Donnerstag, Mai 27, 2010

ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும்,
ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:

கருத்தின்பால் காரணந் தேடுதல்!வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்"ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் " எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.


"வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு" எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.


ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய"படைப்பாளிகள்" புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்... கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, "படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக" வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!


சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!


அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?


கேடுகெட்ட"படைப்பு"வாதிகளே கேளுங்கள்!


மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!


எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு "நியாயமான" வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.


இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி...இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?


தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!


இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?


இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் "மக்கள் சக்தி"லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?


இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.


நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.


இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; "புதிய படைப்பாளிகளா" அல்லது, "புரட்சிக்காரர்களா" என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.


பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.


புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!


இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.


இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.


இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

Freitag, Mai 14, 2010

தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு

வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்..."உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சு
உயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளி
ஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடி
அருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம்


ஓலத்தில் கிழிபடக் காலத்தின் முனைப்பு
மாமிசத்தின் பிராண்டடிலில் கற்பிதம்
தேசமாய் மொழியாய்க் கலையாய்
காயிழந்தேன் தமிழுக்காக..."
ன்று 13.10.2010 , ஜீரி வீ(G TV) செய்தித் தொகுப்பாளர் நரேன் முன்னாள் புலி எம்.பி. சிவாஜீலிங்கத்திடம் பிரபாகரன்தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பேட்டி எடுக்கிறார்.


பிரபாகரனது தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பெரிய மனிதாபிமானிகளாக நடிக்கும் இந்த கேடுகெட்ட நரிகள், பார்வதி அம்மாளின் புதல்வன் "பாசிஸ்ட்" பிரபாகரனால் பழிவாங்கப்பட்ட எத்தனை பார்வதி அம்மாக்களையும்,அவர்களது வலிகளையும் கடந்த காலத்தில் பேசினார்கள்?


என்ன பெரிய மனிதாபிமானம் இந்த ப் பார்வதி அம்மாள் குறித்து...


எனக்குப் புரியவில்லை!


தேசமில்லாத தேசியம்:


தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் ,புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.

வன்னிப் புலிப் பாசிஸ்ட்டுக்கள் செய்த கொடுமைகளை, அங்கு வாழ்த மக்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.நான் சுவிட்ஸ்லாந்தில் நின்றபோது சந்தித்த "பார்வதி அம்மாள்" சொன்ன திடுக்கிடும் தகவல்: "பிரபாகரன் ஒரு சொறியன்-சர்வதிகாரி மட்டுமல்ல ஒரு மனநோயாளியுங்கூடவென்பது" அந்தத் தாய்கூறிய பொன்வரிகள்.


கேடுகெட்ட புலிகளது பாசிச நடாத்தை, சொந்த மக்களையே வதைத்தெடுத்தது.இந்த இலட்சணத்தில் அவனது தாய் பார்வதிக்கு மனிதாபிமானம் கேட்கும் புலிக்கயவர்களைக் கண்டிக்க எந்த நாய்க்கும் வலுவில்லை!இந்த நாய்கள் வன்னி அவலம் குறித்து எழுதும் எழுத்தாளர்களது கட்டுரையைப்படித்துவிட்டு மொழியிழந்து வாழும்போதும் நடிகைகளது வனப்பில் மயங்கத்தாம் செய்கின்றனர்.தமிழ்நாடு சென்று ரம்பாவைக் கல்யாணஞ்செய்யும் புலிப் பினாமிகள் இப்போது புலிகளுக்குப் பொன்னாடை போர்த்த"மே-18"வருவதற்குக் காத்திருக்கிறார்கள்!


இத்தகைய துரோகிகள்தாம் இப்போது பிரபாகரனென்ற கொடுங்கோன்மை மிக்க சர்வதிகாரிக்கும்,அவனது அடியாட்களுக்கும் நினைந்துருக விழாவெடுப்பதில்,தமிழீழ மக்களுக்கான உரிமை என்று புலம்புகின்றார்கள்.அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?


இக்காலத்தில் அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.


எனினும்,புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் பினாமிப் புலிகளாக உலாவும் தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள், இப்போது, பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை-நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.


தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு:


புலிகளைக் காட்டிக் கொடுத்த நரிகள் "நாடுகடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தலை நடாத்திய கையோடு, மே 18, 2010க்கு இன்னொரு ரவுண்டு வருவதற்கான முன்னெடுப்புகளில் மும்மரமாகச் செயற்படுகின்றனர்.அழுகுரல்களினூடாகப் பணம் பண்ணப் பிணம் செய்தவர்கள், இப்போது பிணமானவர்களது வரலாறு பகிர்ந்து பணம் பண்ணப் பல முயற்சியில்...
புலன் பெயர்ந்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வறுமைப்பட்ட ஜடங்கள் இன்னும் தாம் கற்றுக் குட்டிகள்தாமெனப் பகரும் செயற்பாட்டில் தமது வாரிசுகளைக் களம் இறக்கித் தம்மையும் சீரழித்துத் தமது வருங்காலச் சந்ததியையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி...


மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.


தடார் புடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.கேடுகெட்ட தமிழ் வியாபாரப் புத்தியுடைய சமூகக் கிரிமனல்கள் இப்போது எங்கும்" தமிழீழ அரசு,நாடுகடந்த தமிழீழ அரசு"வெனப் புலம்பியபடி புலம் பெயர் சமூகத்தின் முதுகில் குத்தியபடி...இதற்கு ஏற்றபடி"பேராசிரியர்கள்"எனும் போர்வையில் உலாவும் சேரன்,உருத்திருகுமார் போன்ற பொறுக்கிகளும் சித்தாந்த வலுக்கொடுத்து தமது குடும்பங்களுக்குச் சொத்துச் சேர்த்தபடி?...
இன்றைய GTV யின் கருத்துப் பகர்வுக்கமைய,நிலவுகின்ற அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாராளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது,இந்த ஜீ.ரிவீ (GTV)ஜெர்னலிசத்தால்!


இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.இதை ஜீ.ரிவி போன்ற புலிகளது பினாமி ஊடகம் தொடர்ந்து வாந்தியெடுக்கிறது.


மறுபுறமோ,புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள், இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!இதை எங்ஙனம் முறியடிப்பது?:1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,


4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும்,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும், வெளியக அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும் உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,


அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில் கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும் அவசியமாகிறது.


இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதியாக விளங்க முற்படுவதும் , அதை எங்ஙனம் புலிகள் தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் "கொலைக்கள அரசியலை" நமக்குள் திணித்தார்கள் என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இது குறித்து இப்போது மெல்லக்கசியும் எழுத்துக்களை மிக நுணுக்கமாக அணுகுவது,அதன் சமூக உளவியலைத் தறுவாகக் கற்பது(இதன் அர்த்தம் இதுவரை புலிக்காக வக்காலத்து வாங்கிய பொதுபுத்தி மக்களது அழிவில் எடுக்கும் அரசியல் நகர்வு என்பதாகும்(இந்தப் பொது புத்தி சகல மட்டத்திலும் வெகுஜன அரசியல் மற்றும் வர்க்க நலன் என்றாக விரியும்.) ).


இதை மறுத்து இயங்க முனையும் புலிகளது அரசியல்நீட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென இந்தியா வாந்தியெடுப்பதாக நமக்குச் செய்தி சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரச நிதியோடு தமது கடமையைச் செய்யும்போது,இன்னொரு புறம் உலக ஆதிக்க சக்திகளது தயவில் இயங்கும் குள்ள நரிகள் நமக்குப் புரட்சிப் பாடம் நடாத்துகின்றன.


இந்தக் கோலத்தில் தமிழ் மக்களது அரசியல் வாழ்வோ படு பாதளாத்தில்.என்ன செய்ய முடியும்?


புலத்துப் புலிப் பினாமிகளது வலை:


புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புலத்துப்புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள்(நாடுகடந்த தமிழீழ அரசு) மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது என்றவுண்மை புரியப்பட வேண்டும்!


தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சுற்றிய புலம்பெயர் புலித் தேசியவாதமதனது ஈவிரக்கமற்ற படுகொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலத்துப் புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன இன்று.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய காலத்தில் "புரட்சி-ஜனநாயகம்"என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் நரிகளது மந்திரமாக இருக்கிறது.இதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய சூழல் நெருங்குகிறது.எனினும்,காலம் அதற்கான தகவமைப்பைச் செய்யுமென நம்புகிறேன்.நமது மக்களது குருதியில் ஆதாயமடையும் புலத்துப் புலி அரசியல் தரகர்களைக்கடந்து-அந்நியச் சக்திகளைக் கடந்து, நாம் புரட்சிகரப்பணியைச் செய்தேயாகவேண்டும்.மக்களது விடிவுக்காக அவர்களே புரட்சிகரமாக அணிதிரளவேண்டிய இன்றைய சூழலில்,நாம் மேலும் எமது காரியத்தைத் தொடர்கிறோமா?


எமக்குள் முட்டிமோதிச் சுருங்கிய நாமோ நமது கைகளில் விலங்குகளை நாமே தயாரித்துப் பூட்டியுள்ளோம்.


இன்னும் விபரமாகச் சொல்வதானால், இயக்கவாத மாயை கடந்தும்,தத்தம் தலைவர் துதியைக் கடந்தும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்.


இல்லையேல்,மே 18க்கு ஓலமிட்டுப் பணம் பண்ணும் புலத்துப் புலிப் பினாமிகள் தமது அரசியலைத் தொடரப் புரட்சிகரப் பாட்டும் தமது எடுபிடிகளது வழியில் சொல்ல, நாம் அவர்களையும் நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்து,எமக்குள்ளே குட்டுப்பட்டு குடி கலைந்து...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.05.2010