Donnerstag, Dezember 13, 2007

இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல

இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல"Wieviele Freuden werden zertreten,
weil
die Menschen
meist nur in die Hoehe gucken
und was zu ihren Fuessen liegt,
nicht sehen."
- (Johann Wolfgang Goethe)"எவ்வளவு
மகிழ்ச்சிகளை மிதிப்போம்,
அநேமாக மனிதர்கள்
மேல்நோக்கி மட்டுமே
பார்க்கிறார்களேயொழிய
அவர்களது
பாதங்களோடு
என்ன கிடக்கிறதென்பதைப்
பாரார்." -(மகாகவி கோதே)


எமது காலத்தில் நாம் அனைத்து வளங்களையுமிழந்தோம்.அந்த வளங்கள் வெறும் பொருள் சார்ந்தவையல்ல.நம் முன்னோர்கள் தேடிய அறிவை,பண்பாட்டை,அவர்கள் தினமும் சேர்த்து வைத்த எமது மனிதத் தன்மையை,உணர்வு வெளியை- என்றெல்லா வகைப் புரிதலுக்குரிய எல்லா வடிவங்களையும் இழப்பதால், நாம் ஆத்மீக நெருக்கடிக்குள்ளாகிறோம்.


இன்னும் என்ன செய்ய?


ஏதோவெரு சினிமாவில் வரும்"ஆசை ஆசை கேப்பக் களிக்காசை...பாரதிராசா சொன்ன கிரமத்தைக் காட்டு... வேப்பமரக்காற்றிற்க்கு வேலையில்லையே,இதில் வாழ்ந்து வந்தால் உடல் வலியில்லையே..."எனும் பாடலைப் பல தடவைகள் கேட்டுப் பரதவித்து, என் வேப்ப மரத்தையும்,ஆலமரத்தையும், வைரவ கோவிலையும் ,மாலையில் ப+சைசெய்யும் ஐயரின் கையால் வாங்கியுண்ணும் ஒருபிடி பொங்கலில் உள்ள ஆத்ம திருப்தியையும் நினைத்தேங்கி,ஜேர்மனிய இனவாத வயல்களில் இவற்றைத் தேடிக் கால் பதித்தலைகிறேன்.என் கிராமத்தின் தொடர்வாழ்வு அழிந்தது எதனால்?அமைதியான கிரமத்தின் அற்புத நிகழ்வுகள் எங்கள் கோவில்களின் வயற்பரப்புகளில் நடந்தவை.எங்கள் கிரமத்தின் வேப்ப மரத்தில் விளையாடிய கிளியைப் பிடிப்பதற்கு தென்னம் பொந்தில் கையைவிட்டுப் பாம்பிடம் கொத்துவேண்டிய பொழுதில் ஏற்பட்ட வலியை,நஞ்சை-இன்றிந்த இருபத்தோராம் நூற்றாண்டுப் பொருளாதாரமும்,அதன் கொடும் வினையும் தருகிறதே!


எங்கள் முப்பாட்டன் நட்டுவைத்த வேம்பும்,எங்கள் அம்மாக்கள் ப+சிய மஞ்சளும்,எங்கள் விவசாயி தந்த பாசுமதியும் அந்நியனின் வர்த்தக உரிமைக்காக மரபுரிமையாகிறது,இன்று!


இந்த உலகத்தின் மனிதர்கள் மாறிவிட்டார்கள்.பண்ணைப்புரத்திலிருந்து பாட்டுக்கட்டிய இராசையாவின் மகளோ "லைட் ஒன்"சினிமாக் கச்சேரியில் தமிழில்பாடி ஆங்கிலத்தில் "தாங்ஸ்"என்று கோட்டுச் சூட்டோடு சூடான நாட்டில்...


என்னவெல்லாம் இன்னும் மாறும்?


இதோ புத்த பெருமான் கூறுகிறார்:"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்!."


ஆம் மாற்றமே நிரந்தரம்! இப்போது இந்த மாற்றங்கள் மனிதப் பண்பாட்டையும,; அவர்கள் வாழ்வையும் எங்ஙனம் மாற்றுகின்றன?இதுவே எனது கவலை!இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தாம் மனிதர்கள் இப் புவிப்பரப்பில் வாழ முடியும்?உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?


"இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!."இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும் இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.


என்ன செய்வோம்?


எங்கும் யுத்தம்,அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்...விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால் சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்...உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் "இந்த இயற்கை" இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?


இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் ப+ண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?


உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?


எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் "கரியமில வாயு"வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.


உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் "சக்தி" என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு "நேரக் குண்டாக"நேரம் குறித்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:


இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.


2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.


இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில் அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.


அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:


இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் ப+ர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.


அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்;கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:


1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.


2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.


3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.


5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


7):கீழ்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


9): ஞாபக மறிதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.இன்றைய சக்திவளாதாரத்தில் மனித வாழ்வு:


-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.


- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது


-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.


-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.


-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.


-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?


எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?அழகிய ஆணுக்கும்,பெண்ணுக்கும் பின்னால் விழி நகர்த்துவதா வாழ்வின் அர்த்தம்?கோடம்பாக்கப் பெண்களும்,ஆண்களும் மனித வாழ்வின் நெறிமுறைகளைப் பற்றிய உணர்வுப+ர்வமாகத் தெரிந்துகொண்டா ஆடைக்குறைப்புகளைச் செய்கிறார்கள்? மனித சமுதாயத்தை வெறும் காமக் களியாட்டமாக மாற்றியுள்ளச் சீர்கெட்ட சினிமா, மக்களின் மனங்களை எங்ஙனம் பதப்படுத்தியுள்ளது?இந்தச் சினிமாவினது பிடியில் சிக்கிய இளந் தலைமுறைக்கு என்ன பொறுப்புணர்வு- சொல்லித் தெரிந்திருக்கு?சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ ப+சுவென்று "சேட";பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!எந்தப் பொறுப்புணவுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்(இப்படியெழுதும்போது கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சூழற்கேடுகள் பற்றியவொரு மதிப்பீடு ஞாபகத்துக்கு வருகிறது,அதை இறுதியில் பார்க்கலாம்).அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்


இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய விய+கமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.


அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் ப+ர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் ப+ர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் ப+ர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.


எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் ப+ச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.


புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சில ப+ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் ப+ர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வௌ;வேறானதல்ல!


அதாவது இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது திரு மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த ப+ர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.

இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் ப+ர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இனி இக்கட்டுரையின் முன்பகுதியில் சொல்லப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய பேருக்கான சோஷலிச உற்பத்தியிலும் சூழல் வலவாகப் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைச் சற்றுப் பார்க்கலாமென நினைக்கிறேன். பேர்ன்ட் சென்வ்(Bernd Senf) எனும் பொருளாதாரப் பேராசிரியர் தனது பிரசித்திபெற்ற நூலான""Die blinden Flecken der Oekonomie"(ISBN:3-423-36240-5)இல் கிழக்கு ஜேர்மனியிலும் மற்றும் முன்னாள் இருஷ்சியத் தொங்குசதைக் கிழக்கு நாடுகளில் நிலவிய உற்பத்திமுறை சூழலை மாசுபடுத்தியளவு மேற்குலக முதலாளிய நாடுகளைவிட பெரிதுவென்றும்,அது மிக மோசமானதென்கிறார். "...Es ist sicherlich verfehlt,alles,was sich unter dem Namen"Sozialismus"und unter Berufung Marx im Ostblock entwickelt hat,auf das Konto von Marx zu buchen!"-(Die blinden Flecken der Oekonomie.seite:107.)"உண்மையில் அனைத்தும் தவறாகவழி நடாத்தப்பட்டது.என்னென்ன ஷோசலிசத்தின் பெயராலும் மற்றும் மார்க்சியத்தின் பரிசீலிப்புமாகக் கிழக்கு ஐரோப்பாவில் கட்டி வளர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் மார்க்சினது கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும்."என்று குற்றம் சுமத்திவிடும் பேராசிரியர் தொடர்ந்து குற்றஞ் சுமத்துவது மார்க்சிடம் சூழலின் மறுவாக்கம்பற்றிய கணிப்பிருக்கவில்லையென்றும்,அவர் அனைத்தையும் மனிதர்களால் சமப்படுத்தி விட்டதாகவும்,மார்க்சியமும் முதலாளியமும் சூழலைப் பாதுகாப்பதில் தவறிழைத்த இருவேறு நிலைமைகளென்கிறார்.

இங்கு இந்தப் பேராசிரியரின் தரவுகள் உண்மையானவையாக இருக்கின்றன.அவர் கிழக்கு ஐரோப்பாவில் பல காலம் ஆய்வுகளைச் செய்துள்ளார்.எனினும் அவரிடும் பாரிய தவறு என்னவென்றால,; ஷோசலிசச் சமுதாயத்தில் நிலவிய அரசுகளும்,பொருளாதாரவுற்பத்தி முறைமைகளும் அரச முதலாளியமாகவும்,அவையே ஒரு காலக்கட்டத்தில்(முதலாளித்துவ மேற்கு நாடுகளின் வலிந்துருவாக்கும் போர் நெருக்கடி:பனிப்போர்க் காலக்கட்டம்) இராணுவப் பொருளாதாரமாகவும் மாற்றமுற்றது.இந்த நெருக்கடி கூட்டுப்பண்ணை முறைமைகளைச் சிதைத்து, மக்களது தேவைக்கேற்ற உற்பத்தியைப் புறந்தள்ளி சூழலை மாசுபடுத்தும் அணு,மற்றும் பேராயுதத்துக்கான உற்பத்திகளில் இவ் நாடுகளைத் தள்ளி வறுமையையும்,கொடூரச் சூழற் கெடுதிகளையும் ஏற்படுத்தியது.

இதைப் பேராசிரியர் பார்க்க மறுப்பது நாம் புரியத் தக்கதே. பேராசிரியர் இன்று மேற்கு ஜேர்மனியிலுள்ள பேர்ளின் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துகொண்டே பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆய்வாளருமாக இருக்கிறார்.அவரது பார்வையை நாம் மறுப்பதற்கில்லை.ஆனால் அவர் திட்டமிட்ட முதலாளித்துவத்தின் மனிதநல விரோதத்தை மறைப்பதே இங்கே கவலைக்குரிய நிலை.இதுவே இன்றைய பல பேராசிரியர்களின் நிலை!என்ன செய்ய அவர்கள் பேராசிரியர்கள்!! மனிதர்களுக்கு மட்டுமானவொரு புவிப்பரப்பாக மார்க்ஸ் எங்கேயும் ப+மிபற்றிக் கருத்திட்டதாக எனது அறிவுக்குப் புலப்படவில்லை.இருந்தும் பேராசியர் இப்படியெழுதுகிறார்:",:">>In der Marxischem Mehrwerttheorie wird die Quelle der Wertschoepfung einzig und allein in der menschliche Arbeitskraft gesehen.So wichtig ... Die viele umfassendere Produtivkraft der Natur,von der menschliche ArbeitKraft ja nur ein ganz kleiner Teil ist..."<<-(Die blinden Flecken der Oekonomie"seite:103/104)",மார்க்சியத்தின் மதிப்புக்கூட்டுத் தத்துவமானது பொருளுற்பத்தியின் மூலத்தை ஒரேயொரு தனித்துவமான மனிதவுற்பத்தித் திறனுக்குள்ளேயே அனைத்தையும் காண்கிறது.

இதுவே முக்கியமானது...உற்பத்தித் திறனில் உள்ளடங்கிய பெரும்பகுதி இயற்கைக்குச் சொந்தமானது.மனிதர்களின் உற்பத்தித் திறன் உண்மையில் வெறும் சிறுபகுதியே." என்பது எதனையும்விட இயற்கையின் அவசியத்தை வலியுறுத்துவதாக நாம் பார்க்க முடியாது.இந்தப் பேராசிரியரிடமுள்ள மார்க்சிய விரோதப் போக்கே இப்படித் தொடர்கிறது.என்றபோதும் அவரது ஆய்வில் நிலை நிறுத்தப்படும் சூழலின்பாலான மனித மதிப்பீடுகளை நாம் நிராகரிப்பதிற்கில்லை.அவர் பார்க்கின்ற அல்லது மொழிகின்ற குறைபாடுகள் நம்காலத்து பொருளாதார நெருக்கடியின் பெரும்பகுதியாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

Keine Kommentare: