Freitag, Dezember 21, 2007

மேழியர் கூத்து

மேழியர் கூத்து



"நாடா கொன்றோ
காடா கொன்றோ
அவலா கொன்றோ
மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர்-ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நலனே."


அகதிக் காண்டம்:


ங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் "எங்களது நாடு" இருக்கின்றதென்று ஜீல்ஸ் நொடாஸ்க்கி கூறிக்கொண்டான்.அவன் புறநானூறை நிச்சியம் படித்திருக்கமாட்டான்.ஆனால் நான் அக நானூறில் புரண்டு அமுங்கிப் போவதாகக் காலம் பின்னிச் செல்கிறது.பாரீஸ் கம்யூன் போராளிக்கும் ஈழவிடுதலைப் போராளிக்கும் எதோவொரு விதத்தில் தொடர்பாடத்தக்க ஒரு பொறி கிடைத்தால் அது பெரும்பேறான வாழ்வமைதிப் பேரவா எனக்கு.


இடப்பட்ட பெயர்:இராஜன் கந்தசாமி.


பிறப்பு:1960


"யார் அப்பாவென்ற உறுதிப்பாடு-ஒழுங்கான உறுதிப்பாடு உனக்குத் தெரியாது.என்மூலமாவது சில தகவல்களை நீ பெற்றுவிடுதல் உன் தவறான பிறப்புக்கு என் உத்தியோடுகூடிய தெரியப்படுத்தல்".-அத்தான்


கொஞ்சக் காலத்துக்கு முந்திய பொழுதொன்றில் நான் தெருவோரப் பொந்துக்குள் காலத்தைக் கழித்தபோது,யாருமே உறவுகொண்டாட-முறைகள் சொல்ல முனைந்ததாக எனக்குகெட்டியவரை ஞாபகமில்லை.இப்போதுள்ள நிலைமையில் கடைந்தேற்றச் செயல்கள் வரம்பின்றி என் தலையில் கொட்டப்படும்போது நான் அந்த எல்லையிலிருந்து எங்கோவொரு தொலைவில்-ஏதோவொரு தொடைச்சதையில் உறவைப் பலப்படுத்தியபடி.


இராஜன் கந்தசாமி என்ற இயற்பெயரிலும் ராகவன் என்ற மாணவர் பேரவைப் பெயரிலும் தோழர் சன்னதிக்குச் சவாரிசொல்லிக் கொடுத்தவன் நான்.என்னுடைய பராமரிப்பில் ஒரு பகுதியிருந்தபோது நானே நடுத்தெருவில் சில தலைகளை உருட்டியவன்.சம்பேதுருவார் கோவிலிலும் அந்தக்கூடுதூக்கும் சம்பவத்திலும் ஞானப்பிரகாசரின் தோட்டாவுக்கு டாட்டா காட்டியவனின் தோளில் ஏறி நிற்க ஆசைப்பட்ட என் அக்காளின் அருமைப் புருஷனுக்கு என் ஆதாரா சுருதி அறியக்காலமுமில்லை,நேரமுமில்லை.கோவில் திருவிழாவில் யாரோ பற்றியெறிந்த சிகரட்டை ஊதியிழுத்த இராஜனாகவே அவரது மதிப்பீடு.ஓரிரவில் மடைதிறக்கும் நீரோட்டமாக நானும் சமைந்தபோது எங்கோவொரு தெருமுனையில் ஊர் சுற்றும் பொடிசுவென்ற என் வீட்டார் மதிப்போடு நான் கோலாச்சிய வரலாறுதாம் கதை சொல்வதற்கான தளமாகும்.


கருக்கட்டிய வரலாறு:


போன ஜென்மத்தில் முக்காலத்தின் முதுமையானவொரு இடைவேளையில் சில நல்ல காற்றுக் கருப்புகளில் வேள்வி செய்யப்பட்ட பொழுதொன்றில் சூரியனையிழந்துபோன புவிப்பரப்பில் பினாட்டுக்கூடையை இழைத்துக்கொண்டிருந்தவளின் தொடைக்களுக்கு நடவே கூரிய ஆயுதம் செங்குத்தாகப் பாய்ந்தபோது அஞ்சல் செய்யப்பட்ட நீர்த்துளியின் பிணைவுடன் கொண்ட பங்கீட்டுப் பிணைவு,உருப்பெற்றதும்-வெளிப்பட்டதும் காலத்தில் வாழும் ஒரு நிலையென அன்று எதிர்வு கூறிய பாதிரியார் சிங்கராஜருக்கே வெளிச்சம்.நாரந்தனையைச் சுற்றிக் கோழிகளை வளர்த்துக்கொண்ட ஒரு கோமான் பாதிரியாகி,பிசப்பான கைங்காரியம் லேசுப்பட்டதல்ல.சின்ன வயதில ஆத்தையின் சேலைத் தலைப்பில் தொங்கியபடி அவரின்ர பிரசங்கத்தால் தமிழில் ஒரு படி நிறைகூடிய மண்டைக்கனத்தை எனக்குள் திணித்த என் தாய்க்கும் வித்தியாசம், வெள்ளை அங்கியில் மட்டுமென்றே நான் கருதுவதும் ஒரு வம்பு நிலைதாம்.


நேற்றைய அல்லது அதற்குமுன்னைய இதையும் மீறிய"எப்பவோ"என்ற நிலைமைக்குள் அறுபட்டுப்போனவொரு அநாதையுணர்வுக்குள் நாவடிய நனைந்து, நுழைவதென்பது ஒரு யுகத்தின் பல மில்லியன் பிளவுக்குள் புகுவது போன்ற சங்கடமான சமாச்சாரம்.ஆனால் என்னைச் சுற்றியவொரு மிதப்பான உறவுக் குழுமத்துக்கு இஃது அவல் தின்னக் கூலியாவென்ற கதைதாம்.அம்மாவுக்குத் தீச்சட்டி தலையில் வைத்தபோது, எனது அப்பாவினது பெயருக்கும்,அடுத்வொரு பெயருக்கும் இடைப்பட்ட வெளிகளுக்குள் என் சுயம் கருக்கொண்டிருக்க நான் வெளிக் கிளம்பியது காலத்தின் கோலமானதாகவே பட்டது.


அப்பனுக்கு ஆடடிச்சுக் குத்தரிசியில் சோறுகாச்சி,மேற்சோறை அள்ளிப் போட்டவளை அம்மணமாய்ப் பார்த்ததாய் அத்தார் அதட்டியபோது,அடங்கிப்போவது நான் என்பதாக அவன் உணராதிருப்பினும்,நோக்கத்திலொரு நீண்ட கனவிருந்தது.எனது கூட்டைப் பிய்த்தெறிவதும்,பேருக்கு முன்னாள் அவலத்தைக்காவுவது என்பதாகவும் அவன் போட்ட முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அம்மாவைக் கருவிலிருந்தே கருவறுப்பதாகப் பட்டது!



அகதிக் காண்டம் தொடர்வது...


தேசத்தின் குறிப்பை எழுதுவதில் பலரின்று பிரபலமானார்கள்.பாதியோ மீதியோ, படைப்பாக்குவதில் "பன்னைக்காரன் பொண்டில் பணியக்கிடந்து செத்தாள்"என்றமாதிரி, செவிட்டு இராஜனுக்குமொரு சிங்காரக் கனவு குடைந்தபோது,கை கொடுத்த காலம்தாம் கடைதெடுத்த வம்புத் தனங்களாகிக் கிடந்தது.முற்றிலுமொரு மொன்னைத்தனமான முயற்சியில் கால் வைப்பது "தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம்"என்றடிக்கடிக் குறித்துரைத்த சபாரெட்னம் வாத்தியை நான் கிழங்கர் சபாரெத்தினமென்று கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலைக்குள் வைத்துத் திட்டியதும்,அவரென்ர "இயக்க ஸ்தானத்தில்" கண்டும் காணாததாய் இருந்தபோது நடுத்தெருவில் தலை தெறிக்க நான் "உசக்கப் போய்" ஓவராய் கண்டவர் நிண்டவரெல்லாரையும் கடிச்சுக் குதறியவொரு பொழுதில் கால்முறியுமொரு காலத்தை அருளாநந்தசிவம் மாஸ்டரின் கடைப்பொடி"இது எங்கட இயக்கத்தால் கட்டாயம் நடக்கும் மச்சான்.கெதியாய் மாறு"எண்டபோது சன்னதிக்கு ஆப்பு வைத்தால் எனக்கென்ன!தலை தப்பினது தம்பிரான் புண்ணியமென சித்தப்பாவின் முகத்துக்கு முன்னால் நீட்டிய கரம் "பலதைப்பார்த்த அநுபவத்தை" அவருக்குக் கற்றுக் கொடுத்தபோது நானும் ஜேர்மனியை வந்தடைந்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது,"தோழமைக்கு இதுவா இலக்கணமென்பது"எப்படியோ சன்னதியைக் குத்திய கத்தி குடலை வெளியில் இழுத்தெறிந்த போது, நாரந்தனை மொட்டை வேளாளரின் மகிழ்ச்சியாய் இருந்ததும்- எனக்கு உயிராபத்திலிருந்து விடுதலைக்கு வித்திட்டதாகப்பட்டது.


தொடைகளுக்கு நடுவில் கோவணம் கட்ட மறுத்தபோது ஜேர்மனியின் "அழகு" நடுச் சாமத்திலும் அந்தமாதிரியாய் இருந்திருந்து அநுபவமாகியது.அப்போதெல்லாம் அக்கம் பக்கதைப் பார்த்து, அப்பனின்ர தங்கச்சி மோளை"தந்தனத் தந்தனத் தாளம் வரும் சந்தன..."எண்ட பாட்டோடு பிழிந்தெடுத்த சில பொழுதுகளின் அவஸ்த்தை வந்தே தொலைந்தது.ஆப்பு வைத்த மாதிரி "அகதி"நாமம் சூடிக் கொண்ட பொழுதுகளுக்குள் என்னென்ன ஆறுதலை மாற்றாக்க முடியுமோ அதையெல்லாம் தேடியபோது,இடையில் வந்தவொரு பீடையைக் இன்றுவரை மறப்பதற்கில்லை.


வைத்தியனிடம் போய் "எய்ட்ஸ்"பரிசோதனையில் "நெக்கடீவ்"என்ற அத்தாட்சிப் படிப்பில் நிம்மதி வந்தாலும்,சில நேரத்தில் மனதில் நிம்மதி குலைகிற பொழுதுகளாகவும் சில "குறிப்புகள்"உடலிலும் உள்ளத்திலும் தோன்றி மறையும்போதுதாம் அத்தானைப் பரிகாசிப்பது வெறும் தேவையில்லாதவொரு சமாச்சாரம்.கிராமத்தின் எல்லைகள் பற்பல மறைப்புகளில் கிழிபட்டே கிடக்கிறதென்பதையும்,அதன் மறைப்புக்குள் வேறொரு உலகம் முருகன் கோவில் இரவு உடுக்கை அடியில் அமிழ்ந்து போனதையும் நான் பல பொழுதுகளில் அறிந்திருந்தேன்.இந்தச் சூழலில் சாமி ஆடுபவனின் தொடைகளின் நடுவில் ஆடிய பாம்பு எத்தனை குமரிகளுக்குப் பேய் ஓட்டினதை சீதனத்தில் உரைத்துப் பார்த்தையும் நினைத்தபோதுதாம் என் பிணக்கைத் தீர்க்காத மனதின் "துரத்தல்களை"சிக்மன் ப்பொரைட்டின் ஒளியில் கழுவிவிடுவதில் நான் கஞ்சல்தனம் காட்டவில்லை!


கருச்சுமந்தவளின் கனவு:


அன்று,"தம்பி பசிக்குக் காரணம் கேட்காமல் காசை அனுப்பிவை"எண்டவளை "பெத்தகையோடு பேதியைக்கண்டபோதும் பெருஞ் சுமையாய் எண்ணாத தாயென்று"நான் உணர்ந்தவொரு பொழுது அரிதாகவே பட்டது!காசென்ற குரலிலும்,எழுத்திலும் கடுப்பெடுத்து உடைபடும் என் "புடைப்புகள்"கழண்டலையும் கோவணத்தில் சுழன்றுகொண்டபோது,ஆத்தையின் அடுப்பில் பூனைக்குச் சுகமாய் தூக்கம் வந்தது.


இப்போதெல்லாம் காடாத்திக் கருமாரி செய்த அநுபவத்தோடு அம்மாவுக்கு உணர்வு மரத்துவிட்டிருக்கு!"ஆத்தைக்கு ஒரு பேத்தை" போட்டியாகி "எங்களை நடுத்தெருவில் நிப்பாட்டிப்போட்டுப் போமன்"என்ற ஓலத்தை நான் காதுகொடுத்துக் கேட்டதால் நடுரோட்டில் மருந்தோடு அலைய, ஒருவுயிர் அவாவுற்றழிந்தே போனது.ஒரே கருப்பையில் வெவ்வேறு பொழுதுகளில் கிடந்த கருவூலம் குலைந்த பொழுதுகளை அம்மா நொந்தெழுதியும்,அம்மாவின் கனவுகளைக் கரடியின்ர சொறியாகவே கடுப்பாக்கிக் கடிதத்தொடர்பே ஆகாதென்பதாகக் காரணம் கண்டு,"கனவோடு காலத்தைக் காண்"அம்மாவுக்கு இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததாக நானும் எண்ணுவதில் என்ன சூத்திரமிருக்கு என்ற ஆதங்கம் வந்து துலைந்தபோதெல்லாம் நான் அப்பனுக்கேற்ற பிள்ளையாக இருக்கிறேன்.


அப்பச் சும்மாவா?


"எங்களுக்கு மூன்று நேரம் உண்ணப் போடத் தன்னைத் தறித்தெறிந்தவனை" அம்மா "ஏச்சுப் போட்டாள்"என்றொரு அடிமன ஊழ்,அகத்திலிருப்பதை மெல்லப் புரிவதில் சிக்கல் வருவதுமாதிரியானவொரு எண்ணத்தை இதுவரை தந்திராதபோது "அம்மாவுக்கு வைத்தேன் வேட்டு" என்று மனம் கத்திக் கொண்டாலும்"மகனே நானுனைக் காவி,நாலுகட்டை தொலைவிலுள்ள வைத்திய சாலைக்கு நாயாய் அலைந்தவள்"என்றொரு குறிப்பை அம்மா எழுதாதவரை அவள் மேன்மையானவொரு ஜீவன் என்பதை எந்தத் தரங்கெட்ட அத்தான்களும் அக்காவின்ர கத கதப்புக்காக "அம்மாக்களை அற்ரேக் பண்ணவதும்" அதையே நேரம் பார்த்து வீரம் பேசுவதுமாக கோவணம் கட்டி நின்றாலும்... நான் கண்ட கதைதாம்!


ஏழு பிள்ளைகள் நல்லதங்காள் கதையில எங்களைக் கட்டிப்போட்டவொரு அம்மா, இப்போதெல்லாம் எந்தக் குறிப்புகளையும் அம்மா என் மனதில் விட்டுவிடுவதில்லை.


"இந்தியாவை அடிச்சுத்தான் இலங்கையைப் பிடிக்க முடியுமென்று"கிராமத்தில் அடிக்கடி "பெரிசுகள்" பேசிக்கொள்வார்கள்.அப்போததெல்லாம் நான் "குஞ்சாமணி பிடித்துப் பெய்த்தெரியாத"(பெரிசுகளின் பார்வையில்)பால்குடி. முளைத்து முன்றிலையெறியாதுபோனாலும் அந்த "இந்தியாவை அடிச்சு... "என்றதின் அர்த்தத்தை இவர்கள் ஏன் கதைக்கிறர்கள் என்று,எனக்குள் ஒரே ஏக்கமிருந்தது.


எங்கட ஊரிலொரு பெரும் பணக்காரியை ஸ்ரீமா என்றொரு "சுட்டல்" பெயரோடு ஊரார் மரியாதை வைத்தழைப்பதுண்டு.அவாவும் ஸ்ரீமா மாதிரியே நல்ல தோற்றமும்,பொன்னிறமும்கூடிய-"தன்னழகையே தான் இரசிக்கும்"சிங்காரி.அவர் கணவர் பாதியில் போய்சேரும்போது வருஷம்1970.அப்போதைய சொத்துமதிப்பு இரண்டு கோடியைத் தொட்டதென்பது என் அத்தாரின் வாயிலிருந்து நான்கேட்டுத் தெரிந்தவுண்மை.கொழும்பில் வியாபார நிறுவனக் கட்டடம் சொந்தமாகவும் அவர்களுக்கிருந்தது.லொறியும்,முப்பத்தியாறு ஸ்ரீயும்கொண்ட இலக்கத்தில் புத்தம் புதிய ரக்ரறும் அவர்களின் பெயரில் ஓடியது."நான் சுண்டுவிரலை அசைச்சால் இப்பவும் பையன்கள் என்ர பின்னால தவழுவான்கள்"என்பார் ஸ்ரீமா.அந்தளவுக்கு அவர் அழகாக இருந்தபோதுதாம் ஸ்ரீமாவின் மோளை லொறிரைவர் ஒரு அதிகாலையில் லொறியோடு கூட்டிக் கொண்டோடியதாகத் தகவல்.அப்போதிருந்து இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்"பெரும் பிரபல்யமாகப் பேசப்பட்டது.இது நடந்த வருஷம் 1974.அன்றிலிருந்து கிராமத்தில் பலமுறைகள் இந்த"இந்தியாவை அடிச்சு இலங்கையைப் பிடித்தல்கள்"நடந்தேறின.எனது வீட்டிலொரு இந்தியாவை அடித்தே இலங்கையைப் பிடித்தாகப் பலர் பறையக்கேட்டிருக்கிறேன்.அந்தநேரத்தில் எனக்கு இந்தச் சமாச்சாரத்தில் அவ்வளவு நாட்டமிருக்கவில்லை.பின்னாளில்தாம் அதுள் பொதிந்திருந்த அர்த்தம் பிடிபட்டது!அந்த நாள்முதல் நான் பல இந்தியாவைத் தேடியலைந்தபோது எனக்கு எந்த இந்தியாவும் வசப்படவில்லை.என்னவொரு பிறப்பு என்ற ஆதங்கம் தலையைக்குடைந்தபோது அப்பரின் தங்கை மகளே "பழம் நழுவிப் பாலில் விழுந்த" கதையாய் என் பக்கம் விழுந்தாள்.பாடத்துக்குக் கட்டுரை எழுதித் தரும்படி வந்தவளைப் பிழிந்தெடுக்கும் காலமொன்றில் நான் பெரியவனானபோது வருஷம் 1977.இந்தக்காலத்தில்தாம்"குடியரசு கொடிய அரசு"எண்ட சுலோகங்களை நானும் சிலரும் பாடசாலைச் சுவர்களில் தாரினால் எழுதித்திருந்தோம்.அப்போதெல்லாம் திருவாளர் க.பொ:இரத்தினம் என் ஆசான்!அவரது தமிழின் வீச்சிலும் அமிழ்ந்தபோன நான் "மதிமுக இராசாவே மதியிழந்து போகாதே"என்ற கோவையாரின் வீர வசனத்தைப் பற்றிப் பெருமிதம் கண்டு க.பொ.விடம் விளக்கம் கேட்டபோது"வாடா டேய் வந்து இந்த மட்டையைப் பிடி"என்று பனைமட்டையைக் கையிற் தந்தபோது அவரது வீட்டுவேலி ஒருநாளில் பல அடி முன்னேறியதுதாம் மிச்சம்.அதற்குப் பின்பு அவரைக்காணும்போதெல்லாம் சயிக்கள் ஐம்பது மையில் வேகத்தில் கடந்துவிடும்.


"சித்திரைக்குத் தம்பி வருஷம் வருமடி,அம்மாவுக்குப் புதுச்சீலையும் கழுத்துக்குச் சங்கிலியும்,கைக்குக் காப்பும் வேண்டித் தாடி!"என்ற அம்மாவின் கனவுக்கு நான் போட்டேன் ஆப்பு".நீ கெட்டகேட்டுக்கு இதுவொன்றும் குறைச்சலில்லை" என்றும்,ஊரில சனங்கள் படும்பாட்டில் நீ எல்லாம் எங்கே நிற்கிறாய் எண்ட போடலில் அப்பருக்கு நான் தப்பாத பிள்ளையாக இருக்கவேண்டுமென்ற கனவும்,அவரைப் பேய்க்காட்டிய உனக்கு நான் ஏன் உதவ?என்ற கோரமும் எனக்குள் ஓடித்திரிந்தது.இப்பவும் அந்தக் கோரம் போடும் கோலம் கொஞ்ச நஞ்சமில்லை!இதைத்தான் அத்தான் எதிர்பார்த்தானென்றால் இல்லையென்பதே என்பதில்.அவன் போட்ட முடிச்சு வேறானது.அதை நான் உடைப்பதில் எப்பவும் பெரியாரைத் துணைக்கழைத்து என்ர கூட்டைக் காப்பத்திப் போடுவேன்."பெரியாரின் கூற்றுப்படி எனது கூலிக்காறி காரியமாற்றினால் கதை கந்திரிதாம்"எண்ட எண்ணத்தில் மிதந்தபோது நான் "ஐந்தொகையை முடிக்கும் காலம் நெருங்கியது"இந்தவொரு காலத்தை இவ்வளவு விரைவில் நெருங்கியதில் தெம்பின்றிப்போன "ஆத்தையின்மீதான அகோர வாசிப்பு" அர்த்மற்றதாய் மனதில் பிராண்டியபோது, நான் ஏதோவொரு வைத்தியரின் முன் நிணநீர் முடிச்சின் வீக்கத்தில் மூட்டுகளின் வலியையும்,கால்களால் நடக்க முடியாததையும் விளக்கியபடி மௌனமானேன்.


அகதிக் காண்டம் நிறைந்தேக...


"அண்ணே அந்த ஊதுபத்தியைத் தலைமாட்டில் கொளுத்தி வையுங்கோ,இராஜன் அண்ணர் நாட்டுக்காகப் போராடினவர் இப்படி அநாதையாகக் கிடக்கிறாரே!ஐயருமில்லை,இவங்கட சுவாமிமாருமில்லை.இறுதியில் அகதிகளின் பிரேதங்களுக்கு எந்தக் கிரியையுமில்லை.அட ஆரப்பா,தேவாரத்தையாவது பாடித் துலையுங்கோவன்." மரண இறுதி நிகழ்வில் என்னோடு அடிக்கடி ஊஞ்சலாடிய அருமையென்ற அம்மான் கத்திக் கொண்டிருந்தான்.எப்பவெல்லாம் பேசக்கூடாதோ அப்போதெல்லாம் இவன் மட்டுமே பேசுவான்.இப்படி இவன் பேசுவதால்தாம் சில கனத்த நிகழ்வுகள் தடையின்றித் தாமதமின்றி நடக்கிறதென்பதம் உண்மை.


எனக்குள் ஓடித்திரிந்த ஒரு பூச்சி ஓய்வெடுப்பதற்குத் தயாரானபோது நான் கடைந்தேறும் காலத்தை நெருங்காதிருப்பதை எனது பொன்னான மனத்தின் கிளர்ச்சியில் ஊகித்தறிவது பெரும் பிரச்சனையாக இருந்ததில்லை!ஒன்று சண்டையில் செத்திருக்கவேணும்.அது கைகூடாது போனதால் நான்"........."யில் சாவதற்குத் தயாரானபோது நடுத்தெருவில்"அரைகுறை பிய்த்தெறிந்த ஆடையில் பிஞ்சு உடல்களைப்பார்த்து" நாவைத் தொங்கப்போட்டு ஊற்றிய வீணியோடு கரையொதுங்கிய தாய்லாந்துக்காரிக்கு"கண்ணே கலைமானே"என்ற ஜேசுராசாவின் குரல் பிடித்திருந்தது.அந்தப் பாடலை எனக்காகவும் அவள் ஒலியைக் குறைத்துப் போட்டுவிட்டு உடைகளைக் களைந்தபோது, சொர்க்கம் இதுதாம் எனவெண்ணியபோது சுகத்தின் எல்லைக்கு இன்னும் தூரமதிகமென நான் எண்ணியதும், அவள் ரகுமானின் "தையைத் தையைத்..."பாடலை ஒலிக்க வைத்தபோது"இதுவெப்படிக் கிடைத்ததென"அவளைக் கொஞ்சிக்கொண்டேன்,உன் நாட்டான் ஒருவன் தந்ததென்றாள்."நீ என்ன பாடலைப் பரிசாய்த் தருவாய்?"என்றபோது நான் அடுத்த நாள் ஊஞ்சல் பாட்டில் ரகுமான்போட்ட உடற்பரிசங்களை அவளின் செவிக்கு விருந்தூட்டியபடி எனது மார்ப்புக்குள் அவளைத் திணித்தபோது நான் பட்ட பரவசம் நேற்றைய எனது பிணத்தின்(கனவுதாம்) ஒரத்தில் சத்தம்போட்ட அம்மான் அருமையின் வலுக்குரலால் அழிந்தே போனது.



ப.வி.ஸ்ரீரங்கன்

அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது

நான் அழிவதை'நான்' தீர்மானிக்க...


எந்தப் பதிலுமின்றி ஓரிரு தினங்களாக நான் மௌனித்திருந்தேன்.காலத்தில் வாழ்கிறேனாவென்பதும்,வரலாற்றின் வெளியில் என் பாத்திரமென்னவென்பதும்,எனக்குக் குழப்பமானதாகவே இருக்கிறது.இதுதாம் ஒரு நிலை.புரிந்துகொள்வதும்-புரிவதிலும்,புரியப்படாததற்கும் முந்திய நிலை முழுமைத்துவ முனகலாகவும்,அறிவின்மீதான-அறிதலின்மீதான நெருக்கடியாகவும் இருந்திருக்கிறது.நான் இருக்கிறேன்.ஆனால் இல்லாதிருப்பதால் மட்டுமே இந்த 'நான்'இருந்தாகவேண்டும்.இது சிக்கலை மீளவும் தந்துகொண்டேயிருக்கிறது.முழுவதுமான மனிதத்துவ மாட்சிமைகள் மனத்தின் வெளியிலுலாவும் மென்மைமறுத்த உணர்வுக்கோர்வையில் வேறொரு மனிதனைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்க ,இந்த 'நான்'இருக்கிறேன்.முடியுந்தறுவாயில் 'நான்'எனக்கு முன் அழிந்து-என் இருப்பை அசைத்திடும்போதும் 'நான்' இருந்தபடியேதாம்.


எனக்குள் நான் எடுக்கும் சுதந்திரத்துக்கான முடிவானது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்குமா?வாழ்வின் தேர்வுகளுக்கும் சுதந்திரத்துக்குமான 'வாழ்வுக் கடைந்தேற்றத்துக்கும்' தொடுப்புத்தாம் என்ன?சரியாகச் சொன்னால் மனிதவாழ்வானது மனிதரைக் கடந்துவிட்டது.காவுகொள்ளத்தக்க கனவுகளுக்கும்,வளமற்ற விருப்புக்களுக்கும்'தோற்றுவாய்'வேறொரு வகையினில் என்னுள்ளே தோன்றி மறையும்போது எனது இருப்பினது அத்தியாவசியமற்ற மனிதத் தேர்வானது என்னை முழுமையாக விழுங்கி விடுகிறது.எனக்கு முன் இருப்பதெல்லாம் திமிர்த்தனங்களின் கூட்டுக் கலைவைதாம்.இது என் மனதைக் காவுகொள்வதால் 'நான்' அழிந்து போவதும்-முகிழ்ப்பதும் வரலாற்று மாய்மாலம்.


அறிவின் பிரச்சனையே தற்கொலைதாம்!


எதைப்பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது.திமிர்த்தனமான-எதேர்ச்சையான இந்தப் பேரண்டம் எந்த உறுதிப்பாட்டைத் தந்தது- இந்த ஊனப்பிறவிக்கு தந்துகொண்டது? தயங்கிக்கொண்ட மனமும்,தவித்துத் திரியும் உணர்வுத் தொடர்ச்சியும் வரலாற்றோட்டத்தில் எந்தப் பாத்திரத்தை எய்கிறது? நிலவுகின்ற மலட்டுத்தனமான இந்தப் படுபயங்கர'விருப்புறுதி' வெறும் பிம்பத்தை மட்டும் வாழ்வாக்கிவிட்டால் -சுதந்திரமென்பது மரணமா?சடுதியில் முடிகின்ற பயணத் தொடர்ச்சி பண்டுதொட்டு நிலவுகின்ற ஊழீயாகும்போது 'நான்'என்பதன் சுட்டலுக்கு ,இருப்புண்டா-பொருளுண்டா?


என்னை உருவாக்க 'நான்'துணையின்றி முடிந்திருக்காது.என்னுள் அமுங்கும் 'நானை' நானே தீர்மானிப்பதால் உணர்வுத் தடத்தில் புதியவொரு உலகை நானே தயார்படுத்துகிறேன்.இதனால் எனக்குச் சிக்கல்கள் வருவதில் என் இருப்பைக் கவனிக்க 'நான்' வருகிறேன்.இதுவே என்னை அழிப்பதிலும் 'நான்'எனச் செயற்படுகிறது.


இந்தப் புலத்தை எனக்காகச் செய்வதில் என் சுதந்திரமே இயங்கிக் கொள்கிறது.இதன்போது உலகத்தை நான் படைக்கிறேன்.அல்லது தூண்டப் படுகிறேன்!எப்படி உருவாக்கிக் கொண்டாலும் எனக்குமுன் விரிந்துகிடக்கும் அண்டம் வரலாற்றுத் தொடர்ச்சியாக ,என்னைக் கட்டிப்போட்டுள்ளது.பொருள் வாழ்வைப் புலப்படுத்தும்போது 'நான்' நேர்மாறாகக் காரியஞ் செய்கிறதே,இதுதாம் என்னை உருப்படவிடுகிறதில்லை.


புறவுலகில் ஒரு அங்கமாக உலாவரும் எனக்குச் சுதந்திரமுண்டா?


சூழ்நிலைகளால் உண்டாக்கப்படும் பொருளுலகமும்,அதன் சமூகக்காரணிகளும் தீர்மானிக்கின்ற உணர்வுக்கூட்டத்தால் 'நான்'முடிவற்ற சூறாவளியாகிறது.இந்தப் பெருநெருக்குதலில் எஞ்சிக்கொள்வதற்கென்றொரு அனுமானம் புலப்படாதபோது,எனக்கு-நான் தடை.இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தெரிந்த பாதை-என்னளவில் தற்கொலைதாம்.இது எனது சுயத்தின் மதிப்பீடாக இருப்பதில்லை!மாறாக என்னைத் தூண்டுகிற பொருள் வாழ்வும்,புறநிலைகளின் உந்துதலுமே -என்னைத் தீர்மானித்துக்கொள்ள 'நான்'பலவீனமாக இருந்திருக்கிறேன்.


எனக்கு இதன் தாக்கத்தால் விமோசனமில்லை!ஆகையினால் எனது சாரமாக 'நான்' வருவதில் சிக்கல்.நான் அற்ற 'நான்' பொய்யன்.பொய்யானது மெய்மையை அழிக்கிறது.அழிவே இறுதியில் மெய்மையைக் காக்கிறது.


இன்னொரு விதத்தில் கூறினால் மனிதர்களுக்கு(எனக்கு) முந்தியது எதுவுமேயில்லை.வெறுமையேதாம் எனக்குமுன் கருத்தரித்தது.எனது இருப்பே எனக்கு அடிப்டையாக வருவதும்,அதையே 'நான்' அடிப்படையில்லாத அடிப்படையாக்கி விடுகிறேன்.இந்த மகாகெட்டித்தனம் எனக்கு வழிகாட்டாது.நிச்சியமாக என்னைப் படுகுழியில் தள்ளிவிடப்போகுமிந்த 'நான்' சுதந்திரத்தைப் பயன் படுத்தமாட்டேன்.ஏனெனில் அது என்னிடத்தில் இல்லை.எனவே எனக்கு -நான் அடிமைதாம்.இந்த இழி வாழ்வு ஏற்புடையதில்லை.நான் அழிவதை'நான்' தீர்மானிக்க மௌனித்திருங்கள் மற்றைய 'நான்கள்'.


ப.வி.ஸ்ரீரங்கன்


Sonntag, Dezember 16, 2007

கேசல்(Silvio Gesell): சுதந்திர பணம் வட்டியற்ற நிதி

தேசியப் பொருளாதாரம்:


பைத்தியக்காரத்தனமும்,குழப்பமும்,இன்னுமிது ஆரம்ப நிலையிலேயே உருவகிக்கிறது.


பொருளாதாரக் காரணிகள்-சூழ்நிலைகள்,சுமைகள்-அதிர்வுகள் ஒரு சுவையான சம்பவங்களாக மாறிப்போகிறது.இது குறித்த அறிவானது பலரிடமும் ஆரம்ப நிலையைவிட மோசமாகவே காணக்கிடக்கிறது. இதனால் எந்த உற்பத்திப் பொறிமுறையானது மானுடர்களுக்குப் பொருத்தமானது-எதுதாம் பலமானதாகவும்,இறுக்கமாகவும்,தளராதாகவும் இருக்கும்?எந்தப் உற்பத்திப்பொறிமுறை அமைதியையும் மகிழ்வையும்-சீரையும்,சிறப்பையும்-நியாயத்தையும் அளிக்கும்? ஏதாவது விருப்பத்துக்குரிய பொருளாதாரக் கட்டமைப்பு உலகிலுண்டா,அல்லது மீள மீளக் கதையாடும்-எதிர்ப்பிடும் தத்துவார்த்தங்கள்,பொருளாதாரக் கண்ணிகள் ஒன்றையொன்று முட்டிமோதிக்கொண்டு ஒரு நாகரீகப் போக்கைக் கடைப்பிடிக்க உதவுகிறதா?

பொருளியலாளர்கள் இது குறித்து எதைக்கொண்டிருந்தார்கள்?

பொருளாதாரப் பாடமானது உலகில் மிக,மிகப் பழமையானதல்ல. இயற்பில்,மருத்துவம்,கணிதத்துக்கு உள்ளதுபோன்று பழமையான அறிவுப்பரப்பு பொருளியல் அறிவுக்கு இல்லை.இது வளரும் நிலையிலேயே இன்றும் இருக்கிறது.இப்படிக் கூறாதிருந்தால் சமூகத்தின் வளர்ச்சிக்கட்டம் முடிவடைந்திருக்கணும்.இஃது சாத்தியமின்றியிருந்தால் வளரும் தன்மையில் பொருளாதாரவாழ்வு இருக்கிறது.

பொருளாதாரம் வளர்ந்த நிலையென்பது தனியார் தத்தமது பண இருப்பைக் கட்டடங்களாகக் கொண்டிருப்பதால் ஏற்படுவதல்ல.மாறாக மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவுசெய்யவும்,உழைப்பு நேரம்குன்றிய பொழுதில் அனைத்தையும் பெறும் இயங்கு நிலையே வளர்ச்சி நிலையாகும்.இங்கு மக்கள் தேர்வானது சுதந்திரமான வாழ்வாகவும்,சமாதானமான உற்பத்தியுமாகவிருக்கும்.

தேசியப் பொருளாதாரம்-பொருளாதாரம் எனும் வார்த்தையானது முதன்முதலில் 1776 ஆம் ஆண்டளவிலேயே உருவாகிறது.இந்தக்காலக்கட்டமானது கொலனித்துவத்தின் உச்சக்கட்டமாகும்.உலகின் அனைத்து வளங்களையும் பிரிடிஸ் ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொண்டிருந்த காலத்தில் தேசியப் பொருளாதாரம் குறித்த கருத்தமைவானது இந்த ஆளும் கும்பலுக்கு அவசியமாகவிருந்தது.இதை உந்தித் தள்ளிய மிகையான செல்வக் குவிப்பானது அதன் இருத்தலுக்கும்,பாதுகாப்பக்கும் அவசியமான உற்பத்திப் பொறிமுறைகளைவேண்டிக் கொண்டது.அன்றைய தேவையைக் குறித்த சிந்தனையானது'தேசியச் செல்வத்தின் காரணியும் இயற்கைக்கூடான ஆய்வும்'எனும் தலைப்பில் ஆடம் சிமித்தை(1723-1790) சிந்திக்கத்தூண்டியது.1776 வருடம் மேற்காணும் தலைப்பில் வெளியிட்ட அவரது பொருளியல் நூலானது இன்றுவரையும் முதலாளியத்தின் பாடத்திட்டத்தில் முடிசூடா மன்னனாக இருக்கிறது. ஆடாம் சிமித்தும் அவரது முன்னோர்களின் எண்ணங்களும் 'சுதந்திரப் பொருளாதார அரசியலை'வலியுறுத்துகிறது.இது கண்டம்விட்டுக் கண்டத்தைச் சுரண்ட தனிநபர்களைத் திரட்டும் அரசியலைப் பரிந்துரைக்கிறது.தனிப்பட்ட ஏகாதிபத்திய முதலாளி தனது அடியாட்படையுடன் உலகத்தைக் கொள்ளையிட இது கோரிக்கைவிடுகிறது.இதன் அர்த்தமானது'சுதந்திர வர்த்தகம்','போட்டி','தனித்துவ நிறுவனங்கள்',தனியார் செல்வம்'ஆகியவற்றைப் பலப்படுத்துவதும்-பெருக்கிக் கொள்வதாகும்.இதனை அரசு ஏற்கும் பட்சத்தில் அனைவருக்கும் மகிழ்வான வாழ்வுகிட்டுமென்பது ஆடமின் பொய்யுரையாகும்.இதன்படி உலகம் போரையும் அதீதசுரண்டலையும் இன்றுவரை கடைப்பிடிக்கின்றது.இதற்கு 'மான்சிஸ்டர் லிபிரால்கள்'19ஆம் நூற்றாண்டில் மிகக் கேவலமான சமூகச்சமமின்மையையும்,அடிமைத்தனத்தையும் தந்து நிரூபித்தார்கள். அப்போ இதன் மாற்று யாது?

ஆடம் சிமித்தும்,கார்ல் மார்க்சும்:

மூலதனத்தின் தனியுரிமைக்கும்,எதுவமற்ற தொழிலாளர்களுக்குமான காரணியை ஆடம் சிமித்துக்கு நேரெதிராகக் கண்டவர் கார்ல் மார்க்ஸ்(1818-1883)'கூலியானது செய்த வேலைக்கான பெறுமானமல்ல,மாறாகத் தொழிலாளி அரைவயிற்றை நிரப்பிக் கொண்டு மறுநாள் வேலைக்கு வருவதற்கான-உயிர்ப்புக்கிடும் பிச்சை'என்றார்.இதன்மூலம் முதலாளி தனக்குச் சொந்மில்லாத-தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டி மிகையான உபரியை செல்வமாக்கிறான் என்ற விஞ்ஞானத்தைக் கண்டடைந்தார்.இதனால் சமூகத்தில் ஏற்றதாழ்வும்,வர்க்கப்பிரிவினையும் நிதர்சனமானது.இது காலாகாலத்துக்கும் நீடித்தபடியே வர்க்கச் சண்டையைக் கொண்டு மக்களையும்,உலகத்தையும் நாசமாக்கும்.எனவே பாட்டாளிய வர்க்கமானது பலாத்தகாரமாக தனியுடமை முறைமையைத் தூக்கியெறிந்துவிட்டு,உற்பத்திச் சக்திகளை பொதுவுடமையாக்கியாகவேண்டும்.இதன்மூலம் வர்க்கபேதமற்ற மனித வாழ்வை எய்திட முடியும்.மார்க்சின் கருத்தானது இன்றுவரையும் எந்தக் கொம்பனாலும் முறியடிக்க முடியாத விஞ்ஞானமாகும்.
மார்க்சும்,ஆடம் சிமித்தும் வெவ்வேறான சமுதாயத்தையும்-பொருளாதார உறவுகளையும், முறைமைகளையும் கண்டடைந்தபோது-இவர்களுக்கருகில்(இடையில்?) உருவாக்கப்பட்டதுதாம் சில்வியோ கேசலின்(Sivio GESELL 1862-1930)நியாயப் பொருளியலும்(Die Natuerliche Wirtschafts Ordnung இயற்கையான பொருளியல் ஓழுங்கு),ஜோண் மைனார்ட் கெய்னெஸ்டின்(John Maynard Keynes 1883-1946) 'பற்றாக்குறை கிடப்பு'திட்டவாக்கமாகும்.

கேசலும் கேய்னெஸ்சும்:

கேசலின் Silvio Gesell (1862 - 1930)பொருளாதாரவிதிகள் இன்று மிகப் பரிச்சியமான எடுகோளாக மாற்றப்பட்ட நிலையிற்றாம் நம்மில் பலர் மாக்சியத்தைக் கெட்டிதட்டிய தத்துவமாகவும்,காலப் பொருத்தமற்ற கற்பனாவாத-உடோப்பிசமெனச் சொல்கிறார்கள்.இவர்களிடம் நியாயமிருப்பதற்கான எந்தத் தரவுமில்லை.ஏனெனில் இவர்களின் ஆசான் கேசலிடமும்,கெய்னெஸ்சிடமும் இந்த விவகாரம் குறித்த விஞ்ஞானமில்லை.

சில்வியோ கேசலின் பிரச்சனை என்னவென்றால்,சமூகத்தின் வறுமைக்கு-ஏற்றதாழ்வுக்கு மார்க்சியக் காரணிகளான 'உற்பத்திச் சக்திகளின் தனியுடமை' காரணமில்லை என்பதே.இஃது திட்டமிட்ட தவறென்பதை கேசல் முன்வைத்தபோதே அவர் தவறுசெய்வதாக அன்றே பல ஆய்வாளர்கள் சுட்டியும்,இதை இன்றுவரை சந்தைப்பொருளாதார வாதிகள் அழுங்குப் பிடியாய்ப் பிடித்துள்ளார்கள்.சமூகத்தின் வறுமைக்கு'நிலத்தின் தனியுடமையும்'பணத்தின் சழற்சியுமே' காரணமாகக் கேசல் முன்மொழிகிறார்.பணம் தனிநபர்களை செல்வந்தர்களாக்கும்போது ,அப்பணமானது கருப்புப் பணமாக நிலவுரிமையைக் கைப்பற்றும்.இஃது எப்பவோ பதுக்கப்பட்டு,பணமுடக்கத்தைச் செய்து- பின் வெளிவரும்போது பொருளாதாரச் சுற்றோட்டத்தை தேங்க வைக்கிறது,இதனால் மீளவும் பற்றாக் குறையானது கடன் பளுவைச் செய்யத்தூண்டும்.கடனின் வட்டியும்-வட்டிக்குவட்டியும் பெரும்பாலான உற்பத்திச் செலவை உயர்த்தும்.இதன்போது நிகழும் தாக்கமானது சமூக ஏற்றதாழ்வையும்,வறுமையையும் ஏற்படுத்துவதாகவும் கேசல் முன்வைக்கிறார்.சமூகவுற்பத்தி தாழ்ந்த நிலையிலும், அரச கடன் பளு உயர்ந்தும் சமுதாயத்தை வறுமைக்குள் தள்ளுவதாகக் கூறினார்.இங்கே அவர் உற்பத்திச் சக்திகளின் தனியுடமையானது உபரியை ஏற்படுத்துவதை திட்டமிட்டு மறுத்தார். பொருளாதாரத்தின் அதீத வளர்ச்சியானது சமூக உற்பத்தியைவிட பன்மடங்கு உயரும்போது கூடிவளரும் பங்கீடானது.இது கீழிருந்து(தொழிலாளர்களிடமிருந்து) மேல்நோக்கி(உடமையாளர்களுக்கு) பங்கீட்டைச் செய்வதாகவும்,இதன் வேகம் அதிகமாகும்போது நிலமையை அரசு கட்டுப்படுத்த முடியாததாகவும் முன்மொழியப் படுகிறது.
இதைக் காரணமாகக்கொண்டு கேசல் 'சுதந்திர பணம்,வட்டியற்ற நிதி'(Umlaufgesichertes Geld – Idee und Rationalisierung)பாதுகாப்பான பணச் சுற்றோட்டம் மற்றும் எண்ணம்-நியாயத்தன்மை) என்னும் மாய மானைத் துணைக்கழைக்கின்றார்.இதை இன்றுவரை முதலாளிகள் செய்யவுமில்லை.நிலவுரிமையை அரசிடம் கையளிக்கவுமில்லை.அந்தோ கேசல் மரணப்படுக்கையில்.மயிலே,மயிலே இறகிடுவாயா என்பதே கேசலின் நிலைமை.கேசலின் மொழிவானது 'சுதந்திர நிலம்'மக்களின் சொத்தாக அரசிடமிருந்து வட்டியற்ற குத்தகையாகவும் இருக்கின்றது.கெய்னெஸ் ஆடம் சிமித்தைப் பின் பற்றும் மனிதர்.இவரின் திட்டத்தை செயற்படுத்தவிரும்பிய மூலதனவாதிகள் இன்று போரினினூடு ஜனநாயகம் பேசுவதில் வல்லவர்களானார்கள். அதாவது பொருளாதாரச் சுற்றோட்டத்தில் அரசு சமூக உற்பத்திகளை-அரச ஒப்பந்தங்களை தனியாரிடம் கையளித்து,உற்பத்தியாளருக்கு வரிச் சலுகை செய்யும்போது பொருட்களின் விலை குறைந்து நுகர்வாண்மை பெருகுமென்பது கெய்னெசின் கூற்று.இன்று நம்முன் விரிந்துகிடக்கும் தவறுகளை இவர் பெயரால் சொல்லித்தப்ப பொருளியலாளர் முனைகிறார்கள்.


இருபதாம் நூற்றாண்டின் இறுதியரைப்பகுதிபூராகவும் கேய்னிசம்(Keynesianimus) பொருளாதாரத்திலும் அரசியலிலும் மாபெரும் செல்வாக்குச் செலுத்திய பொருளாதாரத் தத்துவமாகும்.கடன் நிதிமூலதனத்தினால் நிதியிட்டுக்கொள்ளப்பட்ட அரசநிதிப் பொறிமுறையானது மேற்குலகப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தித் தெம்பிட்டது.ஜேர்மனி இந்தப் பொறிமுறையை ஐம்பதுகளில் அச்சொட்டாகக் கடைப்பிடித்தது.இதன் தாக்கம் இன்று பெரும் அரச கடன் சுமையாக இருக்குமென அன்றைய கேய்னிசின் விசிறிகள் கனவும் கண்டிருக்கவில்லை.ஆரம்பத்தில்பொருளாதார வளர்ச்சியும்,சமூக அமைதியும் இதன்மூலம் கிட்டியதுண்மை.இதை நீண்டகால நோக்கில் பெரும் வருவாய்யாக்கிக்கொண்ட பெருமுதலாளிகள் வர்க்கம் வங்கிகளை இடைத் தரகர்களாக்கிக் கொண்டு அரசையும்,மக்களையும் ஒட்டச் சுரண்டிக் கொழுத்தது.இதன் தாக்கத்தால் இன்றிந்தக்காரியத்தை மூடிமறைக்க அரசும்,அரசிலாளர்களும் பெரும் பிரயத்தனப்பட்டு மக்களைத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்தப் பொறிமுறையானதோ மேற்குலகப் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளிய அநுபவத்தைப் பாடமாக்கிய உலக வங்கியானது இலத்தீன் அமெரிக்க-ஆபிரிக்க,இந்தியத் துணைக்கண்டத்துக்கு இந்தப் பொறிமுறைமூலம் கடன் நிதிமூலதனத்தைக் கொடுத்துத் தனது வளத்தைப் பெருக்கி, தன்பின்னால் ஒழிந்திருக்கும் முகமூடித்திரடர்களுக்குப் பெரும் இலாபத்தை அள்ளிக் கொடுத்தபோது மேற்கூறிய நாடுகளும் திவாலாகி, அந்தந்த நாட்டுக் குடிகள் பட்டுணிச்சாவை எதிர்கொள்கின்ற பரிதாப நிலையை நாமின்று காண்கிறோம்.

சுதந்திரப்(நியாய) பொருளாதார முயற்சி ஆரபத்திலேயே திவால்:

மேற்கூறிய நான்கு பொருளாதாரத் தத்துவங்களில் லிபிரலிசம்,கேய்னிசம்,மார்சிசமாகவே நான்கும் பொதுமைப்படுகிறது.இதில் மூன்றுமே வௌ;வேறு சூழல்களில் முயற்சித்துத் தோல்வியடைந்துள்ளன.இஃது வரலாறு.இதுள் மார்க்சியப் பொருளாதாரச்'சோஷலிசக்'கட்டுமானம் எங்ஙனம் தோல்வியுற்றதென்பதை நாம் இக்கட்டுரையின் பின் பகுதியில் பார்ப்போம்.முதலில் மற்றவற்றைப்பார்ப்போம்.

லிபிரலிசம் பொருளாதாரத்தில் மேற்குறிப்பிட்டபடி சமூக ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தி சமதாயத்தைப் பூர்ச்சுவாக்களாகவும்,பாட்டாளிகளாகவும் பிளந்தெடுத்தது.அளவுமுறையற்ற மூலதனவூக்கத்தால் குவிப்புறுதியும் கடும்கூலி ஏய்ப்பும் தொழிலாள வர்கத்தையின்னும் ஓட்டச் சுரண்டிக் கொள்ளத்தாம் இவர்களால் திட்டமிடமுடிந்ததே தவிர பொருளாதார சுபீட்சத்தையல்ல.இதன் காரணமாகவே கடும் சுரண்டலும் வறுமையும் மக்கள் சமூகத்தில் தலைவிரித்தாடியது.இந்தத் தத்துவத்தின் மகிமையை நிராகரிக்கவிரும்பாத ஆளும் வர்க்கமானது 1980களில் நவ லிபரலிசமாக முழுவுலகையும் வலம் வந்து உலகைத்திவாலாக்கிய வரலாறாக நீண்டுகொள்கிறது.இந்தக் கொடுமையானது மனிதாபிமானமற்ற முறைமைகளில் அரசியலையும்,மனிதவுரிமையையும் புண்படுத்தியது.காலாகாலத்துக்கும் மாறாத வடுவாக மனிதர்களைக் கொல்லும் அணுவாயுதங்களாக இதன் திமிர் வளர்ந்துள்ளது.இப்பரிணாம வளர்வானது எக்காலத்துக்கும் முதலாளிய நலன்களை மையப்படுத்தும் கல்வி,கலை,விஞ்ஞானப் பொறிமுறைகளையெல்லாம் இதன் மையவலுவைக்கூட்டும் ஊடகமாகக் குறுக்கப்பட்டுள்ளது.இத்தகைய செல்நெறியானது அரசியலைப் பூhச்சுவாக்களினது நலன் சார்ந்த அரட்டையரங்கமாகவும்,அவர்களது உரிமைகளை-செல்வங்களைக் காக்கும் அடியாட்படையாகவும் வைத்திருக்கிறது.இந்த முறைமைகளை அரசியற்பொருளாதாரத்தில் அச்சொட்டாகக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது அதன் வன்மமான சொற்சிலம்பத்தால் மக்களையின்னும் அடிமைப்படுத்தும் கல்வியாளர்களை உற்பத்திசெய்கிறது. இத்தகையவர்களே தமக்கத்தாமே 'குட்டிப் பூர்ச்சுவா'என்று சூட்டுமளவுக்கு இதன் உட்கட்டுமானத்தை உருப்படியாக அறியாத நிலையில,; மார்க்சியர்களைக் கேவலமாகச் சாடும் நிலையையெடுக்கிறார்கள்.

இந்த லிபரலிசம் எப்படி தோல்வியான பொருளாதாரச் சுற்றோட்டத்தைத் தந்ததோ அதே மாதிரித்தாம் கேய்னிசமும் மக்கள் நல அரசியலைப் போலிக்கு முன் மொழிந்தாலும் எதையும் செய்யவலுவற்ற சுரண்டல் மூலதனமாகச் சுருங்கியது.இவர்களது பார்வையில் இப்போது சந்தைப் பொருளாதாரமானது மனித முகத்தோடான சந்தைப் பொருளாதாரத்தை முன் மொழிகிறது.இது அப்பட்டமான பொய்யென்பதற்கு இதன் உற்பத்திப் பொறிமுறையும்,உற்பத்திச் சக்களுக்கும்-உறவுகளுக்குமான உறவே அதை அம்பலப்படுத்துகிறது! உபரியென்பது வெறும் பொருள் விற்பனையில் சாதாரணப் பெட்டிக்கடைக்காரன் பெறும் சில்லறையல்ல.எனவே அதன் வீச்சும் குவிப்புமானது உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையாளனின் கைகளில்தாம் குவிகிறது.அதை வேறொரு கட்டுரையில் விளக்குவோம்.

சில்வியோ கேசலின் திட்டமானது எந்தக் காரணத்தாலும் மனித வதையை நிறுத்தப் போவதில்லை.மத்தியில் குவிக்கப்பட்ட அரசியல் பொருளாதாரக் கட்டமைவுகளை நகர்புறத்திலிருந்து கிராமங்களைநோக்கித் தள்ளுவதும் அதனூடாக அபிவிருத்தித் திட்டங்களும்,பொருளாதாரத் தேவைகளும் புதிய முதலீட்டையும் வேலைவாய்புக்களையும் கூட்டிவரும்போது அதன் சாத்தியத்தால் உற்பத்திச் செலவு மிகமிகக் குறைந்து, புதிய சந்தைகளைத் தேடிக் கொள்வதும் கிரமிய வலுவைக் கொண்டு புதிய சந்தைப் பொருளாதாரத்தில் முழுமக்களும் பங்கு கொள்வதாலும் தனித்த மொனேப்போல் அழிந்து மனிதமுகப் பொருளாதாரம் நிலைப்படுமென கேசல் மொழிகிறார்.

இங்கும் கேசலிடமும்,கேய்னிஸ்சிடமும் இருக்கும் கருத்துக்களானது அரச கடன் பற்றிய கருத்தோட்டத்தைச் செம்மையாகப் புரியவில்லை. அரசகடனும்,நிதிமூலதனத்தின் கடன்களும் அதீத வரிச்சுமைகளை மக்கள்மீது திணிக்கிறது.கடன்களின் வட்டியும்,பின் அந்த வட்டிக்கு வட்டியுமாகப் பல்கிப் பெருகும் கடன் சுமை நாட்டையே திவாலாக்கிறது.இதை கேய்சல் சுதந்திரப் பணச் சுற்றோட்டத்தால் நிவர்த்திக்க முனைகிறார்.இதுதாம் கேய்சலின் மிகப் பெரும் பலயீனமாகும்! கேசலின் மொழிவுகளை வளர்ச்சியடைந்த கிராமங்களும்(மேற்குலகத்தின் கிராமங்கள்) கிராம சபைகளுமே ஏற்றுக்கொள்ளும் பண்பைக் கொண்டுள்ளன!இதை நமது மாட்டுவண்டிக் கிரமத்தோடு பொருத்திக் கொண்டால் அங்கு வேப்பம்பூ,இலுப்பம்பூ வடகம்தாம் உற்பத்திச் சாலைகளில் செய்யலாம்.எனவே இதை மேற்குலக அரசுகள்கூட மிகவேகமாக ஏற்றுக் கொண்டு காரியமாற்றவில்லை.வளர்ந்த நகரங்களான பெரு நகரங்களை குட்டி நிர்வாகத்தோட (மற்றைய பகுதிகளோடு தொடர்பாடாத)யூனியன் பிரதேசமாக வரையறத்து முயற்சிக்கிறார்கள்.அதுவும் வேலையில்லாத்திண்டாடத்தைக் குறைக்கவில்லை.ஜேர்மனியப் பெருநகரங்களான பிறிமன்,கம்பேர்க்,பேர்ளின் இத்தகைய பொறிமுறையில் இயங்குகின்றன.இத்தகைய நிலைமைகளில் தேசியப் பொருளாதார அறைகூவல் அப்பப்ப மேலெழுகிறது.இதுவே இன்று ஜேர்மனிய உற்பத்திப் பொருட்களை மக்கள் வேண்டி வேலைவாய்பைப் பெறும்படி மந்திரமோதுகிறது.நுகர்வுப்பொருட் துறைகளுக்கான மந்திரி திருமதி கூன் முன்வைத்துக் கொள்ளும் கருத்தும் இஃதே.

அனைத்துப் பொறிமுறைகளும் சிதறும்?:

இப்போது உருவாகும் பிரச்சனையானது தத்துவார்த்தம்,எதிர்த்துவார்த்தம் என்ற இரண்டு தளங்களாகும்.இங்கு நிறுவப்பட்ட-நிறுவனப்பட்ட மாபொரும் கருத்தாடலானது பொருளாதாரத்தில் புதியவொரு பொறிமுறையை நிறுவிக்கொள்ள தூண்டுகிறது.இதை வலப்படுத்தும் இன்றைய உலக வங்கியானது மனித முகத்துடனான... என்ற முகமூடியைத் தாங்கிப் பாசாங்கு செய்கிறது.இதன் உச்சக்கட்டமானது மூன்றாமுலகைச் சுற்றியே திரடர்களைக் கனவுகாணத் தூண்டியுள்ளது.இதன் பலாபலன் மினரல் வாட்டர் குடிப்பதற்கும்,சொகுசு வாழ்வு வாழுவதற்கும் பாமரரைத்தூண்டிக் கொள்வதும் அதனூடாக அனைத்து இயற்கைவளத்தையும் கொள்ளைபோடுவதே பொறிமுறையாக விரிகிறது.

சில்வியோ கேசலின் சுதந்திப் பொருளாதாரப் பொறிமுறையானது மூன்றாமுலகப் பொருளாதாரவலுவை முன் வைத்தே தோற்றம் பெறுகிறது.அவரது கனவானது உலகப் பெரும் முதலாளிகளை வலுவிழக்க வைத்து,முதலாளியச் சந்தையை மக்கள் சந்தையாக்கி அனைவரும் பங்குபற்றி மனிதாபிமானமான முதலாளியப் பொறிமுறையைக் கட்டுவதே.எனினும் இதுதாம் உடோப்பிசமாக விரிகிறது.இன்றிருக்கும் 'வர்த்தகக் கொன்சேர்ன்கள்' மட்டற்ற சுரண்டலில் புரண்டுவரும்போது இவர்களிடமிருக்கும் அதிகாரமானது எதார்த்தில் அழிக்கப்பட முடியாத வலுவாகும்.இதைப் பொருளாதார மறுசீரமைப்பால் நிகழ்தப்பட வாய்ப்பேயில்லை.இந்த அதிகாரமானது வளர்ந்து விருட்சமாகிய விஞ்ஞானத்தின் துணையோடு தன்னைப் பிணைத்தே வளர்கிறது.இதன் வலவானது சந்தைகளில் செல்வத்தைப் பொருட்களில் ஸ்தூலமாக்காது வெறும் காற்றில் ஸ்தூலமாகிறது.இது செய்மதிகளின் வளர்ச்சியோடு அதைச் சந்தைப் படுத்தும் பொருள்களின் வடிவங்களாக்கின்றன.கைத் தொலைபேசி,செய்மதித் தொலைக்காட்சி,இணைய-தொலைத்தொடர்புத் துறைக் கம்பனிகளென பொருளாதாரத்தில் 'பொருட்களின் இருப்பு' அழிக்கப்பட்டு காற்றே(அலைகள்?) பொருட்களின் இடத்தைக் கைப் பற்றியுள்ளன.

கேய்னிசமானது நீண்டகாலத்துக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியாது போய்விட்டது.அவ்வண்ணமேதாம் மார்க்சியத்தின் சோஷலிசக் கட்டுமானம் தன்னைக் காத்துக்கொள்வதற்கான உற்பத்தியூக்கத்தையும்,அதைக்காப்பதற்கான வியூகத்தையும் மக்கள் பண்பாக மாற்றாத வடுவைச் சுமக்கிறது.இந்தப் பண்புமாற்றம் கல்வியில்,கலைபண்பாட்டில் வளர்த்தெடுக்கப்படாத போக்கால் மதில்களும் ,கம்பிவேலிகளும் நாடுகளைச்சுற்றி எழுந்தன.இதுவும் மூலதனவாதிகளிடமிருந்து இவ் நாடுகளைக் காக்கவில்லை.இதை நாம் தனியே விவாதிப்போம்.

மூலதனத்தில் ஏற்பட்ட மொனோப்போல் சுழற்ச்சியானது மாபெரும் 'கொன் சேர்ன்களை' உருவாக்கியது.அதுவே உற்பத்தியில் ஆதிக்கத்தையும்,சந்தையில் தீர்மானகரமான பாத்திரத்தையும் கைப்பற்றியது.இதன் மூன்றுகால் பாய்ச்சல் அதிகாரமானது நடுத்தர உற்பத்தியாளர்களைக் காவுகொண்டு,தேசங்கடந்த கம்பனிகளையுருவாக்கி உற்பத்தியின் அனைத்து சாத்தியங்களையும் தனது வலுவுக்குள் திணித்துள்ளது.இதைமீறும் போராட்டமானது தேசங்கடந்தவொரு புதியபாணியிலான கூட்டைத் தொழிலாளர்களுக்கும்,நடுத்தர உற்பத்தியாளர்களோடும் இணைக்கும் காலமானது வெகு தூரத்தில் இல்லை.

இதன் அர்த்தமானது அனைத்துப் பொருளாதாரப் பொறிமுறைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்தில் சிதிறிவிடுமென்பதே.இதற்கான காரணமானது மக்கள் நலவாழ்வோடும்,தொழிலாளர்களின் உரிமைகளோடும் சம்பத்தப்பட்டது.


இன்றுள்ள பிரச்சனையானது பொருளாதாரம் பற்றிய கணிப்பீடுகள் எதைநோக்கியது என்பதாகும்! பங்குச்சந்தையின் உறுப்பினர்கள்(பங்காளர்கள்) தமது வருமானத்தைக் கட்டிக்காப்பதும்,மூலதனத்தைப் பெருக்குவதா அல்லது நாட்டினதும்,குடிகளினதும் நல்வாழ்வுக்காக உழைப்புப்பிரிவினையகற்றிய சூழலையுருவாக்கி முழு மக்களுக்குமானவொரு பொருளாதாரத்தைக் கட்டிக் கொள்வதா?இந்தச்சிக்கலானதுதாம் மக்கள் நல்வாழ்வைப் பற்றிய கொள்கையுடைய சிந்தனையாளர்களை பெரிதும் பாதித்தது.இவர்களில் முக்கியமானவர் திரு.மார்க்ஸ் அவர்களே, வரலாற்றில் மிக முக்கியமான சிந்தனையைச் செய்தார்.எனினும் இந்த நூற்றாண்டில் மீண்டும் ஆரம்ப நிலையில் பலவற்றைச் சொல்லவேண்டியுள்ளது.கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சியானது பல மடங்கு உற்பத்தித் திறனை வளர்த்துள்ளது.இது பாரிய உபரி வருமானத்தை முதலாளிகளுக்கு அள்ளி வழங்கியும் நாடுகள் திவாலாகிறது.முதலாளிகள் மட்டம் உயர்ந்துயர்ந்து செல்கிறது,இது எங்ஙனம் நிகழ்கிறது?

மார்க்சினதோ அல்ல சில்வியோ கேசலினதோ நோக்கம் வேறுபட்டமாதிரியான முறைமைகளில் மக்களின் அவலத்தை நீக்குவதாக இருக்கிறது.இஃது ஆடம் சிமித்திடம் துளியளவேனுமில்லை.ஆடம் சிமித்துக்கும் மார்க்சுக்கும் குறுக்கால் கோடுகிழித்து புதியவொரு கனவை விரித்திட்ட கேசல் இன்றைய பணமுறைமையையும்,வட்டி-வட்டிக்குவட்டி முறைமையைத்தாம் சமூக ஏற்றதாழ்வுக்குக் காரணமாக முன்நிறுத்துவதால் அவர் இறந்த பின்பும் அவரது கொள்கையை புரட்சிக்கெதிராக முன்நிறுத்தும் புத்திஜீவிகளை இன்றைய பல்கலைக்கழகங்கள் உலகெங்கும் உருவாக்கிவிட்டுள்ளது.இந்தப் புத்திஜீவிகளின் தொந்தரவே நம்மையின்னும் கேவலமாக புத்தியொடுக்குமுறை செய்கிறது.இது சிந்தனையின் அனைத்து முறைமைகளையும் ஒற்றைப் புரிதலோடு பொருத்துகிறது.இது தாரளமாகக் கற்பனையுலகைத் தயார்ப் படுத்துகிறது.இந்த உலகத்தின் பிரதியீடாக நம்முன் எஞ்சி நிற்பது 'ஆளுமையுடையவர்கள்-அறிவாளிகள் 'மேலும்,மேலும் வசதியாக வாழ்வை அமைக்கமுடியும்-அறிவற்ற மூடர்கள்தாம் வறுமையில் கிடதளுந்துகிறார்கள் என்ற வாதம்.இங்கு பல்லாண்டாக-சுமார் 5000 வருடங்களாகக் கட்டியமைக்கப்பட்ட பூர்ச்சுவாக் கருத்தியல் மிகவும் வர்ணந்தீட்டிய பொலிவில் நம்முன் மீளவும் கொணரப்படுகிறது.இத்தகைய மொன்னைப் பேச்சானது இருஷ்சியாவையும்,கிழக்கைரோப்பிய நாடுகளையும் சோஷலிசத்தின் தோல்வியின் முகமாகவும்,சீனாவை அதன் படிப்பினையாகவும் காட்டமுனைகிறது.இது தாம் நவ காலத்து முதலாளியக் கருத்துகளில் புதிய பாணியிலான கருத்தாதிக்கம்.இதைக் கொப்பிபண்ணும் மூன்றாமுலகப் படிப்பாளிகளிடமிருக்கும் கட்டுப்பெட்டித்தனமானது அதைச் சமூகத்தளத்தில் பொருத்திப்பார்க்கும் அறிவற்ற நிலையில் தாம் படிப்பாளிகள் மட்டுமேதாம் புத்திஜீவிகளில்லையென்பதைச் சொல்கிறார்கள்.

இதைக் கடந்து நாம் இக்கட்டுரையின் இறுதியில் விமர்சிப்பதாகக் குறிக்கப்பட்ட மார்க்சியப் பொருளாதார முன்னெடுப்பின் தோல்வியாக முன் மொழியப்படும் இரஷ்சியாவையும் கிழக்கைரோப்வையும் மனதிலிருத்தி-இதன் சரிவு எதைக் குறித்தரைக்கிறதென்பதை நோக்குவோம்.

அடிமட்ட,மேல்மட்ட அமைப்புகள்:

வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்யூனிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.

இன்றைக்கு நாம் படும் வேதனையும்,கொடுமையான அடக்கு முறைகளும் வெறுமனவே நல்லது கெட்டதுதெனும் ஒற்றைப்புரிதலுக்கிட்டுச்செல்லும் முதலாளியக் கருத்தியல்ப்பரப்புப்படி நிகழ்வதல்ல.அஃது உடமை வர்க்கத்தின் தனியுடமைகளைக் காப்பதெற்கெடுக்கும் முயற்சியாக விரிகிறது.

இங்கே தனியுடமை வர்க்கமானது சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளை(உற்பத்திக்கான மூல வளம்,ஜந்திரங்கள்,நுட்பங்கள் இன்னபிற) ஒருசிலரின் உரிமைகளாக்கிய பின் அதைக்காப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது. இங்கேதாம் 'பொருளாதாரம்' எனும் செல்வத்தைக் கருத்து நிலைக்கு மாற்றும் விந்தையும் பின் அதையே அடித்தளமாகவும்,அந்தத் தளத்தைக் காப்பதற்கான மேல்மட்டக் 'காப்பரண்களாக்' கட்டியமைக்கப்பட்ட தேசவுருவாக்கமும் அது சாhந்த 'வன்முறை-வன்முறையற்ற'வடிவங்கள் தோன்றுகின்றன.இவை பொலிஸ்,இராணுமென்றும்,நீதிமன்றம்-சிறைக் கூடமென்றும் ,சட்டம்-அரசு என்றும் வன்முறையமைப்புகளையும்,கல்வி-மதம்,கலை-பண்பாடு,ஊடகங்களென்று பற்பல ஊடகங்களை வன்முறையற்ற வடிவமாகவும் வைத்துத் தமது பொருளாதாரப் பொறி முறையைக்கட்டிக் காக்கின்றன. இங்கே நாமெல்லோரும் ஏதோவொரு வடிவத்தில் அடக்கியொடுக்கப்பட்ட ஜீவன்களே!ஏனெனில் இந்த உற்பத்திச் சக்திகளோடு நாம் உயிர் வாழ்வதற்காக உறவுகொள்ளவேண்டியே ஆகவேண்டும்.இந்த நிகழ்வுப் போக்கானது உழைப்பிலீடுபடும் எவரையும் சுதந்திரமான முறைமைகளில் இயங்க அனுமதிப்பதில்லை.பேரளவில் சுதந்திராமாக இருப்பதாகக் கருதும் நாம் 'பலவழிகளிலும்' அடக்கியொடுக்கப்படுகிறோம்.

வர்க்கப்போராட்டத்தில் சோஷலிசத்தின் வீழ்ச்சியும்,தொழிலாளர்களின் இன்றைய நிலையும்:

பால்யப் பருவ சோஷலிசக்கட்டுமானது முதலாளியத்துக்கு மாற்றாகவே நிறுவப்படுகிறது.முதலாளியத்தினது முரண்பாடுகளால் அதைத்தூக்கியெறிந்துவிட்டுத் தாழ்த்தப்பட்ட வர்க்கமானது தனக்கான உரிமைகளைக் கையிலெடுக்கும்போது-உரிமையையிழந்த வாக்கத்திடமிருந்து பற்பலச் சதிகள்-வெளிநாட்டுச் சக உடமைவர்க்கக்கூட்டோடு நடப்பதைத் தடுப்பது மிக,மிக அவசியமானவொரு திட்டமாக மாறிவிடுகிறது.இது திட்டமிட்ட மக்கள் நலத் திட்டங்களைக்கூட நிறைவு செய்ய முடியாதளவுக்குக் குறிப்பிட்டவொரு சோசலிச நாட்டைப்பாதிக்கும்.

சமூகம் பகை முரணியல்பான வாக்கங்களாகப் பிளவுபட்ட சூழலையெப்படி முதலாளிம் உருவாக்கியதோ,அதை அந்த வர்க்க நிலையிலிருந்துகொண்டே சோஷலிச முகாமும் எதிர்கொண்டிருக்கவேண்டும்.ஆனால் முதலாளியமோ தனது வாக்கப்போராட்டத்தில் மிகக் கவனமாக இருந்தபோது,சோஷலிச முகாம் மக்கள் நலனையும்,முதலாளியப் பாசிச வர்க்கத்தின் இரண்டாவதுமுறையான உலக மகாயுத்தத்தையும் ஒருங்கே எதிர்கொள்வதில்போய் முடிந்தது.உள்நாட்டு உடமையிழந்த வர்க்கமானது மிகவும் ஆபத்தான வாக்கமாக மாறிக் கொள்வதற்கானவொரு சூழலை இரண்டாவது உலகயுத்தம் ஏற்படுத்தி அதைத் தகவமைத்துக் கொடுத்து.

சோஷலிசம் வெற்றியடைவதும்,தோற்பதும் அதன் வர்க்கப்போராட்டப் பலத்தினதும்,மக்களின் கருத்துநிலைவளர்சியிலிருந்து கூட்டுவுற்பத்தியின் ,உற்பத்தித் திறனிலும் அடங்கியிருக்கிறது.இதைச் செய்யத் தூண்டத்தக்கவொரு தலைமைத்துவத்தை புரட்சிக்கட்சியானது சகல வழிகளிலும் அன்று திடீரென குறைந்த ஆயுளிலேயே இழந்ததும் இந்த முகாமைப் பாதிக்கிறது.

இதன் தாக்கமானது சோஷலிசத் திசையமைவை மிகவுமொரு நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறது.இதிலிருந்து மீளக்கூடியவொரு முனைப்பை அந்த முகாம் பெறுவதற்குள் உள்நாட்டுப் பழைய உடமை வர்க்கமானது மிகவும் காட்டமானவொரு போராட்டத்தை உலக முதலாளித்துவத்தோடு சேர்ந்து காரியமாற்றியது.இன்றைய வளர்ச்சியுறும் தொழில் நுட்பமானது முதலாளியத்தைத் தக்கவைக்கத்தக்கவொரு வலையமாக விருந்து மேவுகிறது. இதன் காட்டாமான உந்துதலோடு பெரு மூலதனம் கைக்கோர்க்கும்போது 'புரட்சியின் அவசியம்' முன்னெப்போதையும்விட இப்போது அவசியமாக மக்களிடத்தில் உணர்வுருவாகுமென்று நம்பலாம்.இதுதாம் நிசமான வரலாறாக இன்னொரு லெனினைத் தொழிலாளி வர்க்கம் தகவமைக்கும்,ஆனால் இது ஒரு எல்லைக்குள் உட்பட்டதாக இருக்க வாய்பேயில்லை.

ப.வி.ஸ்ரீரங்கன்

Donnerstag, Dezember 13, 2007

இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல

இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல



"Wieviele Freuden werden zertreten,
weil
die Menschen
meist nur in die Hoehe gucken
und was zu ihren Fuessen liegt,
nicht sehen."
- (Johann Wolfgang Goethe)



"எவ்வளவு
மகிழ்ச்சிகளை மிதிப்போம்,
அநேமாக மனிதர்கள்
மேல்நோக்கி மட்டுமே
பார்க்கிறார்களேயொழிய
அவர்களது
பாதங்களோடு
என்ன கிடக்கிறதென்பதைப்
பாரார்." -(மகாகவி கோதே)


எமது காலத்தில் நாம் அனைத்து வளங்களையுமிழந்தோம்.அந்த வளங்கள் வெறும் பொருள் சார்ந்தவையல்ல.நம் முன்னோர்கள் தேடிய அறிவை,பண்பாட்டை,அவர்கள் தினமும் சேர்த்து வைத்த எமது மனிதத் தன்மையை,உணர்வு வெளியை- என்றெல்லா வகைப் புரிதலுக்குரிய எல்லா வடிவங்களையும் இழப்பதால், நாம் ஆத்மீக நெருக்கடிக்குள்ளாகிறோம்.


இன்னும் என்ன செய்ய?


ஏதோவெரு சினிமாவில் வரும்"ஆசை ஆசை கேப்பக் களிக்காசை...பாரதிராசா சொன்ன கிரமத்தைக் காட்டு... வேப்பமரக்காற்றிற்க்கு வேலையில்லையே,இதில் வாழ்ந்து வந்தால் உடல் வலியில்லையே..."எனும் பாடலைப் பல தடவைகள் கேட்டுப் பரதவித்து, என் வேப்ப மரத்தையும்,ஆலமரத்தையும், வைரவ கோவிலையும் ,மாலையில் ப+சைசெய்யும் ஐயரின் கையால் வாங்கியுண்ணும் ஒருபிடி பொங்கலில் உள்ள ஆத்ம திருப்தியையும் நினைத்தேங்கி,ஜேர்மனிய இனவாத வயல்களில் இவற்றைத் தேடிக் கால் பதித்தலைகிறேன்.என் கிராமத்தின் தொடர்வாழ்வு அழிந்தது எதனால்?அமைதியான கிரமத்தின் அற்புத நிகழ்வுகள் எங்கள் கோவில்களின் வயற்பரப்புகளில் நடந்தவை.எங்கள் கிரமத்தின் வேப்ப மரத்தில் விளையாடிய கிளியைப் பிடிப்பதற்கு தென்னம் பொந்தில் கையைவிட்டுப் பாம்பிடம் கொத்துவேண்டிய பொழுதில் ஏற்பட்ட வலியை,நஞ்சை-இன்றிந்த இருபத்தோராம் நூற்றாண்டுப் பொருளாதாரமும்,அதன் கொடும் வினையும் தருகிறதே!


எங்கள் முப்பாட்டன் நட்டுவைத்த வேம்பும்,எங்கள் அம்மாக்கள் ப+சிய மஞ்சளும்,எங்கள் விவசாயி தந்த பாசுமதியும் அந்நியனின் வர்த்தக உரிமைக்காக மரபுரிமையாகிறது,இன்று!


இந்த உலகத்தின் மனிதர்கள் மாறிவிட்டார்கள்.பண்ணைப்புரத்திலிருந்து பாட்டுக்கட்டிய இராசையாவின் மகளோ "லைட் ஒன்"சினிமாக் கச்சேரியில் தமிழில்பாடி ஆங்கிலத்தில் "தாங்ஸ்"என்று கோட்டுச் சூட்டோடு சூடான நாட்டில்...


என்னவெல்லாம் இன்னும் மாறும்?


இதோ புத்த பெருமான் கூறுகிறார்:"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்!."


ஆம் மாற்றமே நிரந்தரம்! இப்போது இந்த மாற்றங்கள் மனிதப் பண்பாட்டையும,; அவர்கள் வாழ்வையும் எங்ஙனம் மாற்றுகின்றன?இதுவே எனது கவலை!இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தாம் மனிதர்கள் இப் புவிப்பரப்பில் வாழ முடியும்?உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?


"இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!."இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும் இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.


என்ன செய்வோம்?


எங்கும் யுத்தம்,அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்...விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால் சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்...உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் "இந்த இயற்கை" இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?


இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் ப+ண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?


உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?


எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் "கரியமில வாயு"வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.


உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் "சக்தி" என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு "நேரக் குண்டாக"நேரம் குறித்திருக்கிறது.





இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:


இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.



1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.


2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.


இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில் அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.


அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:


இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் ப+ர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.


அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்;கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:


1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.


2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.


3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.


5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


7):கீழ்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.


9): ஞாபக மறிதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.


இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.



இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.



இன்றைய சக்திவளாதாரத்தில் மனித வாழ்வு:


-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.


- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது


-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.


-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.


-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.


-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.



இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?


எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?



நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுப+ர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?



இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?



எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் "நம் கூட்டுழைப்பு" நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?



அழகிய ஆணுக்கும்,பெண்ணுக்கும் பின்னால் விழி நகர்த்துவதா வாழ்வின் அர்த்தம்?கோடம்பாக்கப் பெண்களும்,ஆண்களும் மனித வாழ்வின் நெறிமுறைகளைப் பற்றிய உணர்வுப+ர்வமாகத் தெரிந்துகொண்டா ஆடைக்குறைப்புகளைச் செய்கிறார்கள்? மனித சமுதாயத்தை வெறும் காமக் களியாட்டமாக மாற்றியுள்ளச் சீர்கெட்ட சினிமா, மக்களின் மனங்களை எங்ஙனம் பதப்படுத்தியுள்ளது?இந்தச் சினிமாவினது பிடியில் சிக்கிய இளந் தலைமுறைக்கு என்ன பொறுப்புணர்வு- சொல்லித் தெரிந்திருக்கு?



சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?



"நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ ப+சுவென்று "சேட";பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்" நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?



இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!



இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?



அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய "எச்5 என்1"வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!



எந்தப் பொறுப்புணவுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.



இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!



யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே



.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:"தாவரத்திலிருந்து சக்தி" எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).



என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்(இப்படியெழுதும்போது கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சூழற்கேடுகள் பற்றியவொரு மதிப்பீடு ஞாபகத்துக்கு வருகிறது,அதை இறுதியில் பார்க்கலாம்).



அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.



200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:"இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே"அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்


இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய விய+கமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.


அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் ப+ர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய "கொன்சேர்ன்களின் பங்காளிகள்" மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் ப+ர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் ப+ர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.


எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் ப+ச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.


புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சில ப+ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் ப+ர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வௌ;வேறானதல்ல!


அதாவது இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது திரு மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) "இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!"இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த ப+ர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.

இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் ப+ர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இனி இக்கட்டுரையின் முன்பகுதியில் சொல்லப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவிய பேருக்கான சோஷலிச உற்பத்தியிலும் சூழல் வலவாகப் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டைச் சற்றுப் பார்க்கலாமென நினைக்கிறேன். பேர்ன்ட் சென்வ்(Bernd Senf) எனும் பொருளாதாரப் பேராசிரியர் தனது பிரசித்திபெற்ற நூலான""Die blinden Flecken der Oekonomie"(ISBN:3-423-36240-5)இல் கிழக்கு ஜேர்மனியிலும் மற்றும் முன்னாள் இருஷ்சியத் தொங்குசதைக் கிழக்கு நாடுகளில் நிலவிய உற்பத்திமுறை சூழலை மாசுபடுத்தியளவு மேற்குலக முதலாளிய நாடுகளைவிட பெரிதுவென்றும்,அது மிக மோசமானதென்கிறார். "...Es ist sicherlich verfehlt,alles,was sich unter dem Namen"Sozialismus"und unter Berufung Marx im Ostblock entwickelt hat,auf das Konto von Marx zu buchen!"-(Die blinden Flecken der Oekonomie.seite:107.)"உண்மையில் அனைத்தும் தவறாகவழி நடாத்தப்பட்டது.என்னென்ன ஷோசலிசத்தின் பெயராலும் மற்றும் மார்க்சியத்தின் பரிசீலிப்புமாகக் கிழக்கு ஐரோப்பாவில் கட்டி வளர்க்கப்பட்டதோ அவை அனைத்தும் மார்க்சினது கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும்."என்று குற்றம் சுமத்திவிடும் பேராசிரியர் தொடர்ந்து குற்றஞ் சுமத்துவது மார்க்சிடம் சூழலின் மறுவாக்கம்பற்றிய கணிப்பிருக்கவில்லையென்றும்,அவர் அனைத்தையும் மனிதர்களால் சமப்படுத்தி விட்டதாகவும்,மார்க்சியமும் முதலாளியமும் சூழலைப் பாதுகாப்பதில் தவறிழைத்த இருவேறு நிலைமைகளென்கிறார்.

இங்கு இந்தப் பேராசிரியரின் தரவுகள் உண்மையானவையாக இருக்கின்றன.அவர் கிழக்கு ஐரோப்பாவில் பல காலம் ஆய்வுகளைச் செய்துள்ளார்.எனினும் அவரிடும் பாரிய தவறு என்னவென்றால,; ஷோசலிசச் சமுதாயத்தில் நிலவிய அரசுகளும்,பொருளாதாரவுற்பத்தி முறைமைகளும் அரச முதலாளியமாகவும்,அவையே ஒரு காலக்கட்டத்தில்(முதலாளித்துவ மேற்கு நாடுகளின் வலிந்துருவாக்கும் போர் நெருக்கடி:பனிப்போர்க் காலக்கட்டம்) இராணுவப் பொருளாதாரமாகவும் மாற்றமுற்றது.இந்த நெருக்கடி கூட்டுப்பண்ணை முறைமைகளைச் சிதைத்து, மக்களது தேவைக்கேற்ற உற்பத்தியைப் புறந்தள்ளி சூழலை மாசுபடுத்தும் அணு,மற்றும் பேராயுதத்துக்கான உற்பத்திகளில் இவ் நாடுகளைத் தள்ளி வறுமையையும்,கொடூரச் சூழற் கெடுதிகளையும் ஏற்படுத்தியது.

இதைப் பேராசிரியர் பார்க்க மறுப்பது நாம் புரியத் தக்கதே. பேராசிரியர் இன்று மேற்கு ஜேர்மனியிலுள்ள பேர்ளின் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துகொண்டே பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆய்வாளருமாக இருக்கிறார்.அவரது பார்வையை நாம் மறுப்பதற்கில்லை.ஆனால் அவர் திட்டமிட்ட முதலாளித்துவத்தின் மனிதநல விரோதத்தை மறைப்பதே இங்கே கவலைக்குரிய நிலை.இதுவே இன்றைய பல பேராசிரியர்களின் நிலை!என்ன செய்ய அவர்கள் பேராசிரியர்கள்!! மனிதர்களுக்கு மட்டுமானவொரு புவிப்பரப்பாக மார்க்ஸ் எங்கேயும் ப+மிபற்றிக் கருத்திட்டதாக எனது அறிவுக்குப் புலப்படவில்லை.இருந்தும் பேராசியர் இப்படியெழுதுகிறார்:",:">>In der Marxischem Mehrwerttheorie wird die Quelle der Wertschoepfung einzig und allein in der menschliche Arbeitskraft gesehen.So wichtig ... Die viele umfassendere Produtivkraft der Natur,von der menschliche ArbeitKraft ja nur ein ganz kleiner Teil ist..."<<-(Die blinden Flecken der Oekonomie"seite:103/104)",மார்க்சியத்தின் மதிப்புக்கூட்டுத் தத்துவமானது பொருளுற்பத்தியின் மூலத்தை ஒரேயொரு தனித்துவமான மனிதவுற்பத்தித் திறனுக்குள்ளேயே அனைத்தையும் காண்கிறது.

இதுவே முக்கியமானது...உற்பத்தித் திறனில் உள்ளடங்கிய பெரும்பகுதி இயற்கைக்குச் சொந்தமானது.மனிதர்களின் உற்பத்தித் திறன் உண்மையில் வெறும் சிறுபகுதியே." என்பது எதனையும்விட இயற்கையின் அவசியத்தை வலியுறுத்துவதாக நாம் பார்க்க முடியாது.இந்தப் பேராசிரியரிடமுள்ள மார்க்சிய விரோதப் போக்கே இப்படித் தொடர்கிறது.என்றபோதும் அவரது ஆய்வில் நிலை நிறுத்தப்படும் சூழலின்பாலான மனித மதிப்பீடுகளை நாம் நிராகரிப்பதிற்கில்லை.அவர் பார்க்கின்ற அல்லது மொழிகின்ற குறைபாடுகள் நம்காலத்து பொருளாதார நெருக்கடியின் பெரும்பகுதியாகும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, Dezember 09, 2007

சண்டைகளும் சமாதானக்கூச்சல்களும்

மூலதனத்தின் கருப்பையில்
"சமாதனம்" கருக்கொள்வதென்பது
மொட்டைத் தலைக்கும்
முழங்காலுக்கும் முடிச்சிடுவதாகும்.!


நாங்கள் உவத்திரமிக்க-திமிர்த்தனமான கொடிய சுரண்டற் காலத்தில் வாழ்கிறோம்,கடந்த இருபது நூற்றாண்டுகளையும் மனிதர்கள் அதன் கொடிய யுத்தங்களாலும்,கொலைகளாலுமே எண்ணிக்கொள்ள முனைகையில் இருபத்தியோராம் நூற்றாண்டோ 'இல்லை,இல்லை-நானும் அதே இரகம்தாம்' என்றபடி.செப்டம்பர்11' க்கு பின்பு பற்பல காரியப் போர்களையும்,சமாதான சீட்டாட்டங்களையும்-பயங்கரவாதத்தின் பெயர்கொண்டு உலக மூலதனவாதிகளும், அவர்களின் பிராந்தியகண்ட முகவர்களுமாக ஆற்றிவருகிறார்கள்.இந்நிலையில் நாம் இக்கட்டுரையை நிச்சியமாக கலீப் கார் Caleb Carr :"The Lessons of Terror". பாணியல், A History of Warfare against Civilians: Why it Has Always Failed and Why it Will Fail Again என்று எழுதப்போவதில்லை.கலீப் கார் அமெரிக்க இராணுவத்தின் செலவில் இராணுவ வரலாறு புனையும் இராட்சத அறிவு விற்பனன்,எதையும் மக்களுக்காகவே -அவர்கள் நன்மைக்காகவே அமெரிக்கா அரசியல்யுத்தஞ் செய்வதாகக் கயிறு திரிப்பதில் நம் நாடுகளின் அரசியல் வாதிகளுக்கே முன்னோடி.இந்த விபரீதப் புத்திஜீவியை ஜெர்மனிய மொழிக்குள் அறிமுகஞ் செய்யும் போது:Wer mehr ueber die Urspruenge des internationalen Terrorismus und die Strategien zu seiner Bekaempfung wissen will, sollte Caleb Carr lesen."என்று Dr. Udo Ulfkotte எழுதுகிறார்.சர்வதேசப் பயங்கர வாதத்தின் ஆதித்தொடக்கம் பற்றி மிகுதியாகவும்கூடவே அதன் போராட்ட வியூகம் பற்றி எவரொருவர் அறியமுற்பட்டால் ,அவர் கலீப் காரை வாசிக்கவேண்டுமென்கிறார், அந்த ஜேர்மனிய எழுத்தாளர். நாம் கூறுகிறோம்: 'எவரொருவர் அமெரிக்கப் போர்களையும்பயங்கரவாதத்தின் மூலவூற்றை -அவரது பாணியில்"Ursprueng(Origin) " தெரிந்து கொள்வதற்கு கீழ்வரும் நூலைப் படிக்கவும்:Lies and the Lying Liars who tell them. A Fair and Balanced Look at the Right by Al FRANKEN.


பயங்கரவாத்திற்கெதிரான யுத்தம்!


".............."


இப்பொழுது நாம் யோசிப்பதென்னவென்றால் நாளாந்தம் மானுடம் குண்டடிபட்டுச் சாகிறது,சமாதனத்திற்கானஜனநாயத்திற்கான யுத்தஞ் செய்தவர்கள்-செய்கிறவர்கள் மீளவுமொரு வியூகத்துக்குள் இவ்வாண்டுமுதல் வருகிறார்கள் என்பதுதாம்.கொண்டிலீசா அம்மையாரும்,எங்கள் அருந்தவப் புதல்வன் ஐயா ஜோய்ச்சு புஷ்சும் ஐரோப்பாவைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்து போய்யாச்சு! ஈரான் அணுப்பிளந்து ஆயுதஞ் செய்யுமுன் அடக்கியாக வேண்டும்,வடகொரியா மாதிரி வாலாட்ட விட்டால் காரியம் கெட்டமாதிரித்தாம்.பிரான்சும்,ஜேர்மனியும்'ஆமாம் எல்லாத்துக்கும் நாம இருக்கிறோம் நண்பரே,இப்ப நீர் எம்முடைய தேங்கிப்போன சந்தைக்கு ஒரு வழி சொல்லும்! கொஞ்சம் ஈராக்கில் இடம் தாரும் பிறகு இந்தத் தப்பான கைகள் அணுக்குண்டோடு கோலாச்சுவதை நாம் ஒரு வழிபண்ணிடலாம்'என்று மடக்க ஐயா புஷ்சும் தலை சாய்க்க புதிய வியூகம் இன்னும் பாரிய அழிவை நோக்கி நடக்க நேர காலம் குறிப்பதுதாம் பாக்கி.


ஆவ்கானிஷ்தானில் நடாத்தப்பட்ட அமெரிக்காட்டுமிராண்டிப்போரானது 11செப்டம்பரில் உலக வர்த்தக மையத்தில் இறந்த 'வெளிநாடுகளின்அமெரிக்காவின்' மக்களைவிட அதிகமான மக்களைக் கொன்றது! இங்கு பாவிக்கப்பட்ட யுத்தத் தளபாடங்கள் 1997 இல் சர்வதேசத்தால் கவனித்தொதுக்கப்பட்ட மிகக் கொடுமையான "Typ CBU-89 of Typ Gator"என்ற குண்டுகளாகும்.இவை முறையே 94 உயர்வெடிப்புப் பன்சர் மற்றும் ஆளழிப்புக் கண்ணிகளைக் கொண்டு தாக்கும் வல்லமையுடையவை.கூடவே உலகத்தால் ஒதுக்கப்பட்ட 'ஸ்ப்பிலிற்றர்'Splitterboms பாவிக்கப்பட்டது.இதை அம்பலப்படுத்திய Prof.Marc Herold,(New Hampshire பல்கலைக்கழகம்)அவர்களது கணிப்பீட்டின்படி அமெரிக்கக் குண்டுகளாற் கொல்லப்பட்ட ஆவ்கான் அப்பாவிகள் கிட்டத்தட்ட 5000.தனியே ஒரு கிராமத்தில்(கோரூம்)மட்டும் 200 அப்பாவிகள் மீது போடப்பட்ட குண்டால் துடிக்கத் துடிக்க அனைவரும் மாண்டு போயினர்.சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் விடுதி கூட விதி விலக்கற்று குண்டுகளால் தாக்கப் பட்டது.


ஈராக்கில் இதுவரை நடைபெறும் அமெரிக்கக் காட்டுமிராண்டிகளின் கொடிய அழிவுயுத்தத்தால் பல உயிர்கள் பலியாகின்றன,என்றுமில்லாதவாறு சூழல் மாசாக்கப் படுகிறது.தாழ்வீச்சு அணுக்குண்டுகளால் அப்பிராந்தியமே உயிர்வாழமுடியாத கதிரியக்க வலயமாக மாறுகிறது.எனினும் ஈராக்கை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியாத அமெரிக்கஐரோப்பிய ஏகாதிபத்யங்கள் ஈராக்கின் எல்லை நாடுகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டுகின்றன.இதன் ஆரம்பம் ஈரானில் கைவைப்பதாக இருக்கும்.எல்லை தாண்டி வரும் குண்டுகளையும்,தற்கொடைஅரபுத்தேச பக்தர்களையும் தடுப்பதற்கான வியூகமாக இந்தப் போர் மையங்கொள்கிறது.ஈராக்கின் பல்லினங்களுக்கிடையில் கட்டவிழ்த்து விடப்படும் இனவாதம் பல் நூறு உயிர்களை நாளொன்றுக்கு கொன்றபடி,இதே கதைதாம் இன்றைய ஆசியஆபிரக்க-இலத்தீன் அமெரிக்கப் பகுதிகளிலும் கூடமே கிழக்கைரோப்பிய நாடுகளிலும்.இந்த யுத்தம் எதன் பொருட்டால் நிகழ்கிறது?ஏனிந்தப் படுபயங்கர நிலை பூமிப்பந்துக்கும்,உயிர்களுக்கும்? இதன்வாயிலாகப் பேசப்படும் 'சமாதானம்' எனும் ஏட்டுச்சுரக்காய் எப்போதாவது கறிக்குதவியதாக உலக வராலாற்றில் நாம் அறிந்தோமா? இது குறித்து சற்று நோக்குவோம்:


சண்டைகளும்,சமாதானக்கூச்சல்களும்:

மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இங்கு மக்கள் அடிமைகளாகவும் ஆண்டான்களாகவும் மாற இந்த வலிமை உதவியுள்ளது.இந்த வலிமையை உணராத மனிதக்குழுக்கள் பின்னாளில் இருந்த இடம்தெரியாது அழிக்கப்பட்டார்கள்.உதாரணமாக:சமீப கால வரலாறு சிந்துநதிப் பள்ளத்தாக்கு மக்களினதாகும்(அண்மைக்கால அமெரக்கஅவுஸ்திரேலிய பழங்குடிகளுக்கும் இது பொருந்தும்).சிந்து நதி நாகரீகம் பற்றி ஜெர்மனிய ஆவணம் கூறுவதைப்பார்ப்போம்:

Durch die Ausgrabungen im Indischen Fuenfstromland und am unteren Indus wurden in neuerer Zeit schriftbehabte Hochkulturen ermittelt,so besonders in Mohenjo Daro und Harappa, vermutlich die Mittelpunkte zweier Herschaftsbereich.ueber die Traeger dieser Kulturen herrscht noch keine einheitliche Meinung,so dass man auch ueber ihre Herkunft nicht Bestimmtes ermitteln kann, waehred die starken Verbindungen mit der sumerisch-akkadischen Kultur erlauben,den Beginn dieser indischen Kulturen(கவனிக்க:இந்தியக் கலாச்சாரங்கள் என்ற பன்மைத்துவத்தை). auf etwa 2500 vC. zu datieren.Ihr politisches Ende fand sie um die Mitte des 2.jahrtausends. Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet.Die zahlreichen Baeder -es wurde auch ein Grossbad mit einem 12m langen, 7m breiten und 2,5m tiefen Becken ermittelt-weisen auf eine Kultische Bedeutung hin.Es wurden mehrere Goetter verehrt,unter denen eine Muetergoetin hervorragt.Die Schrift Konnte bis heute noch nicht entziffert werden.Die wahrscheinlichen Zerstoerer dieser Reiche sind INDOARIER.Um 1500 vC.war die Einwanderung in das Indusgebiet abgeschlossen.Der in dem Epos MAHA BHARATA geschilderte Kampf deutet darauf hin, dass die Kraefte der vorarischen Bevoelkerung allmaehlich wieder starker wurden ...(G.Dunbar,Gesch.INDIENS -Eng.1936/Dt.1937;Herders KonversationsLexikon Seite:66/67).

ஐந்து நதிகளுடைய நாடான இந்தியா மற்றும் சிந்துவெளி அகழ்வராட்சியினூடாகச் சிந்துவெளிப் பண்பாடு புதிய காலத்துள் எழுத்துடைய உயர் பண்பாடுடையதென அறிவிக்கிறது.பிரத்தியேகமாக மொகஞ்சதார-கரப்பா சாத்தியமான வரை இருவேறு ஆளுமைகளின் ஸ்த்தானமாகவிருக்கும்.இரு பண்பாட்டைத் தாங்கியவர்களிடமும் ஒருமித்த கருத்தற்ற நிலை அவர்களது மூலத்தோற்றம் குறித்த வெளிப்படுத்தலுக்கான முயற்சிக்கு.சுமேரியர்-அக்காடிய(மூன்று நதிகளுடைய நாடு- மரித்த மொழியான அக்காடி)பண்பாடுகளின் பலமான இணைவுகளின் அனுமதித்தலோடு ஆரம்பிக்கிறது இந்தியப் பண்பாடுகள்.அது கிட்டத்தட்ட கி.மு.2500 ஆகும்.இவர்களது அரசியல் வாழ்வின் முடிவு இரண்டாவது ஆயிரமாமாண்டின் மத்தியிலாகும்(கி.மு.1500).நகரங்கள் அனைத்தும் இறுக்கமாகவும் கூடவே 4-10 மீட்டர் அளவிலான வீதிகளையும் கொண்டு ஊடறுத்தவை.இலகுவான கட்டட வடிவங்கூட ஒரு ஒழுங்கமைந்த நுட்பத்தைக் கொண்டமைந்திருந்தது.மிகுதியான குளியலறைகள்-அத்தோடு ஒரு பெரும் நீச்சல் தடாகம்-12மீ.நீளத்துடனும்7மீ.அகலத்துடனும்2,5மீ.ஆழத்துடனும் இருந்திருக்கிறது.இவை பண்பாட்டு அர்த்தத்தை பறை சாற்றுபவை.பற்பல தெய்வ வழிபாடுகள்இருந்திருக்கிறது,இதற்குள் தாய்மைக்(கொற்றவை?)கடவுள் வழிபாடும் வெளிவருகிறது.இவர்களது எழுத்து வடிவம் இன்று வரையும் வாசிக்கமுடிவதில்லை(இப்போது தமிழகப் பேராசியர்கள் இவற்றைப் படித்து அறிந்துள்ளதாகக் கேள்வி,கூடவே அது தமிழ்தானாம்! நாம் தமிழைத் தாய் மொழியாகக்கொண்டதனால் இதைக் கேட்க மகிழ்ச்சிதாம்.ஆனால் உண்மையில் இந்த வாசிப்பு சரியானதா?சந்தேகம்!)

இந்தப்பண்பாட்டைச் சிதைத்தவர்கள் நிச்சியமாக இந்தோ ஆரியர்கள்தாம்;,இவர்கள் கி.மு.1500 'ம் ஆண்டளவில் சிந்துவெளிநாகரீக வலயத்துள் குடியேறியதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதிகாசப் புராணமான மகாபாரதம் காட்சிப்படுத்தும் யுத்தத்தினது அர்த்தம் தோற்கடிக்கப் பட்ட இந்திய மக்களின் மீள் எழிச்சியோடு சம்பந்தப்படுகிற...-ஜீ.டுன்பார்,இந்திய வரலாறு:ஆங்கிலமூலம் பதிப்பு1936டொச்சுப்பதிப்பு1937:கேர்டர்லெக்சிக்கோன் பக்கம்:6667 -19572004.).


இங்கெழும் கேள்வி வலிமை பற்றியது!ஒரு பெரும் பண்பாடு-உயர் பண்பாடுமிக்க மக்களினம் எங்ஙனம் சிதறடிக்கப் பட்டது?வரலாறு தொட்டு யுத்தங்கள் மானுடர்தம் வாழ்வை-உயிரைப் பறித்துள்ளது.இது ஏன்? அடிப்படையில் பொருள்தாம் காரணியாகிறது!சுகமான வாழ்வு வேண்டிப் போரிட்ட வரலாறு முழுமையும் இருப்பவனுக்கும் இல்லாதானுக்குமான போரே.இருப்பவன் அதைப் பெருக்கவும்,இல்லாதான் அதைப் பெறவும் போரிடவேண்டிய நிலையில் உலகம் சுழன்றபடி.சுமேரியர்கள் கி.மு.3000'ம் ஆண்டளவில் பாரிய வெள்ளப் பெருக்கினால் தமது அதியுயர் பண்பாட்டு நிலத்தையிழந்தே சிந்துவெளி நோக்கி இடம்பெயர்ந்து சிந்துவெளி நாகிகத்துடன் கலந்திருக்கிறார்கள்,இவர்களது தோற்றம்-நாடு இதுவரையும் சரியாக அறிய முடியவில்லை.கி.மு.3000'ம் ஆண்டளவில் சிந்து சமவெளியூடாய் மெசோபடாமின் நாடுவரை இடம்பெயர்ந்துள்ளனர். Mesopotamien ஒரு மோசமான தரைத்தோற்றதோடுதாம் இருந்தது,1000கி.மி.நீளமான Euphrat/Tigris நதிகளால் இப்பிரதேசம் தொடர்ந்து மூழ்கிய நிலையில் மிகப் பிற்காலத்தில்தாம் கிழக்குப் புறத்தில் சுமேரியர்களும் குடியேறியுள்ளனர்.இவர்கள் குடியேறிபோது மிக முன்னேறிய அறிவுடை மக்களாக இருந்திருக்கிறார்கள்.மொசோபடேமியன் பண்பாட்டோடு இணையும்போது இரட்டிப்பு வீரியது;தோடு அறிவுவலிமை வளர்கிறது.சுமேரிய-யூப்ராட்திகேரிய பண்பாடுகள் தாம் பாபிலோனியப் பண்பாட்டின் விருத்தியை ஏற்படுத்தியிருக்கிறது.சுமேரியர்கள் இறைவழிபாட்டைக் கடைப்பிடித்த மக்ககட்டொகுதியாகவே இருந்திருக்கிறார்கள்.இவர்களின் ஆரம்பகால அறயியல்-அறிவியல் சமூகம்,அரசியல் பொருளியலென விரிகிறது.இதுதாம் மேற்குலகின் இன்றைய வலிமைக்கான விதையும்.சுமேரியர்கள் இந்தியா(அன்றைய அகண்ட நிலப்பரப்பு) ஊடாகவே இடம்பெயர்ந்துள்ளார்கள்,அப்போது பற்பல சிறு தெய்வ வழிபாடுகளையும்,அறிவியலில் வியத்தகு நிர்மாணிப்புடைய சிந்துவெளி பண்பாட்டின் கூறுகளையும் கற்றுச்சென்றுள்ளனர்Hammurapi(1728-1686vC.) கமூராபி ஆட்சியின் வலிமை சுமேரியர் பிச்சை.பாபிலோனிய யுத்தவீரியம் இன்று வரை பற்பல வடிவங்களில்,அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உளவியல் கமூராபியன் பிரதிநகலென்பது தெட்டத்தெளிவானது,ஏனெனினல் கவ்போய் வடிவ ஏற்புகளும்,வாழ்வுமுறைமைகளும் கமூராபி மன்னனோடு ஒற்றுமையுடையது.

"Der Schatten Gottes ist der Fuerst,und der Schatten des Fuersten sind die Menschen."-Babylonische Herrschaftauffassung.seite:62.


'இறைவனது நிழலே அரசனாகும்(இரண்டும் ஒருமை.),அதேபோன்று அரசர்களின் நிழலே மனிதர்கள்(பலவும்:பன்மை,நூலிழையுடைப்புத் தேவை.).-பாபிலோனிய அரசியலொழுங்கு.

இப்போது கி.மு.1500 அளவிற்றிடபெயர்ந்த இந்தோ ஆரியர் கூற்றுக்களைக் கண்முன் கொணர்ந்தால் அவர்கள் கமுராபிகாலத்தில் தொடர்புடைய ஒழுங்குகளைப் பேசுவது புலனாகும்.இங்கும் வலிமைக்கும் வலிமைக்கும்தாம் போராட்டம்.எதுவும் நாடோடி நிலையிலில்லை.


இரண்டாவது உலக மகாயுத்தத்தை நடாத்தி கிட்டத்தட்ட ஆறுகோடி மக்களைக் கொன்ற அடேல் கிட்லர் என்ன கூறுகிறான்?:


"war es nicht ,Kriege zu fuehren,sondern einen neuen Sozialstaat von Hoester Kultur auf zubauen.Jedes Jahr dieses Krieges beraubt mich dieser Arbeit"-19Juli1940 A.Hitler.vom Klassenkampf seite29.

'யுத்தஞ் செய்வது,அதுவல்ல நோக்கம்,மாறாகவொரு உயர்ந்த பண்பாடுடைய சமூக அக்கறையுள்ள புதிய நாடுருவாக்குவதே.யுத்தம் என்னிடமிருந்து இந்த வேலையைத் திருடிக்கொள்கிறது.'-அடோல்ப் கிட்லர்,19.07.1940இல் மிக முக்கிமான பொதுக்கூட்டமோன்றின் உரையில்.

Die Geschichte aller bisherigen Gesellschaft ist die Geschichte von KlassenkaempfenK.Marx.

'இன்றுவரையுள்ள அனைத்துச் சமுதாயங்கள்தம் வரலாறும் வர்க்கப்போரினது வரலாறே!'-மார்க்ஸ்.இதேயேதாம் நாம் கொம்யூனிச அறிக்கையில்.'வரலாறு கண்ட யுத்தங்களெல்லாம் வர்க்கங்களுக்கிடையிலானது.' என்று படிப்பது.

கிட்லர்தம் புதியநாடுபண்பாடு என்பதெல்லாம் என்ன?

இனத்தூய்மை,தாமே உலகம்பூராகவும் ஆள்வதும்-பிரித்தானியாவுக்கு மாற்றீடாக மாறுவதுமே கிட்லரின் கனவு.இது அவருக்கு வழங்கப்பட்ட விதம் கனவல்ல,அது ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் தேவையாக விரிந்து கிட்லரூடாய் அரசிலரங்குக்கு வருகிறது.


ஒருமொழியைப் பேசும் மக்கட்டொகுதியே சகல வகைகளிலும் ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும்போது குவிக்கப் படும் செல்வங்கள் குலையாத பாதுகாப்பை மொழிக்கூடாக் கோடிட முடியுமென்பது உடமை வர்க்கத்தினது கண்டு பிடிப்பே.இங்கேயும் பொருட்குவிப்பும்வலிமையும்தாம் முன்னிலை வகிக்கிறது.காலம் பூராகவும் இந்த வலிமை தாம் பண்பாடுகளை உருவாக்கியதும்-அழித்ததும்.வலிமையே வாழும்! வலிமையென்றவுடன் உடற்பலத்தைக் கற்பனை பண்ணிவிட்டால் அது சரியாகா.வலிமையானது மக்களது ஆத்மீகஅறிவியல் வளர்ச்சியோடு அவர்தம் ஒருமித்த பொருளியற் பலத்தைக் குறித்து நிற்பதே!

இதில் அவரது (கிட்லர்) கனவைக் குலைக்கும் யுத்தமானது இங்கிலாந்தின் வழியே உருவாகியதாக எழுதுகிற போக்கில் இன்றைய வரலாற்றாளர்கள் உள்ளார்கள்,இந்த வகையில் கிட்லரின் சாதகமான பக்கங்களைச் சொல்வதாகக் கூறும் திருவாளர்.மக்ஸ் குலூவர் vom Klassenkampf zur Volksgemeinschaft-ISBN:380611059x தனது 'மக்கள் கூட்டமைப்புக்கான வர்க்கப்போர்'எனும் நூலில் இப்படியெழுதுகிறார்:
'"Er habe grosse und schoene Plaene fuer sein Volk.Er habe den Ehrgeiz,das deutsche Volk reich und das deutsche Land schoen zu machen. Der Lebensstandard des einzelnen solle gehoben werden, und Deutschland solle die schoenste und beste Kulturbekommen.Die Theater sollten fuer alle da sein und nicht nur fuer "die oberen Zehntausend wie in England". Fuer die Ausfuehrung dieser ungeheuren Plaene wuerde er die ganze Arbeitskraft gebraucht haben,aber die von ihn nicht gewollte Ruestung, fuer deren Begrenzung er Vorschlaege gemacht habe, nehme ihm die Arbeit weg.und fuer seine Vorschlaege sei er nur ausgelacht worden von denselben Leuten "die bereits vor den Kriege die Hetze betrieben haben,naemlich Churchill und Chamberlain."



' பெரியதும்,அழகானதுமான திட்டங்கள் அவரது மக்களுக்காக அவர்வசம் இருந்தது. டொச் மக்களை செல்வர்களாக்கவும் ,டொச்சு நாட்டைச் சிறப்பாக்கவும் பெரும் இலட்சியத்தை அவர் கொண்டிருந்தார்.ஒவ்வொருவரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்,டொச்சுநாட்டிற்கு மிகமிக அழகானதும் சிறப்பானதுமான பண்பாடும் பெறப்படவும்,இந்த நாடகம் 'இலண்டனைப்போன்று உயர்வர்க்க -அந்த பத்தாயிரம் பேருக்காக மட்டுமல்லாது 'அனைவருக்குமானதாகும்.இந்த அசாதாரணத்திட்டத்திற்காக ,அதைச் செயற்படுத்துவதற்காக தனது முழுச்சக்தியையும் பயன் படுத்தினார்.அவரே விரும்பாத ஆயுததளபாடமும் அதனது மட்டுப்படுத்தல்களும்,அவரது செயற்பாட்டை நாசமாக்கியது.அவரது முன்பிரேரணைகள்ஆலோசனைகள் அந்த மனிதர்களால் நகைப்புக்குள்ளானது,அவர்கள் அவமானப்படுததும்;தொழிலை யுத்தத்திற்கு முன்பே கொண்டிருந்தார்கள்,சரியாகச் சொல்னால் அவர்கள்: சேர்ச்சிலும்
(Churchill) ,சாம்பெர்லயனும்
(Chamberlain) தாம்
vom Klassenkampf seite:29.

யுத்தமென்பது தவிர்க்க முடியாத வொரு சூழலை முலதனத்திற்கு ஏற்படுத்துகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலும்,இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஆங்கில ஏகாதிபத்யத்தின் சந்தை வாய்பு தவிர்க்கமுடியாது மூல வள மட்டுப்படுத்தலை இங்கிலாந்துக்கு வெளியேயுள்ள பெருமுதலாளிகளுக்கு ஏற்படுத்திய போது அது பெரும் நெருக்குவாராத்தை ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துக்கு கொணர்கிறது .இதன் தாக்கம் இன்றுள்ள மாதிரியேதாம் உற்பத்தித் தேக்கம்,வேலையில்லாத்திண்டாட்டம்(1933 இல் 6.013612 பேர்களுக்கு ஜேர்மனியில் வேலையிருக்கவில்லை) பணவீக்கம் -அறா வட்டி,மூலவளப்பற்றாக்குறை-மிகவிலை க் காரணிகளால் கிட்லர் தேசத்து பொருளாதாரம் பிரித்தானிய ஏகாதிபத்யத்தோடு முரண்பாட்டை வளர்த்தது,இந்த முரண்பாட்டை வென்றெடுக்க ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கையிலெடுத்த முதல் ஆயுதம் யூத எதிர்ப்பு,இதனூடாக மக்களை அணிதிரட்டுவதும்-காயடித்து உலகத்தைக் கொள்ளையிட படைதிரட்டிடவும் இதனூடாய் அடிமைத் தொழிலையேற்படுத்தி கூலியின்றி உற்பத்தி செய்யவும்(உழைப்பைத்திருடுதல்)பலமான உளவியற்றளம் உருவாக்கப்படுகிறது.


சாம்பர்லையன்(Chamberlain) பிரத்தானியப் பிரதமராக இருந்த போது போரை ஐரோப்பாவுக்குள் திவிர்க்கும் படியேதாம் சமாதனத்தூது விட்டார்,1939 இல் பதவிதுறந்தபோது அவரது பிழைகளே பதவிக்கு வேட்டுவைத்தாதக ஒரு கணிப்புண்டு.பின்பு அவர் படத்துக்குப் பக்கத்தில்1869-1940 என்று போடும் நிலை வந்ததது. ஆனால் 'சண்டைகளும் சமாதானக்கூச்சல்களும்'மூலதனக் காப்புக்கும்நகர்வுக்குமான சீட்டாட்டமாக பண்டுதொட்டு நடக்கின்ற சமாச்சாரமாக இருக்கிறது.இது யுத்தத்தை தெரிவுசெய்த படியே சமாதானஞ் செய்ய முற்படுதல் உலகவளசந்தைப் பங்கீட்டிற்கானவொரு முயற்சிதாம்!இதில் காலைவாரப்படும் மக்களினம் ஏதோவொருவடிவில் வரலாறு .தொட்டு அழிந்து போகிறார்கள்.சிந்துநதிப் பள்ளத்தாக்கு நாகரங்கள்கலாச்சாரம் வெறும் நாடோடி மக்களிடம் தோற்றுப் போக முடியாது.ஏnனில் "Die Staedte waren stark befestigt und von 4-10m bereiten Strassen durchzogen.Die in einfachen Bauformen erstellten Haeuser waren in einer fortgeschrittenen Technik eingerichtet." என்றிருந்த மக்கள் கூட்டம் எப்படி நாடோடி நிலை மக்களால் அழிக்கப் படும்?வடிவாகக் கவனியுங்கள், 'நகரங்களெல்லாம் பலமான தடுப்புக் காவலரண் கள் கொண்டமைக்கப்பட்ட' சிந்து நதிக் கலாச்சாரமக்கள் ஆரிய நாடோடி மக்களுடன் போரிட முடியாத பலவீனமான மக்களாக இருந்திருப்பார்களா? இன்றைய நிலையில் இதை நம்பமுடியாது. இந்தியாவை நோக்கிப் படையெடுத்த மக்கள் கூட்டம் ஒழுங்கமைந்த பொருளியற் கலாச்சார வாழ்வோடு- தமது ஆதிக்கத்தை விஸ்த்தரிக்கும் ஒரு வரலாற்று நிகழ்வே நம் முன் விரிகிறது,



மீளவும் நாம் கிட்லரிடம் வருவோம்: "Das deutsche Volk wird nach diesem Krieg einem wesentlich groesseren Raum beherrschen als vordem.Das ist nicht nur ein politisches und machtpolitische Problem,sondern weitgehend ein wirtschaftliches und soziales.Wirtschaftlich liegt die Problematik darin,dass es jedem einzelnen Deutschen gelingen muss,die Produktivitaet seiner Arbeit in dem Grad zu steigen,... Hand in Hand mit Arbeitseinsatz und Leistungssteigerung geht die Pflege der Leistungskraft."-Dokument Nr.15:Denkschrift der Deutschen Arbeitsfront ueber die Sozialen Aufgaben nach dem Kriege.>Versuch eines systematischen Ueberblicks ueber ein sozialpolitisches Program.< இந்த யுத்தத்திற்குப் பின் டொச்சுமக்கள் முன்பை விட பாரிய நிலப்பகுதியை ஆள்வார்கள்.இதுவொரு அரசியல் அன்றிஅரசியல் வல்லமை பற்றிய பிரச்சனையல்ல,மாறாக விஸ்தீராமானவொரு பொருளாதார,சமூகப்பிரச்சனை.பொருளாதார ரீதியாகவுள்ள பிரச்சனை என்னவென்றால் ஒவ்வொரு டொச்சு மக்களும் கட்டாயமாக செய்யவேண்டியது தனது வேலையில் மிகுதியான உற்பத்தியைப் பெருக்குவதே.கைக்கு கை வேலையில் ஈடுபடுவதும் கூடவே மிகை உற்பத்திப் பெருக்கம் உற்பத்திப் பலத்தைப் பராமரிக்கும்.' -ஆவணம்:இல.15.

கிட்லர், தனது மக்களுக்காகத்தாம் நாடு பிடிக்க வெளிக்கிட்டதாகவும் ,அது கைகூடாதுபோனதாகக் கற்பனையிலுள்ள இன்றைய ஜேர்மனியர்களுக்கு இந்த அவரது திட்டம் மக்கள் நலனின் பொருட்டாகவே கற்பிக்கப் படுகிறது.அதீத பொருட்குவிப்பினது ஆசைதேவையாக -அவசியமாக ஆளும் வர்க்கத்தால் உணரப்படுகிறது.எந்த விதத்திலும் மிகையுற்பத்தியை அதிகரிப்பதென்பது பெரு வங்கிகளுக்குக் கட்டப்படும் அறா வட்டியை ஈடுசெய்வதற்கான பொறிமுறையைக் கொண்டுள்ளது!
இந்த நிதி மூலதன முறைமையானது தனது சுற்றோட்டத்தில் மீளவும் தேக்கமுற்று பண வீக்கமாக மாறுகிறது.ஆனால் கிட்லர் தம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுக்கு மாற்றாகச் செயற்பட்ட மாற்றுப்பொருளாதாரவாதிகள்(இவர்கள் சோஷலிசப் பொருளியலாளரன்று ,மாறாகச் சுதந்திமான மனித முகத்தோடு கூடிய பொருளாதாரம் குறிதுச் சிந்திப்பவர்கள்.இதுவும் ஒரு புருடாதாம்!) சொல்வதைப் பாருங்கள்:


'" After the Nazi Party's seizure of power by the in 1933 many Free Economy supporters suppressed their misgivings about the true character of the Nazi ideology and succumbed to the illusory hope, that Hitler might in fact act on the earlier rhetoric of Gottfried Feder concerning "the smashing of interest-slavery". They tried to exert influence A Free Economy party on leading functionaries of the Nazi Party hierarchy in the hope of bringing about a change of course on economic matters. Despite rather dubious tactical efforts to conform to the requirements of the new order, in the spring of 1934 the various Free Economy organisations and publications which had not already voluntarily disbanded were finally outlawed." -Werner Onken Published in: American Journal of Economics and Sociology Vol. 59,


தவிவிர்க்க முடியாத இந்த முதலாளித்துவ விதி தன்னைத்தான் காத்துக்கொள்ள இறுதியில் போரிட்டு தனது தேவையைப் பூர்த்திசெய்யும்,கூடவே அடிமைச் சமூகத்தை உருவாக்கியே தீரும்!இதை விட வேறு மார்க்கம் ஏகாதிபத்யத்திற்குக் கிடைக்கப் போவதில்லை.

அமெரிக்காவும், பயங்கரவாதமும்:


இன்றைய நாளில் அமெரிக்கா குறித்த எந்த நல்ல அபிப்பிராயம் எவராலும் குறித்துரைக்கமுடியாமலுள்ளதே ,இது ஏன்?அமெரிக்கா உலக அளவில் ஜனநாயக நாடுடெனில் ஏனிந்த நிலை?அமெரிக்கா திறந்த சுதந்திரச் சமூக மெனில் ஏனிவ்வளவு அணுக்குண்டுகள், போர்த்தளபாடங்கள்?உலகெலாம் இராணுவக் காவலரண்களையும்இராட்சதத்தளங்களையும் எதன் பொருட்டு நிறுவியுள்ளார்கள்?வரலாறு முதற்கொண்டு மானுடர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது? கேள்விகள் இன்னும் விரியும் இத்துடன் நிறுத்துவோம் .கேள்விகள் மட்டும் கேட்பதல்ல இந்தக் கட்டுரையினது நோக்கம். பயங்கரவாதத்தின் மூலப் பிறப்பிடமே அதை வேறெங்கோ தேடுவதுபோல் பாசாங்கு பண்ணி தனது பயங்கர வாதத்தைக் கவர்ச்சிகரமாக'பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம்'என்று காதில பூச்சுத்துகிறது.அழிவுகளேயின்றி ஒரு அமைதியான வாழ்வை உலக மக்கள் சுசிக்க முடியுமா? ஆம்மென்கிறது முதலாளியம்!ஆனால் வரலாறு பூராகவும் இதே முதலாளியம் மானுடசூழலழிப்பைக் கொண்டுதாம் தன் வருவாயைக் குவிக்கின்றது.'கடந்த வரலாறும், கண்முன் விரியும் வரலாறும்' இப்படித்தாம் நகருகிறது! அமெரிக்காதாம் முதலாளிகளுக்குத் தலைமை தாங்குகிறகாரியத்திலிருப்பதால் அமெரிக்கா பற்றி ப் புரியாமல் நாம் வாழ்ந்தால் நம் தலைமீது விழும் குண்டை யார் போடுவதென்தெரியாமற் மரித்திடுவோம்.அமெரிக்கஐரோப்பிய பெருமுதலாளிகளை எதிர்த்து போராட நம்மால் முடியாதுபோகினும் நாம் யாரால் கொல்லப் படுகிறோமென்றாவது தெரிந்து கொள்வோமே!


ஈராக்கின் வைத்தியர் திரு.ஹசான் கூறுகிறார்:'முன்பெல்லாம்(1991 முன்) கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பற்றிக் கேட்கும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்றே விசாரிப்பார்கள்.இப்போ கேட்கப் படும் கேள்வியோ அது ஆரோக்கியமானதா இல்லையா என்பதே!'காரணம்: இந்த அமெரிக்காவின் யுத்தம் இதுவரை மூன்று இலட்சம் தொன் நிறையுள்ள ரு-838 யு-838 இரகக்குண்டுகளை நம்மீது கொட்டியுள்ளது,கொட்டுகிறது.இது யுரேனிய-ரேடியக் கதிரியக்கம் வாய்ந்த குண்டுகள், கிட்டத்தட்ட 45 வீதமான ,ராக்கியகர்களை இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.அவர்கள் மரணத்தை ஏங்கி வரவேற்காவிட்டாலும் மரணம் மிக விரைவாக அவர்களை வந்தடைந்து விடும்!'இதை ஆமோதிக்கிறார் திரு.யாவாட் அலி எனும் இன்னொரு மருத்துவ நிபுணர்.கூடவே கூறுகிறார் இப்படி:' நானும் பாஷ்ரா மாவட்த்தில் இருந்து வருகிறேன் என்னையும் இந்தக் கதிரியக்கம் பாதித்துள்ளது.எனினும் இந்த அநியாயத்தை அறியாமல் அப்பாவி மக்கள் சாகவில்லை.அவர்கள் அறிந்தேயுள்ளார்கள்,எம்மிடம் நூறு வீத ஆதாரங்களுண்டு இந்த அணுக் குண்டுகள் பற்றி.ஆனால் உலக்தின் கண்களுக்கு எப்படியெட்டும்?'- West Deutsche Rundfunk- 5 எனும் வனொலியின் 06.03.2005க்கான சர்வதேச விவரணம். அமெரிக்கா இது வரை 124கோடி மக்களை உலகெல்லாம் கொன்று தள்ளியுள்ளது.கடந்த ஐந்து- நூறாண்டுகளில் மட்டும் இத்தொகை யென்றால் இனிவரும் காலங்களில் பூமியில் மானுடம் வாழ்வதென்பதைத் தீர்மானிப்பது அமெரிக்க அணுக்குண்டாகத்தாமிருக்கும்.புதியரக அணுஉயிரியல் ஆயுதங்கள் தற்போது பரிசீலிக்கப் படுகிறது,மிக விரைவில் இவை யுத்தங்களுக்கு அமெரிக்காவால் பயன்படுத்தப்படும்'

Die USA wollen sich weitere Forschungen erlauben.In den naechsten zwei Jahren will Praesident Bush 11 Milliarden Dollar in die Biowaffenforschung stecken lassen.Fuer das anstehende Haushaltsjahr soll die Summe der Gelder um das Vierfache steigen."-16 Luegen zum Krieg gegen den Terror seite:2


'தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையை அனுமதித்தல் அமெரிக்காவுக்கு விருப்பமாகவுள்ளது.அடுத்த இரண்டாண்டுகளில் உயிரியல் ஆயுதப் பரிசோதனைக்காக 1100 கோடி அமெரிக்க டொலர்களை அதற்குள் திணிப்பதற்கு அமெரிக்க அதிபர் புஸ் ஆர்வமாகயிருக்கிறார்.வரிசையாக வரும் அடுத்த அரையாண்டு வரவு செலவுத் திட்டம் இந்தமூலதனத் தொகை யால் நான்கு மடங்கு அதிகரிக்கும்'16பொய்கள்,பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு பக்கம்:2


இந்தப் பரிசோதனைக்கதிராக் குரல் கொடுகின்றவர்கள் என்ன செய்கிறார்களெனப் பார்ப்போம்: "Amerikanische Mediziner fürchten um die Gesundheit der US-Bürger, wenn Forschungsgelder weiterhin so verteilt werden wie in den vergangenen Jahren. die Erreger von Volksseuchen wie Tuberkulose und Syphilis aus den Augen zu verlieren. "-Spiegel 4 maerz 2005.g


2005.பரிசோதனைக் கென்று பணத்தை இப்படிப்க் கடந்த ஆண்டுகளைப்போல் பங்கீடுசெய்தால் அமெரிக்க மக்கள் கொள்ளை நோய்களினால் பாதிக்கப்படுவார்களென அமெரிக்க மருத்துவர்கள் அச்சப்படுகிறார்கள்,உதாரணமாக:காச நோய் மற்றும் கொடிய மேக நோய் போன்றவை கவனிக்கப்படாது போகும் . '-ஸ்பீகல் பத்திரிகை 4.03.2005 ஆக, சொந்த நாட்டுமக்களே தம் உயிருக்காகத் தங்கள் நாட்டோடு போராடவேண்டிய நிலையில் உலக மக்களின் நிலை எப்படியிருக்கும்?


இப்போ யாரிங்கே பயங்கரவாதிகள்?


ஈரான்,ஈராக், வடகொரியா-சூடான்,பாலஸ்தீனம் அல்லது பின்லாடன்??


அமெரிக்கா சொல்வது இவர்களை, நாம் சொல்வது அமெரிக்காவை!


அமெரிக்காவை ஏன் பயங்கரவாத நாடென்கிறோமென்றால் அது வரலாறுப+ராகவும் யுத்தங்கள்மூலமாகவே தன் வருமானத்தையேற்படுத்தியதாலவா? மூலதனத் திரட்சியின் அதிகூடியவேட்கையின் வாயிலாக தனது தொழிலகங்களுக்குத் தேவையான மூலவளங்களைத் தேடி உலகைக் கொள்ளையிடுவதாலவா? அது முதலாளிய நலன்களைக் காத்துக்கொள்ளும் தலைமையைக் கொண்டியங்குகிறதன் வாயிலாக -அந்த நலனோடு பின்னப்பட்ட ஒரு சிறுபான்மைச் செல்வந்தர்களுக்காக உலகின் அனைத்து இயற்கை வளங்களையும்(உயிரினம் முதற்கொண்டு)கொள்ளையிடுகிறதற்கான அடியாட் படையை உலகம் ப+ராகவும் நிறுத்தி ,உலக்திலுள்ள மக்கள் தத்தம் விருப்பப்படி வாழ முடியாத நிலையைத் தோற்றியுள்ள அமெரிக்கா ஒருபடி மேலே போய் அனைத்து உற்பத்திப் பொருட்களுக்கும், இயற்கை வளங்களுக்கும் உரிமம் கூறி-உற்பத்திச் செய்கைமுறைமைக்குக்;கூட உரிமம் வைத்துள்ளதே,அதற்காகவா? இவையெல்லாமேதாம் உலகின் முதற்தரப் பயங்கரவாதம்.இந்த விஷயங்கள் வெறும் பொருளியல் சம்பந்தப்பட்டவொரு சட்ட நடவடிக்கையில்லை. உயிராதாரப் பிரச்சனை,வாழ்வாதார முக்கிய பொதுச்சொத்தை -உயிர் காக்கும் உற்பத்திப் பொருட்களை சில முதலாளிகளின் ஆதாயத்திற்காக உரிமமும் கூறி உலகை ஏப்பமிடும் அமெரிக்க அரசைப் பயங்கரவாதத்தின் மூலவ+ற்றாய் இனம் காணுவதும்,அதை எதிர்ப்பதற்கான தேவையை வலியுறுத்துவதும் அவசியமான கரியமாக இருக்கிறது.


இன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யு புஷ் தனது தந்தை வழி அரசியலேயேதாம் முன்னெடுக்கிறார்.இருவருமே இராட்சத எண்ணை கொம்பனிகளோடு இறுகப்பிணைந்த பங்காளிகள்.இவர்களது நோக்கம் எண்ணையாலைகளின் தமது பங்குகளையும்,தமது உறுவுகளின் பங்குகளையும் பல மடங்காகப் பெருக்குவதும்,உலகின் அனைத்து வளங்களையும்-மூளையுளைப்பையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுமே.இதில் அமெரிக்கா மாபெரும் வெற்றியீட்டியுள்ளது.


உயிராதாரப் பிரச்சனை:

இன்றுள்ள மிகப்பெரும் உயிராதாரப் பிரச்சனை உயிர் வாழும் சுதந்திரத்தை தீர்மானிப்பது யார் என்பதே!இன்றைய அமெரிக்காவானது வெறும் பொருளியல் நலனை மையப்படுத்திய குவிப்புறுதிய+க்கச் சமுதாயமில்லை.அது பிரபஞ்ச இயக்கத்தையே முடிந்தளவுக்கு தன் கட்டுப்பாட்டுக்குள் நிலவக்கூடிய சமாச்சாரமாகப் பார்க்கிறது.தோற்றம் அழிவு போன்ற அனைத்து பௌதிக இயக்கத்தையும் தனது சக்திக்கேற்றளவு கட்டுப்டுத்த முயற்சிக்கிறது.இதன் முதற்படி விவசாயப் பயிர்களிலிருந்து ஆரம்பித்து விட்டது.எனினும் உயிர்கள் மீதான அதனது அத்து மீறிய அதிகாரத்துவம் உயிர்களைத் தனது விருப்புக்கேற்ற வாறு தயாரிக்கும் பொறிமுறைக்குள் திணிக்கிறது.இது மிருகங்களிலீருந்து ஆரம்பித்து கொலோன் முறையிலான மானுடவுற்பத்தி என்று விரியக்காத்திருக்கிறது.இனிவரும் காலங்களில் குறிப்பிட்டவொரு இனத்தினது இரத்தலே ப+மியிற் சாத்தியப்படப்போகிறத.அது இயற்கையோடு இசைவாக்கங் காக்கக்கூடிய ஆற்றலைநோக்கிச் சிந்திகத் தொடங்கிவிட்டது. இயற்கையில் நிலவக்கூடிய அனைத்து வளம்களையும் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனகேற்றவாறு உபயோகிக்க-மறுசீரமைக்கக் கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளது.அதன் இராட்சத யுத்தஜந்திரம் அனைத்து வளங்களையும் கையகப்படுத்தி இராணுப் பொருளாதாரம் நோக்கி நகர்கிறது.இந்தப் படிமுறை வளர்ச்சியானது சந்தைப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத தேக்க நிலையீன் இன்னோரு வடிவமாக நாம் காணுகிறோம்!இதன் மிகைப் பணவீக்கமானது செயற்கைத்தனமான பற்றாக்குறைகளால்(உணவுவகைகளைக் கடலில் கொட்டியழித்தல்) ஈடு செய்யமுடியாமற் போவதனால் பெரு முலதன வங்கிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய வட்டிக்கு வட்டி முதலாளியமைப்பையே சிதறடிக்கும் நிலையைத் தோற்றுகிறது.இதனால் யுத்தங்களே இறுதிச் சிகிச்சையாகவுள்ளது.


அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொத்தடிமை முறைக்காகவேனும் இந்த அமைப்புத் திரும்பியாகவேண்டும். இதை அமெரிக்கா இரண்டாவது மகாயுத்த்தில் கண்டுகொண்டது.இந்த முறைமையை ஓரளவு ஜனநாயகப் பண்புடைய வளர்ச்சியடைந்த தமது நாடுகளில் அவ்வளவு இலகுவாக ஏற்படுத்த முடியாத ஏகாதிபத்திய பெரு முதலாளியம் தமது நாடுகளுக்கு வெளியே இவற்றைச் சாதிப்பதில் வெற்றியீட்டிவருகிறது.இந்த விய+கத்திற்கு மூன்றாமுலக நாடுகளே பலியாகிவருகின்றன.யுத்தம் என்பது தவிர்க்க முடியாதவொரு அங்கமாக இருப்பதால் இந்த முதலாளியமைப்பில் நிலவுகின்ற பணச்சுற்றோட்ட முறை வட்டி முறைமையால் தாக்குப் பிடிக்க முடியாது உடைந்து போகிறது.இந்த இயங்கியல் விதி பொருளியல் பொறிமுறையையே அதாவது முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறையையே இறுதியில் காவுகொள்ளும் நிலையிலும் போர் வெடிக்கும் அபாயம் வந்து விடுகிறது.இந்த அபாய நிலைதாம் இப்போதுள்ள நிலையாகும்.இதுதாம் உலகத்தின் முதற்தரமான பயங்கரவாதமாகும். இந்தப் பயங்கர வாதம் பலவர்ணங்கொண்ட சமாதானப் பாய்களையிப்போ உலகெங்கும் விரிக்கிறது.இந்த பாயிற் படுக்க முனையும் அபிவிருத்தியடையமுனையும் நாடுகளின் அரசும்,அவற்றுக்குள் நிலவும் சிறுபான்மையரசுகளும் இறுதியில் இவர்களது தந்திரங்களால் அழிக்கப்பட்டு புதிய கூட்டு-புதிய தலைமைகள் உருவாவதும் பின் சிதறடிக்கப் படுவதுமாகக் காலம் நகர்த்தப் பட்டாலும் பாரிய யுத்தங்கள் தவிர்க்க முடியாது நடைபெறவே செய்யும்.


இந்தப் பரிதாபகரமான பொருளாதாரப் பொறிமுறையை இதுவரை முன்றாமுலக நாடுகள் சரிவரப் புரிந்ததுமில்லை,அதற்கெதிரான மாற்று அமைப்பைத் தோற்றுவித்து உயிர் கொடுக்கவுமில்லை.இந்த நிலையிற் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும் தேசிய எழிச்சிகள் குறிப்பிட்ட சூழலினாற் பரிதாபகரமாக உதிர்ந்து காணாமற்போய் வெறும் அற்ப சலுகைக்களுக்குள் போய் முடங்கிவிடுவதொன்றும் எமக்குப் புதுமையாத் தெரியாது!

எண்ணை நிறுவனங்களும்,புஷ் தேர்தல்2:

எம்.ஜீ.ஆர்.பாணி இலவசப் பொருள்களும் புஷ்சும் , தேர்தலில் வெற்றிபெற ஆடிய நாடகத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்த பணம் பல கோடிகளைத்தாண்டும்.இத்தொகை இலவசப்பொருட்களுக்கானது மட்டுமே.தேர்தல் நடவடிக்கைகளுக்கு வேறோரு வகைத் தொகை கைமாற்றப்பட்டது.திவாலாகிப்போன எண்ணைக் கொம்பனியான என்றோன்:2.387 848 டொலர்களும்,எக்ஸ்சோன்:1.374 200 மற்றும் சேவ்றோன்:1.082 827.டொலர்களும் இலவசப் பொருளகள் வழங்கும் திட்டத்திற்காக எண்ணை நிறுவனங்கள் கொடுத்தன.இவற்றை வைத்து புஷ் பெட்டிபெட்டியாய் உணவுகளை மக்களின் கார்களில் தன் கைப்படவே ஏற்றி விட்ட நன்றிக்குரிய அதிபராக மாறினார். அவரது தேர்தல் பிரச்சாரக: குழுவில் நேரடியாக இருபது எண்ணை நிறுவனங்களீன் மனேஜ்சர்கள் பங்குகொண்டு புயலாகப் பிரச்சாரமிட்டு அவரை இரண்டாவது முறையாகவும் வெற்றி வாகை சூட வைத்தனர்.



இன்று நாம் காணும் அமெரிக்கா வெறும் வர்த்தக முன்னணி நாடாகயில்லை,மாறாக வர்த்தகத்தால் மனித விரோதங்களைச் செய்யுங்காட்டாட்சியுடைய நாடு.அமெரிக்க மூலதனமானது எதிர்காலத்தில் அதீத மூலவளச் சுரண்டலினாலும்,வட்டியினது வட்டிக்கான அறவிடல்களாலுமே உயிர்த்திருக்க முடியும்.இந்தக் கோணத்தில் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் தொடங்கி விட்டதற்கான அறிகுறியை ஜெனரல் மோட்டர் அதிபர் செய்தியாகப்போட்டுடைத்தார். "இன்றைய காலத்தில் நாம் வாகனங்களைத் திறம்படவுற்பத்தி செய்வதில் நோக்கமாக இருக்கவில்லை.மாறாக இந்தச் சந்தையை நோக்கியான நமது விருப்பானது அந்த இடத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தலே முக்கியம் பெற்றது.இன்றைய நிலை இதுவல்லாது சமூகக் கடமையென பிதற்றிக் கொண்டால் இருக்கின்ற முதலீடுகளை இழந்து காணாமற்போவது உறுதியாகிவிடுவதுண்மையான யதார்த்தம்." என்று ஜெர்மனிய பொருளியற் சஞ்சிகைக்குச் செவ்வி வழங்குகிறார்.


இந்த உற்பத்திப் பொறிமுறையானது உலகத்தின் மூலவளங்களைக் காசாக்கும்(நிதிமூலதனமாக்கும்)சார்பு நிலைப் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பெரு வங்கிகளினது பாரிய முகாமைத்துவ ஒற்றைத்துருவ ஆதிக்கத்தை முன்மொழிகிறது. இந்த வங்கிகள் யாவும் அரபுத்தேச மூலவளத்தின் உபரிச் செல்வத்தால்(எண்ணை டொலர்கள்) இயக்கப் படுகிறது.இந்தச் செல்மானது இஸ்திரமான பாதுகாப்பு நோக்கியே அரேபிய எண்ணை மாபியாக்களால் இந்த அமெரிக்க-ஐரோப்பிய வங்கிகளில் இடப்பட்டுள்ளது.இதுவே இன்றைய நிதிமுதலீடுகளினதும்-உலக நாணய நிதியத்தினதும் மூலதனத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.


ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இவ்வகை நிதித் திரட்சியானது இந்த நாடுகளின் வருடாந்த உற்பத்திச் சூழலைவிட பன்மடங்கு பாரிய செல்வத்தால் முன்நிலை வகிக்கின்றது.இது இன்றைய பல்தேசியமான நிதிமுதலீட்டினது பலமான பங்குச் சந்தையாய் விருத்தியுறவும் செய்கிறது.இதன் தகர்வு சிலசமயம் பின்போவதும்-அதை மிக மிக பெறுமானமிக்க பொருளாதார விதியாகவும் பொருளியலாளர்கள் மதிக்கவும் செய்வது இந்த வங்கிகளினது விய+கத்தாற்றாம்! இத்தகைய சூழலில் முதலீடு என்றும்-தொழிற்றுறை முன்னெடுப்பென்றும் மூன்றாமுலக நாடுகளை-குறிப்பாக நமது இந்தியத் துணைக்கண்டத்தை சுரண்டி ஏப்பமிடுவதைச் சற்றுப் பாருங்கள் கீழ் வரும் வட்டி முறைமையின் சுட்டலில்:

முதலீடும் வட்டியும்:


அரசியற்பொருளாதாரக் கல்வியல் நாம் கற்பது என்னவெனில் எந்த முறைமைகள் முன்நிறுத்தப் பட்டாலும் அது சந்தைப்பொருளாதாரத்தின் அதிகூடிய பாதுகாப்பை வட்டிக்கு வட்டியின் உறுதிப்பாட்டை நிர்ணஞ் செய்யும்போது காத்துக்கொள்ளலாமென்பதே! இந்த நிதிமூலதனத்தின் அரிச்சுவடி எந்தத் தளத்தில் வெற்றிபெறுவதென்றால் அது பெரும்பாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் புதிய முதலீடென்றபோர்வையில் நகரும் நிதிமூலதனத்தின் முன்நிபந்தனையான முதலீட்டோடு சாத்தியமாவதாகும்.இதை முதலீட்டுக்குப் பின்பான-பின் முதலீட்டுச்சூழலென வகுத்துக்கொள்வதும்,அதன் வியாபித்த சுழற்சியை "தண்டக் காலம்"என்று வகுப்போம்.அதுவே அறுவடைக்கான காலம்.இந்தப் புரிந்துணர்வோடு மூன்றாமுலகில் தொழில்முதலீடுகளைச் செய்யும் ஏகாதிபத்திய தொழில் கழகங்கள் இவற்றை "குருவிக் குஞ்சு"புரிதற்பாடென அழைப்பதுண்டு.யாரொருவர் சத்தமிட்டு கூக்குரலிடுகிறாரோ அவருக்கு குறிப்பிட்டளவு பங்கு(உணவு) கிடைப்பதற்கு வழியுண்டு. இதைத்தாம் இன்றைய தரகு முதலாளிய இந்தியாவும்-இலங்கையும் செய்வது.இந்தக் கூக்குரல்தாம்" இதோ இந்தியா ஒளிர்கிறது" என்பதாகும்.


ஒரு முதலீடு எதற்கென்றாலும்-குறிப்பாக பணம் கடனிடுவது அல்லது தொழிற்சாலைக்கு பங்கிடுவது-எதுவானாலும் பொருளாதார விற்பனனின் பார்வையில் அது வெறும் இலாபத்தை அடுத்தாண்டின் புள்ளிவிபரத்தில் கணித்துச் செய்வதல்ல.மாறாக முற்றுமுழுதான அனைத்துக் காலத்திற்குமான உபயோகத்தின் இறுதியாண்டுவரையும் கணிக்கப் படும்.அதாவது தொழிற்சாலை உயிர்வாழுங்காலம் வரையாகும்.முதலீடென்பது எமக்கு முற்றுமுழுதாக வருவாயைக்கூட்டிவருவதற்கே தவிர கொடுப்பதற்கல்ல.நாமதைச்(முதலிடுவது-முதலீடு) செய்யாதவரை நமது பணம் வெறும் காகிதம்தாம்.இதன் பொருட்டு ஒவ்வொராண்டும் உபரியை நோக்கிய மதிப்பீடும் அவசிமாயினும் முன்கூட்டிய வட்டியெடுப்புத்தாம் முக்கியமானதாகும்.இதை இப்படி தொகுக்கலாம்:


இன்றைய தினத்தில் முதலீடுக்கான தொகையை 12வீத வட்டிஅறவிடல் மூலமே இலாபநோக்கிடப்படுகிறது.இது எப்படியென்றால்: 10 ஆண்டுகளில் 1மில்லியன் ய+ரோவானது இன்றைய நிகரமுதலீடாக வெறும் 321.973,-தாம் பெறுமதியாகும்.இதுவேதாம் இன்றைய ஒரு மில்லியன் முதலீடென்பது.இந்த மூன்று இலட்சத்தை பத்தாண்டுகளில் 1மில்லியனாக இலாபம் அடைவதை நோக்காகக்கொண்டே முதலிடப்படுகிறது.இதன் படி தொழில் துவங்குபவர்கள் கிட்டத்தட்ட பொருளின் உற்பத்திச் செலவோடு மீளவும்40 வீதச் செலவை வட்டிக்காகச் சேர்த்தும் கூடவே மதிப்புக்கூட்டுவரியான அரச புடுங்கலுக்கும் சேர்த்து சுமார் 60சத வீதம் கூடிய விலையில்தாம் இவற்றைச் சாத்தியப் படுத்தலாம்.இத்தொகை யாவும் உழைப்பவர்களே தாங்கியவேண்டும்.எனவேதாம் நிதிமூலதனத்தை அணுக்குண்டைவிட ஆபத்தென்கிறோம்.இத்தகைய கணக்கை 25 ஆண்டகளுக்காகப் பார்த்தால் இன்றைய ஒரு மில்லியன் ய+ரோவானது :58.823,-மட்டுமே.இதுவே 50 ஆண்டானால்:3.460,- வதும் 100 ஆண்டுகளானால்:12,-ய+ரோவாகவுமே நிதியிடப்படும்.ஆனால் எந்த நிதியீடும் 10 ஆண்டுகளின் வட்டியறப்படுதல் மூலமே நிதியிடப்படுகிறது.இந்த மானுடவிரோத மூலதனம் எங்கு பாய்ந்தாலும் அந்த நாடு உருப்பட வாய்பேயில்லை.இன்றைக்கு இந்தியா-இலங்கைபோன்ற நாடுகள் இவற்றை வேலைவாய்புக்கருதி வரவேற்பதுபோன்று பாசாங்கு செய்கிறது.ஆனால் உண்மை வேறுவடிவமானது.வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த முதலீட்டுப் பெருவட்டி அறவீடானது இப்போது சாத்தியமின்றி தொழிலகங்கள் பொறிந்து போகின்றன.இந்த நாடுகளின் வாழ்கைச்செலவோடு அண்டியே கூலித்தொழிலாளியின் ஊதியம் மதிப்பிட்டு வழங்கவேண்டும்.ஆனால் மூன்றாமுலகத் தொழிலாளியோ நாளொன்றுக்கு 12மணி உழைப்புக்கு வெறும்2ய+ரோவே ஊதியமாகப் பெறுகிறா(ள்)ன்.இந்தப் பொன்முட்டையிடும் வாத்தை நம்பியும்,கனிவளத்தை வேட்டையாடவுமே மூலதனம் இந்த மூன்றாமுலகை நாடுகிறது.


உற்பத்திவீச்சும் அதீத சுரண்டலும்:


உலகத்தில் 40 வீதமான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12-14 மணிநேரம் உடலுழைப்பில் ஈடுபடுகின்றனர்,ஆனால் அவர்கள் பெறும் ஊதியமோ வெறும்1,30டொலர்தாம்!
இந்த குறைகூலிச் சூழலானது அனைத்துத்தொழில் கழகங்களையும் பாரிய நிதிநெருக்கடியிலிருந்து காப்பாற்றி மென்மேலும் தனது இருப்பை நிலைநிறுத்தவும்-உற்பத்தியுறவுக்கும் மூலதனத்துக்குமுள்ள முரண்பாட்டை நீற்றுப்போக வைப்பதற்கும் வலுவாய்ப்பாகப்போய்விட்டது.இந்தச்சூழலின் மிக நெருக்கடியான காலம் பஞ்சாய்ப் பறந்தோடிவிட்டது.கூம்புவடிவிலான முதலாளிய உற்பத்திப்பொறிமுறையும்-உபரியீட்டலும் இன்னும் பலநூறாண்டுகள் உயிர்வாழும் சாத்தியம் நிலவுகிறது.இத்தகைய அரிய சந்தர்ப்பத்தை அனைத்து தேசங்கடந்த தொழிற்கழகங்களும் புதிய உற்பத்திய+க்க போர்மூலா மூலம் சரிசெய்கின்றனர்:


>0,5x2x3= 300<அதாவது அரைப்பங்கு தொழிலாளர்களைக் கொண்டு இருமடங்கு உயர்ந்த உற்பத்திய+க்கத்தைப் பெறுவது.இது பழைய உற்பத்தியோடு வகுக்கும்போது அதைவிட மூன்றுமடங்கு உயர்ந்த உற்பத்திவீச்சு. இந்தப் போர்மூலாதாம் இன்றைய உற்பத்தித்திறன்!இதை ஏழைநாடுகளில்: >0,25x2x4=400<ஆகவுமாக உற்பத்தித் திறன் கட்டியெழுப்பப்பட்டள்ளது.இங்கு 300-400 மடங்கு உற்பத்தித்திறன்கூட பெருவங்கிகளின் "வட்டிக்குவட்டியை" ஈடுசெய்யத் தணறியபடிதாம் முதலாளியம் சேடமிழுத்தபடி நகர்கிறது.இந்தப்போக்கால் மூன்றிலைத்திட்டமாக உற்பத்திப்பொறிமுறையை நாம் வகுக்கலாம்:


1):முக்கிய உற்பத்தியகம்
2):வெளியார் உற்பத்தி
3):வளைந்துகொடுக்கும் வேலை


இதை இப்படிப் புரியலாம்:

ஒரு வாகன உற்பத்திநிறுவனம்,உதாரணம்:ஜெனரல்மோட்டார். மோட்டரை தனது முக்கிய தளத்திலும்,சிறியரக உதிரப்பாகங்களை வெளியாரிடமும்,வளைந்து கொடுக்கும் வேலையை தொழிலாளர்களை வழங்கும் முகவர்களிடமாகவும் பெறுவதுதாம் இந்த முச்சிலைத்திட்டம்.இன்றைய நிலவரப்படி ஜெனரல் மோட்டரிடம் தொழில் புரிபவர்களில் 65 வீதமான தொழிலாளிகள் வெளிமுகவர்களால் வழங்கப்பட்ட தினக்கூலிகளே.இது உச்சஊதிய வரம்பை அதன் கடைக்கோடி நிலைக்குத் தள்ளிய முதலாளியப் பொறிமுறையாகும்.வருங்காலத்தில் ஒரு தொழிலகம் தனது 80 வீதமான தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு 20 வீதமான வேலையாட்களோடு சகலதையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கும். இதுவே பயங்கரவாதத்தின் மூலவ+ற்று.இதை மீறிய எந்த உற்பத்திவடிவமும் முதலாளியத்திடம் கிடையாது.இது சகல நாடுகளையும் தன் உயிர்வாழ்வுக்காய்ச் செரித்து ஏப்பமிட்டுவிடும்.இந்தப் புதிய நவநாகரீக முதலாளியம் ஒரு தொழிலாளியைத் தேர்வு செய்யும்போது அவரிடம் பல்முனையாற்றலைவேண்டிக் கொள்கிறது.அதாவது ஜந்திரத்தை இயக்குபவர் கணினியல் கணக்குப் பதியத் தக்கவராகவும் கூடவே ஜந்திரத்தைப் பழுது பார்க்கத் தக்கவராகவும் முடிந்தால் புதிய வாடிக்கையாளரைக் கூட்டிவரும் ஆற்றலுடையவராகவும் இருத்தலே அவசியமாக இருக்கிறது.மைக்றோ சொவ்ற் அதிபர் பில் கேட்டின் வார்த்தையிற் சொன்னால்:" இனிமேற் காலத்தின் உற்பத்திப் புதுமைகள் ஒரு ரோல் றோய்ஸ் காரை 10 ய+ரோவுக்கு வழங்கக்கூடிய நிலை வந்தாலும் வரும்" என்பதாகும்.இது திட்டமிட்ட உற்பத்திப் போட்டியை மிகமிக நயவஞ்சகமான முறையிற் குறிப்பதாகும்.


கடந்த மாதம் மாதம் இந்திய நிதியமைச் பா.சிதம்பரம்(மனிதனின் காவாய் யுனிவர்சிட்டி ஆங்கிலத்தை கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவ்வளவு ஆழமாகவும் அழகும் பொலிவுறும் உரையாடல்) ஜேர்மன் தொழில் மந்திரியோடு உரையாடியபோது "எதிர்கால இந்தியா ஜேர்மனிய உற்பத்திவீச்சுக் முண்டு கொடுக்கும்.இந்திய அரசினது நிர்வாகச் சிக்கல் யாவும் சரிசெய்யப் பட்டு ஜேர்மனிய பொருளாதார ஆர்வத்தை இந்தியாவுக்குள் சிறப்பாக்குமெனக் கூறியுள்ளார்."


இதுகுறித்துக் கருத்துக்கூறிய ஜேர்மனிய அமைச்சர்:" இந்தியா கடந்த 2004 இல் 7பில்லியன் யுரோக்களுக்கு நம்மிடம் பொருள்களைக் கொள்முதல் செய்து நமது நாட்டில் கொள்முதல் செய்யும் நாடுகளின் பட்டியலில் 35 இடத்தில் இருக்கிறது.இது வரும் 5 ஆண்டுகளின் பத்துக்கு உட்பட்ட நாடுகளுக்குள் வரும்" என்கிறார்.


ப.வி.ஸ்ரீரங்கன்