Dienstag, November 07, 2006

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...


நமக்கிருக்கும் ஒரு பெரும் குறையானது நமது சமூகத்தில் அரசியல் அறிவென்பது மிக மிகத் தாழ்ந்த நிலையிலிருப்பதே.இது நமது தமிழ் பேசும் மக்களை ஒரு இனமாகவும்,ஒரு வர்க்கமாகவும்,ஒரே சாதியாகவும் பார்க்கிறது.

இது தப்பு!

நாம் தமிழ் பேசுவதால் ஒரே இனத்தவர்களில்லை.

நம்மிடம் இஸ்லாமிய,மலையகத் தேசிய இனங்கள் இருக்கின்றன.


நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.


இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.

எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் விய+கத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).இதை எதிர் கொள்வதற்கான எந்த விய+கமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.தமிழ் "தேசிய விடுதலை இயக்கமென்ற புலிகள்" தமிழ் எழக-பொங்கு தமிழ் செய்வதால் இந்தப் பொறியை உடைக்க முடியாது.

நம்மக்கள் அனைத்திலும்"தியாகி தர துரோகி"எனப்பார்க்கப் பழக்கப்பட்டுள்ளார்கள்.இது ஆபத்தான உளவியலைத் தோற்றியுள்ளது.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.

சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.


இங்கே புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை ப+ண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் "விய+கமானது"ஆனந்த சங்கரியின் வடிவில் நம்மிடம் வருகிறது.நாங்கள் இந்தியாவின் மாநில சுயாட்சி(!?) முறைகளைப் பின் பற்றவேண்டுமாம்.

இந்தியாவில் இனப்பாகுபாடின்றி மக்கள்"அந்தமாதிரி"வாழ்கிறார்களாம்.மிசாரம்,திக்கம்,காஸ்மீரி,

நாகலாந்து,சீக்கியர்களின் தனிநாட்டுப் போராட்டங்கள் எல்லாம் மக்களின்"ஓற்றுமையை"நன்றாகவே எங்களுக்கு எடுத்துரைக்கின்றது.


இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.


அதன் ஒரு வடிவமாக ஆனந்த சங்கரியை, ஈ.என்.டீ.எல்.எப்பை(ரி.பீ. சீ.வானொலிக்காரர்கள்)மற்றும் புளட்,போன்ற ஆயுதரீதியாக வலுவிழந்த அமைப்புகளையும் கட்டுப்படுத்தித் தமிழ் மக்களின் நலன்களுக்கும்,புலிகளின் நலனுக்கும் எதிராக இந்தியா செயல்படுத்துகிறது.


இந்தி இந்தியாவின் "விருப்பானது" ஆனந்த சங்கரிய+டாக இப்படி நமக்குள் வருகிறது.அந்த மனிதரின் அரசியல் குழிப்பறிப்புகள் இப்படி வருகிறது படியுங்கள்.


நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் விய+கமற்ற ஆயுதப் போராட்டம் இந்தியாவின் இந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும்.இனியாவது மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.

மக்கள் போராட்மின்றி இந்த விய+கத்தை உடைக்க முடியாது.இதற்காகப் புலிகளின் கட்டமைப்பே மாறியாகவேண்டும்.அதன் வெற்றுத் தலைமையே அறிஜீவிகளை,ஜனநாயக வாதிகளை,நிபுணர்களை உள்வாங்கி அவர்களைப் பயன்படுத்தியாகவேண்டும்.உட்கட்சி ஜனநாயத்தைத் தோற்றுவித்து கட்சியை மறுசீரமைப்புச் செய்யவேண்டும்.இதனூடாகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

எங்களுக்குள் பல நிபுணர்கள் உள்ளார்கள்,பல தியாகஞ் செய்யும் உளப்பாங்கு இருக்கிறது.எமது வாழ்வு இனவாத,உலக நலன்களுக்காக இனியும் பாழாக முடியாது.


புலிகளே உங்கள் அழிவில் மக்கள் அழிவதும் நிகழும்!

எனவே முந்துங்கள் கட்சியை மக்கள் ஸ்தாபனமாக்குங்கள்.

மக்கள் படைகளாக இராணுவப் படையணி மாறியாகவேண்டும்.தலைமையைப் பாரிய நெறிமுறை வழிப்படுத்தவேண்டும்.

மக்கள் தங்கள் அணிதிரட்சிய+டாக வெற்றியை நிலைநாட்ட முடியும். இது புரட்சிக்கான அறைகூவல்.இதைத் தமிழ் தரப்புத் தரகு முதலாளியம் ஏற்காது.

ஏனெனில் நாம் தமிழைப் பேசினாலும்
பிளவுண்ட மக்கள் இனம்.

நம்மிடம் வர்க்கங்கள் இருக்கு.நம்மிடம் சிறுசிறு தேசியினங்கள் இருக்கு.நம்மிடம் சாதிகள் இருக்கு.

இவற்றையெல்லாம்விட வாக்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பதைத் தமிழ்த் தேசியப் போராட்டம் தினமும் நிரூபித்தே வருகிறது.


ஜனநாயகம்.

Keine Kommentare: