Freitag, Februar 12, 2010

மகிந்தாவினது ஆட்சிக்காலம்...

மகிந்தாவினது ஆட்சிக்காலம்:மகத்தானதும்,மர்மமானதும்!
 
ன்று பேசப்படும் பொருளற்ற வார்த்தைகள் இலங்கையின் அரசியலினது இயங்குதிசையொட்டிய பலரது கேள்விகள்-எதிர்பார்ப்புகளென உணர்ச்சி வகைப்பட்ட நோக்கு நிலைகளாகவே இருக்கிறது.இதைப்பற்றிய புரிதலொன்று மக்களது அரசியல்-சமூகவாழ்வின் இருப்பிலிருந்து இதுவரை பேசப்படவில்லை.அப்படிப் பேசுவதற்கான நியாயம் எவரிடமும் இல்லாதிருக்கும் இன்றைய கட்சிசார் அரசியலில் இத்தகைய ஓட்டுக்கட்சிகள் தமது எதிர்காலம்-கட்சியின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பில் நிலவும் அதிகார மையங்களுக்கு அண்மித்த அரசியலையே கொண்டியங்குகின்றன.இதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கூட விதிவிலக்கற்றிருக்கிறது.
 
இத்தகைய நிலையில்,புலிகளால் நியமிக்கப்பட்ட எந்தவொரு உறுபினருக்கும் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்"இடங்கிடையாதென்றும் ஆர்.சம்பந்தன் அவர்களால் சொல்லவும் முடிகிறது.ஆனந்த சங்கரிக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறிய தமிழர்விடுதலைக் கூட்டணியானது புலிகளாற்றாம் "தமிழா தேசியக் கூட்டமைப்பு" என்று கட்சியுருவெடுத்தது.

என்றபோதும்,சம்பந்தன் மேலே குறித்தவொரு அரசியலது தெரிவில் இங்ஙனம் பேசிவிடுகிறார்.இதுதாம் இன்றைய இலங்கையினது அரசியல் இருப்பு.
 
இராஜபக்ஷ குடும்பத்தினது அரசியலை வெறும் சர்வதிகார அரசியலாகவும் குடும்பப் பாசிசச் சேட்டையாகவும் இனங்கண்டுவிடலாம்.ஆனால்,அதன் பின்னால் மையங்கொண்ட அரசியலை உள்வாங்கும்போது இலங்கையினது இருபெருங்கட்சியினது பின்னால் அணிவகுத்துள்ள அரசியல் சக்திகளை மிக நுணக்கமாக மாறிவரும் பொருளாதார நிலமைக்குள் இனங் கண்டுகொள்ள முடியும்.
 
சிங்களச் சமூகத்தின்முன் மகத்துவம் பெறும் மகிந்த ஆட்சி:
 
தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையில்வாழும் சிறுபான்மை இனங்களையும் சேர்த்து"இலங்கையில் சிறுபான்மை மக்களினங்கள் என்று எவருமில்லை"என்று மகிந்தா அடிக்கடி உரைக்கும்போது அது முற்போக்கான அரசியல் பார்வையாகவும்,நீதியானதாகவும் நாம் நம்புகிறோம். ஆனால், இங்கிருந்துதாம் மகிந்தாவின் ஆட்சி சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவம் பெறுகிறது.இது, ஒருவடிவிலும்-குறியீட்டு ரீதியாகவும் சிங்கள மக்கள் மத்தியல் வழங்கும் அரசியல் உள்ளடக்கமானதை மிக நேர்த்தியான இனப்பாகுபாடுடையதும்,ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதுமாக்குகிறது.எனவே,மகத்துவமான மகிந்தா சிந்தனை சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவமான தேசநலச் சிந்தனையாக மாறிவிடுகிறது.இதன் தயாரிப்பு ஆசிய மூலதனத்தின் அதியுக்தி நிறைந்த மூளையினது தெரிவே.
 
இதன்வழி தெரிவுகளாகும் இன்றைய கட்சிசார் அரசியலானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சிதிலமடைந்த வன்னிப் போருக்குபின் புலிகளின் அழிவோடு இன்னொரு திசைவழியை நோக்கிப் பயணிக்கிறது.அது,இனமுரண்பாடுகளை வெறும் பொருளாதாரவாதத்துக்குள் தள்ளி அதன்மீதான மூடுதிரை, நீறுபூத்த நெருப்பாக இனமுரண்பாட்டை வைத்திருக்கிறது.இது,மேற்குலகத்தினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் விருப்புக்குரிய சூழலென்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய அரசியல் அரிச்சுவடி.






 
சிங்களமக்கள் மகிந்தாவையும் அவரது ஆட்சியையும் மகத்தானதாகக்கொண்டு அவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாக்கியது தற்செயல் நிகழ்வோ அன்றித் திடீர் அரசியல் சூழலோ இல்லை.இது திட்டமிடப்பட்ட அரசியல்-பொருளாதார நகர்வுகளுடன் மிக நெருங்கிய வியூகங்கொண்டது.இந்த வியூகம் சிங்கள இனவாதிகளுக்கும் இனஞ்சார் பெருமையில் பௌத்தமதவாத அமைப்புகளோடு வாழமுனையும் பெரும்பகுதி மக்கட்டொகுதிக்கு உவப்பான அரசியலாக இருக்கிறது!
 
மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளான பொருளாதார நிலைமைகள் ஆசிய மூலதனத்துக்கு இசைவான சூழலாக மாற்றப்பட்ட மகிந்தாவினது கட்சி அரசியலில் சமூகவாழ்நிலை மக்களது உணர்வில் கொள்ளும் வகிபாகம் தமிழ்பேசும் மக்களது போராட்டத்தோல்வியிலிருந்து சிங்களச் சமுதாயத்தின் இருப்புக்கு நிகரற்ற தலைமையை மகிந்தா வழங்குவதாக நம்பப்படும் சமூக உளவியலாக மாறியுள்ளது.இது,அவசியமான அரசியல்சார் மக்கள் நடவடிக்கையை மக்கள் தட்டிக்கழிப்பதில் மையங்கொண்ட அரசியல் வாழ்வில், திடீரென ஜனாதிபதித் தேர்தலாக மக்களிடம் அண்மித்தபோது மகிந்தா இருபது இலட்சங்கள் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெனரல் சரத் பொன்சாகாவைத் தோற்கடிக்கிறது.ஆயுதரீதியாகக் களங்கண்ட ஜெனரல் மக்களோடு மக்களாக களங்காணப் புறப்பட்டபோது படுதோல்வியடைகிறார்(இத்தோல்வியானது தனிப்பட்ட சரத் பொன்சேகாவினது தோல்வி இல்லை.மாறாக, அவர் பின்னால் நின்றியக்கிய மேற்குலக மூலதனத்தின் தோல்வியாக இருக்கிறது).இது,மகிந்தா கட்சிக்கும் அவரது குடும்பத்துக்கும் சிங்கள மக்கள்கொடுத்த கௌரவமாகவும்,சிறுபான்மை இனங்களது பங்களிப்பு-ஒத்துழைப்பின்றிச் சிறீலாங்காவில் சிங்களப் பெரும்பான்மையில் ஆட்சியை தக்கவைக்கமுடியுமென முதன் முறையாகக் கற்பிக்கிறது.இது,ஆசிய அரசியலுக்கு மேலும் பலமான பல சாத்தியங்களைத் திறந்திருப்பது உண்மையானது. இதை முழுமையாக விளங்க முனையும் அமெரிக்க சார் நலன்களை மேற்குலகின் துணையுடன் முன்னெடுக்கும் மூலதனத்துக்கு மர்மமான அரசியலாக இருக்கிறது.இந்த மர்மம் தெரிவுகளாக்கிய இன்றைய சூழலின் கதாநாயகன் சரத்பொன்சேகா.
 
மேற்குக்கு மர்மமான மகிந்தா ஆட்சி:
 
கஸ்பியன் வலயத்தில் உக்கிரைன்,ஜோர்ச்சியா,ஒசித்தாசியன்-அவ்கானிஸ்த்தான், என முரண்படும் தேசங்களது மக்கள், மத்திய ஆசியாவில் குர்த்தீஸ் இனங்களது பிரச்சனைகளை விளங்க மறுத்தன.அண்மைக் கிழக்கு வலயத்தில் ஈரான்,பாலஸ்த்தீனம்,எகிப்த்து மற்றும் அரபுத் தேசங்கள் ஈராக் சதாமைப் புரிந்துகொண்டு தார்மீக ஆதரவைச் செய்யதபோதும் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக்கிக்கொண்டு உலகு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போர் ஆயுதமாக்கவில்லை. தென்னாசிய-கிழக்காசிய வலயத்தில் நேபாளம், காஸ்மீர், நாகலாந்து,இந்துனேசியா சீனா, தாய்வான், ஸ்ரீலங்காவெனத் தொடரும் சிக்கல்களின் நடுவே மகிந்தா முன்னெடுக்கும் அரசியலை மையப்படுத்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை இருஷ்சிய அரசு வழங்கிக் கௌரவிக்கிறது;புலிகளைத் தோற்கடித்த ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு(முன்னாள்)க் கீரிடம் வழங்கிச் சிறப்புஞ் செய்துகொண்டது இருஷ்சிய அரசு.இங்கே, தென்னாசிய அரசியலைச் சரிவரப் புரியமுனையும் சங்காய்க் கூட்டமைப்புக்குமுன் மேற்குலகம் வகுக்கும் அரசியல் வியூகம் ஈராக்கில் பரிசோதிக்கப்படும் அரசியலாகவே இருக்கிறது.
 
தமிழ் ஊடகங்களின்று சரத்பொன்சேகாவுக்காக விழுந்துவிழுந்து அழுகின்றன.அவர்களது செய்தித் தயாரிப்பில்-கருத்துக் கட்டலில் சரத் பொன்சேகா ஏதோ ஜனநாயகத்துக்குக் குரல் கொடுப்பவராகவும், மகிந்தாவினது தனிக்காட்டுத் தார்ப்பாருக்கு எதிராக-அதைச் சிதைக்குமொரு அரசியல் ஆளுமையாகவும் கற்பிக்கப்படுகிறது.இதைவிட சரத் இலங்கை அரசியலில் மேலோங்கிய அராஜக ஆளுமைக்கு எதிரான சக்தியாகவும் புரியவைக்கப்படுகிறது.இதன்வழி தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்தவிடப்பட்ட அனைத்து யுத்தக் கொடுமைகளையும் வெளிக்கொணரும் வியூகமும் அடங்க முடியுமாகக் காணப்படுகிறது.இது,கட்டிவைக்கவிரும்பும் மனக் கனவுகளுக்கு வெளியில் இலங்கையினது இன்றைய அரசுக்குப் பின்னால் நிற்கின்ற ஆசிய மூலதனத்தின் முரண்பாடுகள் முற்றுமுழுதாக மேற்குலக மூலதனத்தின் ஆசியச் சந்தையையும், அதைத் தொடர்ந்து, அதன் வளங்கள்மீதான ஆதிக்கத்தையும் தகர்ப்பதில் மையங்கொள்கிறது.இதைப் புரிந்துகொண்ட அரசியலை உரைத்துப் பார்க்கும் மேற்குலகத்துக்குத் தனது வியூகத்துக்கு நிகரான அதேபாணி அரசியலை இலங்கையில் இனங்காணும்போது, அதுக்கு மர்மமான மகிந்தா குடும்ப ஆட்சி நேரெதிரில் நிற்கிறது.
 
ஈரானில் முசாவி,மேகிடி கறுபி(Mir-Hossein Mussawi und Mehdi Karubi )போன்ற மேற்குலக அனுதாபிகளை வைத்து நடாத்தப்பட்ட அஹ்மாடிநெட்சாத்(Ahmadinedschad )எதிர்ப்பு அரசியல் பலவிதமான அமெரிக்க-மேற்குலக வியூகங்களால் வழிநடாத்தப்பட்டது.இது தகவமைத்து நடாத்தும் அரசியலானது ஈரானிய அணுவிஞ்ஞானியும்,பௌதிகப் பேராசிரியருமான திரு.மசூத் அலியைப்(Massud Ali-Mohammadi Physiker und Atomwissenschaftler ) பலிகொண்டது.இதன் பின்னால் இருந்த சதி அமெரிக்க-ஜேர்மனிய உளவு நிறுவனங்களுக்கானது.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன் வைக்கும் புதிய பொருளாதாரத்தடைகளானது ஈரானில் அணுவிஞ்ஞானத்துக்கு முழுக்குப் போடுவதுமட்டமல்ல.முழுக்க முழுக்க ஈரானிய எண்ணை வளங்களை-வயல்களைத் தமது ஆளுமைக்குள் கொணர்வதாகவே இருக்கிறது.இந்தப் போக்கினது தெரிவுகளாக முன்தள்ளப்படும் அரசியல் இலங்கையில் மேலும்பல சதிகளையும் சச்சரவுகளையும் செய்வதில் மேற்குலகத்துக்கு அவசியமான தெரிவுகளாகிவருகிறது.இதைப் புரிந்துகொள்ள இன்றைய சரத்பொன்சேகாவினதும், மகிந்தா அரசுக்குமான முரண்பாடு நல்ல உதாரணமாகும்.சரத்பொன்சேகா என்பது ஒருபெரும் தனித்த ஆளுமையாகப் புரியும் அரசியல் வெறுமனவேயான நேரடி விளைவுகளை முன்வைத்த தெரிவென்பது எனது கருத்து.அதற்கான முழு உந்துதலும் அமெரிக்க-மேற்குலக வியூகத்தின் அரசியல் ஊக்கமே காரணமானது.ஈராக்கின்மீது போர் தொடுக்க விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து நகர்த்தும் அரசியலானது மீளவுமொரு அழிவுயுத்தத்தைச் செய்துகொள்வதற்கான தெரிவாக அமெரிக்க ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படும்போது,அதை மேலும் கிடப்பில்போட்டுத் தனது பதிவிக்காலம்வரை "சமாதானப்பிரியனாக"இருக்க விரும்பும் ஒபாமா நிர்வாகம் வகுத்துள்ள வெளியுறவுக்கொள்கை முற்று முழுதாக அவ்கானிஸ்த்தானிலேயே கவனங் குவிக்கவிரும்புகிறது.ஜுனியர் புஷ்சின் ஆட்சியில் முன் தள்ளப்பட்ட அவ்கானிஸ்த்தான் இன்னொரு வியாட்நாம் ஆகுவதை ஓபாமாவின் வெளியுறவுக்கொள்கை(Zbigniew K. Brzezinski - War and Foreign Policy, American-Style - Journal of Democracy 11:1 Journal of Democracy 11.1 (2000) 172-178 )
வகுப்பாளர் திரு.சீப்கினிவ் பிரசென்ஸ்கி(Zbigniew Brzezinski) விரும்பவில்லை.
 


 
பெரும் சதுரங்க ஆட்டமாகக்கொள்ளப்படும் கஸ்பியன் வலயத் தேசங்களது கருங்கடல் எண்ணையூற்ற வளங்கள் அமெரிக்காவுக்கானதும் அதன் மேற்குலகக் கூட்டு நாடுகளுக்கானதுமான இருப்பாக்கப்படுவதில் எத்தனையே பிரயத்தனங்களை மேற்கொண்டு நபுக்கா எண்ணைக் குழாய்களின்வழி இருஷ்சிய ஆதிக்கத்தைத் தவிர்ப்பதில் ஈரான் தவிர்க்க முடியாத தலைவலியாக இருக்கிறது.இவ்வண்ணமேதாம் இன்றைய சீன ஆதிக்கத்தைச் சிதைப்பதும் அதன் முன்னேறிய பொருளாதார வலுக்களை மட்டுப்படுத்துவதற்கும் குறைந்தளவாவது தென்னாசியப்பிரதேசத்தில் சீனாவினது ஆதிக்கத்தை இல்லாதாக்குவதில்-ஸ்ரீலங்கா மேற்குலகைச் சாரும்போது-வெற்றிகொள்ள முடியுமென பிரசென்ஸ்கியின் நம்பிக்கை.கஸ்பியன் வலயத்தின் எண்ணை வளங்களைத் திருடுவதற்கு ஈரான் போன்ற தேசத்தின் எண்ணை வயல்கள் முதலில் அமெரிக்க-மேற்குலகக் கைகளில் வீழ்ந்தாகவேண்டும்.அங்ஙனம் வீழ்வதற்காக ஈரானில் ஒன்று ஆட்சி மாறியாகவேண்டும். இல்லையேல் உள்நாட்டுப் புரட்சி ஜனநாயகத்தைச் சொல்லி மேலெழுவேண்டும்.இதைச் செய்விக்கச் சமகாலத்தில் நிகழ்ந்த ஈரானிய அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அரசியல் மேற்குலகத்தின் அதீத ஒத்துழைப்போடு நிகழ்ந்துவருபவை.இது ஒருபோதுமே ஈரானின் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரிய எதிர்ப்புப்போராட்டமில்லை.ஈரானில் நடந்தேறும் மேற்குலக-அமெரிக்கச் சார்புச் சதி அரசியல் போராட்டங்களை எவர் ஜனநாயகத்தின் பெயரில் ஆதரிக்கமுடியும்?
 
எதிர் நலன்கள் முட்டிமோதும் இலங்கை:
 
 
இன்றைய இலங்கையில் நடந்தேறும் மகிந்தா-சரத்பொன்சேகா இருவருக்குமான ஆதிக்கத்துக்கான போராட்டம்,இலங்கை ஆளும் வர்க்கங்கள் இருவேறு நலன்களது தெரிவில் பிளவுபட்ட நிலையில் எழுந்ததாகக்கொள்ள முடியாது.இலங்கையினது ஆளும் வர்க்கங்கள் கடந்தகாலத்திலும் ஆசிய-மற்றும் மேற்குலக நலன்களுக்கான தெரிவில் இருமுகாங்களாகவே இருந்தன. இதனடிப்படையில்தாம் இருபெரும் கட்சிகள் தேசியக் கட்சியாகவும்,விதேசியக் கட்சியாகவும் இருந்து வந்தன.எப்பவுமே மேற்குலகத்துக்கு விசுவாசமான அமெரிக்கா சார்பும் அனுதாபமும் நிறைந்த யூ.என்.பி.இலங்கையின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு எதிராகவே அந்நியப் பொருட்களைத் தங்குதடையின்றித் தேசத்துக்குள் நுழையவிட்டுத் தரகு வேலையைச் செய்துவந்தது.இவ்வகையில்தாம் ஓரளவு இந்தியச் சார்பை பிராந்திய அரசியல் ஆதிக்கத்துக்கு விட்டுக்கொடுத்து 'ஒருவகையான இரட்டைநாக்கு' தந்திரோபாயத்தை அது இந்தியாவிடம் காட்டியது.இப்போதும்,அப்போதும் இலங்கையின் சுதிந்திரக்கட்சியானது சிங்களவாதக் குறந் தேசியத்தின் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள உள்நாட்டு உற்பத்திக்கும் இடமளித்து, ஓரளவு ஆசியசார்பு நிலையையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலையாக அரும்பியது.இங்கே, இக்கட்சியின் பின்னே நின்ற ஆளும் வர்க்கமானது எப்பவும் போலவே யூ.என்.பி.ஆட்சியில் பழிவாங்கப்பட்டபோது அது, இனக் கலவரத்தில் முடிவதாக இருந்தது.

இப்போது,பழிவாங்கப்படும் மேற்குலக மூலதனத்துக்கு விசுவாசமான சரத்பொன்சேகா மற்றும் யூ.என்.பி.கட்சியானது அப்பட்டமான அமெரிக்க-மேற்குலகச் சார்பு நிலையில் நின்றே மகிந்தா குடும்பத்து ஆட்சியை எதிர்கிறது.இதனிடம் மக்கள்சார்ந்த எந்தக் கோரிக்கையுமில்லை. ஆனால்,இன்று இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவகை அரச அராஜகமும் அமெரிக்க ஆளுமைக்குள் உட்பட்ட தேசங்களிலும் நீடிக்கவே செய்கின்றன.இத்தகைய சூழலில் அமெரிக்காவினது அனுதாபிகள் பேசும் இலங்கை மக்கள்சார் அரசியல் கோரிக்கைகள்-அரசியல் முன்னெடுப்புகள் ஒருபோதும் மக்களுக்கான நியாயமான உரிமைகளுக்கான போராட்டமாக முன்னேறமுடியாது.இது,இருவேறு மூலதன முகாங்களுக்கு நடுவில் நிகழும்பலப் பரீட்சை.
 
நொருங்கிவிழும் அமெரிக்க ஆதிக்கக் கனவின் தொடர்ச்சியான அரசியல் தோல்வியிலிருந்து உந்தித் தள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள்சார் கோரிக்கைகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. எனவே,இலங்கையில் சரத்பொன்சேகாவினது கைதோ அன்றி அவருக்கான உரிமை மறுப்போ மக்கள்சார் அரசியலுக்கு முக்கியமற்றது.இன்று,சரத் பொன்சேகாவினது கைதைப் பெரிதுபடுத்தி,அவரது துணைவியாரது கண்ணீர்சொரியும் முகத்தை அடிக்கடி ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்காக மக்கள், இந்தப் பொன்சேகாவினால் கொல்லப்பட்டபோது அவர்களது கண்ணீரைக் காட்டவில்லை.கபடத்தனமாகத் தமிழ் ஊடகங்கள் சரத்துக்குக் கண்ணீர்வடிப்பதுகூடத் தமது எஜமானர்களான மேற்குலகங்களுக்குக் கூஜாத் தூக்கும் காரியமே.சரத்தின் துணைவியார்,எத்தனையோ தமிழ்த் தாய்களின் கண்ணீர்கண்டு புன்னகைத்த பெண்மணி.இப்போது தமது கணவர் உண்ணவில்லை,உறங்கவில்லை-மருந்து உட்கொள்ளவில்லை என்று தனது சுயநலத் தேவையை மக்களது தேவையாகக் காண்பிப்பது வேடிக்கையானது.ஆளும் வர்க்க அடியாட் குடும்பம் தமது வலியைப் பொதுவலியாக மக்களிடம் எடுத்துவருதே கடைந்தெடுத்த துரோகம்.
 
இலங்கை அரசியலில் ஆசியமூலதனத்தை முடக்கவெண்ணிய மேற்குலகம் ஒருபெரும் இரத்தக்களரியைச் செய்வதற்கு பொன்சோகாவினது தயவை நாடியது.இராணுவத்துக்குள் செல்வாக்குடைய முன்னாள் ஜெனரலூடாகக் காரியமாற்றத்தக்க அரசியல் வியூகத்தின்வழி அன்றைய பண்டாரநாயக்காவுக்கு நடாத்தப்பட்டவொரு அதிர்ச்சி வைத்தியத்தை அது திட்டமிட்டிருந்தது.இதை முறியடித்த ஆசிய மூளையின் தெரிவில் மகிந்தா உயிருடன் ஆட்சிக்கட்டில் அமர்வது பொன்சேகாவை கூண்டில் அடைத்தபடித்தாம் சாத்தியமெனில் அது நிகழட்டும்.எமக்கென்ன?
போன்சேகா தமிழ் மக்கள்மீது நடாத்திய ஆயுத அராஜகத்துக்கு- யுத்தக் கிரிமினலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிய மகிந்தாவை எங்கே நிறுத்தித் தண்டிக்க முடியும்?அமெரிக்கத் தெருக்கோடியில்? இல்லை, பொன்சேகாவோடு உண்மைகளும் புதைந்துவிடும் என்று கருதுவதில் எந்த நியாயம் இருக்கிறது. இருவருமே யுத்தக் குற்றவாளிகள்-இருவருமே கொலைகாரர்கள்.பாசிச அராஜகவாதிகள்-அடக்குமுறையாளர்கள்.இவர்களிடம் தமிழ்பேசும் மக்கள் எந்தவுண்மைக்காகக் காத்திருக்கவேண்டும்,இல்லை ஆதரிக்கவேண்டும்?


  (ஈரானிய அணு மூளை மசூத் அலி.)

ஈரானில் மக்களை உசுப்பிவிட்டு,அஹ்மாடிநெட்சாத்தை(Ahmadinedschad) மொட்டையடிக்க முனையும் மேற்குலகம்,இலங்கையில் பொன்சேகாவினது கைதின் எதிர்ப்பு அரசியலைத் தமக்காக முன்தள்ளுகின்றது.இங்கே,மக்களை உசுப்பிவிட்டு,நிலவும் ஆட்சிக்கெதிராகக் கலகத்தைக் கட்டித் தகவமைக்கும் அந்நிய அமெரிக்கா,எப்பவும்போலவே சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு குறித்தும் பேசுகிறது.பொன்சேகாவினது கைதுக்குக் குரல் கொடுக்கும் பான்கீ மூன் வன்னியில் கொத்துக்கொத்தாக மக்கள் அழிந்தபோது இவ்வளவு அக்கறையாகக் குரல் கொடுத்தாரா?அல்லது அவ்கானிஸ்த்தானில் தலீபான் எண்ணைவண்டிக்குக் குண்டுபோடுவதாகச் சொல்லி மக்கள் தலைகளில் குண்டைக்கொட்டிய ஜேர்மனிய அரசுக்கெதிராக ஒரு எச்சரிக்கையாவது விட்டாரா?156 அப்பாவி மக்களை ஒரேயொரு எண்ணை வண்டிக்காகக் கொன்றார்களே ஏகாதிபத்தியவாதிகள்!
 
விக்கிரமபாகு கருணரெத்தின சரத்துக்கு ஆதரவான ஆர்பாட்டத்தில்கலந்து பொன்சேகாவுக்குப் பின்னால் நிர்க்கும் அமெரிக்காவுக்கு முண்டுகொடுக்கும் அரசியலை முன்னெடுப்பது மக்களது தெரிவில் ஜனநாயகம் ஆகமா?
ஓரு பொன்சேகாவுக்கு ஆதரவாக இவ்வளவு மக்கள் வீதிக்கு இறங்க முடியுமானால்,வன்னியில் கொல்லப்பட்ட பல பத்தாயிரம் மக்களைக் காப்பதற்காக மனிதாபிமானமிக்க சிங்களச் சமூகம் ஏன் முன்வரவில்லை?இனவழிப்பில் தேசியக் கூத்தாடியபோது கருத்துச்சொல்வதில் நின்ற சிங்கள "இடதுகள்" இங்கே வீதிக்கிறங்கி பொன்சேகாவுக்குக்காகக் கலகஞ் செய்கின்றனர்.தமிழ்பேசும் மக்களுக்கெதிரான போரை முன்னெடுத்த மகிந்தாவுக்கு எதிராக வீதிக்கிறங்கி-யுத்தத்துக்கெதிராக ஒரு துரம்பைக்கூட அசைக்கமுடியாதவர்கள்,இப்போது இலங்கையில் ஜனநாயகம் இல்லையாம்.
 
கேலித்தனமான சாக்கடைகள்.
 
இத்தகைய போலிகளுக்கு நடுவே மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு இனவாதிகளாகும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அந்நிய மூலதன வேட்டைக்காடாகவே அமையும்.இன்றைய அரசியல் சதுரங்கத்தில் ஆளும் வர்க்கச் சேவகர்களின் தலைகள் உருண்டுவிடலாம்.ஆனால்,அது ஒருபோதும் ஜனநாயகத்துக்கான உயிர்த் தியாகமாக இருக்க முடியாது.இலங்கையின் இறைமை என்பது பரந்துபட்ட மக்களது சுயாதீனமான அரசியல் -பொருளாதார வாழ்வே!அதை முறியடிக்கும் இன்றைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் எல்லாத் தரப்பைப் போலவே ஆதிக்கத்தை நிலைப்படத்தும் தெரிவில் தேசங்களை-மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள்-கலவரத்துக்குள் தள்ளி அழித்து விடுகின்றன.இது,ஈரானில்மட்டும் மசூத் அலியைக் கொல்லவில்லை உலகம் பூராகவுமே கொல்கின்றது.இலங்கையில் ஈரான் பாணிக் கலவரத்தை உண்டுபண்ணும் அமெரிக்க-மேற்குலகச்சதி எந்த மசூத் அலியைப் போட்டுத் தள்ளுமோ அந்த மசூத் அலி உசாராகியுள்ளது.இதுள் இலங்கையின் பரந்துபட்ட மக்களுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?பொன்சேகா செத்தாலென்ன,மகிந்தா மாண்டாலென்ன?எல்லோரும் ஆதிக்கச் சக்திகளது சேவகர்களே!மக்கள் தமது வாழ்வை இவர்களிடம் பறிகொடுக்காதிருக்க இவ்வகை கட்சிசார் கலகங்களை-ஆர்ப்பாட்டங்களை வெறுத்தொதுக்கி நிராகரிக்க வேண்டும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2010

5 Kommentare:

Anonym hat gesagt…

அப்பு இப்படி எவ்வளவு காலத்துக்குத்தான் வகைப்படுத்தி வகைப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?
சரியொ தவறோ அவர்கள் வரலாறை எழுதிக்கொண்டிருக்கிறார்ஆள்.

P.V.Sri Rangan hat gesagt…

//அப்பு இப்படி எவ்வளவு காலத்துக்குத்தான் வகைப்படுத்தி வகைப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கப்போகிறீர்கள்?
சரியொ தவறோ அவர்கள் வரலாறை எழுதிக்கொண்டிருக்கிறார்ஆள்.//

"............"சரியோ-தவறோ அவர்கள் வரலாறை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...எவரது வரலாற்றை?

தலைவர் வரலாறை எழுதுகிறார்,என்றது முடிந்து இப்போது"அவர்கள்"...

கோணங்கித்தனமாகப் பதிலளிப்பதைவிட்டுப் புரிந்தால் எழுதவும்.இல்லையேல் "நாயே-பேயே"எனப் பேசிவிட்டுப் போவது இந்தப்பதிலைவிட மேலானது.

Anonym hat gesagt…

புரியவில்லையா?

செயற்படுபவர்கள்தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள்.
ஹிட்லர் தவறாயிருந்தலும் ஜேமனியின் வரலாறு ஹிட்லர் இல்லாமல் இல்லை.
அவர்கள் என்றால் செயற்படுபவற்கள் எல்லோரும் அப்பு.
நீரும் இல்லை நானும் இல்லை.அவர்கள் விளங்குதா?
தலைவர் தன் பஙு வரலாற்றை எழுதி முடித்தாயிற்றுது.இனி இலஙை வரலாற்றில் அது இருக்கும்.
சரத் மஹிந்த ப்ரபா இல்லாமல் இலங்கை வரலாறு இனி இல்லை.
எல்லாளனால் தன் துட்டகமுனுக்கு வரலாறு.


புரியாமல் இருப்பதற்கு இது என்ன கோணங்கியின் எழுத்தா?கோணங்கி
எல்லாம் நல்லய்ப்புரிகிறது.
சாவதற்கு ஈழம் பிழைப்பதற்கு ஜனனாயகமோ மார்க்சிசம்மோ இழவோ.

ஆனால் ஈழத்தை வைத்து பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.அப்படி
பிழைப்பதைவிட இது மேல்.

தான் அறிந்திருப்பதாக நினைக்கிற அறியாமை கொடியது.
புலிக்குபிறகு விமர்சன பிழப்புக்கு சரக்கு கிடைக்கிறது கொஞ்சம் கஸ்டம்.

P.V.Sri Rangan hat gesagt…

//தான் அறிந்திருப்பதாக நினைக்கிற அறியாமை கொடியது.
புலிக்குபிறகு விமர்சன பிழப்புக்கு சரக்கு கிடைக்கிறது கொஞ்சம் கஸ்டம்.//

"கிட்லர்,வரலாறு-தவறு,அவர்கள்" எல்லாம,; எவர்களது முதுகிலிருந்து சவாரியாகி எழுதப்பட்டது?

எத்தனை கோடிவுயிர்கள் வரலாற்றுக்குப் பலியாயின.

வரலாறுகண்ட யுத்தங்கள் வர்க்கங்களுக்கு இடையிலென்று விளங்க வரலாறுகள் விடுவதில்லைத்தாம்...


உங்களோடு தொடர்ந்து விவாதிக்கலாம்.

ஆனால்,பாருங்க சார், ஒளவையார் இப்படிச் சொல்லிக் கையைக் கட்டிப்போடுகிறார்:

"பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே-காவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்(கு)
உரைத்தாலும் தோன்றா துணர்வு."

நீங்க பேசுங்க சார் தொடர்ந்து...

Anonym hat gesagt…

ஒளைவை சொன்னது சில ஜடங்களுக்கு என்ன சொன்னாலும் விள்ங்காதென்று.
அதைதான் னானும் சொல்ல..
ஒள்வை என்ன வர்க்கம்.ஆளும் வர்க்கம்
னீங்க உனர்ந்திட்டீங்க போங்க புலியில்லை களத்தில். வாதங்களை விட்டு விட்டு போய் மக்களுக்கு சேவை செய்யுங்கள்.போலி அறிவுஜீவியை விட உண்மையான தொண்டன் மேல்.
வரலாற்றில் கொலை செய்யப்பட்ட முகம் தெரியாத லட்சம் பேர்களை ஒற்றைசொல்லில் யூதர்கள் குறிப்பிடுவது போல
நீர் என்ன பேசினாலும் எழுதினலும் புரிந்தாலும் புரியாவிட்டலும்
வரலாறு உம்மையும் எம்மையும் ஒற்றைசொல்லில் தமிழர் என்றுதான் சொல்லப்போகிறது
செல்லாக்காசு இனம்

வர்க்கப்படுத்தி குழும சிந்தனைக்குள் குடியிருந்து கொண்டு எழுத ஒருபுரட்சியும் நிக்ழ்ந்துவிடப்போவதில்லை.
நாலு பேர் ஆகா நல்ல ஞானம் என்னே அறிவு பாராட்ட /விவாதிக்க ஒரு மனப்பயிற்சியும் ஆன்மதிருப்தியும் செயற்படுவதாய் ஒரு ப்ரமையும் ,சுயத்துக்கு ஒரு ஊக்கம்.பாதிக்கப்பட்ட ஆளுமைக்கு ஒருவடிகால்(கரமைதுனம் போல)
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது தவிர பதிவும் எழுத்தும் எதனை
பிடுஙுகுகிரது
மாக்சிசம் ஜனனயகம் குண்டலினியொகம் எல்லாம் ஒன்றுதான்.இருப்பதாக பாவனைசெய்யவேண்டியதுதான்.வர்க்கப்பேதங்கள் ஒழிய விடுதலை கிடைக்குமென்பதுபோல குண்டலினி உச்சிக்குபோனால் பேரானந்தம் ஆனல் போகாது.
புலிகளுக்குபிறகு தமிளருக்கு ஜனனாயகம் கிடைச்சிருக்குதாம்.எல்லம் சரியாப்பொகுமாம்.48- 80 வரை தமிளர் இந்துசமுத்திரதில் மீனாய் இருந்தார்களா?
இப்படி பல வாதிகள் புளிச்சு ஏப்பம் வருது

செயல் மனிதர்கள்தான் மாற்றத்தை கொண்டு வருகிறாரிகள்.
அது நல்லதொ கெட்டதோ.பிராபகரன் செயலால் மாற்றிய ஈழப்போரட்டத்தை
மகிந்த எதிர்ச்செயலால் மாற்றியிருக்கிறார்.

மாற்றம் வேணுமா செயற்படுங்கள்.


அதைதன் நான் வகைப்படுதி வகைபடுதி எழுதுவதை விடுத்து வ்ரலாற்றை எழுதுஙகள்-அதாவது செயற்படுங்கள் என்கிறேன்.
ஏனென்றால் மார்க்ஸின் மூலதனம் எத்தனை பேருக்கு எழுத பேச மாத்திரம் மூலதனமாயிருக்கிரது


ஒள்வையின் பாடல் பொருந்தும் பாருங்கள்

நன்றி.