Freitag, Mai 14, 2010

தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு

வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்...



"உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சு
உயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளி
ஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடி
அருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம்


ஓலத்தில் கிழிபடக் காலத்தின் முனைப்பு
மாமிசத்தின் பிராண்டடிலில் கற்பிதம்
தேசமாய் மொழியாய்க் கலையாய்
காயிழந்தேன் தமிழுக்காக..."




ன்று 13.10.2010 , ஜீரி வீ(G TV) செய்தித் தொகுப்பாளர் நரேன் முன்னாள் புலி எம்.பி. சிவாஜீலிங்கத்திடம் பிரபாகரன்தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பேட்டி எடுக்கிறார்.


பிரபாகரனது தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பெரிய மனிதாபிமானிகளாக நடிக்கும் இந்த கேடுகெட்ட நரிகள், பார்வதி அம்மாளின் புதல்வன் "பாசிஸ்ட்" பிரபாகரனால் பழிவாங்கப்பட்ட எத்தனை பார்வதி அம்மாக்களையும்,அவர்களது வலிகளையும் கடந்த காலத்தில் பேசினார்கள்?


என்ன பெரிய மனிதாபிமானம் இந்த ப் பார்வதி அம்மாள் குறித்து...


எனக்குப் புரியவில்லை!


தேசமில்லாத தேசியம்:


தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் ,புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.





வன்னிப் புலிப் பாசிஸ்ட்டுக்கள் செய்த கொடுமைகளை, அங்கு வாழ்த மக்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.நான் சுவிட்ஸ்லாந்தில் நின்றபோது சந்தித்த "பார்வதி அம்மாள்" சொன்ன திடுக்கிடும் தகவல்: "பிரபாகரன் ஒரு சொறியன்-சர்வதிகாரி மட்டுமல்ல ஒரு மனநோயாளியுங்கூடவென்பது" அந்தத் தாய்கூறிய பொன்வரிகள்.


கேடுகெட்ட புலிகளது பாசிச நடாத்தை, சொந்த மக்களையே வதைத்தெடுத்தது.இந்த இலட்சணத்தில் அவனது தாய் பார்வதிக்கு மனிதாபிமானம் கேட்கும் புலிக்கயவர்களைக் கண்டிக்க எந்த நாய்க்கும் வலுவில்லை!இந்த நாய்கள் வன்னி அவலம் குறித்து எழுதும் எழுத்தாளர்களது கட்டுரையைப்படித்துவிட்டு மொழியிழந்து வாழும்போதும் நடிகைகளது வனப்பில் மயங்கத்தாம் செய்கின்றனர்.தமிழ்நாடு சென்று ரம்பாவைக் கல்யாணஞ்செய்யும் புலிப் பினாமிகள் இப்போது புலிகளுக்குப் பொன்னாடை போர்த்த"மே-18"வருவதற்குக் காத்திருக்கிறார்கள்!


இத்தகைய துரோகிகள்தாம் இப்போது பிரபாகரனென்ற கொடுங்கோன்மை மிக்க சர்வதிகாரிக்கும்,அவனது அடியாட்களுக்கும் நினைந்துருக விழாவெடுப்பதில்,தமிழீழ மக்களுக்கான உரிமை என்று புலம்புகின்றார்கள்.அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?


இக்காலத்தில் அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.


எனினும்,புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் பினாமிப் புலிகளாக உலாவும் தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள், இப்போது, பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை-நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.


தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு:


புலிகளைக் காட்டிக் கொடுத்த நரிகள் "நாடுகடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தலை நடாத்திய கையோடு, மே 18, 2010க்கு இன்னொரு ரவுண்டு வருவதற்கான முன்னெடுப்புகளில் மும்மரமாகச் செயற்படுகின்றனர்.அழுகுரல்களினூடாகப் பணம் பண்ணப் பிணம் செய்தவர்கள், இப்போது பிணமானவர்களது வரலாறு பகிர்ந்து பணம் பண்ணப் பல முயற்சியில்...




புலன் பெயர்ந்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வறுமைப்பட்ட ஜடங்கள் இன்னும் தாம் கற்றுக் குட்டிகள்தாமெனப் பகரும் செயற்பாட்டில் தமது வாரிசுகளைக் களம் இறக்கித் தம்மையும் சீரழித்துத் தமது வருங்காலச் சந்ததியையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி...


மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.


தடார் புடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.கேடுகெட்ட தமிழ் வியாபாரப் புத்தியுடைய சமூகக் கிரிமனல்கள் இப்போது எங்கும்" தமிழீழ அரசு,நாடுகடந்த தமிழீழ அரசு"வெனப் புலம்பியபடி புலம் பெயர் சமூகத்தின் முதுகில் குத்தியபடி...இதற்கு ஏற்றபடி"பேராசிரியர்கள்"எனும் போர்வையில் உலாவும் சேரன்,உருத்திருகுமார் போன்ற பொறுக்கிகளும் சித்தாந்த வலுக்கொடுத்து தமது குடும்பங்களுக்குச் சொத்துச் சேர்த்தபடி?...




இன்றைய GTV யின் கருத்துப் பகர்வுக்கமைய,நிலவுகின்ற அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாராளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது,இந்த ஜீ.ரிவீ (GTV)ஜெர்னலிசத்தால்!


இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.இதை ஜீ.ரிவி போன்ற புலிகளது பினாமி ஊடகம் தொடர்ந்து வாந்தியெடுக்கிறது.


மறுபுறமோ,புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள், இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!



இதை எங்ஙனம் முறியடிப்பது?:



1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,



2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,



3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,


4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,



5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும்,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும், வெளியக அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும் உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,


அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில் கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும் அவசியமாகிறது.


இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதியாக விளங்க முற்படுவதும் , அதை எங்ஙனம் புலிகள் தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் "கொலைக்கள அரசியலை" நமக்குள் திணித்தார்கள் என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இது குறித்து இப்போது மெல்லக்கசியும் எழுத்துக்களை மிக நுணுக்கமாக அணுகுவது,அதன் சமூக உளவியலைத் தறுவாகக் கற்பது(இதன் அர்த்தம் இதுவரை புலிக்காக வக்காலத்து வாங்கிய பொதுபுத்தி மக்களது அழிவில் எடுக்கும் அரசியல் நகர்வு என்பதாகும்(இந்தப் பொது புத்தி சகல மட்டத்திலும் வெகுஜன அரசியல் மற்றும் வர்க்க நலன் என்றாக விரியும்.) ).


இதை மறுத்து இயங்க முனையும் புலிகளது அரசியல்நீட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென இந்தியா வாந்தியெடுப்பதாக நமக்குச் செய்தி சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரச நிதியோடு தமது கடமையைச் செய்யும்போது,இன்னொரு புறம் உலக ஆதிக்க சக்திகளது தயவில் இயங்கும் குள்ள நரிகள் நமக்குப் புரட்சிப் பாடம் நடாத்துகின்றன.


இந்தக் கோலத்தில் தமிழ் மக்களது அரசியல் வாழ்வோ படு பாதளாத்தில்.என்ன செய்ய முடியும்?


புலத்துப் புலிப் பினாமிகளது வலை:


புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புலத்துப்புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள்(நாடுகடந்த தமிழீழ அரசு) மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது என்றவுண்மை புரியப்பட வேண்டும்!


தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சுற்றிய புலம்பெயர் புலித் தேசியவாதமதனது ஈவிரக்கமற்ற படுகொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலத்துப் புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன இன்று.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய காலத்தில் "புரட்சி-ஜனநாயகம்"என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் நரிகளது மந்திரமாக இருக்கிறது.இதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய சூழல் நெருங்குகிறது.எனினும்,காலம் அதற்கான தகவமைப்பைச் செய்யுமென நம்புகிறேன்.நமது மக்களது குருதியில் ஆதாயமடையும் புலத்துப் புலி அரசியல் தரகர்களைக்கடந்து-அந்நியச் சக்திகளைக் கடந்து, நாம் புரட்சிகரப்பணியைச் செய்தேயாகவேண்டும்.மக்களது விடிவுக்காக அவர்களே புரட்சிகரமாக அணிதிரளவேண்டிய இன்றைய சூழலில்,நாம் மேலும் எமது காரியத்தைத் தொடர்கிறோமா?


எமக்குள் முட்டிமோதிச் சுருங்கிய நாமோ நமது கைகளில் விலங்குகளை நாமே தயாரித்துப் பூட்டியுள்ளோம்.


இன்னும் விபரமாகச் சொல்வதானால், இயக்கவாத மாயை கடந்தும்,தத்தம் தலைவர் துதியைக் கடந்தும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்.


இல்லையேல்,மே 18க்கு ஓலமிட்டுப் பணம் பண்ணும் புலத்துப் புலிப் பினாமிகள் தமது அரசியலைத் தொடரப் புரட்சிகரப் பாட்டும் தமது எடுபிடிகளது வழியில் சொல்ல, நாம் அவர்களையும் நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்து,எமக்குள்ளே குட்டுப்பட்டு குடி கலைந்து...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.05.2010

5 Kommentare:

Sathyan hat gesagt…

நீயேல்லாம் ஒரு மனுசன்! சீ! தூ........
ஒரு வயது முதிர்ந்த தாயின் வேதனையில் காழ்ப்புணர்ச்சியைக் காட்டிற நீயெல்லாம் மற்றவனைப் 'பாசிஸ்ட்' என்று சொல்ல உனக்கு அருகதையில்லை. நீ ஒரு வெறிபிடிச்ச “பாசிஸ்ட்”. பிரபாகரன் தாயென்றாலென்ன மகிந்தவின் தாயென்றாலென்ன.... அவர்கள் வேதனையைக் கொச்சைப் படுத்தும் நீ உன் தாயை தரம் தாழ்த்திவிட்டாய். புரிஞ்சுக்க...

-/பெயரிலி. hat gesagt…

தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்./

சிறீரங்கன் அண்ணர்
புலத்திலே நிண்டு புலி பொலியென்று புசத்தாமப் போய்க் களத்திலே மக்களோடு நின்று இலங்கையைத் தழுவியோ உருகியோ இறுகிப்புணர்ந்தோ சோசலிசபூமியைக் கொத்திப்பிளந்து வியூகம் அமைக்கச்சொல்லி ஆராச்சும் சொல்லப்போறாங்கள். பாத்து...பாத்து... பிறகு புலிப்பினாமிகள் பினாட்டுகள் பனங்கிழங்கங்கள் எண்டு தொடங்காதீங்கோ ;-)

P.V.Sri Rangan hat gesagt…

வாங்க சூர்யா,
அட பெயரிலியா வாங்கோ!உங்கள் ஆலோசனைக்கு வழமைபோல நன்றி இரமணி.நாணுதலில் புனித தமிழுக்கும் இலங்கைத் தேசத்துச் சிங்க மரபெனக் கொள்ள மார்தட்டும் ;மார்க்சும் யான் கண்ட மாண்பின் தொடர்வினையுறுக்க யான் போகும் திசையெனக்கொண்ட திசையின் நடுவே பெயரிலியோ பேட்டைப் புகல் நாண் முறுக்க, நான் ஏகும் திசையினில் ஏன்தாம் இருக்குதோ அந்த வனப்பின் ஏக்கம்?

-/பெயரிலி. hat gesagt…

யானறியேன் ஆண்டே!

Anonym hat gesagt…
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.