Sonntag, April 29, 2012

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

மேற்குலகினுள் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு சக்திகளுக்கு...

வரும் மே 1-2012  ஊர்வலத்துள்பாசிச இலங்கையை அரசை அம்பலப்படுத்துவதோடு ,மதம்,இனஞ் சார்ந்து ஒடுக்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தையும் அதன் கூட்டணிகளையும் மேற்குலக மக்கள் முன் அம்பலப்படுத்துவது அவசியமானது.

இன்று, இலங்கைத் தீவெங்கும் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குள் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் அநாதவராக விடப்பட்டுள்ளனர்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரச் சூழலுள்ஆசியப் பொருளாதாரக் கூட்டணியோடு சிங்கள ஆளும்வர்க்கம் கண்ட சமரசங்கள்,விட்டக்கொடுப்பு,வெற்றிகள் என்பது இலங்கைச் சிறுபான்மை இனங்களை வெறி கொண்டு, ஒடுக்கும் வழி முறைகளைச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு " இலங்கையை தென்னாசியாவில் இன்னொரு இஸ்ரேலாக" மாற்றும் சகல உரிமையையும் வழங்குகிறது.

இந்த வழங்கலை இந்தியா-சீனா,இருஷ்சியா போன்ற நாடுகள் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற  "Shanghai Cooperation Organisation or SCO" கூட்டணித் தலைமை வழங்கி விடுகிறது.

அண்மைக் கிழக்கு வலயத்துள் மேற்குலக-அமெரிக்க " NATO "ஒத்துழைப்போடு இஸ்ரேல் எங்ஙனஞ் செயற்படுகிறதோ அங்ஙனமே இலங்கையும் செயற்படுகிறது.இதுவொரு ஆபத்தான சூழலுக்குள் இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தள்ளி விட்டிருக்கிறது.


இன்று தம்புள்ளப் பள்ளி வாசல் பிரச்சனைக்கு முன்னமே முஸ்லீம் மக்கள் தொடர்ந்து சிங்கள மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.எனவே,இன்றைய முஸ்லீம் மக்களது இலங்கைப் பாசிச அரசுக்கெதிரான இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு துணை நிற்பது இலங்கையின் பிரதான சிறுபான்மை இனமான தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமானதும்-தார்மீகக் கடமையாகவும் இருக்கிறது.

வரலாற்றுத் தவறுகளைத் தள்ளி வைத்து, நாம் ஒன்றுபடும் நேரம் நெருங்குகிறது.இந்தச் சூழலுள் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் கருத்தரங்குகளை நடாத்தும்படி கோருகிறோம்.அதுசார்ந்து அடையாளப் போராட்டங்களைச் செய்வதும்,இதன் வாயிலாகச் சிங்கள ஆளும் வர்க்கத்தை வரும் மே 1 இல் உலகு தழுவி அம்பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

இந்த அறைகூவல் ஒடுக்கப்படும் இலங்கைச் சிறுபான்மை இனத்துள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள் நாம் என்ற அடிப்படையிலேயே நாம் முன்வைக்கும் உரிமையோடும், அவசியத்தோடும் விடப்படுகிறது.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
29.04.2012

Montag, April 09, 2012

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?

//"கருணா-புலிகள் என்ற முரண்பாட்டின் கோரத்தன்மையைப் பார்க்கிற எவருக்கும் இது எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழவே செய்யும். ஆனால் இங்கே முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விடையம் என்னவெனில் தமிழர்களின் அரசியல் மற்றும் விடுதலை இயக்கங்கள் யாவும் தமது அகமுரண்பாடுகளின் போதும் தமக்கிடையேயான முரண்பாடுகளின் போதும் புலிகள் மற்றும் கருணா குழுவினர் வெளிப்படுத்தியதைப் போன்ற வன்முறையான அணுகுமுறைகளையே வெளிப்படுத்தி இருந்தனர் என்பதையும் நினைவுகூரவேண்டும் இதற்கான ஆதாரங்களைத் தமிழர்விடுதலைக்கூட்டணி காலத்தில் இருந்தே காணமுடியும். எனவே இந்த வன்முறையுணர்வின் வேர்களை நாங்கள் எங்கள் கலாசாரத்திலும் ஐதீகங்களிலும் பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது"//


ரொம்ப மெலினப்படுத்தப்பட்ட கருத்து.

குருபரனது மௌனம் கலைகிறது தொடர் இயக்க அராஜகவாதம்-உட்கட்சி ஜனநாயகமின்மைசார்ந்த படுகொலை அழிவு, அரசியலை இவ்வளவு மெலினப்படுத்திப்பார்பது மிகக் குறுகிய பார்வையாகும்.

உண்மையாக? பரம்பரைக் காரணிகள்,பண்பாட்டுணர்வு,ஐதீகம்தாம் படுகொலை-அராஜகத்தைத் தொடர்ந்து தீர்மானிப்பது?

புத்தர் அனைத்துக்கும் ஆசைதாம் காரணமென்கிறார்.ஆசை,பொருள் சார்ந்த உணர்வாகிறது.புறம் இல்லையெனில் அகவுணர்வு படிமமாக முடியாதென்பதில் புத்தர் பெருமையான சிந்தனையாளர்.ஆகையால் அவர் சொன்னார்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்"என.

சமீபத்து மார்க்ஸ் உரைத்தார்: "வாழ்நிலையே சமூகவுணர்வைத் தீர்மானிப்பது"என.

"வன்முறையுணர்வின் வேர்களை "எமது "கலாச் சாரத்திலும், ஐதீகங்களிலும்,பண்பாட்டிலும் தேடவேண்டும் என்பது தெளிவாகிறது" இத்தகைய கருத்தைக்கொண்டிருக்கும் ஒருவர் போராட்ட வரலாறு சொல்லும் அவலம் நமக்கு."பண்பாடு-கலாச்சாரம்" இரண்டும் முதலில் வெவ்வேறானதாகப் புரிந்தும் கொள்கிறார்;விளக்கவேண்டும் குருபரன்!

இதைத் தொடர்ந்து(அவரது கலைந்த மௌனத்தை) வாசித்தபோது, குருபரன் ஒரு பத்திரிகையாளனாகப் பலதரப்பட்ட தளத்தில் அநுபவப்பட்டிருப்பது புரிகிறது.அந்தத் தளம் அனைத்துமே அராஜகத்தால் நிரம்பிய தளங்கள்.இவை, அனைத்துமே பல அந்நியச் சக்திகளது கைகளுக்குக் கட்டுப்பட்ட தளங்களாக இருந்திருக்கிறது.

சுகமாக அவற்றைக் கேள்விகளோடு விலத்திச் சென்றுவிடும் குருபரன் பண்பாட்டிலும்,ஐதீகத்திலும் பழியைப்போட்டு விட்டுக்  கலைக்கப்படும் மௌனம் வெறுஞ் செய்திதாம்.
அஃது, அராஜகத்தின் பக்ககங்களையும்,அதன் நிகழ்வுகளையும் தொகுப்பதுதாம்.ஆனால்,நாம் அனைவருமே அறிந்த இலங்கை அரசியற் போக்குகளில் இந்திய-அமெரிக்க உளவு நிறுவனங்களது கைங்காரியம் எங்ஙனம் ஒரு இனத்தின் தலையை இயக்கங்களால் மொட்டையடித்தனவென்பதை "வரரலாற்றில் தடுக்கிக்கொண்டு" குருபரன் இங்ஙனம் பண்பாட்டில்-ஐதீகங்களில் பழி போடுதல் இந்தியப் பார்ப்பனியப் புனைவுக்கு ஒப்பானது சார்!

சுமார் 25 ஆண்டுகளுக்குமுன்,அதாவது 1987 ஆம் ஆண்டு ஒரு நாவல் வாசித்தேன். ரா.சு.நல்லபெருமாளது நாவல் அது.

பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் இந்த ஆசிரியரது "கல்லுக்குள் ஈரம்" நாவலை வாசித்துப் பெரும் மதிப்பு வைத்திருந்த நாவலாசிரியர் அவர்.அந்த ஆர்வத்தில் அவரது அனைத்து எழுத்துக்களையும் வாசிக்க ஆரம்பித்தபோது அவருக்கு நாவல் எழுதத்தெரியாதென்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்குள் நான் வந்தேன்!; கூடவே,அவர் பெரு நிறுவன பார்ப்பனியத்தின் கோடியில் சாணாக்கியத்தைப் புரட்டும் நாவலாசிரியர் என்பதைப் புரிந்தும் வைத்தேன்.

ரா.சு.நல்லபெருமாளது கயமைமிகு "உணர்வுகள் உறங்குவதில்லை" என்னும் நாவலை 1987 ஆம் வருடம் வாசித்துக்கொண்டிருந்த காலத்தில்அந்த நாவலூடாக, பிரமாணனது நச்சு நாக்கை உணரத்தலைப்பட்டேன்.

உழைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சிதைத்து அவர்களது பரம்பரைக்குணமாகக் கொலையையும்-திருட்டையும்,அராஜகத்தையும் கற்பித்த நல்லபெருமாள்,எவ்வளவுதாம் இந்த மக்கள் கல்வி கற்று உயர்ந்தாலும் அவர்களது பரம்பரைக் குணம் அகலாது.அது, ஒரு பொழுதில் மேலெழுந்து கொலை-கொள்ளையில் ஈடுபடுமென முத்திராமன் என்ற பார்த்திரத்துக்கூடாக வெளிப்படுத்துவார்.அத்தோடு நிற்காது,உயர்ந்த பிரமணர்களால் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்குப் பின், இந்தியாவானது இழி நிலையடைந்ததற்குக் காரணம் இத்தகைய பரம்பரைக் குணமுடைய-ஜீன்ஸ்சுகள் அரசியலுக்கு வந்ததே காரணமெனவும் கூறுகிறார்.

அமைப்பைக் காப்பதற்காகச் சில அரசியல் வாதிகள்மீது பழிபோடும் சினிமாக்கள் நமக்குள் அதிகம்."நல்லவர்கள்-வல்லவர்கள்"ஆட்சிக்கு வந்தால் அகிம்சையும்,அரவணைப்புமே நிலவுமெனவும்,அமைப்பில் குழப்பமில்லையெனவும் வகுப்பெடுக்கும் இந்தியக் கருத்துநிலைகள் உலகு தழுவியதிலிருந்து பின்னப்பட்டதெனினும் பார்ப்பனியத்துக்கான சில சிறப்புக் கூறுகளும் உண்டு.அந்த"நல்லவர்கள்-வல்லவர்கள்"யாரென்று அவர்களே சொல்லும்போது பிரமாணனது பரம குருவான யக்ஞவல்க்கீயனும்-பிரவாஹானும் நம்முன் பிர்மவாதஞ் சொல்வது புரிகிறது.

குருபரனுக்கும்,இந்த ரா.சு.நல்ல பெருமாளுக்கும் வித்தியாசம் என்ன?;கண்டுபிடித்துச் சொல்லுங்கோ!

குறைந்த பட்சமாவது ஒரு இனத்தின் போராட்ட வரலாற்றின் தகவல்களைச் சொல்வதற்கு முன்னாவது, சில நூல்களைக் கற்றாய்ந்து பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

"சத்தியத்தின் உரை கல் மூளையல்ல,பொருள்கள்-இயற்கைதாம் அந்த உரைகல்".

இனியாவது,இந்த மௌனம் கலைகிற தொடரைத் தொடர்வதற்குமுன் இராகுல சாங்கிருத்தியானின்"வால்காவிலிருந்து கங்கைவரை" வரலாற்று நூலை-கதைகளைக் கருத்தூன்றிக் கற்றுத் தொடர்வது செழுமையாக இருக்கும் குருபரன்.சமூகத்தின் இயக்கத்தைப் புரிவதற்கு இந் நூல் பெரிதும் உதவுவது.

நிலவுகின்ற சமூக வாழ்நிலைதாம் சமுகவுணவைத் தீர்மானிக்கிறது.புறநிலையின் தன்மையே சிந்தனையைத் தூண்டிவிடுகிறதென்பதெல்லாம் தற்போது நவகால சமூக-பொருளாதரவியல்-அரசியல் உளப்பகுப்பாய்வில் கெட்டிக்காரரானவர்களுக்குப் புரிந்து போவதில்லைதாம்.எனினும்,நமக்குள் பல ரா.சு.நல்லபெருமாளது சாதியக் கருத்தாளர்கள் நிறையவே உண்டு.

சமூகத்தை வரலாற்றுப் பொருள்முதல் வாதக் கண்ணோடு பார்ப்பது காலவாதியாகிப் போய்விட்டதாகப் புசத்தும் "தும்பி"களது இறைக்கை அடிப்பில்மகிழ்வுற்ற சிறார்கள், அந்தத் தும்பிகளுக்குப் பின்னே அணிவகுத்தோடுகிறார்கள்.

முத்துராமன் ஒரு நல்ல-தலைசிறந்த புதுக்கவிதை புனைவாளனாகவும், புரட்சிகரமாகக் கருத்தாடுபவனாகவும்,புரட்சிகரவாதியுமாகக் காட்டப்பட்டு இறுதியில், பரம்பரைக்குணத்தால் கொலைக்காரனாகவும், கள்வனாகவும், அராஜகவாதியாகவும் அவன் தொடர்ந்து-தொடர்ந்து இயங்குவது அவனது பரம்பரை இரத்தத்திலுள்ள குணமே-ஜீன்ஸ்சுகளே காரணமென்று பார்ப்பனிய வேதம் உரைத்த இந்திய அரசியலை குருபரனது கருத்தோடு உரைத்துக்கொண்டால் எங்கோவொரு லிங்கு கண்ணுக்குப் புலப்படுகிறது.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.04.2012

Donnerstag, April 05, 2012

முள்ளிவாய்காலிற் தோற்றது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.

" நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்"


ன்று நிலத்திலுள்ள மக்கள் மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,பிரபாகரனையும் அவரது கோரிக்கைகளையும் ஏமாற்றிக்கொண்டிருந்தபோது அதை ஊகித்துணரமுடியாத பிரபாகரனது புத்திக்குக் கிடைத்த தோல்வியல்ல இந்தச்சதி. இது முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைத்ததோல்வியாகிறது.இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும் பன்முகத்தன்மையில் ஒடுக்கப்படும்போது இலங்கையின் ஆளும்வர்க்கம் மற்றும் அந்நியக் கூட்டணியோடு இலங்கையின் முழுமொத்த உழைப்பாளர்களும் இனங்கடந்து இன்னொரு தளத்தில் மிக நேர்த்தியாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.இதைக் கடந்து சிந்திக்கும் தமிழ் தேசிய அரசியலானது,பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க நலன்களை மீளப்பெறவே தமிழீழ விடுதலை குறித்த அதே பழைய அரசியல்போக்குகளிலிருந்து தன்னைத் தகவமைக்கிறது.இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபுக்குள்ளும்,புலிகளது அரசியலிலிருந்து புரிந்துகொண்டு புலிவிசுவாசத்தின் வெளிப்பாட்டுத் தன்னார்வத் தமிழ்ச் சேர்க்கையின் இன்றைய அரசியலுக்குள்ளும் உணர்ந்துகொள்ளமுடியும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வழமையான புலியினது அந்நியக் கைக்கூலிகளால் நாடத்தப்படும் ஒரு மடம்.அதைத் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து அரசியல்ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாகவும் சிதைக்கும் விபரீதமான அந்நியக்கைக்கூலிகள் மக்களது அனைத்து வாழ்வு முன்னெடுப்புகளில் தம்மைப் பிணைத்து அந்த மக்களை அரசியல் ரீதியாகக் காய் அடிக்கின்றனர்.1990 களுக்குபின்"புத்திஜீவிகள்-பத்திரிகையாளர்கள்-சமூக ஆய்வாளர்கள்" என்போர் புலிகள் ஆயுதரீதியாக மக்களைக் காயடித்தபோது அதற்கெதிராகப் போராடவும்,புலிகளைக் கேள்வி கேட்பதையும் தவிர்த்து,புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியல் நடாத்தையை அநுமதித்தனர்.

இத்தகைய அநுமதித்தலூடாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்சூழலைத் தொடர்ந்து தமிழீழத்தின் பெயரால் அராஜகமயப்படுத்திக்கொண்டனர்.இதன் கட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதென எவராவது கருதுவோமானால் நாம் மீளவும் தவறிழைப்பதில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் செல்வோம்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்குள் அழிக்கப்பட்டது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.அங்கே அழிக்கப்பட்டது அந்நியச் சக்திகளுக்கெதிரான விவேகமும்தாம்.அந்த விவேகத்தை மெல்ல மெல்ல அழித்த இந்திய-இலங்கைக் கைக்கூலிகள் புலிகளது மேல் நிலை ஆலோசகர்களாகவும்-தளபதிகளகவும் இருந்து வந்தனர்.அவர்களை,இன்று கே.பி. என்றும் தளபதி கருணாவென்றும் இனங்காணும் நாம் இவர்களது இன்னுமொரு பகுதியையும் இனங்காணுவதில் பாராமுகமாக இருக்கிறோம்.இதை இனங்கண்டு நிலத்திலுள்ள மக்களுக்குச் சரியான திசைவழியில் போராடும் உண்மைகளைப் பறையாதிருப்போனால்,மீளவும், அதே அந்நியக் கைக்கூலி அமைப்புகளே மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதில்"தமிழ்பேசும் மக்களது உரிமை"சொல்லி அந்நிய நலன்களுக்கானவொரு[Indian platform] அடியாட்படை-ஆட்டு மந்தைக்கூட்டத்தைத் தொடர்ந்து தயாரித்துக்கொள்வர்.இதைத் தடுக்காத எந்த உரையாடலும் இனிமேல் அர்த்தமற்றது.இது,அரசியல்-இலக்கியம் என்ற அனைத்து மட்டத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு மக்களுக்குள் பகிரப்பட வேண்டும்.

புலியை ஒரு உதாரணத்துக்கு எடுத்தோமானால்(ஏலவே, அந்நியக் கைக்கூலி அரசியல்-இயக்கச் சேவையில் பல ஆயுதக்குழுக்கள் மறைமுகமாகவும்,நேரடியாகவும் ஈடுபட்டு அம்பலப்பட்டபோது இந்த அமைப்புகளை ஒரு தளத்திலும்,இன்னொரு தளத்தில் புலிகளை மிக நுட்பமாகத் தமது கைக்கூலியாக்கியது இந்திய-இலங்கை-மேற்குலக அரசுகள்.எனவே,ஏனைய அமைப்புகளைக்கடந்து, புலிகளது அமைப்பை உதாரணத்துக்கு எடுப்போம்.)அந்த அமைப்பு ஒரு கட்டத்தில்(2000க்கு பின்)சரியான திசைவழியில் செல்வதாகவும்,அவர்களே மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகவும் மேற்குலகில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிந்தனையாளர்களில் பலர் எமக்கு வகுப்பெடுத்தனர்.இவர்களால் ஏமாற்றப்பட்ட விவேகமான போராளிகள் அழிவது உறுதியென ஆக்கப்பட்ட பெரு வன்னி யுத்தமானது இறுதிவரைப் பிரபாகரனுக்குப் புலப்படாத அரசியலாகவே இருந்ததென்பதற்கு அவரது சரணடைவு-கொலையே நமக்கான சாட்சி!

இந்தத் திசையில் அந்நியச் சக்திகள் தற்போது கட்டிவைத்திருக்கும் அரசியற்றளம் (Political Platform ) என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்க மறுக்கும் எந்தத் தமிழீழ விசுவாசியும் மீளத் தோற்பது மக்களது உயிரோடு விளையாடும் விளையாட்டே!புலிகள் அமைப்பை மிக நேர்த்தியகத் தமக்கான மறைமுகமான கைக்கூலியாக்கிய அந்நியச் சக்திகள் அவர்களைத் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களது உண்மையான போராட்டத்தலைமையாகவும் ஆக்கிக் காட்டினர்.அதுள் பிரபாகரனது இருப்பே அவர்களுக்குக் கைகொடுத்தது.பிரபாகரனது மாயையே இந்த அந்நிய வியூகத்தை மறைத்து அந்த அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை விடுதலை அமைப்பாகப் பலரை நம்ப வைத்தது.ஆனால்,பிரபாகரனுக்கு அடிபணிவதாக நடித்தபடி அந்த அமைப்பின் தளபதிகள்-அரசியல் மேல் நிலை ஆலோசகர்கள் பிரபாகரனது மலட்டுத் தனத்தைக்கொண்டு புலிகளை அந்நிய அடியாட்படையாக்கிக்கொண்டது.

இங்கே,இனம் காட்டப்படுவது மிக நேர்த்தியான அரசியல்சதி:

மேற்குலகத்தின் கைக் கூலியாக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள்:

  • 1: அன்ரன் பாலசிங்கம்,அடோல் பாலசிங்கம்,
  • 2: தமிழ்ச் செல்வன்-இவர்கள் இறுதிவரை அம்பலப்படாதிருப்பினும்பாலசிங்கம் ஏலவே அம்பலப்பட்டுப் பிரபாகரனால் பின்தள்ளப்பட்டு இந்தியக் கைக் கூலிகள்அந்த இடத்துக்கு வந்தனர்.அதையும் பிரபாகரனால் இனங்காண்பது அரிதாகவே இருந்தது.

இந்தியாவின் எடுபிடிகளாக புலிகளுக்குள் இருந்த மாத்தையா குழுவுக்குப்பின்பான கூட்டு:

  • 1: கருணா கூட்டு,
  • 2: கே.பி.கூட்டு. முள்ளி வாய்க்காலுக்கு முன்னும்,பின்னருமாக இவர்கள் வெளிப்படையாகிவர்கள்,

வெளிப்படாததும்,இன்னும் மக்களுக்காகச் சிந்திக்கும்,உழைக்கும் கூட்டாக இருக்கும் இந்தியக் கைக்கூலிகள்:

  • 1: திருநாவுக்கரசு-கருணாகரன்,நிலாந்தன் கூட்டு,
  • 2:மேற்குலகில் புலிப்பிரமுகர்களாக இருக்கும் நபர்கள்வரிசையில் முரளிதரன்

புலம் பெயர்ந்து மேற்குலகில்வாழும் தமிழ்பேசும் இலங்கையருள் அதிகமாகத் குறுந்தேசிய வாதத்துக்குள்மூழ்கியவர்களும்-புலிகளது பரப்புரையால் காயடிக்கப்பட்டவர்களும் இன்றைய மேற்குலகப் புலிப்பினாமிகளின் அதிகார நகர்வில் மேற்குலக லொபிகளாகவே இருக்கின்றனர்.ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதீத விசுவாசத்துக்குரியவர் புலிப் பினாமிகளில் முக்கியமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார்.

இங்கே,நாம் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி குறித்து கவனத்தைக் கொண்டோமானால்,அந்த மக்கள் முதலில் இனம்கண்டு அரசியல் நீக்கஞ்செய்யப்படவேண்டியவர்கள் இந்தியக் கைக்கூலிகளாக[A political platform is not only that typically widely distributed, with journalists and commentators being encouraged to quote from it when they analyze candidates and upcoming elections.] இருக்கும் "வெளிபடையாக" இனம் காட்டாதவர்களையே. இவர்கள்ரொம்ப ஆபத்தானவர்கள். முள்ளிவாய்க்காலில் புலி தோத்துக்கொண்டிருந்தபோது அடிக்கடி புலிகளது பரப்புரை ஊடகங்களால் கருத்தொன்று பரவியது.அந்தக்கருத்தானது புலிகளது அரசியல்வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசால் கருத்தியற்றளத்துக்கு எடுத்து வரப்பட்டது."தமிழீழத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தாம் உண்டு"என்பது அந்தத் திரு மந்திரம்.இவர்களேதாம் இப்போது கிட்டத்தட்ட மறைமுகமான இந்திய ஏஜன்டுகளாகத் தமிழ் பகுதியெங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

இவர்கள் இந்தியாவின் நலன்களை இலக்கைக்குள் தொடர்ந்து பதியம்போடும் மக்களோடு மக்களான கலைஞர்களாகிறார்கள்.இந்த மனிதர்களே சமீபத்தில் இலக்கிய வெளியீடுகள்-மதிப்பீடுகளெனச் செய்து தமது அரசியலை மிக நுணுக்கமாக முன்னெடுக்கின்றனர்.இந்த நடாத்தைகளை மிக நுணுக்கமாகக் கவனிப்போமானால்இந்தியா தனது எடுபிடிகளைப் பலமட்டத்தில்-பல வடிவங்களில் வைத்து இயக்கிவருகிறது.இவர்கள் அனைவருமே புலிகளது மேல்மட்டத் தலைவர்களாகவும்-கலைஞர்களாகவும் இருந்தவர்கள்.இவர்களுக்கு வெளியிலும் இந்தியக் கைக்கூலிகள் இலக்கிய வாதிகளாகவும்,தலித்தியவாதிகளாகவும் இருக்கின்றனர்.அவ்வண்ணமே,இந்தியா முன்னைய ஆயுத-அராஜகக் குழுக்களையும் இதுள் இன்னொரு தளத்தில் வைத்து இலங்கையின் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்குள் கட்டி வைத்திருக்கிறது.இதன் பின்னணியுள் நடந்தேறும் அரசியல் நமது மக்களுக்கு ஆபத்தானது.

"தமிழீழ"ப் போராட்டத்துள்புலிகளது பாத்திரம் நேர்மையாப் பேசப்பட வேண்டும்:

புலத்து-நிலத்துத் தமிழ்பேசும்மக்களுக்கு அரசியல் உரைத்தலென்பது மிகக்கடினம்.அவர்கள் அதிகமாகப் புலிகளது பொய்யான கருத்துக்களால் கடந்த கால் நூற்றாண்டாகக் காயடிக்கப்பட்டவர்கள்.இவர்களே,தொடர்ந்து கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்ற இந்தியத் தாசர்களைப் புலிகளது விசுவாசத்துக்குரிய தோழர்களெனப் புரிந்து அணைத்துக்கொள்கின்றனர்.இந்தத் துணிவுதாம் அவர்களும் சாம்பற்றத்துவமுரைக்கும் நிலைக்கும் மேலாக இப்போது இலங்கை தழுவிய முறையில் கலா நிகவுழ்வுகளுக்குத் தலைமைதாங்கித் தமிழ் மக்களது ஊடக அறிவுக்கு ஆப்பு வைக்கும் காரியத்தில் முழுமையாக இறங்கி இந்தியச் சார்புக் கருத்துகளைத் தினமும் மக்களுக்குப் பழக்கப்படுத்துகின்றனர்.இங்கிருந்து நாம் தொழிற்படவேண்டிய கட்டாயமான பணி என்ன?

புலிகளது வரலாற்றுப் பாத்திரத்தைப் புனையும் புலம்பெயர் ஈழமக்களது இருண்ட அரசியல் குறித்தும் இந்தச் சந்தர்ப்பதில் உரைத்தே ஆகவேண்டும்.சமீபத்தில் புலிகளது அமைப்பில் பட்ட அநுபவங்களைப் புலிகளது ஆரம்பகால தன்னார்வக் கோஸ்டியின் உறுப்பினர் கணேசன் ஐயர் இனியொருவில் எழுதியிருந்தார்.அந்தத் தொடர்களை நூலாகியவர்கள், வெளியீட்டு விழாவின் மூலம் பலதரப்பட்ட வர்க்கத் தளத்தவர்களையும் உள்ளிழுத்து விமர்சனத்தைப் பகிர்ந்துகொண்டனர்.விமர்சனம் என்பது வெறுமனவே நிலவுகின்ற பெரு மக்கட்டொகையின் எண்ண அலைக்கொப்ப கப்பலோட்டுவதாகவே அனைவரும் செய்து முடித்தனர்.உண்மையில் புலிகளது வரலாற்றை நாம் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவர்கள்.புலிகளென்ற அமைப்பின் வரலாற்று உள்ளடக்கத்தையும் அதன் போராட்டப் பாத்திரத்தையும் நமது வருங்காலச் சிறார்கள் கற்றறியவேண்டும்.இதன் அவசியத்தை உரைப்பதற்கு 1980 களுக்குப் பின் இலங்கையிற் பிறந்த தமிழ் இளையோரை மிக நிதானமாக உற்றறிந்தால் பொய்யினதும்,காயடிப்பினதும் பலம் பொருந்திய வினை, நமக்கு புரிந்து பேகும்.

80 களுக்குப் பின்பிறந்தவர்கள் புலியினது அனைத்துப் பாத்திரத்தையும் மறுத்துப் புலிகளது தலைவனது ஒளிவட்டத்துக்குள் மாட்டுப்பட்டுக்கிடந்தவர்கள்.அவர்களே,புலியினது அழிவுவரைப் புலிகள் தலைவனையும்,அந்தத் தலைவனது போராட்டச் செல்நெறியையும் மக்கள் போராட்டமாகவும்,"கரிகாலன் காலத்துள் தமிழீழம் சாத்தியமென" அனைத்து ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை-கருத்துக்களையெல்லாம்ஜீரணிக்கும் வலுவின்றி "எட்டப்பர்-துரோகி"என்றபடி தமிழ்பேசும் மக்களது தலையில் யுத்தத்தின் சுமையை ஏற்றினார்கள்.இவர்களுக்குப் புலிகளது ஒட்டுணித்தலைமையானது அந்நியச் சக்திகளால் இயக்கப்படுவதென நாம் உரைத்தபோது ,அவற்றைத் தட்டிகழித்தார்கள்.நம்மீது அவதூறு பொழிந்தார்கள்.நாம் மீளவும்,"புலிகள் தோற்பார்கள்"என்றபோது எம்மைப் பார்த்து,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள்சிங்கள இராணுவத்தை வென்று தமிழீழத்தை விடுவிப்பார்கள்"என்று எழுதிக் குவித்தனர்? இந்த வினை எங்ஙனம் உருவாகியது?எப்படி இந்த இளைஞர்கள் காயடிக்கப்பட்டார்கள்? வேள்விக்கு வளர்த்த கடாவாகவே இந்தக் கூட்டம் இதுவரை இருக்கிறது.இவர்களேதாம் இப்போது நமது மக்களது யுத்த வாழ்வையும்-வலியையும் புனைவு இலக்கியமாக்கிறார்கள்.இத்தகையவர்களது அரசியல்-வரலாற்றுத் தெளிவே இந்த இலட்சணத்தில் இருக்கும்போது, இவர்களால் ஆற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏதோவொரு விசுவாசத்துக்குக் கட்டுப்பட்டு, உண்மைகளை இனங்காண்பதில் அநுபவக் கோளாறுடன் உரை அமைக்கின்றனர்.எனவே,புலியினது உண்மையான பாத்திரம் மிக நேர்த்தியாக எழுதப்படவேண்டும்.பொதுவெளியில் உரையாடப்படவேண்டும்.

சிங்கள ஆளும் வர்கத்தினது இனவாத ஒடுக்குமுறை நிகழ்வை வலிவுப்படுத்தியதும்,அதைத் தொடர்ந்து இலங்கைக் கூலிப்படையைத் தேசிய இராணுவமாகவும்,ஆக்கிய போராட்டச் செல்நெறியும்,வரலாற்றில் மிதவாதத் தமிழ்த் தலைமைகளது மேற்குலகச் சார்பு அரசியலது வினையின் பலாபலாத்தால் புலிகளென்றவொரு அமைப்புச் சுயவளர்ச்சியை மறுத்து முழுக்முழுக்க அந்நியச் சக்தியின் தயவில் தங்கி வைக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வல்ல.இனவாத அரசியலுக்கெதிரானதும்,அந்த அரசியலது வினையால் மேற்கொள்ளப்பட்ட இனவொடுக்குமுறை வீரியத்துக்கெதிராகவும் போராடுவதென்ற பேர்வையில் அந்நிய நலன்களுக்காகப்பாடுபட்ட ஈழப்போராட்ட ஆயுதக்குழுக்களும்-கட்சிகளும் நமது மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்தும் தமிழ்பேசும் இனத்தை இலங்கையில் ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்து, அடிமையாக்கியக் கொண்ட வரலாறு பேசப்படவேண்டும்-பகிரங்கமாக நாம் எமது மக்களுக்கு உரைக்கும் முதற் செய்தியானது,புலிகள் அந்நியக் கைக்கூலிகள். புலி இயக்கத்தின் மேல் நிலைத் தலைவர்களது இன்றைய அரசியல் சார்பே சாட்சியென்பதல்ல.அந்த அமைக்குள் நிலவிய போராட்டச் செல்நெறியும்,அவர்களால் அணுகப்பட்ட அரசியலுமே ஆழமாகப் பேசப்படவேண்டும்.அங்கே,இவர்கள் எப்படி அந்நிய அடியாட்படையாக உருவாகி வந்தனர் என்பதை மிக நேர்த்தியாக உரைத்தாகவேண்டும்.

இதைத் திட்டமிட்டு மறைக்கும் எந்தவுரையாடலும் புலிகளைத் தேசியப் போராட்டத் தலைமையாகவும்-மாவீரர்களாக்குவதும் மீளவும் நமது மக்களைத் தப்பான பாதைக்கு அழைத்துச் செல்லவே.அந்த வகையிற்றாம் இன்று, இந்தியக் கைக் கூலிகள் மீளவும் நமது மக்களுக்குள் வந்து திடமாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவர்கள், இரண்டு இலட்சம் மக்களது அழிவுக்குப் பதிலுரைப்பதைத் தவிர்த்துவிட்டுப் புதிய தத்துவம் போதிக்கும் நிலை எப்படியுருவாகிறது?,திருநாவுக்கரசும்,கருணாகரனும்,நிலாந்தனும் எப்படித் தமிழ்ச் சமூகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்?,எப்படி இவர்களால் மீளமீள இந்தியாவுக்குச் சார்பான கருத்துக்களைப் பேச முடிகிறது?.எமது மக்களை கெடுதியாக வருத்தியவொரு கூட்டம்.மக்களது அனைத்து வளங்களையும் திருடிய கூட்டம்,குழந்தைகளைப் போருக்குள் புதைத்தவொரு கூட்டம் இன்னும், மக்களது நலனுக்காகவே அரசியல் பேசுவதாகப் பசப்பும் சூழ்நிலை உருவாகிறதென்றால் புலிகளது பாத்திரத்தை மக்கள் சரியாகப் புரியவில்லை என்பதே உண்மை!

புலியினது அமைப்பிலிருந்து போராட்ட அநுபவங்களைப் பேசமுனைபவர்கள் குறைந்தபட்சமாவது புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியலையும் பேசியே தீரவேண்டும்.மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவோமெனப் பயந்து விமர்சனத்துள் நாசுக்காகச் சொல்வதென்பது சிலருக்கு அவசியமாகலாம்.ஆனால்,பெரும் பகுதி மக்களது விடுதலையை விரும்புபவர்கள் உண்மைகளைக் கறாராகப் பேசவேண்டும்.ஒரு கைக்கூலி அமைப்பால் எத்தகைய வரலாற்றுத் துரோகம் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட முடியுமென்பதற்குப் புலிகளே உதாரணமாக இருக்க முடியும்.இவ்வளவு பெரிய இழப்பும்,அற்பணிப்பும் அந்நிய அரசுகளது அரசியல்-பொருளியல் நலனுக்கேற்பப் பயன் படுத்தப்பட்டதென்றால் அது உண்மையிலேயே மன்னிக்க முடியாத குற்றம்.இங்கே, புலிகளது பினாமிகள் இப்போதும் இந்திய-மேற்குலகக் கைக்கூலிகளாகவும்,மகிந்தாவின் விசுவாசிகளாகவுமிருக்கின்றனரென்றால் அவர்களை மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தி அரசியல் நீக்கஞ் செய்யத் தூண்டியாகவேண்டும்.ஆனால்,நிலாந்தன்,கருணாகரன்,திருநாவுக்கரசு போன்றவர்களோடு அரசியல் நடாத்தும் புரட்சிக்கரத்"தோழர்களை"என்னவென்பது?புலிகளது அந்நியக் கைக்கூலிப்படைப் பாத்திரத்தை மறைத்துக்கொண்டு,அவர்களைத் தேசியவிடுதலைப் போராளிகளெனச் சொல்லப்படும் வரலாறானது மக்கள் விரோதமாகும்.அதற்கெதிரான பெறுமிதிமிக்க உண்மைகள் பகிரங்கமாகப் பதியப்படவேண்டும்.அவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று புலிகளது மாயை தகர்க்கப்படும்போதுதாம் இத்தகைய இந்திய-மேற்குலகக் கைக் கூலிகளை முiறியடிக்க முடியும்.அதுவரையும் நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.04.2012

Sonntag, April 01, 2012

ஜனநாயகம்,பன்முகத்தன்மை பேசும் புலிப்பிரமுகர்கள்.

[இக்கட்டுரையானது பரவலாகப் பேசுவது அரசியல்-அராஜகம் குறித்து,இயக்கஞ்சார்ந்த தனிநபர்களது பயங்கரவாதச் செயற்பாடானது கருத்தியல்ரீதியாகவும் புரியப்படவேண்டியது.ஆயுதமெடுத்துப் பயங்கரம் புரிவதென்பதும்,பேனாவெடுத்து அத்தகைய பயங்கரத்தை-அராஜகத்தை நியாயப்படுதுவதென்பதும் வெவ்வேறானதில்லை.இரண்டினது வினையும் அழிவு அரசியலே.இங்கே,புலத்தில் அதிகமாக ஜனநாயக வகுப்பெடுக்கும் புலிப் பிரமுகர் நடராஜ முரளிதரனது கபடி விளையாட்டிலிருந்து ஓரளவு பேச வேண்டிய தார்மீகக் குரலாகவே இக்கட்டுரை எழுதப்படுகிறது.]


புலத்தில்,முன்னாள் சுவிஸ்ட்சர்லாந்து-இந்நாள் கனேடியப்புலிப்பிரமுகர் முரளிதரன் நடராஜா அவர்கள்,இப்போது ஜனநாயகம் குறித்தும்,பன்முக உரையாடல்குறித்தும் நிறையவே கூக்குரலிடுகிறார்.நிலத்தில்புலிப் பிரமுகர்களாக இருந்து மக்களைத் துவசம் செய்த கருணாகரன்,திருநாவுக்கரசு,நிலாந்தன் வகையறாக்களும் அவர்களது சர்வதேசத் தலைவர் கே.பி.யுங்கூட ஜனநாயகங் குறித்து நிறையவே பேசுகின்றனர்.இத்தகைய புலிப்பினாமிகளது கடந்த காலப் புலிப்பிரச்சாரகப் பரப்புரைகளையும் இப்போது விறாக்கியிலிருந்து தூசுதட்டிப் படிக்கிறேன்.ஈழநாதம் ஒலித்தவர்கள், அதை மூடி வைத்துவிட்டு மக்களுக்குள் மக்களாக ஜனநாயகத் தாகமெடுத்துத் தொடர்ந்து அழுகின்றனர்.எல்லாம் கருப்பு-வெள்ளை,சாம்பலெனவும் அவர்களால் நிறப் பகுப்புஞ் செய்து பேசப்படுகிறது.இவர்களது கடந்தகால அரசியல்-அந்நியச் சேவையும்,இந்நாள்வரைத் தொடர்ந்து உயிரோடு உலாவும் இவர்களது இருப்பினது அரசியலும் மிகுந்த சந்தேகத்துக்குரியது.

எட்டாம் வகுப்புக்கு அண்மித்த பாலகர்களெல்லாம் புலியாகப்பட்டத்துக்கும்,இவர்களுக்கும் பாரிய தொடர்புண்டு.வன்னிப் படுகொலையுள் அத்தகைய பால்குடிப் போராளிகளெல்லாம் பயங்கரவாதிகளெனக் கூறப்பட்டு, இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.ஆனால்,இந்த முதிர்ந்த-முற்றிய புலிப் பிரமுகர்களெல்லாம் முன்னைவிடவும் துடிப்பாக நிலத்தில் உலாவர முடிகிறது.பாலகப் போராளிகளைக்கொன்ற சிங்கள-இந்திய அரசுகளுக்கு அந்தப் பாலகர்களைக் களத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்த இந்தப் பிரமுகர்களைக் குறித்துச் செஞ்சோற்றுக் கடனுக்கான நன்றியை மீளவும் எதிர்பார்த்து இயங்க, அனுமதிப்பதில் வெட்கமோ-வேதனையே இல்லை!அப்பாவிகளது குரல்வளைகளை நசித்த கயவர்கள் கருத்தியல்ரீதியாவொரு இனத்தைக் காயடித்தவர்கள் இப்போது நிறப்பிரிப்புத் தத்துவஞ் செய்கின்றனர்.

என்னவொரு அநியாயமான உலகம்!

இதுவரை தாம் சொல்வதே சரியானது.தாம் மட்டுமே தூய போராட்ட அமைப்புவெனக் கூறிக்கொண்டு,மாற்று அமைப்புகளைத் தடைசெய்து "துரோகிகள்"என்று கொன்று குவித்தார்கள்-இரயர் போட்டுக் குவியலாகக் கொல்லப்பட்ட தமிழ்ப் போராளிகளை எரித்தார்கள்.அதையும்,தமிழீழத்தின்பெயரால் ஜனநாயகத்தன்மை என்றார்கள்.

யாழ்ப்பாண முஸ்லீம்களை, அவர்களது பிறந்த மண்ணைவிட்டு ஓடோட வெருட்டியடித்தார்கள்-கொன்றார்கள் புலிகள்!இதையும், நாம் புலம் பெயர்ந்து வாழும் மேற்குலகில் "சரியானது,முஸ்லீம்கள் சிங்கள அரசின் கைக்கூலிகள்"என்றும், அதையும் ஜனநாயகத்தின்பாலானதெனச் சொன்னார்கள் புலிகள்.

முரளிதரன் இவற்றை 2009 ஆம் ஆண்டுவரை நியாயப்படுத்தி, மக்களுக்குள் பிரச்சாரஞ் செய்தவர்.இப்போது,இவர்கூறும் "ஜனநாயகம்"இந்த வகையிலானதெனப் புரிந்துகொள்வதைத்தவிர வேறெதுவையும் முரளிதரனுக்கு வகுப்பெடுக்க முடியாது!

தமது காலடியில் அதிகாரம் இருந்தபோது,தாம் சொல்வதே "ஜனநாயகம்" என்ற புலிப்பிரமுகர் முரளிதரன் போன்றோர் இன்னும், மற்றவர்களுக்கும் இதைப் போதிப்பது அபத்தமானது.இவரே வலிந்து தமது புலிப் பாசிசச் சேட்டையை ஆதரித்த பால்குடிகளது(குறிப்பாகச் சயந்தன் கதிர்) தற்போதைய"நாவல்-சிறுகதை" தொகுப்புகளைத் தமது செலவில் பிரசுரஞ்செய்து, பினாமிப் பெயர்களுடாக அவற்றை தனிப்பட்ட நிறுவனத்தின் பதிப்பாகக் காட்டியபடி,அவற்றை வெளியீடு செய்வதென மக்களுக்குள் மீளப் புலிப் பாசசத்தை மென்மையான முறையில் தொடர்ந்து நகர்த்துகிறார்கள்.மக்களிடத்தில் தமது பாசிசச் சேட்டையை குறித்து விளக்கமளிக்கமுடியாத பாசிசப் புலிகள்-தம் வரலாற்றுப் பழியை,தவறை ஓத்துக்கொள்ள மறுத்தபடி தியாகமாக்கும் முயற்சியின்வழியில்,தற்போது மக்களது வாழ்வைத் தமது எழுத்துக்கேற்ப நீட்டியும்,முடக்கியம் இயற்கைவாதத் தன்மையுடன் நொந்தவர்களது விழிகள்முன்னே நகர்த்திக்காட்டித் தொடர்ந்து புலிமீதான ,அநுதாபத்தை வளர்த்துத் தம்மைத் தக்கவைக்கும் வியாபாரத்துக்குப்பெயர்"ஆறா வடு"மசிர்!

இது,மிக வலுவாக இனங்காணவேண்டிய நிகழ்ச்சி நிரல்.இதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த மக்கள்பாரா முகமாக இருந்து அநுமதிக்கும்போது,புலிகள்மீது செய்த அதே தவறைத்தாம் இந்த மக்கள் செய்து முடிக்கப் போகின்றனர்.

புலிகளது புதிய-புதிய போலி வடிவங்களை இனங்கண்டு,இவர்களை ஓடோட வெருட்டி அடிக்க வேண்டும்.இவர்கள் ஆபத்தானவர்கள்.

தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள-அந்நிய அரசுகளுக்குக் காட்டிக்கொடுத்த கயவர்கள். இவர்களால் நமது மக்கள் இழந்த இலட்சக்கணக்கான பாலகர்களின்"ஆன்மா"நம்மை இன்னும் புலிகளை மன்னிக்காதே எனக் கூறிக்கொண்டே இருப்பதற்காக, அவர்களது பெற்றோரது கண்ணீரோடு நம்மெல்லோரையும் இறந்தவர்கள் அண்மிக்கின்றனர்.

எவரை மன்னித்தாலும் பாசிச ஈழ அராஜக இயக்கங்களையும்,குறிப்பாகப் புலிகளையும் எவரும் மன்னிக்கமாட்டார்கள்.அப்படி மன்னித்தால் தமிழ்பேசும் மக்களும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களும் இறுதியில் இலங்கை வரலாற்றிலிருந்து துடைத் தெறியப்பட்டுவிடுவர்!

புலிப் பிரமுகர் முரளிதரனைக் குறித்து மிகக் கவனமாக இருக்கவேண்டிய கட்டத்துள் புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்துள்ளனர்.ஏனெனில்,கடந்த காலத்தில் புலிகளையும்,அந்த அமைப்பையும்,ஜனநாயகப்படுத்திப் புரட்சிகரமான அமைப்பாக மாற்ற நாம் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும்,எழுத்துக்களையும் "துராகிகள்-எட்டப்பர்கள்"எனக்கூறியபடி அந்த அமைப்பைத் தொடர்ந்து பாசிச அமைப்பாகவும்,மக்களது சுய நிர்ணயப்போரை,அராஜகப் போராட்டமாகவும் மாற்றியபடி, அந்நியத் தேசங்களுக்கும் ,சிங்கள அரசுக்கும் காட்டிக்கொடுத்த புலிப் பிரமுகர்கள் இவர்கள்.

இவர்களே, அந்த அமைப்பின் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்க உடைந்தயாகச் சிங்கள-இந்திய அரசுகளுக்குள் இருந்துவிட்டு இப்போது,இந்திய-சிங்கள அரசுகளால் கண்டும் காணாமற் விடப்பட்டுள்ளனர். இவர்களே,கருணாகரன்,திருநாவுக்கரசு, நிலாந்தன்,முரளிதரன் போன்ற முகமூடிகளாவர்.இந்த மோசமானவர்கள்,புலியமைப்பை ஜனநாயகப்படுத்தும் எம்மெல்லாரதும் முயற்சியையும் எட்டப்பர் செயலெனப் பிரபாகரனுக்கு வகுப்பெடுத்தபடி அந்த அமைப்பையும்,பல்லாயிரக்கணக்கான தேசபக்த புலி அடிமட்ட இளைஞர்களையும் திட்டமிட்டுக் கொன்று குவித்த நயவஞ்சகர்கள்.

இவர்களை வரலாறு மன்னிக்குமா?

ஒரு கட்டத்துள் புலியமைப்பை தமது கைக்குள் வைத்துச் சிதைத்த திருநாவுக்கரசு,கரணாகரன்,கே.பி. , நிலாந்தன்,நடராஜா முரளிதரன் போன்ற பிழைப்புவாதக் கயவர்கள் (இவர்களது பட்டியல நூற்றுக்கணக்கானது.தலை மறைத்தபடி மக்கள் சொத்தோடு முதலாளிகளாகியவர்கள் பலர்.அவர்களை இனங்காட்டத்தக்க சூழலொன்று மிக விரைவில் வரும்.உண்மைகளை எவரும் மறைக்கமுடியாது!) ஒன்றுந் தெரியாத மனிதர்களாக உலாவருவது எவ்வளவு கபடமானது!

நாம்,முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில்,சிங்கள அரசினது பாசிச இராணுவமானது எதுவுமே சரியாகத் தெரியாத பச்சைப் பாலகப் போராளிகளையெல்லாம் படுகொலை செய்தது. அந்தப் பாலகர்கள், வேள்விக்கு வளர்த்த கடாவாகப் புலி அமைப்பின் கட்டளைக்கமையப் போராடியவர்கள்.அவர்களே, சிங்கள இனவாதவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துள் கணிசமாக எதிர்ப்புக் குணாம்சமுடையவர்களாக இருந்தார்கள்.இவர்களே களத்தில் அநியாயமாகப் பலிகொடுக்கப்பட்டவர்கள்.அதுபோன்றே சரணடைந்தபோதும்,இத்தகைய கயவர்களால் காட்டிக்கொடுக் கப்பட்டுச் சித்திரவதைக்குட்பட்டுக் கொல்லப்பட்டவர்கள்.

ஆனால்,புலியினது பிரமுகர்களாக வலம்வந்த இந்தக் கே.பி. திருநாவுக்கரசு, கருணாகரன்,நிலாந்தன்,நடராஜ முரளிதரன் போன்றோர் இலங்கை அரசால் கண்டுகொள்ளாதவர்களாக விடப்படும் மர்மத்தைப் புரிவது கடினமானதா?

எனவே,இவர்களது தயவில் இலக்கியம்-ஜனநாயகம் வளர்ப்பதென்பது மீளவும் எமது மக்களை அந்நியச் சக்திகளுக்காகப் பலியாக்குவதாகவே எடுக்கப்படவேண்டும்!அதைப் பல முனைகளில் நிகழ்த்தும் விசும்பு நிலையுள் இவர்கள் இருக்கின்றனர்.

இவர்களது,இன்றைய குரல் மக்களது எதிர்ப்புணர்வை மீளத் தமது பக்கம் தொடர்ந்து தகவமைப்பதற்கே!இதன்வழி தொடரும் அந்நியச் சேவையை திறம்பட நடாத்தி முடிக்க முனையும் முரளிதரன் போன்ற பெரும் புலிப்பிரமுகர்களைப் பார்த்து " கேடு கெட்ட கயவர்களே" நமது மக்களைவிட்டு தள்ளிப்போங்கள் என்கிறேன்.

உங்களுக்கென்ன அருகதையுண்டு "ஜனநாயகம்-பன்முகத் தன்மைகள்" குறித்துப்பேசுவதற்கு?

உங்களது பாசிச அதிகாரம் சிதைந்து சின்னாபின்னமாகும் இந்தத் தருணத்தில் அரும்பும் மக்களது சுய மேலாண்மையைத் தொடர்ந்து அவர்களது குரலாக வெளிப்படுவதைத் தட்டிப்பறித்து உங்களுக்குள் உருவகப்படுத்தி, உங்களையும் மக்களது குடிசார் அமைப்புகளாக்கும் முயற்சியா இது?

நீங்கள் யார்?

மக்களையும்,அவர்களது குழந்தைகளையும் தொடர்ந்து "தமிழீழம்"சொல்லிக் கொலை செய்தவர்களல்லாவா?

இறுதிவரை மக்களைச் சுயமாகச் செயற்பட முடியாது தண்டித்த அராஜகவாதிகள் நீங்கள்!உங்களுக்கும் பன்முகத் தன்மைக்கும்,ஜனநாயகத்தும் என்ன தொடர்பு?

புலிப் பாசிஸ்டுக்காளாகிய உங்கள் அகராதியில், ஜனநாய வாடையே இல்லையே?

இரத்தம் படிந்த உங்கள் கரங்களையும்,பிழைப்பைக் குறித்தே இயங்கும் உங்கள் மூளைகளையும்,வஞ்சகத்தையே சுமக்கும் உங்கள் இதயங்களையும் காலம், ஒரு நாள் நிறுத்தியே தீரும்!

உங்களை,அநியாயமாகக் கொல்லப்பட்ட மக்களும்,உயிராயுதமெனக் கண்டிப்பாகக் கொலைக்கு அனுபப்பட்ட அப்பாவி இளைஞர்களது துஷ்ப் பிரயோகஞ் செய்யப்பட்ட உயிரும் சும்மா விடாது!அந்த ஆன்மா உங்களது பரம்பரைகளையே தண்டிக்க முனையும்.

இஃது, சத்தியத்தின்பார்ப்பட்ட வரலாற்று நியதி, முரளிதரன் நடராஜா!


ப.வி.ஸ்ரீரங்கன்
01.04.2012