Montag, Dezember 24, 2012

தாலி அறுப்பார் பேசும்"புரட்சி"-புரட்டென்பதேவுண்மை!

மது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.புலம்பெயர்ந்து நாடோடிகளாகவே அலைந்து அந்நிய மண்ணில் அடிமையானோம். இதையொருத்தன் பொருளாதார அகதிகளென்றும், "ஈழப்போராட்டத்தை "முன்னெடுக்காத தீயவர்களென்றும் புலி வழியில்-புலியின் பெயரால் திட்டுகிறன். 2009 வரை அவன் மௌனித்துப் பாசிசத்தின் முன் நின்றான்.அவனும் புலம்பெயர்ந்த பொருளாதார அகதியில் உட்படாதது "பாதிகப்பட்டவன்" என்பதாக?...


இன்னொருவன்,தானே புரட்சிவாதி,மாணவர் போராட்ட முன்னோடியென வகுப்பெடுத்துப்புலம்பெயர் தளத்திலுள்ள மாற்றுச் சக்திகளைப் புலிக்குப் போட்டுக்கொடுத்த கையோடு புரட்சி பேசிப் பிளந்தெறிந்த தமிழ் நியாயவாதங்கள் அனைத்தையும் பாசிசத்துக்குமுன் அடிபணியவும்,அதற்குள் அமிழ்ந்துபோகவும் புரட்டுப்பேசிக் கொண்டான்.அதன் தொடரில் இன்றும், நமது மக்களைக் காட்டிக்கொடுத்தபடி  இலங்கையில் ";இதோ புரட்சி"யென மக்களிடம் இராணுவாதவொடுக்குமுறையை நிலைப்படுத்தும் இந்த இரயாகரனோ  புலிகள் செத்த அடுத்த ஒரு சில மாதத்துள் சொந்த வீட்டைப் பாரிசில் வாங்கிக் குடி புகுந்தபடி, "புரட்சிக்குத் தயாராகிறார்கள் மக்கள்"என்று நிலத்து மக்களை எவருக்கோ காட்டிக்கொடுக்கவொரு கட்சியைக் கண்டபடி கட்டிக் கயவர்களைச் சேர்த்துக் காசு பார்கக்கிறான்.
நல்லது.


இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.


தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.புரட்சியென்கிறது,
புதியஜனநாயகமென்கிறது.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்கிறது!
சிங்கள மக்களுடன் உரையாடலென்கிறது.


இராணுவத்துள் இணைந்த பெண்களது உரிமையென்றெல்லாம் காதில் பூவைக்கும் இந்த இரயாகரன்கூட்டு சொந்தவீடு,சொந்தக் கடைகளெனச் சொத்தை வைத்துப் புரட்சி செய்கிறதாம்.


விட்டால் அவையெல்லாம் கட்சி நிதியெனச் சொல்லவும் ஒரு பெயர்ப்பலகைக் கட்சியையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது!


பாருங்கள்,பிழைப்புவாதிகள் புலிவடிவில் மட்டுமல்ல அப்புலிகளால் புரட்சி வேடம்போடவைத்த தமது புரட்டு வாதிகளையும் புரட்சிக்கரர்களாகக்காட்டிப் பிழைப்புவாதம் புரட்சியென்றும் வரலாறு எழுதப்படுகிறது.


இப்படி, இவர்கள் செய்த போராட்டமெல்லாம் மக்கள் சொத்தை இலங்கையின் வங்கிகளுக்குள் கொள்ளையடித்ததும் அதைக் கையக்கப்படுத்த ஒருவனையொருவன் போட்டுத் தள்ளியதும் புரட்சிக்குரிய குணாதிசயங்களாக நமது வரலாறு எழுதப்படுகிறது.


நமது மக்களைப் பலவடிவில் சிதைத் இந்தப் பரதேசிகள் மக்களை ஏமாற்றித் தமக்குச் சொந்தக் குடிமனைகளைக்கட்டியும்-கொள்முதல் செய்தும் வாழும்போது எதற்காக மீளவெஞ்சிய தமிழ்பேசும் மக்களைத் தொடர்ந்து சிங்களவரசின் இராணுவவாதத்துள் முடக்கும் சதியைப் போராட்டம்,உரிமை,புரட்சியென்று சொல்லிச் செய்கின்றனர்?


நமது காலத்தின் பீடைகள் இந்தக் கள்வர்கள்!


புரட்சி பேசியே ஒரு இனத்தைப்புலிப்பாசிசத்திடமும்,அந்நியச் சக்திகளிடமும் மண்டியிடப்பண்ணியவர்கள்,உண்மையான போராளிகளைக் கைகாட்டிப் பாசிசத்தால் அழித்தவர்கள்,விஸ்வா நந்ததேவனது கொலையோடு கோடிக்கணக்கான கற்றன் நசனல் வங்கிக் கொள்ளைப் பணத்தை-நகைகளைத் தமக்குள் புதைத்துக்கொண்டனர்.


இவர்கள் யாருடைய சொத்தை வங்கிக்குள் கொள்ளையடித்தனர்?


சிங்கள அரசினது செல்வத்தை?


இல்லை-இல்லவேயில்லை!


அப்பாவி யாழ்ப்பாண விவசாகிகளது சிறுகச் சிறுகச் சேர்த்த தங்கத்தைப் பணத்தைக் கொள்ளையிட்டனர்.அதைவைத்துச் சொத்துச் சேர்த்தனர்.அதற்காக எத்தனை பேர்களைப் பாசிசத்துக்குப் போட்டுக்கொடுத்துப் போட்டுத் தள்ளி வித்தனர்.


தலை மறைவில் திரை விரித்துக் குடியிருப்பவர்கள் கொல்லைப் புறத்தால் கோடி சொத்துடன் சுத்தல் புரட்சி செய்யும்போது சுத்தமான விடிவு நமது மக்களுக்குக் கிடைத்த மாதிரியே!


தாலியறுப்பார்!!!


இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய நயவஞ்சக அராஜகவாத அழிப்பாரைக்குறித்துப் பேசமுற்படுவது புரட்டுப் புரட்சிக்காரர்கள் அந்நியச் சக்திகளது கைக் கூலிகள்மட்டுமல்ல மக்களது செல்வத்தைக் கொள்ளையிட்ட கொடிய கொள்ளைக் கூட்டமென்றும் எச்சரிப்பதற்கே-இவர்கள் சதிகாரர்கள்,நமது மக்களைத் தொடர்ந்து அந்நியருக்குக் காட்டிக் கொடுத்து அடிமைப்படுத்தும் அந்நியத் தரகர்கள்என்பது வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும் என்பதற்கே!


இந்த இரயாகரன் கூட்டு, பெரும்பாலும் அரசியல்-புரட்சி-மக்கள் நலன்எனும் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் நியாயமான கருத்தியலோடு மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.


இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்

ப.வி.ஸ்ரீரங்கன்
24.12.2012

Keine Kommentare: