அவளையெண்ணியும்-அவள் முன்னாலும் பாடிய பாடல் வரிகள் இது.
வணக்கம்!
கொழுவி பின்பற்றிய மாதிரி நானும் அந்த நண்பர்களைப் பின்பற்றித் தொடர்ந்து, இப்பாடலைப் போடுகிறேன்.
இப்பாடலானது என்னை மிகவும் பாதித்த பாடலாகும்.
அன்றைய காலத்தில் எனக்கு ஏற்பட்ட எதிர்பால் வினையில் என்னைக் கவர்ந்த முதல் காதலைக் கொண்டாடுவதற்காகத் தினமும் உச்சரிக்கும் பாடலாக இது இருந்திருக்கிறது.
அவளையெண்ணியும்-அவள் முன்னாலும் பாடிய பாடல் வரிகள் இது.
இன்றும் மறக்க முடியாத பசுமையான பாடலாக இது என் மனவானில் தொடர்ந்திருப்பதற்கான ஒரே காரணம், அவள்தான்.அந்த அவளைப் பின் தொடர முடியாத எல்லையில் இப்பாடலே இறுதித் தஞ்சமாகவும் அன்றிருந்திருக்கிறது.மிக இனிமையானதும்,இளமையானதுமான இந்தப் பாடல் என்னைப் படாத பாடு படுத்தியிருக்கிறது.
காதலித்திருப்பீர்கள்!
கேட்டுப் பாருங்களேன்,செவிகளில் அருவி கொட்டும்-விழிகளுக்குள் அந்த முகம் துள்ளிக் குதிக்கும்.
Get Your Own Music Player at Music Plugin
5 Kommentare:
பாட்டுக்கு நன்றி.
பாடலை ஞாபகப்படுத்தியதற்கு பிடியுங்கள் சாபம்.
எத்தனை சகாப்தமாயிற்று இந்த பாடல் கேட்டு..
இனி நித்திரை போச் ....
வாங்க தீவு,எப்படியிருக்கிறீங்க?நலம்தானே?
இத்தகைய பாடல்கள்தானே நம்மை இன்னும் வாழ வைக்கிறது!இதுவும் இல்லாது போனால் செத்தோம்.
கருத்துக்கு நன்றி நண்ப!சுர...
//கேட்டுப் பாருங்களேன்,செவிகளில் அருவி கொட்டும்-விழிகளுக்குள் அந்த முகம் துள்ளிக் குதிக்கும்.//
ஒண்டும் கொட்ட வில்லை. குதிக்கவில்லை..
எங்களுக்கெல்லாம் சக்கரை நிலவே பாட்டுக் கேட்டாத்தான் கொட்டும் குதிக்கும்.
//ஒண்டும் கொட்ட வில்லை. குதிக்கவில்லை..
எங்களுக்கெல்லாம் சக்கரை நிலவே பாட்டுக் கேட்டாத்தான் கொட்டும் குதிக்கும்.//
எட பால் குடி பையன்!
நாம சொன்னது நம்மளப் போல 45 கடந்த இளைஞர்களுக்குத்தான் இப்படி நிகழும்.
எங்கட பையன்களுக்கு-பொண்ணுகளுக்கு நீங்கள் சொல்லுற அதென்ன சக்கரை நிலவா?(அதை நான் கேட்கவேயில்லை) -அது பிடிக்கலாம்.
எங்கள் மனங்களைக் களிப்பிலாற்றிய இந்த உன்னதமான பாடலைக் கேவலப்படுத்தும் கொழுவி என்ற பாலகனை எச்சரித்து, இன்னும் ஒரு முறைகேட்டு,மனைவியோடு(மனைவி இருந்தால்)பாடிப் பார்க்க பரிந்துரைக்கிறேன்!
http://www.musicindiaonline.com/p/x/.VxgcAIxv9.As1NMvHdW/
சக்கர நிலவே தெரியாதா..
பழைய ஆட்களப்பா
Kommentar veröffentlichen