை அந்த மக்கள் கடிதப் பொருளாதாரத்தில் தங்கியிருந்தவர்கள்.யார் கழுத்தையும் நெரித்துத் தன் பிள்ளைகளை வாழ வைக்கும் சுய பொருளாதாரமற்ற ஒட்டுணிச் சமுதாயமாக இருந்தது-இருக்கிறது.வாழ்வைக்கொண்டியக்க வேறெந்த வழியுமற்றவர்களோ,கடுமையான ஏழ்மையின் காரணமாகவும்,வேறெந்த வழியுமில்லாமலும்-வாழ்சூழல் பாதிப்படைந்து,குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது திண்டாடிக்கொண்டிருந்தபோது சிங்கள அரசின் இனவொதுக்கல் பிரச்சனையை மையப்படுத்தி-கூர்மைப்படுத்தி (இராணுவம் கிராமங்களுக்குள் வாகனத்தின் ஊடாக வலம் வரும் வேளை குண்டெறிந்து தாக்க,பதிலுக்கு இராணுவம் அந்தக் குடியிருப்பு மக்களைத் தாக்கி அராஜகம் புரிய வைத்து, மக்களை அரசுக்கு எதிராகச் செயற்பட வைத்தல்)வாழ் சூழலை இனியில்லையென்றபடி பாதிப்புக்குள்ளியபோது,மக்களும் ஈழப் போராட்டத்துக்கு "ஆமாம்"போடுவது.இத்தகைய சூழலில் புலிகள் ஒவ்வொரு பகுதியாக இராணுவத்திடம் இழக்கும்போது போராட "ஆமாம்"போட்டு இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் இராணுவ வலயத்தில் சிக்குப்பட்டு அவர்களது வாழ்வு ஒரளவு-ஏதோவொரு சூழலில் ஒழுங்குக்வர இவர்கள் இதுகாறும் தாம்கொண்ட"ஈழவிடுதலை"இலட்சியத்திலிருந்து நழுவிக்கொண்டார்கள்.அத்தகைய சூழலில் புலிகள் என்ற அமைப்பு வெறும் இயக்கவாத மாயையில் சில ஆயிரம் இளைஞர்களைப் பலவந்தமாக உள்வாங்கிக் குறுகியது.

இதுதாம் புரட்சிகர அடிப்படை அற்ற போராட்ட முறைமை.இதன் விளைவு மக்கள் தொடர்ந்து புலிகள் அமைப்பிலிந்து அந்நியமானார்கள்.மக்களை அணிதிரட்டும் புரட்சிகரத் தன்மையின்றிய புலிகள்.அந்நியச் சக்திகளின் தயவில் ஆயுதங்களைக் குவித்துவிட்டுப் புரட்சியைச் சாதிக்கும் கோதாவில் தொடர்ந்தது.அந்நியச் சக்திகள் தமது கனவுகளைத் (ஈழத்தில் புரட்சிகரக் கட்சியை இல்லாதாக்கல்,மக்களுக்கும் இயக்கத்துக்குமிடையிலான ஜனநாயத் தன்மைகளை ஒழித்தல்,மக்களைத் தொடர்ந்து ஆயுதத்தால் அச்சப்படுத்தி விடுதலையுணர்வைத் தடுத்தல்,இதன் வாயிலாகப் புரட்சிகரமாகச் சிந்திப்பவர்களை அழித்தல் அல்லது தேசத்தை விட்டு ஓட வைத்தல்-மக்கள் தமது வர்க்க ஒடுக்குமுறையைப் புரியாதிருக்கும் தமிழ்க் குறுந் தேசிய வெறியை பரப்புதல்,அதன் வாயிலாக மக்கள் பலமற்ற ஒரு ஊதிய அமைப்பை உருவாக்கி அதை அடியாட்படையாக்கல்,மக்களுக்கு எதிராகவும் மாற்று இயக்கங்களுக்கு எதிராகவும் ஆயுதங்களைத் திருப்பி எதிரி செய்யும் காரியத்தைப் புலி அமைப்பின்வழி செய்வித்தில்)தொடர்ந்து புலிகள் மூலம் அறுவடை செய்து புலிகளைக் குட்டவேண்டிய இடத்தில் குட்டி அழித்தார்கள். இதிலிருந்து என்ன தெளிவாகுதென்றால்,போராடும் விடுதலைப் போராளிகளுக்கு-இராணுவத்துக்கு போதிய புரட்சிகர இலட்சியங்கள் இல்லையென்றால் அத்தகைய போராளிகள் தமது சுயநலன்களைக் கைவிடாதவர்களாகக் குறுக்கிப் போய்விடுவர்.விடுதலைப் போராட்டம்-புரட்சி அவர்களது சுயநலன்களைப் பாதிப்புக்குள்ளாக்கும்போது அவர்கள் மிகவும் நம்பத்தகாதவர்களாக மாறியே தீர்வார்கள்.புலிகளது பிளவுகள் இந்தக் கோணத்தில் நிகழ்ந்தவை-உட்கட்சி ஜனநாயகமற்று தமது சொந்தப் படையையே அழித்துத் துரோகிகள் என்பதெல்லாம் இதன் நோயே!இதுவே,விடுதலைப் போராட்டம் தோல்வியில் முடிவுறும் இயக்கவியல் புரிதல்.
இதெல்லாம் புலிக்குக் கொடி தூக்கிய புலம்பெயர் புண்ணாக்குகளுக்குப் புரியவே இல்லை!

மீளவுஞ் சொல்கிறேன்,அரச ஜந்திரம் என்பது வேறு,அரச ஆதிக்கம் என்பது வேறு.புலிகள் செய்த முதல் மூடத்தனம் அரச ஜந்திரத்தின்மீது கை வைத்தது.அரச ஆதிக்கத்துக்கள் இருந்து விடுதலை பெறமலே அதன் வன் முறை ஜந்திரத்தின் மீது கைவைத்தது.புலிகளுக்குப் புரட்சி பற்றி அக்கறையே கிடையாது.ஏனெனில் அவர்கள் தமிழ் மேட்டக் குடியின் கைப் பொம்மைகளாக இருந்தபடி அந்நியச் சக்திகளுக்கு அடியாளாகவிருந்த ஒரு மாபியா இயக்கம் என்பதை மீளவுஞ் சொல்லியாக வேண்டும்.

பல புரட்சியாளர்களது தோல்வியை ஆராய்ந்த லெனின் பின்வருமாறு கூறுகிறார்:"புரட்சி என்பது அரச ஜந்திரத்தின்மீது கை வைப்பதல்ல,மாறாக அரசு ஜந்திரத்தை உடைத் தெறிவதாகும்."

இறுதியாக:ஆதி ஆதவன் மேதைகளுக்கு, வணக்கம் சார்!ஒரு சின்ன வேண்டுகோள்: உங்களைப்போன்றோர் சிரிப்பதற்கு முதல் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள்,கூடவே, மக்கள் யுத்தமென்றால் என்ன,புரட்சிகரக் கட்சி-இராணுவம் அதன் அடிப்படைகள் என்னவென்றும்,வர்க்கச் சமுதாயத்தில் வர்க்கப் போரே தொடருமென்பதையும் புரிந்துகொண்டால் மிகப் பெரிய புண்ணியம்.நீங்கள் சிரிக்கும்போது நாம் தலைக்கு மொட்டாக்கிட்டுச் செல்லமாட்டோம்.அந்தச் சிரிப்பின் பின்னே இருக்கும் அறியாச் சிறுபிள்ளைப்போக்கைச் சுட்டிக் காட்டுவோம்.அப்பவும் புரியாது போனால் காலத்தின் கையில் விட்டுவிட்டு,உங்கள் வர்க்க மூலத்தைக் கண்டடைய முனைவோம்.

இப்போதைக்கு இது போதும்.மேற்கொண்டு விவாதம் வளரும்போது,நாம் வேறு சில பக்கத்தைத் திறந்து அன்ரோனியோ நெக்றியின் ஒபேறியோ [Potere operaio ] 1973 களில் தோல்வியுற்றதுவரை விவாதத்தை வளர்த்துச் செல்லலாம்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.
21.08.11

Sonntag, August 14, 2011

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

தமிழர்கள்: "அழகற்ற அழுக்கானவர்களே!"

ன்பார்ந்தவர்களே,வணக்கம்!

அமெரிக்கப் பயங்கரவாதம் குறித்து உலகமே அறிந்திருக்கிறது.பட்டியலிட்டு,இன்னதெனக் கூறவேண்டியதுமில்லை!என்றபோதும்,இந்த வீடியோவில் உள்ள உரையைக் கேட்டுப்பாருங்கள்.அமெரிக்கா தனது சொந்தக் குடிகளுக்கே மோசஞ் செய்யும் பணக்காரர்களுக்கான தேசம். பணக்காரர்களுக்காவே உலகத்தைச் சுடுகாடாக்கும் தேசம் அமெரிக்கா, என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.

இலூயீஸ் ஃப்றாக்கான்[Louis Farrakhan-Leader of the Chicago-based Nation of Islam (NOI).] மிகச் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல,மல்கோம் எக்ஸின் பரம்பரையிலிருந்து எழுந்தவர்.மால்கோம் எக்ஸ் பின்னாளின் புதிய இஸ்லாமிய நேசனைத் தழுவியிருந்தார் என்பதையும் நாம் அறிவோம்.அப்பாதையில் நடக்கும் இந்தப் பேச்சாளர்,ஒடுக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுபவர்.எனது விழிகள்முன் மால்கோம் எக்ஸீன் மறு அவதாரமாகவே இந்த இலூயிஸ் ஃப்றாக்கான் தென்படுகிறார்.

எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கே தனது எதிர்ப்பைச் செய்பவர்களே உண்மையான மானுட நேசிப்பாளர்கள்.அதைக் குறித்துச் சந்தேகமென்ன?

அமெரிக்கா,சொந்த மக்களையே திட்டமிட்டு அழிக்கும்போது,பிற நாட்டு மக்கள்மீது கருணைகாட்டுமெனக் கருது முடியுமா?

அமெரிக்கத் தூவராலயப் பெண் தமிழ்நாட்டில் வைத்துத் தமிழரை"அழகற்ற அழுக்கானவர்கள்"என்று அகங்காரத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் இந்த ஒடுக்கு முறை மனோபாவத்தின் தொடர்ச்சிதாம்.அதையும்விட, பல் நூறாண்டுகளாகத் தமிழ்பேசும் மக்களை மொட்டையடித்து, அவர்களை அடிமைப்படுத்திய ஆரியக் குடியேற்றம்,காலனிய ஆதிக்கம்,பார்ப்பனிய ஒடுக்குமுறைகள்-ஆதிக்கமானது இன்று திராவிடக் கட்சிகளுடாகத் தமிழ்பேசும் மக்கள் மிகத் தாழ்ந்த சமூகச் சூழலில் கற்கால வாழ்க்கை நடாத்தும்போது, உலகத்தோடு ஒப்பிட முடியாத சமூகச் சீரின்மைக்குள்ளும்-சமத்துவமற்ற கல்வி ஏற்ற தாழ்வுக்குள்ளும் இருக்கிறார்கள்.இந்த வீடியோ உரையாடல், மிக முக்கியமான சூழ்ச்சிகளைப் புட்டுவைக்கிறது.செவிமடுத்துத்தாம் பாருங்களேன்.

இறுதியாக: தமிழர்களாகிய நாம் "அழகற்ற அழுக்கானவர்களே"தாம்,எமது அரசியல்வாதிகள்-கட்சிகளால் நாம் இந்த நிலைக்கே வந்துவிட்டோம்!இதிலிருந்து நாம் மேலெழுவது நமது கைகளிற்றாம் உள்ளது.அதைத் தீர்மானிக்க வேண்டிய தருணங்களைத் தவறவிட்டால் இந்தப் பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கே இலாயக்கு அற்றவர்கள்.

நட்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
14.08.2011

Freitag, August 12, 2011

"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?

இராஜீவ் காந்தி கொலைக்கான தண்டனை:
"தூக்குத் தண்டனை"!-அதை ஏற்பதில் என்ன பிரச்சனை?"இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்."ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) "தூக்குத்தண்டனை"உறுதியாகி வருகிறது.

இந்திய ஆளும் வர்க்கத்தின் வரலாற்றுப் பிரதி நிதிகளது பரம்பரையின் வீழ்ச்சி-அழிவில்(காந்தி கொலை-சஞ்சாய் காந்தி கொலை-இந்திரா காந்தி கொலை-இராஜீவ் காந்தி கொலை) இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பிளவை உறுதிப்படுத்தி விடலாம்.திட்டமிடப்பட்டு காந்தி-காந்தி குடும்பத்தவர்கள் அழிக்கப்பட்டதன் பின்னே மாறிவரும் இந்திய ஆளும் வர்க்க முரண்பாடுகள் முன்னிலைக்கு வந்தன.இதன் தொடர்ச்சியான படுகொலை அரசியலானது,குற்றஞ் சுமத்தப்பட்ட மூவர்மீது(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர் ) வழமைபோலவே"தூக்குத் தண்டனையை"சுமத்தி இருக்கிறது.இது,புலிவழிப்பட்ட கடைந்தெடுத்த துரோக அரசியலின் இன்னொரு பக்கத்தையொட்டி விவாதிக்க வேண்டியது.

அந்நிய ஆளும் வர்க்கங்களுக்கு அடியாளாகவிருந்த புலிப் பாசிஸ்ட்டுக்கள்,இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்காகக் கூலிக்குக் கொலை செய்ய ஆயத்தமானபோது தனது பேரத்தில் இராஜீவ் கொலையை துன்பியில் நிகழ்வெனக் கூறிக்கொண்டது.இக் கொலையின் பின்னணியை புலி அடியாட்படையின் இந்தியவுறகளைத் திறம்படவும்-வெளிப்படையாயும் ஆரயக்கூடிய ஊடகங்களால் மட்டுமேதாம் கொலைக் குற்றஞ் சுமத்தப்பட்டவர்கள் நியாயவாதிகளா-குற்றவாளிகளாவெனத் தீர்மானிக்க முடியும்.இங்கே,நீதி மன்றத்துக்கான வேலை இந்திய ஆளும் வர்க்கத்தைக் காப்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்? எனவே,இத் "தூக்குத் தண்டனை" த் தீர்ப்புகளையிட்டு ஆச்சரிப்பட எதுவுமில்லை.ஆனால், நிசமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முயற்சியில் சிலரைச் சட்டரீதியாகக் கொல்வதையிட்டு நாம் விவாதிக்க முடியும்.

ஒரு கருத்துக்குப் பன்முகப் பட்ட புரிதல் சாத்தியமான இன்றையவுலகில் நாம் இராஜீவ் கொலை சம்பந்தமான கருத்துகளுக்கு ஒற்றை பரிணாமப் பாங்கில் புரிந்து கொள்வது-விவாதிப்பது எவ்வளவு அபாயகரமானதென்பதைப் புரிந்து கொள்ள இந்திய ஆளும் வர்க்க ஊடகங்களே சாட்சி!


இராஜீவ் கொலையைக் கூலிக்காகச் செய்த புலிகள் அதைத் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காகச் செய்ததாகத் தமது வால்கள் மூலம் கருத்துக்கட்டியபோது,இந்திய"அமைதிப்படை"அட்டூழியங்களைச் சொல்லி நியாயப்படுத்திய காலக்கட்டத்தில் இந்திய-தமிழ்நாட்டு மக்களில்பலர் அதை ஏற்க முடியாது இப்படியும் விவாதித்தார்கள்:

"ஈழத்தில் இந்திய இராணுவம் படுகொலைகள்-அட்டூழியம் புரியவில்லை,அதை நாங்கள் நம்பத் தயாரில்லை"-இந்திய பிரதான ஊடகங்களது வாசகர்கள்.

இன்று கொலைக் "குற்றவாளிகள்"மூவருக்கும் "தூக்குத் தண்டனை"உறுதியாகிவிட்ட நிலையில்,இதைச் சாத்தியப்படுத்தும் அருகதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கு உண்டா?இந்தியக் கட்சி அரசியலில் ஆதிக்கஞ் செலுத்தும் பெரும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் என்ன யோக்கியதை உண்டு?

இந்தியச் சட்டத்துறையானது இந்திய ஆளும் வர்க்கத்தின் காப்பரண் என்பதைக் குறித்து முரண்பட உதுவுமில்லை.நிலவும் பொருளாதார அடிக்கட்டுமானத்தில் மேல்மட்ட வன்முறைசார் கருத்தியிலே நீதிமன்றம் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.எனவே,இந்த அருகதையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான அழிவு அரசியலைக் குறித்துப் பார்க்கலாம்.இந்த அரசியல் நகர்வானது தென்னாசியக் கண்ட நாடுகள்பூராக வாழும் மக்களுக்கு ஆபத்தானது.இத்தகைய அரசியல் தொடர்ந்து"தூக்குத் தண்டனை"உடாக வெற்றி பெறுமானாலும் இந்தியாவில் புரட்சிகரப் போராட்டம்,குடிசார் உரிமை அமைப்பாக்கம் யாவும் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்ற உண்மையையும் புரிந்தாக வேண்டும்.

இந்த ஆபத்தான அரசியலை(ஆளும் வர்க்க-அதிகாரக் கூட்டத்தின் பயங்கரவாதத்தை) நியாயப்படுத்தும் ஆளும் வர்க்க கருத்தியற்றளமானது கீழ்வரும்படி மக்களைக் காயடித்தது:

1): குஜராத்தில் 3000 இந்தியர்களை-இஸ்லாமிய மக்களை நரோந்திர மோடி என்ற பாசிஸ்டு கொன்று குவிக்கும்போது, இந்திய ஆளும் வர்க்க ஊதுகுழல் ஊடகங்கள் தமது எஜமானர்களின் கூற்றுக்களை அப்படியே வாந்தியெடுக்கும்போது:"ஓரிரு அசம்பாவிதம் நடந்தது,அதுவும் அப்பாவி இந்துகள்தாம் பலியாகியுள்ளார்கள்,இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமது உயிரை-உடமைகளைப் பறிகொடுக்கிறார்கள்".என்றதும்,

2): பாகிஸ்தான், காஷ்மீரி மக்களை இந்தியாவுக்கெதிராக தூண்டி இந்தியாவைத் துண்டாட முனைகிறது, நமது படைகள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து நமது நாட்டிற்காகச் சாகிறது. என்றும்,

3): சங்கர மடத்தில் நடந்தது கொலையே அல்ல, அது தற்கொலை. பெரியவாளைப் பிடிக்காத சில கிரிமனல்களின் இச் செயலால் சங்கரமடத்துக்கு ஆபத்து! என்றும்

செய்திகள் பின்னும் ஆளும் பார்ப்பனிய-பனியாச் சாதிகளின் பாரததேச ஊடகங்களால் செய்திகோர்க்கும் ஒருவர், அதைச் சார்ந்து எது உண்மை எது பொய்யெனத் தீர்மானிப்பதால் "ஒரு உண்மை பொய்யாகவும்,பொய் உண்மையாகவும்" மாற்றப் படுதல் பரந்துபட்ட மக்களுக்குள் சாத்தியமாகிறது. அதை நம்பும் தளமும் முற்றுமுழுதாக துக்ளக் சோ போன்றோரது அறிவுத் தளத்தைச் சார்ந்தேயிருக்கிறது.இன்றை சீரழிவு ஊடகத்துறை என்பதும் 24 மணிநேரம் சினிமாவுக்குள்ளும்,குமுதம்-ஆனந்தவிகடன்,இந்தியா டுடே-நியூஸ்வீக் என்ற வகையறாவுக்குள்ளும் காட்சிப்படுத்துவதாக எண்ணவோண்டாம்.


இந்தியத் தேசிய மாயைக்குள்ளிருப்போரும் இந்த வகை மையக் கருத்தியில் வன்முறையைச் செய்தே முடிக்கின்றனர்.இவர்களேதாம் "தூக்குத் தண்டனையை"நியாயப் படுத்தும் பேர்வழிகள்.இவர்களது முன்னோடி"மகாத்மா" காந்தி என்பதை, தோழர் பகத் சிங்கின்மீதான "தூக்குத் தண்டனையில்"காந்தியின் அரசியலை உரைத்துப்பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

இந்தியா என்ற செயற்கைத் தேசம் "மாற்றுத் தேசிய இனங்களுக்குச் சிறைக்கூடம்" என்பதுதாம் உண்மை!இந்த இலட்சணத்தில் இந்திய ஜனாதிபதி கருணை காட்டுவது எவருக்கானது?இராஜீவ் கொலைக் குற்றவாளிகள்மீது அவர் கருணை மழை பொழிந்தால் அது இந்திய ஆளும் வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக மாறிவிடும்.

ஆளும் வர்க்கம்"வன்முறைசார-வன்முறைசார்ந்த ஒடுக்குமுறைகளைக் கொண்டு மக்களையடக்க முனைகிறது.தூக்குத் தண்டனை என்பது போராடும் மக்களை மனோவியல்ரீதியாகத் தாக்கும் ஆயுதம்.அதைச் செய்வதில் அதீத அராஜகமுடைய தேசங்களான அமெரிக்கா-இந்தியாபோன்ற தேசங்கள் முன்னிடம் வகிக்கின்றன.

இதுதாம் முள்ளிவாய்க்காலில் இந்திய ஆளும் வர்க்க நலன் மேற்கொண்டது.இன்று நாகலாந்து,மிசோரம் மற்றும் காஷ்மீரி மக்களை இந்த அழிவு அரசியல் படுத்தும் பாட்டைப் புரியாத இந்த நடுத்தர வர்க்கம் ஈழமக்களின் அழிவைக்காணுமெனக் கனவு கண்டால் அது தப்பானது.

நிலவும் அதிகாரத்துக்கு எதிரான திசையில் காரியமாற்றுபவர்கள் அதிகமாகப் பரந்துபட்ட மக்களது நலனின் நிமித்தமே தமது செயற்பாடுகளை முடுக்கி விடுகின்றனர்.இதுள் நிலவும் ஆதிக்கம் ஆளும் வர்க்கமாக இருந்தாலென்ன அல்லது விடுதலைக்காகப் போராடும் விடுதலை இயக்கமாகவிருந்தாலென்ன அவர்கள் எந்த வர்க்கத்தால் ஆட்டி வைக்கப்படுகிறார்களோ அந்த வர்க்கத்தின் நலனையே பிரதிபலிப்பார்கள்.இதற்குப் புலிகள் இயக்கம் நல்ல உதாரணம்.பாருங்கள், புலிப்பாசிஸ்டுக்கள் எத்தனை மனிதர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தார்களென!இவர்கள் அனைவரும் இதே ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் போன்று நிரபராதிகள்.மக்களுக்காச் செயற்பட்டவர்கள்-கூலிக்குக் கொலை செய்தும்,உடந்தையாகவும் இருந்தவர்களில்லை.

கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தப் பட்டியல் நீளமானது!தமிழ்ச்சமூகத்தின் அவலத்தை கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப்பிலிட்டுக்கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.

இறுதியாகச் சிலவற்றைச் சொல்லி முடிக்கலாம்:
இராஜீவ் கொலைக்காகப் பலியெடுக்கப்படக் காத்திருக்கும் அந்த மூவருக்கும்(பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோர்) முதலில், நரேந்திர மோடிக்குத்"தூக்குக் கயிறை"இந்திய நீதித் துறை வழங்குமாக இருந்தால் நிச்சியம் இந்த ராஜீவ் கொலைக் குற்ற வாளிகளுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட தீர்ப்பிலும் ஏதாவது நியாயம் இருக்கக் கூடும்!.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

12.08.2011

Montag, Juni 20, 2011

தீபத்தில்: கேள்வி - நேரம்!

தீபம் தொலைக்காட்சியில்இடம் பெற்ற "கேள்வி-நேரம்" பீ.ஏ.காதர்- கீரன்,சேனன்,புதிய திசைகள் மாசில் பாலன் போன்றோரது உரையாடல்கள் குறித்துக் கவனத்தைக் குவிக்கிறேன்.அவர்களது உரையாடலில் பல தளத்தில் உடன்பாடான கருத்துக்கள் விரிந்து கிடக்கும்போதும்,வர்க்க அரசியலில் வர்க்க நலன் குறித்த பார்வைகள் மிகவும் பலவீனமான புரிதலூடாக உள்வாங்கப்படுகிறது.இது குறித்துச் சிலவற்றைப் பார்க்கலாம்.


ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஏதோவொரு அரசியல் இருக்கிறது.இது, அவரவர் சார்ந்தியங்கும் தத்துவங்கட்கு அமைய நிகழ்வதில்லை.மாறாக, அவரவர் வர்க்கத் தளத்தைச் சார்ந்து இது மையமானவொரு செயற்பாட்டை நெடுக வற்புறுத்தி வருவதனால்,அதைச் சாதிப்பதில் எழும் சிக்கல்களை முழுமொத்த மாற்றுக் கருத்து நிலைகளுக்கும் பொதுமைப்படுத்தும் நோக்கில், பற்பல எண்ணங்களை நண்பர்கள் புனைகின்றார்கள்-குறிப்பாக நிமலன்-யோகலிங்கம்போன்றோர்.


இதுள், தனிநபர்சார்ந்த ஒழுக்கம்முதல் அவரவர் சொந்த விவகாரங்களும் மக்கள் நலன் என்ற முலாம் பூசப்பட்டு வெளியுலகுக்கு ஒருவித வன்முறை அரசியலாக வெளிவருகிறது,அல்லது விற்கப்படுகிறது. இதன்வடிவங்கள் பற்பல முகமூடிகளைத் தரிக்க முனைகிறது.இவை ஒவ்வொரு முகமூடிகளையும் நமது வரலாற்று அரசியல் போராட்டப் போக்கிலிருந்து பெற்றுக்கொண்ட "நிகழ்வுகள்"சார்ந்தும்,பொருளாதார-வர்க்க அரசியல் சமுதாயப்பின்னணிகளிலிருந்தும் தத்தமக்கு அவசியமானவற்றை பேர்த்தெடுத்துப் பரப்புரைகளைகட்டியமைக்கிறது.இங்கே, தீபம் தொலைக்காட்சியில் உரையாடப்பட்ட விடையங்கள்கூட புலியரசியலது நீட்சியை வற்புறுத்தும் தந்திரத்தோடு கட்டியமைக்கப்படுவதில் மேலுஞ் சில ஞாபகங்களைச் சொல்லிச் செல்கிறது! உதாரணமாக: இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் கட்சிகள்-இயக்கங்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்தும், தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்ககுநிலையிலிருந்து இந்த"புலம் பெயர் குழுக்களின்"குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும்குறியீட்டு அரசியல் நல்ல உதாரணமாக இருக்கின்றன.இது குறித்து நாவலனது சிறு குறிப்பு சிறப்பான பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.அது,கிட்லரது காயடிப்பு அரசியலது வினைவரை பேசுகிறது.

=>

இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"மாற்றுக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் எதிர் நோக்கியுள்ள இன்றைய அழிவு-அரசியல் நிலையில், இத்தகைய "கேள்வி நேரம்"முன்னெடுப்பவர்களிடம் தனிநபர்சார்ந்து முனைப்பு இறுகி, முற்றி ஒருவரையொருவர் தாக்குவதுவரைச்(கீரன்போன்றோர்) சென்றுவிடுகிறதென்ற உண்மையில், அடுத்தகட்டம் குறித்துச் சிந்தக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்

==>>

புரட்சிகரமான நிலைப்பட்டை முன்வைத்து, அதன் வாயிலாக நமது இந்தக் கோலங்களையெல்லாம் சிறிதுசிறிதாக அகற்றி நம்மை சமுதாயத்தில் கால்பதிக்கவைக்கும் வர்க்கவுணர்வைத் தொடர்ந்து இயங்கவைப்பது ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமே.அதைப் பூண்டோடு கைகழுவிய இந்த நண்பர்கள் இப்போது தனிநபர்களாகக் குறுகிச் சிதைவுறுவதைக்கூட மக்கள்சார்ந்த மதிப்பீடுகளால் நியாயப்படுத்துவதை நினைக்கும்போது மிகவும் கவலையுறவேண்டியிருக்கிறது.


அன்றாடச் சிக்கல்களாக இவர்களுக்குள் உருவாகிய இத்தகைய மனவிருப்புகள்-தெரிவுகள்(சாதியப் பிரச்சனை குறித்த கீரனது புரிதல்) எப்போதும்போலவே மக்களைக் குதறும் இயக்க-குழுவாதத்தை மறைமுகமாக ஏற்று இயங்குகிறது.இதை இனம்கண்டு தகர்க்காதவரை " இவர்களால் எந்த முன்னெடுப்பும் அதிகாரமையங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட முடியாது. மாறாக, அத்தகைய மையங்களை மேன்மேலும் வலுப்படுத்துவதில் தமக்குள் உள்ளவரை வேட்டையாடிக் குலைத்து அதிகாரத்துக்கு உடந்தையான-துணைபோனவர்களாகவே இருப்பார்கள்" என்றுதாம் சொல்வேன்!தம்மளவில் ஒருமைபட முடியாத எதிர் நிலைகளை முன்வைத்து, அதைத் தகர்ப்பதில் முனைப்புறும் அரசியல்-சேட்டைகள் இத்தகைய "கேள்வி நேரம் " புலம் பெயர் ஊடகச் சூழலில் அரங்கேறுகிறது.இங்கே, முட்டிமோதும் "மாற்றுக் கருத்து"எனும் இந்தத் தளம் தனக்குள்ளே அராஜகத்தை எண்ணகருவாக்கி வைத்தபடி குறுகிய தெரிவுகளுடாகக் காரியமாற்றும்போது, நடுத்தெரிவில் அம்பலப்பட்டுப்போய் அநாதவராகக் கிடக்கிறது.இதன் இன்னொருமுகம் காழ்ப்புணர்வாக வீங்கி, தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமையையே தகர்க்கும் சாதியப் போர்களைச் செய்து ஒருவர்மீதொருவர் சேறடிப்பதில் கவனமாக இயங்குகிறது!


இதன் வழி மக்களைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் தலைவெட்ட முனைவதையெண்ணி நாம் ஆச்சரியப்பட முடியாது.எவரிடமும் புரட்சிகரமான பணியைச் சார்ந்தியங்கும் மனத்தை-நடுத்தரவர்க்க எண்ணங்களை இல்லாதாக்கிய புரட்சிகர மனது உருவாகிவிடவில்லை!


இன்றைய சூழலில்,புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களில் பலர் தம்மைத் தகவமைக்க முனைந்த ஏதோவொரு அரசியல் நடாத்தையில் வந்துசேர்ந்த அல்லது ஒதுங்கிய தளம் பெரும்பாலும் எல்லோரும் நிரூபணமாகி வருகிறது.இதுள்"பன்மைத்துவக் கருத்து"என்ற அவசியமான எதிர்நிலைகள்-குரல்கள் முக்கியமானவை!


நிலவுகின்ற அதிகார மொழிவுகளுக்கு-மக்கள் விரோத இயக்கவாத மாயைகளுக்கு-அதிகாரமையங்களுக்கெதிரான கருத்துக்கள்-சிந்தனைகளைத் தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து உள்வாங்கவேண்டிய தேவை இருக்கிறது.இதை "கேள்வி-நேரம்"வழியாகக் கூடக் கடக்க முடியும்!என்றபோதும்,அதை ஏதோவொரு பெரு எண்ணவோட்டத்துக்கேற்பத் தகவமைப்பதுபோன்ற சூழலையும் கவனிக்கத் தக்கதாகவே இருக்கிறது!இந்தப் பெரும் எண்ணவோட்டம் எந்த வர்க்கத்தைச் சார்ந்தியங்குகிறதென்பதே எனது கேள்வி!


இப்போது,மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத(புலி-ரெலோ...) வரலாறு எப்பவும்போலவே தனித்த"தார்ப்பார்களை"உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இதை கீரன்-நிமலன் போன்றோரிடமிருந்து இனங்காண முடியும்.


இதன் தொடர்ச்சியான போக்குகளால் மனிதவுரிமை என்பதை வெறும் வெற்றுச் சொல்லாடலாக்கிய சிங்கள-தமிழ்அதிகாரவர்க்கமானது இலங்கை அரசுக்கு மிக நேர்த்தியான அரசியல் வழிகாட்டியாக மாறியதன்பின், இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு உச்சம் பெற்றது. இஃது, சட்டபூர்வமான இனவழிப்பை இலங்கைச் சிங்கள ஆளும்வர்க்கத்துக்கு உலகு தழுவிய ஒப்புதலோடு"தேசத்தின்"இறைமையாகக் கையளித்தது.இதன் ஆரம்பம் மிக மோசமானவொரு அரசாக இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றுவதற்கேற்ற இராணுவாதம் அவ்வரச ஆதிக்கத்துக்குள் உள் நுழையும் தருணம் திட்டமிடப்பட்டு, இலங்கை மக்களது குடிசார்வுரிமைகளை இனவாதத்தேற்றத்தினூடாக ஒரு பகுதி மக்களிடமிருந்து பறிப்பதாகக்கூறி முழு இலங்கையின் மக்களிடமிருந்து பறித்தெடுத்தது, மகிந்தா குடும்பத்தின் பின்னாலுள்ள இலங்கை ஆளும்வர்க்கங்கள்.


எனவே,இன்றைய இலங்கையை கீழ்வரும்படி புரிந்து விடலாம்:


1: மகிந்தா தலையிலான இலங்கை அரசானது பெரும்பாலும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்குமே துரோகமிழைத்தபடி, தமது அதிகாரத்தைப் பேணும் ஒரு குடும்பத்தின் நிதியாதாரத்தின்மீது கட்டப்பட்ட குறுகிய நலன்களையும், மறுபுறத்தில்கொண்டியங்குவதால் அதன் அரசியல் ஆதிக்கமானது பாசிசத்துக்கும்,பெயரளவிலான தரகுமுதலாளிய ஜனநாயக நடாத்தைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரிந்து மேவுகிறது.பாசிச ஆட்சியில் நிலவும் அரசினது தாத்பரியம் ஆளும் வர்க்கத்தினது தெரிவை தலையிற் சுமந்து காரியமாற்றுவதில் அதன்பாத்திரம் முழு மக்களையும் காயடித்துக் குதறும்.ஆனால், இலங்கை அரசினது இன்றைய பாத்திரமானது பெரும்பாலும் இலங்கை ஆளும்வர்க்கத்தினதும்,வெளியுலக-பிராந்திய ஆளும்வர்க்கங்களது தெரிவை இலங்கைக்குள் நடாத்திமுடிப்பதில் அதன் அரசியல் நடாத்தை எல்லைதாண்டிய ஆளும்வர்க்கங்களது நலனோடிணைந்த கொடுங்கோன்மையாகவிரிகிறது-இஃது,இராணுவச் சர்வதிகாரத்தின் புதிய வடிவமாக இலங்கை "ஜனநாயகத்துள்"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாகவும்,அரச அதிபராகவும் மகிந்தா தலைமையை இனங் காட்டுகிறது!அதற்கேற்பப் புலம்பெயர் தளத்தில் கருத்துக்களைக் கட்டுவதில் கீரன்-இடது-வலது எனக் கோடிப் பயல்கள் பற்பல வடிவங்களில்...


2: ஆயுதத்தாலும்,அதிகாரத்தாலும்,பணப்பலத்தாலும் நிறுவ முனையும் இந்தப் பாதாளவுலக அரசியலானது, மக்களது அனைத்து உரிமைகளையும் புதை குழிக்கு அனுப்பி வருகிறது.இலட்சம் தமிழ் மக்களது புதை குழியோடும் இவைகள்(அடிப்படையுரிமை-குடிசார் அமைப்புகள் ,இன்பிற) தமது நிலை குறித்துப் பேசிக்கொள்கின்றன.இந்தக் குடிசார்வுரிமைகளைப் புதைப்பதில் முதன்மையான செயற்பாட்டாளர்களாக இருக்கும் இன்றைய கட்சி அரசியல்வாதிகள் நிறுவனமயப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கத்தினது அதிகாரத்தை மேலும் இருப்புக்குட்படுத்துவதில் கணிசமான பங்கு வகிக்கின்றனர்.


இங்குதாம்,சேனன்,புதிய திசை பாலன் போன்றோரது கருத்துக்களைக் கூhந்து நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய சூழலது மதிப்பீட்டுக்கு வரமுடியாத எந்த உரையாடலும் வெறும் வினையகற்றிய போலிப் போராட்ட வடிவங்களுக்குள் மீளவும் நம்மைத் தள்ளிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டுவது நமது கடமை.ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

21.06.2011