Freitag, Januar 09, 2009

இது முன்னரங்கக் காவல் அரண்

"தமிழீழத்தின்"இறுதிக் காவலர்.

னது தூக்கம் எவ்வளவு கருமையானது
கரங்களின் மீது குசாலாகக் குடியிருக்கும்
பாரத்தைப் போலவே,
நீ அவர்களை விட எங்கோ தூரத்தில்
என் குரலை நீ கேட்கமாட்டாய்?

புள்ளியான வெளிச்சத்தின் கீழே
நீ துக்கத்தோடு வயதாகிவிட்டாய்,
உனது சொண்டுகள் விகராமாக
நித்தியத்தின் நெடுந்தொலைவை முத்தமிட...

நாளை என்பது இங்கே மௌனமாகலாம்
கூடவே காற்றுந்தாம்,
எனினும்
மனித நாற்றமும்
இயற்கையின் கோரமும்
அடங்கப் போவதில்லை.

இரவென்பது வெறுமையாகிறது
விடியலைத் தொலைத்து,
வருசா வருசம்!

இது முன்னரங்கக் காவல் அரண்,
நீ முழுமையாகக் கனவுகாணத் தவறிய பொழுதொன்றில்
உனது மூச்சு மிக அமைதியாக
மெலிய சத்தமாய் அமிழ்ந்து போகும்.

தெருவோரத்துக் குடிசைகளின்
மெல்லிய சல சலப்பில்
உனது பெயரும் அறுந்துதிரும்
நீ அவர்களுக்கு நெருக்கமானவ(ள்)ன்.


காலத்தைக் கொடிய ஜந்திரமொன்று
துண்டு துண்டாய்க் கத்தரித்தது,
நெடுக்கும் குறுக்குமான அளவுகள்
சொல்லி வைத்தபடி
90,
180,
360 பாகைகளில்,
அது எப்போதாவது தேசங்களாக இருக்கும்போது.


இந்த நோக்கத்துள்
தூக்கம் தொலைத்த
உனது முகமும்
அழகிய சிறு விழிகளும் ஜொலிக்கின்றன!


இப்போது உனது தோலின் குளிர்ச்சியுள்
பெருமித எச்சமொன்று
அம்மாவாய்
முலையுதிர்த்த வெண்மைக் குருதியாய்
உறைந்து போகும்.


நாங்கள் உன் வேதனையை இரட்டிப்பாக்கி
உன்னால் உணரப்பட்ட
அனைத்து நித்தியங்களையும் திருடிக் கொண்டோம்,
சுவரில் தொங்கும் சிலந்தி வலையாக
உன்னில் படர்ந்த எமது கனவுகள்
உன்
இதயத்தை இரையாக்கியது.

எமது பயம்
உன்னைத்; துப்பாக்கியோடு கட்டிப் போட்டது,
உனக்கு நீ மிகத் தூரமான பொழுதொன்றில்
என் குரல் கேட்பதற்காய்
நான் குரைக்கும் பாழ் காலம்
கட்டுக்கடங்காத
கட்டாக்காலி எருமையாக
உனது உடலில் இடறிப் புரண்டது.
நீ,
எனது கபாலத்துள் இறுதிக் காவலர்.


ப.வி.ஸ்ரீரங்கன்

9 Kommentare:

ரவி hat gesagt…

இறப்பில் சந்தோஷம் காண்பதுபோல் தெரிகிறதே ?

P.V.Sri Rangan hat gesagt…

//இறப்பில் சந்தோஷம் காண்பதுபோல் தெரிகிறதே ?//




செந்த(து)ழல் ரவி,தமிழைக்கூடவா வாசித்துப் புரியமுடியவில்லை?.ம்... மீண்டுமொருமுறை முயற்சியிலீடுபடுங்கள்-முடியாது போயினும்,இருக்கவே இருக்கிறது விக்கிரமாதித்தன் கதைப் பாணி...

வெத்து வேட்டு hat gesagt…

whose are those two dead bodies? SLArmy or LTTE - abondoned kids?

P.V.Sri Rangan hat gesagt…

//whose are those two dead bodies? SLArmy or LTTE - abondoned kids?//


மனிதர்கள்!

வெத்து வேட்டு hat gesagt…

don't you know that மனிதம் is dead long time ago in the name of Tamil home land???
now we should only count how many we killed...

P.V.Sri Rangan hat gesagt…

//don't you know that மனிதம் is dead long time ago in the name of Tamil home land???
now we should only count how many we killed...//


100% right.

தமிழ் மதுரம் hat gesagt…

நாங்கள் உன் வேதனையை இரட்டிப்பாக்கி
உன்னால் உணரப்பட்ட
அனைத்து நித்தியங்களையும் திருடிக் கொண்டோம்,
சுவரில் தொங்கும் சிலந்தி வலையாக
உன்னில் படர்ந்த எமது கனவுகள்
உன்
இதயத்தை இரையாக்கியது.//


வலிகளின் வேதனைகள் எத்தனை பாரதூரமானவை என்பது அதனை அனுபவித்த மனிதர்களுக்கே தெரியும்,.

தமிழ் மதுரம் hat gesagt…

கவிதை நன்றாக உள்ளது. யதார்த்தம் நிரம்பிய வார்த்தைகள்.... இதன் வலிகள் எங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியப் போகிறது???

P.V.Sri Rangan hat gesagt…

தம்பி கமல்,வணக்கமடா!

நீங்கள் இளைஞர்கள்.எம்மைவிட வீச்சாகச் சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்குக் கைகூடியாகவேண்டும்!

நாளை, நமது மக்களின் துயரைப் போக்குவதற்கான அனைத்துக் காரியங்களும் உங்களிலேயே தங்கியுள்ளது!

மக்களுக்கு-அவர்களின் தலைமைக்கு உங்களைப் போன்றவர்களே பெரிதும் உடந்தையாக இருக்கவேண்டும்.நாம், எங்கோ தவறு செய்துவிட்டோமடா தம்பி.


இவைகள் சுயவிமர்சனத்தோடு களையப்பட்டு நம்மை உறுதிப்படுத்தியாகவேண்டும்.

எமக்கு, அனைத்து உரிமைகளும் நமது தாயகத்தில் உண்டு!

அதை, எவனும் இல்லாதாக்க முடியாது தம்பி.

ஆனால்,அதை பெரும்பான்மை இனமக்களின் தயவோடு நியாயமான புரட்சிகர முன்னெடுப்போடு இலங்கையின் அனைத்து இனங்களும் போராடி விடுதலை பெற்றாகவேண்டும்-சாதித்தாகவேண்டமடா.

உங்களைப் போன்றோர்கள் கற்பதில் ஆர்வம் காட்டவும்.அதுவே, நமது எதிர்காலத்துக்கு அவசியம் தம்பி.


"கற்றுக்கொள்,கற்றுக்கொள்,இன்னுமொரு முறை கற்றுக்கொள்!"இப்படி லெனினே சொல்கிறார் தம்பி.


எனவே,வலைப்பதிவில் கவனஞ் செலுத்தி கற்கையைக் கோட்ட விடவேண்டாம் தம்பி.


அன்புடன்,
ஸ்ரீரங்கன்