Sonntag, November 23, 2014

இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்

மைத்திரிபால சிறிசேனவும் மேற்கும்: இரணில் விக்கரமசிங்கவைப் பிரதமாராக்கும்?

இலங்கையிலொரு ஆட்சி மாற்றம்:பொது ஜனாதிபதி வேட்பாளர் வடிவில்"அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்".

அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் அணிதிரண்ட இலங்கை ஆளும் வர்க்கங்கள் தற்போது மேற்குலக நவ லிபரல்களது "பொதுச் சொத்தைச் சூறையாடும் அழிவு" அரசியலுக்குடந்தையாக நகர்வது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானதாகவே மாறும்.இலங்கையிலுள்ள கடல் சார்ந்த வள நிலங்களைப் கைப்பற்றவும், அதுசார்ந்த வர்த்தகத்தை மேற்குலகத் தேசங்களோடிணைந்து கட்டமைக்கவும் தடையாகவுள்ள மகிந்தா அணி ஆளும் வர்க்க அதிகாரத்தால் பழிவாங்கப்பட்ட சிங்கள ஆளும் வர்க்க அணியானது போடும்"அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழித்தல்" என்ற வாதமானது மகிந்தாவினது குடும்ப ஆதிக்கத்தின் பின்னால் அணிவகுத்த தமது சக வர்க்கத்தை ஓரங்கட்டுவதற்கான தெரிவே அன்றி,மக்களது -பரந்துபட்ட மக்களது உரிமையின்பாற்பட்டதல்ல.
இன்றைய இந்நிலைமையை வெற்றியாகவுருவாக்கிய மேற்குலக அரசுகள் மற்றும் அவர்களது லொபிகள்   இலங்கைச் சிறுபான்மை இனங்களைக்கட்டயாமாக"இணக்க அரசியலுக்குள்"திணிக்கத்தக்க வன்முறைசார்-மற்றும் வன்முறைசாராக் கருத்தியல் வலுவைக் கொண்டியக்குகிறது.சிறுபான்மை இனங்களுக்கு முன் எந்தத் தெரிவுக்கும் தற்கொலைக்கானது.இணக்கமுற்றாலும் அல்லது ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இலங்கை அரசை எதிர்ப்பதும் தற்கொலையானது.இதைச் சாத்தியப்படுத்தவே புலத்தில் போலிப் புரட்சிகரச் சக்திகளை இலங்கை-இந்தியக்கூட்டு வளர்த்தெடுத்துப் புலி அழிவின் பின் தமக்குள் பல்வேறு வடிவுள் உள்வாங்கிவிட்டு "சமத்துவத்துக்கான" அரசியல்-புரட்சி பேசும் சூழலையும் அதுவே உருவாக்கியுள்ளது!.இந்நிலையில் "எதிர்கட்சிகள்" எனும் கோதாவில் மேற்குலக எடுபிடிக் கட்சியான யு.என்.பி போடும் "பொது ஜனாதிபதி வேட்பாளர்"என்பது இலங்கையின் ஆட்சி மாற்றத்தைக் [Regime change ]கோருவதே தவிர சட்டவாத அரசுக்குரியதான நெறிகளை மையப்படுத்திய அரசொன்றின் தேவையின் பொருட்டான மக்கள் நலன் குறித்த பொருளாதார மற்றும் அபிவிருத்திக்குரிய அரசின் வடிவத்துக்கானதல்லவென்பதைச் சொல்லியாக வேண்டும்.

புலிவழிச் செல்நெறியூடாக நிகழ்த்தப்பட்டத் "தமிழீழ"ப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னான இன்றைய இலங்கையில் கட்சிகள்,அணிகள்-அமைப்புகளது அணித் திரட்சியும் கூடவே, புதிய குட்டி முதலாளிய வர்க்கத்தின் முகிழ்ப்பானதும் அரச பாசிசப் போக்கை மேலும் நிலைப்படுத்தவேண்டிய தருணத்தைப் பிளவு பட்ட ஆசிய - மேற்குலக மூலதனத்தின் முரண்பாட்டில் தகவமைபதைத் தொடர்ந்து தூண்டுகின்றன.

இது ,தெள்ளத் தெளிவாகப் " பொது வேட்பாளரது முகத்துடன் " மேற்குலகக் கோரிக்கையாக இலங்கை மக்களது முகந்தாங்கும் அழகைக்  கவனியுங்கள்:

1. 100 நாட்களுக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றியமைப்பேன்.
2. ரணிலுக்கு பிரதமர் பதவி.
3. சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்
4.18 ஆவது திருத்தம் நீக்கப்படும்.
5. குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். கூடவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இடமளிக்கப்படும்.

* ரணிலுக்கு பிரதமர் பதவி.* [The Mont Pelerin Society- Influence:  Prominent MPS members who advanced to policy positions included the late Chancellor Ludwig Erhard of West Germany, President Luigi Einaudi of Italy, Chairman Arthur F. Burns of the U.S. Federal Reserve Board, and U.S. Secretary of State George Shultz. Among prominent contemporary political figures, former President Václav Klaus of the Czech Republic and acting politicians, such as former Prime Minister Ranil Wickremasinghe of Sri Lanka, former Foreign Secretary Sir Geoffrey Howe of the U.K., former Italian Minister of Foreign Affairs and Minister of Defence Antonio Martino, Chilean Finance Minister Carlos Cáceres, and former New Zealand Finance Minister Ruth Richardson, are all MPS members. Of 76 economic advisers on Ronald Reagan's 1980 campaign staff, 22 were MPS members.    ]

இன்றைய முரண்பாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்ப்பரசியலானது எப்பவும்போலவே ஆளும் அரசுக்கெதிரான கட்சிகளுக்குப்பின்னும் மற்றும் பெரும்பான்மைச் சமுதாயத்தின் ஜனாதிபதி மகிந்தா இராஜபக்ஷ வழி,பிளவுபட்ட இன அடையாளங்கள் வெளிப்பட்டு நிற்கும் புள்ளியில் மேற்குலக-ஆசிய மூலதனத்தின்பின் அணிவகுக்கும் சிங்கள-தமிழ் ஆளும் வர்க்கம், இலங்கையில் ஜனநாயகத்தை மறுத்து நிற்கும் தெரிவில் இலங்கையின் அரசியல் எதிர்காலம் சிறுபான்மை இனங்களை வேட்டையிடப்போகிறதென்பதற்குப் புலம்பெயர் தமிழர்களின் மத்தியில் நிலவும் அணிச் சேர்க்கை மற்றும் லொபி அரசியலும் அதுசார்ந்த எதிர்ப் புரட்சிகரவாதிகளான முன்னாள் இயக்க வாதிகளும்,புலிப்பினாமிகளும் இலங்கையின் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தோடு ஒத்த அரசியல் புரிவதுகூட ஏலவே தயாரிக்கப்பட்ட நிகழ்சி நிரலுக்குட்பட்டதாகும்.இது,அபாயகரமான அரசியல் மற்றும், இயக்கப் போக்கை இலங்கையின்  குறை ஜனநாயக விருத்துக்குக்குறுக்கே நின்றாற்றும் இயக்க-கட்சிவாத அரசியலானது இலங்கையின் பெரும்பகுதி மக்களது உரிமைகளுக்கு நிச்சியம் பங்கஞ் செய்தே தத்தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்கிறது.

குறிப்பாகச் சிங்கள இனவாதத்தாலும்-ஒடுக்குமுறையாலும் தொடர்ந்து பாதிக்கப்படும் இலங்கைச் சிறுபான்மையினங்கள் தம்மைத் தொடர்ந்து பலியாக்கும் அரசியலைத் தத்தமது தலைவர்களதும்-கட்சியினதும் நலனுக்கான தெரிவின்வழி பெறுகின்றனர்.இதற்கான மாற்றுப் பற்பல முரண்பாடுகளால் பிளவுண்டு சிதைக்கப்பட்ட இன்றைய இருண்ட சூழ்ச்சி அரசியலுள் மேலுஞ் சிதறுண்டு உதிரிகளாக்கப்பட்டுள்ளது என்றே நமது மனவூக்கமும்,உணர்வும்-அறிதிறனுஞ் சுட்டுகிறது. இதன் அறுவடை மெல்லவுணரப்படுந் தருணத்தை நிலத்தில் அணித் திரட்சியாகும் சூழலோடு உணரத்தக்கதே.அதன் மறுவினையாற்றலைப் புலம் பெயர் வாழ் சூழலில் நமக்குள் உய்துணரமுடியும்.


இந்த உளவியலின் பொருட்குவிப்பூக்க அரசியல் மற்றும் அதுசார்ந்த வன்முறைசார்ந்த தந்துரோபாயத்துக்குட்பட்ட இராணுவ ஆதிக்கத்தின் விருத்தியானது, எங்ஙனம் இனிவரும் இலங்கையில் ஜனநாயக நெருக்கடியாக எழும் என்பதன் உச்சம்,அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையின் பின்னால்திசை திருப்பப்பட்டு அது இலங்கையிலொரு ஆட்சி மாற்றத்தை இன்றைய உக்கிரைன் பாணியில் தகவமைக்கக் காத்திருக்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்

22.11.2014

Samstag, Juni 21, 2014

தேவதாசன் இனவாதப் பொது பல சேன ஞானசாகரா "தேரோ"வுடன்...

"தேவதாசன்-இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி"  குறித் துச் சுவிஸ் இரவியின்  கருத்தின் மீதான சில,  கேள்விகள்.

லங்கை தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் தேவதாசன் இனவாதப் பொது பல சேன  ஞானசாகரா "தேரோ"வுடன் நிற்கும் படத்துக்குச் சுவிச்சர்லாந்து இரவி அவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.கீழே அவரது கருத்தை வாசிக்கலாம்.

கிட்டத்தட்ட இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணியினரை சிறு பிள்ளைகளாகவும்,அரசியலில்"வஞ்சகம்"அற்றுச் செயற்படுவதுமாகக் காட்டிவிடும் இரவி அவர்கள், இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணித்  தலைவர் தேவதாசன் மற்றும் கிழக்கு மாகாணசபைப் பேச்சாளர் ஞானம் போன்றோரது அரசியல் மற்றும் அதுசார்ந்த நகர்வுகள் குறித்தும் இத்தகைய கருத்தோடுதாம் இருக்கின்றாரா?

கடந்த பல தசாப்தாமாகச் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்குட்படும் இலங்கைச் சிறுபான்மையினங்களது  அரசியல் பிரச்சனையுள் மிக நேர்த்தியாகக் குழிப்பறிப்புகளைச் செய்யும் அரசியற் தந்திரத்தை இவர்கள் செப்பனவே செய்து வந்திருக்கின்றனர்.தேவதாசன், ஞானம் போன்றவர்களும்,நிர்மலா -இராகவன் , கீரன் குழுக்களுமாக இலங்கை அரசைச் சார்ந்து மக்களை அண்மித்தபோதெல்லாம் இலங்கைப் பாசிச மகிந்தா அரசை சனநாயக அரசாகவே பேசியும் -எழுதியும் வந்தனர்.




இவர்கள்தாம் முள்ளிவாய்க்கால் அழிவுக்குப் பின் சில மாதங்களில் (டிசெம்பர் 2009 இல்)யாழ்ப்பாணஞ் சென்று மகிந்தாவுக்கு நன்றியும் ;இலங்கையில் சமாதானம் -சனநாயகம் மலர்ந்துவிட்டதென்றும் , "தமிழர்கள் தமிழ் தேசியவாதத்தையும் ;   தமிழர்கள் எனும் உணர்வையும் "விட்டொழித்து, "நாம் அனைவரும் இலங்கையர்கள் "என்றுணர்ந்து ,இலங்கையை முன்னேற்ற வேண்டுமென்றனர்.

கிழக்கு மாகாணத்தைப் பிளந்தெடுத்து , அதைச் சிங்கள -இந்திய அரசுகளுக்குடந்தையாக மாற்றும் தந்திரத்துள் இவர்கள் முன்வைத்த "யாழ் மேலாதிக்கம்-மையவாதம்;யாழ்ப்பாணியம் -வேளாளியம் " போன்ற அரசியற் கருத்தாக்களின் பின்னே நிகழ்த்தப்பட்ட பிளவுவாத அரசியலின் வினையென்ன?

கிழக்கு மாகணத்தைப் பிளந்த கையோடு திருவாளர்கள் ஞானமும் , தேவதாசனம் கிழக்கு மாகாணத்துள் பிரவேசித்துப் பிள்ளையானை அணுகிச் சென்று செய்த அரசியல்பின்  "ஆய்வுகளை முன்வைப்பது"கோமாளித்தனமாகுமாகுமா இரவி?

இந்திய -இலங்கை அரசுகளது கயமைத்தனமான பிளவுவாத அரசியலுக்குப் பக்கப் பலமாகவிருந்து, அரசியல் செய்யும் இத்தகையவர்களைக் குறித்து இரவியின் இந்தப் பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது?இது புலிகளைத் "தேசியத்தின் பெயராலும் -அவங்கள் போராடுகிறான்கள் " என்று கண்மூடித்தனமாக ஆதரித்த மன நிலைக்கு ஒப்பானதில்லையா?




இவர்கள்  எங்ஙனம் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்தை மறுத்து மகிந்தாவின் தலைமைக்காக மக்களைப் பிளந்தார்களோ அதேயளவு மூர்கத்தோடுதாம் தமிழ்பேசும் மக்களைப் பிரதேச -சாதிய ரீதியாகப் பிளந்து இந்திய -இலங்கையின் அரசியற் சூழ்ச்சிக்கேற்பக் கருத்தாடினார்கள்.

இவர்களின் பின்னே மிகக் கெடுதியான அரசியல் சக்திகள் ஒழிந்திருந்தபடி இவர்களை வைத்து நகர்த்திய -நகர்த்தும் அரசியலானது புலத்தில் அநியாயத்துக் கு "மாற்றுக் கருத்தாளர்களையே" கருத்தியல் ரீதியாகவும்,செயற்பாட்டு ரீதியாவும் இலங்கைப் பாசிசத்தை நியாயப்படுத்தும் நிலைக்குத் தள்ளினர்.

இதன் பின்னால் இருக்கும் அரசியலை தள்ளி வைத்துவிட்டு, முகத்துக்கஞ்சி அவர்களை நியாயப்படத்தவே முடியாது.இவர்கள் தெளிவான அரசியல் இலக்குடையவர்கள்.அதையவர்கள் இதுவரை சாதித்தே வருகின்றனர்.இந்த அரசியல் ,பெரும்பான்மைச் சிங்கள இனவாத அரசியலுக்கும் ;இந்தியப் பிராந்திய அரசியல் நலனுக்கும்  உடந்தையானதென்பதே உண்மை!

இதை மறுப்பதுள் , இவர்களை முன்வைத்து  எந்தத்தெரிவுகளையும் வெறும் " மனவோட்டமாக" ச் சித்தரிக்க முடியாது இரவி.

இது ஆபத்தானது!

இவர்கள் எடுத்த முடிவும் -அரசியற்றெரிவும் தமிழ் பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையையே சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது.கருத்தியற்றளத்திலும் -அரசியல் கட்சி -அமைப்பு நகர்விலும் இவர்கள் மகிந்தா அரசினது அனைத்துப் பரிணாமங்களையும் ஆதரித்துப் பிரச்சாம் செய்து, தமது அரசியலை நகர்த்துபவர்கள்.

ஒருவகையில் இலங்கை -இந்திய அரசியல் லொபிகளால் வழி நடாத்தப்படுபவர்களென்பதை மறுத்து, இவர்களைக் காப்பது மீளவும் ,யாழ்ப்பாணஞ் சென்று "முசிலீம் மக்களை அரசு தாக்கவில்லை, அதை வைத்து அரசைப்பழி சுமத்தமுடியாது எனவே நாம் அனைவரும் முசலீம் -தமிழர்கள் என்பதைவிட இலங்கையர்களாக வாழும்போது இத்தகைய இனக்கலவரங்கள் நடக்காது " என்பார்கள்.

இதுதாம் இவர்களுக்கு இலங்கை அரசு சொல்லி க்கொடுத்து வகுப்பெடுக்கும் அரசியல் என்பதை புரிவதிற்றாம் எத்தனை சிக்கல்கள் இரவி?

-ப.வி.ஶ்ரீரங்கன்
21.06.2014

பின்னிணைப்பு: இரவியின் குரல் ! :

Ravindran Pa : இந்தப்படம் படாத பாடுபடுகிறது. இதில் நிற்பவர்கள் பிரான்ஸ் தலித் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சு நடத்தக்கூடியவர்களோ அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக துரும்பைத்தன்னும் அசைக்கும் மனவுணர்வு கொண்டவர்களோ அல்ல. இவர்களுடன் அரசியல் ரீதியில் முரண்பாடு கொண்டவன் நான். ஒருபோதும்; எதிர் விவாதங்களுள் எதிரியாக மாற்றப்பட முடியாதவர்கள். தலித் மனநிலை சார்ந்து இந்து மதத்தின் சாதிய உள்ளடக்கத்தை எதிர்த்து பௌத்தத்தை ஒரு எதிர்மறுப்பாக முன்நிறுத்துபவர்கள்.
இன்னொருபுறம் புலியெதிர்ப்பு வாதத்துள் முடங்கிப்போனவர்கள். அதற்குள்ளிருந்தும் யாழ் மேலாதிக்க வாதத்துள்ளிருந்தும் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் கண்டடைந்தவர்கள் என்ற விமர்சனம் உண்டு. மறுத்தோடல், கலகம் என்பதெல்லாம் அவர்களிடமிருந்து அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள். (இதன்மூலம் தம்மை கவனப்படுத்த முனைபவர்கள் என்ற அவதானமும் என்னிடம் உண்டு.)
அவர்களின் தடாலடியான எதிர்மறுப்பு மனவுணர்வு இந்தப் புகைப்படத்தை தாமே முன்னர் இடையிடையே வெளியிட்டு கொண்டாட வைத்ததுதான் நடந்தது. அது இப்போ வினையாக வருகிறது. இதை யாரும் கண்டுபிடித்து பிரசுரித்ததாகவும், அவர்கள் பொதுபல சேனாவுடன் இரகசித்தார்கள் என்றெல்லாம் கண்டுபிடிப்பை நடத்துவது புலனாய்வு நடத்துவது கோமாளித்தனமானது. தடாலடிகள், கண்மூடித்தனமான எதிர்மறுப்புகள், அரசைப் பற்றிய போதியளவு வெளிப்படையான கறாரான விமர்சனங்களை வைக்காமை, விட்டுக்கொடுப்புகளுடன் நடந்துகொள்ளாமை (முக்கியமாக இலக்கியச் சந்திப்பின் சிதைவை கணக்கிலெடுக்காமல் போனதுக்கும் இந்தவகை மனவோட்டம்தான் காரணம்) என்பன பற்றி வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர்கள் அரசியல் பக்குவத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற செய்தி முக்கியத்துவம் பெறுகிறது என நினைக்கிறேன்.

Donnerstag, Juni 19, 2014

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?


(1)

ப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.


இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் "பௌத -இஸ்லாம்"மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.


இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.





இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்
Raman Yogaratnam Asura Nathan Theva Thasan


இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும்  மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த "நாம் அனைவரும் இலங்கையர்கள்" தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி "பாசிசப் புலிகளை"அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.


இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து  செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.


இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!


சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.


இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!


பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.


இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?


இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!


இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு  கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?



இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து"அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை"எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!






இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி...

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...


இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள  மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது "தற்செயலான வன்முறைக்கு"ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட - உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத  தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்  பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின்  பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து  அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி"மக்கள் எழிச்சி" ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் "மார்க்சிய" நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:"இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்." என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே  அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக்  கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய "இனங்களுக்கிடையிலான ஐக்கியம்" இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more ... : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச்  சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட  தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.06.2014

Samstag, Mai 17, 2014

இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்

புதிய பிரதமர் மோடியை வாழ்த்துவோம்;வரவேற்போம்!

ன்றைய உலக அரசியல் நிலைமையை நினைக்க மிக அச்சமாக இருக்கிறது. எதிர்கால வாழ்வும்-சாவும் மிகக் காட்டு மிராண்டித்தனமான அரசியல் வாழ்வோடு மல்லுக்கட்டும் இந்தியாவை நாம் பார்க்கப் போகிறோம்.இந்திய மாநிலங்களில் ஒவ்வொரு குயராத்துக்கள் உருவாகுமென்பது அங்கே 3000 முசுலீம்களது சாவின் தொடர்ச்சி என்று புரியப்பட வேண்டும்.இந்தியத் தேசமானது  மேலும் மத ரீதியாகப் பிளவுபட்ட இந்தியாவாக உருவாகுவது பார்ப்பனியத்தின் இருப்புக்கும் அதிகாரத்துக்கும் அவசியமானது.அதை அது சாதித்துவிட்டது. சனநாயக சூழலது நிர்ணயிக்கப்பட்ட  ஒழுங்கு[waves of democracy ] விலத்தித் தற்செயலாகவுருவாக்கப்படும் ஒடுக்குமுறை அலகுகள் சட்டமாகவும்;அதிகாரக் கருதியலாகவும் வன்முறை சார்ந்தும்-சாரமலும் ஒவ்வொரு கணமும் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு இது சாத்தியமாகிறது.

தன்னை அழிப்பதற்குத் தானே முனைதலென்பதைத் "தற்கொலை" என்போம்!

கங்கேரியில் [Hungary ]சிறுபான்மையினங்களை அழிக்கும் விக்டர் ஓர்பானுக்குப் [Viktor Orbán ]பரந்துபட்ட மக்களது ஒப்புதல் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறது மீளவும்.பிரான்சில் பரந்துபட்ட மக்களது ஒப்புதலோடு அடுத்த சனதிபதியாக வருவதற்கான அனைத்து ஒப்புதலும் பெற்று வருகிறார் மாரி லீபென்[ Marion Anne Perrine Le Pen ].யேர்மனியில் ஓல்ரனற்றி பூர் டொச்லாந்துக் [Alternative für Deutschland (AfD) ]கட்சியின் அலை அவர்கள் பாராளுமன்றஞ் செல்லும் வழியைத் திறந்துவிட்டுள்ளது.இந்த நாசிய அறிவுசீவிக் கூட்டம் இந்தியப் பார்ப்பனியத்தின் வீச்சுக்கு நிகரானது.இவ்வளவு தூரம் பரந்தபட்ட மக்களிடம் இவர்கள் பெற்ற -பெறும் செல்வாக்குக் காரணமென்ன?




கடந்த 30 ஆண்டுகளாகக் கூட்டாட்சிக்குள் தொங்கிய இந்திய பாராளுமன்றக் கட்சியாதிக்கமானது நேற்றோடு முடிவுக்கு வந்து தனித்தவொரு கட்சியின் ஆதிக்கத்தை செழுமையாகப் பார்ப்பனியத்தின் அதீதப் பரப்புரை வளர்த்துச் செழித்து வாழ வழி திறந்துவிட்டுள்ளது.பார்பனியப் பரப்புரையைத் தமது நலத்தின் பிரதான வலுவான அரசியலாகவுணர்ந்துகொண்ட பல்வேறு ஆளும் வர்க்கமானது பரந்தபட்ட மக்களைத் தமது வலையில் இலகுவாக வீழ்த்திய காரணி என்ன?இதன் காலவர்தமானது மிக நெருக்கடியானவொரு அரசியல் -பொருளாதாரச்சூழலைத் தகவமைக்கும்.இதன் பல்வேறுவகைப்பட்ட தாக்கமானது இந்தியாவில் தீண்டத் தகதவர்களாகப்பட்ட 240 மில்லியன்கள் தொகைகொண்ட உழைக்கும் விளிம்பு நிலை மக்கள் கூட்டத்தின் அடிப்படையான உரிமைகள் அனைத்தையும் இல்லாதாக்கும் ஒரு மோடியை , 3000 முசுலீம் மக்களது குயாரத்துப் [Gujarat ]படுகொலையை அங்கீகரித்து இந்தியத் தலைவராக்கிய பெரும்பான்மை மக்களது இந்தத் தீர்ப்பானது வெறும் காங்கிரசு எதிர்ப்பலையாகக் காணுவது அரசியல் விவேகம் இல்லை!

இது திட்டமிடப்பட்ட  பரப்புரைகளது அதீதக் கருத்துக் கட்டமானத்தின் வெற்றி.பரந்தப்பட்ட மக்களது சமூக நலன்களது தெரிவில் மிக வியூகமாகக் கருத்துப் பிணைந்து தத்தமது இலக்கை அடையவிரும்பிய ஆளும் -அதிகார வர்க்கமானது தமது வர்க்க நலன்களை அறுவடையாக்கும் ஊடகங்களின் தனியுடமை அதிகாரத்தின்வழி தம்மைத் தயார்படுத்திக் கொண்டு புதிய நகர்வை பணப்பலத்தோடு சாதித்துள்ளது.இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை விலைபேசி வாங்கிய கட்சிகள் கொட்டிய பணம் பல இலட்சம் கோடிகளைத்தாண்டும்.அவ்வளவு பெரும் பணத்தை முதலீடு செய்த கட்சிகள் இந்தப் பாராளுமன்ற சனநாயகத்தின்வழி அறுவடையாக்கும் அரசியல்தாம் என்ன?

இனவாதம்;சாதியவெறி கொண்டு மக்கள் - இனங்களைப் பிளந்து குருதி உறிஞ்சும் இந்தப் பார்ப்பனிய அரசியல் ஆதிக்கமானது சட்டரீதியான அங்கீகாரத்தோடு அடுத்த 5 ஆண்டுகளைப் பார்பனிய -பனியாச் சாதிகளது பகாசூரக் கம்பனிகளுக்கு இந்தியாவை ஏலத்தில் வீழ்த்தி விட்டுள்ளது.

இது பரந்து பட்ட மக்களது அங்கீகாரம் பெற்ற நிலையில் ஆடப்படப்போகும் நர்தனமானது இந்தியாவை மேலும் சனநாயத்தன்மையற்றவொரு கற்கால இந்தியாவாக்குமென்றெல்லாஞ் சொல்லேன்.மாறாக, இது காலனித்துவக் காலத்துள் பெறப்பட்ட பெறுமானங்களை மீள் நோக்கி அனுபவிக்கப்போகும் பரந்துபட்ட மக்களது அழு குரலாகவே வெளிப்படுமென்கிறேன்.

உள்ளக் கலனியமாக [Internal colonialism ]இருந்துகொண்ட பார்ப்பனிய ஆதிக்கமானது தன்னைச் சட்டரீதியாகவே "அரச ஆதிக்கமாக" உருவாக்கிக்கொண்டுள்ளது. இது பல்வேறு வகையினுள் நகர்த்தும் அரசியல்  இந்தியப் பொருண்மிய வாழ்வில் மட்டுமல்ல அதை அண்டியுள்ள பல்வேறு தேசங்களது சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பார்ப்பனியங் கொண்டுள்ள இந்த அரசியல் அதிகாரமானது BJP யின்  அடியாட்படையை [Rashtriya Swayamsevak Sangh  ]பல்வேறு மட்டங்களில் விரிவுப்படுத்தும் அதிகாரமாகப் பார்ப்பனியம் ஆயுதம் தரிக்கும்.இதன் வளர்ச்சி ஏலவே பேசப்பட்டதாயினும் மோடியின் வெற்றியென்பது தனிப்பட்டவொரு நபரதோ அன்றிக் கட்சியினதோ வெற்றியள்று.இந்த வெற்றி பார்ப்பனிய ஆளும் வர்க்கத்தின் வெற்றி -அதனோடு சமரசமான உலக மூலதனத்தின் வெற்றி.

இது[16th Lok Sabha ] பாரம்பரிய இந்தியத் தேசத்தின் அனைந்து வளங்களையும் சட்டரீதியக் கொள்ளையிடும் ஒரு கூட்டத்தின் கைகளில் அனைத்து அதிகாரத்தையும் வழங்கியுள்ள தேர்தலாகவே இந்தத் தேர்தல் வரலாற்றில் பதியப்படும்.

ப.வி.ஶ்ரீரங்கன்
17.05.2014

Sonntag, Februar 23, 2014

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு...

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.


கோடைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் "திறவுகோல்" தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை"தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?"என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.

இதிலிருந்து:

நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.

நல்லது!

எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?

- தமிழீழமா?,

- வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?

- ,இலங்கை அரசால் "பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு" தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,

- இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?


! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?



?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?

உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா?




திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.


இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.


இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான "மக்கள் நலன்"சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும்  தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்"தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்"மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?


இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.


எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:


முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம்.


புலம்பெயர்  தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி  மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் - கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின்  இக்கட்டான பௌதிக மற்றும்  உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.



புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி " இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும்  சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.

நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க  முடியுமா நிலாந்தன்?


புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்" கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன .



மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!


இங்கே பிரச்சனையானது,  தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.

அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும்  இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.



யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக்  கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.


இறுதியாக...

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
23.02.2014
ஜேர்மனி

Dienstag, Februar 11, 2014

"எதுவரையில்?" தொடரும் எனது விவாதம் : 3

திரு.சிவலிங்கம் அவர்கள் எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.

இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் "இந்த"  அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது  Regime change  என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் "மக்கள்"போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் "எழுச்சி"யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் "மக்கள் திரள்"போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.

நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து  மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம்  [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய "எழுச்சிகளை"நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University
of Peredeniya  ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) "Participating Faculty Members " கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer,  Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர்  ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான  Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு  என்ன சிக்கல் ?

இது,சதி நிரம்பிய காலம்.

இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் "The Center for Applied Nonviolent Action and Strategies " என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.

மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்]  சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].

இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!

இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?

 இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.

ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.

 இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006)  ] அதைத்  துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.

அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம்  நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள்  அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள்  சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic)  ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்...

ப.வி.ஶ்ரீரங்கன்
10.02.2014

Sonntag, Februar 09, 2014

வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

"எதுவரையில்?"  தொடரும்  எனது விவாதம்...

ழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம்  வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை  அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட  நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு "பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்" என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?






அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்"நல்ல மனது"க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள  மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.


"பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து" தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?





இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?

இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது  இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த  அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.


இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS  ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation  ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும்  இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்"பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்"முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?

தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.2014

வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்…

ண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? என "எதுவரை?..." இணையவலைஞ்சிகை கேட்டிருக்க ,நானும் கீழ்காணும்  எதிர்வினையொன்றை அதற்கு எழுதியுன்ளேன்.

கருத்துக்களை வரவேற்று ,ஆரோக்கியமானவொரு உரையாடலை நோக்காகக்கொண்டதென்ற தொனியைப் பரவலாக்கும் இந்த வட்டத்திலிருந்து எனது எதிர்வினை இன்னும் வெளி வரவில்லை.

இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே!

ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத்  தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.இங்கு ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதயைப் பாதுகாக்க  இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை  உருவாக்கியுள்ளது.

இது, அனைத்துச் " சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் " கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization  ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.





இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்;மந்திரிகள்;இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.

இதைவிட்ட அனைத்தும், அதாவது "நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

 UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

 இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!

தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும்  முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் - மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society  ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?

ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!

மேற்குலக - ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.14

Sonntag, Januar 12, 2014

இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!

இலீனா மணிமேகலைக்கான "கூட்டறிக்கை" : சில கருத்துக்கள்!


நியாயம் கேட்டல்-மன்னிப்புக் கோரல் மற்றும் "கூட்டறிக்கை"  என்ற பெயரில் தொடரும்  இலீனா  மணிமேகலை முகந்தாங்கும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் வன்முறை குறித்து,  உணருவதுள் பல தடுமாற்றங்கள் -தப்பித்தல்கள் ஒவ்வொருவர்தம் நியாய தர்மத்துக்குட்டதே.அதை ,உடைத்துப் பார்ப்பதில் எமக்கெந்தத் தடுப்பும்  இல்லைத்தானே?

“எதிர்ப்பரசியல் படம்”காட்டும் லீனா மணிமேகலையின் உடலில் சிறு துரும்பு  உட்கார்ந்தாலும் அதை தட்டித்  தூய்மைப்படுத்தப் புலத்திலொரு கூஜாத் தூக்கிக் கூட்டத்தையும் தயாரித்த பின் இந்தியப் பிராந்திய நலனின் அரசியலானது  மீள மீளத் தகவமைக்கும் கருத்தியல் வன்முறையானது மாற்றுக் கருத்து நிலைகளைத்தாண்டிச் சுயாதீனமான கருத்து -விமர்சன முகிழ்ப்புகள்மீது தொடர்ந்து விசத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறதென்றுந் திடமாக நம்பித்தாம் தீரவேண்டுமென்போம்!

இந்தியத் தரகு முதலாளியத்தின் நலன்சார் கருத்துக்கள் -லொபி முகாங்கங்கள் எனப் பல இரூப இயக்க வெளிகள் அம்பலப்பட்டுப்போகும் போது தமது முகவர்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் ஒரு அரசியல்-கருத்தியல் வன்முறையாக "இஃது" ,தொடருவதை இலீனா மணிமேகலையது அரசியல் நகர்வில் புரிந்துகொள்ளமுடியும்.இலீனா மணிமேகலையின் தொடர் குறும்படத் தகராறுகள்  ,அதுசார்ந்தெழும் விமர்சனங்களானது அவரது படைப்பாளுமையின்மீதான விமர்சனமின்றி அஃது ,அவர் தொடந்தியக்கும் அரசியல் -வர்க்கச் சார்வுமீதானதாகவே இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் வழியாக இயக்கிவரும் இந்திய ஆளும் வர்க்க அரசியல் சூழ்ச்சி தத்தமக்கான அணிகளைத் திரட்டிக் கூட்டறிக்கை தயாரிப்பதைப் பல வழிகளில் பார்த்ததாகிறது.இந்திய ஆளும் வர்க்க நலனது தெரிவுகள் பல.அவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்திய ரோவினது கண்காணிப்பின் கீழ் முகாந்திரமிடப்படுவதும் அத்தகைய முகாந்திரத்துக்குத் தோதான தனிநபர்களைத் தெரிவுக்குட்படுத்தி ,இயக்கி வருவதையும் நாம் ஏலவே ஈழப்போராட்டத்துள் பார்த்தோம்.

அன்று ,"ஈழப்போராட்டத்தை " மொத்துக் குத்தகைக்கு எடுத்து அதைப் பரவலாகச் சிதைத்த இதே இந்திய ஆளும்வர்க்க நலனானது இன்று, சுயானதீனமாகத் தமது பரப்புரைப் பீரங்கிகளுக்கெதிரான கருத்து வெளியைச் சுருக்குவதிலும் அதைத் தொடர்ந்தழித்து விடுவதிலும் பல வடிவங்களில்  முகவர்களை வைத்து இயங்கிவருகிறது.இந்த தெரிவுகளைப் புரிந்துகொள்வதில் சற்றேனும் தப்பு ஏற்படுந் தறுவாயிற்றாம் நாம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோமெனச் சொல்கிறோம்!சமீபத்துள் ,நிர்மலா அம்மையார் தயாரித்து 71 நபர்கள் கையெழுத்திட்டு வெளியாகிய அறிக்கைக்கும் ,இந்த இலீனா மணிமேகலைக்கான தார்மீக நியாயம் பகரும் "கூட்டறிக்கை"க்கும்  இடையிலான  மிக நுணுக்கமான அரசியலைச் சரிவரப் புரிந்தாகவேண்டும்.






இவர்களால் (கூட்டறிக்கைக் கையெழுத்துத் தோழர்கள்)தொடந்து பரப்புரையாகும் கருத்துக்கள் -காட்சி வடிவங்கள் -படைப்புகள் யாவும் , இந்திய  ஆளும் வர்க்கத்தினது நலனைத் தமிழ் பேசும் இலங்கை மக்கள்மீது மட்டுமல்ல தமிழக மக்களது அரசியல் -வாழ்வாதாரத்தின் மீதானதாகவும் தெரிவுகள் பன்முகப்பட்டுத் தாக்கிவருவதைப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் -வெளியீடுகள் -கூட்டங்கள் மற்றும் ,சந்திப்புகள் வழி நாம் மிக நேர்த்தியாகவுணரும்போது அதை மறைப்பதற்கெடுக்கும்  முயற்சியே இந்தக் "கூட்டறிகை" மற்றும் மறுப்புப் போராட்டம் -நியாயம் கோரும் குரல் அரசியலாக மேலெழுகிறது.இஃது, நம் எல்லோரையும் கோதாவில் இறங்கக் கோருகிறது.

இலீனாவுக்குள் இயங்கும் அரசியலை மறுத்துவிட்டு அவரைத் தனிநபராகவும் , அவர் முன்வைக்கும் படைப்புகள் "யாவும் " அவரது சுயாதீனத்தினதும் ,தனிப்பட்டதுமாகக் கற்பிக்கும் அரசியல் மிகப் பெரும் ஆபத்தானது.இது, சூட்சுமாகத் தாக்கும் வலுவோடு எழுத்துப் படைப்பாகவும் -காட்சிக் கோர்வையாகவும்  ஒளிச் சட்டகத்துள் நிகழ்த்தப்படுகிறது.சமீபத்துள் ,இந்தியத் தரகு முதலாளியத்தின் "இயற்கை வளத் திருட்டுக்கு" த் தோதாகத் தனது கலையனுபவத்தைக் காட்சியாக நம் முன் இயக்கிக் காட்டியவர் இலீனா மணிமேகலை என்பதை நாம் மறக்கக் கூடாது.அவர் இந்தியப் பழங்குடி மக்களது "வாழும் வலயத்தை"  நிர்மூலஞ் செய்யும் தரகு முதலாளிகளது நலனைப் பழங்குடிகளது முன்னேற்றமாகக் காட்சிவழி மனிதர்களது விழிகள்முன் வைத்தவர்.இத்தகையவொரு அரசியலது சூட்சுமம் மிக நேர்த்தியாக , இந்தியப் பிராந்திய மக்களது அனைத்து வாழ்வுப் பரிணாமத்துள்ளும் மிக மிலேச்சத்தனமாகவும் -நுணுக்கமாகவும் சில -பல பிரபல்யங்கள்வழி இயக்கப்படுவதன் தொடர்ச்சியே இன்று, நம்முன் கருத்தியல் வன்முறையாகவும் - பௌதிக இருத்தலை அச்சப்படுத்துகிறது.

இது கோரிக்கொண்டிருக்கும் நியாயம் என்பது, படைப்பின் சுதந்தரமல்ல. மாறாக, இந்தியத் தரகு முதலாளியத்தின் மாறிவரும்  நலன்களைக் காத்துக்கொள்ளும் பரப்புரைப்போராட்டமே இத்தகைய அரசியல் வெளியைத் தொடர்ந்து தோற்றுவிக்கிறது.எதுவெப்படியோ ,  இத்தகைய அரசியல் சூழ்ச்சி ,அமுக்கமாக இயக்கப்படும்போதும்  புலத்தில் தொடர்ந்து கட்சி கட்டிக் "கூட்டறிக்கை" கையெழுத்து அரசியலுக்குள் தலைகாட்டும் நபர்கள் ,தத் தமது சொந்த நலன்கள் -தமிழகத்துள் தமது எழுத்துக் குப்பைகளைப் பதிப்பிக்கும் நகர்வுகளுக்கு இடைஞ்சலற்றவொரு அரசியற்றெரிவில் "ஏன் -எதற்கு "என்ற விசாரைணயைப் பொது வெளியில் ஒத்தி வைத்துவிட்டுக் கையெழுத்துப் போடுவதில் தமது நலன்களைக் காக்க முனைகின்றனர்.இந்தச் சிறுமைத் தனமான செல்நெறியானது இந்திய ஆளும் வர்கத்தின் பரப்புரை -கருத்தியலைத் தொடர்ந்து ஒடுக்கப்படும்  மக்கள்மீது  அவர்களது  நலனாகப் பிரகடனப்படுத்தி இந்திய நலன்களைத் தொடர்ந்து சிதையவிடாது காத்து வருகிறது.

இது, அராஜகம் -அடக்குமுறை -பிளவுவாத அரசியல் மட்டுமல்ல.இது இந்திய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து கருத்திலாக உருவகப்படுத்தி நமது சிந்தையிற் தோற்றுவிக்கும் ஒரு லொபி நிலை மனதை உருவாக்க முனைகிறது.இதை ,உடைத்துப் பார்க்கும் திறனை இது பல முற்போக்கான கோரிக்கைகளின்வழி(தலித்துவ விடுதலை -பெண் விடுதலை-சூழற் பாதுகாப்பு-பன்முகக் கருத்து-சனநாயகம்  என்ற  கோரிக்கை ;போராட்டம் வழிகளில் ) செயலற்றதாக்குகிறது.இதுவொரு வகையிற் எதிர்ப்புரட்சிக் குணாம்சத்துக்குட்பட்டதே!;இங்கு, முற்போக்கு முகமூடிபோட்ட மனிதர்களைப் பல  இரூபங்கிளில் எழுத்தாளர்களாகவும் -கவிஞர்களாகவும் -சினிமாக் கலைஞர்களாகவும் மட்டுமல்ல கட்சித் தலைவர்கள் -போராட்ட அமைப்புகளது களப் போராளிகளாகவும்  கூடவே நேர்மையான புரட்சிகரவாதிகளாகவும் ஏன் ,நக்சலைட் போராளிகளாகவும் கூட நம் முன் இவர்கள் தலை காட்டுவார்கள்!






இவர்களை இனங்காணும் -இதற்கு மாற்றான - அனைத்து, அரசியல் முகிழ்ப்பையும்  கருக்கிவிடுவதில் புலத்திலுள்ள பிழைப்பு வாதிகளையும் -நிலத்திலுள்ள(தமிழகம் -ஈழம்) தொழில்முறைத் தேர்ச்சியுடைய இந்திய ரோவினது முகவர்களையும்  ஒரு தளத்தில் வைத்து  இயக்குவதில் இந்திய ரோவின் வெற்றி அபாரமானது.

இது  "ஈழப்போராட்டத்துள்" முன் வைத்து இயக்கிய  அதே சாணாக்கியத்தோடுதாம் தற்போதயை தமிழக -ஈழச் சமூக வெளியுள் பரப்புரைப்  படைப்பு வெளியைக் கைப்பற்றி, இயக்கி வருகிறது.இங்கே , பார்ப்பனியம் பின்னுக்குள் தள்ளப்பட்டுத் "தனிநபர் விடுதலை ,தலித்துவ விடுதலை -பெண் விடுதலை -சூழற் பாதுகாப்பு " எனப்  பன்முகப்பட்ட தெரிவுகளோடு இது, களம் இறங்கியுள்ளதென்பதைத் தெளிவாகப் புரிவதே நமது காலத்தின் மிக அவசியமான பணி.இதை, உணராதவரை இவர்களது "கூட்டறிக்கை"ப் போர்கள் பல வர்ணக் காகிதத்துள் பதிப்பிக்கப்படுவதில் பௌதிகரீதியாகக் குருதியில் நனைக்கப்பட்டும்  சிகப்பு வர்ணம் புரட்சியாகப் பேசப்படும்!.

ப.வி.ஶ்ரீரங்கன் ,
ஜேர்மனி.
13.01.2014