Montag, Dezember 28, 2015

புலம்பெயர் தோழர்கள் : இந்திய இறைமைக்கு ஆபத்தானவர்கள்!

புலம்பெயர் தோழர்கள் : இந்திய ஒருமைப்பாட்டுக்கு -இறைமைக்கு ஆபத்தானவர்கள்!


இலங்கை - இந்திய நலன்களைப் பரவலாகத் தமிழ்த் தேசியவினத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிறுத்திய இத் தேசங்களது ஆளும் வர்க்கங்கள் ,பொதுவாகத் "தமிழ் ஈழத்தின் விடுதலையை" தென்னாசியத் தேசியவினங்களது அடிமைவிலங்கையொடிக்கும் புரட்சிக்கு வித்திடுமொரு முகிழ்ப்பாகவே இனங் கண்டன.

தத்தமது தேசங்கள் பல்வேறு தேசியவினங்களது சிறைக் கூடமாகவிருப்பதை அவர்கள் மிக நேர்த்தியாகவே அறிவர்.இத்தகையவொரு வியூகத்துள் ஈழமக்களது விடுதலையை அழிப்பதற்கான பல முகாந்திரங்களை ,இத்தகைய தேசங்கள் வகுத்போது நம்பவைத்து -உதவியளித்துப் பிளந்தழித்தெலன வியூகத்தை வகுத்துக்கொண்டன.

இத்தகைய வியூகத்துக்குப் பலியான பல முன்னணி ஈழத்து அமைப்புள்  இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் ;பிற சிறு தேசிவினங்களும் தீங்கிழைத்துத் தம்மை இந்தியாவின் -சிங்கள அரசின் எடுபிடிகளாக்கின.

சமீபத்தில் ,புலிகளை முள்ளிவாய்க்காலில் பூண்டோடு அழிக்கும் திட்டத்துள் தமிழ்பேசும் இனத்தைப் பல்வேறு மரபார்ந்து பிளவுகளைக் கூர்மைப்படுத்திப் பிளப்பதற்காக -திட்டமிடப்பட்ட பிரதேச -சாதிய வாதங்களையெல்லாம் மேல் நிலைக்குத் தள்ளிக் கூர்மைப்படுத்தும் அமுக்கக் குழுக்களை, இந்திய -இலங்கை அரசுகள் தகவமைத்தபோது அத்தகைய குழுக்களது உறுப்பினர்களாக ;அநுதாபிகளாகவிருந்த  புலம்பெயர் "தோழர்கள்"இன்று, நூற்களையும் ;சஞ்சிகை மற்றும் இலக்கியம் சார்ந்தும் வெளியீடுகளைச் செய்கின்றனர்.

 அவர்களை, இதுவரை இனங்கண்டவர்கள் சமரசமின்றி இதுவரை எதிர்க்கிறோம்.இது, அவர்களது தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ இருத்தல் சார்ந்தோ அல்ல!மாறாக ,அவர்கள் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் இவர்களது அமுக்கக் குழுவாதமானது இந்திய -இலங்கை அரச லொபிகளாக இவர்களுக்கு அளித்த வரலாற்றுப் பாத்திரத்தையும் ;இதன் விளைவாக இவர்கள் செய்த பாரிய தவறுகளையுமே நாம் எதிர்கிறோம்.

இத்தகைய தவறய் ,இவர்கள் தெரியாது செய்யவில்லை!

மாறாகத் தெரிந்தே -உணர்ந்தே செய்தனர்.

தமிழ் தேசியத்தின் விடுதலை ஒரு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியமைக்காதுபோனால் அதன் வெற்றி தமிழ்ச் சமுதாயத்துக்குள் இருக்கும் பல்வேறு மத -சாதிய வேறுபாடுடைய மக்களுக்கு மீளவும் ,சிறைக்கூடமாக இருக்கும் என்பதாலும்;ஈழதேசமானது இவர்களுக்குத் தூக்குமேடையாக மாறும் என்பது பரவலாக இவர்களால் புரியப்பட்டதே.

இத்தகைய ஈழத் தேசிய விடுதலைப் பலவீனமானது புலிகளது எழிச்சியோடு மேல் நிலைக்கு வந்தபோது அதைச் சரியாகப் பயன்படுத்திய நமது எதிரிகளான இந்திய -இலங்கை ஆளும் வர்க்ககங்கள் ,இவர்களது துணையோடுதாம் ஈழமக்களைப் பிரதேசரீதியாக -சாதிரீதியாக மிக ஆழமாகப் பிளந்து, தமது நோக்கதை நிறைவேற்றியது.இது வரலாற்றுண்மை!


இங்கு ,இதுவரை (இந்த) இந்திய -இலங்கைப் புலத்து லொபிகளை எதிர்த்து விவாதித்தவர்கள்கூட த் தற்போது அவர்களது அரசியலை மிக நேர்த்தியாகப் பின் தொடர்கின்றனர்.

இங்கே, தோற்கடிப்பட்டது ஈழதேச விடுதலை மட்டுமல்ல மாறாகத் தென்னாசியச் சிறுபான்மை இனங்களளது விடுதலையுந்தாம்!

ப.வி.ஶ்ரீரங்கன்
27.12.2015

Keine Kommentare: