Mittwoch, November 28, 2007

பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும்...

இது மக்களை ஏமாற்றும் காலம்.

இது மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் சமூகத்தின் அதீத அவநம்பிக்கையை உண்டுபண்ணியபடி காலத்துக்குக் காலம் மிதமான பொய்யுரைப்புகளை மக்கள்-சமூக வெளிக்குள் கொட்டி நடைமுறைப் பிரச்சனைகளைப் பின் தள்ளுகிறது.இங்கே நாம் கட்சி-தலைவர் என்றபடி கருத்தாடுவதும், அல்லது அத்தகைய அமைப்புத் தலைமை வாதத்துக்குள் நமது கருத்து நிலையைக் காவு கொடுத்து, மக்கள் நலன்களைப் பலியாக்கும் பொறுப்பைக் கட்சிகளிடம் ஒப்படைக்கின்றோம்.

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

தமிழ்பேசும் மக்கள் தமது சமூக முரண்பாட்டை பல் வகைப் போராட்ட நெறியாண்மைக்குள் பரிசோதித்துப் பார்த்த பின்பு,மீளவும் பழைய பரிசோதனைப் பாணி அரசியல் சழற்சிக்குள் தள்ளிவிடப்படும் ஒரு இருண்ட அரசியல் வியூகத்தைப் பழைய அரசியல் பெரிச்சாளிகள் அந்நிய அரசியல்-பொருளியல் ஆர்வங்களின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது,அதை வெறுமனவே பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்ள முடியாது.நமது வாழ்வையும் நமது அரசியல் அபிலாசைகளையும் இந்தியாவும்,அமெரிக்காவும் தீர்மானிக்க முடியாது.
தமிழ்பேசும் மக்களிடமிருந்து அத்தகைய அரசியல் எதிர்பார்ப்பு எழும் இருண்ட அரசியல் வறுமை என்றைக்கும் நிலைத்திருப்பதற்கானவொரு வியூகத்தை கட்சி அரசியலானது நமக்குக் காலாகாலமாகத் தந்துவிடத் துடிக்கிறது.இதைச் செம்மையாகச் செய்வதற்கான கருத்தியல் மேலாதிகத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திய-அந்நிய ஆர்வங்கள் எமது மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டு அழித்தும்,தமது விருப்புறுதிகளை-பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை எமக்கான உரிமையாகவும்,எதிர்கால அரசியல் தெரிவாகவும் முன்வைக்கின்றன.இவை முன்னெப்போதையும்விட பன்மடங்கு அரசியல் குழிபறிப்புடைய ஈனத்தனமான செயற்பாடாகும்.

எங்கள் மக்களுக்குள் நிலவும் பாரிய அரசியல் இயலாமையை தமது வெற்றிக்கான அரும்பாகப் பயன் படுத்தும் இந்திய விருப்பு,இலங்கைக்குள் இந்திய நிலைமைகளைத் தோற்றுவிக்கப் படாத பாடு படுகிறது.அதற்காக ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவாநந்தா,கருணா-பிள்ளையான் குழு மற்றும் குறுங்குழுக்கள்போன்ற அரசியல் அநாதைகளைப் பயன்படுத்தும் இன்றைய அரசியலானது மிகவும் சூழ்ச்சிமிக்க பரப்புரைகளை நமக்குள் விதைக்கின்றன.இவை இலண்டனையும்,பாரிசையும் மையப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பற்பல வெடிப்புக்களைச் செய்து வருகிறார்கள். இதுள் ரீ.பீ.சீ.வானொலியின் பங்கு முதன்மையானது.இந்த வானொலி புலம் பெயர்ந்த மக்களின் தோள்களில் இருந்தபடி இந்திய நிதியில் எம்மை வேட்டையாட இலங்கைச் சிங்கள இராணுவத்துக்கு ஆட்காட்டி வருகிறது.இதைப் புலிகளின் அராஜகத்தைச் சொல்லியே ஒப்பேற்றி வருகிறது.மக்களுக்கும் புலிகளுக்குமான முரண்பாடு ஜனநாயக மறுப்போடும்,அராஜகச் செயற்பாட்டிலும் மையங் கொள்கிறது.இதைக் கடக்காத புலிகள் மக்களின் உரிமையை வென்றுவிட முடியாது.இத்தகைச் செயற்பாடு தொடரும்போது அந்நியர்கள் எம் மக்களின் நலனைத் தமது முகமூடியாக்கி நம் மக்களின் உரிமையைக் குழிதோண்டிப் புதைப்பதற்குப் புலிகளே பாத்திரமாகிறார்கள்.

இந்த இலட்சணத்தில் பிரபாகரன் எவ்வளவு உருக்கமாக உரையாற்றினாலும் மக்கள் உரிமையைப் பெறமுடியாது.புலிகள் தமது அந்நிய நட்பைப் பிரிசீலித்துப் புரட்சிகரமான முறையில் போராட்டச் செல் நெறியை வகுத்தாகவேண்டும்.வெளி நாடுகளிலுள்ள தமிழ்ப் பெரும் முதலாளிகளின் நட்புக்காக நமது மக்களின் நியாயமான உரிமைகளை மறுத்தொதுக்கிப் பாசிச அமைப்பாக இறுகிச் செல்ல முடியாது.இதைப் புலிகளின் தலைவர் சுய விமர்சனஞ் செய்தேயாகவேண்டும்.தமிழ் பேசும் மக்களின் சராசரித்தனமான அறிவு பிரபாகரனின் உரைக்காக மட்டுமல்ல உண்மையான செயற்பாட்டுக்காவும் கிடந்து மாய்கிறது."பிரபாகரன் இல்லையென்றால் நமக்கு விடிவில்லை" எனும் உணர்வே மக்களிடம் இப்போது ஓங்கியிருக்கும்போது,அதை நாசம் செய்து அந்நியர்களுக்கு அடிமையாய் இருப்பதில் புலிகளின் தியாகமும் மக்களின் உயிருமே பாழடிக்கப்படுகிறது.

நமது மக்களின் துயரம் மிக்க போராட்ட வரலாறானது தியாகத்தாலும்,கொலைகளாலும்,பொருளிழப்பாலும் நிறைந்த மிகக் கடினமான போராட்ட வாழ்வாகும்.எம்மை வேரோடு சாய்ப்பதற்கான பல்வகை அரசியல்-போராட்ட வியூகங்களை இலங்கையரசும்,இந்திய மற்றும் அமெரிக்க நலன்களும் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றன.இத்தகைய தரணங்களுக்கிசைவாகப் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போதுமே தமிழ்பேசும் மக்களை ஒட்டச் சுரண்டித் தமது அற்ப ஆசைகளைத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள்.இவர்கள்தாம் நம்மைத் தமிழக ஓட்டுக்கட்சிகளையும்,இந்திய மத்திய அரசையும் நம்பும்படி வற்புறுத்துபவர்கள்.இது நம்மை இந்தியத் துரோகத்தால் ஏமாற்ற முனையும் செயல்.நாம் மூடர்களாகக் கடமையாற்ற முடியாது.ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் பாரிய உயிர் அழிவுகூடிச் செல்கிறது.எங்கள் குழந்தைகள் தேசத்துக்காய்ச் செத்து மடிகிறார்கள்.இதை எவரெவர் பயன்படுத்தித் தமது வளங்களைப் பெருக்கிறார்களோ அவர்கள் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைப் புரிந்து தம்மைச் சுய விமர்சனஞ் செய்து மக்களைப் புரட்சிகரமான முறையில் திரட்டி எமது விடுதலையை வென்றெடுத்தாக வேண்டும்.

இந்த இழி அரசியல்வாதிகளால் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்த இலங்கைத் தேசத்துத் தமிழ்பேசும் மக்கள், வரலாற்றில் அரசியல் தோல்வியை மடமையான முறையில் சந்திக்க முடியாது.இங்கே தமிழ் பேசும் உழைக்கும் மக்கள் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் உணர்வில் கட்டுண்டு கிடப்பினும் நமது எதிரிகளை இனம் கண்டு போராட்டத்தைச் சீரிய முறையில் செய்தாக வேண்டும்.இதற்கான அனைத்து வளங்களையும் கேட்டு நிற்கும் புலிகள் முதலில் தம்மைச் சுயவிமர்சனஞ் செய்து மக்கள் படையணியாகத் தம்மைக் கட்டியாகவேண்டும்.வெறும் இராணுவவாதத்தைத் தவிர்த்து ஓடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளின் பிராதான முரண்பாட்டில் கவனஞ் செலுத்தியாக வேண்டும்.இதைச் செய்யாதவரை திரு.பிராபாகரனின் கோரிக்கையில் எந்த அர்த்தமுமில்லை.தமிழ் பேசும் மக்களுக்குள் நிலவும் அராஜகங்கள் அட்டூழியங்கள் நிறறுத்தப்பட்டு அவர்களைப் பார்வையாளரென்று தொடர்ந்திருத்தி வைக்காமல் போராட்டத்தோடு இணைப்பதும், அவசியம்!

எமது மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் தேடிப் புதுப்புது வியூகங்களை நம் எதிரிகள் எமக்குள் கொட்டி எம்மைத் தமது நலன்களைக்காக்கும் ஜந்திரங்களாக்கி, அரசியல் அநாதையாக்கும் பணிக்கு ஆனந்த சங்கரிபோன்ற அரசியல் வாதிகள் பக்கப்பலமாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.இது மக்களைப் பழையபடி விலங்கிட்டு அவர்களது உரிமைகளை அந்நிய சக்திகளுக்கு ஏலமிடும் பாரிய சமூகவிரோதச் செயற்பாடாகும்.

இன்று நமக்குள் நிலவும் ஜனநாயகப் பற்றாக் குறையை மிகைப்படுத்தி நமது மக்களுக்கு இந்தத் தேவையே அவசியமென்றும,; அதை இலங்கை அரசுடன் உடன்பாட்டுக்குப்போய் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறப்படும் ஆசை வார்த்தைகள் பொய்யானவை.தென்னிலங்கையின் ஜனநாயகச் சூழலானது தமிழ் மக்களின் நிலையிலிருந்து எந்த வகையிலும் முன்னேறியது கிடையாது.இந்த இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் உலக அரசுகள் எமது நாட்டில் நிரந்தரமானவொரு அரசியல்-பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், சுய உறுதிப்பாடுகளையும் எட்டுவதற்கு என்றும் விருப்புடையனவாக இருக்கவில்லை.இவர்கள் எமது வாழ்வை தமது அரசியல் நலனிலிருந்து தீர்மானிக்க முனைகிறார்கள்.

இதனால்-
"இந்தியா தராது","இந்தியாவிடாது",
"அமெரிக்கா விரும்பாது",
"ஐரோப்பா ஏற்காது"

என்று பயனை பாடிக் கொள்ளும் கருத்தியலை எமக்குள் வலுவாகத் திணித்து நம்மை அவர்கள் வழிக்குத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.இதற்காகவே பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்து பாரிய பரப்புரைகளை நமக்குள் கொட்டுகிறார்கள். இங்கே ரீ.பீ.சீ.வானொலியும் கருணாவும்,கே.ரீ.இராஜசிங்கமும் எமது மக்களின் முதுகில் குத்தியே தமது எஜமான விசுவாசத்தைச் செய்கிறார்கள்.இதற்குப் புலம் பெயர்ந்த மக்களின்மீது அவ்வளவு கரிசனையாம்.கேட்கப் புல்லாரிக்குது.மக்களை நரவேட்டையாடியது புலிகள் மட்டுமல்ல மற்றைய இயக்கங்களும்தாம்!இதை மக்களுக்குப் புதிதாகச் சொல்வதற்கில்லை.ஆனால்,புலிகளின் அடிமட்டத் தியாகிகளின் அற்புதாமான உயிர்களை உலை வைத்தபடி நமது அரசியல் அந்நியர்களுக்கு வால் பிடிக்க முடியாது.

எனவே, புலிகள் தமது போராட்டப்பாதையில் மக்களை இணைப்பதற்கான முதற்படி அவர்களுக்கு ஜனநாயகத்தைக் கொடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட அநுமதித்தாகவேண்டும். நாம் இன்னும் விடு பேயர்களாய் இருந்து, இவர்களிடம் மடிப் பிச்சை எடுக்கும் அரசியல்-சமூக உளவியலைத் தீர்மானிக்க எமக்குள் பற்பல வியூகங்கள் மலிந்துருவாக்கப்படுகிறது.இதைத் தடுப்பதற்கான ஒரே வழி மக்களைச் சுயமாகச் செயற்பட அநுமதிப்பதும்,அவர்களது எழிச்சியைக் கூர்மைப்படுத்துவதும் கூடவே மக்களைச் சார்ந்து புரட்சிகரமாக இயங்குவதுமே.புலிகள் இனியும் அந்நியர்களுக்குச் சேவர்களா அல்லது மக்களின் புரட்சிப்படையா என்பதை அடுத்த மாவீரர் தினத்தில் நாம் அறிய முடியும்.

இன்றைய அந்நிய ஆர்வங்கள்,
"ஜனநாயகம்,
யுத்த நிறுத்தம்,
சிறுவர்களைப் படையில் இணைப்பது,
கட்டாய வரி வசூலிப்பு,
கொலைகள்,
மானுடவுரிமை!"


என்ற கோசங்களுக்கூடாய் நம்மை வந்து முற்றுகையிடுகிறது.

உண்மையில் நமக்குள் இந்தமுரண்பாடுகள் நிலவுகிறது.புலிகளின் அதீதமான மக்கள் விரோதப் போக்கானது,மாவீரர்களின் தியாகத்தாலும்,அவர்களின் இழப்புகளாலும் மனத்தில் சகஜமானவொரு செயலாக நியாயம் பெறுகிறது.இது தப்பு.நாம் மக்களின் குழந்தைகளே.எங்கள் பெற்றோர்களை வதைத்து எவரது உரிமைக்காகப் போராடுகிறோம்?

நமது சமுதாயத்துக்குள் இத்தகைய முரண்பாடுகள் மலிந்துவிட்டென.

எனினும், இதைத் தூக்கி நிறுத்தும் அரசியலானது மக்கள் நலனிலிருந்து மக்களே தீர்மானிப்பதாய் இருக்கவேண்டும்.ஆனால், இப்போது நிலவும் இந்தக் கோசங்களுக்குள் மறைந்திருக்கும் அந்நிய ஆர்வங்கள் நம்மை நன்றாக ஏமாற்றிவிடத் தடியாய்த் துடிக்கின்றன.இந்தத் துடிப்பை புளட் ஜெகநாதன் மற்றும் ரீ.பீ.சீ. அதிபர் இராமராஜன் போன்றவரிடம் மிகுதியாகக் காண முடியும்.

யுத்தத்தின் மூலம் நமது ஆன்ம வலுவை உடைத்தெறிந்துவிட்டு,நம்மை நாதியில்லாத அகதிகளாக்கிவிட்டு,நமக்கு அன்றாடம் இயல்பான வாழ்வே அவசியமெனும் மனநிலையைத் தோற்றி, நமது உரிமைகளைக் காயடிக்கும் இலங்கை-இந்திய அரசிலானது மிகவும் கொடிய உள்நோக்கமுடைய அரசியல் குழிப்பறிப்பாகும்.இது பேசும் இத்தகைய "மர்ம மக்கள் நலனானது" நம்மைக் காலாகாலத்துக்கு அடிமைகளாகக் கட்டிப்போடும் தந்திரத்தோடு உறவுடையது.

எனவே இதை உடைத்தெறிவதற்கான ஒரே வழி:

புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள மேற்காணும் முரண்பாட்டை தீர்ப்பதே.இதைப் புலிகள் செய்யும் போது,மக்கள் சுய எழிச்சி கொள்வதும்,தமது நலன்களைத் தாமே "தமது நோக்கு நிலையிலிருந்து" முன்வைப்பதும்,போராடுவதும் நிகழும்.எந்த அந்நிய சக்தியாவது புலிகளை அழிக்க முனையும்போது மக்கள் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தவிர்க்க முடியாது நிகழும்.அதுதாம் நமது நிலைப்பாடும்.மக்களைத் தவிர்த்த எந்த அரணும் போராளிகளைக் காக்க முடியாது.மக்கள் தம்மைத் தாமே முன்னிறுத்தும் பாரிய வரலாற்றுப்பணி இப்போது நம் முன் இருக்கிறது.இதைத் தடுக்கும் அரசியல் சூழ்ச்சியானது புலிகளுக்கும் மக்களுக்குமான ஜனநாயக முரண்பாடாகக் கட்டி வளர்க்கப்படுகிறது.இதைப் புலிகளே பிரித்தறிந்து நிவர்த்திசெய்யாதவரைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்களையும்,அவர்களது உரிமையையும் வென்றெடுக்க முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, November 25, 2007

மக்கள் விடுதலையைக் கட்டிப்போடும் தளைகள் என்ன?

மக்கள் விடுதலையைக்
கட்டிப்போடும்
தளைகள் என்ன?


உலகம் மிகக் கொடூரமான முறைமைகளில் மனித வதையைச் செய்வதில் குறியாக நிற்கிறது.அது பற்பல வடிவங்களில் சாத்தியப்படுத்தப் படுகிறது.ஒரு புறம் மக்களின் அன்றாட வாழ்வைப்பறிக்கும் தொழில் கழகங்களின் புதிய இடத்தெரிவுகள்,அணைகள்-கட்டுமானங்கள் மறுபுறம் தொழிற்சாலைக் கழிவுகள்,சம்பளமற்ற மிகைவேலை-வேலையைவிட்டுத் துரத்துதல்,அரசுகளின் சமூக மானிய வெட்டு!என்ன செய்வது?கட்டுண்டு வாழ்வதா அல்லது போராடிச் சாவதா?

போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்படுகிறது.ஜேர்மனிய வைத்தியர்களிள் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 14.12.2005 அன்று கடைசி சில மணி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது இப்போது இரயில்வேத் தொழிலாளிகள் மற்றும் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தையும் "செய்வதா அல்லது கைவிடுவதா" என்பதை நீதிமன்றதே தீர்மானிக்கிறது.இது தொழிற் சங்கங்கள் மற்றும் மாக்டபேர்க் கூட்டு எனும் அமைப்புக்கு இது தோல்வியில் முடியவில்லை மாறாக மனிதவுரிமைக்குக் கிடைத்த பாரிய தோல்வி.இது ஒரு உதாரணத்துக்காகச் சொல்லப்படுகிறது.உலகம் ப+ராகவும் தொழிலாளர் நலன்கள் இந்த நிலையிலேயே பறிக்கப்படுகிறது.வருமாண்டு இரண்டாயிரத்து எட்டில் ஜேர்மனியக் குடிவரவுத்திணைக்கழகம் இன்னும் பாரிய வேவு வேலையிலீடுபட இருக்கிறது.அதன் முதற்கட்டமாகக் ஜேர்மன் குடிகளின் கைவிரலடையாளம் உடைய கடவுச்சீட்டு மற்றும் ஆளடையாள அட்டைகளைத் தயாரிப்பது,இவை சட்டமூலமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ப+ர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.

உலகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புலிகள் எப்படித் தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்து அந்நியச் சக்திகளோடு கூட்டுவைத்துத் தமது நலன்களை அடைய முடிகிறார்களோ அதே பாணியில் மற்றைய இயக்கங்களும் தமது அரசியலை முன்னெடுத்து மக்களை வேட்டையாடி வருகிறார்கள்.

மக்களின் துயரம் பல்மடங்கு நீண்டு போகிறது.இன்றைக்குத் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை-ஓட்டுக் கட்சிகளை நம்பி நமது மக்களின் விடுதலைப் போராட்டம் காத்திருக்கிறதென்றால் இத்தகைய போராட்டத்தைச் செய்யும் இயகத்தினது அரசியல் என்னவென்று புரியதக்கது.ஓட்டுக் கட்சிகள் தமிழ் நாட்டு மக்களையே சாதி ரீதியாகவும்,பொருளாதாரரீதியாவும் ஒடுக்கித் தமது கட்சியின் இருப்புக்கும் தத்தமது குடும்பங்களின் தொழில் முன்னேற்றத்துக்காகவும், அந்நியத் தொழிற் கழகங்களுக்குத் தமிழ்நாட்டைப் பட்டயமெழுதி வரும்போது-அந்நியத் தேசங்களின் தரகர்களாகச் செயற்படும்போது ஈழமக்களுக்கு இவர்கள் என்னத்தைப் பெரிதாகச் சொல்வார்கள்?எங்கள் போராட்டத்தை-விடுதலையைத் தடுப்பதற்காகத் திட்டங்கள் தீட்டும் மத்திய இந்திய அரசோடு கூடிக் குலாவியபடி அவர்களின் விய+கத்துக்குத் தமிழ்நாட்டின் மக்கள் குரலைத் திசை திருப்பவே இந்த முயற்சிகள் நடை பெறுகிறது.

இந்த நிலையில், நமது நாட்டில் உயிர்வாழும் அடிப்படை வளங்கள் இன்றி மக்கள் படும் துன்பங்கள் அவர்களின் உயிர்த்திருத்தலையே கேள்விக்குட்படுத்துகிறது.இது துப்பாக்கியைவிட மிக மோசமான உயிர்ப் பலியை இன்னும் சில வருடங்களில் மெல்லச் செய்துவிடப்போகிறது.இருந்தும் பாரிய வலுக்கரங்கள் எங்கள் தேசத்தைச் சுற்றித் தங்களது வலையோடு அலைகிறது.அது எமது தேசத்தின் அனைத்து வளங்களையும் வேட்டையாடவும்,தேசத்தை அடிமைத்தனத்துள் இருத்தவும் தத்தமது வளங்களைப் பயன்படுத்தி நமது மக்களுக்குள்ளேயே தனது கைக்கூலிகளை வளர்த்து அவர்களை ஆயுததாரிகளாக்கி-அமைப்பாகி வந்துள்ளது, இந்திய ஆளும் வர்க்கம்-உலக ஏகாதிபத்தியங்கள்.அத்தகைய அமைப்புகளே இன்று தேசிய விடுதலைக்கு ஆதரவாகவும்-எதிராகவும் குரலிட்டு நமது புரட்சிகர முன்னெடுப்பைத் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள்.இதற்காகத்"துரோகி"ப் பட்டம் தயார் நிலையில் இருக்கிறது.

இங்கே, உலகத்தின் மேய்ப்பர்கள் தத்தமது நலன்களை அடைவதற்காக அன்றிலிருந்து இன்றுவரையும் 7300 என்.ஜீ.ஓ.களைக் கட்டியமைத்து உலக நாடுகளை வேட்டையாட மக்கள் மேம்பாட்டாளர்கள் எனும் போர்வையில் செயற்பட அநுமதித்துள்ளது இன்றைய ஏகாதிபத்தியங்கள்.இந்த என்.ஜீ.ஓ.களிடம் உள்ள பணமே அந்தந்தப் பகுதி மக்களிடம் ஏகாதிபத்தியங்கள் திருடியதுதாம்;(ersten NGO's die in 1775 in Pennsylvenia gegruendete"Society for Promoting the Abolition of Slavery.என்பது அரசுசார அமைப்புகள் குறித்த ஜேர்மனியக் குறிப்புகளில் இருக்கிறது.)அமெரிக்காவில் கருப்பின அடிமைச் சமுதாயத்தைக் காத்து அவர்களின் நலனுக்காகத் தோற்றியதாக இனம் காட்டப்படும் இந்த என்.ஜீ.ஓ.களின் இன்றைய நிலையோ அடிமைச் சமுதாயத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்த முனையும் செயலாகவே இருக்கிறது.

இதுவே இத்தகைய நிலைமையை அடைந்ததென்றால் நம்மக்குள் இருக்கும் அரசியல்-இயக்கங்களின் நிலைமை எத்தகையதென்பது புரிந்துகொள்ளக்கடினமானதல்ல.இங்கே,கவனிக்கப்படவேண்டிய பாரியபணி என்னவென்றால் இத்தகைய மக்கள் விரோத இயக்கங்கள்-கட்சிகளின் பின்னே ஏமாந்து மக்கள் அள்ளுப்பட்டுச் செல்லாமலிருப்பதற்காக எல்லோரையும் சந்தேகித்து உண்மைகளை அறியும் சுயமுற்சியே முக்கியமானது.

யார்,எவர் எந்தத் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறாரென்று புரிவதே கடினமானவொரு இருண்ட நிலையில் நமது எதிரிகளை ஓரளவு புரியக் கீழ்காணும் குறிப்பை மீளப் பிரசுரிக்கிறோம்.

நர்மதா அணைக்கட்டுக்காகப் போராடும் பழம்குடி மக்களும், மேத்தா பட்கரும் அருந்ததி ரோயும் ஒரு புறமாக மறுபுறமோ பல் தேசியக் கம்பனிகளின் பகாசூரக் கூட்டங்களை சேட்டில் என்ன கோங் கோங் என்ன அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டங்களை மக்கள் நலக் காப்பாளர்கள் மக்களோடு இணைந்து போராடும் நிலையில,; இத்தகைய உரிமைகளை நீதி மன்றங்கள் பறித்துவிடுவதைப் பார்க்கும்போது பாசிசத்தின் உச்சக்கட்டம் நம் முன் விரிவது தெரிகிறது. கனடாவில் நடந்த சூழல் பாதுகாப்பு மாநாட்டை அமேரிக்கா நிராகரிக்கிறது.உலகச் சூழல் பாதுகாப்பை நிராகரிக்கும் அமேரிக்கா வளர்முக நாடுகளைத் தனது பங்குக்குத் திட்டித் தீர்க்கிறது.

உலக வங்கியோ நர்மதாவை மட்டுமல்ல தென் சூடான் எண்ணைக் குழாய்கள் வட சூடான் போர்டோ துறைமுக நகரத்தை 1600 கிலோ மீட்டர் தாண்டித் தொடுவதற்காக(1999 இல்) பல பத்து இலட்சம் மக்களை வருத்தித் திட்டம் போட்டுக் கொன்றொழிக்கிறது.அவ்கானிஸ்தானிலிருந்து துருக்கிய+டாக ஜேர்மனியை வந்தடைய இருக்கும் எண்ணை-எரிவாயுக் குழாயோ சுமார் 6000 கிலோ மீட்டரைக் கடக்கப் போகிறது.இந்தப் பிரதேச மக்கள் தலைகள் பையப்பைய உருண்டு விடப்போகிறது.இதற்கெல்லாம் சூத்திரதாரி உலக வங்கி.

சூடானில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக "எண்ணை ஆதிக்கத்துக்கான" போர் சூடானில் நடைபெறுகிறது.சூடானின் எண்ணை வளத்தைக் கொள்ளையிட முனையும் வல்லரசுகளும் அவைகளின் இராட்சத எண்ணைக் கம்பனிகளும் இதுவரை இரண்டு மில்லியன்கள் சூடானிய அப்பாவி மக்களைக் கொன்று குவித்திருக்கிறது.32.6 மில்லியன்கள் சனத் தொகையில் 2 மில்லியன்கள் மக்களை அந்த நாடு பறி கொடுத்துள்ளது!மொத்தச் சனத் தொகையில் 6.4வீதம் செத்து மடிந்துள்ளது.4.5 மில்லியன்கள் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லப்படும் அவலம். இதை நோக்கி விட்டு உலகின் வேறு பக்கம் தலையைத் திருப்பினால் அவ்கானிஸ்தான்,ஈராக்,நைஜீரியா,கொங்கோ,அல்ஜீரியா...இது உலகம் ப+ராகத் தொடர்கதையாக...வோட்டோ,காட் ஒப்பந்தங்கள் என்ன சொல்கின்றன? மக்கள் உரிமையின்-மனிதஉரிமையின் கதை கந்திரயாகிப் போனதை இங்கே நடை பெறும் உரையாடல் நம்மை அதிர வைக்கும்.


அதையும் அவசியம் அறிந்து கொள்வோம்:


"வணக்கத்துக்குரியவர்களே!

இன்று நடைபெறும் இந்தவுரையாடல் நமது நோக்கத்தைப் பற்றியும்,அதையடையும் வழிமுறைகளையும் பேசுவதாகும்.-மிகத் தெளிவாக ஆதர்சத்தோடு பேசிக் கொண்டான், முதலாளிகளுக்கான ஆலோசனை மையத்தின் பிரதிநிதி.(அவனது நீண்டவுரையைக் கேட்பதற்காக கூடியவர்கள் அனைவரும் "வர்த்தகக் கூட்டு"மையத்தின் முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான "சந்திப்பை" கோங் கோங்குக்முன் பல நாடுகளிலும் செய்தவர்கள்.இத்தாலியில் இந்தக் கூட்டின் சந்திப்பை எதிர்த்த பொதுமக்கள் சிலர் பொலிசின் துப்பாக்கிக்குப் பலியானார்கள் 2004 இல்,இது குறிப்பிடத்தக்கது.)

அந்தப் பிரதிநிதி இப்படி மேலும் தொடர்கிறான்:

வேலை!உற்பத்தத்திறன் மிகுதியாகக் கூட்டப்படவேண்டும்.ஒவ்வொரு தொழிலாளியும் தனது வேலைத்திறனைக் மிகுதியாக் கூட்டியாகவேண்டும்.அவர்களை நீண்ட உழைப்புக்குத் தயாராக்கி உழைப்பைக் கறாராகப் பெறவேண்டும்.அத்தோடு இப்படி உடலுழைப்பைப் பெறும் நாங்கள் இதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர் செய்யும் போராட்டங்களை ஒடுக்கியாகவேண்டும்.

இதன் அடிப்படைக் கருத்து இதுதாம்:

அதாவது "நுகத்தில் மாட்டிய மனிதன், தான் நுகத்தில் மாட்டியிருப்பதை உணரக் கூடாது".இதன் அர்த்தம் அவனால் இழுக்கப்படும் வண்டி அவனாலேயே ஓடுவதை அவன் ஒருபோதும் உணரப்படாது! எல்லா வகைக் காரணகாரியங்களும் வாழ்க்கைச் செலவுக்கும் நுகர்வுக்காகவுமே என வகுக்க வேண்டும்.இது உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.இத்தோடு முக்கியமானது,சாதரண மக்களை மிகவும் பலமாகப் பிளவுப்படுத்தியாக வேண்டும்.பற்பல நிலைகளில் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி விடுவது மிக அவசியமாகும்!மக்களில் பலரை நாங்கள் வேலை செய்யும் மிருகங்களாகவே உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.இப்போது அப்படித்தாம் அவர்களை நாம்,நமது துறைசார் மொழியில் புரிகிறோம்.

இத்தகைய மிருகங்களுக்கு நாம் மிகக் குறைந்த கூலியை அவர்களது நாளாந்த உணவுக்கும்,உறையுளுக்கும் கொடுப்போம்.இவர்கள் எமது தொழிற்சாலைகளில்,பண்ணைகளில் ,விற்பனை அங்காடிகளில்,உயர்தர நட்சத்திரக் கோட்டல்களில்,நகரப் பராமரிப்பு-சுத்திகரிப்பில் தமது உடலுழைப்பைக் கொடுத்து இந்தவ+தியத்தைப் பெறுவதாக "எப்பவும்"இருக்கவேண்டும்.இந்தத் தொழிலாள மிருகங்கள் ஒரு போதும் தமது ஊதியத்தில் ஒரு பகுதியைச் சேமிக்கும்படியாகக் கூலி இருக்கப்படாது.இது மிக மிக அவசியம்.உண்பதற்கோ,உடுப்பதற்கோ பற்றாத கூலியைக் கொடுப்பதுதாம் இந்த முறைமையைக் காக்கும்.சேமிப்பானது சுதந்திரத்தைக் கோரவைக்கும்,அவசியம் இதை நீங்கள் இன்று புரிய வேண்டும்.இன்றைய ஐரோப்பாவுக்கு இதுதாம் சீரழிவைத் தந்தது.தொழிற் சங்கம்,வேலை நிறுத்தம்...என்னயிது?முதலாளிகளாகிய - பங்குப் பணமிட்டவர்களைக் காப்பது ஒவ்வொரு சுப்பர் மனேச்சர்களினும் கடமை.கூடியிருக்கும் அத்தனை மனேச்சர்களும் இதைக் காதில் வேண்டவும்.

சேமிப்பு இல்லையேல்... தொழிலாள மிருகம் சிந்திக்காது!தொடர்ந்து நுகத்தில் மாட்டப்பட்டிருக்கும்.நுகத்தை விட்டகலா இந்த மிருகம் நம்மைக் குதற முடியாத இயலாமையை நாம் தொடர்ந்து அதற்கு ஏற்படுத்தியாக வேண்டும்.அந்த மிருகத்தோடு எப்பவும் கதைக்கவேண்டும்:"மனிதர்கள் உயிர் வாழ்வதாக இருந்தால் தொடர்ந்து கடுமையாக உழைத்து விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும்"என்று!இதுவே நாகரிமானது எனவும் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கலை இலக்கியமும் கடுமையாக உழைக்கவேண்டும்.குறிப்பாக ஆத்மீகத் துறையில் இது வெகுவாகப் பரப்பட்டுவருகிறது.இது மகிழ்ச்சிக்குரிய விடையமே!எனினும் தேவாலயங்களுக்குச் செல்லும் வேலைக்கார மிருகங்கள் குறைந்து வருகிறது, இது ஆபத்தானது.திட்டமிட்டு பலவர்ணக் கலவையில் தேவலாயங்கள் தம் பிரச்சாரத்தை முன்னெடுப்பது அவசியம்.

இவர்களது வருவாய்,இவர்கள்தம் சீவியத்துக்குப் பற்றாக் குறையாக இருக்கும்போது இவர்களைக் கடன் பெறத் தூண்ட வேண்டும்.வங்கிகளில் தமது கடன்களைப் பெறும் வசதியை நாம் இலகுப் படுத்திவிடுவது உசிதம்.சிட்டி பாங் இதில் நமக்கு நல்ல உதாரணமிக்க பங்காளியாகும்.இப்படிப் பணம் கடனாகப் பெற்றுவிடும் இந்தத் தொழிலாள மிருகங்கள்,தமது கடனுக்காகவும் கடுமையாக உழைப்பதை நோக்கமாகக்கொண்டு நமது நுகத்தில் தொடர்ந்து ப+ட்டப்பட்டிருக்கும்.

இத்தோடு நாம் தொடர்ந்து உலகம் ப+ராகவும் வேலையற்றவர்களை-வேலையில்லாத் திண்டாட்டத்தைச் செயற்கையாக உருவாக்கி அதைக் குறைத்துவிடாத முறைமைகளில் வருடாவருடம் வேலையற்றவர்களின் தொகையைக் கண்காணித்து வரவேண்டும்.இப்படிக் கண்காணித்து வரும்போது ஒரு வேலையில்லாப்பட்டாளம் தொடர்ந்திருக்கும்.இதன் இருப்பில் தொழில் புரியும் மிருகங்களுக்கு நாளாந்தம் அச்சம் பெருகும், தாமும் வேலையை இழந்து நடுத் தெருவுக்கு வந்து விடுவோமோவென.இத்தகைய உளவியல் சிக்கல் அவசியம்.என்னென்றால் இதை உலகம் ப+ராகவுமுள்ள தொழிலாள மிருகங்களுக்கு அவரவர் வித்தியாசங்களுக்கேற்றபடி இதைப் பயன்படுத்தி, அவர்களுக்குள் விவேகமாக நாம் விளையாட வேண்டும். இவர்கள் இனிமேல் தொழிற் சங்கங்கள் உருவாக்குவதை நாம் உடைத்தெறிவதற்குத் தயங்காது உழைக்வேண்டும்.அதற்காக இந்த"வேலையற்ற-வேலையிலுள்ள"பிரிவும்,பிளவும் மிக அவசியம்.

வேலையற்றவர்களுக்கும் வேலையில் இருப்பவர்களுக்கும் நிரந்தரமான பொறாமையையும்,எரிச்சலையும்ஆத்திரத்தையும் ஏற்படுத்தி வளர்தெடுப்பதை யாரும் நீங்கள் மறக்கப்படாது.இவர்கள் தங்களுக்குள் அடிபடும்போது அதற்கான காரணத்தில் நாம் பின்னிருந்து வெற்றி பெறுவதை அவர்கள் அறியமாட்டார்கள்.

இத்தகைய நிலைமையில் நாம் இன்னொரு சிறிய குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கான வேலைகளை இப்படி ஒப்படைக்கணும்: அதாவது இந்த மாபெரும் கூலிப்பட்டாளத்தை எந்த ஓட்டைகளுமற்ற முறைமையில் தொடர்ந்து வேவு பார்க்கணும்!, எமக்குத் தொந்தரவு கொடுத்திடுதலும் கூடவே எம்மை அச்சப்படுத்தி வருவதும், எமது செல்வத்தை வேலைக்கார மிருகங்களில் சிலரைப் பயன்படுத்தி தாக்கி அழிப்பதைச் செய்விக்கணும்,11 செப்டம்பர் தாக்குதல் போன்று... கூடவே எமக்கெதிராக நெடுகக் குரல் கொடுத்து வருவதைச் செய்தாக வேண்டும்.(கூட்டத்தில் எதுவித இரைச்சலுமின்றி பேரமைதி நிலவுகிறது.எல்லோர் முகங்களிலும் ஆச்சரியம் மேலிட்டுக்கிடக்கிறது!)இதைவிட மிகப் பெரும் வேலைக்கார மிருகப்பட்டாளத்தை-அதன் மாபெரும் பலத்தைத் தொடர்ந்து பிளவுப்படுத்திப் பிரிக்கவேண்டும்.இங்ஙனம் நாம் செய்விக்கும்போது வேலைக்கார மிருகங்களின் ஒற்றுமைப்படுதலும்,அதனூடாகப் புரட்சிசெய்யத் தோழமைப்படுதலும் வெகுவாகத் தடுக்கப்படுகிறது(இப்போது சபையில் பலத்த கரகோசம் வானை அதிர வைக்கிறது).

அமைதி,அமைதி! மினறால் வோட்டரைப் பருகியவண்ணம் கைகளைத் தூக்கிச் சபையை வேண்டிக் கொண்டான்.சபை நிசப்தமாகியது!

அவன் மேலும் தொடர்ந்தான்:

அன்பான செல்வந்தர்களே!,இந்தவுலகத்தின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்றவர்களே!!,உலகத்தின் பெரும் பகுதி மனதிர்களுக்கு உணவளிக்கும் கொடை நிறைந்தவர்களே!!! நாங்கள் வேலைக்கார மிருகங்களில் சிலரைக் கருங்காலிகளாக்குவதைக் கண்டோம்.இப்போது அதே பட்டாளத்தில் வேலையற்றோரையும், ஒப்பந்த நிறுவனங்கள் வழங்கும் தினக்கூலிகளையும் தொடர்ந்துருவாக்கி அவர்களைத் தொழிலாள மிருகங்களுக்கு எதிராக நிறுத்தவேண்டும். அமேரிக்காவின் அதிபெரும் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான போர்ட்டை உதாரணத்துக்கு எடுங்கள்!அங்கே 70 வீதமான வேலைக்கார மிருகங்கள் ஒப்பந்தத் தினக்கூலிகள்.வாவென்றால் வருவார்கள்,போவென்றால் போவார்கள்.இந்த மிருகங்களுக்கு அங்குமிங்குமாகவே நமது முகவர்கள் வேலை வழங்குவார்கள்.அதனால் ஒற்றுமைப்படுதுல் தவிர்க்கப்படுகிறது.கூடவே இவர்களால் மற்றைய நிரந்தரத் தொழிலாள மிருகம் தொடர்ந்து அச்சமுறும்,போராடத் துணியாது-சம்பள உயர்வுக்கு வாயே திறக்காது!வேலை இழப்பதுக்கரிய மாபெரும்
விஷயமாக எண்ணிக்கொண்டு அதை விட்டகலாது தொடர்ந்து பணிவோடு உற்பத்தி செய்யும்.நாங்கள் தொடர்ந்து வித்தியாசங்களையும் அது சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருவோம்!அதாவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்ற இறக்கங்களைச் செய்யும்போது வேலைக்கார மிருகத்திடம் தொடர்ந்து பொறாமையும்,காழ்ப்புணர்வும் நீடிக்கும்.அது ஒருபோதும் தனக்குள் ஒன்றுபடாது.இதுதாம் நாம் கார்ல் மார்க்ஸ் என்ற எங்கள் துரோகிக்கு நாம் கொடுக்கும் பாரிய அடி-அவன் கூறினானே"உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களே உங்களுக்குள் ஒன்றுபடுங்கள்"என்று!அதை நாம் உடைத்துவிட்டோம்.(சபையில் மீண்டும் பரத்த கரகோசை,விசில் அடி,எல்லோரும் எழுந்து நின்று கரகோசை செய்துவிட்டு அமர்ந்தனர்.) இத்தகையவர்களில் ஒரு நிறுவன அதிகாரி ஆர்வ மேலீட்டால் இப்படியுரைத்தான்:


"ஓ, இது சிறப்பபாக இதுவரை நடக்கிறது!,இதையெப்படித் தொடர்ந்து காத்து வருவது?"கேள்வியோடு அசடுவழிய அமர்ந்துகொண்டான்.


நாங்கள் பலமானவொரு அரச அமைப்பை முன்னமே வைத்திருக்கிறோமல்லவா?இதை உலகச் சிறுசிறு அரசுகளோடு கூட்டாகி,அவர்களின் சகல அரச வடிவங்களையும் நாமே கட்டுப்படுத்த, அத்தகைய நாடுகளின் வறுமையைப் பயன்படுத்துவோம்.அதுக்காக நமது கட்டுப்பாட்டிலுள்ள உங்களது பணத்தால் இயங்கும் உலக நாணய நிதியத்தை,உலக வங்கியைப் பயன் படுத்தி விடுவோம்.அப்போது சகல அரசுகளும் நமது கட்டுபாட்டுக்குள் வருகிறது.இது தொடர்ந்து வர்த்தகக் கூட்டால், வோட்டோ,காட் ஒப்பந்தம் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது.எனவே தொடர்ந்து கடுமையாக வரி அறவிடப்படுதலும்,மானியக் குறைப்பையும் நாம் செய்து வருவோம்.இதனால் நமது அழுத்தமே தெரியாது மூச்சுவிடும் இந்த அமைப்பு.இதுதாம் முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை.

எமது அடுத்த குழு... இதுவும் வேலைக்கார மிருகம்தாம்!என்றபோதும் இதைக் கொஞ்சம் விரிவாக உங்களுக்கு விளக்கவேண்டும்.இன்றைய அதிகாரிகள்,மனேச்சர்கள்,முதலாளிகளுக்கு பணம் சம்பாதிக்குமளவுக்கு நமது அரச அமைப்புப்பற்றி விளங்குகிறதில்லை.அதனால் அரசோடு மோதுவது நடக்கிறது.வரிகொடுப்பதில்லை...அப்பிடிச் செல்கிறது உங்கட நடவடிக்கை.எனவே இதையும் கொஞ்சம் பார்ப்போம்.

எதுவுமற்ற பட்டாளத்துக்குள்ளிருந்து நமது அடுத்த சிறு குழுவானதை இப்படிப் பெற்றோம்:அது அரச பணியாளர்களாகவும்,நீதீவான்களாகவும்,பொலிஸ்,சிறையதிகாரிகள்,சிறைக் காவலாளிகள்,புலானாய்வுத் துறையாளார்கள்,இராணுவத்தினர்கள் என்று!இவர்கள் எமது அரசு ஜந்திரத்தை மிக நேர்த்தியாக நிர்வகித்து எமது"பொடிக் காட்டாக"-அடியாளாக எந்த நேரமும் இருக்கிறார்கள்.நிச்சியமாக இந்த வேலைக்கார மிருகங்களுக்கு நாம் கொஞ்சம் சிறப்பாகக் கூலியைக் கொடுக்கவேண்டும்.சாதரண வேலைக்கார மிருகத்தைவிட இந்த மிருகத்துக்கு நாம் பாதுகாப்பான வேலை உறிதிப்பாட்டை வழங்கவேண்டும்.எப்போதும் துரத்தப்படாது அவர்களுக்கு வேலை நிரந்தரமாக்கப்படுவதை செயலில் காட்டவேண்டும்.இவர்களுக்குச் சலுகைகள் கொடுத்து,இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திவிடவேண்டும்.இதனால் இந்த வாழ்க்கைத் தராதரம் வேலை மிருகங்களுக்குள் இந்த இரண்டு பிரிவையும் மிக மிக அந்நியப்படுத்தி அவர்களுக்குள் பதட்டத்தை,பிளவை வலுப்படுத்தித் தம்மைத்தாமே ஒடுக்குவது சுலபமாகும்.இந்தப் பாதுகாப்புப்பிரிவை உளவாளிகளைக்கொண்டு வலுவாகக் கண்காணித்து ஆபத்து வராதவரையும் நம்பவேண்டும்.இவ்வளவு இருந்தால் போதுமா நமக்குப் பாதுகாப்பு?

இல்லை!,அப்போது? இதையுங் கேளுங்கள்.நம் முன்னோரின் அறிவை இன்னும் மேம்படுத்திவைப்போம்.நாங்கள் இன்னுமின்னும் ஒழுங்குகளையும் அதைச் செயற்படுத்தும் பல்லாயிரக்கணக்கான சட்டங்களையும் ஏற்படுத்துவோம்.இதை எவரும் படித்துப் புரியாதபடியும்,அதையொட்டியொழுக முடியாதபடியும் இவைற்றை எழுதிவைப்போம்.இதன்படி எவரையும் எந்த நேரத்திலும் கிரிமனல்,பயங்கரவாதியென கைது செய்யமுடியும்.அல்லது கொல்ல முடியும்.இது வேலைக்கார மிருகங்களிடம் பயத்தையும்,பணிவையும் ஏற்படுத்தி நவீன அடிமைகளாக நாம்கூறும் ஜனநாயகத்தில் வாழ்ந்து- இல்லையில்லை எமது நுகத்தில் மாட்டுப்பட்டு எமக்காகச் சாகும் இந்த வேலைக்கார மிருகங்கள்!இத்தோடு பிரத்தியேகமாக மிக நேர்த்தியான நமது விஞ்ஞானிகளின் துணையோடு நுட்பம் நிறைந்த தொழில் நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் வேவு பார்க்கும் திட்டத்தை ஒழுங்காகச் செய்வோம்.இங்கே செய்மதிகளையும் அதனால் இயக்கப்படும் கமராக்களையும்,கட்டளைகளையுமே நான் முன் மொழிகிறேன்.


"இந்த வேலைக்கார மிருகங்களுக்கு முன்புபோல் கொத்தடிமை மாதிரி வாழ்க்கையில்லையே?அதுகளுக்குக் குடும்பம் இருக்கே,அங்கு இவைகள் திரும்பும்போது சுதந்திரத்தை அநுபவித்துத் தம்மைப் பலப்படுத்தினால்?..." கேட்டுக் கொண்டான் ஒரு பயாந்தாங்கொள்ளி முதலாளி.


உரையாற்றியவன் மௌ;ளப் புன்னகைத்தான்.தலையை அங்குமிங்குமாக ஆட்டிவிட்டுத் தோள்பட்டையை மேலே அசைத்து,இதழைக் கடித்துவிட்டுத் தனது செக்கிரிட்டிப் பெண்ணை வரவழைத்தான்.அவளைப் பக்கத்தில் வரவழைத்துத் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்: இதுதாம் எமது மையப் புள்ளி.(அந்தப் பெண்ணைச் சுட்டிக்கொண்டான்.அவள் தனது மெல்லிய இடையை அவனோடு உரசிக் கொண்டாள்.அந்த நளினமான சூழல் எல்லோரதும் வயிற்றுக்குள் ரொக்கட்டைச் செலுத்தியது காதலுணர்வு).அவன் தொடர்ந்தான்.நாங்கள் ஆண்,பெண் உறவை ஒரு பம்பரத்தை ஆட்டுவிக்கும் விசை நூலின் முறமைக்குள் வைத்திருக்கிறோம்.இதனால் ஒருவரையொருவர் வருத்துவதை நுட்பமாக்கி வைத்திருப்பதை நீங்கள் அறியவில்லையா? இது என்னவென்றால் ஆண்கள் பெண்களை ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வருவதாகக் கருத்தியல் தளத்தில் ஒருவகையான ப+ர்வீக மனதை உருவாக்கி வைத்துள்ளோம்.இதை எமது குடும்பமெனும் அமைப்பால் செயற்படுத்தி வருகிறோம்.ஆண்களால் மட்டுமே அவர்களது கடுமையான உடற்பலத்தால் முன்னேற முடியுமென நாம் கருத்துக்களை விதைப்போம்.அப்போது நிரந்தரமான ஆண்,பெண் பொறாமை நிலைக்கும்.இது புதிய நுகத்தை இந்த கூட்டத்துக்கு கட்டுவதாகும்.இந்தப் பொறி ப+ர்வீகமான பெண்ணின் பாதுகாப்புப் பிராணியான ஆணை அவர்களிடமிருந்து பிரித்து ஒடுக்கு முறையாளர்களாகவும்,போட்டியாளர்களாகவும் உருவாக்கிவிடும்.அப்போது பெண்கள் தம்மை விடுதலையடைய வைப்பதற்காக ஆண்களையே எதிரிகளாக்கி நம்மைக் காத்துவிடுவார்கள்.சண்டை வேறுதிசையில் செல்லும்போது நம்மீதான நேரடி எதிர்ப்பு இல்லாது கவனம் வேறு திசையில் செல்லும்.அப்போதும் நாம் செய்யவேண்டியது இதை வளர்தெடுப்பதற்காக பெண் சிந்தனையாளர்களைப்"பெண்ணியலாளர்களாக"உருவாக்கிப் புதுப்புது ஒடுக்கு முறைகளையும்,அதனால் பெண்விடுதலையடைவதே முதற் பிரச்சினையாகவும் அவர்களுடாகப் பறைசாற்றுவோம்.கூடவே பாலியல் திருப்த்தி பற்றியும் ஓப்பிணாகக் கதைக்க வைப்போம்.

பெண்களே பெண்களைப் பற்றிப் பேச வேண்டுமெனச் சொல்லும் கருத்தியலை அவர்களது குரலினூடாகவே பேச வைப்போம்.அப்போது ஆண் வேலைக்கார மிருகம் தாளாத சிக்கலில் பல பக்கத்துக்கு முகங் கொடுக்கணும்.அதனால் நம்மை எதிர்க்கத் திரணியேற்படாது.தொடர்ந்து வேலையில் இருப்பதே மேலெனச் சிந்தித்து வீட்டை மறந்து நுகத்தில் கண்டுண்டு கிடக்கும்.பெண்ணும் தனது சுமைகளை ஆண்தாம் வழங்குவதாக நம்மை மறந்து தமது கணவனின் பக்கம் சதா போர்தொடுப்பாள்.இது எப்படியிருக்கு?இதோடு நமது திட்டம் முடிவதில்லை.புதிய விவாகரத்துச் சட்டங்களை அவளுக்குச் சொல்லி ஆணிடமிருந்து நிரந்திரமாகப் பெண்ணை பிரித்திடவேண்டும்.ஒரு பெண்ணை மனம் நோகாது பாதுகாத்து வர பணம் அதிகம் வேண்டுமென ஆண் உணரும்படி வைப்போம்.அப்போது பெண்ணுக்காக மீளவும் கடுமையாக உழைப்பான்.அதோடு சமூகத்தில் பெண் பற்றாக் குறையாக இருத்திவைப்போம்.பெண்மீது அளவுகடந்த தாகம் ஆணுக்கு ஏற்படும்போது அவன் தலையில் பெண்ணே சஞ்சரிப்பாள்.இதனால் அவன் சிந்தனையாற்றல்,எதிர்ப்பாற்றல் குன்றிவிடும்.பெண்ணை அடைவதற்காகவே முயற்சிகள் நடக்கும்.அதனால் நாமே நலமடைவோம்.இன்றைய பின் நவீனத்துவ மூலவர்களான தெரிதாவையும்,ப+ப்காவையும் மட்டுமல்ல அருந்தி ரோயையும்,அற்றாக்கையும்-உம்பேர்ட்டே எக்காவையும் உளுத்துப் போன இனப் பிரச்சினைகளையும், அதைவலுவாக்கிப் போராடும் மூன்றாமுலக அரசியலையும்,அங்குள்ள சேவை நிறுவனமான நமது "வேர்ல்ட் விசன்"நிறுவனத்தைப் போல ஆயிரம் தன்னார்வ அமைப்புகளையும் நாமே வழி நடத்துகிறோம்.

"ஓ சபாஷ்!நல்ல திட்டம்.நாங்கள் புரிந்து கொண்டோம்!"கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கிடக்க,ஒரு கஞ்சன் தன்னை வெளிப்படுத்தினான்:

"ஓம் நல்லது!இத்தகைய அரச வடிவம் நல்லதுதாம்.இதுவரை அதுக்குப் போடும் தீனீ அதிகமாகுதே?இதையின்னும் எப்படிச் சாத்தியமாக்க முடியும்?"-அவன் கேள்வியை நிறுத்து முன்பே உரையாற்றிவனுக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.அவன் இப்படிக் கூறினான்:

"நீங்கள் எங்கே அரசுக்கப் பணம் கொடுக்கிறீர்கள்?சும்மா கதைவிடுவதை இத்தோடு நிறுத்துங்கோ உங்கள் மாய்மாலங்களை.இது அதிகமாகச் செலவாகும் காரியமாகிப் போனது உண்மை.ஆனால் செலவை நீங்கள் கொடுக்கவில்லை, அரச வடிவத்துக்கு!"

"அப்போ யாருதாம் இதுக்குப் பணம் போடுகிறார்கள்?"அதிசயமாக இன்னொரு முதலாளி கேட்டான்.அவனது பார்வையில் வெகுளித்தனம் தெரிந்தது.

சகலாகலா வல்லோனான அந்த உரையாளன் மெல்லக் குரலெடுத்து அமைதியாகச் சொன்னான்:"நாங்கள் செய்திருக்கும் சட்டதிட்டங்கள் வேலைக்கார மிருகங்களே தம்மை வேவு பார்க்கும்,ஓடுக்கும் தமது ஒரு பிரிவுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பணம் செலுத்திவிடுவதற்கு வழி செய்கிறது.அந்த மிருகங்கள்தாம் இதுவரையும் பணம் கொடுக்கிறார்கள்-இனியும் அந்தமிருகங்களே வழங்குங்கள்.அந்த வகையில்தாம் நமது வரிமதிப்புத்திட்டங்களும்,நுகர்வுச் சந்தையும் கட்டப்பட்டுள்ளது.இதைத்தாம் சந்தைப் பொருளாதாரமென்று நுட்ப வார்த்தையில்-கலைச் சொல்லில் என்னைப்போன்ற வல்லுனர்கள் சொல்கிறோம்! இப்படிப் பல சுமைகளை இந்த மிருகங்களுக்கு நாம் ஏற்றிவிடுவதால் இந்த மிருகங்கள் ஒருபோது சிந்திக்காது.கூடவே நமது பொழுது போக்குத்துறை அவர்களுக்குச் சொல்வதும்,வழிநடத்துவதும் நமது பாதுகாப்புக்கேற்ற முறைமைகளே.இதையெல்லவற்றையும்விட நமது மதங்களும் அவைகளின் அற்புதமான மூளைச் சலவையும்,அதுபோல நாம் உருவாக்கிய கல்வியும் நாம்மால் கட்டுப்படுத்தப்படுகிறது.எனவே எமது பாதுகாப்பு அரண்பாரியது இதை மீறி இந்த மிருகங்கள் நம்மை நெருங்க முடியாது.

"அற்புதம்" எல்லோரும் வழிமொழிந்தார்கள்.

நன்றி அன்புக்குரிய நிர்வாகிகளே,செல்வந்தர்களே!நான் கூறியபடி தொடர்ந்து இந்த முறைமைகளை வலப்படுத்தி உலகம் ப+ராகவும் நமது வலுவைப் பலப்படுத்த நீங்கள் ஒத்துழைக்க ஒப்புதல் தந்ததாககவே உங்கள் குரலைப் பதிவு செய்கிறேன்.இதுவே எமது அடுத்த வர்த்தகக்கூட்டின் இலக்கு.முடித்துக் கொண்டான் உரையை அந்த நிபுணன்.

கோங் கோங்கின் நகர மைதானத்தில் அற்றாக்கின் துணையோடு "உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்கள்"அணி திரளும் இன்றைய பொழுதில் அவர்களை அந்த அமைப்புத் தனது எஜமானர்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தனது உளவாளிகளின் மூளையை உசார் படுத்தியது அன்று.

இன்றோ நமது விடுதலையை விலைபேசி விற்ற இலங்கை அரசியல்வாதிகளும் இயக்கங்களும்,தமது இருப்புக்காகத் தொடர்ந்து நமது தேசத்துள் யுத்த்தைத் திணித்துத் தமது ஆட்சியை-அதிகாரத்தை நிலைப்படுத்தி வருகிறார்கள்.இதுள் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முன்தள்ளப்பட்டு அவையே இவர்களின் இருப்புக்கானவொரு முகமூடியாகவும் மக்களை மிக இலகுவாக அண்மிக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது.இது, தமிழ்நாட்டில் நமது விடுதலையின் திறவுகோல் இருப்பதாகச் சொல்லும்.தமிழ்நாட்டு ஓட்டுக்கட்சியிடம் தனது இருப்பை வலியுறுத்தும்,இந்திய மத்திய அரசோடு பேரமிடும்.இதற்கெல்லாம் பெயர் விடுதலை-சுயநிர்ணயம்!

ஆனால்,மக்களின் உண்மையான விடுதலை ஓட்டுக்கட்சிகளின் தயவிலல்லத் தங்கியுள்ளது.மாறாகப் இந்தியாவின்-உலகின் பரந்துபட்ட ஒடுக்கப்படும்,உழைப்பாள மக்களின் தயவிலும்,புரட்சிகரக் குழுக்களின் தோழமையிலுமே தங்கியிருக்கிறது.தமிழ்நாட்டின் அல்லது இந்தியாவின் புரட்சியாளர்களோடு ஈழவிடுதலை அமைப்புகளின் எந்தப் பிரிவுக்கு நட்புண்டு-தோழமையுணர்வுண்டு?புலிகளின் ஊடகங்களே நேபாளப் போராளிகளை மாவோயிசப் பயங்கர வாதிகள் என்கிறார்கள்.இங்கே, புலிகள் விடுதலை அமைப்பாம்.எல்லாம் மக்களின் எழிச்சியோடு முடிவுக்கு வரும்.அத்தகைய காலத்தை விரைவாக்குவது நமது கடமை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி.

Samstag, November 24, 2007

ஓட்டுக்கட்சி அரசியலில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியே.

ஓட்டுக்கட்சி அரசியலில்
கருணாநிதிக்கு நிகர்
கருணாநிதியே!


பொதுவாகத் திரு.இளங்கோவன் சொல்லும் அரசியல் வெறும் உணர்ச்சிவயப்பட்ட பார்வையுடையது.கருணாநிதியினதோ அன்றி வேறெந்த ஓட்டுக்கட்சிகளினதோ தயவை-ஆதரவை,ஒப்பாரியை நம்பித் தமிழ்பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுக்கப்பட முடியாது.புலிகள் செய்யும் போராட்டத்தில் அங்ஙனம் அவர்கள் எதிர்பார்ப்பதும்,அறிக்கை விடுவதும்,எதிர்ப்பதும்,புலிகளின் ஈழமுரசுப் பத்திரிகையில் துரோகி என்று வர்ணிப்பதும் நடக்கும் நாடகங்களே.ஆனால்,ஈழத்து மக்களின்மீதான இலங்கைப் பாசிச இனவாத அரசின் ஒடுக்கு முறையிலிருந்து விடுபடவும்,தமது சுயநிர்ணயத்தை மீட்டெடுக்கவும் நடைபெறப்போகும் போராட்டமானது சாரம்சத்தில் ஓட்டுக்கட்சிகள்-நாடாளுமன்றங்களுக்கெதிரானது மட்டுமல்ல.ஏன் உலக-இந்திய ஏகாதிபத்திய-பிராந்திய ஆதிக்கச் சக்திகளுக்கெதிரானதாகும்.

இங்கே தமிழின் பெயரால் ஆட்சி நடாத்தும் கருணாநிதி மக்களின் நலத்துக்காகவா-தமிழ்நாட்டின் விமோசனத்துக்காகவா ஆட்சி நடாத்துகிறார்?கருணாநிதியிடம் இருக்கும் இலட்சம் கோடி பணமானது எப்படி வந்து சேர்ந்தது?அவருடைய சொந்த உழைப்பினால் உருவாகிய செல்வமா?இத்தகைய துரோகத்தனமான-நம்பிக்கைத் துரோகியின் ஊழல் அரசியலில் கொஞ்சம் குறைவில்லாமற் செயற்படுத்தியவர் ஏம்.ஜீ.ஆர்-ஜெயலலிதாக்கூட்டு.இவர்களையும்,இவர்களது நம்பிக்கைத் துரோகத்தையும் மக்களின் நலனிலிருந்து பார்க்காது கட்சி நலன்-அரசியல் நலனில் இருந்து பார்க்கும் பார்வையானது என்ன நேர்மையானதா?


"கருணாநிதியைப் போல் எல்லோரும்தாம் பணம் சேர்த்திருக்கிறார்கள்.இது இந்தியாவில் சகஜம்" எனும் கருத்து எப்படி உருவாகிறது?மக்களின் வரிப்பணத்தையும்,அவர்களின் வாழ்வாதாரங்களை அந்நிய சக்திகளின் திருட்டுக்குத் திறந்துவிட்டு,அந்நியச் சக்திகள் போடும் எலும்பைப் பெறும் இத்தகைய அரசியல்வாதிகள்தாம் அப்பாவி மக்களையும்,அவர்கள் செய்யும் நியாயமான போராட்டங்களையும் பொலிசை வைத்து வேட்டையாடுகின்றார்கள்.


இவர்களையெல்லாம் சாதரணமாக விட்டுவிட முடியாது.மக்களின் தியாகத்தை அரசியலாக்கி அப்பாவி மக்களை ஏமாற்றிப் பதவிக்கு வந்த கையோடு அந்த மக்களையே நரவேட்டையாடும் ஓட்டுக் கட்சி அரசியலில் மக்களுக்கான நியாயம்,நீதி உண்டா திரு.இளங்கோவரே?
தி.மு.க.வின் கபடத் தனத்தையும்,கருணாநிதி அவர்களின் போலித் தனங்களையும் கண்ணதாசன் அப்பாவித்தனமாகத் தானும் அநுபவித்து,தம்பட்டம் அடித்துச் சொன்ன கதைகள் ஏராளம்.அதிலொன்று வனவாசம்.இங்கே, மனித நடத்தையின் போலித் தனங்களை அவர் மிக இலகுவாகச் சொல்கிறார்.அதில் கையாண்ட அரசியல் பார்வை அப்பாவித்தனமானதேயொழியச் சம்பவங்கள் உண்மையாக இருக்கிறது.
கண்ணதாசன் ஒரு அரசியல் ஆய்வாளானாக இருந்திருந்தால் நிச்சியம் நல்லவொரு ஆய்வு கிடைத்திருக்கும்.எனினும்,நாம் மேல் நோக்கிப் போவாம்.
மனித சமுதாயத்தில் அரசியலின் பங்கு என்ன?

போபர்ஸ் பீரங்கி ஊழல்,
வீராணம் குழாய் ஊழல்,
டெஹல்கா இராணுவப் பேர ஊழல் என்று,

உலகறிந்த ஊழல்களை ஓட்டுக்கட்சித் தலைவர்களும்,அதிகார வர்க்கமுமே செய்து மக்கள் சொத்தைத் திருடுகிறது.இத்தகைய ஆட்சியில் அமர்ந்துள்ள ஒரு கட்சியின் தலைவர் கருணாநிதி.இவர் ஆயுட்காலத் தலைவராக இருந்தபடி தனது வாரீசைத் தலைவராக்கிக் கோடிக்கணக்கான கட்சியின் சொத்தையும் தனது குடும்பச் சொத்தாக மாற்ற முனையும் சந்தர்ப்பத்தில்,இவர்களால் ஈழத் தமிழருக்காக என்ன செய்ய முடியும்?இன்றைய நிலவரப்படி கருணாநிதி-ஜெயலலிதா குடும்பங்களின் சொத்து மதிப்பு இலட்சம் கோடிகளைத் தாண்டும்.இவர்களே இன்று மிகப் பெரும் ஆளும் வர்க்கமாக மாறித் தமிழ் நாட்டை ஒட்ட மொட்டையடிக்கும்போது இத்தகைய ஓட்டுக்கட்சியின்-தலைவரின் கூக்குரல்கள் ஒருபோதும் இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு நியாயமாகக் குரல் கொடுக்காது.இவர்களே மாறிமாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளோடு சமரசஞ் செய்து, தமது சொத்தைக் காத்து,நிலைப்படுத்தி வருவதற்காகவே பதிவிகளுக்கு வர முனைகிறார்கள்.இந்த நிலையில் இவர்களை எவர் நம்புவார்?

இத்தகைய நாடாளுமன்ற ஆட்சியில் அரசு,அதன் பாராளுமன்ற ஜனநாயகமென்பது என்ன? இந்த அமைப்பில் தேர்தலின் சாரம் என்ன?


இந்த இளங்கோவன்கள் எப்பவும் ஒன்றை மறைப்பதில் வல்லவர்களாகவே இருக்கிறார்கள்.அதாவது அரசியலென்பது மக்களைக் காக்கும் வடிவமல்ல.அது மக்களையொடுக்கும் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியென்பதை மறைப்பதில் முன் நிற்பவர்கள்தான் இவர்கள்.


எந்த அரசியல் வாதியும் மக்களுக்குச் சேவைசெய்ய வருபவர்கள் இல்லை.அவர்கள் தமது அடிவருடிச் சேவையை தமது எஜமானர்களுக்குச் செய்து கூலி பெறும் கைக்கூலிகள்.மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது வருவாய்யைத் தக்க வைக்கும் பிழைப்புவாதக் கூலிகள்.அரசு என்பது மிகவும் ஒடுக்குமுறை வடிவமானது.அது ஆளும் வர்கத்தின் தேவைகளை ஒழுங்குறச் செய்யும் ஒரு எடுபிடி!

அரசின் சாரம்சம் என்ன?

அரசினது சாரம்சத்தை வெளிப்படுத்துவது மிகமிக அவசியமானது.அதாவது அதன் நடவடிக்கைகள் மற்றும் ஸ்தாபனத்தின் மிகவும் முக்கியமான-பிரதானமானகூறுகளைச் சுட்டிக்காட்டுவதே அதன் சாரம்சமாகும்.முதலாளித்துவத்தின் கல்வியாளர்களுக்கு இது இயலாத காரியமாகும்.அவர்கள் இந்த அமைப்பைச் செம்மையுறக் கற்றது கிடையாது.இயற்கை மற்றும் பௌதிக விஞ்ஞானத்துக்குக் கொடுக்கும் முக்கியத்தில் சமூக விஞ்ஞானத்துக்குக் கொடுப்பது கிடையாது.இது முதலாளியத்தின் திட்டமிட்ட சதி.இதனால்தான் நாம் இந்தப் பாராளுமன்றச் சாக்கடையை நம்பி ஏமாறுகிறோம்.


இங்கே அரசின் செயற்பாட்டை விளங்க முற்படும்போதுஅதன் எடுபிடி அரசியல் பிழைப்புவாத நாய்களையும் புரிந்திட முடியும்.


இந்த மனித சமூகமானது வர்க்க சமுதாயமாகப் பிளவுண்டு கிடக்கிறது.எனவே, இந்த மனிதக்கூட்டு வர்க்கச் சமுதாயமாக இருக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை.இதை முதலில் புரியாதவர்கள் வைகோ...கருணாநிதி,நெடுமாறன் என்று நீலிக் கண்ணீர் விடுவது அவர்களது அறிவிலிப்போக்கால்தான்.


சுரண்டுபவர்களுக்கும்,சுரண்டப்படுபவர்களுக்கும் சமமாக எந்த அரசும் காரியமாற்றுவது கிடையாது.இதை மனிதில் இருத்தும்போதே அடுத்த கட்டத்தைப் புரிவீர்கள்.அரசு மக்கள் சமூகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை ஒடுக்கும் ஒரு மாபெரும் வடிவம்.இதைப் ப+ர்ச்சுவா அரசு என்பார்கள் சமூக விஞ்ஞானிகள்.அரசினது வர்க்கத் தன்மையைப் புரியாதவர்களே ஒரு அரசியல்வாதியை நம்பி ஏமாறும் இளிச்சவாயர்களாக இருக்கிறார்கள்.சாதரண மக்கள்கூட இப்படி நம்ப மறுக்கும் காலத்திலிருக்க, இந்த இளங்கோவருக்கு என்ன வந்தது?


எவ்விதமான அரசினது சாரம்சமும் அதன் பொருளாதார மற்றும் சமூக அடிப்படையினால் மட்டுமே நிர்மாணிக்கப்படுகிறது.இதன் வெளியில்தான் அதன் சாரம்சம் தீர்மானிக்கப்படுகிறதென்பதை மறைப்பதுதான் இன்றைய முதலாளியத்தின் சூழ்ச்சியாகும்.


ப+ர்ச்சுவா அரசானது உடமை வர்க்கத்தின் நலனைக் காக்கும் வடிவமாக இருக்கும்போது,அதை அங்ஙனம்மின்றி மொத்த மக்களுக்குமானதாகக் காட்டும் கைங்காரியத்தைச் செய்வதுதான் இந்த வலைப்பின்னலுடைய ப+ர்ச்சுவாக் கட்சிகளின் வேலை.அதிலொருவர்தான் இந்தக் கருணாநிதி.அவர் மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளின் ஒரு துரும்பு.அவருக்கும் தமிழ்பேசும் உழைக்கும் வர்கத்துக்கும் எந்தத் தொடர்பும்கிடையாது.அவர் தனது பிழைப்புக்கு எந்தப் ப+ர்ச்சுவாக் கட்சியோடும் கூட்டுச்சேருவார்.தடா,பொடா போன்ற சட்டங்களை-மக்களை ஒடுக்கும் ஜனநாயக விரோதச் சட்டங்களை நிறைவேற்றும் வாக்கெடுப்புக்குச் சாதகமாக வாக்களிப்பார்!ஏனெனில், இந்தப் பாராளுமன்ற ஓட்டுக்கட்சிகள் யாவும் ப+ர்ச்சுவா அரசை நம்பியே காலத்தை ஓட்டுபவை.அதை நியாயப்படுத்திப் பெரும்பான்மை மக்களை ஒடுக்கி முதலாளிகளிடம் சலுகை பெறும் இந்த அரசியல் பிழைப்புவாதிகளை மக்கள் தலைவனாக எந்தக் கல்வியாளனும் சொல்வதில்லை.


அரசின் சிக்கலான பன்முக நிகழ்வுப்போக்கைப் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய தெளிவான விஞ்ஞானப் புரிதல் அவசியமாகும்.இந்த அறிவைப் பெறாத பெரும்பான்மையான மக்கள,; கட்சி அரசியல்வாதிகளை நம்பி அவர்களால் தமக்கு நல்லது நடப்பதாக ஏமாந்துபோகிறார்கள்.


அரசு மக்களின்-சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது,சமூக முரண்பாட்டைத் திசைதிருப்பி சமூக வளர்ச்சிக்கட்டத்தை மட்டுப்படுத்துவதில் ப+ர்ச்சுவா வர்கத்துக்குத் துணைபோகிறது.அதன் தாக்கத்தால் பொருளாதார உறவுகளில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உற்பத்திச் சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்குமிடையிலான முரண்பாடு தீவிரமாக ஒடுக்கப்படுகிறது.இது வலு கட்டாயமாக உற்பத்தி உறவுகளை அந்த உற்பத்திச் சக்திகளோடு ஜந்திரத் தனமாக இணைத்து அடிமைகளாக மக்களைக் கட்டி வைத்திருக்கிறது.


அரசுப் பொறிமுறையென்பதே அரசுச் செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு நிறுவப்பட்ட அரசு உறுப்புகளான இந்த வடிகட்டிய பொறுக்கி அரச தலைவர்,நாடாளுமன்றம்,அரசாங்கம்,அமைச்சர்கள்,பொது ஒழுங்கை நிலைநாட்டுவதாகக் கூறப்படும் வன்முறை வடிவங்கள்(பொலிஸ்,இராணுவம்,(அ)நீதி மன்றங்கள்...)இப்படி அதன்கட்டுப்பாட்டிலுள்ள செய்தித்துறை... நீண்டுகொண்டே போகும்.


இந்த விண்ணாண அமைப்பில் எந்த உழைப்பாளிக்கும் எதுவும் கிடையாது.கால்வயிற்றுக்குக் கஞ்சியே மேலென்பதுதான் அரசின் வேலை!இந்த அமைப்பில் தமிழர்களுக்குச் சேவை செய்வதா தமிழ் அரசியல்வாதியன் வேலை? அதுவும் கருணாநிதி,வைக் கோபாலசாமி,நெடுமாறன்போன்றவர்களின் நிலை பெரிதும் பிற்போக்கான நிலையாகும்.இவர்கள் செய்த-செய்யும் அரசியல் மக்களை ஒடுக்கும் அரசியலாகும்.

Montag, November 19, 2007

தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற...

கனிவுமில்லைக் கருணையுமில்லை!


"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது நண்பர்கள் வெளியிட்டார்கள்.தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு-மேலாதிக்கம் பற்றிய மிக எளிமையான பார்வையை அதுள் முன்வைத்தார் திரு.சி.சிவசேகரம் அவர்கள்.இன்று, கிட்டத்தட்ட பதினெட்டாண்டுகளுக்குப் பின்பு, நமது தேசிய விடுதலைப் போராட்டத்தினதும்,அது சார்ந்தியங்குவதாகப் புலிகளால் முன் தள்ளப்பட்ட"தமிழர் தேசியக் கூட்டமைப்பு" மற்றும் மலையக மக்களின் இன்னல்களில் குளிர்காயும் அவர்களின் அரசியல் தலைவர்களும் இந்தியாவின் மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இலங்கையில் தீர்த்துவிடலாமென்கிறார்கள்.இத்தகைய கூற்றை-பேட்டிகளை,கருத்துக்களை புலிகளின் ஊடகங்களோ விழுந்தடித்துச் செய்தியாகத் தலையங்கம் தீட்டி, எம்மக்கள் முன் தள்ளுவதில் முன்னணியில் நிற்பவர்கள்.

இது ஒரு சாபக்கேடான சூழல் இல்லை!


இங்குதாம் நாம் வர்க்கம் சார்ந்து சிந்திக்க- இயங்கக் கோருகிறோம்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பது விஞ்ஞானத்தின் வழி உண்மையானதாகும்.ஒவ்வொருவரும் தாம் எந்தெந்த வர்க்கத்தின் உணர்வுகளைக் காவித்திரிவதென்பதை முதலில் கண்டடையவேண்டும்.தொழிலாளியாக இருந்தபடி முதலாளியாகக் கனவுகாண வைக்கிறது இன்றைய ஆதிக்க வர்க்கத்தின் ஊடகங்கள்-பண்பாட்டுப்படையெடுப்புகள்.

நாம் நமது வாழ்வைத் தொலைத்தபடி எவரெவருக்காகவோ எமது உயிரை விட்டுவிடுகிறோம்.இது தப்பானது.நமது பெற்றோர்கள் பட்டுணிகிடக்கும்போது நாம் நமது வாழ்வையே ஆளும் வர்க்கத்துக்குத் தாரை வார்த்துவிடுகிறோம்.இதை இலகுவாக விளங்கிக்கொள்ள,கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்து உயிரைவிடும் தொண்டனை எண்ணிக்கொண்டோமானால் உலகம் புரியும்.


"தொண்டனின் பிணத்தைவைத்தே
அரசியல் நடத்தி முடிப்பவர்கள்
ஓட்டுக்கட்சி-பாராளுமன்ற அரசியல் சாக்கடைகள்!"


இந்த நிலையில்,இலங்கையில்(இலங்கையிலென்ன உலகம் பூராகவும்தாம்)தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாடம் உழைத்துண்ணும் கூலித் தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கைவினைத் தொழிலாளர்களுமே.இத்தகைய மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற அரசியலானது இந்த மக்களை அடக்கும்-ஒடுக்கும் அரசியலாகவே இருக்கிறது.இதை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்கள் சமுதாயத்துள் சிறு தொகையான உடமையாளர்களும்,அவர்களுக்குக் கூஜாத் தூக்கும் அரசாங்க ஊழியர்கள்-அதிகாரிகளுமே!இவர்களின் நலனுக்கான அரசியலாகவும்-அபிலாசையாகவும்"தமிழீழம்"கோசமாகியது.இதைப் பற்பல சந்தர்ப்பத்தில் நாம் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்களின் அனைத்து முன்னெடுப்புகளும் முடக்கப்பட்டுள்ளது.அன்றாடச் சமூகச் சீவியம் சிதறடிக்கப்பட்டு,வாழ்விடங்களிலிருந்தே முற்றாகத் துரத்தப்பட்டு,அவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களின் குழந்தைகளான நாமோ நமது வீடுவாசல்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்து, அகதியாகி ஐரோப்பிய மண்ணில் கூலித் தொழிலாளிகளாகி,ஐரோப்பியத் தெருக்களைச் சுத்தஞ் செய்கிறோம்.எமது வாழ்வு நிர்மூலமாகப்பட்டபின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்-கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையிலும் நமது அரசியல்தலைமையிடம் கபடம் நிறைந்து, இந்தியாவோடு,ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோடு,அமெரிக்க அழிவுவாதிகளோடு கைகுலுக்கியபடி நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல,இந்தக் கபோதித்தனமான ஈனமிக்க அரசியல்-இயக்க வாதிகளை மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும்.ஏனெனில்,நாம் இலட்சம் உயிர்களை இவர்களின் ஈனத்தனத்துக்காகப் பறிகொடுத்துள்ளோம்!

பேராசிரியர் சி.சிவசேகரம் பதினெட்டாண்டுகளுக்குமுன் சொன்ன அதே கருத்தை மீளவும் இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

தற்போது, உலக மூலதனமானது தென்னாசியப் பிராந்தியமெங்கும் பாய்ந்து,கணிசமானளவு தென்னாசிய அரசியலைக் கட்டுப்படுத்தி வருகின்றபோதும்,இந்தியாவின் மேலாதிக்க அரசியல் வியூகம் காலாவதியாகிவிடவில்லை.இந்தியாவின் மிகக் கெடுதியான அரசியல் நலன் நமது மக்களின் கணிசமானவர்களைக் கொலை செய்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவை இலங்கையில் நிலைப்படுத்தி வருகிறது.மிகக் கேணைத்தனமாக இந்தியக் கோமாளிகள்-தமிழ்நாட்டு விரோதிகள் இராஜீவ் என்ற பாசிஸ்ட்டின் கொலைக்கு வக்காலத்து வேண்டுகின்ற இன்றைய சூழலில்கூட நமது மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவிக்கும் இந்தியத் துரோகத்தை நமது அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தவில்லை.புலிகளின் மிகக் கெடுதியான அரசியல் கூட்டுக்கள் இந்தியாவிடம்-உலக ஏகாதிபத்தியங்களிடம் தமது நாணயக் கயிற்றை வழங்கியபின்,அந்த எஜமானர்களின் இழுப்புக்கேற்றபடி "போராட்டம்"செய்கிறார்கள்!மக்களோ இத்தகைய கொடிய யுத்தங்களால்,அரசியல் ஏமாற்றால் தமது பொன்னான உயிர்களைப் பறிகொடுத்தும்,வாழ்விடங்களை இழந்தும் வதைபடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்க எவருமேயில்லை!புலிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் புலி எதிர்ப்புக் குழுக்களோ இந்தியாவின் இன்னொரு வடிவிலான கைக்கூலிகள்.இவர்களை இனம் காட்டும் பேராசிரியர் சி.சிவசேகரம் மிக இலாவகமாக இந்திய-தமிழ்நாட்டு அரசியல் சூழ்ச்சிக்காரர்களையும்,அவர்களது துரோகத்தையும் இனம் காட்டுகிறார்.

கடைந்தெடுத்த துரோகிகளானவர்கள் இந்தியக் கைக்கூலி ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,புலிகளின் தலைமைமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளங்களைச் சுருட்டி ஏப்பமிட்ட வடிகட்டிய துரோகி கருணாநிதியும்தாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.இதையும், சிவசேகரம் அவர்கள் குறித்துரைக்கிறார்.

வடிகட்டிய துரோகி கருணாநிதியின் போலிக்கண்ணீர் ஒப்பாரியைப் பாட்டாக்கிய கண்ணனின் இசையைக் கேட்டபோது,இந்த முயற்சியில் கண்ணனின் திறமை வெளிப்பட்டபோது,சயந்தனின் பதிவில் கண்ணனைப் பாராட்டியபடி கருணாநிதியின் ஓலத்தை அம்பலப்படுத்தியிருந்தேன்.அதை அனானியாகச் சொன்னேன்.பேராசிரியரோ அக் கவிதையையும் விடாமற் சாடியிருக்கிறார்.


இவையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம்?

நமது பிரச்சனையைத் தத்தமது இலாபத்துக்காக அரசியலாக்கி மக்களை அழித்துவரும் கொடிய சக்திகளை இனம் காட்டவே நாம் இதுவரை எழுதித் தள்ளுகிறோம்.நாமும், நமது பெருங் கல்வியாளர்கள்போல் வாய்மூடி மெளனித்திருக்க முடியும்.இப்படியிருந்தால் எமது மக்களின் அழிவை எங்ஙனம் தடுத்து நிறுத்துவது நண்பர்களே?


எல்லோரும் தத்தமது குடும்பம்,பதவி,பட்டம் என்றிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்வோடு விளையாடும் அந்நிய-உள்நாட்டு யுத்தப் பேய்களை எங்ஙனம் அம்பலப்படுத்துவது-மக்களை அவர்களிடம் பலியாக்காது தடுப்பது?


இதுவோ பெரும் வரலாற்றுக்கடமை நண்பர்களே!

நாம் புரட்சி செய்கிறோமோ இல்லையோ நமது மக்களின் உரிமைகளை அந்நியர்களிடம் அடைவு வைத்துத் தமது வாழ்வையும்,வளத்தையும் பெருக்கும் கயமைமிக்க அரசியல்-இயக்கவாதிகளை நாம் மக்களுக்கு இனம் காட்டியாகவேண்டும்!இதுவரை எமது மக்களின் உயிரோடு விளையாடிய இந்தப் போராட்ட முறைமை நம் இனத்தின் அனைத்து வளங்களையும் அந்நியர்களோடு பங்குபோட்டு அநுபவித்துவருகிறது.அதைத் தொடர்ந்து நிலைப்படுத்தவும்,மக்களைச் சட்ட ரீதியாக ஒடுக்கும் உரிமைக்குமாக இவர்கள் போடும் கூச்சல் யுத்தம்-ஜனநாயகம் என்றபடி.நமது மக்களின் எதிர்காலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.இந்த நிலையிலும் நாம் மெளனித்திருக்க முடியுமா?

தமிழ்த் தேசிய மாயையில் கட்டுண்டு கிடந்தபடி இயக்கவாத மாயைக்குள் மெளனித்திருந்தோ அல்லது வக்காலத்து வாங்கியோ எம்மை நாம் ஏமாற்றமுடியாது!நாம் இழந்திருப்பது வரலாற்றால் மீளக்கட்டியமைக்க முடியாத உயிர்கள்.அந்த உயிர்களின் தியாகத்தைப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் கட்சி-இயக்க அரசியல் தலைமைகள் தத்தம் பதவிகளுக்கும்-இருப்புக்குமாக நம்மை இன்னும் படுகுழியில் தள்ளுவதை அநுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமும்,பொறுக்கி அரசியல்வாதிகளும் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தவுடன் ஈழத்துத் தமிழனுக்கு உச்சி குளிர்கிறது.ஆனால்,அந்தக் கூட்டம் இதுவரை எமக்கு என்ன செய்தார்கள்,எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கக்கூட முடியாத-முனையாத கழிசடைகளின் ஒப்பாரிகள், நமது மக்களின் குருதியை-கண்ணீரை நிறுத்திவிடாது.மாறாகத் தமிழகத்தின் அப்பாவிக் குடிகளின் பெரும் குரலே எமது மக்களின் கண்ணீருக்கு முடிவுகட்ட ஒத்திசைவாகும்.

தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக் கூத்தாடிகளும் தமிழகத்து அப்பாவி மக்களின் குரல்வளைகளைத் திருகியே தமது அதிகாரத்தை,ஆதிக்கத்தை,செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.தமது சொந்த குடிகளையே அடியோடு மொட்டையடிக்கும் இந்தக் கூட்டத்தின் குரலா எமது மக்களின் துயர் துடைக்கும்?-இலங்கையில் இந்தியாவினது பங்கு என்ன?புலிகள் ஏன் இந்தியாவுக்குத் தூதுவிடுகிறார்கள்,எப்படி இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்?மிக இலகுவான கேள்விகள்.தொடர்ந்து தேடும்போது விடைகள் மிக இலகுவாகக் கிடைத்துவிடும்.

சிந்தியுங்கள்!

நாம் அவசியம் நமது நண்பர்களை-எதிரிகளை இனம் கண்டாக வேண்டும்.

அதற்குப் பேராசிரியரின் இக்கட்டுரை பலகோணத்தில் பார்வைகளைத் திறந்துவிடுகிறது.

"படிப்போம்,
பாருக்குள் நமது எதிரிகளை
நேரிய-சீரிய,செம்மையான போராட்டத்துடன்
எதிர்கொள்வோம்.அங்கே, நாம் வணங்கும்
இன்றைய தெய்வங்கள்கூட
எதிரிகள் என்பதை வரலாறு புகட்டும்."


அதுவரையும் விவாதிப்போம்-விழிப்படைவோம்!

நட்புடன்;,

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007


மறுபக்கம் :

"தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம்."இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது.


அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் சமகால நிலைமைகள் பற்றியும் இந்திய ஆட்சியாளர்கள் சரிவர அறியமாட்டார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையிற் திருப்ப வல்லவர்கள் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பகுதியை நம்புவதற்குக் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு பலருக்கு ஒரு நியாயம் இருந்தது. இருபது ஆண்டுகள் முன்பு வரை அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும் தமிழகத் தலைமைகள் பற்றிய ஒரு நம்பிக்கை இன்னொரு ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.


ஆனாலும், இந்த நம்பிக்கைகள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை என்றும் இந்திய மேலாதிக்கத்தின் நோக்கங்கள் பற்றியும் கவனமாயிருக்குமாறும் எச்சரித்து வந்தவர்கள் இருந்தார்கள். பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு பற்றி எதிர்மாறான இரு மதிப்பீடுகள் இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைக்கு இந்தியா கைகொடுக்கும் என்று சொன்னது. மற்றது தமிழர் பிரச்சினையைத் தனது மேலாதிக்க எண்ணங்கட்காக அல்லாமல் வேறெதற்கும் இந்தியா பயன்படுத்தாது என்றது. எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் ஏதோ வகையில் இந்தியாவை நம்பியவர்கள் தாம். அவர்கள் மட்டுமன்றிக் குழம்பிப்போன சில தமிழ் இடதுசாரிகளும் இந்தியாவை நம்பினார்கள். சிலரது நம்பிக்கைகள் ஏமாற்றத்துக்கு இட்டுச் சென்றன.

வேறு சிலர் இந்தியாவின் துரோகத்தைத் தெரிந்து கொண்டே அதன் பங்காளிகளானார்கள். இவையெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். எளிதில் மறக்கும் அளவுக்கு அவை அற்ப விடயங்களுமல்ல, எப்போதோ ஒரு யுகத்தில் நடந்துமுடிந்தவையுமல்ல.


கடந்த பன்னிரண்டு மாதங்கட்குள்ளேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரசார முகவர்களாலும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதுகூடப் பலருக்கு நினைவில் இல்லை என்றால் அவர்கள் பாராளுமன்ற அரசியலால் முற்றாகவே சுரணை கெட்டுப் போனவர்கள் என்று தான் சொல்ல முடியும். இந்தியாவை வளைத்துப் போடச் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டினவர்கள் கண்டதெல்லாம் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான விளைவுகள் தாம். இந்திய அமெரிக்கப் போட்டியை வைத்துப் போட்ட கணக்கும் பொய்யாகிவிட்டது "கொக்குப் பிடிக்கிறதற்கு வழி, அதிகாலையில் கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்து விட்டால், வெய்யில் ஏறும்போது வெண்ணெய் உருகிக் கொக்கின் கண்கள் தெரியாமற் போகும்; அப்போது பார்த்துக் கொக்கைப் பிடிக்கலாம்" என்று ஆலோசனை சொன்னவனுக்குக் கூட இந்த அரசியல் ஞானிகளை விட விவேகம் அதிகம் என்று நினைக்கிறேன்.


நான் இப்போது கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத் தனத்தையே கேள்விக்குட்படுத்துகிறேன்.


இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பதைப் பற்றி அரசியல்வசதி கருதியேனும் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகிற சிலர் இருக்கிறார்கள். நமது நாளேடுகளில் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் விடுகிற அறிக்கைகள் வெளிவருகின்றன. பலவாறான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவின் வஞ்சகத்தைக் கண்டித்து இங்கே எந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமையும் வாயே திறப்பதில்லை. செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறவர்கள் இருக்கிறார்கள் செய்ததைக் கண்டிக்கவோ எவரும் இல்லை.


வரதராஜப் பெருமாள் முதலாக ஆனந்த சங்கரி வரையிலானவர்கள் வேண்டுகிற இந்தியக் குறுக்கீடு பற்றி அவர்களுக்குப் பூரணமான தெரிவுண்டு. இந்தியா தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு என்ன செய்தாலும் அதை அவர்கள் முழு மனதுடன் ஏற்பார்கள். இதில் அவர்களுக்கு தெரிவு, மாற்றுக் கருத்து என்ற விதமாக எதற்கும் இடமில்லை. எனவே தான் இந்தியா அவர்களைத் தமிழர் தலைவர்களாகக் கருதுகிறது.


ஆனால், வெளிவெளியாகவே யூ.என்.பி.யிடம் தமிழ் மக்களைச் சரணடையச் செய்ய முன்னிற்கின்ற மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பதில் இந்தியாவால் எவ்வளவை நிறைவேற்ற இயலும் என்று எதிர்பார்க்கிறார்கள்?


வெறுமனே இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாகக் குறிப்பாக எவ்வெவ் வகையிற் குறுக்கிட வேண்டும் என்று பட்டியலிடுவார்களா? அக் குறுக்கீட்டின் இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்துவார்களா? இந்தியாவின் போக்கு இன்று வரை எவ்வாறு இருந்துள்ளது என்றும் அதில் அவர்கட்கு உடன்பாடான பகுதி எது உடன்பாடற்றது எது என்று சொல்வார்களா? இந்தியா தனது போக்கை எந்த விடயங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விளக்குவார்களா?
அவை பற்றி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி கேட்பார்களா?

இந்தியக் குறுக்கீடு பற்றி ஆழச் சிந்தித்தவர்கட்கு இந்தியக் குறுக்கீடு வேண்டிய ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. எனினும், திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுமாதிரி இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் மனதில் உள்ளது என்ன என்று சொல்ல வேண்டும். சொல்ல மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், செய்தியை அனுப்புகிற நிருபருக்குத் தெரியும், அதைக் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளியிடுகிற பத்திரிகை ஆசிரியருக்கும் தெரியும்.

அந்தப் புலுடாவுக்கு வழங்கப்படுகிற முக்கியத்தை ஏன் அதை அவிழ்த்து விடுவதற்கு தாம் வழங்க மறுக்கிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் எங்களால் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை?


தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம். அதை ஜெயலலிதா கண்டித்ததில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், எனது காரணங்கள் வேறு. முதலாவதாக அது நேர்மையற்றது. இரண்டாவதாக அது மிகவும் மட்டரகமான கவிதை சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. தி.மு.க. சினிமா பாணியிலான சுத்தமான பேத்தல்; கருணாநிதி அரசியலின் பம்மாத்து.


தமிழகத்தையும் இலங்கையையும், குறிப்பாக வட, வடமேற்கு இலங்கையைப் பல்வேறு கெடுதல்கட்குள்ளாக்கி மீனவர்களது வயிற்றில் அடிக்கப்போகிற சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிக் கூட வாய் திறக்க வக்கில்லாத தமிழ்த் தலைவர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.


இந்தியா இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களிடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா குழிபறித்து வந்துள்ளது.


இந்தியக் குறுக்கீட்டைப் பேரினவாத வெறியர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமெரிக்கா மறைமுகமாக ஏற்கிறது என்றால், அதை தமிழர் விடுதலைக்கு ஆதரவான எவரும் ஆதரித்துப் பேசுகிற போது அவருடைய அரசியல் ஞானத்தைவிட அதிகம் ஐயத்துக்குரியது. அடிப்படையான நேர்மைதான்.-பேராசிரியர் சி.சிவசேகரம்.


நன்றி தினக்குரலுக்கு.

Sonntag, November 18, 2007

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்...

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்...திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி


பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற


தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை


எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை


கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!


தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்


ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!


திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை


ஸ்ரீரங்கன்
18.11.2007
Dienstag, November 06, 2007

எக்ஸ்சில் ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின் பதிலென்ன?

எக்ஸ்சில்
ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின்
பதிலென்ன?


"ஒரு வகுப்பாரைக் குரூர மிருகமாகவும்,
மற்றொரு வகுப்பாரை அந்த மிருகத்துக்கு
இரையாகும் பலவீன மிருகமாகவும் செய்யும்
இன்றைய சமூக அமைப்பு ஒழியத்தான் வேண்டும்!"-
காண்டேகர்.தேசம் சஞ்சிகையில் நின்றுபோன "எக்ஸ்சில்:2" சஞ்சிகையின் ஆசிரியர் ஞானம் என்ற ஸ்டாலின் மீதான குற்றச் சாட்டுக்களும்,அவரின் மறுப்பென்றும் விவாதம் தொடர்கிறது.இங்கே அந்தச் சுட்டி:

http://thesamnet.net/?p=59நாமோ திகைப்படைகிறோம்!

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தரணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்.புலிகளின் முன்னாள் தளபதி கருணாவைப் பிரிப்பதற்கும்,அவரைத் தமது கைக்கூலியாகப் பயன்படுத்துவதற்கும் அன்னியச் சக்திகள் வழங்கிய பணங்கள்,வெகுமதிகள் பாரீசில் உடைமைகளாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதற்கு ஞானத்தையும் முகவராக-பினாமியாகச் சொல்லப்படுகிறது.

இப்போது, இலண்டனில் பிடிபட்ட கருணாமீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் சொல்லப்படுகிறது.இவர் புலிகளிலிருந்து பிரிந்தபின் செய்த மக்கள் விரோதத்துக்குமட்டுமா அல்லது புலிகளோடு இணைந்து போராடியவேளை செய்த குற்றங்களுக்காகவுமா?

தமிழர்களில் இவ்வளவு மோசமானவர்களெல்லாம் எப்படி வேசம் போடுகிறார்கள்!கிழக்கு மக்களின் விடிவுக்கு வந்த இரட்சகர்களாகத் தம்மை வெளிப்படுத்திய இவர்களை,இப்போது தேசம் சஞ்சிகையில் அம்பலப்படுத்துகிறார்கள்.

அப்பாவிகளாக இவர்களோடு "இலக்கியச் சந்திப்பு"ச் செய்த நாமோ திகைப்படைகிறோம்.

உலகத்தில் இப்படியும் மனிதர்களா?

உண்மையைப் பேசி,மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முனையும் மனிதர்களை ஏமாற்றுகிறார்களே!

இந்த மனிதர்கள் தம்மைப் பற்றிய சுய விமர்சனமின்றி பொய்யுரைத்துக் கிடந்தால் இவர்களின் நாணயத்தின்மீது நாம் சந்தேகம் கொள்கிறோம்.

நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் 90 களின் பிற்பகுதியில் பாரிசீல் எல்லா வகைத் தத்துவங்களும் பேசினார்கள்!இந்தா நமது மக்களின் ஜனநாயகத்துக்காக் குரல் கொடுப்பதாகவுஞ் சொல்லிக் கொண்டார்கள்.


ஞானம் இன்னும் ஒரு படி மேலே பாய்ந்து தமிழ் பேசும் மக்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்க முனையும் சிங்கள-இந்திய அரச கூட்டுக்கு உடந்தையாகக் கிழக்கு மக்களின் உரிமைகள்-வாழ்வாதாரங்கள்,அபிவிருத்திகளெனத் தூக்கிப் பிடித்தார்.கட்டுரைகளைப் புனைந்தார்.நாமும் இவரது கருத்துக்களை ஏற்க முடியாதிருந்தாலும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக் குரல் கொடுத்தோம்.

ஆனால்...

இத்தகைய மனிதர்கள் கருணா போன்ற அன்னியக் கைக்கூலியோடு நட்பு வைத்து, அவரது பினாமியாகப் பொருள் குவித்திருந்தால் இது மன்னிக்க முடியாத ஈனத்தனம்.புலிகளின் பினாமிகள்தான் இப்படியென்றால்,இப்போது புலியிலிருந்து பிரிந்த கருணாவின் கதையும் இதுவேயாகிறது.கருணா தான் கெட்டதும் மட்டுமல்ல மற்றவர்களையுங் கெடுத்துத் தனது பிரதேச மக்களின் வாழ்வில் நிரந்தரத் துக்கத்தை ஏற்படுத்தினான்.

பாவம் அந்தப் பகுதிமக்கள்.


நாம் வெளுத்தையெல்லாம் பாலாக நம்பினோம்.இவைகள் நமது தவறாகிறது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது?


இந்தப் பாரீஸ் வாழ் நம் இலக்கிய-பின் நவீனத்துவப் பேரரசர்கள் எல்லாம் இது குறித்து வெளிப்படையாக விமர்சனம்-சுய விமர்சனம் செய்தால் எதிர்காலத்தில் எவரெவரோடு குறைந்தபட்சமாவது மக்கள் பிரச்சனைகளைப் பேசலாமென்றாவது நமக்கொரு வழி கிடைக்கும்.

புலிகளையே புரட்டிப்போட்டுக் குதறியவர்களே இப்போது தாமும் புலிகள்தான் என நிரூபிக்கும்போது நாம் அதிர்கிறோம்.

ஈழத்து அப்பாவித் தமிழர்களைச் சொல்லி எவரெவரோ அரசியல்,பதவி,பணம் சம்பாதிக்கும்போது அந்த மக்களின் வாழ்வைச் சாய்தவர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான்.இவர்களை எந்த நிதி மன்றம் தண்டிப்பது? இவர்களுக்கொரு தூ... தேவைதானா?

குறைந்தபட்சமாவது மனசாட்சியுண்டென்றால் ஞானம்போன்றவர்கள் தம்மைப் பற்றிய இந்த அவதூறுகளுக்குப் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தலாம்.நாம் இச் செய்திகளைப் படித்து அதிர்கிறோம்.எங்களின் இதுநாள்வரையான செயற்பாட்டில் மக்களின் நலனுக்காவே-அவர்களின் விடிவுக்காகவே செயற்பட்டுள்ளோம்.இதுவரை முதுகுவலிக்க உழைத்து, ஓடாய்ப்போய் உருக்குலைந்தும் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.அன்றாடஞ் சீவிப்பதற்காகத் தெருவெங்கும் குப்பைகூட்டிப் பிழைக்கிறோம்-ஜந்திரத்தில் ஜந்திரமாகப் போராடி வயிறு வளர்க்கிறோம்.எங்கள் முன் நின்று பேசும் அருகதையுண்டா ஞானம்?அது உண்டென்றால் உங்கள் தரப்பு உண்மைகளை வெளியில் எழுத்தாக வையுங்கள்!உங்களுக்கும் கருணாவுக்குமான தொடர்பு உண்மையா,அவரது பணத்தில் வீடுகள் வாங்கப்பட்டதா?கருணைதாசனின் குற்றப்பத்திரிகைக்கு நியாயம் உண்டா-அதில் உண்மை உண்டா?

இவற்றுக்குப் பொறுப்பான பதிலைத் தராது நீங்கள் கிழக்கு மக்களுக்காக் குரல் கொடுத்து என்ன பயன்?-என்னத்தைச் சொல்லி,என்ன ஆவது?...


இலங்கையில் நடக்கும் யுத்தத்தாண்டவத்தை நிறுத்துவதற்காக உங்களெல்லோரினதும் குரல்களையும் உண்மையென்றும்-நியாயம் என்றும் நம்பினோம்.நீங்களோ மக்களின் பிரச்சனைகளை உங்கள் வருவாய்காகப் பயன்படுத்தி வந்திருந்தால் அதையிட்டு வெட்கப்படுகிறோம்.

ஊர்ப் பணத்தில் உயிர்வாழ்வதைவிட ஒரு சொட்டுப் பூச்சி மருந்துண்டு உயிர் விடுவது மேல்.

அங்கே, அப்பாவிகள் உயிர்வாழத் துடிக்கும்போது,தவிச்ச முதல் அடிக்கும் டக்ளஸ் தேவனந்தா,ஆனந்த சங்கரி,கருணா போன்ற கயவாளிகளுக்கும் ஞானத்துக்கும் வித்தியாசமுண்டா?-உண்டென்றால் உளம் திறந்து வெளிச் சொல்லுங்கள்!நாங்கள் மகிழ்வோம்,உங்கள் நாணயம் எம்மை வலுப்படுத்தும்!உண்மையாய் வாழ்வதே உயிர்த்திருப்பின் அர்த்தமாகும்!சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியற்று நியாயமாக இருத்லென்பது மக்களை அணுகும்-அவர்களின் மனங்களை நெருங்கும் முதற்படியாகும்.

ஞானம், உங்கள் மீது சாடப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட இந்தக் கறைகளுக்கு நீங்கள் மனம் திறந்து பதில் தருவது மிக நல்லது. நண்பன் யார்,எதிரி யார் என்று புரிவதே இன்றைய இருண்ட எமது மக்களின் வாழ்வுக்கு முதலில் அவசியம்.இதிலிருந்துதான் விடுதலையே சாத்தியமாகும்.

மக்களைத் துரோகியென்று போட்டார்கள்,போராடத்தில் இணையும்படி வற்புறுத்திக் கொன்றார்கள்,அவர்களின்மீது யுத்தத்தைத் திணித்துக் கொன்றார்கள்.இப்போது, அவர்களின் உரிமையையும் அடைவுவைத்துக் கொல்கிறார்கள்.இதில் நீங்கள் யார்?

அற்ப சுகங்களுக்காக நீங்கள் பொய்மைகளை அடுக்கினால் ஒரு நாள் அவையுடையும்!அப்போது, எமது கரங்கள் வலுப்படும்.மக்களின் அவலங்களுக்காக நாமும் அவர்களோடிணையும் நாளொன்று கூடும்.

நாயாய் அகதியாகி அழிந்து,ஓடாய் உழைத்தும் ஒரு குவளை சோற்றுக்கே அடுத்த நாள் உழைக்கும் நாமும் நாடு திரும்பி மக்களின் வாழ்வோடிணையும் ஒரு யுகம் பிறக்கும்.வரும்மாதச் சம்பளத்தில் இம் மாதம் வாழும் நமது அடிமை வாழ்வும் அகலும்!

ஜனநாயகம்
06.11.2007