Mittwoch, April 29, 2009

ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!

இனிமேற்றாம் நாம் மேற்குலகத்துக்காக ஆங்கிலத்தில்...


சொந்த மக்களது ஜனநாயக உரிமையை மறுத்த அராஜகவாதப் புலிகள் தமது அழிவோடு மக்கள் விடுதலைப் போராட்டத்தையே தவறாகப் புரிவதற்கான முறைமைகளையுஞ் செய்தபடியே மரித்துப் போகிறார்கள்.அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்கிய தமிழ் ஆளும் வர்க்கம், தமிழ்பேசும் மொத்த மக்களையும் புலிகளைவைத்து மொட்டையடித்த ஈழத்து அரசியல் வரலாற்றில் இனியும் அதே தோரணத்தில் இன்னொரு துடைப்பம்...


ஈழத்தமிழர்களுக்காக-அவர்களது இன்றைய இழி நிலைக்காக இனிமேற்றாம் ஆங்கிலத்தில் எழுதி,மேற்குலகத்தை-அந்தத் தேசத்து மக்களை அணுகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.மிகப் பெரும் பாசிசப் புலி இயக்கம்-பெரும் வலைப் பின்னலுடன்கூடிய சர்வ வல்லமையுடைய புலி இயக்கம் தன்னால் சரிவரச் செய்யமுடியாத அரசியலைச் சில தனிநபர்களால் ஈடேற்றிவிட முடியுமெனும் தனிநபர் முனைப்புகள், உலக ஏகாதிபத்தியங்களிடம் எமது பிரச்சனை குறித்துக் குறிப்புணர்த்த முனைகிறார்களாம்.ஏனெனில், இந்த மேற்குலகத்தினது -நமது அவலம் தெரியாத-அவர்களது இருண்ட நிலைக்கு இவர்கள் இயம்புவது ஒளிக்கற்றைகளாம்!

"மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்-தேசியத் தலைவர்",பன்னாடைகளெல்லம் பண்ணிய போராட்டத்தின் இன்றைய நிலைக்கு, இனித்தாம் சரியான செல் நெறி வழங்கப் போகிறார்களாம். உலக அரசியல் அரங்கில் முற்போக்குச் சக்திகளைக் கேவலமாகக் கருதிய புலிப் பாசிஸ்டுக்கள் இன்று, புதிய கதையோடு தமது தப்பை மற்றவர்களைத் துரோகியாக்கி அவர்களது தலையில் கொட்டித் தப்பிக்கின்றனர்.இந்த இலட்சணத்தில் இனிமேலும் மேற்குலக எஜமான்கள் மூலமாகத் தமிழருக்குத் தீர்வு தேடும் மகாப் பெரிய மூளைகள், "தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகனின் வழி காட்டலில் கூஜாத் தூக்கியே தீரவேண்டுமாம்.இதை ஆங்கிலத்தில்,பிரஞ்சில்,டொச்சில்,இன்னுமேன் ஸ்பானிஸ் வரை மொழிமாற்றிச் சொல்லணுமாம்.


அதாவது:"எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன்,எங்கள் தாகம் தமிழீழம்" என்றாம்!


கேவலம்!


இன்றைய உலகத்தில் தேசியவிடுதலைப் போராட்டங்கள் குறித்துச் சரியான பார்வையற்ற"படிப்பாளிகள்" மேற்குலக ஏகாதிபத்தியங்கள் முதல் ஜெயலலிதாவரை எமது பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி ,விண்ணப்பிக்கின்றார்கள்.இவர்கள்,கடந்த கால் நூற்றாண்டாக நாம் செய்த போராட்டத்தில் புலிகளது கொடியதும்,ஈனத்தனமுமான அரசியலை வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது,இன்றைய அழிவு அரசியலுக்காக மேற்குலகத்திடம் ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!







முதலில், இலங்கையினது பிரச்சனையை அந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க முனையுங்கள்!


"உங்கள் பிரச்சனை" பாராளுமன்றத்துக்குள் இல்லை-அது,வெளியிலேதாம் இருக்கிறதென்பதைச் சொல்லிக் கொடுங்கள்.அதன்பிறகு அவ் மக்களை நம்பி, அவர்களையே போராட அணித்திரட்டிக் கொள்ளும்போது அங்கே, நாம் எவரைச் சார்ந்தியங்கவேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பர்.


எமது மக்களுக்கு அந்நிய உலகத் தூதர்களுடாகப் புனைந்த "தமிழீழம்", இனி அவசியமல்லை!


அவர்களுக்குத் தெரியும் தமது விலங்கை ஒடிப்பதற்கான தெரிவைச் செய்ய.புலிகள் அதை மிக இலகுவாகச் சொல்லியபடியேதாம் மரணித்துப் போகிறார்கள்-சரணடைகிறார்கள்-சங்கதிகளைச் சிங்கள முகாமிலிருந்து இப்போது சொல்லவும் முனைகிறார்கள்.


ஈழத்தவன் ஏதோ உரிச்ச வெங்காயமென்று எண்ணியபடி ஜெயலலிதா முதல் இணைய அநுதாபிகள்வரை எமது மக்களது பிரச்சனைக்காக ஈழம்-மேற்குலகமெனக் கருத்தாடுகிறார்கள்.இதையேதாம், பாசிசப் புலிகளும் அன்றுமுதல் சொல்லி, இன்று அழிந்து சுடுகாட்டில் ஈழத்தைக் கொண்டுபோய்விட்டுள்ளார்கள்.இதை மீளவும் அதே கதையோடு தொடங்குவதற்கு நீங்கள் எல்லோரும் எதற்கு?



மக்களது பிரச்சனையின் மூல காரணி என்ன?



அதன் வேர் எங்கு வரையும் ஓடுகிறது?



இன்றைய-அன்றைய மேற்குலகமும், தேசிய விடுதலைப் போராட்டங்களை இங்ஙனமே தத்தமது நலனுக்காகக் கையாளுவதில் உலகத்தில் பற்பல இனக் குழுக்களை வேட்டையாடித் தமது வருவாய்கேற்ற உலகைத் தயார்ப்படுத்துகின்றன!இதன் பாத்திரத்தில் இலங்கை அரசால் அழிவுறும் ஈழத் தமிழருக்காக மேற்குலகம் எந்த மயிரையும் புடுங்காது!


இத்தகைய புடுங்கலை அவர்களால் செய்யமுடியாதென்பதுற்கு குர்தீஸ் இன மக்களது விடுதலைப் போராட்டத்தைக் குறித்த பார்வைகள் தெளிவுப்படுத்தும்.இதே மேற்குலகப் பொருளாதார நலன்களுக்காகக் குர்தீஸ் மக்கள், அவர்களது காற்பந்தாகக் கிடந்து உதை வேண்டுவதை எந்த அளவு கோலுக்குள் திணிக்க முடியும்?


அயர்லாந்துப் பிரச்சனையில் இலண்டனது நிலைப்பாடென்ன?இதற்குள் ஒளிந்திருக்கும் நலன்கள் என்ன?



பாஸ்கன் குடியரசுப் போராட்டத்தில் ஸ்பெயினின் நிலை என்ன?



பெல்ஜியத்தின் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாடு எங்ஙனம் ஐரோப்பிய யூனியனுக்குள் அணுகப்படுகிறது?



இந்தியாவின் காஸ்மீரி மக்களது போராட்டத்தையும்,நாகலாந்து மக்களது போராட்டத்தையும் இந்தியாவும் ,உலக நாடுகளும் எவ் வகைக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன?


திபேத்தை எந்தத் தளத்தில் சீனாவின் முன் நிறுத்துகின்றன?திபேத்துக்காகச் சொல்லமலே ஊதிப்பெருக்கிப் புனைந்த மேற்குலக அரசுகள் ஆயிரக்கணக்காக அழியும் தமிழனைக் கண்டும் காணாதிருப்பதற்கு அவர்களுக்கு இலங்கை அரசினது அடக்குமுறைபற்றி போதிய அறிவு இல்லாத காரணமா இன்றைய எமது நிலைக்குக் காரணம்?



ஒன்றுபட்ட கனடாவுக்குள் மொன்றியால் மாநிலத்தின் கோரிக்கைகளை முன் தள்ளும் வர்க்கத்தின் நோக்கம் என்ன?



சுவிஸ்சர்லாந்துக்குள் கன்டோன் முறை ஆட்சியமைக்குள் கிட்டி விளையாடும் பல்லின மக்களது பொருளாதாரக் கண்ணோட்டம் எத்தகையது?அவர்களது பிரத்தியேகமான அரசியல் கோரிக்கை என்ன?


இவை எல்லாவற்றையும்விட ஈழத்துப் பிரச்சனைக்கு, இத்தகைய தேசங்கள்(மேற்குலக) எந்த நிலையில் இலங்கையை அணுகுகிறார்கள் என்றாவது
கேள்விகளைத் தொடுத்தோமா?




அங்ஙனம் இன்றி,மேற்குலகத்தவர்களால் நாம் அரவணைக்கப்பட்டு,மிக நேர்த்தியாக நடாத்தப்படுவோம் என்ற பாணியில் எழுதுவது அப்பாவி மக்களை ஏமாற்றுவதாகும்.


ஜோர்ச்சியாவுக்குள் 50 பேர்கள் செத்தால் வீதிவீதியாகக் கத்தும் மேற்குலகம் ருவாண்டாவில் மில்லியன் மக்கள் செத்தபோது என்ன செய்தது?சமீபத்தில்"நாசகார"ஆயுதம் வைத்திருந்த சதாமின் ஆட்சிக்கு அடுப்பூதிய ஈராக்கியர்களில் எத்தனைபேரைக் கொன்று குவித்தது?

அவ்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் எல்லை கடந்த குண்டுகளைத் தூவும் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் எந்த அதிகாரம் மக்களைக் கொன்றுகுவிக்க "ஆடர்"கொடுத்தது?



புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.


அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.

ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!

நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்.


எங்களது மக்களது இன்றைய அவலத்துக்கான அரசியல் பின்புலம் என்ன?


இந்த அரசியலால் ஈழத்தமிழ் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டத்தன் இறுதி முடிவு புலிகளால் படம்போட்டுச் சொல்லப்படகிறது.வரலாற்றில் புலிகளெனும் எதிர்புரட்சிகர இயக்கம் தனது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்கiளேயே அநாதைகளாக்கிச் சிங்கள அரசிடம் அடிமையாக்கிச் செல்கிறது!அதையும் புலிகளே இலங்கை அரசிடம் சரணடைந்து ஒப்புதல் அளிக்கின்றார்கள்.


தமிழ்பேசும் மக்களினத்தின் விடுதலை-சுயநிர்ணயத்துக்காக,அதி மோசமான அரசியல் வரலாற்றைச் செய்தவர்கள் புலிகள்.


இவ்வியத்தின் தலைமையை ஒரு வடிகட்டிய அடிமுட்டாளிடம் கையளித்த புலிகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள தமிழ் ஆளும் வர்க்கம்,இப்போது அதே முட்டாளைக் காக்கப் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது.


அது தன் தவறுகளைத் "தயா மாஸ்டர்-ஜோர்ச் மாஸ்டர்" என்ற கேவலமான ஜீவன்களுக்கூடாகச் சொல்லுகிற இன்றைய நிலையில்,மீளவும் மேற்குலகத்துக்கு அவர்களது மொழிகளில் ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல வேண்டுமென்பதன் அரசியல் தொடர்ச்சி என்ன?


இதன் வர்க்கத் தளம் எது?


யாரது நலன்சார்ந்து இந்த வாதம் "மனிதாபிமான"வேடம் பூண்டு கருத்துக்களை முன் தள்ளுகிறது?


ஆனாவுக்கு அர்த்தந் தெரியாத அடி முட்டாளைத் தலைவரென்று சொல்லிக் கொடுத்தவர்கள் அழித்த மக்களது தொகை இலட்சம் தாண்டுகிறது!


இதன் தொடர்ச்சியில் இனியொரு துடைப்பம் தலைவரென மேற்குலகத்தால் வழிமொழிய நாம் என்ன மந்தைக்கூட்டமா அல்லது மலினப்பட்ட தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமா?அன்றி அக்கூட்டத்தைத் தலைரெனச் சொல்லி அட்டைக் கத்தியேந்திப் புரட்சி பேசும் கனவுலகக் கஸ்மாலமா?


இவர்கள்தாம் மேற்குலகத்தின் தயவில் எமக்கு விடிவு வருமெனக் கனவு காண முடியும்.


நாம் சொல்கிறோம்: நமது மக்களது விடுதலைக்கு அவர்கள்தாம் உழைக்க வேண்டும்.அதற்குப் புலிகளது அரசியல் செத்துப் புரட்சிகரமான சிந்தனை உதித்தாகவேண்டும்.இச் சிந்தனையூடாக நாம் இலங்கைக்குள் மற்றைய இனங்களோடு கை கோர்த்தாகவேண்டும்.அங்கே,இவர்கள் சொல்லும் மேற்குலகத்தை ஒட்ட வேரறுப்பதற்கு முனையும் புரட்சி,மேற்குலகத்தால் அடிமைப்பட்ட அவர்களது மக்களோடு கைகோர்க்கும்.இதன்வழி தனது பொது எதிரியை மனித சமுதாயம்-உழைப்பவர் கண்டடைவர்!



இதுதாம் இன்றைய அவலத்தைத் தீர்க்கும் சரியான திசைவழி.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.09

12 Kommentare:

தமிழ் சசி | Tamil SASI hat gesagt…

ஸ்ரீரங்கன்,

உங்களைப் போன்றும் இன்னும் சில ஈழத்து அறிவுஜீவிகள் போன்றும் வசதியான இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஈழத்திற்காக இணையத்தில் ”புரட்சிக் கட்டுரைகள்” எழுதி கருத்தாடுவதை விட இன்றைக்கு தனி நபர் முயற்சிகள் மூலம் சில விடயங்களையாவது செய்த திருப்தி பலருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. இதன் காரணமாக ஈழத்தின் தலையெழுத்தை மாற்றி விடலாம் என்பது என்னுடைய எண்ணமல்ல. எவருடைய எண்ணமும் அல்ல.
அதே நேரத்தில் உங்களைப் போலவும், பிற ஈழத்து இடதுசாரி அறிவுஜீவிகள் போன்றும் சில கட்டுரைகளை எழுதிக் கொண்டு சும்மா காலாட்டிக்

கொண்டு இருப்பதை விட மேற்குலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆக்கப்பூர்வமானதே.

எப்படி உங்களுடைய புரட்சி, புரட்சி என்ற எழுத்துக்களால் எதையும் சாதித்து விட முடியாதோ, அதே போன்று எங்களுடைய மேற்குலகம் சார்ந்த முன்னெடுப்புகளால் எதையும் சாதித்து விட முடியாது. நீங்கள் புரட்சி, புரட்சி என வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஓரளவுக்காவது செயல்படுகிறோம். அவ்வளவு தான் வித்யாசம்.

இவ்வளவு பேசும் நீங்களும் உங்களுடைய சக அறிவுஜீவிகளும் இனப்படுகொலைக்கு எதிராக கடந்த சில மாதங்களில் செய்தது என்ன ?

குறைந்தபட்சம் வீதியில் இறங்கி உங்களால் போராட முடிந்திருக்கிறதா ? தமிழர்களின் படுகொலைகளை எதிர்த்து என்ன செய்தீர்கள் ? இணையத்தில்

எழுதியே புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என எண்ணுகிறீர்களா ? தோழி கறுப்பி வீதியில் இறங்கி போராடுபவர்களுக்கு அறிவுரைகளாக வாரி

வழங்குகிறார். ஆனால் எழுதிய பின்னூட்டங்களை கூட அழித்து விடுகிறார். இதிலே புலிகள் கருத்துரிமையை மறுக்கிறார்கள் என்ற புலம்பலை

நினைத்து அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

இராயகரன் - கடந்த காலங்களில் அவரை எந்த புலியெல்லாம் அடித்தார்களோ, அந்தப் புலிகள் எல்லாம் கொல்லப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து துள்ளிக் குதித்து பதிவு போடுகிறார். இவர் ஒரு அறிவுஜீவி.

சரி..புலிகள் தான் முழுவதும் அழிக்கப்பட்டு விட்டார்கள். உங்களைப் போன்று புரட்சியாளர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ?

இனியேனும் போராட்டத்தை சரியான திசையில் கொண்டு செல்லலாமே ? தோழர் ஷோபாசக்தி போன்றவர்கள் முன்பு எழுதியது போன்று ராஜபக்சேவை

நோக்கி தீர்வு கேட்க வேண்டியது தானே ? அதனை எப்படி செய்வதாக உத்தேசம் ? இணையத்தில் எழுதியா அல்லது வீதியில் போராடியா ?

தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

நன்றி...

P.V.Sri Rangan hat gesagt…

சசி வணக்கம்-வாருங்கள்!நாங்கள் மக்களுக்குள் பணியாற்றுவதற்கு இன்றுவரையும் புலிகள் விடவேயில்லை.


எட்டப்பர் என்றும்,ஒட்டுக்குழுவென்றும் எம்மை விரட்டுவதில் அவர்கள் முதன்மையாகவே செயற்பாடுகளை முன்வைக்கின்றனர்.


எட்டப்பர்.கொம் இணையத்தில் இன்றும் என்னைக் குறித்த கட்டுரை உண்டு.

புலிகளது அழிவில் குதூகலித்து இரயாகரன் எழுதியதென்பது,உங்களது வாசிப்பின்பாற்பட்டது.இதுவரை, இராயாகரனோடு நானே மல்லுக்கட்டியது அவரது புலிச்சாயல் தத்துவ நிறுவலுக்கே.அதாவது,இதுவரை புலியே செய்யாதா தத்துவ விளக்கத்தை இராயகரன் மிகத் திறம்பட முன்வைத்திருக்கிறார்.அது,தேசியவிடுதலை குறித்து முன்வைத்த(சமீபத்தில்)தத்துவ விளக்கம் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.அப்படியிருக்க அவரையே குறுக்கிப் பார்க்கும்போது என்னை எங்கே?...


சரி,ரோட்டுக்கு இறங்கிப் போராடுவதைப் போலவேதாம் வெளியுலக ஊடகங்களுக்கும் பல மொழிகளுடாக விளக்கமளித்து எமது தரப்பு அழிவுகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டுவதில் நாம் குறியாகவே இருக்கிறோம்.ஜேர்மனிய முற்போக்கு ஊடகங்களில் எமது பங்களிப்பும் உண்டு.ஜேர்மன் முற்போக்குச் சக்திகளது ஊர்வலங்களிலும் பங்கு பெறுகிறோம்.ஆனால்,புலிகளுக்காகவே புலிகளால் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்களில் நாம் எதை விளக்கினும் எமக்கு எட்டபர் பட்டமும்,துரோகியெனவும் அட்டை குத்தி இணையத்தில் போடுவார்கள் புலிகள்.முடிந்தால் அடித்து உதைத்தும்.ஞாபகம் இருக்கா?இதை நான் 2006 இல், மே தினவூர்வலத்தில் புலிகளிடம் அநுபவித்தவன்.


புரட்சி மூலம் சாதிக்க முடியாதென்பது...


சசி,புரட்சி என்பது எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பற்றுவதில்லை.


அதற்கான பரட்சிகரப் புறச் சூழல் உற்பத்திச் சக்திகளது வளர்ச்சியிலும் அதன் முரண்பாடுகளிலுமே உருவாகிறது.திடீர் புரட்சி-மாற்றங் குறித்த நடத்தர வர்க்க மனோபாவம் என்பது புரட்சியென்பதை உடனடித் தீர்வாக்க முனைகிறது.இது மறுகட்டத்தில் இயங்கியல் விதியையே மறுத்து குறுக்கே நின்று இயக்க மறுப்பையும் செய்யும்.


நீங்கள் குறிப்பது போன்று நாங்கள் இன்றைய ஊர்வலங்களில் உரையாற்றி-விளக்கிப் பங்கு பெற முடியாது.


புலிகளது வர்க்கத்தளம் தனது எதிரியைக் குறித்துச் சரியான கணிப்பீட்டோடே இருக்கிறது.தமது வர்க்க நலனுக்காக அப்பாவிகளையே கொன்றவர்கள் அதற்குக் குறுக்கே நிற்கும் எங்களை விட்டுவிடுவார்கள்?


நான் 2006 ஆண்டு இதை அநுபவித்தவன்.2009 இலும் மே 1 அன்று சிலவேளை அநுபவிக்கலாம்.


நன்றி, தங்கள் கருத்துக்கு.

Anonym hat gesagt…

ஊருக்குப் போய் கூழ் குடிக்கப் போறாங்கள். இப்பத் தான் புலி இல்லையே? இனி சோமாலியா, கொங்கோ என்று அவர்கள் நாட்டில் யாராவது பாசிசவாதிகளை பிடித்து காட்டு காட்ட வேண்டும். என்ன அவர்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாது.

தமிழ் சசி | Tamil SASI hat gesagt…

புலிகளின் அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும், எதிர்க்கருத்து கொண்டவர்களை ஒட்டுக் குழுக்கள் என கூறுவதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. அது உங்களைப் போன்றோர் செயல்படுவதை பாதிக்கிறது எனவும் நான் உணர்கிறேன்.

ஆனால் இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் ஈழத்து இடதுசாரிகள் அமைதியாக இருப்பது தான் கவலையை தருகிறது. இன்னும் புலிகள் மீது பழியை போட்டு கொண்டிருக்க முடியும் என நீங்கள் நினைக்கிறீர்களா ?

******

இராயகரன் போன்றோர் தீபனின் மரணத்தினை கண்டு உற்சாகத்துடன் பதிவிடுவது தான் எரிச்சலை தருகிறது. இராயகரன் இதில் அறிவுஜீவியாக தெரியவில்லை. என்னை அப்படி செய்தாயே, நீ இன்று செத்தது சந்தோஷம் என கொக்கரிப்பது போல உள்ளது

நன்றி...

தங்க முகுந்தன் hat gesagt…

அருமை! சிந்திக்கவும் சுயமாக முடிவெடுக்கவும் எழுதப்பட்ட கட்டுரை. இறுதிப் பந்தியில் புலிகளின் அரசியல் என்றிருப்பது தவறு. புலிகளின் வன்முறை என்று இருக்க வேண்டும். அரசியல் அறிவு புலிகளுக்கு மட்டு. அது இருந்திருந்தால் எப்போதே ஒரு உள்ளார்ந்த இதய சுத்தியுடன் மக்களுக்காக முடிவை எடுத்திருக்க முடியும்.

ரவி hat gesagt…

மறுகட்டத்தில் இயங்கியல் விதியையே மறுத்து குறுக்கே நின்று இயக்க மறுப்பையும் செய்யும்.


////

புரியுற மாதிரி சொல்லலாமே ?? நீங்க சொல்றது யாருக்கும் புரியலைன்னா எங்கத்த புரச்சி செய்யறது க்ள்ளுக்

ரவி hat gesagt…

மறுகட்டத்தில் இயங்கியல் விதியையே மறுத்து குறுக்கே நின்று இயக்க மறுப்பையும் செய்யும்.


////

புரியுற மாதிரி சொல்லலாமே ?? நீங்க சொல்றது யாருக்கும் புரியலைன்னா எங்கத்த புரச்சி செய்யறது க்ள்ளுக்

SnackDragon hat gesagt…

அன்பின் ஸ்ரீரங்கன்,

நீங்கள் வலைப்பதிகளுக்கு புதியவரல்லவே, இதற்கு முன்னரும் பல முயற்சிகள் ஆங்காங்கு சிறிய அளவிலாவது நடந்துள்ளது. அது நடந்ததா இல்லையா என்பது முக்கியமில்லை, ஆனால் எப்போது நடந்தாலும் அது வரவேற்கப்படவேண்டியதே அன்றி "இப்போதுதானா", "இனிமேல்தானா" என்று புலம்புவது உங்கள் மேல் உள்ள (கொஞ்ச நஞ்ச) நம்பிக்கையையும் வாசகர்களிடம் குறைக்கும் என்பதைத்தவிர வேறு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

எல்லாத் தளங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா வகையிலும் எமக்கு போரட்டங்கள் தேவையுள்ளதே தவிர இதுவரை நடக்காமல் இனிமேலா? என்ற கேள்வியால் ஆகப்போவது என்ன?

இப்படியெல்லாம் எழுதி வருத்தப்பட[ disppointment] வைக்காதீர்கள்.

Anonym hat gesagt…

சிறிரங்கன்!
புலிகளை விட்டுவிடுங்கள். இலங்கையில் 1948 முதல் 2008 வரையில் தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது என்ன? புலிகள் சரிவரப் பலம் கொண்டது 1985க்குப்பின்னரே. அதற்கு முன்னர் இலங்கை மக்களிடம் இந்த தெளிவினைப் புரிய வைக்காதது யார் தவறு? ஏன் புரிய வைக்க முடியவில்லை?

- மலைநாடான்

Anonym hat gesagt…

ப.வி.ஸ்ரீரங்கன் அவர்களுக்கு
உங்கள் பதிவைப் பார்த்ததும் உங்களின் அறிவைக் கண்டு வியந்துவிட்டேன். என்னவோ தெரியவில்லை. எனது சுன்னி தானாகவே கிளம்பிவிட்டது. எப்படியாவது உங்களை தேடிப் பிடித்து சூத்தடிக்க வேண்டும் எனும் புரட்சி என்னுள்ளே கொழுந்து விட்டு எறிகின்றது.
நிச்சயமாக உனது தாயாருக்கு ஓக்கமாட்டேன். நிச்சயமாக அவள் வேசியாகவே இருப்பாள். இலவசமாக எய்ட்ஸ் தேடிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே நீர் நன்றாக உமது சூத்தை கழுவி வைத்துக்கொள்ளும்.
வணக்கம் ராசா

Anonym hat gesagt…

//இதுதாம் இன்றைய அவலத்தைத் தீர்க்கும் சரியான திசைவ//
சிறி ரங்கன் திசை வழி சொல்லேலை எண்டு தா ன் எல்லாரும் பாத்து கொண்டு இருந்தவை ..........


இப்பசொல்லி போட்டார் ..... எல்லாரும் கிளம்புங்கோ வீட்டிலை இருந்து இணைய பு(பூ)(ர)ச்சி புடிக்க

சிறி அரங்கன் எமக்கு கி டைச்ச விடி வெள்ளி......


சிறி ரங்கன் வாழ்க வாழ்க......

Anonym hat gesagt…

ரங்கண்ணை டொச்சிலேயே எழுதிக் கொஞ்சுங்கோ

Tamilische Leute sind dyiing wegen des Kapitalismus. Kann ich ein heineken Bier bekommen? Danke