Sonntag, Januar 15, 2012

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

நாசார் என்ற "பெருமனிதனின்" பொங்கலுக்கான அறைகூவல்!

இந்தக் குரல் பரவலாகவேண்டும்.

நாசாரது குரல், பரவலான தென்மாநில மக்களது சமுதாய ஆவேசமாகும்.

குறிப்பாக,இந்திய மத்திய அரசின் தாரளவாதப் பொருளாதார இலக்கால்-அந்நியப் பெரு பகாசூரக்கம்பனிகளால் பழிவாங்கப்பட்ட விவசாயிகளின் குரல் இது.

இஃது, முழுமொத்த மக்களதும் உரிமைக்குரலாகிறது.

உணவு உயிர்வாழ்வுக்கு அடிப்படை.அந்தவுணவுக்கு உழவு-விவசாயம் அடிப்படை.அந்த விவசாயி-உழவன் தன் விளைச்சலுக்குக் காரணமான சூரியனுக்கும்,வானுக்கும் நன்றி செலுத்தும் இன்றைய நாளை, நான் பெரிதும் மதிப்பவன்.


அந்த நன்றி செலுத்தும் விழாவுக்கு நானும் சொந்தக்காரனுங்கூட.எனது தந்தை சிறு விவசாயி.அந்த விவசாயமே நமக்கு அடிப்படை.

தமிழகச் சினிமா இயக்குநர்-நடிகர் நாசாரது குரல் இன்றைய தமிழகச் சூழலில் மிகவும் பெரிதான விடையம்.

பாராமுகமாக இருக்கும் தமிழக நடுத்தரவர்க்கச் சூழலில், நாசார் மக்களோடும்,மண்ணோடும் ஒன்றித்திருந்து, தன்னை மண்ணிலிருந்து பிரிக்காதவொரு மகத்தான கலைஞனாகக் காட்டிக்கொண்டிருகிறார்.


தான்- மக்கள் கலைஞன்தான் எனச் சொல்லிக்கொள்ளும் தகமையை இதன்மூலம் நிரூபித்திருக்கிறார்.உலக மகாக் கலைஞன் சார்லிச் சாப்பிளினின் சமுதாய ஆவேசமானது, இரண்டாம் உலக யுத்தத்துக்கெதிராகவும் பாசிசக் கிட்லருக்கு எதிராகவும் மகத்தான எதிர்ப்புக்குரலாகச் "சர்வதிகாரி" எனும் படம் மக்களிடம் அழிவைப் பேசிப் பாசிசத்தை நகைப்புடைத்தது.இதைக் கவனப்படுத்தும்போது,நாசார் அவர்களது இந்தக் குரல் தமிழகத்தைச் சூழ்ந்துவரும் பார்ப்பனியக் காவி நிறப் பாசிசத்தையும்,அதன் விபரீதங்களையும் நாம் கவனத்துள் கொள்ளவேண்டியவொரு புள்ளியை மறுமுனையூடாகக் காவி வருகிறது.

அவரது இந்த உரையாடலானது தொடும் புள்ளி, மக்களை அக்கறை கொள்ள வைக்கும் அரசியலது முன்நிபந்தனை"பார்ப்பனியப் பாசிச ஆபத்தை உணருங்கள்"என்பதே!இதுவேதாம்(நவலிபரல்ப் பார்ப்பனியம்) உழவையும்,உழைப்பையும் வேட்டையாடிப் பாசிசத்தைக் கட்டமைக்க அந்நியப் பெரு நிறுவனங்களுக்கு விவசாயிகளைக் காட்டிக்கொடுத்தும் போதாதெனப் பொங்கலுக்கு நரித்தனமாக ஆதரவாகவும்,வாழ்த்துவதெனும் போர்வையில் மக்களை வேட்டையாடுகிறது.

இந்த நவலிபிரல் பார்ப்பனியப் பாசிசமானது மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்துக்குச் சார்ப்பான இந்திப் பார்ப்பனியச் சாதிகளையெல்லாம் அணிதிரட்டிக்கொண்ட பார்ப்பனியப் பெரு நிறுவனத்தின் மையத்தைப் புதிய பாணியில் தகவமைத்து, அதை நோக்கிய அரசியலை விதைக்கிறது.எனவே,இதற்கு எதிரான குரல்கள் இந்தவகை கேள்விகளுடாகவே விசும்பு நிலையடையமுடியும்.எனவே,நாசாரது குரல் முக்கியமானது.

இதைப் பரவலாக்குங்கள் நண்பர்களே(நண்பர்களுக்கு ஆண்பால்-பெண்பால் கிடையாது)!

இது,மண்ணின் குரல்-மகத்தான விவசாயத்தின் இருப்புக்கான உரிமைக்குரல்.அந்நிய தேசப் பெரும் கொம்பனிகளது ஈனத்தனமான செயலுக்கு-விவசாயத்தின்மீதான அவர்களது அப்பட்டமான இலாபவேட்கையின் கயமைக்கு எதிரானது.எனவே,எமது விடுதலை என்பது,இங்கிருந்துதாம் ஆரம்பமாகிறது.

இதைவிட்டுத் தமிழகத்தை ஆளும் பார்ப்பனிய ஜெயலலிதா தலைமையானது பார்ப்பனியத்தை மீளத் தகவமைக்க விரும்புகிறது.அதன் நிகழ்வுத் தன்மைக்கொப்ப அனைத்து உரிமைகளையும் மெல்ல வேட்டையாடும் பார்ப்பனியமானது இன்று துக்ளக் "சோ" இராமசாமி தலைமையில் துக்ளக்கின் 42 ஆண்டு விழாவைக்கொண்டாடுவதாகச் சொல்லி, அகில இந்தியா தழுவிய பார்ப்பனியச் சாதியின் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பரந்துபட்ட மக்களை அடக்கக் கைகோர்கிறது!

அது,மீளத் தன்னைத் தகவமைக்கிறது.மிக இருண்டவொரு காலத்தைத் தமிழகத்தில் செயற்படுத்தத் துக்ளக் சோவென்ற பார்ப்பான் விரும்புகிறான்.

இது ஒரு தனிப்பட்ட பார்ப்பானின் விருப்பு அல்ல.

இந்தவிருப்பினது துரும்பே சோ.

இந்த விருப்பமானது வளர்ந்து, பெரு நச்சு விருட்சமாக நிற்கும் பார்ப்பனிய நிறுவனத்தின் இருப்புக்கான வியூகத்திலிருந்து எழுவது.இந்தப் பார்ப்பனியமே இந்திய ஆளும் வர்க்கத்தின் விசுவாசமான கருத்தியல் கட்டுமானமாகும்!.இது, வன்முறை சார்ந்தும்,சாரமலும் கருத்தியற் பயங்கரவாதத்தைப் பார்ப்பனிய மதமான இந்து மதத்துக்கூடாக மக்கள்மீது அதிகாரமாகக் கட்டித் தகமைத்துள்ளது.இரண்டாயிரம் ஆண்டாக நம்மீது நிகழ்தப்படும் அடிமைத்தனம்இது.


இதை முறியடிக்கவேண்டிய அவசியத்தை சோவினது சொற்பொழிவே எமக்கு உணர்த்துகிறது:

"தமிழகத்தை,குஜராத்தைப்போலவும் அதை ஆளும் ஜெயலலிதாவை மோடியைப்போன்று அல்லது அவரைவிடவும் மேலாக உயர்த்தவேண்டும்" என்கிறார், துக்ளக் 42 வது ஆண்டு நிறைவு விழாவில்!

அதாவது,குஜராத்தில் இந்துமத வெறியைக் கிளறி 3000 இஸ்லாமிய மக்களை வேட்டையாடியதுபோன்று, தமிழக்கத்தில் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்ப்பனியத்தை நிலைப்படுத்த விரும்புகிறது பார்ப்பனியக் கும்பல்.இந்த பெரு அபாயத்தை நாம் எல்லோரும் உணர்ந்தேக ஆகவேண்டும்.

கோடம்பாக்கச் சினிமாத்துறையுள் ரஜனிகாந் போன்ற தமிழகத்தின் எதிரிகள்,நேரடியாகவே பார்ப்பனியத்தோடு சமரசமாகித் தமது சொத்துக்களையும்,சுகத்தையும் காக்கும்போது,நாசார் என்ற தமிழன் இந்த மண்ணின் மகத்துவத்துக்காகக் கரிசனைப்படச்சொல்லிக் குரல் கொடுக்கின்றான்.அவனது குரலை நாம் அனைவரும் நியாயத்தின் குரலாக எடுத்துக்கொண்டு,அதையொட்டிச் சிந்தித்தே ஆகவேண்டும்.

தமிழகத்தை ஒட்ட மொட்டையடிக்கும் பார்ப்பனியக்கூட்டானது அந்நியப் பகாசூரக்கம்பனிகளோடு கூட்டுவைத்தத் தமிழக வளங்களைக் கொள்ளையிட்டதும் அல்லாமல் முழுமொத்தத் தமிழகத்தின் குடிகளையே கொடிய வன்முறை-சாதியவொடுக்குமுறைகளால் வேட்டையாட முனைகிறது.இதன் கட்டியமே துக்ளக்கின் 42 ஆண்டு நிறைவு விழாவும்,அதன் நிகழ்வுக்குத் தமிழ்நாட்டுக்குப் படையெடுக்கும் பாசிச இந்து அத்வானி-மோடிக் கும்பலும் அதன் பண்டாரப் பாசிசக் கூட்டுக்களும்.

ஆர்.எஸ்.எஸ்.போன்ற நாசியக் கட்டமைவு-கருத்தமைவுக் கட்சிகளையே பார்ப்பனியம் உருவாக்கிவைத்துத் தமிழகத்தை வேட்டையாடும் தலைமையை ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்கும்போது, அதையே முழுமொத்த இந்தியாவுக்குமாக உருவாக்குவதில் தமிழ்நாட்டுப் பர்ப்பான் சோவுக்கு அவசியமாக இருக்கிறது.

ஜெயலலிதாவின் தலைமையில் இந்தயா பூராவுக்கும் உள்துறை மந்திரியாகத் தான் இருந்து, மீள வர்ணாச்சிரம அடிமைத்தனத்தை நிலைப்படுத்துவதில் கவனம் உருவாகியுள்ளது.மக்களே!,இது ஆபத்தானவொரு காலத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. பிளவுபட்ட இந்திய ஆளும் வர்க்கத்தின் முரண்பாட்டைப் பார்ப்பனியமானது தீர்த்து வைக்கும்பொருட்டு எடுக்கும் நிலைகள் யாவும் பாசிசத்தை நோக்கி நகர்வதாகும்.இந்தியாபோன்ற சாதிய அடிமைச்சமுதாயங்களில் இந்தப் பாசிசத்தின் உச்சக்கட்டமானது சாதியப் போராட்டங்களாகவும்,மதவாதப் போராட்டங்களாகவும் எழுந்து மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கிறது. ஜெயலலிதா தலைமையில் இது மீளவும் தலையெடுக்கிறது. இதையொட்டித் தமிழகம் என்ன செய்யப் போகிறது?

இதிலிருந்து மீள்வதாயின் குறைந்தபட்சமாவது பார்ப்பனிய சூட்சியைப் புரிந்தாகவேண்டும்.அதை,பெரியாரது வரலாற்றிலிருந்து புரிந்துகொண்ட தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதை உரைத்துப் பார்க்கவாவது நாசாரது அடிப்படையான கோரிக்கை வழி செய்யட்டும்.

நாம்,நாசாரது அறிவிப்பை,பிரேரணையை,குறைந்தபட்ச அறைகூவலைப் புரிந்துகொள்வோம்,அத்தகைய புரிந்துகொள்வதனூடாகப் பலகோடி நாசார்கள் தமிழகமெங்கும் உதிக்கட்டும்!


அவர்களால்,தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படட்டும்!இல்லைத் தமிழகத்தைப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள் குருதியாற்றில் மிதக்க விடட்டும்!எல்லாம் தமிழக்கத்து இளைஞர்களது கைகளிலேயே உண்டு!

வாழ்க,உரிமைக்கான குரல்கள்,வளர்க உரிமைப்போராட்டம்!-இதுவே,பொங்கலுக்கான எனது அறைகூவலும்-வாழ்த்து நோக்கிய ஒலிப்பும்!!

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி
15.01.2012

Keine Kommentare: