Sonntag, Februar 24, 2008

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...

சிறார்கள் இராணுவமாவதற்கு எதிராக...


>>>"கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.<<<


இலங்கையில் குழந்தைகளை இராணுவத்துக்காக-போராளிகளாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது.அத்தகைய சட்டத்தை மீறுபவர்கள்மீது 20 ஆண்டு காலச் சிறைத் தண்டனையும் உண்டாம்!எனினும்,குழந்தைகளைக் குண்டுபோட்டுக் கொல்லும் அந்த அரசை எந்தவொரு அமைப்போ அல்லது அரசுகளோ இதுவரை கண்டும் காணாததாக இருக்கின்றன.ஒரு கண்டனத்தைக்கூட எவரும் செய்யவில்லை!தமிழ்பேசும் மக்கள்மீது பாரிய இனவாத ஒடுக்குமுறையை ஏவிவிடும் அரசபயங்கரவாதம் நீடிக்கும்வரை குழந்தைகளைப் போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடிவதில்லை!தமது கண்ணெதிரே குண்டுகள்வீழ்ந்து மரணிக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் உள்வாங்கும் சிறார்கள், நிச்சியமாக அதை எதிர்ப்பதற்காக ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருப்பதற்கில்லை!இதை உலகம் நன்றாகவே அறியும்!அதைவிட ஜேர்மனிய அரசின் கடந்தகாலச் சரித்திரம் இதை மிக அழகாகவே அறியும்.


"கிட்லர் யுங்க" என்ற வார்த்தையினூடே இன்று அர்த்தமறிய முனையும் நவ ஜேர்மனிக்கு இதன் தாத்பரியம் நன்றாகவே புரியும்.எனினும், இன்றைய இனவாத அரசுகளைத் தட்டிக்கொடுத்தபடி குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுப்பது மக்களையும்,குழந்தைகளையும் ஏமாற்றுவதாகவே இருக்கிறது.உலகத்தில் சிறார்பருவமானது மிக அழகாகக் காத்து அனுசரிக்கவேண்டிய பருவமாகும்.இந்த வயதில் குழந்தைகள் யுத்ததுக்கு இரையாகும் நிலை வெகுவாக வெறுக்கத் தக்கதாகும்.இத்தகையவொரு சூழலில் எமது சிறார்கள் வாழ நேரிட்டது எங்ஙனம் உருவாகியது?,அதைத் தடுப்பதற்கான மூலத் தீர்வு என்னவென்பதைக் குறித்து இதுவரை எந்தவொரு உலக அமைப்பும் சிந்திக்காது,தத்தம் போக்குக்கு இணங்கச் சிறார்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது மிக மிகக் கபடத்தனமானதாகும்.

"அச்சுறுத்தலுக்குள் இருக்கும் மக்களுக்கான அமைப்பு" எனும் ஜேர்மனிய அமைப்பானது இலங்கையில் சிறார்களைப் படையில் சேர்க்கும் புலிகளுக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்துகிறது.அது, ஜேர்மனிய வெளிநாட்டமைச்சருக்குப் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துப் படிவங்களை இதுவரை சேகரித்து அனுப்பியுள்ளது.கூடவே, இணையத்தின் வாயிலாகவும் அது இத்தகைய கையெழுத்து வேட்டையைச் செய்து வருகிறது.

இலங்கையில் போரை நிறுத்திக் குழந்தைகளைத் துஷ்பிரயோகஞ் செய்யும் நிலையைத் தடுக்கும்படியும் ஐரோப்பியக்கூட்டமைப்பையும், ஜேர்மனியையும் கோருகிறது.இன்றைய சூழலில் 4.000.வரையிலான சிறார்கள் புலிகளின் படையணியில் இருப்பதாகவும்,அவர்கள் இன்றும் 12 வயதே கடந்துவிடவில்லையெனவும் அது குற்றஞ் சுமத்துகிறது.

குழந்தைப் போராளிகள் உருவாகும் நாடுகளாக இன்னும் பல ஆபிரிக்க நாடுகளையும் அது பட்டியலிட்டபடி இலங்கையில் சிறார்கள் அகதி முகாங்களிலிருந்தே வலுகட்டாயமாகக் கடத்தப்படுவதாகும் ஆதார பூர்வமாகச் சொல்கிறது.புலிகளின் பிளவுக்குப் பின்பான நிகழ்வில் கருணா குழுவுருவாக்கத்தின் பின்பாக 200 தடவைகளுக்கு மேலாகக் குழந்தைகளைக் கருணா குழுவும் கடத்தியதாகவும் இந்த அமைப்புக் கூறுகிறது.

குழந்தைகள் ஒரே பொழுதில் அகதியுமாகியும்,போராளிகளுமாகும் நிலை இலங்கையில் இருப்பதாக அந்த அமைப்புக் கூறுகிறது!

இந்த அமைப்பின் குரல் மிகச் சரியானதாகவே இருக்கிறது.

குழந்தைப் போராளிகளை உருவாக்கும் அரசுகளே மிகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.இலங்கையில் போராடும் நிலை உருவாக்கப்பட்டத்தற்கு மேற்குலகுக்கும் பங்குண்டு.அத்தகைய தேசங்களே இன்று குழந்தைப் போராளிகளின் உருவாக்கத்துக்குத் துணைபோனபடி தத்தமது வர்க்க-தேச நலன்களை இலங்கையில் காத்துவரும்போது, அங்கே தவிர்க்க முடியாது இனவொடுக்குமுறை கூர்மையடைகிறது!இத்தகைய நடத்தைக்குத் தோதாக இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் தேசங்கள் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய தேசங்களாகும்.இவர்களின் குண்டுகள் தமிழ் பேசும் மழலைகளைக் கொன்று குவிக்கும்போது அதுகுறித்து எந்தவொரு செய்தியையும் போடாதிருக்கும் மேற்குலகப் பத்திரிகைகள் இந்தக் குழந்தைப் போராளிகளின் உண்மையான அவலத்தைத் தமது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது மிகவும் வேதனையானதாகும்.

சிறார்களைப் போராளிகளாக்கும் நிலைக்கு உந்தித் தள்ளப்படும் இனவாத அழிப்பானது ஒரு இனத்தின் இருப்போடு சம்பந்தப்பட்ட சிறார் போராளிகளைத் தயார்படுத்திவிடுகிறது.வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் வாழும் சின்னஞ்சிறார்களின் முன்னுள்ள தேர்வு போராடிச்சாவதென்பதே!இதைவிட அவர்கள் தம்மைக் காத்து வருவதற்கான எந்தச் சூழலை இலங்கைச் சிங்களப் பாசிச அரசு விட்டு வைத்திருக்கிறது?ஆறுமாதக் குழந்தையின் கைகள் ஒடித்து,குடல் சிதறி மரிக்கும்படி குண்டுத் தாக்குதல் செய்யும் சிங்கள அரசை எவ்வழியில் தடுத்து நிறுத்தமுடியும்?

இலங்கையின் கொடூரமான அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்த முடியாத அரசுகள்"குழந்தைப் போராளிகள்"குறித்துக் கதைவிடுவது சாத்தான் வேதம் ஓதும் நிலைதாம்.

புலிகளுக்கும் இலங்கைக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்த முறிவுக்குபின்பான இன்றைய சூழலில் சர்வதேசக் கண்காணிப்புக்குழுவுக்கு இலங்கையில் அனுமதியில்லாத சூழல் குழந்தைகளைப் படையில் சேர்ப்பதற்குச் சாதகமான சூழலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.என்றபோதும், இலங்கைமீதான குற்றப்பத்திரிகைகளை அடக்கி வாசிப்பவர்கள் புலிகளின்மீதே குற்றத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்!

புலிகளால் சிறார்கள் போராட்டத் தூண்டும் நிலைமைகளின் உருவாக்கம் இலங்கையின் அரச முன்னெடுப்புகாளாலேயேதாம் தோற்றுவிக்கப்படுகிறது!இதைத் தடுத்து நிறுத்தாமல் சிறார்களைக் காத்தலென்பது இலங்கை இராணுவம் மக்கள் குடியிருப்புகள்மீது குண்டைப் போட்டுக் குழந்தைகளைப் பலியெடுத்துவிட்டு,அது புலிகளைத்தாம் அழித்தோம் என்பது போன்றதே.

இத்தகைய நிலையில் இவர்கள் "கையெழுத்திட்டென்ன,குழந்தைகளைக் காத்தென்ன?"எல்லாம் தத்தமது தேசங்களின் இலாபத்தின் முகமூடிதாம்.


ப.வி.ஸ்ரீரங்கன்
24.02.2008


KAMPAGNE


Aktion für Kindersoldaten in Sri Lanka zum Red Hand Day
Kinder sind keine Soldaten!08. Februar 2008Mit der symbolischen "Roten Hand" protestieren Menschenrechtsorganisationen in aller Welt am 12. Februar gegen den Einsatz von Kindern als Soldaten. Mehr als 300.000 Kinder wurden nach Schätzungen der Vereinten Nationen im Jahr 2007 als Soldaten in Konflikten im Kongo, dem Sudan, Tschad, den Philippinen, in Sri Lanka, Afghanistan und Kolumbien sowie in vielen anderen Ländern eingesetzt.

Manche Kindersoldaten waren sogar noch nicht einmal zwölf Jahre alt. In Sri Lanka werden regelmäßig Kinder aus Flüchtlingslagern entführt und zum Dienst an der Waffe gezwungen. Seit 1983 starben in einem blutigen Bürgerkrieg in dem asiatischen Inselstaat mehr als 70.000 Menschen.

In den kommenden Monaten wird die Gewalt noch weiter eskalieren, da die Regierung Sri Lankas im Januar 2008 ein Waffenstillstandsabkommen mit der tamilischen Befreiungsbewegung "Liberation Tigers of Tamil Eelam" (LTTE) aufkündigte. Denn die Regierung wollte nicht länger neutrale internationale Waffenstillstandsbeobachter in der Region haben, die Menschenrechtsverletzungen der Konfliktparteien dokumentierten. Die LTTE kämpft für einen unabhängigen Staat der diskriminierten tamilischen Minderheit.

Sie schreckt dabei weder vor Terroranschlägen, noch vor dem Einsatz von Kindersoldaten zurück. Rund 4.000 Kindersoldaten sollen heute in den Rängen der LTTE kämpfen. Die Regierung Sri Lankas setzt nicht mehr auf Gespräche mit der LTTE, sondern auf ihre militärische Zerschlagung. Dabei setzt sie auch Milizen wie die Karuna Gruppe ein, die Kinder als Soldaten kämpfen lassen. So wurden zwischen November 2006 und August 2007 mehr als 200 Entführungen von Kindern durch die Karuna Gruppe registriert.

Weder Polizei, noch Militär verhindern diese Zwangsrekrutierungen, obwohl nach dem Recht Sri Lankas der Einsatz von Kindersoldaten mit bis zu 20 Jahren Haft bestraft werden kann.

Kinder sind nicht nur als Soldaten, sondern auch als Flüchtlinge die ersten Opfer des Bürgerkrieges in Sri Lanka. Bitte appellieren Sie an Bundesaußenminister Frank-Walter Steinmeier, sich gemeinsam mit der Europäischen Union für ein Ende des Bürgerkrieges und des Missbrauchs von Kindersoldaten in Sri Lanka einzusetzen Denn Sri Lankas Kinder brauchen ein Zeichen der Hoffnung.
http://www.gfbv.de/inhaltsDok.php?id=1220&PHPSESSID=27b7f0def8e4ed54144d51d96a2aa53b

Samstag, Februar 23, 2008

போதுமடா சாமி இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்

வான் குண்டுகளும்
வாளாதிருக்கும் உலகமும்.


உலகத்துள் ஒடுக்குமுறையாளர்களெல்லாம் ஒரு பக்கத்தில் தத்தமது தேவைகளோடு அரசியல் நடாத்த, நாம் தினமும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கிறோம்,அவர்களது ஒடுக்குமுறை வியூகம் நம்மைத் துண்டம் துண்டமாக்கி அழிக்கின்றது!சிங்கள வன்கொடுமை அரசின் வான் தாக்குதல் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணில் குண்டுமழை பொழிய எனது மழலைகள் கைகள்,கால்கள் துண்டமாகியும்,குடல் சிதறக் கொலையுண்டு போகிறார்கள்!

நான் மெளனித்துக் கிடக்கிறேன்.

எனது தவறுகள் என்னை அழிப்பதில் முடிகிறது.

என்னைச் சுற்றி எதிரிகள் படை சூழ்ந்துபடி "தேசமொன்று உனக்குக் கிடையாது"என்று பூண்டோடு எனது காலடித் தடங்களை அழித்தபடி முன்னேறுகிறார்கள்.

இது எனது தேசத்தின் ஊழ்வினை!

முடியவில்லை-மெளனித்திருக்க முடியவில்லை!

மனதுக்குள் ஏதோவொரு வலி-வேதனை.

யாரேறெடுத்தெமைப் பார்ப்பார்?

எந்தவொரு தேசமும் எமது அழிவை குறைந்தபட்ச செய்தியாகக்கூடக் காண்பிப்பது கிடையாது!பாலஸ்தீனத்தில்,ஈராக்கில் நடப்பவை செய்தியாகும் வேகம் எனது மண்ணின் அழிவில் இருப்பதில்லை.

இந்த நிலையில், தமிழர்களின் அழிவை உலகத்து இடதுசாரிய நாளிதழ்கள்தாம் ஒரளவாவது வெளிப்படுத்துகின்றன.ஆனால்,ஈழத்துத் தமிழனுக்குக் கம்யூனிசத்தின்மீதான காச்சல் இன்னும் விட்டபாடில்லை!எங்கள் வலியை,எங்கள் பார்வையில் இதோ ஜேர்மனிய இடதுசாரிய யுங்க வெல்ற் எனும் சஞ்சிகை கூறுவதைப் பாருங்கள்.

இந்த நாளிதளின் பல கட்டுரைகளை ஜேர்மனிய நகரமான காசல் எனும் நகரத்திலிருக்கும் காசல் பல்கலைக்கழக சமாதான ஆய்வகப் பிரிவு அதிகமாகச் சேகரித்து வைத்திருக்கிறது.இது இடது சாரிகளால் மட்டுமே நிகழ்ந்து.ஜேர்மனிய அதிபர்களாலோ அல்லது முதலாளிய ஊடகங்களாலோ நிகழ்ந்தது அல்ல!எமது கண்ணீரை தொடைப்பதற்காக அவர்களது எல்லைவரைப் போராடுகிறார்கள்.அப்படிப் போராடிய பேராசிரியர்கள் பலர் ஜேர்மனிய அரசால் பயங்கரவாதிகளாகக் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்கள்.ஏனெனில்,இவர்கள் இடதுசாரியப் பாரிம்பரியம்கொண்ட முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்பதே காரணமாக அமைகின்றது.


ஈழத்தின் அழிவுக்கான வித்தை இட்டுவிட்டுச் சென்றவர்கள் வட ஈராக்கில் அத்துமீறித் தாக்குதலுக்குப் போகும் துருக்கிய இராணுவத்தை மீளத் துருக்கிக்குள் வருமாறு எச்சரிக்கை செய்கிறார்கள்!துருக்கி கொசொவோவை அங்கீகரக்கிறது!அதே தருணம் குர்தீஸ் மக்களை வேட்டையாடத் தனது வன் கொடுமை இராணுவத்தை அமெரிக்க ஒப்புதலோடு வட ஈராக்கை நோக்கி ஏவிடுகிறது!


அமெரிக்க அதிபாரோ ஆபிரிக்கக் கண்டத்தில் தனது கைகளால் குழந்தைகளை அள்ளிக் கொஞ்சி மகிழ்கிறார்!அற்புதமான மனிதர் புஷ் அவர்கள்!என்னவொரு கரிசனை இந்த ஏழை மக்கள் தம் வாழ்வில்?

பெனின்,தான்சானியா,றுவன்டா,கானா,லிபேரியாவென்று போகுமிடமெல்லாம் அவருக்குப் பொய்க்காத வரவேற்பு,வாழ்த்து!ஆடலும் பாடலும் நிறைந்த விருந்துபாசாரத்தில் புஷ் தன்னையும் இணைத்து ஆபிரிக்க மக்களுக்கு பெருங் கெளரவத்தைக் கொடுத்து,அவர்களைக் கடைந்தேற்றக் காலம் கணிக்கிறார்!மலேரியாவையும்,நுளம்பையும் எதிர்கொள்ள ஆபிரிக்க மக்களுக்கு நுளம்பு வலை வழங்கும் கொடை வள்ளல் அல்லவா அவர்!

ஆபிரிக்காவில் ஜனநாயகம் மலர ஐயா புஷ் தூதுவராகச் செல்கிறார்,அவர் பின்னே அவரது இரணுவம் போகத் தேவையில்லை.அது, ஏலவே அங்கே இருப்புக் கொண்டுவிட்டது.ஐயாவின் வருகையில் அகமலரும் அற்ப ஆபிரிக்கத் தேசக் குடிகள்!


என் தேசத்துக்கு ஐயா புஷ் அவர்களின் ஜனநாயகம் அவசியமில்லைப் போலும்!


இல்லையேல், அவர்கள் என் தேசக் குழந்தையின் தறித்த கைகளை எடுத்து உலகுக்கு முன் நீதி கேட்பார்கள்.மழலைகளைக் கொல்லும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தை-வான்படையை ஏவிவிட்ட இராஜபக்ஷவை பின்லாடனுக்கு நிகரான பயங்கரவாதியாக்குவார்.

என்ன செய்ய? 2007 ஆம் ஆண்டு எண்ணையூற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட கானா தேசமா எனது தேசம்?


அல்லது,பிளாட்டினம்,தங்கம்,வைரம்,யுரேனியம்,செம்பு,நிலக்கரி,ஈயம்,எண்ணை என்று உலகத்தின் கனிவளத் தேவைகள் அனைத்தையும் ஒருங்கே வைத்த ஆபிரிக்கக் கண்டத்திலையா எனது தேசம் இருக்கிறது?


இலங்கைச் சிங்கள அரசின் அதீத இராணுவவாத ஆட்சியை இன்னும் ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு என்று என் தேசத்தவன் சொல்கிறான்.பிறகென்ன அது அதை நிலைநாட்டப் பயங்கரவாதப் புலியைக் குண்டுபோட்டழித்தாக வேண்டும்.இதோ, ஆறுமாதப் புலி செத்துக் கிடக்கிறது.மூன்று வயதுப் புலியின் கையை உடைத்துக் கொன்றிருக்கிறது இலங்கை அரசு!-இப்போது சந்தோஷமா?


இந்த உலகம் மிகக் கெடுதியாவும்,சடுதியாகவும் கருத்தைப் புனைவதில்லை!அது மிகத் தந்திரமாக-நல்ல வேஷமிட்டு,மக்களைக் காப்பதாகவும்,அவர்களின் நலனில் அக்கறையுள்ளதாகவுமே கருத்துக்களைக் கொட்டுகிறார்கள்.இதற்குள் மயங்காதவர்கள் எவர்கள்?மக்களின் நல் வாழ்வுக்காக,அவர்கள் வாழும் தேசங்களை அபிவிருத்தி செய்ய உலக ஜனாதிபதி ஊர்கோலம் பூணுகிறார்-ஊர்வலமாகப் பவனி வந்தபடி!


இதன் உள் நோக்கம் ஈழத்தில் இருக்குமென்றால் நிச்சியமொரு கொசோவோவாக ஈழம் மலர்ந்திருக்கும்.குழந்தைகள் குண்டடிபட்டிறக்காமல் உழைத்து மாடாகச் சாவதற்காக இன்னும் சில காலம் உயிரோடிருந்து வளர வாய்ப்பு இருந்திருக்கும்.


2003 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆபிரிக்கச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட இதே புஷ் அவர்கள் செனகல்,உகண்டா முதலாகப் பிராந்திய வல்லரசான தென்னாபிரிக்கா முதல் நைஜீரியா,போட்சுவான முதலாகப் பிரயாணித்துத் தனது தேசத்துத் தொழிற்சாலைகளின் பசியைப் போக்கப் பாடுபட்டுழைத்தார்.இவரோ இப்போது மீளவும் ஜனநாயகம்,அபிவிருத்தியென்று பஜனைபாடியபடி மேற் சொன்ன தேசங்களுக்குப் பிரயாணிக்கிறார்.


எதற்காக எனது தேசம் அநாதையாக விடப்பட்டு,யுத்தம் நடைபெறுவதற்கு ஆயுதங்கள் வழங்கப்படுகிறது?


ஆயுதக் கம்பனிகளின் பணப் பெட்டிகளை நிறைக்க எனது தேச மக்கள் அழிந்தாக வேண்டும்.அதே போல ஐரோப்பிய-அமெரிக்க மற்றும் சீனாவினது,ஜப்பானினது பக்டரிகள் பணம் பண்ண ஆபிரிக்க-அரபு தேச மக்கள் செத்தாக வேண்டும்!அவர்களின் பிராந்திய மற்றும் வலயங்கள்-கண்டங்கள் குறித்த கணிதச் சமன்பாடுகள் சரியாகவே இருக்கிறது!

சீனாவினது போட்டா போட்டியான பொருளாதார வளர்ச்சியானது சீனாவை எண்ணை-எரிபொருளுக்காக ஆபிரிக்கா நோக்கிப் பேயாக அலையவிட,அமெரிக்க ஐயாவுக்குப் பசி எண்ணை ரூபத்தில் வந்து தொலைகிறது!பிறகென்ன போட்டிக்குப் போட்டி!ஆபிரிக்காவுக்குப் படையெடுத்துப் பசி போக்க வேண்டியதுதாம்!கிளம்பிட்டார் புஷ் அவர்கள்.


கானாவில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணையின் பெறுமதி 4.500.கோடி டொலர்களாக இருக்கிறது.இது மேலும் எண்ணையிருப்புகள் கண்டுபிடிக்கும்போது விரிந்து போகும்.இதை அமெரிக்கா விட்டுவிடுமா?ஒரு கணக்குப்படி பார்த்தால் இந்த அமெரிக்காவுக்கு-உலகுக்கு வரும் ஒவ்வொரு ஐந்தாவது பரல் எண்ணையும் ஆபிரிக்காவிலிருந்தே வரும் நிலையுண்டு.இன்றைய நிலைவரப்படி அமெரிக்கா நாளொன்றுக்கு 4 மில்லியன்கள் பரல் மசகு எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து எடுக்கிறது,அல்லது திருடுகிறது!சீனாவோ 2 மில்லியன்கள் பரல் எண்ணையை ஆபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது!கவனியுங்கள் இறக்கு "மதி" செய்கிறது சீனா.

2002 ஆம் ஆண்டுக்கான வொஷிங்டன் திட்டமிடல் மற்றும் கணிப்பீடானது ஆபிரிக்காவிலிருந்து எண்ணை எடுக்கும் பங்கு 10 வீதத்திலிருந்து 25 வீதமாக 2015 இல் உயருமெனக் கணிப்பிடப்பட்டது.இன்றைய பொழுதில் 18 வீதமாக இது இருக்கிறது.அன்றைக்கு நடு நிலையான இறக்குமதியென்ற முக மூடியோடு திருடப்பட்ட ஆபிரிக்க எண்ணை இருப்புகள் இப்போது மிக நேரடியாகப் பறிமுதல் செய்யப்படுவதற்காகவே புஷ் ஆபிரிக்காவை வலம் வருகிறார் என்பதை எவர் இல்லையென மறுக்க முடியும்?

ஆபிரிக்காவின் எண்ணைச் சுய தேவையும் ஒரு புறம் உயர்ந்தே செல்கின்றபோதும், சீனா,அ¦மிரிக்கா மற்றும் ஐரோப்பியத் தேவைகளோ அந்தக் கண்டத்தைப் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தமது படைகளை அனுப்புவதென்ற போர்வையில் ஆபிரிக்க மக்களின் பல்வகை மூலவளச் சொத்தைத் திருடுவதற்குப் பெயர்: "ஜனநாயகம்-அபிவிருத்தி"எனக் கொள்க!

அமெரிக்காவின் ஆபிரிக்கக் கொமாண்டோஸ் என்ற அவ்றிக்கோம் நான்கு நட்சத்திர ஜெனரல் வில்லியம் வார்ட்டின் கீழ் 1.10.2007 பொறுப்பெடுத்த பொழுதிலிருந்து இன்றுவரையும் அமெரிக்காவின் கண்ணில் பற்பல கனவுகள் ஆபிரிக்க மூலவள ரூபத்தில் வந்தபடி.ஆபிரிக்காவின் 90 கோடி மக்கள் தொகையில் 30 கோடி மக்களின் நாளொன்றுக்கான வருமானம் ஒரு டொலருக்கும் கீழ்பட்டதாகும்.ஆனால், அந்த மக்களின் பல இலட்சம் கோடி டொலர்கள் பெறுமதியான மூல வளச் சொத்தோ இத்தகைய ஓடுக்குமுறையாளர்களால் திருடப்பட்டு,அமெரிக்க-ஐரோப்பியத் தேசங்களின் சொத்தாக மாற்றப்பட்டபின் தொடர்ந்து திருட்டை நிலைப்படுத்த அதே பணத்தில் அற்பச் சில்லறைகளை அந்த ஆபிரிக்கக் குடிகளுக்கு மனிதாபிமான உதவியாகப் பிச்சை போடுகிறது அமெரிக்க அதிகாரம்.


ஆனால்,நமது தேசத்துக்கான கர்மவினை இந்த அமெரிக்க-ஐரோப்பிய வியூகத்தில் ஆயுத விற்பனை-இந்திய மேலாதிக்கத்தைக் கண்காணித்தல்-இராணுவக் கேந்திர ஊக்கம் என்றிருக்கும்போது, அதுவே ஒரு கட்டத்தில் இலங்கைச் சிங்கள இனவாதமாகக் குண்டு காவி வரும் வான்படை நமக்குள் குண்டுகளைக் கவிழ்க்கும்போது நமது மழலைகள் குடல் தெறிக்கக் கொலையாகிப் போகின்றார்!

இதைத் தடுப்பார் எவர்?

தேசத்தை விடுவிப்போர் எவர்?


அனைத்தும் நமது மக்களின் கைகளிலேதாம் தங்கியிருக்கிறது!

எங்கள் மக்கள் சுயமாகத் தமது கால்களில் நிற்கும் போராட்டத்தை முன்னெடுக்காதவரையும் புலிகள் செய்யும் எந்தப் போரும் நம்மை விடுவிக்காது என்பதற்கு இந்தக் கால் நூற்றாண்டான புலிகளின் போராட்ட வரலாறே போதும் படிப்பனை சொல்ல.

போதுமடா சாமி,இந்தப் பிஞ்சுகளைப் பலியெடுத்தல்!-நிறுத்துங்கோடா இந்தச் சிங்கள வான் படையை.


ப.வி.ஸ்ரீரங்கன்.
23.02.2008

Freitag, Februar 15, 2008

தலித்தியமா? வர்க்கமா?

தலித்தியமா? வர்க்கமா?
இன்று, எதுகுறித்த கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டாகவேண்டும்!


எமது இனத்தின் விடுதலை குறித்தான போராட்டப் பாதையில் அன்றுதொட்டு இன்றுவரையும் -சரியான தெரிவற்ற தளத்தில்- நமது மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டு வருகிறது!சிங்கள இனவாத அரசோ தமிழ்பேசும் மக்களைப் படுகேவலமான முறையில் ஒடுக்கியும், அற்ப சலுகைகளைப் பதவிவிரும்பித் தமிழ்த் தலைவர்களிடம் கையளித்துத் தொடர்ந்தது தமிழ்பேசும் மக்களை ஒடுக்க முனைகிறது.அதற்காகப் பற்பல முயற்சிகளை நமக்குள் தோற்றுவித்தபடி,நமது போராட்டத்தை ஒடுக்கி வருகிறது.இங்கே,ஒரு வாசகர் தனது கட்டுரையொன்றை எனது பதிவில் பின்னூட்டாக அனுப்பி வைத்தார்!அவரது கட்டுரையின் கருத்துக்களை வாசகர்கள் உள்வாங்கி, விவாதமொன்றைத் தொடர்வதற்கான களமொன்றை உருவாக்கும் நோக்கம் இருக்கிறது.விவாதமென்பது வாசகர்களிடையேயான கருத்துப் பரிமாற்றமாக இருக்கும்.அது, கருத்துக்களை நேரிய முறைகளில் உருவாக்குவதற்கான முதற்படி.இதிலிருந்து நாம் இன்னும் முன்னேறிவிடவில்லை என்பதற்கு நமது இன்றைய போராட்ட நடத்தைகளே சாட்சி. எனவே,இக்கட்டுரையை ஒரு பதிவாக இடுகிறேன்.கட்டுரை அனுப்பிய தோழருக்கு நன்றி!தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்.
15.02.2008

நாடை நோக்கி ஒரு கேள்வி


தலித்தியமா? வர்க்கமா?


மனித இனத்தை வசதி படைத்தவர்கள் (மூலதனம்), வசதி மறுக்கப்பட்டவர்கள் (உழைப்பை விற்க தயாராக இருப்பவர்கள்) என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் ,வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே "அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம்" என இந்த பொருளாதார அமைப்பில் இருந்து கொண்டே இருக்கின்றது.
இந்த மக்கள் கூட்டத்தை விஞ்ஞான ரீதியாக பகுத்தறிவதில் முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றது.
இதில் ஒரு சமூகத்தில் ஒரு பிரிவினரே ஒடுக்குமுறையை, பின்னடைவை இனம்கண்டு அதற்கான தீர்வை முன்வைக்கின்றனர். இந்தப் பிரிவை குட்டி முதலாளிய வர்க்கம் என்று பொருளாதார முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை அலசிப் பார்ப்பவர்கள் வரையறுத்துக் கொள்கின்றனர். இவர்களில் உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் சார்ந்து நிற்பவர்களாக ஒரு பிரிவினரும், மறுபிரிவினர் வசதியை பெருக்கிக் கொள்ளும் நோக்கோடு அதனைச் சார்ந்து நிற்பவர்களாகவும் இருக்கின்றனர். இந்தப் பிரிவினை குட்டி முதலாளிய வலது பிரிவினராக கொள்ள முடிகின்றது.இந்த இரண்டு நலன்களைக் கொண்ட பிரிவினர்களும் சமூகத்தில் இருக்கின்ற வழிகாட்டும் சிந்தனை பற்றிய தெரிவுகள் என்பது துல்லியமாக தெரியக் கூடியது. ஆனால் ஒருவர் தத்தம் நலன் கொண்டு திரித்துக் கூற முடிகின்றது.இதில் வசதி மறுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து வெளிவர போராடுகின்ற போது அவற்றை ஒவ்வொருவரும் சுயமாக எதனையும் செய்து முடிவதில்லை. மாறாக, சமூகத்தில் இருக்கின்ற பொருளாதார அமைப்பே இவற்றை நிர்ணயிக்கின்றது.


இந்த நிலையில் பொதுவான ஒடுக்குமுறைகளை இனம் கண்டு கொள்ளும் விடயங்களை அறிந்த பகுதியினர் தத்தமது நலன்களின் மையத்தில் (வர்க்கத் தளத்தில்-வர்க்கநலனிலிருந்து)இருந்து தீர்வு நோக்கி நகர்கின்றனர்.இதுவேதான்(வர்க்க சமுதாயத்தில் வர்க்க அரசியல் )இயல்பாக இருக்கின்ற நிலமை.
இவற்றிற்கு இடையே பற்பல கருத்துக்கள் சிந்தனைகள் என மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்ற நிலைதான் தற்பொழுது இருக்கின்றது.
தலித்தியம் என்பது இந்திய நாட்டின் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருத்தாக்கத்தினால் போராடும் முன்னணிப் பிரிவுகளிடையே பிரிவினையை உண்டாக்கியிருக்கின்றது.இது கூட பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தமக்கு தீர்வாக முன்வைக்கப்படும் நிலையானது இதுவரையில் அழிவுப் பாதைக்கு கொண்டு வந்ததை நாம் தமிழ் தேசியம் என்ற நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய மையவாதமானது பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்களின் வலது பிரிவினரால் முன்வைக்கப்பட்டது தான் தமிழீழ கோசம்.இவ்வாறுதான் இன்று தலித்துக்கள் இன்று பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் பார்ப்பன சதிக் கூட்டத்தால் விதைக்கப்பட்ட சாதி தர்மத்தை மீட்டெடுப்பதாகக் கூறிக் கொண்டு வளர்ந்த பிரிவினர் தம்மை தலித்துக்கள் என்று கூறிக் கொண்டு தமது நலனின் மையநிலையில் இருந்து கருத்தை முன்வைக்கின்றனர்.இங்கு வசதி மறுக்கப்பட்டவர்கள் என்கின்ற போது ஒரு இனத்திலோ அல்லது ஒரு மதப்பிரிவிலோ அல்லது ஒரு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. இவர்கள் இனம், மதம், சாதி, நிறம் கடந்து வசதி மறுக்கப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தேசியம் பேசுகின்றவர்கள் அல்லது தலித்தியம் பேசுகின்றவர்கள் உண்மையில் யார் என்றால் வசதி படைத்தவர்கள், வசதி மறுக்கப்பட்டவர்கள் என்ற இரு பெரும் பிரிவிற்கு இடையில் பொருளாதார மாற்றங்களினூடாக வசதிபடைத்தவர் பிரிவிற்கும் வசதி இழந்தவர் பிரிவிற்கும் இடையே அங்குமிங்கும் நகரும் மக்கள் கூட்டம் தான். இவர்களால் முன்வைக்கப்படும் உரிமை என்பது ஒவ்வொரு வசதி படைத்தவர்களுக்கும் இடையே பேசப்படும் பேரம் தான் இந்த நிலை. இதனை முதலாளித்துவ ஜனநாயகம் என்பர்.
முதலாளித்துவ ஜனநாயகம் என்ற உரிமையைத்தான் பெற இணையும் படி தலித்தியம் (தேசியம் இனத்துவ கோசத்தின் கீழ்) கோருகின்றது. ஒரு பிரச்சனைக்கான தீர்வினை யார் வைக்கின்றனர்- இது எவ்வாறு அமைகின்றது? சமூகத்தின் பொருளாதார அமைப்பு என்ன என்ற புரிதல் இல்லாத நிலையில் அல்லது அறிவுரீதியாக பக்குவம் அடையாத நிலையில் இருந்து தோற்றம் பெறுகின்ற கருத்தாக்கத்தின் பின்னால் மக்கள் செல்கின்ற போது பல கோட்பாடுகளின் நிலையில் இருந்து, தத்தமது நலனை முன்வைக்கின்றனர். இவ்வாறே தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பத்திலும் சரி சாதிய எதிர்ப்புப் போராட்டதிலும் சரி முதலாளித்துவ ஜனநாயகம் என்ற நிலைப்பாடில் இருந்து இடதுசாரிகள் போராடி இருக்கின்றார்கள் இது தவறு என்றே வசைபாடப்பட்டே வருகின்றது.
இதிலும் தலித்தியத்தின் கருத்தாக்கத்தை (குட்டி முதலாளிய சிந்தனையை) வெறும் பொருளாதார மாற்றத்தின் மூலம் மாற்றம் கொண்டுவந்துவிட முடியாது. இதனை எப்பவும் இலங்கையின் தீவிர இடதுசாரிகள் கூறிக் கொண்டே வருகின்றனர். இவர்களுக்கான முதலாளித்துவ சமூக உற்பத்தியில் கிடைக்காத உரிமைகளை பெறவே போராட்டதை நடத்திக் கொண்டனர். இவ்வாறிருக்கையில் இவற்றை மறுதலித்து தீவிர இடதுசாரிகள் போராடியதாக கருத்து உருவாக்கம் கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் இன்றைய போக்கைப் பார்ப்போம் ‘கம்யூனிஸ்டுக்கள் சாதிப்பிரச்சனைக்கு உரிய முக்கியத்துவம் அழிப்பதில்லை என்கிற குற்றச்சாடடிற்கு மாறாகச் சமீபகாலமாக இதுகுறித்து அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது…. எனவும் கூறி உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுத் திரளும் பரந்த அரசியல் கூட்டணியே எல்லா விளிம்பு நிலை மக்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க இயலும்’ என்ற கருத்தை தலித்தியத்தை போதிப்பவர்கள் (hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 ) எதிர்க்கின்றனர்.அதாவது ஒன்று உழைப்பவர் பக்கம் கொண்ட சிந்தனை மற்றையது ஒப்பிட்ட ரீதியில் வளர்ந்த சமூகத்தட்டில் உள்ளவர்களின் நலன் பொருந்திய சிந்தனை இவற்றை இங்கு வித்தியாசம் காண்பது முக்கியமாகும்.இவ்வாறே இடதுசாரிகளை அரசியல் அரங்கில் மலினப்படுத்தும் புத்திஜீவிகளின் போக்கு இருக்கின்றது. மேலும் ‘வர்க்கத்தை முன்னிலைப்படுத்திச் சாதிப் பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளிய தவறை இடதுசாரிகள் கடந்த காலங்களில் செய்திருந்த போதிலும்… என எதனைக் கூறுகின்றார்??? hவவி://றறற.ளயவலையமயனயவயளi.உழஅ/யசஉhiஎநள/118 இங்குதான் புரிதல் பற்றி பார்வை மாறுபடுகின்றது. தேசிய,சாதியப் பிரச்சனையாகட்டும் அவர்களுக்கான முதலாளித்து ஜனநாயகத்தை வழங்குவதன் மூலமே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாத்திரம் அல்ல தேசிய முதலாளிகளும் உள்ளடங்கியே இருப்பர். இங்கு சாதியப் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளியதான குற்றச் சாட்டு என்பது நிரூபிக்க முடியாது. ஆனால் இனம், மொழி, சாதி, நிறம், பால் என்ற நிலையில் இருந்து தனியமைப்புக்களை உருவாக்கி ஐக்கியத்தை குலைத்தது இவர்கள் மாதிரியாக புத்தியீவிகள் என்பதை இவர்களின் கருத்தின் மூலமாகவே அறிக் கூடியதாக இருக்கின்றது.சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை. இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்குத் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.விழிம்பு நிலை?????
இதில் குறிப்பாக விழிம்பு நிலை பற்றி பார்க்க வேண்டும். விளிம்பு நிலை என்கின்ற போது இவர்கள் மனிதர்களாக அல்ல மாறாக இவர்கள் ஒரு இடைநிலையில் இருக்கின்றார்கள் என்று தான் விழிம்புநிலை வரையறை விளக்கம் கொடுக்கின்றது. இவர்கள் மக்களாக இருக்கின்றார்கள். அது எவ்வாறு சாத்தியமாகும். இதுதான் இங்கு எழும் கேள்வி.
தலித்தென்று வரையறுக்க இவர்கள் யார் என்பது மாதிரியான இவ்வாறான கேள்வியை hவவி://வாநளயஅநெவ.உழ.ரம இணையத்தில் எழுதிய அன்பர் எழுப்பியிருந்தார்.ஒரு மனித கூட்டம் பொருளாதாரத்தில் வலிமை இழந்தவர்களாக இருக்க முடியும். இதனால் படிப்புவாசனை,உங்களைப் போல் வாழாது ஒலைக் குடிசையில் தெருவோரத்தில் உரிமை பறிப்பட்டு வாழலாம். உங்களைப் போல உடுபுடவை உடுத்தாமல் இருக்கலாம், உழைப்பையே நம்பிய மனிதராக இருக்கலாம், தனிபாத்திரங்களில் உணவு கொடுக்கலாம். ஆனால் இவர்களை எந்த சடங்கு செய்து மனிதர்கள் என்ற நிலைக்கு கொண்டுவரப் போகின்றீர்கள். இவர்கள் என்ன தீட்டுப் பட்டா இருக்கின்றனர் அல்லது உடலை விட்டுப்பிரிந்த ஆவியாகவா உலாவுகின்றார்கள்,அல்லது பாவத்துடன் பிறந்து பின்னர் ஞானஸ்தானம் என்ற சடங்கின் மூலம் பாவத்தில் இருந்து மீள்வது போல இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?விளிம்பு நிலை (டiஅயைெட ளவயபந) என்று வரையறுத்துக் கொண்டால் அவர்களின் சமூகப்பாத்திரம் தான் என்ன? hவவி://எரனலழ.உழஅ/எநைற_எனைநழ.pரி?எநைறமநலஃ1உன7ந96172575க48னஉய3 (இந்தப் பாடலை கேளுங்கள் இந்தப் பாடலும் இவ்வாறு கீழாக வரையறுத்துக் கொள்பவர்களை கேள்வி கேட்கின்றது.இன்று சாதிய எதிர்ப்புநிலை என்று கூறிக் கொண்டு தனியே வகுப்புவாத அரசியலை முன்வைப்பவர்கள் கடந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையில் நடைபெற்ற சாதிய எதிர்ப்புப் போராட்டங்களே தமிழ் தேசியத்திற்கான ஒரு அடித்தளத்தை இட்டது என்பதை மறந்து விட்டனர்.
இவர்கள் இன்று முதலாளித்துவப் ஜனநாயகம் என்ற நிலைக்கு எதிராக சாதி என்ற குறுகிய வட்டத்தினுள் காரியமாற்ற முற்படுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை சாதியத்தை ஒழிப்பதில்லை. மாறாக சாதிரீதியாக செயற்படுவதன் மூலம் முதலாளித்துவ ஜனநாயத்தை அடைந்து விட முடியும் என நம்பிக் கொள்கின்றனர் போலும்.


சாதியக் கருத்தாக்கத்தை வெறும் பொருளாதாரப் பிரச்சனையின் மூலம் மாத்திரம் தீர்த்துக் கொள்ள முடியாது. இது தொடர்ச்சியாக கலாச்சார போராட்டத்தின் மூலமே மக்களின் சிந்தனையில் இருந்து மாற்றம் கொண்டுவர முடியும். இங்கு இவர்கள் பொருளாதார விடுதலை கிடைத்தவுடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எந்தக் காலத்திலும் இடதுசாரிகள் சொன்னது கிடையாது. அது சாத்தியமும் அல்ல. இவ்வாறே இனப்பிரச்சனைக்கான தீர்வுபற்றி ஒரே நாளில் தீர்த்துவிட முடியுமா என்ற கேள்வியை செழியனுக்கு எதிராக எழுதியவர்கள் கேட்டிருந்தார்கள்.
எந்த மாற்றமும் உடனடியாக ஏற்படப்போவதில்லை.
இது இனங்களுக்கு இடையேயான கசப்புணர்வாக இருந்தால் என்ற மத, சாதி கருத்தமைப்புகள் மற்றும் பிற்போக்கு கருத்தமைப்புக்களை புதியகலாச்சாரப் புரட்சியின் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும். இது முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை (பொருளாதார உரிமைகளை) பெற்ற பின்னரும் தொடரும் ஒரு போராட்டமாகும். பொருளாதார உரிமைகள் மற்றும் சிந்தனை மாற்றங்களை ஒன்றாக கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்ற பதட்ட மனவுணர்வு நிலையில் இருந்து எழுதும் போக்கும் தான் இடதுசாரிகள் மீது சேற்றைவாரி வீசுகின்றனர்.
இதற்குத்தான் புதியஜனநாயகப் புரட்சியையும் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் ஊடாக புதிய கலாச்சாரப் புரட்சிக்கான வேலை திட்டத்தை புரட்சிகர சக்திகள் முன்வைக்கின்றனர். இதற்கு மாறாக எதிர் நிலைக்கான போக்கை சமூக மாற்றத்தை விரும்பாதவர்கள் முன்வைத்து செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

Samstag, Februar 09, 2008

ஏமாற்றப்படுகிறோம்.

குறிப்பு:1

தமிழ்த் தலைவர்களும்,அவர்களது அந்நிய எடுபிடி அரசியலும்:நாம்,இன்று நமது தலைமைகளாலேதாம் மிகுதியாக ஏமாற்றப்படுகிறோம்.எங்கே,எத்தகைய புதைகுழியுண்டென்று நாம் அறிவது அவசியமில்லையா?நமது விடுதலைக்கான போராட்டாம் வழிதவறி அப்பாவிகளுக்குள்-பொதுவிடங்களில்-சேவைத் துறைக்குள் குண்டுவைத்தல் போராட்டமாகச் சிங்கள அரசால்-இந்தியாவால் மாற்றப்பட்டுள்ளது!இதன் அடுத்த கட்ட நகர்வில் இலங்கைத் தமிழ்ச் சுமூகமே பயங்கரவாதிகள் எனும் அவலப் பெயர் நமக்கு வந்துவிடும்.இத்தகைய குண்டுகளை நமக்குள் விதைப்பவனை பயங்கரவாதிகளென்றும்,அரசபயங்கரவாதமென்றும்கூறியே நமக்கு விடுதலை வேண்டுமென்று போராட்டத்தை ஆரம்பித்தோம்.


ஆனால்,விடுதலைக்கான போராட்டம் எங்ஙனம் அதே பயங்கரவாதத்துக்குள் மூழ்கியது?


இது புரட்சிகரமானதா?


எங்கள் எதிரிகள் யார்?


அவர்கள் எமக்குள் எத்தகைய வடிவில் உலா வருகிறார்கள்?


இலங்கையில் தமிழ் மக்களுக்கும் மற்றும் சிறுபான்மை இனங்களுக்குமான அரசியல் தீர்வானது எத்தகைய தீர்வாக இருக்கவேண்டுமென்பதை அந்தந்த இன மக்களே தீர்மானிக்க வேண்டும்.இத்தகைய இனங்களை வழிநடாத்துவதாகச் சொல்லிக்கொண்டு ஓட்டுக்கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சி-குடும்பநலன்களுக்காக அந்தந்த மக்களின் குரலாக இருந்திடுவது மக்களனைவரையும் முட்டாளாக்கும் செயல்.ஆனால்,உலகத்திலுள்ள ஆளுமையுடைய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதோவொரு வகையில் சுயாதிபத்தியமுடைய நாடுகள் அமைந்துவிட்டன!


அவை, தத்தமது நாடுகளுக்கிசைவான பொருளாதார-இராணுவ மற்றும் புவிகோள ஆர்வங்களுக்காக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் இனங்ளைத் தொடர்ந்து ஒடுக்குவதற்கு முனையும்போது,குறிப்பிட்ட ஒடுக்குமுறைக்குள்ளாகும் இனங்களுக்குள்ளிருக்கும் ஓட்டுக்கட்சித் தலைவர்களைத் தமது நலன்களுக்கேற்றவர்களாக்கி அத்தலைவர்களின் மூலமாகக் குறிப்பிட்ட இனத்தை ஏமாற்றி அடிபணிய வைக்கின்றனர்.இது, கடந்தகால அனுபவமாக இருக்கிறது.இப்போது, இலங்கையிலுள்ள அரசியல் போராட்டச் சூழலில் இத்தகைய அதே பாணியிலான அரசியலை அவர்கள் செய்து முடிக்கவில்லை!

இலங்கையின் அனைத்துக் கட்சிகளையும் ஒவ்வொரு தேசத்தின் ஆளுமையுடைய வர்க்கங்கள் கட்டுப்படுத்துகின்றன.இலங்கையின் சிறியபல கட்சிகளையும் மற்றும் ஆளும் கட்சிகளையும் அன்னியத் தேசங்களே நிதியளித்துத் தமது வலுவுக்குள் இணைத்து வைத்திருக்கின்றன.இங்கே, இலங்கையின் அண்மைய தேசம் புதிதாக எவரையும் கூட்டாளிகளாக்க முனையவில்லை!இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனங்களின் இனமுரண்பாட்டை ஊதிப் பெருக்கி வளர்த்து,அதை மிகப்பெரும் அழிவுயுத்தமாக மாற்றித் தான்தோன்றித்தனமான இயக்கங்களைத் தீனிபோட்டு வளர்த்தும்,இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் இயல்பபாக எழவேண்டிய முரண்பாடுகளைச் செயற்கைத்தனமாகக் கூர்மைப்படுத்தியும்,இலங்கை மக்களின் புரட்சிகரமான பாத்திரத்தைச் சிதைத்தவர்கள் அண்மைய தேசமான இந்தியாவும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியமுமென்பது நாம் முதலில் புரிந்துகொள்ளப்படவேண்டும்!


இப்போது உலக தேசிய இனப் போராட்டங்களின் நிலைமையும் பெரும் தொழிற்கழகங்களின் உற்பத்திசார்ந்த மூலவளத் தேவைக்களுக்கும் அவை கொள்ள விரும்பும் பாதுகாப்பு மற்றும் தங்குதடையற்ற மூலவளச் சுற்றோட்டமும் ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் இருகண்களாக இருப்பதால் புதியபாணியிலான அரசியல் நகர்வுகளைத் தொழிற்கழகங்கள் விரும்புகின்றன.இது அமெரிக்க,இந்திய அரசுகளின் பழையவகையிலான வியூகங்களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கின்ற முரண்பாட்டை நாம் கவனித்தில் எடுப்பது அவசியமாகும்.முன்னைய சோஷலிசக் கூட்டான வார்ச்சோ அணிகளின் உடைவுக்குப்பின் நோட்டோவின் தேவை எதுவரையென்பதும் யாரை எதிர்த்பதென்பதும் கேள்வியாக இருக்கிறது?தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதற்காக நோட்டோத் தலைமையில் இரஷ்சியாக்கூட நாளை இணையலாம்!


இங்கே,தொழிற்கழகங்களின் மிகச் சுதந்திரமான வர்த்தகத்தை எந்தவொரு அரசும் கட்டுப்படுத்தும் நிலையை அவர்கள் அனுமதிக்கப் போவதில்லை.இதன் எதிர்பார்ப்பிலிருந்து தொடர் யுத்த வியூகமானது அரசியல்-சுதந்திர தேச விடுதலைகளுடன் முட்டி மோதுவதைத் தொடர்ந்து தொழிற்கழகங்கள் விரும்பவில்லை.அவை ஏதோவொரு வகையில் தேசிய இன முரண்பாடுகளைக் களைந்து, மூலதனமுள்ள-கனிவளமுள்ள தேசங்களைப் பூரணமான தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரவே விரும்புகின்றன.இதன் தொடர்ச்சியின் விளைவுகள் சம்பந்தப்பட்ட தேசிய இனங்களுக்குப் பாதகமானதாகவே இருக்கிறது.இங்கே அமெரிக்காவின்-மேற்குலகத்தின் பாரிய தொழிற்கழகத்துக்குள் நிலவும் முரண்பாடுகள் நமது பிரச்சனைக்குள் அப்பட்டமாகப் பிரிதிபலிக்கிறது.இதை இனம்காணவதற்கு நாம் முனைந்தாகவேண்டும்.


அமெரிக்காவின் நீண்ட நாட்கனவானது இலங்கையில் இனப்பிரச்சனை நியாயமான முறையில் தீந்துவிடுவதைத் தடுத்தலாகவே இருக்கிறது.இதைச் செய்வதற்காக இப்போது பற்பல முட்டுக்கட்டையை அது செய்கிறது.அதிலொன்றுதான் வடக்குக் கிழக்குப் பிரிவினை.தமிழ் மாகாணங்கள் ஒருபோதும் இணைந்து ஐக்கியப்படுவது அமெரிக்கக்கனைவை(இராணுவக் கேந்திரத்தளம் அமைக்கும்) நாளடைவில் சிதைக்குமென்பதால் கிழக்கைத் தனி மாகாணமாக்குவது அதற்கு மிகவும் விருப்புடையதாகவே பண்டுதொட்டு இருக்கிறது.இது, இந்தியாவின் புதிய அரசியல் நகர்வில் ஒரு திட்டமாக இருப்பதற்கான வாய்ப்பு அன்றிருக்கவில்லை!இந்தியாவானது வடக்கையும்,கிழக்கையும் இணைத்தே ஒரு அரைகுறைத் தீர்வைத் தனது தேசத்தில் நிலவும் மாநில ஆட்சிகளின் போக்குக்குட்படச் சிந்தித்திருந்தது.எனினும்,இன்றைய இந்தியாவானது அமெரிக்க அடியாளாகத் தென்னாசியப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டபின் அமெரிக்க அரசியல் முன்நிபந்தனைகளை அது ஓரளவு ஏற்று அமெரிக்கக் கனவை நிலைப்படுத்த இலங்கையில் புலி இயக்கத்தைப் பிளந்து,வடக்குக் கிழக்குப் பிரிவினைக்கு வலுச் சேர்த்தது.இதைப் புரிய நாம் குர்தீஸ் இனமக்களின் பிரச்சனைகளை மிகக் கவனமாக அணுகிப்பார்க்க வேண்டும்.அங்கே(துருக்கியப் பகுதியில்) நடைபெறும் போராட்டத்தில் பி.கே.கே.க்கும் ஈராக்கின் வடபுறத்தே அமைந்திருக்கும் குர்தீஸ் மக்களின் பூர்வீக நிலத்தில் நிலவும் அரசியல் வியூகத்துக்கும் மிகவும் முரண்பாடுகள் இருக்கின்றன.குர்தீஸ் இனவிடுதலைகுறித்த கேள்விகளுக்கு மிக வித்தியாசமான குரல்கள் அங்கே ஒலிக்கின்றன.பி.கே.கே.க்கும் கே.டி.பீ க்கும் பற்பல விஷயங்களில் மிக வித்தியாசமான பார்வைகள் இருக்கின்றன.இதை வைத்தே அமெரிக்கா வடக்கு ஈராக் குர்தீஸ் பகுதியை ஒரு சுயாதிபத்தியமுடைய குர்தீஸ் வலையமாக்க முனையாது ஏமாற்றி வருகிறது.அல்லது காலவோட்டத்தில் வடகுர்த்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களிடம் வடகுர்தீஸ்க்கான தொங்குநிலை சுயாதிபத்தியம் கையளிக்கப்படலாம்.இது இலங்கையில் தீர்வுப் பொதியாக வருகிறது-13வது திருத்தச் சட்டவரைவாக வருகிறது!

1988 ஆம் ஆண்டு, 90 வீதமான துர்தீஸ் இன மக்களின் வலையத்தை,வாழ்விடங்களை,கிராமங்களை ஈராக்கியப் பாசிசச் சர்வதிகாரி சதாமின் இராணுவம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியபின் குர்தீஸ் குட்டிப் பூர்ச்சுவாக்களின் தலைமையிலொரு தனிநாடமைவதைப் பெரும் பகுதியான வட ஈராக்கியக் குர்த்தீஸ் இனத்து மக்கள் விரும்பவில்லை.அவர்கள் அதற்குக் கூறுவது: "குர்த்தீஸ் முதலாளிகளின் நாடாக இருக்குமானால் அது பெரும் பகுதி குர்தியர்களைக் கூட்டுக்குள் அடைக்கும். ஏனெனில், அவர்கள் கம்யூனிஸ்டுக்களாக இருக்கிறார்கள்.அவ்வண்ணமே, பெரும் பகுதிக் குர்த்தீயப் பெண்கள் அவர்களது புருஷர்களால் கொல்லப்படுவார்கள்.ஏனெனில்,பாரிம்பரியச் சுமூக ஜந்திரம் பெண்ணையே அதன் பகுதியாக்கிவைத்திருக்கிறது.இதனால், அவளை மீளவும் ஐதீகங்களுக்கும்,பாரம்பரியத்துக்கும் பலியாக்குவது நிகழும்,இதை எவரும் தடுப்பதற்கில்லை.ஏனெனில்,நாம் குர்தீய இனமாக இருப்பதால்."-கொங்கிறேற்-பக்கம்:16,மாதம் டிசெம்பர்,வருடம்2007.

வட ஈராக்க குர்தியக் கட்சியான கே.டி.பீ .யின் தலைவர் மாசூட்த் பார்சானி(Massoud Barzani)குர்தீசீயத் தேசிய வாதிகளின்-பூர்ச்சுவாக்களின் குரலுக்கு அண்மையிலேயே இருக்கிறார்.இது,குர்தீஸ் இனத்தின் விடுதலைக்கு வேறுவிதமான முட்டுக்கட்டையை இடக்கூடியபடி துருக்கிய ஒடுக்கு முறை ஆட்சியாளருடன் சில சுற்றுப் பேச்சை நடாத்தி புரட்சிகரமான நகர்வைச் சிதைக்கலாம்.இத்தகைய நடத்தையின் மீதான பீ.கே.கே.யின் எதிர்பார்ப்புகள்,செயற்பாடுகள் இவ்விரு கட்சிக்குமிடையிலானவொரு முரண்பாடாக உருவாகிறது.இதைப் பிடித்தபடி தொங்கும் அமெரிக்கா-ஐரோப்பாவின் குரலாக அமெரிக்க வெளித்துறை மந்திரி கொன்டிலீசா றைஸ் அம்மணி இப்படி உரைக்கிறார்:" en route to Jerusalem and another thorny problem"-Washington Post.என்றும்,அவரது கூட்டாளி துருக்கிய வெளிவிவாகர மந்திரியோ" we are clearly going to have to take actions to deal with the PKK threat."என்றும் மாறிமாறிக் காதல் மொழிகள் சொல்லவில்லை.மாறாக,குர்தீஸ் இனம் தமது கால்களுக்குக் கீழ் உதைபடும் காற்பந்தே என்று திட்டமிடப்பட்டு வார்த்தை ஜாலம் செய்து வருகிறார்கள்.

இதுதான் குர்த்தீஸ் மக்களின் தலை விதியாக இருக்கும்போது,நமது தேசத்தின் நிலையும் கிட்டமுட்ட இதையே பிரதிபலித்தாலும் நமக்குள் அதீத பெரும் குள்ள நரிகள் தமிழ்த் தலைமையாக முன்னெழுந்து நம்மைப் பூண்டோடு அழித்தாவது இந்திய-அமெரிக்க எஜமானர்களுக்கு அடிமையதக்குவதாகச் செயற்படுகிறார்கள்.இங்கே,புலிகள் குண்டுகள் வைக்க,ஆமியும் குண்டுகள் வைக்க வேறொரு அரசியல் வியூகம் இன்னொரு தளத்தில் இதே எஜமானர்களால் திட்டமிட்டபட்டு நடாத்தப்படும்போது,நமது ஆயுதங்களுக்கு ஒரு முகமும்,ஆயுதமற்ற ஓட்டுக்கட்சிகளிடமும் ஒரு முகம் இருக்கிறது.அவை இரண்டினதும் குறிக்கோள் ஒன்றுதான்.தோற்றத்தில் மட்டுமே வெவ்வேறு.

இங்கே,நாம்-தமிழர்கள்-இஸ்லாமியர்கள்-சிங்களவர்கள் ஒவ்வொருவரையும் நரவேட்டையாடும் அரசியலுக்குத் நமது சுதந்திரத்தைத் தாரவார்த்துக் கொடுத்து இலங்கையை நாசமாக்கும்போது அங்கே,சாவது உழைப்பாள வர்க்கமே-வறுமைப்பட்ட மக்களே!இதைக் கடந்த குண்டுவைப்புகள்,இன்றைய குண்டுவைப்புகள் நிரூபிக்கின்றன.நமது ஓட்டுக் கட்சி-ஆயுத இயக்கங்கள் செய்யும் அரசியலை வெறும் மாயைகளை உருவாக்கியபடி மனவிருப்புக்குட்பட்டுச் சிந்திக்க முடியாது!

இந்திய,அமெரிக்கா,ஜப்பான்,மேற்குலக ஐரோப்பியக்கூட்டமைப்பு மசிர்,மண்ணாங்கட்டியெல்லாம் நம்மைக் கேவலமாகக் கொன்று குவிப்பதற்குத் துணைபோகும் கபோதிகளை இனம்காணம் பாரிய கடப்பாடு இன்றைய இளைய தலைமுறைக்குண்டு.இதை மறுத்துவிட்டு நடந்தேறும் அரசியல்-யுத்தத் திருவிளையாடல்களுக்கு எந்த மனிதர் வக்காலத்துவேண்டுகிறாரோ அவர் இத்தகைய அரசியல் சூதாட்டத்தைப் புரியவில்லை என்பதல்லக் கதை.மாறாக,நாமே நம்மை அழிக்கும் ஆயுதத்தை நமது எதிரிகளிடம் விட்டுவைத்திருக்கிறாம்.அவர்கள் நமது தலையைக் கொய்வதற்கேற்றபடி நாம் நம்மைத் தயார்ப்படுத்துகிறோம் என்பதே உண்மை!
குறிப்பு:2ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும்."Der Berliner Soziologe Dr. Andrej Holm.
wird aufgrundseiner wissenschaftlichen Forschung als Terrorist verdaechtigt;
er wurde verhaftet."-Konkret vom 10.2007.
அந்திரே என்ற பேர்ளின் கும்போல்ர்ட்(Dr.Andrej Holm ist Sozialwissenschaftler und arbeitet an der Humboldt-Universitaet zu Berlin) பல்கலைக்கழக சமூகவிஞ்ஞான ஆய்வாளர் தனது ஆய்விலீடுபட்டிருந்தபோது திடீரென ஜேர்மன் புலானாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்.பயங்கரவாதத்தடைச்சட்டம் பராக்கிறாவ் 129 ஏ பிரிவின்கீழ் (§129 a ) ) அவ் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு ஜேர்மனியச் சிறையில் இன்றும் வாடுகிறார்.அந்திரே சர்வதேச மட்டத்தில் பல பல்கலைக்கழகங்களோடிணைந்து ஆய்வுகள் செய்வதால் பல நாட்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவருபவரும் கூடவே உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் வீட்டு வாடகைகளின் அதீத ஏற்றம் குறித்தும் நீண்ட ஆய்வுகளைச் செய்தவர்.அத்தோடு சமூக இயக்கங்களில் நேரடியாகப் பங்குபற்றி ஜீ.8 க்கு எதிரான பிரச்சார மற்றும் ஆர்பாட்டத்திலும் தன்னை முழுமையாகவிணைத்து முற்றும் முழுதும் மக்கள் விஞ்ஞானியாகவே வாழ்ந்துவரும் ஒரு பெரும் கல்வியாளர்.ஜேர்மனியச் சட்டதிட்டங்களுக்குட்பட்ட போராட்ட வடிவத்தையே தேர்ந்தெடுத்திருந்தவர்.எனினும்,அவரை ஜேர்மனிய இராணுவக் குழுவெனும்;(militanten gruppe) மார்க்சிய அமைப்புடன் சம்பந்தமுடையவராகவே கைது செய்ததாக ஜேர்மன் புலனாய்வுத் துறை கூறிக் கைது செய்து அடைத்து வைத்திருக்கிறது.


அந்திரேயின் கைது குறித்து அவரின் உற்ற நண்பனும் 129 ஏ பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் கூட்டணியின் பேச்சாளரும்;(Sprecher der Buendnisses fuer die Einstellung des §129 a )அரசியல் விஞ்ஞானப் பேராசிரியருமாகிய பொல்கர் ஐக்;(Volker Eick) கூறும்போது"Ihm wird vor allem die verwendung des Begriffs>>Gentrification<<>>drakonisch<<, >>marxistisch-leninistisch<<, >>Reproduktion<<, und >>politische Praxis<<>>mg<<;(militanten gruppe) finden sollen.Man kann sie auch in einem Lexikon finden.ob demnaechst die Duden-Redaktion dran ist,muessen wir abwarten."-Konkret okt.2007 seite:3" "அந்திரே அனைத்துக்கும் முன்பாகச் சமூகமேன்மைகள்மீது சுமையேற்றியதாகவும்,அடுத்த குற்றத்துக்குரியதான எடுகோள் வார்த்தைகளான டறாக்கோனி(கி.மு.620இல் பழைய கிரேக்க சட்டவாக்க நிபுணன்: "டறாக்கோனி"க் குறியீடு)மற்றும் மார்க்சிய-லெனிய,மறு உற்பத்தி,அரசியல் வேலைத் திட்டம் போன்ற வார்த்தைகளைத் தனது ஆய்வுக்குள்ளும் மற்றும் மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தும்படி பாவித்ததும் கூடவே இத்தகைய வார்த்தைகளை மிலிரான் குறுப்பான ஜேர்மனிய மார்க்சிய குழுவின் எழுத்துக்களுக்குள் இனம் காணுவதாகவும் அவரது கைதுக்கு ஜேர்மன் புலனாய்வுத் துறை விளக்கிமளிக்கிறது.இத்தகைய வார்த்தைகளை "டுடன்"(Duden Woerter Buch) கலைக் களஞ்சியத்துக்குள்ளும் பார்க்க முடியும்.எனவே,டுடன் ஆசியர் குழுவினரையும் கைது செய்யும் நிலை அடுத்து உருவாகிறது.நாம் பொறுத்திருந்து பார்ப்போம்."என்கிறார், ஐக் பொல்கர்.


இத்தகைய கைதின் பின்னாலுள்ள அரசியல் மிக முக்கியமில்லை.ஏனெனில்,கடந்த பல நூற்றாண்டாக ஒடுக்குமுறையாளர்களின் அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும்,செயற்கபாட்டையும் உலக உழைப்பாள வர்க்கம் பார்த்துவிட்டது.ஆனால்,இங்கு கவனிக்கத் தக்கது என்னவெனில்,பெரும் கல்வியாளர்கள்,அதுவும் உலகறிந்த ஆய்வாளர்கள் குடிசார் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் மக்களின் உரிமைகளை ஒடுக்கும் பொருளாதாரப் பொறிமுறைகளை அகற்றவும் அல்லது தடுத்து நிறுத்தவும் தமது சொந்த முகவரியோடு போரிட்டுக் கம்பி எண்ணவும்,உயிர்விடவும் தம்மைத் தயார்படுத்திப் போராடுவதே மிக முக்கியமானது.இவர்களும் நமது பேராசியர்கள்,டாக்டர்கள் போல் தாமும் தமது ஆய்வும் என்று இருந்து இலங்கையில் அராஜகத்தையும்,அழிவையும் பார்த்து மெளனித்திருப்பதுபோன்று மெளனித்திருக்கலாம்.ஆனால்,அவர்கள் தமது வாழ்வை உரிமையை வென்றெடுக்கவும் அதை நிலைப்படுத்தவும் தொடர்ந்து போராடிய வரலாறுடையவர்கள்.

அவர்களின் இத்தகைய போராட்டம் தந்த குடிசார் உரிமைகளைத் துய்க்கும் நமோ பல்கலைக்கழகங்களுக்குள் தலையைப் புதைத்து உலக ஏகாதிபத்தியத்தின் நகர்வை வலுப்படுத்த ஆய்வுகள் செய்து புத்தி ஜீவிகளாக நடிக்கும்போது, நாம் தொடர்ந்தாற்றவேண்டிய பல பங்களிப்புகளுக்கு பேராசியர் அந்திரே மற்றும் பொல்கர் எரிக் போன்றோர் முன்னுதாரணமாகட்டும்.


இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.


குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.


பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.


இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி. மற்றும் சற்.டி.எப் ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.யையும் மற்றது சி.டி.யூ.வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.இதற்கு சமூகவிஞ்ஞானியும் ஆய்வாளருமான அந்திரேயின் கைதே இன்றைய மேற்குலகை அளக்கப் போதுமான அளவுகோல்.இன்றைக்கு மேற்குலகக் கல்வியாளர்கள் தமது உயிரையே கொடுத்தாவது மேற்குல ஏகாதிபத்தியச் சட்டங்களை,அராஜகங்களை எதிர்த்துவரும்போது நமது பேராசிரியர்கள் டாக்டர்கள் வேலியல் ஓணானாக இருந்து செயல்படும் தரணங்கள் இன்னும் நமது மக்களை அழிப்பதற்கு உடந்தையாக இருப்பதே.மக்களை அணிதிரட்டும்,அரசியல் மயப்படுத்தும் பணி இந்தக் கல்வியாளர்களுக்கு இல்லையா?குறைந்தபட்சமாவது நாம் ஆற்றவேண்டிய பணி நமது மக்களை வேட்டையாடும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவாவது இருக்கவேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்

Samstag, Februar 02, 2008

டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்.

டம்புல்லக் குண்டுவெடிப்பும் அடுத்த நகர்வுகளும்.


டம்புல்ல அரச பண்ணையை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.அது, ஒரு அழகான விவசாயப்பண்ணை!இலங்கையின் அழகானவொரு சிறு நகரம்.இங்கே,இன்று மனிதர்கள் குண்டுவெடிப்பால் இறக்கின்றார்கள்!வன்னியில் மனிதர்கள்...யாழ்ப்பாணத்தில் மனிதர்கள்...மன்னாரில் மனிதர்கள்...மொனராக்கலவில் மனிதர்கள்...டம்புல்லவில் மனிதர்கள்... இலங்கை பூராகவும் கொலைக் களமாகிவிட்டது!

சிங்கள ஆளும் வர்க்கத்தின் அடிவருடி இராஜபக்ஷவே இலங்கையின் மிகப்பெரும் பண்ணைக்காரன்-கொடுங்கோலனுக்கு நிகரான ஆட்சியை நிலைப்படுத்த அன்னியத் தயவை நாடி நாட்டையே நாசமாக்கி... அப்பாவிகளைக் கொல்லும் யுத்த முன்னெடுப்பைச் சிங்கள-தமிழ்த் தரப்புகளிடம் தோற்றிவைத்துத் தனது ஆட்சியை இனவாதத்தூடாகக் கட்டி வளர்த்துவிட்டுள்ளான்.பாவி!இதற்குடந்தையாக எதிர்கட்சிகள்,இயக்கங்கள் தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் அரசியல் தீர்வின் பெயராலும் இந்தியாவின்-இலங்கையின் நலத்தின் பெயராலும் செய்து மக்களைப் பலியெடுத்து வருகிறார்கள்!

எனது பால்யக் காலத்தில் டம்புல்லையைத் தரிசித்திருக்கிறேன்.
டம்புல்ல மக்கள் மிக அழகான மனதுடையவர்கள்,
தமது கிராமத்தைப் போலவே-நகரத்தைப் போலவே!

எனது குஞ்சியய்யா இராமச்சந்திரன் டம்புல்ல பார்மில் தலைமை அதிகாரியாக இருந்தார்.அமெரிக்கக் கல்வி,அவரை அப்பண்ணைக்கு அதிகாரமிக்கத் தலைமைக்குத் தகமையாக்கியது.அரச ஜீப் வண்டியில் தம்புல்லக் கிராமத்தைச் சுற்றிப் பார்த்த எண்பதின் முற்பகுதி மிக அழகானது-அமைதியானது!அப்போதைய மனிதர்களும் அமைதியாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.இன்று, இனவாதம் என்றுமில்லாதவாறு வளர்த்தெடுக்கப்பட்டு மனிதர்கள் கொலைகளை ஆதரிக்கும் மனநிலைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

என்னவொரு இலங்கை?

அழிவு அரசியலால் அற்புதமாக வாழ்ந்த இனங்கள் பிளவுபட்டுப் போகிறார்கள்!

தென்னாசியவிலேயே அதிக ஜனநாயகப்பண்பைக்கொண்டிருந்த இலங்கை-இன்று, இராணுவச் சர்வதிகாரத்துக்குள் உள்வாங்கப்பட்டு அராஜகத் தேசமாக விரிந்து கிடக்கிறது.இது, தமிழரை,இஸ்லாமியரை,சிங்களவரை மட்டுமல்ல இலங்கையின் அற்புதமான சூழலையே அழித்து வருகிறது!அதீத யுத்த முனைப்புகள் கொட்டும் குண்டுகள் இயற்கை வளங்களை அற்புதமான காடுகளைக்கூட நாசமாக்கிச் சுடுகாடாக மாற்றுகிறது.தமிழருக்குப் பசி தீர்த்த பனைகளையே இந்த யுத்தம் அதிகமாக அழித்துத் தமிழரின் வயிற்றைத் தொடர்ந்து காயப்போடுகிறது!இப்போது, மக்களின் தலைகளை உருட்டிவிடும் குண்டுகளை இடம்வலம் தெரியாதபடி எங்கும் புதைத்தபடி நரவேட்டையாடுகிறது!

மனிதர்கள்,தாம் சாவதற்கான ஒவ்வொரு நிமிடத்தையும் கண்ணெதிரே காணவேண்டிய சூழலை இலங்கையெங்கும் தரிசித்தபடி...

இலங்கையின் எந்தப் பகுதியும் இனி அமைதியானவொரு வாழ்சூழலை இலங்கை மக்களுக்குத் தரமுடியாது!

இலங்கைத் தேசம் மக்களை வருத்தும் ஆட்சிக்குள் நிலைப்பட்ட சந்தர்ப்பம் தற்செயலானது அல்ல!இது திட்டமிடப்பட்டு வழி நடாத்தப்படுகிறது.இலங்கையின் கட்சிகள் இலங்கையை ஆளத் தகுதியற்றதாக்கப்பட்டு அன்னிய ஐ.நா.படைகள் இலங்கைக்குள் கால் வைக்கும் சூழலுக்கு வித்திடப்படுகிறது!அதற்காகவே அப்பாவி மக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள்.தமிழ்,சிங்கள இனங்களுக்குள் படுகொலையைச் செய்யும் ஒவ்வொரு குண்டுகளும் அன்னியத் துருப்புகள் இலங்கையைத் தளமாக்க முனையும் அரசியலோடு சம்பந்தப்பட்டது.

எந்த அமைப்பு-குழு,மாபியாக்கள்-அரசுகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்கள்?

இலங்கையின் மக்கள் பசிக்கும்,பட்டுணிக்கும் நோய்க்கும் முகங்கொடுத்த காலம்போய், இப்போது யுத்தக் கிரிமனல்களின் கொலைகளுக்கும்,குண்டுகளுக்கும் தமது அன்றாட வாழ்வைச் சிதைக்கும் பயங்கர வன்முறைக்குள் உயிரைவிட வேண்டிய அரசியலை எந்த வர்க்கம் உற்பத்தியாக்கியது?

பாகிஸ்தான் அதிபர் முஸ்ராப் இலங்கையின் பயங்காரவாதத்தை அழிக்க உதவுவதாகச் சொல்கிறார்.தனது தேசத்தின் அதீத பயங்கரவாதத்தைத் தானே செய்தபடி!

நாம் அரேபியக் குறைவிருத்தி இனமோ அல்லது பாகிஸ்தானின் கல்வியறிவற்ற மதஅடிப்படைவாத மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தவர்களில்லை!அன்றிச் சினிமாவே-இந்தியத் தேசியமே உலகமெனவெண்ணும் இந்தியப் பெருங்குடிகளோ அல்ல!

எமக்கென்றொரு வரலாறுண்டு.

மிகவுயர்ந்த மனித நடத்தையின்-ஜனநாயக-வாழ்வு விழுமியத்துக்கு இலங்கை மக்கள் சொந்தக்காரர்கள்.

எங்கள் தேசம் அடிப்படைவாதக் கிரிமினல்களை அதிகமாகக்கொண்டிருக்கவில்லை!ஆனால்,இன்றைக்கு பாகிஸ்தானுக்கு நிகராக இத்தேசம் பயங்கரவாதிகளால் நிறைந்து சுடுகாடாக மாறுகிறது.சிங்கள இராணுவம் முழுமையான பயங்கரவாதிகளால் வழி நடாத்தப்படுகிறது.தமிழ் விடுதலை இயக்கங்கள் அன்னிய அரசுகளுக்காகக் கண்மண் தெரியாத கொலைக்காரர்களாக மாற்றப்பட்டபின் சிங்கள வன் கொடுமை இராணுவத்தின் இருப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது!சிங்களப் பயங்கரவாத இராணுவத்தின் நிலைப்பு, இலங்கைத் தேசம் முழுவதையும் அதன் பரவலான அடக்குமுறைக்குள் உட்படுத்தி இலங்கையிலிருந்த அனைத்து மனித விழுமியங்களும் இல்லாதாக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஊடகங்கள் சிங்களப் பாசிச இராணுவத்தைத் தேசத்தைக் காக்கும் படையணியாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து, அதன் இருப்புக்கும்,நிலைப்புக்கும்,அன்னியச் சேவைக்கும் மக்களிடம் ஆதரவைத் தேடித் தருகின்றன.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வலுவான அடக்குமுறைகள் நிகழும்போது இயக்கவாதம் மேலோங்கியும்,குறிப்பிட்ட அமைப்பைத் தொடர்ந்து ஏகபோகமாக நிலைப்படுத்தவும் இத்தகைய குண்டுதாக்குதல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தப்படுகிறது.இது மக்களைத் தொடர்ந்து இனவாதத் தீயில் சிக்க வைத்துத் தொடர்ந்து இனவாதிகளாகவும்,மக்களினங்களுக்குள் பரபஸ்பர இணக்கவுறவைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் இருக்கிறது.இத்தகையவொரு சூழலே பற்பல இயக்க-கட்சி அரசியலுக்கு விரும்பத் தக்கதாக இருக்கிறது.மக்கள் நலனற்ற அடியாட்படை அரசியலுக்கு இவையே கதியாகவும் இருக்கிறது.

இதை முடிவுக்குக்கொணர்ந்து,மக்களின் பரஸ்பர நட்போடும்,உறவோடும் இலங்கையில் நியாயமான தீர்வை எட்டி இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளத் தகவமைக்கும் அரசியல் நடைமுறைகளை எங்ஙனம் கட்டியொழுப்புவது அவசியமோ,அதேயளவு இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயவுரிமைசார்ந்த சுயாதிக்கம் அவசியமாக இருக்கிறது.இதை மறுத்தபடி இலங்கையில் ஜனநாயக விழுமியங்கள் குறித்துப் பேசுபவர்கள் மொத்தத்தில் இலங்கையின் அழிவு அரசியலையே நிலைப்படுத்த முனைகிறார்கள்.

இலங்கையின் இன்றைய சூழல் அன்னிய நலன்களின் அதீத ஆர்வங்களுக்கான செயற்கையான சூழலாகும்.

மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பப்படும் சூழல் மிகத் தற்காலிகமானவை.மக்களை அதிலிருந்து மீண்டுவர இன்றைய கட்சிசார்-அரச,இயக்கசார் ஊடகங்கள் விடுவதாகவில்லை!ஊடகங்களின் தனியுடமையானது இன்றைய இந்த அவலக் கொலைகளுக்குத் தீனிபோடுவதாகவே இருக்கிறது.பணக்கார-அதிகாரக் குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் இன்றைக்குத் தொடர்பூடகங்கள் தொலைக்காட்சியாகவும்,வானொலியாகவும்,பத்திரிகையாகவும் இருக்கும்போது மக்களைக் குரோதவாதிகளாகவும்,இனவாதிகளாகம் தமது நலன்களைச் சார்ந்து உருவாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இணையங்களுடாகவே மக்களை ஒருமைப்படுத்தும் பரப்புரைகளைச் செய்யக்கூடியதாக இருக்கிறது.எனினும், இணையச் சஞ்சிகைகள் பரந்தபட்ட மக்களை இன்னும் அண்மிக்கவில்லை!இது, மக்களைக் கூறுபோட்டுக் கொலை செய்யும் அரசியலை முன்னெடுக்கும் அன்னிய-உள்நாட்டு மாபியாக்களை நம்பி மக்கள் கொலைப்பட்டுப் போகும் விட்டில் பூச்சிகளாக இலங்கை மக்களின் வாழ் சூழல் மாற்றப்பட்டதையே இன்றைய தம்புல,மன்னார்,மொனராக்கல,யாழ்ப்பாணக் குண்டுவெடிப்புகள் சொல்கின்றன-மெய்பிக்கின்றன!

இதிலிருந்து இலங்கையை மீட்பதென்பது ஒரு தசாப்பதகாலப் போராட்டமாகவே இருக்கப் போகிறது.

இதற்குத் தகமையுடைய முற்போக்கு சக்திகளின் செயற்பாடுகள் மிக மெலிதானதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.இது, மக்களுக்கு விடிவைத் தரும் செயற்பாடுகளைச் செய்வதற்குகந்த முனைப்பைக் கொண்டிருக்கவில்லை!

எனவே,அன்னியப்படைகளின் வருகைக்கு ஜ.நா. ஒப்புதல் வழங்க,இலங்கை இன்னொரு அவ்கானிஸ்தானாக மாறும்.அங்கே,காலாகாலத்துக்குமான ஒடுக்குமுறை உழைப்பவர்களின் அரச-இயக்க முன்னெடுப்புகளைத் தடுத்தபடி மாறிவரும் இந்தியத் துணைக்கண்ட ஆளும் வர்க்க நலன்களை மேற்குலகத்தோடு இணைத்தபடி இன்னும் வளத்தெடுக்கும் ஒரு அராஜகச் சர்வதிகார அரச-கட்சி இராணுவத் தன்மையிலான ஆட்சியை நமது தேசங்களுக்குத் தீர்வாக உலகம் செய்து முடிக்கும்.

இதற்குத்தான் ஈழப்போராட்டம் வழிவகுத்து நடாத்தப்பட்டது?தூ...


ப.வி.ஸ்ரீரங்கன்.
02.02.2008