Dienstag, Februar 05, 2013

இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை

 இலங்கையில் இனவொடுக்குமுறை இல்லை,வர்க்க ஒடுக்குமுறையைத்தவிர!

"சுயநிர்ணயம் குறித்து இரயாகரனது சுத்தலுக்கும்-சந்தர்ப்பவாதத்துக்கும் துணைபோவது எதன் பெயரால்?புலியினது மடியில் அரசியல் செய்த அதே பழைய தோசமா கருணாகரன்?"

1:

துவரையும் தொடரும் தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையுள், முப்பதாண்டுகால"தமிழீழப் போராட்டமானது"இலங்கையின் இனப் பகமையின் காரணமென்பதற்குமப்பால்அந்நியச் சதியோடான பின்னப்பட்டதென்பதும்,அதன் வாயிலாகக் கப்பலேறியவர்கள் இந்திய ரோவினது நிகழ்ச்சி நிரலுக்கொப்ப புலியழிவின் வேகத்தோடு இன "ஐயக்கியும்-ஒருமைப்பாடென்பவர்கள்" அதிகமான இன ஐக்கிய வாதிகள்தாம்.

முள்ளி வாய்க்காலில் அழிக்கப்பட்ட மக்களது பிணங்களைக் கணக்குப் பார்க்கத் தெரிந்தவர்களும்,யுத்த உச்சத்தின் முடிவில் அழிந்தவர்களது பிணங்களை வர்க்க ஒற்றுமைக்கான தெரிவாக்கியவர்களுந்தாம் சமவுரிமைக் கட்சியைத் தோற்றுவித்தவர்கள்.

சும்மா, ஆட்டு மந்தைகள்போல் தலையாட்டுவதினால்தாம் நாம்"ஆரு குத்தினாலும் அரிசி ஆனாற் சரிதாம்" என்று ஐக்கியமுரைக்கிறோம்.

முதலில் தமிழ்பேசும் மக்கள்மீதான இனவொடுக்குமுறை சார்ந்த "இன" அழிப்புக்கும் தொடர்ந்து, தமிழ்பேசும் மக்களது ஐதீக நிலப் பரப்புக்களை சுத்த இராணுவ வாதத்தினால் அபகரிப்பதும் அதன்வழியாக இராணுவ அரச பரிபாலனஞ் செய்வதையுங்குறித்து ஒரு நிரலான திட்டவரைவை வைப்பதும்,உடனடியாகச் சிங்கள அரச ஆதிக்கமானது தமிழ்பேசும் மக்களது நிலப்பரப்பைவிட்டு குறிப்பிட்ட முகாங்களுக்குள் முடக்கப்படுவதும்,அதன்வழி சிங்களவர்கள் அநுபவிக்கும் முதல் சமவுரிமையைத் தமிழர்களுக்கு வழங்கும் கல்லையெடுத்துச் சிங்கள ஆளும் வர்க்கத்தின்மீது போடவேண்டும். அதைச் செய்வதென்பது பல்கலைக்கழகக் கலகம்போன்றதல்லவென்பதையும் அறிக!






இதுவே,இன ஐக்கியத்துக்கான முன் நிபந்தனை.(ஏனெனில், கடந்த முப்பதாண்டுகாலமாக யுத்தத்துக்குள் கட்டிப்போட்ட தமிழ்பேசும் மக்களை இப்போது இராணுவரீதியாத் தொடர்ந்து அடக்கியொடுக்கி இராணுவச் சர்வதிகார நிர்வாகத்தின்வழி சிங்கள அரச ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் தந்திரமே தமிழர்களிடம் இன ஐயக்கியம் போதிக்கும்-நம்ப வைக்கும் முயற்சி. இதுவொரு அரசியல் சாணாக்கியமாக முன்னெடுக்கப்படும் இந்தத் தருணத்தில் போலிப்புரட்சி பேசும் எதிர்ப் புரட்சிகரக் குழுக்கள் தமது அரசியல் இருப்புக்காக சிங்கள-இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களையும் கூடவே மேற்குலக அரசியல் ஆதிக்கத்தினதும் அதன் வழி மேற்குலக மூலதனத்தின் விருத்திக்கான பொருளாதார-கேந்திர அரசியலுக்குமான தெரிவுகளில் புரட்சி பேசுவது தெரிந்ததுதாம்.இதைத் தொடருவதற்காகச் சுயநிர்ணயங்குறித்தும்- இனவொருமைப்பாடு குறித்தும் ஒன்றிக்குப்பின் ஒன்று முரணாகவுரையாடும் புரட்டுக் காரர்களைக் குறித்து ஏலவே பேசப்பட்ட தெரிவில் இனியிது குறித்துத் திடமான வெகுஜனப் போராட்டத்தை நிலத்திலும்-புலத்திலும் தொடக்க வேண்டியதே பாக்கி.)

இதற்குப்பிறகு பார்ப்போம் சுயநிர்ணயத்தை.முதலில்முன்னிலைச் சோசலிசக் கட்சியின்"சம உரிமை இயக்கம்"முன் வைக்கும்  சமவுரிமையென்பதைத் தமிழரசுக்கட்சி-கூட்டணியினது சம பந்தி போசன போராட்டத்தையும் பொருத்திப்பாருங்கள்.

சும்மா,அந்நியச் சதிக்குத் தலையாட்டிச் செல்ல வேண்டுமென விரும்பும் மனிதர்களுக்கான தெரிவு"இன ஐக்கியம்-சமவுரிமை "என்பதன் அத்தியாவசிய விழுமியங்களது தெரிவிதென்பதும் அதைப் பிரயோகிக்க வேண்டுமானால் இராணுவ முகாங்களாகவும் அந்த முகாமில் தவங்கிடந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் வாழும் மனிதர்கள்மேல் ... கழித்து மகிழும் சிங்கள மேலாதிக்கத்தின்தமிழினவழிப்புக்கான இனவொடுக்குமுறை இதுவென்பதைப் பிரகடனப்படுத்தி சிங்கள மக்களும், இந்தச் சமவுரிமை இயக்கமும் ஏற்கட்டும்.

"தமிழ்பேசும்"மக்களை இராணுவ வலுக்கரத்தால் அடக்காதே.தமிழ்ப் பிரதேசத்திலிருந்து சிங்கள இராணுவத்தை விலத்து,தமிழ்பேசும்மக்களை இயல்பாக வாழவிடு" எனும் அடிப்படை மனிவுரிமை சார்ந்த  அரசியல் கோரிக்கையை வைத்துச் சிங்கள மக்களுக்குள் நிகழ்த்தப்படவேண்டிய அறைகூவலை-நடைமுறைப் போராட்டத்தைத் தமிழ்பேசும் மக்களுக்குள் இனவாதத்தைக் கலைத்துப்போடென மாற்றியடிக்கும் தந்திரத்துக்குத் தமிழ்பேசும் மக்கள் தார்மீக ஆதரவு தரவேண்டும்?

இன ஐக்கிய முகிழ்ப்புக்கு இப்படியான இராணுவவாதம் நீங்கிய-கெடுபிடியற்ற, இராணுவக் கண்காணிப்பற்றதும்,அதன் ஓடுக்குமுறையற்றதுமான உரிமைதாம் இலங்கையில் அதீதமானதும்-முதன்மையானதுமான சமவுரிமைச் சுயவுணர்வாகும். சமவுரிமையின் ஆரம்பமே சிங்களப் பிரதேசமெங்கும் சிங்களவர்கள் அநுபவிக்கும் இராணுவப் பயமற்ற(அண்ணளவாக) சூழலைத்தமிழருக்கும்-தமிழ்ப் பிரதேசமெங்கும் ஆக்குவதற்கான அரசியலை முன்னெடுத்து அதை இல்லாதாக்குவதாகும்.இதைவிட்டு,தமிழ் மக்களை இராணுவவொடுக்குமுறைக்குள் வைத்து ஒடுக்கியபடி,அவர்களைக் கண்காணித்தாபடி,அதைச் சாத்தியப்படுத்தும் அரச ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் தமிழ் மக்களிடம் இன ஐயக்கியம் குறித்துரையாடுவது ஒரு முறையில் சிங்கள இராணுவவாத ஆட்சியைக் குறித்த கவனத்தைத் திசைதிருப்புவதுதாம்.

எனவே,தமிழ்ப்பிரதேசமெங்கும் இருக்கும் இராணுவ ஆதிக்கத்தையும் அதன் ஒடுக்குமுறையையும்-கண்காணிப்பையும் இல்லாதாக்கும் அரசியல் போராட்டத்துக்குச்சிங்கள மக்களைத் தயார்ப்படுத்தவேண்டும்.தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொண்ட இராணுவம் வெளியேற்றப்படவேண்டும்.அது,சிங்கள மக்களது விடுதலையின் ஒரு பகுதியாகும்.பெரும் தொகை இராணுவத்தை ஜனநாயகரீதியாக இல்லாதாக்கி,இலங்கையில் முதலில் புரட்சிக்கான நிலவரத்தின் முகிழ்ப்பையும்,ஆளும் வர்க்கத்தின் பலம் பொருந்திய இராணுவத்தைப் பலமிழக்க வைக்கும் தந்திரத்தையும் தமிழ்ப் பிரதேசத்திலிருந்து விலத்தப்படும் இராணுவத்தின் இன்மையில் நிகழ்த்தப்பட வேண்டும். இந்த அறை கூவலைச் சிங்கள மக்களிடமிருந்து ஆரம்பித்துச் சிங்கள இராணுவத்தின் ஆதிக்கத்தை இல்லாதாக்கும் அரசியலோடு  தமிழர்களிடம் வாருங்கள்.

அதைவிட்டுவிட்டு,மேலோட்டமாகக் கருத்தியில்மட்டத்தில் பேசப்படுவதும்,தேவையற்ற மாணவர்கள் கலகமென்பதெல்லாம் அந்நியருக்கும்,ஆளும் அரச ஆதிக்கத்துக்கும் செய்யும் மறைமுகமான ஒத்துழைப்பே.இதுதாம் அரசியல்-வியூகம்-சாணாக்கியம்.

2:











========================================
பௌசர்,மற்றும் கருணாகரன் அறியத் தருவது.

=========================================

Fauzer Mahroof : // முன்னிலை சோசலிசக்கட்சி தன் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமையை இனவாதம் என்கின்றனர். இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடாத எல்லா நிலையிலும் தான், அது இனவாதம்;. மறுதளத்தில் வெறுமனே சுயநிர்ணயத்தை முன்வைத்துவிட்டால் மட்டும் போதாது. மாறாக நடைமுறையில் போராடாத வரை, இனவொடுக்குமுறைக்கும் இனவாதத்துக்கும் மறைமுகமாக துணைபோதலாகும்.நடைமுறையில் ஒரு கட்சி தன் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கோட்பாடாக கொள்ளாமல், சுயநிர்ணயத்தின் நடைமுறை கூறுகள் பலவற்றை தன் திட்டத்தில் உள்ளடக்கியபடி, இனவொடுக்குமுறை மற்றும் இனவாதத்தை எதிர்த்து நடைமுறையில் போராடும் கட்சியை இனவாதக் கட்சியாக காட்டுபவர்கள் இனவாதிகளாகவே இருக்கின்றனர். இங்கு இவர்கள் சுயநிர்ணயத்தைப் பற்றி, குறுந்தேசியம் கொண்டுள்ள அதே பிரிவினைவாத அரசியலின் பிரதிபலிப்போடு தான் இங்கு முன்வைக்கப்படுகின்றனர். //


===================================
பௌசர்,மற்றும் கருணாகரன் அறியத் தருவது.
======================================

என்ன விஷயம்?

ஒரு இனத்தின் இலட்சக் கணக்கான மக்களை அழித்துவிட்டும்,சிங்களப் பாசிச அரசுக்குக் காட்டிக்கொடுத்துத் தமிழ்பேசும் மக்களை அந்தப் பாசிச இனவொடுக்குமுறை ஜந்திரத்துக்கு அடிமையாக்கிய நீங்களெல்லோரும் மீளவும், மக்களை மொட்டையடிக்கும் கருத்தியலோடு என்ன தமிழரது சிரசைச் சிரைக்க அடுத்த ஆட்டமா?

சுயநிர்ணயம் குறித்து இரயாகரனது சுத்தலுக்கும்-சந்தர்ப்பவாதத்துக்கும் துணைபோவது எதன் பெயரால்?புலியினது மடியில் அரசியல் செய்த அதே பழைய தோசமா கருணாகரன்?

சுயநிர்ணயங் குறித்துத் தத்துவார்த்த விமர்சனத்தைச் செய்யுமளவுக்கு-சித்தாந்தவுரையாடலாகக் குறுக்குமளவு நமது 30 ஆண்டுகால போராட்ட அரசியல் வந்துள்ளதை நினைத்தால் நீங்களெல்லோரும் அந்நியச் சக்திகளது அரசியல் தெரிவில் அவர்களது கைப்பாவைகளாகவிருந்த விட்டேந்திகளெனச் சொல்வதே சரியாகப் பொருந்தும்.

இனவாதம் அற்ற  ஐக்கியத்தின் பெயரால் இப்போது கூடுகிறீர்களா?

இது,எப்போதிருந்து கருணாகரன் உங்களுக்கான ஞானம் பெற்ற பொழுதாக மாறிக்கொண்டது?

பௌசரை விடுங்கோ!

போராட்டத்தின் ஒரு சிறு களத்தைத்தானும் அவர் அறியார்?

சுயநிர்ணயவுரிமை எனும் கோசமும்அதை உரிமைசார் மானுட அடிப்படை வாழ்வாதார இருப்புக்கான பாதுகாப்புக் கவசமாகவும் மனிதர்களில் ஒரு பகுதியினர் பிரயோகிப்பதற்கான தார்மீக நியாயம் எப்படியுருவாகிறது?

பண்டு தொட்டு,ஒடுக்குமுறைக்குள்ளாகுபவர்கள் தமது இருத்தலுக்கான பாதுகாப்பு ஆயுதமாக அதை மேற்கொள்வது மானுடவுரிமை என்று இன்றைய முதலாளித்துவ ஜனநாயகவாத அரசுகளே இதைச் சட்டமாக்கி வைத்திருக்கிறது. லெனினை-ஸ்டாலினை-ரொஸ்க்கியைத் தாண்டிய இன்றைய புரிதலில் இந்தச் சுயநிர்ணயத்துக்கானவுரிமைக்கான போராட்டம் பலதரப்பட்ட இனங்கள் தமது ஒடுக்குமுறைக்கெதிரான அரசியல் ஆயுதமாக வைத்திருப்பதைக் கடைந்தெடுத்த தமிழ் இயக்கவாத மாபியாக்கள் தமது நலனுக்கொப்ப திரிப்பதை ஆதரிப்பவர்கள், மக்களது எதிரிகளே!

நீங்கள் அனைவரும் ஏலவே பரந்தபட்ட மக்களது எதிரிகளாகவே வாழ்ந்தவர்கள்.இனியும் அப்படியேதாம் அந்நியருக்காக நமது மக்களை மொட்டையடிப்பதாகவிருந்தால் அதை யாரால் தடுக்க முடியும் கருணாகரன்?

முப்பதாண்டுகாலமாக மக்களைக் கருவறுத்த புலிக்குக் காவடியெடுத்த நீங்களே அந்நிய நிகழ்ச்சி நிரலுக்கொப்ப கேடுகெட்ட இரயாகரன் குழுவுக்கு வக்காலத்துவேண்டுவது எதன் பொருட்டென கேட்கமாட்டேன் "இனம், இனத்தோடுதாம்" சேரும்.இது,அரசியலில் பிரத்தியேகமான முறையில் நாம் கற்றவைதாம்.இது,இரயாகரன் குழு தனது எஜமானச் சேவையில் முன்னிலை சோசலிசக் கட்சியால் தாம் வாழ்வதற்கான-இருத்தலுக்கான தெரிவில் ஏகாதிபத்தியங்களது வர்ண முலாம் பூசப்பட்ட "புரட்சியில்" மையங்கொள்ளும் தெரிவே இந்தச் சுயநிர்ணயம் குறித்து திரிப்பு.

ஏகாதிபத்தியங்களது கைக்கூலிகள் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தின் திசைவழியை இலங்கைக்குக் குச்சொழுங்கையாகப் போடும்போது அதைக் தார்போட்ட வீதியாக்கும்"புரட்டுப்"புரட்சியாளர்களை நாம் சேர்பிய சேர்ட்யா போப்போவிச்சிடமிருந்து[Srdja Popovic] நிறையக் கற்கலாம்.

இரயாகரனையும்,அந்த மாபியாவின் வட்டத்தையும், அதற்குள் இருந்து அநுபவித்து,அறிந்தவன் நான்.

இவர்களது குழுவாத நலனுக்கான தெரிவில் புகலிடச் சிந்தனை மையமாக நாம் இணைந்துருவாக்கிய அணியை மாபியாத்தனமாக ஒரு கட்சியாக்க வேண்டுமெனச் சொன்ன இரயாவினது போலிப் புரட்சிகரப் பாத்திரத்தை ஏற்காது வெளியேறியவன் நான்.

ஓரு புரட்சிகரக் கட்சியின் பாத்திரத்தையே கேலிக்குட்படுத்திய திரிவுவாதி இரயாவின் ^^சுயநிர்ணயவுரிமை குறித்த திரிபுக்கு^^ வக்காலத்து வேண்டும் உங்களோடு சவால் விடுகிறேன். உங்களுக்குத் தத்துவார்த்தத் திராணியிருந்தால் என்னோடு சுயநிர்ணயங் குறித்துப் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள்.

அதை இந்த முக நூலிலேயே செய்யலாம்.

எப்படி வசதியோ-அப்படியே வைச்சுக்கொள்ளலாம்.

மற்றும்படி எமது மக்களைத்"தமிழீழஞ்"சொல்லிக் கொலைக்களத்துக்கனுப்பிய காயடிக்கும் தத்துவமில்லை இந்தச் சுயநிர்ணயத்தின் அரசியல்.

புலிகள் செய்த அதே மாபியாத்தனமான அரசியலைத்தாம் இந்தப் புரட்டு வேடதாரியும்-மானுட விழுமியமே இல்லதா எதிர்ப்புரட்சிகரச் சக்திகளது சேவகர்களான இரயாகரன் துழுவும் மக்களைக் காட்டிக்கொடுத்துத் தமது நலனுக்காவும்-பிழைப்புக்காவும் ரீல் விடும்போது,அது சிங்கள-இந்தியப் பாசிச அரசுகளுக்கான சாதகமான அரசியலைப் பேசுவதுகண்டு  நீங்கள் வகுப்பெடுக்கும் நிலைக்குப் புரட்சிகர அரசியல் சீரழியவில்லை!

இதை சொல்லி " வாருங்கள் விவாதிப்போம்"என்று கேட்டுக் காத்துக் கிடக்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
05.02.2013

Keine Kommentare: