Samstag, März 26, 2016

சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலை

ஜப்பான்:அணுமின்னாலை அனர்த்தமும், சம்பூர் அணு மின்னாலைக் கட்டுமானக் கையறு நிலையும் -சில குறிப்புகள்.

சம்பூர் அணுமின் நிலையமானது இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது? ;அவ்வணுமின்நிலையத்துள் நகர்த்தப்படும் "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்" அரசியல் என்ன?அது குறித்தொரு நீண்ட அரசியல் -பொருளியற் பர்வை அவசியமானது.தமிழ்பேசும் மக்களது தலைவிதியை இஃது தொடர்ந்து மாற்றும்.இதன் வாயிலானவொரு வியூகம் பூகோளா ரீதியாக இந்திய -இலங்கை ஆளும் வர்க்கத்து நலனுக்கு மிக அண்மையில் இருக்கிறது.நமக்கிஃது ,மிக நீண்ட தூரத்துள் நமது விடுதலையைத் தள்ளிப் போடுகிறதென்பதை உணர்ந்துகொள்வோம்! ;இஃது , எப்படியென்பதை இறுதியிற் பார்ப்போம்.முதலில் ,பூக்கோஷீமா (Fukushima )விலிருந்து தொடங்குவதே மிகப் பொருத்தமானது.

பூக்கோஷீமா (Fukushima )அணு மின் ஆலை அணுவனர்த்தம்(11. März 2011 )புவியதிர்வுக்குப்பின்பு "ரீஆக்ரரை"க் (Reaktor)குளிர்மைப்படுத்தும் செயலூக்கக் கலைவுக்குப்பின்[Das Kühlungssystem im Reaktor] அதிர்ந்து வெடித்திருக்கிறது. அணுக்கழிவு தரும் தொல்லை பெரு வணிகத்தின் மிகையுற்பத்தி தந்த பரிசுவெனச் சொல்வதில் எனக்கு ,எந்தக் கூச்சமும் இல்லை!




அணுப் பயன்பாடானது மனிதப் பண்பாட்டைப் பூண்டோடு அழிப்பதில் முடியுமென்பதைப் பல விஞ்ஞானிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனது அறிவுக்கெட்டியவரை அதன் அனைத்து அழிவுகளையும் முன்னேறிய விளக்கங்களிலிருந்து தேடிக் கற்றிருக்கிறேன்.இந்தப் புரிதலிருந்து அன்றைய[11. März 2011 ] ஜப்பானது அழிவுகளை நோக்குவதில் சிக்கலேதும் இல்லை!மேற்குலக ஊடகங்கள் நிமிடத்துக்கு நிமிடம் தந்த விளக்கங்கள்-ஆய்வுகள் யாவும் ஏலவே பலரால் படிக்கப்பட்டது.குறிப்பாகப் பசுமைக் கட்சிகளால்.

ஐரோப்பியப் பசுமைக் கட்சிகள் அணுவினது பயன்பாட்டிலிருந்தே முளைவிட்டவை.இவர்கள் அன்றைய ஜப்பானது இயற்கை அனர்த்தம்,மற்றும் அதன் தாக்கத்துள் சிக்கிய அணுவாலை அனர்த்தம் குறித்துப் பேசின.மிக முன்னேறிய தேசமான ஜப்பானது கையாலாகத்தனம் விஞ்ஞானத்தின் வரையறுக்கப்பட்ட எல்லையை எமக்குப் படம் பிடித்துக் காட்டியது.

ஐரோப்பிய அரசுகள் தமது முற்றத்திலுள்ள அணுவாலைகளை மேலும் வலுப்படுத்தக் கண்கண்டிவித்தைகளை இப்போது தொடர்ந்து செய்கின்றன.ஜேர்மனிய அதிர்பர் அங்கேலா மேர்க்கெல் வீடியோக் கமராமுன் நன்றாக நடிக்கத் தொடங்கி இன்று வருடம் 5 ஆகிறது.

"விஞ்ஞானிகளே,எக்ஸ்பேர்ட்டுக்களே(விற்பனர்களே),அணுவாலைகளைச் சிறப்பாகக் கண்காணியுங்கள்!" என்பதோடு அவரது நடிப்புச் சரியாகிவிட்டது!;மக்களது உயிரோ புற்று நோய்க்கு முன் கதிரியக்க அச்சமாக...

அதி பகாசூரக் கொன்சேர்ன்கள் [Energieversorgungsunternehmen]சக்திவள வணிகத்தில் மக்களையே வேட்டையாடுவதென்பதில்லை! அவர்கள் ( Energiekonzerns)முழு இயற்கையையும் உலகம் பூராகவும் திருடுகிறார்கள். இன்றைய வர்த்தகவுலகமானது யுத்தத்தால் செய்யும் கொடுமை ஒரு புறமாகவைத்து விவாதிக்கும்போது,இந்த, அவர்களது உற்பத்திப் பொறிமுறையின் மனித விரோதப்போக்கே இனிவரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கவேண்டும்.

அதி முன்னேறிய தொழில் நுட்ப வல்லரசான ஜப்பானது இயற்கை அனர்த்த-அணுவனர்த்த அழிவுகளை மேற்குலகமும்,முன்னேறிய முதலாளிய அரசுகளும் பெரும் பிரிசீலனைக்கு உட்படுத்த முனைகின்றன. இதிலிருந்தும், இதுபோன்ற தமது முற்றத்தில் விடியும் அனர்த்தங்களிலிருந்தும் தம் அமைப்பை எங்ஙனம் காப்பதென ஆய்வுகளை முடுக்கியுள்ளனர்.மக்கள் சாவு அவர்களுக்கான பொருட்ட அல்ல.

மேற்கு ஜேர்மனிக்கு இயற்கை அழிவு-புவியதிர்வு குறித்த கவலையின்றித் தமது அணுவாலைமீது "எதிரிகள்"விமானத்தால் மோதிச் சேதங்களை உருவாக்குவது குறித்த ஆய்வே முக்கியமானதாகவிருக்கிறது.செப்ரெம்பர் 11 இக்குப் பின் இந்தமாதிரியே ஜேர்மனி சிந்திக்கிறது. முற்பகல் செய்தவர்கள் பிற்பகல் விடிவையே குறித்துக் கனாக் காண்கின்றனர்.

ஜப்பானியப் பேரரசு தாம் பேய் அரசுதாமெனச் சொல்லவுஞ் செயற்படவும் முடியாத திண்டாட்டுத்துள் அணுவினது அனர்த்தத்துக்குமுன் கட்டுண்டுபோய் இன்றுஞ் செத்துக் கிடக்கின்றது.எந்த மூளையும் எதுவுஞ் செய்ய முடியாது.இதுவோதாம் செனோர்நோபியில் 26.04.1986 இல் நடந்த ( Die Nuklearkatastrophe von Tschernobyl : 26.April 1986 in Block 4 des Kernkraftwerks Tschernobyl nahe der ukrainischen Stadt Prypjat. ) அணுவனர்த்தத்தின் கதையும்.




ஒரு அணுவனர்த்தத்தின் -பேரிடியின் பின்னான கதிரியக்க மாற்றத்தின் சூழலே அதி பயங்கரமானது.மழைப் பொழிவு அதிகமாகும் சூழலொன்றில் அணுவியக்கம் தரையிலே மையமுறும்.காற்றில் கலக்கும் கதிரலையானது எங்கோ ஊசாலடிச் சென்றுவிடினும் தரையிற்றங்கும் அணுக்கதிர் பல வருடங்களுக்குப் பாடாய்ப்படுத்தும் விபத்து நடந்தேறிய ,வலைய மக்களை.இந்த அழிவுகள் வந்து சேரும் முறைமைகளை நாம் பல முனைகளில் அறியலாம்.இந்தியத் துணைக்கண்ட அணுவாலைகள் குறித்த கட்டுரையொன்றில் முன் பே பேசவும் முற்பட்டேன்!

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிக்கத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது[இதுவேதாம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் தேசத்துக்கும் ;முதலாளியத்தை எட்டமுனையும் சிறுதேசங்களுக்கும் பொருந்தும்.சம்பூர் அணு மின்நிலையம் இந்தப் போக்கின் விருத்தயே!].

இந்தியத் துணைக் கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக் காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் [ The 123 Agreement signed between the United States of America and the Republic of India is known as the U.S.–India Civil Nuclear Agreement or Indo-US nuclear deal. The framework for this agreement was a July 18, 2005 ]இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால், அணுக் கழிவுகளே (Plutonium, Pu, 94 )மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு -இலங்கைக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய -இலங்கை ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்திய -இலங்கைக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.


இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.
ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுட வர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா -இலங்கை மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகின்றன.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஐந்துக்கு மேற்பட்ட ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் [ Plutonium, Pu, 94 ( 239Pu ) ] இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:


 

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.இங்கு நமது சம்பந்தனது நிலையும் இதுவே! ;அவர் 50 ஆண்டுகள் பின் தங்கிய அணுவிஞ்ஞானப் புரிதலைக்கூட அறியாதவொரு சட்டவாத எம்.பி. -எதிர்க்கட்சித் தலைவர்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்( 239Pu ). இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.


 

அந்தவகையில் அதன் அரைதரக் ( Half-life (t1⁄2) )காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற் பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும் 24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இது ஒரு இலட்சம் வருடங்களுக்குத் தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான்[ 239Pu ] மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவல் -இலங்கையால் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:






1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.
2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.
3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.
5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.
6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.
9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.




இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!

மேற்குலக வளர்ச்சியடைந்த நாடுகளே இந்தப் பாதுகாப்பு வியூகத்துக்காகத் திண்டாடும்போது இந்தியா -இலங்கைபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதை[ Zeitbombe ]யெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான மக்கள் வரிச் செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

Zusammenhang zwischen Halbwertszeit und spezifischer 
Aktivität Isotop Halbwertszeit spezifische Aktivität 
 
131I  8 Tage  4.600.000.000.000 Bq/mg
137Cs 30 Jahre 3.300.000.000 Bq/mg
239Pu 24.110 Jahre 2.307.900 Bq/mg
235U 703.800.000 Jahre 80 Bq/mg
238U 4.468.000.000 Jahre 12 Bq/mg
232Th 14.050.000.000 Jahre 4 Bq/mg
 
 
இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின்
மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.
இந்தப் புளோட்டோனியம் [Plutonium, Pu, 94 ]
நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.
இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம்
மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?:

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் Plutonium, Pu, 94 ஆல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிதவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று "சேட்"பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய சிகா வைரஸ் (Das Zika-Virus ) மற்றும் "எச்5 என்1"வைரஸ்[ Influenza A/H5N1 ] அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாளாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.





இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அன்றி இலங்கை அரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்
இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!


இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.

ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.

நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.

இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை. கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லை யென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக :
 ஏலவே சொன்ன சம்பூர் அணுமின் நிலையமானது   இலங்கை போன்ற வளர் முக நாடுகளுக்கு மிக அவசியமானது?   ;அவ்வணுமின் நிலையத்துள் நகர்த்தப்படும்   "ஒரு கல்லினால் இரு மாங்காய் வீழ்த்தும்"  அரசியல் என்ன? 
என்பதன் அரசியலைப் பார்ப்போம் !
 
 
 
 


இலங்கையானது ஒரு வளர்முன நாடாகும்.அஃது இலங்கை மக்களது நல்வாழ்வுக்காக -தொழில் வளர்ச்சிக்காக -ஒழுங்கமைந்த சந்தை வளர்ச்சிக்காகப் போராடும் தேசம்.அதன் பொருளாதாரச் சந்தை வளர்ச்சி ,இன்னும் முடிந்தபாடிலில்லை!




அத்தேசமானது பல்லாண்டுகளுக்கு “இப்போருள் “ சிக்கியுள்ளது ;முழுமையான முதலாளித்துவ வளர்ச்சியானது இலங்கைக்கு அடுத்த 200 ஆண்டுகள்வரை தொடரும்.

இதன் பொருளானது, அத்தேசமானது தவிர்க்கமுடியாது தனது சக்திவளத் தேவையை இத்தகைய அணு மின்னாலைகளது உருவாக்கத்தினால் மட்டுமேதாம் சாத்தியப்படுத்த முடியும்.அதற்கு வேறொரு மாற்று வழி தற்கொலைக்கொப்பானது.

இதைச் சாத்தியமாக்கப் பல சம்பூர்கள் இலங்கைக்கு அவசியமே!இங்கே இஃதொரு கல்! மற்றது, இந்த அணுமின்னாலை உருவாகும் பிராந்தியமானது தமிழ் நிலப்பரப்பின் இதயத்திலென்பதை நாம் மறுக்கவோ அன்றி மறைக்கவோ கூடாது!இதை எந்த அரசியல்வாதியும் வெளிப்படையாகவுணரவில்லை!

தமிழர்களது இனப் பிரச்சனையும் ;இனவாத இலங்கை அரசின் போக்குகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை!2009 வரை இலங்கையில் "பயங்கரவாத" த் தாக்குல்களும் ;யுத்தமும் தேசவுடமைகள் -பொதுச் சொத்துக்கள் அழிப்புகளும் நிகழ்ந்து கொண்டது.அதன் தாக்கம் ;அரசியல் இன்னுந் தொடர்கதையாகவே இருக்கிறது!

இலங்கை போன்ற கலவரப் பூமியில் அணுமின்னாலை ஒருபோதும் உகந்ததல்ல!; இதை இந்திய ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது.
இலங்கை அரசானாது அணுமின்னாலையை மேற்சொன்ன விதிமுறைகளுக்கமையப் பாதுகாப்பதைத் தனது இராணுயந்திரத்தின் நிரந்த ஆக்கிரமிப்பிலும் ;இந்திய உளவு நிறுவனத்தின் பாதுகாப்பிலுந்தாம் சம்பூர் அணுமின்னாலையைப் பாதுகாக்க முடியுமென்பது நிதர்சனமானவுண்மை ! ; இதன் தெரிவில் திரிகோணமலைப் பிரதேசம் முற்றுமுழுதான ஆக்கிரமிப்புக்குள் ;இராணுவப் பாதுகாப்பு வலையத்துள் இருத்தப்படும்.

இது சுமார் 100 ஆண்டுகளுக்குத் தொடர்கதையாகும்.இங்கே , இந்தியாவுக்குத் திரிகோணமலையைப் பட்டயம் எழுதிக் கொடுத்தாகவேண்டும். இதுதாம் இரண்டாவது கல்!எனவே, தமிழர்களது பாரம்பரிய பூமி என்பது ,இனிச் செல்லாக் காசாகும்!; இதொஃரு வகையில் புதிய பாணியிலான நில ஆக்கரமிப்புத் தேசத்தின் வளர்ச்சியை முன் நிறுத்தி - இதற்கு , இலங்கையில் உருவாகும் அணுமின்னாலைகள் நல்லவொரு அரசியல் வியூகமாகும்.இதுவே, அணுமின்னாலையின் அரசியலும் அதன் உருவாக்கத்தின் அசுர வேகத்தின் உள் நோக்கமுமாகும்!

ப.வி.ஸ்ரீரங்கன்

ஜேர்மனி

Freitag, März 25, 2016

இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்

46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!
 
நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ புஸ்பராஜா - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.
 
 
இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்!
உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்!
இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
 
 
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
 
 
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
 
 
அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
 
 
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.
 
 
 
இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.
 
 
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
 
 
இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
 
 
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
 
 
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?
 
 
தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
 
 
ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
 
 
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி