Sonntag, Dezember 11, 2011

பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

பசந்தா பேட்டியும்,தமிழரங்கம்-இரயாகரனது கபட அரசியலும்!

-பேசப்பட வேண்டிய சில மதிப்பீடுகள்.

"மிழரங்கம்,புதிய ஜனநாயக மக்கள் முன்னணி,இரயாகரன்" கோஸ்ட்டியின் மிகக் கெடுதலான மக்கள் விரோத அரசியலைப் பேசித்தாம் தீரவேண்டும்.நேபாள மார்சியர்களது பேட்டியை தாம் நேரடியாகப் பெற்று, வெளியிடுவதெனும் தோரணையுள் முகமூடிப் பேட்டிகாண் நபர்களது பெயரில் உலாவரும் இந்தப் பேட்டியானது,குறிப்பிட்ட பசந்தாவால்(தோழர் பசந்தா -பொலிட்பிரோ உறுப்பினர் -ஒன்றிணைந்த நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்)) இவர்கட்கு வழங்கப்பட்டதல்ல.

இப் பேட்டி நாடகத்தின் மூலம், சொல்லப்படும் அரசியலானது தொடருகின்ற ஆட்காட்டிச் செயலுக்கு மேலும் புரட்சிகர வேசமிட்டுத் தொடர்வதற்கும்,அறுந்து தொங்கும் புலிப்பினாமி வேசத்தைச் செப்பனிடவும்,இத்தகைய மக்கள்விரோதச் செயற்பாட்டைத் தொடருகின்ற இரயாவினது குழுவாத அரசியலானது எந்த அறத்தின்மீதும் கட்டப்பட்டிருக்க முடியாது.முழுக்க முழுக்க இஃது,கயமைத்தனமான மக்கள்விரோதிகளது செயற்பாடாகவே பார்க்கப்பட முடியும்.

தமது காட்டிக்கொடுக்கும் அரசியல்வரலாற்றில் செய்த அனைத்துக் குலைப்பு அரசியலிலும்,அதன் உச்சமான இந்தப் பேட்டி அரசியலானது தம்மைத் தொடர்ந்து மக்கள்விரோதிகளாகவே நிலைப்படுத்தவும்,தமது எஜமானர்களுக்குத் தொடர்ந்து "இன்போமர்"களாகவே செயற்பட்டுத் தமது இருப்பை நிலைப்படுத்திப் புரட்சி வேசமிட்டுத் தொடர முனையும் சதி அரசியலில், இத்தகைய உலகப் பாட்டாளிய வர்க்கத்தின் ஒரு பகுதியான கட்சியின்-தலைவரின் பேட்டி அவசியமாக இருக்கிறது.இதற்காக இவர்கள் பசந்தாவின் எழுத்துக்களிலிருந்து வெட்டியொட்டிய அவரது கருத்துக்களைத் தமக்காகப் பசந்தாவே பேட்டியளித்துத் தந்ததாகச் சொல்லிப் பிரசுரிப்பதென்பது மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் சந்தர்ப்பவாத -நரித்தனமான செயற்பாடாகும்(பசந்தா இலண்டன் வருகை தந்ததும்,அவரைத் தமிழர்கள் தரப்பில் இனியொரு நாவலன்மட்டுமே சந்தித்திருந்ததென்பதும் நாம் அறிந்துகொண்டவைதாம்).

இவர்களது இந்தப் பேட்டிக் கட்டுரை குறித்து,இனியொரு நாவலன் பசந்தாவுடன் நேரடியாகவுரையாடியபின்,அவரது கருத்தின்படி இது அவரால் அளிக்கப்பட்ட பேட்டியல்லவென உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் பரவலாகக் கிடைக்கிறது.இந்த இரயாகரனது"புதிய ஜனநாய மக்கள் முன்னணி-தமிழரங்கம்"புரட்சிகர வேடமிட்டுக் கொள்ளத் தொட்ட இந்த இழிய செயற்பாடானது,இவர்கள் கூறும் மக்கள் நலத்திலிருந்து நோக்கப்படும்போது கிரிமினல் நடாத்தையாகும்.

இத்தகைய நடாத்தையின் மூலம் இவர்கள் கட்டியமைக்கும் அரசியலது தொடரெது?

கடந்தகாலத்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்துள் இரயாவினது பாத்திரமென்ன?புலிப்பினாமி!.

புரட்சிகரச் சக்திகளை அணித்திரட்சியடையவிடாது பிளந்து,ஆட்காட்டி, அழித்தல்,மாற்றுக் குழுக்களை இலங்கை அரசினது கைக் கூலிகளெனப் புலிகளது அரசியலைப் புரட்சிகர வேசமிட்டுச் செய்வதுவரைத் தொடரும் இந்தப் பீடையை எங்ஙனம் விளங்கிக் கொள்வது?

சாளரத்தில் ஏறித் துப்பாக்கி காட்டி அச்சப்படுத்தித் தொடர்ந்த இரயாகரனது புலிமுகமானது புரையோடிப்போன புலிகளது அராஜகத்தின் இன்னொரு வடிவமென்பதை வரலாற்றில் பதிவு செய்வதுவரை எனது முயற்சி தொடரும்.


அராஜவாதிகள் எந்த வேசமிட்டுக்கொண்டாலும் பொய்மையும்,போலித்தனமும் உண்மையினது முன் செல்லாக் காசாகப் பல்லிளிப்பதைத்தவிர, அதற்கு எந்த வலுவும் கிடையாது.என்றபோதும், இந்த உதிரிப்பாட்டாளிய வர்க்கக் குணாம்சமானது,எப்படி வரலாற்றில் செயற்படுமென்பதை நாம் லெனினிடம் கற்றாலும்,இத்தகைய செயற்பாடுகள் மூலமாக இரயாகரன் தொடர்ந்து, நமக்கு அதன் சாத்தியமான எல்லைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

இதை முன்வைத்து:

அரசியல் அறங்குறித்து நிறையப் பேசிக்கொள்ளலாம்,அதிலுங்கூட அப்பட்டமாக மக்களைச் சொல்லியே புரட்சிகரமான அரசியலைப் பேசுவதாகவும்,மக்களுக்காகவே தமது அனைத்து நடவடிக்கைகளும் செயலூக்முறுவதாகவும்,மக்களுக்கு வெளியில் நட்பு-மனிதாபிமானங் கிடையாதென்பதும்,தமிழரங்க-இரயாகரன் குழுவினது வாதமாகும்.புகலிடச் சிந்தனைமையத்தை உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பம்வரை இவர்களது அரசியலுக்குள் புலிவழியான அரசியல் அறங்களே அடிப்படையான நோக்கங்களைக் காண்பதற்கு அடிப்படையானதாகவிருந்தது.கடந்த காலத்திலிருந்து(தூண்டில் சஞ்சிகையில் நூறு பூக்கள் மலரட்டும் விவாதத் தொடர்) நான் இரயாகரனது அரசியலை ஒரு இணக்கமான அரசியல் போக்கிலிருந்து விலத்தியே வகைப்படுத்தியவன்!

இரயாகரன் என்பது ஒரு குறியீட்டுப் பெயராக வலுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி, ஒரு தனிமனிதனுக்குட்பட்ட கருத்து நிலையாகக் கட்டபட்ட கருத்துகளுக்குப் பின் பல தலைகள் மறைந்திருப்பதை நான் மூன்றாவது அணிக்குள் வகைப்பட்ட சில தேடல்களிலிருந்து புரிந்துகொண்டபோது,இது புலிகளது பினாமிகளைக்கொண்டவொரு அணியெனவும்,புரட்சிகரச் சக்திகளைத் துப்பாக்கி முனையில் அழிப்பது முடியாதவொரு நிலையில் புலிகள் தமது சக்திக் குட்பட்ட அழிப்பு அரசியலைச் செய்தபடி அதற்கு வெளியில் இந்தத் தமிழரங்கம்-இரயாகரன் கும்பலைத் தமது அழிப்பு அரசியலின் இன்னொருவகை(புரட்சிகரச் சக்திகளாக நடித்து மாற்றுக் கருத்தாளர்களை-புரட்சிகரச் சக்திகளை-வர்க்கவுணர்வுபெற்ற தோழர்களைக் அணைத்துக் குலைத்தல்) உறுப்பாகவே அரசியலைச் செய்யத் தூண்டிக்கொண்டிருந்தது.அதற்கானவொரு மறைமுகமான அநுமதியையும்-கண்காணிப்பையும் புலிகள் கவனித்துச் செய்தபடி இந்த இரயாகரன உருவாக்கிய புலம்பெயர் புரட்சிகர நாடகம் மிகவும் கீழ்மையான அனைத்துப் புலிவழிக் குணங்களுடனும் கட்டியமைக்கப்பட்ட காலத்தில், மக்களுக்காகப் போராடிய சபாலிங்கம்போன்றவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபோது அதைக் காயடிக்கும் கருத்துக்களால் நீர்த்துப்போக வைக்கும் முனைப்பில் இரயாகரனது புரட்சிக் கட்டுரைகள் பேசவும் முற்பட்டிருந்தன.

முள்ளி வாய்க்காலில் சரணடைந்து, இலங்கைப் பாசிச அரசால் கொல்லப்பட்ட பல புலித் தலைவர்களையும்,பிரபாகரனையும்"சரணடையாது இறுதிவரை போராடி மரணிக்கும் சக்தியாக"வருணித்து அவர்களுக்குப் புரட்சிகர வணக்கம்-தலைசாய்த்தலென இரயாகரன் குழுவாடிய நாடகமானது அவர்களது புலிவிசுவாச அரசியலை மக்களுக்கு அப்பட்டமாகச் சொல்லியது.

இதையும் மீறித் தம்மைப் புரட்சிகரச் சக்தியாக நடாகமாட இரயாகரன் பலதரப்பட்ட வேளைகளில் புலித்தலைவரைச் சாடிய கட்டுரைகளை எழுதிக்கொண்டு,தம்மைப் புரட்சிகர அரசியலின் தொடர்ச்சியாக முன்வைப்பதில் மிகத் தேர்ந்த நாடகத்தைச் செய்துகொண்டது.இது புலிகளது மிகத் தந்திரமான அழிப்பு அரசியலிலிருந்து தொடர்ந்த அரசியலே என்பதை நான் மட்டுமே புலம்பெயர் சூழலில் அதிகம் சொல்லிக்கொண்டேன்.எனது கட்டுரைகளை ஒரு வகைப்படுத்தலுக்குள் உட்படுத்த முனைந்தால் அதுள் பேசப்படும் "புலிப்பினாமிகள்" என்பது இந்தத் தமிழரங்க-இரயாகரன்-புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் குழுவுக்குள் நிலைப்படுத்தப்படும்"புரட்சி"வேட அரசியல் என்பதுதாம் உண்மையான அர்த்தமாவது!

சமீபத்தில் அம்பலப்பட்ட(பசந்தா பேட்டிவகை இழி அரசியல்-புதியகலாச்சாரத்தின் இரயாகரனது அரசியல்மீதான விவாதம்-விமர்சனம்-தோழமைத் துறத்தல்,புலித் தலைமையைச் சரணடையாது போரிட்டு மறைந்ததாகப் புனைந்து தலை சாய்த்தல்,புரட்சிகர வேசம்...) இரயாகரன் கோஸ்ட்டியின்புரட்சி- புலிப்பினாமி வேடமானது அவர்களை ஒரு முன்னணியை உருவாக்க வேண்டியவொரு சூழலுக்குள் தள்ளியதன் விளைவே,இந்தப் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோற்றம்.இவர்கள் புலிகளிடமிருந்தும்,இலங்கையில் மக்களது சொத்தைக் கற்ற நஷனல் வங்கிக்குள்ளிருந்து கொள்ளையிட்ட அன்றைய கோடிக்கணக்கான தொகையின் மூலமாகப் பலம்பொருந்திய நிதிவலுவுடன் தமது அரசியலைத் தொடரும் "தொழில் முறையான முறையில் எழுதித் தள்ளும்" கருத்தாடலை உருவாக்கிக்கொண்டனர்.

இரயாகரன் ஒரு தமிழ் அச்சகத்துள் வேலை பார்ப்பதெனும் போர்வையில், மாற்றுக் கருத்தாளர்களைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களது கருத்துக்களை நீர்த்துப்போக வைக்கும் எழுத்துக்களை அவரது தோழமைகளோடிணைந்து தினமும் எழுதும் தொழிலை இந்தப் பொருட்பலத்துடன் செய்யும் இன்றுவரை,அரசியல் அறமென்பது ஒடுக்குமுறையாளர்களுக்குப் பினாமிகளாவிருந்து புரட்சியாளர்களைக் காட்டிக் கொடுப்பது தாமென்பதைச் சரிவரச் செய்து வருகின்றனர்.ஆங்காங்கே, ஒத்தர்களை வைத்து இவர்கள் உருவாக்கிய"புரட்சிகர"வேடமானது ஒருவகையில் இவர்களிடஞ் சிக்கிய மூலதனவலுவால் இன்றுவரை ஒருவித போலித்தனமான அழிப்பு அரசியலைப் புரட்சிகரமாகச் செய்வதில் பல கட்டச் செயற்பாடுகளை(தமிழ்த் தேசிய ஆவணக் சுவடிகள்வரை...) உருவாக்கியுள்ளது.

அம்பலப்பட்டு,அரசியல் அரங்கு நிர்மூலமான வேளைகளில் இவர்கள் நாடகமிடும்"மக்கள் நலன்"என்பது ஒருவித ஆயுதமாக மற்றவர்கள்மீது பாய்ந்து வலுவாகத் தாக்கும்.அறங்கெட்ட இயக்ககங்களது "வரலாறுகளை"பதிவதென்றும்,போராட்ட அநுபவங்கௌன்றும் இவர்கள் செய்யும் அரசியலது தொடர்ச்சி புலிப் பினாமி அரசியலது தொடரென்பதிலிருந்து கடந்த மாதத்தத்தில் தேனியில் மணியம் எழுதும் அநுபவத் தொடரில்(பலர் இதை வாசித்துவருவதால் விபரிக்கத் தேவையில்லை) இவர்கள் புலிப்பினாமிகளாகப் புலம்பெயர் தேசம்வரை தொடர்ந்த ஈனத்தனத்தை, என்.எல்.எப்.ரீ பிளவுக்குழுக்களென விளித்து மக்களுக்குச் சொன்ன செய்தியும் உண்மைமீதான சந்தேகத்தைத் தர முடியாதது.

இப்போது,இன்னும் விரிவாக இவர்களது நாடகங்களை-வேசத்தைச் சொல்வதென்றால், இந்த இரயாகரனால் பலமுறை சொல்லப்பட்ட செய்தியும்,நம்மால் நேரடியாக அநுபவமாகிய இலங்கையர் சங்கத் ஸ்தபகர் இரஞ்சித் கெனாயக்க ஒரு இலங்கை அரச லொபி உறுப்பாகும்.இத்தகைய லொபி அரசியலைப் பலமுறை விமர்சித்த இரயாகரன் சமீபத்தில் மனிதம் இரவியின் முக நூல் நிலைத் தகவலில் அறிமுகஞ் செய்ப்பட்ட இரஞ்சித்தின்நூல் அறிமுக(இது சுவிஸ் நாட்டில் மனிதம் குழுவால் நடாத்தப்பட்டிருக்க முடியும்) நோட்டீசைத் தனது தமிழரங்கத் தட்டியிலும் ஒட்டிப் புரட்சிகர-மாற்று அரசியலைத் தொடர்ந்தார்.இது,தனது கையுக்குள்ளிருந்துதாம் அனைத்தும் தொடர்வதாகவும்,தான் அனைத்தையுங் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்திக் கண்காணித்துவருவதாகவும்,தனது எஜமானர்களுக்குச் சொல்வதாக இதைக் காண்பிக்மொரு செயலூக்கத்தின் வியூகமாகக் கண்டுகொள்ளலாம்.உண்மையான புரட்சிகரச் சத்தியும்,அதன் செயற்பாடும் எப்படி இருக்கமுடியா தென்பதற்கு இரயாகரனது அனைத்துச் செயற்பாடுகளுமே உதாரணமானதும்,சாட்சியுமாக நம் முன் இருக்கிறது.

இதைப் பசந்தாவின் பேட்டியைக் கட்டியமைத்த போலி பேட்டியிலிருந்தும், தமக்கும் நேபாளப் புரட்சியாளர்களுக்குமான "தோழமை" உறவு இருப்பதாக நடாகமாடும் இந்தப் போலித்தனத்திலிருந்து, இந்த "இரயாகரன் புரட்சி" வினைக்குள்ளே தொடர்ந்து கட்டியமைக்கப்படும் மக்கள்விரோத-காட்டிக் கொடுக்கும் அரசியலையும்,புலிப்பினாமிச் செயற்பாட்டையும் மீளவும் இனம் காட்டுகிறேன்.


ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
11.12.2011

Kommentare:

Anonym hat gesagt…

கற்றன் நசனல் வங்கி கொள்ளையின் ஒரு பகுதி பணம் தோழர் விசுவானந்ததேவனால் இராயாகரனிடம் கொடுக்கப்பட்டு மறைக்கப்படுகின்றது. தோழர் விசுவானந்ததேவன் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின் புலிகளுக்கு இந்தவிடயம் தெரிவருகின்றது. இராயாகரனை கைது செய்து பணத்தையும் நகைகளையும் பறித்துக்கொள்ள தருணம் பார்த்திருந்தனர். அவர்களுக்கு "மிகுந்த கெட்டித்தனமும் ஆற்றலும் கொண்ட" இராயாகரனை அவர்களால் எங்கும் கைது செய்யமுடிவில்லை. விஜிதரன் போராட்டத்தில் வைத்து நண்பர் இராயாகரனை கைது செய்வது புலிகளுக்கு சுலமாகிவிட்டது. இராயாகரன் செய்யப்பட்டபின் தோழர் விசுவானந்ததேவனின் 70வயது நிரம்பப்பெற்ற தகப்பனார் தாக்கப்பட்டு அவர் குடியிருந்த வீட்டின் நிலப்பகுதி புலிகளினால் இடம்விடாமல் தோண்டப்படுகின்றது. என்ன காரணம்.?நண்பர் இராயாகரன் புலிகளினால் கைது செய்யப்பட்டு கற்றன் வங்கிப்பணம் நகைகள் பற்றி விசாரிக்கப்ட்டபோது இராயாகரன் இவைகள் தோழர் விசுவானந்த தேவனின் தகப்பனாரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவற்றை தகப்பனார் அவர் குடியிருக்கும் காணியில் புதைத்து வைத்திருப்பதாகவும் கூறி அந்த 70வது வயது கொண்ட அப்பாவித் தகப்பன் மீது பழியை போட்டுக்கொண்டார். பாவம் தோழர் விசுவானந்ததேவனின் தகப்பனார். அவருக்கு இந்த கொள்ளைப் பணத்தின் நகையின் கதை எதுவுமே தெரியாது. பாசிசப் புலிகள் அவரை கடுமையாக தாக்கியது தான் மிச்சம்.இதுதான் இராயாகரனின் காட்டிகொடுப்புக்களின் நயவஞ்சக செயல்பாடுகளின் ஒரு மாதிரி உதாரணம்.

பின் தன் "ஆற்றலாலும் திறமையினாலும்" புலிகளிலிடமிருந்து இராயாகரன் தப்பித்துக்கொண்டார். எனினும் இராயாகரன் புலிகளிடம் சொன்ன "அந்த வாக்கு" மூலங்களை தனக்குத்தானே தணிக்கை செய்து மூடி மறைத்துக்கொண்டார். தன்னுடைய ஆற்றலுக்கும் திறமைக்கும் ரஜினி திரணகம எழுதிய "முறிந்தபனை" குறிப்புக்களை ஆதாரமாகக்காட்டும் நண்பர்

இராயாகரன் தன் "காட்டிக்கொடுப்பு அரசியலுக்கும்" அந்த முறிந்த பனை ஆதாரத்தை பார்க்கட்டும்.« « றயாகரன் சிறு மார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று, விடுதலைப்புலிகள் இயக்கம் அவர் மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியியலாளரான திரு. விஸ்வானந்ததேவனே அவ் மார்க்ஸியக் குழுவின் தலைவர் ஆவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர். அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணாமற் போய்விட்டார். .....றயாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது » » » (முறிந்தபனை பக்கம் 169.)

தோழர் விசுவானந்த தேவனின் தந்தையாரை கைது செய்து தாக்கிய புலிகள் அவரிடம் கேட்டது இராயாகரன் தந்த பணத்தையும் நகைகளையும் எங்கே புதைத்துள்ளீர்கள் என்பதே. இவ்வாறு கேட்டுக் கேட்டே 70வயது முதிர்ந்த தோழரின் தந்தை கொடுமைக்கு உளளாக்கப்பட்டார்.நண்பர் இராயாகரனின் ஈழப் போராட்ட வரலாற்றின் முக்கிய பங்களிப்பு இதுதான். உயிரோடு இருக்கும் விசுவானந்த தோழரின் நண்பர்களும் தோழர்களும் என்றும் இதற்கு சாட்சியமாக இருப்பார்கள். காலங்கள் ஒடலாம் நண்பர் இராயாகரனால் வரலாற்றுச் சாட்சியங்கள் மாற்றப்படலாம். மறைக்கப்படலாம்.ஆனால் நேர்மையும் உண்மையும் கொண்ட தோழர்கள் மத்தியில் இப் பதிவுகளின் தாக்கம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.
-sriharan Canada

Anonym hat gesagt…

ப.வி.சிறீரங்கனுக்கு

உங்களிடம் எனக்கு தொடர்பிருந்தது.
உங்களிடம் எனது தொலைபேசி எண் இருந்தது.
உங்களிடம் எனது மின்னஞ்சல் முகவரி இருந்தது.
உங்களிடம் எனது முகநூல் முகவரி இருந்தது.

உங்களுக்கு நேரமின்மையோ அல்லது உங்கள் ஊகங்களில் உங்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கையோ இவைகளையெல்லாம் தொலைத்துவிட்டிருக்கக் கூடும். அதனால் எழுதுகிறேன்.

மனிதம் ரவி என்ற அடைமொழியை நான் எங்குமே பாவித்ததில்லை. காரணம் மனிதம் ஒரு கூட்டு உழைப்பில் இயங்கிய அமைப்பு. அதை எனது பெயரின் அடைமொழியாக நான் எங்குமே பாவித்தது கிடையாது. மனிதம் நின்றுபோனது 1996 இல். இங்கு நாம் பேசிக்கொண்டிருப்பது 2011 இல். 2011-1996 = 15 வருடங்கள்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை றஞ்சியும் நானும்தான் ஒழுங்குசெய்திருக்கிறோம். ஆனால் நீங்களோ இல்லாமல்போன அமைப்பொன்றின் பெயரைப் புதுப்பித்து "மனிதம் குழுவால் நடாத்தப்பட்டிருக்க முடியும்" என்கிறீர்கள். அதற்குப் பின்னால் நீங்கள் சொல்லவருவது புரியவேயில்லை. உங்கள் எழுத்துமுறைதான் அதற்குக் காரணம். (ஒன்றுக்கு பல தடவை அதை திருப்பித் திருப்பி வாசித்தேன் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.) மனிதம் ரவி என்பதன் மூலம் கூட்டுழைப்பை தனியொருவனிடம் கட்டுகிறீர்கள். நூல் வெளியீட்டு விடயத்தில் தனியுழைப்பை இல்லாத ஒரு அமைப்பிடம் கட்டுகிறீர்கள். கொஞ்சம் பிதற்றலாயில்லை!!!

ரயாகரன் மீது நீங்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக எனது முகநூல் நிலைத்தகவலை இழுத்துவந்திருக்கிறீர்கள். நூல்வெளியீடு சம்பந்தமான அந்த அறிவிப்பு இணையத்தளங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவை மட்டுமல்ல இந் நிகழ்வுக்கு வரக்கூடிய ஆர்வலர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அனுப்பப்பட்டிருந்தது. சில இணையத்தளங்கள் (ஜி.ரி.என், பதிவுகள், தூ, புதிய ஜனநாயக முன்னணி) இதை வெளியிட்டிருந்தன. தேசம் நெற், இனியொரு... போன்றவை அதை வெளியிடவில்லை. சாதாரணமான இந்தவகை ஜனநாயகச் செயற்பாடுகள் எவ்வகையில் இந்த இணையத்தளங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன என்ற கவலையோ, அன்றி ஒரு நிகழ்வை செய்துமுடிப்பதில் கைக்கொள்ளப்படும் அறிவிப்பு முறைமைகள் பற்றிய சாதாரண புரிதலோ உங்களுக்குத் தெரியாமல் போனது கொஞ்சம் அதிசயமாகத்தான் இருக்கிறது. அந்த அறிவிப்பை புதிய ஜனநாயக முன்னணி இணையத்தளம் வெளியிட்டதை ரயாகரன் மீதான உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரப்படுத்துவது ஓர் அவசரம் என்றே பார்க்க முடிகிறது. வெட்டியொட்டல் வேலை என்கிறீர்கள். அதை என்னவென்பது??

ரயாகரன் மீதான உங்கள் விமர்சனங்களுக்குள் அல்லது குற்றச்சாட்டுகளுக்குள் நான் வரவேண்டிய அவசியம் இல்லை. நீங்களாக உண்மையை அறிந்து பின் எழுதியிருக்கவேண்டிய (நான் சம்பந்தப்பட்ட) தகவல்களை மட்டும் தந்திருக்கிறேன். வெளிப்படையாக இணையவெளியில் நீங்கள் வைத்திருப்பதால் நானும் அதே வெளியில் வைத்து இதைச் சொல்வதுதான் சரியானது எனக் கருதியமையால் இங்கு குறிப்பிட்டுள்ளேன். செயற்பாடுகளற்ற புகலிட அரசியல் இலக்கிய இழுபறிகளிலிருந்து தொடர்ந்தும் தூர விலகியே இருக்க விரும்புகிறேன் நான்.

நட்புடன்
ரவி.

P.V.Sri Rangan hat gesagt…

வணக்கம் இரவி,உங்களது முக நூல் நிலைத் தகவலை,இரயாகரனைக் குறித்துப் பேசும் விடையத்துக்கு ஆதாரமாக(கொஞ்சம் ஓவராக இருந்தாலும்...) நான் பயன்படுத்தவில்லை!

அந்தத் தகவலுக்குள் இருக்கும் ஒரு பிரமுகரது அரசியலைக் குறித்தும்,அவரது இலங்கை அரசசார்பு நிலைப்பாட்டையும்,நாம் விமர்சித்தவர்கள்.

இராயாவும் அது குறித்துப் பேசியிருக்கிறார் என்னுடன்.ஆனால்,எவரை,இலங்கை அரசுக்கும்,ஒடுக்கு முறையாளருக்கும்,உடந்தையான மக்கள் விரோதிகளென்று இரயாகரன் விமர்சிக்கிறாரோ அவர்களைச் சில தேவைகளுக்காகத் தனது இணையத்தில் வெட்டியொட்டுவார். இதைச் சோபா சக்தியின் எழுத்துக்களை நேற்றுக்கூடப் போட்டுவிட்டுக் கழற்றிய தமிழரங்க அரசியலில் உரைத்துப் பார்க்க முடியும்.இந்தப் போலித் தனத்தைப் பகிர்வதற்கு இவைகள் உதாரணமானவையேதவிர,நான் சொல்லும் "இரயாகரன் புலிப்பினாமி,அந்நிய தேசத்துக்கு-ஏகாதிபத்தியத்துக்கு நமது போராட்டத்தை-புரட்சியைக் காட்டிக்கொடுக்கும்ஒரு நிறுவனம்"என்பதற்கு இவைகளல்ல ஆதாரம்.ஆதாரம்: அவர்களது அரசியலே-செயற்பாடே!

இரஞ்சித்தையும்,இலங்கையர் சங்கத்தையும் நான்1987 ஆம்1988 ஆம் ஆண்டுகளிலிருந்து இன்றுவரை தெரியும்.அவரது சமகால அரசியலின் போக்குகளும்,நடவடிக்கைகளும் இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் விரோதிகளான ஆளும் கும்பலது பக்கத்தில் நிற்பதை இனங்காணத்தக்கதாகவே இருந்தது.

..."மனிதம் குழு"... நான் சொல்ல வந்தது, இத்தகைய விழாவை நீங்கள் செய்திருந்தாலும்,அதை "மனிதம் குழுவினர் செய்திருக்கலாம்"என்றே குறிப்புணர்த்தினேன்.

மனிதம் நின்றுபோய் அதிலுள்ளவர்கள் திக்குத்திக்காகப் போனதை நான் அறிவேன்.

மனிதம் குழுவினரென்பதன் அர்த்தம்,அதைத்தாண்டியில்லாதவொரு சாத்தியப்பாட்டினது எந்தவித இயக்கப்பாட்டையும் வலிந்து உள்நோக்கத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டதல்ல.

இரவியை-இரவி,"இரவி"என்றழைப்பதில் நமக்கென்ன?

பொதுவெளியில், உங்களை அங்ஙனமே நாம் சொல்லிப் பழக்கப்பட்டதன் தொடரில்-அநுபவத்தில் அங்ஙனம் சுட்டப்பட்டது.

மற்றும்படி, இராயகரனது "புலிப்பினாமி" அரசியல் சதியைக் குறித்துப் கருத்தாட,எனக்கு எவரது தகவலோ அல்லது எந்தத் தடையமோ அவசியமில்லை.

அதை,நான்,இராயகரனது நடவடிக்கைகளின்வழியே கண்டடைவேன்!

நிற்க,நலந்தானே?
உங்கள் அனைத்துத் தொடர்பாடல் முகவரியும்,கணனி பழுதடைந்தபோது இல்லாது போய்விட்டது.புதுவருடத்துக்கு வாழ்த்து அனுப்பினீர்களானால்,அப்போது கிடைக்கலாம். :-)

ரங்கநாயகி hat gesagt…

சிறிரங்கன் ரஜாகரனையும் புதிய மக்கள் ஜனநாயக முன்னணியையும் ஏதேதோ எழுதி சந்தோசப்படுகின்றார். அதனை நானும்தான் நம்பினன். இப்ப என்னடா எனப் பார்த்தால் நண்பர் சிறிரங்கனின் வாய் மட்டுமல்ல அவரது குண்டியுமல்லோ சிணி நாற்றமடிக்கிறது.
உண்மையில் அவர்கள் நேபாள மாவோஸ்ட்டுகளைச் சந்தித்தித்திருப்பதனை உண்மையாக்கியிருக்கின்றார்கள். நீங்கள் இப்போதும் துவைக்காத கோவணத்துக்குள் கொள்ளை விளையவிட்டு.., ச்சே கொஞ்சமாவது உங்களுக்கு மனிதப் பக்குவம் வேணும்; அதனை முதலில் வளருங்கோ.

P.V.Sri Rangan hat gesagt…

ரங்க*நியுட்டி*நாய்கி,எங்கள் கோவணத்தின் மணம் எங்களோடுதானே...ஆனால்,உங்கள் மலங்கள் எல்லோரது கால்களிலுமல்லவா பட்டுச் சீரழிக்கிறது-என்ன செய்யலாம்?இரண்டாண்டுகளுக்குமுன் இந்தியாவில் எவருக்கோ கொடுக்கப்பட்டதை நேரம்பார்த்துச் சிந்துவது மலத்தைவிட மோசமானது நண்ப!