Sonntag, August 16, 2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015

"சுதந்திர இலங்கையின் 15வது நாடாளுமன்றத்த் தேர்த்தல்: 17.08.2015


லங்கையினது மக்கள்கூட்டம்,இலங்கைப் பாசிச அரச ஜந்திரத்துக்குள் தொடர்ந்து மாட்டப்பட்டிருப்பதற்காக வழங்கப்படும்"ஜனநாயகத்துக்கு " உட்பட்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தலானதும் அதன் சட்டவாதக் காலமும்திட்டமிடப்பட்ட இனவழிப்புக்கும் அதுசார்ந்த முரண்பாடுகளுக்கும் பாவிக்கப்படும்போது குடிசார் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்திருக்கும்.தேர்தலையொட்டி ஓட்டுக்கட்சிகள்போடும் கோசங்களும் அவை முன்வைக்கும்  நகைப்புக்கிடமான வாதங்களும் இலங்கை மக்களது அறிதிறனைக் கேலிக்குள்ளாக்குவதாகும்.

இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை வெறும் பயங்கரவாதமாகக் காட்டும் சிங்கள ஆளும் வர்க்கத்து அபாயகரமான அரசியலின் விளைவாகவெழுந்த அரசியலது விருத்தியில் புதிதாகாவெழுந்த கட்சியாதிக்கமும் அதன் நிதிப்பலமும் மரபார்ந்த ஆளும் வர்க்கத்தை மீறியவொரு புதிய ஆதிக்கப் போக்கை இக்கட்சிகளுக்குள் உருவாக்கியபின் இத்தகைய பெருங்கட்சிகள் இலங்கையின் புதிய ஆளும் வாக்கமாகவே உருவாகியுள்ள இந்தச் சூழலில் ,அவை கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கமானது இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியை மட்டுப்படுத்தி இலங்கையை மேலும் உரிமைகளற்ற தேசமாகவே சிறுபான்மை இனங்களுக்கு மட்டமல்லப் பெரும்பான்மையான சிங்களச் சமுகத்துக்கும் விட்டுவைத்திருக்கும்கும்இன்றைய சூழலில்இலங்கையின் முழுப் பொருளாதாரமும் மாபியா வைக்கப்பட்டவொரு கும்பலிடம் சிக்கியுள்ளது.இந்தக் கும்பலானது ஒவ்வவொரு இனத்துக்குள்ளும் ஓட்டுக்கட்சியை உருவாக்கி வைத்து ஆதிக்கத்தை நிலை நிறுத்துப்பலவகை ஜனநாயக விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.இதனால், சிங்கள - தமிழ்,முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமானது தத் தமது அரசியல்-பொருளியல் அபிலாசைகளோடு தனித்துவமான தேசிய முன்மொழிவுகளைக் கோரிக் கொண்டே இருக்கப் போகிறது.நாளை நடைபெறும் தேர்தலையொட்டியெழுந்த அரசியற் கோரிக்கைகள் ,பரப்புரைகளைப் பார்த்தோமானால் அவை திட்டமிட்டு இனங்ளைக் கூறுபோட்டு கட்சியாதிக்கத்துக்கும் அதன் மாபியாப் பொருளாதாரக் கும்பலுக்கும் துணைபோகும் அந்நிய நலன்களுக்கான அரசியலையே நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருப்பதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும்.


இந்த முன் மொழிவுகள் இனத்துவ அடையாளத்தை மையப்படுத்திய பேரெழிச்சியாக மாறுந் தறுவாயில் இலங்கையில் பிரிவினை அரசியல் நிலவரம் செறிவேற்றப்படுகிறது.

இந்தச் செறிவேற்றலைச் செய்து முடிக்கும் இனவொடுக்குமுறையானது அப்பாவி மக்களை அழித்துத் துவசம் செய்யும்போது அங்கே அவர்களின் அத்துமீறிய வன்முறைகளைக் கோரி நிற்கிறது.இது தனக்கேற்படும் அழிவுகளுக்கான அத்துமீறிய எதிர்ப்புப் போராட்டமாக விரியும்.

இந்த எதிர்ப்பு வன்முறையாக விரிந்து ஆயுதத்தை ஏந்தும்போது அங்கே மீளவும் பிரபாகரன்கள் உருவாவது தவிர்க்க முடியாத வினையாகிறது.இதைக் குறித்தான அரசியலை மையப்படுத்துகிற புதிய கட்சியாதிக்கமும் அதன் மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும்சிங்கள மரபார்ந்த ஆளும்வர்க்கத்தின் தெரிவானதைத் தொடர்ந்து தமது இருப்புக்காகவே பல மட்டங்களில் உந்து வினையாக்குகின்றன.இலங்கைத் தேசத்தின் பாரிய பின்னடைவாக தமிழ்த் தேசிய இனத்தைக் கணித்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் பொருளாதார அறிவானது அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் தமது இழிநிலையை உதாசீனப்படுத்தப்படுகிறது.இது பேசும் ஜனநாயகமென்பது வெறும் வெற்றுக் கோசமாகும்.இலங்கையின் இன்றைய மாபியாப் பொருளாதார நகர்வானது ஒருபோதும்ஜனநாயகப் பண்பைக்கோரிக் கொள்ளாது.இதை உலக நிலவரத்துள் பொருத்திப் பார்த்தோமானால் மிகத் தெளிவாக இந்த மாபியப் பொருளாதார நகர்வின் வெளியைப் புரிந்கொள்ள முடியும்.

இன முரண்பாட்டைத் தொடர்ந்து யுத்தங்களால் கூர்மைப்படுத்தி இனச் சுத்திகரிப்பை மெல்ல செய்த இந்தக் கட்சியாதிக்கமும்,மாபியாப் பொருளாதாரத் தாதாக்களும் இன்றைய இலங்னையின் அதிக ஆபத்து நிறைந்த புதிய ஆளும் வர்க்கமாகும்.இது, இலங்கையின் இறைமையைத் திட்டமிட்டு அந்நிய எஜமானர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிட முனைப்புடன் அரசியல் செய்கிறது.இதுதாம் இன்றைய அனைத்து முரண்பாட்டையும் சிக்கலுக்குள் மாட்டி மேற்குலக நிதி ஆளுமையுடைய நாடுகளால் தமிழ்பேசும் மக்களுக்கு விடிவு வரும் என்பதாகவும் இன்னொரு பொய்மையை அவிழ்த்துவிட்டுத் தப்பிக்கிறது.இந்தத் தேர்தலையொட்டிய தமிழ்க் கட்சிகளது கோரிக்கைகள் இதைத் தாண்டிச் செல்வது குதிரைக் கொம்பே!

எனவே,இனஞ்சார் கட்சிகள் தத்தமது எல்லைகள் எவையென்பதைத் தெட்டத் தெளிவாகவே புரிந்து வைத்து அதற்கேற்பவே தேர்தற் கோரிக்கைகளை முன்வைத்து பெருங் கட்சியகளது முகவர்களாக இயங்குகிறது. இவைகளின்வழி, இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு மீளவும் தலையில் மிளகாய்தாம் அரைக்கப்படுகிறது -அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாலுஞ் சரி இல்லை எந்தக் கூட்டானாலஞ்சரி இதுவே தலைவிதி.


தென்கிழக்காசியாவில் பேரளவில் தன்னிறைவானவொரு அரசாக இலங்கை மிளிரக்கூடிய அரிய வாய்ப்புகளை-வளங்களை இலங்கை கொண்டுள்ளது.அதன் சனத்தொகையும் வளமும் இதை மெல்லச் சாத்தியப் படுத்தியிருக்கும்.எனினும் அடாப்பிடியான இனவொடுக்குமுறையைக் கடைப்பிடிக்கும் மரபார்ந்த சிங்கள ஆளும் வர்கத்தைக் கடந்த இந்தப் புதிய மாபியாப் பொருளாதாரத் தாதாக்களை  உசுப்பிவிடும் இந்திய-அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நலன்கள் இலங்கையைப் படுகுழியில் தள்ளி அதன் வலுவான வளர்ச்சியை,தேசியவொருமைப்பாட்டைத் தொடர்ந்து உடைத்தெறிந்து,இனப்படுகொலையை முள்ளிவாய்க்கால் வரை நடாத்தியது.

இந்த நிலையில்,சர்வதேச நீதிபரிபாலனமும், சர்வதேச நாணய நிதியமும் மற்றும் உலக வங்கியும் அதன் எஜமானர்களும் நமது மக்களுக்கும்,அவர்களது விடிவுக்கும் தார்மீக ரீதிய உதவுவதாகக் கருத்துக்கட்டும் சந்தர்ப்பாவதமானது இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஏமாற்றுஞ் சதி நிறைந்தது.தேர்தற் பரப்புரையான "போர்க் குற்ற விசாரணை " யென்பது ஒருவனையொருவன்: தலைவெட்டும் வியூகமாகும்.


இவ்வண்ணமேதாம் இன்றைக்குப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் மக்களுக்குள் உருவாக்கப்படும் திடீர் அமைப்புகள்-குழுக்கள் யாவும் இத்தகைய அந்நியச் சக்திகளுக்குச் சோரம்போன இலங்கைச் சிங்கள -தமிழ் மாபியப் பொருளாதாரத் தாதாக்களின் மற்றும்  ஆளும் வர்க்கத்தின் கைக்கூலிகள்.இவர்கள் சிங்கள அரசினது பாசிச அரசியலைக் கேள்விக்குட்படுத்தாமல்-இனவழிப்பை இனங் காட்டாமல்-தமிழ்தேசிய இனத்துக்கு எதிராகச் செயற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தாமல், வன்னியில் வதங்கும் மக்களுக்கு உதவுவதற்காவும்,தலித்துக்களின் விடிவுக்காகக் குரல் கொடுப்பதென்பதும் வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் அரசியலே.


இத்தகைய குழுக்கள் யாவும்"பொதுவமைப்புகள்-அரசுசாரத் தன்னார்வ அமைப்புகள்"எனும் போர்வையில் இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது எடுபிடி அமைப்புகள்-கட்சிகள் என்பது உண்மை.இதை, நாம் இனங்கண்டாக வேண்டும்.இலங்கையில் புரட்சிகரமான அரசியலை முன்னெடுப்பதற்கான முட்டுக் கட்டைகளில் முதன்மையான தடைக்கற்கள் இத்தகைய கைக்கூலிக் குழுக்கள் என்பதை முதலில் வரையறுக்க வேண்டும்.இதைவிட்டு ஒட்டுக் கட்சிகளுக்குப் பின்னால் அலைந்து அவர்களை வெல்ல வைப்பதால் ஒந்த மாற்றத்தையும் அவை நமக்கு வழங்கப் போவதில்லை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி,
16.08.2015

Keine Kommentare: