Donnerstag, Dezember 27, 2012

நாம் "தமிழீழம்" கண்ட பரம்பரை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,மக்கள் கிளர்ச்சி,மாணவர் கலகம்,கைது,புனர்வாழ்வு-சில குறுக்குவெட்டுக் குரங்குப் பார்வைகள் குறித்துக் " குழந்தைகள் கண்ட குடியரசுக் கூத்தில்"  எனது குரலும்...

லகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புரட்சி கரக் கட்சியையும் கட்டிக்கொண்டு"புதிய ஜனநாயகம்"பேசுகின்றனர்-தமிழர்களது சுய நிர்ணயம் உரிமைதாம் என்கின்றனர்.

முள்ளி வாய்க்காலில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியபடி புலிகளும், அதே மக்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசும் வியூகமமைத்துக்கொண்டு, ஒரு இனப்படுகொலையை இந்திய-அந்நிய நலன்களுக்கொப்ப இலங்கை யுத்த ஜந்திரஞ் செய்து முடித்துக்கொண்டிருந்தபோது,கிழக்குப் பகுதித் தமிழ் மக்களோ அன்றி வடபகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பல்லாண்டு வாழ்ந்து வந்த வடபகுதி மக்களோ "எதுவுமே நடக்காத ஒரு தேசத்துள் வாழ்வதுபோன்று" வாளாதிருந்தனர்.

"வன்னியில் மக்களை விடுதலை செய்"

"புலியை அழிப்பதெனும் போர்வையில் தமிழ்பேசும் மக்களை நரவேட்டையாடும் அந்நிய-இலங்கை அரசுகளே யுத்தத்தை உடனே நிறுத்து"

"யுத்தத்தின் மூலம் தமிழர்கள் உரிமையை நசுக்காதே"

"புலிவழிப் போராட்டத்தைக் காரணங்காட்டி எம்மைத் திறந்தவெளிச் சிறையில் பூட்டி வைக்காதே"
எனும்,குறைந்தபட்ச மனிநேயக் குரலைக்கூடக் கொடுக்கமுடியாது வடபகுதி மக்களும்,அவர்களது பல்கலைக்கழக மாணவர்களும் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து இலங்கை இராணுவவாதத்துக்குமுன் மண்டியிட்டுக்கிடந்தனர்.வன்னியிலோ இலங்கையிலென்றும் நடந்தேறாத பெரும் இனப்படுகொலை நடந்தேறியபடி இருந்தது-புலிப் பாசிசமானது "அதை"  இலங்கையரசு நடாத்திமுடிக்கும்வரை தனது கயமையான அரசியலை விட்டொதுக்க முடியவில்லை!

ஆனால்,இவ்வளவு பெரிய இனப்படுகொலையை உணர்வுரீதியாகக்கூட உள்வாங்க மறுத்து, ஏதோ செவ்வாய்க் கிரகத்துள் வாழ்ந்ததுபோன்று வாளாதிருந்தவொரு வடபகுதித் தமிழர்கள் சமீபத்து "மாவீரர் தினக் கொண்டாட்ட-நினைவுகூருரிமைக்காக " மட்டும் தமது வாரீசுகளைக்கொண்டு பல்கலைக் கழகத்துள் ஆர்பாட்டஞ் செய்தனராம்.இது யாருடைய காதில் பூச் சுத்தும்(ஒரு அந்நிய நல-இலங்கை இராணுவாத) அரசியல்?

முள்ளி வாய்க்கால் படுகொலைக்குடந்தையாக மௌனித்திருந்தவொரு மக்கட்டொகுதி,அதன் பிறகாவது இனப்படுகொலை அரசியல்-யுத்தங் குறித்து"விசாரணைக்கான"ஆர்ப்பாட்டத்தையோ அல்லது அதன் விளைவால் தமது உரிமைகள் அழிக்கப்படுவதையோ சுட்டிக்காட்டி, அடிப்படையுரிமைக்கான குரலைத் தன்னும் பொதுவெளியில் எடுத்துவர முடியாது,இராணுவத்தின் தேவைக்கேற்பவொரு ஒட்டுச் சமுதாயமாகக் கிடந்து சீரழிந்தது.இந்தச் சமுதாயத்துள் வியூகங்களை அமைத்துத் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவவாத ஆதிக்கத்தின் இருப்புக்குச் சாதகமாகப் பல்கலைக் கழகத்து மாணவர்கள் "மாவீரர்-நினைவு" உரிமைக்க்காகக் குரலெடுத்துக் கலகஞ் செய்கின்றனர்.அதன் போராட்ட முன்னோடிகளென இலங்கை-இந்திய நலனுக்குப் பலியானவர்களை மெல்லக் காவலில் வைத்துக்கொண்ட இலங்கையின் வியூகமானது அவர்களை வெளியல் விடாது,புனர் வாழ்வெனத் தன்னைக் காத்துக்கொண்டது.

மாணவர்களுக்குப் புனர் வாழ்வளித்துவிட்டு விடுவிப்பதென்பதன் அர்த்தம்,தமது வியூகம் அம்பலப்படுவதைத் தடுப்பதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்பாவி மாணவர்களை வைத்து நடாத்தப்படும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான அந்நியச் சதியரசியலானது மீளவும்,தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கும் போலி புரட்சி வாதிகளால் "மக்களது-மாணவரது" எழுச்சியாகக் காட்டப்படுவது அவர்களது எஜமானருக்கான வொரு சேவைதாம்.

இப்படியாகத் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் இந்த விபரீதமான புரட்டுப் புரட்சிப் பரப்புரைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும்வரை அந்நிய வேட்டையை-இனவொடுக்குமுறையையெவரும் புரிந்து அணித் திரட்சியடைந்து மக்களை அண்மித்த அரசியலை நிலத்திலும்-புலத்திலும் முன்னெடுப்பது நடைபெறாது.

உலகில் எந்தவொரு இனமும் இப்படித் தனது சொந்த அரசியலால் பலியிடப்பட்டது கிடையாது.இது தமிழர்கட்குரிய பிழைப்புவாத அரசியலாக நாறிக்கிடக்கிறது.

எங்கும்,எதிலும் பிழைப்பை நடாத்தியவொரு இனம் தனது சொந்த மக்களையே பலியிட்டுப் பண-நிதி மூலதனத்தைப் பெருக்கி உலகெல்லாம் முதலாளிகளாக வர்த்தகஞ் செய்கிறது.இதற்காகப் பலியிடப்பட்ட மக்களது உயிரானது எவ்வளவு தூரம் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்டதென்பதைப் புரிய புலிகளது உயிராயுதக் கூத்தைக் கண்முன் நிறுத்துங்கள்.ஒரு டக்ளஸ் தேவா நந்தாவைக்கொல்ல எத்தனை மனித வெடிக் குண்டைத் தயார் செய்தனர்?ஒரு பெண் கமராவுக்குள் பிடிபடும் தற்கொலைக் காட்சியானது உலகத்துள் நமது வக்கிரமான கொலையரசியலது சாட்சி அல்லவா?இங்கே,மனித விழுமியம்-மகத்துவம்,ஜனநாயகப் பண்பு, என்பனவற்றின் அர்த்தங்கள் என்ன?புரியவே முடியாதவொரு காட்டுமிராண்டித்தனமான அராஜக அரசியல், திரை மறைவில் நிகழ்த்தும் வெளிப்படையற்ற சதிகளை முகமூடி மனிதர்கள் புரட்சிகாரர் போர்வையில் நடாத்தும் இந்தச் சூழலினுள் ஜனநாயகங் குறித்துப் பேசித்தான் ஆகணுமா?

இன்றய தேச அரசுகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ஜனநாயகமெனப் பொத்தாம் பொதுவாகவுரையாடும் இது எத்தகைய மதிப்பீடுகளுக்குப் புரிதற்பாட்டுக்குள் நம்மை வைத்திருப்பதென்பதில் குழப்பமான திசையிலேயொவ்வொருவரும் ஜனநாயகமெனக் கூக் குரலிட்டுக்கொள்கிறோம்.

மேற்குலகம் ஜனநாயகமெனச் சொல்லிக்கொண்டதும்,புரியவைத்ததும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்தும் இதுவரையெந்தத் தேசத்துள்ளும் மக்கள் சுயாதீனமாக வாழ்வதாகத் தெரியவில்லை!நமக்குள் ஜனநாயகங் குறித்துப் பரவலாக வகுப்பெடுக்கப் பலர் முனைந்துகொண்டே இருக்கின்றனர்.எனினும்,மக்கள் ஏதோவொரு தளைக்குட்பட்டுத் தமது ஆன்மாவையிழந்து உழைப்பிலிருந்தும் ,துய்ப்பிலிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுச் சதா சாகடிகப்படுகிறார்கள்.இந்தச் சாவு பௌதிகவிருத்தலை மறுக்காத புதிய போக்காக மாறுவதிலிருந்து மனிதர்களைக் கட்டிப்போடும் வாழ்வுப் போக்குகளிலிருந்து இந்த ஜனநாயத்தைப் புரிந்துகொள்வது படு சிரமமானதாகவே இருக்கிறது.

பூர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.இலங்கையில்,ஆளுங்கட்சிகள்,எதிர்க்கட்சிக் கூட்டணிகளெனவொரு பரந்துபட்ட மக்களது நலனைச் சொல்லிப் பிழைக்கும் அரசியல் யுத்தத்துக்குப் பின்பான இன்றைய சூழலில் உருவாகிவருகிறது.


தொடர்ந்திருத்தி வைக்கப்பட்டிருக்கும் இராணுவ ஆதிக்கமானது அதிகாரத்தை மக்கள் நம்பும்படி ஏற்க வைப்பதில் பிரயத்தனஞ் செய்கிறது.இது நிலைப்பட்டு,மக்கள் சமுதாயத்தைக் காவுகொள்ளுமொரு அரசியலூக்கத்தை இலங்கைச் சிறுபான்மை மக்களுக்குள் தொடர்ந்திருத்தி வைக்கப்படும் தறுவாயில் மக்களது எதிர்புக் குரல்களைத் திட்டமிட்டு ஆரம்பத்திலேயே நசுக்குவதற்கேற்றவாறு அந்நியச் சகத்திகள்-இலங்கை அரச கூட்டுத் தமிழ்ப் பகுதியில்பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்தி வருகிறது.


அதற்கேற்ப யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமானது தனது பாரம்பரிய "போராட்ட வரலாற்றை" இதன் குறியீட்டு வியூகத்துக்குப் பயன்படவும் வரலாற்றில் அதன் மாணவர்களது வர்க்கவுணர்வும்,சிறுபிள்ளைத்தன போராட்டப் பாரம்பரியமும் உடைந்தையாச்சு.


புரட்சியை பல்கலைக்கழகத்துக்குள் எதிர்ப்பார்ப்பவர்களும் புரட்சிக்கான புறநிலைகள் குறித்து வகுப்பெடுப்பதும் நமது காலத்தின் கோலம் ஆகி வருகிறது.

இப்படியாக நாம் மக்களைக்கொன்று தின்றுகொண்டே புரட்கரத்"தமிழீழம்"கண்ட பரம்பரை!

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2012

Montag, Dezember 24, 2012

தாலி அறுப்பார் பேசும்"புரட்சி"-புரட்டென்பதேவுண்மை!

மது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.புலம்பெயர்ந்து நாடோடிகளாகவே அலைந்து அந்நிய மண்ணில் அடிமையானோம். இதையொருத்தன் பொருளாதார அகதிகளென்றும், "ஈழப்போராட்டத்தை "முன்னெடுக்காத தீயவர்களென்றும் புலி வழியில்-புலியின் பெயரால் திட்டுகிறன். 2009 வரை அவன் மௌனித்துப் பாசிசத்தின் முன் நின்றான்.அவனும் புலம்பெயர்ந்த பொருளாதார அகதியில் உட்படாதது "பாதிகப்பட்டவன்" என்பதாக?...


இன்னொருவன்,தானே புரட்சிவாதி,மாணவர் போராட்ட முன்னோடியென வகுப்பெடுத்துப்புலம்பெயர் தளத்திலுள்ள மாற்றுச் சக்திகளைப் புலிக்குப் போட்டுக்கொடுத்த கையோடு புரட்சி பேசிப் பிளந்தெறிந்த தமிழ் நியாயவாதங்கள் அனைத்தையும் பாசிசத்துக்குமுன் அடிபணியவும்,அதற்குள் அமிழ்ந்துபோகவும் புரட்டுப்பேசிக் கொண்டான்.அதன் தொடரில் இன்றும், நமது மக்களைக் காட்டிக்கொடுத்தபடி  இலங்கையில் ";இதோ புரட்சி"யென மக்களிடம் இராணுவாதவொடுக்குமுறையை நிலைப்படுத்தும் இந்த இரயாகரனோ  புலிகள் செத்த அடுத்த ஒரு சில மாதத்துள் சொந்த வீட்டைப் பாரிசில் வாங்கிக் குடி புகுந்தபடி, "புரட்சிக்குத் தயாராகிறார்கள் மக்கள்"என்று நிலத்து மக்களை எவருக்கோ காட்டிக்கொடுக்கவொரு கட்சியைக் கண்டபடி கட்டிக் கயவர்களைச் சேர்த்துக் காசு பார்கக்கிறான்.
நல்லது.


இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.


தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.புரட்சியென்கிறது,
புதியஜனநாயகமென்கிறது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்கிறது!
சிங்கள மக்களுடன் உரையாடலென்கிறது.


இராணுவத்துள் இணைந்த பெண்களது உரிமையென்றெல்லாம் காதில் பூவைக்கும் இந்த இரயாகரன்கூட்டு சொந்தவீடு,சொந்தக் கடைகளெனச் சொத்தை வைத்துப் புரட்சி செய்கிறதாம்.


விட்டால் அவையெல்லாம் கட்சி நிதியெனச் சொல்லவும் ஒரு பெயர்ப்பலகைக் கட்சியையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது!


பாருங்கள்,பிழைப்புவாதிகள் புலிவடிவில் மட்டுமல்ல அப்புலிகளால் புரட்சி வேடம்போடவைத்த தமது புரட்டு வாதிகளையும் புரட்சிக்கரர்களாகக்காட்டிப் பிழைப்புவாதம் புரட்சியென்றும் வரலாறு எழுதப்படுகிறது.


இப்படி, இவர்கள் செய்த போராட்டமெல்லாம் மக்கள் சொத்தை இலங்கையின் வங்கிகளுக்குள் கொள்ளையடித்ததும் அதைக் கையக்கப்படுத்த ஒருவனையொருவன் போட்டுத் தள்ளியதும் புரட்சிக்குரிய குணாதிசயங்களாக நமது வரலாறு எழுதப்படுகிறது.


நமது மக்களைப் பலவடிவில் சிதைத் இந்தப் பரதேசிகள் மக்களை ஏமாற்றித் தமக்குச் சொந்தக் குடிமனைகளைக்கட்டியும்-கொள்முதல் செய்தும் வாழும்போது எதற்காக மீளவெஞ்சிய தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சிங்களவரசின் இராணுவவாதத்துள் முடக்கும் சதியைப் போராட்டம்,உரிமை,புரட்சியென்று சொல்லிச் செய்கின்றனர்?


நமது காலத்தின் பீடைகள் இந்தக் கள்வர்கள்!


புரட்சி பேசியே ஒரு இனத்தைப்புலிப்பாசிசத்திடமும்,அந்நியச் சக்திகளிடமும் மண்டியிடப்பண்ணியவர்கள்,உண்மையான போராளிகளைக் கைகாட்டிப் பாசிசத்தால் அழித்தவர்கள்,விஸ்வா நந்ததேவனது கொலையோடு கோடிக்கணக்கான கற்றன் நசனல் வங்கிக் கொள்ளைப் பணத்தை-நகைகளைத் தமக்குள் புதைத்துக்கொண்டனர்.


இவர்கள் யாருடைய சொத்தை வங்கிக்குள் கொள்ளையடித்தனர்?


சிங்கள அரசினது செல்வத்தை?


இல்லை-இல்லவேயில்லை!


அப்பாவி யாழ்ப்பாண விவசாகிகளது சிறுகச் சிறுகச் சேர்த்த தங்கத்தைப் பணத்தைக் கொள்ளையிட்டனர்.அதைவைத்துச் சொத்துச் சேர்த்தனர்.அதற்காக எத்தனை பேர்களைப் பாசிசத்துக்குப் போட்டுக்கொடுத்துப் போட்டுத் தள்ளி வித்தனர்.


தலை மறைவில் திரை விரித்துக் குடியிருப்பவர்கள் கொல்லைப் புறத்தால் கோடி சொத்துடன் சுத்தல் புரட்சி செய்யும்போது சுத்தமான விடிவு நமது மக்களுக்குக் கிடைத்த மாதிரியே!


தாலியறுப்பார்!!!


இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய நயவஞ்சக அராஜகவாத அழிப்பாரைக்குறித்துப் பேசமுற்படுவது புரட்டுப் புரட்சிக்காரர்கள் அந்நியச் சக்திகளது கைக் கூலிகள்மட்டுமல்ல மக்களது செல்வத்தைக் கொள்ளையிட்ட கொடிய கொள்ளைக் கூட்டமென்றும் எச்சரிப்பதற்கே-இவர்கள் சதிகாரர்கள்,நமது மக்களைத் தொடர்ந்து அந்நியருக்குக் காட்டிக் கொடுத்து அடிமைப்படுத்தும் அந்நியத் தரகர்கள்என்பது வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும் என்பதற்கே!


இந்த இரயாகரன் கூட்டு, பெரும்பாலும் அரசியல்-புரட்சி-மக்கள் நலன்எனும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நியாயமான கருத்தியலோடு மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.


இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்

ப.வி.ஸ்ரீரங்கன்
24.12.2012

Mittwoch, Dezember 05, 2012

மனோ கணேசன் வரைத் தொடரும் இரயாகரன் குழுவினது சதி!

//இலங்கையில் இனப்பிரச்சனையைத் தீர்க்க, மனோகணேசனிடம் உள்ள அரசியல் வழிமுறை தான் என்ன? மக்களைச் சார்ந்து போராடும் அரசியல் வழிமுறையைக் கொண்டிருக்கின்றாரா? இல்லை. மாறாக ஊடகத்தைச் சார்ந்து இனவாத அறிக்கைகள் விடுவதும், தர்க்கங்கள் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டி, தேர்தல் மூலம் பிழைப்பு அரசியல் நடத்துவதை குறிக்கோளாக கொண்டவர். இனப்பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்றால், ஆளும் மக்கள் விரோத கூட்டத்தைச் சார்ந்து நிற்பதைத் தாண்டி, மக்களை சார்ந்து வழிகாட்ட எதுவும் அற்றவர். இதைவிட இது போன்ற இனவாதிகளிடம் வேறு மாற்றுவழி எதுவும் கிடையாது.//  -பி.இரயாகரன்

ன்னத்தைச் சொல்ல? இரயாகரனுக்குத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களது அழிவிலும்,பாசிசத்துக்குள் அவர்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதிலும் ஒரு வசதியான வாழ்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்ததைத் தக்க வைத்தாகவேண்டுமானால் தமிழ்பேசும் மகளுக்கெதிராகச் செயற்பட்டாகவேண்டும்.இதைத்தாம் இரயாகரனது எஜமானர்கள் விரும்புகிறார்கள்."இதைத் தொடர்ந்து மிக நுணுக்கமாகச் செய்யும் இரயாகரன், பலதரப்பட்ட அரசியல் முறைமைகளில் தன்னைப் புரட்சியாளனாகவும்,மார்க்சியவாதியாகவும் காட்டிக்கொள்வதற்குப் படாதபாடு பட்டுக்கொண்டு மக்கள் விரோத அரசியலைத் தொடருகிறார்" என்று, அடித்துக் கூறுவதற்கு மனோ கணேசன் மீதான அவரது காட்டிக்கொடுப்பு-குலைப்பு அரசியல் சாட்சியாகிறது. இத்தகைய, மக்கள் விரோத அரசியலை இவர் கைவிடாதவாறு இவரை வழி நடாத்தும் அந்நிய முகவர்கள் மிக நுணுக்கமாகவே புரட்டுப் புரட்சியை இரயா மூலம் அவிழ்த்து விடுகின்றனர்.இப்போது,இலங்கையில் தோன்றியவொரு "அடுத்த பெயர்ப் பலகை", முன்னிலை சோசலிசக் கட்சியென்ற லொபிக்குழுவை ஆதரித்துக்கொண்டு புதிய முகமூடி தரிக்கும் இராயாவை வினவுதளம் சரியாகவே எடைபோட்டுக்கொண்டதும் வரலாறு.

இதையவர், தொடராத பாதைகளின் வழியெல்லாம் வலிந்து உட்புகுந்துகொள்வதற்கேற்ப எவரையெல்லாம் சிதைக்கவேண்டுமோ சிதைத்துப் புரட்டுசீ பண்ணுவது தொடர்கதையாகிறது.

தமிழ்பேசும் மக்களை ஒடுக்குபவர்களுக்கு ஒட்டுரஞ்சிக்கொண்டு "புரட்சி" பேசிய இந்த அரசியலானது 1986 இல் ஆரம்பமானது. புலிகளால் கைது பண்ணிக் காவலில் இருந்து தப்பியதென்ற ரீல் படச் சுருளோடு இந்த மனிதன் வெகுவேகமாகவே தமிழ்பேசும் மக்களது எதிர்கால விடுதலைக்கெதிரானவொரு பாத்திரத்தைத் தேர்ந்துகொள்கிறார்.அதைத் தொடருவதற்கேற்ப அவரிடம் ஒதுங்கிய பல கோடி இரூபாய் சொத்தானது, யாழ்ப்பாண மக்களது சிறுகச் சேர்த்த செல்வத்தைக் கற்றன் நசனல் வங்கிக் கொள்ளையாகக் கொண்ட "இவரது" இயக்கச் ஸ்ரான்ட்!

கட்ட நசனல் வங்கிக் கொள்ளையின் வழி யாழ்ப்பாண அப்பாவி மக்களது இந்தப்பணத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தந்திரத்தின் வழியாகவொரு காட்டிக்கொடுப்பு அரசியல் புலிகளது பேரத்துள் உருப்பெற்றது.இதன் தொடர் நிகழ்வானது அனைத்தையும் குலைத்தல்,முடியாதபோது உள்வாங்கிச் சிதைத்தலெனும் மரபுக்குட்பட்டது.புலம் பெயர் வாழ்வில் நாம் இவரது அரசியலை வைத்துரைக்கும்போது அதன் இருண்ட பக்கங்களை நாம் பலமாகக் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளோம்.

இரயாகரனுக்கு நிகராகத் தமிழ்ச் சமூகத்தில் மிகுதியாகப் "புரட்சி" பேசிய பல சுத்துமாத்துப் பேர்வழிகள் இரயாவைக் குறித்து மௌனித்திருப்பது தமது சொந்த நரகல் வாழ்வினது அச்சமாகவே!

இன்று,மாற்றுக் கருத்து,மண்ணாங்கட்டியெனவும்,புரட்சியெனவும் பசப்பும் இந்தக் கூட்டமானது புலம்பெயர் வாழ்வில் சீரழிந்து சின்னா பின்பட்டு நிற்கும் அரசியலுக்குப் பாத்திரமானது.இந்தப் பிசாசுகள் செய்யும் மக்கள் விரோத அரசியலின் அதியுச்ச வடிவமானது இரயாகரனது "புரட்சி" வேசத்துக்குள் மையங்கொள்வதென்பது பலமிழந்து ஒடுங்கிக்கிடக்கும் தமிழினத்துக்கான குரலாகத் தென் இலங்கையில் ஒலிக்கும் ஒரே குரலான மனோ கணேசனைப் பதம்பார்ப்பதிலிருந்து மிக யதார்த்தமாகப் புரியத் தக்கதாகும்.

கடந்த 25 ஆண்டுகளாக இரயாகரனெனும் குறியீட்டுப் பெயருக்குள் ஒளிந்திருக்கும் பெருஞ் சதிகாரக் கூட்டமானது ஒரு தனிநபரை முன்தள்ளிக்கொண்டு தமது ஒற்றன்-குழுச் சதியை மறைத்து வருகிறது.தனிநபர்களது அரசியற் தன்னார்வத்துள் முடுக்கிவிடப்படுவதுமாதிரியானச் சதி அரசியலானது உலக ஒடுக்குமுறை ஜந்திரங்களது ஒரு உறுப்பாகவே இருக்கிறது.இது பேசும் புரட்சியானது வெறும் புரட்டு."தமிழீழ" ப் போராட்ட வரலாற்றுள் ஒடுக்குமுறையாளர்களால் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒற்றர்களது நயவஞ்சக வலையே இந்த இரயாகரன் எனுங் குறியீடாகும்!இஃது,தன்னால் தூற்றப்பட்டவர்களையே பின் தூசு தட்டிப் புரட்சியாளர் "தோழர்" என்று கயிறு திரிக்கும்.சமீத்து உதாரணம்: "பேராசிரியர்" சி.சிவசேகரம் என்று நான் குறிபிடத் தேவையிருக்காதென்று எண்ணுகிறேன்.

கிழக்கைப் பிரிக்கக் கருத்தியல் வலுக்கொடுத்த ஞானத்தையோ அல்லது, தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சாதி வெறியர்களாக் காட்டித் தமிழ்பேசும் மக்களுக்குள் நிலவிய-நிலவும் சாதி முரண்பாட்டைக் கூர்மைப்படுத்திய தேவதாசன்,சோபாசக்தி போன்றவர்களையோ இதற்கும் மேலாக இரயாகரனையோ அம்பலப்படுத்தி, மக்கள் நலன்சார்ந்த அரசியலைச் செய்யும் தகுதி எந்த " மாற்றுக் கருத்தாளருக்கும்" இல்லாதிருப்பது தற்செயல் நிகழ்வல்ல!

புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களாகவிருந்தாலுஞ்சரி அல்லது தேசிய விடுதலைப் போராட்டஞ் செய்த புலிப் பாசிசமானாலுஞ்சரி மக்களுக்கு விரோதமாகவே தமது அரசியலை வகுத்துக்கொண்ட புள்ளில் ஒன்றுபடும்போது எவரை,எவர் அம்பலப்படுத்த? இதுதாம்,இன்றைய அனைத்து மோசமான சூழலுக்கும் காரணமானது.

நமது மக்கள் இலட்சக்கணக்காக இவர்களாலும்,சிங்கள இனவாத அரசாலும் அழிந்து நாசமான பின்பும் இவர்கள் செய்யும் குழுவாத அரசியலும் அதுசார்ந்த கயமைக் காட்டிக்கொடுப்பும்,குழப்புதல்-குலைத்தல் எனும்அந்நியச் சக்திகளது நரித்திட்டமாகும்.இது, நமது மக்களைத் தொடர்ந்து அநாதைகளாக்குவதாகும்.இவர்கள்,எங்கு திரும்பினாலும் "புரட்சி,புரட்சி,புதிய ஜனநாயகயகம் " என்பதெல்லாம் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் அந்நியச் சக்திகளது லொபி அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்டதென்று நாம் கணித்தாகவேண்டும். எனவேதாம், தமிழகத்து மக்கள் கலை இலக்கியக் கழகமானது இவர்களது உறவைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இவர்களைத் தள்ளி வைத்திருக்கிறது.ஆனால்,புலம் பெயர் தளத்தில் அத்தகைய அரசியலைச் செய்யுந்தறுவாயில் எவரும் இல்லாதிருப்பதென்பது எல்லோருமே, மோசமான இயக்க வாதத்துக்குட்பட்ட மாபியாத் தனமான அரசியலுக்கும், அந்நிய ஆர்வங்களது அரசியல் நிகழ்ச்சிக்கும் உட்பட்டுக் கிடப்பதனாலாகும்.இவர்களே,தொடர்ந்து மாறி மாறிப் புரட்சி புடலங்காயென வகுப்பெடுத்து, நிலத்து மக்களைத் தொடர்ந்து இலங்கையரசின் இராணுவக் காட்டாட்சிக்குள் இருத்தி வைக்க முனைகின்றனர்.

இந்தப் புள்ளியை உடைக்கும் அரசியலை மனோ கணேசன் மிக நிதானமாக நகர்த்துகிறார் என்றே இன்றைய சூழலுள் நம்பியாக வேண்டியிருக்கிறது.வெளிப்படையானவொரு அரசியலை அவர் மட்டுமே வெளிப்படுத்துகிறார்.நேரடியான எதிர்புக் குரலை இராணுவ ஒடுக்குமுறைக்குட்பட்ட மக்களது அடிப்படையுரிமையின்வழி தொடரும்போது எங்கே இனவாதம் வருகிறது?

அந்நிய நலன்களது தெரிவில் முள்ளி வாய்க்காலில் இனவழிப்புச் செய்து, ஒருவினத்தையொடுக்கிய அரசின்மீது எத்தகைய கோசத்தின்வழி அரசியல் புரிந்தாகவேண்டுமெனத் தீர்மானிப்பது நிலத்திலுள்ள பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களது அரசியற்றலைவர்களுந்தாம்.தென் இலங்கையின் பிரதான இனவாதக் கட்சிகளோடு ஒடுக்குமுறைக்குட்பட்ட மகள் நலன்சார் நிகரொத்த விமர்சனத்தை வைத்து, இலங்கை மண்ணிலிருந்துகொண்டே ஆளும் மகிந்தாவுக்கும் அவரது இராணுவ வாதத்துக்குமெதிரானவொரு அரசியலை முன்னெடுப்பதென்பது அவசியமானது.தொடர்ந்து மக்களது குரலையும்,அவர்களது குடிசார் அமைப்புகளது வருகைக்குமானவொரு பரந்த நியாயத் தன்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் குரலாகவே மனோ கணேசனின் பாத்திரம் போருக்குப் பின்னான இன்றைய இலங்கைச் சூழலுள் இருக்கிறது.அவர் பரந்துபட்ட மக்களை அண்மித்துக்கொள்வதென்பது இவர்களது நரித்தனமான திடீர் புரட்சிகர வர்க்கஞ்சார்ந்ததல்ல!அந்நியச் சக்திகளாலும்,சிங்கள இனவாத அரசாலும் பாதிப்படைந்த பலதரப்பட்ட வர்க்கத்தின் நலன்களும் இதுள் கலந்தே இருக்கும்.இத்தயைவொரு சூழலானது யுத்தத்துக்குப் பின் பல தேசத்துள் நாம் பார்த்ததுதாம்.இரயாகரன் போன்றவர்களது எஜமானர்கள் இப்போது அச்சமடைகின்றனர்.இந்த மனோ கணேசனது அரசியலானது பிளவுபட்ட உலக மூலதனத்துள் எந்தப் பக்கஞ் சாயுமென்பதிலுள்ள நெருக்கடியே இப்படிப் "புரட்டுசீ" பேசி அவரை விமர்சிக்கிறது.

மனோ கணேசனுக்குப் புரட்சிகர முகம் அவசியமில்லை. சமவுடைக் கோட்பாட்டுத் தத்துவமும் தேவையில்லை!அதற்கவர் உட்பட்டாகவேண்டுமென விரும்புபவர் மனோ கணேசனது வர்க்கவுணர்வையும் ,அவரது அரசியல் வருகையையும் புரியாதவராகவே இருப்பர்.

என்றபோதும்,ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது குறைந்த பட்சக் குரலாகவிருக்கும் மனோ கணேசனது அரசியற் பாத்திரமானது இன்றைய சூழலில் அதி முக்கியமானதென்பது பாதிக்கப்பட்ட-பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்களது தெரிவாகும்.இந்தப் பாத்திரம் அதே மக்களுக்கெதிராகவும் மாறிக்கொள்ளும் அல்லது மக்களைச்சார்ந்து முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்கட்காக நகர்ந்து கொள்ளும்.இதைத் தீர்மானிப்பது மக்களது குடிசார் அமைப்பாண்மைக்குட்பட்ட பொருண்மிய வாழ்வாகும்-அதன் நிலையாகும்!பஞ்சப் பரதேசிகளான தமிழ்பேசும் மக்கள் தமது வலயத்துள் அனைத்து வாழ்வாதாரத்தையுமிழந்து, தொடர்ந்திருக்கும் பல்லாயிரம் இராணுவத்துக்கேற்ப உற்பத்தியைச் செய்து, அதை இராணுவத்துக்கே தாரவார்க்கும் "உறுப்புகளாக" வைத்திருக்கும் இலங்கையின் அரச ஆதிக்கத்துள் மக்களது வாழ்நிலை "இராணுவப் பொருளாதாரவுற்பத்திச் சக்திகள்-உறவுகளெனும் நிலைக்குள்" முதலாளிய வர்க்க விளக்கம்-உணர்வு-உறவுகள் குறித்த உரையாடல்கள் புரட்டுத் தவிர வேறென்ன? இது, கடைந்தெடுத்த கயமைத்தனம்.

புலிகளது அழிவுவாத அரசியலது தெரிவில் இலங்கையரசானது பல மடங்கு அராஜகவாதக் கட்சியாதிக்கத்தை இலங்கைக்குள் சாத்தியமாக்கியது.புலி வழியான போராட்டமானது இலங்கைக் கட்சி, அரசியல் வரலாற்றில் அனைத்துப் பூர்ச்சுவாக் கட்சிகளையும் பெரும் நிதி மூலதனதைக்கொண்ட கட்சிகளாக்கி விட்டது.ஆயுதக் கொள்வனவிலிருந்து போராட்ட-எதிர்ப்போராட்ட அரசியல்வரைப் பல பில்லியன் இரூபாய்கள் வருமானமிக்க அரசியலாக இலங்கை அரசியல்நிலவரம் மாற்றப்பட்டபின் அனைத்துக் கட்சிகளும்,அமைப்புகளும், பிளவுபட்ட உலக நிதி மூலதனத்தோடான தமது சமரசத்துக்குட்பட்ட அரசியலது தெரிவில் தொடர்ந்து மக்களை ஒட்ட மொட்டையடிக்கும்போது மனோ கணேசனது பாத்திரம் எங்ஙனம் அமைய வேண்டுமெனப் புலம் பெயர் மண்ணிலிருந்து புரட்சி, நிதிவைத்துப் பிரசுரங்கள்,கட்சி நிதிகளெனச் செய்துவரும் ஒரு மாபியாக் கூட்டமானது வகுப்பெடுப்பது எவ்வளவு மோசடியானது?

இலங்கைப் பாசிச இராணுவத்தால் சூழப்பட்ட இலங்கை மக்களது குறைந்த பட்ச ஜனநாயத்துக்கான குரலாகவும்,அவர்களது நலன்களையுயர்த்திப்பிடிப்பதற்கான தெரிவில் அன்றாட நெருக்குதலைத் தடுத்து, உலகுக்கு அம்பலப்படுத்தும் சிறு பொறியாவிருக்கும் மனோ கணேசனைப் பிழைப்புவாதியெனப் பாயும் இரயாகரனை என்னவென்பது?

 இப்படி எத்தனை மனிதர்களைக் குலைத்துச் சிதைத்துத் தமது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்களது எதிர்காலத்தையே நாசமாக்கினர்?, இந்தக் கூட்டம் புலியினது சதி அரசியலுக்கு மகுடஞ் சூட்டவில்லையா?,முள்ளி வாய்க்காலில் புலி - அரச போர் ஜந்திரங்கள் மக்களை வேட்டையாடியபோது அதைத் தியாகமெனப் பறைகொட்டிய பிழைப்புவாதிக்கு நிகராக இன்னொருவர் உண்டா?

முட்டாள்த்தனமாக மார்க்சியத்தைப் புரிந்துகொண்டு,இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதாரப் பொறிமுறைகளையும் அதன் உட்பிரிவுகளுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் புரியாதவொரு பின் தங்கிய புரட்டல்வாதிக்குத் தனது எஜமானர்களது கட்டளைக்கேற்ப இயங்குவது அவசியமாகிறது. மக்களுக்கான குரலை-மக்களது இயலாமைச் சூழலின் முன் நகர்த்தும் நிலத்து அரசியற் சிறு பொறிகளையும் சீரழித்துச் சிதறிடிப்பது அவசியமாகவிருக்கிறது.இந்த இரயாகரனது பினாமித்தனமான செயற்பாடானது மக்களைத் தொடர்ந்து அடிப்மைப்படுத்தும் அந்நிய வியூகங்களால் வழி நடாத்தப்படுவதென்பதை நாம் எப்போது புரியப்போகிறோம்.

இன்னும்,எத்தனை விதமான வேட்டைகள் மூலம் நமது மக்களது குறைந்த பட்ச அரசியற் குரல்களை இந்த இரயாகரன் வேட்டையாடப் போகின்றார்?

புலிவழி நிர்க்கதியாக்கப்பட்ட நிலத்து மக்களும்,புலத்து மாற்றுக் கருத்தாளர்களென்ற இயக்கவாத மாபியாக்களால் பழிவாங்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்ட புலத்து அகதித் தமிழர்களும் திடீர் புரட்சிக்குத் தயாராகி, மகிந்தாவைச் சாய்க்க வேண்டுமோ?புலத்தில்,அனைத்தையும் குழப்பி, அதி வேகத்தில் குழுவாதப் பெயர்ப் பலகைக் கட்சிகட்டிய( புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ) தேவையே அந்நிய எஜமானர்கள் தம்மைத் தொடர்ந்து ஏஜென்டுகளாகக் கருதிக்கொள்வதற்கும், எதிர் புரட்சிக் கோட்டாவைத் தம்மிடமே தந்து நம்பியிருக்கவுமென்பது நாம் அறியாததா?

30 ஆண்டுகால நரவேட்டைக்குட்பட்டவொரு இனமான தமிழ்பேசும் மக்கள் தம்மை நிலைப்படுத்திக் குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக விழுமியங்களையே தரிசிக்கவிடாது புரட்சி, யுத்தம் எனப் படம் காட்டி இலங்கைப் பாசிச இராணுவத்தின் இருப்புக்காகக் காரியமாற்றும் இந்தக் கபோதிகள் மனோ கணேசனைக் குறித்துப் பேசும் அரசியல் தார்மீகந்தாமென்ன?

இரயாகரனால் பிழைப்புவாதிகளெனச் சொல்லப்பட்டவர்கள் பலர். குறிப்பாகப் பேராசிரியர் சிவசேகரம் இப்போது, இரயாகரனது நிதி வழங்கலுக்குட்பட்டவொரு தோழராகியுள்ளார்.அவரோ இரயாவின் எஜமானர்களுக்கு " இரயாகரன் தொடர்ந்து செய்யும் சதி அரசியாலானது பலரை உட்கொண்டு சிதைக்கும் தொழிலை (இரயாகரன் குழுவினது எதிர்ப் புரட்சி ) மிகச் சாதுரியமாக நடாத்துகிறார்" என்று, அந்த எஜமானர்கள் நம்புவதற்கானவொரு குறியீடாகிப்போனார். இதன்வழி, இரயாகரன் குழுவினது எஜமானர்கள் தொடர்ந்து தமது சதி அரசியலைச் செய்ய இராயாவுக்குத் தொடர்ந்து பட்டயமெழுதிக்கொடுத்திருப்பதற்கு மேலாக இவர்களென்ன புரட்சியா செய்யப் போகின்றனர்?அதே குலைப்புச் சிதைப்பு-மக்கள் விரோதச் சதி அரசியல்!,பாதி வழிவரை கூட்டிச் சென்று கொலை செய்யும் இந்தக் கூட்டமா புரட்சிக்குரிய புற நிலவரத்தைப் புரிந்து நடக்கும்?

"மக்கள் விரோதிகளைத் தொடர்ந்தும் மௌனிப்பதால் நாம் வளர்த்து வடிவமெடுக்க விடுகிறோமென்பதைப் புரியும்போது அனைத்தும் ஓர் நாள் அம்பலத்துக்கு வரும்.அப்போது,வரலாற்றில் இத்தகைய சதியாளர்கள்,மக்களைக் காட்டிக்கொடுப்போர் இருந்த இடமே தெரியாது மறைந்து போவார் " களெனச் சொல்லும் காலமும் தொலைந்தே போச்சு-இதுதாம் இன்றைய அவலம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.12.2012
   

Sonntag, Dezember 02, 2012

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

புலம் பெயர் தமிழரது "புரட்சி,தலித்துவம்,கிழக்கியம்"- மறுவாசிப்பு!

ன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.

1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.

பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான சிங்களவரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக்காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.

அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.

ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.இதுள்,எனது ஊரவளான விக்கினா பாக்கியநாதன்கூட முக்கியமாகச் செயற்பட்டவளே.
இப்போது தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்கின்றனர்.இதுள்,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின்,தேவதாசன்,சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க புலம்பெயர் தமிழர்கள்.

இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன்நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப்,பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது.அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் சுடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
அவ்வண்ணம், தம்மைத்தாமே புத்திசீவிகளாக வர்ணிக்கும் சுசீந்திரன்,மு.நித்தியாநந்தன் போன்றவர்களும் ஊரெல்லாம்-உலகெல்லாம் பறந்து நிகழ்வுகளில் உரை செய்கின்றனர்.இந்த அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.

சீசீந்திரனுக்கு,அவரைத் தத்தெடுத்த ஜேர்மனிய முது தம்பதினரால் வீடுவளவு இனமாக வந்தது.அந்தத் தம்பதியினர் தமது சொந்த உறுவுகளுக்கே-குழந்தைகளுக்கே அந்த முதிசத்தைக் கொடுக்காது இவருக்கு வழங்கிச் செத்தனர்.அதன் பெறுமதி அண்ணளவாக அரை மில்லியன் யூரோக்களைக் கொண்டது.இந்தச் சுசீந்தரனுக்குச் சொத்து வந்திருப்பினும் அதைப் பராமரிக்கும் செலவெனப் பல நூறு யூரோக்கள் மேலதிகமாகவும்,குடும்பச் செலவெனவும் மாதம் 2000€  யூரோத் தேவையாகவே இருக்கிறது.எந்த வேலை வெட்டியுமற்ற இந்த வெட்டிப் பயல், இந்தப் பணத்தை எவர் மூலம் பெறுகிறார்.?-எனக்கு ஆச்சரியமாகவிருக்கிறது.மொழி பெயர்ப்பாளரென்பது வெறும் குசும்பு!இப்போது எவருக்கும்,எவரும்"முழி" பெயர்க்கலாமே தவிர மொழி பெயர்க்கத் தேவையில்லை!
அண்ணன் நித்தியாநந்தன் தன்னைப் பேராசிரியர்,டாக்டர் என்றழைக்கும்போது உச்சி மகிழ நிகழ்வுகளில் உட்கார்ந்திருக்கிறார்.ஒரு சாதரண விரிவுரையாளன்,எங்கும் டாக்டர் பட்ட ஆய்வைச் செய்து உச்ச தொழிலில் ஈடுபடாத இவருக்குக் கனடாவரை சென்று உரை நிகழ்த்த  எப்படிப் பணம் புரளுகிறது?எங்கே-எந்த நிறுவனத்தில் வேலை புரிகிறார்.மாதக் கணக்கில் இந்தியாவில் தவங் கிடந்து மீண்ட இந்த மனிதருக்கும் வசதிகள் பெருகுகிறது?-எப்படி?

ஞானத்தையும்,சுகனையும்,தேவதாசனையும்,சோபாசக்தியையும் விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?

இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன?


தொடர்ந்தும்,எமது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

ஒரு புறம் புலி மாபியாக்கள்"தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி என்ற புலிவால் அம்பலப்படுத்தியதுபோல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று  எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?

நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.12.2012

Sonntag, November 25, 2012

பிளவுக்குட்பட்ட "மாவீரர்" மகத்துவம்!

பிளவுக்குட்பட்ட "மாவீரர்" மகத்துவம்!

கோசலனது இக்கட்டுரையானது (மாவீரர் தினம் – இன்றும் அனாதைப் பிணமாய் பிரபாகரன்  ) மிக நியாயமான கட்டுரைதாம்.என்றபோதும்,சிலவற்றைத் தொட்டுணர்த்துவதும் அவசியமானதில்லையா?

இயக்ககங்களைத் திட்டமிட்டு அராஜகக் குழுக்களாகவும்,இராணுவவாத அடியாட்படையாகவும் உருவாக்கிய அந்நியத் தேசங்கள் இறுதியில், ஒரு இனத்தையே அடிமைகொண்ட வரலாறாகவே "தமிழீழப் போராட்டம்" ஊதிப் பெருத்தது.அதன், எச்சங்கள் மீள மீள, அதையே (துரோகி-தியாகி) தொடர்ந்து நயவஞ்சகமாகப் பணத்துக்குக் கொலை செய்யும் போது அதையே பெரும் விழாவாகவும் எடுத்துக் கொலைப்பட்ட பண பிணக்காளன் தியாகி ஆக்கப்படுகிறான்-மாவீரன் எனப் புகழப்படுகிறான்.

ஆனால்,பிரபாகரனது முழுக் குடும்பமுமே அழிக்கப்பட்டுச் சாம்பலாக்கப்பட்ட பின்னும் அந்த மனிதரை அநாதவராக விட்டு ஒரு அரசியலை மிகவுயர்ந்த வியாபார நுணுக்கத்துடன் முன்னெடுக்கும் புலம் பெயர் புலிப் பினாமிகளைப் பின்னிருந்து ஆட்டிப்படைக்கும் இலங்கை,அந்நியத் தேச உளவு ஏஜென்டுகள்தாம் ஒரு மறைமுகமான (வி)தேசியவாத அரசியலை மீளத் தகவமைக்கின்றனரென்று ஊகிக்கலாம்.இத்தகைய (வி)தேசியவாத அரசியலைத் தொடரும் புலிப்பினாமிகள் தமது, வருவாய்க்கு அத்தகைய அரசியல் குறுக்கே நிற்பதில்லையென்பதால் அதைத் தொடரவும்,அத்தோடிணக்கம் கொண்டு  அதையே கடைப்பிடித்து மாண்டுபோன புலித் தலைமையைத் தொடர்ந்து உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
எனவே,பிரபாகரன் தொடர்ந்து உயிர் வாழ்வது பணத்தை மட்டும் தமதாக்கும் முயற்சியாகக் குறுக்க முடியாது.இதுள், பின்னப்பட்ட நலன்கள் பணத்தைத் தமதாக்குபவர்களுக்கிசைவானதாவிருப்பதால் அதன் பிரதான காரணிகளை நாம் மறந்து போதல் ஆபத்தானது.

தமிழ்பேசும் மக்களது அடிமை வாழ்வைத் தொடர்ந்து நியாயப்படுத்தியும்,அவர்களைத் தமது பூர்வீக மண்ணிலேயே மிகச் சிறிய மக்கட் கூட்டமாக்கும் சிங்களக்குடிப் பரம்பல் மற்றும் பிரதேசப் பிரிப்புகளெனத் தொடரும் அரசியலுக்கு மாற்றான சிந்தனையும்,நியாயமான போராட்டப்பாதையும் தடையானது.

சரியான வழிகளைக் கண்டடைய முனையும் தேவைக்கானவொரு சூழலைத் திசைவழியை இல்லாதாக்க வேண்டுமானால் தொடர்ந்து அதே புலிப்பாணி விதேசியவாதமும்,இராணுவவாதப் பெருமிதமும் இருத்தி வைக்கவேண்டும்.மக்கள் தொடர்ந்து இத்தகைய திசைவழியில் தமது உணர்வுகளைத் தொடர்ந்து தகவமைக்கும்போது இதே, புலிப்பினாமிகளது இருப்புத் தொடரமுடியும்.அங்கே,பிழையான பாதையும்,வியாபாரத் தந்திரமும் புலிவழியான போராட்டத் திசைவழியும் பெருமிதமாகத் தொடரும்போது இலங்கை அரசும்,அந்நியச் சக்திகளும் நிலத்தில் ஒரு இனத்தையே அடிமைகொண்டு அவர்களது இருப்பை வரலாற்றில் அழித்துச் சிங்கள மயமாக்கப்படுகிறது.

இக்கட்டுரையாளர் முன்வைக்கும்"நல்லதோ கெட்டதோ"என்பது அந்நியச் சக்திகளது இன்றைய வியூகத்தைத் தொட மறுப்பதில் அல்லது அதைக் கவனத்தில் எடுக்காததில் ஒரு நியாயத்தைப் புலித் தலைமைக்கு வழங்குகிறது.அந்த நியாயமேதாம் தொடர்ந்தும் புலியினது அடியாட் படைச் சேவையையும்,அதன் வழியான அந்நியச் சக்திகளது தொடரும் சதிகளையும் புலம்-நிலம் எனத் தொடர வைக்கிறது.

மீளவும்,நான் சொல்வது: புலியினது அனைத்து போராட்ட வழி முறைகளும் ஆயப்படவேண்டும்.அதன் பாதகத்திலிருந்தே தொடருமிந்தச் சதிகளையும்,அந்நியச் சக்திகளது முகவர்கள் புலிவடிவிலும்,தேசியச் சக்திகள் வடிவிலும் ஏன் புரட்சிகாரர் தாமெனக் கட்சி கட்டி நடாத்தும் அந்நியச் சதி அரசியலிலும் புலம்-நிலமெனப் பின்னப்பட்ட இந்தச் சதியை முறியடித்து முன்னேறமுடியும்.
இதை மிக நுணுக்கமாகவுணரவேண்டுமானால் இன்றும் தொடருமிந்த இயக்கவாத மாயையும்,அதையே கருத்தியல் மனதாக்கி இளைஞர்களைத் தொடர்ந்த புலி வழித் தேசிய மாயைக்குள்ளும்,புலி வழியான போராட்டத் திசை வழிக்குள்ளும் தொடர்ந்து தள்ளி வரும் வீன் பல்கலைக் கழகத்துள் சிரைக்கும் பரணி கிருஸ்ணரஜனி[ http://www.facebook.com/parani.krishnarajani?ref=ts&fref=ts  ] என்ற மனிதரின் திடீர் வருகையும், அவரது புலித் தலைமை வழிபாட்டையும்,அதை மேற்குலகத் தற்கவியலுக்குள் இணைத்தும்,சார்த்தார் போன்றரது இருத்தலியலுக்குள் வைத்து விளக்கியும் பிரபாகரனைத் தொடர்ந்து வழிபாடாக்க முனையும் சதியை ஒரு தனிப்பட்டவரது அறியாமையென எடுக்கமுடியுமா?புலியின் வீரதீர இராணுவவாதத் தாக்குதல்களைப் போராட்டத்தின் உச்சமெனவுரைக்கும் இராணுவவாதப் பிரமையானது ஒரு இனத்தை அழித்துக்கொண்டதைத் தொடர்ந்து மறைக்கும் நபர்களும்,அவர்களையொட்டிக் கருத்தாடும் ஒரு வலைப் பின்னலும் ஒருவிதமான மாயைக்குள் புலம்பெயர் சிறார்களைக் கட்டிவைத்துக் காயடிக்க முனைகிறது.இந்தக் கருத்தியலை உடைப்பதற்குமுன் நாம் இத்தகைய கருத்தியலைப் பரப்புப் பின்னிருந்தியக்கும் சக்திகளை இனம் கண்டாகவேண்டும்.அவர்ளே இந்தப் புலிப் பினாமிகளைப் பல கூறுகளாக்கிப் பின்னிருந்து ஒவ்வொருவரையும் இயக்குகிறார்கள்.அவர்கள் புரட்சிகரர் வடிவிலும் நமக்குள் இருக்கின்றார்களென்பதை  எவரும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது!

எனவே,"மாவீரர்தினம்" இரண்டுபட்டதாற்றாம் நாம் பிளவு படுகிறோமென்ற காட்சி வடிவச் சதியைக்கூட நமக்குள் ஓகோவெனப் புகழ்ந்து நய வஞ்சகம் புரியும் சோபாசக்தியென்ற அன்ரனிகூட நமக்குள்ளே நியாயவாத அரசியல் வகுப்பெடுப்பார்.தமிழ் மக்களுக்குள் இருந்த பல உள் முரண்பாடுகள்(சாதியப் பிரச்சனை,பெண்ணடிமை,பிரதேசவாதம்,மதவாதம்)அனைத்தும் திடீரெனக் கூர்மைப் படுத்தப்பட்டதும்,அதன்வழி தலித்தியத்தைப் புலம்பெயர் மக்கள் மத்தியில் பரப்புரைக்குட்படுத்தி மக்களைத் தொடர்ந்து கூறுபோட்ட தேவதாசன்-சோபாசக்திகள்,கிழக்கைப் பிரித்து மகிந்தாவின் தலைமையில் ஒரு அடியாட்படை மாகாண சபையை உருவாக்கிய பிள்ளையானையும்,சின்னமாஸ்டர் எனப்படும் ஞானத்தையும் திடீரென வாழ வைத்தவர்கள் இந்த அந்நியச் சக்திகளது முகவர்கள்தாம்.இந்திய அரசினதும்,மேற்குலக-அமெரிக்க உளவு நிறுவனங்களது முக்கோண வலைப் பின்னலில் இலங்கையானது தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறுபான்மையாக்கிக்கொண்டே தனது நியாயத்தைப் பெரும்பான்மைப் புள்ளியிலிருந்து உருவாக்குகிறது.மாவீரர் தினக் கருத்தியல் மனதானது தொடர்ந்து பிளவுப்படும் புலிகளது பண நலன்களது தெரிவில் புலன்(ம்) பெயர்ந்தவர்கள் நொந்து நொடியாவதுகூடக் கூர்மைப்படுத்தும்போது அதே புலிவழியானவணுகு முறைகள் இருத்தலுக்குட்படும்.அப்போது, தமிழர்கள் அதிலிருந்து மீண்டுவிடும் அபாயம் இல்லாது போகிறது.

தொடர்ந்து"மாவீரர்களுக்கு"மகத்துவஞ் செய்து பிழைப்பை-வியாபாரப் புத்தியைக் கருவாக்கி நகர்த்தும் ஒரு தலைமுறையானது, தமக்குத்தாமே மண்ணை வாரியிறைக்கும் ஒரு கூட்டம் நிலத்தில் விவேகமான அரசியலையா முன்னெடுக்கும்?

வியாபரிகளுக்கும் மக்கள் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்?அதே சம்பந்தமானது நமக்குள் தனது நடாத்தையைச் செயலாக்கும்போது புரட்சி பேசுகிறவர்கள் "அடிமட்டம்,மேல்மட்டம்" குறித்த பார்வையில் நமது"தமிழீழப் போராட்ம்" செய்த இயக்கங்களையும் அவர்களுக்குப் பின்னாலிருந்த பிழைப்புவாதிகளையும் ,அவர்களது இன்றைய தொடர் கண்ணியையும் "சரியோ தவறோ" என்று, ஒரு விதமான விட்டுக்கொடுத்தல்,மென்மையான மெதுவான வருடல் அரசியலைச் செய்யமுடியாது.

நமது மக்களில் பல இலட்சம் பேர்கள் அழிக்கப்பட்ட போராட்டப் பாதையைக் கறாராக ஆய்வதும், அறிவதும், மக்களிடம் உண்மைகளை விட்டுக்கொடுக்கமால் சொல்வதும் அவசியமானது.

திடீர் இணைவுகள்,அவசரமாக அதே மனதோடு மக்களை அணிப்படுத்துவதும் மீள அந்நியச் சக்திகளுக்கே அனுகூலமாவிருக்கும்.அதற்காகத்தாமே பல கோடி டொலர்களை இறைத்து அமைப்புகளை [NGO] உருவாக்குகிறார்கள்.தமிழ்பேசும் மக்கள் விவேகமாகச் ச(சி)ந்திக்க முனையும் தருணமானது பல வடிவங்களில் இல்லாதாக்கப்படுகிறது.அதிலொன்று "மாவீரர்" மாயையும் தாம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
25.11.2012

Sonntag, November 11, 2012

ஜமுனா ராஜேந்திரன் மீதான விமர்சனத்துள்...

புலி மேல்  மட்டக்  கருத்தியலாளர் கருணாகரன் கூறுகிறார்:

"புலி எதிர்ப்பைவிட "புலிகள்", "ஈழம்", "தமிழ்த் தேசியம்" என்ற பதங்களை உள்ளடக்கிய இதழியலும்,இலக்கியமும் மிகப்பெரிய வியாபாரமாகவிருக்கிறது.எங்களுடைய கண்ணீரும், குருதியும்,அவலமும் நல்ல வியாபாரமாக நடந்துகொண்டிருக்கின்றதென்பதைத் தெளிவாக அறிவோம். ஈழத்து நிலைமைகளை ஈழத்தவர்கள் எழுதியதைவிட வெளியாட்கள் எழுதி இலாபமடையுங் காலமிது.சர்தேஷ் பாண்டே ,நாரயணசாமி ,கோடன் வைஸ்,பழ.நெடுமாறன்,ஹர்ஜித் சிங் முதல் பலரிதுள் அடங்குவர்."-பொங்கு தமிழில் ஜமுனா மீதான விமர்சனத்துள் கருணாகரன்.  

என் சனங்களே, பாருங்கள்!,

ஒரு இனத்தின் விடுதலைக்கான போரையே,புலிகள் அந்நியத் தேசங்களது ஏவலுக்கமையவும்,வழிகாட்டலுடனும் நடாத்தியது மட்டுமல்ல அந்த அந்நியச் சக்திகளுக்கு அடியாட்படையாவிருந்தும் முழுத் தமிழினத்தையுமே அந்நியச் சக்திகளுக்கும்,மாற்று இனங்களுக்கும் விற்று அடிமையாக்கியபோது, அதை விடுதலையின் பெயரால்  ஒத்தூதியப் புலிப்பரப்புரையாளர் இந்தக் கரணாகரன்.புலிகளது அனைத்துக் கலையாக்க முயற்சிக்குள்ளும் [LTTE-Ideologie  ]  தன் ஆளுமையைக் காட்டி அவ்வகைக் குப்பைகளை மக்கள் மயப்படுத்தியதுள் இவரது பங்கு கணிசமானது.நாசிகளது பாசிசத்தைத்[NS-Ideologie] தேசத்தின் பெயராலும்,மொழியாலும்,இனத்தின் மேன்மையாலும் அன்று கோய்ப்பில்ஸ்[Goebbels] ஜேர்மனியர்களை நம்பவைத்தான்.இதைத்தாம் கருணாகரன் இன்னொரு திசையில் புலிகளுக்காக நகர்த்தினார்.
இப்போது அனைத்தையும் காட்டியும்,கூட்டியும்[LTTE-Mystik] கொடுத்த கையோடு "கண்ணீரையும்,குருதியையும்,ஈழத்தையும்,தமிழ் தேசத்தையும்",அந்நியர்கள் எழுதுவதும்,விற்பதும் குறித்துக் கண்ணீர் சொரிகிறார், கருணாகரன்.முள்ளி வாய்க்காலுக்குப் பின் புலிகள் மாமிசம் புசிப்பதில்லை!

பழ.நெடுமாறனைக் கூப்பிட்டு, ஈழத்தில் தலைவரோடு பந்தியிட்டுப் புசித்துக் கைலாகு கொடுத்தவர்களும்,தலைவரது வாழ்க்கை வரலாற்றைப் பழ.நெடுமாறனை வைத்து எழுதியபோதும் இந்த அந்நியத் தன்மையை,பிழைப்புவாதத்தைக் கருணாகரன் உணரவில்லை!

புலிகள் இராஜீவ் காந்தியை இந்திய ரோவினது வேண்டுதலுக்குத் தூண்டுதலுக்கமையக் கொன்றதும்,பின்பு அந்நியக் கைக்கூலிகளாகவே தொடர்ந்து மக்களைக் களத்துக்கனுப்பிக் கொன்று குவித்ததும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய விடுதலைப் போரையே மாபியாத் தனமான வியாபாரமாக்கியதையும்[LTTE-clan business culture]மறந்து, இந்த மனிதர்"கண்ணீ,குருதி" விற்றுப் பிழைக்கும் அந்நியரைக் குறித்துக் கவலையுறுகிறார்.

ஏதோ,இன்று நேற்றுத்தாம் இந்தியவூடகங்கள் "ஈழம்,போராட்ட இயக்கங்களை"க்குறித்து எழுதிப் பிழைப்பதாகக் கதைவிடுகிறார்.

அவர்கள் 1980 களிலிருந்தே ஈழப் போராட்டம்,இயக்கங்கள்,அதன் தலைமைகளை ஆயுதங்களுடன் படம் போட்டுக் கதை பின்னி விற்று வந்தனர்.

இந்திய உளவுப்படையான ரோ[Research and Analysis Wing] எப்போது பல இயக்கங்களைப் புலிகள் உட்படத் தமது நேரடியான கட்டுப்பாட்டுக்குக் கொணர்ந்து, இயக்கத் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்திய வர்த்தகவூடகங்களும் தமது அரசியல் வியூகத்துக்கமைய இவர்களைப் பூதாகரமாக்கிப் போராட்டப் பாதையைத் திசைதிருப்பவும்,சிறு குழுவைப் பெருப்பித்து ஊத வைக்கவும் முனைந்தபோது இத்தகைய வர்த்தகத்தையும் கணித்தியங்கின.1984 ஆம் ஆண்டு,இந்தியவூடகமொன்று, பிரபாகரனுக்கு இராணுவவுடை தரிப்பித்துத் துப்பாக்கியோடு வைத்து விதவிதமான படம்போட்டது.அதுள், ஒரே நிமிடத்துள் ஒரு துப்பாக்கியைப் பிரபாகரன் கழற்றிப் பிரித்துப் பிணைப்பாரென வகுப்பெடுத்தும் இருந்தது.

அந்நியத் தேசங்களது கைப் பாவையாகவிருந்த இந்த "ஈழப்போராட்ட" இயக்கங்கள் அதன் பரப்புரைஞர்கள்,தத்துவவாதிகள்,போராளிகளெல்லாம் இப்போது புதிய கதைவிடுகிறார்கள்.

இவர்களைக் குறித்துச் சந்தேகங்கொள்ளவேண்டும்.

இவர்கள் திட்டமிட்டு மக்கள் நலன்,இலங்கை-தமிழ்த் தேச சுயாதிபத்தியம்,சுயநிர்ணயவுரிமையென வகுப்பெடுப்பதெல்லாம், இதுவரை தாம் செய்த அதே கைக்கூலி வேலையைத் தொடர்ந்தியக்கும் இன்னொரு சதியாகவே இருக்கவேண்டும்.அந்நியத் தேசங்களது உளவு வேலைகள் [External-intelligence agency ]எந்த ரூபத்திலும் வரலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.11.2012

Samstag, Oktober 20, 2012

புரட்சிப்பரப்புரையும்"பொழுதில்"பந்திகொள்ளும்!

புலிகளைத் தூக்கி நிறுத்தப் புரட்சிப்பரப்புரையும்"பொழுதில்"பந்திகொள்ளும்!


தீபந் தொலைக்காட்சியில் சேனன்,நாவலன் கூடுகிறார்கள்-அனஸ் கேள்விகள் தொடுக்கிறார்.சுற்றிச் சுற்றிப் புலிகளது"தேசிய"-விடுதலைப் போராட்டங் குறித்துச் சின்னப் பயல் சேனன் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்குமே வகுப்பெடுக்கிறான்.பொழுதுக்கு "இரண்டு" வார்த்தையில் நாவலன் புலிகளையும்சாடிப் புலிவழியிலானவொரு தெருவில் தனியாக நடந்து போய்க்கொண்டிருக்கப் பல புலி விசுவாசிகள்-கரச் சேவகர்களான முருகாநந்தன்-முருகதாசு-பக்த கோடி-கேடிகள் உட்பட அதே புலிப் புராணம்.இதுவொரு வகையிலான புலம்பெயர் அரசியல் நகர்வாச்சு!இதை மீறியவொரு நடப்பு-நியாயம் பேசுதல் இல்லாதத் தமிழ் மனவெளியில் "மக்கள்-மக்கள்"என்ற ஒரு மந்திரவுச்சரிப்பும்,"மகிந்தா-மகிந்தா"வென்ற பேய் ஓட்டும் வேப்பிலையடியுந்தாம் "தேசியவிடுதலைப் போராட்டம்"தோல்வியடைந்த சூழலுள் புலிவழிப் போராட்டம் பற்றிய புரிதல்!இன்று,நாவலன்கூடப் பிரபாகரனது அழிவில் மௌனித்திருக்கும் புலிப்பினாமிகளது பணமூட்டைப் பாதுகாப்புக் கவசந்தரித்த "தேசித்தலைவர் சாகவில்லை-ஒருநாள் தமிழ் மக்கள் முன் தோன்றுவார்" எனுந்தந்திரோபாயத்துள்கவனங் குவித்திருக்கும்போது,இதையே முள்ளி வாய்க்காலுக்குப் பின் கேள்வியாக்கித் தொண்டைத் தண்ணீர் வற்றியவர்கள் பெருவாரியாக இருகக் காண்கிறோம்.எது"அரசியல்-சாணாக்கியம்"எனப் புரிந்து போகதளவுக்குப் புலியினது உயில்,உரிமைக்காக எங்கெங்கோ,எப்படியெப்படியோவெல்லாம் வியூகம் வகுக்கிறது காலம்!


எனவே,புலிகளது பாத்திரம் என்னவென்பதைத் தொடர்ந்து கால் நூற்றாண்டாகக் கண்டுபிடிக்காதவொரு சேனனுக்கு எரிக் சொல்கைம் குறிப்புணர்த்தும்போது சேனனுக்குச் சொறியுது.அந்தச் சொறிவில் குத்துகிறார்.குடைகிறார்.போதாதற்குச் சண்முகதாசனைக்கொணர்ந்து புலியைக் காத்துக் கக்கத்தில் வைக்கிறார் சேனன்.அவரைத் தூக்கிப் பையில் போடும் புலிப்பணப் பினாமிகளுக்கும் "சேனன்" என்பது தெருச் சில்லறையென்பதைவிட நாவலன் தாராளமான தேசியப் பேச்சாளரென்பதும் நிலைமைக்கொப்ப புரியவேண்டியதுதானே நாவலன்?கடந்த காலத்தைக் குறித்து ரொம்பவும் கவனமாகக் கையாளும் பல பத்துப் பேருள் நான் எப்போதும் "அங்கேயும் இல்லை-இங்கேயும் இல்லை!"


புலிவழித் "தேசியவிடுதலை"ப் போராட்டத்துக்குக் காரணமான தமிழ்த் (வி)தேசிய அரசியலுள்"தமிழீழம்" என்பது அழிவு அரசியலின் விபரீத விளையாட்டாகும்.அது,புலிவழி முள்ளிவாய்க்கால்வரைத் தேசியவிடுதலைப் போராட்டமென்றும்,தடுப்பு யுத்தமென்றும் பற்பல மொழிகளுடாகப் பரப்புரைக்குள்ளாகியது.எனினும்,இவ் யுத்தம் மொத்தத்தில் சமூகவிரோதமானதென்று வரலாறு இன்றுரைக்கும்போது,சேனன்-நாவலன் வட்டமேசைத் தீபந் தொலைக்காட்சியுரையாடல்அதற்குத் தார்மீக நியாயங் கற்பிக்கின்றது?
சீச்சீ... நாவலன் கடந்த காலத் தவறுகள் குறித்து நியாயமான-உண்மைகளை விஞ்ஞான பூர்வமாக வெளிக்கொணரவேண்டியதற்காகக் குரல் கொடுக்கும்போது"நியாயங் கற்பித்தல்"என்பது மெல்ல உலக அரசியல் நிலவரத்துள் புலிகளது அரசிலாகவேதாம் தமிழ் மக்களது தலைவிதி அமையும் என்று சேனன் மந்திரித்துச் சொல்லியாடும் கலையில் கலைந்தது நமது புரட்சிப் பிணைவு!இதுதாம் "தேசியவிடுதலைப் போராட்டம்-2".


எனினும்,உலகு தழுவிய புரட்சிபேசும் தோழரிடம் இப்படியான"புலிமனது" எங்ஙனம் தோன்றுகிறது.இங்கேயும்,அங்கேயும்"உலகு தழுவிய"ஓரங்கமான புரட்சிக்குரிய காகத்தின் வர்க்கக் கூட்டிலென்னவோ குயில் முட்டையிட்டுக் கொண்டு  தமது தரப்பு நியாயத்தைப் புலிகளது அழிவு யுத்த்தினூடாக வரையறுப்பதுதாம் கொடுமை? சீச்சீ-கடுமை!


புலிகள் செய்த யுத்தமானது சாரம்சத்தில் தேசியவிடுதலைப்போராட்டமோ அன்றித் தடுப்பு யுத்தமோ இல்லை.மாறாக,யாழ்ப்பாண மேட்டுக் குடிகளின் அழிவு அரசியல் நடாத்தையின் நேரடி விளைவாகத் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட யுத்தமாகும் இஃது! "இல்லை மடையா-இல்லை!புலிகள் செய்தது,சிங்களப் பேரினவாத அரசினது-ஆளும் வர்க்கத்தினது தமிழினவொடுக்குமுறைக்கெதிரான"தடுப்பு யுத்தம்".சாரம்சத்தில் அதுவேதாம் உலக நடப்பிலுங்கூடத் தேசியவிடுதலைப் போர்!"-ஓங்கிக் கத்துகிறான் சேனன். கடுமையாகக் குலப்பன் அடிக்குது!கசாயம் காச்ச நொச்சியிலையும்,தூதுவளையும் இல்லை நம்மிடம்!


இது,மக்கள் போராட்டத்துக்கு எதிரான தமிழ் ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான நடாத்தை.இதைத் தகவமைத்துக்கொடுத்த தமிழ் ஆளும்வர்க்கத்தினது அந்நிய எஜமானர்கள் இலங்கையின் புரட்சிக்கு எதிரான அழிப்பு-அழிவு யுத்தத்தைத் தமிழர்களது இன பிரச்சனையூடாகக்கட்டியமைத்துக் கொலைகளை நடாத்தி முடித்தார்கள்.இங்கே,இதே தொடர்கதையோடு தொடர்ந்து மக்களைப் பலிகொடுக்கும் நாசகார யுத்தம்,அதைச் செய்து வந்த புலிகளையே வேட்டையாடும்போது, புலிகள் தமது தலைமையைக்காப்பதற்காக அப்பாவி மக்களது குழந்தைகளைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கியதென்பதை எரிக் சொல்கைம் சொன்னாற்றாமென்ன-இல்லை அவருக்கு முன் உலகமே சொன்னாற்றமென்ன-நாம் அதை எப்போதாவது செவிசாய்ப்பதற்குத் தயாராகவிருந்தோம்?இப்போதும், அஃதுதானே தொடர்கதை-விக்கிரமாதித்தன் தொடர்ந்தும் தோளில் தொங்கப்போட்ட வேதாளத்துடன் முருக்க மரம் ஏறி...


இதை மறக்காது-எந்த வகைத் தத்துவங்களுக்குள்ளும் திணித்துப் புரட்டாது,நியாயமாக நெஞ்சைத்தொட்டுப் பதிலளிக்க வேண்டும்.இப்பதில் புலிகளைத் தியாகிகளாவும் மாற்றுக் குழுக்களைத் துரோகிகளாக்கவும் எமக்குச் சேனன்அவசியமே இல்லை!-அல்லது,சண்முகதாசனும் அவரது புலிகளை ஆதரித்த"அந்தக் காலமும்"அவசியமேயில்லை!!இப்போது சீனத்து வெடியில் "தைப்பொங்கல்-தீபாவழி" கொண்டாட முழுவிலங்கை மக்களும் பழக்கப்பட்டுவிட்டார்கள்!அவர்களது எதிர்பார்ப்பெல்லாம் அளக்கின்ற அரிசியைச் சிங்களவன் அளந்தாலென்னத் தமிழன் அளந்தாலென்னக் கல்லற்ற, புழுத்தலற்ற அரிசியாய் உலை வெந்தாற் சரி!தமிழரது அரசியலுக்குச் சரியாக"அரிசி"தாம் பதிலைத் தந்துவிடும்!அந்த அரிசியில் தீர்வைக் கண்ட சீனனுக்குச் செருப்படியைப் புலம்பெயர் புலிகள் தினமும் வழங்க நிலத்துத் தமிழனது உலையில் தமிழீழமானது அரிசியாக வெந்துவரும் காலமிது-இங்கே,எந்தத் தாயும் தனது பிள்ளையைத் தட்டிப்பறித்துப் போருக்கு அனுப்பும் புலிச் சர்வதிகாரத்தைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை!அவளது பிள்ளைகள் அடுப்படியில் சோறு வேகும்வரை அணிவகுத்துக் காத்திருக்கின்றனர் வட்டிலுடன்!


எரிக் சொல்கைம் சொல்வதுபோல்- புலித் தலைமை சமூகக் குற்றவாளிகள்?


அவர்கள், தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல முழு இலங்கை உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானவர்கள்-சமூகவிரோதிகள் மட்டுமல்ல உலக மனித விழுமியங்கள் அனைத்துக்குமே விரோதிகள்!


"மக்கள் விடுதலையை-புரட்சியைக் காட்டிக்கொடுத்த அந்நிய கைக்கூலிகள் புலிகள்" என்பது, இன்று முள்ளி வாய்க்காலில் கிடைக்கப்பெற்ற அறிவுரை.


புலிகள், முள்ளிவாய்க்கால்வரை எமது மக்களின் பாலகர்களை போலிக் கோசத்தின் வாயிலாகக் காயடித்தும், கடத்தியும் அழிவு யுத்தத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தவர்கள்.இவர்களது இறுதிவரையான இந்த அழிவுப் போராட்டம் தியாகமெனும் போர்வையில் துரோகத்தை மறைக்கும் அழிவு அரசியல்.இது,கைக்கூலி அரசியல்-காட்டிக்கொடுக்கும் அரசியல்.கயவர்களின் கூட்டோடு நடாத்தப்பட்ட துரோக யுத்தம்.இது,சொந்த இனத்தையே கருவறுத்த அந்நியச் சகத்திகளுக்கு உடைந்தையான தமிழின விரோதிகளது அழிவு அரசியலின் விளைவுதாம் எரிக் சொல்கைமின் கூற்றும்-நடாத்தையும்!


புலத்துப் பணப்புலிகள் தமது தவறான வரலாற்றுப்பாத்திரத்துக்கு இப்போது தியாகங் கற்பிக்கத் "தோழர்களை" பலவூடகங்களுடாகப் பயன்படுத்துகிறார்களாவென நம்மை  ஐயுற வைக்கும் தீபந்தொலைக்கட்சிச் "சேனன்-நாவலன்"உரையாடலானது மிகுந்த உச்சம்பெற்ற பொய்யுரையைக் கொண்டியக்குகிறது!


"புரட்சிகர" ச் சக(க்)திகள் நமக்குள் வரலாற்று மோசடிகளைச் செய்வது இன்னும் நம்பகத் தன்மையைக் கடாசி, அந்நியச் சக்திகளின் நோக்குக்குச் சார்பாகவே இருக்கிறது.இந்தச் சேனன் என்பது வெறுங் குறியீடுதாம்.


நிலத்து மக்கள் பாவப்பட்ட மக்கட்டொகுதியாகுமா?


அவர்கள், தமது கரங்களை நம்பிக்கொள்ள முடியாதளவுக்கு அதிகாரத்தின் தொங்குசதைகள் மக்களை இன்னும் மொட்டையடிக்கும் பாத்திரத்தை எடுக்கின்றார்கள். இஃது,ஏனிங்ஙனம் நடந்தேறுகிறது?-புலத்தில்நேரத்துக்கு நேரம் சூழ்நிலைகளுக்கமைய மாற்றுமுற்றுக் கட்டங்கட்டமான கூட்டுக்கள் தொடர்வதும்,திசைமாறுவதுமாக இருக்கும் இந்தத் தருணத்துள் அரசியல் அறம் என்பது என்ன?


"தமிழீழம்"எனும் பொய்க்கோசத்தை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகத் திணித்தும்,அவ் மக்களது சமூகவுளவியலாக்கி அதையே அரசியல் முன்னெடுப்பாகச் செய்த  புலிகள், முள்ளிவாய்க்கால்வரை இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்துள்ளார்கள்.பல இலட்சம் கோடிச் சொத்துக்களையும்,பாரம்பரியமாக வாழ்ந்த பூமியையும்விட்டுத் தமிழ்பேசும் மக்கள் நாடோடிகளாகியிருப்பதற்கும் இவ்வீழப்போராட்டமே காரணமானது.ஈழமென்பது சாத்தியமற்றதென்று தெரிந்தும் அதைத் தமது இருப்புக்காக உசுப்பேத்தி இதுவரை ஏழைமக்களின் குழந்தைகளைப் பலியாக்கிய புலிகள் துரோகிகளா இல்லைத் தியாகிகளா?இனிமேலும் புலிவழியான போராட்டக் கோசமும்,பொய்த்"தமிழீழ விடுதலை"எனும் சுத்துமாத்து விபரீத அரசியலும் யாருக்கானது?மேற்குலகுக்குச் சேவகஞ் செய்யும் ஒவ்வொரு தருணமும் இந்த விபரீதமான கோசம் அரசியற் பரப்புள் கோலாச்சுகிறது.அந்த விபரீதமான அரசியலது கடந்த காலத்துள் பல இலட்சம் மக்கள் தமது உயிரைப் பறிகொடுத்துச் சிதைந்து சாம்பலானதைக் குறித்து நம்மிடம் சரியான மதிப்பீடுகளுண்டா?-பதிவுகள்,வரலாற்றாய்வுகள் உண்டா?பேருக்குப் பின்னால் பட்டங்கள் போட மட்டுமா இலங்கையில் பல்கலைக்கழகங்கள் உண்டு?இதச் சோம்பேறித்தனத்தின் உச்சத்தில் கோலாச்சும் சேனன்-நாவலன் உரையாடல் ஒரு புள்ளியில் இருவரையும் இணைத்து இணக்கவுரையாடலாகவே அமிழ்ந்து போவதில் ஊக்கம்பெறுவது மீளவும், அதே புலிவழியிலான சதி அரசியலைத்தவிர வேறென்னவாகவிருக்கும்?


ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக: இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்கள் தமிழ்த் தேசியத்தின் வாயிலாகப் புரட்சிபேசக் கற்றுக்கொண்டவர்கள். ஈழஞ்சாத்தியமெனப் புரிந்துகொண்டவர்கள்.முழு இலங்கைக்குமான புரட்சியை நிராகரித்தவர்கள்.சோசஷலித் தமிழீழம் சார்ந்த கருத்தியல் தளம் உருவாக்கிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.புலம்பெயர்ந்து இப்போது, ஐரோப்பாவில் வாழ முற்படும் இளைஞர்கள் அதே புலிவழியிலான போராட்டத்தையும்"தமிழீழத்தையும்" குறித்து இன்னொரு பிரபாகரனது வருகைக்காக மனக்கதவை திறந்தே வைத்திருக்கின்றனர்.அவர்களைக்குறித்து நம்ம"புரட்சியாளர்கள்" அதிக அக்கறையோடு அரசியல் பின்னுகிறார்கள்!அதுள் ஓரங்கந்தாம் சேனன்?


எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை, உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடாத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை  எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக, அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.


சமூகத்தில் கருத்தியல் மனதின் தொடர்ச்சியானதை தனிநபர் அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் அரசியற் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இஃதே புலிகளுக்குத் தியாகிப்பட்டம் கொடுக்க அழிவு யுத்தத்துக்கு இலட்சியம் கற்பிக்கிறது!


சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்ததே!


சமீப காலமாகப் "புரட்சிகர"ச்செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலை கீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பதென்பதெல்லாம் நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது, பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.


இலங்கையானது தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது, ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.அல்லது இலட்சியம்-தியாமெனத் தனக்குத் தானே தீர்ப்புக் கூறுகிறது!


நாம்,இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து அந்நிய மண்ணில் உதிரிகளாக வாழ்ந்துவரும் சூழலில்,பௌதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் புலம்பெயர் தமிழ்க் குழுமத்திடம் உணரமுடியும்.


அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகளாக-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் புரட்சி-விடுதலை, ஜனநாயகம் பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இவைகளே இலட்சம் மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் படுகொலை செய்த அழிவு அரசியலை முன்னெடுப்பவர்கள்.இன்று புலிக்கு வக்காலத்துவேண்டும் சீமானுக்கும்-சேனனுக்கும் குறைந்தது மூன்று வித்தியாசமாவது சுட்டிக்காட்ட முடியுமா நாவலன்?


மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடிய இந்தப் போர்கள் ஏதோவொரு கட்டத்தில் அந்த மக்களின் நலன்களைக் காப்பதற்கான போராக உருமாற்றம் கொள்ளும்போது,சிங்கள-தமிழ் தேசிய வாதத்தின் மிகக் குறுகலான உணர்வு சிங்கள-தமிழ் யுத்தக் களமுனையின் உச்சத்தைத் தத்தமது வெற்றியின் அடையாளமாகவும்,உரிமையின் வெற்றியாகவும் பார்க்கத் தக்க மனநிலையை உருவாக்கும் காரியத்தை இந்த "ஈழப்போராட்டம்"செய்து முடித்தது.அதைக் குத்தகைக்கு எடுத்த புலிகள் முள்ளிவாய்க்கால்வரை பலியாக்கிய போராளிகள், தியாகிகளாகவும்,இலட்சியவாதிகளாகவும் உருவாக்கங் கொள்ளும் அரசியல் இங்ஙனமே நடந்தேறுகிறது.இது,மறுதளத்தைத் துரோகமென வர்ணிக்கும் செயலே இன்றைய புலிவழித் தேசியத்தின் மறுவுருவாக்கமாக மாறும் அபாயம் நமக்குள் அரும்புகிறது!சேனனிடமிருந்தும்,நாவலனது மௌனத்திலிருந்தும் இதைவிட எதையும் புரிந்துக்கொள்ளக்கூடிய அறத்தை அவர்கள்குறித்துரைக்கவில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
20.10.2012

Sonntag, August 26, 2012

சுயாதீனத்தேசத்துள் மக்களது சுயாதீனவாண்மை.

சுயாதீனத்தேசத்துள் மக்களது சுயாதீனவாண்மை.

லங்கைத் தேச மக்கள் அனைவருமேயின்று மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிகளுக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,தமிழ்பேசும் மக்களது அரசியற் கோரிக்கைகுள் மீளத் தம்மைப் புதிய வடிவினுள்த் தகவமைத்திருக்கின்றனர்.இலங்கையின் சுயாதிபத்யமென்பது இன்றைய ஆசிய மூலதன நகர்வுடன் பிணைந்து விட்டது.நடக்கப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் புதியவொரு திசையறி அரசியல் முனையை நமக்குக் காட்டுமென்றே நான் பெரிதும் காத்திருக்கின்றேன்.

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.


இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது.


இலங்கைக்கானவொரு மேட்டிமை அரசானது காலத்துக்கு முந்தியதானதாகவே இருக்கிறது. இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ்நிலைக்குள்ளிருக்கும்போதே அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர். அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே காலத்துக்கு முந்திய அதிகாரப்போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.


இங்கே,நடைபெறப்போகும் மாகாண சபைகளுக்கானவொரு தேர்தல் நிலவரமானது ஆயுதக் கலாச்சாரத்துக்குள் கண்டுண்டுபோன தமிழ்த் தேசியவாத-குழுவாத அராஜக் கட்சி-குழுக்களுக்கானவொரு நலனுக்கான தெரிவாக மக்களது வாழ்வாதார முன்னெடுப்புகளைப்பயன்படுத்துவது இதுவரை அரசியல் நகர்வாகவே இருக்கின்றது.இந்த அரசியல் நகர்வானது எப்பவும்போலவே மக்களது பிரச்சனைகளைப் பேசியபடி தமது குழு-கட்சி நலன்களை அந்நிய நலன்களது வாய்ப்புக்கான அரசியற்றெரிவிலிருந்தே காத்துக்கொள்ள முனைகின்றன. இஃது, ஒரு கட்டத்தில் இலங்கையின் முழுமொத்த மக்களது சுயாதிபத்தியத்தை மறுத்தொதுக்கும் அரசியலைத் தெரிவாக்கிக்கொண்டு மக்களை மீளப் பலாத்தகாரமான முறைமைகளில் பணிய வைக்க முயற்சிக்கின்றன.இதன் போக்குக்கமைய இலங்கையின் அரசானது தன்னையும் இதன் முதன்மையான சக்தியாகவே இருத்த முனைவதால் இலங்கையில் வெள்ளைவான் கடத்தலிலிருந்து இராணுவவாதப் போக்குகள் தெரிவாகி இலங்கையின் அண்ணளவான ஜனநாயக விழுமியங்களையும் காலிற்போட்டு மிதிப்பதில் முடிகிறது.

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலஙகையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது, சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு "சட்டம்-ஒழுங்கு" ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.


இன்றையவுலகப் பொருளாதாரவூக்கங்கள் பிளவுபடப் பிளவுபட இந்த நெருக்குதலும் தொடர்ந்து தேசத்தினது சுயாதீனத்தை உடைத்துக்கொண்டேயிருக்கிறது.இத்தகைய தருணத்திலொரு அரசு தேசத்துள் வாழும் அனைவரையும் ஒரு தேச மக்களாக உருவாகுங்களென்பது மிக இயல்பானது.இலங்கைத் தேசத்துக்கானவொரு தேசிய இனவுருவாக்கமென்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களது குரல்வளையை நெரித்துக்கொண்டுருவாவது எப்பவும் எமக்கிசைவானதில்லை.ஆனால்,இதைத் தவிர்துக்கொண்டு இலங்கைக்கானவொரு முழுமொத்த தேசியவினவுருவாக்கமென்பது இலங்கையைச் சுரண்டாதா பொருளாதாரப் போக்குகளோடண்மிக்க வேண்டிய காலம் கடந்துபோய்க்கொண்டிருக்கும்போது அதை அண்மித்தவொரு பொருளாதாரப் பொறிமுறையை இந்தப் பல் தேசியக் கம்பனிகளைத் தாண்டிச் செயற்படுத்தும் திறன்சார் அரசு இலங்கைக்கு அவசியமானது.மகிந்தா முன்னெடுக்கும் அரசியல் நகர்வானது இதற்கெதிராகவே இருப்பதென்பது கடந்தகால ஆயுதக் காலாச்சாரத்தின் பாதகமான விளைவென்பதும் மறுக்க முடியாது.

இலங்கையின் ஆளும் கட்சிகளில் அண்ணளவாக இலங்கைச் சுயாதீனத்துக்கிசைவான அரசைக்கொண்டு நகர்த்தும் கட்சிகள் இலங்கைத் தேசப் பொருளாதாரப் புண்புக்கமைய எதுவுமே இல்லாது போய்விட்டது.இலங்கை மக்கள் அனைவருமே இந்தப் பரிதாபத்துக்குரிய கட்சி அரசியலைப் புரிந்து செயற்படவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.08.2012

Samstag, Mai 19, 2012

ஜெயமோகன்களைவிட்டு இவர்களைக் கவனியுங்கள்!

முள்ளி வாய்கால் போரழிவுகளை மூன்றாவது ஆண்டாக நினைவு கூருகிறோம்.போரினது முகம் மிகக் கொடியதென்பதை நமது மக்கள் நேரிடையாகத் தரிசித்த"தமிழீழப் போர்",நிச்சியமாகச் சிங்கள இனத்தின் வெற்றியாகப்பட்ட அரசியலொன்றும் புதுமையானதோ அல்லது மாபெரும் கொடுமையென்றோ எடுப்பதற்கில்லை!;இந்தவுலகத்தின் வரலாற்றில் போரும்,சாவும் வர்க்க  அரசியலாகவே விரிகிறது.

"இந்தியா இலங்கையில் மக்களைப் பாலியற் பலாத்தகாரஞ் செய்ததா, அன்றிக் கொன்றதாவென்றும்",அன்றி,"அங்ஙனம் எதுவுமே நடக்கவில்லை."அஃது,"தமிழ்ப் பாசிசத்தின் பொய்யுரை" என்றுஞ் சொல்பவர்களைக் காட்டிலும் பெரும் ஆபத்தானவர்களை மிக எளிதாக அறியக் கூடியதாகவிருக்கவில்லை!

அவர்களை,எங்ஙனம் அறியமுடியும்?

இதோ,"இந்தியாவின் துணையோடுதாம் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும்.இந்தியாவைப் பகைக்காத அரசியலைத் தமிழர்கள் முன்னெடுக்கவேண்டும்.இந்தியாவேதாம் தமிழ் மக்களது பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைக்கவேண்டும்.இந்திய-இலங்கை அரசை குறை கூறாமல்,திட்டித் தீர்க்காமல் அவர்களோடானவொரு இணக்க-இணைவரசியலை முன்னெடுக்கவேண்டும்.இந்திய நலனுக்குப் பாதிப்பில்லாத அரசியல் தீர்வுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,எனவே,அத்தகைய அரசியலுக்குள் இந்தியாவை இழுப்பது அவசியம்."என்கின்றனரே பலர்,அவர்கள் தற்போது புலி,எலி,சிங்கம் என்ற எல்லா இயக்கத் தளங்களிலுமிருந்து இத்தகைய கோசத்தினடிப்படையில் ஒன்றாய்க் கைகோர்க்கின்றனரே,அவர்கள்தாம் இப்போது மிகப்பெரும் ஆபத்தானவர்கள்.

இத்தகைய கோசத்திலிருந்து புத்தக வெளியீடுகள்,முன்னுரைகளென எழுதித் தள்ளப்படும் இந்த இந்திய லொபிகளது இயக்கங்கள் தாண்டிய ஒருங்கிணைவானது இந்திய வல்லாதிக்கம் எங்ஙனம் அனைத்து இயங்கங்களை,அரசியல் கட்சிகளைத் தனது லொபிகளுடாகவும்,பினாமிகளுடாகவும் வழி நடத்தினரென்பதற்கு நல்ல சான்றாகிறது.

வரதராஜப் பெருமாள் தலைமையில் மண்டையன் குழுவை நிறுவிய இந்திய ரோ இறுதியில், முள்ளி வாய்க்கால்வரை அதே மண்டையன் குழுவைப் பல வடிவங்களில் நகர்த்தியது.எவரொருவர் வரதராஜப் பெருமாளை அல்லது இந்திய ரோவால் வழி நடாத்தப்பட்ட அனைத்து இயக்கத் தலைமைகளை வழிபடத் தொடங்குகிறாரோ அவர் நிச்சியம் இந்தியாவால் களத்துக்கு இறக்கப்பட்டவரே.

இந்த வரிசையில், இலங்கையில் போராட்ட அநுபவங்களைச் சொல்பவர்களும்,புலியிலிருந்து புதிய அரசியலைச் சொல்பவர்களும்,படைப்பாளிகளென்ற போர்வையில் இந்தியாவுக்கு விசுவாசமாகக் கருத்துக் கட்டுபவர்களும் ஏராளம் பேர்கள் புலத்திலும்-நிலத்திலும் கால்பதித்து வருகின்றனர்.இந்திய இராணுவம் இலங்கையில் பாலியற் பலாத்தகாரம்,கொலை,கொள்ளையில் ஈடுபடவே இல்லை என்று வாதிப்பவர்களைக்காட்டிலும்,இந்தியாவோடிணைந்தும்,இந்திய அரசின் உதவியுடனும் தீர்வு செய்வது சாத்தியமான வழி என்பவர்களேதாம் இந்திய இராணுவத்தின் அனைத்து மனித விரோதச் செயலையும் ஒருங்கே ஆதரித்து,வரவேற்பவர்கள்!இவர்களை விட்டுவிட்டு,இந்தியப் பார்பனியத்தின் அடிப்பொடிகளை-ஜெயமோகன்களைச் சாடி என்ன பயன்?இவர்கள் தமது வர்க்க-சாதியத் திமிரில் அதைச் செய்யும் அரசியலையேதாம் பண்டுதொட்டுச் செய்தும் வருபவர்கள்.இதைக் கடந்து இவர்கள் பரந்துபட்ட மக்கள் நல அரசியலுக்கு வரவேமாட்டார்கள்.சோவை திருத்த முடியுமா?;ஜெயமோகனுக்கும் சோவுக்கும் என்ன வித்தியாசத்தைக் காட்டிட முடியும்?

"இந்தியாவோடு இணைந்து,இந்தியாவின் தயவில்,இந்தியாவைப் பகைக்கமால்,இந்தியாவின் தலையீட்டில்"என்று நியாயம் அளக்கும் நபர்கள்தாம் முழுமையாக இந்திய இராணுவத்தின் அனைத்து அட்டூழியத்தையும் இலங்கையில் நியாப்படுத்திக்கொள்கின்றனர்.முதலில் இவர்களது அரசியலையும்-குரலையும் கவனியுங்கள்;ஜெயமோகன்கள் நேரிடையாகவே பார்ப்பனிய நலத்தினது கருத்தியலாளர்கள்.அவர்களை விமர்சிப்பதென்பது "இந்தகைய நமக்குள் இருக்கும் " லொபிகளைக் கவனத்திலிருந்து தவிர்ப்பதில் முடியும்.

பல இலட்சம் மக்களைப் பலிகொடுத்து, "தமிழீழ"ப் போராட்டஞ் செய்த புலிகளின் அழிவுக்குப் பின்பு மக்கள் அமைப்புத் தோற்றம் பெறுவது,கட்சி கட்டுவது,போராட்ட வரலாறு-அநுபவங்கள் தொகுப்பது,இலக்கியம் படைப்பது;அதனதன்வழியாக தாம்சார் அரசுகளுக்கு ஆலவட்டம் பிடிப்பதுவரை மக்களது அழிவுக்குக் காரணமான "ஈழப்போராட்டம்" ஒவ்வொரு நபருக்கும் தனது அடையாளத்தைச் சொல்லும் அநுபவமாக-அரசியலாக இருக்கிறது.இப்படி தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்தில் சாதியாக-வர்க்கங்களாகப் பிளவுப்பட்ட ஒவ்வொரு வர்க்கத்தினதும் ஆர்வங்களாகவிது விரிகிறது.

இந்த ஆர்வங்களின் வாயிலாக சமூகத்தில் நிலவுகின்ற உற்பத்தி முறைகள்,அந்த முறைகளைக் காத்து,அவற்றை நிலை நிறுத்தும் நிறுவனங்கள் விதைக்கும் கருத்தியல் தளங்கள் நடந்த இனவழிப்பை மறைக்க முனைகின்றன , இன்று.

இந் நிறுவனங்களின் வன்முறைசார் கருத்தியல் வடிவம் மற்றும், வன் முறை சாராக் கருத்தியல் தளத்தைக் காத்து,நிர்வாகித்துவரும் அரசுகளோ அமைப்பாண்மையுடைய கட்சிகள்-திடீர் இயக்கம்,பேரவை,சங்கம்-கழகம்,மகாசபை எனும் பலவற்றின் பின்னால் மறைந்திருந்து இவைகளை இயக்கும் ஆளும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் புதிய-புதிய லொபிகளை உருவாக்குகிறது.இங்கே,புதியவர்கள் பழைய தலைகளது பெயரினூடாக அவர்களை மேதைகளாகவும்-மக்கள் தலைவர்களாகவும் பிரகடனப்படுத்தியபடி "படைப்பாளிகளாக-கவிஞர்களாக வலம் வருகின்றனர்.இவர்களே வரதராஜப் பெருமாளைக்கூடத் தமிழ்பேசும் மக்களுக்கான பெருந்தலைவர்களென வகுப்பெடுக்கின்றனர்.இதன் மூலம் யுத்தக் குற்றங்களைக் கிடப்பில்போட்டு இந்திய அரசையும் அதன் கூட்டாளிகளையும் இவர்கள் காக்க முனைகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில்,மிக எளிமையான சொல்லாடல்கள் மூலம் ஒரு இனத்தின் வாழ்வாதார அடிப்படைக் கோரிக்கைகளை கிண்டலக்குட்படுத்திச் சீரழிக்கும் நரித் தனத்துடன் கருத்தாடுகிற தமிழ்ச் சூழலொன்று, புலி அரசியலிலிருந்து மிக வலுவாக வளர்ந்துள்ளது.இது, மக்களின் உரிமைகளை புலி எதிர்ப்பு அரசியலில் நீர்த்துப் போக வைத்தபடி,இந்திய மேலாதிக்கக் கனவுகளுக்கு  வக்காலத்து வேண்டுவதில் தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக் கொள்கிறது.இத்தகைய நபர்களது வருகையானது பல அரசியல்-இயக்க அமைப்புகளிலிருந்தும்,போராட்ட அநுபவங்களைக் காவி வரும் படைப்பாக்க முயற்சிக்குள்ளிலுருந்தும் ஒரு நரித்தனமான கருத்தாடல் முகிழ்க்கிறது.இது,இலங்கையின் சிறுபான்மை இனங்களது பிரச்சனைகளை மெல்ல இந்திய நலன்களோடு பிணைத்துக் கருத்தாடுவதில் இந்தியாவில் வதைபடும் பல நூறு சிறுபான்மை-பழங்குடி மக்களதும் போராட்டத்தையும் அவர்களது உரிமைகளையும் ஒரு தரத்தில் குழிதோண்டிப் புதைக்கின்றனர்.இந்திய "நலனைக் காத்தல்-அதற்கு எதிரானதற்ற" என்ற கதை பாடலினுள் இந்திய வல்லாதிக்த்தால் சிதைக்கப்படும் பல கோடி இந்தியச் சிறுபான்மை இனங்களதும் அடிப்படையுரிமையை இவர்கள் மறுத்தொதுக்கத் தயங்கவில்லை!

முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு கூரும் மே 18 , எப்போதுமே இந்த "இந்திய லொபி" நிகழ்ச்சி நிரலை நிராகரித்து இந்திய-மேற்கு வல்லாதிகங்களது கயமையை நேரடியாக மறுத்து மக்களுக்கான அரசியலையும் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்குமான விடுதலைப் போர் அறை கூவலாக நினைவு கூர்தல் அவசியம்.அப்படி நினைவு கொள்ளப்படும்போது மட்டுமேதாம் தேசத்துக்கெனப் போராடிய அடிமட்டப் போராளிகளது தியாகம்-அவர்களது ஆன்ம வலு நமக்குள் சமுதாய ஆவேசமாக உருவாக முடியும்.இல்லையேல் இந்திய லொபிகளது மாயமான் காட்சிகளாகவே எல்லாம் மீளவும் நீர்த்துப்போகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
19.05.2012

Samstag, Mai 05, 2012

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை!

"உழைப்பவர்கள் தம்மை விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக உலாவருவதற்கான விடுதலைப் போராட்டம் என்பது முதலாளித்துவத்தைப் பற்றி உழைப்பவர்கள் கொண்டுள்ள சிக்கலான உற்பத்தி - ஆன்மீக உறவுகளின் உயர்ந்த மட்டப் பிரகடனமாகும்.அதற்கு மற்றெல்லா உறவுகளையும்விட உழைப்பு என்ற ஒரு படைப்பே பொதுவானது."இங்கு,எவர்கள் என்ற பிரச்சனையை விட்டுவிட்டு,எப்படி விலகுவார்கள்?எஜமானர்கள் விட்டு விடுவார்களா?என்று மட்டும் கேட்டு மேலே செல்லலாம்.

"" உலகத் தமிழாராய்சி மாநாடு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவைஇ தமிழ் மாணவர் பேரவை என்று நீளும் பதிவுகள்… அதேவேளை இந்த நூலில் குறிப்பிடப்படும் சிலருடன் பின்னாட்களில் நெருக்கமாகவும் சிலருடன் ஒரு குறிப்பிட்ட அளவிலான உறவுடனும் இருந்திருக்கிறேன். இன்றும் கூட சிலருடன் நெருக்கமான உறவுண்டு. இவர்களுடன் வாழ்ந்து, பழகியபோது இவர்கள் ஒவ்வொருவரின் துக்கத்தையும் அருகிருந்தே பார்த்திருக்கிறேன். தாங்களும் மரணத்துடன் விளையாடி, சனங்களையும் மரணத்துடன் விளையாட விட்டிருக்கிறோம் என்ற துக்க உணர்வு சிலரிடம் மேலோங்கியிருந்தது.

அதனால், இந்தப் பதிவை வாசிக்கும்போது இந்தக் காலகட்டத்து நிகழ்ச்சிகளின் போக்கை மிகத் தெளிவாகவே அடையாளம் காண முடிகிறது. கூடவே இந்த நிகழ்ச்சிகளின் பாற்பட்ட  வரதராஜப்பெருமாள், அன்னலிங்கம் ஐயா, வே.பாலகுமாரன், கி.பிரான்ஸிஸ், கே. பத்மநாதன்  போன்ற ஆளுமைகளையும், அவர்களின் குணவியல்புகளையும் அவர்களாற்றிய பங்களிப்புகளையும் அவற்றின் விளைவுகளையும் அடையாளம் காண முடிகிறது."""


ஆல்பிரேட் துரையப்பா முதல் கந்தசாமி,இராஜினி திரணகம,விஜிதரன்,கிருஷ்ணானந்தன்,செல்வி இப்படி இந்தத் "துரோகிகள்" பட்டியல் நீளமானது!இத்தகைய பட்டியலை வாசித்தவர்களே இப்போது தியாகிகள்,போராளிகள் பட்டியலையும் வாசிக்க முனைகிறார்கள். களத்திலிருந்து இறுதிவரை விலகாதவர்கள் குறித்துக் களத்திலிருந்து இந்தியாவுக்கு, இராணுவத்துக்கு தகடு கொடுத்த புலிக் கவிபாடிகளோ நீண்டவொரு தகட்டைச் சொருகிக்கொண்டிருக்கின்றனர்.தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே ஒட்டக் கருவறுத்த இந்தக் கரையான்களைக் கண்ட கவிஞை சிவரமணி தன்படைப்பே இந்தச் சமூகத்தில் நிலைத்திருப்பதில் விருப்பமற்றுத் தன்னையும் தன் படைப்பையும் நெருப் பிலிட்டுக் கொண்ட சமூகக் கலகத்தை நாம் மறந்து விட்டால் நம்மை அந்த ஆண்டவன்தாம் காப்பாற்ற வேண்டும்.


புலித் தகடு கருணாகரன் கோஷ்ட்டி சாம்பல் பூத்த தமிழ்க் குறுந்தேசியத்தை ஊதிப் பார்க்கிறது.இதற்குச் சர்வதிகாரியாகிப் போன பிரபாகரனது போராட்டம் நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் தலைகீழாகப் போய்விட்டதாம்.வரலாற்றில் புலிகளது வரவுக்கும்,பிரபாகரனது பாத்திரத்துக்குமான சரியான புரிதல் இங்ஙனம் குறுக்கப்பட முடியாது.நமது மக்களது சுயநிர்ணயப் போரைச் சிதைப்பதற்குப் பிரபாகரனுக்குப் பின்னால் நின்றவர்கள், இப்போது பிரபாகரனை அழித்துவிட்டுத் தம்மை எம் மக்களது மேய்ப்பர்களாக்குவதில் மையமுறும் அரசியலை"கவிஞர்"கருணாகரன-நிலாந்தன் எழுத்துக்களுக்குள் இனங்காண்பது ஒன்றுஞ் சிரமமான காரியமில்லை!


இவர்கள்தாம் கடந்தகாலத்தில்"ஆய்வாளர்கள்"-அறிவுமேதைகள். தேசியச் சக்திகள் குறித்துக் கரிகாலன் காதை நமக்குச் சொன்னவர்கள்.இன்று,புலிகளது அழிவு திடீரென நிகழ்ந்துவிட்டதாம். சிந்திப்பதற்குள் நடந்த "தலைகீழ்"வரலாறாகிறதாம்.இந்தக் கருத்துக்களை காலச் சுவட்டில் பதிந்த கருணாகரனோ இப்போது புலிகள் செய்த விட்டேந்தி விடுதலை"ப்போரை-கைக்கூலி அடியாட்படைச் சேவையை மொழுமொத்த தமிழ் மக்களது போராட்டமாகத் தோல்வியாகக் காண்பிப்பதன்வழி,மக்களை மீளக் காயடிக்கும் நயவஞ்சகத்தைக் கொண்டிருக்கின்றார்.


புஸ்பராணியின் நூலுக்கான புண்ணியவானின் முன்னுரையோ மக்களது கடைசி நம்பிக்கையையும் தோல்வி கண்ட புலிகளோடு பொருத்தி அவர்களைச் செய்பாடற்று இருக்கும்படியும்,"உங்கள் போர்" தோற்றுவிட்டதாகவும் காட்டும்போது, அந்நிய அரசுகளது கைக்கூலிகளான தமது ஏஜெண்டு வேலைகளை மூடி மறைக்கின்றனர்.


அவர் கூறுகிறார்: " சிதைந்து போயிருக்கும் ஈழப்போராட்டம் இன்று யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சாட்சியங்களின் அடிப்படையில் அது விசாரணையைக் கோருகிறது. அந்த விசாரணையின் மூலம் அது தனக்கான நீதியைப் பெற முயல்கிறது. பொறுப்புக் கூறலும் விசாரணை செய்தலும் என்ற விவகாரங்கள் இன்று கூடுதற் பேசுபொருளாகியுள்ளன. ஆனால் இந்த விசாரணையானது வெளியேஇ எதிர்த்தரப்பின் மீதேஇ இலங்கை அரசின் மீதே  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் நிலைப்பாடு.  இதற்கான நீதியும் வெளியே இருந்து கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் நம்புகிறார்கள். இதில் நியாயமுண்டு. ஆனால்இ இது மட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டச் சிதைவைச் சீர்ப்படுத்தி விடாது. அவர்களுடைய சமூக - அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தாது. இத்தகைய ஒற்றைப் படையான சிந்தனை எவ்வளவுக்கு நியாயமானதுஇ எவ்வளவுக்குச் சரியானதுஇ எவ்வளவுக்கு நடைமுறைக்குப் பொருத்தமானது ?"- டLTTE கருணாகரன்

புலிகளது தோற்றத்திலேயே அஃது, அழிவு யுத்தத்தைச் செய்வது குறித்துப் பேசியவர்களை எல்லாம்"துரோகி"எனச் சொல்லிக் கொன்ற கூட்டம், இலட்சம் மக்களை அழித்துவிட்டுத் தமிழ்பேசும் மக்களை உலக எஜமானர்களுக்கும் உள்ளுர் தமது பங்காளிக்களுக்கும் அடிமையாக்கிவிட்டுப் பிரபாகரனே இவற்றுக்குப் பொறுப்பென்று தம்மை தமிழ்மக்களது மீட்பர்களாகக் காட்டியது  முள்ளி வாய்க்காலுக்குப்பின்.


இப்போதோ, இந்தக் கூட்டம் புலிவழியான போராட்டத்தை முழுமொத்த தமிழ் மக்களது போராட்டாமாகக் காட்டி பல்முனை நாடகத்தை அரங்கேற்ற முனைகிறது.புலியினது கைக்கூலி அடியாட்படைச் சேவையை ஈழத்தமிழர்களது போராட்டச் சிதைவாகக் காட்டுவதனூடாகப் புலிகளது அந்நிய அடியாட்படை வரலாற்றை மறைத்துத் தமது அந்நிய எஜமானர்களைக் காக்கவிரும்புகிறது-தொடர்ந்து தமது எஜமானர்களைத் தமிழ்பேசும் மக்களது மீட்பர்களாக்குங் கைகாரியத்தில் தமது பணியை முடுக்கி விடுகிறார்கள்.இதன்வழியேதாம் இந்தியாவைப் பகைக்காத தமிழரது போராட்டம் அமையவேண்டுமெனவும் பாடம் புகட்டுகின்றனர்.இதைச் சமீபகாலமாக நிலாந்தன்,கருணாகரன் போன்றவர்ர்கள்மட்டுமல்ல யாதீந்தரா வென்ற புனைபெயருக்குள்ளும் தலை புதைத்துப் பரப்புரையாக்கிக் கருத்துமட்டத்தில் அதையொரு அரசியலாகவும் முன் தள்ளுகின்றனர்.


இந்தச் செயற்பாடு மிகக்கொடுமையானதொரு இன்னொரு அரசியல் நாடகத்தை-துரோகத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் திணிக்கிறது.

" போராட்டம் சிதைந்திருக்கிறது அல்லது சிதைக்கப்பட்டிருக்கிறது என்றால்இ அதற்குக் காரணம் போராட்டத்தினுள்ளே தவறுகளும் குற்றங்களும் குறைபாடுகளும் நிரம்பியுள்ளன என்றே அர்த்தமாகும். வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள்இ சிதைப்புகளுக்கு நிகராக உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களும் விடப்பட்ட தவறுகளும் போராட்டத்தைச் சிதைத்துள்ளன. வெளிநோக்கி விரிந்திருக்க வேண்டிய போராட்டம் உட்சுருங்கியுள்ளமைக்கு இவையே காரணம். அவ்வாறெனில் அதனுள்ளே இருக்கும் குறைபாடுகளையும் தவறுகளையும் குற்றங்களையும் விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைக்கு சாட்சியங்கள் அவசியமானவைஇ முக்கியமானவை. இந்த விசாரணை வெளியே இருந்து செய்யப்படுவதையும் விடஇ அமைப்புகளின் உள்ளேஇ கட்சிகளின் உள்ளேஇ போராட்டத்தில் ஈடுபட்ட - ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரின் உள்ளேயும் நடக்க வேண்டும்.  விருப்பு வெறுப்புகள்இ உடனடி இலாப நட்டங்களுக்கு அப்பால்இ அப்படிச் சுய விசாரணைகளைச் செய்தாற்தான் தவறுகளைக் களையலாம். பிரிவுகளுக்கும் சிதறல்களுக்கும் காரணமான பகைக் கூறுகளைத் தவிர்க்கலாம். நம்பிக்கையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தலாம். பின்னடைவுகளைக் கடக்கலாம்."  -LTTE  கருணாகரன்புலிகளது தோல்விக்குத் தமது கைக்கூலிச் செயற்பாடுகளும்,அந்நிய அரசுகளுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்ட தமிழ் மக்களது போராட்ட நியாயத்தைக் குறித்தும் மௌனிக்க வைக்கும் இந்த ஈனத்தனமானது, புலிகளது கீழ்மட்டப் போராளிகளைத் தாம் எங்ஙனம் அந்நியப் படையணியாக்கியதென்பதை வரலாற்றிலிருந்து மறைப்பதன் உள் நாடகமாகும்.இதன்வழி மீளவும், தமிழ்பேசும் மக்களது பெயரைச்சொல்லி அவர்களைக் காயடிக்கும் கபடம் நிறைந்த இந்திய அரசினதும்,உளவுப்படையினதும் இன்னொரு சுற்றைக் காவிவரும் இந்தக் கருணாகரன்கோஷ்டி மிக ஆபத்தான பேர்வழிகள் என்பதை நான் மீளச் சுட்டுகிறேன்.


இத்தகையத் தகட்டுப் புலிகள் தமது இராணுவத்தையும்,அதன் தலைமையையும் உலக எஜமானர்களோடு சேர்ந்து அழித்தபின் நடாத்தும் அரசியல்சதியே நமது மக்களை மேலும் மொட்டையடிப்பதாகும்.


இவர்கள் இலங்கையில் புரட்சிகரமான உணர்வு அரும்புவதற்கே தடையாக இருக்கின்றார்கள்.அல்லது, அங்ஙனம் விடப்பட்டு,அவர்களது எஜமானர்களால் கண்காணிக்கப்பட்டு ஊதியம்-உபயம் பெற முனைவதில் இன்னொரு சதிவலை பின்னுகிறார்கள்.இவர்களது அன்றைய எதிர்ப்புரட்சிப்பாத்திரத்தில்"ஈழமென்றும், தமிழ்க் கலாச்சாரமென்றும்,தாம் உலகில் "அதியுன்னத"மக்கள் பிரிவென்றும் ஆலவட்டம் பிடிக்கும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமெனத் தம்மை சொல்லி வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள்,பதவிக்காகவும்,சுகத்துக்காவும் நாயாய்ப் பேயாய் அலைந்தும், சரணடைந்தும்-வார்தைகளினால்  தமது வேசத்தைக் கலைத்தபோது"அவற்றை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது பெயரால் பொதுமைப்படுத்தி,உள்ளே ஏற்பட்ட தவறுகளாகக் காட்ட முனைவதில் எந்த அந்நிய அரசைக் காக்க முனைகின்றனர்?


முழு மக்களதும் தவறாகப் புலி இயக்க வாதத்தையும் அதன் கைக்கூலிப் போராட்டப்பாத்திரத்தையும் தணித்துக் கருத்துக்கட்டியபடி தம்மைக் குறித்து மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களாகப் புலிப் பினாமிகள் ஊளையிடுவது மக்களை மேலும் இனவாதிகளாக்கி அவர்களைத் தொடர்ந்து அழிக்கவே.இதை அனுமதிப்பதென்பது தற்கொலைக்கு நிகரானது.


"குருதியின் நெடில் மூக்கைத் துளைக்கும்
 அகோரமான பொழுதுகளின் நெடிய காற்றோ
மூளையை விறைப்பாக்கிறது,
 இந்தக் கொடிய காற்றுள் அள்ளுண்டு போகாதிருக்க
உனக்காகவும்
 எனக்காகவும்-எமக்காவும்
நாம்,எதையேனும் செய்தே ஆகவேண்டும்!


இருள் சூழ்ந்த நாளிகையிலே
 பலரைத்தின்றுவிட்டு
இந்தியாவிலும்,கிளிநொச்சியிலிருந்தும்
 இரை மீட்கிறாய்" இன்று."குற்றங்களாலும் தவறுகளாலும் குறைபாடுகளாலும் நிரப்பப்பட் டுப் பெரும் சிதைவைச் சந்தித்திருக்கும் ஈழப்போராட்டத்தில்இ  பத்துக்கும் உட்பட்ட சிறிய எண்ணிக்கையைக் கொண்டவர்கள் மட்டுமே தங்களின் போராட்ட சாட்சியங்களை முன்வைத்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தே இந்தச் சாட்சியங்களை முன்வைத்திருக்கின்றனர். அல்லது தாம் இயங்கிய அமைப்புகளில் இருந்து விலகிய நிலையில்இ செயலாற்றும் விசைப்பரப்பிலிருந்து விடுபட்ட நிலையில் இருந்தே தங்களின் இந்தச் சாட்சியங்களை அளித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் சுயவிசாரணைக்கும் சாட்சியமளித்தலுக்கும் இவர்கள் இன்று தம்மைத் தாமே உட்படுத்தியுள்ளனர்."


முதலில் புலிகள் செய்த போராட்டத்தைக் கருணாகரன்"ஈழப்போராட்டம்"(சுயநிர்ணயத்துக்கான)என்று பொதுமைப்படுத்துவதில் மிகக்கவனமாக இருக்கிறார்.இதன்வழி சுயநிர்ணயத்துக்கான தமிழ்பேசும் மக்களது போராட்டம் என்பது காலவதியாகியது என்ற இந்திய மேலாதிகக்கக் கருத்தியலை மெல்ல மக்கள்மத்தியில் மொழிகிறார்.அதை எவரூடாக மொழிகிறாரென்றால் அங்கென்றுமிங்கொன்றுமாக வரலாறெனக் கொட்டப்படும் வெறும் அநுபவவயப்பட்ட கருத்துக்களைச் சொல்லும் நபர்களது தயவிலிருந்து, இவற்றைச் சொல்கிறார்.இதுவரை புலியினது மர்மத்தையே கலைக்முடியாதிருக்குமொரு சூழலுக்காக முழுமொத்த உறுப்பினர்களையும் கொன்று குவித்த அந்நியக் கைக்கூலிகள், அந்தத் துணிவிலிருந்தே வரலாற்றைக் குறுக்கும் நெடுக்குமாக வெட்டியொட்ட முனைகின்றனர்.


இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில்தம்மால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்களை தமது நோக்கத்தை ஓரளவு தகவமைத்துபோது வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.

இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் சுயநிர்ணயத்துக்கான-சிங்கள இனவாதவொடுக்கு முறைக்கெதிரான போராட்ட ஆளுமை சிதறி நாம் அழிவுற்றோம். அன்று,இந்திய அரசால் ஆயுத இயக்கங்களாகத் தோற்று விக்கப்பட்ட அமைப்புகளில் பல சிதைவுற்றுப் போனபின் எஞ்சிய கைக்கூலி அமைப்பினால்நடாத்தப்பட்ட எதிர் புரட்சிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது,அந்நிய அரசினது நலனுக்குட்பட்டும், இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும், இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த  முனைந்த சதிமிக்க அரசியலால் இலங்கையின் அனைத்து மக்களும் அழிவுற்றார்கள்.இதற்கு நல்லவுதாரணமானது: அநுராதபுரப்படுகொலையும்,யாழ் முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதலும்-கட்டாய வெளியேற்றமு மாகும்.


முஸ்லீம் மக்கள மட்டுமல்ல முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களும் தமது வாழ்விடங்களையே பறிகொடுத்து அநாதைகளானார்கள்.இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு கைக்கூலிக்குழுக்கள் தமது பதவிக்காக நம்மை ஏமாற்றச் செய்யும் போலி வரலாறே இந்தப் புலிகளது அழிவை முழுமொத்த மக்களது தவறாக வர்ணிக்கும்ஆலோசனைகள்-அரசியல்கள் யாவும் எம்மை ஏமாற்றும்-கருவறுக்கும் முயற்சியகவே நாம் இனம் காண்போம்.


நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும்அந்நியச் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஒன்றுபட்டவொரு புரட்சிகரமான கட்சியின் வரவை அவர்கள் எப்போதும் அநுமதியளிக்கத் தயாராகவில்லை!


இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது போரிடும் ஆற்றலைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்.இவர்களே இன்று கிழக்கில் ஞானமாகவும்-கருணாவாகவும்,பிள்ளையானாகவும் உருபெற்றபோது வடக்கில் கருணாகரன் நிலாந்தன் போன்றோர்கள் கல்வி மட்டத்தில் இறங்கி விளையாடுவது மிகத் தந்திரமானது. முள்ளி வாய்க்காலுக்குப் பின்பான வரலாற்றுக் கட்டத்திலெழும் அனைத்து ஆக்கங்களிலும்,அறிவுசார் எழுத்துக்குள்ளும் இவர்கள் திடிரெனப் பிரவேசிக்கின்றனர்.அந்த எழுத்துக்களது திசையையே மாற்றியமைக்கும் வியூகத்தோடு திறம்படவியங்கும் இவர்களை மெல்ல உள்வாங்க வேண்டிய நிர்பந்தத்துள் மக்கள் இருத்தி வைக்கப்படுவது கெடுதியானது.


"அப்படியாயின் தொடர்ந்தும் தோல்விகளும் அழிவும் பின்னடைவும் சிதைவுந்தானா? இந்த நிலையில் எவ்வாறு போராட்டத்தை மேலும் முன்னெடுக்க முடியும்? விடுதலையைப் பெற முடியும்? சுதந்திரத்தை அனுபவிக்க இயலும்? சுயவிசாரணை என்பதும்இ சாட்சியமளித்தல் என்பதும் பொறுப்புக் கூறுதல் என்பதும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் செயற்பாடுகளாகும். இதைச் செய்யாமல் ஏற்பட்டிருக்கும் இந்தப் பெருந்தேக்கத்திலிருந்து போராட்டத்தை எப்படி முன்னகர்த்துவது? எப்படி விடுதலையைப் பெறுவது?

இந்தக் கேள்விகள் இன்று பகிரங்கத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேயில்லை. கவனிக்கப்படவும் இல்லை. இதுதான் மிகமிகச் சோகமானது. இந்தப் பின்னணியிற்தான் இங்கே இன்னொரு சாட்சியாகஇ ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஷ்பராணி  தன்னுடைய சாட்சியத்தை அளிக்க முன்வந்துள்ளார். அவருடைய சாட்சியமாக ‘அகாலம் : ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்’ என்ற வரலாற்றுப் பதிவு இங்கே முன்வைக்கப்படுகின்றது."


புலிகள் நமது வரலாற்றில் "தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது, நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது" பலரிடம் உண்டு.எனினும், அஃது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத் தினதும், இந்திய ஆளும் வர்க்கத்தினது பிராந்தியக் கனவினதும் விளை பொருளாகத் தன்னை வெளிப்படுத்தி இறுதியில், மேற்குலகிடம் சரணடைந்தது.இந்தப் புலிகள் தமிழர்களது உரிமைப்போராட்டத்தில் திடீரென வந்தவர்களே!இது இலங்கையில் அந்நியர்களது அடியாட்படையாகவே தோற்றம்பெற்று இறுதியில் எதிர்ப்புரட்சிகரச் சக்தியாகவே மக்களை யுத்தத்தில் கொன்று புரட்சிகரப் போராட்டத்தை அழித்தது.இந்த வரலாறு எழுதப்பட்டேயாகவேண்டும்!
இத்தகையொவொரு அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை தேசியச் சக்தியாவும்,மக்கள் படையாகவும் வர்ணித்த கருணாகரனோ இன்று புஷபராணியினுடைய"போராட்ட"அநுபவதைக் குறித்து முகவுரைவெழுதும்போது யாருடைய சேவையில் இதுவரை இவர்களது போராட்ட அநுபவங் மையங்கொண்டிருந்தனவெனக் கேட்டுத் தொலைத்தால்"நாய்கள் பூனைகளோடு கூடுவதில்லை"என்ற மொழிவழி இவர்களது கரச் சேவையின் கூட்டுப் பொதுத் தளத்தில் புரியத் தக்கதே!

யாருடைய தோல்வியையும்,போராட்டத்தையும் குறித்து சுய விசாரணைக்கு அழைக்கின்றார்.எவருடைய இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருத்துவத்தை கருணாகரன் மச்சான் பேசுகிறார்?மக்களே பங்குபெறாத புலிவழிப் போராட்டத்தில் எந்த மக்களது தோல்வியைப் பேசச் சொல்கிறார்?


அதைத்தானே நீங்கள் இதுவரை செய்து முடித்தீர்கள்?


மக்களைத் தோற்கடித்த பின்புதானே புலிகளது இருப்புச் சாத்தியமாச்சு?பின்பு,நீங்கள் தோற்கடித்த மக்களது கதையை நீங்கள் பேசுவதுதானே நியாயம்.அதை நீங்களே பேசுவதைத் தவிர வேறுயாரால் செம்மையாகச் செய்யமுடியும்?.


எப்படிப் புலிகளான அந்நியக் கைக்கூலி அமைப்பு மக்களைத் தோற்கடித்ததென்பதை அதன் உச்ச பரப்புரைக் கவிஞர் நீங்கள்தாம் பேசியாகவேண்டும்.எப்படி அந்நியக் கூட்டை இயகத்துக்குள் உள்வாங்கி, அந்நியர்களது நலனுக்காகச் சிறார்களைக் களத்துக்கு அனுப்பிக் கொன்று குவித்தீர்களென்று கூறுவதிலிருந்து தொடருங்கோ.அதுவே,நியாயமான முறையில் நமது மக்களால் விசாரிக்கப்பட முடியும்.


"எச்சங்களில்
 "எந்த எலும்பு" உனது உறவினனதென ஒருநாள் நீ அலைவாய்!
இவையெல்லாம்
 எதன் பெயரால்,
எதன் பெயரால்,
எதன் பெயராலெனப் பிதற்றுவாய்.
அன்று,
உன் பிதற்றலுக்குச்
செவியெறிய நானோ அல்ல உன் வம்சமோ
இல்லாதிருக்கக் காண்பாய்!"

இதை எழுதிய எனது மை உலர்வதற்குள்ளேயே,உனது பிதற்றல் எனது செவியோரம் வந்து தொலைகிறது.காலம் எவ்வளவு  வேகமாக நகர்கிறது!"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது”  என்ற புஷ்பராணியின்  வார்த்தைகளின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஆற்றாமை சாதாரணமானதல்ல. அது ஆழ் அனுபவத்திற்குரிய – ஆழ் புரிதலுக்குரிய ஒன்று. இன்னுமே தணியாத இலட்சியத்தோடிருக்கும் ஓர் ஈழ விடுதலைப் போராளியின் அனுபவமொழி இப்படித்தான் கூர் வாளாக இதயத்தில் பாயும். எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகும்இ எவ்வளவோ தியாகச் செயல்களுக்குப் பின்னரும் இன்னுமே முடியாத இந்த அவலப்பரப்பு இதயத்தில் தீயைத்தான் மூட்டும். இலட்சியப் பிடிப்போடு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முன்னோடியின்  முதுமைக்கால அனுபவங்களும் நிலையும் ‘உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று உணர்வதைத் தவிர வேறு எப்படி இருக்க முடியும்!"


இலங்கையில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில்,சந்தித்த முரண்பாட்டில் தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய-மேற்குலக அந்நிய நலன்களது புவியியற்அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம்தமிழர் மகா சபையாக இருந்தாலுஞ்சரி  தமிழரசுக் கட்சியானாலுஞ்சரி அல்லது அதன் தொங்கு சதைகளான தமிழ் இளைஞர் பேரவையாகவும் இருந்தாலுஞ் சரி தோன்றிக்கொண்டன.இவை சுயமாக பரந்துபட்ட தமிழ் மக்களது பிரச்சனையிலிருந்து புரட்சிகரமாகத் தோற்றங்கண்ட கட்சிகளோ,அமைப்போ கிடையாது.மொழிவாரியாகவும்,பிராந்திய வாரியாகவும் மட்டுமல்ல நமது தமிழ்ச் சமுதாயம் சாதியரீதியாகவும் பிளவுண்டு கிடந்தபோது அவற்றைப் புரட்சிகரமாக அணிதிரட்ட வக்கற்ற இந்த நவலிபரல் பொருளாதாரத்தின் கள்ளக் குழந்தைகளான கட்சிகள் எவருக்காகவோ உணர்ச்சி அரசியலூடாகப் பரந்துபட்ட மக்களைக் கவரும் மொழிவாரி வெறியைக் கிளறி அரசியல் செய்தனர்.அந்த அரசியல் பேரத்தில் தோற்றுக்கொண்டிருந்தபோது"தமிழீழம் " கோசமாகிறது. அதையே இந்தியப் பிராந்திய நலனானது மிக நுணுக்கமாகக் கையகப்படுத்தி இலங்கையில் தனது கைவரிசையை இன்றுவரை தொடரும்போது"உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தான் செய்கிறது"என்பது எவருக்கான இலட்சியம்?எதற்கான கண்ணீர் என்பதைக் களத்தில் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களது குழந்தைகளது உடல்களில் உரைத்துப் பார்த்துப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்!


"இந்த நிலைஇ போராட்டம் சிதையத் தொடங்கிய காலப்பகுதியிலிருந்து தொடர்ந்திருக்கிறது. ஈழப்போராட்டம் எப்பொழுது சிதையத் தொடங்கியதோ அப்போதிருந்து இந்தத் துக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று துக்கப் பெருங்காடாகியுள்ளது. ஆனால்இ இந்த அடிப்படையான உண்மையைப் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை. அல்லது உலகம் முழுவதிலுமுள்ள பெரும்பான்மைத் தமிழர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் புலிகளின் வீழ்ச்சியும் முள்ளிவாய்க்கால் நிகழ்ச்சியுமே தோல்வியாகவும் துக்கமாகவும் தெரிகின்றது."


இன்று,இவர்களது வர்க்க ஊசாலாட்டம் மேற்குலகச் சார்ப்பு-இந்தியச்சார்பு என எல்லா வகை ஊசாலாட்டைத்தையும் தமது வர்க்க நலனிலிருந்து அறுவடையாக்கிப் பிரபாகரனைச் சர்வதிகாரியாக்கி "ஈழப்போரை"இலட்சம் மக்களைக் கொன்று-கொலையாக்கி முடித்துள்ளது.இவர்களைத் தண்டிப்பார் எவர்?புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் மேலும் தவறுகளையே நியாப்படுத்தும் கூட்டமாகப் புலிகளது பினாமிகள் இன்று "ஈழப் போராட்டம்"என்று தமிழைத் தவிர்த்துக் தகடு கொடுக்கின்றனர்.கருத்தியல் பரப்பைப் பாருங்கள்.தமிழீழம் என்றனர் பின்பு ஈழமென்று ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பான நபருக்கேற்பக் கோடுகளை வரைகின்றனர் புலிகள்.

இந்தப் புலிப்பினாமிகளின் காரியவாத அரசியலானது "ஈழப்போராட்டத்தின் தோல்வி" சிதைவு குறித்துப் பொதுப்படையாகத் தமிழ் மக்களை அழைத்துக் கருத்துக்களை உருவகப்படுத்துகிறது.ஈழப்போராட்டத்தின் சிதைவுகுறித்த துக்கம் குறித்த உண்மையைத் தமிழர்கள் உணரவில்லையாம்.தமிழ்பேசும் மக்கள் அதை ஏன் உணர்ந்தாகவேண்டும்?அவர்கள் தம்மிடமிருந்து தட்டிப் பறித்த தமது குழந்தைகளது அழிவின் துக்கத்திலே மூழ்கிக் கிடக்கும்போது அவர்களைக் குறித்துக் கிஞ்சித்தும் கவலையுறாத ஈழப்போராட்டம் குறித்து எவர் துக்கிக்க வேண்டும்?அதையும் தமது எஜமாருக்கேற்ப கருணாகரனே தீர்மானித்தும் விடுகிறார்.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு "அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாக"க் கிடக்கிறார்கள்.இங்கே, ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளையும்,அவர்களுக்குப் பின்னால் நின்ற தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தையும் வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது, விஞ்ஞானபூர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்.


"புஷ்பராணி தனது சாட்சியத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றார்: “மிகுந்த நம்பிக்கையுடனும் எண்ணிலடங்கா அர்ப்பணிப்புகளுடனும் தொடக்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம். எங்களது நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இன்று ஆயுதம் தரித்த இராணுவத்தினர் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். நாம் நேற்றிருந்த வீட்டில் இன்று புதிதாக ஒரு புத்தர் சிலையை யுத்தத்தில் வென்றவர்கள் நாட்டி வைத்திருக்கிறார்கள். போராளிகளின் கல்லறைகள் உடைத்து நொருக்கப்பட்டு அடையாளங்களற்ற கற்குவியல்களாக்கப்படும் காட்டுமிராண்டித்தனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி இப்போதும சாம்பல் மேடாயிருக்கிறது.”


தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த பூமி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறுதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற எந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.

இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போர் என்ற அழிவுயுத்தத்தை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்றும்,அந்நிய அடியாட்படை ஊழியம் என்றும் அன்றே வரையறுத்துப் புலிகள் அழிவார்கள் என்று குறித்துரைத்தோம்! ஈழவிடுதலை இயக்கங்களின்  எழிச்சிகள் அந்நியச் சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டு வைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டுள்ளன. இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து  தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.ஆனால், தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவாதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது, அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரைப் புலிகளை வைத்துக்காட்டிக்கொடுத்த இந்தியாவும்,மேற்குலகமும் இன்று தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கியதற்குப் பொறுப்பானவர்கள்.இதைப் புஷ்பராணி அநுபவமாகப் பேசியிருந்தால் நிச்சியம் இந்தக் கருணாகரனிடம் முன்னுரை வேண்டிக் குஞ்சங் கட்டியிருக்கமாட்டார்.

தமிழ் பேசும் மக்களை இரத்த வெள்ளத்தில் நீந்தவைத்த அந்நியக் கைக்கூலிப் புலிப் பிரமுகர்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் இந்திய-மேற்குலக அநுதாபிகளும்இன்றும் "ஈழத்தை" சொல்லித் தாம் தப்புவதற்கான அரசியலைச் செய்யப் பற்பல புனைவுகளைச் செய்கின்றார்கள்.இதைக் குறித்து மௌனித்திருக்க முடியுமா?

தமிழ்ச் சமுதாயத்தின் முழுத் தோல்வியாகப் பகரப்படும் இந்த அந்நியக் கைக்கூலிகளது தமிழ்ச் சமுதாயத்தின் உரிமை மீதான காட்டிக்கொடுப்பை,ஈழப்போராட்டத்தின் பெயரால் தோல்வியென வகுப்பெடுக்கும் இத்தகைய கயவருக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்:

தமிழ்ச் சமூகத்தை இத்தகைய முறையில் மொட்டையடிக்கும் வலு புலிகளுக்கும் அந்நியச் சக்திகுளுக்கும் வாய்க்கப் பெற்றதற்கு,தமிழ்ச்சமுதாயத்துள் நிலவிக்கொண்டிருக்கும் பழைய ஏற்றதாழ்வுகளும்,விரோதங்களும் காரணமல்ல.மாறாக,இஃது தமிழ்ச் சமுதாயத்துள் உருவாகிய ஒரு உத்தேச ஆளும் வர்க்கத்தின் துரோகத்தனமான காரியத்தின் விளைவாகும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

05.05.2012