Montag, Dezember 28, 2015

புலம்பெயர் தோழர்கள் : இந்திய இறைமைக்கு ஆபத்தானவர்கள்!

புலம்பெயர் தோழர்கள் : இந்திய ஒருமைப்பாட்டுக்கு -இறைமைக்கு ஆபத்தானவர்கள்!


இலங்கை - இந்திய நலன்களைப் பரவலாகத் தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிறுத்திய இத் தேசங்களது ஆளும் வர்க்கங்கள் ,பொதுவாகத் "தமிழ் ஈழத்தின் விடுதலையை" தென்னாசியத் தேசியவினங்களது அடிமைவிலங்கையொடிக்கும் புரட்சிக்கு வித்திடுமொரு முகிழ்ப்பாகவே இனங் கண்டன.

தத்தமது தேசங்கள் பல்வேறு தேசியவினங்களது சிறைக் கூடமாகவிருப்பதை அவர்கள் மிக நேர்த்தியாகவே அறிவர்.இத்தகையவொரு வியூகத்துள் ஈழமக்களது விடுதலையை அழிப்பதற்கான பல முகாந்திரங்களை ,இத்தகைய தேசங்கள் வகுத்போது நம்பவைத்து -உதவியளித்துப் பிளந்தழித்தெலன வியூகத்தை வகுத்துக்கொண்டன.

இத்தகைய வியூகத்துக்குப் பலியான பல முன்னணி ஈழத்து அமைப்புள்  இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் ;பிற சிறு தேசிவினங்களும் தீங்கிழைத்துத் தம்மை இந்தியாவின் -சிங்கள அரசின் எடுபிடிகளாக்கின.

சமீபத்தில் ,புலிகளை முள்ளிவாய்க்காலில் பூண்டோடு அழிக்கும் திட்டத்துள் தமிழ்பேசும் இனத்தைப் பல்வேறு மரபார்ந்து பிளவுகளைக் கூர்மைப்படுத்திப் பிளப்பதற்காக -திட்டமிடப்பட்ட பிரதேச -சாதிய வாதங்களையெல்லாம் மேல் நிலைக்குத் தள்ளிக் கூர்மைப்படுத்தும் அமுக்கக் குழுக்களை, இந்திய -இலங்கை அரசுகள் தகவமைத்தபோது அத்தகைய குழுக்களது உறுப்பினர்களாக ;அநுதாபிகளாகவிருந்த  புலம்பெயர் "தோழர்கள்"இன்று, நூற்களையும் ;சஞ்சிகை மற்றும் இலக்கியம் சார்ந்தும் வெளியீடுகளைச் செய்கின்றனர்.

 அவர்களை, இதுவரை இனங்கண்டவர்கள் சமரசமின்றி இதுவரை எதிர்க்கிறோம்.இது, அவர்களது தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ இருத்தல் சார்ந்தோ அல்ல!மாறாக ,அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் இவர்களது அமுக்கக் குழுவாதமானது இந்திய -இலங்கை அரச லொபிகளாக இவர்களுக்கு அளித்த வரலாற்றுப் பாத்திரத்தையும் ;இதன் விளைவாக இவர்கள் செய்த பாரிய தவறுகளையுமே நாம் எதிர்கிறோம்.

இத்தகைய தவறய் ,இவர்கள் தெரியாது செய்யவில்லை!

மாறாகத் தெரிந்தே -உணர்ந்தே செய்தனர்.

தமிழ் தேசியத்தின் விடுதலை ஒரு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியமைக்காதுபோனால் அதன் வெற்றி தமிழ்ச் சமுதாயத்துக்குள் இருக்கும் பல்வேறு மத -சாதிய வேறுபாடுடைய மக்களுக்கு மீளவும் ,சிறைக்கூடமாக இருக்கும் என்பதாலும்;ஈழதேசமானது இவர்களுக்குத் தூக்குமேடையாக மாறும் என்பது பரவலாக இவர்களால் புரியப்பட்டதே.

இத்தகைய ஈழத் தேசிய விடுதலைப் பலவீனமானது புலிகளது எழிச்சியோடு மேல் நிலைக்கு வந்தபோது அதைச் சரியாகப் பயன்படுத்திய நமது எதிரிகளான இந்திய -இலங்கை ஆளும் வர்க்ககங்கள் ,இவர்களது துணையோடுதாம் ஈழமக்களைப் பிரதேசரீதியாக -சாதிரீதியாக மிக ஆழமாகப் பிளந்து, தமது நோக்கதை நிறைவேற்றியது.இது வரலாற்றுண்மை!


இங்கு ,இதுவரை (இந்த) இந்திய -இலங்கைப் புலத்து லொபிகளை எதிர்த்து விவாதித்தவர்கள்கூட த் தற்போது அவர்களது அரசியலை மிக நேர்த்தியாகப் பின் தொடர்கின்றனர்.

இங்கே, தோற்கடிப்பட்டது ஈழதேச விடுதலை மட்டுமல்ல மாறாகத் தென்னாசியச் சிறுபான்மை இனங்களளது விடுதலையுந்தாம்!

ப.வி.ஶ்ரீரங்கன்
27.12.2015

Sonntag, Oktober 25, 2015

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...
 
வரலாற்றுக் குறுக்கலது வக்காலத்து...

|| 2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.|| -நிலாந்தன் [புலி இயக்கப் பரப்புரையாளர்)

மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று நம் சமுதாயத்துள் கோலாச்சுகிறது.
 
ஈழவிடுதலைப் போராட்டமென்று நடாத்தப்பட்ட அடியாட் சேட்டையானது அன்றும் ,இன்றும் யார்மீதும் சவாரிசெய்த-செய்யும் !.;இஃது , அன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொன்று குவித்தது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் மூன்று இலட்சம் மக்களது உயிர் பலாத்தகாரமாகப் பறிக்கப்பட்டது.இதை இன்றுவரை மறுத்தொதுக்கும் புலித்திமிர் படுகுழியிற் தள்ளப்பட்ட தமிழினத்தைப் பார்த்து நன்றி இல்லாத சமுதாயமென்கிறது.எதற்கூக அவர்கள் நன்றி காட்டவேண்டும்?
30 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட "தமிழீழ விடுதலைப் போரில் "இதுவரை படுகொலை செய்யப்பட்ட /பலியெடுக்கப்பட்ட மற்றும் துரோகி சொல்லிக் வேட்டையாடப்பட்ட இலட்சக்கான தமது உறுவுகளை இழந்ததற்காக?;
வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்பட்டு,தமிழ்ச் சுமுதாயத்தின் வாழ்சூழலைத் தகர்துச் சுடுகாடாக்கி அகதிகளாக்கியதற்காகவா?;

தம் இனத்தை ஒட்ட மொட்டையடித்து அங்கவீனர்களாக்கி,விதவைகளாக்கிச் சிங்கள ஆதிக்கத்திடம் கையளித்த புலிப் போராட்த் திறனுக்காகவா தமிழ்ச் சமுதாயம் நன்றி மறவாதிருக்கவேண்டும்?

அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோடு யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள். ஏன் தமிழ்பேசும் மக்கள் , இயக்கவாத மாபியாக்களின் பாசிசவாதக் குணாம்சத்தையும் அதன் போராட்டத்தையும் நன்றிகொண்டு போற்ற வேண்டும்?

தமது சமுதாய அமைப்பே சிதறடிக்கப்பட்டு ,மூன்று இலட்சம் தமது உறுவுகளைப் பலியெடுத்துச் சிங்கள -இந்திய ஆளும் வர்க்கத்திடமும் மற்றும் மேற்குலக ஆதிக்கத் தேசங்களிடம் தம்மை அடிமையாக்கிச் சென்ற இந்தப் புலிவழிப் போராட்டத்தையம் அதன் போராளிகளையும் குறித்துச் தமிழ்ச் சமுதாயம் நன்றியோடு இருக்க வேண்டுமெனும் உரையாடல் புலிப்பாசித்தை வரலாற்றில் நீற்றுப் போக வைக்கும் வியூகத்தின் மொழியாகும்.இது தகவமைக்கும் எதிர்காலக் கருத்தியல் மனதானது தமிழ் தேசிய விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதாகும்.ஒரு இனம் சொந்த இழிநிலைக்குள் இருத்தி வைக்கப்பட்டு கையாலாகாத குற்றுவுணர்வுமிக்க இனமான மாற்றுவது எதிர்காலத்தில் அவ்வினத்தைத் தொடர்ந்து பலவீனமானவொரு இனமாக்குவதே!புலிகளது போராட்டச் செல்நெறியின் விளைபலன்களை மறைத்து, அதன்மீது இரக்கத்தைப் பொழிய வைப்பதற்கேற்பச் சிங்கள அரசால் கொல்லப்பட்ட பல்லாயிரம் போராளிகள் போக சில காரணங்களுக்காக விடப்பட்ட எஞ்சிய மேல்நிலைப் புலிகளை வைத்து புலிகளது தவறான அரசியல் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களது குற்றமாக வரையப்படுகிறது.

இத்தகைய மனித்துவமற்ற மக்கள் விரோதக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய ஆபத்தான புலி அரசியல்!இந்த அரசியலானது தன்னால் பலியெடுக்கப்பட்டவொரு சமுதாயத்தின் முன் திமிராக "நன்றி" குறித்துக் கப்பங் கேட்கிறது.

இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, இலட்சக்கணக்காகப் பலியெடுத்து அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி விட்டது.இதுதாம் முள்ளிவாய்க்கால்வரையிலான "ஈழவிடுதலை" ப் போராட்ட வரலாறு.

இங்கே ,மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்பட்டது..எந்தப் பக்கம் பார்த்தாலும் "போராடு,போராடு" என்பதாகவும், தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்பட்டது.

இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைத்து,அந்நியர்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியது. "தேசிய விடுதலை"என்ற கருத்தாக்கத்தையும் அதன் இயக்க வினையையும் துஷ்பிரயோகஞ் செய்தது.அதைக் கேலிக்குரியதாக்கியது!

இத்தகைய கொடுமையான மனிதவிரோத அழிப்பு அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை" சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் வரலாற்றில் பதியவேண்டும்.
 
 
ப.வி.ஶ்ரீரங்கன்
25.10.2015Sonntag, Oktober 11, 2015

டேவிட் ஐயாவின் முன்னுரையோடு,அவருக்கு முடிவுரை...

...இன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியல் நடவடிக்கைகளினால் ஈழத் தமிழினத்துக்கு வரக் கூடிய அழிவை ஆராய்கிறேன்.
இப்பகிரங்க வெளியீடுகளால் இவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்க நான் முன்வரவில்லை.இவர்கள்ளெமது அரசியற் பிரமுகர்களென்றடிப்படையில் ஈழத் தமிழ் மக்கள் பலன் கருதி இந்த விமர்சனத்தை வெளியிடுகிறேன்.

இப் புனிதப் பணியில் எனக்கு நேரிடக் கூடிய விபரீத விளைவுகளை நன்கு உணர்வேன்.விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக்கட்டை என்றதும் ; சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (TELO) தமது "எழுச்சி"ஏட்டில் என்னைப் "பிற்போக்குச் சக்தி காக்கை வன்னியன்" என வர்ணித்ததையும் அறிவேன்.

இக்கட்டுரையை வரையும்பொழுது பெயரும் -ஊரும் கொடுக்கத் திரணியற்றவொரு "விடுதலை வீரன் " ஓர் பயமுறுத்தற் கடிதம் அனுப்பியிருக்கின்றார்."அட பொறுக்கி... முகந்தனிடம் பணம் வேண்டி சிறையுடைப்புப் புத்தகம் வெளியிட்டாய் ;இனியெழுதினாற் வெட்டிக் கொல்வோம் !" என்கிறார் அவர்.

இவ் வெருட்டல்கள் மூலம் தமிழீழ விடுதலை எங்கே போகின்றதென்பதை  வாசகர்கள் ஊகித்து அறியலாம்.

ஆனால், ஈழவிடுதலைப் பாதையில் எண்ணற்ற துன்பம் நேரிடினும் அஞ்சாது -அயாராது உழைப்பேன்.என் அருமைச் சக ஊழியன் டாக்டர் சோ.இராசசுந்தரம் தம் உயிரையே தியாகம் செய்து விட்டார்.பல ஈழத் தமிழ் இளைஞர்கள் இரத்தத்தால்  ஈழவிடுதலையை உறுதிப்படுத்திவிட்டனர்.இப் பாதையில் குறுக்கே நிற்கும்  தீய சக்திகள் அம்பலப்படுத்தப்பட்டு அகற்றப்பட வேண்டியது அவசியம்.
ச.ஆ.டேவிட்
1985
======================

 மேற் காணும் அவரது முன்னுரையில்  ஈழ விடுதலை மீதான அவரது பெருவிருப்பை நாம் அறிய வாய்ப்புண்டு.அவரது அரசியல் முன்னெடுப்புகளில் நானும் மயங்கியிருந்த காலத்தில் அவரைச் சந்தித்துச் சில துரும்புகளை நானும் எடுத்துப் போட்டவன். இன்று  " எங்கள் "டேவிட் ஐயா பந்தியுற்றுள்ளார். 

விடுதலை வேட்கையுடைய  மாபெரும் மனிதருக்கு நமது "விடுதலை இயக்கங்கள்" வரலாற்றில் எந்த  இடத்தை அவருக்கு வழங்கினர் என்பதை அவரது முன்னுரையே நம் முன் எடுதியம்பி வரலாற்று ஆவணமாகவுள்ளது!.

எனவே,அவரது இழப்புக் குறித்துப் பேசும் அருகதை அராயக இயக்கவாதப்  பண்புடைய  எவருக்கும் கிடையாது.இந்த மாமனிதரை இறுதிவரை கண்டுகொள்ளாத இயக்வாதம் ,தற் குறித்தனமாகத் “தமிழ்த் தேசிய விடுதலையை அழித்து தாமும் அழிந்து போனதை”  இந்தப் பெரு மனிதர் கண்டுதாம்  தற்போது ஈழத்திடமிருந்து விடைபெற்றுள்ளார்.

அவரது பெருவிருப்பை(விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகளை இறுதிவரை அம்பலப்படுத்தி நேரிய பாதை காண்பது) நாம் தொடர்ந்து  ஆற்றுபவர்கள்.எனவே, நமது முன்னோடியான டேவிட்  ஐயாவுக்கு மிகுந்த மரியாதையோடு தலை தாழ்த்தி அவர் வழி தொடர்வோம்.

ப.வி.ஶ்ரீரங்கன்
11.10.15

Samstag, Oktober 10, 2015

பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை...

இஃது  "கொசிப்பு" அல்ல...


நாம் வாழும் இந்தப் புவிப் பரப்பு நமக்கானதல்ல. இன்று, தொடரும்  புவிப்பரப்பின் மீதான அனைத்துப் பௌதிக நடாத்தைகளும் அதன் இருத்தல்மீதாகப் பொழியும் இடைச் செயலானது பல்வேறு தர்க்கத்தை -தாக்கத்தைக் குறித்தக்கொண்டே வரலாறு பூராகவும் மாற்றமடைந்து செல்வதை நாம் அனைவரும் அறிவோம்.இந்த மாற்றங்கள் பலவானாலும் நமது உளவியல் மனதின்மீதான உணரழுத்தம் எமக்கான புரிதற்பாட்டின் வாயிலான வாழ்வில் - இருத்தலில் வெவ்வேறு தேவைகளோடு நம்மைச் சாகடித்து விடுவதைக் கூட நாம் உணர்வது தடுக்கப்பட்டு வருகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்துள் நாமும் ஒருவங்கமென்பதெல்லாம்  எம் மீதான மிதமானவொரு உணர்வின் (  பெருமிதம்    என்பதெல்லாம் இன்று பொருத்தமற்றது) பொருத்தமற்ற கதையாடலாகவும் மாற்றப்பட்டுவிட்டது.இந்நிலையிலும் இன்றைய பொருளாதார நடாத்தைகளது தயவில் உயிர்வாழ்வதென்பது அந் நடாத்தைக்கு -இயக்கத்துக்கு ; அதன் வீரியத்துக்குட்பட்டவுறவென்பதை நாம் கண்டுபிடித்துக்கூறாதுபோகினும் -அதுவே உண்மை!

பரவலாகவுணரப்பட்டவிந்தமைப்பினது பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியானது இன்னொரு பாரிய அழிவை இன்றையவுலகவொழுங்குக்குள் நடாத்திக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உலக அரசுகளுக்கிடையிலானவுறவென்பது தனியே அந்தந்தத் தேசத்து உயரடுக்கின் நலன்களென்பதாகக் குறுக்கப்பட்ட பல்தேசியக் கம்பனிகளது சட்டவாதம் மனிதவிரோத முகங்களோடு[  ‪#‎TTIP‬ ‪#‎CETA‬ ‪#‎TISA #TPP #WTO etc. ] நம்மையண்மிக்கும்போது நாம் பல்வேறுபட்ட வடிவங்களில் அழித்தொழிக்கப்படுகிறோம்.இந்த நெருக்கடியிலிருந்து முற்றுமுழுதாகத் திசை திருப்பட்ட உழைத்துண்ணும் நாம் பல்வேறுகைப் பிளவுகளுக்குள் சிக்க வைக்கப்பட்டபின் அதுவேயொரு குரூர மனித முகத்தை உழைப்பவருக்குள் தொடர்ந்துருவாக்கி விடுகிறது.பல்வேறு தேவைகளது நலனது காரணங்கொண்டு "தேசிய அரசுகள் ;சுயாதீனச் சமுதாயம் ;சுயாண்மை ; சுய பொருள் செய்கை ;சுயாதீனச் சட்டவாதம் "என்பதெல்லாம் இல்லாமைப் போனதென் தொடர்ச்சியை நாம் தற்போது சிரியாவில் உணரத் தக்கதான எல்லா அரசியற் காரணங்களையும் அறிகிறோம்.
இதன் தொடராக இடம்பெயரும் மக்கள் கூட்டம் பல கோடிகளாகவுயர்ந்து இந்தவிடப் பெயர்வுக்குக் காரணமான தேசங்களை நோக்கி நகர்த்தப்படுவதுகூட ஒரு வியூக வகைப்பட்ட அரசியல் "என்பதை நாம் உணர்வது மறுக்கப்படுகிறது.
உழைப்பவர்கள் இந்த நெருக்கடியில் தமக்குள் ஒன்றுபடும் தருணத்தைக்கொண்டிருந்த வேளையில் அவர்கள்மீதான நவீனத் தாக்குதலாக இந்த "அகதி"ப் பிரச்சனைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும்  ஏகப்பலம் பொருந்திய யுத்தவாதத் தேசங்கள் தமது சொந்த உழைப்பாள மக்கட்டொகுதியை இடம் /புலம் பெயரும் அப்பாவிகள் [இதற்குள் சிரியாவிலிருந்து கடத்தப்படும் ISIS உறுப்பின ர்கள் சேர்த்தியில்லை] மீது பண்பாட்டு/இனக் குரூரமாக ஏவிக்கொண்டிருப்பது உலக தழுவிய ஒருங்கிணைவைத் தடுப்பதிலான நோக்கம்  முற்கட்டமாகவிருப்பினும் தற்போது மனிதவிரோதவொப்பந்தகைளைக் கையெழுத்திட்டுச் சட்டவாக்கமாக்குவதில் தத்தமது தேசத்து உழைக்கும் மக்களது இதன் மீதான எதிர்வினையை மட்டுப்படுத்துவதில் இந்தத் தேசங்கள் வெற்றிபெற்று வருகின்றன.

அமெரிக்க வல்லாதிக்கம் வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முடிவில்லாத யுத்தங்கள் வாயிலாகத் தனது உலகத் தலைமையை - ஆதிக்கத்தை அடுத்த ஐம்பதாண்டுகளுக்காவேவேனும் நிலைநாட்டப் புறப்பட்ட இந்த நெருக்கடியின்  ஒரு பகுதி தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த  மூன்றாது  உலகயுத்தத்தின் கடைசி அத்தியாயத்துக்குள் நுழைகிறது.இது இந்தப் புதிய முகத்தோடான முன்றாவது உலக யுத்தத்தை  ஐரோப்பாவில் மட்டுமல்ல ஆசியாவிற்கூட விரிவாக்கும் அமெரிக்க உயரடுக்கு மக்கட்டொகுதி இங்கெல்லாம் பெருந்தொகையான மக்களைப் பலியெடுத்தோயப் போகிறதென்பதே உண்மை!

அதற்காக இந்தத் தேசம் தனது அனைத்து வகை வலுவையும் திரட்டியபடி உலகத்தின் அனைத்து மக்கட்டொகுதிக்குள்ளும் நாசகார வியூகங்களை வைத்து மூளையுழைப்பைப்பெற்றுக்கொண்டு, தன்னை மேலல் நிலைக்குக் கொணர்ந்துள்ளது.பள்ளி செல்லும் பத்துவயது குழந்தையிலிருந்து Phd.ப் பட்டம் பெற்ற பல்லுப் போன கிழடுகள் வரை இந்த அமெரிக் க உளவுப்படைக்குத் "தாம் செய்வது -ஆய்வது" எவருக்கானதென்றறியாமலே அமெரிக்காவுக்கு உந்து துணையாக மாற்றப்பட்டுவிட்டனர்.நானறியப் பல தமிழ்ச் சிறார்களை இப்போதே அமெரிக்க உளவு ஆசிரியர்கள் பாடசாலைக்குள் வழி நடாத்தி வருகின்றனர்.இவர்கள்தாம் இம் மாணவர்களை Biochemistry கண்டிப்பாகப் படிக்கத்தூண்டுகின்றனர்.இரசாயன ஆயுதங்களின்[Biological warfare  ] விருத்திக்கு இந்த மூளைகள் இப்போதே பரிசீலிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகிறது!

இங்கு,உழைப்பவர்களது குழந்தைகளே தமது நிலையை -தாம் இருக்கும் சமுதாயத்துள் தமது தளத்தை அறியாது கல்வியென்றவொன்றின்  குறிக்கோளோடு கழுத்தில் மட்டை மாட்டப்பட்ட விலங்குகளாகத் தமது தளத்துக்கு(வர்க்கம்)த் தீங்கிழைத்து வருகின்றனர்.

ஆனால் ,இவர்களை வழி நடாத்தும் தேசங்களது உயரடுக்குக் குடிகளோ தமக்குள் முரண்பட்ட கூறுகளைக்கழைந்து ஒருமைப்படுவதில் ஐரோப்பியக் கூட்டமைப்பின் பாசிசத் தலைவன் யுங்கரின் வார்த்தையில்  : "நாம்  ரஷ்யாவுடனா நமது உறவை அமெரிக்கா வின் கட்டளைகளைக்கிணங்கி, எதையும் உடைக்க முடியாது, நாம் ரஷ்யாவுடன் சாதாரண உறவுகளைப் பேண வேண்டும்" (  Wir dürfen unser Verhältnis zu Russland nicht durch Befehle der USA kaputt machen, wir brauchen normale Beziehungen zu Russland! - EU-Präsident Juncker)என்று அக் கூட்டம் தமது வர்க்க தளத்தைக் கவனமாக அணுகும்போது இதுவரையான பகை முரண்கொண்ட இருசிய -சீன தேசங்களது உயரடுக்கு மக்கட்டொகுதி தமது பரம வைரியாகக்கொண்ட ஐரோப்பிய -அமெரிக்க உயரடுக்கை  பகையாளி வர்க்கமாகக் கருதுவார்களா ; அல்லது எவரை?எம்மைத்தானே -உழைக்கும் நம்மைத்தானே?
பல கோடி உழைக்கும் வலு இல்லாதொழிக்கப்படப்போகிறது. கூட்டுக் கொள்ளையை  ஊக்குவிக்கும் சட்டவாதமானது Corporate identity என்னும் பொருளில் நமக்குப் புரியவைக்கப்படும் ஒவ்வொரு மூலகமும் நமது வாழ்வைப் பறித்துக்கொண்டே  முழுவுலகப் பிரபஞ்சத்தையும் தனக்குள் செரிக்கும் இன்றைய தருணத்தில் தமிழ் மொழிச் சூழல் வசவிலக்கியத்துள்ளும்;சினிமாவுக்குள்ளும் உலகைத் தேடுவதில் முட்டாட்டனத்தின் கடைக்கோடியெல்லையிற் தம் வாழ்வை மற்றவர்கள் தகவமைக்கக் கொடுத்துவிட்டு "கொபற்ற  கொல்லையிற் குப்பை"  கொட்டுவதில் "டாக்டர்கள் ;முனைவர்கள்;கலாநிதிகள்" எனப் பட்டம் விடுவதில் தன்னிறைவு கொள்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
10.10.2015

Sonntag, August 30, 2015

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

சாகித்யன் சுரேந்திரா : 16 வயதுத் தமிழ் மாணவனின் சாதனை.

என்னை அசைத்துக் கொண்டிருக்கும் கேள்வி : இந்த் தமிழ்ச் சிறுவனால் "இது" எப்படிச் சாத்தியமாச்சு?
இந்தக் கேள்வி தொடர்ந்து என்னைக் குடைந்துகொண்டேயிருக்கிறது!;இந்தச் சிறுவனைப் பல தடவைகள் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.அவன் இத்தகைய சாதனையைச் செய்தானென அவனைக் குறித்து எவரும் பேசவில்லை!அவனோடு நீண்ட உரையாடலைச் செய்திருக்க வேண்டிய எனது இப்போது தொடரும் ஆவலை அன்று நான் கொண்டிருந்தால் அவனோடு நிறைய உரையாடியிருக்கலாம்.13 வயதில் >> Flug - 747: Eine atemberaubende Entführungsgeschichte [ விமனம் -747 ,அதிர்ச்சி தரும் ஒரு கடத்தற் கதை ]<< எனும் புனைவை எழுதியிருப்பதாகவும் ,தற்போது அவனது 16வது வயதில் >> Ein Sprung durch Raum und Zeit[ காலம்;வெளி ஊடாகவொரு பாச்சல் ]
என்ற வானவியற் பௌதிக நூலையும் வெளியிட்டிருப்பதாகவும் அறிந்தேன்.அவனது இரு நூற்களையும் இன்று Amazon வழி  வேண்டினேன்.எனது நண்பரான சுரேந்திரா, யேர்மனிய நகரமான நூரன்பேர்க்கில் கடந்த 30 ஆண்டுகளாக வாழ்பவர்.அவர்தம் புதல்வனே இந்தச் சாகித்யன் சுரேந்திரா[ http://www.amazon.de/Sagithjan-Surendra/e/B00LYAWE7C/ref=dp_byline_cont_book_1 ] என்ற சிறுவன் இந் நூற்களின் ஆசிரியன் என்று அறிந்தபோது பிரமிப்பு எனக்குள்  பரவிக்கொண்டேயிருக்கிறது.

இளம் விஞ்ஞானியை நமது உறவுகள் வட்டம் எப்படி இனங்காட்டுகிறது-அணுகுகிறதென்ற கேள்வியை ஒருபக்கம் வைத்துவிட்டு,அவனது இவ்வுலகம் குறித்த அநுபவம் ; அறிதற்புலம் குறித்தே எனக்குள் கேள்விகள் வட்டமிடுகின்றன.Einstein குறித்துரைத்து உலகமே மண்டையைப் போட்டு உடைத்துவரும் Relativitätstheorie யைப் புரிந்துகொள்வது  பௌதிகத்தைப் புரிவதன் அடிப்படையென இவன் தனது முகவுரையில் குறித்துரைக்கும்போது ஆச்சரியம் பல மடங்காகிறது.கூடவே Werner Karl Heisenberg க்கையும் அவன் குறிப்புணர்த்தி Quantenmechanik வரை விபரிக்கும்போது [ இணையப் பரிச்சார்த்த வாசிப்பு ]இதுவொரு சிறுவனது மனதுக்கு அப்பாலானது என்று தோன்றுகிறது.இவனது ஆழுமை எங்ஙனம் இருக்கின்றது?இவனால் சாத்தியமாக்கப்பட்ட " காலம் -வெளி "வழியான பாச்சல் எத்தகையது? அமசோனில் [ Amazon ]வேண்டிய அவனது நூற்கள் எனது கைக்கு வந்து,நான் அதை முழுமையாக வாசிக்கும் வரை எனது கேள்விக்கு விடையில்லை.

நான் தற்போது Quantenmechanik கை விரித்துரைத்த Schrödinger வழி நிறைந்த முரண்பாட்டோடு அவரது பூனையாக [ Bei Schrödingers Katze handelt es sich um ein Gedankenexperiment  ] எனது அறைக்குள் மூழ்கிக் கிடக்கிறேன். என்றபோதும் , மிகவும் பெருமையோடு சாகித்யன் சுரேந்திராவின் சாதனையை உள்வாங்கக் காத்திருக்கிறேன்.

ப.வி.ஶ்ரீரங்கன்
வூப்பெற்றால்
29.08.2015

பிற்குறிப்பு : அவனது நூற்களை Amazon வழியாகப் பெற:

http://www.amazon.de/Ein-Sprung-durch-Raum-Zeit/dp/1502912031/ref=la_B00LYAWE7C_1_1?s=books&ie=UTF8&qid=1440882557&sr=1-1

http://www.amazon.de/Flug-747-Eine-atemberaubende-Entf%C3%BChrungsgeschichte/dp/1500453811/ref=pd_sim_14_1?ie=UTF8&refRID=0JZ5GY5562A5PSPAYG1F
Sonntag, August 16, 2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015


லங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும்"ஜனநாயகத்துக்கு " உட்பட்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலானதும் அதன் சட்டவாதக் காலமும்திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.தேர்தலையொட்டி ஓட்டுக்கட்சிகள்போடும் கோசங்களும் அவை முன்வைக்கும்  நகைப்புக்கிடமான வாதங்களும் இலங்கை மக்களது அறிதிறனைக் கேலிக்குள்ளாக்குவதாகும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவாகவெழுந்த அரசியலது விருத்தியில் புதிதாகாவெழுந்த கட்சியாதிக்கமும் அதன் நிதிப்பலமும் மரபார்ந்த ஆளும் வர்க்கத்தை மீறியவொரு புதிய ஆதிக்கப் போக்கை இக்கட்சிகளுக்குள் உருவாக்கியபின் இத்தகைய பெருங்கட்சிகள் இலங்கையின் புதிய ஆளும் வாக்கமாகவே உருவாகியுள்ள இந்தச் சூழலில் ,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு மட்டமல்லப் பெரும்பான்மையான சிங்களச் சமுகத்துக்கும் விட்டுவைத்திருக்கும்கும்இன்றைய சூழலில்இலங்கையின் முழுப் பொருளாதாரமும் மாபியா வைக்கப்பட்டவொரு கும்பலிடம் சிக்கியுள்ளது.இந்தக் கும்பலானது ஒவ்வவொரு இனத்துக்குள்ளும் ஓட்டுக்கட்சியை உருவாக்கி வைத்து ஆதிக்கத்தை நிலை நிறுத்துப்பலவகை ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.இதனால், சிங்கள - தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.நாளை நடைபெறும் தேர்தலையொட்டியெழுந்த அரசியற் கோரிக்கைகள் ,பரப்புரைகளைப் பார்த்தோமானால் அவை திட்டமிட்டு இனங்ளைக் கூறுபோட்டு கட்சியாதிக்கத்துக்கும் அதன் மாபியாப் பொருளாதாரக் கும்பலுக்கும் துணைபோகும் அந்நிய நலன்களுக்கான அரசியலையே நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருப்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.


இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.

இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.

இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற புதிய கட்சியாதிக்கமும் அதன் மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும்சிங்கள மரபார்ந்த ஆளும்வர்க்கத்தின் தெரிவானதைத் தொடர்ந்து தமது இருப்புக்காகவே பல மட்டங்களில் உந்து வினையாக்குகின்றன.இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இது பேசும் ஜனநாயகமென்பது வெறும் வெற்றுக் கோசமாகும்.இலங்கையின் இன்றைய மாபியாப் பொருளாதார நகர்வானது ஒருபோதும்ஜனநாயகப் பண்பைக்கோரிக் கொள்ளாது.இதை உலக நிலவரத்துள் பொருத்திப் பார்த்தோமானால் மிகத் தெளிவாக இந்த மாபியப் பொருளாதார நகர்வின் வெளியைப் புரிந்கொள்ள முடியும்.

இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்தக் கட்சியாதிக்கமும்,மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும் இன்றைய இலங்னையின் அதிக ஆபத்து நிறைந்த புதிய ஆளும் வர்க்கமாகும்.இது, இலங்கையின் இறைமையைத் திட்டமிட்டு அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட முனைப்புடன் அரசியல் செய்கிறது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.இந்தத் தேர்தலையொட்டிய தமிழ்க் கட்சிகளது கோரிக்கைகள் இதைத் தாண்டிச் செல்வது குதிரைக் கொம்பே!

எனவே,இனஞ்சார் கட்சிகள் தத்தமது எல்லைகள் எவையென்பதைத் தெட்டத் தெளிவாகவே புரிந்து வைத்து அதற்கேற்பவே தேர்தற் கோரிக்கைகளை முன்வைத்து பெருங் கட்சியகளது முகவர்களாக இயங்குகிறது. இவைகளின்வழி, இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு மீளவும் தலையில் மிளகாய்தாம் அரைக்கப்படுகிறது -அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலுஞ் சரி இல்லை எந்தக் கூட்டானாலஞ்சரி இதுவே தலைவிதி.


தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் மரபார்ந்த சிங்கள ஆளும் வர்கத்தைக் கடந்த இந்தப் புதிய மாபியாப் பொருளாதாரத் தாதாக்களை  உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையை முள்ளிவாய்க்கால் வரை நடாத்தியது.

இந்த நிலையில்,சர்வதேச நீதிபரிபாலனமும், சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.தேர்தற் பரப்புரையான "போர்க் குற்ற விசாரணை " யென்பது ஒருவனையொருவன்: தலைவெட்டும் வியூகமாகும்.


இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள -தமிழ் மாபியப் பொருளாதாரத் தாதாக்களின் மற்றும்  ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.


இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுக் கட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.இதைவிட்டு ஒட்டுக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து அவர்களை வெல்ல வைப்பதால் ஒந்த மாற்றத்தையும் அவை நமக்கு வழங்கப் போவதில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,
16.08.2015

Samstag, Januar 03, 2015

நிறைவேற்றதிகாரமுடைய "சனாதிபதி"க்கான தேர்தல்:2015

 "மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துகு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!"

 இந்த 2015 ஆம் ஆண்டானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாரிய அரசியற் சதி-குழிப் பறிப்புகளின்வழி இலங்கையின் கொடிய இராணுவ ஒடுக்குமுறையை இன்னும் வலுவாக்கும் ஆண்டாகவே இருக்கப் போகிறது.அதற்கான பல வியூகங்கள் நிலத்திலும்-புலத்திலும்தொடர்ந்து நடாத்தப்படுகிறது.ஒரு புறம் மேற்குலக அரசுகளும்,நவலிபரல் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறம் இலங்கையை ஆளும் மகிந்தாவின் தலைமையிலான  ஆளும் கட்சியும் அதன் ஆசியப் பொருளாதாரக் கூட்டணிகளுமாக இலங்கையின் இனங்களுக்கிடையில் நகர்த்தும் அரசியலானது மீளவும், அந்நியருக்காக நமது மக்களைக் கொல்லப் போகிறது.

இது, குறித்துப் பேசுவதற்கான முறைமைகள்  வரும் சனாதிபதித் தேர்தலையொட்டிப் பல நிலத்திலும்-புலத்திலும் நிகழ்கிறது.புலத்தில் அணித்திரட்சிகொள்ளும் தனிநபர்களும்,அவர்களை உள்ளிழுத்து அரசியல் அமுக்கத்தை உருவாக்கும் அந்நியத் தேசங்களது ஏஜென்டுகளும் எங்கு திரும்பினாலும் பொறியமைத்துக் காத்திருக்கிறார்கள், புரட்சிகரக்கட்சி,சம உரிமை இயக்கம்- கூட்டணியென.இந்தச்                   ” சமவுரிமையின் பின்னே தமிழர்களும்-சிங்களவர்களும் சமமானவுரித்துக்களை இலங்கையில் பெறும்போது - உனக்கென்ன சுயநிர்ணயவுரிமை?”அப்படித்தான் கேட்டபடி சமவுரிமைக்கான இயக்கம்- முன்னணி என்ற கோசம் உட்கருத்தைப் புதைக்கிறது!;இந்தச் சனாதிபதித் தேர்தலில்               [[ //  ஆள்வோரையும் - ஆள விரும்புவோரையும் வாக்களித்து தெரிவு செய்வதானது, எங்களை நாங்கள் தோற்கடிப்பதாகும். இதற்கு மாறாக அவர்களை தோற்கடிக்குமாறு இடது முன்னணி கோருகின்றது. தோற்கடிப்பது என்பது இடது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை வாக்குகள் மூலம் வெல்ல வைப்பதல்ல, மாறாக நாம் ஒவ்வொருவரும் ஆள்வோரையும் - ஆளவிரும்புவோரையும் அரசியல்ரீதியாக தோற்கடித்து வெல்லுவதாகும். வாக்கு எண்ணிக்கையை வைத்து வெற்றி தோல்வியை தீர்மானிப்பதல்ல, மாறாக எமது அரசியல் என்ன என்பது தான், வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கின்றது.// : http://ndpfront.com/index.php/175-porattam/2015-01-01-18-21-20/2730-2015-01-02-20-39-14  ]] போட்டியிடுகிறாதாம் -நமது காதுகளில் பூ வைத்தபடி!வரும் சனாதிபதித் தேர்தல் குறித்து  நிறையப் பேசியாகி விட்டது.இந்நிலையில்  மீளவுஞ் சொல்வது என்னவெனில், “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி"  அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையில் சட்டத்துக்குட்பட்ட அரசு[ The political legitimacy of a system of government and rule  ] மீளவுருவாகுமென்பது  சுத்த மோசடியான அரசியற் கருத்தாக்கமாகும்.இது, புதிய -உலகு தழுவிய வர்த்தக -பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல இன்று  சட்டவாத அரசுள் வகிக்கும் பாத்திரத்தையும்  [Trading away privacy TTIP, TiSA and European data protection .Read more... :  http://www.eurozine.com/articles/2014-12-19-bendrath-en.html ]   மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கையை ஆளும் கட்சிகள் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருப்பதிலிருந்து  அந்நியச் சக்திகளைத் தத்தமது நண்பர்களாகவும் எதிரிகளாகவும் காட்டும் அரசியலை வகுக்கும் உள் நோக்கம், அந்த அந்நியப் புறச் சக்திகளின் அழுத்தமான உறவுகளோடு தொடர்புறுந் தருணங்களை வரும் சனாதிபதித் தேர்தலின் பரப்புரைகளது வியூகத்துள்  இப்போது உய்துணர முடியும். [ இதையும் வாசிக்கவும் : https://www.facebook.com/suseenthiran/posts/10152527694685373 ]

இலட்சக் கணக்கான மக்களை”தமிழீழப்போராட்டம்”செய்து கொன்று குவித்த அந்நியச் சக்திகளும் அவர்களது அடியாட்படைகளான இயக்கங்களும், அந்த இயக்களது மாயையுள் தமிழீழக் கனவுகாணும் புலத்துப் புலன்பெயர்ந்ததுகளும் தொடர்ந்து இந்தச் சதிவலைக்கு உடந்தையாகவே இருக்கின்றனர்.

இதிலும், வழமைபோல இரயாகரன் குழுவே முன்னணியில் நின்று தமது அந்நியச் சேவையை முக மூடிமனிதர்களுடாகவும், முகந்திறந்த இரயாகரன் என்ற குறியீட்டுக்கூடாகவுஞ் செய்து முடிக்கின்றனர். இதிலிருந்து, இப்போது முன்னிலைச் சோசலிசக்கட்சி,அதன்சம உரிமை இயக்கம்- இடதுசாரிய முன்னணி ; புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்பதன் அரசியலைப் புரிந்துகொண்டோமானால் நிலமை கட்டுக்கடங்காது கைதவறிப்போனதை உணரலாம்.

இதுள்,மீள அந்நியச் சக்திகளது கையோங்க அதே இயக்கவாத மாபியாக்கள் துணையோடு மக்களை அந்நியச் சக்திகள் கொலைக்குத் தயார்ப்படுத்துகின்றனரென இப்போது கட்டியம் கூற முடியும்.

இலங்கைப் பிரச்சனையுள் முடிவுகளை தீர்மானகரமாக எடுக்கும் ஆற்றலைப் போராட்ட இயக்கங்களிடமிருந்து தட்டிப்பறித்த அந்நிய ஆர்வங்கள், இலங்கைப் போர்வாழ்வுக்கு மிக நெருங்கிய உறவில் தமது வலுக்கரங்களை இறுக்கும்போது அழிவு இலங்கைச் சமுதாயத்துக்கே கடந்த காலத்தில் ஏற்பட்டது.இது,மிக நீண்ட வரலாறு நமக்கு.இப்போது ஓட்டுக்கட்சிகளது வியாபித்த ஆதிக்கத்தைத் தமது பக்கஞ்சார்ந்து இயக்கிவரும் அந்நியச் சக்திகள் இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை மிக மென்மையான முறையில் ஏற்படுத்தும் வியூகத்துள் மக்களை வீழ்த்தியுன்னர்.

இதைத் தக்கபடி உணர்ந்துகொண்டு மக்களின்  சுயாதிபத்திய அழிவைத் தடுக்கும் ஆற்றலை எந்தக்கட்சியுமே-முன்னாள் ஆயுத இந்நாள் ஒட்டரசியற் குழுக்களுமே கொண்டிருக்கவில்லை. இத்தனை கட்சிகள் -குழுக்கள் ஒரு  நூற்றாண்டையே இரத்தக்களரியாக்கி வந்ததில்  நமது அன்றைய போராட்ட முறைமைக்கு மிக நெருங்கிய பங்கு இருந்திருக்கிறது.தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்- இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் ஜனநாயகம் ;மக்கள் உரிமை பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.

இதற்குத் தோதாகச் சொல்லப்படும்  >>தேர்தல் வாக்கைப் பெற்று ஆட்சியில் அமருவதற்காகவோ, பேரம் பேசுவதற்காகவோ இடது முன்னணி தன்னை முன்னிறுத்தவில்லை. மக்கள் வாக்களிப்பதன் மூலம் எந்த மாற்றமும் வராது என்பதை சொல்லவும், அவர்களை அணிதிரட்டவுமே தேர்தலில் நிற்கின்றது. இதன் மூலம் உண்மையான மாற்றத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும், சொந்த வழியைக் காட்ட முனைகின்றது. -இரயாகரன் குழு .    <<  என்பதெல்லாம் மீளவும் அதே  அந்நியத் தேசங்களது நலனுக்காகக் கட்டப்படும் மிகக் கெடுதியான கருத்தியல் மோசடியென்பதைக் குறித்து நாம் பேசியாகவேண்டும்.

இலங்கையைச் சாதகமாக மேற்குலகத் தேசத்திடமிருந்து பிரித்தெடுத்துக்கொண்ட சீன-இருசிய மற்றும் இந்தியக் கூட்டுக்கு மிக நெருக்கடியை கொடுக்கத்தக்கவர்கள் "ஏமாற்றி அழிக்கப்பட்ட"  தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே.அவர்கள் தமது எதிர்வினையை மீளத் தகவமைக்கும் பண்பைக் கொண்டிருப்பது இயல்பான வாழ்வை-உரிமையை மறுக்கும் சிங்கள அரசினது ஏமாற்று மோசடிகளால் நேருபவை.எனவே,தமிழ்பேசும் மக்களை ஒட்டவொடுக்கும் அரசியலைக் கடைப்பிடிக்கும் சிங்கள ஆதிக்கத்துக்கு அநுமதியளித்துச் சிங்கள ஆளும்வர்க்கத்தைத் தமக்குத் தோதாக வளைத்தெடுத்த சீன-இந்தியக் கூட்டுக்குப் புதிய நெருக்கடிகளை வழங்குபவர்கள் தமிழர்கள்தாம்.தமக்கான நீதியைப் பெறுவதென்பது அவர்களது வாழ்வோடும்-இருப்போடும் சார்ந்ததென்பதால் புலிகளை அழித்த குறிப்பிட்ட புதிய அரசியல்போக்குக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதென்பது இயல்பான மனித நடாத்தையாகவே இன்று புலப்படுகிறது.இதைப் புரிந்து,  தக்கப்படி காய் நகர்த்தும் அந்நியச் சக்திகள் தமிழ்த் தலைமைகளை ஐக்கிய தேசியக் கட்சியின் பின் அணி திரட்டியுள்ளனர்.இந்த நெருக்கடி-தமிழ்பேசும் மக்கள் தம்மைப் பழிவேண்டிய அரசுகளையும்,அவர்களது புதிய பொருளாதாரவிலக்குகளையும் நோக்கியதாகவிருக்குமென்பதும் இத்தகைய தேசங்கள் புரிந்துகொண்டதுதாம்.

இதன் அர்த்தமென்னவென்றால் இலங்கை அரசியலில் மெல்ல உருவாகிய இராணுவத் தன்மையிலான ஆட்சியதிகாரம் பெயரளவிலிருந்த ஜனநாயகப் பண்பை மறுவாக்காஞ் செய்தபோது,அது அரை இராணுவச் சர்வதிகாரமாகத் தோற்றமுற்றதென்பதே.இதன் தொடர்விருத்தியானது இலங்கை அரை இராணுவச் சர்வதிகாரத்துக்குச் சார்பானதும், புதிய ஆசியப் பொருளாதாரக் கூட்டணிக்கு நெருக்கடியற்றதுமான இன்னொரு “தமிழ் மக்கள் உரிமைசார்” கருத்தியலை வலிந்து தமிழ் மக்களுக்குள் உருவாக்கும் போக்கில் பாசிச  ஏகாதிபத்தியத் தேசங்களை நமது நட்புச் சக்தியாக வர்ணிக்கும் தன்மையிலானவொரு  "எதிர்ப்பு -மாற்று"  அரசியல் கட்டமைப்பைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக உருவாக்க முனைவது. இங்குதாம் இலங்கையின் இரண்டு பிரதானக் கட்சிகளும் தமிழ்க் குறுங்குழுக்களை மிக நேர்த்தியாகத் தகவமைக்கின்றன;கையாளுக்கின்றன!
இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் இனங்களைப் பிரித்தாளுவதே!இந்தப் பிரித்தாளும் தன்மையின் முதல் நிகழ்வாகப் புலம் பெயர் தமிழ் மக்களுக்குள் பல்வேறு பிளவுகளைத் தகவமைத்து ஒரு பக்கம் “புரட்சி”க்காக இடதுசாரிய மாற்றீடுகாவும் [ இது சீன -இந்திய  மற்றும் இலங்கை வியூகம்]  ,இன்னொரு பக்கம்  சனநாயகத்தை உண்டு பண்ணுவதற்காக "நிறைவேற்றதிகாரமுடைய சனாதிபதி முறையை "அகற்றுதல் என்று [இது மேற்குலக வியூகம்] பரவாலாக இயங்கும் அந்நிய நலன்சார் முன்னெடுப்புகள் புலம்பெயர் தமிழ் இளைய தலைமுறையினது போராட்டவுணர்வைத் தமக்கேற்ற வகையில் மட்டுப்படுத்துவதாகவிருக்கிறது.இது,புலத்துப்  பணப் புலிகளது முழுமையான சதி அரசியலின்வழியே இயங்குகிற தென்றுவுண்மையையும் நாம் புரிந்தாகவேண்டும். இந்தத் தளம் மேற்குலகு-ஆசியக் கூட்டினது இரு முகாங்களாகப் பிளவுபட்டிருக்கிறது.

இந்த நிலைமையில்  புதிய ஜனநாயக மக்கள் முன்னணிக் கட்டுரை வரைந்த குழுவின்  கூற்றுக்குள்-கருத்துக்குள் பொதிந்திருக்கும் எஜமான விசுவாசம் இன்னுமொரு முறை நம் மக்களை ஏமாற்றுவதற்கு இந்த ஏகாதிபத்தியத் துரோகிகள் நம் புத்திஜீவிகளைப் பயன்படுத்துவதென்பதற்கு நல்லதொரு உதாரணமாகும். இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் ஆசிய -மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.

கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் வலு இலங்கையை ஆளும் எந்தக் கட்சிக்கும் இருக்கமுடியாது. அவை, முடிந்தவரை அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிறுவ முனையுந் தறுவாயில் மட்டுமே இலங்கையை ஆளும் தகமையுடையவர்களாக உருவாக்கப்பட்டு, ஆட்சியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தவுண்மையைத் திட்டமிட்டு மறைத்து //  அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைச் சேவைகளைக் கூட மறுத்து வருகின்ற அமைப்பு முறையாகிவிட்டது // என்று இலங்கைக்குள் கொட்டாவி விடுகின்றனர்.

இங்கே,இலங்கையின் சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளைச் சொல்லியே அரசியல்-போராட்டஞ் செய்யும் மாபியாக் கட்சிகள்-குழுக்கள்வரை இத்தகையப் போக்கிலிருந்து தமது நலன்களை அறுவடை செய்யும் இன்றைய நோக்குநிலையிலிருந்து இந்த”புரட்சிக் குழுக்களின்”குழுவாததத் தகவமைப்பு வேறுபட்டதல்ல. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் கட்டுரைகள் - தேர்தல் அறிக்கைள் நல்ல உதாரணமாக இருக்கின்றன.மக்களின் விடுதலையிலிருந்து தம்மைப் பிரித்தெடுத்துக்கொண்ட இந்த குழுவாத வரலாறு எப்பவும்போலவே தனித்த “தார்ப்பார்களை” உருவாக்கி வைத்துக்கொள்கிறது!இது,தான்சார்ந்தும் தனது விருப்புச் சார்ந்தும் ஒருவிதமான தெரிவை வைத்தபடி, தனக்கு வெளியில் இருக்கும் எதிர்நிலைகளைப் போட்டுத் தாக்குவதில் மையமான கவனத்தைக் குவிக்கிறது.இங்குதாம் அதன் அந்நியச் சேவை புரியத் தக்கது.அதன் உண்மையான நோக்கு மக்கள் அணிதிரள்வதைத் தடுத்து,மக்களது சுயவெழிச்சியை ஒடுக்குதல் அல்லது காட்டிக்கொடுத்தலென்பது வெளிப்படையற்ற உள் நோக்காக விரிகிறது.இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதுதாம் இன்றைய அரசியல் யதார்த்தம்.எனவே, இந்த சனாதிபதித் தேர்தல் மோசடியை நிராகரித்து மக்கள் தம் எதிர்பைத் தேர்தலன்று கருப்புக்கொடி ஊர்வலமாக  எடுத்தாகவேண்டும்.

மோசடி ஆட்சி மாற்றம் மற்றும்  அந்நிய நலன்களது வியூகத்துக்கொதிராக வீதிக்கு இறங்க வேண்டும்.இதுவே குறைந்தபட்சம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைச்  சர்வதிகாரத்துக்கெதிராகவும் ;அந்நியத் தேசங்களது தரகர்களாக -அடியாளாகவிருக்கும் ஓட்டுக்கட்சிகளுக்கெதிராகவும் அணி திரள்வதையும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அரசியலை முதற்கண் புரிவதற்குமான வழியாகும்.இதைவிட்டு மைத்திரிபால சிறீசேனாவை ஆதரிப்பது;அவருக்கு ஓட்டுப்போடுவதென்பது சாரம்சத்தில் மேற்குலக வியூகத்துகத்துக்கு உடந்தையாக இருப்பதென்பதேவுண்மை!

ப.வி.ஶ்ரீரங்கன்
யேர்மனி,
04.01.2015