Montag, Januar 28, 2013

புலி விளையாட்டு

{ அய்யா! யார் குத்தியும் அரிசி ஆனால் சரி.

//ஐ.நா சபையில் இலங்கை மீது புதிய தீர்மானம் கொண்டுவரப்படும்: அமெரிக்கா
[ திங்கட்கிழமை, 28 சனவரி 2013, 05:12.25 PM GMT ] [ பி.பி.சி ]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

போர்க்கால குற்றங்கள் தொடர்பில் இலங்கைப் படையினர் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைப் பலவந்தப்படுத்தும் நோக்கோடு இந்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன...//     }




"யார் குத்தியும் அரிசியானால் சரி " ?!,


ஆர் குத்தினாலும் அரிசி  ஆகும்தான்.என்றபோதும்,அந்த அரிசி ஆருக்கானதென்பதையும் தெரிய வேண்டாமா?

இதுவரை , இந்த மனோபாவந்தானே மூன்று இலட்சம் மக்களுக்குக் காடாத்துப்பண்ணியது?

அந்த, "ஆரும் குத்திய அரிசி" இப்போது எங்கெங்கே, எவரது வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது?,இந்த அரசியைக் குத்த இலட்சக்கணக்கான தமிழர்களது பிணங்களெல்லே வீழ வேண்டியிருந்தது? 

இலட்சக்கணக்கான முஸ்லீம்களெல்லே இடம்பெயரவேண்டியிருந்தது-சாகவேண்டியிருந்தது? 


ஆயிரக்கணக்கான சிங்கள மக்களளெல்லே அநுராதபுரத்தோடு சாகவேண்டியிருந்தது?என்ன மீளவும், அதே புலி அரசியற்றொடர்ச்சியாக அரிசி குத்தப் பார்க்கிறோமா?

இனியும்,இப்படி ஆரும் குத்தி அரசி காண நாம் சாக வேண்டி வந்தால், அதையும் அரிசிக்கானதென அநுமதிப்பியளோ?

அமெரிக்கா அண்ணை உலகெல்லாம் பேசும் மனித நேயம் புரியாததோ?





அவர்கள், இன்றுவரை மனிதப்படுகொலைகளைச் செய்தபடி உலகெல்லாம் குருதி சிந்த வைக்கும் மானுடர்கள் தினமும் அவலப்படும்போது, அந்தப் பிசாசுகள் பேசும் மனிதவுரிமை குறித்து நம்புவது சரியாகுமா?

ஆளில்லா விமானத்தின்[US drone attacks  ] மூலமும்,தாழ் அணுக் குண்டுகள் [Using depleted uranium munitions-Uranium-238  ]மூலமும் ஈராக்க,அவுக்கான,பாகிஸ்தான்,ஜெமேன்,மாலி எனக் கொலை செய்யும் மானுட விரோதிகள் தமது நலனுக்காக எமது பிரச்சனைகளைக் கையிலேடுக்கும்போது அதை"ஆரு குத்தியும் அரி ஆனால் சரி" எனும் நிலையில் நம்புகின்றவர்களைக் குறித்து நான் சந்தேகங்கொள்கிறேன்.

இவ்வளவு,அழிவுக்குப் பின்னும்,இழப்புகள்-சிதைவுகளுக்குப்பின்னும் நாம் திருந்தவோ அன்றித் தெளிவான புரிதலைச் செய்யவோ முடியாதவர்களாகவிருந்தபடி, அந்நிய தேசத்தின் தயவில் அரிசி குத்த விரும்பினால் "அவனவன்(ள்) வீட்டுக்குள்ள இன்னொரு குடும்பத்தை அமைப்பது மட்டுமல்ல சமயத்துள் கொல்லப்படுபவர் அந்நியரா அல்லது வீட்டுக் குடியிருப்பாளர்களவென்பதே நமது கேள்வி.

இதைத்தாம் புலி வழியான தமிழீழப் போராட்டத்தில் கண்ட பின்பும் அதே புலி விளையாட்டு நமக்குள்.

என்னவொரு கெடுதியான மனிதர்கள் நாம்!

நமக்கு, அந்நியரை நம்பி நமது மக்களைச் சாகச் சொல்லிப் பிழைப்பது ஒரு வகை வர்த்தகமாச்சு.இதைத் தொடர்ந்தும்,தொடர்ந்தும் செய்கின்றவர்கள் உண்மையில் கடந்த கால அவலத்திலிருந்து தமது ஆன்மாவுக்கு நாணயமற்றவர்களாகவே வாழ்கிறார்களா? அல்லது அறிவிலித்தனமா-அந்நியச் சேவையா-கூலியா?

ப.வி.ஸ்ரீரங்கன்
28.01.2012

Keine Kommentare: