>>>சிறிரங்கன்!புலிகளை விட்டுவிடுங்கள். இலங்கையில் 1948 முதல் 2008 வரையில் தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது என்ன? புலிகள் சரிவரப் பலம் கொண்டது 1985க்குப்பின்னரே. அதற்கு முன்னர் இலங்கை மக்களிடம் இந்த தெளிவினைப் புரிய வைக்காதது யார் தவறு? ஏன் புரிய வைக்க முடியவில்லை?<<<
- மலைநாடான்
பெரும்பாலும் ஈழத்தமிழ் மக்கள்தம் சமூக அறிவு மிக மட்டரமாக இருப்பதற்கான திசை வழியில் சென்ற புலிகளது போராட்டச் செல்நெறி,இன்று எமது எமக்களது தலையில் மீளவும் மிளகாய் அரைப்பதான கேள்வியோடு திரு.மலைநாடன் மேலே "புலிகளை விட்டுவிடுங்கள்" என்று முற்போக்குச் சக்திகளது சாதனைகளைக் கேட்கிறார்.
நல்லது மலைநாடான்.
கேள்விகள் அவசியமானது.
அறிவினது முதற்கட்டம்-ஆரம்பமே அதன் சாத்தியத்தால் எழுந்தது-இல்லையா?
ஆக-நாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்!
அச்சமில்லை-நிச்சியம் வெல்வோம்!!
இனிமுதற்கொண்டு, இக் கேள்விகளைப் புலிகள்மீதும் கேட்டாக வேண்டும்.ஆனால்,மிக வசதியாகப் "புலிகளை விட்டுவிடுவோம்"எனும் சந்தர்ப்பவாதமே மீளவும் நம்மை நடாற்றிலிருந்து காப்பதற்கான வழிகளை அடைக்கிறது.இதுதாம் ஆபத்தின் அறி குறி.
மலைநாடன்,கொஞ்சம் கவனமாகச் சிலவற்றைக் கேட்போமா?
மனித சமுதயத்தில் ஒரு நடாத்தை எங்ஙனம்"சரி-பிழை"எனக் கணிக்கப்படுகிறது?
அக்கணிப்பினது தர்க்கம் அநுபவவழியினது தேர்விலேதாம் கருக்கொள்கிறதா?
"தேன் இனிப்பா?-அப்போது இனிப்பெல்லாம் தேனாக இருக்கணுமே?-அங்ஙனம் ஏன் ஆவதில்லை?"
இதை- புலிகள் விடுதலைப் படையென்றால்-விடுதலைப்படைகள் எல்லாம் புலியாகுமா?-இல்லை அல்லவா?ஆனால்,புலிகளுக்கு விடுதலைப்படைகளெல்லாம் புலிகளாகத்தாம் இருக்க வேண்டுமாம்.எனவே,தம்மை அல்லாத அனைத்தும் துரோகம் என்று துப்பாக்கி மொழியில் நமது மக்களுக்குப் பாடஞ் சொன்னார்கள்.அந்த வழியில் நீங்களும் செல்லாது இப்போது முற்போக்குச் சக்திகள் என்று ஒன்றிருப்பதாகவும்,அதன் சாதனைகளை அறிவதில் ஆவலாக இருப்பதும் உங்களது கேள்வியினதுவழி அறியத்தக்கதில் மகிழ்ச்சியே!
இப்போது,புலிகளை எங்ஙனம் விட்டுவிடவேண்டும்?அவர்கள் தொகையாகச் சேர்த்த நிதிகளோடு பெரும் கோடிஸ்வரர்களாக மேற்குலத்தில் வியாபாரந் தொடங்கித் தமிழீழம் மேலுஞ் சொல்லவா?
தமிழீழப் போராட்டத்தில் இலட்சம் மக்களை அழித்தவொரு திசைவழியை கேள்விக்குட்படுத்தாது விட்டுவிட்டு,முற்போக்குச் சக்திகளது சாதனையை அறிவதில் அவசரப்படுவதன் புள்ளி என்னைத்தைச் சொல்ல முனைகிறதென்பதைத் தீர்மானகரமான முற்போக்குச் சக்திகள் குறித்த பார்வையினூடாக மலைநாடன் வழியாக நம்மை எதிர்கொள்ளும் பொதுப் புத்தியைப் புரட்டிப்போடுவது அவசியம்தாம்.தொடர்வோம்.
முதலில் முற்போக்குச் சக்திகள் தமிழீழம் கேட்க வில்லை.
ஏன்?
அது அதிகார வர்க்கங்களது அபிலாசை.
அதிகாரப் பங்கீட்டுக்கான அழிவு அரசியலென்பதை வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலை அடிப்படையாகக்கொண்ட சிந்தனையின்-சித்தாந்தத்தின் வழி, இக் கோரிக்கை(தமிழீழம்)பரந்தபட்ட தமிழ் மக்களுக்கானது அல்ல என்பதும்,அது அவர்களை ஒடுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மாறாகத் தமிழ் பேசுகிற இன்னொரு ஒடுக்குமுறை வர்க்கத்தினது கோரிக்கையானதென்பதும்,இதனூடாகத் தமிழ்ச் சமுதாயம் இன்று வந்தடையும் நிலையை ஏலவே கணித்ததன்வழி புலிப்பாணி தமிழீழப் போராட்டஞ் செய்யவில்லை!-இது சாதனையே!
இதுவொரு மகத்தான சாதானை!
ஏனெனில்-
1):முற்போக்குச் சக்திகள் என்ற முற்போக்குச் சிந்தனை இலட்சம் மக்களைக் கொல்லவில்லை.
2):தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலப்பரப்புகளிலிருந்து அனைத்தையும் இழந்து(...)அகதிகளாக்கப்படவில்லை.
இது,ஒரு வரலாற்றுச் சாதனை.
ஆனால்,இந்த முற்போக்குச் சக்திகளை தமிழீழம் கேட்ட தமிழ் ஆளும் வர்க்கம் தமது எஜமானர்களோடிணைந்து புலிகளெனும் ஒரு அடியாட்படையைக் கட்டி,அதன் துணையோடு தேடித் தேடி அழிக்கின்றார்கள்.வரலாற்றுக் கணிப்பின்படி 1985 ஐக் கடந்து 1948 என்று மலைநாடன் சுட்டியதை அண்மித்தால் இலங்கையினது வர்க்கச் சமுதாயத்தில் மிக முற்போக்கான பணிகளை என்.சண்முகதாசன் என்ற சண் தலைமையில் தாழ்தப்பட்ட தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகிறது.
இலங்கையின் ஆளும் வர்க்கம்,தனது வர்க்க நலனின் அடிப்படையில் முற்போக்குச் சக்திகளை பல பத்தாயிரக்கணக்காக இருதடைவைகள் இராணுவ முன்னெடுப்புகளின்வழி அழிக்கிறது.இலங்கை ஆளும் வர்க்கத்தின் தேர்வுக்கு இந்திய ஆளும் வர்க்கமும் துணையாகியதும் வரலாறு.
இதை விளக்குவது அவசியமில்லை.
முதலாளிய வர்க்கத்திடம் வந்து சேர்ந்து உற்பத்திச் சக்திகளை அது மிக நேர்த்தியாகக் காப்பதற்கும் அதனூடான அனைத்து உறவுகளையும் அது தனது கண்காணிப்பின் கீழ் கொணர்கிறது.முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்பது இன்றைய பொருளாதார அடிப்படையாக இருப்பதால் அதைக் காப்பதற்காக,மேல்மட்டப் பாதுகாப்புக் கவசம் தேவையாகிறது.
அந்த அத்திவாரத்தின்மீது கட்டப்பட்ட சுவருகள்,கூரை என்பவையாகப் பாதுகாக்க வருகிறது கருத்தியல் கட்டுமானங்கள்.
இதுள், வன்முறை சார்ந்து நீதிமன்றத்தின் தலைமையில் இராணுவ-பொலிஸ் ஜந்திரங்கள் நிறுவப்பட்டுச் சிறைச்சாலைகள் உருவாகிறது.
வன்முறையற்ற கருத்தியலது பாத்திரத்தில் நாம் கற்கக் கல்வியும் முதலாளியத்தின் மேன்மை சொல்ல, மெல்லப்"பலனை எதிர்பார்க்காது கடமையைச் செய்"என மதங்களும் வந்துவிடுகிறது.
அது, "முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பு அவஸ்த்தையென" முதலாளிகளால் ஓடுக்குமுறைக்குள்ளாகும் மக்களைப்பார்த்துச் சொல்லியபடி, முதலாளிகள் நலமாக வாழ்வதை-அவர்கள் "முற்பிறப்பில் செய்த நன்மை" எனவும் கூற வன்முறையில்லாமலும் நமது மூளையை முதலாளிகளுக்குத் தார வார்த்த இந்த வர்க்கச் சமுதாயத்தில், பற்பல முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய பணி முற்போக்குச் சக்திகளுக்கு இருக்க,அவர்களும் அதைச் செய்துவரும்போது இடையினில் வருகிறது இன்னொரு பூதம் புலிவடிவில்-இலங்கை மக்கள் மத்தியில்-அதாவது உழைப்பவர் மத்தியில் என்று கொள்வதில் சிரமம் இல்லைத்தானே?
இந்தப் பூதம்...
மலைநாடன் இதைத் தொடர்கட்டுரையாக எழுதிக்கொள்வோம்,இப்போது நித்திரைக்குப் போவோம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2009
5 Kommentare:
/முற்போக்குச் சக்திகள் என்ற முற்போக்குச் சிந்தனை இலட்சம் மக்களைக் கொல்லவில்லை./
புளொட் அண்ணைமாரே புல்லரிக்குது
வணக்கம் மலைநாட்டவன்
1985க்கு முன் நீங்கள் செயல்பட்ட ரெசோ மாணவர் அமைப்பு, உங்கள் அமைப்புக்கு எதிராக எதற்காக போராடியது? இது தான் இன்றைய எதார்த்தமும் கூட. இதை நாங்கள் சொல்லவேண்டிதில்லை. நீங்களும் எழுதாலாம், சொல்லாம். அன்று உங்கள் அமைப்பு புலிகள் முதல் அனைத்து அமைப்புக்கு எதிராக, அதன் மக்கள்விரோத போக்கு எதிராக போராடியது. ஜனநாயகத்துக்காவும் போராடியது. இதை மறந்து போனீர்களா?
இதையொல்லாம் மறந்து புலிக்கு பின்னால் தளம் போட்ட நீங்கள், உங்கள் நண்பர்கள் இன்று நாடு சந்தியில் வந்து நிற்கின்றீர்கள். தமிழ் மக்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிய பொறுப்பும் உங்களுக்கும் உண்டு.
சமூகம் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், சுயவிமர்சனத்தில் இருந்து தொடங்குங்கள். 1985 க்கு முன் உங்கள் போராட்டத்ததையும், அதன் பின் நீங்கள் செய்த தவறுகளையும் வைத்து வரலாற்றை சொல்லுங்கள். மக்கள் உண்மை தெரிந்து கொள்வார்கள்.
பி.இரயாகரன்
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
kiyehlDila Nfs;tpf;F kpfr; rhpahd gjpiy rpwpuq;fd; je;jpUf;fpwhh;. mth; nrhy;tJ Kw;wpYk; rhp. mtUila gjpypNyNa kiyehldpd; Nfs;tpf;fhd gjpYk; ,Uf;fpwJ. mth; ,Wjpahf vOJfpwhh;. ~,g;NghJ epj;jpiuf;Fg; NghNthk;.~ vd;W. cz;ik jhd; ,yq;ifapd; ,lJrhhpfs; gyUk; Kw;Nghf;fhsUk; jhk; mt;tf; fhyq;fspy; mw;w Ntz;ba gzpfisahw;whJ itf;f Ntz;ba Nfhhpf;iffis itf;fhJ> elhj;j Ntz;ba Nghuhl;lq;fis elhj;jhJ epj;jpiuf;Fg; Nghdjd; tpisNt ,d;W Gypfspd; cUthf;fKk; jkpo; kf;fspd; ,e;j mtyKk;.
jkpo; kf;fspilNa ,Ue;Jk; K];ypk; kf;fspilNa ,Ue;Jk; kiyafj; jkpo; kf;fspilNa ,Ue;Jk; voe;j kpfr; rhjhuz [dehaff; Nfhhpf;iffis ,dk; fhzj; jtwpaJk; mjw;fhd rhpahd jPh;it Kd; itf;fhJ epj;jpiuf;Fg; Nghdjd; tpisTfisNa ,d;W tiuAk; ,yq;ifapd; vy;yh kf;fSk; mDgtpj;Jf; nfhz;bUf;fpwhh;fs;.
mth;fs; ve;j ve;jr; re;jh;g;gj;jpnyy;yhk; epj;jpiuf;Fg; Nghdhh;fs; vd;W jpUk;gTk; tuyhw;iw tpyhythhpahf tpsf;f Ntz;bajpy;iy vd;W epidf;fpNwd;.
,u[hfud; kiyehld; Nghd;wth;fis Ratpkh;rdk; nra;ar; nrhy;tjw;F Kd;dhy; rpwpuq;fd; Nghd;Nwhiur; Ratpkh;rdk; nra;ar; nrhy;ypf; Nfl;gJ jhd; nghUj;jkhf ,Uf;Fk;. mjw;F Kd;dNu kiyehlidg; gpbj;J Ratpkh;rdk; nra;ar; nrhy;ypf; Nfl;gJ Nfhbf;fzf;fhff; nfhs;isabg;gitid tpl;Ltpl;L Nfhopf;fs;sidg; gpbj;J jz;lid nfhLj;j Gypfs; NghyhfptpLthh; ,uahfud;.
kiyehld; Nghd;wth;fSf;F tFg;ngLg;gij tpl;L tpl;L ,uahfud; nrhy;fpw Ratpkh;rdj;ij nra;tJ rpwpuq;fDf;F ,g;Nghijf;Fkpfg; nghUj;jkhdJ.
rpwpuq;fd; mijr; nra;tPh;fsh?
மலைநாடனுடைய கேள்விக்கு மிகச் சரியான பதிலை சிறிரங்கன் தந்திருக்கிறார். அவர் சொல்வது முற்றிலும் சரி. அவருடைய பதிலிலேயே மலைநாடனின் கேள்விக்கான பதிலும் இருக்கிறது. அவர் இறுதியாக எழுதுகிறார். ~இப்போது நித்திரைக்குப் போவோம்.~ என்று. உண்மை தான் இலங்கையின் இடதுசாரிகள் பலரும் முற்போக்காளரும் தாம் அவ்வக் காலங்களில் அற்ற வேண்டிய பணிகளையாற்றாது வைக்க வேண்டிய கோரிக்கைகளை வைக்காது, நடாத்த வேண்டிய போராட்டங்களை நடாத்தாது நித்திரைக்குப் போனதன் விளைவே இன்று புலிகளின் உருவாக்கமும் தமிழ் மக்களின் இந்த அவலமும்.
தமிழ் மக்களிடையே இருந்தும் முஸ்லிம் மக்களிடையே இருந்தும் மலையகத் தமிழ் மக்களிடையே இருந்தும் எழந்த மிகச் சாதாரண ஜனநாயகக் கோரிக்கைகளை இனம் காணத் தவறியதும் அதற்கான சரியான தீர்வை முன் வைக்காது நித்திரைக்குப் போனதன் விளைவுகளையே இன்று வரையும் இலங்கையின் எல்லா மக்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எந்த எந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நித்திரைக்குப் போனார்கள் என்று திரும்பவும் வரலாற்றை விலாலவாரியாக விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
இரஜாகரன் மலைநாடன் போன்றவர்களை சுயவிமர்சனம் செய்யச் சொல்வதற்கு முன்னால் சிறிரங்கன் போன்றோரைச் சுயவிமர்சனம் செய்யச் சொல்லிக் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். அதற்கு முன்னரே மலைநாடனைப் பிடித்து சுயவிமர்சனம் செய்யச் சொல்லிக் கேட்பது கோடிக்கணக்காகக் கொள்ளையடிப்பவைனை விட்டுவிட்டு கோழிக்கள்ளனைப் பிடித்து தண்டனை கொடுத்த புலிகள் போலாகிவிடுவார் இரயாகரன்.
மலைநாடன் போன்றவர்களுக்கு வகுப்பெடுப்பதை விட்டு விட்டு இரயாகரன் சொல்கிற சுயவிமர்சனத்தை செய்வது சிறிரங்கனுக்கு இப்போதைக்குமிகப் பொருத்தமானது.
சிறிரங்கன் அதைச் செய்வீர்களா?
Kommentar veröffentlichen