Donnerstag, Mai 27, 2010

ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும்,
ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:

கருத்தின்பால் காரணந் தேடுதல்!



வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.மக்களிடம் கொள்ளையடித்த செல்வத்தின் துணையுடன் அதே மக்களை மேலும் மொட்டையடிப்பதில்"ஆரு உண்மையான புரட்சிக்காரர்கள் " எனப் பூச்சுத்தும் இந்த மோசடிப் பேர்வழிகளைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பதும் ஒருபகுதியான ஜனநாயகப் போராட்டம்தாம்.மக்களிடம் சேர்த்த பணம் எவரிடம் போய்ச் சேர்ந்ததெனப் பூச் சுற்றப்போகும் இந்தத் தொலைக்காட்சி,நாளை அப்பணம் கே.பி. என்ற கேடியிடம் போனதாகவும் கூறமுடியும்.இது,ஒரு தொடர் கதையாக மாறமுடியும்.இருப்பினும் நாம் வேறு திசைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.அது,அவசியமானது.


"வெளிச்சமென்றும்,அரசியல் ஆய்வு" எனவும் GTV கொட்டும் கருத்துக்களைக் குறித்து மிக நேர்த்தியாக அணுகவேண்டியுள்ளது. இணையத்தில் எழுதும் எழுத்துக்களைவிட இலவசமாகப் புலம்பெயர் தமிழர்களது வீட்டுக்குள் பிரேமும்,ஜெகனும் அத்துமீறி வந்து கொட்டும் புலிவழி இனவாதக்கருத்துக்களோ, பன்மடங்கு மோசமான விளைவுகளை இலங்கைவாழ் தமிழ்மக்களுக்குக் காலப்போக்கில் ஏற்படுத்தப்போகிறது.


ஒரு புறம் புலிகளது உறுப்புக்களான புரட்சிப்படைகள்,மறுபுறம் தேசிய விடுதலைக்கு, மீளப் புதுவிலக்கணந்தரும் புலிப்பினாமி ஊடகயுத்தமென இன்றைய சூழல் மிகக் கெடுதியாக நகர்கிறது.இவற்றுக்கு மத்தியில் புதிய"படைப்பாளிகள்" புலிகளது கொலை அரசியலில் நீந்திய தமது கடந்தகாலத்தை மறுத்து, வலம் வருவதற்கேற்ற தயாரிப்புகளில்... கடந்த பல வருடங்களாக வலையுலகில் மனிதநேயத்துக்காக நாம் தட்டந்தனியனாகப் போராடியபோது அதை எதிர்த்த பல புலிக்கேடிகள் இப்போது, "படைப்பாளிகள்-புரட்சிகரப் போராளிகளாக" வலம் வர, நாம் சந்தர்ப்பவாதிகளைத் தோலுரிக்க அடுத்த வலம் வருவதும் அவசியமே!சாகவில்லை!சந்தர்ப்பவாதிகளை-சதிகாரர்களை-புரட்சி பேசிப் புலிக்கு லிங்குகொடுத்தவர்களை,புரட்சிகரக் கட்சிக்கு ஆள் சேர்க்கும் அந்நியச் சேவகர்களை, நாம் தோலுரித்து மக்கள் முன் நிறுத்துவதே இப்போதைய அரசியல் தேவை.அதைச் செய்யாதிருப்பது அரசியல் தற்கொலையே!


சந்தர்ப்பவாதமே உலகினில் அதிக கேடு விளைவிப்பது!


அஃது,இப்போது கடந்தகாலப் புலி விசுவாசிகளது உயிர் வாழ்வாக இருக்கலாம்.ஆனால்,நாம் இவர்களது அன்றைய மக்கள்விரோத இயக்கவாதக் கருத்துக்களை-கொலை அரசியலை ஊக்குவித்த மனவியாதிகளை மறக்க முடியுமா நண்பர்களே?


கேடுகெட்ட"படைப்பு"வாதிகளே கேளுங்கள்!


மே 18 எனத் தொடர்ந்த புலியினது மிச்சசொச்சத்தை எதிர்த்தும்,ஆதரித்தும் கருத்தாடும் அதர்ம அரசியல் போக்கில் வந்து குதித்துவிழும் முத்தான பரப்புரைகளது தெரிவில் புரட்சிக்குப் புதுவிளக்கமிடும் புதிய யுகத்தில் புலியினது இருப்பு இன்னுஞ் சிதறவில்லையென்பதும்,அதன் அந்நியச் சேவை தொடர்கிறதென்பதும் மறுத்தொதுக்க முடியாத புரிதற்பாடாகும்.இதையுங் கேளுங்கள்!!


எவன்(ள்)எந்தெந்தத் திசையில் புலிக்கான தளத்தை மீளத் தகவமைத்துப் புலிகளது எஜமானர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனரென்பதை மிக இலகுவாகப் புரிந்துவிட முடியாது.இலங்கை அரசினது புதிய தெரிவுகளாக முன்னெடுக்கப்படும் இராணுவக்கெடுபிடிகளது நகர்வுக்கு வலுச் சேர்ப்பதில் ஆதாயமடையமுனையும் புலத்துப் புலிப் பினாமிகள் மக்களது அவலங்களை வைத்துப் பிழைக்கமுனையும் அரசியலானது புரட்சியின் பெயரால் இனி நம்மை முட்டாளாக்குமானால் அதை அனுமதித்த குற்றத்திற்காக நாம் மக்களைக் குறித்துப் பேசுவதே வீணாகவேண்டும்!

ஒவ்வொரு குழுவும்,அடுத்த குழுவுக்குத் தெரியாதபடி புலிகளது எஜமானர்களால் வளர்த்துவிடப்பட்டுள்ளது.இத்தகைய குழுக்கள் தத்தமக்கு "நியாயமான" வகைகளில் புரட்சி-விடுதலை குறித்துப் பேசுகின்றன.இவர்களில், எவரும் மக்கள் சக்தியெனப் பேசுவதற்கும்,தம்மை முதன்மைப்படுத்துவதற்கும் ஏற்ற தருணங்களைப் பற்றிக்கொண்டு மற்றவர்களை எதிர்க்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஒரு தளத்தின் பல்வேறு பிரிவுகளாக வளர்க்கப்பட்டு வழி நடாத்தப்படுகின்றனரெனப் பெரிதும் நம்பலாம்.இதை உரைத்துப் பார்க்க ஜீ.ரீ.வீயினது கருத்துக்கட்டும் வியூகத்தில் நம்மைக்கொஞ்சம் இணைக்கும்போது மெல்லப் புரிந்துகொள்ளும் ஆற்றலை இனங்காணமுடியும்.அவ்வண்ணமே, புரட்சிக்காரர்களது இணைய-வலை ஊடகங்களுமென நம்பலாம்.


இப்போது,திருடனே ஊரினது காவற்காரனாக வலம் வருகிறான்-திருடியினது கைகளில் ஊர்க் கோவிலது சாவி...இப்படித்தாம்,புலம்பெயர் புரட்சிக்கார வேஷமும்,போராட்ட வியூகமும்.இதற்குள்தாம் எத்தனை கோலம்-எத்தனை கோட்டம்?



புலத்துப் புலிப்பினாமிப் புரட்சிக்காரர்களது இந்த வகை அரசியல், எம்மினத்தை இன்னும் அரசியல் அநாதையாக்கும் சூழ்ச்சிமிக்கப் பயங்கரவாதச் செயற்பாடாக விரிந்து முழு இலங்கையையும் ஒரு பெரும் இனவாதத் தீக்குள் சிக்க வைக்கும் கபட அரசியலாகும்.இதனால், மக்கள்சார் அரசியல் வகைப்பட்ட எந்த முன்னெடுப்பும் பின் தள்ளப்பட்டு,ஆயுதக் கலாச்சாரத்தில் மூழ்கிவிட்டர்வகள் தம்மையும் தமது இருப்பையும் தக்க வைப்பதற்கான இனவாத அரசியலையும்,அதுசார்ந்த கருத்தியல்போரையும் தொடக்கி நமது மக்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் அழித்துவர மீளத் திட்டமிடுகின்றனர்.பிரபாகரனுக்கு நிகரான இன்னொரு பிரபாகரன் வருவதை நாம் அனுமதிக்கப் போகின்றோமா?இல்லை,இலங்கையில் சிங்கள-புலிப்போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சமூகத்துள் சிவில் சமூக உருவாக்கத்துக்கான முன்னெடுப்புகளை முடுக்கிவிடுவதற்கான அம்பலப்படுத்தல் அரசியலில் துடிப்பாக இயங்கப் போகிறோமா?


தீர்மானிக்கவேண்டும்-இதை,இப்போதே தீர்மானித்து இயங்கவேண்டும்!வேடதாரிகளை-புரட்சி,விடுதலை பேசும் கயவர்களை இனங்காண்பதே இன்றைய அதியவசியமான தேவை!


இப்போது,இந்த நயவஞ்சகர்களால் புரட்சிகரமான போக்குகள் மிகவும் பலவீனமாக்கப்பட்டு, மக்கள் ஐக்கியம் பாழடிக்கப்படுகிறது.இஃது, தமிழர்களின் அனைத்துத் தார்மீக உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.எது எப்படி நடைபெற வேண்டுமோ, அஃது, அப்படி முன்னெடுக்கப்படும் அரசியில் வியூகத்தைக் கொண்டியங்கும் புலிகளது உறுப்புகள் தமக்குள் மோதிக்கொள்ளும் பொருள்வழிப்பட்ட முரண்பாடுகளைக்கிடப்பில்போட்டபடி அரசியல் இருப்பைப் புரட்சியின்பெயரால் தொடரமுனையும் கேடுமிக்க அரசியலை நாம் புரிந்துகொண்டுள்ளோமா?


இக் கேள்வி அவசியமானது.நாம்,இதைப் புரிந்துள்ளோமா-இனங்கண்டுள்ளோமா?எவருக்கெவர் "மக்கள் சக்தி"லேபிள் ஒட்டுவது?புலிக்கு வக்காலத்துவேண்டும் புலியுறுப்புகளுக்கும், புரட்சிக்கும் என்னடா தொடர்பு?புரட்சியென்பது மே 18 நயவஞ்சகர்களது முற்றத்து மரமா?அல்லது, அவர்களது கோவணத்துள் சுருங்கும் உலகமா?


இத்தகைய நபர்கள்-குழுக்கள்சார் அந்நிய எஜமானர்களுக்கேற்ற இயக்க-கட்சி நலன்கள் மக்களின் இருப்பைச் சூறையாடுகிறது.அது மனிதத் தன்மையே இல்லாத பயங்கரப் பாசிசத்தை இலங்கைத் தீவில் மீளக்கட்டியமைக்கப் பாடுபடுகிறது.இதற்கேற்றபடி மே 18 இன் தொடர்புகள் விரிந்து மேவுகிறது.அதைக் கொண்டியக்கும் தளங்கள் புதியபல தொடர்ச்சிகளை மிக விரைவாக இயங்கக் கோருகிறது.இந்தப் புதை சேற்றில் இறங்க நம்மை அனுமதிக்கும் ஒவ்வொரு கணமும், நாம், எமது மக்களது உயிரைப் பறிப்பதில் பங்களித்தவர்களாவோம்!இங்கே, மானுடவுரிமை,ஜனநாய மரபு யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு,கட்சி-இயக்க ஆதிக்கம் வன்முறைசார்ந்த அதிகாரமாக நிறுவப்படுகிறது.இந்த வன்முறைசார் அதிகாரமானது எந்தத் திசைவழியை மக்களின் விடுதலைக்கு வழங்குகிறதென்றால்-மக்களின் விடுதலையென்பது குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் திசைவழியையே மக்களின் விடுதலையாக மக்கள் குழுமத்தில் சமூக எண்ணமாக விதைக்கிறது.இது மிகக் கொடுமையான மக்கள் விரோதமாகும்.மேலும் பிறிதொரு பாதையில் மக்களின் அனைத்து வளங்களையும்(ஆன்ம-உடல் மற்றும் பொருள்)தமது இருப்புக்கு இசைவாகத் திருடிக் கொள்கிறது.இதைத்தாம்,இந்தக் கேடுகெட்ட புலிவழிப் புரட்சிக்காரர்கள் எமக்குப் புரட்சியெனப் பூச் சுற்றுகிறார்கள்-மக்கள் நலக் கோரிக்கை-அரசியல் என்றும் புனைகிறார்கள்.


நாடு கடந்த தமிழீழ அரசு,மே 18 இயக்க அரசியல் வியூகம்,தேசியவிடுதலைக்கான மீள் போராட்ட வடிவங்களெனப் பிரகடனப்படுத்தப்படும் ஒவ்வொரு திசைவழியும் புலத்துப் பினாமிப் புலிகளுக்கு வரும்படியை உயர்த்தலாம்.இந்த வரும்படியை அவர்கள் தமது அந்நிய எஜமானர்களிடமிருந்தும்,நமது மக்களது உண்மையான பங்களிப்பிலிருந்தும் பெற்றுக்கொள்வர்.ஆனால், இந்த வகை அரசியலை தமிழீழத்துக்கான இறுதி இலட்சியமாக விதந்துரைக்கும் பரப்புரைகள் மக்கள் வெளிக்குள் விதைக்கப்படும்போது,இது பாரிய பின்னடைவை இலங்கையின் ஜனநாயக முன்னெடுப்புகளுக்கு வழங்கும்.இத்தகையவொரு சூழலில் இலங்கை அரசியல் நகர்வு நிச்சியம் தமிழ் பேசும் மக்களின் அனைத்துவகைவுரிமைப் போராட்டத்தையும் சிதறிடித்து, தமிழ் மக்களைப் புதிய வகையில் ஓடுக்கும் சட்டரீதியான யாப்புகள் இலங்கைச் சிங்கள அரசால் எய்யப்பட்டு,தமிழ் மக்களின் தலையில் தீயை அள்ளிக் கொட்டும்.இங்கே, பயன் பெறுவது முன்னாள் ஆயுதக் காட்டுமிராண்டிகளின் தலைவர்களும்-மாபியாக் கும்பல்களுமே என்பது உண்மையானது.இதற்கு, வக்காலத்து வேண்டுவதே ஜீ.ரீ.வி யினது(GTV) வேலையாக இருக்கிறது.இவர்களைப் புலம்பெயர்வாழ் மக்கள் நிராகரிப்பதென்பது, தெருமுனையில்வைத்து இவர்களை அம்பலப்படுத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது.


இதைச் செய்தாக வேண்டும்!யாரு செய்வது?; "புதிய படைப்பாளிகளா" அல்லது, "புரட்சிக்காரர்களா" என்பதே சர்ச்சை!ஏனெனில்,இவர்கள் யாவரும் ஏதோவொரு வகையில் புலிப்பினாமிகளதும்,அந்நியத் தேசங்களதும் சேவகர்களாகவே இருக்கின்றனர்!இதை உய்துணர வேண்டாமா?



இலங்கையில் புலிகளின் ஆயதப்படைகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில் மக்கள் தமது பிரச்சனைகளுக்கான போராட்டத்தைத் தமது இருப்புக்கான போராட்டத்தோடு இணைத்து,ஜனநாயக ரீதியாக வீதிகளுக்கு இறங்கியாக வேண்டும்.இங்கே, இன,மத பேதங்கள் கடந்து மக்களின் கரங்கள் கோர்வைப்படுவது அவசியம்.இந்த நிலைமை உருவாகாதவரை பாசிச அதிகாரங்களை வீழ்த்த முடியாது.மக்களை அணிதிரட்டிப் போராட வைக்கும் சக்தி மக்களின் நலனில் அக்கறையுடைய குடிசார் அமைப்புகளிடமே தேங்கிக்கிடக்கிறது.அத்தகைய அமைப்புகள் வலுப்பெறுவதைத் தடுப்பதில் புலத்துப் புலிப்பினாமிகளும் அவர்களது எஜமான மேற்குலக அந்நிய தேசங்களும் மிகவும் துடிப்பாக இயங்குகின்றன.


பல பத்தாயிரம் உயிருண்ட ஈழக் கோசம் தமிழர் விரோதிகளுக்கு உவகையானது-அது பதவிக்கும் பகட்டுக்கும் வால்பிடிக்கும் புலிகளது எடுபிடிகளுக்குத் தேசவிடுதலைக்கான தெரிவு.இதை வைத்து மக்களை மீள மொட்டையடிக்கும் கும்பல்களோ மக்கள் புரட்சிகரமாக இயங்குவதை-சிந்திப்பதைத் தடுப்பதற்குத் தாமே புரட்சிகரச் சக்தியாக மாறுவேசம் போடுகின்றனர்.இதுகுறித்த புரிதல் நம்மிடம் மிக அற்பமாகவே இருக்கிறது.இவர்களை எங்ஙனமும் இலகுவில் இனங் கண்டுவிட முடியாது.இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதி மூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.


புலியை அழித்த பின் எழும் எந்தப் போராட்டமும் புலிகளது பாத்திரத்தில் அவர்களது எஜமானர்களது நலனுக்கேற்றவாறேதாம் நமது நாட்டில் நடைபெறும்!


இலங்கையிலென்ன,உலகின் எந்த மூலையிலும் எழும் எந்தப் போராட்ட வியூகங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.


இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி (இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே, இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இந்த வர்க்கப் பார்வையை அந்நிய மேலாதிக்க சக்திகளது கைக்கூலிகளே இப்போது மும்மரமாக முன்வைக்கும் தமிழ்ச் சூழலில், எவர் புரட்சிகர அணியின் தொடர்ச்சியென எவரும் இலகுவில் புரியமுடியாது!இதுதாம்,நமது முதற் தோல்வி.இதன்வழி தொடரும் அனைத்துவகை அரசியல் வாதங்களும் நமது குருதியில் மீளத் தம்மை முன்னிறுத்தும் அரசியல் சூழ்ச்சியோடு நம்மை அண்மிக்கின்றன.இதை முறியடிப்பது அவசியமான பணி.புலியினது ஆயுதப்பலத்தோடு இருந்த அதே பாசிசச் சூழல் ,அவர்கள் அழிந்தபின்பும் அவர்களது எஜமானர்களால் நம்மீது நிறுவப்படுகிறது.அப்போது, புலிப்பாசிசம்;இப்போது, புரட்சியின் வடிவிலான கருத்தியல்-மற்றும் உளவியற் பாசிசம் மேலோங்குகிறது.


நாடு கடந்த தமிழீழ அரசு,அதன் செயற்பாடு மற்றும் ஈழத்துக்கான குரல் என்பதெல்லாம் பிரபாகரனது பாத்திரத்தை நிறுவமுனையும் பாதாளவுலக மாபியாகளது அரசிலாகவே இருக்கிறது.இது ஒருவகையில் தற்பெருமை கொள்ளுமொரு பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும், அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள். இவையெல்லாம், புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.இதை உருத்திரகுமாரிடமிருந்து கற்க முடியாது-சேரனிடமிருந்து செரிக்க முடியாது!அதை, நாம்தாம் சுய தேடுதலின்வழி புரிந்தாகவேண்டும். இதைவிட்டுவிட்டு,மே 18 இயக்கத்தின் திசையில் கொடிபிடிக்க முனையும் எந்தக் கபோதிகளினது கூற்றிலிருந்தும் நாம் எதிர்கால அரசியல் வாழ்வைக் கற்கமுடியாதென்பதை உணர்வுபூர்வமாக விளங்க முனையவேண்டும்.


இந்தப் புரிதலைச் சிதைப்பதில் புலிப்பினாமிகளது ஊடகமான ஜீ.ரீ.விக்கு(GTV) அதிக அக்கறையுண்டு.அந்தத் தொலைக்காட்சியினது இருப்பில் இன்னொரு சதி பின்னப்படுகிறது.அதை வாந்தியெடுத்தும்-எதிர்த்தும் புலிகளது புரட்சிகரவுறுப்புகள் புரட்சி சொல்லித் தமக்குள் எம்மை உள்வாங்க முனையும் சதி அரசியல், புலிகளை மீளவொரு சக்தியாக-புரட்சிகர அணியாக இனங்காட்டப்போகிறது.இது,அபாயகரமான எதிர்புரட்சிகர அணியாக நமக்குள் மலரும்போது அதைப் புரட்சிகரச் சக்தியாகத் தூக்கி நிறுத்த நமக்குள் ஆயிரம் பேர்வழிகள் வலம்வருவர்-பற்பல தளங்களிலிருந்து.



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.05.2010

Freitag, Mai 14, 2010

தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு

வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்...



"உச்சரிக்கப்படும் நிகழ்வொன்றில் ஊஞ்சலிடும் மூச்சு
உயிர்மத்தின் நிலைப்பில் இதயத்தைத் தேடும் வளி
ஒப்பாரிக்கு உணர்வென்ற முகமூடி
அருவத்துள் இடிப்பதற்கு நம்பிக்கை என்றொரு பாத்திரம்


ஓலத்தில் கிழிபடக் காலத்தின் முனைப்பு
மாமிசத்தின் பிராண்டடிலில் கற்பிதம்
தேசமாய் மொழியாய்க் கலையாய்
காயிழந்தேன் தமிழுக்காக..."




ன்று 13.10.2010 , ஜீரி வீ(G TV) செய்தித் தொகுப்பாளர் நரேன் முன்னாள் புலி எம்.பி. சிவாஜீலிங்கத்திடம் பிரபாகரன்தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பேட்டி எடுக்கிறார்.


பிரபாகரனது தாயார் பார்வதி அம்மாள் குறித்துப் பெரிய மனிதாபிமானிகளாக நடிக்கும் இந்த கேடுகெட்ட நரிகள், பார்வதி அம்மாளின் புதல்வன் "பாசிஸ்ட்" பிரபாகரனால் பழிவாங்கப்பட்ட எத்தனை பார்வதி அம்மாக்களையும்,அவர்களது வலிகளையும் கடந்த காலத்தில் பேசினார்கள்?


என்ன பெரிய மனிதாபிமானம் இந்த ப் பார்வதி அம்மாள் குறித்து...


எனக்குப் புரியவில்லை!


தேசமில்லாத தேசியம்:


தேசியத்தைச் சொல்லியோ அல்லது சுயநிர்ணயத்தைச் சொல்லியோ மீளவும் ,புலிப்பாணி அரசியலைப் புலிகளது அழிவில் தொடர விரும்பும் சமூகவிரோதிகளை நாம் இனங்கண்டாக வேண்டும்.இவர்கள், புரட்சிகரமான அரசியல் முலாம் பூசிப் புலிகளது மறுவடிவாமாக நமது மக்களுக்குள் ஊடுருவ முனைவது கண்டிப்பாக இனங்கண்டு முறியடிக்கப்படவேண்டும்.இல்லையேல் மீளவும் புலிப்பாணி அரசியலுக்காக மக்கள் செத்தாகவேண்டும்.





வன்னிப் புலிப் பாசிஸ்ட்டுக்கள் செய்த கொடுமைகளை, அங்கு வாழ்த மக்கள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.நான் சுவிட்ஸ்லாந்தில் நின்றபோது சந்தித்த "பார்வதி அம்மாள்" சொன்ன திடுக்கிடும் தகவல்: "பிரபாகரன் ஒரு சொறியன்-சர்வதிகாரி மட்டுமல்ல ஒரு மனநோயாளியுங்கூடவென்பது" அந்தத் தாய்கூறிய பொன்வரிகள்.


கேடுகெட்ட புலிகளது பாசிச நடாத்தை, சொந்த மக்களையே வதைத்தெடுத்தது.இந்த இலட்சணத்தில் அவனது தாய் பார்வதிக்கு மனிதாபிமானம் கேட்கும் புலிக்கயவர்களைக் கண்டிக்க எந்த நாய்க்கும் வலுவில்லை!இந்த நாய்கள் வன்னி அவலம் குறித்து எழுதும் எழுத்தாளர்களது கட்டுரையைப்படித்துவிட்டு மொழியிழந்து வாழும்போதும் நடிகைகளது வனப்பில் மயங்கத்தாம் செய்கின்றனர்.தமிழ்நாடு சென்று ரம்பாவைக் கல்யாணஞ்செய்யும் புலிப் பினாமிகள் இப்போது புலிகளுக்குப் பொன்னாடை போர்த்த"மே-18"வருவதற்குக் காத்திருக்கிறார்கள்!


இத்தகைய துரோகிகள்தாம் இப்போது பிரபாகரனென்ற கொடுங்கோன்மை மிக்க சர்வதிகாரிக்கும்,அவனது அடியாட்களுக்கும் நினைந்துருக விழாவெடுப்பதில்,தமிழீழ மக்களுக்கான உரிமை என்று புலம்புகின்றார்கள்.அவர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?


இக்காலத்தில் அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வைக்கப்படுகிறது.


எனினும்,புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் பினாமிப் புலிகளாக உலாவும் தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள், இப்போது, பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை-நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.


தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு:


புலிகளைக் காட்டிக் கொடுத்த நரிகள் "நாடுகடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தலை நடாத்திய கையோடு, மே 18, 2010க்கு இன்னொரு ரவுண்டு வருவதற்கான முன்னெடுப்புகளில் மும்மரமாகச் செயற்படுகின்றனர்.அழுகுரல்களினூடாகப் பணம் பண்ணப் பிணம் செய்தவர்கள், இப்போது பிணமானவர்களது வரலாறு பகிர்ந்து பணம் பண்ணப் பல முயற்சியில்...




புலன் பெயர்ந்த, புலம் பெயர்ந்து வாழும் தமிழ் வறுமைப்பட்ட ஜடங்கள் இன்னும் தாம் கற்றுக் குட்டிகள்தாமெனப் பகரும் செயற்பாட்டில் தமது வாரிசுகளைக் களம் இறக்கித் தம்மையும் சீரழித்துத் தமது வருங்காலச் சந்ததியையும் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி...


மாண்டுபோன தலைவரையும்,அவர்பின்னாலும்-முன்னாலும் யாருக்காகவோ செத்தவர்களை நினைந்துருகுவதால், ஒரு சமுதாயம் விடுதலை பெற்றுவிடுமென ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.


தடார் புடாலென"மாவீரர்"தாலாட்டும்,துதிப்பும் மீளத் தலையெடுக்கிறது.ஆனால்,தாம் தோற்றுப் போனதும்,தமது தலைவர் சரணாகிச் செத்ததையும் குறித்து எந்தவொரு ஆய்வும்-விமர்சனமும் செய்து,திருத்திக்கொள்ள இவர்களால் முடியவில்லை.கேடுகெட்ட தமிழ் வியாபாரப் புத்தியுடைய சமூகக் கிரிமனல்கள் இப்போது எங்கும்" தமிழீழ அரசு,நாடுகடந்த தமிழீழ அரசு"வெனப் புலம்பியபடி புலம் பெயர் சமூகத்தின் முதுகில் குத்தியபடி...இதற்கு ஏற்றபடி"பேராசிரியர்கள்"எனும் போர்வையில் உலாவும் சேரன்,உருத்திருகுமார் போன்ற பொறுக்கிகளும் சித்தாந்த வலுக்கொடுத்து தமது குடும்பங்களுக்குச் சொத்துச் சேர்த்தபடி?...




இன்றைய GTV யின் கருத்துப் பகர்வுக்கமைய,நிலவுகின்ற அனைத்துத் துயரமும் சிங்கள இனத்தின் இனவாதத்தால் நிகழ்வதாகச் சாமானிய மக்கள் நம்புவதற்குத் தயாராகிறார்கள்.மாவீரர்களுக்கு விழாவெடுப்பதால் வீரமுடைய தமிழ் மக்கள் என்றோ விடுதலை பெறுவதாகவும் மீளவும் மொழியப்படலாம்.ஆனால்,உலகத்தின் இன்றைய தெரிவில் இலங்கையின் அனைத்து அரசியல் நிலைமைகளும் மாறிவிட்டுள்ளதாகப் பேசப்படுகிறது. இலங்கையின் இன்றைய முரண்பாடுகள் கட்சி-சட்டவாக்கம்,பாராளுமன்றம்,இராணுவ ஆதிக்கம் எனப் பார்க்கப்படுகிறது.இவைகளைத் தாண்டிச் சிந்திப்பதற்கு நமது சிந்தனைக் கருவறையில் மாற்றுப்பார்வைகள்-உலகப் பொருளாதாரவுறகள் குறித்துக் கருவூலம் கருக்கட்ட முடியாதுள்ளது,இந்த ஜீ.ரிவீ (GTV)ஜெர்னலிசத்தால்!


இலங்கையின் அரசியலை, இலங்கையிலுள்ள சிங்களவர்களுக்குள்ளும்,அவர்களது இனவாதக் கொக்கரிப்புக்குள்ளும் அடக்கிவிட"சிங்களத் தேசம்"என்று அடைமொழியைப் இடைவிடாது பயன்படுத்துவதில், தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கு விடிவுதேடுவதாகப் பசப்புரைப்பதில் தமிழ் அரசியல் வியூகம் தனது இருப்பை நிலைப்படுத்துகிறது.இதை ஜீ.ரிவி போன்ற புலிகளது பினாமி ஊடகம் தொடர்ந்து வாந்தியெடுக்கிறது.


மறுபுறமோ,புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள், இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!



இதை எங்ஙனம் முறியடிப்பது?:



1: புலிகளது அரசியல் நடாத்தையை விமர்சனத்துக்குள்ளாக்குவது,



2:புலிகள் கூறிய தமிழீழத்தை மீள் பிரிசீலிப்பது,



3:தமிழீழம் என்பதன் பொய்மைக்குள் பலியெடுக்கப்பட்ட மக்களையும்,அவர்களது இழப்புகளையும் குறித்து மிக நீண்ட அரசியல் விவாதத்தைத் தொடர்வது,


4: தமிழீழம் எனும் பொய்க் கோசத்துக்கு எதிரான அரசியல் தீர்வை முன்னெடுக்கும் முகமாக ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைப்பது,அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை இலங்கைப் பூர்ச்சுவா அரச சட்டவரைவுக்கொப்பக் கட்டியெழுப்புவது,அதன்வழி சிங்களப்பாட்டாளியவர்க்கத்தோடு இணைந்து பொருளாதாரவாதப் போர்களோடு சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை இணைப்பது,



5:இலங்கை தழுவிய புரட்சிக்கான முன் நிபந்தனைகளை உருவாக்கும் முகமாகச் சிங்களப் பாட்டாளிய வர்க்கத்தை அணுகுவதும்,புரட்சிகரக்கட்சிக்கான பணிகளை அவர்களோடு இசைந்து ஆற்றுவதும்,அந்நியச் சக்திகளது பொருளாதார இலக்குகளுக்கு எதிரான போராடாட்டங்களைச் சிங்களப்பாட்டாளிய வர்க்கத்தோடு இணைந்து உள்ளக-மற்றும், வெளியக அரசுகளுக்கு எதிராகக் கட்டியமைப்பதும் உடனடித் தேவைகளாகும்.


இவை உடனடித்தேவையாகத் தமிழ்ச் சமுதாயத்தில் இருப்பினும்,


அ): நாம் இலங்கையில் வாழும் மற்றைய சிறுபான்மை இனங்களான மலையத் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களோடான உறவை மேலும் வலுப்படுத்தும் முகமாக அவர்களது அரசியில் கோரிக்கைகளை எமது வரலாற்று முரண்பாடுகளோடு உள்வாங்குவதும், அதன் முதல் தெரிவாக அவர்களது அரசியல் அபிலாசைகளை எமது அரசியல் அபிலேசைகளோடு இணைத்துக் கை கோற்பதும் அவசியமாகிறது.


இ): இதன் தொடராக முதலில் நாம் புரிந்துகொள்ள முனைவது இதுகாலவரையான புலிகளது தமிழீழப்போராட்டதை அரசியல்ரீதியாக விளங்க முற்படுவதும் , அதை எங்ஙனம் புலிகள் தவறான அரசியல் தெரிவினூடாக முன்னெடுத்துக் "கொலைக்கள அரசியலை" நமக்குள் திணித்தார்கள் என்பதே அவசியமான அரசியலை முன் தள்ளுகிறது.


இது குறித்து இப்போது மெல்லக்கசியும் எழுத்துக்களை மிக நுணுக்கமாக அணுகுவது,அதன் சமூக உளவியலைத் தறுவாகக் கற்பது(இதன் அர்த்தம் இதுவரை புலிக்காக வக்காலத்து வாங்கிய பொதுபுத்தி மக்களது அழிவில் எடுக்கும் அரசியல் நகர்வு என்பதாகும்(இந்தப் பொது புத்தி சகல மட்டத்திலும் வெகுஜன அரசியல் மற்றும் வர்க்க நலன் என்றாக விரியும்.) ).


இதை மறுத்து இயங்க முனையும் புலிகளது அரசியல்நீட்சி தமிழர்களுக்கு உரிமை வழங்க வேண்டுமென இந்தியா வாந்தியெடுப்பதாக நமக்குச் செய்தி சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரச நிதியோடு தமது கடமையைச் செய்யும்போது,இன்னொரு புறம் உலக ஆதிக்க சக்திகளது தயவில் இயங்கும் குள்ள நரிகள் நமக்குப் புரட்சிப் பாடம் நடாத்துகின்றன.


இந்தக் கோலத்தில் தமிழ் மக்களது அரசியல் வாழ்வோ படு பாதளாத்தில்.என்ன செய்ய முடியும்?


புலத்துப் புலிப் பினாமிகளது வலை:


புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புலத்துப்புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள்(நாடுகடந்த தமிழீழ அரசு) மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது என்றவுண்மை புரியப்பட வேண்டும்!


தமிழ் மக்களை ஒட்ட மொட்டையடித்துச் சுற்றிய புலம்பெயர் புலித் தேசியவாதமதனது ஈவிரக்கமற்ற படுகொலை அரசியலூடே படுபாதகமான துரோகத்தைத் தியாகமாக்க முனையும் இன்றைய நிலையில், நாம் மிகக் கெடுதியான புலத்துப் புலிப்பினாமிகளின் பரப்புரைக்கு இரையாகுவதா இல்லை அதை மீறித் தமிழ்பேசும் மக்களது அரசியல் விழிப்புணர்வைத் தொடர்ந்து விருத்தியாக்கிப் புலிவழித் தேசியத்தை மறுத்துப் புதிஜனநாயகப் புரட்சியை இலங்கையில் தொடர்ந்து நடாத்துவதா என்பதைப் புலிகளது தவறுகளிலிருந்து கற்பதா என்று பாரிய நெருக்கடிக்குள் தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல முழு இலங்கைவாழ் இனங்களும் எதிர் கொள்கின்றன இன்று.


புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய காலத்தில் "புரட்சி-ஜனநாயகம்"என்பதெல்லாம் ஆளும் வர்க்கத்துக்குச் சேவை செய்யும் நரிகளது மந்திரமாக இருக்கிறது.இதைத் தோலுரித்துக் காட்டவேண்டிய சூழல் நெருங்குகிறது.எனினும்,காலம் அதற்கான தகவமைப்பைச் செய்யுமென நம்புகிறேன்.நமது மக்களது குருதியில் ஆதாயமடையும் புலத்துப் புலி அரசியல் தரகர்களைக்கடந்து-அந்நியச் சக்திகளைக் கடந்து, நாம் புரட்சிகரப்பணியைச் செய்தேயாகவேண்டும்.மக்களது விடிவுக்காக அவர்களே புரட்சிகரமாக அணிதிரளவேண்டிய இன்றைய சூழலில்,நாம் மேலும் எமது காரியத்தைத் தொடர்கிறோமா?


எமக்குள் முட்டிமோதிச் சுருங்கிய நாமோ நமது கைகளில் விலங்குகளை நாமே தயாரித்துப் பூட்டியுள்ளோம்.


இன்னும் விபரமாகச் சொல்வதானால், இயக்கவாத மாயை கடந்தும்,தத்தம் தலைவர் துதியைக் கடந்தும்,தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைக்காது, அவர்களது தோளோடு தோள் சேர்ந்து இலங்கையில் சுயநிர்ணயவுரிமையைப் பெறுவதற்கும், அதனூடாக இலங்கை தழுவிய சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் பாடுபடத் தக்க வியூகம், குழுவாதம் கடந்து நாம் ஒருமையுறும் தருணத்தில் மட்டுமே வாய்க்கும்.


இல்லையேல்,மே 18க்கு ஓலமிட்டுப் பணம் பண்ணும் புலத்துப் புலிப் பினாமிகள் தமது அரசியலைத் தொடரப் புரட்சிகரப் பாட்டும் தமது எடுபிடிகளது வழியில் சொல்ல, நாம் அவர்களையும் நம்பி ஏமாந்து அனைத்தையும் இழந்து,எமக்குள்ளே குட்டுப்பட்டு குடி கலைந்து...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
14.05.2010

Dienstag, April 27, 2010

மே:2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்.

பெரும் விளம்பரத்துக்கும்,விளக்கவுரைகளுக்கும் நடுவில் மெலிதான மாற்றுச் சலசலப்பு-சிறு குறிப்பு!



புலம் பெயர் புலித்தலைமை:


ன்னியில் புலியின் இராணுவக் கட்டமைப்பைச் சிதறடித்தவர்கள்,அதற்கு இசைவாக இயங்கியவர்கள் புலம்பெயர்வுப் புலிக்கூட்டத்தின் மேல்மட்டப் பேச்சாளர்கள்-தலைவர்கள்.இவர்கள் பிரபாகரனுக்குக் காடாத்துப் பண்ணினார்களோ இல்லையோ தமிழ்பேசும் இலங்கைவாழ் மக்களுக்குத் தொடர்ந்து காடாத்தி வருகிறார்கள்.இது,கவலைக்குரிய விடையமல்ல-கண்டிக்கப்படவேண்டியது.


இன்றைய புலம்பெயர்வு மக்களது வாழ்சூழலில் தேசத்தைச் சொல்லி-தமிழைச்சொல்லித் தட்டிப்பறிப்பதற்குத் தோதான புலியினது இராணுவவாதப் போராட்டம் இல்லையென்பதால், அதன் மாற்றாகவும், அந்த மாற்றின் தேவையை உணர்த்துவதாகவும், "தேசம் கடந்த தமிழீழ அரசுக்கான"தேர்தல் அதி உச்சமான கோணங்கித்தனமான விளம்பரத்தின்வழி புலம் பெயர் மக்களது புலன்களைப் பேர்த்தெடுப்பதில் சந்தர்ப்பவாதப் புலிகள் உருத்திரகுமாரனின் குரலின்வழி இயங்குகிறார்கள்.



அடிமட்டத்துத் தமிழனுக்கும்,உலகத்தின் எந்த மூலையில் அவன் வாழ்ந்தாலும் அவனது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் ஒரே அரசு"நாடுகடந்த தமிழீழ அரசு"எனப் பொய்ப்பரப்புரைகளைச் செய்யும் இந்த விசமத்தனமான புலம்பெயர் புலிப்பணப் பேய்கள், புலித் தளபதிகளையும் உள்ளடக்கி, வரும் மே 18 இல் பிரபாகரனுக்கும் அவரது போராளிகளுக்கும் ஞாபகார்த்தம் வேறு செய்வதற்கான முன் நிபந்தனைகளிலொன்று "நாடுகடந்த அரசு"நிர்மாணிப்பது.அங்கே, அதன் அமைச்சர்கள்,பிரதமர் எனப் பொல்லாத பித்தலாட்டம் மக்களது குரல்வளைகளைத் தறித்துப் பணம் பண்ணும் முக்கிய நோக்கில், மே 18 நாடகம் அரங்குக்குவர ஒரு அரசினது முன்னெடுப்பாக இந்த செயற்பாடு களமிறங்குகிறது.


தட்டிக் கேட்பார் யாருமில்லை:


யாரும் பொதுப்படையான இவர்களது அதிகாரங்களை,ஆதிக்கத்தை,இதன் வாயிலாக எழ முனையும் அந்நியத் தேசங்களுக்கு ஆதரவான கருத்தியல் அராஜத்தைக் கண்டிப்பதாகவில்லை.புலிப் பினாமிகள் தமது கைகளிலுள்ள மக்களது சொத்தைக் காப்பதற்கெடுக்கும் முயற்சியில்"நாடு கடந்த தமிழீழ அரசு"வெனப் பரப்புரை செய்யும் பம்மாத்தையும்,அதற்கான தேர்தல் நாடகத்தையும் குறித்து எந்தப் பெரிய மார்க்சியனும் வாயே திறக்கவில்லை.மாறாகத் தமது விருப்பங்களுக்கேற்ற "தேர்வுகளோடு" கருத்தாடுகிறார்கள்.ஈழத்தை ஆதரிப் போரும்,ஆதரிக்காதோரும் தமிழ் மக்கள் சமூகத்துள் காலாகாலமாக நிலவிய-நிலவும் பண்பாட்டு இடைவெளிக்குள்(Cultural distance)சிக்குண்டுபோய் இலங்கையில் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளில் பண்பாட்டு மௌனத்தை(Cultural silence)கொண்டுள்ளார்கள்.இது எல்லாவித அதிகாரங்களுக்கும் வாய்பேசா மௌனியாக இருந்துவிட்டுத் தமது இருப்பை அசைகின்றபோது(Identity crisis) கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்த நபரைப் போல் சமூகத்தை எதிர்கொள்ள முனையும்.இதுவே இலங்கை அரசால் கட்டவிழ்த்து விடப்படும்தேர்தல்மோசடி-கட்சிசார் அராஜகத்தைப் புதிதாக நடைபெறும் செயலாக வர்ணிக்க முனைகிறது.இங்கே, இதன் தோற்றுவாயும் வர்க்க நலனும் திறம்படப் புரியவில்லை! இத்தகைய கருத்தாடல்களேதாம் இன்றைய புலம் பெயர்வு மக்களை மிக வேகமாக வேட்டையாடுகிறது.ஜீ.ரீவீ இதற்காகப் புலம்பெயர்வுப் புலிகளது பணத்தில்(இப்பணம் மக்கள் சொத்து) கணிசமான மக்களை முட்டாளாக்க இயக்கப்படுகிறது.இந்த இடருக்குள் உள்வாங்கப்படும் எமது மக்களது சுய தெரிவு என்ன?



மீளவும்,"மேற்குலக நாடுகளின் தயவில் நமது மக்களுக்குச் சுயநிர்ணயவுரிமை கிடைக்கப்பெறும்.அது,நாடுகடந்த அரசினது மூலம் மேற்குலக நாடுகளை வளைத்துப்போடமுடியும்"எனப் பொய்யுரைக்கும் இந்தப் பணப் புலிகள், தமது இருப்பை நிலைப்படுத்தவும்-பதுக்கிய செல்வத்தைக் காப்பதற்கும்,தொடர்ந்த புலம் பெயர்வுத் தமிழரிடம் பணம் கறக்கவுமாக இந்தச் சோடினையில்"நாடுகடந்த தமிழீழ அரசின்"தேவையை வற்புறுத்திக்கொண்டு கருத்தாடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்பார் யாருமில்லை!


நாடு கடந்த தமிழீழ அரசு:


புலிகளது இராணுவலிமை செய்யாததை இந்த "நாடுகடந்த அரசு"ஜனநாயகவழியில் செய்துமுடிக்குமெனவும் சொல்லப்படுகிறது.இத்தகைய பரப்புரைகளின்பின்னே அணிதிரளும் சக்திகள் பழைய புலிப்பினமிகள்தாம்.குறிப்பாகச் சொல்லத் தேவையில்லை.அதே முகங்கள்-அதே சேட்டைகள்.இப்போது நடைபெறும் வானொலி-தொலைக்காட்சி விவாதங்களும் அதுசார்ந்த அரசியல் காய் நகர்த்தலும் தமிழ்மொழி, இனம்,அரசியல்,சுயநிர்ணயவுரிமை,தமிழ்மக்கள் நலம் சார்ந்த பொருண்மிய வாழ்வை,தமிழ்ப் பண்பாட்டை,வரலாற்றை அனைத்தையும்"நாடுகடந்த தமிழீழ அரசு"காக்கும்-வென்றெடுக்கும்,அரசியல் முன்னெடுப்பாகக் காண்கிறது.இந்தத் தமிழ்ஊடகங்கள் அல்லது விவாதங்கள் நமது வாழ்வுரிமையை எப்போதும் தமது வருவாய்க்காக விற்கத் தயாராகிறது.இது தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கும் ,திராவிட முன்னெடுப்புக்கும் உள்ள அதே நோக்கில் செல்லுகிறது.திராவிட இயக்கங்கள் இன்று சீரழிந்த இயக்கங்களாக மூலதனத்துக்குள் முடங்கிய மாதிரித்தாம் புலிகளும் அவர்கள் பின்னால் வீணியூற்றியபடி அலையும் மேற்குலக அரசுகளது ஏஜென்டுகளும்(சேரன்-உருத்திரகுமார் போன்ற சந்தர்ப்பவாதிகளும் இன்னபிற புலிப் பினாமிகளும்)முடங்கியுள்ளார்கள்.


இதுவரைகாலமும், ஏகத் தலைவரும் அவரது போராளிகளும்-ஆயுதமும் தமிழீழம் பெற்றுத் தந்துவிடுவார்கள்-தந்துவிடுமெனப் பசப்பியவர்கள் இப்போது உருத்திரகுமாரனின் உடும்புப்பிடியான ஜனநாயக வழி"நாடுகடந்த அரசு"தனித் தமிழீழத்தை இலங்கையில் மேற்குலக அரசுகளின் தயவோடு பிரித்துவிடுமெனப் பரப்புரைகள் எங்கும் ஒலிக்க விடுகிறார்கள்.இந்தப் பெரிய சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்பதற்கோ அல்லது இவர்களது பொய்யான சுரண்டலை அம்பலப்படுத்தவோ எந்தப் பெரிய "புரட்சிக்காரர்கள்"தம் போராட்ட இலக்கும் தீர்மானஞ் செய்வதாகவும் இல்லை!எல்லாம் வல்ல பிரபாகரன் எப்படியும்-எப்போதாவதும் வெளியே வந்துவிடுவாரெனப் புலம்பும் இந்தக் கள்வர் கூட்டத்தை நம்பிக்கிடக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களும் மே 2 ஆம் தேதி தமது பொன்னான வாக்குகளை அளித்துத் தேசம் கடந்த தமிழீழத் தேசிய அரசை நிர்மாணிக்கப் போகிறார்கள்.



இதன்சூத்திரதாரிகளான மேற்குலக நலன்சார் குழுக்கள்-நபர்கள் அதன் ஜீவனகாலத் தலைவர்களாகவும்-பேச்சாளர்களாகவும் வலம்வந்து, நமது மக்களது குருதியைக் குடித்தே உயிர் வாழ்வார்கள்.காலகாலத்துக்கும் தமிழ் பேசும் மக்களை மடையர்களாக்கி அந்நியத் தேசங்களுக்கு அடிமையாக்கிப் பிழைக்கும் தமிழ் மேட்டுக்குடிக் கல்வியாளர்கள், தம்மைத் தேசியத்தின் தொட்டிலில் கிடத்தியும் அழகு பார்க்கிறார்கள்.


அவர்களது ஏஜென்டுகள் புரட்சி-தேசியம்,புண்ணாக்கு என எல்லாவகைப் புரட்டல்களையும் மக்களைச்சொல்லிச் செய்துவரும்போது"நாடுகடந்த அரசினது"குத்தகைக் காரர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை!எனவே,அவர்கள் தொலைக்காட்சியில்-வானொலியில் சொல்வதே மந்திரமாகும்.அங்கே,உலகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை வந்துவிடப் போகிறது.முப்பது வருடமாகப் பிரபாகரனுக்குத் தெரியாத மந்திரமெல்லாம் சேரனுக்கும்,உருத்திரகுமாருக்கும் தெரிந்தே இருக்கு.இவர்கள் அப்படியே பிரபாகரனது சாதகத்தையும் சொல்லிவிடலாம்.ஆனால்,அதைமட்டும் சொல்வதற்கு அவர்கள் தயாரில்லை.அங்கேதாம் அவர்களது இருப்பே தங்கியுள்ளது.


தெரிந்துகொள்ள வேண்டி உண்மைகள்:


இந்த மோசமான பேர்வழிகள் இட்டுக்கட்டும் நரித்தனமான நாடகங்கள் பொய்யானவை-புலிகளின் பினாமிகள் மக்களை மேலுஞ் சுரண்ட அனுமதிக்கும் நடவடிக்கை இது.இவர்கள் சொல்வதுபோன்று "நாடு கடந்த தமிழீழ அரசு"என்பது தமிழ்பேசும் மக்களது உரிமையை இலங்கையில் குழிதோண்டிப் புதைப்பதில் மேற்குலகத் தோடிணைந்து மிடுக்காக இயங்கும்.ஏனெனில்,நாம் ஒரு அரச வடிவத்துக்குள் வாழ்ந்த காலங்கள் மலையேறிவிட்டென.இன்றைய காலங்கள் "அரசுகள்"என்ற அமைப்பின் காலமாகும்.நம்மைப் படாதபாடு படுத்தும் "அரசியல்" தனியொரு தேசத்தின் ஆளும் வர்க்கத்தின் தேர்வு இல்லை.அஃது, தேசங்களின் தேர்வுகள்,தெரிவுகள்,திட்டங்களால் உருவாகப்பட்டுள்ளது.இங்கே, நடக்கின்ற "அரசியலானது"தமிழ் மக்களின் எந்த நலனிலும் அக்கறையற்ற படு கேவலமான அரசியலே எல்லாத் தரப்பாலும் முன்னெடுக்கப் படுகிறது.புலம் பெயர் தேசங்களில் நடக்கும் எந்த அரசியல் வினையும் இலங்கையில் வாழும் தமிழருக்கு எப்பவும் உதவப் போவது கிடையாது.இதுவரை அது உதவியதாகவும் வரலாறு இல்லை என்ற உண்மையும் நாம் உணர்ந்ததே!அத்தோடு,புலம்பெயர் புலிகளிடம் குவிந்துள்ள அதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் செல்வங்களும் மேற்குலகத் தமிழ் அடிவருடிகளிடம் பாரிய அதிகாரச் சுவையை நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.

இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல பொய்யுரைப்பின்வழி சேரனும்,உருத்திரகுமாரும் அவர்களது எஜமானப் புலிப்பினாமிகளும் "நாடுகடந்த தமிழீழ அரசு"க்கான தேர்தலில் அதிகப்படியான நேரமெடுத்து விளம்பரஞ் செய்கிறார்கள்-விளக்வுரை செய்கிறார்கள்.இவர்களது இந்த நடாத்தையானது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் உதவவே முடியாது. சேரன்போன்றவர்கள் கடைந்தெடுத்த சமூக விரோதிகள் என்பது நாம் கண்ட வரலாறு.


வன்னியில் மக்களை வேரோடு புரட்டிய புலியின் இராணுவ ஜந்திரம் ,வன்னியில் சிதற, இப்போது, அதன் அரசியல் தலைமையின்வழி இலங்கைவாழ் தமிழர்களை நடாற்றில் தள்ளிவிடுகிறது.ஒவ்வொரு முறையும் மக்களுக்கு யுத்த அழுத்ததையும் குண்டுகளையும் பரிசாக்கியவர்கள் இன்று அந்த மக்களுக்காக எந்த உதவிகளையுஞ் செய்யவே இல்லை.எனினும்,தமது புலி அரசியலின்வழி மேற்குலக அரசுகளது எடுபிடிகளாக இயங்க முனையும் இன்றைய சந்தர்ப்பத்தில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு நடிவடிக்கையும் இலங்கைத் தமிழர்களது பொதுவாழ்விலும்-தனிப்பட்டவாழ்விலும் பாரிய தாக்கஞ் செய்யவே செய்யும்.


இலங்கைப் பாசிச அரசினது கெடுபிடிகள், பொருளாதார மற்றும் இராணுவவாதச் சிக்கல்களது கிடுக்குப்பிடியாக அந்த மக்களைப் பதம் பார்க்க இவர்களே காரணமானவர்கள்.இதை மறைப்பதற்கான முறைமைகளில்"தமிழ்-தேசியம்-நாடுகடந்த அரசு"எனும் மாய மான்கள் முதன்மையான காரணிகளாக இருக்கும்.இதுவே,இதுவரை சேர்த்த மக்களது நிதிகளைச் சுற்றவும் உதவிக்கொள்ளும். இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.இது தனது மகளைத் தானே புணரும் அப்பனின் மனப்பாண்மை போன்று நமது அரசியல்-இயக்கவாதிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது.


புலிகளது பொய்யுரைக்கு மயங்கிய புலம்பெயர் மக்களில் பலர், தத்தமது நோக்கு நிலையிலிருந்து இந்த அதிகார மையங்களின்(நாடுகடந்த அரசு,தேர்தல்-சேரன்,உருத்திரகுமார்) "நன்மை தீமை" என்பவற்றை நோக்குகிறார்கள்.


இலங்கையில் வாழும் தமிழ்பேசும் அப்பாவி மக்கள் எந்தவுரிமையுமின்றி இத்தகைய அதிகாரங்களுக்குள் கட்டுண்டு தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு மௌனித்துள்ளார்கள்.இந்த இழி நிலையில் மக்கள்தம் உயிரைத்தினம்இராணுவாத இலங்கை அரசபாசிசவொடுக்குமுறைக்கு- அராஜகத்துக்கு இரையாக்க வேண்டியுள்ளது. மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரத்துவத்துக்கான தேர்தல்களால்-நாடுகடந்த தமிழீழ அரசு நிர்மாணிப்புகளால் ஆளும் வர்க்கங்கள் தத்தமது நலனைக்காத்துவரும் இந்த "மக்கள் விரோத அரசியலை" எங்ஙனம் முறியடிப்பது?



ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
27.04.2010

Donnerstag, April 22, 2010

லீனா மணிமேகலையின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு

லீனா மணிமேகலையும்,அவரது கவிதை மொழியும்-காரணமும்

-சிறு குறிப்பு.

லீனா மணிமேகலை இரண்டு கவிதைகள் மூலம் பெரும் அடிபாட்டுக்குள் கட்டாயமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இரண்டு வகையான தரப்பினரால் அவர் கவிதைகள் பிய்த்தெறியப்படுகிறது.கூடவே,அவரும் மிக மோசமான பாலியல் நடாத்தையில் பிறழ்வுடையவராகவும் இவ்விவாதங்கள் குறிப்பெழுதுகின்றன.

லீனாவின் கவிதை எவ்வளவுக்கு அவர்களால்"மோசமான"தென விமர்சிக்கப்படுகிறதோ அதேயளவுக்கு அவர்கள் லீனாவின்மீது சுமத்தும் பாலியல்சார்ந்த(விபச்சாரியென அர்த்தப்படும் தொனி)நடாத்தைகள் எமக்குச் சகிக்க முடியவில்லை.

இங்கே,இந்த மகான்களுள் லீனாவின் கவிதைகளில் பாலியல்சார்ந்த சொற்கள் அதிகமாகவும்,வாசிக்க முடியாத கொச்சையான மொழிகள்-தூஷணங்கள் கிடப்பதாக ஒருசாரரும்,மறுசாரர் மார்க்சிசத்தையும்,அதன் மூலவர்களையும் கூடவே தொழிலாள வர்க்கத்தையும் கொச்சைப்படுத்தும் மேட்டுக்குடி வக்கிரம் மலிந்துள்ளதாகவும் குற்றப் பத்திரிகை வாசிக்கின்றனர்.

இந்தச் சமூதாயத்தில்,இதுவரையான அனைத்துச் சமூக நடவடிக்கைகளிலும் கட்டமைத்த புனிதப் பிம்பந்தாண்டி மனிதர்கள் தத்தமது சுயநலத்தோடு காரியமாற்றியுள்ளனர்.இவர்கள் எப்போதும் தமது நியாயவாதங்களை மக்கள் நலனெனக்கொண்டிசம்பி இறுதியில் தமது தேவைகளை மிகக் கறாராகத் தகவமைத்துத் தக்கவைத்துள்ளனர்.இதன் தர்கம் என்னவெனில்,இதுவரையான புரட்சி-விடுதலை குறித்த அனைத்துத் தளத்திலும் இத்தகைய நிலைமைகள்மலிந்தே காணப்படுகின்றன.

மார்க்சையும்,லெனினையுஞ் சொல்லிக்கொண்டு மக்களை உயிரோடு வேட்டையாடுபவர்களும்,அதே மார்க்சையும்,லெனினையும் எதிர்த்தபடி மக்களை வேட்டையாடுபவர்களையும் நாம் காலவெள்ளத்தில் மூழ்கிக் காண்கிறோம்.இங்கே,"உண்மையான"புரட்சிகரக்கட்சி போலி மார்க்சியார்கள்-கட்சி-எதிர் புரட்சிக்காரர்கள் என்று நியாயம் சொல்லும்போது, இத்தகைய நடாத்தைகள் வேறொரு திசையை நோக்கித்தள்ளப்படுகிறது.அத்திசை பெரும் பாலும் பாதிப்புடையவர்களுக்கு நீதி கிடைப்பதற்குப் பதில் அவர்களைக் கணக்கிலெடுக்காத சமூக யதார்த்தத்தை அவர்களது விழிமுன் நிறுத்தி விடுகிறது.

லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளிலும் பாதிப்புக்குள்ளான பெண்களது குரல் ஒலித்து ஒதுங்குகிறது.



இன்றுவரை இந்தத் தமிழ்ச் சமூகத்தின் சமூக அசைவியக்கமே வெறும் போலித்தனத்துடனும்,கபடத்தனத்தடனும்தாம் இயங்குகிறது.இந்தச் சமூக அமைப்பின் முதலாளியச் சாக்கடையை துப்பரபு செய்வதாகவும்,மாற்றியமைப்பதாகவுஞ்சொன்ன எத்தனையோ கொம்பர்கள் இறுதியில் அந்தச் சமூகத்தையே சாகடித்துத் தமது நலன்களை அறுவடை செய்தார்கள்.

இதற்கு ஐந்தொகை அவசியமற்றது.

புரட்சி,பெண்விடுதலை-திராவிட நாடு கேட்டவர்கள் முதல்பெரியார் சார்ந்து கொடிபிடித்தவர்கள்-ஈழவிடுதலைப் போராட்டஞ் செய்தவர்கள் வரை, எங்ஙனம் மக்கள்-பெண்கள்மீது விரோத அரசியல் செய்தனரென்பது-நாம் அறிந்த-கதைகள் ஏராளம்.சமூகத்தில் எத்தனையோ விரோதப் போக்குகள் ஒவ்வொரு பெயராலும் நிகழ்ந்தே வருகிறது.

பாதிப்புக்குள்ளான பெண்ணினது நிலையிலிருந்து-பழிவாங்கப்பட்ட பெண்ணினது நிலையிலிருந்து புரிந்துகொள்ளத் தக்க இருகவிதைகளை லீனா எழுதியுள்ளார்.இதை லீனா மணிமேகலை எழுதிவிட்டார் என்பதற்காக அதன் உண்மையான நியாயத் தர்க்கம் இல்லாது போக முடியாது.சமூகத்தில் மகான்களையும்,லீனா மணிமேகலை,மற்றும் நம்மைப்போன்றோரையும் இருத்தி வைத்திருப்பது இச் சமுதாய நியாயவாதங்கள்தாம்.எமக்கு நல்ல உதாரணமாக நம்முன் இருப்பது கனகி புராணம்.யாழ்ப்பாணியச் சமூத்தின் இரட்டைத்தன்மையை-ஆணாதிக்க வன்மையை,சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்ணைப்படுத்திய பாடுகளை அறிய கனகி புராணம் நமக்கு நல்ல உதாரணம்.

//நடந்தா ளொரு கன்னி மாராச
கேசரிஇ நாட்டிற் கொங்கைக்
குடந்தா நசையஇ வொயிலா
யது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார்; சந்யாசிகள் யோகம்
விட்டார்; சுத்தசைவரெல்லாம்
மடந்தானடைத்துச் சிவ
பூசையும் கட்டிவைத்தனரே.// கனகி புராணம்-3

லீனாவின் புராணம் அதை எவ்விதத்திலும் விஞ்சவில்லை.அதை எழுதியது ஆணாகவும்,இதை எழுதியது பெண்ணாகவும்-அப்பெண் இருபத்தியொராம் நூற்றாண்டில் வாழ்பவளாகவும் இருக்கும்போது யோனிமுடியை பிய்த்துப் போடுவதும் சுலபமாகத்தான் இருக்கும்.

என்னுடைய கேள்வியெல்லாம், பெண் உலகம் பூராகவும் ஏதோவொரு காரணஞ்சொல்லி ஒடுக்கப்படுகிறாள்-பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுகிறாள்.அதற்கு எந்த நிறமும்-எல்லையும் கிடையாது.சமீபத்தில் திருச்சபைகள் சிறுவர்களையும்-சிறுமிகளையும் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்ற கடந்தாகாலம் நமக்குமுன் விமர்சனமாகிறது.அங்கே,ஆயிரக்கணக்கில் நடந்த பாலியல் வதைகள் ஜேர்மனியச் சமூகத்தில் இப்போது கிழவிகளாக இருக்கும் அன்றைய குமரிகளது தலைவிதியாக இருந்திருக்கிறது.அவர்கள் தமது வலியைச் சொல்லமுடியாது தவித்தபோது ஒரு கலகக்காரியின் அம்பலப்படுத்தலுக்குப்பின் ஆயிரம் அபலைகள் பாலியற்றுற்பிரயோகம்குறித்த கதைகள் காவி வீதியெங்கும் போர்க்கொடி தூக்குகின்றனர்.இது,பரவலாக நடந்து முடிந்தகதை.ஆனால்,தமிழ்ச் சமூகத்தில் பெண்பாதிப்படைந்தும் தனது வலியைப் பேசாது இருக்கும்போது இந்த லீனா அதுகுறித்துப் பேசும்போது சொல்லடிபடுவது எதனால்?இதுவே,எனது கேள்வி.

எமது சமூகத்தில் புரட்சி பேசியவர்கள்,பெண்விடுதலைக்காகக் குரல்கொடுதவர்கள்,ஈழவிடுதலை செய்தவர்களெனப் பல்லாயிரம் ஆண்கள்,பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டிக்கொண்டனர்.இவர்கள் பேசிய பசப்பு வார்த்தைகளை லீனாவின் குரலுக்குள் இனங்காணத் தவறும் புனிதம் பொய்யானது.

இன்றுங்கூட நண்பனென வீட்டுக்குள்வருபவன் நாளை பொண்டிலையே கடத்திச் செல்பவனாகப் புலப்பெயர்வு வாழ்வில் தினம் ஒரு குடும்பஞ் சிதைந்து போகிறது.குடும்பங்கள் குலைவது முதலாளியத்தைத் தகர்ப்பதற்கென்றும் இவர்கள் சொல்வார்கள்.இலக்கியச் சந்திப்புச் செய்தவர்களில் எத்தனைபேர்கள் இத்தகைய பாலியற் சுரண்டலில் பெண்விடுதலைகண்டனர் என்பதைப் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசினாற்றாம் நாம் உண்மைகளைக் கண்டடைய முடியும்.அதுவரையும் ஊகம்தாம்.

லீனா கவிதையெனப் பகர்ந்தது பெண்ணின் ஏமாற்றம்தாம்.புரட்சி-விடுதலைபேசியும்,ஆத்மீகம் பேசியும் எத்தனையோ பெண்களைச் சீரழித்து அவர்களது விருப்பின்றி அவர்களைச் சுரண்டியதை புரட்சியால்-விடுதலையால்-இறைவனால் சமப்படுத்தியவர்கள் குறித்து லீனா புனைந்த மொழி அத்தகையவர்களது கயமையைவிடக் குற்றமானதா?

மார்க்சையும்,லெனியையும் சொல்லித்தாம் பலர் பெண்களைப் பாலியற் சரண்டலுக்குள் தள்ளினார்கள்.இந்த முதலாளியச் சமூகமோ பாலியலைப்பண்டமாக்கிப் பெண்களைச் சந்தையில் விற்கும்போது அதை நுகர வக்கற்ற போலித் தோழர்கள்-புரட்சிக்காரர்கள் அப்பாவித் தோழிகளைத் துளைத்தெடுத்தனர்.அவர்களது குரலாக லீனாவின் குரலுக்கு முகம் உண்டு.

எனவே,லீனாவின் குரலுக்குள் இருக்கும் இன்னொரு முகத்தையும் காணத்தவறுது மார்க்சிய-புரட்சிகர அணுகுமுறையாகாது.

லீனா எழுதுகிறார் எப்படியென்று பாருங்கள்:

"நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்
என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது
நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
வன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்"

இதில்உண்மைகள் இல்லையா?அல்லது,இந்தவுண்மைகளை லீனா பேசப்படாதா?

தமிழ்ச் சமுதாயத்திடம் மட்டுமல்ல இந்தப் போலித்தனம் விழித்திருப்பது, போப்பாண்டவரே மன்னிப்புக் கேட்கும் நிலைக்காகிய, மேற்குலகத்திடமும் இந்த மூடுதிரை போலித்தனம் விழித்தே இருக்கிறது.அது,மட்டுப்படுத்த விரும்பும் இடங்களில்மட்டுமே, தமிழ்ச் சமூகமும் மற்றைய சமூகங்களும் வேறுபடுகிறது.தமிழ்ச் சமுதாயத்திடம் முற்றுமுழுதாகப் "பெண்மை-தூய்மை" எனக் கொடிகட்டிப்பறக்கும்.ஆனால், அங்கேதாம் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது அதீதமாக மலிந்து கிடக்கிறது.

பாலியல் பலாத்தகாரம் எப்படி நிகழ்ந்ததெனப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரிக்கும் நீதீவான்கள் மலிந்த நமது சமூகத்தில் இந்த லீனாவையும் அத்தகைய நிலைகுட்படுத்தும் தருணம் மலியவே செய்யும்.

"யோனி,
ஆண்குறி,
விந்து"

குறித்த ஆய்வுகளைவிட, இவைகளுக்காகப் பலியாக்கப்படும் மனிதமனங்கள்குறித்து யோசிப்பது நன்று.

தமிழ்ச் சமூகத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முனைந்தால் அல்லது புரட்சி பேசிப் பாலியல் உறவுசெய்து பின் கைகழுவி விடப்பட்ட பெண்கள் பேசுவதாகவிருந்தால் நிச்சியம் லீனாவின் குரலைவிட மோசமாகவே இருக்கும்.எனவே,லீனாவின் குரலுக்கு இன்னொரு முகம் உண்டு என்பதையும் யோசிக்க வேண்டும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
22.04.2010

Mittwoch, April 07, 2010

மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம்

(புனைவு)

இடையீடு: 1. இதை வாசிப்பவர்கள் எங்கோவொரு இடத்தில் "தூஷண"வார்த்தைகளைப் பச்சையாய் உணர்வீர்கள்.உண்மையைச் சொல்வது எனது கடமை.விரும்பினால் மேலே செல்லவும்.


Angst in der Nacht

Die Uhr spricht aengstlich mit dem Spinnweb an der Wand,
Am Laden reisst der Wind,
Meine flackernden Kerzen sind
Ganz vertropft und heruntergebrannt,
Kein Wein im Glase mehr,
Schatten in allen Ecken,
Deren lange Finger sich nach mir strecken.

-Hermann HESSE.


இடையீடு:2. முப்பதாண்டு ஈழப் போருக்குப் பின்னே முள்ளிவாய்க்காலில் "ஈழத்துக்கு"அந்தியேட்டி செய்த கையோடு யாழ்ப்பாண இராஜ்சியத்தின் கல்வெட்டு இப்படிச் செதுக்க...


ந்தத் தெருவோரமாகச் சாய்கிறேன்.கரமெதுவும் இல்லை.அம்மாக் கரம் பாலகர்களுக்குமட்டுமே.அன்னைக்குப் பாலகனாகக் காலம் பின்நோக்கிச் செல்ல என் மனத்துக்கு மட்டுமே முடியுமாகையால் நான் மௌனித்து வான் பார்க்க, பிளவுகொண்ட தேசிக்காய் குங்குமம் தரித்து என் விழிமுன்னே நர்த்தனமாட எனது மனைவி சொன்ன வார்த்தை வேலைணைச் சிவராசா சொன்ன சாஸ்த்திரத்தில் என்னை இந்த டிசம்பரில் கொல்லும் காலமாக நர்த்தனமாடுகிறது.

துவண்டு போனது எனது குரலும்,குடியும்.என்னைக் கொல்லும் காலத்தைக் கணித்து வழங்கிய சிவராசா, சேதுராமனைக் கொப்பியடித்து எண்சாஸ்த்திரம் சொன்ன அன்றைய எண்பதுகளின் முன் பகுதி வேலணை பங்களாவடிச் சந்தியில் பலரது செருப்புகள் அவன் முகத்தை முத்தமிட்டுக்கிடக்க, எனது துணைவிக்கு அவனிடம் சாஸ்த்திரம் கேட்பதில் அலாதி பிரியம்.யாழ்ப்பாணத்து ஏதோவொரு முடுக்கில் நான் மௌனித்துக்கிடந்தபடி உழைத்து ஓடாகும்போது எனது போதையில் வீடு கட்சிகட்டி எனக்கு வைத்தியம் பார்க்கிறது.நான் மரணிப்பதில் என் மனையாளுக்கு அதிக பிரியமென நான் எப்போதும் புரிய எனது போதை காலத்தை வழங்கவில்லை.

யாழ்ப்பாணச் சுடலைகள் எங்கும் பேய்,வீதிகள் எங்கும் பேய்,வீடுகளின் நடுவே சவங்கள் உருண்டு கொள்கின்றன.குத்தீட்டியாய் மந்திரக்காரன் தனது குறியில் தேசிக்காயைக் குத்தித் தமிழச்சிகளது முலையில் காண்டம் வாசிக்க யாழ்ப்பாணம் தென்னிலைங்கைப் பெருங்குடிகளுக்கு கழிப்பறை கட்டிக்கொண்டிருக்கிறது.எனக்குக் காண்டம் வாசிக்க எனது பொண்டில் எந்த மந்திரவாதிக்குத் தனது...

"செய்வினை,

சூனியம்,

பில்லி,

காண்டம்,

சாஸ்த்திரம்,

மந்திரம்,

மாயம்"

எல்லாமாக யாழ்ப்பாணியச் சாம்பிராஜ்சியத்தில் பொருள் நிலை வாழ்வு சிறப்பாக...





ஒரு நேர வயிற்றுக்கு உழைக்க வக்கற்ற எனது பொண்டாட்டி என்னைக் காலத்தில் கொல்ல, மெல்ல வலையைப்பின்ன நான் போதையில் பொருள்தேடுகிறேன்!


கொட்டை பெருசு கோவணஞ் சிறிசு: பின் சுருக்கம்1.


"வாடா சுந்தரம்,வா மச்சான்.வந்து மோட்டச் சயிக்கிளை ஸ்ராட் பண்ணு."இவன் சுந்தரத்தை நேற்றுப் பன்னிரெண்டு மணிக்குக் கூட்டுச் சேர்த்தேன்.அவனும் என்னைப்போன்ற பெருங்குடிமகன்.

சூனியத்தையும்,சாஸ்த்திரத்தையும் அவனிடம் சொன்னபோது தன்ர மனைவியும்,மாமியும் இதில நின்று நாட்டியம் ஆடுகிறவை என்றும் சொன்னான்.தன் மனைவியும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு யாரோ போட்ட தவிட்டைத் தின்று கொழுப்பதாகவும் சொன்னான்.

இப்போது யாழ்ப்பாண பெரு இராஜ்சியத்தில் மூத்த குடித் தமிழர்கள் குடிமனைக்குள் கொள்ளிவைக்க எல்லாம் பணத்தைச் சுற்றி வீணியூற்ற நானும் எல்லாமாக மாறி எனது மனைவியிடம்"அது-சவம்"என்றெல்லாம் ஆகிப்போனேன்!எனது இருப்பு அவளுக்குச் சவமென...

போன மாதம் மகிந்தா மாமாவினது "ஒரே தேசம்,ஒரே மக்கள்" அரச பரிபாலத்தில் யாழ்ப்பாணப் பெண்டிர்களுக்கு அரபுத் தேசங்களின் "வேலையெடுப்பு"வேலை வேண்டிக்கொடுக்க முகவர்கள் வந்து கொட்டகை போட்டார்கள்,அந்தக் கொட்டகை வாசலில் வந்து குவிந்த யாழ்ப்பாணியத் தமிழச்சிகள் கிளிநொச்சிவரை கியூவில் நிற்கினம்.அரபுத் தேசத்தில் பணிபுரிந்து தமது செல்வச் செழிப்பை இரட்டிப்பாக்கவென அவர்கள் கனவு விதைத்து...

இப்படியான பொழுதுகளில் நானும் காலத்தைப் பின்நோக்குவதில் அரபுத் தேச "ஆண் குறிகள்"அப்பன்,மகன்,பேரன்,மாமன்,மைத்துனன்,என வீணியகற்றிக்கொண்ட பெருவெளியில் துர்நாற்றத்தோடு அந்தச் சகதி சாக்கடையாக யாழ்ப்பாணத்தை நோக்கி ஓடி வருகிறது.சுனாமியைவிடச் சுரமொழுப்பி உயரும் அந்த அரேபியச் சுக்கிலம் எனது வீட்டின் வாசலில் இன்னொரு கொலைக்களத்தை மெல்ல எனது அனுமதியின்றிச் செய்யத் துடிக்கிறது.

இந்தச் சங்கதியை நான் உணர முடியாதைத்யிட்டு எனது நண்பன் சுந்தரத்தோடு பேசினபோது"போடா புண்டையாண்டி,உன்ர பொண்டிலை என்ன, என்ர பொண்டிலையும்தான் அவன்கள் ஓழ்க்கப் போறான்கள்"எண்டான்.எனக்கு இது,சகஜமாகப் பேசுவதாகப் போச்சு.என்ன நடந்தது?

மானத்தோடு வாழ்ந்த மண் என்று அப்பப்ப நான் பெருமைப்பட்ட காலம் மெல்ல விடைபெற்று இருக்கிறது.எனக்கு இதில"ஆரூ ஓழ்த்தாலென்ன..."எண்ட நிலைமை சவுக்கடியாக இருக்கமாட்டேன் எண்டு சொல்கிறது.

பின்ன,இருக்காதா?

வீட்டு வளவுக்குள்,வீட்டின் ஒரு பகுதியை,மெல்ல விடுதியாக்கி-லொஜ் எனப் போட்டுப்போட்டு பணத்தைச் சம்பாதிக்கத் தென்னிலங்கைச் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்க, எனது பொண்டிலுக்கும் சரியான ஆசை அந்தப் பணத்தில்.ஆரெடுத்துக்கொடுத்த ஐடியாவோ அவள் கொண்டை முடிகிறாள் நோட்டுச்சரத்தில் அழகுபார்க்க.

இன்றும்,இன்னொரு முடுக்குவரை சுந்தரத்தின் மோட்டார் சயிக்கிளில் மெல்ல அமர்ந்து இறங்கிக்கொண்டேன்."டேய் மச்சான் இவளிட்ட கசிப்பு மட்டுமில்லை எல்லாம் கிடைக்கும்"எண்டான் அவன்.அந்தத் தெருவுக்கு "வெள்ளான் தெருவென"வெள்ளார் சொல்லுவினம்.

மெல்லக் கடாசிய கசிப்பில் அவளது தொடைக்கு நடவில் உலகத்தின் சரிவு தோன்ற ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்தை அசைக்க முடியாதென்று எண்ணிக்கொண்டேன்.

இப்போது,மனைவியும்,அவளது சாஸ்த்திரமும் நர்த்தனம் ஆடியது.

"டிசம்பரில் உனக்குச் சாவு,நீ என்னோடு சேர்ந்திருப்பது பிள்ளையின்ர பலனில் முடியாத காரியம்.நீ பிரிந்து போ"என்கிறாள்.என்ர உயிரில அவளுக்குச் சரியான அக்கறை யாழ்ப்பாணத்து ஆமிக்காரன்கள்போல.விழிமுன்னே விரியும் அவளது ஆசை மெல்லக் குத்தும் கோரப் பற்களாய் அவளது முகம்...

முள்ளி வாய்க்காலில் மௌனித்துக்கொண்ட ஏகத்தலைமையின் பெரிய ஆயுதம் முடித்துவைத்த அதே கதையை இன்னொரு சுற்றில் இப்படி மகிந்தா துவக்கி வைத்துப்போட்டார்.அவர் "தெமிழு" எண்டு ஏசிக்கொள்ள அவரது சிஸ்சியர்கள் அவருக்காகத் "தமிழர்கள் கூட்டத்தில் குழப்புவதாக நாடகம்"போட சிங்களவர்கள் எண்ணிக்கொண்டனரா மகிந்தா தமிழர் எதிரியென? நானறியேன் பராபரமே!அவரது கட்சியே இந்த முறையும் ஆட்சிக்கட்டிலேறுவதென அவர் "தெமிழு"மட்டும் சொல்லவில்லை.என்ர வீட்டு வாசலில் லொட்ஜ்சும் கட்டிக் கொடுக்கிறார்?

எனக்குத் தெரியாது!

இடையீடுகளும்,சுருக்கமும் சந்திக்கும் புள்ளி : 0

சுந்தரம் இப்ப மோட்டச்சயிக்கிளை உருட்டக்கூட முடியாமல் கிடக்கிறான்.நானும் "ஓட்டுவதற்கு" முனைந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறேன்.கசிப்பில சூனியத்தை வெள்ளான் தெருக்காறி மந்திரிக்க எனக்கும் சுந்தரத்துக்கும் அவளது தொடையினது இடையில் தமிழர் தேசியம்புரியத் தொடங்கிறது.இதன் தார்ப்பாரில் நாலா புறமும் குருதி நெடில் மூக்கைத் துளைக்கிறதோ இல்லையோ யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சாஸ்த்திரிகள்,மந்திரவாதிகளது பூஜை நெடில் மூக்கைத் துளைக்கிறது.

என் பொண்டிலது தாவணியில் தொங்கிக்கொண்ட எச்சில் பேய்க்கு "மாமி"என்ற உறவு எனக்கு வேணுமாம்.

அந்த எச்சில் பேயின்ர ஈனவிரக்கமற்ற "செய்வினைகளில்" என்பொண்டிலுக்கு என்னைப் பிரிஞ்சு கிடக்கவேணுமாம்.ஆரோட என்பதுதான் எனக்குத் தெரியாத பிரச்சனை.அவளுக்கு என்ர உயிரில அவ்வளவு பிரியமெண்டும்,தனக்கும் எனக்கும் பிரச்சனை எதுவுமில்லை எண்டும்,நான் என்ர சகோதரங்களை,எப்பவோ செத்துத் தொலைந்த என்ர தாய் தகப்பனை நினைச்சுக் குடிச்சு அழிவதாகவும், என்ர அண்ணாவுக்குப் போன் போட்டுச் சொல்லிப்போட்டாள் என்ர மனைவி.

எனக்கு அவள்மீது சரியான பிரியம் இதை அண்ணா சொன்னபோது.

என்ர குடிக்கு இது காரணமில்லையெண்டு எனக்குத் தெரியும்.அது,மகிந்தாவினது கொடைக்கரத்தின்அருங்கொடை.வீதிக்கு வீதி மதுக்கடையும்,மாதுக்குடைவிரிப்பும் யாழ்ப்பாண மண்ணில் தொடக்கி வைத்த கையோடு நான்,எனக்கே இப்போது மொட்டை அடித்தேன்.

இதோ,இந்தச்சுந்தரம் காறித் துப்புறான்.

"மோட்டச் சயிக்கிளைத் தூக்கி நிறுத்த வக்கில்லை.இதற்குள் கசிப்புக்காறிக்கு தேசியத்தை காட்டப் போனியே"எண்டு கேலிக்கு வினைவிதைக்கிறான்.நான் சாரத்தை எங்கே தொலைத்தேன் எண்டும் தெரியுதில்லை.நல்ல வேளை அவன் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை!

என்ர பொண்டிலின் இன்னொரு சாஸ்த்திரக்காரன் நடராசன் அண்டங்களைக் குடைந்த கண்டவுண்மை நான் என் பிள்ளையினது பலனின் பொருட்டு இவ்வாண்டு டிசம்பரில் என் பொண்டில் சங்கூத மரிப்பதென...

டிசம்பரில் சாகப்போகுற எனக்கு என்ன விருப்பம் இருக்கு எண்டுவேற என்ர மனைவியின்ர நண்பன் கேட்கிறான்."சொல்லு முருகன் உனக்கு ஏதாவது விருப்பம் உண்டா"எண்டபடி ஆட்டிறிச்சியும் காய்சிச் சாரயமும் வேண்டித்தாறான் குடியென...

அவன் நேற்றுச் செய்த இந்த விருப்பு வினை,எனக்கு தூக்குத் தண்டனைக் கைதியின் நிலையை இப்போது உணர்த்துகிறது.

நான் யாருடைய கைதி?

சாஸ்த்திரக்காரரின்,சூனியத்தின்,காலத்தில்,மனைவியின்,மாமியின்-மகிந்தாவின் கைதி?


Fear at the Jaffnas night


the clock speaks fearfully with the spin Web at the wall,
at the shop tears the wind,
my flickering candles
whole dripped and down-burned,
no wine in the glass more,
shade in all corners,
whose long fingers stretch themselves for me.-Hermann Hesse.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
07.04.2010

Donnerstag, März 18, 2010

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

மாறிவரும் போராட்டக் களம்:

இடதுசாரிகளது பாராளுமன்ற எதிர்ப்பு அரசியல்!

பாராளுமன்றத்தை போராட்டக்களமாக்கும் தோழர் டாக்டர் கீசி,மிகச் சிறந்த சோசலிஸ்ற்.அவர் ஜேர்மனில் பாராளுமன்ற சோசலிசத்துவக் கட்சிக்குத் தலைவரும்,உலக சோசலிசக் கட்சிகளுக்கு உதாரண புருஷராகவும்-முன்னுதாரணமிக்க போராளியுமாக இருக்கின்றார்.பாராளுமன்றச் சாக்கடையில் நீந்தும் முதலாளித்துக் கட்சிகள் போலன்றி, அவர் எதிர்ப்பு அரசியல் போராட்டத்தை மிகவும் பரந்துபட்ட மக்களது நலனிலிருந்து முன்னெடுப்பவர்.

திரு.கீசி அவர்கள் மிகச் சிறந்த இடதுசாரி அறிஞரும்,சட்ட நிபுணருமாவார்.அவரது கட்சியின் உறுப்பினர்கள்ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் கையளவுவே நிறைந்தவர்கள்.அறுநூறுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் அறுபது இடதுசாரி உறுப்பினர்கள் மிகத் காத்திரமான எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் நலனுக்காவும்,ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போராடுகிறார்கள்.

ஜேர்மனியில்பரந்தபட்ட மக்களுக்கெதிரான சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் முதலாளித்து ஓட்டுக்கட்சிகளுக்கெதிராக-ஆட்சிக்கு எதிராக வீரம் நிறைத்து உரையாற்றி, எமது உள்ளத்தில் நிலைக்கிறார் திரு.கீசி அவர்கள்.சமகால உலக யுத்தங்கள்,அவ்கானிஸ்தான் யுத்தம்,ஆயுதத்தளபாடவிற்பனைகள்,தொழில் நிறுவனங்களின் ஊழல்மலிந்த மக்கள்விரோதச் சட்டங்கள் குறித்து மிகக் கறாரான விமர்சனத்தை இதுவரை திரு.கீசியைப்போல் எவரும் அம்பலப்படுத்தவில்லை.



இன்று,ஜேர்மனியானது உலகத்தில் ஆயுத விற்பனையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்ஜேர்மனியானது உலக ஆயுதவிற்பனையிலும் ஆயுதத்தளபாட இருப்பிலும் ஆறுவீதமே பங்கெடுத்தது.இன்றோ அது உலக ஆயுதவிற்பனையில் அமெரிக்கா,இருஷ்சியாவுக்கு அடுத்து, மூன்றாவது இடத்தில் முன் நிற்கிறது.இது,யுத்தத்தை எங்ஙனம் ஊக்குவிப்பதென்பதற்கு அப்பால்,இன்றைய பொருளாதாரத்தில் ஐக்கியமுறும் ஐரோப்பியக் கூட்டணி நாடுகள் குறித்த Confederation புரிதலில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புறம்,லீசபெர்ன் ஒப்பந்தம்(Lissabonner Vertrag) மறுபுறம்,ஆயுதவிற்பனையென இரு துருவ அரசியல் வியூகத்தின் வழியினூடாக ஜேர்மனிய முதலாளிகள் மக்களது ஜனநாயவுரிமைகளை மட்டுப்படுத்தும்போது,



ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைவுகளோடான அரசியல் என்பது வெறுமனவேயான பொருளாதாரக்கூட்டே அன்றி அது மக்களது நலன்சார்ந்த தோழமைக் கூட்டல்ல.மக்களின் வளர்ச்சியில் பங்குபெறும் பண்பாடு மற்றும் அபிவிருத்திசார்ந்த முன்னெடுப்புமல்ல.எனவே,இத்தகைய நாடுகள் தமது பொருளாதாரத் தேவைகளது தெரிவில் "கண்ட அரசியலை" மக்களது நலன்சார்ந்து முன்னெடுப்பதாகச் சொல்வது பொய்யானது.


வங்குரோத்தாகும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள்:


இன்று,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ(ஸ்)லாந்துக்கு அடுத்ததாக கிரேக்கம் வங்குரோத்தாகிறது.கிரேக்கத்தில் மக்கள் வீதிக்கிறங்கிப் போராடுகிறார்கள்.கிரேக்க அரசானது ஓயவூதியத்திலிருந்து அனைத்தச் சமூகநல மானியத்தையும் வெட்டித்தள்ளுகிறது.இங்ஙனம் இத்தகைய சமூக நலவெட்டுக்களைச் செய்வதற்கான ஆலோசனைகளை உலக வங்கியும்,ஜேர்மனிய அரசும் அழுத்தங்கொடுத்து வழங்குகிறது.

உண்மையிலேயே இந்த அழுத்தம் எதற்கானதெனச் சிந்திப்போருக்கு இந்தக் கீசிஎனும் இடதுசாரித்தலைவரின் பேச்சு மிகச் சரியான புரிதலைத்தரும்.எனினும்,எனது புரிதலின்வழியில் கீசி சொல்வதையுந்தாண்டிமேலும் ஒருவுண்மை கிரேக்கத்தின் வங்குரோத்துக்குக்காரணமாகிறது.

கிரேக்கமானது இன்று, ஆயுதவிற்பனையில் மூன்றாவது இடத்தில் இருந்து செல்வச் செழிப்பில் தமது முதலீட்டார்களுக்குச் சட்டப் பாதுகாப்புக்கொடுக்கும் இந்த ஜேர்மனியின் ஆயுதக்கொள்வனவில் இரண்டாவது பெரிய வாடிக்கையாளனாகக் கிரேக்கம் இருக்கிறது.முதலாவது இடத்தில் துருக்கி இருக்கிறது.மூன்றாவது இடத்தில் தென்னாபிரிக்கா இருக்கிறது.



இதில் வேடிக்கையான அரசியல் இருக்கிறது.இதுதாம் எனக்கு முக்கியமானது.

இன்றைய அரசியல் விற்பனர்கள் குறித்துரைக்கும் எதிர்கால அரசியலானது ஐரோப்பியக்கூட்டமைப்பின் கொன்பெடரேஷன்(System of confederation) முறைமையிலான அரசியல்-தேசக்கூட்டுக்கள் என்பவை எதிர்கால அரசியல்-யுத்த முரண்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதென்பது அவர்களது குறிப்பு.அதுமட்டுமின்றி உலக மக்களுக்கும்,ஐரோப்பாவுக்குமான உறவில் இக்கூட்டமைப்பு(EU-confederation) மிகப் பெரிய பாச்சலாக இருக்கும் என்றும்,அது,மக்கள் நல அரசியலையும் அதை முன் தள்ளும் பொருளாதார சுபீட்சத்தையும் நோக்கிச் செல்லுமென்றும் உரைத்தார்கள்.ஆனால்,துருக்கியும் அதன் பரம விரோதி கிரேக்கமும் போட்டியிட்டு ஆயுதக் குவிப்பில் வங்குரோத்தாக்கின்றன.கிரேக்கம் ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது.இரண்டு தேசங்களும் நேட்டோ(NATO) பங்காளித் தேசங்கள்.இவர்களுக்கெதிற்கு ஆயுதம்?யாரோடு பொருத?

அப்பாவி மக்களை வேட்டையாடும் உலகப் பகாசூரக் கம்பனிகள் இத் தேசங்களை முற்றுகையிட்டுவிட்டு,அவர்களது தேசவுற்பத்தியில் கணிசமான வருமானத்தைத் தமது ஆயுதக்கம்பனிகளுக்குத் தாரவார்க்கும்போது இத்தேசங்களுக்கு அதே ஆயுதத்துக்குக்கொடுத்த பணம் மீளவும்,வட்டியோடு கடனாக உள் நுழைகிறது.இரும்புகளை வேண்டித் தேசம் பூராகவும் நிறைத்தவர்கள் வேளைக்குத் தமது அனைத்து வளத்தையும் அந்த ஆயுதங்களைத் தந்த எஜமானர்களுக்கு தாரவார்க்கும்போது மக்களை பொருளாதாரரீதியாகவொடுக்கும் சூழலை இவர்கள் மூலமாகப் பெற்று விடுகின்றனர்.இது,ஒரு சுழற்சியில் மேற்குலக மூலதனம் விரும்பும் அரசியல் .பொருளாதார வலுவற்ற தேசங்களது இறைமையை இங்ஙனம் கைப்பற்றி அத்தேசங்களைத் தமது அடிமையாக்கும் முயற்சிதாம்.

இங்கே,ஐரோப்பியக் கொன் பெடரோசன் என்பதெல்லாம் மக்கள் நலன்சார்ந்த இணைவினது தெரிவில்லை.மாறாகப் பொருளாதார வலுவுள்ள தேசங்கள் தமக்கான சந்தையை விரிவாக்கிக் கைப்பற்றிக்கொள்வதென்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது.

இதை ஜேர்மனிய இடதுசாரிகள் மிகத் தெளிவாகப் பரந்தபட்ட மக்களிடமும்,பாராளுமன்றத்திலும் மிக நேர்மையாக அம்பலப்படுத்துகிறார்கள்.

பொதுத்தளத்தில் அவர்கள் தமது எதிர்ப்பு அரசியலைமிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கும்போது ஜேர்மனியில் இடதுசாரிகள் வலுப் பெற்றுவருகிறார்கள்.இது நவ மார்க்சிதத் தந்தையென வர்ணிக்கப்படும் அன்ரேனியே நெக்கிறியின் சிந்தாந்தக் கோப்பாட்டு நகர்வுக்கு அண்மித்த அரசியலாக விரிவடைகிறது.



இத்தகைய அரசியல் பரந்தபட்ட மக்களிடம் மிக ஆழமாக எண்ணவூலமாக வளர்ச்சியடைகிறது.ஓட்டுக்கட்சி அரசியலுக்கு மாற்றானவொரு அரசியல் பாதையை இது காலப்போக்கில் மக்கள் நாடிச் செல்வது என்ற தளத்தில் சமூக ஆவேசமாக உந்தித் தள்ளும்போது, நிறைந்த பயனை மக்கள் அடையமுடியுமென்பது ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் இன்றைய நம்பிக்கை.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
18.03.2010

Freitag, März 12, 2010

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

மார்க்சினது முதிசம்(Kapitales Erbstueck).

(1)

ல்லோருக்கும் வாய்க்காத அருமையான உறவுகள் சிலருக்கு வாய்த்துவிடுவது.அத்தகையவுறவுகள் நண்பர்களாகவும்,காதலர்களாகவும்-ஏன் பிள்ளைகளாகவும் வாய்த்துவிடுவது.

எனக்கு அப்படி எதுவும் வாய்த்திருக்கவில்லை.

காதலித்தபோது தோல்வி.

கவிதை புனைந்து நேசித்தபோது அபரிதமான பாலியற் தூண்டல்,நடாத்தைப் பிறழ்வென...

எல்லாந்தொலைந்தபோது குடும்பம்.

கவிதையாகப் பாசம் மலர்ந்திருப்பதாக நான் நினைக்க வைக்கும் தருணங்களில் பொய்துப்போய் இருக்கும் எனது புவியுலகத்துள் பலதும்,பத்தும் எங்கோவிருந்து இரைச்சலாக எனது செவிகளுக்கிடையில் துள்ளி விளையாட நான் மௌனித்துத் தியானிக்கிறேன்.

வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.

இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் வசதிகேற்ப பயன் படுத்துகிறோம்.

உயிரின் வலியாக நீண்டுவிடுகிறதா காதல்?அப்போ நானோ இல்லை நீங்களா என்னை-உங்களை உணர்வு பூர்வமாக மதிக்கிறேன்-மதிக்கிறீர்களெனக்கொள்வதில் தப்பு நிகழாது.



அப்படித்தாம் அனைவரும்.

அருமையான காலங்களது குரல் வளைகளை முறிப்பதற்காக நான் புனிதக் காவடியைக் காவித் திரிகிறேன்.அதை எவர்மீதும் இறக்கி வைத்துக் ஆட்டம் பார்ப்பதில் இந்தக் காலம் எனக்கு வஞ்சம் புனைந்து "சூனியம்" வைத்திருக்கிறது.

(2)

பதின்ம வயது-அது பருவ வயதே ஆவதற்கான திரிவு நிலைப் பருவம். அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.


இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.

நோயுற்ற சமூகமாக மனித சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.

இது அசலான உணர்வை அகற்றிய கையோடு எனக்குள் போலியான மனிதனையூன்றிவிடுகிறது.நான் வானுக்கும் தரைக்கும் எனது தலையை அறுத்து உருட்டி விளையாடுகிறேன்.அந்த விளையாட்டில் எனது புனிதம் வெற்றிக் கோப்பையாக எனது விழிமுன் தோன்றி என்னைப் பொய்மைக்குள் வாழ வைப்பதை நான் எப்போதுமே புரிந்ததாக இல்லை.

என்ன செய்யலாம்?

காதல்.


வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!


இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காரணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.

அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் ஜென்னி.

(3)

அவள் ஒரு மகுடம்.

அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே அவளது விரல்களில் மோதிரமிட்டு மௌனமாகக் காதலுறுதிசெய்தேன்.அப்போது எனக்கு வயது 17.அவளுக்கு 21 வயது.எனது இருபத்தி ஐந்தாவது வயதில் நான் தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று ஜென்னியை முறையாகவே கரம்பிடித்து மகிழ்ந்தேன்.

இடையினில் எதிர்ப்பட்டாள் நங்கை ஒருத்தி.அவள் மெல்லெனப்பாயும் நீராகவும்,நான் கல்லாகவும் இருக்கக் காலம் நீரினின் அமைதியில் என்னைக் கரைத்தது.அந் நீர் ஹெலேனா டெமுத் என்று நான் சொல்வதற்குள் உலகம் அவளது புத்திரனில் எனது முகத்தை ஒட்டிக்கொண்டது.

நாம் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த ஜென்னி-ஹெலேனாக் காவியங்கள் வழி செய்தவை.ஓராயிரம் காதல் மடல்களின்வழி நாம் அழகான ஜேர்மனிய மொழிக்கு அழியாத இலக்கியஞ் செய்தோம்.

அந்த இலக்கியத்தின்வழி ஜேர்மனிய மொழி வாழ்வதென்று இன்றைய இளைஞர்கள் சொல்வதையும் அன்றே கண்டோம்.


ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தருணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தருணங்களைச் சொல்பவை.

அப்படிச் சொன்னதாற்றாம் நான்வறுமையில் வீழ்ந்து வீழ்ந்து விடுதலைக்காய் எனது மழலைகளை விதைத்தேன்.எத்தனையோ முறைமைகளில் புறைசிஸ்சிச(In 31 Maerz 1843 Die Preussischen Behoerden versuchen Marx zu Kaufen,Sie bieten ihm den Posten des Chefredakteurs bei der konservativen "Preussischen Staatszeitung an.Marx lehnt ab. அரசு என்னை வேண்ட முனைந்தபோதும் நான் வறுமையோடு வாழ்ந்து காதலில் எழுந்து கவித்துமாய் மூலதனமிட்டேன் உங்கட்கு.

(4)

காதல் உயிர்ப்பினது சுவாசம்.உள்ளத்தில் உதிரும் ஒவ்வொரு திசைநோக்கிய கனவும் அதன் துடிப்பில் எதிர் வினையாற்றத் தவறுமானால் எனது மொழிக்கு எல்லை இருந்திருக்கும்.

ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்கைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!

எனவேதான் எனது காதற்கன்னிக்குக் கடிகரமாக இருந்த என் முதிசமும் காணிக்கையாகிறது.வில்கெம் வோல்f(Wilhelm Wollf) எனக்களித்த உயரிய பரிசு எனது காதலின் உச்பச்சச் சீவியத்துக்கு-உயிர்த்திருந்து என்னைச் சீராட்டிப் பராமரித்த தாய்க்குத் தாயான ஹெலேனாவுக்குச் சொத்தாகிறது...

ஆயுள்பூராகம் போரிட்டு,புரட்சிக்குப் பாடம் சொன்ன எனது முதிசமாக இதைத்தவிர வேறெதை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

வீடும் வாசலும் மருண்டு போகும் திசையில் பல்லாக்கு வாகனம் தரித்திருக்க நான் வேதாந்தம் பேசிய பூசாரியல்ல.நான் புதிய யுகத்தின் விடிவெள்ளி.

இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.

அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.இங்கே,ஜென்னியும்,ஹெலேனாவும் எனக்குள் தவித்த இரண்டு திசையாய் வடக்கும்-தெற்குமென...


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.03.2010

Mittwoch, März 10, 2010

ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

Helena Demuth und Marx,ஹெலேனா டெமுத்-மார்க்ஸ்,ஷோபாசக்தி,தேசம் வாசகர்கள்:

சிறுகுறிப்பு.

ஷோபாசக்தியிடம் ஆதாரம் காட்ட முடியுமாவென வினவிக்கொள்வதால் உண்மைகளுக்கு மொட்டாக்குப் போடமுடியாது.ஹெலேனா டெமுத்துக்கும் மார்க்சுக்கும் இடையிலான உறவுகள் குறித்து நாம் புனிதக் காவற்கோட்டைக் காவலர்களாக முடியாது.அதுபோலவேதாம்கிட்லர்-ஸ்ராலின்பஃக் ஒப்பந்தம்.போலந்தில் நிகழ்ந்த படுகொலைகளை புதைத்துவிட்டு மனித விடுதலை குறித்துப் பேசுவது வேடிக்கை.இவற்றை எந்த அரசியலினதும் பெயராலும் எவரும் நியாயப்படுத்தலாம். ஆனால்,அவை மனித வளர்ச்சிக்கு உதவாது.மார்ஸ் மீதோ அல்லது லெனின், மாவோ,ஸ்ராலின்மீதோ துதிக்கத்தக்க வழிபாடு அவசியமில்லை!அரசியல்ரீதியாகவும்,வியூக ரீதியாகவும் தவறுகளென்பது எவரும் செய்யக் கூடியதே.

எது தவறு,எது சரியென்பதை வர்க்க ரீதியான சமூகமைப்பில்வைத்துப் புரிவதென்பது பரந்தபட்ட மக்களது கொலைகளை நியாயப்படுத்தித்தாம் சாத்தியமாகுமா?அதுபோன்றேதாம் இன்னொரு கேள்வி எழுகிறது. அதாவது,"கம்யூனிச ஆசான்கள் என்பவர்கள்மீதான விமர்சனங்கள் யாவும் முதலாளித்துவ எதிர்ப் பிரச்சாரமாகுமா?"என்பது.

பைபிள்மீது விமர்சனம் வேண்டாம் என்பதும்,குரான்மீது அவ நம்பிக்கை கொள்ளக் கூடாதென்பதும் பலதரப்பட்ட தர்க்வாதத்தைப் புதைப்பதன் அடிப்படையைக்கொண்டது.



கம்யூனிசத் தலைவர்கள் மாசற்ற பிதாமக(ள்)ன்கள் என்று எவர் பேச முனைகிறாரோ அவர் ஆபத்தான பேர்வழியென்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.தவறுகள் எங்கும் நிகழும்.அது,தவறா அல்லது சரியாவென்பது நாம் கொண்டிருக்கும் உலகப் புரிதலுடன் சம்பந்தப்பட்டது.இங்கே,மார்க்சோ அல்லது லெனினோ தமது குடும்ப வாழ்வில் பலதரப்பட்ட சூழலில் காதல் வயப்பட்டிருப்பது அவர்களைப் பொறுத்தமட்டிலும்,உலக-இயற்கைக்குட்பட்ட முறமைகளுக்கமையவும் தவறில்லை.அது,இயற்கையான மனித-உயிரின நடவடிக்கை.இங்கே,இந்தக் கருத்தியல் உலக- அமைப்புகளுக்குச் சாந்திட்டு காக்க அல்லது அடியொற்றிப் பேச முற்படுபவர்களுக்கு இது பெரும் சர்ச்சை. புனித நடாத்தையின் "தூய்மை" வாதப் பிரச்சனை.

இன்று,மனித சமூகத்தில் பல பிரச்சனைகள் குறித்து ஆராயப்படுகிறது.இதுள் பொருளாதார மற்றும் அரசியல்-பௌதிகமென ஆய்வுகள் தொழில்ரீதியான முன்னேற்றத்துக்காகவும் மனித விடுதலைக்காகவும் செய்யப்படுகின்றன.நமது சூழலில் ஒன்றையொன்று மறுத்துத் தனிப்பட்ட நடாத்தைகள் சேறடிப்புகளென எழுத்துக்கள் மலிந்து விடுகிறது.

நண்பர் ஷோபா சக்தி ஹெலேனா டெமுத்துக்காகத் தனது கொரில்லா நாவலை அர்பணித்திருக்கிறார்.சந்தோஷமான விடயம்.மார்க்ஸ் அவர்களது வாழ்வில் கெலேனா அம்மையாருக்கான இடம் என்னவென்பது ஒரு முக்கியமான விஷயமே.இது குறித்து ஜேர்மனிய மார்க்சியர்கள்-இடதுசாரிக்கட்சிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளார்களென்பது பலமாக ஜேர்மன் மொழிக்குள் இயங்குபவர்களால் அறிந்திருக்கக்கூடியதே.


அவ்வண்ணமே ஜேர்மனியைப் பூர்வீகமாகக்கொண்ட ஹெலேனா டெமுத் அவர்களது வாழ்வு-சாவு,தியாகம்-விருப்பு வெறுப்புகளென எல்லா ஆசாபாசங்களும் ஜேர்மனிய மொழிக்குள் இருக்கிறது.ஹெலேனா அம்மையாரது கையெழுத்துப் பிரதிகள்கூட ஆவணக்காப்பகங்களில் இருக்கிறது.அவர் குறித்து வேலைக்காரியெனப் புரிதல் அரை குறை மார்க்சியப் புரிதலாளர்களிடம் இருக்கலாம்.ஆனால்,அந்த"வேலைக்காரி"இன்றி மார்க்சினது மூலதனம் சாத்தியம் இல்லை என்பது எனது புரிதல்.ஹெலேனா அரசியல்-வர்க்கப் போராட்டம்,அது குறித்த வியூகங்களென மார்க்சுடன் விவாதித்து இருக்கிறார்.அவரது தியாகம் நிறைந்த உழைப்பின்றி மார்க்ஸ் குடும்பம் ஒருபோதும் இயங்கி இருக்க முடியாது.மார்க்சும் உழைப்பாளர்களது தந்தையாகி இருக்க முடியாது.எனவே,ஷோபாசக்தி தனது நாவலை ஹெலேனா அம்மையாருக்குக் காணிக்கையாக்கியது சரியானதே!எவர் மார்க்சின் மூலதனத்தை மெச்சுகிறாரோ அவர் நிச்சியம் ஹெலேனாவையும் மெச்சுகிறார் என்பதே எனது முடிபு-துணிபு!

மார்க்ஸ் அவர்களுக்கும் ஹெலேனா அம்மையாருக்கும் இடையிலான தொடர்புகள்,உறவுகள்,திருமதி ஜென்னி மார்க்சினது விருப்புக்கமையவும் நிகழ்ந்தவை என்பதும்,மார்க்ஸ் தனது சட்டபூர்வமான துணைவிக்கு எழுதிய கடிதத்திலிருந்து நம்மால் வாசித்தறியக்கூடியதாகவே இருக்கிறது. ஹெலேனாவின்மீதான காதலில் சிக்குண்டிருந்தபோது மார்க்ஸ் அதிகமாகக் காதல் வயப்பட்ட கடிதங்களை ஜென்னியோடு பகிர்ந்துள்ளார்.நாவோடு நா வைத்து முத்தமிடும் காதல் நடாத்தைகள் குறித்து மார்க்ஸ் தனது கைப்பட எழுதியிருக்கிறார்.குடும்பம் பிரியாதிருப்பதற்காக அவர் பல முறைகள் காதலுணர்வின் உச்சத்தை ஜென்னி வெஸ்பாலினோடு செய்திருக்கிறார்.

ஹெலேனா டெமுத் அவர்கள் மார்க்சினது மனைவி ஜென்னி ஃபொன் வெஸ்ற்பாலென் அவர்களது பெற்றோரிடம் வீடு பராமரிக்கும் தொழிலை ஆரம்பித்து இறுதிவரை அத்தொழிலை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்வரை செய்து,மடிந்திருக்கிறார்.தான் விரும்புவது,விரும்பாததென அவரது கடிதம்கையெழுத்து எடுகளென(Poesiealbum)எழுதப்பட்டு ஆதாரமாக இருக்கிறது.


ஹெலேனா அவர்களது கையெழுத்து ஏட்டை வாசிப்பவர்களுக்கு அவரது உள்ளத்தைப் புரியக்கூடியதாகவிருக்கும்.அவர் வீட்டு வேலைகளால் அதிகம் சுமையடைந்திருப்பதும், வெளியில் சென்று ஒரு நேரவுணவை ஒரு ரெஸ்ரேன்டில் உண்ணவும் விரும்பி இருக்கிறார்.தான் தனது கையால் சமைக்காத உணவை உண்பதே அவரது அதி விருப்பாகவும்-உலகத்தில் வாழ்வுப் பயனாகவும் கண்டிருக்கிறார்.மார்க்ஸ் குடும்பம் மிக ஏழ்மையோடு உழைப்பாள வர்க்கத்துக்காக ஆய்வுகளில்-போராட்டத்திலிருந்தபோது ஹெலேனாவுக்கும் மார்க்ஸ் அவர்களுக்கிடையிலான காதலின் பொருட்டுப் பிறந்த குழந்தை 1851 இல்இன்னொரு குடும்பத்தில் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது ஹெலேனாவின் விருப்பின்பொருட்டானதாகவே இருக்கிறது.

மார்க்சினது குடும்பத்தில் ஏலவே ஆறு குழந்தைகள் வறுமையினால் வாடும்போது தனது குழந்தையும் அவருக்குச் சுமை கொடுக்குமென்பதால் ஹெலேனா அம்மையார் தனது சொந்தக் குழந்தையை மார்க்சினது ஒப்புதலோடு வேறொரு குடும்பத்தில் வளர்க்கக் கொடுத்துவிடுகிறார்.இது வரலாறு.

இங்கே,மார்க்ஸ் குறித்தோ அன்றி ஹெலேனா அவர்கள் குறித்தோ எவரும் சேறடிக்க முடியாது.
அதைச் செய்தவர்கள் இடதுசாரிகளது வட்டத்திலிருந்த அதி துதிபாடிகளே.
முதலாளியக் கருத்தியலாளர்கள்கூட ஜேர்மனியச் சூழலில் அதை மார்ஸ்-ஹெலேனா இருவரது சுதந்திரமாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் மார்க்சின் வரலாற்றை மீளப் பார்த்த சையிற் பத்திரிகைகூட மிக நாணயத்தோடு ஆவணங்களை முன்வைத்து இத்தகைய விவாதத்தை மிக அழகாகவும்,நீதியாவுஞ் சொல்லி இருக்கிறது.

இங்கே,ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம்.

ஒருபெரும் குடும்பம்(மார்க்ஸ் குடும்பம்)தொழிலாளர்களுக்காகத் தியாகஞ் செய்தபோது,அவர்களுக்காக அம்மையார் ஹெலேனா டெமுத் தனது வாழ்வையே அக் குடும்பத்துக்குத் தியாகித்து எமக்கு மூலதனம் எனும் அரிய விஞ்ஞானப் பாடத்தைத் தந்திருக்கிறார்.இதன் ஆணிவேர் மார்க்ஸ் மட்டுமல்ல.அங்கே, ஏங்கெல்சுக்கு எவ்வளவு பங்குண்டோ அவ்வளவு பங்கு ஹெலேனாவுக்கு,ஜென்னி வெஸ்ற்பாலினுக்கு,ஜென்னி மார்க்சுக்கு உண்டு.அவ்வண்ணம் ஹெகலுக்கும் உண்டு.இதை எவரும்-எதன் பெயராலும் மறுக்க முடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.03.2010

Samstag, März 06, 2010

நினைவிலித் தவிப்பில்

>Podium<


சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே.


பயன்தகு முட்டாள்கள் "nuetzlichen Idioten"(Lenin).

Motto:"lifelong learning" ...வாருங்கள்,brave new world...and "Totaler Krieg"-BLA BLA and Action ...The court takes a serious view of this(...) matter(0-1).புதிதாய்ப் பிறப்பெதன்ற நிலையெடுப்பு...இப்படியுமொரு ஊகம்.ஒவ்வாததன் அருவ இயக்கத்தின் எங்கோ தஞ்சம் கிடைக்கும்?இருக்கலாம்!வார்த்தைகளின் இயல்வில் வழிந்துருகும் உணர்வுதனைச் சொல்லித் திரிவதற்கானவொரு வெளியாகப் பதிவைத் தெரிவதில் பயம் ஒன்றில்லை!அது கடந்த பாதையின் ஏதோவொரு அதிர்வில் சுமையிழக்கும் நெஞ்சு.நினைத்துப் பார்க்கிறேன்... எதற்காக இது?


ஒரு வடிவத்தில் நின்று,நிலைமறுக்க.


முடிந்தால் ஓலத்தில் கிழிப்பதற்கானவொரு வெளியைத் தெரிவது நோக்கு.


"கடவுள் செத்துவிட்டான்" என்றான் கஞ்சன் நீட்சே.Nietzsche

"நீட்சே செத்து விட்டான்"என்றது காலம்.(Volksmund >Pop-Star



காலத்தில் வாழ்கிறேனா?

...ம்

சரியானவொரு"தெரிவு"என்னவாக இருக்கும்?



மனிதர்களாய்,மிருகமாய்-சடப் பொருளாய்,வெளியாய்?


அன்னியர்கள், உளப்பரப்பில் "அகதி"விண்ணப்பத்தைச் செய்தபடி.


"அதுவா-அல்லது இதுவா?"கீர்கேகோர்ட் (Kirrkegaard)அல்லல்பட்டதன் தொடர்ச்சி சமீபத்துச்"சொல்லி"கள்>Demokratischer Repraesentation< வரை . இறைவனின் நிர்மாணம்-கட்டுமானம் இன்றைய பல்தேசிய வர்த்தகத் தொடர்ச்சி" ஓட்டோ கால்சொய்யர்(Otto Kallscheuer)


"கடவுளே படைப்பாளி"அவனுக்காய்க் காத்திருக்கும் கைய்த் வார்ட்(Keith Ward)


"நான் இறைவனாகவே முனைவேன்,ஏனெனில்,அவனே என்னை விகாரமாகப்படைத்தான்.சங்கங்கள் மிருக வதையை எதிர்த்துத்தான் வழக்குப் பதிந்து கொள்ள முடியும்" கையினே(Heine)


"கடவுளே உலகத்தைப்படைத்திருந்தால்,நிச்சியம் நான் கடவுளாக இருக்கமாட்டேன்:பர்க்கும்போது அவனது கொடுமை இதயங்களைச் சிதைத்திருக்கிறது"சொப்பன்கவ்வர்(Schopenhauer);


"இதயங்களைச் சிதைப்பதற்கு வெளியில் எதுவுமில்லை-உள்ளே இருக்கும் உன்னைப் பார்!" வேதாந்தம்.



அன்னியத்தில் அன்னியமானவர்களே!,அருவத்தில் அலைந்து-உடைந்து அலைந்தோயும் ஒரு பொழுதில் நிலையிழந்த"நினைவு"கள் மீண்டுமொரு "உருவ"வாழ்வுக்கு வழி இயலுமாக்கின் புதிய "வரவு"நிலைமறுத்துத் தொடர் இழப்பில் நிலையெடுக்க...(Minima Moralia-Adorno).



(Alister McGrath )எலிஸ்ரர் மெக்கிறத்தின் திருச்சபையில் விளக்கமெடுத்த அந்தக்காலத்தின் கிழிவில் எச்சில் வீணீயாய் இழுபடும் நினைவோடு நிமிர்ந்தெழு-அப்போது...


நினைவிலித் தவிப்பில் உதிரும் உனது காலத்தில் கையளவு பொய்யும்,கடுகளவு "நீயும்"கலந்ததே உலகு.



மூக்கு வழி வளி வெளியும் உள்ளும் இயல்வது"நான்"ஒலிக்கும் எனக்குள் விரியும்"விந்து"முகிழ்க்கும் இன்னும்.பீலா விடுதலும்,ரீல் காட்டுவதும் எமது மரபின் தொடர்ச்சியாய் என்னையும்...கோமாளிக்குக் கோமாளியாக்கிக் கடைந்தேற்றும்"பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய்"...



Donnerstag, Februar 25, 2010

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

புள்ளிகளும்,புரிதற்பாடுகளும்.


ரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகிறது. இந்தப் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில், மையப்படுத்தப்பட்ட சூழலின்பாலான எண்ணங்கள் மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

உறவுகள்.சமூகவாழ்வு
உணர்வுகள்-ஆன்மீக நிலை
வளர்ப்பு முறை-அகவுலகம்
சூழல்-புறவுலகம்
சடங்கு மனித நிலை-புனைவுசார் உலகம்
பொருள் வாழ்வு-குவிப்புறுதியூக்கம்
மனித நிகழ்வு-படைப்பாற்றல்
புள்ளிகள்-இருப்பு


இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.

இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.

தாய்மையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் மைந்தன் அவளது மூலத்தை அறியமுனைகிறான்.தான் பலரிடம் பெறும் "இன்ப"த்தைக் குறித்து மௌனித்தபடி தாயைப் புணர்வதில் எவனது இருப்பையோ உறுதிப்படுத்த எவனோ முனைவதில் எதிர்பால்வினைக்கு இலாடன் கொண்டு திரிபவன் தன்னைத் தொலைத்துவிட்ட அடுத்தவன்,அடுத்தவள் முலையில் எவனது பற்தடமுண்டென மோதித் திரிகிறான்...

மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.

உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.

தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரிப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

தம்பி,அண்ணா,அக்கா,தங்கை என ஏதோவொரு புள்ளிகள் தன்னிலைகளாக எனக்குள் அங்கீகரிக்கக் கோருவதில் நான் முழுமையுறுவதாக எண்ணும்போதே அவை தகர்கின்றன.தாய்மையின் "கற்பு"பரிசோதனைக்கூடமாக முடியுமா?அந்தப் பரிசோதனையில் பட்டம்பெற முனையும் தனயன்களோ ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியையே அறிந்துகொள்ள முடியாத தற்கொலைத் தன்னிலைகளாக இருத்திய தமது வெளிகளை நெருங்க மறுக்கும் தருணங்களில் இவர்களுக்கான"தெரிவுகள்"என்ன?


தேசம் என்பது"தாய்மை"என்ற பொருளில் அவள் எப்போதோ "கற்பு"அழித்த பெண்மையுள் போதர்கர்களான "ஆண்மை"யின்நெடிய அடிவாரத்துள் மெலினப்பட்ட குரல்களாக உருக்கலைக்கும் சந்தர்ப்பம் தற்செயலானதில்லை!நிலைத்திருக்கமுனையும்"ஆண்"தன்மை எத்தனை வன்மத்தையும் தனது குறியினது மத்தியில் துயிலுரிக்கும் பெண்மை துடித்துக்கொண்டிருக்கும் வெளிகளுக்குள் நானும் கருவுற்றதென்பதில் எனக்கான இருப்பு நியாயம் அடைகிறது.இது,புனையப்பட்ட உலகத்துள் "அங்கீகாரத்தை"வலியுறுத்தும்போது தனது மேன்மைகளை அவற்றுள் இனங்காணுவதில் சுயதிருப்த்தி அடைகிறது.

இங்கே,அடையாளம் என்பது என்ன?

பொருண்மிய மேம் பாடென்பது எந்தப் புள்ளியையும் விட்டு வைக்காதாவொரு வெளியுள் எனது "அங்கீகாரம்"என்பதே அபத்தம்.

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.02.2010

(கீரிமலையில் கரையும் எனது புள்ளிக்காக).

Donnerstag, Februar 18, 2010

செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு

நான்று நில்


வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது

மெல்லத் தூறிய வானம்
நெடிய தொலைவை அணைத்தபடி அருகினில்
காண மறுக்கும் காற்றும்
கையளவே ஆன பொழுதும் வருத்திய மலரும்
விறைத்திருக்க எண்ணியதில் வியப்பு என்ன?

பட்டு விலகும்உறை பனியாய்
உதிரும் தொப்புள் கொடி
உணர்வைத் துண்டிக்க நெடிய போரில்
பாசவலை போர்த்த இதயத்தின் பாழ் வலியில்
எச்சிலாய்ச் சொரியும் அன்னையின் நினைவு

அப்பப்ப அசையும் நினைவு முறிக்கும் காலம்
அள்ளிய சுமையில் கிள்ளிய பாவம்
தொடரக் காத்திரும் சிறு கோட்டில் நடை பயிலும்
நாளைக்கு நஞ்சு வைக்கும் எனது இருப்பில்
பட்டு விலகும் உயிர் திசையறியாக் கனவில்

ஊருக்குள் தீ வைக்கும்"அங்கிகாரம்"
உறங்க மறுத்த எனது குருதிக் கொதிப்பில்
நலிந்துபோன உறவுகளாய் முடிச்சிட்டுக் காலத்தில் தொங்க

கண்ணீர் கரைந்து கடு மனதாகும்
எல்லாப் பொழுதுகளிலும் நல்லானாய் இருக்க
நான்றுகொண்ட விதிக்குச் சுயம் இருக்கு?

தெருவோரம் ஊர்ந்துபோன புழுவுக்கு
காகத்தின் இரைப்பையில் சுவர்க்கமெனப் பலிப்பீடம்
போரென்ன புண்ணென்ன புகல் வாழ்வு என்ன
பொய் உணர்வாய் பொருளிழந்த புறம் போக்காய்ப்புவி வாழ்வு

செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு
சுகம் கேட்க ஏது நியாயம்?

மாறுவேடம் புகலுமொரு மணவாழ்வில்
மருமகளுக்கு பாடம் உரைக்கும் மாமாக்கள்
அண்ணாவுக்குத் தங்கை மறுத்து மருமகளெனக் கொள்ள
மயிரென்ன மாமாவா?

வானம் பாத்திருக்க
வரம்பும் நொந்திருக்க
வந்தமர்ந்த காகத்துக்குச் சரிந்தது பொழுது...


ப.வி.ஸ்ரீரங்கன்
18.02.2010

Freitag, Februar 12, 2010

மகிந்தாவினது ஆட்சிக்காலம்...

மகிந்தாவினது ஆட்சிக்காலம்:மகத்தானதும்,மர்மமானதும்!
 
ன்று பேசப்படும் பொருளற்ற வார்த்தைகள் இலங்கையின் அரசியலினது இயங்குதிசையொட்டிய பலரது கேள்விகள்-எதிர்பார்ப்புகளென உணர்ச்சி வகைப்பட்ட நோக்கு நிலைகளாகவே இருக்கிறது.இதைப்பற்றிய புரிதலொன்று மக்களது அரசியல்-சமூகவாழ்வின் இருப்பிலிருந்து இதுவரை பேசப்படவில்லை.அப்படிப் பேசுவதற்கான நியாயம் எவரிடமும் இல்லாதிருக்கும் இன்றைய கட்சிசார் அரசியலில் இத்தகைய ஓட்டுக்கட்சிகள் தமது எதிர்காலம்-கட்சியின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பில் நிலவும் அதிகார மையங்களுக்கு அண்மித்த அரசியலையே கொண்டியங்குகின்றன.இதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கூட விதிவிலக்கற்றிருக்கிறது.
 
இத்தகைய நிலையில்,புலிகளால் நியமிக்கப்பட்ட எந்தவொரு உறுபினருக்கும் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்"இடங்கிடையாதென்றும் ஆர்.சம்பந்தன் அவர்களால் சொல்லவும் முடிகிறது.ஆனந்த சங்கரிக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறிய தமிழர்விடுதலைக் கூட்டணியானது புலிகளாற்றாம் "தமிழா தேசியக் கூட்டமைப்பு" என்று கட்சியுருவெடுத்தது.

என்றபோதும்,சம்பந்தன் மேலே குறித்தவொரு அரசியலது தெரிவில் இங்ஙனம் பேசிவிடுகிறார்.இதுதாம் இன்றைய இலங்கையினது அரசியல் இருப்பு.
 
இராஜபக்ஷ குடும்பத்தினது அரசியலை வெறும் சர்வதிகார அரசியலாகவும் குடும்பப் பாசிசச் சேட்டையாகவும் இனங்கண்டுவிடலாம்.ஆனால்,அதன் பின்னால் மையங்கொண்ட அரசியலை உள்வாங்கும்போது இலங்கையினது இருபெருங்கட்சியினது பின்னால் அணிவகுத்துள்ள அரசியல் சக்திகளை மிக நுணக்கமாக மாறிவரும் பொருளாதார நிலமைக்குள் இனங் கண்டுகொள்ள முடியும்.
 
சிங்களச் சமூகத்தின்முன் மகத்துவம் பெறும் மகிந்த ஆட்சி:
 
தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல இலங்கையில்வாழும் சிறுபான்மை இனங்களையும் சேர்த்து"இலங்கையில் சிறுபான்மை மக்களினங்கள் என்று எவருமில்லை"என்று மகிந்தா அடிக்கடி உரைக்கும்போது அது முற்போக்கான அரசியல் பார்வையாகவும்,நீதியானதாகவும் நாம் நம்புகிறோம். ஆனால், இங்கிருந்துதாம் மகிந்தாவின் ஆட்சி சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவம் பெறுகிறது.இது, ஒருவடிவிலும்-குறியீட்டு ரீதியாகவும் சிங்கள மக்கள் மத்தியல் வழங்கும் அரசியல் உள்ளடக்கமானதை மிக நேர்த்தியான இனப்பாகுபாடுடையதும்,ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்துவதுமாக்குகிறது.எனவே,மகத்துவமான மகிந்தா சிந்தனை சிங்களச் சமுதாயத்திடம் மகத்துவமான தேசநலச் சிந்தனையாக மாறிவிடுகிறது.இதன் தயாரிப்பு ஆசிய மூலதனத்தின் அதியுக்தி நிறைந்த மூளையினது தெரிவே.
 
இதன்வழி தெரிவுகளாகும் இன்றைய கட்சிசார் அரசியலானது இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் சிதிலமடைந்த வன்னிப் போருக்குபின் புலிகளின் அழிவோடு இன்னொரு திசைவழியை நோக்கிப் பயணிக்கிறது.அது,இனமுரண்பாடுகளை வெறும் பொருளாதாரவாதத்துக்குள் தள்ளி அதன்மீதான மூடுதிரை, நீறுபூத்த நெருப்பாக இனமுரண்பாட்டை வைத்திருக்கிறது.இது,மேற்குலகத்தினதும் குறிப்பாக அமெரிக்காவினதும் விருப்புக்குரிய சூழலென்பது நாம் அறிந்துகொள்ளவேண்டிய அரசியல் அரிச்சுவடி.






 
சிங்களமக்கள் மகிந்தாவையும் அவரது ஆட்சியையும் மகத்தானதாகக்கொண்டு அவரை இன்னொரு தடவை ஜனாதிபதியாக்கியது தற்செயல் நிகழ்வோ அன்றித் திடீர் அரசியல் சூழலோ இல்லை.இது திட்டமிடப்பட்ட அரசியல்-பொருளாதார நகர்வுகளுடன் மிக நெருங்கிய வியூகங்கொண்டது.இந்த வியூகம் சிங்கள இனவாதிகளுக்கும் இனஞ்சார் பெருமையில் பௌத்தமதவாத அமைப்புகளோடு வாழமுனையும் பெரும்பகுதி மக்கட்டொகுதிக்கு உவப்பான அரசியலாக இருக்கிறது!
 
மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளான பொருளாதார நிலைமைகள் ஆசிய மூலதனத்துக்கு இசைவான சூழலாக மாற்றப்பட்ட மகிந்தாவினது கட்சி அரசியலில் சமூகவாழ்நிலை மக்களது உணர்வில் கொள்ளும் வகிபாகம் தமிழ்பேசும் மக்களது போராட்டத்தோல்வியிலிருந்து சிங்களச் சமுதாயத்தின் இருப்புக்கு நிகரற்ற தலைமையை மகிந்தா வழங்குவதாக நம்பப்படும் சமூக உளவியலாக மாறியுள்ளது.இது,அவசியமான அரசியல்சார் மக்கள் நடவடிக்கையை மக்கள் தட்டிக்கழிப்பதில் மையங்கொண்ட அரசியல் வாழ்வில், திடீரென ஜனாதிபதித் தேர்தலாக மக்களிடம் அண்மித்தபோது மகிந்தா இருபது இலட்சங்கள் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெனரல் சரத் பொன்சாகாவைத் தோற்கடிக்கிறது.ஆயுதரீதியாகக் களங்கண்ட ஜெனரல் மக்களோடு மக்களாக களங்காணப் புறப்பட்டபோது படுதோல்வியடைகிறார்(இத்தோல்வியானது தனிப்பட்ட சரத் பொன்சேகாவினது தோல்வி இல்லை.மாறாக, அவர் பின்னால் நின்றியக்கிய மேற்குலக மூலதனத்தின் தோல்வியாக இருக்கிறது).இது,மகிந்தா கட்சிக்கும் அவரது குடும்பத்துக்கும் சிங்கள மக்கள்கொடுத்த கௌரவமாகவும்,சிறுபான்மை இனங்களது பங்களிப்பு-ஒத்துழைப்பின்றிச் சிறீலாங்காவில் சிங்களப் பெரும்பான்மையில் ஆட்சியை தக்கவைக்கமுடியுமென முதன் முறையாகக் கற்பிக்கிறது.இது,ஆசிய அரசியலுக்கு மேலும் பலமான பல சாத்தியங்களைத் திறந்திருப்பது உண்மையானது. இதை முழுமையாக விளங்க முனையும் அமெரிக்க சார் நலன்களை மேற்குலகின் துணையுடன் முன்னெடுக்கும் மூலதனத்துக்கு மர்மமான அரசியலாக இருக்கிறது.இந்த மர்மம் தெரிவுகளாக்கிய இன்றைய சூழலின் கதாநாயகன் சரத்பொன்சேகா.
 
மேற்குக்கு மர்மமான மகிந்தா ஆட்சி:
 
கஸ்பியன் வலயத்தில் உக்கிரைன்,ஜோர்ச்சியா,ஒசித்தாசியன்-அவ்கானிஸ்த்தான், என முரண்படும் தேசங்களது மக்கள், மத்திய ஆசியாவில் குர்த்தீஸ் இனங்களது பிரச்சனைகளை விளங்க மறுத்தன.அண்மைக் கிழக்கு வலயத்தில் ஈரான்,பாலஸ்த்தீனம்,எகிப்த்து மற்றும் அரபுத் தேசங்கள் ஈராக் சதாமைப் புரிந்துகொண்டு தார்மீக ஆதரவைச் செய்யதபோதும் அதை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக்கிக்கொண்டு உலகு தழுவிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போர் ஆயுதமாக்கவில்லை. தென்னாசிய-கிழக்காசிய வலயத்தில் நேபாளம், காஸ்மீர், நாகலாந்து,இந்துனேசியா சீனா, தாய்வான், ஸ்ரீலங்காவெனத் தொடரும் சிக்கல்களின் நடுவே மகிந்தா முன்னெடுக்கும் அரசியலை மையப்படுத்தி அவருக்கு டாக்டர் பட்டத்தை இருஷ்சிய அரசு வழங்கிக் கௌரவிக்கிறது;புலிகளைத் தோற்கடித்த ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு(முன்னாள்)க் கீரிடம் வழங்கிச் சிறப்புஞ் செய்துகொண்டது இருஷ்சிய அரசு.இங்கே, தென்னாசிய அரசியலைச் சரிவரப் புரியமுனையும் சங்காய்க் கூட்டமைப்புக்குமுன் மேற்குலகம் வகுக்கும் அரசியல் வியூகம் ஈராக்கில் பரிசோதிக்கப்படும் அரசியலாகவே இருக்கிறது.
 
தமிழ் ஊடகங்களின்று சரத்பொன்சேகாவுக்காக விழுந்துவிழுந்து அழுகின்றன.அவர்களது செய்தித் தயாரிப்பில்-கருத்துக் கட்டலில் சரத் பொன்சேகா ஏதோ ஜனநாயகத்துக்குக் குரல் கொடுப்பவராகவும், மகிந்தாவினது தனிக்காட்டுத் தார்ப்பாருக்கு எதிராக-அதைச் சிதைக்குமொரு அரசியல் ஆளுமையாகவும் கற்பிக்கப்படுகிறது.இதைவிட சரத் இலங்கை அரசியலில் மேலோங்கிய அராஜக ஆளுமைக்கு எதிரான சக்தியாகவும் புரியவைக்கப்படுகிறது.இதன்வழி தமிழ்பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்தவிடப்பட்ட அனைத்து யுத்தக் கொடுமைகளையும் வெளிக்கொணரும் வியூகமும் அடங்க முடியுமாகக் காணப்படுகிறது.இது,கட்டிவைக்கவிரும்பும் மனக் கனவுகளுக்கு வெளியில் இலங்கையினது இன்றைய அரசுக்குப் பின்னால் நிற்கின்ற ஆசிய மூலதனத்தின் முரண்பாடுகள் முற்றுமுழுதாக மேற்குலக மூலதனத்தின் ஆசியச் சந்தையையும், அதைத் தொடர்ந்து, அதன் வளங்கள்மீதான ஆதிக்கத்தையும் தகர்ப்பதில் மையங்கொள்கிறது.இதைப் புரிந்துகொண்ட அரசியலை உரைத்துப் பார்க்கும் மேற்குலகத்துக்குத் தனது வியூகத்துக்கு நிகரான அதேபாணி அரசியலை இலங்கையில் இனங்காணும்போது, அதுக்கு மர்மமான மகிந்தா குடும்ப ஆட்சி நேரெதிரில் நிற்கிறது.
 
ஈரானில் முசாவி,மேகிடி கறுபி(Mir-Hossein Mussawi und Mehdi Karubi )போன்ற மேற்குலக அனுதாபிகளை வைத்து நடாத்தப்பட்ட அஹ்மாடிநெட்சாத்(Ahmadinedschad )எதிர்ப்பு அரசியல் பலவிதமான அமெரிக்க-மேற்குலக வியூகங்களால் வழிநடாத்தப்பட்டது.இது தகவமைத்து நடாத்தும் அரசியலானது ஈரானிய அணுவிஞ்ஞானியும்,பௌதிகப் பேராசிரியருமான திரு.மசூத் அலியைப்(Massud Ali-Mohammadi Physiker und Atomwissenschaftler ) பலிகொண்டது.இதன் பின்னால் இருந்த சதி அமெரிக்க-ஜேர்மனிய உளவு நிறுவனங்களுக்கானது.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன் வைக்கும் புதிய பொருளாதாரத்தடைகளானது ஈரானில் அணுவிஞ்ஞானத்துக்கு முழுக்குப் போடுவதுமட்டமல்ல.முழுக்க முழுக்க ஈரானிய எண்ணை வளங்களை-வயல்களைத் தமது ஆளுமைக்குள் கொணர்வதாகவே இருக்கிறது.இந்தப் போக்கினது தெரிவுகளாக முன்தள்ளப்படும் அரசியல் இலங்கையில் மேலும்பல சதிகளையும் சச்சரவுகளையும் செய்வதில் மேற்குலகத்துக்கு அவசியமான தெரிவுகளாகிவருகிறது.இதைப் புரிந்துகொள்ள இன்றைய சரத்பொன்சேகாவினதும், மகிந்தா அரசுக்குமான முரண்பாடு நல்ல உதாரணமாகும்.சரத்பொன்சேகா என்பது ஒருபெரும் தனித்த ஆளுமையாகப் புரியும் அரசியல் வெறுமனவேயான நேரடி விளைவுகளை முன்வைத்த தெரிவென்பது எனது கருத்து.அதற்கான முழு உந்துதலும் அமெரிக்க-மேற்குலக வியூகத்தின் அரசியல் ஊக்கமே காரணமானது.ஈராக்கின்மீது போர் தொடுக்க விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து நகர்த்தும் அரசியலானது மீளவுமொரு அழிவுயுத்தத்தைச் செய்துகொள்வதற்கான தெரிவாக அமெரிக்க ஆளும்வர்க்கத்தால் முன்தள்ளப்படும்போது,அதை மேலும் கிடப்பில்போட்டுத் தனது பதிவிக்காலம்வரை "சமாதானப்பிரியனாக"இருக்க விரும்பும் ஒபாமா நிர்வாகம் வகுத்துள்ள வெளியுறவுக்கொள்கை முற்று முழுதாக அவ்கானிஸ்த்தானிலேயே கவனங் குவிக்கவிரும்புகிறது.ஜுனியர் புஷ்சின் ஆட்சியில் முன் தள்ளப்பட்ட அவ்கானிஸ்த்தான் இன்னொரு வியாட்நாம் ஆகுவதை ஓபாமாவின் வெளியுறவுக்கொள்கை(Zbigniew K. Brzezinski - War and Foreign Policy, American-Style - Journal of Democracy 11:1 Journal of Democracy 11.1 (2000) 172-178 )
வகுப்பாளர் திரு.சீப்கினிவ் பிரசென்ஸ்கி(Zbigniew Brzezinski) விரும்பவில்லை.
 


 
பெரும் சதுரங்க ஆட்டமாகக்கொள்ளப்படும் கஸ்பியன் வலயத் தேசங்களது கருங்கடல் எண்ணையூற்ற வளங்கள் அமெரிக்காவுக்கானதும் அதன் மேற்குலகக் கூட்டு நாடுகளுக்கானதுமான இருப்பாக்கப்படுவதில் எத்தனையே பிரயத்தனங்களை மேற்கொண்டு நபுக்கா எண்ணைக் குழாய்களின்வழி இருஷ்சிய ஆதிக்கத்தைத் தவிர்ப்பதில் ஈரான் தவிர்க்க முடியாத தலைவலியாக இருக்கிறது.இவ்வண்ணமேதாம் இன்றைய சீன ஆதிக்கத்தைச் சிதைப்பதும் அதன் முன்னேறிய பொருளாதார வலுக்களை மட்டுப்படுத்துவதற்கும் குறைந்தளவாவது தென்னாசியப்பிரதேசத்தில் சீனாவினது ஆதிக்கத்தை இல்லாதாக்குவதில்-ஸ்ரீலங்கா மேற்குலகைச் சாரும்போது-வெற்றிகொள்ள முடியுமென பிரசென்ஸ்கியின் நம்பிக்கை.கஸ்பியன் வலயத்தின் எண்ணை வளங்களைத் திருடுவதற்கு ஈரான் போன்ற தேசத்தின் எண்ணை வயல்கள் முதலில் அமெரிக்க-மேற்குலகக் கைகளில் வீழ்ந்தாகவேண்டும்.அங்ஙனம் வீழ்வதற்காக ஈரானில் ஒன்று ஆட்சி மாறியாகவேண்டும். இல்லையேல் உள்நாட்டுப் புரட்சி ஜனநாயகத்தைச் சொல்லி மேலெழுவேண்டும்.இதைச் செய்விக்கச் சமகாலத்தில் நிகழ்ந்த ஈரானிய அரசுக்கெதிரான மக்கள் எதிர்ப்பு அரசியல் மேற்குலகத்தின் அதீத ஒத்துழைப்போடு நிகழ்ந்துவருபவை.இது ஒருபோதுமே ஈரானின் மக்களுக்கான ஜனநாயகத்தைக் கோரிய எதிர்ப்புப்போராட்டமில்லை.ஈரானில் நடந்தேறும் மேற்குலக-அமெரிக்கச் சார்புச் சதி அரசியல் போராட்டங்களை எவர் ஜனநாயகத்தின் பெயரில் ஆதரிக்கமுடியும்?
 
எதிர் நலன்கள் முட்டிமோதும் இலங்கை:
 
 
இன்றைய இலங்கையில் நடந்தேறும் மகிந்தா-சரத்பொன்சேகா இருவருக்குமான ஆதிக்கத்துக்கான போராட்டம்,இலங்கை ஆளும் வர்க்கங்கள் இருவேறு நலன்களது தெரிவில் பிளவுபட்ட நிலையில் எழுந்ததாகக்கொள்ள முடியாது.இலங்கையினது ஆளும் வர்க்கங்கள் கடந்தகாலத்திலும் ஆசிய-மற்றும் மேற்குலக நலன்களுக்கான தெரிவில் இருமுகாங்களாகவே இருந்தன. இதனடிப்படையில்தாம் இருபெரும் கட்சிகள் தேசியக் கட்சியாகவும்,விதேசியக் கட்சியாகவும் இருந்து வந்தன.எப்பவுமே மேற்குலகத்துக்கு விசுவாசமான அமெரிக்கா சார்பும் அனுதாபமும் நிறைந்த யூ.என்.பி.இலங்கையின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு எதிராகவே அந்நியப் பொருட்களைத் தங்குதடையின்றித் தேசத்துக்குள் நுழையவிட்டுத் தரகு வேலையைச் செய்துவந்தது.இவ்வகையில்தாம் ஓரளவு இந்தியச் சார்பை பிராந்திய அரசியல் ஆதிக்கத்துக்கு விட்டுக்கொடுத்து 'ஒருவகையான இரட்டைநாக்கு' தந்திரோபாயத்தை அது இந்தியாவிடம் காட்டியது.இப்போதும்,அப்போதும் இலங்கையின் சுதிந்திரக்கட்சியானது சிங்களவாதக் குறந் தேசியத்தின் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ள உள்நாட்டு உற்பத்திக்கும் இடமளித்து, ஓரளவு ஆசியசார்பு நிலையையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலையாக அரும்பியது.இங்கே, இக்கட்சியின் பின்னே நின்ற ஆளும் வர்க்கமானது எப்பவும் போலவே யூ.என்.பி.ஆட்சியில் பழிவாங்கப்பட்டபோது அது, இனக் கலவரத்தில் முடிவதாக இருந்தது.

இப்போது,பழிவாங்கப்படும் மேற்குலக மூலதனத்துக்கு விசுவாசமான சரத்பொன்சேகா மற்றும் யூ.என்.பி.கட்சியானது அப்பட்டமான அமெரிக்க-மேற்குலகச் சார்பு நிலையில் நின்றே மகிந்தா குடும்பத்து ஆட்சியை எதிர்கிறது.இதனிடம் மக்கள்சார்ந்த எந்தக் கோரிக்கையுமில்லை. ஆனால்,இன்று இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துவகை அரச அராஜகமும் அமெரிக்க ஆளுமைக்குள் உட்பட்ட தேசங்களிலும் நீடிக்கவே செய்கின்றன.இத்தகைய சூழலில் அமெரிக்காவினது அனுதாபிகள் பேசும் இலங்கை மக்கள்சார் அரசியல் கோரிக்கைகள்-அரசியல் முன்னெடுப்புகள் ஒருபோதும் மக்களுக்கான நியாயமான உரிமைகளுக்கான போராட்டமாக முன்னேறமுடியாது.இது,இருவேறு மூலதன முகாங்களுக்கு நடுவில் நிகழும்பலப் பரீட்சை.
 
நொருங்கிவிழும் அமெரிக்க ஆதிக்கக் கனவின் தொடர்ச்சியான அரசியல் தோல்வியிலிருந்து உந்தித் தள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்ட மக்கள்சார் கோரிக்கைகள் உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. எனவே,இலங்கையில் சரத்பொன்சேகாவினது கைதோ அன்றி அவருக்கான உரிமை மறுப்போ மக்கள்சார் அரசியலுக்கு முக்கியமற்றது.இன்று,சரத் பொன்சேகாவினது கைதைப் பெரிதுபடுத்தி,அவரது துணைவியாரது கண்ணீர்சொரியும் முகத்தை அடிக்கடி ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்கள் வன்னியில் பல்லாயிரக்கணக்காக மக்கள், இந்தப் பொன்சேகாவினால் கொல்லப்பட்டபோது அவர்களது கண்ணீரைக் காட்டவில்லை.கபடத்தனமாகத் தமிழ் ஊடகங்கள் சரத்துக்குக் கண்ணீர்வடிப்பதுகூடத் தமது எஜமானர்களான மேற்குலகங்களுக்குக் கூஜாத் தூக்கும் காரியமே.சரத்தின் துணைவியார்,எத்தனையோ தமிழ்த் தாய்களின் கண்ணீர்கண்டு புன்னகைத்த பெண்மணி.இப்போது தமது கணவர் உண்ணவில்லை,உறங்கவில்லை-மருந்து உட்கொள்ளவில்லை என்று தனது சுயநலத் தேவையை மக்களது தேவையாகக் காண்பிப்பது வேடிக்கையானது.ஆளும் வர்க்க அடியாட் குடும்பம் தமது வலியைப் பொதுவலியாக மக்களிடம் எடுத்துவருதே கடைந்தெடுத்த துரோகம்.
 
இலங்கை அரசியலில் ஆசியமூலதனத்தை முடக்கவெண்ணிய மேற்குலகம் ஒருபெரும் இரத்தக்களரியைச் செய்வதற்கு பொன்சோகாவினது தயவை நாடியது.இராணுவத்துக்குள் செல்வாக்குடைய முன்னாள் ஜெனரலூடாகக் காரியமாற்றத்தக்க அரசியல் வியூகத்தின்வழி அன்றைய பண்டாரநாயக்காவுக்கு நடாத்தப்பட்டவொரு அதிர்ச்சி வைத்தியத்தை அது திட்டமிட்டிருந்தது.இதை முறியடித்த ஆசிய மூளையின் தெரிவில் மகிந்தா உயிருடன் ஆட்சிக்கட்டில் அமர்வது பொன்சேகாவை கூண்டில் அடைத்தபடித்தாம் சாத்தியமெனில் அது நிகழட்டும்.எமக்கென்ன?
போன்சேகா தமிழ் மக்கள்மீது நடாத்திய ஆயுத அராஜகத்துக்கு- யுத்தக் கிரிமினலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கிய மகிந்தாவை எங்கே நிறுத்தித் தண்டிக்க முடியும்?அமெரிக்கத் தெருக்கோடியில்? இல்லை, பொன்சேகாவோடு உண்மைகளும் புதைந்துவிடும் என்று கருதுவதில் எந்த நியாயம் இருக்கிறது. இருவருமே யுத்தக் குற்றவாளிகள்-இருவருமே கொலைகாரர்கள்.பாசிச அராஜகவாதிகள்-அடக்குமுறையாளர்கள்.இவர்களிடம் தமிழ்பேசும் மக்கள் எந்தவுண்மைக்காகக் காத்திருக்கவேண்டும்,இல்லை ஆதரிக்கவேண்டும்?


  (ஈரானிய அணு மூளை மசூத் அலி.)

ஈரானில் மக்களை உசுப்பிவிட்டு,அஹ்மாடிநெட்சாத்தை(Ahmadinedschad) மொட்டையடிக்க முனையும் மேற்குலகம்,இலங்கையில் பொன்சேகாவினது கைதின் எதிர்ப்பு அரசியலைத் தமக்காக முன்தள்ளுகின்றது.இங்கே,மக்களை உசுப்பிவிட்டு,நிலவும் ஆட்சிக்கெதிராகக் கலகத்தைக் கட்டித் தகவமைக்கும் அந்நிய அமெரிக்கா,எப்பவும்போலவே சிறுபான்மை இனங்களுக்குத் தீர்வு குறித்தும் பேசுகிறது.பொன்சேகாவினது கைதுக்குக் குரல் கொடுக்கும் பான்கீ மூன் வன்னியில் கொத்துக்கொத்தாக மக்கள் அழிந்தபோது இவ்வளவு அக்கறையாகக் குரல் கொடுத்தாரா?அல்லது அவ்கானிஸ்த்தானில் தலீபான் எண்ணைவண்டிக்குக் குண்டுபோடுவதாகச் சொல்லி மக்கள் தலைகளில் குண்டைக்கொட்டிய ஜேர்மனிய அரசுக்கெதிராக ஒரு எச்சரிக்கையாவது விட்டாரா?156 அப்பாவி மக்களை ஒரேயொரு எண்ணை வண்டிக்காகக் கொன்றார்களே ஏகாதிபத்தியவாதிகள்!
 
விக்கிரமபாகு கருணரெத்தின சரத்துக்கு ஆதரவான ஆர்பாட்டத்தில்கலந்து பொன்சேகாவுக்குப் பின்னால் நிர்க்கும் அமெரிக்காவுக்கு முண்டுகொடுக்கும் அரசியலை முன்னெடுப்பது மக்களது தெரிவில் ஜனநாயகம் ஆகமா?
ஓரு பொன்சேகாவுக்கு ஆதரவாக இவ்வளவு மக்கள் வீதிக்கு இறங்க முடியுமானால்,வன்னியில் கொல்லப்பட்ட பல பத்தாயிரம் மக்களைக் காப்பதற்காக மனிதாபிமானமிக்க சிங்களச் சமூகம் ஏன் முன்வரவில்லை?இனவழிப்பில் தேசியக் கூத்தாடியபோது கருத்துச்சொல்வதில் நின்ற சிங்கள "இடதுகள்" இங்கே வீதிக்கிறங்கி பொன்சேகாவுக்குக்காகக் கலகஞ் செய்கின்றனர்.தமிழ்பேசும் மக்களுக்கெதிரான போரை முன்னெடுத்த மகிந்தாவுக்கு எதிராக வீதிக்கிறங்கி-யுத்தத்துக்கெதிராக ஒரு துரம்பைக்கூட அசைக்கமுடியாதவர்கள்,இப்போது இலங்கையில் ஜனநாயகம் இல்லையாம்.
 
கேலித்தனமான சாக்கடைகள்.
 
இத்தகைய போலிகளுக்கு நடுவே மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு இனவாதிகளாகும் ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை இன்னும் பல பத்தாண்டுகளுக்கு அந்நிய மூலதன வேட்டைக்காடாகவே அமையும்.இன்றைய அரசியல் சதுரங்கத்தில் ஆளும் வர்க்கச் சேவகர்களின் தலைகள் உருண்டுவிடலாம்.ஆனால்,அது ஒருபோதும் ஜனநாயகத்துக்கான உயிர்த் தியாகமாக இருக்க முடியாது.இலங்கையின் இறைமை என்பது பரந்துபட்ட மக்களது சுயாதீனமான அரசியல் -பொருளாதார வாழ்வே!அதை முறியடிக்கும் இன்றைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் எல்லாத் தரப்பைப் போலவே ஆதிக்கத்தை நிலைப்படத்தும் தெரிவில் தேசங்களை-மக்களைத் தொடர்ந்து யுத்தத்துக்குள்-கலவரத்துக்குள் தள்ளி அழித்து விடுகின்றன.இது,ஈரானில்மட்டும் மசூத் அலியைக் கொல்லவில்லை உலகம் பூராகவுமே கொல்கின்றது.இலங்கையில் ஈரான் பாணிக் கலவரத்தை உண்டுபண்ணும் அமெரிக்க-மேற்குலகச்சதி எந்த மசூத் அலியைப் போட்டுத் தள்ளுமோ அந்த மசூத் அலி உசாராகியுள்ளது.இதுள் இலங்கையின் பரந்துபட்ட மக்களுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?பொன்சேகா செத்தாலென்ன,மகிந்தா மாண்டாலென்ன?எல்லோரும் ஆதிக்கச் சக்திகளது சேவகர்களே!மக்கள் தமது வாழ்வை இவர்களிடம் பறிகொடுக்காதிருக்க இவ்வகை கட்சிசார் கலகங்களை-ஆர்ப்பாட்டங்களை வெறுத்தொதுக்கி நிராகரிக்க வேண்டும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.02.2010