புறாக் கதைவிடும் இராமராஜனும்,ரீ.பீ.சியும்.
மக்களின் குருதியில் கத்தை கத்தையாகப் பணம் பண்ணும் இந்தியக் கைக்கூலிக்குச் சமாதானப் புறாவைக் குறித்து கனவு வருகிறது.பேர்ளின் ஜெயசிங்கம் வீட்டிலிருந்து புறப்பட்ட புறா ரீ.பீ.சீ.வானொலியை எட்டிப் பார்த்துவிட்டுத் தொடர்ந்து ஜேர்மனிலே புலம் பெயர் தமிழர்களின் வீடுகளின் சமாதான மனங்களைக் கண்டு,ஸ்ரீலங்ங்காவின்"சமாதான விரும்பியான"சனாதிபதியைச் சந்திந்து உரையாடியபோது,அவர் கூறிய"நான் சமாதானத்துக்கு எதிரானவன் இல்லை"என்றவுடன் ஆனந்தப்பட்டு வன்னிக்குச் செல்கிறதாம்.அங்கே, ஏ-9 பாதையைத் திறந்தால் சமாதானம் வந்துவிடுமென்ற கதையால் மனம் முடங்கி மீள ரீ.பீ.சி.யை எட்டிப் பார்த்துவிட்டுத் தனது தாய்வீடான பேர்ளின் ஜெயசிங்கம் வீட்டையே போய்விட்டதாம்.ஏலவே, இயக்கங்களுக்கும்(புலி உட்பட்ட) இந்திய அரசுக்கும் இடையிலான பேரங்கள் மற்றும் தரகு வேலையில் நல்ல அனுபவமுள்ள இராமராஜனுக்கு அதைக் குறித்தானவொரு இன்னொரு கனவு இப்படிப் புறாமீது ஏறுகிறது!
ஆக,பேர்ளின் ஜெயசிங்கம் ஒரு சமாதான விரும்பியாக இனம் காட்டப்படும் அரசியலில் அவரது இப்போதைய என்.ஜீ.ஓ.சார்ப்பு நடத்தையால் உருவாகிறது.
ஜேர்மனிய அரசு சாராதவென்ற அரசுசார்பு நிறுவனங்கள் ஜெயசிங்கத்துக்கு ஊடாகச் செயற்படும் அரசியல், இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிச்சையிட்டுத் தத்தமது காரியங்களை ஆற்றுவதாக இருக்கிறது.இதே நாடுகளின் ஆயுதங்கள்தான் நமது மக்களின் தலையில் குண்டுகளையும் பொழிகின்றன!இப்படிப் பொழிந்து அந்த மக்களை ஊனமாக்கிவிட்டு அவர்களுக்கு ஊனிடம் இவர்களின் பொருளாதார மற்றும் ஆர்வங்கள்தான் என்ன?அத்தகைய ஆர்வங்களை இத்தகைய நடத்தைகள் மூலம் அவர்கள் பெறுவதற்கு ஜெயசிங்கம்போன்றோர்கள் துரும்புகள்.
பராவின் மரண வீட்டிற்கு வந்து அரசியல் செய்த ரீ.பீ.சீ. இராமராஜனுக்கு தங்குமிடத்தைச் செய்திருப்பார் ஜெயசிங்கம்.அவருக்கு ஒரு பப்பா மரத்தைப் புறாவினது கதையூடாக வளர்த்த இராமராஜன் அப்பாவி மக்களின்-தமிழர்களின் சில அரசியல் கோரிக்கைகளை"ஏ-9"பாதையாகக் குறுக்கித் தனது வம்புத்தனமான அரசியலை இந்தியப் பாதந்தாங்கிக் காரியமாக்கும்போது அதையும் சில மண்டை கழண்ட ரீ.பீ.சீ.வானொலி இரசிகர்கள் ஏற்றுக் கதை விடுகிறார்கள்!
அப்பா இராமராஜா நீ,செய்யும் அரசியல் உனக்கே கத்தைகத்தையாகப் பணம்போடும் ஒரு நிலையில், நீ தமிழ் பேசும் மக்களுக்கு நீதியான அரசியலாக்க முனைவது உனது வளத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்கவா ராசா?
முன்னாள் ஈரோஸ் தோழர் ஜெயசிங்கம் இன்னாள் எடுபிடி ஏகாதிபத்தியத்துக்கு.
இவரது ஆலோசனைகள் தம்பி இராமராஜனுக்குக் கைகொடுத்தபோது,செஞ்சோற்றுக்கடனாகப் புறாவிடும் கதை வளர்கிறது.அண்ணர் ஜெயசிங்கத்தின் அதிரடி ஆலோசனைகளின் விளைவாக இன்று, சமதானப் புறாவிடும் இத் தூதர்கள் நாளை புறாவுக்குப் பதிலாகக் குண்டுகள் தாங்கிய இரும்புப் புறாக்களை நமது தேசமெங்கும் அனுப்புவதற்கான இன்னொரு அரசியலைப் புலிகளைச் சாட்டி அனுப்பலாம்.எல்லாம் ஜனநாயத்துக்காத்தானாம்.
அப்பாவித் தமிழ்மக்கள் சிங்களக் கொடுங்கோலன் மகிந்தாவாலும் அவனது வான் தாக்குதலாலும் நாளும் கொல்லப்படும்போது அதை நியாயப்படுத்திப் "புலிப் பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாககக் கதை திரிக்கும் இந்த இராமராஜன், இப்போது"ஏ-9"நெடுஞ்சாலைக் கதையைவிட்டுப் புலியின் வரி வசூலிப்பைச் சொல்கிறார்கள்.தாங்கள் தத்தமது நலனுக்காக அப்பாவி மக்களின் தலைகளில் குண்டைப் போட்டபடி ஜனநாயகக் கதைவிடுவதைப் போலவே,இப்போது புறாக் கதைவிட்டு இலங்கைப் பாசிச அரசின் வன்கொடுமை அரசியல் நகர்வை நியாயப்படுத்தி வருவது மிகக் கயமையானது.இவர்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் நம்மை ஏமாற்றுவார்கள்?
இராமராஜனின் வானொலிக்கு வகுப்பெடுப்பதை
ஜெயசிங்கமோ அல்லது சிவலிங்கமோ செய்யவில்லை!
இவர்களைப் பயன்படுத்திப் புலம் பெயர் தமிழ் பேசும் மக்களுக்குள் மெல்ல ஊடுருவும் இந்த இந்திய-இலங்கைக் கைக்கூலிக்கு வகுப்பெடுப்பவர்கள் இந்திய உளவுத் துறையென்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடே கூறுகிறோம்.இந்த அரசியல் குழிபறிப்பில் இராமராஜன் போன்றவர்கள் இணைந்தியங்கும் அரசியல் எஜமானக் கட்டளைகளைச் செம்மையுறச் செய்வதாகவே இருக்கிறது.இதற்காக இவர்கள் பெறும் மில்லியன்கள் எமது மக்களின் எதிர்காலத்தையே இருட்டாக்கிவிடுகிறது.இத்தகைய அரசியலை முன்னெடுத்த அன்றைய தமிழ் ஓட்டுக் கட்சிகளின் பரிணாமமாக இவர்கள் நம் முன் வளர்ந்து விருட்ஷமாக நிற்கிறார்கள்.இவர்களை வேரோடு சாய்க்காமல்(கொல்வதல்ல) நாம் நமது மக்களுக்கான நியாயமான போராட்டத்தைச் செய்ய முடியாது!
தமிழ்பேசும் மக்களுக்கு இவ்வளவு துரோகத்தனத்தைச் செய்யும் இந்த வானொலி, தங்கு தடையின்றி எந்தவிடத்துக்கும் தன்னை முன்னிலைப்படுத்திக் காரியமாற்ற முனையும்போது இந்த வானொலியை அம்பலப்படுத்தி நிராகரிக்க முடியாத கபோதிகளாக நம்மில் பலர் இருக்கிறார்கள்.இவர்களில் பலர் "மக்கள் எக்கேடுகெட்டாலும் பறுவாயில்லைத் தமது இயக்க நலன்சார்ந்த நலன் உறுதிப்பட்டால் சரி என்றியங்கும் புலிகளைப் போலவே" செயற்படுகிறார்கள்.இவர்கள் மக்களின் உரிமைகளையும்,அவர்களது அழிவையும் தமக்குப் பதவி-பணம் பெறும் மூலாதாரமாகக் காணும் அரசியலாக விரித்துச் செல்லும்போது,இவன்(ள்)களுக்கும் ஆனந்தசங்கரி போன்ற மிகப் பிரபலமான இந்திய அடிவருடிகளுக்கும் சாரம்சத்தில் மிக நெருங்கிய உறவு இருக்கிறது.அந்தவுறவு அவர்களது அரசியலின் தொடர்வினைமட்டுமல்ல.மாறாக,மக்களின் உரிமைகளை-அவர்களின் துயரைத் தமது அரசியலுக்காகப் பயன் படுத்துவதைக் குறித்துச் சொல்கிறோம்.
மெல்லப் புலம்பெயர் தமிழர்களை முட்டாள்களாக்கி வரும் இன்றைய புலியெதிர்ப்புக் கும்பல்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று தம்மை முன்னிலைப் படுத்தும் அரசியலையும் மரண வீடுகள் தொடக்கம் மற்றெல்லா நிகழ்வுகளிலும் ஆற்றி வருகிறார்கள்.அன்று, ரொக்ஸ்சிய வாதிகளை(நான்காம் அகிலம்) இலக்கியச் சந்திப்புக்குள்ளேயே நுழையவிடாதவர்கள் இன்றோ இந்திய உளவுத்துறையைத் தாரளமாகக் கதவைத் திறந்து கைலாகு கொடுத்து வரவேற்பதன் நோக்கம் என்ன? இந்த இந்திய உளவுக் கைக்கூலிகள் நம்மோடு உறவாடி நம்மைக் கருவறுப்பதற்காகவா அல்லது அவர்களினூடாக இலங்கையில் பதவி பெறுவதற்காகவா?
இப்போது ரீ.பீ.சீ.ஊடாகக் காரியமாற்றித் தமது வளத்தை மேம்படுத்த,பதவிகளைப்பெற முனைவதற்கு ஒரு பிடி வேண்டும்.அந்தப் பிடிக்கு மக்கள் மத்தியில் செயற்பாடுடையவர்களாகக் காட்டி,மக்களை ஏமாற்றிக் கொள்வதற்குத் தலித்துகளுக்காக T.B.C குரல் கொடுப்பதும் ஒருவழியாகவே இருக்கிறது.
இன்று நாம் செய்யும் அரசியலானது இலட்சம் மக்களைப் புதைகுழிக்குள் அனுப்பிவிட்டுள்ளது.
இனித்தொடரும் இந்த வகையான குழிப்பறிப்புக்கள் நம்மை நிரந்தரமாக நாடோடிகளாக்கும் தந்திரத்தோடு நகருமானாலும் அத்தகைய நிலைமையைத் தடுத்து நிறுத்துவதற்காக நாம் புலிகளைமட்டுமல்ல இந்த வேடதாரிகள் எல்லோரையும் அம்பலப்படுத்தி மக்களைக் காப்பதும்,நமது ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணயத்தை நோக்கிப் புதிய வகையான முன்னெடுப்பைச் செய்வதற்கு எம்மைத் தயார்ப்படுத்துவது அவசியம்.இத்தகைய செயற்கரிய காரியத்தை இன்றைக்குப் புலம் பெயர் சமுதாயத்திலுள்ள நம்மைப்போன்ற கிழடுகள் அல்ல முன்னெடுக்க முடியும்.இன்றைய இளைய தலைமுறையே இதைச் செய்யும் தகமையுடையவர்கள்.இவர்களைக் காத்து வழிப்படுத்தும் கடப்பாடே நம்மிடம் உள்ளது.
பிற்குறிப்பு:
அன்பு வாசகர்களே,இதுவே இவ்வாண்டுக்கான இறுதிக் கட்டுரையுமாகும்.
மலரப்போகும் புத்தாண்டு உலகில் அமைதியையும்,சமாதானத்தையும் தரும்
எந்த உறுதியையும் உலகப் பொருளாதார நலன்கள் குறித்துரைக்கவில்லை!
எனினும்,குறைந்தபட்சமாவது உலகத்தின் அப்பாவி மக்கள்
உயிர்தப்பி வாழவேண்டுமென்ற நோக்கோடும்,
உங்கள் எல்லோருக்கும் நிறைவான சம்பவங்கள் நேரவும்,
குறைவில்லா ஆரோக்கியம் கிடைக்கவும் என் வாழ்த்து!
மேலும், புதிய ஆண்டில் சந்திப்போம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
29.12.2007
9 Kommentare:
ஐயா, ராசா ஸ்ரீரங்கா,
ஒண்டுமா விளங்கேல்ல அப்பு, நாங்கள் ரி.பி.சி கேக்கிறேல்ல அப்பு. என்ன எழுதிறதெண்டதை எல்லாருக்கும் விளங்கிறமாதிரி எழுதப்பு. தலை சுத்துதடா மோனை!
ராசா கெஞ்சிக்க்கேக்கிறன் பொடிவச்சு ,படிச்ச சனத்துக்கு மட்டும் விளங்கிறமாதிரி எழுதாத ராசா விளங்குதில்லையடா மோனை. உவன் உந்த ராமராசனை பற்றி அறிய ஆசையில தான் வாசிச்சனான் இப்ப குழம்பிப்போய் நிக்கிறனடா! குறைநினக்காமல் தெளிவா எழுதடா மோனை இல்லாட்டி உந்த மக்கள் புரட்சி, மாக்சிசகாரர் போன இடத்தை தான் போவேண்டிவரும் மோனை!!!!
//ஒண்டுமா விளங்கேல்ல அப்பு, நாங்கள் ரி.பி.சி கேக்கிறேல்ல அப்பு. என்ன எழுதிறதெண்டதை எல்லாருக்கும் விளங்கிறமாதிரி எழுதப்பு. தலை சுத்துதடா மோனை!//
அண்ணே!
உது ரீ.பீ.சீ.வானொலியில் நேயர்கள் கலந்துரையாடும் நிகழ்வொன்றில் அவர்கள் செய்த அரசியலைப் பேசுகிறது!
நேயர்களுக்கான தொலைபேசி உரையாடல் நிகழ்வில்,ஒவ்வொரு ரீ.பி.சீ.நேயரும் சமாதானப் புறாவை ஏற்றுத் தமக்கு விரும்பிய நேயர்களின் வீட்டிற்கு அனுப்பணும்.அப்படி அனுப்பும்போதே நேயர்களின் மனத்தை ஆழமாக இனம் காணவும்-தூண்டில் போடவும்,குட்டையைக் குழப்பும் அரசியல் பிறக்கும்.அங்கே, கூடுகின்ற-தொடர்பாடுகின்ற நேயர்கள் வன்னிமுதல் அலரி மாளிகைவரப் புறாவை விட்டெடுக்கிறார்களாம்.இதனூடாகக் கட்டப்படும் கருத்துக்கள் நம்மையெல்லாம் அநாதையாக்கும் சூழ்ச்சியோடு,நமது அடிப்படையுரிமையின் வாயிலாக நடந்து தோல்விகண்டுவரும் நமது போராட்டத்தின் நியாயத்தன்மையை மறுத்தொதுக்கிறது.புலியை விமர்சிப்பதென்று நமது மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தொதுக்குவது ரீ.பீ.சீ.க்குக் கைவந்த கலை.இதனூடாகத் தமது எஜமானதுகளின் நலன்களை மிக ஆழமாக இலங்கையில் நிலைநாட்ட முனைகிறார்கள்.அதை அம்பலப்படுத்தினேன்.அவ்வளவுதாம்.வேறெந்தப் பொடியுமில்லை என் பெரியவரே!
நல்லது மோனை, இப்ப விளங்குது. இத முதலிலேயே எழுதி முன்னுக்கு அடைப்புக்குறியில போட்டிருக்கலாமெல்லே. சிக்கல் தீந்திருக்குமெல்லே!!!
அது சரி ஒருதரும் சமாதானப்புறாவை சுவிஸ் ஜெயிலுக்கு அனுப்பேல்லையோ?????
அனுப்பியிருந்தா அங்க உவன் ராமதாசுக்கு அங்க என்ன நடந்ததெண்டு அறிஞ்சிருக்கலாமெல்லே? மற்றது ஞானத்திட்டையும் அனுப்பியிருந்தா கருணா சிக்கலும் தெரிஞ்சிருக்கும். அருமையான சந்தர்ப்பத்தை நளுவ விட்டிட்டாங்கள். சுவிசில என்ன நடந்ததெண்டு இண்டைக்கும் ஒருதருக்கும் சொல்லமாட்டன் எண்டுறான். ஆனால் வன்னிக்குள்ள புலியின்ர சூத்தில இருக்கிற விசயங்களெல்லாம் சொல்லுறாங்கள். இதச்சொல்லுறாங்களில்ல மோனை!
உனக்கு ஏதாவது தெரியுமோ????
//அது சரி ஒருதரும் சமாதானப்புறாவை சுவிஸ் ஜெயிலுக்கு அனுப்பேல்லையோ?????
அனுப்பியிருந்தா அங்க உவன் ராமதாசுக்கு அங்க என்ன நடந்ததெண்டு அறிஞ்சிருக்கலாமெல்லே? மற்றது ஞானத்திட்டையும் அனுப்பியிருந்தா கருணா சிக்கலும் தெரிஞ்சிருக்கும். அருமையான சந்தர்ப்பத்தை நளுவ விட்டிட்டாங்கள். சுவிசில என்ன நடந்ததெண்டு இண்டைக்கும் ஒருதருக்கும் சொல்லமாட்டன் எண்டுறான். ஆனால் வன்னிக்குள்ள புலியின்ர சூத்தில இருக்கிற விசயங்களெல்லாம் சொல்லுறாங்கள். இதச்சொல்லுறாங்களில்ல மோனை!
உனக்கு ஏதாவது தெரியுமோ????//
நியாயமான கேள்விகள்!
இது குறித்தெல்லாம் தெரிந்துகொள்வது நமது போராட்டத்துக்கு அவசியம்.
எங்கள் மக்களைச் சொல்லியே தங்களை வளர்க்கிற இந்தக்கூட்டம் அம்பலப்பட்டு வருகிறது.
கிரமத்தில் எல்லாம் வரும்.
இருபதாண்டுகளுக்குமுன் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வந்த டேவிட்ட ஐயாவின் பொதியில்-அவருக்குத் தெரியாமல்-தூள் வைத்து அனுப்பிய இராமராஜன், இதுபோன்றவற்றுக்காகவே சுவிசில் கம்பியெண்ணியதாகத் தகவல்.
அப்பாவி மனிதரான டேவிட் ஐயாவையே விட்டுவைக்காதவன் தமிழ் மக்களை வாழ விடுவான்?
அந்த மனிதரின் நிர்மலமான நற்செயல்களுக்காகவே
அவர் எந்தச் சோதனையுமின்றி பிரான்ஸ்சுக்குள் நுழையவிடப்பட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தூள் கடத்திய இராமராஜன்
இன்று மக்கள் நல ஊடகவியலாளன்!
ஞானம் இந்த வகை அரசியலுக்குப் பலியாக்கப்பட்டாரா அல்லது அவரே இதைத் தேர்வு செய்தாரா யாம் அறியோம்!
எனினும்,உண்மைகளை அவ்வளவு இலகுவாக மண்ணையள்ளிப்போட்டு மூடிட முடியாது!ஓர் நாள் வெளி வந்தே தீரும்!
இரண்டு விடயம்,
20 வருசத்துக்கு முன்னர் தூள் வைத்து அனுப்பியது என்ற சந்தேகத்திற்காக இன்று சிறையில் வைக்க முடியுமா? வழக்கு ஒன்றுமில்லையா? (ரயாகரன் பாசையில் கொசிப்பு)
டேவிட் ஐயா இந்தியாவில் இருக்கிறார் பிரான்ஸில் இல்லையே?
//20 வருசத்துக்கு முன்னர் தூள் வைத்து அனுப்பியது என்ற சந்தேகத்திற்காக இன்று சிறையில் வைக்க முடியுமா? //
நீங்கள் அவசரப்பட்டுப் பின்னூட்டாதீர்கள்!
முதலில் நான் என்ன சொல்கிறேன் என்பதை விளங்கிக்கொண்டு-ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் இடம் பொருள்கொண்டு எழுதுங்கள்.
என்ன சொல்கிறேன்?
"...இதுபோன்றவற்றுக்காகவே" என்கிறேன்.
இங்கே, அர்த்தமாவதென்ன?
இத்தகையபோன்றவொரு இன்னொரு செயலில் மாட்டியிருக்கலாமென்பதாகும்.
அடுத்து,டேவிட் ஐயா இந்தியாவிலிருப்பதை அறியாதவன் என்ற தோரணை எப்படியுருவாகிறது?அவர் என்ன செய்கிறார்-எங்கே வாழ்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!ஏனெனில்,அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
மனிதரில் உண்மையாய் வாழ்வதற்கான முன்னுதாரணம் அவர்.
//வார்த்தைக்குள்ளும் இடம் பொருள்கொண்டு எழுதுங்கள்//
இதையே நீங்களும் செய்திருக்கலாமல்லவா? கேட்கப்பட்ட கேள்விக்கு ஏன் 20 வருடத்துக்கு முன்னைய கதையை இழுத்து இன்றும் நடந்திருக்கலாம் என்ற கொசிப்பு? தெரியாதென்றால் சொல்ல வேண்டியதுதானே? உங்களுக்கும் புலிக்கும் என்ன வேறுபாடு?
//இதையே நீங்களும் செய்திருக்கலாமல்லவா? கேட்கப்பட்ட கேள்விக்கு ஏன் 20 வருடத்துக்கு முன்னைய கதையை இழுத்து இன்றும் நடந்திருக்கலாம் என்ற கொசிப்பு? தெரியாதென்றால் சொல்ல வேண்டியதுதானே? உங்களுக்கும் புலிக்கும் என்ன வேறுபாடு?//
அன்பரே,தமிழில் சாதாரண உரையாடல்களில் கூடப் புலிகளை இழுக்காது எம்மால் எதுவும் சொல்வதற்கு முடிவதில்லை!
நான் தமிழில் எடுத்து வைக்கும் எந்த வார்த்தைக்கும் அர்த்தம் அறிந்தே எதையுஞ் சொல்லி வருகிறேன்!இப்போது எனக்குப் புரியாத ஒரு பிராந்தியப் பாவனைக்குள்ளாகும் வட்டார மொழி உலாவுகிறது."கொசிப்பு"என்பதன் அர்த்தத்தை நான் அறியேன்!ஆனால், அது பாவிக்கப்படும் இடம்,"வீணாகக் கதைகட்டும்-அல்லது மிதமாகப் பொய்யுரைத்தல்,துற்றுதல்" எனும் அர்த்தத்தில் அது முன்வைக்கப்படுகிறதாக நினைக்கிறேன்!இங்கே, இராமராஜனின் வண்டவாளம் மட்டுமல்ல அந்த மனிதரின் அந்நியச் சேவகமும் நாம் அறிந்ததே.அந்தவகையில் எமக்கு, நம் மக்களுக்கு விடிவு வரவேண்டுமென்பதில் அசைக்கமுடியாத பற்றுண்டு.இவற்றைக் கடந்து எமது மக்களின் குருதியில் தமது குடும்ப நலன்களை வளப்படுத்த முனைவர்களைப் பார்த்து நாம் சும்மா வாய்மூடி முடங்கி இருக்கமுடியாது!எமக்குத் தெரிந்து வகையில் போராடுகிறோம்.இதை,உங்கள் மொழியில்"கொசிப்பு" அல்லது எமக்கு அநுபவமான மொழியில்"தூற்றல்,வசைபாடல்,வெறுவாய் சப்பல்"என்றால் எம்மை அந்த இறைவனாற்கூடக் காத்திட முடியாது!-அவ்வளவுதாம்.தங்கள் முயற்சிக்கு(பின்னூட்டம் இடும் மனது)எனது நன்றி-அன்பரே!
அண்ணை,
//உங்கள் மொழியில்"கொசிப்பு" அல்லது எமக்கு //
நீங்கள் கேட்கவேண்டிய இடம் உங்கள் நண்பன் ரயாகரன்! அவர் தான் குத்திமுறிஞ்சு இந்த சொல்லாடலை அறிமுகப்படுத்தியவர். நான் அறிந்து அவரின் பதிவுகளில் இதை எப்போதும் நீங்கள் கேட்கவில்லை.
நீங்கள் சொல்லிய 20 வருட கதைபோல இருக்கலாம் என்பது மாதிரித்தான் ரயாகரனைப்பற்றிய ஹற்றன் நஷனல் வங்கி கதைக்காரரும் சொல்லுகிறார்கள்.
Kommentar veröffentlichen