Sonntag, Februar 17, 2013

புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் ...

புரட்சியின் துன்பியல் முன்னிலைச் சோசலிசக் கட்சியாய்-சம உரிமையாய்...


அரேபிய வசந்தமும் ,ஆபிரிக்க அடிமாடுகளும்:


மீபத்துள் நிலத்திலும் -புலத்திலும் நடைபெறும் கட்சியரசியல்சார் கூட்டுக்கள்-இணைவுகள் ,இலங்கையின் அரசியல் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதென்றுரைப்பதில் அரேபியவுலகத்துள்  மற்றும் ஆபிரிக்கக்கண்டத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அத் தேசங்களது பிரசைகள் தம் இன்றைய  தலைவதியைத் தரிசிக்க வைக்கிறது.இருனிசியா,எகிப்த்து,இலிபியா மற்றும் மாலி,கொங்கோ,சூடான்,ஈராக்-அவ்கானிஸ்த்தான் ,சிரியா போன்ற தேசங்கள் மேற்குலக  வர்த்தக நலனின் யுத்தக்களத்தால் (பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்) அடிமாடுகளைக் கொலைவதைப்போல் மனிதர்களைக் கொன்றுபோடும் [ http://www.uruknet.info/?p=m95210&hd=&size=1&l=e   ]தேசங்களாக்கப்பட்டிருக்கிறது.குறிப்பாகச் சிரியாவின் கடந்த காலச்  சர்வதிகார ஆட்சியைவிட இன்று, மேற்குலக ஆர்வத்தினது யுத்தத்தின் மூலம் அழிக்கப்பட்ட மக்கள் தொகையோ பல பத்தாயிரத்தைத் தாண்டிவிட்டது.

குஞ்சு-குருமானெல்லாம் கொல்லப்பட்டு மேற்குலக ஊடகத்தால் ஜனநாயத்துக்கான புரட்சியின் தெரிவுகளாக்கப்படும் "மனித நியாயத்துக்கெதிரான,அசாத்தின் சர்வதிகாரத்தின் கொலைக்களிவை" யென வகுப்பெடுக்க இந்தச் சிறுசுகளது உடல்கள் காட்சியாகிறது.

ஆபிரிக்கா,அரேபியத் தேசங்களில் மேற்குலக-அமெரிக்கக் கூட்டுப் படைகளான நேட்டோவும்[NATO],அமெரிக்கச் சி.ஐ.ஏ.[CIA]வும் தொடர்ந்து நடாத்தும் சதிப்புரட்சிகள் பல் வடிவங்களில் உலகத் தேசங்களது சுயாதிபத்தியத்தைக் கேள்விக்குட்படுத்திவருகிறது.

இந்த மேற்குலக யுத்தச் சதிகள் பயங்கரவாதத்துக்கெதிரான போரை எங்ஙனம் நடாத்துகின்றன?[ பார்க்க: http://www.hintergrund.de/201302132445/politik/welt/was-steckt-hinter-den-us-interventionen-in-afrika.html  ]

அதன் வடிவங்களென்ன?[பார்க்க :  

எத்தகைய குழுக்கள் இவர்களால் தோற்றுவிக்கப்படுகின்றன, பின் ,அவற்றைத்தாக்கி அழிக்கும் போர்வையில் குறிப்பிட்ட தேசத்தைத் தமக்குள் கையகப்படுத்தி மறு காலனியத்துவத்தை நிறுவித் தேசங்களது வளத்தைத் திருடுகின்றனவென்று பரவலாகப் பதியப்படுகிறது மாற்று ஊடகங்களில்.[ http://www.uruknet.info/?p=m95177&hd=&size=1&l=e  ]

தற்போது,ஆபிரிக்க ,அரேபியத் தேசங்களில் மேற்குலகுக்குப் போட்டியாகும் சீன மூலதனத்தையும்,சீனாவின் பொருளாதார முன்னெடுப்புகளையும் சகிக்கமுடியாத மேற்குலகமும்-அமெரிக்காவும் தமது ஆதிக்கத்தைச் சீனாவிடமிருந்து காப்பதில் புதிய யுத்த முகாங்களை உருவாக்கும் உள்நோக்கில் ஏலவே தம்மால் வளர்க்கப்பட்ட  இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை அழிப்பதெனும் போர்வையில் மாலியில் தொடக்கப்பட்ட யுத்த முன்னெடுப்பு ,அடுத்த 30 ஆண்டுகள்வரை ஆபிரிக்கக் கண்டம் பூராகவும் தொடரும்.இது,சீனாவினதும்,இந்தியாவினதும் ஆபிரிக்க-அரேபிய வர்த்தகப்-பொருளாதார ஒத்துழைப்புகளை இங்கெல்லாம் அடித்து நொருக்கும் திட்டமாகவே யுத்தம் அப்பாவி மக்கள்மீது திணிக்கப்படுகிறது.

இதன் போக்கால் ,சுயாதீனச் சமுதாயம்-தேசம் எனும் இறையாண்மைசார் அர்த்தமெல்லாம் பொய்த்துப்போயின.இது தாண்டியும் அமெரிக்காவினது வானேவித்[Drone  ] தாக்குதலெல்லாம் ஒரு தேசத்தினது இறைமைசார் ஆதிக்கத்து எல்லையைக் கூடக் கேள்விக்குள்ளாக்கித் தேசங்கள் யாவையும்  ஏகாதிபத்தியத்தின் அதி தொழில் நுட்ப வலுவுக்குமுன் செல்லாக் காசாக்கிவிட்டுள்ளது.இனிவரும் யுத்தக்களம் இந்த வானேவியின் மையத் தாக்குதல் மூலோபாயத்தின்[http://en.wikipedia.org/wiki/Drone_attacks_in_Pakistan  ] மூலமே திறக்கப்படுகிறது.இங்கே,பெரும்படைகளை நகர்த்தும்  இராணுவ உளவியல்,அதன் படைகளது வலு,உளவியல் மட்டம்,சூழல்-புற நிலவரம்,சம்பந்தப்பட்ட  தேசத்தின் இராணுவ வலு,மக்களது உளவியல் போன்ற ஆய்வு- செலவெல்லாம் அவசியமின்றி ஆளும் வர்க்கம தனக்குள்ள விருப்பத்தின்வழி, எந்த நேரத்திலும் எத்தேசத்தையும் தாக்கியழிக்கும் மிகக் கொடுமையான தனிக் குழுவினது தெரிவுக்கு-தனிநபரது தெரிவுக்கு யுத்தம் வந்துவிட்டது.இதைச்  சாதிகமாக்கியது இந்த வானேவி நுட்பமேதாம்!ஆக, இன்றைய நிலவரப்படி இந்த வானேவியின்வழி அதிகமாகக் கொல்லப்பட்டவர்கள் "பங்கரவாதிகள்" அல்லப் பாலகர்களே அதிகமானவர்கள். அப்பாவிப்  பாலகர்களை எவர் கொன்றாலும் அஃது கொலையே - மானுட விரோதமே.

இந்தப் புதியவகை நுட்பத் தெரிவின்[UAV technology  ] யுத்த வியூகத்துள் முட்டுப்படும் பெரும் வல்லரசுகளது நலன்களுக்காகப் பலியாக்கப்படும் சிறுதேசங்கள்-தேசிய இனங்கள் இன்றுமிக நெருக்கடியான காலத்துள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். மேற்குலகுக மற்றும் ஆசிய மூலதனத்துக்கிடையிலான  போட்டிகள் ஒன்றையொன்று தலைவெட்டும் யுத்தக் களமாக இந்த புவிப்பரப்பு மாற்றப்பட்டபின்  தத்தம் செல்வாக்கை நிலைப்படுத்தும் பரிட்சார்த்தக்களமாக ஆபிரக்கா-ஆசியா மட்டுமல்ல உலகத்தின் அனைத்துக் கண்டமுமே மாற்றப்பட்டுள்ளன. இதுள்,ஆபிரிக்காவில் பொருளாதார முன்னெடுப்பை வலுவாக முன்னெடுக்கும் சீன மூலதனத்துக்கு அதைக் காக்கும் யுத்த ஜந்திரம் கிடையாது.அதை, ஏலவே தயார்ப்படுத்தி நேட்டோ அணியாக வைத்து இயக்கும் மேற்குலகம் சீனாவை,இருஷ்சியாவை ஈராக்கிலிருந்து மட்டுமல்ல இலிபியாவிலிருந்தும்  பல இலட்சம் கோடி டொலர்களை இழக்க வைத்து அடித்துத் துரத்தியது.இப்போது ஆபிரிக்காவிலிருந்து துரத்தப்படும் சீனா ஆதிக்கத்தை மீள நிலைப்படுத்தும் வலு சீனாவுக்குக்கிடைக்குமோ இல்லையோ, தெரியாது.ஆனால்,சீனாவின் எல்லைக்குட்பட்ட-செல்வாக்குக்குட்பட்ட தேசங்களிலிருந்து சீனாவை அடித்துத் துரத்துவது அவ்வளவு எளிய காரியமில்லையென்பதைச் சீனா இலங்கையில்  பரிச்சார்த்தமாகச் செய்தே வருகிறது.





இதன் உச்சம் முள்ளிவாய்க்காலில் புலியைத் துவசம் செய்தது மட்டுமல்ல இப்போது புதியதொரு லொபிக் கட்சியின்வழி அது தனது அரசியல் வியூகத்தை மிக அகோரமாக முன்னெடுக்கிறதென்பதைக் குறித்தே இக்கட்டுரை புரிய முனைகிறது.

இத்தகையவொரு அந்நிய நலன்களாற்றூண்ட்டப்பட்ட யுத்த போராட்ட அழிவைப் பலமுறைகண்ட இலங்கைவாழ் மக்கள் மீளவுமொரு அழிவு அரசியலின் தெரிவுக்குட்பட்டு அந்நிய நலன்களுக்காகக் குருதி சிந்தும் சூழலொன்று செயற்கையாகத் திட்டமிடப்பட்டு வருகிறது! இனங் கடந்த ஒற்றுமையோடு இலங்கை தழுவி உயிர்கொன்று விலை செலுத்தும் காலமொன்று மக்களனைவரையும் அண்மித்து வருகிறது.அந்தக் காலமானது இனம்-மொழி-மதங் கடந்த மனிதவுயிர்களது அழிவில் அடையப்படும் அந்நிய நலன் குறித்தே நாம் பெரிதாக  ஆய்வு  செய்யவேண்டும்.

வன்னிக்குள் கைகோர்த்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு: 

முள்ளிவாய்க்கால் படுகொலைக் களத்தைத் திறந்து,புலிகளையும்-மக்களையும் அழித்துதவி ,வியூகமமைத்த சீன-இந்திய மூலதனமானது இருஷ்சியாவின் கூட்டோடு [The Shanghai Cooperation Organisation  ] மேற்குலக நேட்டோ சார் [The Mont Pelerin Society  ] ஏகாதிபத்தியத்தைத் தென்னாசியப் பிராந்தியத்தில; கேள்விக்குட்படுத்திகொண்டன.இலிபியாவில் பழிவாங்கப்பட்ட தமது மூலதனத்துக்காக இலங்கையில் மேற்குலக ஆதிக்கத்தை மொட்டையடித்த அரசியல் உளவியலாகும்;ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான ஆதிக்க உளவியல் இஃது!

ஏலவே,மேற்குலக ஆதிக்கத்தின் சரிவு தொடங்கிய கடந்த  தசாப்தத்துள் மேற்குலகமானது  தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து அடுத்த 50 ஆண்டுகளுக்காவது நிலைநிறுத்தவேண்டிய தேவையின் பொருட்டு அரபுலகத்தில் -ஆபிரிக்கக்  கண்டத்துள் புரட்சியை ஏற்றுமதி செய்தன.அதன் தொடரில் இலங்கையை நோக்கித் திரண்டுவரும் இன்றைய அரசியல் யுத்த மேகங்கள் பல் கட்சிகளது கூட்டணியோடு[ ரணில் தலைமையிலான ஜக்கிய முண்ணனி ]  மேற்குலக நவலிபரல்களது எடுபிடிக் கட்சியான  யூ.என்.பி.[ UNP ]யைக் கொண்டு [ Prominent MPS members who advanced to policy positions included the late Chancellor Ludwig Erhard of West Germany, President Luigi Einaudi of Italy, Chairman Arthur F. Burns of the U.S. Federal Reserve Board and U.S. Secretary of State George Shultz. Among the contemporarily prominent personalities, current President Václav Klaus of the Czech Republic as well as acting politicians such as former Prime Minister Ranil Wickremasinghe of Sri Lanka...    http://en.wikipedia.org/wiki/Mont_Pelerin_Society  ] இலங்கையில் பாரிய ஆட்சிக் கவிழ்ப்புக்கான தயாரிப்புகளை முன்னகர்த்தத் திட்டமிடுகின்றன.இது முற்றிலும் மேற்குலக, சீன-இந்திய மூலதனக்துக்கிடையிலான முரண்பாடாகும்.அவர்களது ஆதிக்கத்தின் இருப்புக்பகான யுத்த முகிழ்ப்பாகும் இதுவெனப் புரிந்தே ஆகவேண்டும்.இங்கே,இடதுசாரியப் புரட்சி-புடலங்காய் எல்லாம் முன்னிலைச் சோசலிசக் கட்சிக்குள் முகிழ்க்கும்-காய்க்குமென்பதெல்லாம் வடிகட்டிய அயோக்கியத் தனம்!இன்றைய கட்சார் ஆதிக்கம் அதன்வழியான கட்சியின் செல்வம்-முதலீடு,அதுகொண்டிருக்கும் வர்க்க உறவு,அதன் தலைமையே புதிய ஆளும் வர்க்கமாக மாற்றப்பட்டிருக்கும் சூழலையெல்லாம் 18 ஆம் நூற்றாண்டுப் புரிதலுக்குள; வைத்துணர முடியாது(இதற்கு ஒரு சையிலை[  Christoph Seils : Parteidämmerung] பிசானை[Prof. Dr. Andreas Fisahn ஆதிக்கம்_Herrschaft im Wandel: Überlegungen zu einer kritischen Theorie des Staates ]ஆர்னிமைப் [Prof.Dr.Hans H. von Arnim :ஒழுங்கமைவு_Das System படித்தே ஆகவேண்டும்).

ஏலவே,கிழக்கைரோப்பா மற்றும் அரேபியவுலகத்தில் வெற்றிக் கொடி நாட்டிய ஏகாதிபத்தியங்கள் உண்மையில் சீனாவை நேரடியாக இலங்கையில் மீளச் சந்திக்கப்போகிறது.இதற்குத் தோதாக இரணில் தலைமையில் கூட்டணியமைத்து அவர்களுக்குப் பின்னே ஒளிக்கிறது மேற்குலகம்.அவ்வண்ணம் இயலாதபோதுதாம் அடுத்த கட்டம் போப்பொவிச்சின் ஒட்போர்[ Otpor!  ] ஒரு இருனேசியப் பாணித் தெரிவை இலங்கையில் நகர்த்த முனையும்.அதற்கு முன் முந்திக்கொண்டிருக்கும் சீனாவை முன்னிலைச் சோசலிசக் கட்சிக்குள் பாருங்கள்.

ஆக,இந்த இலங்கையானது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குட்பட்ட  நட்பார்ந்த (உரையாடல் பங்குதார) வெளிநிலைப் பார்வையாளத் [Sri Lanka was granted dialogue partner status in the Shanghai Cooperation Organisation (SCO) at the group's 2009 summit in Yekaterinburg  ] தேசமாகும். இந்த நிலையில் புலிகளது பாசிசச் சேட்டையை 2009 இல் அழிக்க ஏசியாவுக்கான நேட்டோவான இந்த [Shanghai Cooperation Organisation  ]அணியே உதவி வழங்கியது[Cooperation on securityThe SCO is primarily centered on its member nations' Central Asian security-related concerns, often describing the main threats it confronts as being terrorism, separatism and extremism. However evidence is growing that its activities in the area of social development of its member states is increasing fast.].

இலங்கையின் ஆளும் வர்க்க இருவேறு முகாங்கள்:

தற்போது சீனாவினது செல்வாக்குக்குட்பட்ட இலங்கை ஆளும்வர்க்கத்தின் ஒரு பிரிவானது இலங்கையுள் மேற்குலகச் சார்புத் தரகு முதலாளிகளைப் பலமாகப் பழி வாங்கியுள்ளது.இலங்கையின் புதிய பொருளாதாரப் போக்கில்-உறவினது தெரிவில் ,பழைய பெருச்சாளிகளான தரகு முதலாளிகள் பலர் எந்த அரச ஒத்துழைப்புமின்றித் தமது மூலதனத்தைப் பெருக்கும் அநுகூலமான அரசியலின்றி மகிந்தா சகோதரர்களது காலத்துள் விரக்தியோடு மேற்கைப் பார்த்துக் கிடக்கிறார்கள்.அதன்வழி தமிழர்களது பிரச்சனைகளையும் கையாள்கிறார்கள்.இன்று, இவர்களது தெரிவாக இவர்களனைவரும் யு.என்.பி.க்குப் பின்னால் நின்று  மகிந்தா-சீன-இந்தியக் கூட்டுக்கெதிரான மேற்குலகச் சதிக்கு உதவவே காத்திருக்கின்றனர்.

இதுள்,சீனாவானது ஏலவே தனது தேசத்துள் வாழும் பல்லின மக்களது இனமுரண்பாட்டின்மீது ஒரு புதிய போக்கான முறையில்(இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடுகளை நேரடியாகத் தீர்ப்பதற்கெடுக்காது ,தேசத்தில் வாழும் அனைத்து இனங்களது பிராந்தியங்களில் பொருளாதார அபிவிருத்தி, ,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்-கல்வி  மற்றும் பொருளாதாரமுன்னெடுப்பின் வழி இனமுரண்பாட்டுக்கான காரணிகள நீர்த்துப்போக வைத்தல், இன ஐக்கியத்தை வலியுறுத்தும் தேசியவொருமைப்பாட்டைக் கட்டியெழுப்புதலெனப்[ https://www.jungewelt.de/loginFailed.php?ref=/2011/07-16/001.php  ]    தீர்வுகளைப் பரிசீலித்து வெற்றி கண்டதென்பதை சீனாக் கட்சியின் சித்தாந்தத் தலைவர் இலீ யூன்று (Li Junru]  கூறுகிகிறார்.(  http://www.srisagajan.blogspot.de/2011/07/blog-post.html  )

இதன்வடிவத்தில் இலங்கையிலும் இதையே தொடர்வதின் நீட்சியாக ,நமக்குள்  பேசப்படும் இனவொற்றுமை,ஐக்கியமெல்லாம் இந்த வியூகத்தின் தொடர்ச்சியே.

மகிந்தா கூறிவரும்"நாம் அனைவரும் இலங்கையர்கள்.இங்கே ,இனவாதம்-இனமுரண்பாடுகள்,இனப்பகமை விலத்திய இலங்கையின் குடிகள் நாம்,இலங்கைத் தேசமானது எல்லோருக்குமான தேசம்" என்பதை ,இலங்கைச் சிறுபான்மை இனங்கள் நம்ப மறுக்கும்  நிலையில் சீனா-இந்திய ஆளும் வர்க்கங்கள் கண்டடைந்த புதிய வியூகமே முன்னிசைச் சோசலிசக் கட்சியும் அதன் சமவுரிமை இயக்கமும் என்பதைத் தெளிவாக உரைக்கலாம்.

கடந்தவொரு நூற்றாண்டாக இலங்கைத் தேசத்துள் சிறுபான்மை இனங்கள் ஏமாற்றப்பட்டு-இனரீதியாகவொடுக்குமுறைக்குட்பட்டுவரும்போது அவ்வொடுக்குமுறைக்குடந்தையான இலங்கைத் தேசப் பேரினவாதக் கட்சிகள் பேசும்"இன ஐக்கியம்-சம உரிமை" என்பதையெல்லாம் இலங்கைச் சிறுபான்மை இனங்கள் ,இலகுவில் நம்பும் நிலையில்லாததையுணர்ந்த சீன வியூகமானது திடீரெனத் தகவமைத்த முன்னிலைச் சோசலிசக் கட்சியானது சீனாவின் நோக்கை மிக நேர்த்தியாகச் செய்யத்தக்க உளவியலைக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமுதயமானது அத்தகைய வியூகத்தை அண்மித்தே செல்லும். ஈழப்போராட்டத்தின் பின் தமிழ்ச் சமுதாயத்தின்  சமூகவுளவிலானது இத்தகை வியூகத்தைத் திறன்படயாற்றும் களமாகவே இருக்கின்றது.

இலங்கையில் நிகழப்போகும் மேற்குலகச் சதியை வெற்றிகொள்ளவேண்டுமாயின் இனங்கடந்த மக்களது"நாம் அனைவரும் இலங்கையர்கள்"எனும் மொன்னைத் தேசியவுணர்வு அவசியமானதாகும்.நிலவும் மகிந்தவின் தலைமையிலுருவாகிய சீன வர்த்தகத் தொடருறவுகளை மிக நேர்த்தியாகக் காப்பதற்கான தெரிவு இது.

முன்னிலைச் சோசலிசக் கட்சியைக் கொண்டு ஒரே கல்லில் பல மாங்காய்களைப் பறிக்க முடியும் ! முன்னிலைச் சோசலிசக் கட்சியின் இந்த "ஐக்கியம்-சமவுரிமை" என்பதன் அரசியல் இலங்கை ஆளும் வர்க்கத்துக்கென்பதுவும் இதுவொரு லொபிக் குழுவினது தெரிவென்பதும் அதன் அடிப்படை வேலைத் திட்ட அஜந்தாவே சாட்சி பகர்கிறது.சிங்களப் பெரினவாதக் கட்சிகளைவிட முற்போக்கு வேசம்போடும் கட்சிகளைக்கொண்டு , இலங்கை த் தொழிலாள வர்க்கத்தையும் தேசிய வொடுக்குமுறைக்குள் முகங்கொடுக்கும் சிறுபான்மை இன மக்களையும் மிக இலகுவில் சோசலிசச்  சாயம் பூசிய  சமவுரிமைத் தூண்டிலில் மாட்ட வைக்க முடியுமென்பதைப் பலரும் முள்ளி வாய்க்காலுக்குப்பின் உணர்வதைவிட இன்றைய வுலகப் பொருளாதார நெருக்கடியில் பெரும் பகுதி மக்களது சிந்தனையோட்டத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும்.

முன்னிலைச் சோசலிக்கட்சியும் சீன வியூகமும்:

தமிழர்கள்,சிங்களவர்கள்,முஸ்லீம்கள்,மலையகத் தமிழர்கள்,பரங்கியர்கள் எனும் ஐதீகத்தின்வழியிலான தேசிய-அடையாளங்கள் அற்றவொரு இலங்கைக்கான பொருளாதாரஞ்சார்ந்த தேசியவினவுருவாக்கத்தைக் கோரும் முன்னிலைச் சோசலிசக்கட்சியானது அத்தகையவொரு தேசியவினவுருவாக்கத்தை முகிழ்க்கும் உற்பத்தியுறவுகளேயற்றவொரு பாழடைந்த தேசத்துள் முதலீடு செய்யும் சீன-இந்திய மூலதனத்தின் நலனுக்கொப்ப இந்த மொன்னைத்தனமான தேசியமுரைக்கிறது.

இதை இந்திய ஆளும் வர்க்கத்துக்கிசைவான"தேசபக்த" அடிமைத் தேசியவுணர்வாக நாம் பார்க்க முடியும்." முதலில் நான் இந்தியன்,அதன்பின்பே நான் தமிழன்" எனச் சொல்லும் பெரும்பகுதித் தமிழர்களைக் காணமுடியும் தமிழகத்துள்.இது,இந்திய ஆளும்வர்க்கத்தின் கூட்டுக்கொள்ளைக்கான பாதுகாப்பைப் பாட்டாளிய வர்க்கத்திடமிருந்து கோரிக்கொள்ளவே "பாரதமாதாவுக்கு" தேசியச் சேலைகட்டிக் கற்புணர்த்தும் பக்தர்களை உருவாக்கியது. அதன் தார்ப்பாரில் இந்தியாவானது ஒடுக்கப்படும் தேசியவினங்களின் சிறைக்கூடமென்பதை நாம் உணராதிருக்கும் சதியைப் பரவலாகப் பலர் பேசியுள்ளனர்.குறிப்பாக,எஸ்.வி.இராஜதுரை இது குறித்து நிறையப் பேசியுள்ளார்.

இதுவேதாம் இலங்கைக்கானவொரு தேசியவுணர்வாக மலர்வதை இந்திய-சீன-சிங்கள ஆளும் வர்க்கங்களின் கனவாக இருக்கிறது.இதைச் சற்று வரிவாகப் பார்ப்போம்.

இலங்கையில் இன அடையாளங்கற்றவொரு இலங்கைத் தேசியத்தைக் கோருமிவர்களது தெரிவு,முன்னிலைச் சோசலிசக்கட்சியினது தெரிவில்லை என்பதை முதலில் புரிந்தாகவேண்டும்.

இது சீனாவின் தெரிவு.

சீனத் தேசத்துள் பல்லினங்களது முரண்பாடுகள் உச்சத்தையெட்டாதிருப்பதும் அங்கு பிளவுக்கான போக்குகள் மெலினப்பட்டுப்போனதும்,இருஷ்சியாவில் லெனினது தெரிவுக்குப்பின்னும் இனங்கள் பிளவடைந்து இருஷ்சியப் பெடரேஷன் ஓட்டாது உடைந்து சிதறியதும் கவனிக்க வேண்டியவொரு புள்ளி இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பதைத் தோழர்கள் மறுத்தொதுக்கப்படாது. இந்த ஒட்டாத உறவே மேற்குலகச் சதிக்குள் பல்வேறு தேசியவினங்களை இருஷ்சியப் பெடரேசனுக்குள் வீழ்த்தி ,அந்தத் தேசத்தைச் சின்னாபின்னப்படுத்தியது.அதன் உச்சமான முகிழ்ப்புகள் வளர்ந்து, கிளைவிடுவது ஜோர்ச்சியவில் என்பது ஒரு சிறு உதாரணம் மட்டுமே!

இருஷ்சியக் கம்யூனிசக்கட்சியானது இனங்களது முரண்பாட்டை அரசியல் ரீதியாகத் தீர்க்க முனைந்துகொண்டது.அதைச் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தீர்க்கும் ஸ்ராலினின் பொறிமுறையோடு இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் கவனித்துக்கொண்டது.

இதன் விளைவானது,தேசத்துள் நிலவிய ஏற்றவிறக்கமான பொருளாதார பண்பாட்டு வளர்ச்சியுள்,இனங்களுக்கிடையிலான பொருளாதார "ஏற்ற இறக்கம்"சமமற்ற பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்துகொண்டது. இதனால் தேசியவினங்கள் மேலும் பிளவடையவும்,பொருளாதார வளர்ச்சிகண்ட பிரதேசங்களால் புறக்கணிக்கப்படவும் நேர்ந்தது.இதன் உளவியற்றாக்கமானது இறுதியில் சோசலிசக் கட்டுமானத்தையொட்டிய பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான பாட்டாளியவர்க்கக் கூட்டுணர்வில் வெடிப்பை ஏற்படுத்திக்கொண்டதென்பது மறுக்க முடியாத நிரூபணமாகும்.பொருளாதாரத்துள் முன்னிலையடைந்த பிரதேசங்களின் வளர்ச்சியழடந்த தேசியவினங்களது ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவிப்பதில் இது சோசலிசக் கட்டுமானத்தையே கேள்விக்குட்படுத்தியது.

இதுள் சீனக் கொம்யூனிசக் கட்சியானது இருஷ்சியப் படிப்பனைகளை மேலும் வளர்த்தெடுத்துக்கொண்ட நிலையிலும்,சீனத் தேசத்துள் வாழும் பல் தேசியவினங்களது தேங்கள்,மொழி வழியான தனித்துவ அடையாளங்கள்,பாரம்பரிய பொருளாதாரம்,பிரதேசமெல்லாம் பிளவுண்டும்,பொருளாதாரச் சமமின்மையுமாகவே கிடந்தது.எனினும்,கடந்த முப்பதாண்டுகளுக்குள் சீனாவானது புதிய தெரிவாக இனங்களுக்கிடையிலான முரண்பாடு,சுயநிர்ணயவுரிமை யென்பதையெல்லாம் பின்தள்ளிவைத்தவுரையாடலாகவுரிமையாகப் பார்த்துக்கொண்டு, இதற்குப் பதிலாக சீனாவினது உற்பத்தியை அதிகரித்துப் பரவலாகப் பிரதேசங்கள்,இனங்களுக்கிடையிலான சமத்துவமான வளர்ச்சிக்கான முன் நிபந்தனைகளை வைத்தியங்கியது.இதன் தெரிவு சந்தைப் பொருளாதர இலக்காகவே இருந்தது.கூட்டுப்பண்ணைப் பொறிமுறைக்குக் கற்பூரம்காட்டிக் கட்டிப்போட்டது.

இதன்வழியாகச் சீனத் தேசத்துள் ஒரு வலிய தேசியவினச் சார்பான கட்டம் உருவாகியது.அவ்வண்ணமே பொருளாதாரரீதியாகவும் அதள் கட்டம் செழுமையடைந்தது.இது,பல் தேசியவினங்களை புறக்கணிக்காத வியூகத்தோடு பொருளாதர-வேலை வாய்ப்புகளைப் பரவாலகவே விஸ்தரித்தபோது தேசியவினங்கள் சார்ந்த கோரிக்கைள் அனத்தும் நீர்த்துப்போயின(திபேத்தியப் பிரச்சனையானது மேற்குலகச் சதிக்குள் இருப்பது). இதன் சாத்தியத்துள் பல்வேறுப்பட்ட இனங்களுக்கிடையிலான பொருளாதார ஆர்வம்-வளர்ச்சிகள்,பங்கீடுகள் ஓரளவு பகிரப்பட்டுள்ளன.இது,இரஷ்சியாவில் நிகழாது"அரசியல்-சட்டவாதத்துக்குள்"பேசப்பட்டு உரிமையாகப்பட்டிருப்பினும் பொருளாதார ரீதியான சமமின்மை அவர்களைப் படுகுழியில் தள்ளும் மேற்குலகத்தின் வியூகத்துக்குப் பலியாக்கியது.

இதன் தெரிவில்,சீனாப் புரிதலுக்குட்பட்ட நகர்வை இலங்கை இன முரண்பாட்டுக்குள் பொருத்தும் சீன வியூகமானது,இலங்கைக்கு பாதகமற்றவொரு தேசியவின உரையாடலையும்,பொருளாதார ரீதியான முன்னெடுப்புகளையும் பரவலாகச் செய்கிறது.இதன் தெரிவில் "நாம் இலங்கையர்கள்"எனும் வாதத்தை நிலைப்படுத்தி ,மக்களை ஒருவித மாயைத் தேசியவினவுணர்வுக்குள் வீழ்த்தி ஏமாற்றுவதாகவிருந்தால் இந்த "நாம் அனைவரும் இலங்கையர்கள்.இன-மதம்,மொழி பேதமற்ற இலங்கையின் குடிகள்" என்று கருத்தியல்வலுவும் செயற்பாடுமிக்கக் கட்சி நகர்வும் அவசியமாகிறது.மக்களை இதை நோக்கியொரு கட்சி வழிநடாத்தும் மிகப்பெரும் வேலைத்திட்டம் அவசியமாகிறது.






"நாம் அனைவரும் இலங்கையர்கள்.இனம்-மதம்-மொழிகள் கடந்து ஒன்றுபட்டு இலங்கையை முன்னேற்றுவோம்"என்று பரவலாகப் பல கட்சிகள் பேசிக்கொண்டன.குறிப்பாக மகிந்தாவின் கட்சி.தமிழ்க் குழுக்களெனும் பல்வேறு இலங்கை அரச லொபிகள் பேசிக் கோசமெழுப்பின.ஆனால்,இலங்கையில் பல்லாண்டுகளாக இனவாத ஒடுக்குமுறைக்குட்ட தேசியவினங்கள் இந்த பாரம்பரியச் சிங்களக் கட்சிகளை நம்பும் நிலையில் அவர்களது சமூகவுளவில் இல்லை.இதை 2011 இல் புரிய முற்பட்ட சீன அரசானது,மக்களது உளவியலைக் கணிக்கவெளிக்கிட்டது.அதுள் பெறப்பட்ட தெரிவு பின்வருமாறிருக்கிறது:

1:இலங்கை மக்கள் பரவலாகச் சோசலிசக் கட்டுமானத்தை விடுதலைக்கானதென புரிகின்றனர்,

2:தேசியவிடுதலைக்குத் தியாகஞ் செய்த மக்களான தமிழ்பேசும் மக்களை மீளவும் மேற்குலகம் பயன்படுத்தும்,

3:இத்தகைய சிறுபான்மை மக்கள் இனத்துள் விடுதலை-போராட்டம் என்பதைச் சொல்லக் கூடியாதான அரசியல், நிலவும் அரசை எதிர்ப்பதென்பதாக வடிவங்கொண்டிருக்கும் அரசியல் அவாவாகக் கனன்றுகொண்டிருக்கிறது,

4: இத்தகையவுளவியலை வெல்வதற்கான தெரிவில் சோசலிச அமைப்பினது கோரிக்கைகள் மேலும் அவர்களது எதிர்பார்ப்புக்குத் தீனிபோடும்,

5:புலம்பெயர் தமிழ் மக்களை எந்தச் சக்திவென்றெடுக்குதோ அது கணிசமாக இலங்கைப் பிரச்சனையுள் தாக்கத்தைச் செய்யும்,இலங்பை அரசின் ஸ்த்திரத்தன்மையை இது கேள்விக்குட்படுத்தும்,

6: இதன் தெரிவில் முக்கியமாகப் புலிப்போராட்டத்தின்வழியாக போராட்டவுணர்வு,தேசாபிமானங்கொண்டவர்களும்,அவர்களை அண்மித்த முற்போக்குக் கருத்துடைய வட்டத்தையும் வென்றெடுக்கும் ஒரு சக்தி அவசியமாகும்.இதுவே,மேற்குலக லொபியாக மாறும் புலம்பெயர் தமிழரைக் கையக்கப்படுத்துங் சிறந்த வழியாகிறது.

இந்தத் தெரிவில் இலங்கையைப் புரிந்தகொண்ட சீன அரசியல் ஆதிக்கமானது இலங்கையில் பரிச்சார்த்தமாகச் சில முன் நிபந்தனைகளை உருவாக்குவது காலத்தின் அவசியமாகவே இருக்கிறது.இதுவேதாம் தென்னாசியப் பிராந்திய அரசியலின் தலைவிதியாகிறது.இதற்கான காரணமானது மேற்குலக-ஆசிய மூலதனத்திரட்சி மற்றும் அவைகளுக்கிடையிலான முரண்பாடுகவிரிந்து நம்மைக் கட்டிப்போட முனைகிறதென்பதை இப்போதைக்கு புரிந்துகொள்வது மட்டுமே அவசியமாகிறது நமக்கு.

இங்கே,இத்தகைய திட்டத்துக்கான புதிய கட்சி அவசியமாகிறது.

ஏலவேயிரந்த ஜே:வி.பி ஆனது மக்கள் செல்வாக்கைப் பரவலாகச் சிங்கள நடுத்தரவர்க்கத்திடம் வைத்திருக்கிறது.பரந்த அமைப்புரீதியான செயற்பாட்டில் அதிக அநுபவமுடையது.எனவே,அதைத் தூக்கி நிறுத்துவதாவிருந்தால் அது சிங்கள மக்குளகு;குள்ளேயேதாம் நிற்கும்.அதன் கடந்தகால இனவாதம் இதையே சீனவரசுக்குக் கற்பித்தது.ஆக,இலங்கை மக்கள் அனைவருக்குமானவொரு கட்சியைப் புதிதாவுருக்குவதைவிட ஜே.வி.பியில் இருந்து முரண்பட்டெழும் சக்திகளாகவும்,அவை தற்கால இலங்கை அரசியல் நெருக்கடிக்கு மாற்றை வலியுறுத்துபவர்களாகவும் அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிரானவர்களாகவும் காட்டப்படவேண்டும்.இதன் தொடர் தயாரிப்புகளில் ஜே.வி.பி உடைவு,குமார் கைத்து,அரச எதிர்ப்பு-அரசு இக்குழுவுக்கு எதிர்ப்புவெனப் பல நாடகத்தோடு சீன-இந்திய முலதன நலனுக்கானவொரு  கட்சி ரெடி.

இதன்வழி சீனாவினது அரசியல் வியூகம் வெற்றியடையமுடியுமாவென்பதைக் காலந்தாம் தீர்மானிக்கும்.ஆனால் கணிசமான தமிழ்பேசும் மக்களை இது அரசியல்ரீதியாக மொட்டையடித்து,அவர்களது புரட்சிகரவுணர்வை ஆசிய மூலதனத்துக்கேற்ப மாற்றியமைக்கும். இது,இலங்கைப் பாட்டாளிய வர்க்கத்துக்கு எந்தவிதத்திலும் உதவப்போவதில்லை!மாறாக, அவர்களைப் புதிய ஆசிய மூலதனத்துக்குப்பின் அணிதிரட்டிக் காட்டிக்கொடுக்குஞ் செயலாகவே நாம் அடித்துரைப்போம்.

சுயநிர்ணயத்தின் தோற்றமும்,நீட்சியும்:

இதைக் கட்டுரையின் இறுதியில் கொசுறாகக் குறித்து வைப்பது அவசியமானது.

"சுயநிர்ணயவுரிமையென்பது மார்க்சிய வட்டத்துக்குள் உருவாகுவது-உரித்தாவது.அதற்கு வெளியில் அது இல்லாதது.எனவே,அவர்கள் கூறும் சுயநிர்ணயத்தை ஏற்க முடியாது.எனினும்,பாலிஸ்த்தீனியர்கள்,குர்த்தீஸ் மக்களினங்களின் சுயநிர்ணயப் போராட்டதை நாம் ஆதரிக்கிறோமென்கிறார் இரயாகரன்"

இந்த வாதத்தின்படி சிலவற்றுள் இரயாவைப் பொருத்திப்பார்ப்போம்.

ஜனநாயகமென்பது மார்க்சியத்துக்கு முன்னமே உருவாகியது.அதுள், உள்ள குறைபாடுகளைத் தாண்டியதைப் புதிய ஜனநாயகமாகக் கோரும் மார்க்சியமானது அதன் கருவின் தெரிவிலேதாம் உருவாகக்கூடியதாகவுமிருந்தது.அப்போது, முதலாளியத்துள் உருவாகப்பட்ட ஜனநாயக விழுமியத்தையெல்லாம் இந்த இரயாக நிராகரித்து விடுவாரெனில் யோசிக்க வேண்டியதுதாம்.

அடுத்துச் சுயநிர்ணயவுரிமையானது மனிதவுரிமை சட்டப்பொதிக்குள் ஐ.நா சட்டவரைவு ஆர்ட்டிக்கல் 1.பல் தீர்ப்புகளது முடிவின் [Artikel 1 der UN-Menschenrechtspakte und verschiedenen IGH-Urteilen als „universelles“ und „völkergewohnheitsrechtliches Prinzip“ mit erga omnes-Charakter  anerkannt wurde .Die Charta der Vereinten Nationen erwähnt das Selbstbestimmungsrecht der Völker in den Artikeln 1 und 55, jedoch ohne es zu definieren.Eine bindende Verpflichtung der Vertragsstaaten zur Einhaltung des Rechts auf Selbstbestimmung geht dagegen aus den beiden Menschenrechtspakten der Vereinten Nationen hervor, die 1966 von der UN-Generalversammlung angenommen wurden und nach Erreichen der nötigen Anzahl an Ratifizierungen 1977 in Kraft traten. ]வழியாக வந்தடைந்த உலகு தழுவிய உரிமையாக ஏற்கப்பட்ட இந்த மனிவுரிமைச் சட்ட நிர்ணயத்தையே[Völkerrecht die territoriale Integrität aller Staaten, die, wie es in der Friendly Relations Declaration vom 24. Oktober 1970 heißt  ] ஏற்க மறுக்கிறதாக இரயாகரனது மறுப்பினது தெரிவிலிருந்து புரியத்தக்கதாகும்.

முதலாளித்துவ அமைப்புள்தாம் 8 மணி நேர உழைப்பு,8 மணி நேர ஓய்வு,8 மணிநேரவுறக்கமென்பதெல்லாம் தொழிலாளர்களது உரிமையா ஏற்கப்பட்டதும்,அதுசார்ந்து இசைவாக்கமுடைய சட்டங்களும் உருவாகின.

இப்படி,முதலாளித்துவத்துள் வந்தடைந்த சமுதாயமானது நிலப்பிரபுத்துவத்துக்கு முற்போக்கானது.அடிமையுடமைச் சமுதயத்தின் அடுத்த வளர்சியில் உருவாகிய அனைத்து மனிவுரிமைசார் போராட்டப் பெறுமானங்களையும் இவர் நிராகரிப்பதில் கூச்சமற்றவொரு கோணங்கித்தனமாக உரையாடுவதை என்னவென்பது?

முதலில் இரயாவுக்குச் சுயநிர்ணயத்தின் ஆரம்பகாலத் தோற்றமே தெரியவில்லை!

இதன் முளையானது இமானுவல் [ Immanuel Kant ]கன்டினது"பொறுப்பு"[ „Mündigkeit“ ]எனும் கருத்தாகத்தினது தெரிவிலிருந்தே இது உருவாக்கம் பெறுகிறது.

அதன் தெரிவானது 17 ஆம் நூற்றாண்டினது முரண்பாடுகளது தெரிவில் ஒரு பிரதேசத்தின்மீதான பொறுப்பை ஒரு மனிதக் குழுவானது பொறுப்பேற்பதைக் குறித்தான தத்துவாhத்தக் கருத்தாக்கமாகவிரிகிறது.இதிலிருந்துதாம் மார்க்சியமே பல தேடுதலைக் குறித்து இமானுவல் கன்டை ஆய்வு செய்யும் நோக்கை மார்க்சுக்குக் கொடுத்தது.

இதன் பின்பாக பிரஞ்சியப் புரட்சியில் 1789-1799 [ Französischen Revolution  ]இரண்டு கட்டமாகவுயர்ந்த முரண்பாடுகளது உச்சமானது மக்களது சுயாதீனத்தைக்[„Volkssouveränität“  ] கோரிக்கொண்டது.

இதன்பிறகு,முதலாவது உலக மகாயுத்தத்துக்குள் வந்துவிட்ட தேசங்களது உரிமைசார்ந்து இந்தச் சுயநிர்ணயமானது சுயாதிபத்தியமுடைய தேசங்களது உரிமையாக மாறுகிறது.

அப்போது, அமெரிக்க 28 வது ஜனாதிபதி திருவாளர் வோட்றூவ் வில்சன்[Thomas Woodrow Wilson  ]14 அம்சத் திட்டவரைவில் [Wilsonsches System_14 Punkte  ]இதை வலப்படுத்தியபோது,அதே காலக்கட்டத்தில் லெனின் இதை இருஷ்சியத் தேசிவினங்களுக்கிடையிலான முரண்பாட்டிலிருந்து 1914 இல் மேலும் விருவுக்குட்படுத்தி அதையொரு தேசத்துள் வாழும் பல்வகைப்பட்ட தேசிவினங்களது சுயாதிபத்தியத்தின் தெரிவாக்கும் முயற்சியில் வெற்றியடைந்தார்.

இதைக்கூட மறுப்பவர்கள் மார்க்சிஸ்டாகவிருந்தால் அஃது நமது சாபக்கேடு!ஆனால், இரயாகரன் திரிப்பது எஜமானக் கட்டளை.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.02.2013

Keine Kommentare: