Freitag, März 25, 2016

இந்திய அமைதிப்படைக்கு நன்றி கூறக் கடமைப்பட்ட ஈழத் தமிழர்கள்

46 ஆவது, இலக்கிய சந்திப்பு : " சனநாயகம் , புரட்சி, தலித்துவம், கிழக்கியம்"- மறு வாசிப்பு!
 
நாளை சனியும் ; ஞாயிறும் [ 26/27.03.2016 ]இருநாட்களாக, பாரிஸ் (இ)லாசப்பலில் ( Paris : La Chapelle ) 46 ஆவது "இலக்கியச் சந்திப்பு" நிகழயிருக்கிறது. வழமைபோலவே மானுடவிரோதிகள் ; சிங்கள அரச கைக்கூலிகள் ;சமூகவிரோதிகள் ;ஒட்டுண்ணிகள் (எந்த வேலைவெட்டிக்கும் போகாது ,ஒடுக்குமுறையாளர்களுக்கு "உடந்தை"யாகயிருந்து அவ்வொடுக்குமுறையாளரது எலும்புத் துண்டில் வாழ்பவர்கள்) செத்துப்போனவர்களைக் கூடத் தமது அற்ப பிழைப்புக்குப் பயன்படுத்துவதில் தயக்கமின்றித் தோழர் பரா அரங்கு ; “தோழர் “ புஸ்பராஜா - "தோழர்" சபாலிங்கம் அரங்கு ;"தோழர்" கலைச் செல்வன் அரங்கு என்ற அரசியலுக்குள் இளையவர்களைக் கட்டிப்போட முனையும் கபட "இலக்கியச் சந்திப்பு" அரசியலானது திட்டமிடப்பட்ட சூழ்ச்சிக்குட்பட்டது.
 
 
இஃது ,புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் அனைவரையும் தமக்குள் செரிக்கமுனையும் தந்திரத்தோடு "தாம் தமிழினத்திலிருந்து அந்நியப்பட்டத்தை" மறைக்க முனையும் சூழ்ச்சியாகும்!
உண்மையாகவும் ;பரந்துபட்ட மக்களது விடுதலைக்காவும் பேரினவாதச் சிங்கள அரசபாசிசத்துக்கு -புலி அராயகத்துக்கு எதிரான தமிழ் மாற்றுக் கருத்தாளர்களது பெயரை இந்தப் பிழைப்புவாதிகள் பயன்படுத்துவதையும் ;அப்பெயர்களை வைத்துத் தம்மையும் ;தமது கடந்தகாலத்தினதும் மற்றும் , இந்நாள் தமிழினவரோத அரசியலை மறைப்பதற்கெடுக்குமிந்த வியூகத்தை நாம் அம்பலப்படுத்த வேண்டும்! ;அதை, இந்தச் சந்திப்பில் கேள்விக்குட்படுத்தி இவர்களை இளஞ் சமுதாயத்திடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்!
இன்று மீளவும், சிந்தித்துப் பார்க்கிறேன்.கடந்த காலத்தில் நாம் பெருவாரியாக மக்களை அண்மித்த அரசியலையே செய்து வந்திருக்கிறோம்.
 
 
1986 இல் இருந்து நீண்ட இந் நோக்கானது மக்களது இன்னல்களுக்குக் காரணமான இலங்கைப் பாசிச அரசு,இயக்கவாத மாயை மற்றும் புலிகளது மாப்பியாத்தனமான அந்நிய அடியாட்படைச் சேவையென்று ஒரு நிதானமான அரசியற் கருத்தாக்கத்தைக் கண்டடைந்தோம்.
 
 
பல இயக்ககங்கள், இந்தியாவின் தயவில் மக்களை வேட்டையாடிக்கொண்டு புலிகளுக்கு நிகராகவே மக்களையொடுக்கியபோது எதிரியான பாசிசச் சிங்கள அரசு அவர்களைத் தனது உறுப்பாக மாற்றியுங்கொண்டது.
புலிகள் மாறி மாறி வந்த அரசுகளுடன் சமரசம்-பிடிவாதமெனச் செய்துகொண்டு தமது இருப்புக்காகப் போராடியபோது புலத்தில் மிக எளிமையான மனிதர்களாகக் காட்சிப்பட்ட பல நண்பர்கள் மக்களை அண்மித்த அரசியல் செயற்பாட்டுக்குட்பட்டனர்.
 
 
அவர்களுடன், உடன்பாடுகொண்டு"இந்த இலக்கியச் சந்திப்பும்"ஒரு உரையாடலுக்கான மாற்றுத் தளத்தை இயக்கும் கருவியாக நமக்குள் மலர்ந்துகொண்டது.
 
 
ஆக்கதாரர்கள்,சஞ்சிகை வெளியீட்டாளர்களின்றி இலக்கியச் சந்திப்புக்கிடையாது.பீட்டர் ஜெயரெத்தினமோ இல்லைப் பார்த்திபனோ அல்லது அறுவைச் சீனி லோகனோ,சிந்தனைப் பராவோ இதற்குச் சொந்தம் கொண்டாட முடியாது.இதைச் சாத்தியமாக்கப் பரவலாகப் பலர் தமது உழைப்பை நல்கினர்.
 
 
 
இப்போதும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும்போது, 2009 முள்ளிவாய்க்காலுக்குபின் இலங்கைக்குச் சென்று மாதக்கணக்காகத் தங்கி ,மகிந்தா அரசுக்கிணக்கமான அரசியலைப் பலர் செய்தனர் ; மகிந்தாவுக்குப் புலிகளை அழித்த சனநாயகக் காவலன் பட்டத்தையும் தேவதாசன் - ஞானம் ; இராகவன் கூட்டணி டான் ரி.வியற்றோன்றி நல்கியது! இதுள்,நிர்மலா ,ஞானம் எனும் எம்.ஆர்.ஸ்டாலின், தேவதாசன், சுகன்,கீரன்,இராகவன்,ரெங்கன்,புளட் ஜெகநாதன்,சிவராசா,சீனி லோகன்,கொன்சன்ஸ்ரையன்,தேசம் குழு போன்றோர் மிகக் கணக்கிடத்தக்க சிங்கள அரச லொபிப் புலம்பெயர் தமிழர்கள்.
 
 
இவர்களோடு, சோபாசக்தி மாதக்கணக்காவும் இந்தியாவில் தங்கி அரசியல் செய்வது கண்கூடு(தற்போது ,இவர்களோடு புதிய கூட்டை முன்வைத்து இயங்கும் தமிழரங்க இரயாகரன் குறித்தும் ஒரு கணிப்பீட்டுக்கு நாம் வரவேண்டும்.மேற்சொன்னவர்கள் இலங்கை,இந்தியாவென்று செல்லும்போது இரயாகரன் இங்கே செல்வதில்லை.அதற்கான முழுக்காரணமும் கட்டன் நசனல் வங்கியின் கோடிக்கணக்கான பணத்தின் கொள்ளையில் பெருந்தொகை பணத்தை வைத்திருக்கும் இரயாவுக்கு இலங்கைக்கு என்றுமே செல்லமுடியாது!இலங்கை சட்டவாதத்துக்குட்பட்டவொரு அரசாகவும்,நியாய தர்மத்துக்குட்பட்ட அரசாகவிருக்கும்வரை. அது,இலங்கைக்குப் பொருந்தாதென்பதால் இரயாகரன் வருங்காலத்தில் கொழும்பில் "புதிய ஜனநாயக மார்க்சிய லெனியக் கட்சி" என்ற பெயர்ப் பலகைக் கட்சியினது நிகழ்வில் பங்கு பெறலாம்.ஆனால்,இரயாகரனோ புலி செத்த அடுத்த, ஆண்டில் புதிய வீடும் கொள்முதல் செய்திருக்கிறார்.ஒரு அச்சகத்துள் கூலியாக வேலைக்கிருக்கும் நண்பருக்கு இலங்கையிலிருந்து நிகழ்வுக்காகப் பெரியவர்களைப், பேராசிரியர்களைச் சீடர்களை அழைக்க முடிகிறது. அவர்களுக்கும்,அவர்கள் சார்ந்த புதிய ஜனநாய மார்க்சிய லெனியக் கட்சிக்குப் பல இலட்சம் நிதியும் வழங்கக் கூடியதாகவிருக்கிறது!எப்படி,இஃதெல்லாம் சாத்தியமாகிறது?ஒரு அச்சகக் கூலிக்கு?).
 
 
இவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் சிங்கள வல்லாதிக்த்தால் இலங்கையில் ஓடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் அல்ல!இவர்கள்,அனைவருமே எங்கும் தொடர்ந்து வேலைப் பணியிலிருப்பதாகவோ,ஒரு பொறுப்பான பணியில் வருடக்கணக்காகவிருந்து செயற்பட்டவர்களோ கிடையாது.
ஞானத்தையும்,,தேவதாசனையும்,விட்டு விடலாம். இவர்கள் நேரடியாக ஒடுக்குமுறையாளர்களது சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு நம்மையும்,நமது மக்களையும் முட்டாளாக்குபவர்கள்!
 
 
ஆனால்,இத்தகைய குள்ள நரிக் கூட்டமானது புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் குருதியாறைத் திறக்குமொரு அரசியலைச் சந்திப்புக்கள்,இலக்கியவுரையாடல்களெனச் செய்யும்போது இவர்களது வீட்டிலும்,மண்டபங்களிலும் தவழ்ந்து குடித்துக் கொட்டமடிக்கும் இளைய தலைமுறைப்"படைப்பாளிகள்"சிந்தனைச் சிற்பிகளுக்கு என்ன வகைமாதிரியான கணிப்பீடுருவாகிறது?
 
 
இவர்கள்,சிங்கள அரசுக்குச் சாமாரஞ் செய்யும் துஷ்டர்களோடும், இந்தியவரசின் உளவு நிறுவன முகவர்களோடும் கூடியுண்டு,குடித்துக் கும்மாளமிடும்போது இவர்களது"மக்கள்"நலக் கருத்தாடல்-அரசியலது உண்மை வடிவமென்ன? ; இந்த 46 ஆவது இயக்கியச் சந்திப்புவரை இவர்கள் செய்த அரசியலது அறுவடை என்ன? ;வடக்கையும் ;கிழக்கையும் அரசியல் ரீதியாகவும் ;சட்டரீதியாவும் பிளந்து தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதவர்களாக்கியதைத் தவிர இவர்கள் செய்த மக்கள் நலம் என்ன? ;மகிந்தா இலங்கையில் சனநாயத்தை மீளக் கொணர்ந்தார் ;அமைதியைக் கொணர்ந்தார் -அவருக்கு நன்றி என்பதன் அரசியல் என்ன?
 
 
தொடர்ந்தும், தொடர்ந்துமிந்தத் தமிழ் மக்கள் விரோதிகளால் இலங்கைச் சிறுபான்மையின மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
 
 
ஒரு புறம் புலி மாபியாக்கள் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் "தேசியம்-தேசியம்"என்று சொல்லிச் சொத்துச் சேர்ப்பதைத் சமீபத்தில் சாத்திரி அவர்கள் அம்பலப்படுத்தியது[ http://sathirir.blogspot.de/2012/12/blog-post.html ]போல் இவர்களும் மக்களுக்கு விரோதமாகவே செயற்படுகின்றனரென்று எவன் உண்மையாகப் பேசுவான்?- இவர்களோடு கூடிக் கூத்தடிக்கும் முன்னாள் புலி விசுவாசத் தம்பிகள் இதற்குத் தயாரா?
 
 
நீங்கள், மக்களை அண்மித்து இயங்கினால் அதை நோக்கிச் செயற்படுங்கள்!
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

Keine Kommentare: